Thursday, January 04, 2024

குய்கோ(2023) -குடி இருந்த கோயில் - தமிழ் - சினிமா விமர்சனம் ( சட்டயர் காமெடி டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்


நல்ல  வேளை  , எம் ஜி  ஆர்  உயிரோடு  இல்லை , இருந்திருந்தா ஒரு  நல்ல  டைட்டில்  ஆன குடி இருந்த கோயில் இப்படி குய்கோ என  கொத்து  புரோட்டா ஆனதைக்கண்டு  மனம்  வெதும்பி  இருப்பார். ஆனால்  டைட்டிலில்  சொதப்பிய  இயக்குநர்  திரைக்கதையில்  கலக்கி  விட்டார். வன்முறை  இல்லாத  ஒரு  கிராமியக்கதையை  நீண்ட  நாட்களுக்குப்பின்  பார்த்த  திருப்தி..லோ  பட்ஜெட் பட்ங்கள் , திரைக்கதையை  நம்பும் படங்கள் , யதார்த்தப்பட்ங்கள்  வெற்றி  பெறுவது  ஆரோக்கியமான  தமிழ்  சினிமா  உலகுக்கு  ஒரு  வரப்பிரசாதம். கோடிகளில்   சம்பளம் வாங்கும்  நாயகர்களுக்கும்  ஒரு  பின்னடைவு 


சமீபத்தில் தான்  ச்ந்தானம்  நடிப்பில்  எய்ட்டீஸ்  பில்டப்  என்ற  படம்  சாவு  வீட்டில்  நடக்கும்  சம்பவங்களைச்சொல்லும்  திரைக்கதையுடன்  வந்து  தோல்வி  அடைந்தது, ஆனால்  அதே  கான்செப்ட்டில்  ஒரு  ஹிட்  படம் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


மூன்று  நாயகர்களின்  வெவ்வேறு  வாழ்க்கைத்தடம்  ஒரே  பாதையில்  பயணிக்கும்போது  நிகழும்  சம்பவங்களைப்படம் சொல்கிறது 


நாயகன்  ஒரு  கணக்கு  வாத்தியார்.  எல்லா  சப்ஜெக்ட்சிலும் ஜஸ்ட்  பாஸ் வாங்கவே  சிரமப்பட்டபோது  கணக்கில் மட்டும்  செண்டம்  அடித்தவர். சந்தர்ப்ப  சூழ்நிலை  காரணமாக  ஒரு  கிராமத்துக்குப்போய்  சில  நாட்கள்  தங்க  நேரிடுகிறது . அங்கே  அவருக்குக்கிடைக்கும்   அனுபவங்கள்  தான்  கதை 


 காமெடியன்  ஊரில்  ஆடு  , மாடு  மேய்த்துக்கொண்டிருந்தவர்  ஒரு பெண்ணைக்காதலிக்கிறார். பெண்ணின்  அண்ணன்  காமெடியனை  அவமானப்படுத்தி  விரட்டி  விடுகிறார். இதனால்  வெகுண்ட  காமெடியன்  சவுதி  அரேபியா  போய்  ஒட்டகம்  மேய்த்துப்பணம்  சம்பாதித்து  ஃபாரீன்  ரிட்டர்ன்  ஆக  தன்  சொந்த  ஊருக்கு  வருகிறார்.  இறந்து போன  தன்  அம்மாவை  அடக்கம்  செய்ய கிராமத்துக்கு  வந்த  போது  நிகழும்  நிகழ்வுகள்  தான்  கதை 


குணச்சித்திர  நடிகர்  ஊரில்  எந்த  நல்லது  கெட்டது  நட்ந்தாலும்  அதை  இழுத்துப்போட்டு  செய்பவர். கணக்குப்பிள்ளை . யதார்த்தவாதி . நல்லவர் இவர்  நாயகன் , காமெடியன்  வாழ்வில்   என்ன  செய்தார்  என்பது  கதை 


பெரிய  திருப்பங்களோ , விறுவிறுப்போ  இல்லை  என்றாலும்  சுவராஸ்யமான , யதார்த்தமான   கிராம  மக்களின்  வாழ்க்கையை  பதிவு செய்த  விதத்தில்  இயக்குநர்  அருள்  செழியன்  வெற்றி  பெற்று  இருக்கிறார்


 நாயகன்  ஆக  விதார்த். மைனா   உட்பட  இவர்  நடித்த  பல  பட்ங்கள்  மாறுபட்ட  கதைகளாக  அமைந்தும்  கமர்ஷியல்  ஆக பெரிய  வெற்றி  நாயகனாக  வலம்  வர  முடியாமல்  போனது  ஏன்  என  தெரியவில்லை . அடக்கி  வாசித்து அண்டர்  ப்ளே ஆக்ட்  கொடுத்து  இருக்கிறார். நாயகன்  சரக்கு , தம்   அதிகம்  அடிக்காமல்   விட்  அடிக்கும்  இது  மாதிரி  கதைகளை  வரவேற்கலாம் 


 காமெடியன்  ஆக  யோகி பாபு . படம்  முழுக்க  வரும் கேரக்டர் .சில  இடங்களில்  சிரிக்க  வைக்கிறார். சில  இடங்களில்  ஓவர்  தெனாவெட்டு காட்டுகிறார். சில  இடங்களில்  நல்ல  குணச்சித்திர  நடிப்பை  வெளிப்படுத்துகிறார். இவர்  மனசுக்குள்  தான்  பெரிய  கவுண்டமணி  ரேஞ்ச்   என்ற  நினைப்பு  ஓடுகிறது , அதைத்தவிர்த்தால் அல்லது  குறைத்தால்  நலம்


குணச்சித்திர  நடிகர்  ஆக  இளவரசு. ஒளிப்பதிவாளராக  இருந்தாலும்  டயலாக்  டெலிவரியில்  அசத்துபவர் . இவரது  யதார்த்தமான  பேச்சுக்கள்  பெரிய  பலம் 



நாயகி  ஆக  ஸ்ரீ  பிரியங்கா. ஆனால்  அதிக  வாய்ப்பில்லை .ஸ்கூல்  யூனிடார்மில்  பார்ப்பதை  விட  தாவணியில், சேலையில்  அழகாக  இருக்கிறார். விதார்த் - ஸ்ரீ  பிரியங்கா  ஜோடிக்கு  இன்னும்  சில  காதல்  காட்சிகள் .,  ஒரு  டூயட்  வைத்திருக்கலாம் 

யோகி  பாபு  க்கு  ஜோடியாக  துர்கா . இவர்  ஒரு  சில  காட்சிகளில்  தான்  வருகிறார் 


வினோதினி  வைத்யநாதன்  சிறந்த  டயலாக்  டெலிவரி  கொடுக்கும் ஒரு  சில  நடிகைகளில்  ஒருவர். கலக்கி  இருக்கிறார்

நாயகர்களான  விதார்த் -  யோகிபாபு  வை  விட   இளவரசு-வினோதினி  வைத்யநாதன்  இருவரும்  தான்  பர்ஃபார்மென்சில் , பட்டையைக்கிளப்பி  இருக்கிறார்கள் 

அந்தோணி  தாசன்  , கவின்  மிராண்டா  இருவரும்தான் இசை.  2  சூப்பர்  ஹிட்  பாட்டுக்கள்  உண்டு . பின்னணி  இசையும்  சிறப்பு 

எடிட்டிங்  ராம்  பாண்டியன் .  2  மணி  நேரத்தில்  ஷார்ப்  ஆக  கட் செய்து  இருக்கிறார்

ராஜேஷ்  யாதவ்  ஒளிப்பதிவில்  கிராமிய  அழகை  , மலைப்பிரதேசங்களின்  அழகை     சிறப்பாகக்காட்சிப்படுத்தி  இருக்கிறார்

சபாஷ்  டைரக்டர் (அருள்  செழியன்  ) 

1  போலீஸ்  டிபார்ட்மெண்ட்  மீது  என்ன  கோபமோ  செம  நக்கல்  அடித்திருக்கிறார்  இயக்குநர்.  ஊரில்  எந்த  கேஸ்  பதிவானாலும்  போலீஸ்  அதன்  மூலம்  ஆதாயம்  தேட  நினைப்பதை  காமெடியாக  சொன்ன  விதம்  பிரமாதம். பொதுவாகவே  போலீசை  நக்கல்  பண்ணினால்  ஆடியண்ஸ்  ரசிப்பார்கள் 

2  திரைக்கதை  முழுக்க  யதார்த்த  கிராமிய  மக்களின்  வாழ்க்கையைப்பதிவு  செய்த  விதம் 

3  இளவரசு ,வினோதினி  வைத்யநாதன்  இருவரின்  கலக்கல்  ஆன  நடிப்பு 

4   வசனகர்த்தாவின்  பங்கு  படத்துக்குப்பெரிய  பலம் 

5   நடிகர் வடிவேலுவை  மறைமுகமாக  அட்டாக்  பண்ணிய  சாமார்த்தியம்

6     அட்டாக்  பாண்டி  என்ற  கேரக்டருக்கு  ஓவர்  பில்டப்  கொடுத்து  பின்  அந்த  கேரக்டரை இண்ட்ரோ பண்ணும்போது  தந்த  காமெடி  கவுண்ட்டர்  அபாரம் 



செம  ஹிட்  சாங்க்ஸ்

1   என்  சிகப்பழகி  , என்னைப்பிடிக்கலையா? 

2   அடிப்பெண்ணே , உன்னைக்கண்டால்  இன்பம்  கூடுதடி 


  ரசித்த  வசனங்கள் 


1   காவல்  துறை  உங்கள்  நண்பன்னு  அவங்களும் ஃபிரண்ட்  ரிக்வஸ்ட்  கொடுத்துட்டுதான்  இருக்காங்க 


2  ஆடு  மேய்ச்ச  ஏசுவையே  ஆண்டவரா  ஏத்துக்கிட்டாங்க , மாடு  மேய்க்கற  என்னை   மாப்பிள்ளையா  ஏத்துக்க  மாட்டீங்களா?

3   அட்டாக் பாண்டி அட்டாக் பாண்டி   என  ஓவரா  பில்டப்  தந்தீங்களே?  இப்படி  அட்டாக்  ஆன  பாண்டியா? அட  பரிதாபமே

4   அது  பே  சேனல்

என்னது? பேய்  சேனலா?

 பே சேனல்னா  பணம்  கட்டி  பார்க்கும்  சேனல்

5   ஏண்டி  உனக்கு  எத்தனை  பாட்டி?  போன  வாரம்  தான்  பாட்டி இறந்துட்டானு  லீவ் கேட்டே?

அது  தாத்தாவோட  வைப்”பாட்டி” ஐ  மீன்  கீப்

6  காண்டா  மிருகம்  காண்டாகிடுச்சு 

7   புகையை  வெச்சே  பிராண்ட்  நேம்  சொல்லும்  அள்வு  ஸ்மோக்”கிங்க்” கா? 

8  சிகரெட்  பாக்கி  பெட்டிக்கடைல  வெச்சதை  எல்லாம்  சிபில்ல  போட்டு பங்கம்  பண்ணிடாதீங்கடா 

9  தம்  பழக்கம் உள்ளவன்தான்  பிரச்சனையைக்கூட  புகை  மாதிரி  ஊதித்தள்ளிடுவான் 

10   வடிவேலு , என்  பேரைக்கேட்டாலே  காண்டாகிடுவானே? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   இரு  நாயகர்கள் , இரு  நாயகிகள்  இருந்தும்  ரொமாண்டிக்  போர்சன்  சரியாக  வைக்கவில்லை .இன்னுமே இம்பாக்ட்  ஆக  அமைந்திருக்கும்  அப்படி  வைத்திருந்தால் 

2  யோகிபாபு  அம்மா  இறந்த  சோகத்தை  சரியாக  வெளிப்படுத்தவே  இல்லை . என்னதான்  காமெடியன்  என்றாலும்  சோகம்  காட்டாமல்  நடிக்க  வேண்டுமா? என்ன? 

3  நாயகன்  விதார்த்  அந்த  கிராமத்தில்  ஒரு  நாள்  தங்க  வந்து  விட்டு  பல  நாட்கள்  தங்குவதற்கு  சரியான  காரணம்  இல்லை . டிரஸ்க்கு  எல்லாம்  என்ன  செய்வார்? 

4  யோகிபாபு  இருந்தது  சவுதி  அரேபியாவா? துபாயா? ஆங்காங்கே  குழப்பங்கள் 

5  யோகிபாபு  தாம்  தூம்  என  செலவு  செய்வதைப்பார்த்தால்  ஃபாரீன்  ரிட்டர்ன்  ஐ டி ஊழியர்  மாதிரி  இருக்கனும், ஆனால்  ஒட்டகம்  தானே  மேய்த்தார்?


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கிராமிய மணம்  கமழும்  நல்ல  காமெடி  மெலோ  டிராமா , அவசியம்  பார்க்க  வேண்டிய  படம் . ரேட்டிங்  3 / 5 


Kuiko
Theatrical release poster
Directed byT. Arul Chezhian
Written byT. Arul Chezhian
Starring
CinematographyRajesh Yadav
Edited byRam Pandian
Music byAnthony Daasan
Kevin Miranda
Production
company
AST Films
Release date
  • 24 November 2023
CountryIndia
LanguageTamil

Wednesday, January 03, 2024

PHOENIX (2023) - ஃபீனிக்ஸ் - மலையாளம் - சினிமா விமர்சனம் ( ஹாரர் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்


நீங்கள்  இதற்கு  முன்  எப்போதாவது  ஒரு  திகில்  படத்தில்  கவித்துவமான  காதல்  கதையைக்கண்டதுண்டா?ஒரு  சிறுகதையின்  கடைசி  வரியில்  அனுபவிக்கும்  அட்டகாசமான  அனுபவத்தை   க்ளைமாக்ஸ்  சீனில்  ஒரே  ஒரு  ஷாட்  மூலம்  மொத்தப்படத்தின்  இம்ப்பேக்ட்டையும்  கண்டதுண்டா? இல்லை  எனில்  இந்தப்படத்தைப்பாருங்கள்

ஃபீனிக்ஸ்  பறவையைப்பற்றி  நாம்  கேள்விப்பட்டிருக்கிறோம். ஆறு  நூற்றாண்டுகளுக்கு  முன்  அரேபியன்  பாலைவனத்தில்  வாழ்ந்த  பறவை  இனம்  இது.  தன்னைத்தானே  எரித்துக்கொண்டு  பின்  அதன்  சாம்பலில்  இருந்து  மீண்டும் உயிர்த்தெழுந்து  புதிய  இளம்  வாழ்க்கையைத்தொடங்கியதாக  சொல்லப்படுகிறது. இன்றும்  வீழ்ச்சியில்  இருந்து  மீண்டு  வாழும்  மனிதர்களை    ஃபீனிக்ஸ்  பறவை  போல  மீண்டும்  உயிர்த்தெழுந்ததாக  சொல்வார்கள்


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  வக்கீல். தன்  மனைவி  மற்றும்  மூன்று குழந்தைகளுடன்  வாழ்ந்து  வருபவர். சில  காரணங்களால்  தான்  குடி  இருக்கும்  இடத்தை  விட்டு  வேறு  இடம்  புதிதாகக்குடி  போக  நேரிடுகிறது . பல  இடங்கள்  பார்க்கிறார்  , எதுவும்  அவருக்கு  செட்  ஆகவில்லை. அக்கம்  பக்கம்  வம்பு  பேசாத  , ஆட்கள் அதிகம்  இல்லாத தனிமையான  இடம்தான்  அவருக்குத்தேவை . 


 கடைசியில்  அவர்  எதிர்பார்த்த  மாதிரியே  ஒரு  வீடு  வாடகைக்குக்கிடைக்கிறது. அந்த  வீட்டுக்குக்குடி  போகிறார்கள் . சில  அமானுஷ்யமான  சம்பவங்கள்  நடக்கின்றன.


நாயகன்  வீட்டுக்கு  தினசரி  ஒரு   கடிதம்  வருகிறது . அன்னா  ரோஸ்  என்னும்  பெண் ஃபிரட்டி   என்பவருக்கு  எழுதிய  காதல்  கடிதங்கள் அவை . தபால்  காரரிடம்  கேட்டால் அது  தான்  டெலிவரி  செய்தது  அல்ல  என்கிறார். அக்கம் பக்கம்  விசாரித்தால்  அந்த  ஏரியாவில்  அந்தப்பெயரில்  யாரும்  வாழவில்லை  என  தெரிய  வருகிறது 


சில  விசாரணைகளுக்குப்பின்  தான்  ஒரு  உண்மை  தெரிய  வருகிறது . 1970 ஆம்  ஆண்டு  இப்போது  கொரானா  வந்தது  போல  காலரா  வியாதியால்  பலரும்  இறக்க  அந்த  சமயத்தில்  எல்லோரையும்  ஒரே  இடத்தில்  புதைத்தார்கள் . அந்த  புதைக்கப்பட்ட  இடத்தில்  தான்  நாயகன்  குடி  இருக்கும்  வீடு  கட்டப்பட்டு  இருக்கிறது . அந்த  இறந்த  ஆத்மாக்களில்  ஒரு  பெண்  ஆத்மா  தான்  தன்  நிறைவேறாத  ஆசைக்காக  மீண்டும்  உயிர்த்தெழுந்து  உலா  வருகிறது 


 ஃபிளாஸ்பேக் ( அன்னா  ரோஸ் + ஃபிரட்டி ) 


நாயகன்  ஒரு  வசதியான  குடும்பத்தில்  பிறந்தவன். நாயகி  ஒரு  அனாதை . நாயகியைக்கண்டதும்  நாயகன்  காதல்  வயப்படுகிறான். அவளையே  ஃபாலோ  பண்ணிக்கொண்டு  இருக்கிறான். நாயகிக்கும்  விருப்பம்தான் . ஆனால்  ஒரு  கட்டத்தில்  நாயகன்  பிரப்போஸ்  செய்யும்போது  இதெல்லாம்  நடைமுறைக்கு  ஒத்து  வராது . காதல் நமக்கு  வலியைத்தான்  தரும்  என  மறுக்கிறாள் 


  ஒருவாறாக  நாயகன்  நாயகியை  சம்மதிக்க  வைத்து  விடுகிறான். இருவரும்  லிவ்விங்  டுகெதர்  வாழ்க்கை  வாழ்கிறார்கள் . ஒரு  கட்டத்தில்  நாயகன்  நாயகியை விட்டுப்பிரிந்து  சில   மாதங்கள்  நகரத்துக்குச்செல்ல  நேர்கிறது. நாயகி  தனிமையில்  இருக்கிறாள் 


 அங்கே  நாயகன்  நகரில்  இருக்கும்போது  வீட்டில்  பெற்றொர்  ஒரு  பெண்ணை  நாயகனுக்காக  திருமணம்  செய்ய  ரெடி  செய்கிறார்கள். நாயகன்  ஏதோ  ஒரு  சபலத்தில்  , மன  மாற்றத்தில்  நாயகியை  மறந்து  புதுப்பெண்ணுடன்   பழகிக்கொண்டு  இருக்கிறான்


நாயகி  தினசரி  கடிதங்களாக  எழுதித்தள்ளுகிறாள் . நாயகன்  எதற்கும்  பதில்  அளிக்கவில்லை . அப்போதுதான்  நாயகி  இருக்கும்  ஏரியாவில்  காலரா  பரவ  ஆரம்பிக்கிறது. நாயகிக்கும்  அந்த  நோய்  வந்து  விடுகிறது 


இதற்குப்பின்  நாயகன் - நாயகி  சேர்ந்தார்களா? வக்கீல்  குடும்பத்துக்கும்  இவ்ர்களுக்கும்  என்ன  சம்பந்தம்? இறுதியில்  என்ன  நட்ந்தது? என்பது  மீதி  திரைக்கதை 


  நாயகன்  வக்கீல்  ஆக  அஜூ  வர்கீஸ்  அமைதியாக  நடித்திருக்கிறார். ஃபிளாஸ்பேக்கில்  வரும்  ஃபிரட்டி  ரோலில்  சாந்து நாத்  அருமையாக  நடித்திருக்கிறார். காதல்  வசப்படுவதும்,  சபலப்படுவதும் , நாயகியை  தவிக்க  விட்டுட்டமே  என்ற  குற்ற  உணர்ச்சியிலு ம்  அவரது  முக   பாவங்கள்  அபாரம் 



 அன்னா  ரோஸ்  ஆக   அபிராமி  போஸ்   அற்புதமான  நடிப்பு ., அவரது  முக  அழகு , அமைதி  எல்லாம்  செம .தன்  காதலன்  தன்னை  மறந்தாலும் , தடம்  மாறினாலும்  தன்  அன்பை  இம்மி அளவு  கூட  மாற்றிக்கொள்ளாத  ஒரு உயர்ந்த  மனம்  அதை  பிரமாதமாக  வெளிப்படுத்தி  இருக்கிறார் 


சாந்துநாத் -  அபிராமி  போஸ்  இருவருக்குமான  கெமிஸ்ட்ரி  அருமையாக  ஒர்க்  அவுட்  ஆகி  இருக்கிறது . காதல்  கதைகளில்  இந்த  கெமிஸ்ட்ரி  செட்  ஆவது  மிக  முக்கியம்


அனூப்  மேனன்  கெஸ்ட்  ரோலில்  பாதிரியார்  ஆக  வருகிறார் 


நிதீஷ்  கே டி ஆர்  132  நிமிடங்கள்  ஓடும்படி  ஷார்ப்  ஆக  ட்ரிம்  செய்து  இருக்கிறார். ஃபிளாஸ்பேக்  காட்சிகள்  இன்னும்  கொஞ்சம்  நேரம்  வராதா? என  ஏங்க  வைக்கிறார்


சாம்  சி எஸ்  இன்  இசை   ரொமாண்டிக் போர்சனில்  குதூகல  இசையையும்,  ஹாரர்  எலிமெண்ட்ஸ்  வரும்போது  திகில்  உணர்வையும்  கொடுக்கிறது . பல  இடங்களில்  பிஜிஎம்  மாஸ் 


அல்பியின்  ஒளிப்பதிவு  சிறப்பு . குறிப்பாக  க்ளைமாக்ஸ்  ஷாட்டில்  அந்த  காமரா  ஆங்கிள்  , படமாக்கப்பட்ட  விதம்  அனைத்தும் அருமை 


பிகில்  பாலகிருஷ்ணனுடன்  இணைந்து  இயக்குநர் விஷ்ணு  பரதன்  கதை  எழுதி  இருக்கிறார். மிதுன்  மேனுவல்  தாமஸ்  திரைக்கதை  எழுதி  இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர் (விஷ்ணு  பரதன் ) 


1 ஒட்டு  மொத்தப்படத்துக்கும்  சிகரம்  வைத்தது  போல  அந்த  க்ளைமாக்ஸ்  ஷாட்  அற்புதம். 


2   நாயகி  அபிராமி போஸ்  முக  வசீகரம் ,  ஒப்பனை  இல்லாத  இயற்கை  அழகி , கண்ணிய  உடை , உடல்  மொழி  அனைத்தும் அருமை 


3  நாயகியின்  அன் கண்டிஷனல்  லவ் , நாயகன்  மீதான  நம்பிக்கை  தான்  பெரும்  பலம் 


4  வக்கீலின்  மகள்  ஒரு  காட்சியில்  தன்  விரலை  முறித்துக்கொள்ளும் காட்சி  செம  திகில் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  புதிதாகக்குடி  வந்த  வீட்டில்  வக்கீல்  தன்  மனைவியுடன்  பெட்ரூமில்  படுத்து  இருப்பதும் , சுமார்  ஐந்து  வயதே  ஆன  3  குழந்தைகளை  தனி  பெட்ரூமில்  படுக்க  வைப்பதும்  நம்பும்படி  இல்லை .  ஃபாரீனில்  தான்  அப்படி    தனி  பெட்ரூம்  இருக்கும்.  நம்  இந்தியாவில்  ஒரே  ரூமில்  தானே  படுப்பார்கள்? 


2   நடு  இரவில்  தண்ணீர்  தாகம்  எடுத்தால் குடிக்க  ஒரு  சொம்பு  தண்ணீரை  பெட்ரூமில்  கட்டிலுக்கு  அருகே  வைத்துக்கொள்வதுதானே  எல்லோர்  வழக்கமும்/ சும்மா  திகில்  ஊட்ட  ஹாலுக்கு  வந்து  கிச்சனுக்குப்போய்  தண்ணீர்  குடிப்பதாகக்காட்டி  இருப்பது  ஏனோ/ 


3   ஃபிளாஸ்பேக்  கதையில்  நாயகன் - நாயகி  இருவரும்  வறுமையில்  இருப்பது  போலக்காட்டுகிறார்கள் . காய்கறிக்கடையில்  காய்  வாங்கும்போது  கூட  காசு  கம்மியா  இருக்கிறது  என பாதிக்காய்கறிகளை  ரிட்டர்ன்  செய்கிறார்கள் , ஆனால்  குடி  இருப்பது  மிகப்பெரிய  பங்களாவில்  அது  எபப்டி ?  நாயகியும்  அனாதை , நாயகனும்  வீட்டில்  கோபித்துக்கொண்டு  வந்து  விட்டான். அப்போ  அவ்ளோ  வாடகை  தர  பணம்  ஏது ? 


4  நாயகனுக்குப்பெற்றோர்  ரெடி  செய்த  பெண்ணை  நாயகன் ஏறெடுத்தும்  பார்க்கவில்லை  முதலில். அப்போது  அந்தப்பெண்ணுக்கு  சந்தேகம்  வராதா? 


5   நாயகனின்  திடீர்  மனமாற்றத்துக்கு  என்ன  காரணம் ? என்பதை  வலுவாகச்சொல்லவில்லை 


6 வக்கீலின்  மகள்  நைட்டில்  ஒரு  காட்சியில்    எனக்கு  தூக்கம்  வரவில்லை  என  ஹாலில்  வந்து  உலாத்தும்போது  அவளை  பெட்ரூமுக்குக்கொண்டு  வந்து  படுக்க  வைத்து  கதை  ஏதாவது  சொல்லி  தூங்க  வைக்காமல்  தூங்கு  என  சொல்லி  விட்டு  பொறுப்பில்லாமல்  கிளம்புவது  ஏன் ?


7   வக்கீல்  ஒரு  காட்சியில்  ஆஃபீஸ்க்கு  போய்  வர  எனக்கு  ஒரே  ஒரு  ஸ்கூட்டர்  மட்டும்  இருக்கு  என்கிறார். ஆனால்      ஒரு  காட்சியில்  புல்லட்டில்   வருகிறார்


ரசித்த  வசனங்கள்


1     டீன்  ஏஜ்  ல  எல்லோருமே  முட்டாள்  தனங்கள் , விளையாட்டுத்தனங்கள்  செய்துதான்  இருப்போம். அதில்  இந்தக்காதலும்  ஒண்ணு 


2   வாழ்க்கைல  எப்படியாவது  வெற்றி  பெற  வேண்டும், அது  நம்  வாழ்க்கையின்  போக்கையே  மாற்றி  விடும் 


3  வாழ்க்கைல  நமக்கு  பல  நண்பர்கள்  கிடைப்பாங்க , ஆனா  ஏதோ  ஒரு  பயணத்தில்  ஸ்பெஷலா  ஒரு  ஃபிரண்ட்  கிடைக்கலாம் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ  படம்  தான் . ஒரு  லிப்  லாக்  சீன்  இருக்கிறது 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  தரமான  ரொமாண்டிக்  ஹாரர்  த்ரில்லர். அவசியம்  பார்க்க  வேண்டிய  படம். ரிலீஸ்  ஆன  டைமில்  விமர்சகர்களிடையே  பலத்த  வரவேற்பைப்பெற்ற  படம், வசூல்  ரீதியாகவும்  இது  சக்சஸ் . ரேட்டிங்  3 / 5 


Phoenix
Theatrical release poster
Directed byVishnu Bharathan
Screenplay byMidhun Manuel Thomas
Story byVishnu Bharathan
Bigil Balakrishnan (story concept)
Produced byRinish K. N.
Starring
CinematographyAlby
Edited byNithish K. T. R.
Music bySam C. S.
Production
company
Front Row Productions
Distributed byCentral Pictures
Release date
  • 17 November 2023[1]
Running time
132 minutes
CountryIndia
LanguageMalayalam

Tuesday, January 02, 2024

80’s பில்டப் (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி டிராமா ) @ அமேசான் பிரைம்


 இந்தப்படம்  ரிலீஸ்  ஆவதற்கு  முன்  நிகழ்ந்த  ப்ரமோ  விழாவில்  சந்தானம்  கொடுத்த  பில்டப்  தான்  ஓவர் . ஆனந்தராஜ்  பெண்  வேடத்தில்  கலக்கி  இருக்கிறார், சிரித்து  சிரித்து  யூனிட்டில்  எல்லோருக்கும்  பேச  வேண்டிய  டயலாக்சே  மறந்து  விட்டது என்றார்.  அப்பேர்ப்பட்ட  படம்  எப்படி  இருக்கும்  என்ற  எதிர்பார்ப்போடுதான்  படம்  பார்த்தேன். சந்தானம்  காமெடியனாகவே  இனி  நடிக்கலாம்  என  எண்ண  வைத்த  மற்றும்  ஒரு   டப்பாப்படம்  இது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின்  தாத்தா  திடீர்  என  இறந்து  விடுகிறார்.  துக்க  வீட்டுக்கு  எல்லா  சொந்தக்காரர்களும்  வருகிறார்கள் . நாயகனின்  முறைப்பெண்ணும்  அதில்  அடக்கம். நாயகனுக்கு ஒரு  தங்கை  உண்டு . அவள் நாயகனிடம்  ஒரு  சவால்  விடுகிறாள் . இவளை   உன்னால்  ஐ  லவ்  யூ  சொல்ல  வைக்க  முடியுமா? என்கிறாள். அந்த  சவாலில்  நாயகன்  ஜெயித்தானா? இல்லையா?  என்பதுதான்  மீதி திரைக்கதை 


நாயகன்  ஆக சந்தானம். கமல்  ரசிகர்  என  சொல்லிக்கொள்ளும்  அவர்  படம்  முழுக்க  ரஜினி  மேனரிசங்களைக்காப்பி  செய்கிறார்.அவருக்கு  என்று  அடையாளமாக  இருக்கும்  காமெடி  கவுண்ட்  டவுன்களை  மறந்து  விட்டார் 


 நாயகி  ஆக ராதிகா  ப்ரீத்தி  நடித்திருக்கிறார். சிட்டி  கேர்ள்  என்று  சொல்லப்பட்டாலும்  படம்  முழுக்க  தாவணி , சேலை  காஸ்ட்யுமில்தான்  வருகிறார். சுமார்  ரகம் தான் 


படம்  முழுக்க  மஞ்சக்கிளி  என  ஒரு  பெயர்  ஓவர்  பில்டப்  கொடுத்து  டெம்ப்போ  ஏற்றுகிறார்கள் , க்ளைமாக்சில்  அவரைக்காட்டும்போது  சப்பென்று  இருக்கிறது 

  தாத்தாவாக  ஆர்  சுந்தர்ராஜன். அதிக  வாய்ப்பில்லை .சிரிப்பும்  வரவில்லை 


 எமதர்மராஜாவாக  கே எஸ்  ரவிக்குமார் ,  முனீஸ்காந்த்  படம்  முழுக்க  வந்தாலும்  ஒரு  சீன்  கூட  அவர்களால் சிரிப்புக்காட்ட  முடியவில்லை ,சித்திர  குப்தனாக   ரெடின் கிங்க்ஸ்லீ  போலீஸ்  யூனிஃபார்மில்   கொடுமை கொடுமை 


பெண்  வேடத்தில்  ஆனந்த்ராஜ்  ரண  கொடூரம். காமெடி  இல்லை , கடுப்பு  தான்  வருகிறது 


ஆடுகளம்  நரேன்  நாயகனின் அப்பாவாக  வருகிறார். பெண்  வேடத்தில்  இருக்கும்  ஆனந்த்ராஜ்  மடியில்  படுத்துக்கொள்கிறார். படம்  படுத்து  விடும்  என்ப்தை  சிம்பாலிக்கா  சொல்றார்  போல 


வைரங்களை  எடுக்க  வரும்  கும்பலாக  மொட்டை  ராஜேந்திரன் , மன்சூர்  அலிகான், ப்ழைய  ஜோக்  தங்கதுரை  மூவரும்  வந்தாலும்  ஸ்க்ரிப்டில்  காமெடி  இல்லாததால்  வீண்  தான்


ஜிப்ரானின்  இசையில்  3  பாடல்கள்  தேறுகின்றன . பின்னணி  இசைக்கு  பெரிதாக  அவர்  அலட்டிக்கொள்ளவில்லை 

 ஜேக்கப்  ரத்தின ராஜின்  ஒளிப்பதிவில்  நாயகனின்  தங்கையின்  தோழி ஒருவர்  அழகாக  இருப்பதை  குளுமையாகப்படம்  பிடித்து  இருக்கிறார்


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்   கல்யாண். ஒன்  லைன்  கதை  ஓக்கே , தற்கு  ஸ்க்ரிப்ட்  ரெடி  செய்ய  வேண்டாமா?

/

சபாஷ்  டைரக்டர்


1    இழவு  வீட்டில்  எப்போதும்  ஒரு  நல்ல  காரியம், சுபகாரியம்  பேச  வேண்டும்  என்பார்கள் ,  அதை  வைத்து  சாவு  வீட்டில்  காதல்  என்ற  ஒன்  லைன்  ஓக்கே  ரகம் 


2   காமெடி  பட்டாளம்  அத்தனை  பேரை புக்  செய்து  அவர்களை  வைத்து  பிரமோசன்  செய்த  சாமார்த்தியம் 


3   இரண்டு  மணி  நேரத்தில்  படத்தை  முடித்து  நம்மைக்காப்பாற்றியது 

செம  ஹிட்  சாங்க்ஸ்

1  ஒய்யாரி  ஒய்யாரி , கொல்லாதே  கைகாரி 


2  ஒட்டி  வாரேனே, எட்டிப்போகாதே  , செக்கு  மாடா  நான்  சுத்தி  வாரேனே?

3 கனவைத்தந்தவ  கை  காரி , எங்கே  நீ  போனே  ஒய்யாரி 


  ரசித்த  வசனங்கள் 


1    அவனே  அவனோட  அக்கா  சுடிதாரைப்போட்டுட்டு  வந்து  சேட்டுனு  உக்காந்திருக்கான், அவனை  இன்னும்  வேற  அசிங்கப்படுத்தனுமா? 


2  சேத்துல  நாம  விழுந்தா  சோப்  போட்டுக்கழுவலாம், ஆனா  அந்த  சோப்பே  சேத்துல  விழுந்தா?


 வெரிகுட்  , இந்த  மாதிரி  கண்ணீர்ப்புகைக்காமெடி  மொக்கை  போட்டு  கூட்டத்தைக்கலைச்சு   விடு , அப்போதான்  நான்  அடி  வாங்கறதை  யாரும்  பார்க்க  மாட்டாங்க 


3  ரஜினி  ரசிகர்  ஆன  என்னை  சிவாஜி  ரசிகர்னு  தப்பா  சொல்லிட்டியே?


 ரஜினியோட  நிஜப்பேரே  சிவாஜி  ராவ்  தான், ராவோட  ராவா அவர்  பேரை  ரஜினி  மாத்திட்டாங்க 


4  அப்போ  அவர் வயிற்றில்  இருக்கும்  வைரம் ?

 என்னது ? வைரமா?


 அதாவது  வைரம்  பாய்ந்த  கட்டைனு  சொல்ல  வந்தோம்


5  உன்  தாத்தா  டிக்கெட்  வாங்கிக்கினாருபா


 ஹவுஸ்ஃபுல்  ஆகிடுச்சே? பிளாக்ல  வாங்குனாரா?


ஹய்யோ , அவர்  மேலே  டிக்கெட்  வாங்கிட்டாரு


 இந்த  தியேட்டர்ல  தான்  பால்கனியே  இல்லையே?


6   ஷோக்காலியா  இருந்தவரை  சீக்காளினு  சொல்றியே? பிக்காலி


7  அவளை  லவ்  பண்ண  வைக்கறியா? அது  முடியாது , அவ  மெட்ராஸ்காரி 


  வெள்ளைக்காரியையே  லவ்  பண்ண  வைப்பான்


8  சாவு  வீட்டை  டாவு  வீடாக்கிட்டானுங்களே?


9  அவனுக்கு  ரெண்டு  வருசம்  கூட்டிக்குடுடா


 ஓ, இப்போ  இதை  வேற  செய்ய  ஆரம்பிச்சாச்சா?


 ஆயுசைச்சொன்னேன்


10  உன்னை  முறைச்சுப்பார்க்கும்போதே  நினைச்சேன், அந்தப்பொண்ணு  உன்  முறைப்பொண்ணாதான்  இருக்கனும்னு 


11  மிஸ்! உங்களுக்கு  கதிர்  யார்?னு  தெரியுமா? 


தெரியாதே?


 அதோ, அங்கே  நிக்கறானே  அவன்  தான்  கதிர் 


12  இந்த  கண்ட்ரிலயே  இவன்  தான்  நன்றி  உள்ளவன்


 கண்ட்ரி - நன்றி , ஒருத்தனுக்குக்கூட  சிரிப்பு  வராத  அளவுக்கு  ரைமிங்  காமெடி 


13  யார்  இவன் ? விசித்திரமா  இருக்கான் ?


 இவன்  தான்  விசித்திர  குப்தன் 


14  அவனுக்குக்கவிதை  எல்லாம்  எழுத  வருமா?


 அவனுக்கு  ஒழுங்கா  அட்ரசே  எழுத  வராது 


15   மிஸ் , இந்த   சுடிதாரைப்போட்டுக்குங்க 

‘ சுடியா? இது  தாவணி 


ஓ, அதாவது  நான்  மெட்டீரியலா  வாங்கித்தந்தேன், என்  தங்கச்சி  அதை  தாவணியா  தெச்சுக்கிட்டா  போல் 



16  நான்  டிரஸ்  சேஞ்ச்  பண்ணனும், நீங்க  வெளில  போனீங்கன்னா...


  ஓக்கே , நான்  வெளில  இருந்து  பார்த்துக்கறேன்


 வாட்? 


17  ஒரு  நிமிஷம், நான்  உள்ளே  போய்  சாவியை  எடுத்துட்டு  வரட்டுமா?


  உன்  சாவையே  எடுக்கப்போறாங்க , உனக்கு  எதுக்கு  சாவி ?


18  சித்தி  அழுவறதை   ஒரு  நிமிசம்  பாருடா


 சித்தியையே  பார்க்க  முடியல. , சகிக்க  முடியல, இதுல  சித்தி  அழுவறதை  வேற  பார்க்கனுமா?


19  யார்றா  நீங்க  எல்லாம்?


 பெங்காலில  இருந்து  வந்திருக்கும்  பங்காளிங்க 


20  மஞ்சக்கிளி , எங்கே  போய்ட்டு  வர்றே?


  அவங்க  என்  தூரத்து  சொந்தக்காரங்க , அவங்க  கூட  பாத்ரூம்  போய்ட்டு  வர்றேன்


தூரத்து  சொந்தம்னா  தூரமா  வைக்கனும்


21  மஞ்சக்கிளி ,  பயப்படாத ‘


 நான்  அவனைப்பார்த்து பயப்படலை , உன்னைப்பார்த்துத்தான்  பயப்படறேன் 


22   இங்க்லீஷ்  தெரியலைன்னா  பரவாயில்லை , ஆனா  இது  இங்க்லீஷ்னே  தெரியாம  இருக்கீங்களேடா? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   வில்லன்  க்ரூப்  வைரங்களை  எடுக்க  டெட்  பாடியைத்தூக்கிட்டு  காட்டில்  ஓடும்போது இரவு  என  காட்டுகிறார்கள் . மீண்டும்  டெட்  பாடி  வீட்டுக்குக்கொண்டு  வரப்பட்ட போது    ஹாலில்  இருக்கும்  சுவர்  கடிகாரம்  மாலை   ஆறரை  மணி  காட்டுகிறது 


2  திருப்பதி  ஏழுமலை  வெங்கடேசா  பாட்டு  தீம்  மியூசிக்கை  சுட்டு  பல  இடங்களில்  தீம்  இசையாக  பயன்படுத்தி  இருக்காங்க 


3  நாயகி  நாயகனைக்காதலிப்பாரா? என்ற  எதிர்பார்ப்பில்  தான்  திரைக்க்தை  பயணிக்க  வேண்டும், ஆனால்  முதல்  காட்சியிலேயே  நாயகி  நாயகனிடம்   ஜொள்  விடுகிறார்.ஒரு  சவாலே  இல்லையே?


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - படத்தில்  கண்ட்டெண்ட்டும்  இல்லை , அடல்ட்  கண்ட்டெண்ட்டும்  இல்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இது  ஒரு  குப்பைப்படம் , சந்தானம்  படம் , காமெடி  இருக்கும்  என  நம்பி  யாரும்  பர்த்து  டைம்  வேஸ்ட்  பண்ண  வேண்டாம். ரேட்டிங்  1 / 5 


80களின் பில்டப்
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்கல்யாண்
எழுதியவர்கல்யாண்
உற்பத்திகே.இ.ஞானவேல்ராஜா
நடித்துள்ளார்
ஒளிப்பதிவுஜேக்கப் ரத்தினராஜ்
திருத்தியவர்எம்.எஸ்.பாரதி
இசைஜிப்ரான்
தயாரிப்பு
நிறுவனம்
வெளிவரும் தேதி
  • 24 நவம்பர் 2023
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Monday, January 01, 2024

கூஸ் முனுசாமி வீரப்பன் (2023) - தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் ( க்ரைம் ட்ராமா) @ ஜீ 5

 


சமீபத்தில்தானே  நெட்  ஃபிளிக்ஸில்  வீரப்பன்  வெப்சீரிஸ்  பார்த்தோம், அதுக்குள்ள  இன்னொண்றா? இதுல  பெருசா, புதுசா  என்ன இருந்துடப்போகுது? அரைச்ச  மாவையே  அரைச்சிருப்பாங்கனு  அசால்ட்டா  அதை  ஸ்கிப்  பண்ணி  இருந்தேன் , ஆனால் பலரும்  அந்த  வெப்சீரிஸ்  வேற  லெவல்  என  விமர்சித்ததால்  பார்த்தேன்.  பல  புதிய  தகவல்கள்  கிடைத்தன. பார்க்கலாம், சுவராஸ்யமாகத்தான் இருந்தது 


இதில்  ஆறு  எபிசோடுகள் ஒவ்வொன்றும் 45  நிமிடங்கள், ஆக  மொத்தம்    நான்கரை  மணி  நேரம்  ஒதுக்கினால்  ஒரே  சிட்டிங்கில்  பார்த்து  விடலாம். முதல்  3  எபிசோடுகள்  செம  விறுவிறுப்பு , பரபரப்பு , த்ரில்  எல்லாம்  உண்டு . நான்காவது  எபிசோடு  வீரப்பன்  ஏரியாவில்  குடி இருந்த  மக்களை  போலீஸ்   எப்படி  எல்லாம்  டார்ச்சர்  பண்ணியது ? என்பது இதை  பலவீன  இதயம்  கொண்டவர்கள்  ஸ்கிப்  பண்ணி  விடலாம். ஐந்தாவது  எபிசோடு  வீரப்பனைக்காட்டிக்கொடுத்தவர்களை  வீரப்பன்  எப்படி  எல்லாம்  பழி  வாங்கினான்  என்பது. இதிலும்  வன்முறை  அதிகம், எனவே  4 , 5  ஸ்லோ  தான்

நக்கீரன்  கோபால் , சீமான் , இந்து  என்  ரம் , ராகினி ரகுவரன், வீரப்பனின்  மகள்  ஆகியோரின்  பேட்டி  அங்கங்கே  அட்டாச்  பண்ணி  இருந்தது  சுவராஸ்யம். நெட்  ஃபிளிக்ஸ்  வீரப்பன்  வெப்  சீரிஸில்  வீரப்பனின்  மனைவி  பேட்டி இடம்  பெற்றிருந்ததால் இதில்  மகள்  பேட்டி  இடம்  பெற்றது  புத்திசாலித்தனமான  மூவ் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


வீரப்பன் 13  வயதிலேயே  வேட்டை  ஆட  துப்பாக்கி  எடுத்து  விட்டான். யானைகளை  முதலில்  வேட்டை  ஆடினான். யானைத்தந்தங்கள்  தான்  டார்கெட். வனத்துறை  அதிகாரிகளுக்கு  லஞ்சம்  கொடுத்து  தந்தங்களை   விற்றான்


வீரப்பனுக்கு  துப்பாக்கி  போன்ற  ஆயுதங்கள்  தேவைப்படுகிறது. ஒரு  புரோக்கரை  நாடுகிறான். அந்த  புரோக்கர்  வீரப்பனைக்காட்டிக்கொடுக்கிறான். ஒரு  ஹோட்டலில்  சாப்பிட  அழைத்துச்சென்று  போலீசில்  மாட்டி  விடுகிறான். அதுதான்  வீரப்பன்  முதலும்  கடைசியுமாக  போலீசில்  (உயிருடன்)மாட்டியது . லாக்கப்பில்  வைத்திருந்திருக்கிறார்கள் . அங்கிருந்து  தப்பி   விடுகிறான்.


வீரப்பனைப்பிடிக்க  சீனிவாஸ் என்னும்  டி எஃப்  ஓ  நியமிக்கப்படுகிறார். பல  கெட்ட  போலீஸ்  ஆஃபீசர்கள் , மோசமான  காட்டிலாகா  அதிகாரிகள்  இடையே   சீனிவாஸ்  நல்லவராக  இருக்கிறார். கிராம  மக்களின்  அன்பைப்பெறுகிறார். கிராம  மக்களின்  உறவினர்  போல  அவர்களுடன்  கலந்து  விடுகிறார்


 வீரப்பனின்  தங்கை  ஒரு  விதவை. குழந்தைகள்  உண்டு . டிஎஃபோ  சீனிவாஸ்க்கும்  , வீரப்பனின்  தங்கைக்கும்  பழக்கம்  உருவாகிறது தன்னைப்பிடிக்க்த்தான்  அவர்  தன்  தங்கையுடன்  பழகுகிறார்  என்ற  எண்ணம்  வீரப்பனுக்கு  ஏற்படுகிறது. வீரப்பனின்  தங்கை  வேறு  இரு  போலீஸ்  ஆஃபீசர்களால்  ரேப்  செய்யப்படுகிறார்..இதனால் வீரப்பனின்  தங்கை  தற்கொலை  செய்து  கொள்கிறார்


 தன்  தங்கையின்  சாவுக்கு  பழி  வாங்க  வீரப்பன்  சீனிவாஸை  தண்டிக்க  நினைக்கிறான். .தன்  தம்பி  மூலம்  தூது  விட்டு  தான்  சரணடையத்தயார், தனியாக  வந்து  தன்னை  சந்திக்க வேண்டும்  என  நிபந்தனை  விதிக்கிறான்  வீரப்பன். டிஎஃப் ஓ  சீனிவாஸ்  வீரப்பனின்  தம்பியுடன்  குறிப்பிட்ட  இடத்துக்கு  வந்ததும்  வீரப்பன்  அவரைப்போட்டுத்தள்ளி  விடுகிறான்


கோபால  கிருஷ்ணன்  என்ற போலீஸ்  ஆஃபீசர்  வீரப்பனைப்பிடிக்க  வருகிறார். அவர்  கெட்டவர்  ஆக  இருக்கிறார். கிராம  மகக்ளின்  ஆடுகளை  ஆட்டையைப்போட்டு  சாப்பிடுகிறார். அவர் , அவரது  சகாக்கள் , உறவினர்  என 1000  ஆடுகள்  திருடி  சாப்பிட்டதாக  சொல்லப்படுகிறது. இவரை  வீரப்பன்  கொடூரமாக  தாக்குகிறான்


யானைத்தந்தங்கள்  ஏற்றுமதிக்கு  தடை  விதிக்கப்பட்ட  பின்  வீரப்பன்  யானைகளைக்கொல்வதை  நிறுத்துகிறான், அடுத்த  டார்கெட்  சந்தன  மரங்களை  வெட்டுவது . அரசியல்வாதிகள் , அதிகாரிகளும்  இவனுக்கு  உடந்தை


ஒரு  கட்டத்தில்  வீரப்பனைப்பிடிக்க  தேவாரம்  நியமிக்கப்படுகிறார், கர்நாடகா  போலீஸ் , தமிழக  போலீஸ்  இருவரும்  ஒன்று  கூடி  ஒரே  அணியாக வீரப்பனைத்தேடும்  படலத்தில்  இறங்குகிறார்கள் 


 வீரப்பனுக்கு  மளிகை  சாமான்கள், அரிசி , உணவுப்பொருட்கள்  சப்ளை  செய்தவர்கள் , செய்ததாக  ச்ந்தேகப்படுபவர்களை  அவர்கள்  குடும்பத்தை  போலீஸ்  ஒர்க் ஷாப்  என்ற  பெயரில்  கொடுமைப்படுத்தி  சித்ரவதை  செய்கிறது


போலீசின்  கொடுமை  தாளாமல்  வீரப்பன்  இருக்கும்  ஏரியாவைக்காட்டிக்கொடுத்தவர்களை  வீரப்பன்  கொடூரமாக  கொலை  செய்கிறான். மத்தளத்துக்கு  இரண்டு  பக்கமும்  இடி  என்பது  போல  கிராம  மக்கள்  போலீசால் , வீரப்பனால்  கொடூர  துன்பத்துக்கு  ஆளாகின்றனர் 


முதல்  பாகம்  இத்துடன்  முடிவடைகிறது . ராஜ்குமார்  கடத்தல்  அடுத்த  பாகத்தில் வரும்  என  ; லீடு  கொடுத்து  முடிக்கிறார்கள் 


சதீஷ்  ரகுநாதனின்  இசை  அருமை . பின்னணி இசையில்  பரபரப்பு  ஊட்டுகிறார்.ராஜ்குமாரின்  ஒளிப்பதிவில்  காடுகளின்  அடர்த்தி , பிரம்மாண்டத்தைக்கண்  முன்  நிறுத்துகிறார்.


சர்த்  ஜோதி  தான்  இயக்கம்.  எங்கே  உண்மை சம்பவங்களைக்காட்ட  வேண்டும்? எந்த  இடத்தில்  பிரபலங்களின்  பேட்டி  இடம்  பெற  வேண்டும்  என்பதை  எல்லாம்  தெளிவாகத்தெரிந்து  வைத்திருக்கிறார்.


 சர்த்திரப்புகழ்  பெற்ற  ஒரு  குற்றவாளியின்  வாழ்க்கை  வரலாறைக்கண்  முன்  காண்பது  போல  படம்  ஆக்கி  இருக்கிறார். தாக்குதலை  எப்படி  நடத்தினேன்  என  வீரப்பனே  மோனோ  ஆக்டிங்  செய்து  காட்டும்  காட்சிகள்  எல்லாம்  அபாரம்


  சபாஷ்  டைரக்டர்


1  வீரப்பன்  தரப்பு  நியாயத்தை  அதிகம்  பேசுகிறது  இந்த  வெப்  சீரிஸ். இதற்கு  முன்  வீரப்பன்  கதைகளைப்பேசிய  கேப்டன்  பிரபாகரன் , அசுரன் , நெட் ஃபிளிக்ஸ்  வெப்  சீரிஸ்  எல்லாமே  அரசு  தரப்பு  நியாயத்தை  மட்டுமே  முன்  நிறுத்திப்பெசியது. இதில்  வீரப்பன்  தரப்பு  நியாயத்தைப்பேசுகிறது.


2  வீரப்பன் மோசமான  போலீஸ்காரர்களைத்தான்  கொன்றான், மக்களுக்கு  இடையூறாக  இருந்த  போலீஸ்  ஆஃபீசர்களைத்தான்  கொன்றான்  என்ற்  வாதம்  ஏற்றுக்கொள்ளக்கூடிய  அளவில்  வைக்கப்பட்ட  விதம்  குட் 


3  வீரப்பனுக்கு  ஆதரவாக  நக்கீரன்  கோபால்., சீமான், ரோகினி  ஆகியோர்  பேசிய  கருத்துக்கள்  பொதுவான  நல்ல  கருத்துக்களாகவே  தோன்றுகிறது . வீரப்பனுக்கு  எதிராக அல்லது  அரசுக்கு  ஆதரவாகப்பேசிய  இந்து  என்  ராம்  மற்றும்  பத்திரிக்கையாளர்  கருத்துக்களும்  நன்று 


4  டாக்குமெண்ட்ரி  படமாக  இருந்தாலும்  ஆட்டோ  பயோகிராஃபி  த்ரில்லர்  படத்துக்கு  உரிய  விறுவிறுப்புடன்  படம்  ஆக்கிய  விதம்  அருமை 


5  வீரப்பனின்  அம்மா  சீரியசாம  இருக்கும்போது  வீரப்பன்  வந்து  அவரைப்பார்த்து  விட்டு  செல்வதும் , அம்மா  மரணம்  அடைந்த  பின்  இழவுக்கு , சவ  அடக்கத்துக்கு   வீரப்பன்  எப்படியும்  வருவான்  என  போலிஸ்  காத்திருப்பதும், வீரப்பன்  வராமல்  இருப்பதும்  பரப்ரப்பான  காட்சிகள் 


  ரசித்த  வசனங்கள் 


1  நக்கீரன் கோபால் -  ஒரு  கொலை  காரனை  வீரன்னு  சொல்லக்கூடாது , ஆனாலும்  அவன்  வீரன்  தான் 


2  ஃபோட்டோவில்  பார்க்க  காச நோய்  வந்தவன்  மாதிரி  இருக்கான், இவனா  இத்தனை  கொலைகள்  பண்ணி  இருப்பான்னு  முதல்ல  நினைச்சேன், ஆனா  நேரில்  பார்க்கும்போது  துப்பாக்கியுடன்  அவன்  அமர்ந்திருக்கும்  ஆகிருதியைப்பார்த்து  ஒர்த்  தான்  என  நம்பினேன்


3  வீரப்பன் =  நான்  எப்போதும்  பொய்  பேச  மாட்டேன், ஆனா  என்  எதிரிகளை  அழிக்க  மட்டும்  பொய்  பேசுவேன்


4 வீரப்பன் =   இந்த  போலீசுக்கெல்லாம்  யாரு  ட்ரெய்னிங்  கொடுக்கறது? இப்படியா  ஓப்பன்  ப்ளேஸ்ல  நின்னு  மாட்டுவாங்க? சுட்டுடுவாங்கனு  தெரியாதா? பாவம் 


5   வீரப்பன் =  எய்மே  இல்லாம  கண்டமேனிக்கு  சுடறாங்க , கிட்டத்தட்ட  5000  புல்லட்ஸ்  வேஸ்ட்  பண்ணி  இருப்பாங்க , ஆனா  நாங்க  அப்படி  இல்லை, குறி வெச்சு  சுட்டா ஆள்  அவுட் 


6 வீரப்பன் =    கோபாலகிருஷ்ணன்னு  ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  அவன்  கதையை  சொல்லியே ஆகனும், வீரப்பனைப்பிடிக்கறேன்னு  சொல்லிட்டு  1000  ஆடுகளை  ஆட்டையைப்போட்டு  வெட்டி  சாப்பிட்டுட்டான்


7  வீரப்பன் =    கோபாலகிருஷ்ணனை  கோபப்படுத்துனா  கோபமா  என்னைத்தேடிட்டு வருவான்னு  எனக்குத்தெரியும், 14  இடத்துல  கண்ணி  வெடி  வெச்சிருந்தேன். வந்து  மாட்டிக்கிட்டான், பஸ்  பீஸ்  பீஸா  வெடிச்சு  சிதறிடுச்சு, இனி  அவனால  ஆடு  திருட  முடியாது 


8   எப்பவுமே  போலீஸ்  தன்னைப்பாதுக்காத்துக்கிட்டு  மத்தவங்களை  முன்னிலைப்படுத்திதான்  வியூகம்  வகுக்கும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  வீரப்பன்  உயிருடன்  இருந்தவரை  வீரப்பனை  மரியாதையாகப்பேசிய  நக்கீரன்  கோபால்  வீரப்பன்  இறந்த  பின் இப்போது  அவன்  இவன்  எனறு  பேசுவதைப்பார்க்கும்போது  ஓபிஎஸ்   ஜெயலலிதா  உயிருடன்  இருக்கும்போது  அம்மா  என  ஓவராக  பம்மி  விட்டு  ஜெ  இறந்த  பின்  அவரைப்பெயர்  சொல்லியே  குறிப்பிடுவது  போல  உறுத்துகிறது 


2   வீரப்பன்  மீடியா  அடிக்ட்  ஆகி  இருக்கிறான், புகழ்  போதை  தேவைப்படுகிறது  என்பதை  தெரிந்து  கொண்ட  பின்பும்  போலீஸ்  வீரப்பனைப்பிடிக்க  பத்திரிக்கையாளர்  கெட்டப்பில்  போய்ப்பிடிக்க  முயலவில்லை . அது  ஏன் ? ஒரு முறை  அந்த  முயற்சி  எடுத்த  போது  கேமரா  கூட  இல்லாமல்  வெறும்  கையுடன்  போய்  வீரப்பனிடம்  மாட்டிக்கொள்வது  ஏன்?  அந்த  அடிப்படை  அறிவு  கூடவா  போலீசுக்கு  இல்லை ? 


3  வீரப்பன்  தன்  அரசியல்  நிலைப்பாடுகளை  ஜாதி  சார்ந்துதான்  எடுத்து  இருக்கிறான்  என்பது  தெரிகிறது .தான்  ஒரு  வன்னியர்  என்பதை  ஓப்பனாக  சொல்பவன்  டாக்டர்  ராம்தாசை  ஆதரிப்பதாக  சொல்கிறான். பாமக  உடன்  கூட்டணிக்கட்சி  என்பதால்  திமுக  வை  ஆதரிப்பது  ஓக்கே , ஆனால்  அதிமுக  வை , ஜெ  வை  ஏன்  எதிர்க்கிறான்  என்பதற்கு  பதில்  இல்லை 


4  வீரப்பன் ரஜினி  ரசிகனாக  இருந்திருக்கிறான். ரஜினி  அரசியலுக்கு  வருவதை  ஆதரிக்கிறான். ஆனால்  விஜயகாந்த்  அரசியல் பிரவேசம்  குறித்து  கருத்து  எதுவும்  தெரிவிக்க  வில்லை 

5  கிராம  மக்களை , பெண்களை  ரேப்  செய்து  கொலை  செய்த  போலீசார்  வீரப்பனின்  மனைவியை , மகளை  எப்படி  விட்டு  வைத்தார்கள் ?  என்ற  கேள்விக்கும்  பதில்  இல்லை 

6  நக்கீரன்  கோபால் தன்  பேட்டியில்  போலீஸ்  ஆஃபீசர்களை  மரியாதை  இல்லாமல்  அவன் , இவன்  என்று  அழைப்பது  ஏன் எனத்தெரியவில்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - கொடூர  சித்ரவதைக்காட்சிகள்  உண்டு . இதய  பலகீனம் உள்ளவர்கள்  4 ம்  எபிசோடை  ஸ்கிப்  செய்யவும் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -    அவசியம்  காணவேண்டிய  ஒரு  க்ரைம்  டாக்குமெண்ட்ரி  டிராமா . ரேட்டிங்  3.25 / 5 



Koose Munisamy Veerappan
Official Poster
GenreTrue crime docuseries
Created byJeyachandra Hashmi, Prabbhavathi RV, Vasanth Balakrishnan
Based onVeerappan
Written byJeyachandra Hashmi, Sharath Jothi, Vasanth Balakrishnan
Directed bySharath Jothi
Music bySatish Raghunathan
Country of originIndia
Original languageTamil
No. of episodes6
Production
ProducerPrabbhavathi RV
CinematographyRaj Kumar PM
EditorRam Pandian
Running time256 mins
Production companyDheeran Productions
Original release
NetworkZEE5
Release14 December 2023

Thursday, December 21, 2023

SOMANTE KRITHAVU (2023) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா ) @ அமேசான் பிரைம்


  மீண்டும் மலையாளப்பட  உலகில்  இருந்து ஒரு  வித்தியாசமான  கதை . இயற்கை  ஆர்வலர் + டீ டோட்டலர் + இயற்கை  மருத்துவம்  ஆகியவற்றில்  நம்பிக்கை + ஆர்வம்  உளள  நாயகன்  சந்திக்கும்  காமெடி கலாட்டாக்கள் , பிரச்சனைகள்  தான்  கதை . மாமூல்  மசாலாப்படம்  பார்ப்பவர்களுக்கு  இந்தக்கதை  பிடிக்காது .ரொம்ப  ஸ்லோவாகப்போகும் மெலோ  டிராமா


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்   கிராமத்தில்  அக்ரிகல்ச்சர்  ஆஃபீசர்  ஆக  அரசுப்பணியில்  இருப்பவர் . இவர்  ஒரு  அட்வைஸ்  அம்புஜம்  ஆக  ஊரில்  செயல்படுவதால்  பலரும்  அவரை  கிண்டல்  செய்வார்கள் . ஆளைக்கண்டாலே  அட்வைஸ்க்கு  பயந்து  தலை  தெறிக்க  ஓடுவார்கள் 


 ஆங்கில  மருத்துவத்துக்கு  நாயகன்  தீவிர  எதிரி. சின்ன வயதில்  நாயகனின்  அப்பா  ஐந்து  வருடங்கள்  தொடர்ந்து  மாத்திரைகள்  சாப்பிட்டதால்  கிட்னி  பிராப்ளம்  வந்து  இறந்ததால்  ஊரில்  யாரும்  அது  போல்  கஷ்டங்கள்  அனுபவிக்கக்கூடாது  என  நினைப்பவர்  

 அவருக்கு  அடிக்கடி  ஒரு   ஃபோன்  கால்  வருகிறது . அந்தப்பெண்  குரல்  நாயகனுக்கு  முதலில்  நட்பை  ஏற்படுத்தி  பின்  காதல்  ஆகி  திருமணம்  வரை  போகிறது 


குடும்ப  ஜோசியர்  இவர்களுக்குக்குழந்தை  பிறந்தால்   குழ்ந்தைக்குப்பத்து  வயது  ஆகும்போது  நாயகனுக்கு  ஒரு  கண்டம் இருக்கிறது  என்று  சொல்கிறார். இதற்குப்பின்  நிகழும்  சம்பவங்கள்  தான்  மீதித்திரைக்கதை 


நாயகன்  ஆக வினய்  ஃபோர்ட்  பிரமாதமாக  நடித்திருக்கிறார். அவரது  உடல் மொழி ,  டயலாக்  டெலிவரி , அண்டர் ப்ளே  ஆக்டிங்  எல்லாம்  அருமை 


நாயகி  ஆக நடித்திருப்பவர்  நம்ம  ஊர்  ஊர்வ்சியின்  அக்கா  கல்பனாவை  நினைவுபடுத்துகிறார். ஆர்ப்பாட்டம்  இல்லாத  பாந்தமான  நடிப்பு 


நாயகனின்  அம்மாவாக  வருபவர்  படம்  முழுக்க  உயிரோட்டமான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார் 


ஒளிப்பதிவு , லொக்கேஷன்  அனைத்தும்  அருமை , கேரளா- ஆலப்புழா  மாவட்டத்தில்  படப்பிடிப்பு  நடந்திருக்கிறது , கண்ணுக்குக்குளுமை . சஜித்  புருசன்  தான்  ஒளிப்பதிவு . சஜித்தின்  புருசன்  அல்ல , பெயரே  அதுதான் 


இசை , பின்னணி இசை   ஓக்கே  ரகம்  பி எஸ்  ஜெயஹரிக்கு  பாராட்டுக்கள் 


2   மணி  நேரம்  ஓடும்படி  ட்ரிம்  செய்திருக்கிறார்  எடிட்டர்    


ரஞ்சித்  கே  ஹரிதாஸ்  எழுதிய  திரைக்கதைக்கு  உயிர்  ஊட்டி  இயக்கி  இருக்கிறார்  ரோஹித்  நாராயணன் 


சபாஷ்  டைரக்டர்


1  நாயகனுக்குப்பெண்  பார்க்கும்  தரகர்  பல  பெண்களின்  ஃபோட்டோக்களைக்காட்டும்போது  நாயகன்  தரகரின்  அருகில்  இருக்கும்  அவரது  சொந்த  மகளைக்காட்டும்  காட்சி 


2  கல்யாணம்  நடக்கும்போது  தாலியைக்காணாமல்  மண்டபத்தில்  எல்லோரும்  தாலியைத்தேடும்  காமெடிக்காட்சி 


3  இயற்கை வழியில்  சுகப்பிரசவம்  காண்பது  எப்படி  என  கிளாஸ்  எடுப்பது  போல  அமைக்கபப்ட்ட  டீட்டெய்லான  காட்சிகள்  அழகு 


4 முதல்  பாதி  திரைக்கதையை  காமெடி   கலந்த  ஃபேமிலி  செண்ட்டிமெண்ட்  பெக் டிராப்பில்  தந்து  விட்டு  பின்  பாதியில் சீரியசாக  கதை  சொன்ன  விதம் 


  ரசித்த  வசனங்கள்


 1 இதுக்குத்தான்  வீடு பூரா  டைல்ஸ்  ஒட்டிடலாம்னு  சொன்னேன், நீ  கேட்கலை 


 ஆமா,  பெரிய  தாஜ்மகாலா  கட்டப்போறே? 


2  எப்போபாரு  தம்  அடிச்சுக்கிட்டே  இருக்கே? அதோ  சோமன்  வர்றாரு, தம்மை  மறை


 சோமன்  தானே  வர்றாரு? பெட்ரோல்  பங்க்  இல்லையே? ஏன்  பயப்டனும் ?


3  ஹலோ , நாங்க  காலைல  இருந்து  அஃபீசரைப்பார்க்க  லைன்ல  நிக்கறோம், நீ  வ்ந்ததும் நேரா  உள்ளே  போகப்பார்க்கறே?

 அய்யோ  மேடம், அவர்  தான்  அந்த  ஆஃபீசர்


4  ஹலோ


 என்  ஃபோனை எதிர்பார்த்துக்காத்திருந்தீங்களா?


 இல்லை , இல்லைனு  சொன்னா  அத் பொய்  ஆகிடும், உங்க  பேர்  கூட  எனக்குத்தெரியாது . என்ன  பேரு ?


 ஷாலினி 


பேபி  ஷாலினியா?


 இல்லை ,பேபி  இல்லாத  ஷாலினி 


5  அம்மா , அர்ஜெண்ட்டா  நான்  ஒரு  கல்யாணம்  பண்ணனும் 

ஏண்டா, உன் வாழ்க்கை வேஸ்டா  போகுது  ஓக்கே , எதுக்கு  ஒரு  பெண்ணோட  வாழ்க்கையையும் வேஸ்ட்  ஆக்க  நினைக்கறே? 


6  காதல்  என்பது  ஆட்டோவில்  போற  மாதிரி , எப்போ  வேணா  இறங்கிக்கலாம், ஆனா  கல்யாணம்  என்பது  ஃபிளைட்ல  பயணிப்பது  போல,  வழில  உன்  இஷ்டத்துக்கு  இறங்க  முடியாது 

7  என்னது ?இவனுக்குக்கல்யாணமா? அப்போ  சீக்கிரமே  டைவர்ஸ்  எதிர்பார்க்கலாம்? 

8  இந்தக்காலப்பொண்ணுங்க  எந்த  வேலையுமே  செய்யறதில்லை , அப்புறம்  எப்படி  சுகப்பிரசவம் ஆகும் ?


9  என்னது ? உன்  பொண்ணுக்கு  இந்தியானு  பேர்  வெச்சிருக்கிறாயா?


 அவரு முதல்ல  க்ரிமுஹி  அப்டினு  வைக்கலாம்னு  இருந்தாரு (கிறிஸ்டியன்+ முஸ்லீம் + ஹிந்து = க்ரிமுஹி) 


10 அநியாயம்  எங்கே  நடந்தாலும்  அரசியல்  பலம், பணபலம்  பார்க்காமல்  நாம்  குரல் கொடுக்க  வேண்டும்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  புரோக்தர் தாலி  எங்கே ? எனக்கேட்கும்போது  நாயகன்  தன்  சர்ட்  பாக்கெட்டைப்பார்த்து  காணோமே? என்கிறார். மாப்பிள்ளையின்  சர்ட்  பாக்கெட்டிலா  தாலி  இருக்கும் ?  ஆல்ரெடி  ஆசீர்வதிக்கப்பட்டு  தட்டில்  தானே  வைத்திருப்பார்கள்? 


2  வில்லன்  திடீர்  என  டாக்டர்  ஆவது  எபப்டி ? என்ற  விளக்கம்  இல்லை 


3  நாயகன்  தன்  அரசுப்பணியைத்துறந்து  சொந்தத்தொழில்  தொடங்க  சரியான  காரணம்  சொல்லப்படவில்லை 


4  பின்  பாதியில்  கடைசிப்பாதி  கதை  ரொம்பவே  ஸ்லோ



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பரபரப்பான  த்ரில்லர்  பட  ரசிகர்கள் , ஆக்சன்  மசாலா  பிரியர்கள்  தவிர்க்கவும், ஸ்லோ  மூவி . ரெட்டிங்  2.5 / 5 

Wednesday, December 20, 2023

KADHA CHITHRA (2023) - கன்னடம் - சினிமா விமர்சனம் ( த்ரில்லர் டிராமா ) @ அமேசான் பிரைம்


 இந்தப்படம்  கின்னசில்  இடம்  பிடிக்க  வாய்ப்புள்ளது. நாயகன்  ஒவ்வொரு  காட்சி  தொடக்கத்திலும்  தம்  அடிப்பார் , சரக்கு  அடிப்பார். படத்தில் வரும்  ஒவ்வொரு  ஆண்  கேரக்டரும்  இதே  வேலையை  செய்யும். கடந்த 28  வருடங்களில்  நான்  பார்த்த 6754  படங்களிலும்  இல்லாத  ஒரு  சாதனை  இது .


அட்லீ  மாதிரி  இந்தப்பட  இயக்குநர்  2  வெவ்வேறு  டிவிடி  பார்த்து  முதல்  பாதி  ஒரு  கதை  , பின்  பாதி  இன்னொரு  கதை  என  பட்டி  டிங்கரிங்  செய்து  இருக்கிறார். படு  டப்பா படமான  இது கர்நாடகாவில்  ஹிட்  ஆகி  இருக்கிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  பாரம்பரியம்  மிக்க  நல்ல  குடும்பத்தில் பிறந்த அழகான  பெண். அவரது  வீட்டின்  மாடிபோர்சனில்  நாயகன்  புதிதாகக்குடி  வருகிறார். இவர்  ஒரு  ரைட்டர்


 நாயகி  நாயகனைப்பார்க்கும்  ஒவ்வொரு  சமயமும்  நாயகன்  கேன்சர்  பேஷண்ட்  மாதிரி  தம்  அடிப்பது , கல்லீரல்  டேமேஜ்  ஆகட்டும்  என  தண்ணி  அடிப்பது  என்றே  இருப்பதால் நாயகிக்கு  அவர்  மீது  செம  கடுப்பு 


ஒரு  நாள்  நாயகன்  எழுதி    வீசிய  பேப்பரைப்பார்த்து படித்து  அவர்  எழுத்தின்  மீது  காதல்  கொள்கிறாள் . தாடி  வெச்சுட்டு  பிச்சைக்காரன்  மாதிரி  இருக்கும்  அவரை  லவ்  பண்ணுகிறாள் . மனசாட்சியே  இல்லாமல் கல்யாணமும்  செய்து  கொள்கிறாள் 


 இருவருக்கும் ஒரு  பெண்  குழந்தை  பிறக்கிறது . வாழ்க்கை  சந்தோசமாகப்போய்க்கொண்டிருக்கும்போது  நாயகன்  மேல்  ஒரு  குற்றச்சாட்டு  வருகிறது. நாயகன்  எழுதிய  ஒரு  புகழ்  பெற்ற  நாவல்  ஆல்ரெடி  வேறு  ஒருவர்  எழுதியது . இவரும்  அட்லீ  போல  ஏஆர்  முருகதாஸ்  போல., ஈரோடு  மகேஷ்  போல , மதுரை  முத்து  போல  அடுத்தவர்  படைப்பை  ஆட்டையைப்போடுபவர்  என  ஊர்  உலகம்  அவரை  கேவலமாகப்பேசுகிறது . இதனால்  மெண்ட்டல்  டிப்ரஷன்  க்கு  உள்ளாகிறார்  நாயகன்.


இந்தக்கேவலமான  கதை  தான்  முதல்  பாதி .


இரண்டாம்  பாதி  அதை  விட  மட்டமான  கதை 


அரசியல்  செல்வாக்கு  மிக்க  3  வில்லன்கள்   பெண்களை  பாலியல்  வன்கொடுமை  செய்வதை  பார்ட்  டைம் ஜாப்  ஆக  வைத்திருக்கின்றனர். அவர்கள்  முகமூடியைக்கிழித்து  சமூகத்துக்கு  அடையாளம்  காட்டுகிறார்  நாயகன்


நாயகன்  ஆக  விஜய்  ராகவேந்திரா  தாடி  வைத்துக்கொண்டு  எப்போப்பாரு  தம் , தண்ணி  என  உலா  வருவதற்கு  தண்டமா  சம்பளம்  வேற .ஜிம்முக்கே  போகாமல்  தொள  தொள  என இருக்கும் பாடியை  வைத்துக்கொண்டு  இவருக்கு கமல், சரத்  குமார்  மாதிரி   அடிக்கடி  ஸ்லீவ்லெஸ்  தோற்றம்  வேற  சகிக்கவில்லை 


 நாயகி  ஆக  நம்ரதா   சுரேந்தர்நாத். அழகாக இருக்கிறார்.  சகிப்புத்தன்மை  மிக்கவர்  போல . சிகரெட், சரக்கு  என  எப்போப்பாரு  பேடு  ஸ்மெல்  வீசும்  ஆள்  பக்கத்தில்  நிற்கனுமே? சமாளித்திருக்கிறார்


மகளாக  பேபி  ஆராத்யா  அழகாக  வந்து  போகிறார்


இந்த  கேவலமான  கதையை  எழுதி  இயக்கி  இருப்பவர்  சுஹாஸ்  கிருஷ்ணா.

108  நிமிடங்கள்  ஓடும்படி  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்  எடிட்டர் 


சபாஷ்  டைரக்டர்


1  கதை  கேவலமாக  இருந்தாலும்  லொக்கேஷன், ஒளிப்பதிவு  என  காட்சிகளை  குளுமையாக  படம்  ஆக்கும்  ஒளிப்பதிவாளரை  புக்  செய்தது 


2   படம்  முழுக்க  அழகாக வந்து  போகும்  நாயகி,  பேபி  இருவரையும் புக்  செய்தது 


  ரசித்த  வசனங்கள் 

1  நான்  கெட்டவன்  தான், ஆனா  அதை  நான்  ரசிக்கிறேன். எக்சைட்மெண்ட்  ஆக  உணர்கிறேன்


2  பண  பலம், அரசியல்  பலம்  உள்ளவங்களை  எதிர்ப்பது  மின்சாரத்தில்  நீச்சல்  அடிப்பது  போல, அபாயகரமானது  


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  மூன்று  கிரிமினல்சும்  நாயகன்  வீட்டில்  வந்து  அவர்களுக்கு  எதிரான  எவிடென்ஸ்  எங்கே  என  ரொம்ப  நேரமாகத்தேடுகிறார்கள் . அவர்கள்  தான்  ரவுடிகள் , செல்வாக்கு  மிக்கவர்கள்  ஆச்சே?  வீட்டையே  கொளுத்தி  இருக்கலாமே? 


2   நாயகன் - நாயகி  இருவரும்  பிரிந்தது  உண்மையா? அது  நாயகனின்  மனப்பிரமையா? என்ற  விளக்கம்  இல்லை 


3   நாயகனின்  குழந்தை  பாத்  டப்பில்  ஷாக்  அடித்து  இறக்கும்  காட்சி  நம்பகத்தன்மை  இல்லை 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ/ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   இந்தக்கேவலமான  படத்தை  ட்ரெய்லர்  கூட  பார்த்து விட  வேண்டாம், எஸ் ஆகி  விடவும் . ரேட்டிங்  மைனஸ்  1 / 5