Showing posts with label thodari-film review. Show all posts
Showing posts with label thodari-film review. Show all posts

Thursday, September 22, 2016

தொடரி - சினிமா விமர்சனம்

Image result for thodariபிரபு சாலமன் மைனா படம் மூலம் பலரது கவனத்தையும் கவர்ந்தாலும் அவரது கிராஃப் வித்தியாசமானது.சுந்தர் சி யிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக இருந்தவர் 1999 ல்  கண்ணோடு காண்பதெல்லாம்  என்ற சுமார் ரகப்படம், 2001ல் உசிரே ( கன்னடம் - சேரனின் பாரதி கன்ண்ணம்மா ரீமேக்)  ஃபிளாப் ,2002 ல் விக்ரம் -நடித்த கிங் அட்டர் ஃபிளாப்,2006ல்  கரண் நடித்த கொக்கி ஹிட், 2007ல் சிபிராஜ் நடித்த லீ மீடியம் ஹிட்,2009 ல் லாடம் சுமார் ஹிட் , 2010ல் மைனா மெகா ஹிட்,2012 கும்கி ஹிட்,2014 காயல் ஃபிளாப் என ஏகப்பட்ட இறக்கங்களுடன்...

தென்னக புரூஸ்லீ என ரசிகர்களால் அழைக்கப்படும்  தனுஷ் ஹீரோவா நடிச்ச  தொடரி எப்டி இருக்கு?ன்னு பார்ப்போம்

ஹீரோ ஒரு ரயில்வே கேண்ட்டீன் ஊழியர்.ஹீரோயின் ஒரு சினிமா நடிகையின் டச் அப் கேர்ள். 2 பேரும் ஒரு ரயில் பயணத்தில் சந்திக்கும்போது ஹீரோ மனசை டச் பண்ணிடறார் ஹீரோயின்.2 பேரும் லவ்ஸ் பண்றப்போ ரயில் கொள்ளையர்கள், ஒரு சைக்கோ மிலிட்ரி,மற்றும் சிலர் வில்லன்களாக வர எப்டி சமாளிக்கிறார்கள் என்பதே கதை


ஹீரோவா தனுஷ்.நல்ல நடிப்புத்திறன் கொண்ட நடிகருக்கு இந்த கேரக்டர் நமீதாப்பசிக்கு சோளப்பொறி.ஆனாலும் ஆங்காங்கே அப்ளாஸ்  வாங்குகிறார்.

ஹீரோயினா கீர்த்தி 
மூர்த்தி சிறுசா இருந்தாலும் கீர்த்தி இளசா இருந்தாலும் ஆர்த்தி சொகுசா தான் இருக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப  கீர்த்தி கிக் தான் என்றாலும் சிவகார்த்திகேயன் உடன் அமைந்த கெமிஸ்ட்ரி இல்லை


தம்பி ராமய்யா கெட்டப் நடிப்பு கன கச்சிதம் என்றாலும் போகப்போக அவர் போடும் மொக்கைகள் தாங்கல

அமைச்சராக வரும் ராதா ரவி குட்


கருணாகரன் எடுபடவில்லை

முதல் பாதி ஜவ்வாக இழுக்கும் திரைக்கதை மைனஸ், பாடல்கள் ஹிட்.ஒளிப்பதிவு , லொக்கேசன் செலக்சன் எல்லாம் பக்கா


கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் தான் ஆகச்சிறந்த சொதப்பல்

இடைவேளைக்குப்பின் படம் சுதாரித்தாலும்  லாஜிக் ஓட்டைகள்  ஏராளம்.

டவுட் டேவிட்

1  ஒரு செண்ட்ரல் மினிஸ்டர்  பயணிகள் ரயிலில் வருவாரா?அதுவும் 2  வீரர் பாதுகாப்பு மட்டும்?

2  பழுதடைந்த பாலத்தை கடக்கும்போது 130 கிமீ வேகத்தில் ரயில் தறி கெட்டு ஓடியும் எதுவும் ஆகாதது எப்படி?

3  ரயில் கொள்ளையர்கள் லூசுங்க போல் ரயில் டாப்பில் அமர்ந்து கேமராவுக்கு முகம் காட்டுவது ஏன்?

4   க்ளைமாக்ஸ்  சீனில் ஹீரோ ரயிலின் டாப்பில் புகைக்கு நடுவே இருந்தும் ஃபேர் அண்ட் லவ்லி போட்ட பன் பேபி போல் கலரா இருப்பது எப்படி?



தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


மாற்றான் தோட்டத்து மல்லிகையைக்கவரும் /நுகரும் வழக்கம் கொண்டவர் வாழ்வில் ,தொழிலில் தோற்க வாழ்த்து #,அட்டர் பிளாப்.மகிழ்ச்சி
2 வியாழக்கிழமை செண்ட்டிமெண்ட்.நமக்கும் ஒர்க் அவுட் ஆகிடாதா?ன்னு நிறைய பேரு முயற்சி பண்றாங்க.ஆனா ஜெயிக்க முடியறதில்ல

3 சார்.படத்தில் முதல் பாதி ல கதையே இல்லையாமே?


ஆமா.முன் பாதி யே எடுபடலைன்னா பின் பாதி மட்டும் எடுப்பாவா இருக்கப்போகுது?



4 அன்பே! நீ டைம் லைன் ல என்னிடம் பேசினால் கீர்த்தி அபிசியல்

டிஎம் மில் கடலை போட்டால் கீர்த்தி பர்சனல்



5 168 நிமிசம் தொடரி

6 தள்ளு தள்ளு# ஓப்பனிங் டயலாக்.தள்ளிட்டுப்போகப்போறார்.குறியீடு


7 ஹீரோ படம் பூரா செக்டு டிசைன் சர்ட் தான் போட்ருக்காரு.எதுனா குறியீடா?


கட்டம் கட்றதுல கண்ணன்.கரெக்ட் பண்றதுல மன்னன் னு அர்த்தமாம்

8 சிப்பிக்குள் முத்து கமல் டான்ஸ் ஸ்டெப் ட்ரை பண்றாப்டி.கமல் ரசிகர்கள் மன்னிப்பார்களாக#தொடரி


9 தொடரி- பிரபு சாலமன் தன் வெற்றிப்பாதையிலிருந்து விழுந்தார் இடறி


10 சார்.தமிழ் சினிமாவின் முதல் ரயில் படம் னு சொல்றாங்களே அது நிஜமா?


தெரில.ஆனா இது ஒரு பெயில் படம்.இது நிஜம்

சி.பி கமெண்ட்- தொடரி - முன் பாதி சி சென்ட்டர் ஆடியன்சுக்கான மொக்கை காமெடி.பின் பாதி விறுவிறுப்பு.லாஜிக் சொதப்பல்கள்.விகடன் -40,ரேட்டிங் = 2.5 / 5