Tuesday, March 01, 2016

GODS OF EGYPT - சினிமா விமர்சனம்

ஹாலிவுட் காரங்க கூட நம்ம தமிழ்நாட்டு அரசியலைப்பார்த்து திரைக்கதை எழுத ஆரம்பிச்சடறாங்க.நம்மாளுக கதை எழுதி இருந்தா  இந்நேரம் ரணகளம் ஆகி இருக்கும், சரி  என்ன கதைன்னு பார்ப்போம்

அபூர்வமான சக்தி படைத்த மன்னர் எகிப்து நாட்டை ஆண்டு வருகிறார். இவருக்கு கலைஞர் போலவே 2 மகன்கள்.

அண்ணன் (அழகிரி) க்கு  நாட்டில் பாகப்பிரிவினையும், தம்பி (ஸ்டாலினு)க்கு பாலைவனப்பகுதியையும் பிரிச்சு கொடுத்துடறார் மன்னர்.

அண்ணன் பிரமாதமா ஆட்சி புரிஞ்சுட்டு வர்றார், தம்பி பாலைவனத்தில் ரொம்ப கஷ்டப்படறார்.


கொஞ்ச காலத்துக்குப்பின் அண்ணன் தன் மகனுக்கு பட்டமளிப்பு விழா நடத்த திட்டம் இடுகிறான்.அந்த விழா நடக்கும்போது தம்பி பாலை வனத்தில் இருந்து தன் படையுடன் வந்து அண்ணனைப்போட்டுத்தள்ளிட்டு அண்ணன் என்னடா தம்பி என்னடா பதவி வெறி பிடித்த உலகத்துலேன்னு பாட்டெல்லாம் பாடாம ஆட்சி அமைக்கிறார்,


அண்ணன் மகனையும் போட்டுத்தள்ளலாம்னு பார்க்கும்போது அண்ணன் மகனோட மனைவி சத்யவான் சாவித்திரி போல் உயிர் பிச்சை கேட்குது. இரக்கப்பட்ட தம்பி அண்ணன் மகன் கண்கள் இரண்டை மட்டும் கட் பண்ணிட்டு அனுப்பறார்.

அண்ணன் மகன் எப்படி தன் ராஜ்ஜியத்தை மீட்டெடுக்கிறார் என்பதே  மிச்ச மீதிக்கதை




அம்புலிமாமா கதை போல்  இருக்கு. கிராஃபிக்ஸ் எல்லாம் நல்லாருக்கு. முன் பாதி யில் இருந்த சுவராஸ்யம் பின் பாதியில்  இல்லை.

க்ளைமாக்ஸ்  ஃபைட்  எல்லாம்  ரொம்ப  மொக்கை

ஆடை வடிவமைப்பு , லொக்கேஷன் செலக்சன் எல்லாம் கன கச்சிதம்


பின்னணி  இசை நல்லாருக்கு . குழந்தைகள் பார்க்கலாம். பொண்ணுங்க எல்லாம் படத்துல  செம லோ கட்  ஜாக் ல வர்றாங்க. அதனால் இளைஞர்களும் பார்க்கலாம்

மனதைக் கவர்ந்த  வசனங்கள்

என்னோட கெட்ட பேரை நான் தக்க வெச்சுக்கனும்
அப்போ தான் ராணி ஆக முடியும் # EGY


2 ஒரு பெண்ணைப்பார்த்ததுமே வரும் உணர்வுக்குப்பேர் காதல் இல்ல


பிரார்த்தனைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை.எத்தனையோ பிரார்த்தனைகள் கவனிப்பார் இன்றி !


காற்றை உன்னால் கட்டுப்படுத்த முடியாது.ஆனால் உன் அறைக்கதவை ,ஜன்னலை சாத்தி விடலாம் # EGYPTH


5

நேர்மையான வழியில் போறவன் தான் பல சாத்தியக்கூறுகள் பற்றி சிந்திக்கனும்
குறுக்கு வழியில் போறவனுக்கு கிடைச்சவரை லாபம்


6 கடவுள் நேரில் வந்தால் கடவுளிடமே பேரம் பேசுவான் மனிதன்

7 அடைய முடியாத விஷயங்களுக்காக ஆசைப்படாதே!













சி  பி  கமெண்ட் -GODS OF EGYPT (ENGLISH) = கலைஞர்-அழகிரி-ஸ்டாலின் போல் பதவிச்சண்டை போடும் மன்னர் குடும்ப கதை.சுமார்தான்.ரேட்டிங் -2.25 / 5


ஈரோடு அண்ணாவில் படம் பார்த்தேன்



டாக்டர் நோ பட தமிழ் ரீமேக்ல ஜேம்ஸ் பாண்டா இளைய தளபதி அட்லீ இயக்கத்தில்!அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்

விஜயகாந்தை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினார் - தமிழிசை#கூட்டணிப்பேச்சு வார்த்தைக்கு திருமண.அழைப்பு ஒரு விசிட்டிங் கார்டு இப்பவெல்லாம்


================

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறாது-அழகிரி # தனக்கு பதவி இல்லைன்னதும் சொந்த அப்பா, தம்பிக்கே சாபம் விடறார், இதுதான் மனிதமனம்



===============



3  சோழ மன்னர் கதையில் அஜித்: இயக்கம் விஷ்ணுவர்தன் - எழுத்தாளர் பாலகுமாரன் உறுதி # டைட்டில் நட ராஜ ராஜ சோழன்?




===============



4  காதலர் தின கொண்டாட்டத்தில் ரோஜாவுக்கு மவுசு குறைந்ததா? - விற்பனையில்லாததால் வியாபாரிகள் ஏமாற்றம் # சண்டே  எப்டி வெளீல வர முடியும்?




===============



5  அழகிரிக்கும திமுகவுக்கும் எந்த் தொடர்பும் இல்லை-கலைஞர் # அழகிரி தலைவரை அழ வெச்ச கிரி ஆகிட்டாரே?



=============



6  காங்கிரஸ்  கட்சி யை சேர்ந்த புதுச்சேரி கண்ணன் அதிமுக-வில் இணைந்தார் #  கை எடுத்துக்கும்பிட்டு கால்ல விழுந்து சேர்ந்திருப்பாரே?




================



விஜயகாந்த் கூட்டணி பேச்சுக்கு வந்தால் நல்ல முடிவு கிட்டும்: ஸ்டாலின் # பாரம்பரியம் மிக்க கட்சியின் நிலை இப்டி ஆகிடுச்சே?



===============



கழகத் தோழர்கள் யாரும் அழகிரியை கண்டுக்க வேண்டாம் -கருணாநிதி#தலைவா!குஷ்பூவை கண்டுக்கலாமா?ராசி ஆகிட்டோம்தானே?

===========

9 கனிமொழி எம் பி பதவிக்காக காங்கிரசிடம் திமுக பிச்சை எடுத்தது-அழகிரி# பதவி வேணும்னு நீங்க கூடத்தான் கலைஞர்ட்ட பிச்சை எடுத்தீங்க.

============

10 ஜெ உடன் தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை...சந்திப்பு #,தாமரை இலை ல தண்ணீர் ஒட்டாது.தாமரை பூ உடன் இரட்டை இலை கூட்டு கிட்டுமா?

===========

11 சுனந்தாபுஷ்கர்மரணம்:சசிதரூரிடம் தில்லி போலீஸ் மீண்டும் விசாரணை # விசாரணை படத்தை ஒரு தடவை பார்த்துட்டு விசாரணை செய்யவும், உண்மையை கக்கிடுவாரு


=================


12  திமுகவுக்கு மு.க.அழகிரி தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார் - கருணாநிதி# நீங்க ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செஞ்சீங்க,அந்த பாவத்துக்கு இது


=====================


13 தீவிரமடையும் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்: தமிழகம் ஸ்தம்பிக்கும் அபாயம் # அம்மாவைப்பற்றி தெரியல, எல்லாரையும் டிஸ்மிஸ் பண்ணப்போகுது



============

14  மு.க. அழகிரியை அலட்சியப்படுத்துங்கள்:-கருணாநிதி  # தி மு க வையே அலட்சியப்படுத்திடப்போறாங்க மக்கள்


================


15  திருச்சி-பெண் கொடுத்தபாலியல்புகார். மனைவியுடன் தற்கொலைக்கு முயற்சித்த நீதிபதி # தப்பு பண்ணி இருந்தா இவர் மட்டும் தனியா  சாகவேண்டியதுதானே?


================


16  "நமக்கு நாமே" - ஸ்டாலின் அரசியல் வாழ்வில் ஒரு மைல் கல்... கருணாநிதி  # நமக்கு நாமமே-ன்னு அழகிரி சொன்னது திமுக வாழ்க்கையில் ஒரு  எரிகல்


===============


17  10ம் வகுப்பு மாணவி பலாத்காரம். லாலு கட்சி எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து சஸ்பெண்ட் # ஜெயில்ல  டெய்லி 10 பாத்திரம் தேய்க்க வைங்க, புத்தி வரட்டும்


=================


18 இப்போது எந்தக் கூட்டணியிலும் இல்லை -சரத்குமார் #  யாரும் வெத்தலை பாக்கு வெச்சு அழைக்கலைனு ஓப்பனா சொல்லுங்க, யாருக்கு தெரியாம இருக்கு?


================


19  விஜய் எதற்குமே நோ சொன்னதில்லை! - அட்லி # டாக்டர் நோ  பட தமிழ் ரீமேக்ல ஜேம்ஸ் பாண்டா நடிக்கனும்னு கேட்டுப்பாருங்க


==============


20  பள்ளி செல்லும் குழந்தைகளில் 10 % பேருக்கு கற்றலில் குறைபாடு # பள்ளிக்குப்போகும் வாத்தியார்கள் கற்பித்தலில் 50% குறைபாடு, அதான் காரணம்


======================

Monday, February 29, 2016

தேவதைக்கு ஆண்பால் என்ன ?

எல்லார் கண்ணுக்கும் எதிர்.வீட்டு பிகர் மட்டும் அழகாத்தெரிவது ஏன்?

அடுத்தாத்து அம்பு"ஜம்"எப்பவும் ஜம்முனு தான் இருக்கும்

============

2 டியர்.சிட்டி லிமிட் தாண்டக்கூடாது.உள்ளூர்லயே.சுத்துவோம்
ஏன்?


எல்லை தாண்டக்கூடாதுன்னு அம்மா.சொல்ச்சு


ஓஹோ.அந்த எல்லைதான் தாண்டக்கூடாதா?ஐ ஜாலி

==============


3 மீனம்மா வெய்யில்ல நிக்குது.ஆபத்து

ஏன்?
கருவாடம்மா ஆகிடாது?


=========


4 13 வயசு டூ 19, வயசு காதலர்களுக்கு காதலர் தின வாழ்த்து எப்டி சொல்லனும்?

ஹேப்பி வேலன்ட்"டீன்" டே


==========

5 டியர்.பீச்க்கு 6 க்கு வர முடியாது.நைட்.7 ஆகிடும்.

ரைட்டு.லவ்வர்ஸ் டே கொண்டாடுது ஊர் உலகம்.நாம மட்டும் லவ்வர்ஸ் நைட் கொண்டாடுவோம்

=========

6 டியர்.என்னைக்கண்காணிக்க என் தங்கச்சியைக்கூடவே அனுப்பி இருக்கு எங்க அம்மா.

பேக்கு.நீ உன் தங்கையைக்கூட்டிட்டு வா.நான் என் தம்பியோட வர்றேன்

=========


7 சிம்பு ரசிக ரசிகைகளுக்கு காதலர் தின வாழ்த்து எப்டி சொல்றது?

எங்க வீட்டு வேலன் ட்டைன்ஸ் டே.விஷ்


==========


8 டியர்.உங்க கை என் மேல படக்கூடாதுன்னு சத்தியம் பண்ணிட்டு பீச்க்கு வந்திருக்கீங்க.

கை தானே படக்கூடாது.உதடு படலாமில்ல?


=========

9 டியர்.குட் டச் பேடு டச் அப்டின்னா என்ன?

காலண்டர் ல போட்டிருக்கும் நல்ல நேரப்படி.டச் பண்ணா குட் டச்.ராகு காலத்தில் டச் பண்ணா பேடு டச்


===========

10 பொண்ணு நிச்சயம்.சவுரி ராணி தான்னு எப்டி சொல்றீங்க மாப்ளை?

"விக்"னேஸ்வரி ன்னு சொன்னீங்களே?



===========


11 டியர்.என் அக்காவுக்கு உங்களைப்பிடிச்சிருந்தா தான் நம்ம கல்யாணம்

உங்க அக்காவுக்கு என்னை பிடிச்சுட்டா எங்க 2,பேருக்கும்தானே நடக்கும்?

==========

12 டியர்.உங்களுக்காக என் உடல் ,பொருள் ,ஆவி எல்லாம் ஒப்படைக்கத்தயார்.

3 வது மட்டும் வேண்டாம்.ஜெயிலுக்குப்போய்டுவென்.முதல் 2ம் ஓக்கே


===============

13 காதல்/காம எண்ணங்கள் இன்றி எதிர்பாலாருடன் உங்களால் நட்புடன் பழக முடியுமா?

முடியுமா?முடியாதா?ன்னு தெரியாது.எதுக்காக அப்டி பழகனும்?


==================

14 டாக்டர்.இனிமே இவங்க திரவ ஆகாரம் மட்டுமே சாப்பிடனுமா?

ஆமா.குணமாகும் வரை.சந்"திரவ"தனா தான்


==========


15 டாக்டர், மத்தியானம் தூங்கி எந்திரிச்சேன், நைட் தூக்கமே வர மாட்டேங்குது

 அப்டியே தூங்கி இருந்திருக்கலாமில்ல? எதுக்கு இடையில் எந்திரிச்சீங்க?


=====================

16   டியர்!தேவதைக்கு ஆண்பால் என்ன ?

 தேவ மாசி

 எப்டி?

 தைக்கு பின் மாசி தானே வருது? பெண்ணுக்குப்பின் ஆண், எப்டி நம்ம ஃபார்முலா?


===============

17 டியர், இந்நேரத்துல எதுக்கு  மொட்டை மாடிக்குக்கூப்பிடறீங்க?


 லவ்வர்ஸ் நைட் கொண்டாடத்தான்


==============

18 மிஸ்! 1,2,3 கூட வரிசையா  எழுதத்தெரியலையா?உங்க ஹேண்டில்ல 231  -னு மாத்தி இருக்கீங்க?

யோவ், அப்போ 143 சொன்னா 2 விட்டுட்டிங்க?ம்பியா?


================


19 டீச்சர், சிங்கம்  என்ற சொல்லுக்கு பெண் பால் சிங்கி தானே?

நீ தமிழ் இலக்கண  மார்க்குக்கு சிங்கி தான் அடிக்கப்போறே


=================

20   டீச்சர்! தேவதை க்கு எதிர்ச்சொல் என்ன?

 தே வதைக்காதவன்



================

தனியா வாழ்ந்து காட்டுவேன்

1  டியர், நான் ஏன் குண்டா இருக்கேன்னா எங்கம்மா எப்பவும் டேஸ்ட்டா சமையல் செய்வாங்க.

ஓஹோ, உங்க அப்பா மட்டும் ஒல்லியா இருக்காரே?அது எப்டி? 


==============

2  டியர், போன வருசம் தானே பிரேக்கப் பண்ணிட்டு போனீங்க இப்போ ஏன் ஐ லவ் யூ சொல்றீங்க?

அன்பே! கூடா நட்புன்னு சொல்லிட்டு சேர்றாங்களே?


=================


காதலர் தினம் நாளைக்குதானே?ஏன் இன்னைக்கே ரோஜாப்பூ தர்றீங்க?


நாளை 50 ரூபா ரேட் சொல்வான்.

============

4 டியர்.இந்த ஜென்மத்துக்கு நான் மட்டும் தானே உங்க காதலி?


2016 வரை நீ மட்டும் தான்


=============

5 கவர்ச்சி நடிகையா வரும் முன் புருசன் கிட்டே ஏதோ சவால் விட்டீங்களாமே?


ஆமா.தனியா வாழ்ந்து காட்டுவேன் னேன்


===========

6 சார்.காதலர் தினம் கொண்டாட தனியா பீச் வந்திருக்கீங்க?


மத்தவங்க கொண்டாடறதை வேடிக்கையாவது பார்ப்பம்



==========

7

டியர்.அந்தாளு என் கிட்டே டபுள் மீனிங் ல பேசறாரு.
உனக்கு சிங்கிள் மீனிங் ல பேசுனாலே 2 வாரம் கழிச்சுதானே புரியும்?


===============
8 மேடம்.எந்த முகத்தை வெச்சுக்கிட்டு மீண்டும் வாக்கு கேப்பீங்க?


மேக்கப் போட்டு முகத்தையே மாத்திட்டு வந்துட்டாப்போச்சு

=============

9டியர், போன வருசம் தானே பிரேக்கப் பண்ணிட்டு போனீங்க இப்போ ஏன் ஐ லவ் யூ சொல்றீங்க?


அன்பே! கூடா நட்புன்னு சொல்லிட்டு சேர்றாங்களே?


=============

10 டியர், லவ்வர்ஸ்  டே க்கு ரோஜா  இல்லாம வந்திருக்கீங்க?

 ரோஜா ஆர் கே  செல்வமணி கூட சிங்கப்பூர் போய் இருக்காங்க


================


11  காதல் தினம் கொண்டாட கோவிலுக்கு செல்கிறோம்

  ஏன்  மேடம்  அங்கே  போறீங்க?பார்க் , பீச் ,சினிமா போகலை?

  எங்களுது தெய்வீகக்காதல் ஆச்சே?


==============

12  டியர், மல்லிகைப்பூவை உங்க கையால கூந்தல்ல வெச்சு விடுங்க


வேணாம், சவுரி கையோட வந்துடும், கோவிச்சுக்குவே, சமாதானப்படுத்துவதற்குள் விடிஞ்சிடும்


=================


13  டியர், என் தங்கச்சி, என் அக்கா, நான்  3  பேரும் படம் பார்க்கப்போறோம். எதுக்குப்போக?

 வரிசை கரெக்டா இருக்கும், ஜில் ஜங்க் ஜக்



================


14 டியர், நம்ம காதல் ஆண்டாண்டு காலமா நிலைச்சு இருக்குமா?

 அது உன் கைல தான் இருக்கு, ஜாக்கிரதையா இல்லைன்னா நவம்பர் 14க்குப்பின் இருக்காது


=================

15 தலைவரே! நம்ம கட்சில சேர கவிதாயினி தாமரை வந்திருக்காங்க.

 இந்த தேர்தல்ல நமக்கும் தாமரைக்கும் தான் ஆகாதே?


=================

16 16 வயசு கூட ஆகலை, தலைவர் பையன் புதுக்கட்சி ஆரம்பிச்ட்டாரே?


திரா”விடலை”க்கட்சி போல


==================


17 டியர், பேரீச்சம்பழத்துல  இங்க் தெளிச்சு  தர்றியே எதுக்கு?

 நீங்க தானே சொன்னீங்க, இன்னைக்கு டேட்டிங்க் போயே ஆகனும்னு.DATE INK


==================


18 காதலர் தினத்தன்னைக்கு காதலி இல்லைன்னு மகிழ்ச்சியா இருக்கியே?எப்படி?


இது என்ன பிரமாதம்?எய்ட்ஸ் தினத்தன்னைக்குக்கூட எய்ட்ஸ் இல்லைனு ஜாலியா


==================


19 தலைவரே! உங்களுக்கு பிரதமர் பதவி மேல ஒரு கண்ணாமே?

 ஆமா, மகளிர் அணித்தலைவி மேல இன்னொரு கண்ணு


===============

20  தலைவரே!  உங்களுக்கு கோயில்  கட்டப்போறோம்

 வெரிகுட், கோயில் சின்னதா இருந்தாலும் உண்டியல் பெருசா இருக்கட்டும்


==============