Showing posts with label டாடா (2023) தெலுங்கு /தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label டாடா (2023) தெலுங்கு /தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts

Monday, March 13, 2023

டாடா (2023) தெலுங்கு /தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்


  3  கோடி ரூபாய்  பட்ஜெட்டில்  எடுத்து  16  கோடி  ரூபாய்  வசூல்  பார்த்த  படம் . இது  போக  டிவி  ரைட்ஸ் , ஓடிடி  உரிமை  லாபம்  தனி. புதுமுகங்கள் , அல்லது  அதிகம்  அறியப்படாத  முகங்களை  வைத்து  திரைக்கதையை  நம்பி   எடுக்கப்படும்  படங்கள்  வெற்றி  பெறுவது  ஆரோக்யமான  சினிமா வுக்கு  வழி  வகுக்கும்

டாடா  என்றால் தெலுங்கில்  அப்பா  என  அர்த்தமாம், நான்  கூட  டாட்டா  என்பதன்  சுருக்  என  நினைத்தேன்


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் , நாயகி  இருவரும்  காதலர்கள் , திருமணத்துக்கு  முன்பே  தம்பதியாக  வாழ்ந்ததால்  நாயகி  கர்ப்பம்  ஆகிறார். நிலையான  வேலை  இல்லை  என்பதாலும்  இரு  தரப்பு  பெற்றோர்  ஆதரவு  இல்லாததாலும்  இப்போதைக்கு  குழந்தை  வேண்டாம் ,  கலைத்து  விடு   என்று  நாயகன்  சொல்ல  நாயகி  மறுக்கிறாள்.   இருவரும்  மனஸ்தாபத்துடன்  அவரவர்  வீட்டை  விட்டு  வெளியேறி  நண்பனின்  வீட்டில்  வாடகை  தராமல்  தங்குகின்றனர்நண்பனின்  வீட்டுக்கு  ஃபிரண்ட்ஸ்  வருவதால்  அவர்கள்  வருகை  நாயகிக்கு  இடைஞ்சலாக  இருக்கிறது. இதனால்  தனி  வீடு  பார்க்க  வற்புறுத்துகிறாள். தனி  வீட்டில்  இருக்கும்போது  அடிக்கடி  வாக்குவாதம்  வருகிறது. நாயகியின்  தோழி  திருமண  அழைப்பிதழ் கொடுக்க  வந்தபோது  நாயகி  நாயகனிடம்  தோழிக்கு  ஏதாவது  கிஃப்ட்  வாங்க  வேண்டும்  என  சொல்கிறாள்


 நம்ம  ஜீவனமே  சிரமமா  இருக்கு , இதுல  கிஃப்ட்  வேறயா  என  கோபத்தில் நாயகன்  ஆஃபிஸ்க்கு  கிளம்ப  நிறை  மாத  கர்ப்பிணியான  நாயகி   அன்று  மாலை  பிரசவ  வலி  வ்ந்து  துடிக்கும்போது  நாயகனுக்கு  ஃபோன்  செய்ய  நாயகன்  ஆல்ரெடி  செம  கடுப்பில்  இருந்ததால்   ஸ்விட்ச்  ஆஃப்  செய்கிறான்


 நாயகியின்  பெற்றோர்  நாயகியை  ஹாஸ்பிடலில்  அட்மிட்  செய்கிறார்கள் 

 பின்  தகவல்  நாயகனுக்குப்போக  நாயகன்  ஹாஸ்பிடல்  வருகிறான். அங்கே  குழந்தை  மட்டும்  இருக்கிறது . நாயகி  இல்லை , நாயகி  வீட்டையும்  காலி  செய்து  விட்டார். அவரது  பெற்றோரும்  வீட்டில்  இல்லை 


 இப்போது  நாயகன்  தன்  குழந்தையை  என்ன  செய்தார்? இவர்கள்  இருவரும்  ஒன்று  சேர்ந்தார்களா? இல்லையா? என்பதுதான்  மீதிக்கதை 


நாயகனாக  கவின் . முதல்  பாதி  முழுக்க புட்டபர்த்தி  சாய்பாபா  போல பிரேமனாந்தா  ஸ்வாமிகள்  போல சீவாத  தலையுடன்  வருபவர்  பின்  பாதியில்   ஐ டி  ஊழியராக  டீசண்ட்டாக  வருகிறார். யதார்த்தமான  அளவான  இயற்கையான  நடிப்பு .. ஆல்ரெடி  இவருக்கு ஏகப்பட்ட  ரசிகைகள்  உண்டு , இந்தப்படத்தின்  கேரக்டர்  டிசைன்  பெண்களுக்குப்பிடிக்கும்  விதத்தில்  வடிவமைக்கப்பட்டு  இருப்பதால்  இனி  ரசிகைகள் டபுள்  ஆகலாம் 


 நாயகியாக அபர்ணா  தாஸ். அதிகம்  சிரிக்காத  முகம் . பின்  பாதி  முழுக்க கடு கடு  என  இருக்கும்  முகம்  க்ளைமாக்ஸ்  காட்சியில்  அட்டகாசமாக  நடித்திருக்கிறார்


நாயகனின்  அம்மா  அப்பாவாக  ஐஸ்வர்யா, கே பாக்யராஜ்  நடித்திருக்கிறார்கள். அதிக  வாய்ப்பில்லை 


 வி டி வி  கணெஷ்  குணச்சித்திர  வேடம் 


நாயகனின்  மகனாக  மாஸ்டர்  இளன்  குட் . 


இசை  ஜென்  மார்ட்டின். பாராட்டத்தக்க  அறிமுகம். 7  பாடல்களில்  2  சூப்பர்  ஹிட் .எழில்  அரசனின்  ஒளிபபதிவு  கண்ணுக்குக்குளுமை . கதிரேஷ்  அழகேசனின்  எடிட்டிங்  கனகச்சிதமாக   ரெண்டேகால்  மணி  நேரத்தில்  ட்ரிம்  செய்யப்பட்டு  இருக்கிறது 


சபாஷ்  டைரக்டர் ( க்ணேஷ்  கே  பாபு )


1    பணி  புரியும்  இடத்தில்  தன்னை  எதிர்த்துப்பேசிய  பெண்  ஒரு  சிக்கலில்  மாட்டும்போது  பழைய  பகைமை  பாராட்டாமல்  அவருக்கு  உதவி  செய்து  அவளிடம்  நன்றி  பெறும்  காட்சி 


2    பாத்ரூமில்  தற்கொலை  மிரட்டல்  விடும்  ஒரு  லூஸ் தாடிவாலாவை  லெஃப்ட்  ஹேண்டில்  டீல்  செய்யும்  விதம் 


3   ஹோட்டலில்  தன்னிடம்  ப்ரபோஸ்  செய்ய  வந்த  ஆஃபீஸ்  லேடி  ஸ்டாஃப்  உணர  தன்    மனைவியுடனான  ஃபோட்டோ  உள்ள  பர்சை  நாசூக்காக டேபிளில்  வைத்து  விட்டு  நாயகன்  வெளியெ  செல்லும்  காட்சியும், அந்தப்பெண்  ஃபோட்டோ  பார்த்து  மனம்  நோகும்  காட்சியும்   


4 உணர்வுபூர்வமான  க்ளைமாக்ஸ்  காட்சி 


5  பின்  பாதி  திரைக்கதை  மவுன  கீதங்கள்  பாணியில்  இருப்பதால்  பின்னால்  பிரச்சனை  வந்து  விடக்கூடாது  என  கே  பக்யராஜை  ஒரு  கெஸ்ட்  ரோலில்  நடிக்க  வைத்து  சமாதானப்படுத்திய  லாவகம் 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  நேசக்காதலா.. 


2 கிரிட்  கிரிட் கிர்ட்டுனுதான்  இருக்குதடா  வாழ்க்கை 


3  வா  வா  என்  மகனே


4   ஆதித்யா மோனும்  அதிதி  மோளும்  திருச்சூர்  ட்ரெய்ன்ல  போயி


5  நம்ம  தமிழ்


6   வா  வா  என்  உயிரே 


7  போகாதே


  ரசித்த  வசனங்கள் 


1  அப்பா   பேச்சை  மீறி  எதுவும்  செய்ய  மாட்டா  சார், தங்கமான  பொண்ணு 


 நீங்களே  தான்  பேசிட்டு  இருக்கீங்க, பொண்ணை  ஒரு  வார்த்தை  பேசச்சொல்லுங்க 


 நான்  கர்ப்பமா  இருக்கேன்  சார் 


2  என்  கர்ப்ப  கால  ஆசை  என்ன  தெரியுமா? யாருமே  இல்லாத  ரோட்ல  மிட்  நைட்ல  நாம  ரெண்டு  பேரும்  பைக்  ரைடு  போகனும்


 உங்கப்பன்  தங்கராஜ்   இருக்கானில்லை , அவன்  ரோடு  போட்டாதான்  யாருமே அங்கே  வர  மாட்டாங்க 


3  உங்களுக்கெல்லாம்  உங்களால  நாங்க  நல்லாருக்கனும், ஆனா  உங்களை  விட  நாங்க  நல்லாருக்கக்கூடாது ‘?

4  எவ்வளவு  நாட்களுக்கு  இப்படி  ஓடிக்கிட்டே  இருப்பே? ஃபேஸ்  யுவர்  ஃபியர்ஸ்


5  வாழ்க்கை  தத்துவத்தை  எங்க  பாட்டி  எப்படி  சொல்வாங்க  தெரியுமா? விரலை  உள்ளங்கை  பக்கமா  மடக்கலாம், ஈசி , ஆனா  புறங்கை  பக்கமா  வளைக்க  முடியாது  , கஷ்டம், விரல்  ஒடிஞ்சிடும் 


6 உன்னோட  கடந்த  காலத்தைப்பற்றி  நினைச்சுட்டு  இருக்காம  உன்  மகனோட  எதிர்காலத்தை  மனதில்  வைத்து  வேலைக்கு  போ   


7  லைஃப்ல  எதைத்தொலைச்சாலும்  திருப்பிக்கிடைக்காது , ஆனா  உன்  லைஃபே  திரும்பக்கிடைச்சிருக்கு 


8  அந்த  ஆளு  இருக்கும்போது மட்டும்  என்னைப்பார்க்கிறாளே?னு  அப்பவே  எனக்கு  டவுட்,  அவ  அவனைத்தான்  பார்த்திருக்கா,  என்னை  அல்ல 


9   வழக்கமா  பொண்ணுங்கன்னா  பிரிச்சுத்தான்  விடுவாங்க ,  நீ  சேர்த்து  வைக்கறதா  சொல்றியே?


10   புதுசா  ஆரம்பிச்ச  வாட்சப்  க்ரூப்  ஈ  ஓடுது. ஒரு  பய  உள்ளே  வர  மாட்டேங்கறானுங்க 


 ஓசி  சோறுனு  சொல்லு , அடிச்சு  பிடிச்சு  வருவானுங்க 


11   உண்மையா  உனக்கு சமைக்கத்தெரியுமா?


 தனியா  இரு , வாழ்க்கையே  தெரியும்


12   வாழ்க்கைல  பெரிய  பெரிய  விஷயத்தை எல்லாம்  வாழ்க்கையே  தீர்மானிக்கும்,  ரிலாக்சா  இரு


13   திரும்பி  உன்  வாழ்க்கைல  இணைவேன்னு கனவுல கூட  நினைக்காதே


 அய்யோ  ஜி  என்  கனவுல  நீங்க  வந்தாலும்  உங்க்ளை  சேர்த்துக்கற  ஐடியாவே  இ;ல்லை


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  கர்ப்பமா  இருக்கும்  நாயகியிடம்  லேடி  டாக்ட்ர்  ஹூமோ  க்ளோபின்  அணுக்கள்  சுத்தமா  இல்லை , வெயிட்  ரொம்பவும்  குறைஞ்சுட்டீங்கன நு  வசனமா  சொல்றார், ஆனா  விஷூவலா  நாயகி  ஆப்பிள்  மாதிரி  தளதளனுதான்  இருக்கார். வெயிட்டும்  அதிகமா  தான்  இருக்கார் 


2   நாயகன்  இண்டர்வ்யூவுக்காக  வந்த  இடத்தில்  எம்  டி  மேடம்  நாயகனை  தன்  கம்பெனி  ஸ்டாஃப்  என  நினைத்து  பேசிக்கொண்டிருக்கிறார். அந்த  ஷாட்ல  கூட  இருக்கும்  அனைவரும்  கம்பெனி  யூனிஃபார்ம் ல  டை  கட்டி  ஆஃபீஸ்  டேக்  கழுத்துல  மாட்டி  இருக்காங்க, நாயகன்  மட்டும்  அதெல்லாம்  இல்லாம  தனியா  தெரியறார் . அது  கூடவா  அந்த  எம்  டி  மேடம்  கண்ணுக்கு  தெரியல ?


3  நாயகன்  எம்  டி  மேடமிடம்  சொன்ன  ஐடியாவை  அட்டர்  நான்சென்ஸ்  என  திட்டி  சொல்லும் எம்  டி  மேடம்  அடுத்த  ஷாட்டில்  உங்க  கிட்டே  பாசிட்டிவ்  வைப்ரேசன்  தெரியுது என  பல்டி  அடிப்பது  எதனால் ?

4  நாயகனுக்கு  ரெக்கமெண்டேசன்லதான்  வேலை  கிடைக்குது , ஆனா  ரெகமண்ட்  பண்ணியவருக்கான  சம்பளத்தை  விட  அதிகமான  சம்பளம்  நாயகனுக்கு  என்பதால்  அந்த  நபர்  வேறு  ஒருவரை  இவருக்குப்பதில்  அவர்  பாலிசியில்  மாற்றுவது  எப்படி ? எம்  டி  வேறு  நபர்,  எம்  டி  தானே  அப்பாயிண்ட் மெண்ட்  செய்தது ? அவரை  எப்படி  கன்வின்ஸ்  செய்தார்  என்பதைக்காட்டவே  இல்லையே??


5  வேலை  இழந்த  நாயகன்  எம்  டி  யிடம்  போய்  முறையிடவே  இல்லையே? அவர்  நாலெட்ஜூக்கே  போகாம  இந்த  விஷயம்  நடக்குமா? அதைத்தெரியப்படுத்தவாவது  எம் டி  யை  மீட்  பண்ணி  இருக்கலாமே? 


6 படம்  போட்ட  36 ஆம்  நிமிடம்  நாயகி  காணாமல்  போனவர்  இடைவேளை  பிளாக்கில்  அதாவது 111  வது  நிமிடத்தில்  தான்  வருகிறார். இது  ஒரு பின்னடைவுத்கான், அட்லீஸ்ட்  அவரை  ரெண்டு  காட்சியிலாவது  அப்பப்ப  காட்டி  இருக்கலாம் 


7  குழந்தை  இறந்தே பிறந்தது  என  பொய்  சொல்லி நாயகியின்  பெற்றோர்  சமாளிப்பதை  நம்ப  முடியலை . இறந்த  குழந்தை  எங்கெ? என  கேட்க  மாட்டாரா? ஒரே  இரவில்  வீட்டைக்காலி  பண்ணும்போது  டவுட்  வராதா? 


8  நாயகியின்  தோழர்கள் , தோழிகள்  யாருமே  நாயகன்  குழந்தையுடன்  தனியாக  வசிப்பதை  தகவல்  தெரிவிக்கவில்லையா?


9 நீண்ட  இடைவெளிக்குப்பின்  நாயகியை  சந்திக்கும்  நாயகன்  ஏன்  குழந்தையை  விட்டுட்டுப்போனே? என  கேட்கவில்லை   ( ஆனா  அப்படிக்கேட்கப்போவதாக  நாயகன்  சொல்கிறார்  வெறும் வாய்  அளவில் ) 


10  நாயகனின்  அப்பா  கேரக்டர்  டிசைன்  சரியாக  வடிவமைக்கப்படவில்லை .நாயகன்  கைக்குழந்தையுடன்  தவிப்பதை  எந்த  அப்பாவும்  பார்த்துட்டு  சும்மா  இருக்க  மாட்டாங்க 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -க்ளீன்  யூசி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  குடும்பத்துடன்  பார்க்கத்தக்க  ஒரு  ரொமாண்டிக்  மெலோ  டிராமா. டீன்  ஏஜ்  இளைஞர்கள் , யுவதிகள்  அவசியம்  காண  வேண்டிய  படம்.  ரேட்டிங் 3 / 5 


Dada
Dadareleaseposter.jpg
Theatrical Release Poster
Directed byGanesh K. Babu
Written byGanesh K. Babu
Produced byS. Ambeth Kumar
Starring
CinematographyEzhil Arasu K.
Edited byKathiresh Alagesan
Music byJen Martin
Production
company
Olympia Movies
Distributed byRed Giant Movies
Release date
  • 10 February 2023
Running time
135 minutes
CountryIndia
LanguageTamil
Budget₹ 3 crore
Box officeest. ₹16 crore[1]