Showing posts with label AAP JAISA KOI (2025)-ஹிந்தி /தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா ). Show all posts
Showing posts with label AAP JAISA KOI (2025)-ஹிந்தி /தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா ). Show all posts

Friday, July 18, 2025

AAP JAISA KOI (2025)-ஹிந்தி /தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி டிராமா ) @ நெட் பிளிக்ஸ்

                     

    

திரை  அரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக   நெட் பிளிக்ஸ்   ஓ டி டி   யில் 11/7/2025 முதல் வெளியான இந்தப்படம்  விமர்சகர்களிடையே பாசிட்டிவ்  ஆன வரவேற்பைப்பெற்று வருகிறது . ஆணாதிக்க மனப்பான்மையைக்கண்டிக்கும் கதை அம்சம் உள்ளது  என்பதால் அந்தக்கால  ஆட்கள்  அதாவது சிவாஜி , எம்   ஜி ஆர்  காலத்து ஆண்கள்  ரசிக்க முடியாது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  42 வயது  ஆன ஒரு முதிர் கண்ணன் . இன்னமும் திருமணம் ஆகவில்லை .எதுவும் ஆகவில்லை . சுத்தமான வெர்ஜின் . ஒரு பள்ளியில்  ஆசிரியர் ஆகப்பணி புரிகிறார் .எந்த ஜாதகமும் அமையாததால்  இவர்  ஒரு கிளுகிளுப்பான  ரகசிய ஆப் பில்  மெம்பர்  ஆகச்சேர்ந்து  ஒரு பெண்ணுடன் கடலை  போடுகிறார் . அதில் பரஸ்பரம்  ஆளைப்பார்க்க முடியாது .குரல் மட்டும் தான் . ரொம்ப நாட்களாகப்பெண் சகவாசமோ வாசமோ இல்லாமல் இருந்தவர் இப்பொது  அடிக்கடி  அந்த ஆப்   மூலம்  அந்தப்பெண்ணுடன் கடலை  போடுகிறார் 



 இப்போது   நாயகனின் அம்மா  நாயகனுக்கு ஒரு வரன் செட்  ஆகி இருப்பதாகக்கூறுகிறார் ., நாயகி  ஒரு  ஸ்கூல்  டீச்சர் . பெண்  பார்த்த   மாப்பிள்ளை க்கு பெண்    பிடித்து   விட்டது . பெண்ணுக்கும் மாப்பிள்ளையைப்பிடித்து விட்ட்து . இப்போதுதான்  ஒரு டிவிஸ்ட் . நாயகன்  அந்த ஆப் பில்  கடலை  போட் ட  பெண்  நாயகி தான்  என்பது தெரிய வருகிறது 


 ஆண்  கடலை   போடலாம், பெண்  கடலை  போ டலாமா? கலாச்சாரம் என்ன ஆவது  என முடடாள் தனமாகக்கொதித்த நாயகன் திருமணத்தை நிறுத்தி விடுகிறான் . இதற்குப்பின் நடக்கும்  சம்பவங்கள் தான்  மீதித்திரைக்கதை 


நாயகன்  ஆக அலைபாயுதே  மாதவன்  நடித்திருக்கிறார் . நல்ல நடிப்பு .  சில  இடங்களில்  கமல் பாணியில் எதற்கு மெனக்கெட்டு நடித்தார் எனத்தெரியவில்லை 


 நாயகி ஆக   பாத்திமா சனா சைக்  பேசிக்கலாகவே ஓப்பன் யுனிவரிசிட் டியில்  டிகிரி   முடித்தவர் போல .காற்றோட் டமான  உடைகளில்  கிளாமராக வருகிறார் .  ஒரு சீனில் கூட   நதியா , ரேவதி  போல புல்கவர்  பண்ணி  உடை   அணியவே  இல்லை . பிழைக்கத்தெரிந்தவர் . நடிப்பு , டயலாக் டெலிவரி , உடல் மொழி எல்லாமே பக்கா 


 மற்ற  அனைவருமே  நல்ல   நடிப்பை வழங்கி  உள்ளனர் 


டெபோஜித்ராய்   தான் ஒளிப்பதிவு . கலர்புல்  கலக்கல் ஸ் . மூவர் சேர்ந்து இசை   அமைத்திருக்கிறார்கள் .5 பாடல்களில்  3  நன்றாக இருக்கிறது .  பின்னணி  இசை அருமை . பிரசாந்த் ,  ராமச்சந்திரன்  எடிட்டிங்கில்  பட,ம்  115 நிமிடங்கள்   ஓடுகிறது 


ராதிகா ஆனந் , ஜெகன் ஹாண்டா  ஆகிய இருவரும் இணைந்து கதை  , திரைக்கதை  எழுதி இருக்கிறார்கள் ..  விவேக்  சோனி  இயக்கி  இருக்கிறார் 


சபாஷ்  டைரக்டர்


1 திரைக்கதை  ஆசிரியர்  ஒரு  பெண்   என்பதால்  ஆணாதிக்க மனப்பான்மையைக்கடுமையாகண்டி க்கும் வண்ணம் வசனம்  எழுதிய  பாங்கு , கேரக்ட்டர்  டிசைன்  செய்த விதம் அருமை .பெண்களை மிகவும் கவரும் 


2  நாயகியை    கிளாமர்  ஆகக்காட்டிய விதம் , ஆண்களை மிகவும் கவரும் 


3  கலர்புல்  கலக்கல்  ஆன  ஒளிப்பதிவு 



  ரசித்த  வசனங்கள் 


1  தனிமை தான் உலகின் மிக மோசமான நோய் 


2  நட் பு காதல்  ஆக பல வருஷங்கள் ஆகும் 


3   நினைச்ச  மாதிரி  வாழ்க்கை அமையலைன்னா அப்படி ஒரு வாழ்க்கையை அமைக்கக்கத்துக்கொள்

 

4  இன்ட் டர்நெட்  எல்லாரையும் கெடுத்து வெச்சிருக்கு ,கண்டதையும் காட்டி  



5  காதல்  ஒரு சூதாட் டம் மாதிரி 


6  16 அல்லது 17 வயதில் இப்போ எல்லாம் யார் வெர்ஜின்  ஆக இருக்காங்க ? மியூஸியம் ல கூட கிடைக்க மாட் டாங்க 


7  ஒரு ஆண்  நீங்க   வெட்கப்படுவது   ரொம்ப செக்சியா இருக்கு 


8 யாருக்காகவாவது காத்திருக்கும் வாய்ப்பு இதுவரை எனக்குக்கிடைக்கலை 


9  வெற்றிலை சாப்பிட் டால்  பிறகு கொஞ்ச  நேரத்துக்கு ஏலக்காய் ருசி , வாசம்   தெரியாது 


10  சோல் மேட்   எல்லா உறவுகளிலும்  கிடைக்கும் , எனக்குப்பாட்டி வடிவில் கிடைச்சிருக்கு 



11   பாடறது  பூ  பூக்கறது மாதிரி 


12  சந்தோஷமோ , துக்கமோ தனிமைல இருக்கும்போது ஒரே மாதிரி தான் டீல் பண்றே ன் 


13    எமோஷனலான நேரத்துல    எமோஷனலா தான் நடந்துக்கணும் 


14  ஆம்பளைங்களுக்கு மட்டும் தான் ஆசைகள் இருக்கணுமா? 


15   ஹை புரோபைல்  இருக்கும் பொண்ணுங்க பிறந்த வீடு , புகுந்த வீடு இரண்டு தரப்புக்கலாச்சாரத்தையும் கெடுத்துக்குட்டிச்சுவர் ஆக்கி வெச்சுடுவாங்க 


16   மறந்த மாதிரி  நடிச்சாத்தான் நிஜமா மறக்க முடியும் 


17  உங்களை மாத்தணும்னு நினைக்காத பொண்ணு கிடைத்திருக்கு 


18  என் உடம்பு பூரா அவ பரவி இருக்கா 


நீ பேசலை , நீ குடிச்சு இருக்கும் சரக்கு பேசுது 


19   ரொம்ப நல்லவனா இருக்காதே 


20  காதலுக்கு சரி சமமான காதல் தான் வேணும் 


21 பக்திக்குத் தேதியும்  சந்தர்ப்பமும் தேவை இல்லை 


22  நாட்டில் இருக்கும் பாதி ஆம்பளைங்க இப்படித்தான் இருக்காங்க ., அவங்களுக்கு இப்படித்தான் கத்துக்கொடுக்கப்பட்டிருக்கு 

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகனின்  அண்ணி  கேரக்ட்டர்  தன கணவன்  தன மீது  அன்பு வைக்கவில்லை  , மதிக்கவில்லை  என தன மகன் வயது ஆளுடன் கள்ளக்காதலில்  ஈடுபடுவது , அதை நியாயப்படுத்துவது 


2  நாயகி  தனது  முதல்    காதல்  பிரேக்கப் ஆனதுக்கு  சொல்லும் காரணம் 


3  நல்ல   பர்சனாலிட்டி  ஆன  நாயகனுக்கு  42 வயது   வரை  தோழிகள் ,கேர்ள்  பிரண்ட்ஸ்  அமையாதது  நம்ப முடியவில்லை 


4 அதே   போல  32 வயது ஆன நாயகி  தன வாழ்நாளில்  ஒரே ஒரு ஆள்   தான் ப்ரப்போஸ் செய்து இருக்கிறான் என்பதும் ஏற்புடையது அல்ல 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - மாதர் சங்க  உறுப்பினர்களுக்கு , முற்போக்குவாதப்பெண்களுக்கு , நாகரிகமான  பெண்களுக்கு , சரக்கு , தம் அடிக்கும் பெண்களுக்கு மிகவும்  பிடிக்கும் ., ஆண்கள்  பார்த்தால்  கடுப்பாவார்கள். ரேட்டிங்க்  2.75 / 5