Thursday, July 27, 2023

ஓர் இரவு (1951) - தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) @ யூ ட்யூப்

 


சி என்  அண்ணாதுரையின்  நாடகங்கள்  ஏற்கனவே  சினிமாவாக  வந்திருக்கின்றன.  1949 ல்  வேலைக்காரி , நல்ல தம்பி  ஆகிய  இரு  நாடகங்களும்  சினிமா  ஆகி  நல்ல  வரவேற்பையும்  , வசூலையும்  பெற்றது. கே  ஆர்  ராமசாமிக்காக  எழுதிய ஓர் இரவு  எனும் இந்த   நாடகத்தை  ஏ வி எம்  நிறுவனம்  சினிமா  ஆக்க  விரும்பியது . ஏ வி எம் ஸ்டூடியோவுக்கு  அண்ணா  வந்து  ஒரே  இரவில்  திரைக்கதை , வசனம்  எழுதிக்கொடுத்தாராம், அன்றைய  மதிப்பில்  ரூ 10,000  ஊதியமாகப்பெற்றாராம், அப்போது  அது  மிகப்பெரிய  தொகை. ஆனால்  நாடகமாக  செம  ஹிட்  ஆன  இக்கதை  ஏனோ  சினிமாவாக  சூப்பர்  ஹிட்  ஆகவில்லை . விமர்சகர்கள்  வரவேற்பைப்பரவலாகப்பெற்ற  இப்படம்  வசூல்  ரீதியாக  தோல்வியையே  சந்தித்தது 


 இயக்குநர்  ப  நீலகண்டன்  1947ல்  ரிலீஸ்  ஆன  நாம்  இருவர்  படத்தில் அசிஸ்டெண்ட்  டைரக்டராக  வேலை  செய்தவர் , அண்ணாதுரையின்  சிபாரிசால் இயக்குநர்  ஆக  ப்ரமோஷன்  பெற்றார் . இப்படத்தின்  கதை  ஃபிளாஸ்பேக்  காட்சிகள்  தவிர  மீதி  அனைத்தும்  ஒரே  நாள்  இரவில்  நடப்பதாக  சித்தரிக்கப்பட்டு  இருந்தது 


  ஸ்பாய்லர்  அலெர்ட்


 கதையை  மூன்று  வெவ்வேறு  சம்பவங்களாகப்பிரிக்கலாம்


 சம்பவம் 1 -  நாயகன்  ரத்தினம்  பெரிய  ஜமீன் தாரர்  வாரிசு . நாயகி  சொர்ணம்  சாதா  ஏழைப்பெண். ஓப்பனிங்  ஷாட்லயயே  நாயகி  மாட்டு  வண்டியில்  வர  நாயகன்  காரில்  வருகிறார். இருவரும்  நேருக்கு  நேர்  சந்தித்துக்கொள்கிறார்கள் . மோதல்  உண்டாகிறது , நாயகியின்  தாத்தா  வந்திருப்பது  ஜமீன்  என்று  சொன்னபின்  தான்  நாயகிக்கு  விபரம்  தெரியும் . அதற்குபபின்  பல  சந்தர்ப்பங்களில்  நாயகன் - நாயகி இருவரும்  பூங்காக்களில்  சந்தித்துப்பழகுகிறார்கள் . காதலிக்கிறார்கள் . நாயகியின்  தாத்தா  இந்தக்காதலை  கண்டிக்கிறார். தன்  பேத்தியிடம்  நீ  அவனை  மறந்து  விடு . அவன்  உன்னைக்கல்யாணம்  எல்லாம்  செய்து  கொள்ள மாட்டான். அவர்கள்  பணக்காரர்கள் , நாம்  ஏழை ,  பின்  ஊர்  ஒரு  விதமாகப்பேசும்  என்கிறார். ஆனால்  நாயகி  அதைக்கேட்கவில்லை 


 ஆனால்  தாத்தா  சொன்னதுதான்  நடக்கிறது . நாயகன்  நாயகியைத்திருமணம்  செய்ய  முன்  வரும்போது  அந்தஸ்து  , ஜாதி  குறுக்கே  வருகிறது . நாயகனுக்கு  நாயகியை  ஏமாற்றும்  எண்ணம்  இல்லை , ஆனால்  சந்தர்ப்ப  சூழ்நிலையின்  காரணமாக  நாயகியைக்கை  விட  வேண்டிய  சூழலில்  இருக்கிறான். நாயகி  கர்ப்பமாக  இருக்கிறார்


சில  இடங்களில்  வேலைக்குப்போகிறார். போன  இடங்கள்  எல்லாம் நாயகியை  ஆசை  நாயகி  ஆக்க  முயலவே  ஒரு நாடகக்குழுவில்  சேர்ந்து  நடிகை  ஆகிறார். சில  வருடங்கள்  கழித்து  நாயகன் - நாயகி  சந்திப்பு  மீண்டும்  நடக்கிறது . அப்போதும்  நாயகன்  நாயகியை  ஏற்றுக்கொள்ள  முன்  வரவில்லை 


சம்பவம் 2 - நாயகன்    பவானி  என்ற  பெண்ணை  மணக்கிறார். அவர்களுக்கு  ஒரு  பெண்  குழந்தை  பிறக்கிறது. சில  வருடங்களீலேலேயே பவானி  இறந்து  விடுகிறார். அவர்களது  பெண்  குழந்தை  பெரியவள்  ஆகிறாள் , பெயர்  சுசீலா . சுசீலா  டாக்டர்  சேகர்  என்பவரைக்காதலிக்கிறாள் இருவரும்  காதலிப்பது  நாயகன்  ரத்தினத்துக்கு  தெரிய  வருகிறது 


 நாயகனை  ஒரு  ஆள்  ஏதோ  ஒரு  விஷயத்தை  சொல்லி  அடிக்கடி   மிரட்டிப்பணம்  பறித்துக்கொண்டிருக்கிறான்,  சட்டத்துக்குபுறம்பான  ஒரு  செயலை  நாயகன்  செய்யும் போது  அந்த  வில்லன்  அதை  ஃபோட்டோ  எடுத்து  வைத்துக்கொண்டு  மிரட்டிக்கொண்டு  இருக்கிறான்


 நாயகனின்  மகளைத்திருமணம்  செய்ய  வில்லன்  முன்  வருகிறான். நாயகன்  அதற்கு  ஒத்துக்கொள்ளவில்லை. என்  சொத்து  பூரா  தந்து  விடுகிறேன், ஆனால்  என்  மகள் மட்டும்  வேண்டாம் , விட்டு  விடு  என்கிறார், ஆனால்  வில்லன்  அந்த  ஆதாரத்தை  ஊருக்கு  அம்பலப்படுத்துவேன்  என  மேலும்  மிரட்ட  வேறு  வழி  இல்லாமல்  தன்  மகளை  வில்லனுக்கு  திருமணம்  செய்து  தர  சம்மதிக்கிறான். மகளையும்  வலுக்கட்டாயமாக  பாசத்தைக்காட்டி  சம்மதிக்க  வைக்கிறான் 


 சம்பவம்  3  -  நாயகன்  ரத்னம் , நாயகி  சொர்ணம்  இருவருக்கும்  பிறந்த  மகன்  இப்போது  ஒரு  திருடன்  ஆக  இருக்கிறான். நாயகனின்  மகள்  சுசீலா  அவனை  சந்தித்து  தன்  காதலன்  ஆக  நடிக்கும்படி  கேட்டுக்கொள்கிறாள் ., சுசீலாவுக்கு  அவன்  தான்  தன்  அண்ணன்  என  தெரியாது .இதற்குப்பின்  நடந்த  திடுக்கிடும்  திருப்பங்கள்  என்ன? நாயகன், நாயகி  சந்திப்பு  மீண்டும்  நடந்ததா?  நாயகனை  வில்லன்  மிரட்டுவதற்கான  பின்  புலம்  என்ன? நாயகன்  மகள்  சுசீலா - டாக்டர்  திருமணம்  நடந்ததா?  என்பதற்கெல்லாம்  பிற்பாதி  திரைக்கதை  பதில்  சொல்கிறது 



 நாயகன்  ரத்தினம்  ஆக   கே  ஆர்  ராமசாமி .  ஓபனிங்  ஷாட்டில்  தெனாவெட்டாக  அறிமுகம்  ஆகும்  அவர் , பிறகு  குணச்சித்திர  நடிகர்  ஆகி  விடுகிறார். நாயகன்  கமல்  கிட்டே  கேட்பது  போல  இவரிடமும்  நீங்க  நல்லவரா? கெட்டவரா? எனக்கேட்க  வேண்டும்  போல \\


 நாயகி  சொர்ணம்  ஆக  பி எஸ்  சரோஜா. ஓப்பனிங்  ஷாட்டில்  மாட்டு  வண்டியில்  கிளாமராக  வருபவர், கலக்கலாக  டூயட்  எல்லாம்  பாடுபவர்  அப்புறம்  சோகசிற்பம்  ஆகி  விடுகிறார். வயதான  கெட்டப்பில்  பார்க்க  முடியவில்லை, பாவம் 


மகள்  சுசீலாவாக   லலிதா. கச்சிதமான  நடிப்பு . நடனம்  அருமை  (  இவர்  தான்  லலிதா , பத்மினி , ராகினி  சகோதரிகள்  என  நினைக்கிறேன் . திருவாங்கூர்   சகோதரிகளீல்  மூத்த  அக்கா) 

 நாயகனின்  மனைவி  பவானி  ஆக   முத்து லட்சுமி  கெஸ்ட்  ரோல், அதிக  வாய்ப்பில்லை \

  நாயகனை  அடிக்கடி  மிரட்டும்  வில்லனாக  டி கே  சண்முகம் , டாக்டர்  சேகர்  ஆக  நாகேஸ்வரராவ்


 ஒரு  பாடல்  காட்சியில்  லலிதா, பத்மினி , ராகினி  மூவரும்  நடனம்  ஆடுகிறார்கள் .லட்சுமி  காந்தன்  ஒரு  வேடத்தில்  தோன்றுகிறார்  ( இவர்  தான்  பின்னாளில் தியாகராஜ  பாகவதர் , என் எஸ்  கிருஷ்ணன்  ஆகியோரை கொலை  வழக்கில்  ஜெயிலில்  தள்ளியவர் ) 


ஆர்  சுதர்சனம்   இசையில்  பத்து  பாடல்கள் , அவற்றில்  நான்கு பாடல்கள்  செம  ஹிட் , இப்போதும்  கேட்கலாம் 


கே  சங்கர்  எடிட்டிங்கில் 160  நிமிடங்கள்  படம்  ஓடுகிறது , எங்கும்  பெரிதாக  போர்  அடிக்கவில்லை , மாருதி  ராவின்  ஒளிப்பதிவு  கச்சிதம் 




சபாஷ்  டைரக்டர்  (  ப  நீலகண்டன் ) 


1 நாயகன்  நாயகிக்கு  செய்தது  துரோகம்  தான்  என்றாலும்   நாயகன்  மீது  ஆடியன்சுக்கு  வெறுப்பு  வராத  வண்ணம்  நாயகனுக்கு  வேறு  வழி  இல்லை  என்பது  போல  காட்சிகளை  சித்தரித்து  அவரது  கேரக்டர்  டிசைனை  வடிவமைத்த  விதம் \


2   வில்லன்  நாயகனை  ஏன்  மிரட்டுகிறான்  என்ற  சஸ்பென்சை  கடைசி  வரை  மெயிண்ட்டெயின்  செய்த  விதம் 


3  டாக்டர் , கம்பவுண்டர்  காமெடி  டிராக் 


  ரசித்த  வசனங்கள்   ( அண்ணாதுரை) 

\

1   உங்க  பார்வையை  லா  பாயிண்ட்  ஆஃப்  வியூவில்  பார்க்காதீங்க , லவ்  பாயிண்ட்  ஆஃப்  வ்யூவில்  பாருங்க \


2   அகராதி  என  அடிக்கடி  என்னைக்கூப்பிடறீங்க, அதுக்கு  என்ன  அர்த்தம்  என  அகராதியில்  தேடிக்கொண்டிருக்கிறேன்


3   எல்லார்  முன்னிலையிலும்  என்னை  இனிஷியல்  சுருக்  ஆக  எம்  என்  எனக்கூப்பிடறீங்க , அது  பேஷண்ட்ஸ்  காதில்  எமன்  என்றே  கேட்கும், பயப்படறாங்க 


4  நீங்க  சந்தோஷமா  இருக்கும்போதும்  என்னை  அடிக்கறீங்க , கோபமா  இருக்கும்போதும்  அடிக்கறீங்க, பணக்காரன்  சந்தோஷமா  இருந்தாலும், கோபமா  இருந்தாலும்   அது  ஏழைக்கு  அனர்த்தம்  தான்

5  உங்க  முகம்  அன்  சகிக்கபிளா  இருக்கு 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  நாயகியைத்திருமணம்  செய்து  கொள்ள  மறுப்பதில்  நியாயம்  இருந்தது , ஆனால்  நாடக  நடிகை ஆன  பின்  வரும்  சந்திப்பில்  நாயகி  கேட்பதில்  நியாயம்  இருக்கிறது . நாயகன்  மறுப்பதில்  லாஜிக்கே  இல்லை /. நாயகனின்  மனைவி  இறந்த  பின்  நாயகியை  உடன்  வைத்துக்கொள்வதில்  என்ன  தயக்கம் ? 


2   நாயகன்  பண பலம்  மிக்கவன் , ஆனால்  வில்லனுக்கு  எந்தவித  பின்  புலமும்  இல்லை , ஆனால்  நாயகனை  பல  வருடங்கள்  மிரட்டிக்கொண்டே இருக்கிறான், அடியாட்களை   ரெடி  செய்து  வில்லனை  மிரட்டி  ஆதாரத்தைக்கைப்பற்றுவதில்  என்ன  தயக்கம் ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன் யூ 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1   வசந்த  முல்லையும்  , மல்லிகையும் 

2   புவி  மேல்  மானமுடன்  பெண்ணாகப்பிறந்தாளே

3  கொட்டு  முரசே  கொட்டு  முரசே

4   அய்யா  சாமி  ஆவோ ஜி  சாமி \

5  துன்பம்  நேர்கையில்  யாழ்  எடுத்து \

6   என்ன  உலகமடா  இது , ஏழைக்கே  நரகமடா 

7  அரும்பு  போல்  மீசை  பார்த்து பார்த்து   கண்கள் இரண்டும் 

8   பூலோகம்தனைக்காண  வருவீர் \

9   படுத்துறங்கும்போது  அக்கம்  பக்கம்  யாரும்  இல்லை 

10   அழகு  நாடு  எங்கள்  நாடு  இது  எங்கள்  நாடு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   இது  கமர்ஷியல்  ஆன  படம்  தான்  சி என்  அண்ணா துரையின்  எழுத்துக்கு  ரசிகர்களாக  இருப்பவர்கள்  பார்க்கலாம், போர்  அடிக்கவில்லை ,.  ரேட்டிங்  2.5 / 5 


Or Iravu
Poster
Directed byP. Neelakantan
Screenplay byC. N. Annadurai
P. Neelakantan
Based onOr Iravu
by C. N. Annadurai
Produced byA. V. Meiyappan
StarringK. R. Ramasamy
Lalitha
CinematographyS. Maruti Rao
Edited byK. Shankar
Music byR. Sudarsanam
Production
company
Release date
  • 11 April 1951
Running time
160 minutes
CountryIndia
LanguageTamil

Wednesday, July 26, 2023

VICHITRAM (2022) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( ஹாரர் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்


 மலையளத்தில்  விசித்திரம்  என்பதற்கு  வழக்கத்திற்கு மாறான  என்று  அர்த்தம் .   ஃபேமிலி  மெலோ  டிராமா  மாதிரி  படம்  ஆரம்பித்து  ஹார்ர்  திரில்லர்  மாதிரி  திரைக்கதை  பயணித்து  கடைசியில்  ரொமா்ண்டிக்  த்ரில்லர்  ஆக  முடியும் .  மாறுபட்ட  படம்  பார்க்கும்  ஆர்வலர்களுக்கு  இது ஒரு  வரப்பிரசாதம்


  ஸ்பாய்லர்  அலெர்ட்


 ஒரு  அம்மா  அவருக்கு  ஐந்து  மகன்கள் , ஐவரும்  வெட்டாஃபீஸ்கள் . அவங்களால  எந்தப்பிரயோஜனமும்  இல்லை , வீட்டு  வாடகை  உட்பட  எல்லா  செலவுகளையும்  அம்மாதான்  கவனிக்கறார். அம்மாவுக்கு  பர்த்டே  பார்ட்டிக்கு கேக்  வாங்கனும்னாக்கூட  அம்மா  கிட்டே  தான்  காசு  வாங்கறாங்க . 


 பனை மரம்  மாதிரி  வளர்ந்திருந்தாலும்  யாருக்கும்  பொறுப்புக்கிடையாது. அவங்க  குடி  இருக்கும்  வீட்டின்  ஓனர்  வாடகை  பெண்டிங் ஆகுது ,  வீட்டைக்காலி  பண்ணிடுங்க  என  கறாராகக்கூறுகிறார்.


 இந்த  சமயத்தில்  அந்த  அம்மாவின்   சகோதரன்   இறந்து  விடுகிறான் . அவன்  குடி  இருக்கும்  பங்களா  இப்போது  வெறுமையா  இருக்கு . அப்படியே  விட்டு  விட்டால்  பாழடைந்த  பங்களாவாகப்போய்  விடும்,  யாராவது  குடி இருந்தால்  புழக்காட்டம்  உள்ள  வீடாக  இருக்கும் என  சொந்தக்காரர்கள்  கருதுகிறார்கள் 


 வேறு  யாரும்  குடி  வராததற்குக்காரணம்  அந்த  வீட்டில்  பேய்  குடி  இருப்பதாக  வதந்தி  இருப்பதால் தான் . அம்மாவின்  சகோதரன்  உயிருடன்  இருந்த  போது  அவனது  மகள்   அந்த  வீட்டில்  தற்கொலை  செய்து  கொண்டார்  என  சிலரும்  , மகள்  யாரையோ  காதலித்ததால்  அது  பிடிக்காமல்  அப்பாவே  மகளைக்கொலை  செய்து  விட்டார்  என  சிலரும்  சொல்கிறார்கள் 


 ஆக  மொத்தம் அந்த  மகள்  அங்கே  ஆவியாக  நடமாடுவதாக   வதந்தி  பரவி  யாரும் அங்கே  குடி  வர  பயப்படுகிறார்கள் 


 இந்த  தருணத்தில்;  அந்த  அம்மாவும், ஐந்து  மகன்களும்  அந்த  பங்களாவில்  குடி  ஏறுகிறார்கள் . இதற்குப்பின்  அவர்களுக்கு  நிகழ்ந்த  திகிலான  அனுபவம் , அந்த  மகளின்  ஃபிளாஸ்பேக்  எல்லாம்  சொல்வதுதான்  படத்தின்  மீதிக்கதை 


 படத்தின்  நாயகி யாக  மகள்  மார்த்தாவாக  கனி  குஸ்ருதி  மாறுபட்ட  நடிப்பைத்தந்திருக்கிறார். அவரது  லிவ்விங்  பார்ட்னருடன்  காதல்  பார்வை  பார்க்கும்  இடங்கள்  எல்லாம்  கண்களே  நடித்து  முடித்து  விடுகின்றன . கொலை  செய்ய முயற்சிக்கும்  காட்சிகளில்  கண்களில்  வெறி  தாண்டவம்  ஆடுகிறது 


 அம்மாவின்  முதல்  மகனாக   ஷைன்  டாம்  சாக்கோ  நடித்திருக்கிறார் . ஆர்ப்பாட்டமான  நடிப்பு . இவர்தான்  வில்லனோ  என  கேட்கும்  அளவு  சில  இடங்களில்  முத்திரை  பதித்திருக்கிறார் 


 நாயகியின்  அப்பாவாக  அலெக்சாண்டர்  எனும்  கேரக்டரில்  லால்  சிறப்பான  நடிப்பு  சங்கமித்ரா  என்னும்  முக்கியமான  ரோலில்  கேடகி  நாராயணன்  நடித்திருக்கிறார் , அவர்  வரும்  காட்சிகள்  கவிதை 


அர்ஜூன்  பாலகிருஷ்ணனின்   ஒளிப்பதிவு  படத்துக்கு  மிக்க  உறுதுணையாக  இருக்கிறது  ஜூபைர்  மொகமத் , ஸ்ட்ரீட்  அகாடமிக்ஸ்  இருவரின்  பின்னணி  இசையும்  திகில்  ஊட்டுகின்றன 


நிகில்  ரவீந்திரனின் திரைக்கதையை   திறம்  பட  அச்சு  விஜயன்  இயக்கி இருக்கிறார்   


சபாஷ்  டைரக்டர்   ( அச்சு விஜயன் )

1`  அந்த  ஜோடி  முயல்களைக்காட்டும்போது  வரும்  திகில்  இசை  அதன்  பின்னணியில்  ஒரு சஸ்பென்ஸ்  இருப்பதைப்பறை  சாற்றி  விடுகிறது 


2   ஐவரில்  ஒருவரின்  கேர்ள்  ஃபிரண்ட்  வீட்டுக்கு  வந்து   செயின் பறிகொடுத்து  இந்த  வீட்டில்  ஒரு  பேய்  இருக்கு  என  பயந்தபடி  ஓடும்  காட்சி  கலக்கல்  ரகம் 


3   நாயகியின்  காதல்  காட்சிகள்  ஒரு  கவிதை  போல  சொல்லப்பட்ட  விதம் 

4   இது  பேய்க்கதை  இல்லை  என  க்ளைமாக்ஸில்  அழுத்தமாகப்பதித்த  விதம் 


 ரசித்த  வசனங்கள் 


1  எனக்கு  அஞ்சு பசங்க  இருந்து  என்ன  பிரயோஜனம், எல்லாம்  தண்டச்சோறுங்க , ஒரு  பொண்ணு  இருந்தா  எனக்கு  உறுதுணையா  இருந்திருக்கும் 


2  நமக்கு  வேண்டியவர்கள்  இறந்தாலும்  அவர்கள்  ஆன்மா  நம்மைச்சுற்றி  சில  காலம்  இருக்கும் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகி  தான்  உயிருக்கு  உயிராக  காதலித்த  நபரைத்தன்   கண்  எதிரே  கொலை  செய்தவரைப்பார்த்து  கோபமே  கொள்ளாமல்  இருப்பது  எப்படி |  பழி  வாங்க  நினைக்காமல்  இருப்பது  ஏன் ? 


2  வீட்டில்  ஆட்கள்  யாரும்  இல்லாதபோது  தன்  கேர்ள்    ஃபிரண்டை  வீட்டுக்கு  அழைப்பதுதான்  உலக  வழக்கம்,  வீட்டில்  நான்கு  சகோதரர்கள்  இருக்கும்போது , அம்மாவுக்கும்  தெரியாமல் ஏன்  காதலியை  அழைத்து  வருகிறார் ? 


3  நாயகியின்  அப்பா  இறந்து  விட்டார்  என்ற  தகவல்  தான்  சொல்லபப்டுகிறது . அது  கொலையாக  இருக்கலாமோ என  நாம்  யூகிக்கக்கூட  இடம்  அளிக்க  வில்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  கிளாமர்  காட்சிகள்  இல்லை , ஆனால்  மைனர்கள்  பார்க்கத்தேவை  இல்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  வித்தியாசமான  படம் , ஹாரர்  த்ரில்லர்  ரசிகர்கள் , க்ரைம்  த்ரில்லர்  ரசிகர்கள்  என  இரு  தரப்பையும்  திருப்திப்படுத்தும்  படம்  இது , ரேட்டிங்  3 / 5 


Vichithram
Vichithram movie first look poster.jpg
First look poster
Directed byAchu Vijayan
Written byNikhil Ravindran
StarringShine Tom Chacko
Balu Varghese
CinematographyArjun Balakrishnan
Edited byAchu Vijayan
Music byJubair Muhammed[1]
Street Academics
Production
company
Joy Movie Productions
Release date
  • 14 October 2022[2]
CountryIndia
LanguageMalayalam

Tuesday, July 25, 2023

நேற்று இன்று நாளை (1974) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி மெலோ டிராமா ) @ யூ ட்யூப்

 


வில்லன்  நடிகர்  எஸ்  ஏ  அசோகன்  எடுத்த  சொந்தப்படம்  இது பிரமாதமான  வெற்றிப்படம் . பழைய  கதை  தான் . டுயல்  ரோல்,  ஹிட்  சாங்க்ஸ்  மட்டுமே  அட்ராக்சன்  சப்ஜெக்ட்ஸ் 


 ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன்  ஒரு  பெரிய கோடீஸ்வரனின்  மகன், ஆனால்  அங்கே  வேலை  பார்க்கும்  இரு  பணியாட்கள்  சதியால் கோடீஸ்வரனின்  மனைவி  கொலை  செய்யப்படுகிறார். நகைகளைக்கொள்ளையடித்த  அந்த  வேலையாட்கள்  தப்பி ஓடுகின்றனர். கார்  டிரைவரும்  இறக்கிறார், குழந்தை  மட்டும்  தப்பிக்கிறது . அந்தக்குழந்தையை  ஒரு  விவசாயி  வளர்க்கிறார். கொலையாளீக்ள்  இருவரும்  வேறு   ஒரு  அனாதைக்குழந்தையைக்கொண்டு  வந்து  இதுதான்  உங்கள்  குழந்தை  என  பொய்  சொல்கிறார்கள் 


 காலம்  உருண்டோடுகிறது . நாயகன்  வளர்ந்து  பெரிய  ஆள்  ஆகிறான். நாயகனுக்குத்தன்  அப்பா  யார்  என  தெரியும் , ஆனால்  அப்பா  உண்மையான  மகன்   இவன்  தான்  என்பதை  நம்பவில்லை . நாயகன்  எப்படி  நம்ப  வைத்து  தன்  அப்பாவை  வில்லன்கள்  சூழ்ச்சியில்  இருந்து  காப்பாற்றுகிறான்  என்பதே  மீதித்திரைக்கதை 


நாயகன்  ஆக  எம் ஜி ஆர்.  சூப்பர்  ஹிட்  பாடல்கள்  தான்  எம் ஜி ஆர்  படங்க்ஜளைப்பெரும்பாலும் காப்பாற்றுகின்றன  என்பதற்கு  இப்படமும்  ஒரு  உதாரணம். அரதப்பழசான  கதை , ஆனால்  இது 175  நாட்கள்  ஓடிய  வெற்றிப்படம்  என்றால்  நம்ப  முடியவில்லை 


நாயகி  ஆக மஞ்சுளா   சேரிப்பெண்ணாக  ஆனா  செக்கெச்செவேல்  என  வருகிறார்.   லதா  படத்தில்  நடிகை  ஆகவே  வருகிறார். ராஜஸ்ரீ  இன்னொரு  ஜோடி 


 எம் என்  நம்பியார்  , எஸ்  ஏ  அசோகன்  இருவரும்  தான்  வில்லன்கள் . அசோகன்  கெட்டப்  எல்லாம்  டிராமா  ஆள்  போல்  அப்பட்டமாகத்தெரிகிறது . நம்பியார்  ஓக்கே   ரகம் 


  சினிமா  நிருபர்  ஆக  வரும்  ஐசரி  வேலன்  காமெடி  டிராக்  சுமார்  ரகம் . தேங்காய்  சீனிவாசன், வி  கே  ராமசாமி  போன்ற  திரமைசாலிகள்  வீணடிக்கப்பட்டிருக்கிரார்கள் 

  படத்தில்  பெரிய  நட்சத்திரப்பட்டாளமே  இருக்கிறது 


 எம் எஸ்  விஸ்வநாதன் இசையில்  ஆறு  பாடல்கள்  , அவற்றில்  நான்கு  செம  ஹிட் 


154  நிமிடங்கள்  ஓடும்படி  ட்ரிம்  செய்யப்பட்டு  இருக்கிறது 




சபாஷ்  டைரக்டர்  (  நீலகண்டன் )


1    டூயல்  ரோலை  வலுக்கட்டாயமாகத்திணித்திருந்தாலும்  சமாளித்த  விதம்  குட் 


2   அசோகனின்  சொந்தப்படம்  என்பதற்காக  அவரை  ஸ்பெஷலாகக்கவனிக்காமல்  கதைக்கு  என்ன  தேவையோ  அந்த  அளவு  மட்டும்  முக்கியத்துவம்  தந்தது 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  பாடும்போது  நான்  தென்றல்  காற்று  பருவ  மங்கையோ  தென்னங்கீற்று 

2  தம்பி   நான்  படித்தேன்  காஞ்சியிலே    நேற்று , அதை  நான்  உனக்கு  சொல்லட்டுமா? இன்று ?

3   நீ  என்னென்ன  சொன்னாலும்    கவிதை   , நீ   எங்கெங்கு  தொட்டாலும்  இனிமை , நீ  என்னென்ன  செய்தாலும்  புதுமை 

4  இன்னொரு  வானம்  இன்னொரு  நிலவு 

5   அங்கே  வருவது  யாரோ 

6   நெருங்கி  நெருங்கி 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  பணக்காரர்  வீட்டில்  சமையல்காரர்களாக  இருப்பவர்கள்  ஒரு  கொலை  செய்ய  வரும்போது  அதே  யூனிஃபார்மிலா  வருவார்கள்?


2  வில்லன்களின்  டார்கெட்  நகைகளைக்கொள்ளை  அடிப்பது . அது  நடந்ததும்  அவர்கள்  வழியில்  செல்லாமல்  எஜமானி அம்மாவின்  குழந்தையைக்கொல்ல  ஏன்  முயல்கிறார்கள் ? 


3  குழந்தையை  ஆள்  மாறாட்டம்  செய்து  அப்பாவிடம்  தரும்போது  அப்பாவுக்கு  அடையாளம்  தெரியாதா?  முகத்தில்  காயம்  இருக்கு  என்ற  சால்ஜாப்  சொல்லப்பட்டாலும்  ஒரு  அப்பாவுக்கு  தன்  குழந்தை  அடையாளம்  தெரியாமல் போய்  விடுமா? 


4  விபத்தைக்கண்ணால்  கண்ட  சாட்சி  அந்த  இரு  வேலைக்காரர்கள் , அவர்களை  போலீஸ்  விசாரிக்காதா|?


5  குழந்தையைக்காப்பாற்றிய  நபர்  போலீஸ்  ஸ்டேஷனில்  போய்   தான்  கண்ட  விபத்தைப்பற்றி   வாக்கு  மூலம்  தர  மாட்டாரா ? 

6   சேரிப்பகுதியில்  குடிசையில்  வசிக்கும்  நாயகிக்கு  டல்  மெக்கப்  அல்லது  மேக்கப்  இல்லாமல்  காட்ட  மாட்டார்களா?  தக  தக  என  தங்கம்  மாதிரி  மின்றாரே? 

7    அப்பா , மகன்  இருவரும்  ஒரே  முகச்சாயலில்  இருக்கும்போதும்  அப்பாவுக்கு  மகனை  அடையாளம்  தெரியாதா?  போலி  மகனை  எப்படி  நம்புகிறார்?


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பாடல்கள்  ஹிட்  என்பதற்காகப்பார்க்கலாம்,  மற்றபடி  சுமார்  ரகப்படம்  தான் . 175  நாட்கள்  ஓடிய  அளவுக்கு ஒர்த்  இல்லாத  படம்  . ரேட்டிங்  2.25 / 5 


Netru Indru Naalai
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்பி.நீலகண்டன்
எழுதியவர்சொர்ணம் (உரையாடல்கள்)
மூலம் கதைநெல்லை வெங்கடாசலம்
உற்பத்திஎஸ்.ஏ.அசோகன்
நடிக்கிறார்கள்எம்.ஜி.ராமச்சந்திரன்
மஞ்சுள
லதா
ஒளிப்பதிவுஅ.சண்முகம்
அமிர்தம்
திருத்தியவர்ஆர்.செபாஸ்டியன்
இசைஎம்.எஸ்.விஸ்வநாதன்
தயாரிப்பு
நிறுவனம்
அமல்ராஜ் பிலிம்ஸ்
வெளிவரும் தேதி
  • 12 ஜூலை 1974
நேரம் இயங்கும்
154 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Monday, July 24, 2023

வீரன் (2023) - தமிழ் - - சினிமா விமர்சனம் ( சூப்பர் நேச்சுரல் ஆக்சன் ) @ அமேசான் பிரைம்

 


தமிழ்  சினிமா  உலகில்  சத்ய  ஜோதி  ஃபிலிம்சுக்கு  என்றும்  மரியாதை  உண்டு .படம் ஹிட்  ஆவது  ஒரு  புறம். திரைக்கதை  வழக்கமான  மாமூல்  மசாலா  குப்பையாக  இருக்காது /. அந்த  நிறுவனமும்  “ மரகத  நாணயம்” இயக்குநர் சரவணனும் இணைந்த  படம்  இது . தமிழில்  ரிலீஸ்  ஆகி   பெரிய  ஹீரோக்கள்  நடித்தும்  ஓடாத  ஜீவாவின்  முகமூடி , சிவகார்த்திகேயனின்  ஹீரோ  ஆகிய  சூப்பர்  நேச்சுரல்  படங்களின்  வரிசையில்  ஓடும்  படமாக  இது  ரிலீஸ்  ஆகி  ஹிட்  அடித்திருக்கிறது . 2023  ஜூன்  2  ம் தேதி  திரை  அரங்குகளில்  ரிலீஸ்  ஆன  இப்படம்  இப்போது  அமேசான்  பிரைம்  ஓடிடி யில் காணகிடைக்கிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  சின்ன  வயசில்  நண்பர்களுடன்  ஊர்  சுற்றும்போது  அந்த  கிராமத்துக்காவல்  தெய்வம் வீரன்  என்னும்  எல்லைக்காவல்  கடவுளை  கிணடல்  செய்கிறான். அப்போது  அவனை  மின்னல்  தாக்குகிறது . பாதிக்கப்பட்ட  அவனை  ஹாஸ்பிடலில்  சேர்க்கிறார்கள் , குணம்  ஆகவில்லை .. ஆனால்  அவனுக்கு  எக்ஸ்ட்ராவாக  சில  சக்திகள்    வந்ததை  உணர்கிறான். எதிராளியின்  மனதை  ஆக்ரமித்து  தன்  வசப்படுத்தும்   ஹிப்னாடிசம்  மாதிரி  ஒரு  பவர்  (  ஏழாம்  அறிவு  நோக்கு  வர்மம்  மாதிரி ) . கைகளின்  வழியே மின்  காந்த  அலைகளை  அனுப்பி  எதிரியைத்தாக்குதல்


 இதனால் பயந்து  போன  நாயகனின்  தந்தை  அவனை  சிங்கப்பூருக்கு  அவன்  அக்கா வீட்டுக்கு  அனுப்பி  விடுகிறார். சிங்கப்பூரில்  15  வருடங்கள்  தங்கி  வாழும்  நாயகன்  ஒரு  நாள்  தன்  கிராமத்துக்கு  ஏதோ  அழிவு  வரப்போவதாக  கனவு  கண்டு  தன் சொந்த  ஊருக்கு  வருகிறான் 


வில்லன்  26  கிராமங்களை  வளைத்துப்போட்டு  குழாய்களை  மண்ணுக்கு  அடியில்  பதித்து  லேசர்  மின்  தடம்  அமைக்க  திட்டம்  போடுகிறான் . அதில்  அந்தப்பாதையில்  நாயகனின்  கிராமம்  தான்  கடைசி  ஊர் .அந்த லேசர்  மின்  தடம்  வெடித்தால்  கிராமமே  அழிந்து  விடும்  என  நாயகன்  ஊர்  மக்களை  எச்சரிக்கிறான் . ஆனால்  வில்லன்  நிலங்களை  டபுள்  மடங்கு  விலை  கொடுத்து  வாங்கி விட்டான் 

 இதற்குப்பின்  நாயகன்  வில்லனின்  சதித்திட்டத்தை  எப்படி  முறியடித்தான்  என்பதே  கதை 


நாயகனாக  ஹிப்  ஹோப்  தமிழா  ஆதி  அடக்கி  வாசித்து  இருக்கிறார் , இதற்கு  முந்தைய  சில  படங்களில்  கொஞ்சம்  ஓவராக  அலட்டல்  அவரது  உடல்  மொழியில்  இருந்தது. இதில்  இல்லை ., கச்சிதமான  நடிப்பு .  தாடியுடன்  இருக்கும்  கெட்டப்பில்  தான்  பாவம்  சோகமாக  காய்ச்சல்காரன்  போல்  இருக்கிறார் 


 நாயகியாக  அதிரா ராஜ் , சினேகாவின்  முகச்சாயல் , சுவலட்சுமியின்  கண்கள்  என  கலந்து  கட்டி  இருக்கும்  அவர்  கண்ணியமாக  ஆடை  விலகாமல்   நடித்திருக்கிறார். நாயகன் - நாயகி  காதல்  காட்சிகள்  மெயின்  கதையை  பாதிக்காமல்  லைட்டாக  வ்ந்து  போவது இயக்குநரின்  புத்திசாலித்தனம்


 வில்லனாக  வினய். கெட்டப்  நன்றாக  இருக்கிறது . நடிப்பு  வழக்கம்  போல , ஆனால்  அவருக்கு  அதிக  வாய்ப்பில்லை ., அவரை  விட  அவரது  தம்பியாக  வரும்  தாடிக்கார  வில்லன்  அதிக  காட்சிகளில்  வருகிறார்


 முனீஷ்காந்த் +  காளி வெங்கட்  கூட்டணி  காமெடி  பண்ணுகிறோம்  என்ற  பேரில்  மொக்கை   போடுகிறார்கள் . நாயகனின்  நண்பனாக  வரும் சசி  இயல்பான  நடிப்பு , இவர்  ஒரு  யூ  ட்யூபர்  பிரபலம் 


எதிர்பாராத  ஆச்சரியமாக  நாயகிக்கு  மாப்பிள்ளையாக  வரும்  முருகானந்தம்  மணிவண்ணன்  சாயலில்  ஒன் லைனர்  கமெண்ட்களால்  சிரிக்க  வைக்கிறார்.  இயல்பான  டயலாக்   டெலிவரிக்கு  சபாஷ் 


தீபக்  டி  மேனனின் ஒளிப்பதிவில்  கிராமத்து  அழகை  கண்  முன்  காட்டுகிறார், ஜி கே பிரசன்னா  வின்  எடிட்டிங்கில்  156  நிமிடங்கள்  ஓடி  நம்  பொறு,மையை  சோதிக்கிறது , இன்னும்  ஷார்ப்  ஆக  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம் , ஹிப் ஹோப்  தமிழா  வின்  இசையில்  3  பாடல்கள்  மூன்றுமே  தேவை  இல்லாத  ஆணி . படத்தின்  வேகத்துக்கு  தடை 


திரைக்கதை எழுதி  இயக்கி இருப்பவர்   ஏ ஆர்  கே  சரவன். , மரகத  நானயம்  படத்தை  விட  ஒரு  மாற்று  கம்மி  தான்


  சபாஷ்  டைரக்டர்( ஏ ஆர்  கே  சரவன்)


1  கிராமத்து  வீரன்  கோயில்  பெருமை பற்றி  ஒரு  கதை ரெடி  பண்ண  முயலும்நாயகன்  அண்ட்  கோ ஒவ்வொரு  கதை  அவுட்  ஆகும்போதும் இது  முண்டாசுப்பட்டி  கதை , இது  இன்று  நேற்று  நாளை  கதை , இது மரகத  நாணயம்  கதை  என  ஓட்டுவது  நல்ல  வாரல் 


2  காமெடியன்  முதுகில்  நெம்பர்  பிளேட்  பொறித்த  ஐடியா  குட்


3 வில்லன்  இது  சாமி  மேட்டர்  இல்லை  ஆசாமி  மேட்டர்  என்பதை  உணர்ந்து  ஆளைக்கண்டு  பிடிக்க  போலீஸ்  ஸ்டேஷனில் எலெக்ட்ரோ  மேகனடிக் மெஷர்மெண்ட்  மிஷினை  வைத்து  நாயகனை  ட்ராக்  பண்ண  ட்ரை  பண்ணும்  ஐடியா 


4    நாயகிக்கு  நிச்சயிக்கப்பட்ட  மாப்பிள்ளையை  தீர விசாரிக்கும்  பாட்டி   நீ  இன்னாருக்கு இன்ன  உறவு  தானே? என  ஒவ்வொரு  கேள்வியாகக்கேட்டு  பின்  கடைசியாக  நீ செல்விக்கு  சித்தப்பா  முறை  ஆகுதே., எப்படி  அவளைக்கட்டுவே? என  கேட்கும் இடம்  கலக்கல்  காமெடி . பின்  அதைத்தொடர்ந்து  சீமையிலே  ஒரு  சொந்தக்காரப்பெண் இருக்கு  என  ஆரம்பிக்கும்  காமெடியு,ம் அருமை 

5  நாயகியின்    மாப்பிள்ளை  முருகானந்தம் காமெடி  டிராக்


  ரசித்த  வசனங்கள் 


1   நான்  வீட்டு  வரியே  ஒழுங்கா  கட்ட  மாட்டேன் , என்  கிட்டே  போய் கோயிலுக்கு டொனேஷன்  வரி  கேட்டா ? 


2  டீ  க்கு காசு  குடுப்பா 


இந்த  டீயோட  சேர்த்து  என்  கணக்கு  1,37,420  ரூபா 


 கடைசில  வர்ற  420 எதுனா  குறியீடா?


3  சார்  இவ்ளோ பதட்டப்படறதைப்பார்த்தா  1  பொண்ணு  அழகா  இருக்கனும், 2  உங்களுக்கு  வயசாகி  இருக்கனும், எது  சரி ?


 ரெண்டும்தானப்பா. பொதுவா  நமக்கு  35  வயசு  ஆகிட்டா  பொண்ணு  கிடைக்காது  பொம்பளைதான்  கிடைக்கும்னு  சொல்வாங்க 


4  நீங்க  தானே  சிங்கப்பூர்  குமரன் ?


 இல்லை , திருப்பூர்  குமரன் 


5   நம்ம  ஊர்க்காரங்களை  மாத்தனும்’ 


 அவனுங்க  போட்டிருக்கற  சட்டையையே  தீபாவளிக்கு  தான்  மாத்துவானுங்க 


6  சும்மா  சாகப்போறவனை    ஹீரோ  ஆக்காதே!


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  சின்ன  வயசுல    ஊரில்  இருந்து  கிளம்பி  சிங்கப்பூர்  போயிடறார். 12   வருடங்கள்  கழித்துத்தான்  ஊருக்கு  வருகிறார். அதுவரை  ஊராருடன்  எந்தத்தொடர்பும்  இல்லை ( வாட்சப் , ஃபோன் )  ஆனால்  நாயகி  நாயகனை  அடையாளம்  கண்டு  கொள்வது  எப்படி ? ? 


2  நாயகன்  சூப்பர்  ஹீரோ  அவதாரம்  எடுக்கும்போது  அவர்  முகத்தில்  ஒரு  தேஜஸ்  இல்லை . எனர்ஜெடிக்கான  பாடி  லேங்க்வேஜ் இல்லை , செத்தவன்  கையில்  வெத்தலை  பாக்குக்கொடுத்த  மாதிரி  இருக்கிறார்


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   சின்னக்குழந்தைகள்  பார்த்து  ரசிக்கத்தக்க  ஒரு  அம்புலிமாமா  கதை . ரேட்டிங் 2.5 / 5 


Veeran
Veeran film poster.jpg
Release poster
Directed byARK Saravan
Written byARK Saravan
Produced by
StarringR.Badree
CinematographyDeepak D. Menon
Edited byPrasanna GK
Music byHiphop Tamizha
Production
company
Distributed bySakthi Film Factory
Release date
  • 2 June 2023
Running time
156 minutes
CountryIndia
LanguageTamil

Sunday, July 23, 2023

கன்னி ராசி (2020) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி )@ யூ ட்யூப்

 


 1985 ஆம்  ஆண்டு  பிரபு  -ரேவதி   நடிக்க  ஆர்  பாண்டியராஜன் இயக்க  வெளி  வந்த  படத்தின்  கதைக்கும்  இதற்கும்  எந்த  சம்பந்தமும்  இல்லை , அதன்  ரீமேக்கும்  இல்லை 

இந்தப்படத்துக்கு  ஜெமினிகணேசன்  என  டைட்டில்  முதலில்  வைக்கப்பட்டது . நாயகன்  ஆக  ஜீவா  புக்  ஆனார்  2015  ஆம்  ஆண்டு  படம்  ஆரம்பிப்பதாக  இருந்தது. ஆனால்  அதே  ஆண்டில்  இதே  தயாரிப்பு  நிறுவனம்  எடுத்த  புலி  அட்டர்  ஃபிளாப்  ஆனதால்  படம்  டிராப்  ஆனது 2017 ஆம்  ஆண்டு தயாரிப்பு  நிறுவனம்  மாறியது . நாயகன்  ஜீவா  மாறி  விமல்  வந்தார்


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  லவ்  மேரேஜை  வெறுப்பவர் , அரேஞ்சுடு  மேரேஜ்  தான்  நல்லது  என்ற  கொள்கை  உடையவர் , ஆனால்  அவர்  குடும்பம்  அவருக்கு  நேர்  மாறானது . குடும்பத்தில்  அம்மா, அப்பா  உள்பட  அனைவரும்  லவ்  மேரேஜ்  தான். அதனால்  நாயகனுக்குல்  லவ்  மேரேஜ்  தான்  செய்ய  வேண்டும்  என  ஒற்ரைக்காலில்  நிற்கிறார்  நாயகனின்  அப்பா . ஆனால்  நாயகன்  அரேஞ்ச்டு  மேரேஜ்  தான்  என  பிடிவாதமாக  இருக்கிறார் 


 நாயகி  ஒரு  போலீஸ்  ஆஃபீசரின்  மகள் . நாயகன்  மேல்  ஆசைப்படுகிறார். நாயகனை  அடைய  அவர்  போகும்  மொக்கைக்காமெடி  திட்டங்கள்  எப்படி  வெற்றி  பெறுகிறது  என்பதே  மீதிக்கதை 


 நாயகன்  ஆக   களவாணி  விமல். சி  செண்ட்டர்  வில்லேஜ்  ரசிகர்களின்  இன்னொரு  ராமராஜன்.  கச்சிதமாக  நடித்திருக்கிறார். அவர்  லவ்  மேரேஜூக்கு  எதிராகப்பேசும் வசனங்கள்  அருமை


 நாயகி ஆக  வரலட்சுமி  சரத் குமார். ஆஜானுபாவகமான  வரலட்சுமி  டயட்டில்  இருந்து  இளைத்திருக்கிறார். பழைய  வனப்பும்  ., அழகும்  மிஸ்சிங் 


முதல்  பாதி  காமெடி  டிராக்கிற்கு  ரோபோ சங்கர்  காமெடி  நன்றாக   ஒர்க்  அவுட்  ஆகி  இருக்கிறது . நாயகியின்  முறை  மாப்பிள்ளையாக  வரும்  யோகிபாபுவின்  அலட்டல்கள்   ரசிக்க  வைத்தாலும்  ரோபோ  சங்கர்  அளவு இவர்  காமெடி  எடுபடவில்லை 


  நாயகனின்  அப்பாவாக  வரும்  ஆர்  பாண்டியராஜன்  பரவாயில்லை . இவருக்கு  காமெடி  காட்சிகள்  பெரிதாக  இல்லை   ஷகீலா  ஓவர்  மேக்கப்பில்  காமெடி  பண்ணுகிறார்


எஸ்ன்  செல்வக்குமார்  ஒளிப்பதிவில்  கிராமத்துக்காட்சிகள்  கண்ணுக்குக்குளூமை .  132  நிமிடங்கள்  ஓடும்படி எடிட்டர்  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார். நாடகம்  பார்க்கும்  உணர்வை  பல  இடங்களில்  உணர  முடிகிறது 


விஷால்  சந்திர  சேகரின்  இசையில்   3  பாடல்கள் , ஓக்கே  ரகம்


சபாஷ்  டைரக்டர்  ( முத்துக்குமரன் ) 


1   நாயகனுக்கு  தர  வேண்டிய  கில்மா  லேகியம்  ஆள்  மாறிப்போவதும்  அதைத்தொடர்ந்து  வரும்  காமெடி  டிராக்கும்  பல  படங்களில்  பார்த்தவை  என்றாலும்  ரசிக்க  வைத்தது 


2   ரோபோ  சங்கரின்  காமெடி  டிராக்  படத்தின்  முதல்  பாதியை  கலகலப்பாக  வைத்திருக்க  உதவுகிறது 


3  படத்தின்  பின்  பாதியில்  வரும் யோகிபாபுவின்  மொக்கைக்காமெடி  சுமார்தான்  என்றாலும்  மோசம்  இல்லை 




செம  ஹிட்  சாங்க்ஸ்


1   உன் கிட்டே  என்னவோ  இருக்கு \\

2   கண்ணனே\

3   குட்டி  குட்டி  செல்லம்



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  என்னதான்  காமெடிப்படம்  என்றாலும்  போலீஸ்  ஆஃபீசராக  இருக்கும்  நாயகியின்  அப்பா  அவ்ளோ  முட்டாளாகவா  இருப்பார் ? ஒரு  வரம்பு  வேணாமா  ?  மொமெண்ட் 


2  நாயகி  நாயகனை  அடைய  போடும்  திட்டங்களில்  புதுமை  இல்லை , கிரியேட்டிவிட்டி  இல்லை ., பழைய  படங்களில்  பார்த்த  காட்சிகள்  தான் 



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  காட்சி  ரீதியாக  இல்லை . வசனங்களில்  18+ உண்டு



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   டி வி  யில்  போட்டால்  பார்க்கலாம்  என்ற  அளவில்  சுமார்  ரகக்காமெடிப்பட  லிஸ்ட்டில்  சேர்க்கலாம்  . ரேட்டிங் 2.25 / 5 


கன்னி ராசி
திரைப்பட போஸ்டர்
இயக்கம்முத்துக்குமரன்
உற்பத்திஷமீம் இப்ராஹாம்
நடித்துள்ளார்விமல்
வரலட்சுமி சரத்குமார்
ஒளிப்பதிவுஎஸ்.செல்வகுமார்
திருத்தியவர்ராஜா முகமது
இசைவிஷால் சந்திரசேகர்
தயாரிப்பு
நிறுவனம்
கிங் மூவி மேக்கர்ஸ்
வெளிவரும் தேதி
  • 4 டிசம்பர் 2020
நேரம் இயங்கும்
133 நிமிடம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Saturday, July 22, 2023

துணிவே துணை (1976) - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் மிஸ்ட்ரி த்ரில்லர் ) @ யூ ட்யூப்


 டூரிங்க்  டாக்கீஸ் , சாய்  வித்  சித்ரா   உட்பட பல  சினிமா  நிகழ்ச்சிகளில்  பல  சினிமா  பிரபலங்கள்  கூற்றுப்படி  தமிழ்  சினிமா  இண்டஸ்ட்ரியில் அதிகம்  பேருக்கு  உதவியவர்கள்  மூன்றே  பேர்  1  எம் ஜி ஆர் 2  விஜயகாந்த் 3  ஜெய் சங்கர் . தென்னகத்து  ஜேம்ஸ் பாண்ட்  என்று  அழைக்கப்பட  இவர்  அதிகமான  ஆக்சன்  படங்களில்  நடித்தது  ஒரு  காரணம் .  வாரா  வாரம்  வெள்ளிக்கிழமை  இவர்  படங்கள்  ரிலீஸ்  ஆகும்  அளவுக்கு  ஏராளமான  படங்களில்  நடித்து  வந்தார் , என் சம்பளத்தை  செட்டில்  செய்தால்தான்  படம்  ரிலீஸ்  ஆகும்  என  இவர்  எந்தப்படத்தையும் முடக்கியதில்லை . இவருக்கு சம்பள  பாக்கியை  செட்டில்  செய்யாத  தயார்ப்பாளர்  பட்டியல்  அதிகம் 


1955ல்  ரிலீஸ்  ஆன    A BAD DAY  AT BLACK ROCK    என்ற  அமெரிக்கப்படத்தின்  தழுவல்  ஆகவே  இது  அமைந்திருக்கிறது. அன் அஃபிஷியல்  தழுவல்  கதையான  இதை பஞ்சு  அருணாசலம்  தான்  தமிழுக்கு  ஏற்ற்வாறு  தழுவி  இருக்கிறார்


ஸ்பாய்லர்  அலெர்ட்

பொன்  வயல்  என்ற  கிராமத்தைப்பற்றி  போலீஸ்  டிபார்ட்மெண்ட்க்கு  வந்த  தகவல்கள்  மிக  விசித்திரம் ., கடந்த  ஆறு  மாதங்களாக  அந்த  ஏரியா  போலீஸ் ஸ்டேஷனில்  ஒரு  திருட்டுக்கேஸ்  கூட  பதிவாகவில்லை . அவ்வளவு  நல்லவங்களாகவா  ஊர் மக்கள்  இருப்பாங்க? என  போலீஸ்க்கு  சந்தேகம்,  இது  பற்றி  விசாரித்து  தகவல்  அறிவிக்க  ஒரு  போலீஸ்  ஆஃபிசரை   அனுப்புகிறார்கள்


அவருக்கு  அந்த  கிராமத்தில்  சில  அமானுஷ்ய  அனுபவங்கள்  கிடைக்கின்றன. ஒரு  அதிர்ச்சியான  சம்பவத்தை  நேரில்  பார்த்து  ஹார்ட்  அட்டாக்கில்  அந்த  போலீஸ்  ஆஃபீசர்  இறக்கிறார். அதே  ஆஃபீசரின்  சகோதரர்  இந்த  மரணத்தில்  மர்மம்  இருப்பதாக  நினைக்கிறார். அதே  கிராமத்துக்கு  இவரும்  வருகை  தருகிறார்.  அவருக்கு  நிகழ்ந்த  அதே  அமானுஷ்ய  சம்பவங்கள்  இவருக்கும்  நடக்கிறது , ஆனால்  இவர்  பயப்படாமல்  இதில்  பேய்  வேலை  எதுவும்  இல்லை. எல்லாம்  ஆசாமி  வேலைகள்  தான்  என்பதை  அறிகிறார்


 அந்த  ஊரில்  சட்ட விரோத  கும்பல்  ஒன்று  இருக்கிறது  என்பதைக்கண்டறிகிறார். இதற்குப்பின்  அந்தக்கும்பலை  எப்படி  வளைத்துப்பிடிக்கிறார்  என்பது  மீதி  திரைக்கதை 

  படத்தின்  முதல்  முப்பது  நிமிடங்கள்  அட்டகாசம்,  டோண்ட்  மிஸ்  இட் 


நாயகன்  ஆக  ஜெய்  சங்கர்  பிரமாதமாக  நடித்திருக்கிறார்.  விதி  படத்தில்  டைகர்  தயாநிதியாக  இவர்  நடித்ததுதான்  எனக்குத்தெரிந்து  கலக்கல்  ஜெய்  என  சொல்ல  வைத்த  நடிப்பு . அதற்கு  நேர்  மாறாக  தளபதி  படத்தில்  அமைதியான  கணவனாக  ஸ்ரீ வித்யாவிக்குத்துணையாக  நடித்திருப்பார் . ஆக்சன்  காட்சிகளில்  நல்லா  ஃபைட்  போட்டிருக்கிறார்


 நாயகி  ஆக  புதுமுகம்  ஜெயப்பிரபா தேவி  கச்சிதமாக  நடித்திருக்கிறார். லேடி  பாஸ்  ஆக  ராஜ  சுலோச்சனா  ஆர்ப்பாட்டமான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்.  கெஸ்ட்  ரோலில்  விஜயகுமார்  வந்து   போகிறார்


 சவப்பெட்டி  தயாரிப்பாளர்  ஆக  எஸ்  ஏ  அசோகன்  ஆர்ப்பாட்டமான  நடிப்பு . நாயகியின்  அப்பாவாக  ஜமீன்  தாராக  செந்தாமரை .  காமெடி  டிராக்கிற்கு  சுருளி  ராஜன்.  வெண்ணிற  ஆடை  மூர்த்தி  கூட  ஒரு  ரோலில்  வருகிறார்


 எம் எஸ்  விஸ்வநாதன்    இசையில்  நான்கு  பாடல்கள்  , அவற்றில்  இரண்டு  பாடல்கள்  மெகா  ஹிட் 


பாபுவின்  ஒளிப்பதிவு  மிகவும்  பரப்ரப்பாகப்பேசப்பட்டது   இரண்டே  கால்  மணி  நேரம்  ஓடுமாறு  எடிட்டர்  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர்  ( எஸ்  பி   முத்து  ராமன் )


1  அந்தக்கால  கட்டத்திலேயே  ஹெலிகாப்டர்  சேஸ்  பிரமாதமாக  அமைத்தது .  ரசிகர்களிடையே  அது  பற்றி  பரபரப்பாகப்பேச  வைத்தது 


2  கள்ளக்கடத்தல்  பாஸ்  ஆக  ஒரு  லேடியை   வடிவமைத்த  விதம்  தமிழ்  சினிமாவுக்கு  அதுவே  முதல்  முறை 


3  முதல்  30  நிமிடக்காட்சிகள்  பிரமாதமான  மிஸ்ட்ரி  எலிமெண்ட்ஸ்  உள்ளடக்கியவை . ஒரே  மாதிரி  சம்பவங்கள்  ரிப்பீட்  ஆனாலும்  இரு  வேறு  போலீஸ்  ஆஃபீசர்கள்  அதை  எப்படி  மாறுபட்ட  விதத்தில்  டீல்  செய்கிறார்கள்  என  காடிய  விதம்  கிளாசிக் 

செம  ஹிட்  சாங்க்ஸ்

1   அரங்க  நாயகி \

2 அச்சம்  என்னை  நெருங்காது 

3   கையில்  பூ  எடுப்போம்

4   ஆகாயத்தில்  தொட்டில்  கட்டி 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஓப்பனிங்கில்  போலீஸ்  ஆஃபீசர்  நாயகன்  ஆன  சீக்ரெட்  ஏஜென் ட்  இடம்  நீங்க  போலீஸ்  என்பது  யாருக்கும்  தெரியக்கூடாது  என்கிறார். ஆனால்  அப்போதுதான்  முதல்  முறை  பார்த்த  பெண்ணிடம்  நாயகன்  உளறி  விடுகிறார். பெண்ணிடம்  ரகசியம்  சொல்வது  என்பது  மேடை  ஏறி  மைக்  பிடித்து  அறிவிப்பதற்கு  சமம்  என்பது  அவருக்குத்தெரியாதா? 

2  நாயகன்   தன்  தலைமுடி  கலரை  மட்டும்  மாற்றி  ஒரு  விக்  வைத்தால்  அவரை  யாருக்கும்  அடையாளம்  தெரியாதா?   எம் ஜி ஆர்  படங்களில்  ஒரு  தாடி  அல்லது  மரு  வைத்தால்  மாறு  வேஷம், இதில்  விக்  மாற்றினால்  வேறு  ஆள் ? 

3  பெரிய  கடத்தல்  பாஸ்  ஆன  அந்த  லேடி  நாயகனைப்பார்த்து  மயங்காமல்  நாயகியை  எதிர்த்த  பெண்  முதல்  இரவுக்குப்பின்  அவரிடம் மயங்கியது  கண்டு  நாயகன்  மேல்  ஆசைப்படுவது  அபத்தம், . அதை  விட  அபத்தம்  நாயகன்  அந்த  லேடியை  வாய்ப்பிருந்தும்  தொடாமல்  ராமன்  இமேஜ்  காப்பது  அவ்ளோ  நல்லவனாய்யா  நீ  என  கேட்கச்சொல்கிறது 


4  உங்களூக்கு  ஏதாவது  பிரச்சனை  எனில்  அந்த  ஏரியா  போலீஸ்  ஸ்டேஷனில்  உதவி  கேளூங்கள்  என  ஆஃபீசர்ஸ்  சொல்லியும்  தனக்கு  உணவு , தண்ணீர்  கிடைக்காதபோதும்  நாயகன்  போலீஸ்  ஸ்டேஷன்  விசிட்  கூட  அடிக்கவில்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   அந்தக்கால  மிஸ்ட்ரி  த்ரில்லர்  இப்போது  பார்த்தாலும்  ரசிக்கும்படி  இருக்கிறது . முதல்  அரை  மணி  நேரக்காட்சிகள்  அட்டகாசம், பின்  பாதி  மாமூல்  மசாலா  . ரேட்டிங்  2.75 / 5 


துணிவே துணை
சுவரொட்டி
இயக்கம்எஸ்பி முத்துராமன்
எழுதியவர்பஞ்சு அருணாசலம்
உற்பத்திபி.வி.தொளசிராமன்
நடிக்கிறார்கள்ஜெய்சங்கர்
ஜெயபிரபா
எஸ். ஏ. அசோகன்
ராஜசுலோச்சனா
ஒளிப்பதிவுபாபு (SIC A)
திருத்தியவர்ஆர் விட்டல்
இசைஎம்.எஸ்.விஸ்வநாதன்
தயாரிப்பு
நிறுவனம்
PVT புரொடக்ஷன்ஸ்
வெளிவரும் தேதி
  • 6 ஏப்ரல் 1976
நேரம் இயங்கும்
137 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்