Skip to content

Wednesday, March 16, 2016

எமியும் , உமியும் மவுத் கிஸ் அடிச்சா மாஸ்டா, ஆண்ட்ரியா எல்லாம் இனிமே எனக்கு தூசுடா

அதிமுக ஆட்சியை விட மோசமாக இருக்கும் திமுக ஆட்சி : வைகோ # இரண்டுமே மோசமான கட்சிகள் தாம்.மோசமானவங்கள்லயே முக்கியமானவங்க யார்?னு பார்க்கனும்

============

2 668 பேருக்கு ஜெ. உருவத்தை பச்சை குத்தும் நிகழ்ச்சி:# காசு வாங்கிட்டு கட்சி மாறும் சூழல் வந்தா என்ன செய்வீங்க ?யோசிச்சு குத்தவும்

=============


3 ரூ.251 ஸ்மார்ட் ஃபோன்: இதுவரை 7 கோடி பேர் முன்பதிவு; ஒரு போனுக்கு ரூ .31 லாபம்!# போன் தர்லைன்னா.251 ம் லாபம்


============


4 தொகுதிக்கு ரூ.5 கோடி செலவு செய்ய திமுக திட்டம்: # அடேங்கப்பா.கலைஞர் கஷ்டப்பட்டு ஊழல் செஞ்சு சம்பாதிச்ச பணம் எல்லாம் இப்டி அநியாயமா போகுதே


===========

5 ரூ1 ஊதியம் வாங்கிய ஜெ. ரூ55 கோடிக்கு சொத்துகளை வாங்கி குவிக்க பணம் வந்தது எப்படி?: - கர்நாடகா கோர்ட்டில் வக்கீல் தவே" #,சம்பளம் தான் 1,கிம்பளம் பரிசுப்பணம் கணக்கில்லை


=============

6 "என்னம்மா"வை கையில் எடுத்த திமுக.. என்ன செய்யப் போகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்?  # சி.கா -ன்னா மிரட்டலாம், திமுக வை மிரட்ட முடியுமா?


==============

அரசியல் ரீதியான நாடகங்களை நடத்தமாட்டோம்: நடிகர் சங்கம் உறுதி! #  அதுக்குதான்  எங்க தானைத்தலைவர் இருக்காரில்லை?


===============

வாழ்வதற்கு உகந்த இடம்: இந்தியாவில் ஹைதராபாதுக்கு முதலிடம் # அவங்கவங்க சொந்த ஊரே அவங்கவங்க நிம்மதியான வாழ்க்கைக்கு உகந்த இடம்


=================

9  இதுவரை இல்லாத அளவுக்கு கடல் நீர்மட்டம் உயர்வு # நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரம் தான் உயரவே மாட்டேங்குது



=================


10 பூ கேட்கும் மகளிருக்கு, காகிதப்பூவைக் காட்டுவதற்கு ஒப்பானது ஜெ ஆட்சி # அவராவது கைல கொடுத்தாரு, நாம  மக்கள் காதுல  தானே பூ வெச்சோம்


=============


11  மக்கள் கேட்டது வெண்ணெய்;  ஜெ தருவது சுண்ணாம்பு - கலைஞர் # அப்போ மாத்தி கேளுங்க, சுண்ணாம்பு கேளுங்க, வெண்ணெய் கிடைக்கும், மாத்தி யோசி


=================


12  கடலூரில் தினமும் உறவுக்கு அழைத்த கள்ளக்காதலி.. கட்டையால் அடித்து கொன்ற கூலித் தொழிலாளி # செம கட்டை போல, கட்டைல போக, கட்டையாலயெ அடிச்ட்டான்


======================================================



13  ஜெ.வை விடுதலை செய்த கர்நாடகா ஹைகோர்ட் தீர்ப்பு புரிபடாத, முரண்பாடானது- கர்நாடகா # குமார சாமி குபேர சாமி ஆனது   எப்படி?னு விசாரிங்க


================


14 மக்கள்நலக் கூட்டணிக்கு விஜயகாந்த், வாசன் வரவாய்ப்பில்லை... தமிழருவிமணியன்  # அப்போ தமிழ்நாட்டை ஆண்டவராலும் காப்பாற்றமுடியாது,மீண்டும் ஜெதான்


===============


15 பொதுவாழ்வில் ஊழல் செய்ததால்தான் ஜெ.மீது வழக்கு.. வருமான வரிக்காக அல்ல சுப்ரீம்கோர்ட்டில் தவே வாதம் # பெண் என்பதால் சலுகை ஏதும் தந்துடாதீங்க


================


16   எமி ஜாக்சனுடன்  ஒட்டி உறவாடுகிறார் அனிருத்!-செய்தி # எமியும் , உமியும் மவுத் கிஸ் அடிச்சா மாஸ்டா, ஆண்ட்ரியா எல்லாம் இனிமே எனக்கு தூசுடா

=============


17  அ.தி.மு.க.–தி.மு.க.உத்தமர் வேஷம் போடுகின்றன: அன்புமணி # நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்.செய்த ஊழல்களை எண்ணிப்பாருங்கள்


==========


18 ஆர்யாவுடன் எங்கு வேண்டுமானாலும் போகலாம்’-’ திரிஷா # மேரேஜ் பண்ணிக்குவேன்னு டார்ச்சர் தர மாட்டார்.நல்ல கேரக்டர்.

============

19 நான் என்ன பேசுவேனோ என்று மத்திய அரசு பயத்தில் உள்ளது -ராகுல்காந்தி # ஜெயத்தில் உள்ளவர்கள் பயத்தில் உள்ளவர்களாக கருதினால் அது உங்கள் பிழை


===========

20 234 தொகுதிகளிலும் சமக தனித்துப்போட்டி இடும் - சரத் குமார் # சமக = சமத்துவ மக்கள் கட்சி என்பதை தெரிந்த 234 பேரைக்காட்டுங்க பார்ப்போம்

==============

Tuesday, March 15, 2016

ஆதவனை மிஞ்சிய மா தவன் ஆக குறுக்கு வழி

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ வுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அரசியல் களம் இன்னும் சூடு பிடிக்கும்.கேப்டன் திமுக விடம் இன்னும் பிகு பண்ண வசதி


===========



2 அன்புள்ள  ரஜினி காந்த் ல ரஜினிக்கு ஜோடி யாரு?


 அது நினைவில்லை, ஆனா அதுல ரஜினி தூக்கி வளர்த்த பேபி மீனா தான் எஜமான் ல டூயட் பாடுன மீனா

===============


3 உன் முதுகில் குத்துபவனிடம் ஜாக்கிரதையாக இரு!
தன் முதுகில் , கட்சி பச்சை குத்துபவனிடம்  எச்சரிக்கையாக இரு


================

வேதாளம் பட வசூல் துப்பாக்கி வசூலை முந்திவிட்டதாக வரும் தகவல் நம்பகத்தன்மை வாய்ந்தது அல்ல, அதற்கு வாய்ப்பு இல்லை



============


திமுக , அதிமுக இரு கட்சிகளும் மாறி மாறி சேற்றை இரைத்துக்கொள்ளும் இத்தருணம் தான் 3 வது அணி பலம் பெற உகந்த தருணம் # ம ந கூ



============



6 உன் எதிரிகள்  அவர்களுக்குள் அடித்துக்கொள்ளும்போது நீ வேகமாக முன்னேறு



================


7  3 வதாக ஒரு கட்சி நம்மை மீறி வந்து விட முடியாது என்னும் மனோதைரியம் தான் திமுக, அதிமுக இரண்டையும்  தமிழ் நாட்டில்  தொடர்ந்து  ஊழல்புரியவைத்தது



===============



எங்கள் ஆட்சியில் தான் சென்னை வெள்ளத்தில் மிதந்தது, டோட்டல் தமிழகமே டாஸ்மாக் தண்ணியில் மிதக்குது. ராசியான ஆட்சி தொடர வாக்களிப்பீர் இரட்டை இலை



===========



அவனவன் ஒரு லவ்வருக்கே வழி இல்லாம அல்லாடறான், நெட் தமிழன்  ஊருக்கு ஒரு லவ்வர் இல்லையேனு அங்கலாய்க்கறான்



=================


10 ஒரு பொண்ணோட சாதா ட்வீட்டை நெட் தமிழன் வக்ரம்னு சொல்றாப்டி, அதெப்டின்னு விசாரிக்காம வேற  எதையோ சம்பந்தமில்லாம பேசிட்டிருக்கு, ஹய்யோ அய்யோ


================

11 ரயில்ல புக்ஸ் விற்கறவரு  பாத்ரூம் போய்ட்டு வர்றதுக்குள்ளே சமையல் குறிப்பு புக்கின் 40 பக்கத்தையும் ஒரு ஆன்ட்டி செல் ஃபோன் ல க்ளிக்கிக்கிச்சு


===============


12 தங்க தட்டிலையே சோறு போட்டாலும்,
சாப்பாடு நல்லா இருந்தா தான், சாப்பிட முடியும்.னு எந்திரிச்சு வந்துடாதீங்க, நைசா தட்டை சுட்டுடுங்க


===================


13  சம்மர்கட் அடிக்காத போலீசும்
கம்மர்கட் கடிக்காத லேடீசும்
காண்பது அரிது


================

14  அதிகாலையில் தினம் எழுந்து விட்டால் ஆதவனை மிஞ்சிய மா தவன் ஆகிவிடுவீர்!

============

15 உங்கள் எழுத்தில் கண்ணியமும் ,நாகரீகமும் தொடர உங்கள் எழுத்தை உங்கள் அருகில் இருந்து உங்கள் பெற்றோர் கவனிப்பதாக கற்பனை செய்தால் போதும்


=============


16 கவனிக்கப்படாத மெனக்கெடல்கள்..
பெருஞ்சோகம்!
மிஸ்! உங்க புரொபைல்ல "நில்!கவனி! RT செய்! னு போட்ருங்க

==============


17 பிரட் ஒரு பாக்கெட் குடுங்க
ஒயிட் பிரட் வேணாம்.பிங்க் கலர் பிரட் குடுங்க.
யோவ்.அதுக்கு பிங்க் பிரட்டி கேர்ள் தான் பேக்கரி ஓனரா இருக்கனும்


=============

18 திராவிடக்கட்சிகளை எதிர்ப்பதால் நீங்க குறிப்பிட்ட ஜாதிக்கட்சிக்கு ஆதரவா>?

ஜாதியை ஒழிக்க முடியாவிட்டாலும் ஜாதிக்கட்சியை வேரோடு அழிக்க வேண்டும் என்ற முனைப்பு உள்ளவன்


=============


19 நீ செய்த சாதனை,உதவி இவற்றை எல்லாம் நீயே சொல்லிக்காட்டிக்கொண்டிருந்தால் உன் மரியாதையை இழப்பாய்!


===========


20 பணத்துக்காக மட்டுமே/பணத்தை எதிர்பார்த்து மட்டுமே ஒரு படைப்பாளி எழுதுவதாக இருந்தால் இலக்கியவாதிகள், சிற்றிதழ்கள் உருவாகி இருக்க முடியாது


===============

விஜயகாந்த் செல்வாக்கு? - ஸ்பெஷல் சர்வே... ஷாக் ரிசல்ட்! ஜூ வி ரிப்போர்ட்

விகடன் டீம்
விஜயகாந்த்... 15-வது சட்டமன்றத் தேர்தலில் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர். கருணாநிதி vs ஜெயலலிதா என்கிற யுத்தத்தைவிட விஜயகாந்த்தின் ஆதரவு காந்தத்துக்குத்தான் மவுசு அதிகம். அறிவாலயமும் கமலாலயமும் தாயகமும் பாலன் இல்லமும் பி.ராமமூர்த்தி நினைவகமும் தே.மு.தி.க-வின் வரவுக்காகக் காத்துக் கிடக்கின்றன. ‘பழம் நழுவிக்கொண்டிருக்கிறது... பாலில் விழும்’ என கருணாநிதி சொல்ல... ‘தனித்துப் போட்டி’ என தனி ரூட்டில் பயணிக்கிறார் விஜயகாந்த். எந்தக் கூட்டணியிலும் சேராமல் தே.மு.தி.க தலைமையில் கூட்டணி என புதுப் பொங்கல் வைத்திருக்கிறார் விஜயகாந்த். தனித்துப் போட்டி என்ற அறிவிப்பு சட்டமன்றத் தேர்தலில் புதுத் திருப்பம். இந்த அதிரடி அறிவிப்பின் பல்ஸ் எப்படி என அறியாமல் இருக்க முடியுமா? உடனே களமிறங்கியது விகடன் டீம். தேர்தலில் முக்கிய ரோல் வகிக்கும் விஜயகாந்த்தின் செல்வாக்கு எப்படி? என அறியக் கருத்துக்கணிப்பை நடத்தினோம்.
விகடன் செய்தியாளர்கள், போட்டோ கிராபர்கள், மாணவ பத்திரிகையாளர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றி மக்களின் மனசை அறிந்தார்கள். ‘தனித்துப் போட்டி’ என எடுத்த முடிவு, அதனால் ஏற்பட்ட செல்வாக்கு, எதிர்க் கட்சித் தலைவராக விஜயகாந்த்தின் பெர்பாமென்ஸ், விஜயகாந்த்தின் முடிவு யாரைப் பாதிக்கும் என எழுப்பப்படும் விவாதங்களை எல்லாம் கேள்விக ளாக்கினோம். 8,603 பேரை நேரில் சந்தித்தது விகடன் டீம். இதில் 3,270 பேர் பெண்கள். வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என டிஜிட்டல் யுகத்தில் இருந்துகொண்டு  அதையும் பயன்படுத்தாமல் இருந்தால் எப்படி? விகடன் டாட்காம் மூலம் ஆன்லைன் சர்வேயும் மேற்கொண்டோம். 


இதற்காக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மூலம் அறிவிப்பும் செய்திருந்தோம். தமிழகத்தில் இருந்து மட்டும் வாக்களிக்கும் வகையிலும் ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட சர்வேயில் பங்கெடுக்கக் கூடாது என்ற வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இப்படி கட்டுப்பாடுகளோடு ஆன்லைனில் எடுக்கப்பட்ட சர்வேயில் 15,923 பேர் பங்கேற்றனர். நேரடி சர்வே, ஆன்லைன் சர்வே முடிவுகள் கிட்டத்தட்ட ஒத்துப் போயின. இரண்டு முடிவுகளையும் வெளியிட்டிருக்கிறோம். நேரடியாக எடுக்கப்பட்ட சர்வே முடிவுகளை வைத்தே சதவிகிதம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.



‘தனித்துப் போட்டி என்று விஜயகாந்த் எடுத்த முடிவு’க்கு அமோக வரவேற்பு இருந்தது. அவரது முடிவுக்கு 36 சதவிகிதம் பேர் வரவேற்பைத் தெரிவித்திருந்தனர்.

‘கூட்டணி அமைப்பதுதான் பெஸ்ட்’ என 23 சதவிகிதம் பேர் கருத்தைப் பதிவு செய்திருந்தனர் தவறான முடிவு, காலம் கடந்து எடுக்கப்பட்ட முடிவு என மற்ற இரண்டு ஆப்ஷன்களையும் புறந்தள்ளி விட முடியாது. வரவேற்பைக் காட்டிலும் இதன் கூட்டுத் தொகை அதிகம் என்பதையும் உணர முடிகிறது.


‘தனித்துப் போட்டி என்ற அறிவிப்பால் விஜயகாந்த்தின் செல்வாக்குக் கூடியிருக்கிறதா?’ என்பதையும் கேள்வியாகக் கேட்டிருந்தோம். ‘அப்படியேதான் இருக்கிறது’  என மிக அதிகம் பேர் அதாவது 35 சதவிகிதம் பேர் சொல்லியிருந்தார்கள். ‘தனித்துப் போட்டி’ என்பதை வரவேற்றாலும்கூட அதனால் விஜயகாந்த்தின் செல்வாக்குக் கூடவில்லை என்பதைதான் மக்கள் சொன்னார்கள்.

‘எதிர்க் கட்சித் தலைவராக விஜயகாந்த்தின் செயல்பாட்டுக்கு மார்க்  என்ன? என்பதையும் சர்வேயில் கேட்டிருந்தோம். ஃபெயில் என்பதைத்தான் அதிகம் பேர் சொல்லியிருந்தார்கள். ஜஸ்ட் பாஸ் என 26 சதவிகிதம் பேர் சொன்னார்கள். இந்தக் கேள்வியை இதற்கு முன்பு ஜூ.வி. எடுத்த சர்வேக்களிலும் கேட்டிருந்தோம். அதே பதில்தான் இப்போதைய சர்வேயிலும் எதிரொலித்தது. 


‘விஜயகாந்த்தின் முடிவு யாருக்குப் பாதிப்பு?’ என்ற கேள்விக்கு ‘தி.மு.க-வுக்குத்தான்’ என 42 சதவிகிதம் பேர் சொல்லியிருந்தார்கள். ஆறு கேள்விகள் உள்ளடக்கிய இந்த சர்வேயில் மிக அதிகபட்சமாக 42 சதவிகிதம் பேர் கருத்தைப் பதிவுசெய்தது இந்த ஆப்ஷனுக்குத்தான். தி.மு.க-வுக்கு அடுத்து தே.மு.தி.க-வுக்கும் அதற்கு அடுத்து அ.தி.மு.க-வுக்கும் பாதிப்பு எனச் சொல்லியிருந்தனர் சர்வேயில் பங்கேற்றவர்கள்.

‘தனித்துப் போட்டி’ என்ற தே.மு.தி.க-வின் முடிவை வைத்து ‘விஜயகாந்த் முதல்வர் ஆவதை விரும்புகிறீர்களா?’ எனக் கேட்டோம். முடிவு எதிர்மறையாக இருந்தது. 41 சதவிகிதம் பேர் ‘விரும்பவில்லை’ என சர்வேயில் டிக் அடித்திருந்தனர். ‘தேர்தல் நேரத்தில் முடிவு எடுப்பேன்’ என 29 சதவிகிதம் பேர் சொல்லியிருந்தார்கள். 


‘தனித்துப் போட்டியிடும் தே.மு.தி.க-வுக்கு ஓட்டு போடுவீர்களா?’ என்ற முக்கியமான கேள்விக்கு ‘தேர்தல் நேரத்தில் முடிவு எடுப்பேன்’ என அதிகபட்சமாக  39 சதவிகிதம் பேர் சொல்லியிருந்தார்கள்.  



‘போடமாட்டேன்’ என 34 சதவிகிதம் பேர் சொன்னார்கள். தனித்துப் போட்டி என்ற முடிவில் விஜயகாந்த் உறுதியாக இருக்கிறாரா? என்பதை வைத்தே தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கக்கூடிய நிலையில் மக்கள் இருப்பதை உணர முடிகிறது. 



‘‘விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து தனியாகப் போட்டியிட்டபோது அவர் மீது அதீத நம்பிக்கை இருந்தது. எப்போது அவரும் மற்ற கட்சிகளைப்போலவே கூட்டணி சேர்ந்தாரோ அப்போதே நம்பிக்கை இழந்துவிட்டோம்.  அ.தி.மு.க-வுடனும், பி.ஜே.பி-யுடனும் அணி சேராமல் இருந்திருந்தால் இந்தத் தேர்தலில் விஜயகாந்த் மீதான நம்பிக்கை வேறாக இருந்திருக்கும். அதை இழந்துவிட்டார் விஜயகாந்த்’’ என சர்வேயின்போது பலரும் நம்மிடம் சொன்னார்கள். ‘‘இரண்டு மாதங்கள் இழுத்தடித்து இப்போது திடீரென தனித்துப் போட்டி என விஜயகாந்த் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதை முன்னரே அறிவித்திருந்தால் விஜயகாந்த் மீதான நம்பிக்கை கூடியிருக்கும். பேரம் பேசுவதாக எழுந்த புகாரை மிக எளிதாகக் கடந்திருக்கலாம். அதனால், விஜயகாந்த் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார்’’ என்றும் கொதித்தார்கள்.


மக்களிடம் எடுத்த சர்வே முடிவுகளை மக்கள் பார்வைக்கே வைக்கிறோம்.



அட்டை மற்றும் படங்கள்: சு.குமரேசன்

நன்றி - ஜூவி

காதலும் கடந்து போகும் -திரை விமர்சனம்:

‘சூது கவ்வும்’ படத்தின் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந் திருக்கும் படம், ‘பிரேமம்’ புகழ் மடோனாவின் அறிமுகம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருக் கிறது ‘காதலும் கடந்து போகும்’. 2010-ல் வெளியான கொரிய திரைப்படம் ‘மை டியர் டெஸ்பிராடோ’வை அதிகாரபூர்வ மாகத் தமிழில் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குநர் நலன் குமரசாமி.


ஐடி துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுகளுடன் விழுப்புரத்திலிருந்து சென்னைக்கு வருகிறார் யாழினி (மடோனா செபாஸ்டியன்). அவர் வேலை பார்க்கும் நிறுவனம் எதிர்பாராத விதமாக இழுத்து மூடப்படுகிறது. தோல்வியுடன் ஊருக்குத் திரும்பிச் செல்லப் பிடிக்கா மல், தன் ஹாஸ்டலை காலிசெய்துவிட்டு, ஒரு சாதாரண வீட்டில் குடியேறி, தீவிரமாக வேலை தேடுகிறார்.



அவருக்கு எதிர் வீட்டில் கதிர் (விஜய் சேதுபதி) என்ற நல்ல மனம் படைத்த ரவுடி வசிக்கிறார். பார் உரிமையாளர் ஆக வேண்டும் என்பது கதிரின் கனவு. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் நட்பு உருவாகிறது. அந்த நட்பு காதலாக மாறியதா? இருவரின் கனவுகளும் நிறைவேறியதா என்பதுதான் ‘காதலும் கடந்துபோகும்’.


விஜய் சேதுபதி - நலன் குமரசாமி யின் ‘சிரிப்பு ரவுடி’ கூட்டணி இரண்டா வது முறையும் ரசிகர்களைக் கவர்ந் திருக்கிறது. கதாநாயகனின் வழக்கமான பிம்பத்தை உடைத்து ரசிகர்களைச் சிரிக்க வைப்பதில் நலன் வெற்றி பெற்றிருக்கிறார். நாள்தோறும் பார், ரவுடிகள், கட்ட பஞ்சாயத்து எனப் புழங்கிக்கொண்டிருந்தாலும் கதிர் அந்த வட்டத்துக்குள் பொருந்தாமல் நிற்பதை இயக்குநர் அழகாகக் காட்டிவிடுகிறார்.


மடோனாவுக்கும் விஜய் சேதுபதிக் கும் இடையில் உருவாகும் நெருக்கத்தை இயல்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். பார் முதலாளி, அடியாட்கள், போலீஸ் என்ற வலைப்பின்னலையும் யதார்த்தமாகச் சித்தரித்திருக்கிறார். பொறியியல் கல்லூரிகளின் பெருக்கம், பொறியியலாளர்களின் பிரச்சினை ஆகியவற்றையும் திரைக்கதைக்குள் இயல்பாகப் பொருத்திவிடுகிறார்.



படத்தில் நிறைய ஒருவரி வசனங் கள் சிரிக்கவைக்கின்றன. ஆனால், திரைக் கதை எந்தப் பெரிய திருப்பமும் இல்லாமல் நிதானமாக நகர்கிறது. சிரித்துக்கொண்டே இருக்கிறோம். ஒரு கட்டத்தில் படம் முடிந்துவிடுகிறது. வலு வான நெருக்கடி எதுவும் திரைக்கதையில் உருப்பெறவில்லை. எனவே முடிவை நோக்கிய பயணம் மந்தமாகவே உள்ளது. பார்வையாளர்கள் இணைந்து பயணிப் பதற்கான அம்சம் திரைக்கதையில் இல்லாதது ஒரு குறை. நேர்காணலின் போது யாழினிக்காக கதிர் ஏற்படுத்தும் குழப்பங்கள் சிரிப்பை வரவழைத்தாலும் துளிக்கூட நம்பகத்தன்மையோடு அது அமையவில்லை.



விஜய் சேதுபதியை ஒரே மாதிரியாக சிரிப்பு ரவுடி கதாபாத்திரத்தில் பார்ப்பது சற்று போரடித்தாலும், நடிப்பில் சில புதிய பரிமாணங்களையும் இந்தப் படத்தில் பார்க்க முடிகிறது. மடோனாவின் அறிமுகக் காட்சிக்கே ரசிகர்களிடம் விசில் பறக்கிறது. தமிழில் முதல் படம் என்பதைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்குத் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் மடோனா. சமுத்திரக்கனி, கிரண், ஜி.எம். சுரேஷ் எனத் துணைக் கதாபாத்திரங்களின் தேர்வும் படத்துக்குப் பொருந்துகிறது.



சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்தின் பெரிய பலம். ‘ககக ககக ககக போ’ பாடலுக்குத் திரையரங்கம் ஆர்ப்பரிக்கிறது. தினேஷ் கிருஷ்ணனின் கேமரா படத்தை விஷுவல் டிரீட்டாக ஆக்கியிருக்கிறது.


விஜய் சேதுபதி, மடோனாவின் நடிப்பு, இயல்பான சித்தரிப்பு, நகைச்சுவை ஆகிய அம்சங்கள் படத்தின் பலம். பெரிதாக எதுவும் நிகழாமலேயே கடந்து போகும் திரைக்கதை படத்தின் பலவீனம்.


நன்றி - த இந்து

சமூக வலைத்தளத்தில் CLOSE & GO BUTTER னு ஒரு பொண்ணு சொன்னா என்ன அர்த்தம்?

தலைவரே! நீங்க ந கா வா? கு கா வா?

 யோவ்!

அதாவது நக்மா காங்கிரசா? குஷ்பூ காங்கிரசா?


===================


2 சிம்பு, ரஜினி   என்ன வித்யாசம்?

ரஜினி எப்போ அரசியலுக்கு வருவார்?னு யாருக்கும் தெரியாது, சிம்பு படம் எப்போ ரிலீஸ் ஆகும்னு அவருக்கே தெரியாது

===============


3  தலைவர் சரியான அனிரூத் ரசிகர்

இசைப்ரியரா?

  ஆண்ட்ராய்டு ஃபோனைக்கூட ”ஆண்ட்ரியா”ய்டு  ஃபோன் -னு சொல்றாராம்


=============

4   தலைவர்  ரொம்ப அப்பாவியா இருக்காரு

ஏன்?எப்டி?

விடிய விடிய காங்கிரஸ் பிரச்சார கூட்ட்டத்தில் கலந்துக்கிட்டு விடிஞ்சதும் குஷ்பூ சுந்தர் சிக்கு என்ன உறவு?ன்னானாம் அப்டின்னா என்னங்கறாரு


=================

5  தலைவரே!  எதுக்காக பப்ளிக் கா  நமீதா கையைப்பிடிச்சு இழுத்தீங்க?

 அவரை எப்படியாவது நம்ம கட்சிக்கு இழுத்திடுங்கன்னு கட்சி மேலிடம் சொல்லுச்சு


===============


6 தலைவரே! நம்ம கட்சி ல 2 பேருதான் இருக்காங்க, ஆனா பிரம்மாண்டமான கட்சினு சொல்றீங்க?

 நமீதா, ஷகீலா  2 பேரு  இருக்காங்க, போதாதா?


================


7    என்னை முதல்வர் ஆக்காவிடில் மீண்டும் சினிமாவில் நடிப்பேன் என எச்சரிக்கிறேன் 


தலைவரே! இப்டி எல்லாம் மிரட்டி ஓட்டு கேட்கக்கூடாது


=================


8  போன தேர்தல்ல ஓட்டுக்கு 2000 ரூபா கொடுத்தாங்க, இப்போ 3000 ரூபாயாம்

 ஓஹோ! மாற்றம், முன்னேற்றம்?

===============


9  எங்கள் ஆட்சியில் தான் நயன் தாராவின் சம்பளம்  1 கோடியில் இருந்து 2 1/2 கோடியாக உயர்ந்தது, எனவே பொருளாதாரம் சிறக்க, ராசியான ஆட்சி தொடர....


=============


10  சினிமா போஸ்டரை உங்க பையன் முகர்ந்து முகர்ந்து   பார்க்கறானே?  ஏன்?

 சினிமா தான்  அவனுக்கு சுவாசம்னு சொன்னேனே?


==============


11  முதல் அமைச்சர்  வேட்பாளர் யார்? என்பதை இப்போது அறிவிக்க முடியாது, எனவே 2 வது அமைச்சர், 3 வது அமைச்சர் பெயரை மட்டும் இப்போ வெளியிடுவோம்


===============


12  சார், உங்க பையனுக்கு தமிழ் ல அஹ்  மட்டும் எழுத  வர மாட்டேங்குது


 சாரி  டீச்சர், அவன் ஆயுதக்கலாச்சாரத்தை ஆதரிக்க மாட்டான்


===============


13 இண்ட்டர்வ்யூவில்

 உங்க டிகிரி சர்ட்டிஃபிகேட்ஸ் காட்டுங்க

 சாரி சார், ஏதோ  கோபத்தில் யுனிவர்சிட்டிக்கே திருப்பி அனுப்பிட்டேன் # விருது


=================

14  சார், எனக்கு சொந்த ஊரு மதுரை, அதனால அழகிரியை ஆதரிப்பதில் என்ன தப்பு?

 ஓஹோ, அப்போ இலங்கை சொந்த ஊர்னா ராஜபக்சேவை ஆதரிப்பீங்களா?லாஜிக் மிஸ்


=================

15 டியர்! உன்னை நினைத்தேன் கவிதையாய் கொட்டியது..

அது என்ன தேளா? தேனா? கொட்றதுக்கு


===========


16 ஹனிமூனை ஈரோட்ல கொண்டாடாம எதுக்கு ஊட்டி தொட்டபெட்டா ல கொண்டாடறீங்க?

திருமண வாழ்வின் திருப்பு முனை முதல் இரவு னு பந்தாவா சொல்லிக்கலாமில்ல?


=============

17 நீங்க லவ் பண்ற பொண்ணு யாரு?"


ஆன் லைன் ல அப்போதைக்கு யார் வர்றாங்களோ அவங்க


=============


18 தலைவரே! தமிழ் மொழிக்காக இப்பவெல்லாம் போராடறது இல்லையே ஏன்?

2ஜி ஊழல்.வழக்குல இருந்து கனிமொழி யைக்காப்பாத்தவே நேரம் பத்தலை

=============

19 251,ரூபாய்க்கு போன் வித்தா எப்டி கட்டுபடி ஆகும்?

சிம்ப்பிள்.அந்த போனுக்கான.சார்ஜர்.விலை 25,000 ரூபாயாம்.கிகி


=============


20 சமூக வலைத்தளத்தில் CLOSE & GO BUTTER னு ஒரு பொண்ணு சொன்னா என்ன அர்த்தம்?

யோவ்.மூடிட்டுப்போய்யா வெண்ணெய் னு அர்த்தம்.


=================



Monday, March 14, 2016

நட்பதிகாரம் 79 -திரை விமர்சனம்:

தூய்மையான நட்பில் துரோ கத்துக்கு இடமில்லை என்பது தான் ‘நட்பதிகாரம் 79’.


பொறியியல் பட்டதாரியான ஜீவா (ராஜ் பரத்) ஒரு துடிப்பான இளைஞன். பூஜா (தேஜஸ்வி) மீது இவருக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். இவர்களைப் போலவே அரவிந்த் (அம்ஜத்கான்), மகா (ரேஷ்மி) இருவரும் உயிருக்கு உயிராகக் காதலிக்கிறார்கள். ஒரு டிஸ்கோத்தே கிளப்பில் சந்தித்துக் கொள்ளும் இந்த நால்வரும் நண்பர்கள் ஆகிறார்கள். நட்பும் காதலுமாய் வாழ்வைக் கொண்டாட நினைக்கும் இவர்களது வாழ்க் கையில் எதிர்பாராத திடீர் சிக்கல். அவர்களது காதலையும் நட்பையும் சோதிக்கும் இந்தச் சிக்கலிலிருந்து நட்பும் காதலும் பிழைத்ததா என்பதே கதை.


நட்புக்கும் காதலுக்கும் இடையில் வரும் முரண்கள் பல படங்களில் கையாளப்பட்டிருக்கின்றன. அந்தப் பிரச்சினையை ஜோடி மாறாட்டம் வரை கொண்டுசெல்வதுதான் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் புதுமை. ஜோடிகளுக்கிடையில் ஏற் படும் குழப்பம் திரைக்கதையில் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. பிரிவு ஏற்பட்ட பிறகு, கடைசியில் என்னதான் ஆகும் என்னும் ஆவலைத் தூண்டு மளவு திரைக்கதை அமைக்கப்பட்டுள் ளது. ஆனால் குழப்பம் ஏற்படுவதற்கான காரணமும் அந்தச் சிக்கல் தீரும் விதமும் பலவீனமாக இருப்பதுதான் ஏமாற்றமளிக்கிறது.



முதன்மைக் கதாபாத்திரங்கள் நால்வரும் கைக்குலுக்கலில் தொடங் கும் நட்பை, ஆழப்படுத்திக் கொள் ளும் காட்சிகள் ஒன்றிரண்டு இருந்தாலும் அவை ஏனோதானோ வென்றே இருக்கின்றன. காதலர்கள் இருவரும் தங்கள் காதலியரின் நம்பிக்கையை இழக்கும் முக்கியமான கட்டத்தில் அதற்கான காரணமும் மிகப் பழைய நாடகமாகவே இருக்கிறது. இதனால், அழகும் இயல்பும் பொருந்திய இளம் நட்சத்திரத் தேர்வு இருந்தும் பார்வையாளர்களுடன் ஒன்ற முடியாத பரிதாப நிலையை எட்டிவிடுகிறது படம்.



காதல், பிரிவு, அகியவற்றோடு குடும்ப உறவுகளையும் திரைக்கதையில் பின்ன நினைத்திருக்கிறார் இயக்குநர். ஒரு இளைஞனும் யுவதியும் பழகினால் அது நிச்சயம் காதலாகத்தான் இருக்க முடியும் என்ற பார்வையை, தலைமுறை இடைவெளியின் விளைவாகச் சித் தரித்த விதம் நம்பும்படி இருக்கிறது. ஆனால் பெரியவர்களால் ஏற்பட்ட குழப்பத்தைப் புரிந்துகொள்வதில் இளைய தலைமுறை சறுக்கும் விதம், அழுத்தமாகவும் சுவாரஸ்யமாகவும் சித்தரிக்கப்படவில்லை.



ராஜ் பரத், அம்ஜத்கான், தேஜஸ்வி, ரேஷ்மி ஆகிய நால்வரும் தங்கள் கதாபாத்திரங்களில் இயல்பாக வந்துபோகிறார்கள். காதல், நட்பு ஆகியவற்றால் மட்டுமில்லாமல் அப்பாவின் மீதான பாசத்தாலும் தவிக்கும் வேதனையை ரேஷ்மி நன்றாக வெளிப்படுத்தியுள்ளார். எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பு படத்துக்கு கனம் சேர்க்கிறது.


தீபக் நிலம்பூரின் பின்னணி இசை யில் சிறப்பாக எதுவுமில்லை. தோழா பாடல் வசீகரிக்கிறது. பாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விதம் நன்றாக உள்ளது. ஒளிப்பதிவாளர் குருதேவ் தன் வேலையை ஒழுங்காகச் செய்திருக்கிறார்.


உணர்ச்சிகளைக் கையாண்டுள்ள விதத்தில் ‘நட்பதிகாரம் 79’ கவர்ந்தாலும் முக்கியமான திருப்பங்களில் சறுக்கி யிருக்கிறது.

நன்றி - த இந்து