Showing posts with label ரசிகர்கள். Show all posts
Showing posts with label ரசிகர்கள். Show all posts

Monday, September 06, 2010

எந்திரன் பஞ்ச் டயலாக்ஸ்

ரஜினி நடித்த படங்களிலேயே திரைக்கதை மேஜிக் பிரமாதமாக ஒர்க் அவுட் ஆன படம் பாட்ஷா.இடைவேளை வரை பில்டப்பும்,டெம்ப்போவும் குறையாமல் படம் செம ஸ்பீடாக போகும்.அதில் ஒற்றை விரலை உயர்த்தி ரஜினி சொன்ன “நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி என்ற பாலகுமாரனின் பன்ச் டயலாக் சூப்பராக க்ளிக் ஆனது.பஞ்ச் டயலாக்குகளுக்கு மவுசு கூடியது இதற்குப்பிறகுதான்.ஆளாளுக்கு அதேபோல் பேச ஆரம்பித்தாலும் ரஜினி பேசுவது போல் கெத்து யாருக்கும் வரவில்லை.

ரஜினியின் அடுத்த பட பஞ்ச் டயலாக் என்னவாக இருக்கும் என்று மீடியாக்கள் எழுத ஆரம்பித்தன,குமுதம் வார இதழ் தனது புலனாய்வு இதழான குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் பாபா படத்துக்கான பஞ்ச் டயலாக் போட்டி அறிவித்தது.
பரிசு தலா ரூ 250.இதற்கு வாசகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது,

மொத்தம் 12000 பேர் போட்டியில் கலந்து கொண்டார்கள்.ராஜபாளையம்  பேச்சியப்பன்  என்பவர் அதிக பட்சமாக 127 பஞ்ச் டயலாக்ஸ் அனுப்பி 4 செலக்ட் ஆனது.(இவர் ஒரு ஜோக் எழுத்தாளர்,சன் டிவியில் அசத்தபோவது யாரு நிகழ்ச்சியில் ஸ்டேண்ட் அப் காமெடி செய்பவர்.)

மொத்தம் 20 டயலாக்குகள் தேர்வாகி அவை படத்தில் பயன்படுத்திக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.ரசிகர்களின் ஆர்வத்தைப்பார்த்த ரஜினி படக்குழுவின் ஒப்புதலோடு ஒரு பஞ்ச் டயலாக்கிற்கு ரூ 10,000 பரிசு என அறிவித்தார்.உண்மையில் இது ஒரு பிரம்மாண்டமான தொகையே.ஏனெனில் ஆனானப்பட்ட ராஜேஷ்குமாருக்கே ஒரு நாவலுக்கு ரூ 5000 தான் தருகிறார்கள்.100 பக்கங்கள் எழுதி ரூ 5000 சம்பாதிக்க ஆசைப்படுவதை விட ரஜினி படத்துக்கு 2 லைன் எழுதி ரூ 10,000 சம்பாதிக்கலாம் என பரபரப்பாக பேசப்பட்டது.ஆனால் பாபா திரைக்கதை தொய்வு காரணமாகவும்,ரஜினி ஆக்‌ஷன் செய்யாமல் வெறும் சித்து வேலை,ஆன்மீகம்,மந்திரம் என இறங்கியதில் அவரது ரசிகர்களுக்கே உடன்பாடு இல்லை.இதே போல் கே .பாக்யராஜ்க்கும் என் ரத்தத்தின் ரத்தமே படத்தில் ஏற்பட்டது.
இப்போது எந்திரன் படம் வரப்போகிறது.ரோபோ என படத்துக்கு  முதலில் பெயர் வைத்தார்கள்,பின் தமிழில் பெயர் சூட்ட குமுதம் இதழ் மூலம் இயக்குநர் ஷங்கர் போட்டி வைத்தார்.அதில் என் இனிய இயந்திரா,எந்திரன்,இயந்திரன் என 3 டைட்டில்கள் இறுதி சுற்று வரை வந்தது.ஃபைனலாக இயக்குநர் எந்திரன் டைட்டிலை தேர்ந்தெடுத்தார்.இந்தப்படத்தில் ரஜினி பேசும் பன்ச் டயலாக்ஸ் என்னவென ரசிகர்கள் 12,500 பஞ்ச் டயலாக்ஸ் அனுப்பினாலும் ஷங்கர் பாபா செண்ட்டிமெண்ட் காரணமாக அவற்றை நிராகரித்தார்.எழுத்தாளர் சுஜாதா எழுதிய 4 டயாக்ஸ் மட்டும் சேர்க்கப்பட்டது.அவை ரகசியம் காரணமாக வெளியிடப்படவில்லை.

எனக்கு எஸ் எம் எஸ் சில் வந்தவை இவை.

ரஜினி சாஃப்ட்வேர் எஞ்சினியராக எந்திரனில் வந்தால் ...

1.நான் ஆஃபீசுக்கு லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் சாஃப்ட்வேருடன் தான் வருவேன்.

2.கண்ணா,வைரஸ்தான் கூட்டமா வரும்,ஆண்ட்டி வைரஸ் சிங்கிளாத்தான் வரும்.

3. C க்கு அப்புறம் C ++ ,எனக்கு அப்புறம் நோ ++ .

4.நான் பார்க்கறதுக்குத்தான் ஹார்டுவேர் மாதிரி,ஆனா மனசு சாஃப்ட்வேர் மாதிரி.

5. J   TO THE A TO THE V TO THE  A  - JAVA