Monday, September 04, 2023

PADMINI (2023) பத்மினி - ,மலையாளம் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி மெலோ டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்

 


திங்களாய்ச்சே  நிச்சயம் ( 2021)  1744 ஒயிட்  ஆல்ட்டோ(2022) ஆகிய  மலையாளப்படங்களை  இயக்கிய சென்னா  ஹெக்டே  இயக்கிய  படம்  இது . த பிரையஸ்ட் (2021)  என்ற மலையாளப்படத்துக்கு  திரைக்கதை  எழுதிய  தீபு  பிரதீப்  திரைக்கதை  எழுதிய  படம்  இது . 


    ஸ்பாய்லர்  அலெர்ட்


நடிகர்  சந்திரபாபு  வாழ்வில்  நிகழ்ந்தது  போல  நாயகன்  வாழ்க்கையில்  அவரது  திருமணம்  முடிந்து  முதல்  இரவு  நடக்கும்  முன்  அவர்  மனைவி  காதலனுடன் எஸ்  ஆகி  விடுகிறார்.  காதலனுடன்  சென்றது  பத்மினி  காரில் . இதனால்  அந்த  ஊர்  மக்கள்  எல்லாம்  அவரை  பத்மினி என  கிண்டலாக  அழைக்கிறார்கள் .


 இந்த  சம்பவம்  நட்ந்து  2  வருடங்கள்  கழிந்தது .நாயகன்  ஒரு  காலேஜில்   லெக்சரர்  ஆக  பணி  புரிகிறார். அவரது  காலேஜூக்கு  புதிதாக  பத்மினி  என்ற  பெயரில்   ஒரு  பெண்  லெக்சரர்  வருகிறார்.  நாயகனுக்கு  அவருடன்  நல்ல நட்பு  ஏற்படுகிறது. இருவரும்  காதலிக்கிறார்கள் , திருமணம்  செய்யும்போதுதான்  ஒரு  சிக்கல் , முதல்  மனைவியுடன்  ஆன  திருமணத்துக்கு  பதிவு  இருப்பதால்  டைவர்ஸ்  வாங்க  வேண்டும்  என  பெண்  வீட்டில்  சொல்கிறார்கள் 


நாயகி  ஒரு  வக்கீல் . இவ்ர்  எடுத்துக்கொண்ட  ஒரு  கேசில்  கூட  இவர்  ஜெயித்ததிலை .  நாயகன் நாயகியிடம்  இந்த  கேசு விஷய்மாக  சந்திக்கிறார். நாயகனின்  காதலியும் , நாயகியும்  தோழிகள் 


 எப்படியோ  முதல்  மனைவியைக்கண்டு  பிடித்து  அவரை  அழைத்து  வரச்செல்லும்போது  ஒரு  சிக்கல் . முதல்  மனைவி  அவரது  கணவருடன்  சண்டை  போட்டு  விட்டு  நாயகனுடன்  வந்து  விடுகிறார் 


 இதற்குப்பின்  நாயகன்  யாருடன்  ஜோடி  சேர்ந்தார் ?  முதல்  மனைவியுடனா?  காதலியுடனா?  அநத  வக்கீல்  உடனா?  என்பது  க்ளைமாக்ஸ்   


நாயகன்  ஆக  குஞ்சாக்க  போபன்  காமெடி  கலந்த  நடிப்பில்  கலக்குகிறார். 

நாயகி  ஆக  லாயர்  ஆக  அபர்ணா  பாலமுரளி  கச்சிதமாக  நடித்திருக்கிறார். உடம்புதான்  கொஞ்சம்  பூசினபடி  ஆகி  விட்டது . முகமும்  கொஞ்சம்  முதிர்ச்சி  அடைந்து  விட்டது ., ஆனால்  நடிப்பில்  குறை  வைக்கவில்லை 


  காதலி  ஆக  மடோனா  செபாஸ்டின்  அருமையாக  நடித்திருக்கிறார். நாயகன் -  காதலி  இருவருக்குமான  கெமிஸ்ட்ரி  நன்கு  ஒர்க்  அவுட்  ஆகி  இருக்கிறது 


நாயகனின்  முதல்  மனைவியாக வின்சி அலோசியஸ்  நடிப்பும்  சிறப்பு 


 மூன்று  பாடல்கள்  செம  மெலொடி . மானு ஆண்ட்டனியின்  எடிட்டிங்கில்  க்ரிஸ்ப் ஆக  ரெண்டு.  மணி  நேரத்தில்  கட்  பண்ணி  இருக்கிறார். ஸ்ரீ ராஜ் ஒளிப்பதிவு  கண்ணுக்கு  இதம் 

சபாஷ்  டைரக்டர் (சென்னா  ஹெக்டே)


1  டைட்டில்  செலக்சன் , அதற்கான  காரணம், படம்  முழுக்க  நாயகனுக்கு  பட்டப்பெயராய்  அது  அமைந்தது  எப்படி  என  காமெடியாகச்சொன்ன  விதம்


2  அவனுக்கு  இப்போ  மேரேஜ்லயோ , பெண்  பார்ப்பதிலோ  விருப்பமே  இல்லை  என  அம்மா  சொல்லும்போது  கட்  பண்ணி  ஹீரோவைக்காட்டுனா  அவரு  ஜாகிங்  போற  பெண்ணை  சைட்  அடிச்சுட்டு  இருக்காரு


3  நாயகனின்  ஓடிப்போன  முதல்  மனைவியை  தேடச்சொன்னதும்  ஃபேஸ்புக்கில்  ஸ்ருதி என்ற  பெயரில் உள்ள  பெண்களுக்கெல்லாம்  நண்பன்  லைக்  போட்டு  ஃபிரண்ட்  ரிக்வஸ்ட்  கொடுக்கும்  காட்சி  கல கல 


4  வில்லன்  தன் அக்கவுண்ட்டண்ட்டிடம்  ஒரு  நாளாவது  என்னை  தம்பியா  நினைச்சு  பேசி இருக்கீங்களா? என  கேட்டதும்  இது தான்  சான்ஸ்  என  தோள்  மேல  கை  போட்டு  டேய்  என  அவர்  ஆரம்பிக்கும்  சீன்  அமர்க்களம்

செம  ஹிட்  சாங்க்ஸ்


1    தேன்மொழி  பூங்கொடி  விட்டுப்போகாதே

2  மனசே , என்னை  விட்டுப்போகாதே

3 தீயால்  நெஞ்சை  எரித்து 


  ரசித்த  வசனங்கள் 


1 முதன்  முதலாக  என்  வீட்டில்  முத  ராத்திரி  அன்னைக்கு கரண்ட்  போயிடுச்சு


 என்னது?


 சாரி ..முத  ராத்திரி  முதன்  முதலாக  என் வீட்டில்  கொண்டாட  இருக்கும்போது  முதன்  முதலா  கரண்ட்  போயிடுச்சு 


2 அக்கா, என்  கழுத்துல  தோளில்  ஏதோ  பூச்சிக்கடி  மாதிரி  இருக்கு, எரிச்சலா இருக்கு

ஒரு வேளை...


 அய்யய்யோ  அதெல்லாமில்ல, அவரு  ராத்திரி  ல  பல்  செட்டைக்கழட்டிவெச்சுடுவாரு 


3 பொண்ணு  பார்க்கப்போன  இடத்துல  பொண்ணோட  ஃபோனை  வாங்கி  வாட்சப்பை  செக்  பண்ணினா  இப்படி  அடிக்கத்தா  செய்வாங்க 


 பதிலுக்கு  அவளும்  என்  ஃபோனை  வாங்கி  வாட்சப்பை  செக்  செய்திருக்கலாம்

4  மழை வந்து  எத்தனை  நாட்கள் ஆச்சு?


 பொண்ணு  யாரு?


 ஏன்?


 மழையைப்பற்றி  ரெண்டு  பேருதான்  கவலைப்படுவாங்க  1  விவசாயி  2  புதுசா  லவ்  பண்றவங்க 


5  பத்மினியை  வெச்சே பத்மினியை  மடக்கிட்டியா? 


6 இன்னைக்கு  கோர்ட்க்கு  வர  மாட்டே-னு  நினைச்சேன்

 அது  எப்படி? இன்னைக்கு  தீர்ப்பு  இருக்கே?


 நீ  தான்  தீர்ப்பு  சொல்லும்போது  வர  மாட்டியே?


 என்னை  விட  அஞ்சு  கேஸ்  அதிகமா  கைல  வெச்சிருக்கேனு  ஆடாத 


7  ஸ்ரீ தேவினு  ஒரு  வக்கீல்  இருக்காங்களே?  பார்க்கனும்


 அந்தப்பேர்ல  3  பேரு  இருக்காங்க , லேடீஸ்  விஷயத்துல  நான்  கரெக்டா  இருப்பேன், 3  பேருதான் , அதுல  எந்த ஸ்ரீதேவி  வேணும்?

 3  பேருல எந்த  ஸ்ரீதேவி  நல்ல  ஸ்ரீதேவியோ  அவங்க


8  நாம  பெண்  பார்க்கப்போன  பெண்ணை  வெச்சே  டைவர்ஸ்  வாங்கறோம்னா  அது  எவ்வளவு  பெரிய  ஹீரோயிசம்?


9  நான்  இந்தக்கேசை  ஒத்துக்க  இன்னொரு  காரணமும்  இருக்கு


 எது?


 என்னைப்பொண்ணு  பார்க்க  வந்தவருக்கே  டைவர்ஸ்  வாங்கித்தர்ற  ஹீரோயினிசம் 


10    டீக்க்டை , சலூன்  கடை  இந்த  இரண்டு  இடங்களிலும்  எல்லாரைப்பற்றியும்  ஈசியா  விசாரிச்சிடலாம் 


11  அண்ணே, ரெண்டு  டீ 


 அண்ணே   ரெண்டு  காஃபி 


 சாரி ஒரு  டீ  ஒரு  காஃபி 


12  செல் ஃபோன்ல  இருக்க்ற  வால்  பேப்பர்  என்பது  மனசைக்காட்டும்  கண்ணாடி  மாதிரி 


13  என்னை  விட  உயரமான  ஃபிரிட்ஜை  நீ  வாங்கி  வைக்கும்போதே  எனக்கு  உன்  மேல  டவுட்

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நாயகனுக்கு  மேட்ரிமோனியல் ல்  பெண்  பார்க்க  ஃபார்ம்  ஃபில்லப்  பண்ணும்போது  பேச்சிலர் என்றே  குறிப்பிடலாமே? சும்மா  காமெடி  சீனுக்காக  இவங்களா  தவளை  மாதிரி  பெண்டாட்டி  ஓடிப்போயிட்டா  என  தண்டோரா  போடுவது  ஏன் ?


2  முதல்  மனைவி  பத்மினி  கார்  வைத்திருந்த  காதலனுடன்  ஓடிப்போய்  விட்டாள்  என்பதற்காக  புதிதாகப்பெண்  பார்க்கப்போகும்  இடத்தில்  பத்மினி  கார்  வைத்திருப்பதால்  பெண்ணே  வேண்டாம்  என்பதெல்லாம்  ஓவர்


3  புதிதாக  பணிக்கு  வந்த  டீச்சரை  டீச்சர்  என  அழைக்கும்  ஆசிரியர் பின்  மீண்டும்  பத்மினி  டீச்சர்  என்று  தானே  அழைக்கனும்? அறிமுகம், பழக்கம்  இல்லாத  டீச்சரை  எப்படி  பத்மினி என  அழைப்பார்?


4 இந்து  குடும்பங்களில்  சுப  நிகழ்ச்சிக்குப்போகும்போது , குறிப்பாக  பெண்  பார்க்கப்போகும்போது  3  பேர்  செல்வார்களா? அது  அமங்கலம்  ஆயிற்றே? அதே  போல்  ஏதோ  ஒரு  பெண்  ( அம்மா,  சித்தி)  உடன்  தானே  செல்வார்கள் ?

5   நாயகன்  மிக  வசதியனவர், ஏகப்பட்ட  சொத்து  பத்து  நிலம்  உண்டு  காலேஜில்  லெக்சரராக  பணி  புரிகிறார், ஆனால்  பெண்  கிடைக்கவில்லை  என்பது  நம்ப  முடியவில்லை. . வசதியான  மாப்பிள்ளை  எனில்  பெண்  வீட்டார்  விட  மாட்டார்களே? 

6  முதல்  பாதி  திரைக்கதையில்  ஒவ்வொரு  சீனிலும்  முடிந்தவரை  காமெடியைப்புகுத்திய  இயக்குநர்  பின்  பாதி  திரைக்கதையில்  அழுத்தம்  காட்டத்தவறி  விட்டார்


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஃபீல்  குட்  காமெடி  மெலோ  டிராமா  ரசிகர்கள் பார்க்கலாம், படம்  ஸ்லொவாகத்தான்  போகும். பிரமாதமான  முதல்  பாதி  திரைக்கதைக்கு 3.5 / 5  . சராசரி  ஆன  பின்  பாதி  திரைக்கதைக்கு 2.5 /5 .  அப்போ  அவரேஜா  3 / 5 


Padmini
Theatrical release poster
Directed bySenna Hegde
Written byDeepu Pradeep
Produced bySuvin K Varkey
Prasobh Krishna
Starring
CinematographySreeraj Raveendran
Edited byManu Antony
Music byJakes Bejoy
Production
company
Little Big Films
Distributed byCentral Pictures
Release date
  • 14 July 2023[1]
Running time
120 minutes
CountryIndia
LanguageMalayalam

Sunday, September 03, 2023

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்)@ ஆஹா தமிழ் ஓடிடி

 


 கன்னட இயக்குநர்  ஆன  தயாள் பத்மநாபன்  தான்  இயக்கிய  சூப்பர்  டூப்பர் ஹிட் படமான  ஆ கராலா  ராத்ரி (2018) யை   தமிழில்  வரலட்சுமியை  நாயகியாக  வைத்து  கொன்றால்  பாவம்  என  இயக்கினார். ஒரிஜினல்  லெவலுக்குப்போகவில்லை  எனினும்  கவனம்  ஈர்த்த  படம். மாருதி நகர் போலீஸ்  ஸ்டேஷன்அவரது  நேரடி  முதல்  தமிழ்ப்படம்  


ஸ்பாய்லர்  அலெர்ட்


சட்டத்துக்கு  புறம்பாக  ஏதோ  செயல்  நடைபெறுவதை ஒப்பனிங்  ஷாட்லயே  ஒருவர்  ஒரு  இடத்தில்  பார்த்து  அதை  போலீசில்  தகவல்  சொல்றார். போலீசும்  அந்த  கேங்கின்  கூட்டாளி. புகார்  கொடுத்த  ஆளை  போட்டுத்தள்ளிடறாங்க 


இப்போது  அநியாயமாக கொல்லப்ப்ட்ட  ஆளின்  நண்பர்கள்  மூவர் , காதலி  நால்வரும்  சேர்ந்து  அந்த  கேங்கை  பழி  வாங்க திட்டம்  இடுகிறார்கள் . காதலி  ஒரு  போலீஸ்  சப்  இன்ஸ்பெக்டர். அதனால்  போலீஸ்  ஸ்டேஷனில்   வைத்தே   போலீஸ்  இன்ஸ்பெக்டர் , அந்த  தாதா  இருவரையும்  கொல்ல பிளான்  பண்றாங்க, ஆனால்  அவங்களை  முந்திக்கிட்டு  வேற  யாரோ  அந்த  பிளானை  எக்சிக்யூட்  பண்றாங்க.


 போலீஸ்  ஸ்டேஷனிலேயே  நட்ந்த  இரு  கொலைகளைப்பற்றி  துப்பு  துலக்க  நாயகன்  ஆன  போலீஸ்  ஆஃபீசர்( அசிஸ்டெண்ட் கமிஷனர்)  அங்கே  வருகிறார். இதற்குப்பின்  நிக்ழும்  திருப்பங்கள்  தான்  மீதிக்கதை 


நாயகன்  ஆக  ஆரவ்  நல்ல கம்பீரம். போலீஸ்  மிடுக்கை  நன்கு  வெளிப்படுத்துகிறார்


நாயகி  ஆக  வர லட்சுமி / நாயகனை  விட  அதிக  காட்சிகள் . பழைய  மிடுக்கும் கம்பீரம் , தெனாவெட்டு  வரலட்சுமியிடம்  மிஸ்  ஆக  முக்கியக்காரணம்  டயட்  இருந்து  உடல் இளைத்ததுதான் 


படம்   போர்  அடிக்காமல்  2  மணி  நேரத்தில்  முடிகிறது . இது  தியேட்டர்களில்   ரிலீஸ்  ஆகாமல்  டைரக்டாக  ஆஹா  தமிழ்  ஓடிடி  யில்  ரிலீஸ்  ஆனது 


சபாஷ்  டைரக்டர்


1  டூயட் ,  மொக்கைக்காமெடி  டிராக்  எதுவும்  இல்லாம  நேரடியாக  கதை  சொன்ன  விதம் 


2   நாயகி  கொலை  செய்ய  பிளான்  சொல்வதைக்காட்சியாகக்காட்டி  விட்டு  அந்த  பிளானை  செயல்படுத்தும்போது  ஒரு  பதை பதைப்பை  ஆடியன்சிடம்  கொண்டு  வந்தது 


3  க்ளைமாக்சுக்கு  முன் பே  ட்விஸ்ட்  வெளிப்பட்டாலும்  சுவராஸ்யமாய்  கதை  சொன்ன  விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1   பூசாரி  சப்போர்ட்டை  விட  சாமியோட சப்போர்ட் இருந்தா  எனக்கும்  நல்லதுதான் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  ஒரு  இன்ஸ்பெக்டரை  அவரது  போலீஸ் ஸ்டேஷனிலேயே  வைத்து  கொலை  செய்ய  திட்டம்  தீட்டுவது  சினிமாவில்  பார்க்க  பரபரப்பாக  இருக்கலாம், ஆனால்  ரிஸ்க்  அதிகம் 

2  போலீஸ்  ஸ்டேஷனில்  இருக்கும்  அனைத்து  போலீசும்  க்ளீன்  ஷேவ்  தாடையில்  இருக்கும்போது  நாயகன்  ஆரவ்  மட்டும்  லைட்  தாடியோடு  இருக்காரே? ஸ்பெஷல்  பர்மிஷன்  வாங்கி  இருப்பாரோ?

3 குண்டடி  பட்ட  வில்லன்  இன்ஸ்பெக்டர்க்கு  உயிர்  இருக்கு  என  டாக்டர்  சொல்லி  ஹாஸ்பிடலுக்கு  கூட்டிட்டுப்போக  ஹையர்  ஆஃபீசர்  பர்மிஷன்  கேட்டுட்டு  இருக்கார். அரை  மணி  நேரமா  அப்படியே  உயிர்  ஊசலாடிட்டு  இருக்கு 

4  நீ  ஆம்பளையா  இருந்தா  கட்டை  அவிழ்த்து  விட்டுட்டு  உன்  வீரத்தைக்காட்டு  என  ரவுடி  போலீசிடம்  சொல்வதெல்லாம்  சோலோ  ஃபைட்டுக்கான  1970களில்  வந்த  காட்சி 

5  ஹையர்  ஆஃபீசரான  ஆரவ்  தனக்குக்கீழ்  பணி புரியும்  வரலட்சுமியிடம்  ஒவ்வொரு  இடத்துக்கும்  போகும்போதும்  இன்ஃபார்ம்  பண்றார் , எதுக்கு ? 

6  சம்பவம் நடந்த  அன்னைக்கு  அந்த  3  பேரும்  என்ன  டிரஸ்  போட்டு  இருந்தாங்களோ அதே  டிரஸ் ல  அவங்களை  வரச்சொல்லுங்கனு  ஆரவ்  வரலட்சுமி கிட்டே  சொல்றார், ஆனா  அவர்  அதை  ஃபாலோ  பண்ணலை , ஆனா  அவங்க  கரெக்டா  அதே  டிரஸ்ல  வர்றாங்களே? 

7 க்ளைமாக்சில் அந்த  சாட்சி  எதுக்கு  தானாக  முன்  வந்து  தன்னைக்காட்டிக்கொள்கிறான்?  சேஸ்  செய்யப்படுகிறான்? அவன்  பாட்டுக்கு  கமுக்கமா  போய்  இருக்கலாமே?

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஒரு  விறுவிறுப்பான  த்ரில்லர்  மூவி  தான் . பார்க்கலாம்  , ரேட்டிங் 2.5 / 5 


Maruthi Nagar Police Station
Release poster
Directed byDayal Padmanabhan
Written byDayal Padmanabhan
Produced byDayal Padmanabhan
Starring
CinematographyShekhar Chandra
Edited byPreethi Mohan
Babu A. Srivastava
Music byManikanth Kadri
Production
company
D Pictures
Release date
  • May 19, 2023
CountryIndia
LanguageTamil

Saturday, September 02, 2023

3.33 (2021) - தமிழ் - சினிமா விமர்சனம் ( சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லர்) @ ஆஹா தமிழ் ஓடிடி


 டைட்டில்  வித்தியாசமாக  இருந்ததால்  ஆஹா  தமிழ்  ஓடிடி  சப்ஸ்க்ரிப்சன்  செய்தபின் அவர்கள்  காட்டிய  முதல்  ரெக்கமண்டேஷன்  படம்  என்பதால்  மட்டுமே  இதைப்பார்க்க  நேரிட்டது / நமக்கு  தெரியாத  முகங்களே  அதிகம்


   ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் தன்  அம்மா, அக்கா  உடன்  ஒரு  வீட்டுக்கு  குடி  வருகிறார். நாயகன்  குழந்தையாகப்பிறந்த  போது  டைம்  அதிகாலை  3.33  அதனால்  அந்த  வீட்டில்  தினசரி  அதிகாலை  3.33  அப்போ  சில  அசம்பாவிதங்கள்  நடக்கின்றன. அமானுஷ்ய  சக்தி  ஒன்று  அந்த  வீட்டில்  இருப்பதாக  நாயகன்  உணர்கிறான். இதற்குப்பின்  நிகழும்  சம்பவங்கள்  தான்  மீதிக்கதை 


நாயகன்  ஆக  சாண்டி. இவர்  ஒரு  டான்ஸ்  மாஸ்டராம். விஜய்  ஆண்ட்டனி  போல  உணர்ச்சிகளை  வெளிக்காட்டாத  முகம்., சோகம்,  கோபம்  என  எல்லாவற்றுக்கும்  ஒரே  மாதிரி  முகத்தை  வைத்துக்கொள்கிறார்


கவுதம்  வாசுதேவ்  மேனன்  நவீன  பேயோட்டியாக  வருகிறார். பேராநார்மல்  இன்வெஸ்டிகேட்டராம். வ்ழக்கம்  போல  தமிழிங்கிலீஷில்  பேசுகிறார்


நாயகனின்  அம்மாவாக  ரமா, அக்காவாக  ரேஷ்மா , காதலியாக  ஷ்ருதி  செல்வம்  மூவரும்  கச்சிதமான  நடிப்பு

பாடல்கள்  இல்லாதது , மொக்கைக்காமெடி  டிராக்  இல்லாதது  பெரிய  ஆறுதல் 


படத்தின்  பெரிய  பிளஸ்  90  நிமிடங்களில்  முடித்தது சதீஷ்  மனோகரனின்  ஒளிப்பதிவு  ஓக்கே  ரகம் ஹர்ச வர்தன்  ராமேஷ்வர்  இசையில்  பிஜிஎம்  மிரட்டவில்லை  என்றாலும்  ஆங்காங்கே  பயமுறுத்துகிறது 


 திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  நம்பிக்கை  சந்துரு. என்ன  சொல்ல  வருகிறோம்  என்பதில்  இவருக்கே  நம்பிக்கை  இல்லை  போல 


சபாஷ்  டைரக்டர் 


1  திகில்  படங்களின்  ஸ்பெஷல்  அயிட்டங்களான  ஜம்ப்  ஸ்கேர்  காட்சிகளான  பாத்ரூம்  கதவுக்குக்கீழே  குனிந்து  பார்க்கும்போது  தோன்றும்  சாத்தானின்  கால் , மொட்டை  மாடியில்  காய  வைத்த  துணிக்குப்பின்  மர்ம  உருவம்  இரண்டு  காட்சிகளும்  கலக்கல் ரகம்


2  டைட்டில்  ப்ளேஸ்மெண்ட்  பக்கா 

3  ஆறு  நிமிடங்களே  வந்தாலும்  கவுத்ம்  வாசுதேவ்  மேனன்  கேரக்டர்  டிசைனும்,  அவரது  கச்சிதமான  நடிப்பும் 

 

ரசித்த  வசனங்கள் 


1  பொதுவா  ஒரு  மனுசனுக்கு  கடைசி வரை  துணையா  வருவது  தனிமை  மட்டுமே!

2  நமக்கும்  நாம  பிறந்த  நேரத்துக்கும்  ஏதோ  ஒரு  சம்பந்தம்  இருக்கும். சிலருக்கு அது  லக்கி  நெம்பராகவும்  அமையும் 

3 தீய  சக்தியை  அழிக்க  முடியாது , அடக்க  மட்டும்தான்  முடியும்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 சுட்ட தோசையை  எடுத்து  பரிமாறும்போது இன்னொரு  கரண்டி  மாவை கல்லில்  ஊற்றி  விட்டுத்தா  எடுப்பார்கள் , ஆனால்  இதில்  உல்டா. தோசையை  பரிமாறி டயலாக்  பேசிட்டு  பின்  வந்து  மாவை  ஊற்றுகிறார்கள் . கல்  காயாதா?

2 பாதிரியார்  சிலுவையை  வலது  கையில்  வைத்துத்தானே  ஆசீர்வாதம்  செய்வார்கள் ? சரவணன்  இடது கையில்  வைத்திருக்கிறார்

3   பெண்  பேய்  ஒன்று  வீட்டில்  இருப்பது  நாயகனின்  மனப்பிரமையா? நிஜமாகவே  பேய்  இருக்கிறதா? என்பதில்  தெளிவான  விளக்கம்  இல்லை 

4 க்ளைமாக்ஸ்  மகா  சொதப்பல் 

5  ராட்சசன்  மெகா  ஹிட்  ஆன  படம், அந்தப்பட  பிஜிஎம்  மை  பட்டி  டிங்கரிங்  செய்தது  ஏனோ?


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ/ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  திரைக்கதையில்  தெளிவில்லாத  சும்மா  அரைகுறையாக  எழுதப்பட்ட  பலவீனமான  ஸ்ரிப்ட். ரேட்டிங் 1.5 / 5 


3:33
Theatrical film poster
Directed byNambikkai Chandru
Written byNambikkai Chandru
Produced byT. Jeevitha Kishore
StarringSandy
Gautham Vasudev Menon
Shruthi Selvam
CinematographySathish Manoharan
Edited byDeepak S Dwaraknath
Music byHarshavardhan Rameshwar
Production
company
Bamboo Trees Productions
Release date
  • 10 December 2021
CountryIndia
LanguageTamil

Friday, September 01, 2023

மாவீரன் (2023)-தமிழ் - சினிமா விமர்சனம் ( சூப்பர் ஹீரோ ஆக்சன் மசலா) @ அமேசான் பிரைம்

 


கோழையாக  இருப்பவன்  வீரனாக  மாறுவது 1965ல்  எம் ஜி  ஆர்  எங்க  வீட்டுப்பிள்ளை  காலத்துலயே  சொல்லப்பட்ட கதை  தான்.  அதில்  எம் ஜி  ஆரின்  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  கலக்கலாய்  இருக்கும். நான்  ஆணையிட்டால்  பாடல்  காட்சிகளில்  தியேட்டரே  திருவிழாக்கோலம்  பூண்டது ., அந்தப்படத்தின்  பிரம்மாண்ட  வெற்றியைக்கண்டு  அதை  ஹிந்தி  உட்பட  பல  மொழிகளில்  ரீமேக்  செய்தார்கள் , ஆனால்   எம் ஜி  ஆர்  அளவுக்கு  அந்த  கேரக்டருக்கு  சிறப்பு  சேர்க்க  யாராலும்  முடியவில்லை . அந்த  சாயலில்  ஒரு  கதையை  எடுத்து 2006ல்  ரிலீஸ்  ஆன  ஸ்ட்ரேஞ்சர்  தன்  ஃபிக்சன்  என்ற  ஹாலிவுட்  படத்தில்  வந்த  அசரீரி  என்ற  கான்செப்டில்  பட்டி  டிங்கரிங்  பண்ணி  இந்தப்படத்தைத்தந்திருக்கிறார்கள் 


 பிரின்ஸ்  படத்தின்  தோல்வியால்  துவண்டு  போன  சிவகார்த்திகேயனுக்கு  இது  ஆறுதல்  வெற்றிப்படம் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  தன் அம்மா,  மற்றும்  தங்கை  யுடன்  குடிசைப்பகுதியில்  வாழ்ந்து  வருகிறார். அந்த  இடத்தைக்காலி  செய்ய  வேண்டும்  என  வில்லனான  மினிஸ்டரின்  ஆட்கள்  வ்ந்து  சொல்ல   எதிர்ப்பேச்சு  பேசாமல்  காலி  செய்து  கொடுக்கிறார்கள் . ஆல்ட்டர் நேட்டிவாக   வில்லன்  கட்டிக்கொடுத்த  ஒரு  டப்பா  அப்பார்ட்மெண்ட்டில்  தங்குகிறார்கள் , ஆனால்  வாழத்தகுதி  அற்ற  அந்த  வீட்டில்  மக்களால்  தொடர்ந்து  சமாளித்து  இருக்க  முடியவில்லை . வில்லனான  மினிஸ்டரை  நாயகன்  எதிர்த்துப்போராடுகிறான், அதில்  அவன்  எப்படி  வெற்றி  பெற்றான்  என்பதே  மீதிக்கதை

நாயகன்  ஆக  சிவகார்த்திகேயன், படம்  முழுக்க  அவர்  பயந்த  சுபாவமாகவே  வருவது  சிறப்பு.  நாயகி  ஆக  அதிதி  ஷங்கர்  பிரம்மாண்டமாக  இல்லாமல்  எளிமையாக  இருக்கிறார் 


காமெடிக்கு  யோகி  பாபு , ஆனால்  அவர்  பெரிதாக  காமெடி  எதுவும்  செய்ய வில்லை . வில்லன்  ஆக  மிஸ்கின் , சுனில்  கச்சிதமான  நடிப்பு . அம்மாவாக  சரிதா  ஓவர்  ஆக்டிங். தங்கையாக மோனிஷா  பிலஸ்சி  பிரமாதமான  முக  பாவனையுடன்  நல்ல  நடிப்பு 


பரத்  சங்கரின்  இசையில்  பாடல்கள்  சுமார்  ரகம், பிஜிஎம்  ஓக்கே  ரகம் .பிலோமின்  ராஜ்  எடிட்டிங்கில்  2  மணி  நேரம்  40  நிமிடங்கள்  ஓடுகிறது ., இன்னும்  க்ரிஸ்ப்  ஆக  கட்  செய்து  இருக்கலாம் 


சபாஷ்  டைரக்டர் 


1  வில்லன்  மிஸ்கின்    வாளுடன்  வர  பின்னால்  கைகள்  கட்டப்பட்ட  நாயகன்  அதை  சமாளிக்கும்  காட்சி  கைதட்டலை  அள்ள  வைக்கும்  மாஸ்  சீன்

2  ஆயுதங்களுடன்  நெருங்கும்  ரவுடி  கும்பலை  சமாளிக்க  நாயகன்   மேலே  வானத்தைப்பார்த்து  கைல  பொருள்  வெச்சிருக்கறவனையா  போட்டுத்தள்ளனும் ? என  கேட்க  அனைவரும்  ஆயுதங்களைக்கீழே  போடுவதும், டார்ச்  லைட்  வைத்திருப்பவன்  கூட  அதைக்கீழே  போடுவதும்  கூஸ்பம்ப்  சீன்


  1.  வீட்ல  வளர்க்கற நாய்  கூட  ரெண்டு  டைம்  அடிச்சா  மூணாவது  டைம்  அடிக்கறப்ப  எதிர்க்கும்
  2.  வீரனுக்குப்புரிந்தது , தப்பிக்க  ஒரே  வழி  யுத்தம்
  3.   அட்ஜஸ்  பண்ணி வாழ்ந்தா  எல்லாம்  சரி  ஆகிடும்னு  நினைச்சேன், ஆகலை 



  • நாயகன், தன் அம்மா, தங்கை  யுடன்  வீட்டைக்காலி  செய்யும்போது  அவர்  ஒரு  சின்ன  மூட்டை  , தங்கை  நாலு  பாத்திரங்கள்  மட்டும்  எடுத்துச்செல்வதாகக்காட்டுகின்றனர். மூன்று  பேர்  வசிக்கும்  வீட்டில்  இவ்வளவு  தான்  பொருட்கள்  இருக்கும
  •  குடிசை  வாழ்  மக்கள்  அனைவரையும்  காலி  செய்யச்சொல்லி  விட்டு  பின்  வீடுகளை  இடிப்பார்களா? காலி  செய்யச்செய்ய  அவர்கள்  பார்க்க  பார்க்க  வீட்டை  இடிப்பார்களா?
  •  கோழையான  மகன்  மீது  கோபப்படும்  அம்மா  சரிதாவின்  கேரக்டர்  டிசைன்  ஓவர்  ஆக்டிங்
  • பண பலம், ஆள்  பலம், பதவி  பலம், உடல்  பலம்  எதுவுமே  இல்லாத  நாயகனை  காலி  பண்ண  ஒரு  மினிஸ்டரே அந்தத்திணறு  திணறுவது  நம்ப  முடியவில்லை 
  •  அந்த  பில்டிங்  இடியப்போகுது  என்பதை  நாயகன்  ஒவ்வொரு  மாடியாக  ஏறி  ஒவ்வொரு  அறையாகத்தட்டி  சொல்ற  மாதிரி  காட்றாங்க . இதுக்கு பிராக்டிக்கலா  பார்த்தா  12  மணி  நேரம்  ஆகும், அத்தனை  வீடுகள்  இருக்கு. யதார்த்தத்தில்  ஒரு  லவுடு  ஸ்பீக்கர்ல  சொல்வதே  சரி 
  •    வில்லனான  மினிஸ்டர்  அடியாட்களோடு  இருப்பது  ஓக்கே, பாதுகாப்புக்கு  ஒரு போலீஸ்  கூட  இல்லாமல்  இருப்பது  எப்படி ? மாமன்னன்  படத்திலும்  எம் எல்  ஏ  வடிவேலுவை  போலீஸ்  செக்யூரிட்டி  இல்லாமல்  தான்  காட்டினார்கள் 
  •   இடிந்து  கொண்டிருக்கும்   மாடி  வீட்டில்  மாட்டிக்கொண்ட  பெண்ணைக்காப்பாற்ற  ஃபையர்  சர்வீஸ்க்கு  ஃபோன்  பண்ணுவதுதான்  புத்திசாலித்தனம்
  •   வில்லன்  செத்ததோடு  படம்  முடிந்தது. அதுக்குப்பின்னும்  எம் ஜி ஆர்  ஃபார்முலாவில் நாயகன்  மாட்டிக்கொண்ட  பெண்ணைக்காப்பாற்றும்  காட்சி  எல்லாம்  நீளம்

  • சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -  முதல்  பாதி  நல்ல  ஸ்பீடு , பின்  பாதி  இழுவை  , பார்க்கலாம். ரேட்டிங் 2.5 / 5 
  • Maaveeran
    Theatrical release poster
    Directed byMadonne Ashwin
    Written byMadonne Ashwin
    Chandru A.
    Produced byArun Viswa
    Starring
    CinematographyVidhu Ayyanna
    Edited byPhilomin Raj
    Music byBharath Sankar
    Production
    company
    Shanthi Talkies
    Distributed byRed Giant Movies
    Release date
    • 14 July 2023
    Running time
    166 minutes[1]
    CountryIndia
    LanguageTamil
    Budget35 crore[2]
    Box office est. 89 crore[3]
  • Thursday, August 31, 2023

    பீட்சா 3 த மம்மி (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஹாரர் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்

     


     2012ஆம்  ஆண்டு  விஜய் சேதுபதி  நடிப்பில்  கார்த்திக்  சுப்புராஜ்  இயக்கத்தில்  பீட்சா  எனும்  மெகா ஹிட்  படம்  ரிலீஸ்  ஆனது. அதே  பட  நிறுவனம் 2013 ஆம்  ஆண்டில்  பீட்சா  2  த  வில்லா  எனும்  டைட்டிலில்  அசோக்  செல்வன்  நடிப்பில் தீபன்  சக்ரவர்த்தி  இயக்கத்தில்  வெளியாகி  சுமாராக  ஓடியது. இப்போது  அறிமுக  மோகன்  கோவிந்த்  இயக்கத்தில்  அஸ்வின்  நடிப்பில்  பீட்சா  3  த மம்மி வெளியாகி  உள்ளது   . இது  மினிமம்  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்டு   5  கோடி  வசூல்  செய்து  வெற்றிப்படம்  ஆகி  உள்ளது 


    ஸ்பாய்லர்  அலெர்ட்


    சம்பவம் 1 -  டீன் ஏஜ்  வயதான ஒரு  சின்னப்பொண்ணு  தலைல  அடிபட்டதால்  கஜினி  மாதிரி  அடிக்கடி  நினைவுகளை  மறந்துடுது , அம்மா  கூட  ஒரு  அப்பார்ட்மெண்ட்ல  வசித்து  வரும்  அந்த  சிறுமியின்  அம்னீஷியா  நிலை  தெரிந்து  அப்பார்ட்மெண்ட்  செக்யூரிட்டி  அந்த  சிறுமியை  அடிக்கடி  பாலியல்  வன் கொடுமைக்கு  ஆளாக்குகிறான், இது  தெரிய  வந்த  அபார்ட்மெண்ட்  செக்ரட்ரியான  மெயின்  வில்லன்  தன்  ஆட்களுடன்  அந்த  சிறுமியை  அவன்  பங்குக்கு  நாசம்  செய்கிறான். பாதிக்கப்பட்ட  சிறுமி   இறந்து  விடுகிறார். பேயாக  வந்து  வில்லன்களைப்பழி  வாங்குகிறார்


     சம்பவம் 2 - நாயகன்  ஒரு  ரெஸ்ட்டாரண்ட்  நடத்தி  வருகிறார். அவர் நாயகியைக்காதலிக்கிறார். நாயகி  ஒரு  போலீஸ்  ஆஃபீசரின்  தங்கை . அண்ணனுக்கு இந்தக்காதலில்  இஷ்டம்  இல்லை . வேறு  மாப்பிள்ளை    பார்க்கிறார். நாயகனின்  ரெஸ்ட்டாரண்ட்டில்  ஒரு  மம்மி  பொம்மை  வருகிறது ., அந்த  பொம்மை  வருகைக்குப்பின்  அமானுஷ்யமான  சில  சம்பவங்கள்  நடக்கின்றன. ஒரு  கொலையும்  நடக்கிறது . இதுதான்  சாக்கு  என்று  போலீஸ்  ஆஃபீசர்  நாயகனை  அந்த  கேசில்  ஃப்ரேம்  பண்ணப்பார்க்கிறார். அதில்  நாயகன்  தப்பித்தானா? என்பது  மீதிக்கதை 


     மேலே  சொன்ன  இரு  தனித்தனிக்கதைகளை  ஒன்றாக்க  இயக்குநர்  ரொம்பவே சிரமப்பட்டு  இருக்கிறார்


    நாயகன்  ஆக அஸ்வின்  தாடி , ஹிப்பித்தலை  ஃபங்க்  ஹேர்  ஸ்டைலில்  வருகிறார். இவர்தான்  பேய்  ஆக  இருப்பாரோ  என  டவுட்  நமக்கு  வருகிறது . நடிப்பு  ஓக்கே  ரகம்


     நாயகி  ஆக பவித்ரா  அழகிய முகம் , கண்ணிய  உடை  என  மனம்  கவர்கிறார். நடிப்பு  ஓரளவு  வருகிறது .இவ்வளவு  அழகான  பெண்  ஏன்  இந்த  தாடிவாலாவை  லவ்வுகிறார்  என  டவுட்  வரவில்லை , இந்தக்காலப்பெண்கள்  மாடர்ன்  யுகவாசிகள்  என்பதால்  பொதுவாகவே  அவர்கள்  டீசண்ட் ஆன  ஆண்களை  விரும்புவதில்லை , ரவுடி  மாதிரி  இருப்பவனைத்தான்  விரும்புகிறார்கள் 


     நண்பனாக  காளி  வெங்கட்  சிறப்பாக  நடித்திருக்கிறார். அவர்தான்  ஓனரோ  என்னும்  சந்தேகம்  எழும்  அளவுக்கு  ஓவராக  நாயகனிடம்  உரிமை  எடுத்துக்கொள்கிறார்


    போலீஸ்  ஆஃபீசர்  ஆக கவுரவ் நாராயணன்  விறைப்பாக  நடித்திருந்தாலும்  வசன  உச்சரிப்பில்  கோட்டை  விட்டிருக்கிறார். மெயின்  வில்லன்  ஆக  கவிதா  பாரதி  கம்பீரமான  நடிப்பு  ( இவர்  ஈரோடு  மாவட்டம்   சென்னிமலையான  எங்க  சொந்த  ஊர்க்காரர்  ஆக்கும். ஹலோ , நினைத்தேன்  வந்தாய்  பட இயக்குநர்   கே செல்வ பாரதி  கூட  சென்னிமலை  தான் )


    சிறுமியாக  வரும்  அபிநட்சத்திரா  புருவங்கள்  இணைந்த  கண்  அழகி . நல்ல  நடிப்பு , அவரது  அம்மாவாக  வரும்  அனுபமா  குமார்  கனகச்சிதம் 


    பிரபு  ராகவின்  ஒளிப்பதிவில்   இருட்டுக்காட்சிகளில்  சிக்சர்  அடிக்கிறார் . எடிட்டர்  இக்னேஷியஸ்  அஸ்வின்  டைம்  டியுரேசன்  2  மணி  நேரம்  வருமாறு  ட்ரிம்  செய்திருக்கிறார். முதல்  பாதியில்  இழுவைக்காட்சிகளைக்குறைத்து  இருக்கலாம் . அருண்  ராஜின்  இசை  குட், பின்னணி  இசை  அருமை 


     பேய்க்கு  மேக்கப்  போடுபவர்  லீவ்  எடுத்துக்கொண்டதால்  முகத்தை  கூந்தலால்  மறைத்து  சமாளித்த  விதம்  அருமை 


    சபாஷ்  டைரக்டர்  (மோகன்  கோவிந்த் ) 

    1  ஜவுளிக்கடை  ஷோ  கேஷ்   பொம்மைகள்  ஒரு  அறையில்  வரிசையாக  முக்காடிட்டு  மூடிய  நிலையில்  இருக்க  அங்கே  நடக்கும்  திகில்  சம்பவம்  அருமை 


    2 வில்லனின்  ஃபிளாட்டில்  மித்ரா  இருப்பதை  ஸ்மார்ட் வாட்ச்சில்  அட்ரஸ்  ரிமைண்ட்  வாய்ஸ்  மூலம்  கேட்கும்  இடம்  குட் 

    3   பேய்  தயாரித்த  ஸ்வீட்  பற்றி  எல்லோரும்  சிலாகிக்கும்  காட்சியும்  நாயகன்  முகத்தில்  மட்டும்  உண்மை  அறிந்து  திகில்  ஆவதும் 

    ரசித்த  வசனங்கள் 


    1    எங்க  டிப்பார்ட்மெண்ட்  ரூல்ஸ்  படி  எங்களையே  நாங்க  நம்பக்கூடாது

    2 கடை மூடறதுக்குள்  போய்  வாங்கிட்டு  வா

     புரியல 

    10  மணிக்கு  எந்தக்கடை  மூடுவாங்க?

    புரிஞ்சிடுச்சு 

    3 கதவு  ரொம்ப  டைட்டா  இருக்குண்ணே 

     இல்லை , நீ தான்  டைட் ஆகிட்டே

    லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

    1 மர்மமான  சத்தம்  அதிகமாக  வரும்போது  அதைத்தாங்க  முடியாத  நாயகன்  அதை  நிறுத்துங்க  என  கத்திக்கொண்டே  இருக்காரே?  வெளியே  போகலாமே? 


    2   ஃபிளாஸ்பேக் சீனில் மித்ரா  ஆட்டோவில்  போகும்போது  அது  ரிப்பேர்  ஆகிற்து , அர்ஜெண்ட்  ஆக போக  வேண்டிய  சமயத்தில்  ஆட்டோ  பக்கத்துலயே  இருப்பாங்களா? ஆட்டோ  டிரைவ்ரிடம்  நீங்க  ரிப்பேர்  பண்ணிட்டு  என்னைக்கூப்பிடுங்க , அதுவரை  நான்  கிரவுண்ட் ல  இருக்கேன்  அப்டினு  மேட்ச்   பார்த்துக்கிட்டே   நாயகனின்  உருவத்தை  ஓவியமாக  வரைஞ்சிட்டு  இருக்கு  பாப்பா. நல்ல  வேளை , சினிமா  தியெட்டர் போய்  படம்  பார்க்கலை 


    3 தலையில்  அடிபட்டதால்  அடிக்கடி  நினைவை  இழக்கும்  மித்ரா  கஜினி  படத்தில்  வருவ்து  போல்  பேப்பரில்  எழுதி  வைத்துக்கொள்ளலாமே?

    4   பேயாக  வரும்  மித்ரா  நாயகனின்  ரெஸ்ட்டாரண்ட்டில்  அவன்  நண்பர்களை  பயமுறுத்துவது  எதற்கு? மித்ராவின்  ஃபிளாஸ்பேக்  கதைக்கும்,  நாயகனுக்கும்  சம்பந்தமே  இல்லை 

    5  பேய்  ரொம்ப  மரியாதை  தெரிஞ்ச  குடும்பத்து வளர்ப்பு  போல. தன்னை  நாசம்  ஆக்கிய  வில்லனைப்பார்த்து  என்னை  ஏங்க  இப்படிப்பண்ணுனீங்க?னு  மரியாதையாக்கேட்குது . என்ன  ஏண்டா  இப்டி  செஞ்சே? நாயே?னு  கோபமா  டயலாக்  வெச்சிருக்க  வேண்டாமா?

    6  க்ளைமாக்ஸ்ல  போலீஸ்  ஆஃபீசர்  தன்  தங்கையைக்கொலை  செய்ய  முயற்சி  செய்து  கொண்டிருக்கும்  வில்லனைப்பார்த்து  அவ்ளை  விடுங்க , விட்டுடுங்க , இல்லைன்னா  சுட்டுடுவேன்னு  மரியாதையா  சொல்லிட்டு  இருக்கார்/ எந்த  ஊர்ல  எந்த  போலீஸ்  கிரிமினல்ஸ்க்கு  இவ்ளோ  மரியாதை  தருது ? 

    7 போலீஸ்  இன்ஸ்பெக்ட்ர்  தன்னைத்தேடி  வந்திருக்கார்னு  தெரிஞ்சதும் அவர்  போலீஸ்  ஸ்டேஷன்ல  அஃபிஷியலா  இன்ஃபார்ம்  பண்ணிட்டுதான்  வந்திருப்பார்னு  தெரியாதா?  வில்லன்  போலீஸ்  ஆஃபீசரைக்கொலை  செய்ய  முயற்சி  செய்யறார். தான்  கொலைக்கேசில்  மீண்டும்  மாட்டிக்குவோம்னு  தெரியாதா? 


    8  ஒரு  முக்கியமான  கொலைக்கேசில்  ஆளை  விசாரிக்க  வரும்  போலீஸ்  இன்ஸ்பெக்டர்  தனியாகவா  வருவார்? அட்லீஸ்  4  கான்ஸ்டபிள்ஸ் உடன்  வர மாட்டரா?  ஜீப்  டிரைவர்  கூட  இல்லை 


    அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ / ஏ



    சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  வழக்கமான  டெம்ப்ளேட்  பேய்க்க்தை  தான்  பின் பாதி , முதல்  பாதி  சில  வித்தியாசமான  காட்சிகள்  ரசிக்க  வைக்கின்றன . பார்க்கலாம்  , ரேட்டிங் 2.5 / 5 


    Pizza 3: The Mummy
    Theatrical release poster
    Directed byMohan Govind
    Starring
    CinematographyPrabhu Raghav
    Music byArun Raj
    Production
    company
    Release date
    • 28 July 2023
    CountryIndia
    LanguageTamil
    Box office5cr

    Wednesday, August 30, 2023

    மாயோன்(2022) - தமிழ் - சினிமா விமர்சனம் ( அட்வென்ச்சர் மிஸ்ட்ரி த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்


    படம்  ரிலீஸ்  ஆனால்  ஓ டி டி  க்கு  ஒரு  மாதத்தில்  வ்ந்து  விடும், ஆனால் 2022ல் ரிலீஸ்  ஆகி  ஒரு  வருடம்  கழித்து  ஓ டி டி  யில்  ரிலீஸ் ஆகும்  முதல்  தமிழ்ப்படம்  என்னும்  பெருமையை  இது பெறுகிறது, ஏகப்பட்ட  எதிர்பார்ப்புகள்., அதை  எல்லாம்  நிறைவேற்றியதா? என்பதைப்பார்ப்போம்


    ஸ்பாய்லர்  அலெர்ட்


    இந்தியாவில்  இருக்கும்  ப்ழமையான  கோவில்களில்  பல  தொல்பொருள்  ஆராய்ச்சியாளர்கள், அதிகாரிகள்  மர்மமான  முறையில்  இறக்கிறார்கள் , அல்லது  காணாமல்  போகிறார்கள் . இந்தியாவில்  இருக்கும்  பழமையான  சிலைகள்  நகைகள், கோவில்  சொத்துக்கள்  வெளிநாட்டுக்குக்கடத்தப்படுகின்றன்.இந்த  கடத்தல்  வேலையில்  சர்வதேசக்குற்றவாளி  ஒருவன்  சம்பந்தப்பட்டு  இருக்கிறான், அவனைப்பொறி வைத்து  எப்படிப்பிடித்தார்கள்  என்பதே  கதையின்  ஒன்  லைன் 


    நாயகன்  ஆக  சிபிராஜ். இவர்  கேரக்டர்  டிசைனில்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  ஆக  நினைத்து  இயக்குநர்  வைத்த  ஒரு  விஷயம்  ஓப்பனிங்  சீன்லயே  தெரிந்து  விடுகிறது . அவரது  அலட்டல்  இல்லாத  நடிப்பு  கச்சிதம் 


     நாயகி  ஆக  தன்யா  ரவிச்சந்திரன், அதிக  வாய்ப்பில்லை  என்றாலும்  ஓக்கே  ரகம் பகவதிப்பெருமாள் , கே  எஸ்  ரவிக்குமார் , ராதாரவி , ஹரீஷ்  பெரோரி , ஜி  மாரிமுத்து  என  தெரிந்த  முகங்கள்  அவர்கள்  பாத்திரத்தைக்கனகச்சிதமாக  செய்திருக்கிறார்கள் 


    இளையராஜாவின்  பின்னணி  இசை  அருமை , பாடல்கள்  பெரிதாக  எடுபடவில்லை , சி  ராம்பிரசாத்தின்  ஒளிப்பதிவு  குட்  ராம் பிரசாத் , கொண்டலராவ்  எடிட்டிங்கில்  படம்  2  மணி  நேரம்  ஓடுகிறது 


    அருண் மொழி  மாணிக்கத்தின்  திரைக்கதையை  என்  கிஷோர்  இயக்கி  இருக்கிறார்

    சபாஷ்  டைரக்டர்


    1   செஸ்  விளையாட்டை  வைத்து  அர்சியல் , போர்  பற்றிய பஞ்ச்  டயலாக்ஸ்  வைத்தது 

    2  மாயாஜால  மந்திரக்கதையா? க்ரைம்  த்ரில்லரா?  என  யூகிக்க  முடியாத  அளவு  காட்சிகளை  மாற்றி  மாற்றி  வைத்தது 


     சாங்க்ஸ்

    1 தேடித்தேடிப்போக  உண்மை  விளங்கும், ஓடிப்போன  காலம் கண்  முன்  தோன்றும்

    2  கந்தர்வா

    3  மாயோன்

    4  கிருஷ்ண  பஜனை 


      ரசித்த  வசனங்கள் 


    1  களத்தில்  எதிரியுடன்  மோதும்  முன்  அவனோட  புத்தியை நாம  வெல்லனும்

    2  போர்  என்பது  வஞ்சனை  ஏமாற்றுதல்  ஆகியன்  அடங்கியது 

    3 சூழ்நிலைக்கு  ஏற்றபடி  நம்  திட்டங்களை  மாத்திக்கனும்

    4  எதிரி  எதிர்பாராத  த்ருணத்தில்  நாம்  தாக்கனும்

    5  என்னோட  வேலை  புதைஞ்சு  கிடப்பதை  தோண்டி எடுப்பது  மட்டும்  இல்லை , என்னைத்தோண்டிப்பார்க்கறவனை  புதைப்பதும்தான்

    6 உன்  பேர்  என்னம்மா?


     வாணி

     என் மனசைத்தின்ன  களவாணி

    7  உங்க  கிட்டே  பேசிட்டு  இருந்தா  சிரிச்சே  செத்துடுவேன்

      சிரிச்ச பின்  செத்துடலாம், ஆனா  செத்த  பின்  சிரிக்க  முடியாது

    8  நீங்க  ரொம்ப தப்புப்பண்றீங்க

     இல்லை , கரெக்ட்  பண்றேன் 

    9  வாலைக்கொடுத்து  தலையைக்காப்பாத்திக்கற பல்லி  மாதிரி சந்தர்ப்ப  சூழல்களை  வைத்து  எது  முக்கியமானது? எது  முக்கியமில்லாதது  என  முடிவெடுப்பதுதான்  புத்திசாலித்தனம் 

    10  வாழ்க்கையை  இரு  வழிகளில்  நாம்  வாழலாம்   1  எதுவுமே  அற்புதமோ , அதிசயமோ  இல்லை  என்பது  போல   2  எல்லாமே  அற்புதமும், அதிசயமும்  தான்    என்பது  போல -  ஆல்ப்ர்ட்  ஐன்ஸ்டீன்


    லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

    1  கோயிலுக்குள்  செல்ஃபோன்  பேசுவது  த்டை  செய்யப்ப்ட்டிருக்கிறதே? நாயகன் ட்ரோன்  அனுப்பி  செல்ஃபோனில்  கோயில்  அமைப்புகளை  ஆராயுமோது  எதிரே  ஒரு முக்கிய  ஆள்  வரும்போது  செல் ஃபோன்  பேசுவது  போல  சமாளிக்கிறாரே? அப்போது  அவர்  கேட்க  மாட்டாரா? ஏன்  கோயிலுக்குள்  செல் ஃபோன்  யூஸ் பண்றீங்க?னு 


    2  நாயக்கர்  குடும்பம்  மூலிகைத்தண்ணீரைக்குடித்து  விட்டுத்தான்  உள்ளே  வருகிறார்கள்  என்பதால்  நாமும்  அதே  போல்  செய்வோம்  என  கொள்ளை  சம்பவத்துக்கு  முன்  தன்  ஆட்களிடம்  கூறும்  நாயகன்  அவன்  மேற்பார்வையில்  கண்  முன்  குடிக்க  வைத்திருக்கலாமே?

    3  நள்ளிரவில்  உளவு  பார்க்க  காட்டுக்குள்  வரும்  ஆள்  செப்பல்  இல்லாமல்  வெறும் காலில்  வந்து  முள்  குத்து  வாங்குவது  ஏன் ?

    4   பின்  பாதியில்  வரும்  பாம்பு  காட்சிகள்  போர்.ஒண்ணா  அவங்களைக்கொல்லனும், அல்லது பயமுறுத்தி  துரத்தனும், சும்மா  விளையாட்டு   காட்டிட்டு  இருக்கு . ராமநாராயணம்  படம்  மாதிரி  இருக்கு 

    5  குள்ளன்  காட்டும்  பூமாரங்  சித்து  விளையாட்டுக்கள்  எல்லாம்  காமெடி  என  நினைத்து  கடுப்பேற்றி  இருக்கிறார்கள் 

    6  சக்கிரவியூகத்துக்கான  சாவி என்ன  ஷேப்ல  எப்படி  இருக்கும்னே  யாருக்கும்  ஒரு  ஐடியா  இல்லாத  போது  மூன்று பேரும்  கரெக்டாக  அவற்றைக்க்ண்டுபிடிப்பது  எப்படி ? 

    7பல  வருடங்களாக  அடைபட்டுக்கிடக்கும்  சுரங்கப்பாதை  திறக்கப்படும்போது  ஆக்சிஜன்  சிலிண்டர்  இல்லாமல்  நார்மலாக  சுவாசிக்க  முடியாது , ஆனால்  நாயகன்  அண்ட்  டீம்  சர்வசாதாரணமாக  சுவாசிக்கிறார்கள் 

    8  ஒரு டிரக்கில்  ஏற்றும்  அளவு  புதையல்  கிடைக்கிறது , ஆனால்  நாயகன்  அண்ட்  டீம்  25  கிலோ  அரிசி  சிப்பம்  சாக்கு  மட்டும்தான்  கைல  வெச்சிருக்காங்க . முன்  யோசனையே  இல்லை 

    9  சுரங்க  அறையில்  நாயகன்  நாயக்க  பெருமாளின்  மகனை  தாக்கி  மயக்கம்  அடைய  வைக்கிறார்கள் , காலையில்  அவர்  வந்ததும்  மகன்  நடந்த  தாக்குதல்  சம்பவத்தை  சொல்லவே  இல்லையே? 

    10  நாயக்கர்  மகன்  சுரங்க  அறையில்  இருப்பதாக  தான்  பொய்  சொன்னதால்  மற்றவர்களுக்கு  அவன்  


    அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூ



    சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  டி வி  ல  போட்டா  பார்க்கலாம், யூ  ட்யூப்லயும்  கிடைக்குது . ரேட்டிங்  2.5 / 5 


    Maayon
    Theatrical release poster
    Directed byN. Kishore
    Screenplay byArun Mozhi Manickam
    Produced byArun Mozhi Manickam
    Starring
    CinematographyC. Ramprasad
    Edited byRam Pandian
    Kondalarao
    Music byIlaiyaraja
    Production
    company
    Double Meaning Productions
    Release date
    • 24 June 2022
    CountryIndia
    LanguageTamil