Saturday, August 19, 2023

ரெஜினா(2023)- தமிழ் - சினிமா விமர்சனம் ( ரிவஞ்ச் த்ரில்லர்) அமேசான் பிரைம்


  தமிழ்  நாட்டில்  உள்ள  உதட்டழகிகள்  பட்டியலில்  முன்னணி  நடிகைகள்  பெயர்  பார்த்தால்  அதில்  சுனைனாவின்  பெயர்  டாப்  5  ல்  இருக்கும், ஆனால்  ஏதோ  ஒரு  கெட்ட  நேரம்  அவர் நயன்  தாரா , த்ரிஷா  லெவலுக்கு  வர  முடியவில்லை . டூயட்  பாடும்  சராசரி  நாயகியாய் வலம்  வந்தவருக்கு டைட்டில்  ரோலில்  கலக்க  ஒரு  வாய்ப்பு , ஆனால்  அவர்  அதை  சரியாகப்பயன்படுத்தினாரா? என்பதை பார்ப்போம்

 ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகியின்  கணவன் ஒரு  பேங்க்  ஸ்டாஃப்.  பேங்க்கில்  நடக்கும்  ஒரு  கொள்ளை  சம்பவத்தின்  போது  கொள்ளையர்கள்  அவரைத்தாக்கிக்கொலை  செய்து  விடுகிறார்கள் . இந்தக்கொலையாளிகளைக்கண்டு  பிடிக்க  போலீஸ்  ஸ்டேஷனுக்கு  நாயகி  நடையாய்  நடக்கிறார்.   சும்மா  திருட்டுக்கேசுக்கு  புகார்  கொடுக்கப்போனாலே  ஒரு  கொயர்  பேப்பர்   வாங்கிட்டு  வா, டீ  வாங்கிட்டு  வா  என  பொது  மக்களிடம்  பிச்சை  எடுக்கும்  போலீஸ்  இந்தக்கேசை  கண்டு  பிடித்துக்கொடுக்குமா?  அலைக்கழிக்கிறது 


 நாயகி   திட்டம்  போட்டுக்கொலையாளிகளைக்கண்டு  பிடித்து  வஞ்சம்  தீர்ப்பதுதான்  மீதி  திரைக்கதை .  இதில் க்ளைமாக்சில்  ஒரு  ட்விஸ்ட்டும்  இருக்கிறது 


நாயகி   ஆக சுனைனா. அறிமுகம்  ஆன  போது  மெழுகு  பொம்மை  மாதிரி  இருந்தவர்  இப்போது  ஷைனிங்க்  குறைந்த பொம்மையாக  தெரிகிறார்.  ரொமான்ஸ்  காட்சிகளில்  கெமிஸ்ட்ரி  ஒர்க் அவுட்  ஆன  அளவுக்கு  ஆக்சன்  காட்சிகளில் , ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  காட்சிகளில்  பிசிக்ஸ்  ஒர்க்  அவுட்  ஆகவில்லை 


ஒரே  ஒரு  கானாப்பாட்டுக்கு  மட்டும்  வரும்  அந்த  வில்லன்  கலக்கலான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார். கொள்ளைக்கும்பலின்  கார்  டிரைவரின்  மனைவியாக  வரும்  ரிது  மந்த்ராவுக்கு  அதிக  வாய்ப்பு . நாயகியும்  ,இவரும்  நெருங்கிப்பழகுவது  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லாதது 


சதீஷ்  நாயரின்  இசையில்  ஐந்து  பாடல்கள்  , எல்லாமே  சுமார்  ரகம்  தான் , பிஜிஎம்  இன்னும்  விறுவிறுப்பாய்  இருந்திருக்கலாம். ரவி  கே  பர்வான்  ஒளிப்பதிவில்  குறை  எதுவும்  இல்லை   நாயகி  வரும்  காட்சிகளில்  எல்லாம்  டார்க்  டோனில்  படம்  பிடித்திருக்கிறார் 


இசை  அமைப்பாளர்  சதீஷ்  நாயரின்  சொந்தப்படம்  இது ,   சொந்தப்படத்துக்கே  இந்த  அளவு  தான்  இசை  எனில்  மற்ற  படங்களுக்கு  எப்படியோ?


2  மணி  நேரம்  டைம்  டியூரேஷன்  காட்டினாலும்  மொத்தப்படம்  100  நிமிடங்கள்  தான் . டைட்டில்  போடுவதில்  முதலில்  5  நிமிடங்கள் , கடைசியில் 17  நிமிடங்கள்  போய்  விடுகிறது 


சபாஷ்  டைரக்டர் ( டொமைன் டி  செல்வா)


1   நாயகி  வரும் பெரும்பாலான  காட்சிகளில்  அவருக்கு  லோ  கட்  டிரஸ்  கொடுத்து  வர  வைத்தது 

2    நாயகிக்கும்  இன்னொரு  பெண்ணுக்கும்  லெஸ்பியன்  பார்ட்னர்ஷிப்  இருக்குமோ  என  நினைக்க  வைக்கும்  அளவு  இருவரையும்  நெருக்கமாகக்காட்டியது 

3    பேங்க்  கொள்ளையில்  க்ளைமாக்சில்  வெளிப்படும்  ட்விஸ்ட் 

4  கானா  பாட்டு  முடிஞ்சதும்  வில்லனைப்போட்டுத்த:ள்ளும்  நாயகி  அந்த  ஸ்பாட்டில்  இருந்து  தப்பிக்க  கையாளும்  உத்தி 


சாங்க்ஸ்

1  சூறாவளி  போல 

2   நாம்  உலாவும்   ஓடை மீன்களோ?

3  சீனு  கேங்கு  டா  ( கானா  பாட்டு ) 

4  கோடி  கோடிப்பகை  மோதினாலும்

5  வீழ்ந்தேன்  என  நினைத்தாயோ?



  ரசித்த  வசனங்கள் 


1  எப்பேர்ப்ட்ட  வலிமையான  சிங்கமா  இருந்தாலும், அதனோட  குகைக்கு  தீ  வெச்சா  வெளியே  வந்துதான்  ஆகனும் 


2  எந்தப்பொண்ணுமே  இன்னொரு  பெண்  கிட்டே  சொல்லாத  ஒரு  விஷயத்தை  நான்  உன்  கிட்டே  சொல்லப்போறேன் , நீ ரொம்ப  அழகா  இருக்கே


3   இந்த  உலகத்துல  பெரிய  விஷயமே  நாம  சொல்ற்தை  காது  கொடுத்துக்கேட்க  ஒரு  ஆள்  இருப்பதுதான்

4  சிங்கம் , முயல்  கதைல  எப்பவுமே  சிங்கம்  சொல்றதைத்தான்  முயல்  கேட்கும், ஆனா  இங்கே  முயல்  சொல்படி தான்  சிங்கம்   கேட்கனும், கேட்க  வைப்பேன்


5  சூழ்நிலைக்கைதியா  வேணா  சிங்கம்  இருக்கலாம், ஆனா  சிங்கம்  என்னைக்கும்  சிங்கம்தான் 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 இரண்டு  மணி  நேரம்  ஓடும்  படத்தில்  முதல் 35  நிமிடங்கள்  ரொம்ப  ஸ்லோ . நாயகி  போலீஸ்  ஸ்டேஷனுக்கு  நடையா  நடப்பதை  இன்னும்  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம்


2  முற்போக்கு  எண்ணம்  கொண்ட  பெண்கள் , மாடர்ன்  கேர்ள்ஸ்  என  காட்ட  வேண்டும்  எனில்  அவங்க  தண்ணி  அடிக்கற மாதிரி, தம்  அடிக்கற  மாதிரி  அரைகுறை  ஆடை  அணிபவராகக்காட்டினால்  போதும்னு இப்போ  எல்லா  இயக்குநர்களும்  நினைக்க  ஆரம்பித்து  விட்டது  ஏனோ?

3   ஒரு சர்ட்  கொடுங்கனு  மட்டும் தான்  நாயகன்  ஜவுளிக்கடைல  கேட்கறார், சைஸ்  சொல்லவே இல்லை , ஆனா  கரெக்ட்  சைஸ்  தந்துடறாரே?

4  வங்கிக்கொள்ளை  நடக்கும்போது  பொது மக்களுக்கோ , வங்கிப்பணியாளர்களுக்கோ  எந்த  வித  கெடுதலும்  செய்யாத  கொள்ளையர்கள்  வங்கியில்  இருக்கும்  நாயகியின்  கணவனை  மட்டும்  கொடூரமாகத்தாக்கி  கொலை  செய்ததில்  இருந்தே  இதில்  ஏதோ  பர்சனல்  வெஞ்ஜென்ஸ்  இருப்பது  தெரிந்து  விடுகிறதே?  ஓப்பனிங்  ஷாட்டில்  நமக்குத்தெரியும்  இந்த  விஷயத்தை  பின்  பாதியில்  பெரிய  ட்விஸ்ட்  ஆகக்காட்டுகிறார்கள் 


5  நாயகியைக்கொலை  செய்யும்  நோக்கில்  போலீஸ்  ஸ்டேஷன்  வரும்  ரவுடி துப்பாக்கியால்  அவள்  வயிற்றில்  அல்லது  தலையில்  கன்  பாயிண்ட்டை  எய்ம்  பண்ணாமல்  ஷோல்டரில்  சுடுவது ஏன் ? 


6  நாயகியின்  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  காட்சியில்  அவர்  முகத்தில்  போதிய  வீரம்  இல்லை . கூட  வரும்  மாரி  கேரக்டரில்  வரும்  துணை  நடிகை  அளவு  கூட  நாயகி  நடிக்கவில்லை . பாட்ஷா , விஸ்வரூபம்  மாதிரி  ட்ரான்ஸ்ஃபர்மேசனில்  கலக்கிய  படங்களில்  ஹீரோ  பர்ஃபார்மென்சை  பார்த்து  விட்டு  நடித்திருக்கலாம் 

7  நாயகி  ஹேண்ட்பேக்கில்  ரிவால்வர்  வைத்திருப்பதை  அறிந்த  வில்லன்  இது  என்னம்மா  மாடல் ?  ஜெர்மன் ? இத்தாலி ? என  நக்கலாகக்கேட்கிறார். சுட  குறி  வைக்கும்போது   சுடத்தெரியுமா? என  கிண்டலாகக்கேட்கிறார். என்னதான்  ஒரு  பெண்  முன்  வெத்து  கெத்து  காட்டினாலும்  துப்பாக்கியைப்பார்த்ததும்  உஷார்  ஆக  வேண்டாமா? இப்படியா  அசால்ட்டாக  பலி  ஆவது ? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - லிப்  லாக்  சீன்ஸ்  இருக்கு ,  கிளாமர்  காட்சிகள்  இருக்கு , பயங்கர  வன்முறைக்காட்சி  ஒன்று  இருக்கு , ஆனா  சென்சார்ல  மட்டு,ம்  யூ  சர்ட்டிஃபிகேட்  கொடுத்திருக்காங்க . எவ்ளோ  செலவு  ஆச்சோ  தெரியல 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   மேலோட்டமாகப்பார்க்கும்போது  கணவனைக்கொலை  செய்தவர்களைப்பழி  வாங்கும்  மனைவியின்  கதை  என  ஒன் லைனில்  சொன்னாலும்  ஒரு  த்ரில்லர்  மூவிக்கான  விறுவிறுப்பு  இருக்கிறது . டி வி  யில்  போட்டால்  பார்க்கலாம் . ,முதல்  25  நிமிடங்கள்  ஸ்கிப்  பண்ணிடலாம் . ரேட்டிங்  2.25 / 5 


Regina
Theatrical release poster
Directed byDomin D. Silva
Produced bySathish Nair
Starring
CinematographyPavi K. Pavan
Music bySathish Nair
Production
company
Yellow Bear Production
Release date
  • 23 June 2023
CountryIndia
LanguageTamil

Friday, August 18, 2023

GIRL'S TO BUY (2021) (போலந்து) - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்

   


2021  ஆம்  ஆண்டின்  டாப் 5  வசூல்  சாதனைப்படங்களில்  இதுவும்  ஒன்று . ஜேம்ஸ்  பாண்ட்  படமான  நோ  டைம்  டூ  டை  க்கு  நிகரான    வசூலை  இது  ஏற்படுத்தியது. இது  உண்மை  சம்பவங்களின்  அடிப்படையில்  எழுதப்பட்ட  திரைக்கதை . ஒரு  பாடகி  தான்  இதன்  தயாரிப்பாளர். ஒரு  சாதாரண  பெண்  எப்படி  அரபு  ஷேக்குகளுக்கு  லேடீஸ்  சப்ளை  செய்யும்  ஏஜெண்ட்  ஆக  மாறுகிறார்?  அந்த  பிஸ்னெசின்  கறுப்புப்பக்கங்கள்  என்ன? என்பதை  விவரிக்கும்  கதை . DZIEWEZYNY Z DUBAJU


போலந்து  மொழியில்   எழுதப்பட்ட  நாவல்  ஆன  DZIEWEZYNY Z DUBAJU  (girl's from dubai)  2018l வெளீயானது . அந்த  நாவலைத்தழுவி  திரைக்கதை  அமைக்கப்பட்டது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி   தன்  அம்மாவுடன்  வசித்து  வருபவர் , அவருக்கு  விரைவில்  செல்வச்சீமாட்டி  ஆக   வேண்டும்  என்ற  கனவு  உண்டு. அம்மாவின்  ஏகபப்ட்ட  கண்டிஷன்களுடனான   வாழ்க்கை  அவருக்கு  செட்  ஆகவில்லை . அதனால்  அம்மாவை  விட்டுப்பிரிந்து  தனியே  வாழ்கிறார்


ஒரு கப்பலில்  ஒரு  பார்ட்டி  நடக்க  இருககிறது. அதற்கு  இளம்பெண்கள்  தேவை . நாயகி  அந்த  வேலையை  செய்ய  முற்படுகிறார். இளம்பெண்களை  சப்ளை  செய்தால்  அதற்கு  தனியாகக்கமிஷன்  கிடைக்கும் 


 கப்பலில் ஒரு  ஆளுடன்  நாயகிக்குப்பழக்கம்  ஏற்படுகிறது, அவர்  கையில்  காசு  புரள்கிறது

பார்ட்டி  முடிந்தவடன்  அவரவர்  அறைக்கு  வந்து  பார்த்தால்  எல்லோர்  பணமும்  களவு  போய்  இருக்கிறது . போலீசில்  புகார்  கொடுக்க  முடியாத  சூழல் 


இந்த  அமளி துமளிகளுக்கு  இடையே  ஒரு  குடும்பப்பாங்கான  நபர்  நாயகியை  பிரப்போஸ்  செய்கிறார். நாயகி  அவருக்கு  ஓக்கே  சொல்ல  இருவருக்கும்  திருமணம்  நடக்கிறது . ஒரு  குழந்தைக்கு  தாய்  ஆகிறார். குடும்ப  வாழ்க்கை  நன்றாகப்போய்க்கொண்டிருக்கிறது 


 இப்போது  கப்பலில்  சந்தித்த  அந்த  நபர்  நாயகியைப்பார்க்க  வருகிறார். கணவனுக்கு  நாயகியின்  நடவடிக்கைகள்  பிடிக்கவில்லை . கணவன்  குழந்தையை  பள்ளியில்  இருந்து  அழைத்துக்கொண்டு  தனியே  போய்  விடுகிறார். நாயகி  போலீசில்  மாட்டிக்கொள்கிறார்


 பெண்களை  அவர்கள்  விருப்பத்துக்கு  மாறாக  பாலியல்  தொழில்  ஈடுபட  வைத்ததாக  அவர்  மேல்  குற்றச்சாட்டு. நாயகி  அந்த  கேசில்  இருந்து  தப்பித்தாரா?|  நாயகியின்  குழந்தைக்கு  உண்மையான  அப்பா  யார்?  கணவனா? கப்பலில்  சந்தித்த  காதலனா? இதற்கெல்லாம்  பின்  பாதி  திரைக்கதை  விடை  அளிக்கிறது   


நாயகி  ஆக  நடித்தவர்  கேரக்டர்  டிசைன்  அப்பாவிப்பெண்ணாகப்படைக்கபடாமல்  ஆடபரப்பிரியை  போல்  காட்டப்படுவதால்  அவர்  போலீசில்  மாட்டும்  காட்சிகளில்  நமக்கு  அவர்  மேல்  பரிதாபம்  வரவில்லை . அதே  போல  தன்  கர்ப்பத்துக்காரணம் ஒருவன், ஆனால்  இனிஷியலுக்கு  மட்டும்  இன்னொருத்தன்  என  முடிவு  எடுப்பது  அவர்  மேல்  மேலும்  வெறுப்பைத்தான்  ஆடியன்சுக்கு  வளர்க்கிறது 


கணவன்  ஆக  வருபவர்  மீது  நமக்குப்பரிதாபம்தான்  வருகிறது . இத்தனைக்கும்  நாயகி  செய்யும்  தொழில்  பற்றி  நன்கு  அறிந்தே  இருக்கிறார்


தமிழ்ப்படம்  போல  கிட்டத்தட்ட  ரெண்டே  கால்  மணி  நேரம்  படம்  ஓடுகிறது . இன்னும்  க்ரிஷ்ப்  ஆக  கட்  செய்து  இருக்கலாம் 


சபாஷ்  டைரக்டர்


1  நாயகியின்  மாமனார்  தன்  மகனிடம்  உனக்கு  அவ  கூடப்படுக்கனும்னு  ஆசை  இருந்தா  அதை  நிறைவேற்றிக்கொள், ஆனா  குடும்பப்பெண்  ஆக்க  நினைக்காதே  என  கனகச்சிதமாய்  நாயகியைக்கணித்து  மகனுக்கு  அறிவுரை  சொல்லும்  காட்சி 


2   ஜெயிலில்  இருக்கும்  நாயகியை  அவரது  அம்மா  பார்க்க  வரும் காட்சியும் , இருவருக்கு  இடையே  யான  வசனமும்


3  நாயகி  ஒரே  காலகட்டத்தில்  காதலன்  கூடவும் , கணவன்  கூடவும்  நெருக்கமாக  இருக்கும்  காட்சிகளை  வடிவமைத்த  விதம்  எடிட்டிங்   கச்சிதம்  



  ரசித்த  வசனங்கள் 


1  ஒரு  பெண்ணுக்கு  பிரச்சனைன்னா  காப்பாத்தலாம், ஆனா  பெண்ணே  பிரச்சனைன்னா?


2  நீ  நினைக்கற  உயரம்  அடையும்  வரை  நீ இயங்கிக்கொண்டே  தான்  இருக்கனும்


3 கடவுள் படைத்ததில்  அழகான  உயிரினங்கள் குதிரைகள் , பெண்கள் 

4  ரைட்டர்ஸ்  எப்பவும்  ட்ராமாட்டிக்காதான்  இருப்பாங்க 

5 எண்ணங்கள்  சிறகடித்துப்பறந்தாலும்  உன்னை  மாதிரி  ஊர்க்குருவி  பருந்தாக  முடியாது

6  கடலில் மட்டும்  எந்த  ரூல்சும்  கிடையாது , அதனால தான்  நம்  ஆழ் மன  ஆசைகளை  கடலில்  தீர்த்துக்கொள்ள  முடிகிறது 

7 நாம்  யார்? என்பது  முக்கியம் இல்லை , நாம்  எடுக்கும்  முடிவுகள்  தான்  முக்கியம் 

8  உனக்கு  இப்போ  ஒரு  கிஸ்  தரனு,ம்

பர்சனலாவா? ப்ரொஃபஷனலாவா?


9  வாழ்நாள் முழுக்க  நமக்கு  என்ன  தேவை?னு  நாம்  தேடிக்கிட்டுதான்  இருக்கோம், அதுக்காக  ஒரு  பாதையில்  போய்க்கிட்டும்  இருக்கோம் , ஆனா  அந்த  வழியை  விட்டு  நாம  தவறும்போதுதான்  பக்கத்துலயே  நிறைய  வழிகள்  இருப்பதை  உணர  முடியும் 


10 உங்களைப்பார்த்ததுல  சந்தோஷம், ஆனா  உங்களைத்திரும்பிப்பார்ப்பதில்  எனக்கு  இஷ்டம் இல்லை 


11  நம்மை  மாதிரி  பொண்ணுங்க  ரெண்டு  விஷயத்தை  இழக்க  விரும்ப  மாட்டாங்க  1  தலை  2  பணம் 


12  புரோக்கர்களை  இந்த  உலகம்  மன்னிக்காது  என்பதை  மறக்காதே!


13    என் வாழ்க்கைல  நான்  எதுக்குமே  வருத்தப்படக்கூடாதுனு  சொல்லிட்டு  இருந்தேன், ஆனா இப்போ எல்லாத்துக்கும் வருத்தப்பட்டுட்டு  இருக்கேன் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  பணத்துக்காக  எதற்கும்  தயாராக  இருக்கும்  பெண்கள்  சொல்லி  வைத்தது  போல்  எல்லோரும் ஒரே  சமயத்தில்  பணத்தை  ஹோட்டல்  ரூமில்  தொலைப்பது  எப்படி ? அசால்ட்டாக  அத்தனை  பேருமா  இருப்பார்கள் ? 


2  இந்தத்தொழில்  பிடிக்காமல்  ஒரு  பெண்  தற்கொலை  செய்து  கொள்வது  மெயின்  திரைக்கதையில்  பெரிய  பாதிப்பை  ஏற்படுத்தவில்லை ,. அது பற்றிய  குற்ற    உணர்வும்  நாயகிக்கு  வரவில்லை 


3  ஃநாயகியின்  அம்மா  என்  மனம்  மாறினார்  என்பதற்குத்தெளிவான  விளக்கங்கள்  இல்லை 



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18 +    காட்சிகள்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஒரு  ராயல்  லேடி  புரோக்கர்  அல்லது  பிம்ப்  -ன் பயோகிராஃபிக்கல்  மூவி  மாதிரி  இருக்கும்  இக்கதை  எல்லோருக்கும்  பிடிக்காது . குறிப்பிட்ட  சில  ஆண்களுக்கு  மட்டுமே  பிடிக்கும் , பெண்களுக்குப்பிடிக்க  வாய்ப்பே  இல்ல ரேட்டிங்  2.25 / 5 


Girls to Buy
PolishDziewczyny z Dubaju
Directed byMaria Sadowska
Written byMitja Okorn, Dimitrij Potochnik, Lucas Coleman
Produced byDorota Rabczewska
StarringKatarzyna FiguraJan Englert
CinematographyArtur Reinhart
Edited byDoda, Emil Stępień
Music byLanberry, Patryk Kumór, Dominic Buczkowski and Doda
Distributed byPhoenix Productions
Release date
  • November 26, 2021
Running time
146 minutes
CountryPoland
LanguagePolish

Thursday, August 17, 2023

பாயும் ஒளி நீ எனக்கு ( 2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரிவஞ்ச் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்

 


 வானம்  கொட்டட்டும்  2020 ஆம் ஆண்டு  வெளியானபோது  விக்ரம் பிரபு  ஒப்பந்தம்  ஆன  படம்  இது . புதுமுக  இயக்குநர் கார்த்திக்  அத்வைத்  திரைக்கதை  , இயக்கத்தில்   உருவாகி  அவரே  தயாரித்த  படம்  இது 


  ஸ்பாய்லர்  அலெர்ட்


அமைதிப்படை  அமாவாசை  மாதிரி  வில்லன்  ஒரு  அரசியல்வாதியிடம் அசிஸ்டெண்ட் ஆக  இருக்கிறான். அந்த  அரசியல்வாதி  நல்லவர். மாவட்டச்செயலாளர்  ஆக  இருந்து  எம் எல் ஏ  ,எம்  பி  என  பதவிகளை  அடைகிறார், மக்கள் செல்வாக்கும்  இருக்கிறது. இது  வில்லனுக்குப்பிடிக்கவில்லை , அவர்  இடத்தை  தான்  அடையனும்  என  நினைக்கிறான். எனவே  கூடவே  இருந்து  குழி  பறிக்கும்  வேலையை  செய்கிறான். அந்த  அரசியல்வாதிக்கு  ஸ்லோ  பாய்சன்  கொடுத்து கொலை  செய்கிறான். அந்த  விஷயம்  ஒரு  டாக்டருக்கு  தெரிந்து  விடுகிறது. அவர்  விஷயத்தை  வெளியே  சொல்லி விடக்கூடாது  என  அவரைப்போட்டுத்தள்ளி  விடுகிறான். இந்தக்கொலையை  நாயகனின்  சித்தப்பா  பார்த்து  விடுகிறார். அவரையும்  வில்லன்  முடித்து  விடுகிறான்


நாயகனுக்கு  இந்த  விஷயங்கள்  எதுவும்  தெரியாது, எதிரிகளே  இல்லாத  அவரை  யார்  எதற்காக  கொலை  செய்தார்கள்  என  குழம்புகிறான். அவன்  எப்படி  வில்லைனை  அடையாளம்  கண்டான்? எப்படி  ப்ழி  தீர்த்தான்  என்பதே  மீதி  திரைக்கதை

நாயகன்  ஆக  விக்ரம்  பிரபு . தாடியுடன்  இருப்பதால்  ஒரு  முரட்டுக்களை  வந்து  விடுகிறது . இவருக்கு  இரவு  நேரத்தில்  அல்லது  வெளிச்சம்  குறைவாக  இருக்கும்  இடத்தில்  பார்வை  தெரியாது  என்ற  விஷயத்தை  படம்  ஆரம்பித்து  40 நிமிடங்கள்  கழித்துத்தான்  ஓப்பன்  செய்கிறார்கள் .


நாயகி  ஆக  வாணி  போஜன். சரியாக  பல  நாட்கள்  போஜனமே  இல்லாதது  போல  வாடிய  தோற்றம் . நாயகன் உடனான  கெமிஸ்ட்ரி  ஒர்க்  அவுட்  ஆகவில்லை . இருவருக்கும்  காதல்  மலர்வது  செயற்கையாக  இருக்கிறது 


 சித்தப்பாவாக  திருடா  திருடா  ஆனந்த். நல்ல  அரசியல்வாதியாக  வேல  ராம  மூர்த்தி . வில்லன்  அக  தனஞ்செயா  மூவரும்  கச்சிதமாக  ந்டித்திருக்கிறார்கள் . நாயகனின்  நண்பனாக  விவேக்  பிரசன்னா  மிதமான  இயல்பான  நடிப்பு 

 ஸ்ரீதர்  ஒளிப்பதிவில்  ஒரு  புதுமை  செய்திருக்கிறார். நாயகனுக்கு  மங்கலாகத்தெரியும்  சூழலை  டல்  ஃபோட்டோகிராஃபி  பயன்படுத்தி  இருக்கிறார். இசை மகதி  ஸ்வசாகர் . . இவர்  இசை  அமைப்பாளர்  மணிசர்மாவின்  மகன் . 3  பாடல்கள்  தேறுகிறது . பின்னணி  இசை  நல்ல  விறுவிறுப்பு , பிரேம்  குமாரின்  எடிட்டிங்கில்  2  மணி  நேரம்  படம்  ஓடுகிறது 



சபாஷ்  டைரக்டர் (கார்த்திக்  அத்வைத்)

1  தமிழ்  சினிமா  செண்ட்டிமெண்ட்  படி  நாயகன்  விழி  ஒளி  இழந்தவராக  நடித்த  படங்கள்  எல்லாமே  அட்டர்  ஃபிளாப் . உதா  கமலின்  ராஜ  பார்வை , முரளியின்  இரவு  சூரியன் , விக்ரமின்  தாண்டவம்   என  சொல்லிக்கொண்டே  போகலாம். இது  தெரிந்தும்  துணிச்சலாக  களம்  இறங்கியது 


2  இந்தப்ப்டம்  ஒரு  பெரிய  டர்னிங்  பாயிண்ட்  ஆக  இருக்கும்  என  நாயகனை  நம்ப  வைத்து  கால்ஷீட்  வாங்கியது 

செம  ஹிட்  சாங்க்ஸ்

1  ஹே  பாப்பா , ரூட்டு  போட்டா 

2  அனிச்சம்பூவே  நீ  அழாதே! வெளிச்சம்  நானே  வீழாதே


  ரசித்த  வசனங்கள் ( தில்சுயன்)

1  நீங்க  சொல்ற  மாதிரி இதுவரை  எங்க  சிஸ்டத்துல  அப்படி  பிராப்ளம்  எதுவும்  வந்ததில்லையே?

  சாரி  சார் , இது வரை  நீங்க  சாகலை , அதுக்காக  நீங்க  எப்பவும்  சாகவே  மாட்டீங்கனு  சொல்ல  முடியுமா? 


2  பிறக்கும்போதே  யாரும்  ஜீனியசாகப்பிறப்பதில்லை 


3  ஆசை , எதிரி , துரொகி  எதிலும்  மிச்சம்  வைக்கக்கூடாது 


4  நல்லவன்னு  ஒருத்தன்  இருந்தா  அவனுக்கு  கெடுதல்  பண்ண  ஒரு  கெட்டவனும்  இருப்பான் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகனின்  வீட்டுக்கு  விருந்தினராக  வந்த  நாயகி  நாயகனின்  வீட்டு  பெட்ரூமுக்குள் டெக்ரேசன்  சம்பந்தமாக  பார்க்க  வரும்போது  செருப்பில்லாமல்  வருகிறார், ஆனால்  நாயகன்  மட்டும்  செருப்புடன்  இருக்கிறார். நாயகனின்  தங்கையும்  காலில்  செருப்பில்லாமல்  தான்  வருகிறார் 

2  கார்  டிரைவரின்  மண்டையில்  நான்கு முறை  இரும்புக்கம்பியால்  மடார்  மடார்  என  தாக்கி  அவரது  உடலை  இழுத்துச்செல்கிறார் அடியாள் . ஆனால்  ஒரு  சொட்டு  ரத்தம்  கூட  அங்கே  இல்லை 

3  ஃபைட்டால்  கழுத்தில்  கத்திக்கீறல் பட்ட  நாயகன்  ஹாஸ்பிடலில்  ட்ரீட்,மெண்ட்  எடுத்துட்டு  வீட்டுக்கு  வர்றார். அப்போ  அவர்  கழுத்தில்  பேண்டேஜ்  காணோம், 

4  ஃபாரீன்  படங்களில்  தான்  சின்னப்பையனா  இருந்தாலும்  தனி  ரூமில்  படுத்துத்தூங்குவது  போல்  காட்டுவார்கள் , இரவில்  கண்  தெரியாத  சிறுவனை  அவன்  அப்பா  ஏன்  தனி  பெட்ரூமில்  படுக்க  வைக்கிறார்?


5  வில்லன்க்ளால்  துரத்தப்படும்  ஆனந்த்  மகனுக்கு  ஃபோன்  பண்ணி என்னைக்கொலை  பண்ண  ஆட்கள்  துரத்தறாங்க  என்க  நாயகன்  லைவ்  லொக்கேஷன்  ஷேர்  பண்ணுங்க  என்கிறான், அவரும்  ஷேர்  பண்ண  அதற்குப்பின்  10  நிமிடங்கள்  காரில்  சேசிங்  நடக்கிறது. 10 கிமீ  தாண்டி  இருப்பார் . அப்போ  எப்படி  கரெக்டாக  நாயகனால்  அங்கே  ஸ்பாட்டுக்கு  வர  முடிந்தது ? 

6 ஒரு  முறை  நாயகி  பார்ட்டியில்  லேட்  ஆக  இனி  எப்படிப்போவது? என  நாயகனிடம்  கேட்க  நான்  டிராப்  பண்றேன்னு  நாயகன்  சொல்றார். அவருக்குதான்  இரவில்  கண்  தெரியாதே? எப்படி  டிராப்  செய்தார்? 

7  இன்ஸ்பெக்டரைக்கொலை  செய்ய  அவர்  வீட்டுக்கு  வரும்  ஆள்  கொலை  செய்து  விட்டு  ஆதாரங்கள் அடங்கிய  பேப்பர்சை  எரிக்கிறான். இத்தனை  வேலைகளையும்  வீட்டுக்கதவை  உள்  தாழ்ப்பாள்  போடாமல்  செய்கிறான். ஏன்? நாயகன்  உள்ளே  ஈசியாக  வரட்டும்  என்றா? 


8  காலை  9. 30 க்கு  நாயகன்  இன்ஸ்பெக்டர்  வீட்டுக்குப்போவதாக  காட்சி . அந்த  டைம்  இன்ஸ்பெக்டர்  போலீஸ்  ஸ்டேஷனில் தானே  இருக்கனும் ? 

9  தன்  அடியாளின்  சாவுக்கு  வீட்டுக்கு  வரும் வில்லன்  அங்கே  நாயகனைப்பார்த்ததும்  போடுங்கடா  அவனை  என  கத்தறார். உடனே  டெட்  பாடிக்கு கீழே இருந்து  ஏகப்பட்ட  ஆயுதங்களை  அடியாட்கள்  எடுக்கின்றனர் , சாவு  வீட்டில்  எதுக்கு  ஆயுதங்களை  அங்கே  வைத்திருக்கிறார்கள் ? 

10  ஆனைமலை அய்யா  ஃபிளாஸ்பேக் சீன்ல  அவரு  ஒரு  ஆளை  கத்தியால  2  தடவை  குத்தி  கத்தியை  வீசறார். ரத்தக்கறையே  இல்லை .,தண்ணில  கழுவி  வீசிட்டாரா? 


11  நாயகன்  க்ளைமாக்சில்  வில்லனுக்கு  சவால்  விட்டு  குறிப்பிட்ட  இடத்துக்கு  வரச்சொல்வாராம், அந்த  இடத்தில்  முன்  கூட்டியே  திட்டமிட்டு  விலங்குகளைப்பிடிக்க  பொறி  வைப்பது போல  செய்வாராம் , மாங்கா  மடையன்  வில்லன்  அதே  போல்  அங்கே  அடியாட்களுடன்  வந்து  மாட்டிக்கொள்வானாம்

12  ஏதோ  தப்பு  நடக்குது , தன்  அடியாட்கள்  எல்லாம்  வரிசையா  சாகறாங்க , ,முதல்ல  இந்த  இடத்தைக்காலி  செய்வோம்  என  நினைக்காமல்  வில்லன்  பேக்கு  மாதிரி  அங்கேயே  நிற்கிறான்

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  வன்முறை  காட்சிகள்  மட்டும்  உள்ளது 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  டி வி  ல  போட்டாக்கூட  முழுசா  பார்க்க  முடியாது  என்ற  அளவில்  தான்  இருக்கிறது , டப்பா  படம்  ரேட்டிங் 1.5 / 5 

Wednesday, August 16, 2023

CHAKRAVYUHAM - THE TRAP (2023) தெலுங்கு - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்


   2023  ஜூன்  2  அன்று  திரை  அரங்குகளில்  வெளியான  இப்படம்  கலவையான  விமர்சனங்களைப்பெற்றது. ஆனால்  கமர்ஷியல்  சக்சஸ். இப்போது  ஜூலை 5  2023  முதல் அமேசான்  பிரைம்  ஓடிடி  தளத்தில்  காணக்கிடைக்கிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் சஞ்சய் தன்  தோழ்னும் , பிஸ்னெஸ்  பார்ட்னரும்  ஆன  ஷரத் உடைய  அறிமுகத்தால்  ஸ்ரீ  என்ற  பெண்ணை  சந்திக்கிறான். நாயகனை  ஸ்ரீக்குப்பிடித்துப்போகிறது . இருவ்ரும்  காதலித்து  திருமணம் செய்து  கொள்கின்றனர் ‘. இவர்களுக்கு  குழந்தை  இல்லை 


ஒரு  நாள்  திடீர்  என  நாயகி ஆன  ஸ்ரீ  கொலை  செய்யப்பட்டு  வீட்டில்  இருக்கிறாள் . பார்ட்டிக்குப்போய் விட்டு  வீட்டுக்குட்திரும்பிய  நாயகன்  கொலை ஆன  தன்  மனைவியின்  உடலைக்கண்டு  அதிர்ச்சி  அடைந்து  போலீஸுக்கு  ஃபோன்  பண்ணுகிறான் 


 போலீஸ்  வந்து  விசாரிக்கிறது கொலையோடு  வீட்டில்  பணம், நகை  கொள்ளை  போய்  இருக்கிறது . போஸ்ட்  மார்ட்டம்  ரிப்போர்ட்டில் கொலையாளி  மிகப்பெரும்  வன்மத்துடன் ஆயுதத்தால்  தாக்கி  இருக்கிறான்  என  சொல்கிறார்கள் 

இப்போது  போலீஸ்  ஆஃபீசரின்  சந்தேக  வளையத்தில்


1  நாயகன்  தான்  தன்  மனைவியைக்கொன்று   விட்டு  நாடகம்  ஆடுகிறான். ஏன்  எனில்  கடைசி  30  நாட்களில் நாயகனின்  நண்பனுக்கு  பல  முறை  கால்  செய்து  நாயகனின்  ,மனைவி  பேசி  இருக்கிறாள் . இதனால் நாயகி, நாயகனின்  நண்பன்  இருவருக்கும்  கள்ளக்காதல்  இருந்து  அது  தெரிந்து  நாயகன்  கொலை  செய்திருக்கலாம்


2  நாயகன்  வீட்டு  வேலைக்காரி   பணம், நகைக்கு  ஆசைப்பட்டு  தன்  கணவன்  உதவியுடன்  கொலை  செய்திருக்கலாம் 


3  நாயகன்  ஃபேக்டரி  மேனேஜர்   நாயகனை  சிக்க  வைக்க  இக்கொலையை  செய்திருக்கலாம்


4  நாயகனின்  நண்பனும், பிஸ்னெஸ்  பார்டனரும் ஆன சரத் இக்கொலை  யை  செய்திருக்கலாம்


 என  சந்தேக  வட்டத்துக்குள்  நான்கு  பேரைக்கொண்டு  வந்து  விசாரிக்கிறது . இறுதியில்  மர்ம  முடிச்சுகள்  எப்படி  அவிழ்ந்தது  என்பதே  மீதி  திரைக்கதை 


கேசை  துப்பறியும்  சர்க்கிள்  இன்ஸ்பெக்டர்  ஆக  அஜய்  கம்பீரமான  உயரத்தில்  வருகிறார். அவரது  அதட்டல் உருட்டல்  எல்லாம்  அமர்க்களம் . அவருக்கு  உதவியாக  வரும் சப் இன்ஸ்பெக்டர்  ஆக  ஞானேஸ்வரி  லிப்ஸ்  டிக்  போட்ட  போலீஸ்  ஆக  வருகிறார்


நாயகன்  சஞ்சய்  ஆக விவேக்  த்ரிவேதி  கச்சிதமாக  நடித்திருக்கிறார். நாயகி  ஸ்ரீ  ஆக  ஊர்வசி  பரதேசி  நடித்துள்ளார். இவருக்கு  அதிக  வாய்ப்பில்லை , வந்த  வரை  ஓக்கே ‘


பரத்  மஞ்சிராசுவின்  இசையில்  இன்னும்  விறுவிறுப்பு  கூட்டி  இருக்கலாம் .சி வி  அஜய் குமாரின்  ஒளிப்பதிவில் காட்சிகள்  குளிர்ச்சியாக  கண்  முன்  விரிகின்றன ஜேஸ்வின்  பிரபுவின்  எடிட்டிங்கில்110  நிமிடங்களில்  ட்ரிம்  செய்யப்பட்டிருக்கிறது . 


சபாஷ்  டைரக்டர் ( சேத்குரி  மதுசூதன் ) 


1 ஒவ்வொருவர்  மேலும்  இன்ஸ்பெக்டர்  சந்தேகப்படும்போது  அவர்  பார்வையில்  என்ன  நடந்திருக்கும்  என  காட்சிகளாக  காட்டுவது  நல்ல  முயற்சி 

2  இது  ஒரு கள்ளக்காதல்  கொலையாகத்தான்  இருக்கும்  என  ச்ந்தேகத்தை  ஊர்ஜிதப்படுத்தும்  காட்சி  அமைப்புகளும்  அதைத்தொடர்ந்து  வரும்  அதிரடித்திருப்பங்களும்

3  சந்தேக  லிஸ்ட்டில்  முக்கியமானவராக  இருக்கும்  நாயகனின்  ந்ண்பரும், பிஸ்னெஸ்  பார்ட்னரும்  கொலை  செய்யப்படும்போது  விறுவிறுப்பு  கூடுகிறது 

  ரசித்த  வசனங்கள் 

1  ஐம்பது  லட்சம்  ரூபா  லிக்விட்   கேஷ்  வீட்ல  வெச்சிருக்கறவங்க  ஐயாயிரம் ரூபா  செலவு  பண்ணி  சிசிடிவி  வைக்க மாட்டாங்களா?


2  நம்ம  ரெண்டு  பேரையும்  இந்தப்பணம்  பிரிச்சிடும்னு  நினைக்கிறேன்

 பணம்  நம்மைப்பிரிக்காது , பணத்தோட  வேல்யூ  தெரியாதவங்க தான் பிரிவாங்க 


3  அடிக்சன்  ல  இருக்கற  எல்லாரும்  அதுல  இருந்து  வெளில  வ்ரத்தான்  விரும்புவாஙக ,ஆனா  அவங்களால  அது முடியாது 

4 கோபத்துல  நாம்  எடுக்கும்  முடிவுகளால்  சில  இழப்புகளை  சந்திக்க  நேரும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  கொலைக்கேசை  விசாரிக்கும்  போலீஸ்  கான்ஸ்டபிள்  ஃபங்க்  ஹேர்  ஸ்டைல்  அடர்  தாடி  கெட்டப்ல  இருக்காரே?


2  நாயகனை  போலீஸ்   ஜீப்பில்  அரெஸ்ட்  பண்ணி  கூட்டிப்போகும்போது  ஏன்  ஜீப்  ஸ்லோ  ஆகிறது ? அவன்  தப்பட்டும்  என்றா?


3  ஒருவனை  அடைய  திட்டம்  போடும்  ஒரு  பெண் முதலில்  அவனை  மயக்க  என்ன  வழி ? என  பார்ப்பாளா? முதல்  கட்டமா  அவனோட  மனைவியைகொலை  பண்ண  திட்டம்  போடுவாளா?


4 வாடகைக்கொலையாளியை  ஃபிக்ஸ்  செய்யும்  இருவர்  இருவருமே  தங்கள்  முகத்தை  அவனிடம்   காட்ட  வேண்டிய  அவசியம்  என்ன?

5   பெண்ணைக்கொலை  செய்ய  வரும்  வாடகைக்கொலையாளி  இளைஞனாக  இருந்த  போதும் பெண்ணை  ரேப்  செய்ய  முயலவே  இல்லை

6  வாடகைக்கொலையாளியை  ஃபிக்ஸ்  செய்பவர்  கொலை  முடிந்தபின்  அவனை  அடிக்கடி  செல் ஃபோனில்  ஏன்  தொடர்பு  கொள்கிறான்? போலீஸ் ட்ராக்  பண்ணும்  என  தெரியாதா?

7  ஒரு  கொலைக்கேஸ்  நடந்து  கொண்டிருக்கும்போதே  கொலை  ஆன  நபரின்  இன்சூரன்ஸ்  தொகை  க்ளியர்  ஆகி  கைக்கு  கிடைப்பது  எப்படி ? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சில  லாஜிக்  மிஸ்டேக்ஸ்  இருந்தாலும்  ரசிக்க  வேண்டிய  ஒரு  க்ரைம்  த்ரில்லர்  தான்  இது . இன்னும்  மெனக்கெட்டு  உழைத்திருந்தால்  நல்ல  க்ரைம்  த்ரில்லர்  கிடைத்திருக்கும் . ரேட்டிங்  2.5 / 5 


Chakravyuham: The Trap
Directed byChetkuri Madhusudhan
Written byChetkuri Madhusudhan
Produced byChetkuri Savithri
Starring
  • Ajay
  • Gnaneswari Kandregula
  • Vivek Trivedi
  • Urvashi pardeshi
  • Pragya Nayan
CinematographyG V Ajay kumar
Edited byJesvin Prabu
Music byBharath Manchiraju
Distributed byMythri movie distributer's LLP
Release date
  • 2 June 2023
Running time
111.24 Minutes
CountryIndia
Budget2 Cr
Box office2.5 Cr

Tuesday, August 15, 2023

யுத்த சத்தம் (2022)- தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்)@ அமேசான் பிரைம் -ராஜேஷ் குமார் நாவல்

 


 1999ல்  துள்ளாத  மனமும்  துள்ளும்  என  ஒரு  மெகா  ஹிட்  படத்தை விஜய்க்கு தந்த  எஸ்  எழில் 2000ம்  ஆண்டு  பிரபுதேவா வை  வைத்து  பெண்ணின்  மனதை  தொட்டு  என்ற  அட்டர்ஃபிளாப்  தந்தார். 2001 ல்  பூவெல்லாம்  உன்  வாசம்  ஹிட்டு , 2016ல்  வேலைன்னு  வந்துட்டா  வெள்ளைக்காரன்  ஹிட்  ஆன  காமெடி  மூவி. இப்போது  ராஜேஷ்  குமார்  நாவலைத்தழுவி  நாவலின்  டைட்டிலையே  படத்துக்கும்  வைத்து   ஒரு  க்ரைம்  த்ரில்லர்  கதையைப்படமாக  எடுத்திருக்கிறார்



 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  போலீஸ்  ஸ்டேஷனில்  ஒரு  புகார்  கொடுக்க  வருகிறார். ஸ்டேஷனில்  இன்ஸ்பெக்டர்  இல்லாததால்  வாசலில்  காத்திருக்கிறார். ரவுண்ட்ஸ்  முடிந்து  இன்ஸ்பெக்டர்   வருவதற்குள்  நாயகி  போலீஸ்  ஸ்டேஷன்  வாசலிலேயே  மர்ம  நபர்களால்  கொடூரமாக  கொலை  செய்யப்படுகிறார். அவரை  ஏற்றி  வந்த  ஆட்டோ  டிரைவர்  திடீர்  என  சயனைடு  சாப்பிட்டு  இறக்கிறார்


இறந்து  போன  நாயகிக்கு  ஒரு  காதலன்  உண்டு . அவன்  மீது  முதலில்  போலீஸ்  சந்தேகிக்கிறது , ஆனால்  அவன்  என்  காதலியைக்கொலை  செய்தவனைப்பழி  வாங்காமல்  விட  மாட்டேன்  என  தனி  ரூட்டில்  கொலையாளியைத்தேடிச்செல்கிறான். இறுதியில்  கொலையாளி  யார்  என்பதை  யார்  எப்படிக்கண்டு  பிடித்தார்கள்  என்பதே  மீதி  திரைக்கதை 


நாயகன்  போலீஸ்  இன்ஸ்பெக்டர்  ஆக  ஆர்    பார்த்திபன். சீரியசான  ரோலில்  காமெடி  மொக்கைக்காமெடி  நடிப்பில்  தருவது  ஏனோ?  சிரிப்பு  வரவில்லை  , எரிச்சல்  தான்  வருகிறது 


   காமெடி  கவுண்ட்டர்  செய்கிறேன்  பேர்வழி  என  ரோபோ  சங்கர்  களத்தில்  குதிக்க  சீரியஸ்  ஆன  கொலைக்கதை  ”சிரி”யஸ்  ஆன  காமெடிக்கதை  ஆகிறது 


நாயகி  ஆக  சாய்  ப்ரியா  தேவா  அழகாக  வந்து  போகிறார். இவரது  காதலன்  ஆக  கவுதம்  கார்த்திக் அதிக  வாய்ப்பில்லை 


டி  இமானின்  இசையில்  மூன்று  பாடல்கள் . அதில்  ஒன்று  சூப்பர்  ஹிட் . தைலாங்குயில் செம  ஹிட்  மெலோடி , தீம்  மியூசிக்கை  நாயகன்  ஜீப்பில்  வரும்போதெல்லாம்  போட்டுத்தெறிக்க்  விடுகிறார்


ராஜேஷ்  குமாரின்  நாவலை  எஸ்  எழில்   திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார். 125  நிமிடங்கள்  படம்  ஓடுகிறது 

சபாஷ்  டைரக்டர்  ( எஸ்  எழில்) 

1  24   வருட  சினிமா  அனுபவத்தில்  முதல்  முறையாக  ரைட்டர்  ராஜேஷ்  குமார்  நாவலை  படமாக்க  முன்  வந்தது 


2 போலீசுக்கான  எந்த  அறிகுறியும்  தெரியா  வண்ணம்  நாயகனுக்கு டி ஆர்  தாடி , யோகி  பாபு  ஹிப்பி  தலை  ஹேர்  ஸ்டைல்  என  கொடுத்து  புதுமை  புகுத்தியது 


3  போதை  தரும்  இசை  என்னும்  புது  கான்செப்டில்  க்ரைம்  நடப்பதாக  காட்டியது 


  ரசித்த  வசனங்கள் 

1  என்னப்பா  அசை  போட்டுட்டு  இருக்கே?


 இந்த  கேசை எப்படி  டீல்  பண்ணலாம்னு அசை  போட்டுட்டு  இருக்கேன் சார்


 அப்போ  ஃபிரிட்ஜ்ல  எடுத்த  கேரட்?


 நீங்க  அறிவுல  24   கேரட்  சார் 


2  இவளை  ஜாக்கிரதையா  ஸ்டேஷன்  கொண்டுபோங்க , ஓடிடுவா, மிஸ்  ஓடுகாலி

3  ஹலோ . எங்கே  போறீங்க ?


 உள்ளே  போறோம்

 உள்ளே  யாரைப்ப்பார்க்கனும் ?


 பார்க்கற  மாதிரி  யாரு   இருக்காங்க ? வினாயக் மூர்த்தியைப்பார்க்கனும்

 கொஞ்சம்  மரியாதையாப்பேசுங்க

 சரி  , அக்யூஸ்ட் வினாயக் மூர்த்தியைப்பார்க்கனும்


4  போலீஸ்  செலக்சனுக்கும்  நீட் இருந்தா  எப்படி  இருக்கும்?


5  வண்டியை  எடுத்துட்டு  வரவா  சார்?


 பின்னே ? தூக்கிட்டா  வருவே? 

6  இவன்  டிடெக்ட்டிவா? டிஃபக்ட்டிவா?னு  கண்டுபிடிக்கனும்


7  என்ன்ய்யா  அவளை  தடவிட்டு  இருக்கே? நீ  தடயவியல்  நிபுணரா?


8  ஆன்  ட்யூட்டில  இருக்கற  போலீஸ் காரன்  பெண்  ட்யூட்டிலயே  செத்துடுவான்  போல 

9 டிஜிட்டல்  இந்தியா  கேள்விப்பட்டிருக்கோம், அதென்ன  டிஜிட்டல்  டிரக்?


 இசை  தான். இசை  மூலமா  போதையை  ஏற்படுத்துவது


10  மிக்ஸ்டு  ஜூஸ்னு  சொல்லிக்கொடுத்தான், எதை  மிக்ஸ்  பண்ணிக்கொடுத்தானோ?


11  இதுக்கும்மேல  என்ன  வேணா  பண்ணிக்குங்க 

 சார், அந்தப்பொண்ணே  சொல்லிடுச்சு.. என்ன  வேணா  பண்ணிக்கலமாம்


12  என்கவுண்ட்டர்ல  அவனைப்போடனும், போட்டுடுவீங்களா?


 டீ  போட்டாலே  ஸ்ட்ராங்கா  போடுவேன்  சார்


13  சாரி  சார் 


 சாரி  போட்டா  வண்டி  கிளம்பிடுமா?

 சாவி  போட்டாதான்  கிளம்பும்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   இன்ஸ்பெக்டர்  ரவுண்ட்ஸ்  போகும்போது  கூட  ஒரே  ஒரு  டிரைவரை  மட்டும்  தான்  கூட்டிச்செல்வாரா? ஸ்டேஷனில் எஸ்  ஐ , ஏட்டு , பி சி  என  அத்தனை  பேரும்  ரெஸ்ட்  எடுத்துட்டு  இருப்பாங்களா? 


2  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லாமல்  நாயகி  அவர்  தோழி  ஃபிளாஸ்பேக்  காட்சிகள் 

3  கதையின்  சீரியஸ்னெசை  கெடுக்கும்  வகையில்  நாயகன் - காமெடியன்  இருவரும்  மொக்கை  கவுண்ட்டர்ஸ்  கொடுப்பது  கடுப்பு 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+  காட்சிகள்  இல்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  முதல்  பாதி  விறுவிறுப்பாகவும்  பின்  பாதி  இழுவையாகவும்  போகிறது . டி வியில்  போட்டால்  பார்க்கலாம், ராஜெஷ் குமார்  ரெகுலர்  ரீடர்ஸ் பார்க்கலாம்., ரேட்டிங்  1.75 / 5 


Yutha Satham
Theatrical release poster
Directed byEzhil
Screenplay byEzhil
Based onYutha Satham
by Rajesh Kumar
Produced byD. Vijaykumaran
StarringGautham Karthik
R. Parthiban
Saipriya Deva
CinematographyR. B. Gurudev
Edited byGopi Krishna
Music byD. Imman
Production
company
Kallal Global Entertainment
Release date
  • 18 March 2022
Running time
125 minutes
CountryIndia
LanguageTamil

Monday, August 14, 2023

ORGANIC MAMA HYBRID ALLUDU (2023) - தெலுங்கு - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி ) @ அமேசான் பிரைம்


ஆர்கானிக்  மாமா,  ஹைப்ரிட்  அல்லுடு  என்ற  டைட்டிலுக்கு இயற்கை மாமா, செயற்கை  மருமகன்  என்று  அர்த்தம். இயற்கை  விவசாயி  ஆக  இருக்கும்  மாமனார்க்கு  சினி  ஃபீல்டைச்சேர்ந்த  செயற்கையான  மாப்பிள்ளை  எப்படி  அமைகிறான்  என்பதுதான்  படத்தின்  ஒன் லைன். பெற்றோரின்  சம்மதத்துடன் தான்  காதல்  திருமணங்கள்  நடை  பெற  வேண்டும், ஒருவனுக்கு  தோல்வி  என்பது  நிர்ந்தரம்  அல்ல, தொடர்ந்து  முயற்சித்தால்  அவன்  வெற்றி  பெறுவான்  என்னும்  கருத்துக்களைச்சொல்லும்  படம் .


  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின்  அம்மா, அப்பா  இருவரும்  மிடில்  கிளாஸ் . கை வினைப்பொருட்கள்  செய்து  விற்பதுதான்  அவர்கள்  தொழில். நாயகன்  ஒரு  சினிமா  டைரக்டர் . ஆல்ரெடி  இரண்டு  அட்டர்  ஃபிளாப்  கொடுத்தவர். மூன்றாவதாக  ஒரு  படம்  புக்  ஆகி  இருக்கிறது 


 நாயகி  பெரிய  கோடீஸ்வரரின்  மகள் . அப்பா  100 ஏக்கர்  நிலம்  கொண்ட  இயற்கை  விவசாயி ,மகள்  மேல்  அளவு  க்டந்த  பாசம்  வைத்திருப்பவர்


நாயகன் , நாயகி  இருவரும்  காதலிக்கிறார்கள் . ஒன்றுமே  இல்லாத  பொருட்களை   எல்லாம்  தன்  மார்க்கெட்டிங்க்  டெக்னிக்கால  விற்கும்  நாயகனின்  திறமையைப்பார்த்து  நாயகி  வியக்கிறாள் . இப்போதே  இப்படி  வாயால்  வடை  சுடுகிறானே? இவனைக்கட்டிக்கொண்டால்  சமையலில்  நமக்கு  மிக  உதவியாக  இருப்பான்  என  நாயகி  நினைக்கிறார்


 ஆனால்  நாயகியின்  அப்பா  திருமணத்துக்கு  சம்மதிக்கவில்லை . நாயகனும்  ஓடிப்போய்  கல்யாணம்  செய்ய  விரும்பவில்லை. இதற்குப்பின்  நாயகன், நாயகி  திருமணம்  எப்படி  நடந்தது, மூன்றாவது  படத்தை  நாயகன்  ஹிட்  ஆக்கினாரா? என்பது  பின்  பாதி  திரைக்கதை 


நாயகன்  ஆக ஷையத்  சோஹல்  சாதாரண  தோற்றத்துடன்  அடக்கி  வாசித்து  இருக்கும்  நடிப்பு. ஆரம்பக்கட்டக்காட்சிகளில்  தன்  வாய்  சாமார்த்தியத்தால்  எல்லாப்பொருட்களையும்  விற்கும்  காட்சியிலும்

 சரி , கதையே  க்டைசி  வரை  சொல்லாமல்  தயாரிப்பாளரை டபாய்ப்பதும்  சரி , லேண்ட்  புரோக்கராக  அந்த  மொட்டைத்தலையனை  ஏமாற்றும்போதும்  சரி  கலகலப்பான  நடிப்பு


நாயகி ஆக மிருணாளினி  ரவி. பிரமாதமான  அழகு  என்  சொல்ல  முடியாவிட்டாலும்  சராசரிக்கும்  கூடுதல் அ ழகு  என  சொல்லலாம்., ஸ்லிம்  பியூட்டி  என  பேர்  எடுக்கலாம் 


நாயகியின்  அம்மா, அப்பா  ஆக  நடிகை  மீனா , வெங்கட்  பிரசாத்  நடித்திருக்கின்றனர் . இருவரது  கெமிஸ்ட்ரியும்  ஜோடிப்பொருத்தமும்  அருமை . மூடு  அவுட்  ஆனால்  தனி  தியேட்டரில்  போய்  அமர்வது , அதன்  பின்  மீனா  போவது  அருமை . 


நாயகியின்  பின்னால் ரவுடிகள்  வருவது , நாயகன்  அவர்களை  அடித்துப்போடுவது  அரதப்பழசான  காட்சிகள் . அதே  போல நாயகனின்  நண்பனை  மோசம்  செய்து  பணம்  சம்பாதித்த  மொட்டையனை  நாயகன்  அதே  வழியில்  மோசடி  செய்து  சம்பாதிப்பதும்  ஹைதர்  அலி  காலத்து  டெக்னிக், அதுவும்  இல்லாமல்  மெயின்  கதைக்கும்  அந்த  சம்பவத்துக்கும்  சம்பந்தம்  இல்லை 


ஒளிப்பதிவு , இசை  எல்லாம்  சுமார் ரகம் . இரண்டரை  மணி  நேரம்  ஓடும்  அளவு  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்கள் 


 சபாஷ்  டைரக்டர் ( எஸ்  வி  கிருஷ்ணா ரெட்டி ) 

1  அரத[ப்பழசான  கான்செப்டை  வைத்து  படம்  எடுத்த  துணிச்சல்

2  காமெடி  டிராக்கை  சாமார்த்தியம்  ஆக  பின்  பாதியில்  நுழைத்து  போர் அடிக்காமல்பார்த்துக்கொண்டது


  ரசித்த  வசனங்கள் 


1  கஷ்டம் தான்  சோறு  போடும், கனவு  சோறு  போடாது 

2 பாசம்  இருக்கற  இடத்துல  பயம்  இருக்காது

3  குழந்தைங்க  ஆசைப்பட்ட  உடனே  வாங்கிக்கொடுத்திடனும், ஆசை  போனதுக்கப்புறம்  அல்ல

4  சந்தோஷ்த்தோட  சேர்ந்து  பட்ட வலிகளையும்  ஞாபகம்  வெச்சுக்கனும்

5 எப்பவும்  நம்ம  தலைஎழுத்தை  நாமதான்  எழுதனும்

6  கோபம்  குறைய  ஆறுதல்  தேவை , வலி  குறைய  தனிமைதேவை

7  என்ன  செய்யக்கூடாதுனு  தெரிஞ்சுக்கிட்டா  என்ன  செய்யனும்னு  தெரிஞ்சிடும்

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   தொடர்ந்து  இரண்டு  அட்டர்  ஃபிளாப்  கொடுத்த  இயக்குநருக்கு  தயாரிப்பாளர்  அமைவது  எப்படி? அவர்  கதையே  கேட்காமல்  புக்  செய்வது  எப்படி ?

2  காமெடி  டிராக்  எனறாலும்  நாயகன்  அந்த  லேண்ட்  புரோக்கர்களை  ஏமாற்றும்  இடம்  நம்பவே  முடியாத  காட்சி 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - இது  ஒரு  மொக்கை  காமெடிப்படம்  தான்.  ரொம்பப்பெரிய  எதிர்பார்ப்பில்லாமல்  ரசிக்கலாம் . ரேட்டிங் 2 / 5 


Organic Mama Hybrid Alludu
Film poster
Directed byS. V. Krishna Reddy
Written byS. V. Krishna Reddy
Produced byKoneru Kalpana
StarringSyed Sohel
Mrinalini Ravi
CinematographyC. Ramprasad
Edited byPrawin Pudi
Music bySongs:
S. V. Krishna Reddy
Score:
S. Chinna
Production
companies
Ammu Creations
Kalpana Chitra
Release date
  • 3 March 2023
CountryIndia