Thursday, June 08, 2023

BLOOD AND GOLD (2023) - ஜெர்மன் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர் ) @ நெட் ஃபிளிக்ஸ்

 


ஜெர்மனியில்  நிகழ்ந்த  ஃபேண்ட்ட்சி  ஃபிலிம்  ஃபெஸ்டிவலில் 2023 ஏப்ரல் 21  ந்தேதி  அன்று  கலந்து  கொண்ட  இந்தப்படம்  உலகம்  முழுவதும்  மே 26 , 2023  அன்று  திரை  அரங்குகளில்  வெளியானது , இப்போது  நெட்  ஃபிளிக்ஸ்  ஓ டி  டி  யில்  வெளியாகி  உள்ளது 


   ஸ்பாய்லர்  அலெர்ட்


1945 ல்  கதைக்களம்  நிகழ்கிறது .  உலகப்போர்  முடிந்த  தருணம். நாசிப்படை  வீரர்கள்  நாயகனை  சிக்ரவதை  செய்து  தூக்கில்  இடுகிறார்கள் . நாயகனை  நாயகி  காப்பாற்றுகிறார் . இருவருமே  நாசிப்படைகளால்  பாதிக்கப்பட்டவர்கள் 


 நாயகனின்  கர்ப்பவதி  மனைவி , ஒரு  மகள்  இருவரையும்  நாயகன்  கண்  முன்னே  கொலை  செய்தவர்கள்  நாசிப்படையினர் . இதனால்  அவர்களைப்பழி  வாங்கத்துடிக்கிறார்  நாயகன் 


நாயகி  கணவனை  இழந்த  விதவை . தன்  தம்பியுடன்  பண்ணை  வீட்டில்  வசித்து  வருகிறாள்


அந்த  ஊரில்  சர்ச்சில்  பாதிரியார்  ஒரு  தங்கப்புதையலை  சர்ச்சில்  ஒளித்து  வைத்திருக்கிறார்  என்ற  தகவல்  தெரிந்து  படை  வீரர்கள்  அங்கே  வருகின்றனர். தங்கப்புதையலை  மீட்பது   அவர்கள்  லட்சியம் .  வீரர்களைப்பழி  வாங்குவது  நாயகன் , நாயகி  இருவரின்  லட்சியம் , இதில்  யார்  லட்சியம்  நிறைவேறியது  என்பதை  க்ளைமாக்சில்  தெரிந்து  கொள்ளலாம் 


நாயகன்  ஆக  ராபர்ட்  மாசர்  கச்சிதமாக  நடித்திருக்கிறார். துப்பாக்கிக்குண்டு  பாய்ந்த  பின்னும், அவர்  நிகழ்த்தும்  ஆக்சன்  காட்சிகள்  அருமை 


நாயகி  ஆக ஜோர்திஸ் ட்ரிபெல்  அழகாக  நடித்திருக்கிறார்.தம்பி  மேல்  வைத்திருக்கும்  பாசம்  ஆகட்டும் , வில்லன்கள்  மேல்  ஆத்திரம்  கொண்டு  பாய்வதாகட்டும் , பொறுப்பு  உணர்ந்து  நடித்திருக்கிறார்


நாயகனுக்கும், நாயகிக்கும்  காதல்  காட்சிகளோ , ரொமான்சோ  இல்லாதது  ஏமாற்றம்  என்றாலும்  பற்ற  வைத்த  நெருப்புப்;போல  ஆக்ச்ன்  சீக்வன்ஸ்  தொடர்ந்து  வந்து  கொண்டிருப்பதால்  அதை  எல்லாம்  யோசிக்க   நேரமே  இல்லை 


ஜெசிகா  வின்  பின்னணி  இசை  படம்  பார்க்கும்  ஆர்வத்தைத்தூண்டுகிறது , ஸ்டீஃபன்  பர்த்  திரைக்கதை  எழுதி   இருக்கிறார்  , ராபர்ட்  மாசர்  இயக்கி  இருக்கிறார்


100  நிமிடங்கள்  மட்டுமே  ஓடும் இந்தப்படம்   விறுவிறுப்பாக  நகர்கிறது 


சபாஷ்  டைரக்டர்


1  நாயகி  நைட்  டைமில்  கண்  விழித்து  வில்லனின்  கை  விரல்  மோதிரத்தில்  இருந்து  கல்  எடுத்து அதன்  மூலம்  வில்லனை  கொல்லும்  காட்சி  கிளாசிக்


2  சர்ச்சுக்குள்  தங்கத்தைத்தேடி  வில்லன்  கேங்க்  நாயகனை  பிணையக்கைதியாகப்பிடித்து  வைத்திருக்க  அதற்குப்பின்  நிகழும்  ஆச்சன்  சீக்வன்ஸ்  அசத்தல் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  அந்த  வீட்டில்  முதல்  சண்டை  போடும்போது நான்கு  பேரைப்போராடிக்கொல்கிறான், முகம்  எல்லாம் கீறல்  விழுந்து  ரத்தக்காயத்துடன்  இருக்கிறான், அடுத்த  காட்சியிலே  இட்ஸ்  கான், போயிந்தே . நீட்  முகமாக  இருக்கு. 


2   தாக்குதலுக்கு  உள்ளாகி  தப்பிச்சென்ற  வில்லன்  க்ரூப்  மீண்டும்  இதே  வீட்டுக்கு  வருவார்கள்  என்பது  தெரியும், அதனால்  நாயகன், நாயகி , தம்பி  மூவரும்   இடம்  மாறுகிறார்கள் . நாம்  வீட்டு  எருமையையும்  உடன்  அழைத்துச்செல்லலாம்  என  தம்பி  கூறும்போது  அது  முடியாது  என  நாயகி  கூறுகிறாள், சரி , ஆனால்  கட்டப்பட்ட  கயிறை  அவிழ்த்து அதை  எங்காவது  காட்டுக்குள்  அனுப்பி  இருக்கலாமே?  வீரர்கள்  திரும்பி  வரும்போது  யாரும்  இல்லாத  கோபத்தில்  அதை  அழிப்பார்கள்  என  யூகிக்க  முடியாதா? 


3 நாயகியின்  தம்பி  எருமைப்பசு   மீது  அதீத  பாசம்  வைத்திருக்கிறான், அடிக்கடி  அதைப்பற்றியே  பேசுகிறான், நைட்  நிச்சயம்  தனியாக  பசுவைக்காணப்போவான்  என்று  நாயகியால்  ஏன்  யூகிக்க  முடியவில்லை ? 


4  நாயகன்  கையில்  ஆயுதம்  இல்லாத  போது  ஆயுதம்  ஏந்திய  வீரர்கள்  பலரை  தாக்கி  கடந்து  செல்கையில்  அவர்களிடமிருந்து  ஆயுதத்தை  கையில்  எடுத்துச்செல்லலாமே? 


5  நாயகியின்  தம்பியைக்கொலை  செய்த  வில்லன்  எந்த  நம்பிக்கையில்  நாயகியை  தன்  படுக்கை  அறையில்  தன்  அருகே  படுக்க  வைத்து  தூங்குகிறான்? மிட்  நைட்டில்  போட்டுத்தள்ளிடுவா?னு  தெரியாதா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  ஒரே  ஒரு  இடத்தில்  வில்லன்  நாயகியை  வன்புணர்வு  கொள்ள  முயலும்  காட்சி  இருக்கிறது



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஆக்சன்   ரசிகர்கள்  பார்க்கலாம். விறுவிறுப்பாகச்செல்கிறது  ரேட்டிங் 2.5 / 5 



Blood and Gold
Movie poster for Blood and Gold (2023 film).jpg
Directed byPeter Thorwarth
Written byStefan Barth
Produced by
    • Christian Becker
    • Pavel Muller
    • Mark Nolting
    • Amara Palacios
Starring
    • Robert Maaser
    • Jördis Triebel
    • Alexander Scheer
Music by
    • Jessica de Rooij
    • Hendrik Nölle
Distributed byNetflix
Release dates
  • April 21, 2023 (Germany)

  • May 23, 2023 (US)
Running time
100 minutes
CountryGermany
LanguageGerman

Wednesday, June 07, 2023

SISU (2023) -(பின்லாந்து ) - சினிமா விமர்சனம் ( ஆக்சன் டிராமா ) @ அமேசான் பிரைம்

   


   கமர்ஷியலாக  வெற்றி  பெறும்  படங்கள்  விமர்சன  ரீதியாக  பாராட்டைப்பெறாது  என்ற  விதியைத்தகர்த்தெறிந்து  அனைத்துத்தரப்பு  மீடியாக்களால்  பாராட்டுப்பெற்று  விருதுகளையும்  அள்ளிக்குவித்த  படம்  இது  2022 ல்  55 வது  சிட்ஜெஸ் ஃபிலிம்  ஃபெஸ்டிவலில்  கலந்து  கொண்டு   சிறந்த  படம் ,   சிறந்த  நடிகர் , சிறந்த  ஒளிப்பதிவு , சிறந்த  இசை  என  நான்கு  விருதுகளைக்குவித்த  படம்  இது   6  மில்லியன்  பட்ஜெட்டில்  உருவான  இப்படம்  11  மில்லியன்  வசூலித்துள்ளது 


 ஸ்பாய்லர்  அலெர்ட்


1944  ல்  கதை  நடக்கிறது   ஃபின்லாந்து  ஜெர்மனியுடன்  சேர்ந்து ரஷ்யாவை  துவம்சம்  செய்த  காலகட்டம் . 

.நாயகன்  ஒரு  ரிட்டயர்டு  கமாண்டோ .  இவர்  ஃபின்லாந்தை  சேர்ந்தவர். இவர்  ஒதுக்குப்புறமாக  இருக்கும்  மலைப்பிரதேசங்களில்   தன்  குதிரை , நாய்  இவற்றுடன்  வாழ்ந்து  வருகிறார், இவர்  தங்கம்  வேட்டையாடும்  நபர் . அதாவது   தங்கம்  எங்கு  கிடைக்கிறது  என  கண்டறிந்து  அதை  எடுத்து  விற்று  தன்  வாழ்வாதாரத்தைக்கவனிப்பவர் 


இவர்  ஒரு  நாள்   ஆற்று  நீரில்  தங்கத்துகள்களை  எதேச்சையாகப்பார்க்கிறார். சமீபத்தில்  எங்கேயோ  தங்கச்சுரங்கம்  இருப்பதை  அறிகிறார். இடத்தைக்கண்டு  பிடித்துத்தோண்டு  கிறார். பாளம்  பாளமாக  தங்கம்  கிடைக்கிறது , இவரால்  முடிந்தவரை  தங்கத்துண்டுகளை  மூட்டையாகக்கட்டிக்கொண்டு  தன்  குதிரை  மீது  அதை  ஏற்றிக்கிளம்புகிறார், கூடவே  இவர்  நாயும்


அப்போது  ரஷ்யயப்படைகள்  அவரைக்கடந்து  செல்கிறது. பாவம், வயசான  ஆள், அவரே  சாகக்கிடக்கிறார். நாம்  ஏன்  வீணாக  சுட  வேண்டும்  என  ஏளனமாக  ஒரு  வீரன்  கிண்டல்  செய்கிறான்,  ஆனால்  இன்னொரு  இடத்தில்  படை  வீரர்களின்  தலைவன்  நாயகன்  தங்கம்  கொண்டு போவதைக்கண்டறிந்து  நாயகனைத்தாக்க  முனைகிறான்


ஆனால்  அவர்கள்  நினைத்தது  போல  நாயகன்  வயதான  நபர், முடியாதவர்  எல்லாம்  இல்லை , இவர்கள்  அனைவருக்கும்  தண்ணி  காட்டப்போகிறார்  என்பது  அப்போது  தெரியாது . இதற்குப்பின்  நடக்கும்  அமளி  துமளி  ஆக்சன்  சம்பவங்களே  மீதிக்கதை 


நாயகனாக  படம்  முழுக்க  ஆக்சன்  சம்பவங்களை  செய்பவராக  ஜோர்மா  டோமிலா  அசத்தி  இருக்கிறார், அவரது  ஜிம்  பாடி  ஃபிட்னஸ்  வியக்க  வைக்கிறது 

90  நிமிடங்கள்  மட்டுமே  ஓடும்  இப்படம்  ஆக்சன்  விரும்பிகள்  தவறாமல்  காணவேண்டிய  படம் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 



1  கடைசி  10  நிமிடங்களில்  நாயகன்  செய்யும்  ஆக்சன் காட்சிகள்  நம்ப  முடியாதவை , அநியாயத்துக்கு  காதில்  பூ  சுற்றுகிறார்கள் 


2  நாயகன்  குதிரை  மீது  சவாரி  போகும்போது  எதிரிகள்  வெடிகுண்டை  எரிகிறார்கள் , குதிரை  சின்னா  பின்னம்  ஆகிறது . நாயகன்  மட்டும்  தப்பி  விடுகிறார்


3   நாயகன்  உடல்  முழுவதும்  பெட்ரோல்  பட்டு  நனைந்திருக்கிறது , எதிரிகள்  நாயை  ஏவி  விடுகிறார்கள் . நாயிடம்  இருந்து  தப்பிக்க  தன்னைத்தானே  கொளுத்திக்கொள்ளும்  நாயகன்  பின்  நீர்  நிலையில்  குதித்து  உயிர்  தப்பிக்கிறார், இது  ஹைலி  ரிஸ்க்


4  நாயகனை  தூக்கில்  தொங்க  விடும்போது  மூச்சைப்பிடித்து  அசையாமல்  பிணம்  போல்  இருப்பதும்  அவர்  உடலை  ஆட்டிப்பார்த்து  எதிரிகள்  ஏமாறுவதும்  நம்ப  முடியாதவை 





 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  18+ காட்சி  ஒரு  இடத்தில்  இருக்கிறது 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஆக்சன்  பட  விரும்பிகள்  அவசியம்  காண  வேண்டிய  படம்  ரேட்டிங் 2.75 / 5 





Sisu
Sisu ver2.png
United States theatrical release poster
Directed byJalmari Helander
Written byJalmari Helander
Produced byPetri Jokiranta
Starring
CinematographyKjell Lagerroos
Edited byJuho Virolainen
Music by
  • Juri Seppä
  • Tuomas Wäinölä
Production
companies
Distributed by
Release dates
  • 9 September 2022 (TIFF)
  • 27 January 2023 (Finland)
  • 28 April 2023 (United States)
Running time
91 minutes[1]
Countries
  • Finland
  • United States
Languages
  • Finnish
  • English
Budget€ 6 million[a][2]
Box office$11.1 million[3][4]

Tuesday, June 06, 2023

குமரி மாவட்டத்தின் தக்ஸ் - THUGS (2023) - தமிழ் - சினிமா விமர்சனம்

 


 1994 ல்  வெளிவந்து  செம  ஹிட்  ஆன  அமெரிக்கப்படமான த சஷாங்க் ரிடெம்ப்சன்  என்ற  படத்தின்  அன் அஃபிசியல்  ரீமேக் ஆன மலையாளப்படம்   ஆன  ஸ்வாதந்திரம்  அர்த்தராத்திரியில் ( நள்ளிரவில்  சுதந்திரம் ) 2018ல்   ரிலீஸ்  ஆனது . அதனுடய பட்டி  டிங்கரிங் அட்லீ  ஒர்க்  வெர்சன்  தான்  இந்தப்படம்,. டான்ஸ்  மாஸ்டர்  பிருந்தாவின் இரண்டாவது  படம்  இது  . இவர்  ஈரோட்டுக்காரர். டான்ஸ்  மாஸ்டர் பாடும்  வானம்பாடி  மாதிரி  சப்ஜெக்ட்  எடுக்காமல்  ஏன் இது  போன்ற  ஆக்சன்  படங்களை  எடுக்கிறார்  என்பது  தெரியவில்லை 

  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  வீணாப்போன ஆளிடம்  வேலை  செய்கிறார். அங்கே  வேறு  ஏதோ  டொனேஷன்  மேட்டருக்காக   வந்த  வாய்  பேச  முடியாத  மாற்றுத்திறனாளீயான  நாயகியை  சந்திக்கிறார். காதல்  வசப்படுகிறார். இவரது  ஓனரிடம்  வேலை  செய்யும்  வேறு  ஒரு  பொறம்போக்கு  நாயகியை  தொந்தரவு  செய்ய கோபத்தில்  லைட்டா  கொலை  பண்ணிடறார். ஜெயிலுக்குப்போகிறார் 

\

க்ளாஸ்மேட் , ஸ்கூல்  மேட் , ரயில்மேட்  மாதிரி  அங்கே  சில  ஜெயில் மேட்கள்  உருவாகின்றனர் . அந்த வெட்டிப்பசங்களீன் துணையோடு  ஜெயிலில்  இருந்து  தப்பிக்கத்திட்டம்  போடுகிறார். அவரது  திட்டம்  வெற்றி  அடைந்ததா? இல்லையா? என்பது  க்ளைமாக்ஸ் 


நாயகன்  ஆக  புதுமுகம்  ஹிர்து ஹரூன். பெயர் தான்  நம்  வாயில்  நுழைய  மாட்டேங்குதே  தவிர  அவருக்கு  நடிப்பு  நன்றாக  வருகிறது. புதுமுக  நடிகர் போலவே தெரியவில்லை 


நாயகியாக  அனஸ்வரா  ராஜன்  பாந்தமான  முகம்   காதல்  காட்சிகளில்  தெளிவான  நடிப்பு 


நாயகனின்  ஜெயில் மேட்  ஆக  பாபி சிம்ஹா , முனீஷ்  காந்த்  வருகிறார்கள் , பாபி  சிம்ஹா  ஆக்சனுக்கு , முனீஷ்  காந்த்  காமெடிக்கு , இருவரும்  கொடுத்த  வேலையை  கச்சிதமாக  செய்திருக்கிறார்கள் 


ஓனராக  பி எல்  தேனப்பன்  சில  காட்சிகளில் வந்தாலும் மனதில்  நிற்கிறார்.  ஜெயிலர்  ஆக  ஆர்  கே  சுரேஷூம்  வந்து  போகிறார்

நான்  லீனியர்  கட்டில்  திரைக்கதை  ஜெயிலில்  கரண்ட் மேட்டர் , ஃபிளாஸ்பேக்கில்  நடந்த  கதை  என  மாறி  மாறி  பயணிப்பது  சுவராஸ்யம்


ஒரிஜினலை  விட  க்ரிஸ்ப்  ஆக  எடுக்கலாம்  என  நினைத்தார்களோ  என்னவோ ஒரிஜினல்  வெர்சன்  ரெண்டே  கால்  மணி  நேரம்  என்றால்  இவருகள்  2  மணி  நேரத்துக்கும்  குறைவாக  முடித்து  விட்டார்கள் 


ஜெயிலில்  சுரங்கம்  தோண்டும்  காட்சிகள்  எல்லாம்  நம்ப முடியவில்லை. சத்தம்  கேட்காமலா  இருக்கும் ? கைதிகல்  யாரும்  போட்டுக்கொடுக்காமலா  இருப்பார்கள்  ? ரவுண்ட்ஸ்  வரும்  அதிகாரிகள்  கண்ணில்  படாமல்  சுரங்கப்பாதை  தப்பிப்பது  எப்படி  என்ற  கேள்விகள்  வந்து  போகின்றன 


சபாஷ்  டைரக்டர்

1    புதுமுகம்தான்  நாயகன் , நீங்க  சும்மா  மார்க்கெட்டிங்க்காக  புக்  பண்றோம்  என்று  சொல்லாமலேயே  பாபி  சிம்ஹாவை  புக்  பண்ணியது \\


2   விக்கி  பீடியாவில்  கூட  இது  ரீமேக்  படம்  என்ற  தகவல்  வராமல்  பார்த்துக்கொண்டது 


  ரசித்த  வசனங்கள் 


1  தப்பு  பண்ணி  மாட்டி  ஜெயிலுக்கு  வந்தாக்கூட தப்பில்லை , ஆனா  ஜெயிலில்  இருந்து  தப்பிக்கும்போது  மாட்னோம், அவ்ளோவ் தான்  


2  இந்த ஜெயில்  எனக்குத்தாய்  வீடு  மாதிரி , அப்பப்ப  இங்கே  வந்துட்டுப்போவேன்


3  என்னடா? பாட்டெல்லாம்  புதுசா  இருக்கு ?


 பழைய  பாட்டுதான்  சார் , உங்களூக்குப்புதுசாத்தெரியுது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஜெயில்  கைதிகளைப்பார்க்க  வரும் விசிட்டர்கள்  குறிப்பிட்ட  நேரத்தில்  தான்  வர  வெண்டும், ஆனால்  பாபி  சிம்ஹாவின்  மனைவி நினைச்ச  நேரம்  வந்து  அவரை  கட்டிப்பிடித்து  ஆறுதல்  எல்லாம்  சொல்கிறார். எந்த  ஊர்  ஜெயிலில்  இதுக்கெல்லாம்  அனுமதி ? 

2    ஜெயிலுக்கு  ரெகுலர்  விசிட்டர்கள்  பலர்2  இருக்க  முதல்  முறை  வரும்  நாயகனுக்கு  எப்படி  தப்பிக்க  பக்கா  பிளான்  உருவாக்க  முடிந்தது ? அவர்  சிவில்  எஞ்சினியரும் இல்லை 


3  ஜெயிலுக்குள்  எல்லாருக்கும்  டிராயர்  தான் , ஆனால்  நாயகன்  மடும்  லுங்கி  கட்டிக்கொண்டு  லுங்கியில்  இரும்புக்கம்பி  மறைத்துக்கொண்டு  வருகிறார்


4  ஜெயிலுக்குள்  அலுமினிய  பக்கெட்  தான்  தருவாங்க , ஆனா  நாயகன்  செல்லில்  இருக்கும்  அறையில் 50  லிட்டர்   தண்ணீர்  பிடிக்கும் தேக்சா  இருக்கிறது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ  படம்  தான். ஒரு லிப்  லாக்  சீன்  இருக்கிறது 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   நம்ப  முடியாத  காட்சிகள்  கொண்ட  படம் , போர்  அடிக்காமல்  மெதுவாக  போகிறது , டி வி ல  போட்டா  பார்க்கலாம், ரேட்டிங் 2 / 5 


Thugs
Thugs Tamil film poster.jpg
Theatrical release poster
Directed byBrinda
Produced byRiya Shibu
Starring
CinematographyPriyesh Gurusamy
Edited byPraveen Antony
Music bySam C. S.
Production
company
Release date
  • 24 February 2023
CountryIndia
LanguageTamil

Monday, June 05, 2023

தெய்வ மச்சான் (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஃபேண்ட்டசி காமெடி மெலோ டிராமா)

       


விமல்  இதுவரை  நடித்த  படங்களில்   மெகா  ஹிட்  2010 ல்  வெளியான  களவாணி . விமர்சன  ரீதியாக  பாராட்டுக்களை  அள்ளிய  படம்  வாகை  சூடவா (2011) மேலும்  தமிழக  அரசின் சிறந்த  நடிகருக்கான  விருதைப்பெற்றுத்தந்தது , இவரை  பி  அண்ட்  சி  செண்ட்டர்களில் ஹிட்  அடிக்க  வைத்தது  கேடி  பில்லா  கில்லாடி ரங்கா (2012)  , கலகலப்பு ( 2012).  2004  ஆம்  வருடமே  சினி  ஃபீல்டுக்கு  வந்தாலும் 19  ஆண்டுகள்  போராடி   பெயர்  சொல்லும்  படங்களாக நான்கு  படங்களில்  முத்திரை  பதித்திருக்கிறார்.   விலங்கு  வெப் சீரிசும்  இவரது  பேர்  சொன்னது . இந்தப்படமும்  கமர்ஷியலாக  பி  அண்ட்  சி  செண்ட்டர்களில்  ஹிட்  படம் தான் 

 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனுக்கு  ஒரு  தங்கை , அவளுக்கு  திருமணம்  ஏனோ  தள்ளிப்போய்க்கொண்டே  இருக்கிறது . வில்லனான  ஜமீன்  தாரர்  தன்  தம்பிக்காக  நாயகனின்  தங்கயைப்பெண்  கேட்டு  வந்தபோது  கிழ  போல்ட்டும்   வழுக்கைத்தலையனும்  ஆன  மாப்பிள்ளையை  ஏளனம்  செய்து    நாயகன்  திருப்பி அனுப்பி  விடுகிறார். உன்  தங்கைக்கு  திருமணம்  எப்படி  நடக்குதுனு  நானும்  பார்க்கிறேன்  என  வில்லன்  சவால்  விடுகிறான் \


 நாயகனுக்கு  சின்ன  வயசில்  இருந்தே  அடிக்கடி  கனவு  வருகிறது . அந்தக்கனவில்  ஒரு  ஆள்  இன்னார்  இறக்கப்போகிறார்  என  சொல்வார் . அது  கச்சிதமாக பலித்து  விடும் 


நாயகனின்  தங்கைக்கு  இப்போது  நல்ல  இடத்தில்  ஒரு  சம்பந்தம்  வருகிறது . அன்று  இரவு  நாயகனுக்கு  கனவில்  மச்சான்  இறக்கப்போகிறார்  என கனவில்  அந்த  ஆள்  சொல்ல  நாயகனுக்கு  அதிர்ச்சி 


நாயகனின்  தங்கைக்கு  நிச்சயிக்கப்பட்ட  திருமணத்தை  நிறுத்த வில்லனான  ஜமீன் தார்  தன்  ஆட்கள்  மூலம்  சில  சதி  வேலைகள்  செய்கிறார். நாயகனோ  தங்கையின்  கணவனை  தாங்கு  தாங்கு  என  தாங்குகிறார்.  ஒரு  கட்டத்தில்  கனவில்  மச்சானுக்கு  ஆபத்து  என  சொல்லப்பட்ட  தகவல்  தன்னைத்தான்  குறிக்கிறது  என  நாயகன்  உணர்கிறான். இதற்குப்பின்  கதையில்  நிகழும்  காமெடி  சம்பவங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  விமல் .  நடிப்பில்  எந்த  மாற்றமும்  இல்லை . அதே  அலட்டல்  இல்லாத  டயலாக்  டெலிவரி , கிராமத்தானின்  உடல் மொழி , அசால்ட்  ஆக  நடித்திருக்கிறார்


அவரது  அப்பாவாக  ஆர்  பாண்டியராஜன்  ,  பெரிய  அளவில்  காமெடி  பண்ண  வாய்ப்பில்லை   வில்லன்  ஜமீன்  தாரராக  ஆடுகளம்  நரேன் , டம்மி  ரோல் 


 நாயகனின்  நண்பனாக   பால  சரவணன்   அங்கங்கே  காமெடி  செய்கிறார். நாயகி  ஆக  கெஸ்ட்  ரோலில்  நேஹா  ஜா . சமீபத்தில்  கடந்த  50  வருடங்களில்  நாயகியையே  கெஸ்ட்  ரோலில்  வர  வைத்தது  இப்படத்தில்  தான் 

 நாயகனின்  தங்கை  ஆக  புதுமுகம்  அனிதா  சம்பத்  கச்சிதமான  பங்களிப்பு 

கனவில்  வரும்  சாட்டைக்காரனாக  வேல  ராமமூர்த்தி  சில  காட்சிகள்  என்றாலும்  மிரட்டல்  நடிப்பு 


கேமில்  ஜெ  ஆலெக்ஸ்  சின்  ஒளிப்பதிவில்  கிராமிய  அழகைக்கண்  முன்  நிறுத்துகிறார். அஜேஸ்  தன்  இசையில்  இருன்  பாடல்களை  ஹிட்  ஆக்கி  உள்ளார் 


 மார்ட்டின்  நிர்மல்  குமார்  திரைக்கதை  எழுதி  இயக்கி  உள்ளார்  . இரண்டு  மணி  நேரம்  12  நிமிடங்கள்  படம்  ஓடுகிறது . எங்கும்  போர்  அடிக்கவில்லை 



சபாஷ்  டைரக்டர்



1   நாயகனுக்கு  தபால்  கார்த்தி  என்ற  பட்டப்பெயர்  ஏன் வந்தது  என்பதற்கான  விளக்கத்தை  சில  பல   பில்டப்களுக்குப்பின்  சொல்லும் விதம்  அருமை 

2  நாயகனுக்கு  கனவில்  அடிக்கடி  யாரோ  இறப்பதாக  செய்தி  சொல்லப்படுவதும் அது  அப்படியே   நடப்பதும் 2007 ல்  ரிலீஸ்  ஆன  புலி வருது  படத்தில் இருந்து பட்டி  டிங்கரிங்  செய்யப்பட்ட  காட்சி தான்  என்றாலும்  சுவராஸ்யத்துக்குப்பஞ்சம் இல்லை  

3  அடிக்கடி  அய்யய்யோ  என   அபசகுண டயலாக்  பேசும்  அத்தை  கேரக்டர்  டிசைன்  அருமை . அந்த  நடிகை  உடல்  மொழி , டயலாக்  டெலிவரி  எல்லாம்  அசத்தல் 

4  திருமணத்துக்குப்பின்  நடக்கும்  விருந்து  சாப்பாடு  வைபவத்தில்  ஆளாளுக்கு  அழ   அதற்கு  அவர்கள்  ஒவ்வொருவரும் சொல்லும்  காரணங்கள்  காமெடி 

5  நீயும்  என்  பொண்ணு  மாதிரிதான்மா  என  ஆர்  பாண்டியராஜன்  வீட்டு  வேலைக்காரியிடம்   ஒரு  பேச்சுக்கு சொல்ல  நாயகன்  அவரிடம் , அப்பா  அம்மாவுக்கு  துரோகம் பண்ணிட்டியா? என  கேட்கும்  காட்சி 


செம  ஹிட்  சாங்க்ஸ்

1  கல்யாண  மேளம் 

2  பட்டு  வேட்டி  சந்தனம் 


  ரசித்த  வசனங்கள் 


1  மாப்ளை  ஃபோட்டோ ல  பார்த்ததுக்கும்  நேர்ல  பார்க்கறதுக்கும்  ரொம்ப வித்தியாசமா   இருக்காரே?  ஃபோட்டோ  எப்போ  எடுத்தது ?

  25  வருசத்துக்கு  முன்னால 

அய்யோ , அப்போ   என்  தங்கச்சி  பிறக்கவே  இல்லையே ? 


2    உன்  தங்கச்சிக்கு  கல்யாணம்  ஆகறதுக்குள்ளே  உன்  அத்தை  ஒரு  மளிகைகக்டையே  ரெடி  பண்ணிடும்  போல , ஒவ்வொரு  டைம்  இங்கே  வந்துட்டுப்போகும்போதும்  ஏகப்பட்ட  பொருட்களை  இங்கே  இருந்து  ஆட்டையைப்போட்டுட்டுப்போகுது 


4  சரக்கு  அடிக்கத்தான்  உன்  கூடப்பழகுனேன்னு  சொல்றியா? 

அப்போ ஆர்டரைக்கேன்சல்  பண்ணிடவா? 

இல்ல  இல்ல  இருக்கட்டும் 

\5   ஜமீன் தாரர்  பொண்ணு  என்னைப்பார்த்து  சிரிச்சுதேன்னு சந்தோஷப்பட்டா  கடைசில   அது ஜமீன்  தாரரோட சம்சாரமாம் 


6  சாமிக்குப்பொங்கல்  வைக்க  கூட்டிட்டுப்போறியா? எங்களுக்குப்பொங்கல்  வைக்க  கூட்டிட்டுப்போறியா?


7  ஹனிமூனுக்கு  எங்கே  போகப்போறீங்க ?  

கொடைக்கானல்தான்

\அடடா, அங்கே  போனாக்குளிருமே? 


8   உங்க  குடும்பத்தை  அசிங்கப்படுத்தாம  விட  மாட்டேன்

 ஆல்ரெடி  உங்க  குடும்பம்  அசிங்கப்பட்டுதானே  இருக்கு ? 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   கிராமத்து  இளைஞரான  நாயகன்  நைட்  தூங்கும்போது ஜீன்ஸ்  பேண்ட்  ஃபுல்  ஹேர்ண்ட்  சர்ட்  போட்டு  தூங்கறார். லுங்கி , வேட்டி  எல்லாம்  கிராமங்களில்  புழக்காட்டம்  இல்லையா? 

2 வில்லனான    ஜமீன் தாரர்  அவரது  இரண்டு  அடியாட்களை  நாயகன்  வீட்டில்  வேலையாட்களாக  சேர்ந்து  அப்பப்ப  அங்கே நடப்பதை  இங்கே  அப்டேட்டவும்  என  அறிவுறுத்துகிறார். திருமணத்தை  தடுக்க. ஆனால்  அவர்கள் எதையும்  அப்டேட்டவே  இல்லை . திருமணத்தை  தடுக்க  சின்ன  சின்ன  வில்லத்தனங்களைத்தான்  செய்கின்றனர். அது  அவர்களுக்குக்கொடுக்கப்பட்ட  டாஸ்க்  இல்லையே ? 


3  ஒரு  கல்யாணத்தை  நிறுத்தனும்னா  மாப்ளை  அல்லது  பெண்ணைக்கடத்தனும், இந்த  பேசிக்  நாலெட்ஜ்  கூட  இல்லாத  மஞ்ச  மாக்கான்  வில்லன்  பெண்ணின்  அண்ணன்  தலையில்  ஒரு  அடி  போட்டு  மயக்கம் அடைய  வைத்து விட்டால்  திருமணத்துக்கு  அண்ணன்  இல்லாததால்  திருமணம்  நிற்கும்  என  நினைப்பது  கொடுமை 


4  படத்துக்கு  இண்ட்டர்வெல்  பிளாக்  சீனாக  கனவில்  வரும்  ஆள்  மச்சான்  உயிருக்கு  இரண்டு  நாளில்  ஆபத்து  என்று  சொன்னதோடு  கட்  பண்ணி  இருக்க  வேண்டும் , அதை  விட்டு  விட்டு  உப்பு  சப்பில்லாத  மாடு  முட்ட  வரும்  காட்சியில்  இண்டர்வல்  பிளாக்  வைத்தது  ஏனோ ? 


5  வாமிட்  எடுக்கும்  காட்சிகளில்  பொதுவாக  கேமராவை லாங்க்  ஷாட்டில்  பேக்  ஷாட்டாக  இருப்பது  நல்லது, ரியாலிட்டியாக  வைக்கறோம்னு  க்ளோசப்  ஷாட்டில்  முன்னால்  கேமராவை  வைப்பது  உவ்வேக்  


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பி  அண்ட்  சி  செண்ட்டர்  ரசிகர்களைக்கவரும்  எளிமையான  கிராமத்துக்காமெடி  கதை . பார்க்கலாம்  ரேட்டிங் 2.75 / 5 


சென்னிமலை சி.பி. செந்தில்குமார்
நன்றி - அனிச்சம் மின் இதழ் ஜூன் 1


தெய்வ மச்சான்
தெய்வ மச்சான்.jpg
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்மார்ட்டின் நிர்மல் குமார்
எழுதியவர்மார்ட்டின் நிர்மல் குமார்
உற்பத்தி
  • உதய குமார்
  • கீதா உதயகுமார்
  • எம்.பி.வீரமணி
நடித்துள்ளார்
ஒளிப்பதிவுகேமில் ஜே. அலெக்ஸ்
திருத்தியவர்எஸ் இளையராஜா
இசை
  • மதிப்பெண்:
  • அஜேஷ்
  • பாடல்கள்:
  • காட்வின் ஜே. கோடன்
உற்பத்தி
நிறுவனங்கள்
  • உதய் புரொடக்ஷன்ஸ்
  • மேஜிக் டச் பிக்சர்ஸ்
வெளிவரும் தேதி
  • 21 ஏப்ரல் 2023
நாடுஇந்தியா
மொழிதமிழ்



Sunday, June 04, 2023

PACHUVUM ATHBUTHA VILAKKUM (2023) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி மெலோ டிராமா ) @ அமேசான் பிரைம்

     


மினிமம்  பட்ஜெட்டாக  ரூ  10  கோடி    செலவில்  உருவான  இந்தப்படம் பாக்ஸ்  ஆஃபீசில் 15  கோடி  இதுவரை  சம்பாதித்து  உள்ளது , ஓடி டி  ரைட்ஸ் , டி வி  ரைட்ஸ்  லாபம்  தனிக்கணக்கு . ஆக்சன் படங்கள்  அல்லாது  இது  போன்ற  ஃபீல்  குட் மூவிகள்  வசூலில்  அள்ளுவது  ஆரோக்யமான  ரசனை  மேம்படுவதற்கான  அறிகுறி 


   ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஆயுர்வேதிக்  மெடிக்கல்  ஷாப்  வைத்திருக்கிறார். அவர்  கடை  வைத்திருக்கும்  ஷாப்பிங்  காம்ப்ளெக்ஸ்   ஓனர்  ஒரு  முறை  தன்  அம்மாவை  ரயிலில்  துணைக்கு  மும்பை  வர  போகச்சொல்கிறார். அதற்குப்பரிசாக   ஒரு  ஐ ஃபோன்  பரிசு  என்கிறார்.சும்மா  ஜாலியா  ஒரு  ட்ரிப்  போய்ட்டு  வந்தால்  ரூ 60,000   மதிப்புள்ள  ஃபோன்  ஃப்ரீ  என்றால்  கசக்கிறதா? நாயகன்  மகிழ்ச்சியுடன்  சம்மதிக்கிறார்


 பயணத்தில்  கடை  இருக்கும்  ஷாப்பிங்க்  காம்ப்ளெக்ஸ்  ஓனரின்  அம்மா  நாயகனுக்கு  ஒரு  டாஸ்க்  கொடுக்கிறார் . அவருக்குத்தெரிந்த  ஒரு  ஏழைப்பெண் ஒரு  இடத்தில்  பணீப்பெண்ணாக  இருக்கிறார்.வறுமையின் காரணமாக  பணிக்குச்செல்லவேண்டிய  நிர்ப்பந்தத்தில்  அவர்  முழு  மனம் சம்மதம்  இல்லாமல் ஏனோதானோ  என  பணி  செய்கிறார். அவருக்குப்படிக்க  ஆசை , அவரை  அந்த  கும்பலில்  இருந்து  மீட்டுக்கொண்டு  வர  வேண்டும், இந்த  உதவியை  செய்தால்  நாயகன்    வாடகைக்கு  இருக்கும்  கடை  அவருக்கே  சொந்தம்  ஆகி  விடும் .


 நாயகனுக்கு அற்புத  விளக்கு  பூதம்  தந்த  வரம்  மாதிரி  கிடைத்த  இந்த  அதிர்ஷ்ட  வாய்ப்பை  எப்படி   பயன்படுத்தினார்? கூடவே  அவரது  காதல்    என்ன  ஆனது ? என்பதுதான்  படத்தின்  மீதிக்கதை 


பெண்ணுக்கு  கல்வி  எவ்வளவு  முக்கியம் ?  குழந்தைத்தொழிலாளர்  ஒழிப்பு  ஆகிய  இரு  நல்ல விஷயங்களைப்படம்  பேசுகிறது . இது  டாக்குமெண்ட்ரி  ஃபீல்  கொடுத்து  விடக்கூடாது  என்பதற்காக  நாயகனின்  காதல்  சைடு  டிராக்கில்  ஓடுகிறது 


 நாயகன்  ஆக ஃபகத்  ஃபாசில் . கமல்  ஹாசனே  மனம்  திறந்து  பாராட்டிய  நடிகர்  இவர் . என்ன ஒரு யதார்த்தமான  நடிப்பு ? படம்  முழுக்க  டைமிங்  காமெடி  டயலாக்குகள்  வேறு . மனிதர்  பிரித்து  மேய்ந்து  விட்டார்  


நாயகி  ஆக  அஞ்சனா  ஜெயப்பிரகாஷ்.  பாந்தமான  களையான  முகம் . நடிப்பில்  கச்சிதம் ,  கண்ணியமான  உடை  அலங்காரத்தில்  அழகு  பொம்மை  ஆக  வருகிறார். நாயகன்  உடனான  கெமிஸ்ட்ரி  ஒர்க்  அவுட்  ஆகி  இருக்கிறது 


நாயகனின்  அப்பாவாக  முகேஷ் . இவர்  வரும்  காட்சிகள்  எல்லாம்  கலகல தான் . நாயகனின்  கடை  காம்ப்ளெக்ஸ்  ஓனராக  வினீத் . அவரது  அம்மாவாக   விஜி  வெங்கடெஷ்  பக்குவப்பட்ட  நடிப்பு 


அகில்  பாத்யனின்  எடிட்ட்ங்கில் 171   நிமிடங்கள்  படம்  ஓடுகிறது . இன்னும்  ஷார்ப்  ஆக  கட்  செய்து  இருக்கலாம். பாத்திரங்கள்  அறிமுகம் , அவரவர்  கேரக்டர்  விவரிப்பு  போன்றவற்றுக்கே  45  நிமிடங்கள்  எடுத்துக்கொண்டார்கள் .

ஒளிப்பதிவு , இசை  தரம்  அகில்  சத்யன்  தான்  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார். காமெடி  மெலோ டிராமாவாக முதல்  பாதி  போனாலும்  கடைசி  ஒரு  மணி  நேரம்  நாயகன்  நாயகியின்  ரொமாண்டிக்  போர்ஷன்  அட்டகாசம்  

கிரேசி மோகன் பாணீயில் எழுதப்பட்ட டைமிங் ஜோக் காமெடிகள் அற்புதம்



சபாஷ்  டைரக்டர்


1  நாயகனின்  அப்பா  வைத்திருக்கும்  கார்  ஒரு  கேரக்டராகவே  வருவது  படிக்காதவன்  படத்தில்   லட்சுமி  ஸ்டார்ட்  ஆகிடு  என்பதை  நினைவு  படுத்தினாலும்  அந்த  கார்  அடிக்கடி  அசமஞ்சமான  நேரத்தில்  ஹார்ன்  அடிக்கும்  காட்சிகள்  எல்லாமே  காமெடி  களேபரம்


2  முதல்  பாதி  முழுக்க  வானம் , பையா , திருடா  திருடா திருடா  போல  ட்ராவல் ஸ்டோரி   அல்லது  ரோடு  சைடு  ஸ்டோரி  என்றாலும்  போர்  அடிக்காமல்  சுவராஸ்யமாக  நகர்த்திய  விதம் 


3  கடைசி  ஒரு  மணி  நேரம்  ஒரு  ஃபீல்  குட்  லவ்  ஸ்டோரி  பார்ப்பது போல  மனசுக்கு  நெருக்கமான மென்மையான காதல்  காட்சிகள் 



  ரசித்த  வசனங்கள் 

1   நமக்கு   அவனைப்பிடிச்சிருக்குனு  அவனுக்குத்தெரிஞ்சுட்டா  நம்ம  தலைமேல  ஏறி  உக்காந்துக்குவான்


2 உனக்கு  அமைஞ்ச  நல்ல  பொண்ணுங்களை  இல்லாம்  அடுத்து  இதை  விட  நல்ல பொண்ணாக்கிடைக்கும்னு  தட்டிக்கழிச்சே! இப்போ அதுக்கும்  வழி  இல்லாம  இருக்கு 


3  கண்ணியமான , ஜெனியுனான  பெண்கள்  ஒரு  ஆணைக்கழட்டி  விடறாங்கன்னா  நிச்சயம்  ஏதாவது  கச்சிதமான  காரணம்  இருக்கும் 


4  ஃபிரண்டா இருந்தாலும் , தோழியா  இருந்தாலும் , வாழ்க்கைத்துணையா  இருந்தாலும்  அவங்களுக்கான  இடத்தை  நாம  குடுக்கனும், அப்போத்தான்  வாழ்க்கை  ஸ்மூத்த்தா  இருக்கும் 


5  எங்களை  ஞாபகம்  இருக்கா? 


 யா யா \\ யார்னு  சொல்லுங்க  பார்க்கலாம்\


 அது  வந்து .. ஞாபகம் இல்லை \\

 என்  பொண்ணை  பெண்  பார்க்க  வந்தீங்க \\ 


ஆங்.. அப்றம்  ஏன்  மேரேஜ்  நடக்கலை ?  ஜாதகம்  பொருந்தலையா? 


 இல்லை , என்  பொண்ணுக்கு  உங்களைப்பிடிக்கலை 


6  உலகத்தில்  நான் எங்கே  இருந்தாலும்  சண்டேன்னா  அது  தூங்கற துக்கு  மட்டும்தான் 


7   வாட்சப்பால  ஏகப்பட்ட  நன்மைகள் 


 ஆனா  அதுல  வர்றது  பாதிக்கும்  மேல  பொய்கள் தான் 


 சும்மா  இரு  வாட்சப்க்கு  என்னைஏமாற்றி  என்ன  கிடைக்கப்போகுது ?


8  கனவு  காண  ஆகாயம்தான்  பெஸ்ட், ஃபிளைட்  ட்ராவல் 


9  அந்த  டாக்டர்  முள்  எடுக்கறதுல  எக்ஸ்பர்ட், நீங்க  2  மணிக்கு முன்னே  வந்திருந்தா   ஈசியா  அந்த  மீன்  முள்ளை  தொண்டைல  இருந்து  எடுத்திருக்கலாம்\\


 விளையாடாதீங்க , முள்  மாட்டுனதே  ரெண்டு  மணிக்கு  அப்றம் தான்.


10  எங்க  ஓனர்  வர  வேண்டிய  ஃபிளைட்டை  மிஸ்  பண்ணிட்டார் , அடுத்து  மிஸ்  ஆகாத  ஃபிளைட்ல  சீக்கிரம்  வந்துடுவார் 


11  ஸ்பெஷல்  ட்ரெய்ன்  எப்பவும்  லேட்டாதான்  வரும் 


12   சில  ஆட்கள்  வளர  வளர  அவங்க  மனசு  சுருங்கிடும் 


13   குழந்தையா  இருக்கும்போது , சின்னப்பையனா  இருக்கும்போது  எப்படி  இருந்ததோ  அந்த  மாதிரி  அப்பாவி  மனசு  இப்போ  யாருக்கும்  இருக்கறதில்லை 


14   நாளை  போலீஸ்  ஸ்டேஷன்  எப்போ  ஓப்பன்  பண்ணுவாங்க ? \

\

போலீஸ்  ஸ்டேஷன்  எப்பவும்  ஓப்பன்ல தானே  இருக்கும் |?


15   நமக்கு  ரொம்பப்பிடிச்ச  ஒரு  ஆள்  இனிமே  இல்லைனு  ஆகும்போது  நம்மை  அப்படியே  முடக்கிப்போடற  மாதிரி  ஒரு  சோகம்  வரும் 


16  நம்ம  சோகம்  எப்போதும்   நமக்குள்ளேதான்  இருக்கும் , நம்மை  விட்டுப்போகாது நாம  விட்டாதானே  அது  போகும் ? நாம  தான்  எப்பவும்  அதை  நினைச்சுட்டே  இருக்கறமே?


17   எப்பவும்  பணம்  சம்பாதிச்சுட்டே  இருக்கனும்கறது  ஒரு  வியாதி  


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  த  கிரேட்  இண்டியன்  கிச்சன்  க்ளைமாக்சில்  நாயகி  பொங்கி  எழுந்தபோது  கேட்ட  அதே  கேள்வி  இந்தப்பட  க்ளைமாக்சிலும்  கேட்கத்தோணுது . அந்த பணீப்பெண்  ஏன்  அத்தனை  நாட்கள் பம்மி  இருந்து  விட்டு  க்ளைமாக்சில்  மட்டும்  பொங்குகிறார் ?


2  நாயகிக்குத்தெரியாமல்  தன்  ஃபோனை  மறைத்து  வைக்கும்  நாயகன்  அதை  சைலண்ட்  மோடில்  வைக்க மாட்டாரா? யாராவது  கால்  செய்தால்  ரிங்க்  டோன்  காட்டிக்கொடுக்கும்  என  தெரியாதா? 


3  எல்லாக்காதல்  கதைகளிலும்  நாயகிக்கு  அமையும்  பணக்கார  மாப்பிள்ளைகள்  மஞ்ச  மாக்கான்களாகவே  அமைவது  எப்படி ?


4  மெயின்  கதைக்கும்  சபரி  மலை  சாமி  சிறுவன்  கேரக்டருக்கும்  சம்பந்தம்  இல்லை , அந்த  போர்சனைத்தூக்கி  இருக்கலாம் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஃபகத்  ஃபாசில்  ரசிகர்கள் , டைமிங்  ஜோக்  விரும்பிகள் , ரொமாண்டிக் ஸ்டோரி  ரசிகைகள்  அவசியம்  காண  வேண்டிய  ஃபீல்  குட்  காமெடி  மெலோ டிராமா  இது . ரேட்டிங் 3 / 5 


Pachuvum Athbutha Vilakkum
Pachuvum Athbutha Vilakkum.jpg
Theatrical release poster
Directed byAkhil Sathyan
Written byAkhil Sathyan
Produced bySethu Mannarkkad
Starring
CinematographySharan Velayudhan
Edited byAkhil Sathyan
Music byJustin Prabhakaran
Production
company
Full Moon Cinema
Release date
  • 28 April 2023
Running time
171 minutes
CountryIndia
LanguageMalayalam
Budget₹ 10 Crore
Box office₹ 15.00 Crore

Saturday, June 03, 2023

I QUE VIVA MEXICO ( 2023) -ஸ்பானிஷ் - சினிமா விமர்சனம்( பொலிடிக்கல் சட்டயர் பிளாக் ஹ்யூமர் காமெடி மெலோ டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்

 


    டைட்டில் , போஸ்டர்  டிசைன் எல்லாம்  பார்த்து  முதல்ல  பயந்துட்டேன். ஆனா  இது  நல்ல  காமெடிப்படம் . டைட்டிலுக்கு அர்த்தம்  மெக்சிகோ    நீடுழி  வாழ்க . ஆனா  டைட்டிலுக்கும்  கதைக்கும் பெரிய    சம்பந்தம்  இல்லை . இது  பொலிடிக்கல்  சட்டயர் ஃபிலிம்  ஆகவும்  பார்க்கலாம், ட்ரெஷர்  ஆக்சன்  டிராமாவாகவும்  பார்க்கலாம்


 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  தன்  மனைவி , மற்றும்  2  குழந்தைகளுடன்   ஒரு  வசதியான  வாழ்க்கை  வாழ்ந்து  வருகிறான். ஒரு  கம்பெனியில்  ஜெனரல்  ,மேனேஜராகப்பணி  புரிகிறான். இவன்  தன்  அம்மா, அப்பா , தாத்தா  ஆகிய  குடும்பத்தாரை  விட்டு  விலகி  20  வருடங்கள்  ஆகின்றன.


 தாத்தா  இறந்துட்டார்  என்ற  தகவலை  அப்பா  ஃபோன்  பண்ணி  சொன்னதும்  முதலில்  வர  முடியாது  என  தட்டிக்க்ழித்தவன்  பின்  தாத்தா  தனக்கு  எதாவது  சொத்து  எழுதி  வைத்திருக்கலாம்  என  நப்பாசையில்  கம்பெனிக்கு  நான்கு  நாட்கள்  லீவ்  போட்டு  விட்டு  தன்  சொந்த  கிராமத்துக்குப்போகிறான்


  தழுவாத  கைகள்  படத்தில்  ஒரு  பாட்டு  இருக்கும். குடும்பத்தை  உருவாக்கச்சொன்னா  ஒரு  கிராமத்தை  உருவாக்கித்தந்தார்  எங்கப்பா.. அதே  மாதிரி  நாயகனின்  குடும்பம்  மிகப்பெரியது. அவர்களை  எல்லாம்  தன்  மனைவிக்கு  அறிமுகம்  செய்யவே 4  மணி  நேரம்  ஆகிறது 


 தாத்தாவின்  உயில்  படிக்கப்படுகிறது. ஒரு  இன்ப  அதிர்ச்சி , எல்லா  சொத்துக்களையும்  நாயகனுக்கே  எழுதி  வைத்து  விட்டார்  தாத்தா . வீடு  தோட்ட, நிலம் , தங்க  நகைகள்  என  லிஸ்ட் நீளமா போகுது


நாயகனின்  அண்ணன், தம்பி  , தங்கை, அம்மா, அப்பா  , பாட்டி உட்பட அனைவருக்கும்  பொறாமை. எப்படியாவது   சொத்துக்களை   அபகரிக்க  நினைக்கின்றனர் . 


 முதல்  கட்டமாக  அன்று  இரவு  நாயகன்  எங்கும்  வெளியே  போகமுடியாதபடி  அவன் வந்த  காரை  எரித்து  விடுகின்றனர் . செல்  ஃபோன்  நெட்  கவரேஜ்  இல்லாத  வறப்பட்டிக்காடு.. இதற்குப்பின்  நாயகனுக்கு  என்ன  ஆனது?  எப்படி  தப்பித்து  வந்தான்  என்பதே  மீதிக்கதை 


நாயகன்  ஆக  அல்ஃபோன்சா  ஹெராரோ  அட்டகாசமான  நடிப்பு . டைமிங்  காமெடி ,  கோபம், ஆற்றாமை   என  பல  முக  பாவனைகளை  அருமையாக  கொண்டு  வருகிறார் 


லூயிஸ் எஸ்ட்டார்டா  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார்.மூன்று  மணி  நேரத்துக்கு  மேல்  படம்  ஓடினாலும்  ஒரு  சீன்  கூட  போர்  அடிக்கவில்லை , அடுத்து  என்ன  நேருமோ  என்ற  ஒரு  பதைபதைப்பு  இருக்கிறது . நாம்  சின்னவயதில்  படித்த  நீதிக்கதைகள்  பல  இதில்  மறைமுகமாக  சொல்லப்பட்டிருக்கிறது 


 பேராசை  பெரு  நஷ்டம் , ஆக்கப்பொறுத்தவனுக்கு  ஆறப்பொறுக்கவில்லை .10  அடி  தோண்டுனா  தண்ணி  வர்ற  கிணறுல  எட்டு  அடி  தோண்டிட்டு  தண்ணீர்  வர்லைன்னு  வேற  இடத்துல  தோண்ட  ஆரம்பிச்ச  கதையாக  பல  கதைகள் , பழமொழிகள்  நினைவு  வருகின்றன


அரசியல்  அமைப்புகள் , பெண்களின்  சாதுர்யம் , வஞ்சனை  எல்லா  வகையான   விஷயங்களையும் காமெடியாக  சொல்லி  இருக்கிறார்கள் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  மூன்று  இடங்களில் இருக்கிறது . நெட்  ஃபிளிக்சில்  காணக்கிடைக்கிறது 



சபாஷ்  டைரக்டர்

1  நாயகன்  தன் குடும்பத்துடன்  சொந்த  ஊர்க்குச்செல்லும்  வழியில்  இரு  திருடர்கள் வழி  மறித்துக்கொள்ளை  அடிக்க  பின்  அவர்களீல்  ஒருவன்  டேய்  என்னை  தெரியலையா? நாம  ரெண்டு  பேரும்  அஞ்சாங்கிளாஸ்ல  ஒண்ணாப்படிச்சோமே? என  சொல்லி  வழிப்பறி செய்ததை  திருப்பித்தரும்  காட்சி 


2 ஜெயிலில்  மாட்டிக்கொண்ட  நாயகன்  வெளி  வர  ஜெயிலர் , ஜட்ஜ்  உட்பட  எல்லோருக்கும்  கப்பம் கட்ட  வெண்டி  வரும்  நாயகன்  நிலைமை 


3   நாயகனின்  பணிப்பெண்  கிராமத்தில்  நாயகனின்  சகோதரனையே  கரெக்ட்  பண்ணி  அங்கேயே  செட்டில்  ஆகும்  தருணத்தில் நான்  வேணா  என்  தங்கையை  உங்க  வீட்டுக்கு  வேலைக்கு  அனுப்பட்டா? என  கேட்க  வேணாம்மா  இன்னொரு  மருமகளை  வேற  குடும்பத்துல  எடுத்துக்கறோம்  என  கூலாக  நாயகன்  சொல்லும் தருணம் 


4  போலீஸ்  கேசில்  மாட்டிய  நாயகனின் சகோதரனை  பெரும்  பண்ம்  கொடுத்து  மீட்ட  நாயகனுக்கு  நன்றி  தெரிவிக்க சகோதரன்  மனைவி  நடந்து  கொள்ளும்  விதம் 


5  நாயகனுக்கு  அடிக்கடி  கனவு  வந்து  திடுக்கிட்டு  விழிப்பது  எது  கனவு  எது  நிஜம் என்ற  குழப்பம்  வந்தாலும் செம  சுவராஸ்யம் 


  ரசித்த  வசனங்கள் 


1  உங்க  வீட்ல  இருக்கறவஙகளுக்குக்கொஞ்சம் கூட  பொறுப்பே  இல்லை , இந்த  முக்கியமான  பார்ட்டிக்கு  அவங்களை எதிர்பார்த்தேன்


 சார், நான்  சின்னக்குழந்தையா  இருக்கும்போதே  என்  அம்மா  , அப்பா  இறந்துட்டாங்கனு  ஏற்கனவே  உங்க  கிட்டே  சொல்லி  இருக்கேன்

2  அடியே , என்  க்ரெடிட்  கார்டுக்கு  மட்டும்  வாய்  இருந்தா  அய்யோ  அம்மா  என்னை  விட்டுடுனு  கதறி  இருக்கும்


 பொண்டாட்டிக்காக  புருசன்  செலவு  பண்ணுனாதான்  அவனுக்கு  மரியாதை 


3  மகனே!  ஒரு  அதிர்ச்சியான  செய்தி   சில  நாட்களுக்கு  முன்  உன்   தாத்தா  இறந்துட்டார் 


 அய்யய்யோ, அவருக்கு  சுமாரா  என்ன  வயசு  இருக்கும்,


 அனேகமா  120 க்கு ம்  மேல  இருக்கும்னு  நினைக்கறேன்

4    அரசியல்வாதிகளுக்கு  வாய்  ஜாஸ்தி  ஆகிடுச்சு, கடவுளுக்கு  நிகரா  தன்னை உயர்த்திபேசிக்கறாங்க . பணக்காரங்க  கிட்டே  இருக்கும் காசை  ஏழைகளுக்கு  தரனும்னு  டயலாக்ஸ்  வேற.. கேட்டு  கேட்டு  சலிச்சிடுச்சி


5   சார், 3  வாரம்  லீவ்  வேணும்


 யோவ் , ஓனர்  நானே  அவ்ளோ  நாள்  லீவ்  எடுத்ததில்லை 


6   ஏம்மா, கேட்கறேன்னு  தப்பா  நினைக்காத , என்  சொந்த  ஊர்  போற  ரூட்டைப்பார்த்தா  உன்  கிராமம்  நினைவுக்கு  வருமே?


 சார் , சொல்றேனேனு  தப்பா  நினைக்காதீங்க . நான்  உங்க  வீட்டு  வேலைக்காரிதான், ஆனா  எங்க  ஊர் இவ்ளோ  கேவலமா  இருக்காது 


7   இவதான்  உன்  வீட்டு  வேலைக்காரியா? 


 அப்பா, அது  அவுட்  ஆஃப்  ஃபேஷன் , டொமெஸ்டிக்  ஒர்க்கர் 


8  டியர் , உங்க  குடும்பத்தைப்பத்தி நான்  தப்பா  நினைச்சதுக்கு  மன்னிச்சுடுங்க , ஆனா  நான்  நினைச்சதை  விட  உங்க   குடும்பம்  படு  கேவலமா  இருக்கு 

9   நான்  கிராமத்துலயே  இருந்துட்டதால   நகரத்தைச்சுத்திப்பார்த்ததே இல்லை , எனக்காக  மெக்சிகோவை  சுத்திக்காட்ட  முடியுமா?

 மிஸ், சான்ஸ்  கிடைச்சா  உனக்காக  எதை  வேணாலும் காட்டத்தயாரா  இருக்கேன் 


10  இப்படியே தோண்டிட்டே  இருந்தா  மெக்சிகோ  வில்  இருந்து  சீனா  போய்டுவோம்னு  நினைக்கறேன்


11  பாட்டி , இந்த  மண்டை  ஓடு  உன்  கள்ளக்காதலனுடையதுனு  எப்ப்டி  சொல்றே>?


 அவன்  கூட  டேட்டிங்  போனப்ப  தாத்தா  அவனை  எட்டு  தடவை  சுட்டாரு  அதுல  ஒரு  குண்டு  அவன்  மண்டைல  பட்டுது 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  தன்  காரில்  தப்பிச்செல்லாமல்  இருக்க  அவர்  காரை  குடும்பத்தினர்  எரித்தது  ஓக்கே , ஆனால்  அவர்கள் வீட்டுக்குள்  இருக்கும்  தங்கக்கட்டிகள் , நகைகள்  எல்லாவற்றையும்   விட்டு  விட்டா  அசால்ட்டா  போவாங்க ? குடும்பத்தினர்  எண்ணிக்கையே   20 பேருக்கு  மேல்  இருக்கும். சதி  ஆலோசனை   நடக்கும்  இடத்தில்  பாதிப்பேர்  நகைகள்  இருக்கும்  இடத்தில்  காவலுக்குப்பாதிப்பேர்  வேண்டாமா?


 2  தாத்தா   தன்  சொத்துக்கள்  எல்லாவற்றையும் நாயகனுக்கு  மட்டும்  ஏன்  எழுதி  வைத்தார் ? என்பதற்கு  சரியான  காரணங்கள்  இல்லை , இத்தனைக்கும்20  வருடங்களாக  தாத்தாவைப்பார்க்க  நாயகன்  வரவெ  இல்லை . மற்றவர்கள்  கூடவே  இருக்காங்க 


3  புதையலை  எடுக்க  நாயகி  ம்ண்வெட்டி  அல்லது  கடப்பாரையை  வேறு  இடத்தில்  இருந்து  வாங்கி  வர  மாட்டாரா? லூஸ்  மாதிரி   பாட்டி  வீட்டுக்குப்போய்  எடுக்க  அவங்க  ஃபாலோ  பண்ணி  கண்டு  பிடிப்பாங்கனு  தெரியாதா?


4 நாயகனின் மனைவி  போதையில்  இருக்கும்போது  கணவனின்  சகோதரனுடன்  இணைந்து விடுகிறார். ஆனால்  அதை  யாரும்  நேரில்  பார்க்கவில்லை. கணவன்  வந்ததும்  உங்க  கிட்டே   ஒண்ணு  சொல்லனும், உங்க சகோதரன்  என்  கிட்டே  தவறா  நடந்து  கொள்ளப்பார்த்தார்  என  ஏன்  சொல்லனும்? கணவன்  கோபப்பட்டு  சகோதரனிடம்  விசாரித்தால்  நாயகி  மாட்டிக்கொள்வாளே? எதுக்கு அந்த  ரிஸ்க் ?


5  அந்த  பீரோ  ஒண்ணும்  ஜீபூம்பா லாக்  சிஸ்டம்  இல்லை , ஈசியா  நெம்பி  நாயகனின்  குடும்பத்தார்  திறந்துடறாங்க . ஆனால்  வக்கீல்  ஏன்  அதை  அடைய  முயற்சி  எடுக்கவில்லை ., அதை நாயகனிடம்  ஒப்படைத்தே  இருக்க  வேண்டியதில்லையே?


6  பொதுவாக  குழி  தோண்டி  புதையலை  வைக்கும்போது  ஒரு அடையாளத்துக்கு  எதையாவது  செடி  மாதிரி நட்டு  வைப்பதுதான்  ஈசி , ஆனால்  சும்மா  ஸ்டெப்  கணக்கு  மட்டும்  வைத்து  அடையாளம் வைத்துக்கொள்வது  ரிஸ்க் 


  அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  மூன்று  இடங்களில் 18+  காட்சிகள்  இருக்கின்றன. குடும்பத்துடன்  பார்க்க  முடியாது 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   முதல் 2  மணி  நேரம்  செம  காமெடியாகவும் , கடைசி  ஒரு  மணி  நேரம்  அடுத்து  என்ன  நடக்குமோ  என்ற  பதை பதைப்பையும்  நம்முள்  கடத்தும்  படம், ஆங்காங்கே மெக்சிகன்  நகரின் அரசியலை  நையாண்டியும்  செய்திருக்கிறார்கள் . அவசியம்  காணவேண்டிய  படம்  ரேட்டிங் 3.25 / 5 




Que viva México!
¡Que viva México! (2023 film) poster.jpg
Theatrical release poster
Directed byLuis Estrada
Written byLuis Estrada
Jaime Sampietro
Produced byAlexa Aroesty
Maynné Cortés
Luis Estrada
Rolf Helbig
Sandra Solares
StarringAlfonso Herrera
Damián Alcázar
Joaquín Cosío
Ana de la Reguera
CinematographyAlberto Anaya
Edited byMariana Rodríguez
Music byNacho Mastretta
Production
companies
Distributed bySony Pictures Releasing International
Release dates
  • March 23, 2023
(Theatrical release)
  • May 11, 2023
(Netflix)
Running time
191 minutes
CountryMexico
LanguageSpanish
Box office$4.2 million[1][2]

Friday, June 02, 2023

ஏபிசி ஜூஸ் என்றால் என்ன? எந்த விகிதத்தில் அதை தயாரிக்க வேண்டும் ? @ கல்கி மின் இதழ் 29/5/2023


ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள் எப்போதும்  பழங்கள், காய்கறிகள், பழச்சாறுகள் என அதிகம் உட்கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். சமீபகாலமாக ஏபிசி ஜூஸ் குடித்தேன் என சமூக வலைத்தளங்களில் ஸ்டேட்டஸ் போடுவது ஃபேஷன் ஆகிவிட்டது. இது என்ன? கேள்விப்படாத ஜூஸ்? என புருவத்தை உயர்த்த வேண்டாம்.

ABC ஜூஸ் என்பது, A ஃபார் ஆப்பிள் + B ஃபார் பீட்ரூட் + C ஃபார் கேரட் மூன்றும் சேர்த்து செய்யப்படும் ஒரு ஜூஸ்.

இவை மூன்றிலும் வைட்டமின் ஏ, பி, சி மற்றும ஏராளமான மினரல்கள் நிறைந்திருக்கின்றன. ABC ஜூஸில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள், ஆன்டி-ஆக்சிடண்ட்டுகள் ஆகியவை நிறைந்திருக்கின்றன.

இது, உடலில் உள்ள கழிவுகளை அகற்றி சருமம் மற்றும் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து பண்புகளால் எடை குறைப்புக்கு உதுவுகிறது.

நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது.

இரத்த ஓட்டத்தை சீராக்குவதால் இதயம் மற்றும் உடல் உறுப்புகளின் செயல்பாடுகளும் சீராக இயங்குகின்றன.

இரத்தசோகை பிரச்சினைக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது.

இதை எந்த விகிதத்தில் தயாரிப்பது? ஆப்பிள் ஒரு முழு பழம் , பீட்ரூட் சிறியது ஒன்று , நான்கு முழு கேரட் இவைகளை  சிறு துண்டுகள் ஆக்கி மிக்சியில் போட்டு அரைத்து எடுத்தால் ஏபிசி ஜூஸ் ரெடி.

இதில் கவனிக்க வேண்டியது பீட்ரூட் அளவு தான். பெரிய பீட்ரூட் போட்டால் குடிக்க ஏதுவாக இருக்காது. எனவே சின்ன சைஸ் பீட் ரூட் போதும் . அஸ்கா சர்க்கரை அலல்து வெள்ளை சர்க்கரை சேர்க்க வேண்டாம். அதே போல் ஐஸ் துண்டும் வேண்டாம். தேவைப்பட்டால் பசும்பால் ஒரு டம்ளர் சேர்த்துக்கொள்ளலாம். பாக்கெட் பால் வேண்டாம். 

இதை எப்போது சாப்பிடுவது? காலை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளலாம். பழங்கள், பழச்சாறுகள் எப்போதும் உணவுக்கு முன் எடுத்துக்கொள்வது சிறந்தது.