Showing posts with label நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா. Show all posts
Showing posts with label நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா. Show all posts

Sunday, September 28, 2014

நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா -தினமும் 18 மணி நேரம் இடைவிடாது பணியாற்றிய டி'குன்ஹா


கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பை நெருங்கியதற்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவே மிக முக்கிய காரணம். 


18 ஆண்டுகள்.. 6 நீதிமன்றங்கள்.. 90 நீதிபதிகள்.. தினமும் 18 மணி நேரம் இடைவிடாது பணியாற்றிய டி'குன்ஹா


இவ்வழக்கில் நீதிபதியாக நியமிக்கப்பட்டு ஓராண்டுக்குள் தீர்ப்பெழுதும் கட்டத்திற்கு நகர்த்தியதில் அவரது கடும் உழைப்பும்,அசராத அணுகு முறையும் உள்ளது.
1996-ம் ஆண்டு ஜூலையில் சென்னை மாநகர அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கிய சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை சிங்கார வேலர் சிறப்பு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றம் என கடந்த 18 ஆண்டுகளில் 6 நீதிமன்றங்களின் படிகளை ஏறி இருக்கிறது. சென்னை நீதிமன்ற நீதிபதி சம்பந்தம் என்பவரில் ஆரம்பித்து நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா வரை சுமார் 90 நீதிபதிகள் இவ்வழக்கை விசாரித்துள்ளதாக பெங்களூர் சிறப்பு நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.
1997-ல் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக் கப்பட்டு 16 ஆண்டுகளுக்கு பிறகு ஜான் மைக்கேல் டி'குன்ஹா 14-வது சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக கடந்த 31-10-2013 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
பெங்களூர் சிபிஐ நீதிமன்றத்தின் நீதிபதியாகவும்,பெங்களூர் மாவட்ட நீதிமன்ற பதிவாளராகவும் பணியாற்றிய இவர் கடந்த 11 மாதங்களில் வழக்கை தீர்ப்பை நோக்கி நகர்த்தியுள்ளார்.அதற்கு காரணம் அவருடைய கடினமான உழைப்பும், கண்டிப்பான அணுகு முறையும் தான் காரணம். மேலும் மனு மேல் மனு போட்டு நீதிமன் றத்தின் நேரத்தை வீணடித்த தனியார் நிறுவனங்களின் மனுக் களை மிகச்சரியாக கையாண்டார். முதல் முறையாக அவர்களுக்கு அபராதம் விதித்தார். அரசு வழக் கறிஞர் பவானி சிங் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் அவரு டைய இரு நாள் ஊதியத் தை(ரூ.1.2லட்சம்) அபராதமாக விதித்தார்.உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறி ஞருக்கு அபராதம் விதித்த‌து அதுவே முதல்முறை.
காலை 8.15 மணிக்கே வந்து விடுவார்
டி'குன்ஹா சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க ஆரம்பித்ததும் வாரத்தின் 5 நாட்களும் விசாரணையை தொடர்ந்து நடத்தினார். இதற்காக தினமும் 18 மணி நேரம் ஒதுக்கி வேலை செய்தார்.
அதுவும் தீர்ப்பு தேதியை குறித்த பிறகு, நீதிமன்றத்தை சுத்தம் செய்பவர்கள் வருவதற்கு முன்பாக தனது இருக்கையில் வந்து அமர்ந்து விடுவார். தினமும் மாலை 6 மணிக்கு தான் வீட்டிற்கு திரும்புவார்.வழக்கு குறித்த அனைத்து ஆவணங்களையும் படித்து, அவ்வப்போது குறிப் பெடுத்துக்கொள்வார் என பெங்களூர் சிறப்பு நீதிமன்ற ஊழியர்கள் நீதிபதி டி'குன்ஹாவின் பாணி குறித்து விவரித்தனர்.
அவர்கள் மேலும் கூறும்போது “நேற்று காலை 7.30 மணிக்கு நீதிமன்றத்துக்கு நேரடியாக சென்று இருந்தோம்.பெங்களூர் சிறப்பு நீதிமன்ற கட்டிடத்தில் யாரும் தென் படவில்லை. ஆனால் காலை 8.15 மணிக்கு நீதிமன்ற கட்டி டத்தில் உள்ள பழைய தபால் நிலையம் அருகே இருந்த குறுகலான பாதையில் நுழைந்தார். தன்னை யாரும் புகைப்படம் எடுத்துவிடக்கூடாது என்பதற்காகவே இவ்வழியை டி'குன்ஹா தேர்ந்தெடுத்துள்ளார்.
காலை 8.18 மணிக்கு தனது இருக்கையில் அமர்ந்த நீதிபதி குன்ஹா மாலை 7.30 மணி வரை பணியில் மூழ்கினார்.இன்று வழங்கவிருக்கும் தீர்ப்பின் பக்கங்களுக்கு இறுதிவடிவம் கொடுத்துக் கொண்டிருந்தார். இந்த வழக்கு மிகவும் முக்கியமானது என்பதால் வழக்கமாக தட்டச்சு செய்பவரை பயன்படுத்தவில்லை.தான் நீதிபதியாக பணியாற்ற தொடங்கிய காலத்தில் இருந்து பழக்கமான ஒரு பெண்ணையே தட்டச்சு செய்ய அனுமதித்துள்ளார்.
அதுவும் தீர்ப்பின் இறுதி வடிவத்தை தனது கைப்படவே கடந்த 4 தினங்களாக திருத்தி, தட்டச்சு செய்துள்ளார்” என்றனர்.
நீதிபதி டி'குன்ஹாவை பொறுத்தவரை அவர் ஒரு முறை தீர்ப்பு அளித்தால், அந்த வழக்கு அடுத்தடுத்து உயர்நீதி மன்றங் களை அணுகினாலும் தோல்வியே அடையும்.அந்த அளவுக்கு தீர்ப்பு வழங்குவதில் கெட்டிக்காரர் என கர்நாடக நீதித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
தீர்ப்பின் இறுதி வடிவத்தை தனது கைப்படவே கடந்த 4 தினங்களாக திருத்தி, தட்டச்சு செய்துள்ளார். 

thanx  - the  hindu 

  • kokilavani  
    Wow hat's of respected sir this a victory of justice
    about an hour ago ·   (1) ·   (0) ·  reply (0) ·
       
  • raaja  
    சட்டத்தின் முன் அனைவரும் சமம். நீதி துறையில் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு திரு.மைக்கல் டி . குன்கா அவர்கள் மென்மேலும் உங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள் அனைத்து நீதிபதிகளும் உங்களை மாதிரி இருந்தால் எந்த அரசியல்வாதிகளும் ஊழல் செய்யமாட்டார்கள்
    Points
    2675
    about an hour ago ·   (6) ·   (0) ·  reply (0) · 
  • l  
    அப்படியா அதபோல நம்ம மக்கள் பணத்தை அரசு வங்கி மூலம் வாங்கி yapam விட்ட பல தொழில் அதிபர்களுக்கு (for example மல்லையா) ஒரு pathuandu தண்டனை கொடுக்க முடியுமா அபோ நீதி இருக்குன்னு நான் othukuvaan
    Points
    145
    about 2 hours ago ·   (2) ·   (1) ·  reply (0) · 
  • R Rangahathan  
    உடன்பிறப்புக்களே 'நீதிக்கு தலைவணங்கு '- M G R
    Points
    120
    about 2 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
  • Kamaraj  
    Proud of you sir
    about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • r.nagaraj  
    Needhiyai nidhiyakum kaalathil,...! neethiyai nilainaatia needhiyarasar.
    about 3 hours ago ·   (2) ·   (1) ·  reply (0) · 
  • Ramamoorthy Elumalai INCHARGE AT VANAGARAM BRANCH at KAG India (P) LTD 
    Good sir..
    about 3 hours ago ·   (2) ·   (1) ·  reply (0) · 
  • Vicky  
    Best example for justice
    about 3 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
  • thamilan  
    tharumathin valzhuthanai suthu kavvum anal தருமம் vendru vittathu . nice job
    about 3 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
  • thamilan  
    tharumathin valzhuthanai suthu kavvum anal தருமம் vendru vittathu . nice job
    about 3 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
  • J.K.Dineshwaran  
    வாய்மையே வெல்லும் நல்ல தீர்ப்பு திருந்தட்டும் அரசியல் வாதிகள் வேர் அறுக்க படட்டும் ஊழல்கள் மென்மேலும் உங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள் திரு டி குன்ஹா அவர்களே
    about 4 hours ago ·   (9) ·   (0) ·  reply (0) · 
  • xavier  
    நீதிக்கு முன் எல்லாரும் சமம் . சரியான தீர்வு
    about 4 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
  • royalchallangekalai  
    Great job sir, congrats
    about 4 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • k karthikeyan  
    Unmaiyana indian the top hero
    about 4 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • crg  
    where ever kingdom presents இன் front of justice is ஆல் ஆர் same
    about 5 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • Ramesh Karthikeyan  
    All sorts of tactics were tried by J to delay conviction. At last justice has prevailed. Admk workers went on rampage throwing public life out of gear. This is a cause of concern. Judiciary should come down with an iron hand to crush such elements that terrorise people to appease their leaders. It shows that these political parties and leaders have least respect for the public. Hon'ble HC should intervene and tame the unruly hooligans.
    about 6 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
  • காரி இஸ்மாயில்  
    நீதிக்கும் நீதியரசர் டி குன்ஹாவிற்கும்... வாழ்த்துகள்.
    about 7 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
  • viswnathan  
    பிஜேபி மத்திய அரசிற்கு நல்ல வேலை பார்த்துள்ளார் .இப்படியே போங்க நாடு நல்ல முன்னேறும்
    about 8 hours ago ·   (4) ·   (3) ·  reply (0) · 
  • Raju  
    நீதிபதி டி'குன்ஹாவை பொறுத்தவரை அவர் ஒரு முறை தீர்ப்பு அளித்தால், அந்த வழக்கு அடுத்தடுத்து உயர்நீதி மன்றங் களை அணுகினாலும் தோல்வியே அடையும்.அந்த அளவுக்கு தீர்ப்பு வழங்குவதில் கெட்டிக்காரர் என கர்நாடக நீதித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.” பால் வார்த்தீர்கள்
    Points
    1810
    about 9 hours ago ·   (2) ·   (1) ·  reply (0) · 
  • Usman  
    True always true. Judgements is too late. Thanks to close this cases at least this stage.
    about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • vignesh  
    Maanitha Eeyallbu
    about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • RadhaKrishnan  
    Very good judgment result & I need 2G case judgment very soon
    about 9 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
  • victor  
    சூப்பர் தீர்ப்பு ! வாழ்த்துகள் பல நீதிபதி ஜான் மைகேல் அவருக்கு
    about 10 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • Sivabalan  
    அனைத்து நீதிபதிகளும் திரு குன்ஹா மாதிரி இருந்தால் எந்த அரசியல்வாதிகளும் ஊலல் செய்யமாட்டார்கள்
    about 10 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
  • Yuvaraj  
    சரியான திறப்பு சொன்ன திரு.மைக்கல் டி . குன்கா அவர்கள் .ஒரு சிறந்த, எதற்கும் அஞ்சாத நீதிபதி...
    about 10 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • sam  
    விட்டால் தமிழ்நாடு வை அம்மாநாடு என்று மாற்று இருபார்கள்
    about 11 hours ago ·   (3) ·   (3) ·  reply (0) · 
  • kutti  
    Judge t Kung a honest man
    about 11 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • t.ganapathi  
    சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாடு நிலைபெற்றால் சரி
    about 11 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • செ.  
    கல்வியறிவற்ற, சிந்தித்துப் பார்க்க இயலாத, பாமர மக்களை இலவசப் பொருட்கள் கொடுத்தும், வளர்சிக்குதவாத கவர்ச்சித் திட்டங்களால் தன் பெயரிலுள்ள "பேரவைச் செயலாளர்" என்ற திருநாமத்தில் ஆவின் பால் வைத்தியநாதன் போன்ற கட்சி ஊழல்வாதிகளுக்குப் ஒப்பந்தம் என்ற பெயரில் ஊழல் புரிய உரிமை கொடுத்தும் "மக்கள் சக்தி" என்ற கத்தியை கட்சி அரசியல் என்ற சாணைக் கல்லில் தீட்டி, தட்டிக்கேட்பவரை "ஓடுகாலிகள்", "கழுதை தேய்ந்து கட்டெறும்பு", "அரைவேக்காடு" என்று அர்ச்சனை செய்தும், அரசியலில் தனக்கு ஒரு எதிரியும் இல்லை என்று இறுமாந்தும், மத்திய அரசுடன் அன்றாடம் மோதியும், தானே உலக மகா யோக்கியர் என்பதுபோல் எளிமையைக் கடைப்பிடிக்காமல் ஹெலிகாப்டர் ஏறிப் பறந்தும், ஆணவம் அளவில்லாது எடுத்தெறிதல், சக அமைச்சர்களை கைகட்டி வாய்பொத்தி அடிமைகளைப்போல் நடத்தியும் கொஞ்சமும் அரசியல் நாகரீகம் இல்லாது எல்லோர் மீதும் வழக்குப்போட்டு இழுத்தடித்தும் சட்டமன்றத்தில் ஏகடியம் பேசியும், தற்புகழ் பாடியும், தன்னை எல்லோருக்கும் அம்மா என்று தானே கூறிக்கொண்டும் உருப்படாத திட்டங்களை அன்றாடம் அறிவித்தும் அழிச்சாட்டியம் புரிந்த ஒருவருக்கு இந்தத் தண்டனை சரியே!
    Points
    6445
    about 15 hours ago ·   (158) ·   (9) ·  reply (1) · 
  • PPM  
    நன்றாகச் சொன்னீர்கள்..தமிழர்கள் சினிமா மோகத்தை விட்டு வெளிவர வேண்டும்.
    about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • T.  
    அய்யா!! உங்கள் பாதங்களில் எனது நன்றியை தெரிவிக்கிறேன்! நீதியை காப்பாற்ற யாராக இருந்தாலும் தைரியமாக முடிவெடுக்கும் உரிமை நீதிபதிகளாகிய உங்களிடம்தான் இருக்கிறது!! இன்று இந்தியா உங்களால் காப்பாற்ற பட்டது.


சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா வழக்கை விரைவாக நடத்தினார்.
மங்களூரைச் சேர்ந்த ஜான் மைக்கேல் டி'குன்ஹா, 1985-ம் ஆண்டு வழக்கறிஞராக பணி யாற்ற தொடங்கினார். 2002-ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தார்வார்ட், பெல்லாரி, பெங்களூர் ஆகிய இடங்களில் நீதிபதி, தலைமை நீதிபதியின் செயலாளர், உயர் நீதிமன்ற பதிவாளர் (கண்காணிப்பு) உள்ளிட்ட பல பதவிகளை வகித்துள் ளார். இந்நிலையில், கடந்த 2013 அக்டோபர் மாதம் முதல் ஜெய லலிதா மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர், இந்த வழக்கை விசாரித்த 5-வது நீதிபதி ஆவார்.
இந்த வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு கடந்த 2003 நவம்பர் மாதம் மாற்றப்பட்டது. அப்போது சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக ஏ.எஸ்.பச்சாபுரே நியமிக்கப்பட்டார். 2007-ம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக அவர் பதவி உயர்வு பெற்ற பிறகு, ஜெயலலிதா மீதான வழக்கை விசாரிக்க நீதிபதி ஏ.டி.முனோலி நியமிக்கப்பட்டார். முனோலி ஓய்வு பெற்ற பிறகு, நீதிபதி பி.எம்.மல்லிகார்ஜுனையா நியமிக்கப்பட்டார்.
நீதிபதி பி.எம்.மல்லிகார்ஜுனையா விசாரணை நடத்தியபோதுதான் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை, ஜெயலலிதாவிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.
2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மல்லிகார்ஜுனையா ஓய்வு பெற்ற பிறகு நீதிபதி எம்.எஸ். பாலகிருஷ்ணாவிடம் வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டது. சசிகலா, இளவரசி, சுதாகரனிடம் வாக்குமூலங்களை பதிவு செய்தல், வழக்கறிஞர்களின் இறுதி வாதம் போன்றவை இவர் நீதிபதியாக பணியாற்றியபோது நடைபெற்றது.
2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா ஓய்வு பெற்ற பிறகு, இவ்வழக்கு நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவின் கைக்கு சென்றது. மிகவும் கண்டிப் பானவர் என பெயர் எடுத்த டி'குன்ஹா, வழக்கை தாமதப்படுத்தும் செயல்களை அனுமதிக்காமல் விரைவாக பணியாற்றினார்.
இறுதி வாதத்தின்போது, வழக்கின் விசாரணையை தாமதப் படுத்தவும், நீதிமன்றத்திடம் இருந்து உண்மை களை மறைக்கவும் முயற்சிப் பதாக குற்றம் சாட்டப்பட்டோர் தரப்புக்கு அவர் கண்டனம் தெரிவித் திருந்தார் என்பது நினைவுகூரத் தக்கது.