Thursday, March 22, 2012

தி.மு.க-வில் நான் ஸ்டாலின் கோஷ்டியா... அழகிரி கோஷ்டியா?''குஷ்பூ பேட்டி காமெடி கும்மி


1. தி.மு.-வில் நீங்கள் ஸ்டாலின் கோஷ்டியா... அழகிரி கோஷ்டியா?''


சி.பி - மேடம் என்ன நினைக்கறாங்கன்னா  2 அண்ணன்க கிட்டேயும் நல்ல பேர் எடுத்து  யார் சி எம் ஆனாலும் பெரிய போஸ்ட் வாங்கிடலாம்னு... 

 
 ''தி.மு.-வில் ஒரே கோஷ்டிதான்.அது தலைவர் கலைஞர் கோஷ்டி. நான் மட்டும் இல்லை, கழகத்தின் அத்தனை பேருமே அவர் கோஷ்டிதான். மீடியாதான் தளபதி கோஷ்டி, அழகிரி கோஷ்டினு பிரிச்சுப் பேசுறாங்க. அப்படி எந்தக் கோஷ்டியும் இருக்கிற மாதிரி எனக்குத் தெரியலை. அவங்கவங்க கட்சி வேலைகளை எல்லோரும் சிறப்பாவே செஞ்சுக்கிட்டு இருக்காங்க. இந்தக் கட்சிப் பணிகளைச் செய்றதுல வேணும்னா, ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டி இருக்குமே தவிர, தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது!''


சி.பி - குஷ்பூ அக்கா.. இந்த மாதிரி சொல்லச்சொல்லி சொல்லிக்குடுத்தது கலைஞரா? ஸ்டாலினா?


2. ''பிரபுதேவா - நயன்தாரா  இருவரும் உங்களுக்கு நிச்சயம் நெருக்கமாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்குள் சமாதானம் ஏற்படுத்த நீங்கள் முயற்சிக்கலாமே?''  


சி.பி -  ஒரு பக்கம் கூடன்குளம் பிரச்சனை.. இன்னொரு பக்கம் ஈழத்தமிழர் பிரச்சனை.. அது பற்றி எல்லாம் தமிழன் கவலைப்படாம நயன் தாரா வாழ்வு நல்லாருக்கனும்னு நினைக்கறானே.. ஆஹா.. ஆனந்தக்கண்ணீரே வருது.. 

''ஆமாம். இருவரும் எனக்கு நல்ல நண்பர்கள்தான். ஆனால், அவர்களுக்குள் இருக்கும் பிரச்னை அவர்களின் சொந்த விஷயம். அவர்களுக்குள் சமாதானம் செய்றதா இருந்தாலும் அட்வைஸ் பண்றதா இருந்தாலும் அவங்ககிட்ட சொல்வேனே தவிர,பப்ளிக்கா அல்ல


சி.பி - வெரிகுட்.. ஒரு அரசியல்வாதியா வர்றதுக்கான எல்லா தகுதிகளும் உங்களுக்கு இருக்கு.. கழுவற மீன்ல நழுவற மீனா இருக்கீங்க.. ஆனா பாருங்க உங்க கூட அறிமுகம் ஆன மீனா அட்ரஸ் காணோம்.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNtmJVs7bPG_a-XXnJSTvX_H67IiYGfwB_DI1KZKBfy_YBvchGA9-JnppV9g8W8_F6FEU1WmOiGG8-PDJZGCgNbnPLol85ROshqIzCwY69XZfSB6wyxeS6HSCTpBGxVIkPcjNOMTdYz63A/s640/tamil-actress-Kushboo-beach-bikini.jpg
3. ''இப்போதும் கற்பு குறித்த உங்கள் கருத்தில் உறுதியாக இருக்கிறீர்களா?''

சி.பி - குஷ்பூ எத்தனை புக்ல எத்தனை அறிக்கை விட்டிருந்தாலும் இந்தியா டுடேல சொன்ன கருத்து தான் மக்கள் மனசுல ஆழமா பதிஞ்சு இருக்கு போல.. 

 ''கண்டிப்பா! அஞ்சு வருஷம் உச்ச நீதிமன்றம் வரை போராடி இறுதித் தீர்ப்பு வாங்கின பிறகு எதுக்கு நான் பின்வாங்கணும்? நம்ம கண்ணு முன்னாடி நடக்கும் ஒரு தப்பைப் பார்த்த பிறகும் கண்ணை மூடிக்கிட்டு, 'நான் குருடன்; நான் எதையுமே பார்க்கலைனு ஒதுங்கிப் போயிடலாம். ஆனா, இதனால பாதிக்கப்படுறது யாரு? எதிர்காலத்துல என்னோட, உங்களோட பசங்கதானே!

 இப்படி ஒவ்வொரு குடும்பத்துலயும் ஏற்படுற பாதிப்புதான் பரவி நாட்டின் எதிர்காலத்தையே கேள்விக்கு உள்ளாக்கும். ஒரு பிரச்னை வந்துச்சுன்னா, அதைப் பத்திப் பேசிப் பேசியே எந்த முடிவுக்கும் வராம இருக்கிறதைவிட, இப்ப என்ன தேவைனு பேசி, அந்தப் பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறதுதானே புத்தி சாலித்தனம்? ஆமாம். கற்பைப் பத்தி அன்னைக்குப் பேசினதுல இன்னைக்கும் நான் உறுதியா இருக்கேன்!''

சி.பி - எல்லா பிரபலங்களூக்கும் 1 சொல்லிக்கறேன்.. மாற்றுத்திறனாளிகள் பற்றிப்பேசறப்போ கண்ணியமான மாற்று பதங்களை உபயோகிக்கவும்.. உதாரணமா  கண் பார்வை அற்றோரை “விழி ஒளி இழந்தோர்” என சொல்லலாம்


4.  ''ஜாக்பாட் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதில் நதியா - சிம்ரன் யார் பெஸ்ட்?''

சி.பி - நதியா கொஞ்சம் கூட எடுபடலை.. ஏன்னா அவங்க கிட்டே கிளாமர் மிஸ்ஸிங்க்.. பெண்கள் மட்டுமே ரசிச்சாங்க.. அவங்களோட கம்ப்பேர் பண்றப்போ சிம்ரன் ஓக்கே.. ஆனா அவங்க மேக்கப் கர்ண கொடூரம்.. 

 ''அவங்க ரெண்டு பேரும் தொகுத்து வழங்கிய ஜாக்பாட்டின் ஒரு எபிசோடைக்கூட நான் பார்த்தது இல்லை. இது உண்மை. அதனால அதைப் பத்தி என்னால கருத்து சொல்ல முடியாது. ஒருவேளை அவங்க என்னைவிட பெட்டராக்கூடப் பண்ணியிருக்கலாம். ஆனாலும், நிகழ்ச்சியைப் பார்க்காமல் அதுபற்றி எதுவும் சொல்ல முடியாது!''

சி.பி - இது நம்பற மாதிரி இல்லைங்களே ,மேடம்.. நம்மளை விட பெட்டரா பண்றாங்களா?ன்னு கண்டிப்பா நீங்க பார்த்திருப்பீங்க.. அது ஹியூமேன் சைக்காலஜி ஆச்சே?

 http://i138.photobucket.com/albums/q273/mastitamil/Kush/Kushboo01.jpg
நாட்டுக்கு ஒரு நல்லவன் படத்தில் தான் குஷ்பூவின் அதிக பட்ச கிளாமர்
5. ''மறக்க நினைக்கும் கடந்த காலக் கசப்புகள்?''

சி.பி - ஹி ஹி ஹி .. இந்தாளுக்கு லொள்ஸ் ஜாஸ்தி. அதான் பிட்டர் எக்ஸ்பீரியன்ஸ் ஆச்சே. அதை எப்படி மறுக்கா சொல்வாங்க?
 ''எதுவுமே இல்லை முருகன். கஷ்டமான காலங்கள், கசப்புகள் எல்லாம் நமக்கான பாடங்கள். 'இப்படி ஒரு கஷ்ட காலத்தைத் தாண்டி வந்திருக்கோம்னு அதை மனசுல நிறுத்தி பாடமா எடுத்துக்கிட்டு முன்னேறணும். ஆனா, அந்தக் காலங்களை மறந்துட்டா, அப்ப ஏற்பட்ட வலியையும் மறந்துடுவோம். அந்த வலியை மறந்துட்டா, மறுபடி நாம தப்பு பண்றதுக்கு வாய்ப்பு இருக்கு!''

சி.பி - தத்துவவாதி குஷ்பூஆனந்தா?

6. ''பேசும்போது இன்னமும் தமிழைக் கொலை செய்கிறீர்களே... ஏன் இந்தக் கொலை வெறி?''

சி.பி - என்னமோ குஷ்பூ படத்துல குஷ்பூவின் தமிழ் உச்சரிப்பை மட்டுமே கவனிக்கற கடமை உணர்ச்சி கார்மேகம் மாதிரி கேள்வி பாரு.. 

 ''என் பேச்சில் கொஞ்சம் கொஞ்சமாச்சும் இம்ப்ரூவ்மென்ட் இருக்கா இல்லையா? சினிமாவுக்கு வந்தப்ப, எனக்கு தமிழ்ல ஒரு வார்த்தைகூடத் தெரியாது. அப்படி இருந்தவ, இப்போ இந்த அளவுக்குப் பேசுறேனேனு பாராட்டுங்க. அவ்வளவு ஏன்... இப்போ எல்லாம் பொது மேடைகள்ல ஏறித் தமிழ்லயே கோஷம் போடுறேனே? கையில் குறிப்பு இல்லாம பொதுக்கூட்டங்கள்ல பேச முயற்சி பண்றேனே? இதுவே பெரிய வளர்ச்சி. இங்கே எத்தனை பேர் புதுசா ஒரு மொழியைக்  கத்துக்க முயற்சி பண்றாங்க... சொல்லுங்க?!''

சி.பி - ஆமாமா , உங்க வளர்ச்சி அபரிதமானதுதான் ஹி ஹி 
http://image.imagesexplore.info/images/4.bp.blogspot.com/_mCQCUdBDa_U/S97XUt2pyQI/AAAAAAAAJyg/lQg5nFyoseY/s1600/kushboo2_003.jpg
7. ''தி.மு.. தலைவர் கருணாநிதியுடனான சந்திப்புகளின்போது நடந்த சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?''
 சி.பி - குஷ்பூவின் அரசியல்வாழ்வு செழிக்கனும்னா கலைஞரின் ஆதரவு தேவை.. அது 100% மேடம்க்கு உண்டு..அழகிரி, ஸ்டாலினைக்கூட கரெக்ட் பண்ணிடுவாங்க... ஐ மீன் சரிக்கட்டிடுவாங்க..  பிரச்சனை என்னான்னா கனி மொழிதான் அவங்களுக்கு குறுக்கே நிப்பாங்க..

''1991-ல்தான் முதல்முறையா தலைவரைச் சந்திச்சேன். 'கிழக்குக் கரைஷூட்டிங்குக்காக நான், வாசு சார், பிரபு சார் எல்லாரும் டிரெயின்ல போயிட்டு இருந்தோம். தலை வரும் அதே டிரெயின்ல திருநெல்வேலிக்குப் போயிட்டு இருந்தார். அப்போ வாசு சார் தான் என்னைத் தலைவருக்கு அறிமுகம் செஞ்சுவெச்சார். ' 'சின்னத் தம்பிலரொம்ப அருமையா நடிச்சிருக்கம்மானு பாராட்டினார். அதேபோல் தளபதியையும் முதன்முதலா டிரெயின்லதான் சந்திச்சேன். அவர்கிட்ட யும் வாசு சார்தான் அறிமுகப்படுத்தி வெச்சார்.
அடுத்து, தலைவர் முதல்வரா இருந்தபோது, முதன்முதலா சின்னத்திரைக் கலைஞர்களுக்கான மாநில அரசு விருதுகள் அறிவிச்சாங்க. ஜெயா டி.வி-யில் ஒளிபரப்பான 'கல்கிசீரியலுக்காக சிறந்த கதாசிரியர், சிறந்த நடிகை, சிறந்த தயாரிப்பாளர்னு மூணு பிரிவில் என் பெயர் பரிசீலனையில் இருந்தது. 'ஜெயா டி.வி-யில் 'கல்கிவருது. நமக்கு எங்க அவார்டு வரப்போகுது?’னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனால், சிறந்த கதாநாயகிக்கான விருது எனக்குத்தான் கிடைச்சது. என்னால நம்பவே முடியலை


 நீங்க எந்தப் பக்கம் இருந்தாலும் உங்க உழைப்புக்கான அங்கீகாரத்தை உங்களைத் தேடி வரவைப்பதில் தலைவர் உறுதியா இருப்பார்னு புரிஞ்சுக்கிட்டேன். பிறகு, தி.மு.-வில் சேரணும்னு முடிவு பண்ணி தலைவருக்கு போன்ல பேசி என் முடிவைச் சொன்னேன். நேர்ல போனப்ப, 'ஏன் தி.மு.-வில் சேரணும்?’னு கேட்டார். 'அதெல்லாம் விளக்கம் சொல்ல முடியாது. ஆனா, தி.மு.-வில் சேரணும்னு சொன்னேன்
 சி.பி - அதிமுகல பெரிய ஆள் ஆக சான்ஸ் இல்லை, ஆனா தி முக ல அந்த சான்ஸ் உண்டுன்னு ஓப்பனா சொல்ல முடியுமா?

 சிரிச்சார். கட்சியின் முக்கியமான தலைவர்கள் அனைவரையும் வர வெச்சு என்னை அவ்வளவு மரியாதையோடு கட்சியில் சேர்த்துக்கிட்டார்!''

8. ''இன்றைய ஹீரோயின்களில் உங்க ளுக்குப் பிடித்தவர் யார்... ஏன்?''

''அனுஷ்கா, த்ரிஷா! 'இங்கே ஹீரோவைப் போல் ஹீரோயின்கள் ரொம்ப காலம் நீடிக்கிறது இல்லைனு சொல்லிட்டே இருப்பாங்க.  ஆனா, த்ரிஷா சினிமாவுக்கு வந்து 10 வருஷத்துக்கு மேல ஆச்சு. இன்னும் அதே ஸ்டார் ஹீரோயின் ஸ்டேட்டஸோடதான் இருக்காங்க. இது, அவங்களோட உழைப்புக்குக் கிடைச்ச பலன். அதேபோல் அனுஷ்கா. சான்ஸே இல்லை... இந்தக் காலத்துல இப்படி ஒரு ஹீரோயினைப் பார்க்க.
எங்க சொந்தத் தயாரிப்புல 'ரெண்டுபடம் மூலமாதான் தமிழில் அறிமுகமானாங்க. சின்சியாரிட்டி, டெடிகேஷன், உழைப்புனு அவங்களைப் பத்திச் சொல்லிட்டே இருக்கலாம். 'ரெண்டுபடத்துல ஒரு தீவில் டூயட் பாடல் ஷூட் பண்ணிட்டு இருந்தோம். அப்ப  யூனிட்ல எடுத்துட்டு வந்த காஸ்ட்யூம் அனுஷ்காவுக்கு செட் ஆகலை. ஆனா, அதுக்காக அவங்க கவலைப்படலை. அங்கேயே இருந்த ஒரு சின்னக் கடையில் கிடைச்ச துணிகளை வாங்கிப் போட்டுக்கிட்டு நடிச்சாங்க.
 சி.பி - அவங்க டிரஸ் பற்றி அதிகம் கவலைப்பட மாட்டாங்க.. கொஞ்சம் துணி போதும் ஹி ஹி

 நெக்லஸ் சரியா இல்லைனு நான் போட்டு இருந்ததை வாங்கிப் போட்டுக்கிட்டாங்க. பாடல் காட்சியில், மண்ணுக்குள்ள முழு உடம்பையும் புதைச்சுக்கிட்டு திடீர்னு எழுந்து வர்ற மாதிரி ஒரு சீன். அப்படிப் புதைஞ்ச நிலையில் தலைக்கு மட்டும் ஒரு குடை வெச்சுக்கிட்டு ரொம்ப நேரம் மண்ணுக்குள்ளேயே படுத்திருந்தாங்க. எவ்வளவோ கஷ்டம் இருந்தாலும் எதைப் பத்தியும் சின்ன புகார்கூடச் சொல்லலை.

எல்லாத்தையும் பாசிட்டிவ்வா எடுத்துக்கிட்டு வேலையில் மட்டும் கவனம் செலுத்துற அவங்க டெடிகேஷன்தான் அனுஷ்கா, த்ரிஷா ரெண்டு பேரையும் இந்த உயரத்தில் தக்கவெச்சிருக்கு!''

http://keglerscorner.shikshik.org/_cacheimg/k/u/kushboo%20sexy.jpg

9.  ''ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா?''
''முதல்ல அவர் வரட்டும், பேசுவோம். 'வருவாங்களா, வர மாட்டாங்களானு ஏன் நாமளா பேசிட்டு இருக்கணும்? ஒரு விஷயம் நடந்தால்தான், அதைப் பத்திய விவாதம் சுவாரஸ்யமா இருக்கும். நாமளே ஒரு கற்பனையில் அதைப்பத்தி விவாதிச்சு நம்ம நேரத்தை ஏன் வீணாக்கணும்?''

சி.பி - ரஜினி இனிமேல் வந்தா எடுபடுவாரா? என்பது டவுட் தான். வந்திருந்தா த மாக மூப்பனார் டைம்ல வந்திருந்தா ஒரு அள்ளு அள்ளி இருக்கலாம்.. 
- அடுத்த வாரம்
''சினிமாவில் மார்க்கெட் போன பிறகுதான், நடிகர் - நடிகைகள் அரசியலில் அடியெடுத்து வைக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு குறித்து?''
''தி.மு.-வில் ஸ்டாலின் ஆசியோடுதான் நீங்கள் விறுவிறு வளர்ச்சி அடைந்து வருகிறீர்கள் என்று கொதிக்கும் எங்களைப் போன்ற அடிமட்டத் தொண்டர்களின் வேதனை உங்களுக்குப் புரிய வாவது செய்கிறதா திருமதி குஷ்பு அவர்களே..?''
''சினிமா, அரசியலில் பேர், புகழ் எல்லாம் சம்பாதித்துவிட்டீர்கள்.. ஆனாலும், இந்நாள் வரை உங்கள் நிறைவேறாத ஆசை என்ன?''

தொடரும்

டிஸ்கி - இதன் முதல், 2 வது பாகம் படிக்க 


http://4.bp.blogspot.com/_B9OPPK8xEXk/TBPDP_FXw9I/AAAAAAAASEY/dB1wjG9HQzU/s1600/kushboo-hot-2.jpg