Sunday, July 16, 2023

இரும்பு திரை (1960) - தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா)


1959 ஆம் ஆண்டு  வாசன்  இயக்கிய  ஹிந்திப்படமான பைகம் ( செய்தி) படத்தின்  அஃபிசியல்  தமிழ்  ரீமேக்  தான்  இரும்பு  திரை. ஹிந்தியில்  சூப்பர்  டூப்பர்  ஹிட்  ஆன  இப்படம்  தமிழில் ஹிட்  என்ற  அளவில்  தான்  அமைந்தது 175  நாட்கள் ஓடியது


தமிழில்  டைட்டில்  வைத்ததற்கு  சுவராஸ்யமான  கதை  உண்டு. வாசன்  ஹிந்திப்படத்தை  ரீமேக்  செய்ய  அறிவித்து  தமிழில்  டைட்டில்  வைக்க  ஒரு  போட்டி  வைத்தார். அவரது  அலவலர்கள்  யார்  வேண்டுமானாலும்  ஐடியா  தரலாம்  என்றார். ஒரு சிறுவன்  ஆஃபீஸ்  பாய்  மட்டும் 2500  டைட்டில்கள்  சொன்னானாம், அதில்  ஒன்று  தான் இரும்பு திரை. அந்த  சிறுவனுக்கு பல   பரிசுகளை  அளித்தாராம் 

  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின்  அம்மா  ஒரு  கைம்பெண்.நாயகனுக்கு  ஒரு  அண்ணன், அவருக்கு  திருமணம்  ஆகாத  ஒரு  மகள்  உண்டு அண்ணன்  ஒரு மில்லில்  வேலை  செய்கிறார். நாயகன் கல்கத்தாவில்  பொறியியல்  கல்லூரியில்  படிக்கிறார். படிப்பு  முடிந்தபின்  அண்ணன்  வேலை  செய்யும்  அதே  மில்லில்  வேலை  கிடைக்கிறது 


நாயகன்  அந்த  மில்லில்  வேலை  செய்யும்  டைப்பிஸ்ட்டைக்காதலிக்கிறார்.மில்  ஓனரின்  மகளுக்கு  நாயகனின்  காதல்  விஷயம்  பிடிக்கவில்லை . அவர்  நாயகனை  அடைய  நினைக்கிறார்


மில்  ஓன்ர்  தொழிலாளர்களைஏமாற்றி  கையெழுத்து  வாங்கி  3  மாத  போனஸ்க்குப்பதிலாக  ஒரு  மாத  போனஸ்  மட்டுமே  கொடுத்து  மூன்று  மாதம்  தந்ததாக  பொய்க்கையெழுத்து  வாங்குகிறார்.இது போல  கடந்த  ஆறு  வருடங்களாக  தொழிலாளர்களை  ஏமாற்றி  வருகிறார்


மில்லில்  வேலை  செய்யும்  ஒரு  தொழிலாளர்க்கு  விபத்தில்  காயம்  ஆக  இன்சூரன்ஸ்  க்ளைம்  செய்ய  முடியாதவாறு  நேர்கிறது . இந்த  விஷயத்திலும்  தொழிலாளரை  மில்  ஓனர்  ஏமாற்றுகிறார்


 இதனால்  நாயகன்  யூனியன்  ஒன்றைத்துவங்குகிறார். இது  அண்ணனுக்குப்பிடிக்கவில்லை , எஜமான்  விசுவாசம்  உள்ளவர் . இதனால்  கருத்து  வேற்றுமை  கொண்டு    நாயகன்  ஆன  தம்பியை  வீட்டை  விட்டு  வெளியே  அனுப்புகிறார்


 அண்ணன்  மகள்:  திருமணம்  நடக்க  இருக்கிறது. ஆனால்  யூனியன்  ஸ்ட்ரைக்கை  வாபஸ்  பெற  வேண்டும்  என  மில்  ஓனர்  நிபந்தனை  விதிக்கிறார்


நாயகன் - டைப்பிஸ்ட்  காதல்  நிறைவேறியதா?  வில்லியாக  இருக்கும்  மில்  ஓனர்  மகள்  என்ன  செய்தாள் ? தொழிலாளர்  பிரச்சனையில்  மில்  ஓனர் - நாயகன்  எப்படி  மோத  நேர்ந்தது  ? அண்ணன் - தம்பி  இணைந்தார்களா? இவற்றுக்கெல்லாம்  பின்  பாதி  திரைக்கதை  பதில்  சொல்கிறது 


நாயகன்  ஆக  சிவாஜி  கம்பீரமான  நடிப்பு , இது  ம்லையாளத்தில்  டப்  செய்யப்பட்டிருந்தால்  கம்யூனிச  மாநிலத்தில்  நன்றாக  ஓடி  இருக்கும்.   


நாயகி  ஆக  வைஜெயந்திமாலா  துடிப்பான  நடிப்பு . இன்னொரு  நாயகியாக  சரோஜா தேவி  அழகு  மயில் 


திரைக்கதை  முன்று  விதமாகப்பிரயாணிக்கிறது . தொழிலாளர் - முதலாளி  பிரச்சனை ,   நாயகனின்  காதல் ,அண்ணன் -  தம்பி  பிரச்சனை 


மூன்று  மணி  நேரம்  படம்  ஓடுகிறது , ஆனால்  போர்  அடிக்கவில்லை 







பாடல்பாடகர்கள்பாடல் வரிகள்நீளம்
"நெஞ்சில் குடியிருக்கும்"டி.எம்.சௌந்தரராஜன் & பி. லீலாபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்03:57
"ஆசை கொண்ட நெஞ்சு ரெண்டு"பி. லீலா04:27
"மனிதரை மணிதர் சாரி நிகர் சமமாய்"சீர்காழி கோவிந்தராஜன்02:40
"கையிலே வாங்கினேன் பையிலே போதலை"திருச்சி லோகநாதன்03:00
"ஏறை பிடித்தவனும் ஆங்கிலம் படிச்சவனும்"கொத்தமங்கலம் சுப்பு03:19
"நன்றி கேட்ட மணிதருக்கு"சீர்காழி கோவிந்தராஜன்03:22
"டப்பா டப்பா டப்பா"எஸ்.சி.கிருஷ்ணன்
"படிப்பதற்கும் ஒரு கும்பிடு"பி. லீலா & ஜிக்கி02:47
"நிக்கடுமா போகதுமா"திருச்சி லோகநாதன் & கே. ஜமுனா ராணி
"என்ன செய்தாலும்"(ராதா) ஜெயலட்சுமிபாபநாசம் சிவன்02:52




செம  ஹிட்  சாங்க்ஸ்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சிவாஜி  ரசிகர்கள்  பார்க்கலாம் , பொறுமை  வேண்டும் . ரேட்டிங்  2.75 / 5 



Irumbu Thirai
Theatrical release poster
Directed byS. S. Vasan
Story byGanesh Subramaniam along with Gemini Story Department
Produced byS. S. Vasan
StarringSivaji Ganesan
Vyjayanthimala
K. A. Thangavelu
B. Saroja Devi
CinematographyP. Elappa
N. C. Bala Krishna
Edited byM. Umanath
Music byS. V. Venkatraman
Production
company
Release date
  • 14 January 1960
CountryIndia
LanguageTamil

Saturday, July 15, 2023

இன்று போல் என்றும் வாழ்க (1977) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா) @ யூ ட்யூப்


1977ல்நடந்த  தேர்தலில் பிரச்சரப்பாடல்களாக இப்படத்தின் இரண்டு  பாடல்கள்  உபயோகப்படுத்தப்பட்டன ராதா  சலுஜா  எம்ஜி ஆர்  உடன்  ஜோடி  சேர்ந்து  நடித்த  கடைசிப்படம்  இது .வசனம்  எழுதியவர்  முன்னாள் எம் எல் ஏ  காளிமுத்து 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின்  அம்மா அந்த  கிராமத்துப்பெண்ணான  கங்கா  வின் குடும்பத்தாருக்கு  நிறைய  உதவிகள் செய்ததால் கங்காவின் அப்பா  நாயகனின்  அம்மாவிடம்  என்  மகள்  தான்  உங்கள்  வீட்டு  மருமகள் என  வாய் மொழி உறுதி  கொடுக்கிறார். கங்கா  வ்ளர்ந்து  பெரிய  பெண்  ஆனதும்  தன்  அந்தஸ்துக்கு  ஏற்ற  படித்த ஒரு  தறுதலையைக்காதலித்து  அவனிடம்  தன்னை  இழக்கிறாள் 


 இந்த  விஷயம்  தெரியாத  நாயகன்  வீட்டார்  நாயகனுக்கு  கங்காவை  நிச்சயம்  செய்ய  பேச்சு  வார்த்தை  நடத்தும்போது  நாயகன்  ஒரு  பட்டிக்காடு  என  கங்கா  நாயகனை  அவமானப்படுத்தி  விடுகிறாள் . உடனே  நாயகன்  பட்டணம்  வந்து  ஒரு  படித்த  பெண்ணை  திரும்ணம்  செய்து  வாழ்வதாக  சவால்  விடுகிறார்


கங்காவை  ஏமாற்றிய  அந்த  டுபாக்கூர்  காதலன்  கங்காவை  ஒரு  சிவப்பு  விளக்குப்பகுதியில்  விற்று  விடுகிறான். போலீஸ்  ரெய்டு  வ்ரும்போது  கங்கா  காப்பாற்றப்பட்டு  ஒரு  அனாதை  விடுதியில்  சேர்கிறாள் 


பட்டணம்  வந்த  நாயகன்  கங்காவை  சந்தித்து  அவளை  தன்  தங்கையாக  ஏற்றுக்கொண்டு  தன்னுடன்  அழைத்து செல்கிறான். கங்காவை  ஏமாற்றிய  டுபாக்கூர்  காதலனின்  தங்கை  தான்  மேனகா  என்பது  தெரியாமலேயே  ,மேனகா  நாயகனைக்காதலிக்கிறாள். இதற்குப்பின்  நாயகன் - மேனகா  திருமணம் , கங்கா - டுபாக்கூர்  லவ்வர்  மேரேஜ்  நடந்தது  எப்படி  ? என்பதே  மீதி  திரைக்கதை 


இந்தக்கதையைத்தான்  பட்டி  டிங்கரிங்  பண்ணி  கமல்  சகலகலாவல்லவன்  என்ற  மெகா  ஹிட்  படத்தில்நடித்தார்


நாயகன்  ஆக  எம் ஜி ஆர். கடைசி  3  ஆண்டுகளில்  எம் ஜி ஆர்  நடித்த  படங்களில்  ஏனோ  அவருக்கு  விக்  சரியாக  பொருந்தவில்லை . முக  அமைப்பை  விட பெரிய  விக்  எடுபடவில்லை , ஆனால்  எம் ஜி ஆர்  ரசிகர்கள்  அதைப்பற்றி  எல்லாம்  கவலைப்படவில்லை 


 நாயகி ஆக ராதா  சலூஜா  அழகிய  முகம் .நாயகன்  உடனான கெமிஸ்ட்ரி  நன்றாக  ஒர்க்  அவுட்  ஆகி  இருந்தது


 கங்காவாக வெண்ணிற  ஆடை  நிர்மலா, டுபாக்கூர்  லவ்வர்  ஆக  விஜயகுமார் . ஒரு  ஷாக்  சர்ப்பரைஸ்  ஆக  எம் என் நம்பியார்  நல்லவராக  இதில்  வருகிறார்


 காமெடி  டிராக்கிற்கு  தேங்காய்  சீனிவாசன் , ஆல் இன் ஆல்   அருணாச்சலம்  ஆக  இவர்  வருவதை பட்டி  டிங்கரிங்  பண்ணித்தான்  வைதேகி  காத்திருந்தாள்  ஆல் இன்  ஆல்  அழகுராஜா  கேரக்டர்  உருவாகி  இருக்கக்கூடும் 


எம் எஸ் விஸ்வநாதன்  இசையில்  6  பாடல்கள் , அவற்றில் 3  சூப்பர்  ஹிட் 

இரண்டரை  மணி  நேரம்  ஓடும்  அளவு  ட்ரிம் செய்யப்பட்டு  இருக்கிறது 


சபாஷ்  டைரக்டர்

1  கிராமம்  என்றால்  கேவலம்  இல்லை ,நகரத்தாரை  விட கிராமத்தான்  குறைந்து  போய் விட வில்லை  என்ற கருத்தை  வலியுறுத்திய  வித்ம

2  பெற்றோரின் மன வருத்தத்தில்  நிகழும்  காதல்  திரும்ணம்  முறையானது  இல்லை , அவர்கள்  சம்மதத்துடன்  திருமணம்  நிகழவேண்டும்  என்று  கருத்து  சொன்னது 

செம  ஹிட்  சாங்க்ஸ்


1   இது  நாட்டைக்காக்கும்  கை , நம் வீட்டைக்காக்கும்  கை , இந்தக்கை  நாட்டின்  நம்பிக்கை ( ஹீரோ  ஓபனிங்  சாங் ) 


2  அன்புக்கு  நான்  அடிமை ,தமிழ்ப்பண்புக்கு  நான்  அடிமை  ( பிறந்த  நாள்  வாழ்த்துப்பாடல் )


3  வெல்கம்  ஹீரோ , ஹேப்பி  மேரேஜ் , காஷ்மீரில்  தேன்  நிலவு ( ஹீரோ  வை  வாழ்த்திப்பாடுதல்) 


4   என்  யோக  ஜாதகம், நான்  உன்னைச்சேர்ந்தது ( ஹீரோயின் பாடும்  ஹீரோ  துதிப்பாடல் )


5 இதயத்தில்  இருந்து  இதழ்கள்  வரை , அது  ஏதோ  ஒரு வகைப்புதிய  கலை ( டூயட்) 


6  புதுமைப்பெண்கள் 



  ரசித்த  வசனங்கள் 


1  மனிதன்  செய்யக்கூடிய  உச்சபட்சத்தவறுகளை  மீறி  தவ்று  செய்யக்கூடாது , அவனை  அழித்து  விடும் 


2  மத்தவங்களுக்காக  தியாகம்  செய்துதான்  எனக்குப்பழக்கம்.  மத்தவங்க  தியாகம்  செய்ததால  எனக்கு  ஒரு  வாழ்க்கை கிடைக்க  நான்  ஒத்துக்க மாட்டேன்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஏழைப்பெண்ணை  சிவப்பு  விளக்கு ஏரியாவில்  விற்பது  சரி . பணக்காரப்பெண்ணை  வைத்து  அப்பாவை  மிரட்டி  பணம்  சம்பாதிக்காமல்  மடத்தனமாக  3000  ரூபாய்க்கு  யாராவதுவிற்பார்களா ? 


2 கிராமம்தான்  உயர்ந்தது  என  வாதிடும்  நாயகன்  கிராமத்தில்  பிறந்த பெண்ணைத்திருமணம்  செய்து  வாழ்வு  கொடுக்காமல்  ஏன்  நகரம்  வந்து  நகரப்பெண்ணை  மணக்க  வேண்டும் ? கிராமத்தில்  படித்த  பெண்  இல்லையா? இவ்ருக்கு  இருக்கும்  வசதிக்கு  இவ்ரே  படிக்க  வைக்கலாமே? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கதைக்கரு அரதப்பழசு  என்றாலும்  எம் ஜி ஆர்  ரசிகர்கள்  மட்டும்  பார்க்கும்  விதத்தில் தான்  இருக்கிறது . ரேட்டிங்  2.25 /. 5 


Indru Pol Endrum Vaazhga
Theatrical release poster
Directed byK. Shankar
Written byK. Kalimuthu
Produced byV. D. L. Subbhaiya
V. D. L. S. P. Lakshamanan
StarringM. G. Ramachandran
Radha Saluja
CinematographyT. V. Raja Ram
Edited byK. Shankar
S. M. Sundharam
Music byM. S. Viswanathan
Production
company
Subbu Production
Release date
  • 5 May 1977
CountryIndia
LanguageTamil

Friday, July 14, 2023

LUST STORIES 2 - ஹிந்தி /தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் ( லவ் ஆந்தாலஜி ) @ நெட் ஃபிளிக்ஸ் 18+

 


2018 ஆம்  ஆண்டு  லஸ்ட்  ஸ்டோரீஸ்  பாகம் 1   வெளி  வந்தது , அதற்குக்கிடைத்த  ஏகோபித்த  வரவேற்பைப்பார்த்து  அதே  போல்  இன்னொரு  பாகம்  ரிலீஸ்  செய்து  இருக்கிறார்கள் . நான்கு  வெவ்வேறு  இயக்குநர்கள்  இயக்கிய  நான்கு  தனித்தனி  குறும்ப்டங்கள் , ஒன்றுகொன்று  சம்பந்தம்  இல்லாதவை . முதல்  பாகம் பார்க்காதவர்களும்  இதைப்பார்க்கலாம்


 ஸ்பாய்லர்  அலெர்ட்


 ஆர் பல்கி - மேட்  ஃபார்  ஈச்  அதர் - நாயகன், நாயகி  இருவரும்  பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட  வருங்கால  தம்பதிகள் . திருமணத்துக்கு  முன்பே  இருவரும்  பேசிப்பழகி  சேட்டிங்  எல்லாம்  செய்து  விடுகிறார்கள் . நாயகியின்  பாட்டி  ஒரு  குண்டைத்தூக்கிப்போடுகிறார். பேசிப்பழகினால்  மட்டும்  போதாது , திருமணத்துக்கு  ,முன்பே  தம்பதிகள்  உறவும்  வைத்துக்கொள்ள  வேண்டும், அப்போதுதான்  இருவரும்  திருமண  வாழ்க்கைக்கு  ஏற்றவர்க்ளா? இல்லையா? என்பது  தெரியும்  என்கிறார். இதைக்கேட்டு  மொத்தக்குடும்பமும்  ஆடிப்போகிறது.இதற்குப்பின்  நடந்த  திருப்பங்கள்தான்  மீதிக்கதை 


 இதில்  நாயகனுக்கு  அதிக  வேலை  இல்லை . நாயகி , பாட்டி  இருவருக்கும் தான்  முக்கிய  ரோல். புரட்சிப்பாட்டியின்  வசனங்கள்  எல்லாம்  கேட்பதற்கு   ஜாலியாக , சிரிப்பாக  இருக்கிறது , நடைமுறைக்கு  ஒத்து  வராது . பாட்டியாக  நீனா  குப்தா  தடாலடி  கேரக்டரில்  கச்சிதமாக  நடித்திருக்கிறார்


திருமணத்துக்கு  முன்  மணப்பெண் சராசரியாக  10  மாப்பிள்ளைகளை  சந்திக்கிறாள், அவர்கள்  அனைவருமே உறவு  கொள்வதில்  சுமாரானவர்கள்  கேட்டகிரியில்  இருந்தால் பத்தோட  பதினொண்ணு, அத்தோடு  இன்னும்  ஒண்ணு  என  அடுத்த  மாப்பிள்ளையைப்பார்ப்பாரா? சும்மா  பர பரப்புக்காக  அட்டென்ஷன்  சீக்கிங்க்காக  சொல்லப்படும்  கருத்து 


2 கொன் கொனா சென்  ஷர்மா -  நாயகி  ஒரு  டிசைனர். தனிமையில்  வசிப்பவர் , மணம்  ஆகாதவர். இவரது  அபார்ட்மெண்ட்டில்  ஒரு  பணிப்பெண் இருக்கிறார். அவரிடம்  வீட்டுச்சாவி  ஒரு  காப்பி  இருக்கும், தினசரி  வந்து  சமையல்  வேலை, க்ளீனிங்  ஒர்க்  முடித்து  விட்டு செல்வார். ஒரு  நாள்  நாயகி  ரெகுலராக  வரும்  டைமை  விட  முன்னதாக  அதாவது  மதியம்  3  மணிக்கே  வந்து  விடுகிறார்.,


 தன்னிடம்  உள்ள  இன்னொரு  சாவியைக்கொண்டு  திறந்து  நுழைந்தவருக்கு  அதிர்ச்சி ., அங்கே  நாயகியின்  பெட்  ரூமில்   பணிப்பெண்  தன்  கணவனுடன்  அந்தரங்கமாக  நெருக்கமாக  இருக்கிறார்


முதலில்  அதிர்ச்சி  அடைந்த  நாயகி  பின்  தொடர்ந்து  ரெகுலராகவே  அதே  டைமில் ரகசியமாக  வந்து  அவர்கள்  கூடலை  ரசிக்கிறார். ஒரு  நாள்  இது  பணிப்பெண்ணுக்கும்  தெரிந்து  விடுகிறது . அவர்  பெரிதாக  அலட்டிக்கொள்ளவில்லை . நாயகி  ரசிப்பதை  அவரும்  ரசிக்கிறார்


 இது   தொடர்கதையாகப்போகும்போது  பணிப்பெண்ணின்  கணவனுக்கு  இது  தெரிய  வரும்போது  நாயகி  தன்  இமெஜைக்காப்பாற்றிக்கொள்ள  பணிப்பெண்  மீது  புகார்  பத்திரம்  வாசிக்கிறார்.பணிப்பெண்  நாயகியின்  தவறை  சுட்டிக்காட்டுகிறார்.


இப்போது  பணிப்பெண்  டிஸ்மிஸ்டு. நாயகி  வேறு  பணிப்பெண்ணை  வேலைக்கு  அமர்த்திக்கொள்கிறார். முன்னாள்  பணிப்பெண்ணுக்கும்  வேறு  இடத்தில்  பணி  கிடைக்கிறது 


சில  நாட்கள் இடைவெளிக்குப்பின்  நாயகி , பணிப்பெண்  இருவரும்  எதேச்சையாக  சந்திக்கிறார்கள் ., இதற்குப்பின்  நிகழும்  திருப்பமே  க்ளைமாக்ஸ் 


நாயகியாக  திலோத்தமா  ஷோம் கச்சிதமாக  நடித்திருக்கிறார்பணிப்பெண்ணாக  வரும்  அம்ரிதா  இயல்பாக  நடித்தாலும்  நாயகியுடன்  வாக்குவாதம்  செய்யும்  காட்சியில்  மட்டும்  ஓவ்ர்  ஆக்டிங்.க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  கச்சிதம் 


பொதுவாக  இந்த  மாதிரி  காட்சி  இன்பத்தில்  ஈடுபாடு  உள்ளவர்கள்  ஆண்களே. ஒரு  மாறுதலுக்காக  பெண்ணுக்கு  இப்படிப்பட்ட குணம்  இருப்பதாக  சித்தரித்து  இருக்கிறார்கள் . இந்த  சீரிசில்  உள்ள  நான்கு  கதைகளில்  கொஞ்சம்  வித்தியாசமான  கதைக்கரு  என  இதைச்சொல்லலாம் 



3  சுஜோய்  கோஷ் - நாயகன்  காலேஜ்    படிக்கும்போது  இரு  பெண்களுடன்  பழகுகிறான். அதில்  ஒரு  பெண்ணைக்காதல்  திருமணம்  செய்து  கொள்கிறான். இன்னொரு  பெண்  மிகப்பெரிய  கோடீஸ்வரி . . நாயகன்  தன்னைத்திருமணம்  செய்து கொண்டால்  அப்பாவின்  கம்பெனிக்கு  எம் டி  ஆக்குகிறேன்  என  ஆசை  காட்டுகிறாள், இதனால் நாயகன்  திட்டம்  இட்டு  மனைவியைக்கொலை  செய்து  விட்டு  பணக்காரபெண்ணை  திருமணம்  செய்து  கொள்கிறான் 


 இதுவரை  சொன்னது  ஃபிளாஸ்பேக் . கதை . இப்போது  நாயகன் காரில்  வரும்போது  ரிப்பேர்  ஆகி  ஒரு  இடத்தில்  நிற்கிறது .அந்த  ஏரியாவில்  மெக்கானிக்  இருக்கிறாரா? என  தேடிச்செல்லும்போது  தான்  கொலை  செய்த  முன்னாள்  மனைவி  உயிருடன்  இருப்பதைப்பார்க்கிறான், அவளது  கணவன்  ஒரு  போலீஸ்  ஆஃபீசர் 


 இதற்குப்பின்  இந்தக்கதையில்  நிகழும்  திருப்பங்கள்  தான்  க்ளைமாக்ஸ் 

 நாயகனாக  விஜய்  வர்மா , நாயகியாக  தமனா . இருவரும்  நிஜ  வாழ்விலும்  ஜோடியாகப்போகிறார்கள்  என்று  கிசு  கிசு  ஓடுகிறது. உலக  சினிமா  வரலாற்றில்  முதன்  முறையாக  தமனா  இதில்  லிப்  லாக்  காட்சியில்  நடித்திருக்கிறார் . க்தைக்கு  தேவை  இருக்கிறதோ  இல்லையோ , கிளாமர்  டிரசில்  வருகிறார்


4 அமித்  ஷர்மா - நாயகி  முன்னாள்  சிவப்பு  விளக்கு  நாயகி . பெரும்  செல்வந்தனை  மணந்து  கொள்கிறாள் . அவன்  ஒரு  பெண்  பித்தன் . பார்க்கும் பெண்களை  எல்லாம்  அடைய  நினைப்பவன், இலவச  இணைப்பாக  நாயகியையும்  தொடர்ந்து  துன்புறுத்தி  வருகிறான். இந்த  ஜோடிக்கு  ஒரு  மகன்  திருமண  வயதில்  இருக்கிறான்


 கணவனைப்பழி  வாங்க  நாயகி  ஒரு  திட்டம்  தீட்டுகிறாள் . தான்  முன்னால்  இருந்த  சிவப்பு விளக்குப்பகுதியில்  எய்ட்ஸ்  பாதித்த  இளம்பெண்  ஒருத்தியை  தன்  விட்டுக்கு  பணிப்பெண்ணாக  அமர்த்துகிறாள் .


 கணவன்  அவளுடன்  கூடி  விட்டால்  எய்ட்ஸ்  வந்து  கணவன்  இறக்கட்டும்  என்பது  அவளது திட்டம் . அவளது  திட்டம் பலித்ததா? என்பது  க்ளைமாக்ஸ் 


 நாயகியாக  கஜோல். தில்வாலே  தில்ஹனியா  லே ஜாயெங்கே , மின்சார கனவு  போன்ற்  படங்களில்  நாயகியாக  நடித்தவரை  இந்த  மாதிரி  ரோலில்  பார்க்க  மனசுக்கு  கஷ்டமாக  இருக்கிறது . ஆனால்  நடிப்பில்  குறை  வைக்க வில்லை 



சபாஷ்  டைரக்டர்


1  முதல்  கதையில்  இயக்குநர்  புரட்சிப்பாட்டி  கேரக்டர்  டிசைனை  வைத்தே  ஒரு  முழு  குறும்படத்தையும்  முடித்து  விட்டார். கதையில்  ச்ரக்கு  இல்லை  என்றாலும்  அந்த  கேரக்டர்  சொல்லும்புரட்சிக்கருத்துகள்  பரபரப்பாக  பேசப்படும் 


2   இரண்டாவது  கதையில்  மூன்றே  கேரக்டர்களை வைத்து  சுவராஸ்யமான  கதைக்கருவைக்கையாண்டிருக்கிறார். அனைத்துப்பத்திரிக்கைகளின்  பாராட்டும்  இப்பட  இயக்குநருக்குத்தான். நாயகி , பணிப்பெண்  இருவர்  நடிப்பும்  குட் 


3  மூன்றாவது  கதை  ஆக்சுவலாக  ஒரு  க்ரைம்  த்ரில்லர் .  இந்த  சீரிசில் க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  நாவலில்  வருவது  போல்  இருப்பது  சிறப்பு 


4  நான்காவது  கதையில் க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  எதிர்ப்பார்த்தது  என்றாலும்  ரசிக்கத்தக்க  விதத்தில்  இருக்கிறது 



  ரசித்த  வசனங்கள் 


1 இயற்கையை  கணிக்கவே  முடியாது. யாருக்கு  யாரை  முடிச்சு  போட்டு  வைக்கும்னு  சொல்லவே  முடியாது , கணிக்கவும்  முடியாது


2 ஒரு  கார்  வாங்கறதுன்னாக்கூட  டெஸ்ட்  டிரைவ்  பண்ணிட்டுதான்  வாங்கறோம், காலம்  பூரா  ஒண்ணா  வாழப்போற  தம்பதிகள்  மேரேஜ்க்கு  முன்பே  கூடலில்  ஈடுபட்டுப்பார்ப்பது  நல்லது


3  புது  உறவை  உண்டாக்குவதற்கு  முன்  பழைய  உறவுக்கு உயிர்  கொடுங்க 


4  பந்தம்  உங்களுக்குள்ளே  பலமா  இருந்தா   உங்க  வாழ்க்கை  சுமூகமா  போகும் 


==============


5  மீட்டிங்க்கு  லேட்டா  போகப்போறியா? நீஎப்பவும்  எங்கேயும் ; லேட்டா  போக  மாட்டியே?


 எல்லாத்துக்கும்  முதல்  முறைனு ஒண்ணு  இருக்கு 


============


6  நாங்க  எல்லாம்  யார்  கிட்டேயும்  கேட்க  எல்லாம்  மாட்டோம், உத்தரவுதான்  போடுவோம்


7  அவன்  ராஜாவோட  பையன்,  யார்  கிட்டெயும்  வேலை  செய்ய  மாட்டான்



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 நாயகன், நாயகி  இருவருமே  தனித்தனி  பங்களா வாசிகள் . இருவர்  வீட்டிலும்  சம்மதம், ஆறு  மாதங்களாக  இரு  குடும்பத்திலும் வரவு  செலவு  உண்டு . ரிகர்சலை  அவர்கள்  பங்களாவிலேயே  வைத்துக்கொள்ளலாமே? அரண்மனை  மாதிரி  இருக்கிறதே? எதற்காக  ஒவ்வொரு  முறை   ரிகர்சலுக்கும்  ஃபைவ்  ஸ்டார்  ஹோட்டலுக்குப்போக  வேண்டும் ? 


2   பணிப்பெண்ணுக்கு  திருமணம்  ஆகி  டீன்  ஏஜ்  வயதில்  மகள்  இருக்கிறாள். இருந்தும்  கணவன் , மனைவி  இருவரும்   தினசரி  உறவில்  ஈடுபடுவதில்  ஆர்வம்  உள்ளவர்களாக இருப்பது  நம்ப  முடியவில்லை .அதுவும்  தின்சரி  டைம்  டேபிள்  போட்டது  போல  மதியம்  3  மணிக்கு  முகூர்த்தம்  என்பது  ஓவர் 


3  ஒரு  போலீஸ்  ஆஃபீசரின்  மனைவி  என்பது  தெரிந்தும் நாயகன்  தைரியமாக  வாசல்  கதவு  பெட்ரூம்  கதவு  தாழ்  இடாமல்  அசால்ட்டாக  நாயகியை  அணைப்பது  எப்படி ? அதே  போல்  போலீஸ்  ஆஃபீசர்   மனைவியுடன்  வேறு  ஆணைப்பார்த்த  பின்பும்  சந்தேகப்படாமல்  செல்வது  எப்படி ? கிராஸ்  செக்  செய்ய  வரவே  இல்லையே?


4   எய்ட்ஸ்  வந்தால்  நிச்சயம் மரணம்  என்பதெல்லாம் 1990 களில் சரி , இப்போது  ஏகப்பட்ட  தடுப்பு  மருந்துகள்  வந்து  விட்டன. நாயகி  அதை  ஒரு  ஆயுதமாக  ஏன்  எடுத்தாள் ? கணவன்  குடிகாரன் , எப்போதும்  மப்பில்தான் இருக்கிறான் , மாடியில்  இருந்து  தள்ளி  விட்டால்  மேட்டர்  ஓவர் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  18+  காட்சிகள்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  முதல்  பாகம்  அளவு இரண்டாம் பாகம்  இல்லை . நான்கு  படங்களில்  கடைசி  இரண்டு  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டை  மட்டுமே  நம்பி  இருக்கிறது . இரண்டாம்  கதை கான்செப்ட்டை  நம்பி  இருக்கிறது . முதல்  கதை  புரட்சிகரமான  கருத்தை  நம்பி  இருக்கிறது ., ஓவர்  ஆல்  சுமார்  ரகம்  தான் . ரேட்டிங்  2.25  /5 

Thursday, July 13, 2023

சுமதி என் சுந்தரி (1971) - தமிழ் - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் காமெடி மெலோ டிராமா) @ வசந்த் டி வி

    1967 ஆம்  ஆண்டு  வெளியான நாயிகா சங்க்பாத்  (  நாயகி  நடிகையைப்பற்றிய  செய்தி )  என்ற  பெங்காலி  படத்தின்  அஃபிஷியல்  ரீமேக்  இது . ரொமாண்டிக்  காமெடி  மெலோ டிராமா  வகையைச்சேர்ந்தது . சித்ராலயா  கோபு  தான்  இதன்  திரைக்கதையை  எழுதினார் . இதன்  படப்பிடிப்பு  முழுவதும்  கொடைக்கானலில்  படம்  ஆக்கப்பட்டது . இப்படத்தில்  ஒரு  சுவராஸ்ய  தகவல்  உண்டு . இரு  குதிரைகள்  இயக்குநருக்குத்தேவைப்பட்டது , ஆனால் கிடைத்த  இரண்டில்  ஒன்று  நோஞ்சான்  ஆக  இருந்தது  இயக்குநருக்குப்பிடிக்கவில்லை , ஆனால்  அந்த  நேரத்தில்  வேறு  குதிரை  கிடைக்காததால்  நாயகனுக்கு  நல்ல  குதிரை , காமெடியனுக்கு  நோஞ்சான்  குதிரை  என 


வைத்து  அதன்  மூலம்  புதிய  காமெடி  டிராக்    ரெடி  செய்தார்களாம் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகி   பிரபல  சினிமா  நடிகை . ரொம்ப  பிசி , எப்போப்பாரு  ஷூட்டிங்   ஷூட்டிங்  என  அலைச்சல் . அவருக்கு  எல்லா  கமிட்மெண்ட்சையும்  முடித்து  விட்டு  சினிமா  உலகை  விட்டு  விலக  வேண்டும்  என்று  ஆசை , அதனால்  புதுப்பட  ஒப்பந்தம்  எதிலும்  சைன்  பண்ணாமல்  கையில்  இருக்கும்  படங்களை  முடித்துக்கொடுப்பதில்  கவனமாக  இருக்கிறார் 


 நாயகன்  ஒரு  எழுத்தாளர் . நாடகத்துக்கு  கதை  வசனம்  எழுதுபவர் . அவருக்கு  வெளி  உலகம், சினிமா  எதுவும்  தெரியாது . ஒரு  நாள்   நடிகை  ரயில்  பயணத்தில்  எதிர்பாராத  விதமாக  ஒரு  ஊரில்  தங்க  நேரிடுகிறது . அங்கே  நாயகனை  சந்திக்கிறாள் . நாயகனுக்கு  நாயகி  ஒரு  சினிமா  நடிகை  என்பது  தெரியாது 

 இருவருக்கும்  ஏற்படும் நட்பு , காதல்  தான்  மொத்த  திரைக்கதையுமே! 


இது  ஒரு  ஹீரோயின்  ஓரியண்ட்டட்  சப்ஜெக்ட்  என்பதால்  நாயகனை  விட  நாயகிக்குதான்  அதிக  வாய்ப்பு , பிரபல  நடிகை  ஆக   சுமதி  கேரக்டர்லயும்,  சுந்தரி  என்ற  சாதா  கேரக்டர்லயும்  கச்சிதமான  நடிப்பு . 


நாயகன்  ஆக  சிவாஜி . ரொமான்ஸ்  காட்சிகளில்  அற்புதமாக  நடித்திருக்கிறார். நாகேஷ் , கே  ஏ  தங்கவேலு , வெண்ணிற  ஆடை  மூர்த்தி  என  காமெடி  பட்டாளமே  இருக்கிறது 


 எம் எஸ்   விஸ்வநாதன்  இசையில்  ஏழு  பாடல்கள் , நான்கு  ஹிட்   நான்கு  பாடல்களை  கவிஞர்  கண்ணதாசனும்  3  பாடல்களை  கவிஞர்  வாலியும் எழுதி  இருக்கிறார்கள்  138  நிமிடங்கள்  ஓடும்  அளவு   எடிட்டிங்கில்  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்கள்  


சபாஷ்  டைரக்டர் (  சி வி  ராஜேந்திரன் ) 

1  டைட்டில் , திரைக்கதை  இரண்டிலும்  இது  ஹீரோயின்  சப்ஜெக்ட்  படம் என்பது  தெளிவாகத்தெரிந்தும்  சிவாஜியை  நடிக்க  ஒப்புக்கொள்ள  வைத்த  சாமார்த்தியம் 


2    கொடைக்கானலில்  ஷூட்டிங்  என்பதால்  கண்ணுக்குக்குளிர்ச்சியான  காட்சிகள்


3   நாயகன் - நாயகி  ரொமான்ஸ்  காட்சிகளில்  கெமிஸ்ட்ரி  ஒர்க்  அவுட்  ஆகிய  விதம் 




செம  ஹிட்  சாங்க்ஸ்


1  ஒரு  ஆலயம்  ஆகும்  மங்கை  மனது  (  ஷூட்டிங்கில்  வரும்  ஓப்பனிங் சாங் ) 

2  எல்லோருக்கும்  காலம் வரும்  சம்பாதிக்கும்  நேரம்  வரும் , அதுவரை  என்ன  கதையோ ?  (  ரயில்  பயணத்தில்  காமெடியன்  சாங் ) 


3   ஓ  ஓராயிரம்  நாடகம்  ( டூயட்) 


4  ஒரு  ஆலயம்  ஆகும்  மங்கை  மனது  ( ரிப்பீட்  ரியல்  லைஃப்  சாங் ) 


5 பொட்டு வைத்த  முகமோ? கட்டி  வைத்த  குழலோ ?  ( டூயட்  சாங்  2 ) 


6  ஏ  புள்ள  சச்சாயி , ஏனுங்க  ஏனுங்க 

7  கல்யாண  சந்தையிலே 


  ரசித்த  வசனங்கள் 


1  கடவுள்  பக்தி  என்பது  இந்த  உலகத்தில்  எல்லோருக்கும்  பொது , ஆனா  ஒரு  நடிகையோட  பக்தி  மட்டும்  ஏன்  நடிப்பாப்பார்க்கப்படுது ? 


2  120  வயசுக்கிழவி  எதுக்குத்தூக்கு போட்டுக்கனும், அதுவா  சாகும்  வயசாச்சே? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  தனது  முகச்சாயலிலேயே  இருக்கும்  தன்  சித்தப்பா  மகனை  ரொம்ப  நாட்கள்  கழித்துப்பார்க்கும்போது    நீங்க  யாரு?னு  தெரியலையே?னு  அந்த  கேரக்டர்  பேசுவது  எப்படி ?  ( வி  கோபால  கிருஷ்ணன்) 

2  நாயகன்  மட்டும்தான்  சினிமா  பார்க்காத  ஆள், அவருக்கு நாயகி  ஆன  நடிகையைத்தெரியாது  ஓக்கே , ஆனால்  ஊரில்  உள்ள  மற்ற  எந்த  கேரக்டர்களுக்குமே  பிரபல  நடிகையை  அடையாளம்  தெரியாதா? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   படம்  ஜாலியக  கலகலப்பாகப்போகிறது .  டி வி யில்  போடும்போது  பார்க்கலாம்  ரேட்டிங் 2.5 / 5 


சுமதி என் சுந்தரி
சுமதி என் சுந்தரி.jpg
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்சி.வி.ராஜேந்திரன்
மூலம் திரைக்கதைசித்ராலயா கோபு
மூலம் கதைபிரசாந்த தேப்
நடிக்கிறார்கள்சிவாஜி கணேசன்
ஜெயலலிதா
ஒளிப்பதிவுதம்பு
திருத்தியவர்என்.எம்.சங்கர்
இசைஎம்.எஸ்.விஸ்வநாதன்
தயாரிப்பு
நிறுவனம்
ராம் குமார் பிலிம்ஸ்
வெளிவரும் தேதி
  • 14 ஏப்ரல் 1971
நேரம் இயங்கும்
138 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Wednesday, July 12, 2023

HELLO MEERA (2023) - தெலுங்கு , தமிழ் - சினிமா விமர்சனம் ( சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்


ஒரு  சினிமாப்படம்  எடுக்க  வேண்டும்  எனி;ல்  ஷூட்டிங்  ஸ்பாட்  வாடகை , நடிகர்கள் , ந்டிகைகள்  சம்பளம், டெக்னீஷியன்கள்  சம்பளம், ஆடை  அலங்கார செலவுல  ஆரம்பித்து  ஏகப்பட்ட  செலவுகள்  லைன்  கட்டி  நிற்கும், ஆனால்  ஒரு திறமையான  இயக்குநர் , நல்ல  திரைக்கதை  இருந்தால்  செலவே  இல்லாமல் ஒரு  படத்தை  எடுத்து  விட  முடியும்  என  ஆல்ரெடி  இரா  பார்த்திபன்  தன்  ஒத்தை  செருப்பு  சைஸ்  ஏழு  படம்  மூலம்  நிரூபித்திருக்கிறார். அதே  பாணியில் ஒரே  ஒரு  நடிகை நடிக்க  ஒரு  முழுப்படத்தையும்  தன்  கிரிஸ்ப்  ஆன  திரைக்கதை  மூலம்  இயக்குநர்  ஸ்ரீநிவாசு  காகரிலா  நிரூபித்திருக்கிறார். இது  ஒரு  பரீட்சார்த்தமான  முயற்சி. வரவேற்கலாம்


   ஸ்பாய்லர்  அலெர்ட்\


நாயகி   ஹைதராபாத்தில்  ஐ டி  ஊழியர்  ஆகப்பணி  புரிகிறார். இன்னும்  இரண்டு  நாட்களில்  அவருக்கு  திருமணம் நடக்க  இருக்கிறது . அதற்காக  தன்  சொந்த  ஊரான  விஜயவாடா விற்கு  காரில்  தனிமையில்  பயணம்  செய்து  கொண்டிருக்கிறார்.

அப்போது  போலீஸ்  ஸ்டேஷனில்  இருந்து  ஒரு  ஃபோன்  கால்  வருகிறது . நாயகியின்  முன்னாள்  காதலன்  தற்கொலை  முயற்சி  செய்து  சீரியசாக    ஹாஸ்பிடலில்  இருக்கிறான். இது  பற்றி  விசாரிக்க  போலீஸ்  ஸ்டேஷன்  வர  வேண்டும் , இதுதான்  தகவல்


 நாயகி  அதிர்ச்சி  அடைகிறார். அப்போது  தோழியிடம்  இருந்து  ஒரு  ஃபோன்  கால்  வருகிறது . நாயகி  முன்னாள்  காதலனுடன்  எடுத்துக்கொண்ட  ஃபோட்டோவை  இன்ஸ்டாகிராமில்,ஃபேஸ்புக்கில்  போட்டு  நான்காவது  திருமண  நாள்  வாழ்த்துக்கள்  மை  டியர்  மனைவி  என  முன்னாள்  காதலன்  போஸ்ட்  போட்டிருக்கிறான்


முன்னாள்  காதலனின்  அப்பா  ஒரு  அரசியல்வாதி . அவர்  அடியாட்களை  நாயகியின்  வீட்டுக்கு  அனுப்பி  மிரட்டுகிறார். நாயகியின்  வருங்காலக்கணவன்  ஃபோன்  செய்து  விளக்கம்  கேட்கிறான்.


நாயகிக்கு  என்ன  செய்வதென்றே  தெரியவில்லை . இந்தப்பிரச்சனைகளை  எல்லாம்  அவர்  சமாளித்தாரா? இல்லையா?  அவர்கள்  திருமணம்  நடந்ததா? இல்லையா? என்பது  பின்  பாதி  திரைக்கதை 


நாயகி  ஆக  கார்கேயி  எல்லா பிரகேட்  நடித்திருக்கிறார். மெழுகு பொம்மை  மாதிரி  அழகான  முகம், முடிந்தவரை  நன்றாக  நடிக்க  முயற்சி  செய்திருக்கிறார்.  சிரிப்பு , கொஞ்சல்  நன்றாக  வந்த  அளவு  பயம், பதட்டம்  கை  கூடி  வரவில்லை 


ஒன்றரை  மணி  நேரம்  ஓடும்  அளவு  கச்சிதமாக  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்  எடிட்டர் . ஒளிப்பதிவாளருக்கு  சவாலான  வேலை  . ஒரே  ஒரு  காரில்  சாலையில்  பயணிக்கும் நாயகி .  இதை  போரடிக்காமல்  வெவ்வேறு  கோணங்களில்  காட்சிப்படுத்த  வேண்டும் .  திறமையாக  சவாலை  சமாளித்திருக்கிறார்


ஃபோன்  கால்  மூலம்  மட்டுமே  முழுக்கதையும்  நடப்பதால்  குரல்களை  வைத்தே  திரைக்கதையை  நகர்த்த  வேண்டிய  சூழல் .,இயக்குநர்  நன்றாக  சமாளித்திருக்கிறார். 


படத்துகான  ப்ரமோஷனில்  இது  சைக்காலஜிக்கல்  ட்ராமா  என  விளம்பரப்படுத்தப்பட்டதால்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  ஆக  இது  மொத்தமும்  நாயகியின்  கற்பனை  என   பல்டி  அடிப்பார்கள்  என  எதிர்பார்த்தேன். அப்படி  நடக்கவில்லை . 


மாமூல்  மசாலாப்படங்கள்  பார்த்து  சலித்தவர்கள்  இது  போன்ற  வித்தியசமான  கான்செப்ட்டை  வரவேற்கலாம் 


 அமேசான்  பிரைம்  ஓடிடியில்  காணக்கிடைக்கிறது . தமிழ் , தெலுங்கு  ஆகிய  இரு  மொழிகளிலும்  இருக்கிறது 


சபாஷ்  டைரக்டர்


1 படம்  முழுக்க  வெறும்  ஃபோன்  கான்வெர்சேஷன் தான்  என்பதை  சிம்பாலிக்காக  டைட்டிலில்  உணர்த்திய  விதம்  அருமை 


2 படம்  ஆரம்பித்த  அடுத்த  ஐந்தாவது  நிமிடத்துலயே  நாயகியின்  பதட்டம்  பார்வையாளர்களையும்  தொற்றிக்கொள்ள  வைத்த  கச்சிதமான  ரைட்டிங் 

  ரசித்த  வசனங்கள் 


1   எனக்கு  சத்தியத்தின்  மேல  நம்பிக்கை  இல்லை. ஏன்னா  சத்தியம் என்பதே  மீறுவதற்காகத்தான் 


2 சந்தோஷமா  இருக்கும்போது  தைரியமா  இருக்கற மாதிரிதான்  இருக்கும், ஆனா ஒரு  கஷ்டம்  வரும்போதுதான்  நமக்கு  அப்படி  எந்த  தைரியமும்  இல்லைனு தெரியு  வரும்   


3  லவ்  பண்றதுன்னா டெய்லி  ஃபோன்  பண்ணி  குட்மார்னிங்னு  அப்டேட்  குடுக்கறது  இல்லை , சிக்கலான  சூழ்நிலை வரும்போது துணையை  புரிஞ்சுக்கிட்டு   துணையா  இருப்பதுதான்  லவ் 


4  எல்லாருடைய  நி;லைமையையும்  நாம தான்  புரிஞ்சுக்க  வேண்டியதா  இருக்கு , நம்ம  நிலைமையை  யாரும்  புரிஞ்சுக்க  மாட்டேங்கறாங்க 


5  லவ்  பண்றப்ப  எல்லாமே  சந்தோஷமாதான்  இருக்கும், ஆனா  அந்த  சந்தோஷம்  நிலைக்குமா?னு  நமக்கு  அப்போத்தெரியாது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள்

1  சாதாரண  குடிமகள்  ஆன  நாயகியே  அந்த  இன்ஸ்டா  போஸ்ட்  போலி  . சில  வருடங்களுக்கு முன்  எடுக்கப்பட்ட  ஃபோட்டோ  என்பதை  தெரிந்துகொள்ளும்போது  சைபர்  க்ரைம்  போலீஸ்  உதவியுடன்  அது  ஃபேக்  என்பதை  போலீஸ்  கண்டு பிடிக்காதா? 


2   நாயகியின்  ஃபோன்  ஆண்ட்ராய்டு  ஃபோன்.  அப்போதுதான் 15 லட்ச  ரூபாய்  பணம்  அவரது  அக்கவுண்ட்டில்  ட்ரான்ஸ்ஃபர்  ஆகி  இருக்கிறது .அது  போக  அவரது  பர்சனல்  பணமும்  இருக்கும், ஆனால்  நாயகி  டெய்லருக்கு தர  வேண்டிய  5000  ரூபாய்  பணத்தை  ஈசியாக  நெஃப்ட்  பண்ணாமல்  தம்பிக்கு  ஃபோன்  செய்து  கொண்டு  போய்  கொடுக்கச்சொல்வது  ஏன் ? 


3  பஞ்சர்  ஆன  நாயகியின்  கார்  டயர்  எப்படி  மாற்றப்பட்டது  அந்த  நள்ளிரவில்  எப்படி உதவி  கிடைத்தது  என்பதை  காட்சி  ரீதியாகவோ  வசனமாகவோ  காட்டவே  இல்லை    


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  வித்தியாசமான  முயற்சி  தான் ., ஆனால்  எல்லா  செண்ட்டர்  ரசிகர்களுக்கும்  பிடிக்கும் என  சொல்லி  விட  முடியாது .  ஏ  செண்ட்டர்  ஆடியன்சை  கவரும்  ரேட்டிங்  2.25 / 5 

Tuesday, July 11, 2023

வேட்டைக்காரன் (1964) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா ) @ யூ ட்யூப்


வேட்டைக்காரன் படத்தை  விட  சுவராஸ்யமான   சம்பவங்கள்    பட  ரிலீசின்போது  நடந்தன. சிவாஜி  நடித்த  கர்ணன்  படம்  1964  பொங்கல்  ரிலீஸ்  என  அறிவித்தாகி  விட்டது . இயக்கம், தயாரிப்பு   பி  ஆர்  பந்துலு. அதே  தேதியில்  வேட்டைக்காரன்  ரிலீஸ்  என தயாரிப்பாளர்  தேவர்  அறிவித்து  விட்டார். இதில்  கர்ணன்  பிரம்மாண்டமான செலவில்   உருவான  கலர்  படம். வேட்டைக்காரன்  லோ பட்ஜெட்டில்  உருவான  பிளாக்  அண்ட்  ஒயிட்  படம்


ஒரே  தேதியில்  இரு  படங்கள்  வருவதால்  வசூல்  பாதிக்கும்  என  பந்துலு  நினைத்தார். எனவே  சிவாஜியுடன்  கலந்தாலோசித்து  எம் ஜி ஆரை  கர்ணன்  பட  பிரத்யேகக்காட்சிக்கு  அழைத்து  படத்தை  போட்டுக்காட்டினர். படம்  பார்த்து  விட்டு  பிரமாதம்  என  பாராட்டினார்  எம் ஜி ஆர். நைசாக  தள்ளி  வைபது  பற்றி  சொன்னதும்  எம் ஜி ஆர்  தேவரிடம்  சொல்லி  அனுப்புகிறேன்  என்றார் 


 தேவர் - எம் ஜி ஆர்  சந்திப்பில்  தேவர்  படத்தை  தள்ளி  வைப்பதில்  எதிர்ப்பு இல்லை  என்று  கூறி  விட்டார் , ஆனால்  எம் ஜி ஆர்  கருத்து  வேறாக  இருந்தது . இரு  தரப்பும்  ரிலீஸ்  தேதியை  அறிவித்த  பின் இப்போது  பின்  வாங்கினால்  ரசிகர்கள்  எம் ஜி ஆர்  பயந்து  விட்டார்  என  நினைப்பார்கள் . ஜனவரி 14,15,16,17  விடுமுறை  நாட்கள் , நல்ல  வசூல்  வரும். எம் ஜி ஆர்  பிறந்த  நாள்  கொண்டாட்டமும்  ரசிகர்களால்  நடத்தப்படும், எனவே  ரிலீஸ்  தேதியை  தள்ளி  வைத்தால்  ரசிகர்கள்  ஏமாற்றம்  அடைவார்கள்  எ3னவே  எக்காரனம்  கொண்டும்  தேதி தள்ளி  வைக்க  வேண்டாம்  என  கறாராக  கூறி  விட்டார் 


 சிவாஜிக்கு  சொந்தமான  சாந்தி  தியேட்டரில்  கர்ணன் பட  பிரமாண்ட  செட்டுகள்  போர்க்களகாட்சி  போடப்பட்டு  சென்னை  பூரா  அது  பற்றிய  பேச்சாக  இருந்தது . வேட்டைக்காரன் பட  பிரமோக்கு  வித்தியாசமாக  செய்யலாம்  என  எம் ஜி ஆர்  தரப்பு  யோசித்து   சித்ரா  தியேட்டரில்  கானகம்  போல  செட்  அமைத்து  உயிருடன்  ஒரு  புலியை  கூண்டில்  அடைத்து  உலவவிட்டனர் . அப்போது  ரசிகர்கள்  கர்ணன்  செட்  அட்டை , ஆனால்  இது  ஒரிஜினல் புலி  என  பரபரப்பாகப்  பேசினார்களாம்


 பட  ரிலீசில்  கர்ணன்  சுமார்  வெற்றியைப்பெற்றது , வேட்டைக்காரன்  சூப்பர்  டூப்பர்  ஹிட் . ஆனால் தரத்தில்  கர்ணன்  செமயாக  இருந்தது . பல  ஆண்டுகள்  கழித்து  சமீபத்தில்  ரீ ரிலீசில் கர்ணன்  நன்றாக  ஓடியது , பலராலும்  பாராட்டுப்பெற்றது , ஆனால்  ரிலீஸ்  டைமில்  ஓடவில்லை , வேட்டைக்காரன்  சாதாரண  மாமூல்  மசாலா  கதை  என்றாலும்  ஹிட்  ஆனது , 175  நாட்கள்  ஓடியது இதுதான்  நேரம்  என்பது 


 பி ஆர்  பந்துலுக்கு  கர்ணன்  படத்தால்  பண  நட்டம்  ஏற்பட்டது   ல் அந்த  நட்டத்தை  சரிக்கட்ட  எம்  ஜி ஆர்  ஆயிரத்தில்  ஒருவன்  என்று  படம்  பண்ணிக்கொடுத்தார் . அது  செம  லாபத்தை  பந்துலுக்கு  தந்தது . கர்ணன்  நட்டத்தில்  இருந்து  மீண்டார் 


   ஸ்பாய்லர்  அலெர்ட்

 நாயகன்  பெரிய  எஸ்டேட்  ஓனர்  மற்றும்  வேட்டைக்காரர். அவருக்கு  எப்போதும்  கானகத்தில்  சுற்றித்திரிந்து  விலங்குகளை  வேட்டையாடுவதில்  இஷ்டம். இவருக்கு  ஒரு  கல்யாணத்தை  செய்து  வைத்தால் தான்  வீடு  தங்குவார்  என  நாயகனின்  அம்மா  நினைக்கிறார்


நாயகனின்  எஸ்டேட்  மேனேஜர்  தான்  வில்லன். அவன்  ஆள்  இல்லாதபோது  வீட்டுக்குள்  நுழைந்து  சில  பத்திரங்களை , பணத்தை  கொள்ளை  அடிக்க  முயலும்போது  நாயகனின்  அம்மா  பார்த்து  விடுகிறார். ஒரு  கட்டுக்கதை  அழிழ்த்து  விடுகிறான். நானும்  என்  தம்பியும்  ட்வின்ஸ், நீங்க  பார்த்த  திருடன்  என்  தம்பியாக  இருக்கும்  என்கிறான் 


 நாயகன்  நாயகியை  கானகத்தில்  சந்திக்க  இருவருக்கும் காதல் . நாயகன்  வசதியானவர்  என்பதால்   நாயகியின்  அப்பா  திருமணத்திற்கு  சம்மதிக்கிறார் . வில்லனான  எஸ்டேட்  மேனேஜர்  நாயகனைக்கொன்று  விட்டு  நாயகியை  அடைய  நினைக்கிறான் , வில்லனின்  எண்ணம்  நிறைவேறியதா? என்பது  பின்  பாதி  திரைக்கதை 


 நாயகன்  ஆக  எம்  ஜி ஆர் . அவரது  காஸ்ட்யூம்  இதில்  வித்தியாசமாக  இருக்கும்.   தோற்றத்தில் , நடிப்பில்  மாமூல்  தான்.  வழக்கம்  போல தத்துவப்பாட்டு , தனி  நபர்  துதிப்பாட்டு  இதிலும்  உண்டு. எப்போதும் சிரித்த   முகத்துடன்  எனர்ஜெட்டிக்காக  இருப்பது  எம்  ஜி யாரின்  பெரிய  பிளஸ் 


  நாயகி  ஆக  சாவித்திரி .. நடிகையர்  திலகம்  என  நிரூபிக்க  எல்லாம்  இதில்  வாய்ப்பில்லை ,  சும்மா  ஜஸ்ட்  லைக்  தட்  வந்து  விட்டுப்போகிறார், டூயட்  பாடுகிறார், பின் பாதியில்  நோய் வாய்ப்பட்டபின்  நடிக்க நல்ல வாய்ப்பு 


 வில்லன்  ஆக  எம் என்  நம்பியார் . சரியான  வில்லத்தனம் .   அப்பாவி  போல்  முகத்தை  வைத்துக்கொள்வது  அருமை . இன்னொரு  சின்ன  வில்லனாக  அசோகன். உங்க  வீட்டுல  சாப்பிட்டுட்டேன், அதனால  உங்களைத்தாக்க  மனம்  வர்லை  என்ற  வசனம்  எல்லாம்  அக்மார்க்  எம் ஜி ஆர்  டச்


 நாயகியின்  அப்பாவக  எம் ஆர்  ராதா .  சாதாரண  கேரக்டரையே  அசாதரணமாக  சித்தரிக்கும்  வல்லமை  கொண்டவர் 


 காமெடி  டிராக்கிற்கு  நாகேஷ்  - மனோரமா  ஜோடி , இவர்களுக்கு ஒரு  டூயட்  பாட்டும்  உண்டு , பாடும்  வானம்பாடி  படத்தில்  ஆனந்த் ஆபு  போட்ட  பல  ஸ்டெப்களை  அந்தக்காலத்திலெயே  சீட்டுக்கட்டு  ராஜா  பாட்டில்  பிரமாதமாக  போட்டவர்  நாகேஷ் 


 கே வி  மகாதேவன்  இசையில்  7  பாடல்கள் , அவற்றில் 5  செம  ஹிட்  நாயகியைப்பார்த்து  நாயகன்  வர்ணிக்க  வேண்டிய  சூழலில்  கூட  தத்துவப்பாட்டு  பாடுவது  ஆச்சரியமான  விஷயம்




சபாஷ்  டைரக்டர்


1   நாயகனைக்கொல்ல  நாயகனின்  உடையை  சிறுத்தைக்கு  மோப்பம்  பிடிக்கக்கொடுத்து  பழக்கும்  வில்லன் பின்  நாயகன்  ஒரு    சிறுத்தையை  சுட்டதும்  இன்னொரு  சிறுத்தை   பழி  வாங்க  நாயகன்  வீட்டுக்குப்போகும்  என கணித்து  அதற்கு  வழி  வகை  செய்யும்  காட்சிகள்   பரபரப்பானவை 


2   மிக  மிக  சாதாரனமான  ஒரு  கதைக்கருவை  விறுவிறுப்பான  திரைக்கதையால்  வெற்றிப்படம்  ஆக்கிய லாவகம் 


3    காமெடியனுக்கு  ஒரு  சோலோ சாங்க்  டான்ஸ்  கொடுத்து  மேற்கத்திய  பாணி  நடனம்  அமைத்த  விதம் 


  4  காச  நோயால்  பீடிக்கப்பட்ட  நாயகி  தன்  குழந்தைக்கு  தாய்ப்பால்  கொடுக்கக்கூடாது  என்ற  விஷயத்தை  வைத்து  அமைக்கப்பட்ட  செண்டிமெண்ட்  சீன்ஸ்   தாய்க்குலங்களைக்கவரும் விதத்தில்.. 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  உன்னை  அறிந்தால்  நீ உன்னை  அறிந்தால்  உலகத்தில்  போஒராடலாம் ( ஹீரோ - ஹீரோயின்  ஜங்க்சன்  சாங் ) 


2  மஞ்சள்  முகமே  வருக  (  வர்ணனைப்பாடல் )\


3   மெதுவா  மெதுவா  தொடலாமா? (  மேரேஜ்  ஃபிக்ஸ்  ஆனதும்  கொண்டாட்டப்பாடல் )  

4   சீட்டுக்கட்டு  ராஜா  (  காமெடியன்  டூயட் ) 

5   கண்ணனுக்கு எத்தனை  கோவிலோ ?  ( ஹீரோயின்  டவுட்  சாங் ) 

6   கதா நாயகன்  கதை  சொன்னான்  (  டூயட் ) 

7   வெள்ளி  நிலா  முற்றத்திலே  ( தாலாட்டு ) 


  ரசித்த  வசனங்கள் 

1  கணவன்  மனைவிக்கு   பணி  விடை  செய்யக்கூடாது  என்று  சட்டமா? என்ன?  நான்  செய்யப்போகும்  உதவிகளால்  உனக்கு  வந்திருக்கும்  நோய்  ஓடோடிப்போய்விடும் 

2   தாய்ப்பாசத்தை  மறந்து  ஒரு  குழந்தையால்  இருக்க  முடியும், ஆனால்  பெற்ற  பாசத்தை  மறந்து  ஒரு  தாயால்  இருக்க  முடியாது 

3   பெற்றால் மட்டும்  போதுமா?  பேணி  வளர்க்க  வேண்டாமா? 


4  கணவர்  வீட்டுக்குப்போகாதே  என  தந்தை  எப்போதும்  கூற  மாட்டார் , உலக  வழக்கத்தில்  இருந்து   மாறாதீர்கள் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    எந்தக்குழந்தையாக  இருந்தாலும்  அது குழந்தை  செல்வம் தான்  என்னும் கருத்தை  வலியுறுத்த  வேண்டியவர்  இப்படத்தில்  ஆண்  குழந்தைதான்  வேண்டும்  என பிடிவாதம்  பிடிப்பது  அபத்தம் 


2   அவ்வளவு  பெரிய  பணக்காரர்  ஆன  நாயகன்  நோய்வாய்ப்பட்ட  தன்  மனைவியைக்கவனிக்க  ஒரு  நர்சை  நியமித்துக்கொளள  மாட்டாரா? 


3  படம்  முழுக்க  வேட்டைக்காரன்  யூனிஃபார்ம்லயே  சுற்றும்  நாயகன்  ஹாஸ்பிடலில்  பிரசவ  டைமிலாவது  மஃப்டியில்  இருக்க  மாட்டாரா? அப்போதும்  யூனிஃபார்ம் 


4   டீக்கடைக்கு  ரெகுலர் கஸ்டமர்  வருவது  போல  சிறுத்தைப்புலி  அடிக்கடி  நாயகன்  பங்களாவில்  ஹாலை

க்கடந்து  மாடிப்படி  ஏ012றி  பெட்ரூம்  வரை  வருவதெல்லாம்  மரணக்காமெடி.  ஒரு  வாட்ச்மேன்  கூட  இருக்க  மாட்டானா? 


5  விலங்குகளுக்கு  மோப்ப  சக்தி  உண்டு , மனித  வாடையை  அது  சுலபமாக  நுகரும், ஒளிந்து எல்லாம்  அதை  ஏமாற்ற  முடியாது 


6  இந்தக்காலத்து  மாப்பிள்ளைங்க   மனைவிங்கற  ஸ்பேனர்  எடுத்து  மாமனார்ங்கற  நெட்டை  காலி  பண்ணிடறாங்க 






 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   சாதாரண  கதைதான் , கமர்ஷியல் மசாலா  அயிட்டங்கள்  கலந்து  சரி விகிதத்தில்  தந்திருப்பதால்  பார்க்கலாம் , ரேட்டிங்  2.5 / 5 


Vettaikkaran
Vettaikkaran 1964 poster.jpg
Theatrical release poster
Directed byM. A. Thirumugam
Story byAaroor Dass
Produced bySandow M. M. A. Chinnappa Thevar
Starring
CinematographyN. S. Varma
Edited by
  • M. A. Thirumugam
  • M. G. Balu Rao
  • M. A. Mariappan
Music byK. V. Mahadevan
Production
company
Distributed byEmgeeyar Pictures
Release date
  • 14 January 1964
Running time
157 minutes
CountryIndia
LanguageTamil