Showing posts with label BAMA KALAABAM -2 (2024) - தெலுங்கு - பாமா கலாபம் பாகம் 2 - தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label BAMA KALAABAM -2 (2024) - தெலுங்கு - பாமா கலாபம் பாகம் 2 - தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts

Tuesday, February 27, 2024

BAMA KALAABAM -2 (2024) - தெலுங்கு - பாமா கலாபம் பாகம் 2 - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஹெய்ஸ்ட் த்ரில்லர் ) @ ஆஹா தமிழ்


 நான்  சின்னப்பையனா   இருக்கும்போது  எங்க  வீட்டுக்குப்பக்கத்துல  ஆண்டவர் பவர்  பிரஸ்  இருந்தது . எல்லா  கதைப்புத்தகங்களும் அங்கே  பைண்டிங்க்கு  வரும். அங்கே  தான்  துப்பறியும்  சாம்பு படக்கதை  படிக்கும்  வாய்ப்புக்கிடைத்தது . அதில்  சாம்பு  என்னும் கேரக்டர் ஏதாவது கோமாளித்தனமாக  செய்வார் . அது  ஒரு  கேசை  முடிக்கும்  விதமாக  அவரையும்  அறியாமல்  மாறிப்போகும். அந்த  ஐடியாவைத்தான்  இயக்குநர்  பாமா  கலாபம் பாகம் 1 ல்  கையாண்டு  வெற்றி  பெற்றார். ஒரு  சாமான்யப்பெண்  எப்படி  ஒரு  க்ரைம்  டிராமாவில்  சம்பந்தப்படுகிறார்  என்பதுதான்  கதையின்  ஒன்  லைன் .  


  மேஜிக்  ரைட்டர்  அமரர்  சுஜாதா  கதைகளில்  கணேஷ் , வசந்த்   கேரக்டர்கள்  உலக  ஃபேமஸ். அதில்  கணேஷ்  அறிவுப்பூர்வமாக  சிந்திப்பார் , வசந்த்  விளையாட்டுத்தனமாக  இளமைக்குறும்புடன்  சேட்டைகள்  செய்வார் . அதே  போல்  கணேஷ்  கேரக்டர்  போல்  நாயகி  வசந்த்  கேரக்டர்  போல்  நாயகிக்கு  உதவி  ஆக ஒரு  பெண் , அவர்  சீரியசான  சந்தர்ப்பங்களில்  கொடுக்கும் காமெடி  கவுண்ட்டர்கள்  அப்பாவித்தனாமாய்  இருந்து  நம்மை  சிரிக்க  வைக்கும் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு  குடும்பப்பெண் ஒரு  கணவன் , ஒரு மகன்  என்று  வாழ்க்கை  சுமூகமாகப்போய்க்கொண்டிருக்கிறது . அவர்  ஒரு  யூ  ட்யூப்  சேனல்  நடத்தி  வருகிறார். அதில்  சமையல்  சம்பந்தப்பட்ட  பதிவுக்ள்  போட்டு  ஹிட்  ஆக்குவதுதான்  அவரது  வேலை . அவருக்கு  ஒரு  ரெஸ்ட்டாரண்ட்  தொடங்க  ஆசை . கணவனிடம்  சொல்லி  அதற்கான  ஏற்பாடுகளை  செய்கிறார். இப்போ  ரெஸ்ட்டாரண்ட்  ரெடி . நாயகி  அதன்  ஓனர் .  நல்லா  போய்க்கொண்டு  இருக்கு 


 இப்போ  ஒரு  சமையல்  போட்டி  அறிவிக்கிறார்கள் . அதற்கான  பரிசாக  ஒரு  வெற்றிக்கோப்பை  இருக்கு . அதில்  ஒரு  சமூக  விரோத  கும்பல்  ஒரு  கிலோ  போதை  மருந்து  பதுக்கி  வைத்திருக்கிறார்கள் ,அதன்  மதிப்பு  1000 கோடி  அதை  அடைய  இரு  வேறு  கும்பல் போட்டி  இடுது . ஒரு  போலீஸ்  ஆஃபீசரும்  அதை  அடைய நினைக்கிறார். அவர்  நாயகியை மிரட்டி  அவருக்கு  உதவியாக  3  நபர்களை  நியமித்து  ஆளுக்கு  தலா  ரூ 25  லட்சம்  என  சம்ப்ளம்  பேசி  அந்த  திருட்டை  நடத்த  பிளான்  போடுகிறார். அந்த  பிளான்  எப்படி  சக்சஸ்  ஆச்சு ? என்பதுதான்  மீதி திரைக்கதை 


 நாயகி  ஆக  ப்ரியாமணி .  பருத்தி  வீரன் , சாருலதா  படங்களில்  பார்த்த  புஷ்டியான  பெண்ணை  எதிர்பார்க்காதீர்கள்  ,. டயட்டில்  இருந்து  உடல்  இளைத்த  பாவமான  பிரியாமணி  தான்  இப்போ  இருக்கார் , ஆனால்  நடிப்பில்  குறை  வைக்க  வில்லை . அவரது  வேகமான  ஆக்சன்களும் , டயலாக்  டெலிவரியும்  குட் 


நாயகிக்கு  உதவியாக  வரும் பணிப்பெண்  ஷில்பாவாக  சரன்யா  கலக்கலாக  காமெடி  செய்கிறார். அக்கா  அக்கா  என  அவர்  நாயகியை  அழைத்து  அப்பாவித்தனமாகக்கேட்கும்  கேள்விகள்  நரசிம்மராவ்களையும்  புன்னகை  மன்னன்  ஆக்கும். அவரது  முக  பாவனைகள்  , உடல்  மொழி  பிரமாதம்.  நாயகியையே  சில  சமயம்  தூக்கி  சாப்பிட்டு  விடுகிறார்


போலீஸ்  ஆஃபிசர்  ஆக  வருபவர் சீரத் கபூர்  நடிப்பும்  குட்  படத்தில்  வரும்  மற்ற  முக்கியமான  கேரக்டர்கள்  கொடுத்த  வேலையை  கச்சிதமாக  நிறைவேற்றி  இருக்கிறார்கள் 


முதல்  பாகம்  வெற்றி  பெற்றதும்  சாமார்த்தியமாக  அதன் இரண்டாம்  பாகத்தை  இயக்கியது சிறப்பு . முதல்  பாகத்தில்  நாயகியின்  கேரக்டர்  டிசைனை  விளக்க  30  நிமிடங்கள்  எடுத்துக்கொண்டு   காமெடியாக  கதையைக்கொண்டு  போனவர்  இதில்  நேரடியாகக்கதைக்கு  வந்து  விடுகிறார். அதனால்  முதல்  பாகத்தை  விட  இதில்  காமெடியும்  குறைவு , படத்தின்  நீளமும்  குறைவு 


  கலகலப்பு  , விறு விறுப்பு , பரபரப்பு  என   நம்மை  யோசிக  விடாமல்  நகரும்  திரைக்கதை  அமைத்து  இயக்கி  இருப்பவர்  அபிமன்யூ


சபாஷ்  டைரக்டர்


1  நாயகி  லிஃப்டில்  வரும்போது  மிரர்  இமேஜில்  10  உருவங்களாக  அவர்  தெரிவது  குட்  ஷாட் 


2  நாயகியின்  தோழி  அடிக்கடி  நாயகியிடம்  எவ்ளோ  இட்லி  வித்தாலும்  நமக்கு  50  லட்சம்  எல்லாம்  கிடைக்காது , அதனால  இந்த ஹெய்ஸ்ட்  பிளானுக்கு  ஓக்கே  சொல்லிடலாம்  என  சொல்வது  நல்ல  காமெடி 


3  அந்த  லேடியின்  ஃபிங்கர்  பிரிண்ட்டை  எடுக்க  நாயகி  மேற்கொள்ளும்  முயற்சிகள்  குட் , அதை  காமெடியாக  சொன்ன  விதமும்  ரசிக்க  வைத்தது 


4   ஒளிப்பதிவு  , இசை , பின்னணி  இசை , ஆர்ட்  டைரக்சன்   போன்ற  டெக்னிக்கல்  அம்சங்கள்  குட் 




  ரசித்த  வசனங்கள் 

1  அந்த  ஆளை  நான்  தான்  கொன்னேன், ஆனா  திதி  கொடுப்பது  நம்ம  வழக்கம்  ஆகிடுச்சு , எத்தனை  பேரைக்கொன்னாலும் இந்த  சாங்கியம் , சம்பிரதாயம்  மட்டும்  மாறாது 


2  அக்கா , நீ  என்னை  நம்புனு  நீ  என்  கிட்டே  சொல்றதால  நான்  உன்னை  நம்பறேன், ஆனா  என்னைத்தவிர  வேற  யாரும்  உன்னை  நம்ப  மாட்டாங்க 


3  அக்கா , அவரு  நீ  சொன்னதுக்கு  குட்  ஐடியானு  பாராட்னாரு , மேலே  ஒரு  25  லட்சம்  கேட்கலாமா? அடிக்கடி  இப்படி  குட்  ஐடியாக்களா  குடுத்தா  25     25  லட்சமா  கூட்டிக்கேட்கலாமில்ல? 


4  ஒரு நல்ல  சாப்பாட்ல  3  அம்சங்கள்  நிச்சயமா  இருக்கனும்  1  புதுமை 2  நல்ல  வாசனை  3 அலங்காரம் 


5  வாட்  டூ  டூ? ட்டுட்டூடூ, மை  நேம்  ஈஸ்  மணி  பட்  ஐ  ஹேவ்  நோ  மணி 


6  சாகனும்னு  முடிவு  எடுத்தவனுக்கு  கொல்றது  ஒண்ணும் பெரிய  விஷயம்  இல்லை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   கஞ்சா  கேஸ்  பார்ட்டி  நாயகியை  கத்தியைக்காட்டி  மிரட்டிக்கொண்டிருக்கும்போது  ஆட்டோ  வந்து  நிற்கிறது . அதைப்பார்த்ததும்  அந்த  கஞ்சா  டக்னு  பைக்கை  எடுத்து  ஸ்டார்ட்  பண்ணி  எஸ்  ஆகிறான், ஆட்டோ  டிரைவர்  டேய்  போகாதே  நில்  என  குரல்  கொடுத்துக்கொண்டு  இருக்கிறான். டக்னு  பிடிச்சிருக்கலாம் . பக்கத்துல்யே  தான்  இருக்கான் 


2  நாயகிக்கு  முன்  பின்  அறிமுகமே  இல்லாத  ஆள்  கிட்டே  அந்த  கஞ்சா  பார்ட்டியைப்பற்றி  புகார்  தர  நாயகி  போகிறாள். அவனை  டிராக்  பண்ண  உங்க  ஃபோனை  என்  கிட்டே  கொடுத்துட்டுப்போங்க  என்றதும்  நாயகி  எப்படி  தருகிறாள்?  சிம்  கார்டை  மட்டும்  கழட்டி  தந்திருக்கலாமே?  ஃபோனில்  பர்சனல்  மேட்டர்ஸ் இருக்கும்


3  நாயகி  தன்  செல்  ஃபோன்  லாக்  பேட்டர்ன்  என்ன  என  சொல்லவே  இல்லை . அந்த  ஆஃபிசர்  எப்படி  ஃபோனை  ஓப்பன்  பண்ணி  நாயகி  செல் ஃபோனில்  இருந்து  ஒரு  மெசேஜ்  அனுப்புகிறார்? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   முதல்  பாகம்  பார்க்காதவர்களும்  இந்ச இரண்டாம்  பாகத்தைப்பார்க்கலாம், தனிக்கதை  தான்.  காமெடி +  த்ரில்லிங்  .  ரேட்டிங்  2. 75 / 5