Tuesday, August 29, 2023

கொலை (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( மர்டர் மிஸ்ட்ரி த்ரில்லர்) @ அமேசான் பிரைம்


  நியூயார்க்  நகரில்  1923 ஆம்  ஆண்டு  நிகழ்ந்த  உண்மை  சம்பவத்தை  அடிப்படையாக  வைத்து  2001  ஆம் ஆண்டு  அனதர்  லைஃப்  என்ற  ஹாலிவுட்  படம்  ரிலீஸ் ஆனது . அந்தப்படத்தின் பட்டி  டிங்கரிங்  அட்லீ  ஒர்க்  தான்  இது 


2013 ஆம்  ஆண்டு  அறிமுக இயக்குநர்  பாலாஜி  கே  குமார் விடியும்  முன்  என்ற  தன்  முதல்  த்ரில்லர்  படத்தை  இயக்கினார். அது  ஏற்கனவே   ஹாலிவுட்டில்  ரிலீஸ்  ஆன  லண்டன்  டூ பிரிட்டன்  என்ற படத்தின்  அன்  அஃபிஷியல்  அட்லீ  ஒர்க் தான். சுமாராகத்தான்  ஓடியது . 10  வருட  இடைவெளிக்குப்பின்  தன்  இரண்டாவது  படமாக  டெக்னிக்கலி  சவுண்ட்  ஆன  பட்ம்  ஆக தந்திருக்கிறார்  இயக்குநர் 


    ஸ்பாய்லர்  அலெர்ட்


முன்னாள்  பாடகியும்  இந்நாள்  மாடலிங்க்  கேர்ள் உம்  ஆன  நாயகி  கொலை  செய்யப்பட்டு  இருக்கிறார். அவரது  கொலைக்கு  போலீஸ்  சந்தேகப்படும்  நபர்கள்  அவரது  பாய்  ஃபிரண்ட் , பர்சனல்  மேனேஜர் ,  மாடலிங் துறைக்கு  இழுத்து  வந்து  ஒரு  முக்கியமான  காண்ட்ராக்ட்டில்  சைன்  போட ஒரு  நாள்  இரவு  தங்க  விலை  பேசிய  வில்லன்  என  சிலரது  மீது  விசாரணை  நடக்கிறது. இறூதியில்  கொலைகாரனை  எப்படிக்கண்டுபிடிக்கிறார்கள்  என்பதே  கதை 


நாயகி  ஆக  மீனாட்சி  சவுத்ரி  நல்ல  முக  அழகு , தேவையான  அளவு  கண்ணியமான  கிளாமர் , அழகிய  ஆடை  வடிவமைப்பு , உடல்மொழி  என  மனதைக்கவர்கிறார். நல்ல  எதிர்  காலம்  உண்டு 

போலீஸ்  ஆஃபீசர்  ஆக ரித்திகா  சிங்  சுறுசுறுப்பாக  நடித்திருந்தாலும்  போலீஸ்  யூனிஃபார்மில் கம்பீரம்  குறைவு.மேக்கப்பை  கொஞ்சம்  குறைத்திருக்கலாம் 

முன்னாள்  போலீஸ்  ஆஃபீசராக  கேசை  டீல்  செய்யும்  விஜய்  ஆண்ட்டனி வழக்கம்  போல்  முகத்தில்  உணர்ச்சியைக்காட்டாத  நடிப்பு . அமைதியாக  வ்ந்து  போகிறார்


ஜான்  விஜய் , ராதிகா ,  என  தெரிந்த  முகங்கள்  வ்ந்து  போகிறார்கள் 


வில்லன்  ஒரு  சைக்கோ  என  க்ளைமாக்சில்  காட்டும்போது  நம்  மனதில்  பெரிய  பாதிப்பை  ஏற்படுத்தவில்லை . பெரும்பாலான  கேரக்டர்கள்  கொலை  செய்ய்ப்படுவது , சில  கேரக்டர்கள்  தற்கொலை  செய்து  கொள்வது  ஆயாசத்தைத்தருகிறது 


ஜி  கிரிஷின்  இசையில்  பாடல்கள்  சுமார்  ரகம், பிஜிஎம்  இன்னுமே  சுமார் , சிவக்குமார்  விஜயனின்  ஒளிப்பதிவு  ஹாலிவிட்  பட  தரத்தில்  அருமையாக  உள்ளது . 129  நிமிடங்கள்  ஓடும்  அளவு  க்ரிஸ்ப்  ஆக  எடிட்டர் கட்  பண்ணி  இருந்தாலும்  முதல்  பாதியில்  இருந்த  விறுவிறுப்பு  பின்  பாதியில்  இல்லை


சபாஷ்  டைரக்டர் (   பாலாஜி  கே  குமார்)


1  நாயகன் , வில்லன், நாயகி , போலீஸ்  ஆஃபீசர்  என  அனைத்துக்கேரக்டர்களுக்கும் உரிய  ஸ்பேஸ்  கொடுத்து  திரைக்கதை  அமைத்தது ,பொருத்தமான  நடிகர்  நடிகை  தேர்வு 


2  கொலை  எப்படி  நடந்திருக்கும்  என  வெவ்வேறு  வெர்ஷனில்  விஷூவலாகக்காட்டிய  விதம் 

சாங்க்ஸ்


1   ஒரு  நாளில் மயக்கமாகி  நானும்  நின்றேனே

2 பார்த்த  ஞாபகம்  இல்லையோ  ( ரீமிக்ஸ்) 

3  நேசம்  மாறுமோ

4  கேள்வி  மட்டும்  தங்குதே


  ரசித்த  வசனங்கள் 

1  பர்ஃபெக்ட்  மர்டர்  என்று  ஒன்று  கிடையாது , எல்லா  மர்டர்லயும் ஒரு  ஃப்ளா  இருக்கும், அதைக்கண்டு பிடிக்கனும்

2  ஒரு  பிரச்சனையோட  தீவிரத்தை  அப்போ  உணர  முடியாது , எதிர்காலத்தில்தான்  உணர  முடியும் 

3   தற்செயலான  நிகழ்வு  என  எதுவுமே  இல்லை, எல்லாமே  தீர்மானிக்கப்பட்டவை 


4 ஏதோ  உன்  பதவிக்காக  சும்மா  இருக்கேன்


 சும்மா  இருப்பது  ஒண்ணும்  உனக்கு  புதுசு  இல்லையே?


5  ஒரு  பொய்யோட  சப்தம்  எப்படி இருக்கும்?னு  எனக்குத்தெரியும்


6 ஒவ்வொரு  மனுசனும்  தன் மனசில்  இருப்பதை  சைகை  மூலம்  அவனையும்  அறியாமல்  வெளிப்படுத்துவான், அதுக்கு freudian slipனு  சொல்வாங்க 


7 எவ்வளவு தான்  வாழ்க்கைல  ஜெயிச்சாலும்  மரணம் கிட்டே  எல்லாரும்  தோற்றுத்தான்  போகனும்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1நாயகனின்  மகளுக்கு  நடக்கும்  விபத்து , மனைவியுடனான  கருத்து  வேறுபாடு , செண்ட்டிமெண்ட்  காட்சிகள்  அனைத்தும்  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லாதவை

2  கொலைக்கான  காரணம்  வலுவாக  இல்லை, போற  போக்கைப்பார்த்தால்  அடுத்த  படத்தில்  எனக்கு  க்டலை  பர்பி  வாங்கித்தர  மறுத்தான், அதனால்  கொன்னுட்டென்னு  சீன்  வைப்பார்  போல . 


3  கொலைக்கான  காரணத்தை  வலுவாகச்சொல்லத்தெரியவில்லை  எனில்  வில்லன்  ஒரு  சைக்கோ  என  சாமார்த்தியமாக  எஸ்கேப்  ஆவது  ஏற்புடையதல்ல 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  டி வி  ல  போட்டாலோ , யாராவது  ஓசி  டிக்கெட்  வாங்கித்தந்தாலோ பார்க்கலாம் ., ரேட்டிங் 2. 5 / 5   


Kolai
Theatrical release poster
Directed byBalaji K. Kumar
Written byBalaji K. Kumar
StarringVijay Antony
Ritika Singh
Meenakshi Chaudhary
CinematographySivakumar Vijayan
Edited byR. K. Selva
Music byGirishh G.
Release date
  • 21 July 2023
CountryIndia
LanguageTamil

Monday, August 28, 2023

ஐங்கரன் (2022)- தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் டிராமா) @ ஆஹா தமிழ் ஓடிடி

 


 2015  ஆம்  ஆண்டு  அதர்வா  நடிப்பில்  வெளியான  ஈட்டி  படத்தை இயக்கிய ரவி  அரசு  இயக்கிய  இரண்டாம்  படம்  இது /. 2015லேயே  துடிக்கும்  கரங்கள்  என்ற  திரைக்கதையை  பதிவு  செய்தவர் 2019ல் தான்  இப்படத்தை  எடுத்திருக்கிறார். சில  கார்ணங்களால்  3  வருடங்கள்  தாமதமாக  வந்தாலும்  விமர்சகர்கள்  இடையே  வரவேற்பைப்பெற்ற  படம்  


   ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன் நகைக்கடையில்  வைரங்களைக்கொள்ளை  அடித்து   செல்லும்போது  எதிர்பாராத  விதமாக  மூடப்படாத  ஆழ்துளைகிணறில்  அந்த  வைர  மூட்டை  மாட்டிக்கொள்கிறது. அரசாங்க  உதவி  இல்லாமல்  அதை  மீட்க  முடியாது  என்பதால்  ஒரு  குழந்தையை  அந்த  ஆழ்துளைக்கிணற்றில்  போட்டு  விடுகிறான். அரசாங்கத்தால்  மீட்க  முடியாததை  நாயகன்  எப்படி  மீட்கிறான்  என்பதே  மீதி  திரைக்கதை


நாயகன்  ஆக ஜி வி  பிரகாஷ். இதுவரை  பி  சி  செண்ட்டர்  ரசிகர்களைக்குறி  வைத்து விடலைப்பையன், ரவுடி , பொறுக்கி  கேரக்டர்களில்  நடித்தவர்  ,முதல்  முறையாக குடும்பங்கள்  ர்சிக்கும்  இளம்  விஞ்ஞானி  ரோலில்  கண்ணியமாக  நடித்திருக்கிறார். பாரட்டுக்கள் , வாழ்த்துகள் . கெட்ட  வார்த்தை  பேசாமல் ,டபுள்  மீனிங்  வசனம்  பேசாமல்  இவர்  நடித்த  முதல்  படம்  இது 


 நாயகி  ஆக  மஹிமா  நம்பியார். 3  காட்சிகளில்  மட்டும்  வருகிறார். ரசிக்க  வைக்கும்  காதல் கலாட்டா  காட்சிகள்


நண்பனாக  காளி  வெங்கட் , அப்பாவாக ஆடுகளம்  நரேன்  கச்சிதமான  நடிப்பு . வில்லன்  ஆக  வரும் சித்தார்த்தா  சங்கர்  குட்  ஆக்டிங் . சின்ன  வில்லன்  ஆக  வரும்  ஹரீஷ் பெராடி  ரசிக்க  வைக்கிறார்\


ராஜா  மொகமத்  எடிட்டிங்கில் போர்  அடிக்காமல்  காட்சிகள்  நகர்கின்றன.சரவணன்  அபிமன்யூ  ஒளிப்பதிவு  நேர்த்தி . திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  ரவி  அரசு. இளம்  விஞ்ஞானிகளின்  கண்டு  பிடிப்புக்கு  அரசு  உரிய  அங்கீகாரம்  தரவேண்டும் என்பதுதான்  கதைக்கரு. பாராட்டத்தக்க முயற்சி 


 இசை ஜிவிபி  தான்  பின்னணி  இசை  கவனிக்க  வைக்கிறது 



சபாஷ்  டைரக்டர் (ரவி  அரசு.)


1  இயக்குநர்  மெக்கானிக்கல்  எஞ்சினியர்  ஆக  இருக்க  வேண்டும், நாயகனின்  கண்டு பிடிப்புகளாக  அவர்  காட்டும் சைக்ளிங்கில்  கிரைண்டர்  , மிக்சி  3 இன் ஒன் ,  ஒரே  சமயத்தில்  லாரித்தண்ணீரை 20  குடங்களில்  பிடிக்கும்  ஐடியா ,  பேனாவில்  மைக்  என  சின்ன  சின்ன  ஐடியாக்கள்  அசத்தல் 

2 வில்லன்களில்  ஒருவன்  ஆறு விரல் கொண்டவன்  என்பதை  ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  கண்டு பிடிக்கும்  காட்சி   


3  நாயகன்  காட்டிய  கருவியை  உடைத்த  வில்லன் இப்போ  போய்  காப்பாத்து  என்றதும்  நீங்க  உடைச்சது  டெமோ  காட்ற  கருவிதான், ஒரிஜினல்  நம்ம  கிட்டே  இன்னொண்ணு  இருக்கு  என  சொல்லும்  காட்சி 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  தான்  அடி திருக்கல்  அடி 

2 டக்கரு  பார்வை 

3  தித்திப்பா

4  உயிரினும்  உயர்ந்த 


  ரசித்த  வசனங்கள் 

1  வாழ்க்கைல  உருப்படியா  ஏதாவது  பண்ணு  அல்லது  உருப்பட  ஏதாவது  பண்ணு 

2  ஓடாத , விழுந்திடுவே  என  சொல்ல  ஆயிரம்  பேர்  இருக்காங்க , ஆனா  விழாமல்  ஓடுனு  சொல்லத்தான்  ஆளுங்களே  இல்லை 

3    டிக்கெட்  செக்கிங்  வந்திருக்கேன், டிக்கெட்டைக்காட்டுங்க 


 சார்  , அவன்  சாப்ட்டுட்டான்


 நான்  நாலே  நாலு  இட்லி  தான்  சாப்ட்டேன்


சார்  அவன்  என்  டிக்கெட்டை  சாப்டுட்டான்


இதை  எந்த  லூசாவது  நம்புவானா? சார், நீங்க  நம்பறீங்களா? 


4 நேர்மையா  வாழ்ந்து  என்னத்தை  சாதிச்சேன்?


 நேர்மையா  வாழ்வ்தே  ஒரு  சாதனை  தான் 


5  பல  நாள்  ஃபாலோ  பண்ணியும்  பக்கம்  வராத  ஃபிக்ரை பழம்  மாதிரி  முகத்தை  வெச்சுக்கிட்டு  பார்க்க  வெச்சுட்டியே?


6  பயந்தா  பாதி  பலம்  குறைஞ்சிடும்   

7 இது  மாதிரி  புது  முய்ற்சிகள்  ஆரம்பத்தில்  வீண்  முயற்சியாகப்பேசப்பட்டாலும்  வெற்றி  பெற்ற  பின்  விடா  முயற்சி  என  பாராட்டப்படும்


8   நம்ம  கண்ட்ரோல்ல  இருக்கும்  ஏரியாவில்  க்ரைமே  நடக்கக்கூடாது, அப்படி  நட்ந்தா  நம்ம  கண்ட்ரோல்ல  தான்  நடக்கனும்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நாயகன்  தன்  அறிவியல்  கண்டுபிடிப்புகளை  ஒவ்வொரு  முறையும்  ஒரு  குறிப்பிட்ட  ஆளிடமே  டெமோ  காட்டுகிறார். அவரும்  ரிஜெக்ட்  செய்து  கொண்டே  இருக்கிறார்? ஏன்  வேறு  ஆளை  மாற்றக்கூடாது . லவ்  லெட்டர்  கொடுக்கும்போது  வாங்க  மறுத்தால்  அந்தப்பெண்ணின்  தோழிக்கோ , தங்கைக்கோ  கை  மாற்றும்  காலம்  இது . ஒரே  ஆளிடம்  ஏன்  தொங்க  வேண்டும் ? ஹையர்  ஆஃபீசரை  அப்ரோச்  பண்ணி இருக்கலாமே?


2  மெயின்  கதையின்  வீரியத்தை  ஆழ்துளைக்கிணறு  குழ்ந்தை  சம்பவம்  டைவர்ட்  பண்ணி  விடுகிறது . மேலும்  இது  அறம்  படத்தின்  மையக்கரு  என்பதால் பார்த்து  சலித்த  காட்சி  ஆகிறது 


3  குழந்தையைக்காப்பாற்றும்  முயற்சியில்  வைரக்கற்கள்  உள்ள  மூட்டை  மாட்டுவது  எப்படி ?

4  வில்லன்  ஆன  போலீஸ்  ஆஃபீசர்  வில்லன்  கேங்கில்  மாட்டுவார்  என்பதை  யூகிக்க  மாட்டாரா? அவரா  வாண்ட்டடா போய்  மாட்டிக்கறார்


5  ஜீப்பில்  வ்ந்த  அனைத்து  போலீஸ்காரர்களையும் டப்னு  சுட்டு  காலி  பண்ணும்  வில்லன்  நாயகனின்  அப்பாவை  மட்டும்  அடித்தே  கொல்ல  முயற்சிப்பதும்  நாயகன்  காப்பாற்றுவதும்  நாடகத்தனம்


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மெயின்  கதையை  நீட்டாக  எடுத்து  விட்டு  தேவையற்ற  கிளைக்கதையாக  கோழித்தீவன  ஊழல்  வில்லன்  கதையை  இழுத்தது  மைனஸ்  என்றாலும் பார்க்கலாம், ஆஹா  ஓடிடி  யில்  காணக்கிடைக்கிறது /. ரேட்டிங் 2.75 / 5 


Ayngaran
Theatrical release poster
Directed byRaviarasu
Written byRavi Arasu
Produced byB. Ganesh
StarringG. V. Prakash Kumar
Mahima Nambiar
CinematographySaravanan Abimanyu
Edited byRaja Mohammed
Music byG. V. Prakash Kumar
Production
company
Common Man Presents
Release date
  • 12 May 2022
CountryIndia
LanguageTamil

Wednesday, August 23, 2023

அஸ்வின் (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( சைக்காலஜிக்கல் ஹாரர் த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்

   


2020  ஆம்  ஆண்டு  தருண்  தேஜா  என்ற  இயக்குநர்  அஸ்வின்  என்ற  பெயரில்  ஒரு  குறும்படத்தை  இயக்கினார் , அது  மெகா  ஹிட்  ஆனது . அதே  படத்தைத்தான்  இப்போது  இரண்டு  மணி  நேரப்படமாக  இயக்கி  இருக்கிறார்


 ஸ்பாய்லர்  அலெர்ட்

மெயின்  கதைக்குப்போகும்  முன்  ஒரு  முன்  கதை 


ஒரு  விவசாயிக்கு  இரு  மகன்கள் . இருவரும் தண்ணீரில்  மூழ்கி  இறக்கிறார்கள் . விவ்சாயி  கடவுளை  நோக்கி  க்டுமையான  தவம்  இருக்கிறார். அவரது  தவத்தை  மெச்சி  இறைவன்  ஒரு  வரம்  கொடுக்கிறார். இரு  குழந்தைகளில்  ஒருவனை  மற்றும்  உயிர்ப்பிக்கிறோம், அவனுக்கு  இரு  சிலைகள்  பரிசாகத்தருகிறோம், அந்த  சிலைகள்  அவனிடம்  இருக்கும்  வரை  வெளி  சக்திகளால்  அவனுக்கு  மரணம்  வராது , இயற்கை  மரணம்  தான்


இறைவன்  மறைந்த  பின்  சாத்தான்  அந்த  சிலையை  அடைய  திட்டம்  போடுகிறது , மனித  உருவில்  அந்தப்பையனிடம்  வந்து  உன்  சகோதரனை  உயிருடன்  மீட்டுத்தருகிறேன் , எக்சேஞ்ச்  ஆஃபர்  ஆக  உன்னிடம்  இருக்கும் இரு  சிலைகளில்  ஒரு  சிலையை  எனக்குத்தா  என்கிறது . இவனும்  ஏமாந்து  தந்து  விடுகிறான் இதனால்  சாத்தானின்  ஆதிக்கம்  பெருகி  அந்த  ஊர்  மக்கள்  எல்லாம்  நோய்  வந்து  வரிசையாக  இறக்கிறார்கள் . பிறகு  உண்மை  அறிந்து  அந்த  இரு  சிலைகளையும்  மீட்டு  ஒரு  மந்திரக்கயிறால்  கட்டி  பூமிக்குள்  புதைக்கிறார்கள் 


ஆர்க்கியாலஜி  டிபார்ட்மெண்ட்டை  சேர்ந்த  ஆர்த்தி  என்ற  பெண்   இந்த  சிலைகளை  மீட்கிறார்.  மேலே  சொன்ன  முன்  கதையை  ஒரு  வீடியோவில்  பதிவு  செய்து  சிஸ்டத்தில்  ஸ்டோர்  பண்ணுகிறார். ஆனால்  சாத்தான்  ஆர்த்தியைக்கொன்று  விடுகிறது


போலீசுக்குக்கிடைத்த  தகவல்படி  ஆர்த்தி  என்ற  பெண்  அந்த  மேன்சனில்  வாழ்ந்த  18  பேரைக்கொலை  செய்து  விட்டு  தானும்  தற்கொலை  செய்து  கொண்டாள் . ஆனால்  ஆர்த்தியின் டெட்  பாடி  மட்டும்  கிடைக்கவில்லை 


 இந்த  கேசின்  மர்மத்தைக்கண்டறிய  யூ  ட்யூப்  பிரபல  டீம்  ஒன்று  களம்  இறங்குகிறது. வழக்கமான  பேய்ப்படங்களில்  நாம்  என்னென்ன  பார்ப்போமோ அந்த  சம்பவங்கள்  எல்லாம் நடக்கிறது , இறுதியில்  சாத்தானை  நாயகன்  எப்படி  வெற்றி கொள்கிறான்  என்பது  க்ளைமாக்ஸ் 


 ஆங்கிலப்படங்களுக்கு  இணையான  ஒளிப்பதிவு , பிரமாதமான  பின்னணி  இசை , நடித்த  அனைவருடைய  பர்ஃபார்மென்ஸ்  தான்  படத்தின்  பலம்  


சபாஷ்  டைரக்டர்


1  இருபது  நிமிடத்தில்  முடிக்க  வேண்டிய  படத்தை  ஜவ்வாக  இழுத்தது 

2   டெக்னிக்கலாக  பிரமாதமான  கூட்டணி 


  ரசித்த  வசனங்கள் 


1      விடாம  துரத்தும்  சாபக்கேடுகளிடம்  மாட்டியவர்களுக்கு  சாவின்  வரம்  கூட  சாபம்  தான் 


2  எல்லாருடைய  மண்டைக்குள்ளும்  எப்பவும்  ரெண்டு  குரல்  கேட்டுட்டு  இருக்கும்


3 இருட்டில்  இருந்து  வெளிச்சத்தைப்பார்க்கும்போது  கேட்கும்  குரல்  வெளிச்சத்துல  இருந்து  இருட்டைப்பார்க்கும்போதுதான்  புரியும் (  எதுவும்  புரியல ) 

4  இந்த  பூமியில்  இறந்து  போகிறவர்கள்  கம்ப்ளீட்டா  இறந்து  போக  மாட்டாங்க . அவங்க  வேற  ஒரு  இண்ட்டர்மீடியேட் ல  கனெக்ட்  ஆகி  இருப்பாங்க 

5  இந்த  உலகத்துல  எதுவுமே  தற்செயலா  நடப்பதில்லை 

6  தலைக்குள்ளே  இருக்கும்  ராட்சசனை  ஒரு  நிமிச்த்துக்குள்  அழிக்க  முடியும்  என்பது  மனிதனுக்குக்கிடைத்திருக்கும்  பெரிய  வரம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   அது  ஒரு  அமானுஷ்யமான  இடம்னு  தெரியும், அப்படி  இருந்தும்  மேன்சனுக்குள்  ஐந்து  பேரும்  பிரிந்து  வெவ்வேறு  இடங்களுக்குப்போவது  ஏன்? எல்லா  இடங்களுக்கும்  ஒற்றுமையாக  ஒரே  குழுவாகப்போகலாமே?  சீக்கிரமா  எல்லா  இடங்களையும்  கவர்  பண்றது  முக்கியமா? உயிரை  கவர்  பண்றது  முக்கியமா?

2 படத்தோட  ஓப்பனிங்  சீன்ல 12  நிமிடங்களுக்கு  ஒரு  விவசாயியோட  ட்வின்ஸ் மகன்கள்  பற்றிய  ஒரு  கதை  வாய்ஸ்  ஓவர்;ல  சொல்றாங்க , அதே    கதையை  படத்தின்  பின் பாதில  அதாவது  62  வது  நிமிடத்துல  மீண்டும்  ஒரு  முறை  12  நிமிடங்களுக்கு  சொல்றாங்க , ஏன்? 

3  நாயகனுக்கு  தன்  சொந்த  சம்சாரம்  மாசமா  இருக்கறது  தெரியாது . அடுத்த  நாள்  காலைல  நாயகனின்  பிறந்த  நாள்  வருவதால்  அப்போ  அந்த  சஸ்பென்ஸை  ஓப்பன்  பண்ணப்போறதா  அவ  சொல்றா, ஆனா  நாயகன்  அன்னைக்கு  நைட்டே  அவ  வயிற்றில்  முத்தமிட்டு  அழறான். நம்ம  குழந்தைக்காக  உன்னை  நீயே  அழிச்சுக்காதேனு  சொல்றான். அடுத்த  நாள்  காலைல  தெரிய  வேண்டிய  அந்த  ராணுவ  ரகசிய  கொஸ்டீன்  பேப்பர்  எப்படி  அவுட்  ஆச்சு? 


4  சாத்தானின்  அந்த  ,மந்திர  சிலைகள்  இரண்டையும்  கிராமத்தார்  மந்திரக்கயிறு  கொண்டு  பூமிக்குள்  புதைச்சுடறாங்க . பல  வருடங்களுக்குப்பின்  அதை  தோண்டி  எடுக்கும்போது  கயிறு  சேதாரம்  ஏதும்  இல்லாம  அப்படியே  இருக்கே? எப்படி ?


5  பல  வருடங்களுக்குப்பின்  கிடைக்கும்  அந்த  சிலை  ஒண்ணு  மட்டும்  தான்  நாயகன்  கைவசம்  இருக்கு , இன்னொரு  சிலை  சாத்தானிடம்  இருக்கு. ஆனா  மந்திரக்கயிறு  யார்  கிட்டேயும்  இல்லயே? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -யூ, ஆனால்  ஜம்ப்ஸ்கேரிங்  சீன்ஸ்க்காக  ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -     ஹாரர்  த்ரில்லர்  ரசிகர்கள்  பொறுமையாகப்பார்க்கலாம்., ரேட்டிங் 2.75 / 5

Tuesday, August 22, 2023

THE TAILOR (2023) TERZI -பாகம் 2 - (துருக்கி) - வெப் சீரிஸ் விமர்சனம்( ரொமாண்டிக் டிராமா) @ நெட் ஃப்ளிக்ஸ்



துருக்கியில்  வாழ்ந்த  பியாமி  என்ற  டெய்லரின்  வாழ்க்கையில்  நடந்த  உண்மை  சம்பவம்  இது . உங்கள்  கடந்த  காலம்  நிகழ்  காலத்தோடு  தைக்கப்பட்டால்  நீங்கள்  என்ன  செய்வீர்க்ள்  ?  என்ற  விளம்பர  வாசகத்துடன்  இதன்  பிரமோ  செம  பரப்ரப்பாக  வெளியானது , மொத்தம்  மூன்று  பாகங்கள் . முதல்  பாகம்  2023  மே  மாதத்திலும்  இரண்டாம்  பாகம்    ஜூலை 2023  லும்  வெளியாகி  உள்ளது / மூன்றாம்  பாகம்  அக்டோபர் 2023 ல்  வெளியாகும்   

ஸ்பாய்லர்  அலெர்ட்


பாகம்  1   முன்  கதை  சுருக்கம்

 

 நாயகன்  புகழ்  பெற்ற  டெய்லர் , நாயகனின்  நெருங்கிய  நண்பன்  தான்  வில்லன். வில்லனுக்கு  மெரேஜ்  ஃபிக்ஸ்  ஆகி  இருக்கிறது.  வில்லன்  சமூக  சம்பிரதாயப்படி  மண மகளை  வெளி  ஆண்கள்  திருமணத்துக்கு  முன்  பார்க்கக்கூடாது , அதனால்  நாயகனின்  கண்ணைக்கட்டி  நாயகிக்கு  உடை  அளவு  எடுக்க  வில்லன் அழைத்து  வருகிறான். நாயகன்  மணப்பெண்ணின்  உடை  அளவை கண்கள்  கட்டிய  நிலையிலும்  கச்சிதமாக  எடுக்கிறார்

 

நாயகிக்கு  இந்ததிருமணத்தில்  இஷ்டம்  இல்லை . பண  பலத்தால்  ஏழையான  நாயகியை  வில்லன்  விலைக்கு  வாங்கி  விடுகிறார். வில்லனிடம்  இருந்து  தப்பித்து  நாயகி  நாயகனின்  வீட்டில்  தஞ்சம்  புகுந்து  விடுகிறாள். நாயகனுக்கு  நாயகி  தான்  வில்லனுக்கு  நிச்சயிக்கப்பட்ட  பெண்  என்பது  தெரியாது , இருவருக்கும்  காதல்  மலர்கிறது

 வில்லனுக்கு  விஷயம்  தெரிந்து  நாயகியை  மீட்க  வரும்போது  நாயகி  துப்பாக்கியால்  வில்லனை  சுடுகிறாள்  , நாயகன்  குறுக்கே  போய்  துப்பாக்கிக்குண்டை  தன்  தோளில்  வாங்கி  காயம்  படுகிறது . இதோடு  முதல்    பாகம்  முற்றும்

 

இரண்டாம்  பாகம்  இது  எட்டு  எபிசொடுகள்  கொண்டது . ஒவொரு  எபிசோடும்  40  நிமிடங்கள்  டூ 45  நிமிடங்கள் , அதில்  டைட்டில்  10  நிமிசம்  கட்  பண்ணி  விட்டால்    கிட்டத்தட்ட  நான்கு  மணி  நேரம்  இருந்தால் ஒரே  சிட்டிங்கில்  படம்  பார்த்து  விடலாம்

 

 முதல்  பாகத்தில்  இருந்த  விறு விறுப்பு  இரண்டாம்  பாகத்தில்  இல்லை . வேண்டா  வெறுப்பா  பிள்ளையைப்பெத்துட்டு  காண்டா  மிருகம் என  பேரு  வெச்ச  கதையாக  ஜவ்வாக  இழுக்கிறார்கள்

 

வில்லன் – நாயகி  திருமணம்  நிகழ்ந்து  விடுகிறது .  இந்த  திரும்ணத்துக்கு  போகும்  நாயகன்  வழியில்  சந்தித்த  முன்  பின்  அறிமுகம்  இல்லாத  பெண்ணைத்தன்னுடன்  அழைத்துச்செல்கிறான், அப்போதுதான்  நாயகி  எந்த  குற்ற  உணர்வும்  இல்லாமல்   திருமணம்   செய்து  கொள்வாள்  என்பது  அவன்  எண்ணம்

 

ஆனால்  திருமணம்  ஆன  பின்னும்   நாயகனைக்காண , நாயகனின்  அப்பாவைப்பராமரிக்க  அடிக்கடி  நாயகி  நாயகன்  வீட்டுக்கு  வருகிறாள்

 

 நாயகனால்  நாயகிக்கு  திருமணம்  ஆனதைத்தாங்கிக்கொள்ள  முடியவில்லை . தன்  தொழிலில்  கான்செண்ட்ரேட்  செய்ய  முடியவில்லை .  பணி  புரியும்  அனைவரையும்  விரட்டி  விடுகிறார். தற்கொலைக்கு  முயல்கிறார்

 

 வில்லன்  நாயகனிடம்  உன்  கம்பெனி  ஷேர்களை  எல்லாம்  எனக்கு  விற்று  விடு , நான்  டேக்  ஓவர்  செய்து  கொள்கிறேன்  என்கிறார். நாயகன்  அதற்கு  மறுத்து  ,மீண்டும்  தன்  தொழிலை  வெற்றிகரமாகக்கொண்டு  வருகிறார்.

 

 நாயகன்   இதுவரை  தன்  அம்மாவை  நேரில்  பார்த்ததில்லை. கருவில்  சிசுவாக  இருக்கும்போதே  அம்மா  வீட்டை  விட்டு  வெளீயேறி  விடுகிறாள் . இப்போது  இத்தனை  வருடங்கள்  கழித்துத்திரும்பி  வருகிறாள்

 

 நாயகனின்  அம்மா  ஏன்  விட்டுச்சென்றாள்?  இப்போது  ஏன்  திரும்பி  வந்தார்?   மனநிலை  சரி  இல்லாத  நாயகனின்  அப்பா  தன்  துணையை  அடையாளம்  கண்டாரா?  அதற்குப்பின்  என்ன  ஆனது  என்பதே  பின்  [ பாதி  திரைக்கதை


 நாயகனாக  நடித்தவர்  முதல்  பாகத்தில்  இருந்த  கம்பீரம்  இதில்  மிஸ்சிங். கதைப்போக்கு  அப்படி . க்ளைமாக்ஸ்க்கு  கொஞ்சம்  முன்  பழைய  கம்பீரத்துடன்  வருகிறார்


 நாயகி  அருமையான  நடிப்பு . குழந்தைத்தனமான  முகம்  இவரது  பிளஸ் 


 வில்லனாக  வருபவர்  அரை  லூஸ்  மாதிரி  கேரக்டர்  டிசைன்  செய்யப்ப்பட்டிருப்பதால்  அவர்  மீது  கோபம்  வரவில்லை .


 முதல்  பாகத்தில்  இல்லாத  புது  கேரக்டர்  ஆக  நாயகனின்  அம்மா  வருகிறார். அருமையான  நடிப்பு  அவருடையது 


பின்னணி  இசை , ஒளிப்பதிவு  போன்ற  டெக்னிக்கல்  அம்சங்கள்  தரம் 

 


சபாஷ்  டைரக்டர்


1  தன்  அப்பா   மனநலன்  குன்றியவர்  என்பதால்  அவரை  வெளி  உலகத்துக்கு  தன் அப்பா  என  அறிமுகம்  செய்ய  கூச்சப்படும்  நாயகன்  தன்  அப்பாவை  ஒரு  கட்டத்தில்  ஒரு  பார்ட்டியில்  எல்லோருக்கும்  அறிமுகப்படுத்தி  பெருமைப்படுத்துவது 


2  நாயகனின்  அம்மா  கேரக்டர்  நாயகனிடம்  பணிப்பெண்னாக  வேலைக்கு  வருவது  தமிழ்ப்பட  செண்ட்டிமெண்ட்  காட்சிகளை  நினைவு படுத்துகிறது


  ரசித்த  வசனங்கள் 


1  தண்ணி  அடிச்சுட்டு  மப்புல  இருக்கறவங்க  எல்லாம்  நிலை  தடுமாறி  தரைல  விழும் வரை  தாங்கள்  வானில்  பறப்பதாகத்தான்  நினைக்கிறார்கள்


2  எல்லாத்தையும்  மறக்கனும்னா  அதற்கு  ஒரே  வழி  மரணம் தான்


3   கீழே  விழுவது , வீழ்ச்சி  இரண்டும்  நல்லதுதான். வீழ்ந்தால் தான்  எப்படி  எழுவது  என்பதை  கற்க  முடியும் 


4   மற்றவர்களிடம்  இருந்து  இரக்கத்தை  சம்பாதிக்க நினைப்பவன் தான்  அழுவான் 

5  உனக்கு  போர்  வேணுமா? அமைதி  வேணுமா? அதை  நீ தான்  தீர்மானிக்கனும்

6  ஒருவர்  நல்லவரா? கெட்டவரா? என  ஜட்ஜ்  பண்றது  ஈசி , ஆனா  அவங்கவங்க  சூழல்களை  கவனிப்பதுதான்  கஷ்டம்

7  நாம  பெரும்பாலும்  நம்ம  கடந்த  காலத்தில்  ஸ்டக்  ஆகிடறோம், அதைக்கடந்து   வரனும்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நமக்கு  ஒரு  ஆளைப்பிடிக்க  வில்லை  எனில்  அவர்களிடம் இருந்து  விலகி  இருக்க  வேண்டும், இதில்  வரும்  வில்லன்  தன்  மனைவிக்கு  நாயகன்  கூட  காதல்  உண்டு  என  தெரிந்த  பின்னும்  அடிக்கடி  நாயகன்  வீட்டுக்கு  தன்  மனைவியுடன்  வருவதும்  தன்  வீட்டுக்கு  நாயகனை  அழைப்பதும்  மடத்தனம் 

2  நாயகனின்  அம்மா  தன்  விரலில்  போட்டிருந்த  மோதிரத்தை  இப்போது  கொடுத்து  இந்த  மோதிரம்  விரலுக்குப்பொருந்தினால்  அவர் தான்  நாயகனின்  அம்மா  என  சொல்வது  நகைக்க  வைக்கிறது . 20  வருடங்கள்  கழித்தும் ஒருவரின்  விரல்  அதே  சைசில்  தான் இருக்குமா? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+  காட்சிகள்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  முத்ல  பாகம்  பார்த்தவர்கள்  அந்த  அளவு  எதிர்பார்ப்புடன்  வந்தால்  ஏமாறுவார்கள் , அதைப்பார்க்காதவர்கள்  இதைப்பார்த்தால்  புரியாது . ரேட்டிங்  2.25 / 5   


The Tailor
Also known asTerzi
Genre
Written by
  • Rana Mamatlıoğlu
  • Bekir Baran Sıtkı
Directed byCem Karcı
Starring
Music byFırat Yükselir
Country of originTurkey
Original languageTurkish
No. of seasons2
No. of episodes15
Production
ProducerOnur Güvenatam
Production companyOGM Pictures
Release
Original networkNetflix
Original release2 May 2023

BAWAAL (2023) ஹிந்தி -சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்

 


பவால்  என்னும்  ஹிந்தி  சொல்லுக்கு  எக்சைட்மெண்ட்   என்று  அர்த்தம். ஸ்ரீதேவியின் மகளான  ஜான்வி  கபூர்  நாயகியாக  நடித்த  இந்தப்படம்  2023  ஜூலை  21  முதல்  அமேசான்  பிரைம்  ஓடிடி யில்  காணக்கிடைக்கிறது . இப்படத்தின்  படப்பிடிப்பு மும்பை , கான்பூர் , லக்னோ ,பாரீஸ் , பெர்லின், ஆம்ஸ்டர்டாம், போலந்து  ஆகிய  இடங்களில்  படமாக்கப்பட்டது 

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  ஒரு  ஸ்கூல்  டீச்சர் . டுபாக்கூர்  பார்ட்டி . தன்னைப்பற்றி  இல்லாததும், பொல்லாததுமாக  ஓவர்  பில்டப்  செய்து  இமேஜ்  வளர்த்தி  வைத்திருப்பவன்


நாயகி சின்ன  வயதில்  காக்கா  வலிப்பு  என்னும்  ஃபிட்ஸ்  நோயால்  பாதிக்கப்பட்டவள். திருமணத்துக்கு  முன்பே  மாப்பிள்ளையான  நாயகனிடம்  அதைப்பற்றி தெரிவித்து  விடுகிறாள் 


 அப்போது   அது  பற்றி  பெரிதாக  அலட்டிக்கொள்ளாத  நாயகன்  திருமணத்துக்குப்பின்  அந்தக்குறைபாட்டை  பூதாகரமாகப்பார்க்கிறான் 


 ஸ்கூலில்  தன்  க்ளாஸ்  ரூமில்  வாத்தியார்  ஆன  நாயகன்  ஒரு  பையனை  அடித்து  விடுகிறான். அடிபட்ட  பையனின்  அப்பா  ஒரு  எம் எல் ஏ . இதனால்  அந்த  எம் எல் ஏ  நாயகனை  சஸ்பெண்ட்  செய்ய  வேண்டும்  என  பிரஷர்  தருகிறார்


இந்த  ஒரு  மாத  கால  சஸ்பென்ஷன்  வாழ்க்கையை  சீராக்க, இழந்த  தன்  இமேஜை  சரி  ஆக்க  நாயகன்    ஃபாரீன்  டூர்  போய்  உலகப்போர்  நிகழ்ந்த்  இடங்களில்  எல்லாம்  ஒரு  விசிட்  அடித்து  மாணவர்களுக்கு  ஆன்  லைன்  கிளாஸ்  நடத்த  முடிவெடுக்கிறான்


நாயகன் , நாயகி  இருவரும்    ஃபாரீன்  டூர்  போகிறார்கள் . இதற்குபின்  இவர்கள்  கருத்து  வேற்றுமை  மறைந்து  இருவரும்  இணைந்தார்களா?  ஸ்கூலில்  வேலை  மீண்டும்  கிடைத்ததா? என்பது  பின்  பாதி  திரைக்கதை 


நாயகன்  ஆக வருண்  தவான்  முதல்  பாதியில்  காமெடி  கல்ந்த  நடிப்பையும், பின்  பாதியில்  செண்ட்டிமெண்ட்  கலந்த  நடிப்பையும்  வழங்கி  இருக்கிறார்

 நாயகி  ஆக  ஜான்வி  கபூர்   சோக  சித்திரமாக  படம்  முழுக்க  வருகிறார். ஸ்ரீதேவியின்  மகள்  என்ற  பிம்பமே  அவரது  எதிரி . அவர்  அளவுக்கு  முக  வசீகரம், அழகு , நடிப்பு  எல்லாமே  குறைவு  என்பதால்  ஒப்பீடு  செய்து  பார்ப்பதைத்தவிர்க்க  முடியவில்லை 

நான்கு  பாடல்கள் கேட்கும்  தரத்தில்  இருந்தாலும்  பிஜிஎம்  பாராட்டும்  விதத்தில்  இருக்கிறது மித்தேஷ்  மர்ச்சந்தரி  தான்  ஒளிப்பதிவு . ஃபாரீன்  லொக்கேஷன்களை  அழகாகப்படம்  பிடித்திருக்கிறார்

கதை  மற்றும்  தயாரிப்பு  இரண்டுமே அஸ்வின் அய்யர்  திவாரி , திரைக்கதை  , இயக்கம்  நிதேஷ்  திவாரி  சாரு  ஸ்ரீ  ராய்  எடிட்டிங்கில் 137  நிமிடங்கள்  டைம்  டியூரேஷன் , இன்னும்  ஷார்ப்  ஆக  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம்



சபாஷ்  டைரக்டர் ( நிதேஷ்  திவாரி)

1   எடுத்துக்கொண்ட  கதைக்கு  ஆறு  பேர்  கொண்ட  குழுவுடன்  திரைக்கதை  அமைத்த  விதம் , பிரிந்து  வாழும்  தம்பதியர் , பிணக்கில்  இருக்கும்  காதலர்களுக்கு  ஒரு  பாடமாய்  இருக்கும்  விதத்தில்  மனதைத்தொடும்படி  இருக்கிறது


2  மெயின் கதை  தம்பதியர்  மன  ஒற்றுமை  என்றாலும்  சைடு  டிராக்கில்  உலகப்போர்  நடந்த  இடங்கள்  அது  பற்றிய  தகவல்கள்  என  டாக்குமெண்ட்ரி  எஃபக்டில்  பின்  பாதி  எடுத்த  விதம் 

ரசித்த  வசனங்கள் 

1   அவரு  ஐ ஏஎஸ்  எக்சாம்  எழுதும்போதுதான்  நினைச்சார், நாம  ஜெயிச்சா  லக்னோவுக்கு  ஒரு  கலெக்டர்தான்  கிடைப்பாரு, ஆனா  ஆசிரியர்  ஆகிட்டா  ஏகப்பட்ட  கலெக்டர்சை  நாமே  உருவாக்கலாம்,அதனால  பேப்பரை  கிழிச்சுட்டு  எக்சாம்  ஹாலை  விட்டு  வெளில  வந்துட்டாரு 


2  இவரு  ஹிஸ்டரி  டீச்சர் இல்லை  மிஸ்டரி  டீச்சர்   என்ன  கத்துத்தர்றார்னு  அவருக்கே  தெரியாது  


2   நாம  என்ன  இமேஜ்  மெயிண்ட்டெயின்  பண்றமோ  அதுதான்  ஜனங்க  மனசுல  பதியும்

3  ஏங்க , அவர்  கிட்டே  கேட்டுப்பாருங்க , அவரோட  சேவிங்க்ஸ்  அக்கவுண்ட்  தான்  உங்க  பேங்க்ல  இருக்கே?


 ஏம்மா,  சேவிங்க்ஸ்  அக்கவுண்ட்  இருந்தா  என்  பிள்ளையை  அவர்  சேவ்  ப்ண்ணுவாரா? என்ன  லாஜிக்  இது ?


4  நாமே  ஒரு  வேலையை  விட்டு  ரிசைன்  பண்றதுக்கும், அவங்க  நம்மை  டெர்மினேட்  பண்றதுக்கும்  வித்தியாசம்  இருக்கு 


5  ஹோட்டல்  வெப்சைட்ல  விளம்பரம்  போடறாங்க  ஃபைவ்  ஸ்டார்  மாதிரி , ஆனா  கிடைக்கறது  என்னவோ  லாலிபாப் தான் 


6  உனக்கு  இதெல்லாம்  எப்படித்தெரியும்?

 தெரிஞ்சுக்கனும்னு  ஆசைப்பட்டா  நிச்சயமா  தெரிஞ்சுக்கலாம், இடங்களைபற்றியும், மனிதர்களைப்பற்றியும்

7  மரணம்  முன்  கூட்டியே  தீர்மானிக்கப்பட்டதாக  இருந்தாலும்  போர்  வீரர்கள்  முன்  நோக்கிச்செல்வதை  நிறுத்தவில்லை 

8  மற்றவர்களின்  சுதந்திரத்துக்காக  தன்  உயிரை  இழக்கத்துணிவது  சாதாரண  விஷய்ம்  இல்லை 

9  நம்ம  ரெண்டு  பேருக்கும்  பொதுவான  ஒற்றுமை  அம்சங்கள்  எதுவுமே  இல்லையே?


 அப்படி  இருக்கனும்னு  அவசியம்  இல்லை 

10 ஹிட்லர்  ஒரு  கிறுக்கன்,  தான்  இருக்கற  நாட்டை  விட்டுட்டு  இன்னொரு  நாட்டின்  மீது  ஆசைப்பட்டான், அழிந்தான்

 நாம  எல்லாருமே  ஹிட்லர்  மாதிரிதான் , சைக்கிள்  இருக்கறவன் பைக்  வேணும்னும் , பைக்  இருக்கறவன்   கார்  வேணும்னும்  ஆசைப்படறவங்க 


11  ஹிட்லர்  வாழ்க்கைல  நாம  கத்துக்க  வேண்டிய  ஒண்ணு  பித்தலாட்டம், பொய்  இவற்றால்  நாம்  ஏற்படுத்தும் இமேஜ் நீண்ட  நாட்கள் நிலைக்காது . ஹிட்லர்  செத்த  இடத்துல  ஒரு  நினைவு  மண்டபம்  கூட  இல்லை 


12  வரலாறு  நமக்குக்கத்துத்தரும்  ஒரு  முக்கியமான  விஷயமே  நம்ம  தப்பை  திருத்திக்கறதுதான்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  சின்ன  வீடு , கோபுரங்கள்  சாய்வதில்லை  போன்ற  படங்களில்  நாயகி அழகின்மை  பற்றிக்குறை  கூறும்  நாயகன்  பின்  மனம்  மாறுவது  பிரமாதமான  திரைக்கதையால்  விளக்கப்பட்டிருக்கும், அந்த  ஆழம்  இதில்  இல்லை 


2  ஒரு  மாச  சம்பளமே  நாயகனுக்கு 10,000  ரூபாய்  தான்  இருக்கும், ஆனால்  அந்த  ஒரு  மாச  சஸ்பென்சனுக்காக  வோர்ல்ட்  எஜூக்கேஷனல்  டூர்  என  8  லட்சம்  ரூபாய்  செலவு  செய்ய  முன்  வருவது  எல்லாம்  ஓவர் 


3 மனைவிக்கு  சின்ன  வயதில்  ஃபிட்ஸ்  நோய்  இருந்தது  என்ற  ஒரே  காரணத்துக்காக  பெட்  ரூமில்  இருவரும்  பிரிந்து  வாழ்வது  ஏற்றுக்கொள்ளும்  விதத்தில்  இல்லை 


4  தான்  தாலி  கட்டிய  சொந்த  சம்சாரத்தை  ஃபாரீனில்  மற்றவர்  முன்  கிளாமர்  டிரசில்  தோன்றும்போது  அழகு  என  நாயகன்  சிலாகிப்பதை  ஏற்றுக்கொள்ள  முடியவில்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஜான்வி கபூர்  ரசிகர்கள் யாராவது  இருந்தால்  அவர்கள்  மட்டும்  பார்க்கலாம், நல்லா  தூக்கம்  வரும், ரேட்டிங்  2/ 5 



Bawaal
Official release poster
Directed byNitesh Tiwari
Written by
  • Nitesh Tiwari
  • Piyush Gupta
  • Nikhil Mehrotra
  • Shreyas Jain
Story byAshwiny Iyer Tiwari
Produced by
Starring
CinematographyMitesh Mirchandani
Edited byCharu Shree Roy
Music bySongs:
Mithoon
Tanishk Bagchi
Akashdeep Sengupta
Score:
Daniel B. George
Production
companies
Distributed byAmazon Prime Video
Release date
  • 21 July 2023
Running time
137 minutes
CountryIndia
LanguageHindi

Sunday, August 20, 2023

மாமன்னன் (2023) -தமிழ் - சினிமா விமர்சனம் ( பொலிடிக்கல் ஆக்சன் த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்

   35  கோடி  ரூபாய்  பட்ஜெட்டில் மாரி  செல்வராஜ்  இயக்கத்தில்  ரிலீஸ்  ஆன  இப்படம்  முதல்  நாள்  வசூலில்  ரூ 6  கோடியும் ,  முதல்  வார  உலகம்  முழுக்க மொத்த  வசூல்  ஆக  50  கோடியும்  கலெக்சன்  செய்து  சாதனை  படைத்தது ஆனந்த  விக்டன்  46  மார்க்  கொடுத்தது. பல  விமர்சனங்கள்  பாசிட்டிவ்  ஆகவே  அமைந்தது 



ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின்  அப்பா  பிற்படுத்தப்பட்ட  சமூகத்தை  சேர்ந்தவர். ஒரு  கட்சியில்  சாதாரண  தொண்டனாக  இருக்கிறார். நாயகன்  சின்னப்பையனா  இருக்கும்போது  சக  தோழர்களுடன்  கோவில்  குளத்தில்  குதித்து  நீச்சல்  அடிக்கிறான். பல  முறை  தடுத்தும்  கேளாததால்  உயர்  சாதியைச்சேர்ந்த  சிலர்  அந்த  சிறுவர்களை  கல்லால்  தாக்குகின்றனர்.அந்த  சம்பவத்தில் நான்கு  பையன்கள்  இறந்து  விடுகிறார்கள் , நாயகன்  பலத்த  காயத்துடன்  உயிர்  தப்புகிறான். தன்  அப்பாவால்  எதுவும்  செய்ய  முடியவில்லை  என்ற  கோபத்தில்  நாயகன்  அதற்குப்பின்  15  வருடங்களாக  அப்பாவிடம்  பேசுவதே  இல்லை 


 வில்லன்  உயர்  ஜாதியைச்சேர்ந்த  ஜாதி  வெறி  பிடித்த  ஆள் இப்போது  நாயகனின்  அப்பா  ஒரு  எம் எல் ஏ. இருந்தாலும்  வில்லன்  முன்  உட்கார  அனுமதி மறுக்கப்படுகிறது. இது  தெரிந்ததும்  நாயகன்  பொங்குகிறான். வில்லன்  முன்  அப்பாவை  உட்காரச்சொல்கிறான். இதனால்  கடுப்பான  வில்லன்  நாயகனை  ஒழிக்க  நினைக்கிறான் 


 அப்போது  ஆளூம்  கட்சித்தலைவரும், முதல்வரும்  ஆனவரிடம்  இருந்து  வில்லனுக்கு  ஃபோன்  வருகிறது. இப்போது  தேர்தல்  வர  இருப்பதால்  எந்தக்கலவரமும்  செய்ய  வேண்டாம்  என்கிறார். இதனால்  கடுப்பான  வில்லன்  ஆளும்  கட்சியை  விட்டு  எதிர்க்கட்சியில்  சேர்கிறான். நாயகனின்  அப்பாவை  தேர்தலில்  தோற்கடிக்க  சபதம்  செய்கிறான். அந்த  சபதத்தில்  வெற்றி  பெற்றானா? இல்லையா? என்பதுதான்  மீதி  கதை 


கதையின்  நாயகனாக உதயநிதி. அடக்கி  வாசித்திருக்கிறார். சிறப்பான  நடிப்பு . அவரது  அப்பாவாக  வரும்  வடிவேலு  டைட்டில்  ரோலில்  கலக்கி  இருக்கிறார். காமெடிக்கு  எப்படி  ஒரு  பிரமாதமான  உடல்  மொழி  வைத்திருக்கிறாரோ  அதெ  போல்  கேரக்டர்  ரோலுக்கும்  ஒரு  உடல்  மொழி  உருவாக்கி  இருக்கிறார் , சிறப்பு 


வில்லனாக  ஃபகத்  ஃபாசில்  ஆர்ப்பாட்டமான  நடிப்பு. காலில்  விழுந்து  ,மன்னிப்புக்கேட்க  வேண்டும்   என  அவரது  ஜாதிக்காரர்கள்  சொன்னதும்  ஒரு  நிமிசம்  உள்ளே  போய்ட்டு  வர்றேன்  எனக்கூறி  பின்  காலில்  விழுவது  கலக்கலான  நடிப்பு 

நாயகி என  பேருக்கு கீர்த்தி  சுரேஷ். முகத்தில்  லட்சுமிக்ரமான  பொட்டு  இல்லை , அழகான  புடவை  இல்லை, ஆண்பிள்ளை  போல  பேண்ட்  சர்ட்  போட்டு  அவர்  உலா  வருவது  மயிலின்  தோகையை  கட்  பண்ணி  ஃபேஷன்  ஷோவில்  நடக்க  விட்டது  போல  இருக்கிறது

முதல்வராக  லால்  கச்சிதம். அனுபவம்  மிக்க  நடிப்பு 


இசை  ஏ ஆர்  ரஹ்மான். பொதுவாக  இவர்  படங்களில்  பாடல்கள் செம  ஹிட்  ஆகும், பிஜிஎம்  மீடிய்மாகத்தான்  இருக்கும், ஆனால்  இதில்  உல்டா, பாடல்கள்  சுமார்  ரகம்  தான், பிஜிஎம்  ஓக்கே  ரகம் 


ஆர்  கே  செல்வாவின்  எடிட்டிங்கில்  155  நிமிடங்கள்  வருமாறு  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்கள் , பின்  பாதியின்  பின்  பாதி  இழுவை  தேனி  ஈஸ்வரின்  ஒளிப்பதிவு  உலகத்தரம் 


சபாஷ்  டைரக்டர் ( மாரி  செல்வராஜ்)


1  நாயகி  ஓப்பனிங்  சாங்கில்  நாயகிக்கு  சிவப்பு  தாவணி , சிவப்பு  ஜாக்கெட் , நாயகனுக்கு  கறுப்பு  சட்டை  என  கலர்  காம்போ  கொடுத்து  திமுகக்கலரை  குறியீடாகக்காட்டி  நம்ம  கொடி  பறக்கற  காலம்  வந்தாச்சு   என பாடல்  வரியைக்கொண்டு  வந்தது 


2   வடிவேலுவின்  குணச்சித்திர  நடிப்பு , நாயகன்  உதயநிதியின்  அண்டர்  ப்ளே  ஆக்டிங், ஃபகத்  ஃபாசிலின்  ஆர்ப்பாட்டமான  வில்லத்தன்ம்  மூன்றையும்  பேலன்ஸ்  செய்து  காட்சிகளை  வடிவமைத்த  விதம்  அருமை 


3   இத்தனை  வருட  தமிழ்  சினிமா  வரலாற்றில்  நாயகனை  பன்றி  வளர்ப்பாளராகக்காட்டிய  முதல்  படம்  இது . நாயகனை  ஒத்துக்கொள்ள  வைத்ததற்கு  ஒரு  சபாஷ் 

4  வில்லன்  வீட்டில்  அப்பாவை  உட்காரச்சொல்லும்  நாயகன்  போடும்  ஃபைட்  சீன்  மாஸ்  சீன், செம  இண்ட்டர்வெல்  பிளாக்  சீன்

  சாங்க்ஸ்

1  நம்ம  கொடி  பறக்கற  காலம்  வந்தாச்சு  ( நாயகி  ஓப்பனிங்  சாங்) 

2  நெஞ்சமே  நெஞ்சமே  கொஞ்சியே  சொல்லிடும்  ஆரிராரோ

3 உச்சந்தலை  ஓட்டுக்குள்ளே

4  எனக்குள்ளே  ஒரு  ஓசை  கேட்குதா  புது   பாஷை ? 

5  ஏ  ஏ  வீரனே  வேட்டையாடு  வெற்றியால்  தீரும்

ரசித்த  வசனங்கள் 

1  அண்ணே, நீங்க  எம் எல் ஏ  ஆகிட்டீங்க, இன்னும்  உங்க  பையன்  பன்றி  வளர்த்திட்டு இருக்காரே?

நீ வேணா  10  சிங்கம்  வாங்கிக்கொடு, வளர்த்தட்டும், ஏய்யா , அவனுக்குப்பிடிச்சதை  அவன்  செய்யட்டும்


2  இங்கே  யார்  ஜெயிச்சாங்க  என்பது  முக்கியம்  இல்லை, யார்  பயந்தாங்க  என்பதுதான்  முக்கியம் 


3  ஒருத்தன்  திருப்பி  அடிக்க  முடியாத  நிலைல  இருக்கும்போதும்  தொடர்ந்து  அவனை  அடிக்கறது  அயோக்கியத்தனம், அதே மாதிரி  ஒருத்தனை  நம்மால  திருப்பி  அடிக்க  முடியாதுனு  நினைச்சுக்கிட்டு  அவன்  கிட்டே  அடி  வாங்கிக்கிட்டே  இருப்பது  கோழைத்தனம் 

4  என்னைக்கும் , யார்  கிட்டேயும்  உக்காந்து  பேசி  பழகுங்க, நின்னு  பேசி  பழக  வேண்டாம்

5  ஏழைப்பசங்க  ஆத்திரப்படவும், கோபப்படவும்  கூட  ஒரு  தகுதி  வேண்டும்னு  ஆகிடுச்சு 

6  உன்னைப்பத்தி  எதுவுமே  தெரியாம   எல்லாமே  தெரிஞ்ச  மாதிரி  இத்தனை  நாட்களா  விலகி  இருந்தேனே  அதுக்கு  சாரி

அப்போ  நானும்  சாரி..  உன்னைப்பத்தி  எல்லாமே  தெரிஞ்சிருந்தும்  எதுவுமே  தெரியாத  மாதிரி  இத்தனை  நாட்களா  விலகி  இருந்தேனே  அதுக்கு  சாரி

7  யானை  மேல  சவாரி  செய்ய  திட்டம்  போட்டா  இந்த  நாய்  கழுதை  மேல  சவாரி  செய்ய  நினைக்குது 

8  யுத்தம்னு  வந்துட்டா  பகை  உணர்ச்சி  இருக்கக்கூடாது 

9  உனக்கு  மேலே  இருக்கறவன்  கிட்டே  தோற்றாலும்  பரவாயில்லை , உன்  கூடவே  இருக்கறவங்க கிட்டே  தோற்றாலும்  பரவாயில்லை , ஆனா  என்னைக்கும்  உனக்குக்கீழே  இருக்கறவங்க  கிட்டே  தோத்துடாத, அது  நீ  செத்ததுக்கு  சமம்

10  ஒருத்தருடைய  கோபம்  எப்படி  ஊர்க்காரங்க  ஆயிரக்கணக்கானவங்களோட  மானமா  மாறும் ?

11  மதம்  அடிக்குதா?  ஜாதி அடிக்குதா? பணம்  அடிக்குதா?nனு  பார்த்தா  மூணுமே  சேர்ந்து  அடிக்குது

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 கோவில்  குளத்தில்  யாரும்  குளிக்கக்கூடாது  என்பது  நீண்ட  நாட்களாக  இருக்கும்  விதி. ஆனால் இயக்குநர்  அதை  சரி  என்பதாக  காட்டுவது  எதற்கு?பகுத்தறிவுவாதிகள்  கோவில்  பக்கமே  வருவதில்லை  எனில்  கோவில்  குளத்துக்கு  மட்டும்  வரலாமா? 

2  நாயகன்  தன்  அப்பாவிடம்  15  வருடங்களாகப்பேசாமல்  இருப்பதற்கு  சொல்லப்படும்  காரணம்  வலுவானதாக  இல்லை 

3  நாயகன் சின்னவயசில் இருந்தே  பன்றிப்பண்ணை வைத்திருக்கிறார், ஓக்கே, ஆனால்  நாயகி  பன்றிக்குட்டியைக்கொஞ்சுவது  எல்லாம்  ஓவர்

4   வில்லனின்  ஆட்கள்  நாயகியின்  ட்யூஷன்  செண்ட்டரை  அடித்து  நொறுக்கி  இருக்கிறார்கள், அறை  முழுக்க  பாடப்புத்தக  காகிதங்கள்  சிதறிக்கிடக்கின்றன., காலேஜ் வரை  படித்த  நாயகன்  செருப்புக்காலோடு  அந்த  பாட  புத்தக  காகிதங்களை  மிதிக்கிறாரே? பாடப்புத்தகம்  சரஸ்வதிக்கு  சமம்  ஆச்சே? 

5  நியாயப்படி தான்  எல்லாம்  நடக்கனும்  என  ரூல்ஸ்  பேசும்  நாயகன்  பைக்கில்  போகும்போது   ஹெல்மெட்  போடாமல்  போவது  ஏன் ? 

6  அவ்வளவு  பெரிய  கல்வி  நிறுவன்ம் நடத்தும்  வில்லன்  அங்கே  ஒரு  செக்யூரிட்டி , வாட்ச் மேன், நாய்  எதுவுமே  இல்லாமலா  வைத்திருப்பார்?

7  இவ்வளவு  பெரிய  பிரச்சனை  ந்டந்திருக்கு , கலவரம்  வரப்போகுதுனு  தெரிஞ்சும்  ஒரு  எம் எல் ஏ  வீட்டில்  செக்யூரிட்டி  டைட்  ப்ண்ண  மாட்டாங்களா? ஒரு  வாட்ச்மேன்  கூட  அங்கே காணோம்

8  வில்லனுக்கும் நாயகனுக்கும்  பெரிய  தகறாரு  வரபோகுது  என  ஆர்வமாக  அமர்ந்தால்  வில்லன்  வளர்க்கும்  நாய்களை  ஏவி  நாயகன்  வளர்க்கும்  பன்றிகளைத்தாக்குவது  மடத்தனமான  கற்பனை, செண்ட்டிமெண்ட்  சீன்  வைக்க  வேண்டியதுதான்  அதுக்காக  இப்படியா?

9  வில்லன்  ஜாதி வெறி  பிடித்தவர்  வடிவேலு வை  தன்  எதிரே  உட்கார  அனுமதிக்காதவர், ஆனால்  அவர்  முதல்  முறை  எம் எல் ஏ  ஆக  மட்டும்  எப்படி  விட்டு  வைத்தார்?  அதே போல  வடிவேலுவின்  மகனும்  அதே  ஜாதி தானே? அவரை  மட்டும் எப்படி  உட்காரச்சொல்கிறார்? 

10   பிரச்சனை  எதுவும்  செய்ய  வேண்டாம்  என  வில்லனுக்கு  ஃபோன்  பண்ணும்  சி எம்  தன்  கட்சி  எம் எல் ஏ  வான  வடிவேலுவுக்கு  ஃபோன்  பண்ணாதது  ஏன் ? \

11 முதல்  பாதி  திரைக்கதையில்  டிஸ்டிங்க்‌ஷனில்  பாஸ்  ஆன  இயக்குநர்  பின்  பாதியில்  மாமூல்  மசாலா  கதைக்களத்துக்குப்போனது  ஏனோ ?

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  யூ


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பிரமாதமான  மேக்கிங்  ஸ்டைலில்  முதல்  பாதி  , மாமூல்  மசாலாவாக  பின்  பாதி  என  கலந்து  கட்டி  இருக்கும்  படம், பார்க்கலாம். ரேட்டிங் 2.75 / 5 


Maamannan
Theatrical release poster
Directed byMari Selvaraj
Written byMari Selvaraj
Produced byUdhayanidhi Stalin
Starring
CinematographyTheni Eswar
Edited bySelva R. K.
Music byA. R. Rahman
Production
company
Release date
  • 29 June 2023
Running time
155 minutes[1][2]
CountryIndia
LanguageTamil
Budget35 crore[3]
Box office73.3 crore[4]