Showing posts with label MUSICA (2024) - அமெரிக்கன் மூவி - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label MUSICA (2024) - அமெரிக்கன் மூவி - சினிமா விமர்சனம். Show all posts

Thursday, April 11, 2024

MUSICA (2024) - அமெரிக்கன் மூவி - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி ) @ அமேசான் பிரைம்

      


 சவுத்  பை  சவுத்  வெஸ்ட்டில்  உலகப்பட  விழாவில்  13/3/2024  அன்று  திரை இடப்பட்ட   படம், இன்னும் தியேட்டர்  ரிலீசுக்குத்தயார்  ஆக  வில்லை . அமெரிக்காவில்  ஏப்ரல்  மாதம்  கடைசி  வாரம்  ரிலீஸ்  ஆக  இருக்கும்  படம்..அமேசான்  பிரைம்  ஓடிடி  யில்  4/4/2024  முதல்  காணக்கிடைக்கிறது . இது  மியூசிக்கல்  ரொமாண்டிக்  காமெடி  ஃபிலிம் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்   அவர்கள்  படத்தில்  கமல்  பாடிய  கடவுள்  அமைத்து  வைத்த  மேடை  பாடலில்  ஒரு  பொம்மையை  வைத்து  மிமிக்ரி  செய்யும்  கலைஞன்  போல   வீதிகளில்  பொம்மலாட்டம்  செய்பவன்.  தன்  அம்மாவுடன்  வசித்து  வருகிறான்.  அவன்  ஒரு  அமெரிக்கப்பெண்ணை  விரும்புகிறான். அவள்  வசதியானவள், ஆனாலும்  ஏழையான  நாயகனை  விரும்பு கிறாள் . 


 நாயகனின்  அம்மாவுக்கு   தன்  மகன்  ஒரு    அமெரிக்கப்பெண்ணை  விரும்புவது  பிடிக்கவில்லை . பிரேசில்  நாட்டுப்பெண்ணை  அறிமுகம் செய்து  வைக்கிறாள் 


நாயகனின்  அமெரிக்கக்காதலி  ஒரு  கட்டத்தில்  நாயகனை  பிரேக்கப்  செய்து  கொண்டு  செல்ல  நாயகன்  பிரேசில்  பெண்ணான  இசபெல்லா  உடன்   பழகுகிறான்.  இருவரும்  காதலிக்க  ஆரம்பிக்கலாம்  என  நினைக்கும்போது  நாயகனின்  முதல்  காதலி  ஆன  அமெரிக்கப்பெண்  மீண்டும்  நாயகனின்  வாழ்க்கையில்  வருகிறாள் 


  நாயகன்  முடிவெடுக்க  முடியாமல்  தடுமாறுகிறான். இதற்குப்பின்  நிகழும்  சம்பவங்கள்  தான்  மீதிக்கதை 


 நாயகன்  ஆக  நடித்து  திரைக்கதை  எழுதி , இசை  அமைத்து  இயக்கி  இருப்பவர்  ரூடி  மன்சுகோ,இவருக்கு  இது  முதல்  படமாம்,  நம்ப  முடியவில்லை.  மிகவும்  யதார்த்தமாக ,  இயல்பாக  நடித்திருந்தார் 


இசபெல்லாவாக  நாயகி  ஆக  கமீலா  கலக்கலான  நடிப்பை  வெளிப்படுத்தி  இருக்கிறார்., அவர்  முகத்தைப்பார்த்துக்கொண்டே  இருக்கலாம்  போல  கொள்ளை  அழகு 


அமெரிக்கப்பெண்  ஆக   ஃபிரான்சிஸ்கா  ரியல்  நடித்திருக்கிறார். இவரும்  பொம்மை  மாதிரி  அழகு 


படத்தில்  அதிக  கேரக்டர்கள்  இல்லை  நாயகன் , நாயகிகள்  இருவர் , அம்மா, நண்பன்  ஆகிய  முக்கியக்கேரக்டர்கள் ஐவர்  தான் 


91  நிமிடங்கள்  ஓடும்படி  ஷார்ப்  ஆகக்கட்  செய்து  இருக்கிறார்  எடிட்டர்.


 இசைக்கு   முக்கியத்துவம்  கொண்ட  கதை  என்பதால்  படம்  முழுக்க  துள்ளாட்டம்  போடும்  பிஜிஎம்  அசத்தல் 


ஒளிப்பதிவு  அருமை .



சபாஷ்  டைரக்டர்


1  நாயகன்  மாறி  மாறி  இரு  நாயகிகளை  சந்திப்பதை  ஓரங்க  நாடக  மேடையில்  வருவது  போல  ஒரே  ஷாட்டில்   செட்டிங்க்ஸ்  மாறி  மாறி  வர  லொக்கேஷன்  சேஞ்ச்  ஆவது  புதுமையான  காட்சி  அமைப்பு 


2  நாயகன்  தன்  காதலியிடம்  பேசும்போது  இசையால்  கவனம்  சிதறுவது . அதனால்  தன்னைக்கவனிக்காமல்  இருக்கிறான், தனக்கு  முக்கியத்துவம்  தராமல்  இருக்கிறான்  என  கோபித்துக்கொண்டு  காதலி  பிரேக்கப்  செய்வது  என  யதார்த்தமான  காட்சி  அமைப்பு  அழகு 


3  க்ளைமாக்ஸ்  சீன்  தமிழில்  வந்த  விண்ணைத்தாண்டி  வருவாயா  க்ளைமாக்சை  நினைவுபடுத்தினாலும்  கவிதையாக   இருந்தது


ரசித்த  வசனங்கள் 


1 வாழ்க்கைல  அடுத்து  என்ன  நடக்கும்னு  தெரியாம  இருப்பதே  சுவராஸ்யம், அதை  நான்  விரும்புகிறேன்


2   நீ  பார்ப்பதை  என்னால்  பார்க்க  முடியலை , ஆனால்  நீ  உணர்வதை  என்னால்  உணர  முடியுது 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  யூ  படம்  தான் . லிப்  கிஸ்  சீன்  மட்டும்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இசைக்காதலர்களுக்கு , ரொமாண்டிக்  ஃபிலிம்  பார்ப்பவர்களுக்குப்பிடிக்கும்,   ரேட்டிங்  2.5 / 5 


இசை
போஸ்டர் வெளியிடவும்
இயக்கம்ரூடி மன்குசோ
எழுதியவர்
உற்பத்தி
நடிக்கிறார்கள்
ஒளிப்பதிவுஷேன் ஹர்ல்பட்
திருத்தியவர்மெலிசா கென்ட்
இசை
  • ரூடி மன்குசோ
உற்பத்தி
நிறுவனங்கள்
மூலம் விநியோகிக்கப்பட்டதுஅமேசான் பிரைம் வீடியோ
வெளியீட்டு தேதிகள்
நேரம் இயங்கும்
91 நிமிடங்கள் [1]
நாடுஅமெரிக்கா
மொழிகள்
  • ஆங்கிலம்
  • போர்த்துகீசியம் [2] [3]