Saturday, October 21, 2023

போர் தொழில் (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்) @சோனி லைவ்

     


 உலகம்  முழுக்க  50  கோடி  ரூபாய்  வசூல்  செய்த படம்  இது. கேரளாவில் ரிலீஸ்  ஆன முதல்  10  நாட்களில்  3.5  கோடி  வசூல்  செய்த  படம் . அசோக் செல்வன்  கேரியரில்  முதல்  பிரம்மாண்ட  வெற்றிப்படம். ஒரு படத்துக்கு திரைக்கதை எந்த  அளவு  முக்கியம்  என்பதை உணர்த்திய  படம் ராட்சசன்  படத்துக்குப்பின்  தமிழ்  சினிமா வில்  க்ரைம்  த்ரில்லர் + சீரியல்  கில்லர்   ஜர்னரில்  வந்த  மறக்க  முடியாத  படம்     

  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  டிஎஸ்பி  ஆஃபீசர். இப்போதுதான்  முதல்  முறையாக  பொறுப்பேற்கிறார். அவருக்கு  ட்ரெய்னர்  ஆக  ஒரு  ஆஃபீசர் எஸ்  பி  போஸ்ட்டில்  இருக்கிறார்., இருவருக்கும்  டெக்னிக்கல்  அசிஸ்டெண்ட் ஆக  நாயகி 


நகரில்  தொடர்  கொலைகள்  நடக்கின்றன. கொலை  செய்யப்படுபவர்கள்  அனைவரும்  பெண்கள் /. மற்றபடி  வேறு  ஒற்றுமை  இல்லை கொலைகாரனைக்கண்டு  பிடிப்பது  மிக  சிரமமாக இருக்கிறது 


 25  வருடங்களுக்கு  முன்  இதே  மாதிரி  கொலைகள்  நடந்த்தா? என  விசாரிக்கும்போது  இதே  டைப்  கொலைகள்  நடந்தது  தெரிய  வருகிறது ., அந்த  கேஸ்களை  டீல்  செய்த  போலீஸ் ஆஃபீசரை   சந்தித்தால்  ஏதாவது  உண்மைகள்  தெரிய் வரும்  என்று  முடிவு  செய்து ஆஃபீசர்  அட்ரஸ்  போனால்  அவர்  ஆல்ரெடி  இறந்து  விட்டார் , அவர்  மகன்  தான்  இருக்கிறார்


 அவர்  மீது  இருவருக்கும்  சந்தேகம்  வருகிறது. அவரது  வீட்டுக்கு  அருகே  இருக்கும்  வீட்டில்  தங்கி  கண்காணிக்கின்றனர். அப்போதுதான்  ஒரு  உண்மை  தெரிய  வருகிறது 

அதற்குப்பின்  திரைக்கதையில்  நிகழும்  திருப்பங்கள்  தான்  சுவராஸ்யமான  மீதி  கதை 


 நாயகன்  ஆக  அசோக்  செல்வன் . இவரை  மீசை  இல்லாமல்  பார்க்க  முதலில்  எனக்குப்பிடிக்கவில்லை . ஆனால் போகப்போக  பழகி  விடுகிறது , அதற்கான  நியாயத்தை இயக்குநரும் , நாயகனும் கச்சிதமாக  செய்திருக்கிறார்கள்: 


 தமிழ்  சினிமாவில்  மீசை  இல்லாமல்  அல்லது  மீசை  வைக்காமல்  ஜெயித்த  கதாநாயகர்க்ள்  மிக  சொற்பமே. நாயகன், பேசும் படம்  கமல் , ஜீன்ஸ்  பிரசாந்த் என  விரல்  விட்டு  எண்ணி  விடலாம். தமிழர்களைப்பொறுத்தவரை  மீசை  என்பது  ஆண்மையின்  அடையாளம்.


அசோக்  செல்வன்  கேரக்டர்  டிசைன்  படிப்பு  அனுபவம்  கை  கொடுக்கும்  என  நம்புபவராகவும், அடிபப்டையில்  கோழைத்தனமான  கொஞ்சம்  பயந்த  சுபாவம்  உள்ளவராகவும்  சித்தரிக்கப்பட்டிருப்பது  மிக  யதார்த்தமாக  இருக்கிறது . போலீஸ்  என்றாலே கெத்துடன்  ஹீரோயிசம்  மட்டும்  காட்டும்  நாயகர்கள்  நடுவில்  இது  கொஞ்சம்  வித்தியாசமாக  இருந்தது 


இன்னொரு  நாயகன்  ஆக  சரத்  குமார்,புலன்  விசாரணை  படத்துக்குப்பின்  ஒரு  கம்பீரமான  நாயகனைக்காண  முடிகிறது. அவரது  உடல்  மொழி , போலீஸ்  ஹேர்  கட்  எல்லாம்  பக்கா . ஏட்டுச்சுரைக்காய்  கறிக்கு  உதவாது , அனுபவம்  தான்  ஆசான்  என்ற  கொள்கையுடன்  ரஃப்  அண்ட்  டஃப்  கேரக்டர்  ஆக  அவரது  கேரக்டர்  சித்தரிக்கப்பட்டுள்ளது


மாறு பட்ட  இரு  துருவங்களாக  இரு நாயகர்களும்  சித்தரிக்கப்பட்டதால்  இருவருக்கும்  இடையே  எழும்  ஈகோ  கிளாஸ் ,  கருத்து  மோதல்  ஆகியவை  மெயின்  கதையை  விட மிக  சுவராஸ்யம் 


நாயகி  ஆக  நிகிதா  விமல் யதார்த்தமான  பெண்ணாக  வந்து  போகிறார்.அதிக  காட்சிகள்  இல்லை  என்றாலு,ம்   தேவையற்ற  திணிப்பு  , டூயட்  காட்சிகள்  இல்லாதது  ஆறுதல் 


வில்லன்கள்  ஆக  இருவர். ஒருவர்  அமரர்  சரத் பாபு . இதுதான்  அவரது  கடைசிப்படம்   . . நல்ல  வேளை  அவரது  கொடூரமான  பக்கங்களுக்கு  ஃபிளாஸ்பேக்கில்  இளவயது  சரத்பாபுவாக  வேறு  ஒருவரை  உபயோகித்தது  சரியான  முடிவு , அவரை  ஜெண்ட்டில்மேனாகவே  எல்லாப்படங்களிலும்  பார்த்துப்பழகி  விட்டோம்


 இன்னொரு  வில்லன் ஆக  மலையாளப்படங்களில்  காமெடி  ரோலில் நடித்தவர்  சுனில் சுகதா . .கச்சிதமாக  நடித்திருக்கிறார் 


ஜீப்  டிரைவராக  தயாரிப்பாளர்  தேனப்பன்  உருக்கமான  நடிப்பை  வெளிப்படுத்தி இருக்கிறார்


ஸ்ரீஜித்  சாரங் கின்  எடிட்டிங்கில்  147  நிமிடங்கள்  ஓடும்படி  ட்ரிம்  செய்திருக்கிறார். எங்குமே  தொய்வில்லை 

ஜேக்ஸ்  பெஜோய்  தான்  இசை ., பிஜிஎம்  மில்  தெறிக்க  விடுகிறார்


கலைச்செல்வன்  சிவாஜி யின்  ஒளிப்பதிவு   தரம் 


விக்னேஷ்  ராஜா  தான்  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார். அடுத்த  படமும்  இதே  காம்ப்போவில்  செய்ய  வாய்ப்பு  உண்டு 



சபாஷ்  டைரக்டர்  ( விக்னேஷ்  ராஜா ) -அறிமுக இயக்குநர்


1  அட்டகாசமான  இடைவேளை  பிளாக்  காட்சி. காரில்  ரயில்வே  லெவல்  கிராசில்  வில்லன்  இருக்க   எதிரே  சரத்  குமார்  இன்னொரு  போலீஸ்க்கு  இன்ஸ்ட்ரக்சன்  கொடுக்க  கொடுக்க  அதே  போல்  போலீஸ்  வில்லனைக்கேள்வி  கேட்கும்  காட்சிகள்  அருமை (   நீயா? நானா?  நிகழ்ச்சியில்  கோபிநாத்துக்கு  இதே  போல்  இன்ஸ்ட்ரக்சன்  வருமாம்,  ஆணைக்கு  ஏற்ப  அவர்  குறுக்குக்கேள்விகள்  கேட்பாராம். அந்த  நிகழ்வு  தான்  இந்த  சீனுக்கு  இன்ஸ்பிரேஷன்  ஆக  இருந்திருக்கும்) 


2  போஸ்ட்மார்ட்டம்  செய்ய  டாக்டர்  தாமதம்  செய்யும்  சூழலில்  இறந்த  நேரம்  தெரிய  வேண்டிய அவசியம். அப்போது  அசோக்  செல்வன்  டெட்  பாடியின்  காதில்  தெர்மாமீட்டரை  வைத்து  27  டிகிரி  காட்டுது. இறக்கும்போது  மூளை  35  டிகிரியில்  இருக்கும், இறந்த  பின்  மூளை  கொஞ்சம்  கொஞ்சமாக  செயல்  இழக்கும், அந்தக்கணக்கின்  படி  ஆள்  இறந்து  8  மணி  நேரம்  ஆகிறது  என  ஏட்டுச்சுரைக்காய்  கறிக்கு  உதவும்  என  நிரூபிக்கும்  சீன் 


3  வில்லன்  நெ  2  க்ளைமாக்சில்  யாருக்குக்குறி  வைக்கிறான்  என்பதை  தவறாக  யூகிக்கும்  நாயகர்கள்  இருவரும்  ஒரு  கோணத்தில்  போக  கேஸ்  திசை  மாறி  வில்லனின்  டார்க்கெட்டை  கச்சிதமாக  கண்டு  பிடிக்கும்  காட்சி  அமர்க்களம் 


4    வில்லன்  நெ 2  துப்பாக்கியை  சரியாக  உபயோகிக்க  முடியாமல்  திணற  அப்போது  நாயகன்  அசோக்  அந்த  ரிவால்வர்  பற்றி  டீட்டெய்லிங்  கொடுத்து  சுடும்  காட்சி   மாஸ்  சீன் 


5  க்ளைமாக்சில்  எல்லாம்  முடிந்த  பின்  சண்டை  இடும்  பெற்றோரால  அழும்  சிறுவனுக்கு  வாக்மேன்  கொடுத்து  பெற்றோரிடம்  நீங்க  சரியா  இருந்தா  போலீசான  எங்களுக்கு  வேலை  குறையும்  என  சமூகப்பொறுப்பு  மிக்க   வசனம்  பேசும்  இடம் 


6  ஆரம்பக்காட்சிகளில்  நாயகர்கள்  இருவரும்  மோதிக்கொள்வதும் , இருவருக்குமிடையே  புரிதல்  வந்த  பின்  இணைந்து  பணியாற்றுவதும்  இருவருக்குமான  கெமிஸ்ட்ரி  பிரமாதம்

7  கொலை  செய்யப்படும்  பெண்களுக்கு  என்ன  ஒற்றுமை  என  ஆராய்கையில் அனைவருக்குமே  சிரிக்கும்போது  கன்னத்தில்  குழி  விழும்  என்பது  மாறுபட்ட  சிந்தனை , அதனை  நாயகன்  கண்டு பிடித்து  விளக்கும்  காட்சி  பிரமாதம்

8  பொதுவாக  க்ரைம்  த்ரில்லர்  படங்களில்  சமூக  அக்கறை  மிக்க  வசனங்கள்  இருக்காது. இது  விதிவிலக்கு  


  ரசித்த  வசனங்கள் 


1 சார் , உங்க  லைன்  ஆஃப்  ஆக்சன்  என்னனு  சொன்னீங்கன்னா  என்னால  முடிஞ்ச  உதவியை ....


 உங்களால  முடியததால்தானே  கேஸ்  என்  கிட்டே வந்திருக்கு ?  ஏதாவது  உதவி  வேணும்னா  யார்  கிட்டே  எப்படிக்கேட்கனும்னு  எனக்குத்தெரியும்


2  ஒரு  புல்லட்  கூட  யூஸ்  பண்ணாம  எத்தனை பேர்   ரிட்டையர்   ஆகி இருக்காங்க  தெரியுமா?  சுடத்தெரியாம  இல்ல , சுட  தைரியம்  இல்லாம


3  சுத்தி  இருக்கறவங்க  ஏதாவது  சொல்லிட்டே  தான்  இருப்பாங்க , நம்ம  வேலையை  நாம  கரெக்ட்டா  செஞ்சா நமக்கான  மரியாதை  நம்மைத்தேடி  வ்ரும் 


4 ஒரு ஆர்ட்டிஸ்ட்  பற்றி  தெரிஞ்சுக்கனும்னா  அவரோட  பெயிண்ட்டிங்க்சை  கவனிக்கனும், ஒரு  கொலைகாரனைப்பற்றி  தெரிஞ்சுக்க அவன்  செஞ்ச  கொலைகளை  கவனிக்கனும் 


5  கூட  இருக்கறது  முக்கியம்  இல்லை , என் கூட  ஒடி  வரனும் 


6 ஒரு  கொலை  எதுக்கு  நடக்குதுனு  பார்க்க  அதுக்கான  மோட்டிவ்  என்னனு  தெரிஞ்சுக்கனும்


7 தம்  அடிச்சா  இன்னும்  கொஞ்சும்  நேரம்  கழிச்சு  இன்னொரு  தம்  அடிக்கலாம்னு  தோணும், அது  மாதிரி  கொலைகாரனுக்கு  கொலை  பண்றது  ஒரு  அடிக்சன்


8 இந்த  கேஸோட  முதல்  கொலை  தான்  கொலைகாரனோட  முதல்  கொலை  என்பது  என்ன  நிச்சயம் ?


9  என்  வேலை  போனாலும்  இன்னொரு  உயிர்  போகக்கூடாது


10  ஏன்  ஒருத்தன்  போலீஸ்  ஆகறான்  என்பது  முக்கியம்  இல்லை , ஆனபின்  என்ன  பண்றான் ? என்பது தான்  முக்கியம் 


11  பயந்தவன்  எல்லாம்  கோழைஇல்லை , பயந்து  ஓடறான்  பாரு , அவன் தான்  கோழை 


12  கிரிமினல்சைபிடிக்கறது  மட்டும்  தான்  நம்ம  வேலை . ஒரு  கிரிமினல் உருவாகாம   தடுப்பது  நம்ம  கைல  இல்லை ., அது  நம்ம  வேலையும்  இல்லை 


13  சூழ்நிலை  சரியில்லாம  வளர்பவன்  கிரிமினலாத்தான்  ஆகனும்  என்பது  இல்லை , கிரிமினல்சை  பிடிக்கும்  போலீசாகவும்  ஆகலாம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  டி எஸ் பி  ஆக  இருக்கும்  நாயகன்  காலேஜ்  ஸ்டூடண்ட்  மாதிரி  நாயகியிடம்  கடலை  போடும்  காட்சி  ஜாலியாக  இருந்தாலும்  அவரது  கேரக்டர்  டிசைனுக்கும், , சுபாவத்துக்கும்  பொருத்தம்  இல்லாத  காட்சி 

2    வில்லன்  நெ1  நாயகனை  வாண்ட்டடாக  டின்னர்  சாப்பிட  அழைப்பது ஏன்?  தன்  மகன்  சாயலில்  நாயகன் இருப்பதால்  என  சப்பைக்கட்டு கட்டினாலும்  வேலில  போற  ஓணானை  வேட்டியில் விட்ட கதை  தான்  நினைவு  வருது 


3   வில்லன்  நெ1  வீட்டுக்கு  டின்னர்  சாப்பிட  வரும்  நாயகன்  அப்போதே  ஏன்  அந்த  அறையை  செக்  பண்ணப்போய் மாட்டிக்கொள்ளனும் ? நோட்  பண்ணி  வைத்து  விட்டு  ஆள்  வெளியே  போனப்ப  வந்து  செக்  பண்ணலாமே? இப்படியா  அவசரக்குடுக்கையாட்டம்  போய்  மாட்டிக்குவாங்க ? 


4  ஜிம்  பாடி  போலீஸ்  ட்ரெய்னிங்  உள்ள  ஆஜானுபாவக  சரத்  குமாரை  தொப்பை  உள்ள  எந்த   ஜிம் அறிமுகமே  இல்லாத  வில்லன்  நெ2  அனாயசமாக  சமாளிப்பது , தாக்குவது  நம்பும்படி  இல்லை 


5  வில்லன்  நெ2  ஆஸ்துமா  பிராப்ளத்தால்  அவதிப்படுவது  போல்  நடித்து  வாசலில்  நிற்கும்  காரில்  அஸ்தாலின்  இன்ஹெலர்  இருக்கிறது  என  நாயகியை  காருக்கு  வரவழைக்க  திட்டம்  போடுவது  ஓக்கே , ரூம்  பாய்  அல்லது  ஹோட்டல்  பாய்  யாரையாவது  அனுப்பாமல்  நாயகி  நைட்  டைமில் வெளியே  போவது  நம்பும்படி  இல்லை 


6  வில்லன்  நெ2  பெண்களாகக்கொலை  செய்ய  அவனது  மனைவி  ஒரு  காரணம்  அது  ஏற்றுக்கொள்ளும்படி  இருக்கிற்து , அனால்  வில்லன்  நெ  1   தன்  அப்பாவின்  மீது  உள்ள  கோபத்தில்  பயத்தில்  ஏன்  பெண்களைக்கொலை  செய்ய  வேண்டும் ?> முதல்  கொலை  டீச்சர்  அது  ஓக்கே   ஆனால்  மற்ற  கொலைகள்  அப்பா  சாயலில்  உள்ள  ஆண்களைத்தானே  லாஜிக்  படி  கொன்றிருக்க  வேண்டும் ? 


7 வில்லன்கள்  இருவரும்  பண  பலமோ  , அரசியல்  செல்வாக்கோ  இல்லாத்வர்கள், அப்படி  இருக்க  யார்  தானாக முன்  வந்து  நான்  தான்  குற்றவாளி  என  சரண்டர்  ஆகிறார்? அதற்கான  டீட்டெய்லிங்  மிஸ்சிங்


8  வில்லன்  நெ 2  வில்லன்  நெ 1 இடம்  பயிற்சி  பெறுகிறான், ஐடியாக்கள்  தெரிந்து  கொள்கிறான். அப்போ  சாட்சியான  வில்லன்  நெ 1  ஐ ஏன்  வில்லன்  நெ 2  கொலை  செய்யவில்லை ? அவனது  முதல்  கொலையே  அதாகத்தானே  இருக்க  வேண்டும்? வ்ரம்  கொடுத்த  சிவன்  தலையில்  கை  வைக்கும்  பத்மாசூரன்  கதை  போல 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ/ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - க்ரைம்  த்ரில்லர்  ரசிகர்கள்  அவசியம்  காண  வேண்டிய  பிரமாதமான  படம், செம  த்ரில்லிங்  ரேட்டிங் 3.5 / 5 


Por Thozhil
Theatrical release poster
Directed byVignesh Raja
Written by
  • Alfred Prakash
  • Vignesh Raja
Produced by
  • Sameer Nair
  • Deepak Segal
  • Mukesh R. Mehta
  • C. V. Sarathi
  • Poonam Mehra
  • Sandeep Mehra
Starring
CinematographyKalaiselvan Sivaji
Edited bySreejith Sarang
Music byJakes Bejoy
Production
companies
Distributed bySakthi Film Factory
Release date
  • 9 June 2023
Running time
147 minutes
CountryIndia
LanguageTamil
Box office50 crore[1]

Friday, October 20, 2023

LAST NIGHT IN SOHO(2021) -பிரிட்டிஷ்- சினிமா விமர்சனம் ( சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்


சிறந்த  ஒளிப்பதிவு , எடிட்டிங்க் , விஷூவல்  எஃபெக்ட்ஸ் , சிறந்த படம்  உட்பட  ஏராளமான  விருதுகளை  பல  ஃபிலிம்  ஃபெஸ்டிவல்  விழாக்களில்  குவித்த  படம்  இது . வசூல்   ரீதியாக  23  மில்லியன்  டாலர்களை  பாக்ஸ்  ஆஃபீசில்  குவித்த  படம்  இது . சினிமாத்துறையில்  பணியாற்றுபவர்கள்  அவசியம் காண  வேண்டிய  படம் இது .


 அபூர்வ  சகோதரர்கள்  படத்தில் கமல் குள்ள  அப்பு  வாகத்தோன்றியது  எப்படி ? காலை  மடக்கிக்கட்டிக்கொண்டாரா? பள்ளத்தில்  நின்று  ஷூட்  செய்தார்களா? ஸ்பெஷல்  எஃபக்ட்டா?  கேம்ரா  ட்ரிக்சா? என்பதை  கடைசி  வரை  வெளியிடவே  இல்லை , அதே  போல  இந்தப்படத்தில் இரு  நாயகிகளும்  தோன்றும்  காட்சி   ஸ்பெஷல்  எஃபக்ட்டின்  உச்சம்  என  சொல்லலாம். மாறுபட்ட  ஒளிப்பதிவு  அனுபவத்தைத்தரும் 


2011ல்  ரிலீஸ்  ஆன  மிட்  நைட்  இன்  பாரீஸ்  படத்தின்  சாயல்  இதில்  இருப்பதாக  சில  விமர்சகர்கள்  கருத்து  தெரிவித்திருந்தார்கள் 

          ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி ஃபேஷன்  டிசைனிங்கில்  ஆர்வம்  கொண்டவர் . எல்லோரும்  மாடர்ன்  ஆக  தன்னைக்காட்டிக்கொள்ளும்  சமயத்தில்  இவர்  மட்டும்  1960 களில்  வந்த  உடைகள் , ஹேர்  ஸ்டைல்  என  தேர்ந்தெடுத்துக்கொண்டவர் . இவருக்கு  அம்மா, அப்பா  இல்லை , பாட்டி  மட்டும் .  தான்  பாட்டியுடன்  வசிக்கும்  ஊரை  விட்டு   , ,மேல் படிப்புக்காக  லண்டன்  வருகிறார். அங்கே  காலேஜ்  ஹாஸ்டலில்  தன்  ரூம்  மேட்ஸ்  உடன்  தங்குகிறார். ஆனால்  தோழிகள்  நடவ்டிக்கை  சரி  இல்லை , பாய்  ஃபிரண்ட்சை  ரூமிற்கு  அழைத்து  வருவது ., போதைப்பொருள்  உபயொகிப்பது  என  இருப்பதால்  தனி  வீடு  பார்த்துக்குடி  போகிறார்


இப்போது  நாயகி  புதிதாகக்குடி  வந்த  வீட்டின்  ஓனர்  ஒரு  பாட்டி  தான்.இங்கே  இருந்து  தான்  படத்தின்  க்தை த்குவங்குகிறது 


 நாயகிக்கு  அடிக்கடி  ஒரு  கனவு  வருகிறது. அல்லது  ஏற்கனவே  நிகழ்ந்த  ஒரு  சம்பவம்  அவர்  கண்  முன்  காட்சிகளாக  விரிகிறது 


ஒரு பாடகி  கம்  டான்சர்  1960  கால  கட்டத்தில்  புகழ்  பெற்ற  கிளப்பில்  பாடுகிறார், ஆடுகிறார். அந்த  கிளப்பின் ஓனர்  தான்  பாடகியின்  காதலன்/.  பாடகி   ஓனரை  உண்மையாகக்காதலிக்கிறார், ஆனால்  கிளப்  ஓனர்   பாடகியை  யூஸ்  செய்து  கொள்கிறான். அவன்  ஒரு  புரோக்கர்  ஆக  மாறி  பாடகியை  மிரட்டி  தனக்குத்தேவையான  கஸ்டமர்களுக்கு  விருந்து  ஆக்குகிறான்   


நாயகிக்கு  தான்  தான்  அந்த பாடகியா?  பாடகியின்  புது  ஜென்மம்  தான்  தானா? அலல்து  தான்  குடி  இருந்த  வீட்டில்  ஏற்கன்வே  குடி  இருந்த  பாடகி  தான்  அவரா?  அவர்  இறந்து   விட்டதால்  அவள்  ஆவி  இங்கே  சுற்றி  தனக்கு  பழைய  கதைகளை  சொல்கிறதா? என்பது  புரியவில்லை 


 நாயகி  அந்த பாடகி  போலவே  ஆடை  அலங்காரம், சிகை  அலங்காரம்  செய்து  கொள்கிறாள் . கங்கா  ச்ந்திரமுகி  மாதிரியே  நடந்துக்கிட்டா , ச்ந்திரமுகியாவே  மாறிட்டா  என்பது  போல  இவரும் அந்த  பாடகி  ஆகவே  மாறி  விடுகிறாள் 


ஒரு  கட்டத்தில்  பாடகி  அந்த  கிளப்  ஓனரால்கொலை  செய்யப்பட்டாள் என்பது  நாயகிக்கு  தெரிய  வருகிறது . போலீஸ்  ஸ்டேஷன்  போய்  புகார்  கொடுக்கிறார்

இதற்குப்பின்  நிக்ழும் திடுக்கிடும்  திருப்பங்கள்  தான்  மீதித்திரைக்கதை 


 நாயகி  ஆக  தாம்சன்  மெக்கன்சி   நடித்திருக்கிறார். குழந்தைத்தனம் தவழும்   முகம்  அவரது  பிளஸ்  பாயிண்ட் . சிண்ட்ரெல்லா  போல  சிறப்பான  தேவதையாக  படம்  முழுக்க  வலம்  வருகிறார் 


அனியா டெய்லர்  ஜோய்  அலெக்சாண்ட்ரா  சாண்டி  எனும்  பாடகி  ரோலில்  பொம்மை  மாதிரி  வந்து  போகிறார். அவரது  முகமே  பொம்மை  மாதிரிதானா? கேரக்டருக்காக  அப்படி  வடிவமைத்தார்களா? தெரியவில்லை 


 ஹவுஸ்  ஓனர்  பாட்டி  ஆக  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  வெளிப்படுத்தும்  முக்கியமான  கதாப்பாத்திரத்தில்  டயானா  ரிக்  கலக்கி  இருக்கிறார். இவர்  இப்போது  உயிருடன்  இல்லை . 2020 ல்  இறந்து  விட்டார் 


116  நிமிடங்கள்  ஓடும்படி  ஷார்ப்  ஆக  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்  எடிட்டர் /


சங்க்  ஹூங்  சங்க்  என்பவர்  தான்  ஒளிப்பதிவு  , அட்டகாசமான  படப்பிடிப்பு . இப்படி  காட்சிகளை  உருவாக்க  முடியுமா? என  மலைக்க  வைத்திருப்பார் 


ஸ்டீவன்  பிரைட்  இசையில்  பிஜிஎம்  தெறிக்கிறது . அந்தக்கால  பாப்  சாங்க்  ஆங்காங்கே  ஒலிக்கிறது 


சபாஷ்  டைரக்டர் ( எட்கர்  ரைட்)


1  நாயகி , பாடகி ,  ஹவுஸ்  ஓனர்  பாட்டி , கிளப்  ஓனர்  என  நான்கு  முக்கியக்கதாபாத்திரங்களை  மட்டும்  வைத்து  ஒரே  ஒரு  லொக்கேஷனில்  வீடு , கிளப்  என  இரண்டு  இடங்களில்  மொத்தப்படத்தையும்  முடித்த  லாவகம்  அபாரம் 

2    நாயகிக்கு  நேர்வது  இல்யூஷனா?  கனவா?  டைம்  டிராவலா? என்பது  நாயகிக்கோ, ஆடியன்சுக்கோ  கடைசி  வரை  புரியாதவாறு  காட்சிகளை  அடுக்கிய  சாமார்த்த்தியம் 


3  யாராலும்  யூகிக்க  முடியாத  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட் 


  ரசித்த  வசனங்கள் 


1  இந்த  வீட்டுக்குக்குடி  வர  சில  கண்டிஷன்ஸ்  இருக்கு , நைட்  டைம்  துவைக்கக்கூடாது


கவலைப்படாதீங்க , எனக்கு  துவைக்கற  பழக்கமே  இல்லை 


வாட்?


 ஐ  மீன், நைட்  டைம்ல துவைக்கற  பழக்கமே  இல்லை


2  என்  பேரு  உங்களுக்கு  எப்படித்தெரியும் ?

 அழகான  பொண்ணுங்க  எங்கே  இருந்தாலும்  அவங்க  ஜாதகமே  என்  கைல, ஏன்னா  என்  பிஸ்னெஸ்  அப்படி


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  இரண்டு  மணி  நேரம்  ஓடும்  படத்தில் மெயின்  கதைக்கு  இவங்க  வரவே 25  நிமிடங்கள்  எடுத்துக்கறாங்க . இழுவையோ  இழுவை ,நாயகி  ஃபேஷன் டிசைனிங்  படிக்கறாங்க , காலேஜ் போறாங்க,, டிகிரி  வாங்கறாங்க  இதெல்லாம்  தேவை  இல்லாத  ஆணி ,கடைசி 6  நிமிட  காட்சியும்  தேவை  இல்லை 


2  கம்ல் நடிப்பில்  வெளி  வந்த  எனக்குள்  ஒருவன்  (1984),  த ரீ இன்கார்னேஷன்  ஆஃப்  பீட்டர் பிரவுடு (1975), ஹிந்திப்படமான  கர்ஸ் (1980)   படங்களின்  சாயல்  இருக்கிறது 


3  வில்லனோட  ஒப்புதல்  வாக்குமூலத்தை  செல்  ஃபோனில்  ரெக்கார்டு  செய்யும்  நாயகி  கமுக்கமா  அதை  போலீஸ்  கிட்டே  கொடுக்காம  நீ  பேசறதை  ரெக்கார்டு  பண்ணிட்டேன், போலீஸ் கிட்டே  கொடுத்து  உன்னை மாட்டி  விடப்போறேன்னு  பேக்கு  மாதிரி  ஏன்  சொல்லனும் ? 




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+  காட்சிகள்  உண்டு, ஆனால்  வரம்பு  மீறாமல் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   த்ரில்லர்  ரசிககர்கள்  அவசியம்  காண  வேண்டிய  படம் , சினி ஃபீல்டில் பணி  புரிபவர்கள்  டோண்ட்  மிஸ்  இட்  . ரேட்டிங் 3 / 5 




Last Night in Soho
Theatrical release poster
Directed byEdgar Wright
Screenplay by
Story byEdgar Wright
Produced by
Starring
CinematographyChung-hoon Chung
Edited byPaul Machliss
Music bySteven Price
Production
companies
Distributed by
Release dates
  • 4 September 2021 (Venice)
  • 29 October 2021 (United Kingdom)
Running time
116 minutes
Countries
  • United Kingdom[1][2]
  • United States
LanguageEnglish
Budget$43 million[3]
Box office$23 million[4][5]

Thursday, October 19, 2023

டாப் 10 மியூச்சுவல்ஃபண்ட்ஸ் 2012-2022 ( எஸ் ஐ பி - சிஸ்ட்டமெட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான்)

க்டந்த  10  வருடங்களில்  சிஸ்டமேட்டிக்  இன்வெஸ்ட்மெண்ட்  பிளானில்  அதிக  வருவாய்  தந்த  டாப்  10  மியூச்சுவல்  ஃப்ண்ட்ஸ்  லிஸ்ட்  இதோ


1    Quant Active Fund - Direct Plan -


 Growth  =   237%



2   Mirae Asset Emerging Bluechip Fund -



 Direct Plan - Growth  = 202%




3   Quant Large and Mid Cap Fund -

\


 Direct Plan - Growth = 180 %





4  

Parag Parikh Flexi Cap Fund - Direct



 Plan - Growth = 180%




5   

Canara Robeco Emerging Equities -



 Direct Plan - Growth = 170%




6   

Quant Focused Fund - Direct Plan -



 Growth  =162%




7    

Kotak Equity Opportunities Fund -



 Direct Plan - Growth  = 155%




8  

PGIM India Flexi Cap Fund - Direct



 Plan - Growth = 71% (5 YEARS)



9  

  Edelweiss Large and Mid Cap Fund -




 Direct Plan - Growth  =145%




10   

   Nippon India Quant Fund - Direct


 Plan



 - Growth =115%

SOUND OF FREEDOM (2023)- அமெரிக்கன் ,மூவி- சினிமா விமர்சனம் (க்ரைம் த்ரில்லர்)

   


வெறும் 14  மில்லியன்  டாலர்  செலவில்  எடுக்கப்பட்டு  234  மில்லியன்  டாலர்  வசூல்  செய்த  அதிரி  புதிரி  ஹிட் படம் , இது  உண்மை சம்பவங்களை  அடிப்படையாகக்கொண்டு   எடுக்கப்பட்ட  படம் . கொலம்பியாவில்  சிறுவர், சிறுமிகளை  வைத்து  நிகழ்த்தப்படும்  கொடுமைகளைப்பற்றிப்படம்  பேசுகிறது       


ஸ்பாய்லர்  அலெர்ட்


ஓப்பனிங்  சீன்லயே  ஒரு  அப்பா  தன்  இரு  குழந்தைகளை  ஒரு  பெண்ணிடம்  அறிமுகப்படுத்துகிறார். மாடலிங்க்கிற்கான  ஃபோட்டோ  ஷூட்  நடத்தறோம், குறிப்பிட்ட  இடத்துக்கு  குழந்தைகளை  அழைத்து  வரவும்னு  அந்தப்பொண்ணு  சொல்லிட்டுப்போய்டுது . அப்பாவும்  தன் மகன் ,மகள்  இருவரையும்  ( தலா 8  வயசு ,9 வயசு ) அந்தப்பெண்  குறிப்பிட்ட  இடத்துக்கு  அழைத்து  வருகிறார். அங்கே  பல  குழந்தைகள்  இருக்கிறார்கள். தன்  வாரிசுகளை விட்டு விட்டு  அவர் போய்  விடுகிறார். மீண்டும்  மாலை  வந்து  பார்த்தால்  யாரையும் காணவில்லை . சுத்தமா  துடைத்து  வைக்கப்பட்டது  போல  இடம்  காலியாக  இருக்கிறது 


போலீசில்  புகார்  கொடுக்கிறார். குழந்தைகளைக்கடத்தி விற்கும்  கும்பல்  இந்நேரம்  அவர்களைக்கை  மாற்றி  வெளி நாட்டுக்கு  அனுப்பி  இருக்கும்  என  சொல்கிறார்கள் . இருந்தாலும்  கேசைக்கையில்  எடுத்து  ஆராய்கிறார்கள் 


இந்த  கேசை  டீல்  செய்யும் போலீஸ்  ஆஃபீசர்  ஆன  நாயகன்  தன்  மனைவி , குழ்ந்தைகளுடன்  வாழ்ந்து  வருபவன். கடத்தப்பட்ட  ஒரு  மகனைக்கண்டுபிடித்து  மீட்டு  விடுகிறார்கள் , ஆனால்  மகளை  மீட்க முடியவில்லை . ஒரு  தீவிரவாதக்கும்பல்  தலைவனிடம்  அவள்  மாட்டி  இருப்பதை  அறிகிறார்  நாயகன் . அங்கே  போலீஸ்  , ராணுவம்  போகமுடியாது .

இந்தக்கேசை  விட்டு  விடும்படி  மேலிடம்  சொன்னாலும்  நாயகன் கேட்கவில்லை ,  வேலையை  ரிசைன்  செய்து  விட்டு  மீட்புப்பணியில்  இறங்குகிறேன்  என்கிறான் . நாயகன்  தனி  ஆளாக  அந்த  படங்கரவாத  கும்பல் இருக்கும்  இடத்தை  அடைந்து  எப்படி  அந்த  சிறுமியை  மீட்டான்  என்பதே  மீதி  திரைக்கதை 


நாயகன் ஆக  ஜிம்  கவிஜெல்  நிதானமாக  நடித்திருக்கிறார். குழந்தைகளைப்பார்த்து  உருகுவது  சோகமான  நடிப்பு . 


கடத்தபப்ட்ட  சிறுவன், சிறுமியாக  நடித்தவர்கள்  இருவரும்  யதார்த்தமான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்கள் 


சிறுமியை  மீட்கும்  காட்சி  மட்டும்  நம்ப  முடியவில்லை , ஆனால்  உண்மை  சம்பவம்  என்பதால் நம்ப  வேண்டியதாக  இருக்கிறது 


 ஒளிப்பதிவு , லொக்கேஷன் , லைவ் லொக்கேஷன்  ஷூட்டிங்  அனைத்தும்  அருமை 


சபாஷ்  டைரக்டர்


1  இதை  ஒரு ஆக்சன்  டிராமாவாக  சொல்ல  வாய்ப்பிருந்தும்  ஆக்சன்  சீக்வன்சை  திணிக்காமல்  ரியல்  டிராமா  மூவியாக  த்ந்த  விதம்


2  க்ரைம்  த்ரில்லர்  என  விளம்பரப்படுத்தப்பட்டு  இருந்தாலும்  த்ரில்லர்  ஜர்னருக்கான  எலிமெண்ட்ஸ்  இல்லை . ஸ்லோவாகத்தான்  படம்  போகிறது  என்றாலும்  யதார்த்தம்  அதிகம்  என்பதால்  ரசிக்க  முடிகிறது 


  ரசித்த  வசனங்கள் 


1  ரெகுலரா  உங்க  குழந்தைங்க  கூடவே  படுத்துத்தூங்கிய  உங்களால  இப்போ  உங்க  குழந்தை  இல்லாத  காலி  பெட்ல  படுத்துத்தூங்க  முடியுமா? 


2  எதுக்காக  நீ  இந்த  வேலைகளை  எல்லாம்  பண்ணிக்கிட்டு  இருக்கே?


 ஏன்னா  கடவுளின்  குழந்தைகள்  விற்பனைக்கு  அல்ல 


3 உனக்கு  எதுவுமே தெரியலைன்னா  யார்  கிட்டேயும்  எதுவும்  பேசாம  இருப்பதே  நல்லது 


4  ஜிபிஎஸ்  ட்ராக்  பண்ண  ஏதும்  வ்ழி உண்டா?


 ஒரே  வழி , உங்க  உடம்புல்  ஊசி  போட்டுக்குவது தான்


 அப்போ  எங்க  பாடீஸை  ஜிபிஎஸ்  மூலமா  ஈசியா  லொக்கேட்  பண்ணிடுவீங்க ? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  முன்  பின்  அறிமுகம்  இல்லாத   ஒருவரிடம்  தன்  இரு  குழந்தைகளை  விட்டுச்செல்வது  எப்படி ? உள்ளே  தானே  வர  அனுமதி  இல்லை ? வாசலில்  வெயிட்  பண்றேன்  என  சொல்லி  இருக்கலாம் 


2   சிறுமியை  மீட்கும்  காட்சியில் சிறுமிக்கு  காவல்  என  யாரும்  இல்லை . அனைவரும்  சரக்கு  போதையில்  இருக்க  நாயகன்  எளிதில்  மீட்பது போல  காட்டி  இருக்கிறார்கள் . அத்தனை  பேர்  கொண்ட  கும்பலிடம்  இருந்து  அவ்வளவு  சுலபமாக  மீட்க  முடிவது  நெருடுகிறது 


3   நாயகன்  சிறுமியிடம்  பேச  முற்படும்போது  யாருமே  அதைக்கண்டுகொள்ளவில்லை ., இத்த்னை  பேர்  கூட்டத்தில் இருக்கும்போது  அந்த  சிறுமியிடம்  மட்டும்  இவன்  ஏன்  பேசுகிறான் ? என்ற  சந்தேகமும் யாருக்கும்  எழவில்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - ஏ  சர்ட்டிஃபிகேட்  படம்  தான்  ஆனால் காட்சிகள்  கண்ணியமாக  இருக்கின்றன/  வாய்ப்பிருந்தும் 18+  காட்சிகள்  ஏதும்  திணிக்கப்படவில்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஷாம்  நடித்த  6  மெழுகுவர்த்திகள்  கதை, திரைக்கதையை  நினைவுபடுத்தும்  பட்ம் , பொறுமையாகப்பார்க்கும்  வல்லமை  கொண்டோர்  பார்க்கலாம் . ரேட்டிங்  2.75 / 5 


Sound of Freedom
Theatrical release poster
Directed byAlejandro Monteverde
Written by
  • Rod Barr
  • Alejandro Monteverde
Produced byEduardo Verástegui
Starring
Cinematography
  • Gorka Gómez
  • Andreu Aec
Edited byBrian Scofield
Music byJavier Navarrete
Production
company
Santa Fe Films
Distributed byAngel Studios
Release date
  • July 4, 2023
Running time
131 minutes[1]
CountryUnited States
Languages
  • English
  • Spanish
Budget$14.5 million[2]
Box office$238.7 million[3][4]

Wednesday, October 18, 2023

THE GREAT INDIAN SUICIDE (2023) -தெலுங்கு / தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்) @ ஆஹா தமிழ்

 


 பெரும்பாலான  மெகா  ஹிட்  படங்களின்  திரைக்கதை அமைப்பை  ஆராய்ந்தால்  முதல்  பாதி  பட்டாசைக்கிளப்பி  இருக்கும், ஆனால்  பின்  பாதி  முதல்  பாதி  அளவுக்கு  விறுவிறுப்பாக  இருக்காது. முதல்வன்,பாட்ஷா    உள்பட  பல  படங்களின்  நிலை  இதுதான். ஆனால்  இந்தப்படத்தில்  நிலைமை  தலைகீழ்.  இரண்டரை  மணி  நேரப்படத்தில் கடைசி  40 நிமிடங்கள்  பட்டாசாக  இருக்கும் , முதல்  பாதி  சுமாராக  ,ஸ்லோவாக  நகரும். எடிட்டிங்கில்  கவனம்  செலுத்தி  முன்  பாதியில்  க்ரிஸ்ப்  கட் செய்திருந்தால் இது ஒரு  மெகா  ஹிட் படம்  ஆகி  இருக்கும் 


  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  அனாதை . தன்  நண்பனுடன்  கூட்டு  சேர்ந்து  ஒரு  ரெஸ்ட்டாரண்ட்  நடத்தி வருகிறான். நாயகி  அந்தக்கடைக்கு  ரெகுலர்  கஸ்டமர். கடையில்  உள்ள  காஃபி  சூப்பர், ஆனால்  மற்ற உணவு  அயிட்டங்கள்  சுமார்  தான்  என  விமர்சிக்கிறாள். நாயகி  தன்  சகோதரியுடன்  சேர்ந்து  சில  குக்கீஸ்  தயாரித்து  அந்த  கடைச்கு  சப்ளை  செய்கிறாள் . நன்கு  விற்பனை  ஆகிறது. ரெஸ்டாரண்ட்  பிஸ்னெஸ்  சூடு  பிடிக்கிறது 


பிஸ்னெஸ்  பார்ட்னர்  ஆன  நாயகியை  லைஃப்  பார்ட்னர்  ஆக்க  நாயகன்  நாயகியிடம்  ப்ரப்போஸ்  செய்கிறான். அப்போதுதான்  நாயகி  ஒரு  குண்டைத்தூக்கிப்போடுகிறாள். அவர்கள்  குடும்பத்தின்  கார்டியன் பெரியப்பா  தான் . அவர்  ஒரு  கார்  விபத்தில்  அகால  மரணம்  அடைந்து  விட்டார் . அவரது  உயிரை  மீட்க  நாங்கள்  அனைவரும்  தற்கொலை  செய்து  உயிர்  தியாகம்  செய்தால்  அவர்  மீண்டு  வருவார், பின்  நாங்களும் உயிர்த்தெழுவோம்  என  எங்கள்  குடும்ப  சாமியார்  சொன்னார்  என்கிறாள் 


நாயகன்  இதில்  ஏதோ  மர்மம்  இருக்கிறது  என்பதை உணர்ந்து  நாயகியின் கழுத்தில்  தாலி  கட்டி  க்ணவன்  ஆக  அவர்கள்  வீட்டில்  நுழைகிறான். அவர்கள்  குடும்பத்தில்  ஒருவர்  ஆக  ஆகி  அனைவரின்  மன  நிலையையும்  ஆராய்கிறான்.இதற்குப்பின்  நிக்ழும்  திருப்பங்கள்  தான்  கதை 


நாயகி  ஆக  ஹெபா  பட்டேல்  தான்  படத்தின் முதுகெலும்பு . அவரது  முதல்  பாதி  அப்பாவித்தன  நடிப்பும் , பின்  பாதி  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  நடிப்பும்  பெரிய  பலம் . 


நாயகன்  ஆக  ராம்  கார்த்திக்   கச்சிதமாக  நடித்திருந்தாலும்  நாயகி உடனான  காம்போ  காட்சிகளில்  நாயகியின்  டாமினேஷனை  சமாளிக்க  முடியாமல்  தடுமாறுகிறார்


ஒளிப்பதிவு , இசை , ஆர்ட்  டைரக்சன்   போன்ற  டெக்னிக்கல்  அம்சங்கள்  இது  ஒரு  லோ  பட்ஜெட்  படம்  என்பதை  பறை  சாற்றுகிறது


சபாஷ்  டைரக்டர்

1  2018  ஆம்  ஆண்டு  மும்பையில்  நிகழ்ந்த புராரி  குடும்பத்தில்  நிகழ்ந்த  ஒரே  குடும்பத்தை   சேர்ந்த 11  பேர்  தற்கொலை  சம்பவத்தை  அடிப்படையாகக்கொண்டு  பின்  பாதியில் கற்பனை  கலந்து  திரைக்கதை  உருவாக்கிய  விதம் 


2   பெரியப்பா  கார்  விபத்தில்  மரணம்  அடைந்தது  தற்செயல்  அல்ல  திட்டமிட்ட  கொலை  என்பதை  உடைக்கும்  காட்சி 


3   நாயகி , நாயகியின்  தங்கை ,சாமியார்  மூவருக்கும்  தனித்தனி  ட்விஸ்ட்  வைத்து  க்ளைமாக்சில்  ஆடியன்சை  அதிர்ச்சிக்கு  உள்ளாக்கியது    


  ரசித்த  வசனங்கள் 


1  நீங்க  செஞ்ச  ஆர்டர்ஸ் எல்லாம்  கொண்டு  வந்துட்டேன். வேற  என்ன  வேணும் ?

 கொஞ்சம்  பிரைவசி  வேணும்


2  முதல்ல  காதல்  வரும், அடுத்ததா  பணம்  வரும்


3  நமக்குப்பிடிச்சதுன்னா  அது  நம்பிக்கை , பிடிக்கலைன்னா  அது  மூட  நம்பிக்கை  என  ஆகிடாது 


4  விசித்திரமான  விஷயம் , அஸ்தமிக்கற  சூரியன்ல  நாம்  அழகு  பார்க்கறோம்

 மீண்டும்  நாளை  உதயம்  ஆகப்போற  சூரியன்  தானே? 


5 மனிதர்களுக்கு  உண்மை தேவையில்லை , தனக்கு  சாதகமான  உண்மை தான்  தேவை


6 டெட் லைன் க்குள்ளே  எதையும்  க்ண்டு பிடிக்க  முடியல, டெட்லயாவது  ஏதாவது  கண்டு பிடிக்க  முடிய்தா? பார்ப்போம்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    நாயகிக்கு  நேர்ந்த  ஒரு  கொடுமையான  சம்பவத்தை   நாயகன்  துப்பறிந்து  அறியும்போது  அதே  சம்பவம்  நாயகியின்  தங்கைக்கும்  நிகழ்ந்திருக்கும்   என்பதை  ஏன்  யூகிக்கவில்லை ? 


2   தற்கொலை  செய்து  கொள்ள  அத்தனை  பேருக்கும்  அளவான  சேர் , தூக்குக்கயிறு  எல்லாவற்றையும்  ரெடி  செய்யும்  ஆட்கள்  சுலபமாக  விஷம்  கலந்து  சாக  முடிவெடுக்கலாமே? 


3   சாமியார்  வெளிநாட்டுப்பெண்களுடன்  மட்டும்  தான்  உல்லாசமாக  இருப்பார்  என  சித்தரித்தது  ஏன் ? உள்ளூர்ப்பெண்கள்  அவருக்குப்பிடிக்காதா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - தற்கொலை  முயற்சி , அரங்கேற்றம்  உட்பட  சில  அடல்ட்  கண்ட்டெண்ட்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   மாறுபட்ட  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டுக்காக்  2  மணி  நேரம்  பொறுமையாக  இருக்க  வெண்டும்  . ரேட்டிங்  3 / 5