Wednesday, May 03, 2023

GURUDEV HOYSALA (2023) -கன்னடம் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்

   


GURUDEV HOYSALA (2023) -கன்னடம் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்


கன்னட பட உலகின் ஆக்சன் ஹீரோ தனஞ்செயா வின் 25 வது படம் இது. இயக்குநர் விஜய் நாகேந்திரா வின் திரைக்கதை இயக்கத்தில் உருவான படம் , 2023 மார்ச் 30 அன்று திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் இப்போது ஏப்ரல் 28 2023 முதல் அமேசான் பிரைம் ல காணக்கிடைக்கிறது இது கர்நாடகாவில் நிகழ்ந்த ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் தயார் ஆனதாக சொல்லப்படுகிறது



ஸ்பாய்லர் அலெர்ட்



நாயகன் ஒரு நேர்மையான போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் .அவருக்கு ஒரு மனைவி உண்டு மர்மமான முறையில் ஒரு ஊர் போலீஸ் ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் காணாமல் போக அந்த கேஸ் பற்றி துப்பு துலக்க நாயகன் அங்கே பணிக்கு அனுப்பப்படுகிறார்



நாயகன் அங்கே போய் துப்பு துலக்கி வில்லன் யார் என கண்டுபிடித்து விடுகிறார். ஆனால் மெயின் கதை இதுவல்ல



வில்லனுக்கு ஒரு மகள் உண்டு . அவளை ஒரு பிறபடுத்தபட்ட இளைஞன் காதலிக்கிறான், ஆனால் அவன் காதல் உண்மையான காதல் இல்லை ஜாதி ரீதியாக தன் சமூகத்தை அவமானப்படுத்திய வில்லனைப்பழி வாங்கவே வில்லனின் மக்ளை காதலிப்பது போல காட்டிக்கொள்கிறான்



இந்த விசயம் தெரியாத நாயகன் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்து விடுகிறான்/ இதற்குப்பின் நாயகன் , வில்லன் வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை



நாயகனாக தனஞ்செயா மும்பை நாயகன் போல மீசை இல்லாமல் வருகிறார். போலீஸ் கெட்டப் என்றால் மீசை இருந்தால்தான் கெத்து என்பது என் தனிப்ப்ட்ட கருத்து , விதிவிலக்கு குருதிப்புனல் கமல் , மங்காத்தா அஜித்



நம்ம ஊர் சூர்யா சாயலில் இருக்கும் நாயகன் பல வீர சாகசங்களை செய்து நாயகன் என தன்னை நிரூபிக்க முயல்கிறார்.அவரது , மனைவியாக அம்ருதா அய்யங்கர் அதிக வாய்ப்பில்லை . கொஞ்ச நேரமே வருகிறார்.



வில்லனாக வருபவரும் அவரது வலது கையும் மிரட்டல் நடிப்பு , ஆனால் தெலுங்கு டப்பிங்க் பட வில்லன்கள் போல் அவர்களை சித்தரித்தது பின்னடைவு



எஸ் கார்த்திக்கின் ஒளிப்பதிவு கச்சிதம், தீபு எஸ் குமாரின் எடிட்டிங்கில் 2 மணி நேரம் 8 நிமிடங்கள் பட்ம் ஓடுகிறது . இன்னமும் க்ரிஸ்ப்பாக கட் பண்ணி இருக்கலாம்



2004 ல் ரிலீஸ் ஆன பரத் நடித்த காதல் படத்தின் சாயல் 60% இருக்கிறது



அஜனீஷ் லோக்நாத் இசையில் இரு பாடல்கள் தேறுகின்றன. பிஜிஎம் போலீஸ் ஆஃபீசர் படங்களுக்கு ஏற்றாற்போல் உள்ளது



தமிழ் சினிமாவில் இருந்து மாறுபட்ட படங்கள் தருவார்கள் என கன்னடம் பக்கம் ஒதுங்கினால் அவர்கள் தமிழ்ப்படத்தில் இருந்து கதையை உருவி தெலுங்குப்பட சாயலில் தந்திருக்கிறார்கள்



அமேசான் பிரைம் ல காணக்கிடைக்கிறது



சபாஷ் டைரக்டர்

1 ரீமேக் உரிமை எல்லாம் வாங்கமல் நைசாக பரத் நடித்த காதல் படத்தின் பட்டி டிங்கரிங் வெர்சன் ஆக எடுத்தது



2 புது முகங்கள் நடிக்க சாதா காதல் கதையாக எடுத்தால் வசூல் வராது என அதில் சாமார்த்தியமாக போலீஸ் கதையை நுழைத்தது



3 இந்திய சினிமாக்களில் முதன் முறையாக போலீஸ் ஸ்ட்ரைக் விசயத்தை கையாண்டது

ரசித்த வசனங்கள்

1 போஸ்ட்மேன் தான் ட்ரான்ஸ்ஃபர் பார்த்து பயப்படுவான், போலீஸ் மேன் இல்லை



2 இவன் ஒரு திருடன் இவனை நம்பாதீங்க ஓடிடுவான்

சார், நான் லவ் பண்ணின பொண்ணுகூடவே ஓடலை, போலீஸ் கிட்டே இருந்து தப்பிச்சா ஓடப்போறேன் ?



3 பேஷண்ட் ஸ் இல்லைன்னா டாக்டர்களுக்கு வேலை இல்லை , கிரிமினல்ஸ் இல்லைன்னா லாயர்ஸ்க்கு வேலை , திருடனுங்க இல்லைன்னா போலீஸ்க்கு வேலை இல்லை

4 நன்றி உள்ள நாயா இருந்தா ஊட்டி விட தய்ங்க மாட்டேன், கடிக்க வர்ற நாயா இருந்தா அழிக்காம ஓய மாட்டேன்



5 ரூபாய் நோட்டில் இரண்டே வகை தான் 1 ஒரிஜினல் 2 கள்ள நோட்டு. எங்கும் லஞ்சப்பணம், ஊழல் பணம்னு தனியா எதுவும் இல்லை

6 கசாப்புக்கடை பல ஆடுகளைப்பார்த்திருக்கும், ஆனா பலி ஆடுகள் அந்த கசாப்புக்கடையை ஒரே ஒரு தடவை தான் பார்த்திருக்க முடியும், இந்த உண்மையை நீ உண்ர்ந்துட்டா பெரிய இடத்துப்பெண்ணைக்காதலிக்க மாட்டே



லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்

1 ஹீரோ பில்டப் சீன்ஸ் தேவை தான் , அதுக்காக ஒரு கடத்தல் லாரி வருது . ஹீரோ தனி ஆளா 18 தடவை சுட்டு பலரை வீழ்த்தறாரு. கூட இருந்த போலீஸ் எல்லாரும் ஜீப் பின்னால ஒளிஞ்சுக்கறாங்க . அவங்க கைல துப்பாக்கி எதுக்கு இருக்கு ? அவங்க சுடற மாதிரி காட்டினா ஹீரோ இமேஜ் டேமேஜ் ஆகிடுமா? இப்போ டைரக்டர் இமேஜ் டேமேஜ் ஆகிடுச்சே?



2 சந்தேகக்க்கேசில் பிடிபட்ட காதல் ஜோடி அடுத்த நாள் எம் எல் ஏ செய்து வைக்கும் திருமண விழாவில் திருமணம் செய்யப்போகும் 25 ஜோடிகளில் ஒரு ஜோடி ., எம் எல் ஏ பெயரை அப்போதே சொல்லி இருந்தால் போலீஸ் விட்டிருக்குமே? ஜோடி ஏன் அதை பற்றி அப்போ சொல்லாமல் ஹீரோ கிட்டே மட்டும் அடுத்த நாள் காலைல சொல்றாங்க ?

3 தொழிற்சாலையில் வேலையை விட்டு தூக்கப்பட்ட தொழிலாளர்கள் லேபர் ஆஃபீஸ்ல தானே புகார் தரனும் ? போலீஸ் ஸ்டேஷன்ல புகார் தர்றாங்க . அதுவும் எழுத்துப்பூர்வமா இல்லாம வாய் வாக்கு மூலமா



4 பல பெண்கள் காணாம போனதா புகார் தரும் கிராம வாசிகள் எழுத்துப்பூர்வமா பேப்பர் ல எழுதித்தராம சும்மா வாயால சொன்னா அதை வைத்து எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் ?



5 ஹீரோவோட மனைவி தனியா வீட்ல இருக்கும்போது பொறுக்கிப்பசங்க 10 பேரு வீட்டு பெட்ரூம் வரை வந்து மிரட்டிட்டுப்போறாங்க , ஆனா அது பற்றி மனைவி வாயே திறக்கலை . கேட்டா அவரு கோபப்படுவாராம்,அய்யகோ

6 வில்லன் வீட்டுக்கே ஹீரோ வந்து மிரட்டிட்டு பலரை அடிக்கறாரு . 50 பேரு அங்கே இருக்காங்க, எல்லாரும் வேடிக்கை தான் பார்க்கறாங்க

7 தாதாவின் மகள் தன் காதலனுடன் இருப்பதைப்பார்த்த அடியாட்கள் அவளை காதலனிடம் இருந்து பிரித்து காரில் தாதா வீட்டுக்கு அழைத்துச்செல்கின்றனர். அடுத்த ஷாட்டில் தாதாவுக்கு மகளின் காதல் விபரம் தெரியும் முன்பே இருவரும் வீட்டை விட்டு ஓடி விட்டதாக வாய்ஸ் ஓவர் சொல்லுது

8 ஹீரோ ஜீப்பில் போகும்போதெல்லாம் பின்னணியில் ஒலிக்கும் பிஜிஎம் மணிரத்னம் இயக்கிய ஆய்த எழுத்து பட ஜனகன்மன பாட்டு மெட்டு

9 காதலனை தாதாவின் அடியாள் பார்த்துடறான், உடனே காதலன் லொக்கேஷன் சேஞ்ச் பண்ணனும் , இல்லைன்னா கெட்டப்பை மாத்தனும், ரெண்டையும் பண்ணாம பேக்கு மாதிரி அதே ஏரியாவில் ஏன் சுத்தறான் >



10 தாதாவின் அடியாள் , ஹீரோ இருவருக்குமே அல்ட்டிமேட் எய்ம் தாதாவின் மகளின் காதலனை பிடிப்பதே, ஆனா பிடிச்ச பின் அவனை முதலில் சிறைப்படுத்தாம அவங்க் ரெண்டு பேரும் கிறுக்க்னுங்க மாதிரி ஃபைட் பண்ணி அவனை கொட்டை விட்டறாங்க

11 வில்லன் தன் மகளின் காதலனை கொலை பண்றான். மகளை கொலை பண்ணிடுனு அடியாளுங்க கிட்டே சொல்லிட்டு போய்டறான். அவனுங்க மக்ள் இறந்துட்டாளா?னு செக் பண்ணாம போயிடறாங்க . கொலைக்கு சாட்சியே அவள்தான்னு தெரியாதா?

12 ஹீரோ பஞ்ச் டயலாக் பேசறதா நினைச்ட்டு வில்லன் கிட்டே போய் உன் மக உயிரோடுதான் இருக்கா, நல்லா மாட்னே நீ அப்டினு வலிய போய் வாயைக்கொடுத்து மாட்டிக்கறான். ஹீரோ சொல்லாம இருந்தா வில்லனுக்கு விசயமே தெரிஞ்சிருக்காது


12 போலீஸ் ஸ்டேஷன்ல வில்லனோட ஆட்கள் வந்து துப்பாக்கி எடுத்து சுடறாங்க, ஆனா போலீஸ் சுடலை



அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - ஏ படம் தான் , ஆனால் வன்முறை , வெட்டு குத்துக்காக



சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பரத் நடித்த காதல் படத்தைப்பார்க்காதவர்கள் பார்க்கலாம். மற்றவர்கள் பார்த்தா கடுப்பாகிடுவாங்க . ரேட்டிங் 2 / 5



Gurudev Hoysala
Gurudev Hoysala.jpg
Official poster
Directed byVijay Naagendra
Written byVijay Naagendra
Produced byKarthik Gowda
Yogi. G. Raj
Starring
CinematographyKarthik. S
Edited byDeepu. S. Kumar
Music byB. Ajaneesh Loknath
Production
company
KRG Studios
Release date
  • 30 March 2023
CountryIndia
LanguageKannada

Tuesday, May 02, 2023

விடுதலை பாகம் 1 (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் ஆக்சன் த்ரில்லர் ) @ ஜீ 5

 


 இப்போதுள்ள  இயக்குநர்க்ள்  பலர்  கதை , திரைக்கதை , வசனம் , இயக்கம்  என  பல  துறைகளில்  முத்திரை  பதிக்கவே  விரும்புகின்றனர் ., இன்னொருவருடைய  கதைக்கு  திரைக்கதை  அமைப்பதை  கவுரவக்குறைச்சலாக  நினைக்கின்றனர் . இவர்களிலிருந்து  மாறுபட்டு  இயக்குநர்   வெற்றி மாறன்  எழுத்தாளர்  ஜெயமோகன்  எழுதிய  துணைவன்  என்ற  சிறுகதைக்கு  திரைக்கதை  அமைத்து  அதை  இரண்டு  பாகங்களாக  வெளியிட  திட்டமிட்டு  உள்ளார். முதல்  பாகம்  தான்  இந்தப்படம்      

1983ல் ராஜசேகர்  இயக்கத்தில் தியாகராஜன் - சரிதா   நடிப்பில்  வெளி வந்த  மலையூர்  மம்பட்டியான் , 1986 ல்  ராமநாராயணன்  இயக்கத்தில்  விஜயகாந்த்-நளினி  நடிப்பில்  வெளி  வந்த  கரிமேடு  கருவாயன் , 1990 ல்  மனோஜ்குமார் இயக்கத்தில் ராம்கி - சீதா  நடிப்பில்  வெளியான  மருத  பாண்டி ,  1994 ல் பிரதாப் போத்தன்  இயக்கி  நெப்போலியன் -சரண்யா  நடிப்பில்  வெளியான சீவலப்பேரி பாண்டி , 1999 ல் வின்செண்ட்  செல்வா  இயக்கத்தில்   முரளி -மீனா  நடிப்பில்  வெளியான  வாட்டாகுடி  இரணியன் ( பின்  சென்சார்  பிரச்சனையால்  டைட்டில் இரணியன் ஆனது )  ஆகிய  படங்களில்  எல்லாம்  போலீசாரால்  தேடப்படும்  ஒரு  ஆள்  ( போராளி , அல்லது  கொள்ளைக்காரன் அல்லது  திருடன் )  மக்களால்  நேசிக்கப்படுபவனின்  கதையை  தந்திருந்தார்கள் , இவை   எல்லாமே  உண்மை  சம்பவங்கள் , வாழ்ந்த  கதா  பாத்திரங்கள் 


அது  போல   வாத்தியார்  என்று  அழைக்கப்படும்  பெருமாள்  என்ற  நபரின்  கதையைத்தான்  இதில்  படமாக்கி  இருக்கிறார்கள் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  போலீஸ்  இலாகாவில்  பணி  புரியும்  சாதாரண  ஜீப்  டிரைவர் அருமபுரி  என  அழைக்கப்படும்  மலையூரில்  கனிமவள  சுரங்கம்  தோண்ட   நம்  இந்திய  அரசாங்கம்  பன்னாட்டு  நிறுவனத்துக்கு  அனுமதி  அளிக்கிறது . ஆனால்  மலை  வாழ்  மக்கள்  வாழ்வாதாரத்தை  பாதிக்கும்  எந்த  ஒரு  செயலையும்  அனுமதிக்காத  மக்கள்  படை  என்னும்  புரட்சிக்குழு வை  வழி  நடத்தும்   தலைவன்  வாத்தியார்  என்னும்  பெருமாள் போலீசுக்கு  சிம்ம  சொப்பனமாக  விளங்குகிறான்.


பாலத்தில்  ரயில்  வரும்போது  குண்டு  வைத்து  தகர்க்கப்படுகிறது . இந்த  தீவிரவாத  செயலை  செய்தது  வாத்தியார்  தான்  என  போலீஸ்  நினைக்கிறது . அவனைப்பிடிக்க  போலீஸ்  சிறப்புப்படை   அங்கே  முகாம்  அடிக்கிறது. ஊர்  மக்களை  விசாரணை  என்னும்  போர்வையில்  போலீஸ்  கொடுமைப்படுத்துகிறது 


 மனசாட்சி உள்ள  போலீசான  நாயகன்  உயர்  அதிகாரியால்  பழி  வாங்கப்படுகிறான் ஊர்  மக்களுக்கு  உதவி  செய்யும்  குணம்  உடைய  நாயகன்  அந்த  ஊர்ப்பெண்  ஒருத்தியை  காதலிக்கிறான் , அவளும் தான் 


 போலீஸ்  விசாரணைக்கு  ஊர்  மக்களை  பிடித்து  சித்ரவதை  செய்யும்  போலீஸ்  நாயகியையும்  நிர்வாணப்படுத்தி  சித்ரவதை  செய்கிறது . நாயகியைக்காப்பாற்ற  நாயகன்  அந்த  போராளிக்குழு  தலைவன்  வாத்தியாரைக்கைது  செய்ய  போலீசுக்கு  உதவுகிறான்


இது  தான்  முதல்  பாகத்தின்  கதை 


கதையின்  நாயகனாக  சூரி . வெண்ணிலா  கபாடிக்குழுவில்  புரோட்டா  சூரி  ஆக  புகழ்  பெற்ற  காமெடி  நடிகரான  இவர்  இப்படத்துக்காக   ஜிம்  பாடி    டெவலப்  பண்ணி  சிக்ஸ் பேக்  எல்லாம்  வைத்து  ஆக்சன்  ஹீரோ  போல  க்ளம்  இறங்கி  இருக்கிறார். ஆனால்  எங்கும்  யதார்த்தத்தை  மீறிய  ஓவர்  ஆக்சன் , பறந்து  பறந்து  அடித்தல்  எல்லாம்  இல்லை . அருமையான  நடிப்பு 


நாயகி  பாப்பு  என்கிற தமிழரசியாக  பவானி ஸ்ரீ   கிராமத்து  அழகியாக  கச்சிதமாக  நடித்திருக்கிறார். இரு  பாடல்காட்சிகளில்  ஒளிப்பதிவாளரின்  கைங்கரியத்தில்  பள  பளப்பான்  மின்னுகிறார் . இவர்  இசை  அமைப்பாளர்  ஜி வி  பிரகாஷின்  உடன்  பிறந்த  சகோதரி 


நாயகனுக்கு உயர்  அதிகாரியாக  சேத்தன்  வெறுப்பை  ஏற்படுத்தும்  பாத்திரம் , கச்சிதமாக  நடித்திருக்கிறார்


இயக்குநர்  கவுதம்  மேனன்  ஸ்பெஷல்  ஆஃபீசராக  கம்பீரம்  காட்டி  இருக்கிறார்


 வாத்தியார்  எனும்  பெருமாள்  கேரக்டரில்  இந்த  பாகத்தில்  விஜயசேதுபதிக்கு  அதிக  வேலை  இல்லை . அடக்கி  வாசித்து  இருக்கிறார்

தலைமைச்செயலாளராக  ராஜீவ்மேனன்  அனுபவம்  மிக்க  நடிப்பை  வழங்கி  இருக்கிறார். அவரது  உடல்  மொழி  பிரமாதம்


 இசைஞானி இளையாராஜாவின்  மெலோடி  இசையில்  செம  ஹிட்டான  இரு  பாடல்கள்  மனதைத்தொடுகின்றன . பின்னணி  இசையும்  அருமை , ஆர்வேல் ராஜின்  ஒளிப்பதிவு  மலைப்பிரதேசங்களின்  அழகை  , கானகத்தின்  இருளை அற்புதமாக  பதிவு  செய்திருக்கிறது


150  நிமிடங்கள்  ஓடும்  படத்தில்  ஒரு இடத்தில்  கூட  சலிப்புத்தட்டவில்லை  என்பது  பிளஸ்


சபாஷ்  டைரக்டர்


1    ஓப்பனிங்  ஷாட்  ஆன  ரயில்  விபத்து  காட்சி   சிங்கிள்  ஷாட்டில்  அருமையான  படப்பிடிப்பு . சமீபத்தில்  எந்த  ஒரு  படத்திலும்  இது  போல  தத்ரூபமான  விபத்துப்பதிவு  வந்ததில்லை (  கடைசியாக  அன்பே  சிவம் ) 


2   நீ  செஞ்சது  தப்பில்லையா? என  சேத்தன்  கேட்கும்போது  தப்பு  தான்யா ஆனால்  அந்த  நிலைமைல  நான்  செஞ்சது  தப்பில்லைய்யா  என  நாயகன்  சொல்லும்  காட்சி  அதகளம் 


3    எப்போப்பாரு  சவ்  சவ்  தானே  உங்க  போலீஸ்  கேம்ப்ல  சாப்பிடறே?  ஒரு  நாள்  வீட்டுச்சாப்பாடு  சாப்பிட்டுப்பாரு  என  நாயகி  நாயகனிட்ம்  சொல்லும்போது  ஒரு  செக்ண்டில்  வந்து  போகும்  இளையராஜாவின்  பிஜிஎம் 


4  வேற  வழியே  இல்லை , மன்னிப்புக்கடிதம் கொடுத்தே  ஆகவேண்டும்  என்ற  நிர்ப்பந்தம் ஏற்படும்போது  லெட்டர்  எழுதி  கொண்டு  போய்  கொடுக்க  முற்பட்டு  பின்  மனசை  மாற்றி  லெட்டரை  நாயகன்  கிழித்துப்போடும்  இடம் 


5   டீ  அல்லது  காபி  டம்ளரை  ஜிவிஎம்  இடம்  கொடுக்க  நாயகன்  அல்லாடும்  காட்சி  அவரது  உடல்  மொழி  அபாரம்,  சார்லி  சாப்ளின்  சாயல்  தெரிந்தாலும்  செம  நடிப்பு 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  ஒன்னோட  நடந்தா....   (  தனுஷ் -அனன்யா பாடிய  பாடல் )  (  என்ன  சொல்லி   பாடுவதோ, என்ன  வார்த்தை  பேசுவதோ  என்ற  என் மன வானில்  பாட்டின்  பட்டி  டிங்கரிங்  ஆக  இருந்தாலும்.. சிறப்பான  பாட்டு 

2   வழி  நெடுக  வாசமல்லி காட்டு  மல்லி   ( இளையராஜா-அனன்யா   பாடிய  பாடல் ) 

3  அருட்பெருஞ்சோதி ( இளையராஜா  பாடிய  பாடல் ) 


  ரசித்த  வசனங்கள் 


1  வன்முறை  என்பது   எங்களுடைய  மொழி  அல்ல,  ஆனா  அந்த  மொழில  தான்  நீங்க  பேசுவீங்கன்னா  அந்த  மொழில யும்  எங்களுக்குப்பேசத்தெரியும் ,ஏன்? நீங்க  எந்த மொழில  பெசினாலும்  அந்த  மொழில  பேசத்தெரியும் 

2  இவ்ளோ  கஷ்டத்திலும்   சந்தோஷமாக இருக்க உன்னாலமட்டும்தான்யா  முடியும் 


சில  பேரைப்பார்க்கப்போறோம்கறதே  சந்தோஷம்  தான்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   போலீசை  ஜென்ம  விரோதியாகப்பார்க்கும் ஊர் , போலீஸ்  யூனிஃபார்மைக்கண்டாலே  நடுங்கும்  மக்கள்  இருக்கும்  ஊர்  அங்கே  போய்  அப்பப்ப    ஹீரோ  போலீஸ்  யூனிஃபார்ம் ல  ஹீரோயின்  கூட  ரொமான்ஸ்  பண்ணிக்கிட்டு  இருக்கார் . ஊர்  மக்கள்  கண்டுக்கவே  இல்லை 


2  நாயகனுக்கு  அவன்  உயர்  அதிகாரிக்கும்  ஆகாது ., கண்  வைக்கிறார்.  பழி  வாங்கப்படுகிறார். ஆனால்  அடிக்கடி  மட்டம்  போட்டுட்டு  நாயகி  பின்னால  சுத்திட்டு  இருக்கார் . இத்தனைக்கும்  ஜீப்  டிரைவர் , எப்படி  டிமிக்கி  கொடுத்துட்டு  வர  முடியும் ? 


3  படம்  முழுக்க  யதார்த்த  நாயகானக  காட்டி  விட்டு  க்ளைமாக்சில்  20  நிமிடங்கள்  ஆக்சன்  ஹீரோவாக  மாறி  விக்ரம்  கமல் போல  அங்கேயும்  இங்கேயும்  எறி  இறங்கி  விழுந்து  புரண்டு  சாகசம்  எல்லாம்  நாயகன்  செய்வது    தனித்துத்தெரிகிறது 


4   பல  இடங்களில்  டாகுமெண்ட்ரித்தனம்  தெரிகிறது,  மெலோ   டிராமா  மாதிரி  காட்சிகள்  அதிகம் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  ஊர்  பெண்கள்  அனைவரையும்  நிர்வாணப்படுத்தும்  காட்சி  ஒரு  பெண்  நிர்வாணமாக  ஓடி  வரும்  காட்சி  என  ப்ளர்  செய்யப்பட்ட  இரு  காட்சிகள்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   வெற்றி  மாறனின்  வழக்கமான  டச்சிங்  காட்சிகள்  குறைவு தான்  என்றாலும்  சூரியின்  யதார்த்த  நடிப்புக்காகவும், இளையராஜாவின்  இசைக்காகவும்,  வேல்ராஜின்  ஒளிப்பதிவிற்காகவும்  பார்க்கலாம் , ரேட்டிங்  3 / 5   ஆனந்த  விக்டன்  மார்க்  45 . மார்ச்  31   2023  திரையில்  வந்த  படம்  இப்போது  ஜீ  5 ல்  கிடைக்கிறது 


நன்றி - அனிச்சம்  மின்னிதழ்


Viduthalai Part 1
Viduthalai Part 1.jpg
Theatrical release poster
Directed byVetrimaaran
Written by
Based onThunaivan
by B. Jeyamohan
Produced byElred Kumar
Starring
CinematographyR. Velraj
Music byIlaiyaraaja
Production
companies
Distributed byRed Giant Movies (Tamil Nadu), Ahimsa Entertainment (UK & Europe)
Release date
  • 31 March 2023[1]
Running time
150 minutes[2]
CountryIndia
LanguageTamil
Budgetest. ₹40 crore[3]
Box officeest. ₹28 crore[4]