Showing posts with label குறும்படம். Show all posts
Showing posts with label குறும்படம். Show all posts

Thursday, June 09, 2011

நாளைய இயக்குநர் - த்ரில் கதைகள் - விமர்சனம்

இன்னைக்கு தொகுப்பாளினி  ஓரளவு சுமாரான நைட்டி போட்டுட்டு வந்தாங்க.. (நான் பார்த்ததிலேயே மிக மோசமான ஃபிகர் இவர் தான் ஹி ஹி )ஹாய் மதன் வந்ததும் ஒரு டிஸ்கஷன்.டிஜிட்டல் டெக்னாலஜி வந்த பிறகு மேக்கிங்க்ல தரம் குறைஞ்சிடுச்சா? என்பதே அந்த கேள்வி. கோட்ஜில்லா பட டிஸ்கஷன்ல சில குறைகள் இருந்தப்ப டைரக்டர் கிட்டே ஆளாளுக்கு எடிட்டிங்க்ல பார்த்துக்கலாம், டிஜிட்டல்ல பார்த்துக்கலாம் அப்டின்னு தட்டிக்கழிக்கறாங்களாம்..

ஜூராசிக் பார்க் படத்துல அந்த மாதிரி ஒரு பிராணி இல்லாதப்பவே இருக்கற மாதிரி ஒரு இமேஜினேஷன் மனசுக்குள்ள கொண்டு வந்து பயந்த மாதிரி நடிக்கனும்.அது கஷ்டம் என்றார்..

பென்ஹர் படத்துல ஒரு சீன்ல ரேஸ் கார் அவங்களையும் அறியாம இடம் பிடிச்சதையும் அதை ஒண்ணும் பண்ண முடியாம போனது பற்றியும் குறிப்பிட்டாங்க..

www.forwards4all.com
1. அருண்ராஜா காமராஜர் - THE DARK

வாய் பேச முடியாத பொண்ணு ,அவங்கம்மா மொத்தம் 2 கேரக்டர். அந்த பொண்ணுக்கு இருட்டுன்னா பயம்.. அது ஞாபகம் இல்லாம வெளில கிளம்பறப்ப அம்மா ஆல் லைட்ஸ் ஆஃப் பண்ணிட்டு போறாங்க.. உடனே அந்த பொண்ணு ஆ என அலறுது.. அப்பத்தான் அம்மாவுக்கு ஞாபகம் வருது.. உடனே ரிட்டர்ன் ஆகி அவளை சமாதானப்படுத்திட்டு அப்புறமா  வெளியே கிளம்பறாங்க.. 

அவங்க போனதும் மறுபடி கரண்ட் கட் ஆகுது.. ( கலைஞர் டி வி லயே இப்படி கரண்ட் கட் ஆகற சீன் வருதேன்னு யோசிச்சா அட,..  இப்போ நடக்கற ஆட்சி அம்மா ஆட்சின்னு நினைவு வருது.. )ஆனா இந்த டைம் அந்த பொண்ணு பயப்படலை.. விளக்கு ஏற்றி வெச்சு( ஒரு குத்து விளக்கே இன்னொரு குத்து விளக்கை ஏற்றுகிறதே அடடே ஆச்சரியக்குறி.. )ஏதோ ஒரு புக் படிக்கறாங்க.. 

அந்த புக் ஆதிகாலத்தில் மனிதன் எப்படி எதேச்சையாக நெருப்பை கண்டு பிடிக்கிறான் என்பது..

இருள் இவ்வுலகின் முடிவல்ல ஆரம்பம் என்ற பின் குரலோடு படம் முடியுது.. 

படம் ஏதோ சொல்ல வருது.. ஆனா இன் கம்ப்ளீட்.. இதை கே பி சார் ரொம்ப நாசூக்கா சொன்னாரு.. ஆதிகால நிகழ்வு, நிகழ்கால நிகழ்வு இரண்டுக்குமான லிங்க் ஈஸ் நாட் சோ குட் என்றார்..

ஹாய் மதன் பேசுனப்ப 2 டைம் சீன் சேஞ்சிங்க்க்காக இருட்டை காட்றீங்க.. அதுக்கும் பவர் கட்டுக்கும் என்ன வித்தியாசம்? சாதா ரசிகன் குழம்ப சான்ஸ் உண்டு என்றார்.. என் பதில் நோ சான்ஸ் எனபதுதான்.. அதான் சீன் சேஞ்சுக்கு பேக் கிரவுண்ட் மியூசிக் குடுக்கறாரே?

3வதா வந்த பிரதாப் சார் எடுத்த எடுப்புலயே அந்த ஊமைப்பொண்ணு அப்படின்னு ஆரம்பிச்சார்.. நான் கடுப்புல ரிமோட்ல சேனல் மாத்திட்டேன்.. ஸ்டேஜ் மேனரிசம் என்ற ஒன்றை பிரதாப் சார் கத்துக்கறது நல்லது.. பிசிக்கலி சேலஞ்சுடு,மவுனமொழிபேசுபவர்கள்,என எத்தனையோ கண்ணிய வார்த்தைகள் இருக்கறப்ப.. ஹூம்.. திருந்த மாட்டாங்கப்பா.. 


www.forwards4all.com
2. அருண்குமார் - நிழற்படம்

இந்தப்படத்துல என்னைக்கவர்ந்த முக்கிய அம்சம் ஹீரோயினின் டிரஸ்ஸிங்க்சென்ஸ்.. ஓப்பனிங்க் சீன்ல போட்டுட்டு வந்த டிரஸ்க்கு மேட்சா ஸ்டெட்,செப்பல் முதற்கொண்டு கலக்குனாங்க.. அப்புறம் 4 வதா போட்ட டிரஸ் சோபா கலர்ல ஆரஞ்ச் டிரஸ் போட்டுட்டு வந்து அசத்துனாங்க.. 

வீட்ல தனியா இருக்கற பொண்ணுக்கு வரிசையா க்ரீட்டிங்க் கார்டு வருது.. அதுல அவ காதலனுடன் இருந்த ஃபோட்டோஸ் இருக்கு. தொடர்ந்து பெட்ரூம்ல ஒரு கார்டு.. உடனே அவ காதலனுக்கு ஃபோன் பண்றா.. அவன் வர்றான்.. 2பேரும் டிஸ்கஸ் பண்றாங்க.. 

2 பேரும் ஒரு முடிவெடுத்து ஒரு ஆள் வீட்டுக்கு போறாங்க.. அங்கே அவன் தனியா இருக்கான்.. அவன் இவங்களை உபசரிக்க ஏதோ டீ காபி போட உள்லே போறப்ப இவங்க டேபிள், ஃபிரிட்ஜ் எல்லாம் செக் பண்றாங்க.. அவங்களுக்கு அனுப்புன அதே மாதிரி கார்டு அங்கேயும் இருக்கு.. 

அவன் தான் அந்த ஆள்னு தெரிஞ்சுக்கிட்டு ஓடி வந்துடறாங்க.. 

அப்போ நியூஸ்ல சொல்ராங்க.. சீரியல் கில்லர் தொடர்ந்து கொலைகளை செய்து வருகிறான்... அவன் கொலைகளை செய்யும் முன் அவர்களுக்கு ஒரு ஃபோட்டோ அனுப்புகிறான்.... 

அவ்வளவுதான் படம் ..

கே பி சார் கமெண்ட் - படம் இன் கம்ப்ளீட்டா இருக்குன்னு சிலர் சொலலாம். அதே சமயம் அப்படி காட்டுனதுல தான் சஸ்பென்ஸ் நிக்குதுன்னும் சொல்லலாம்.. எனி வே இட் ஈஸ் எ குட் ஃபிலிம்னார்.. 

பிரதாப் சார் பேசறப்ப   THERE IS NO MOTIVATION.. WHAT IS THE FUNDAMENDELனு கடைசி வரை நீங்க சொல்லவே இல்லை அப்டீன்னார்.. 

ஹாய் மதன் சார்.. படம் ஓக்கே இன்னும் பெட்டரா பண்ணி இருக்கலாம்னார்.. 

என் கருத்து என்னான்னா சஸ்பென்ஸ் படம்னா அவ்வளவு தான் சொல்லனும்.. இது இது இன்ன என படம் வரைந்து பாகங்களை குறிக்க முடியாது.. உள்ளங்கையை மூடி இருக்கும் வரை தான் சஸ்பென்ஸ்.. திறந்துட்டா ப்ச்.. சப்னு போயிடும்.. இது காதலிக்கு மட்டும் இல்லை.. சஸ்பென்ஸ் படத்துக்கும் பொருந்தும்.. 

இந்தப்படத்துக்கு பெஸ்ட் மியூசிக் அவார்டு கிடைச்சுது.. 

www.forwards4all.com








3. ரங்கநாதன் - தா காட்டு

திருநெல்வேலி,கன்யாகுமரி போன்ற தென் மாவட்டங்களில்  தண்ணி காட்டு என்ற சொலவடைக்கு தா காட்டு என்பார்களாம்..

போலீஸ் லாக்கப்ல ஒரு ஆளை அடிக்கறப்ப அவன் மேல் லோகத்துக்கு டிக்கெட் வாங்கிடறான்.உடனே போலீஸ் டிஸ்கஷன்.. சில நாட்களுக்கு முன்னால் டிராஃபிக் டைம்ல தன்னை எதிர்த்துப்பேசிய ஆளை இந்த கொலை கேஸ்ல மாட்டி வைக்க திட்டம் போடுது.. 

அவனை கண்டு பிடிச்சு அவன் காருக்குள்ள பிணத்தை வெச்சுட்டு வந்துடறாங்க..  அவன் காரை கண்காணீக்கறாங்க.. அவன் டெட்பாடியை மறைக்கறப்ப டகார்னு கையும் களவுமா பிடிச்சுடலாம்கறது அவங்க பிளான்.. 

ஆனா அவன் கலைஞர் மாதிரி எத்தனுக்கு எத்தன்.. அவங்க ஜீப்லயே பாடியை ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடறான்..

இந்த நம்ப முடியாத கதைக்கு சிறந்த படம் அவார்டு குடுக்கறாங்க.. அய்யோ ஹய்யோ..

www.forwards4all.com
இந்தப்படத்தை எடுத்த இயக்குநர், பாராட்டிய வி ஐ பி களுக்கு நான் முன் வைக்கும் கேள்விகள்

1. போலீஸ் லாக்கப்ல ஆள் இறந்துட்டா வழக்கமா தூக்குல தொங்க விடுவாங்க.. அல்லது என்கவுண்ட்டர்ல  போட்டுட்டதா சொல்லிடறது தான் உலக வழக்கம்.. இப்படி தேவை இல்லாம டெட் பாடியை தூக்கிட்டு ரோடு ரோடா போலீஸ் அலையுமா?

2. ஃபுல் மப்புல இருக்கும் போலீஸ் ஆஃபீசர் டிரங்க்கன் டிரைவிங்க்கை பற்றி கேள்வி கேட்பதாகவும், அதை டிரைவர் கேலி செய்வது போலும் சீன் அமைத்திருப்பது நம்ப முடியவில்லை.. 

3. போலீஸ் வேனுக்கு டெட் பாடி மாற்றும் நேரம் குறைந்த பட்சம் 2 நிமிடங்கள் ஆகும், ஆனால் போலீஸ் ஆஃபீசர் வாய் கொப்புளிப்பது 20 செகண்ட் மட்டுமே.. அந்த கேப்பில் அவர் எப்படி தன் பங்களாவிலிருந்து 2 மாடி இறங்கி வந்து இத்தனை வேலையையும் செய்திருக்க முடியும்?

4. டிராஃபிக் இன்ஸ்பெக்டரா? க்ரைம் இன்ஸ்பெக்டரா? கேரக்டர் வடிவமைப்பில் குழப்பம்..  டிராஃபிக் இன்ஸ்பெக்டரா இருந்தா அவர் எப்படி ஸ்டேஷன்ல லாக்கப்ல கைதியை அடிக்க முடியும்? க்ரைம் இன்ஸ்பெக்டரா இருந்தா அவர் எப்படி சிக்னல்ல நின்னு பைக்கை ,காரை நிறுத்தி டிரங்க்கன் டிரைவ் சோதனை போட முடியும்?



Wednesday, May 18, 2011

நாளைய இயக்குநர் - திகில் கதைகள் - விமர்சனம்

நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்கான விளம்பரங்கள்ல அந்த வாரம் என்ன டாப்பிக் கதைங்கறது சொல்லிடறாங்க. இது தெரியாம ஹாய் மதன் இந்த வாரம் என்ன டாபிக்னு தெரியுமா? என்று  சஸ்பென்ஸ் வைக்கும்போது சிரிப்பு தான் வருது. ஆனா அவரை சொல்லி தப்பில்லை.. நிர்வாகம் விளம்பர க்ளிப்பிங்க்ஸ் போடும்போது கவனமா இருக்கனும்.. 

அப்புறம் தொகுப்பாளினி போட்டுட்டு வர்ற டிரஸ் பற்றி எப்பவும் போல சொல்லியே ஆகனும். அஞ்சரைக்குள்ள வண்டி படத்துல ஹீரோயின் பாத்ரூம்ல இருந்து வெளில வர்றப்ப எப்படி இருப்பாரோ அப்படி இருக்கார். ஒரு மஞ்சள் கலர்  பெட்டிகோட் மட்டும் போட்டுக்கிட்டு பொண்ணு ஜாலியா வருது.. பார்க்கற நமக்கே கூச்சமா இருக்கே..... ஹி ஹி 

சரி.. சதையை பற்றி எதுக்கு நமக்கு கவலை ?கதைக்குள்ள போவோம்.



1. அருண் பிரகாஷ் - பிடாரன்

ஒரு பர்த்டே பார்ட்டிக்கு வீட்ல மேஜிக் மேன் வர வைக்கப்படறான்.அது கணவனுக்கு பிடிக்கலை. மனைவியை குறை சொல்றான்.( பொதுவா மனைவிங்க எது தன்னிச்சையா செஞ்சாலும் நாங்க குறை சொல்லுவோம் இல்ல.. ?)ஹால்ல மேஜிக்மேனை உட்கார வெச்சு உள்ளே கணவன் மனைவி 2 பேரும் அவனைப்பற்றி வாக்குவாதம் பண்ணிக்கறாங்க.. ( இப்போ எல்லாம் இது ஒரு டெக்னிக்காவே ஃபாலோ பண்றாங்க போல)

தன்னோட மேஜிக் கலையை அவமானப்படுத்தறது பிடிக்காம அவன் அவங்களுக்கு பாடம் கற்றுத்தர நினைக்கிறான். கண் கட்டு வித்தையால அவங்களை பயமுறுத்திட்டு , ஆனா எந்த கெடுதலும் பண்ணாம அவன் காசும் வாங்காம ரிட்டர்ன் போயிடறான்.இதான் கதை.

ஒரு படைப்பாளியின் கோபம், ஒரு கிரியேட்டிவ் திங்க்கர்க்கு சமூகம் கொடுக்கற மரியாதை ஆகியன  பற்றி நல்ல முறையில் அலசப்பட்ட கதை.

ஹாய் மதன் ஒரு குறை சொன்னாரு. மேஜிக் மேன் எப்பவும் சுறு சுறுப்பா இருப்பாங்க,, டாமினேஷன் பண்ணுவாங்க.. ஆனா இவர் ஏன் டல்லடிச்ச மாதிரி இருக்காரு?ன்னு கேட்டாரு.


ஆனா கதையோட சஸ்பென்ஸூக்கு அப்படி காட்றது தேவைதான். சைக்கோ மாதிரி காட்டி அப்புறம் சஸ்பென்ஸை உடைக்க படத்தோட டைரக்டர் முயற்சி பண்ணி இருக்கார். ஆனா இந்த படம் எல்லா தரப்பு மக்களையும் கவரும்னு சொல்ல முடியாது.. ஆனா வெல் டேக்கன் ஃபிலிம்னு சொல்லலாம்.

 ஒரு உபரி தகவல். இது எஸ் ராமகிருஷ்ணன் எழுதுன கதை

2. ராஜ்குமார் - பிழை

வித்தியாசமான சஸ்பென்ஸ் கதை. ஒரு அபார்ட்மெண்ட்ல நர்த்தகியா வாழும் ஒரு ஆண்.. அவன் பெண் வேஷத்தில் ரூம்ல இருக்கறதை வாட்ச் மேன் பார்த்துடறார்.அதை வெளில சொல்லாம இருக்க அப்பப்ப மிரட்டி பணம் வாங்கிக்கறார்.மிரட்டல் எல்லை மீறவே (அதாவது வாட்ச் மேன் ஹோமோ ட்ரை பண்றப்ப)கொலை பண்ணிடறான். இதான் கதை

ஆரம்பத்துல ரூம்ல இருக்கும் ஆண் ஏதோ ஒரு பெண்ணுடன் தகாத உறவு வெச்சிருப்பது போல் சஸ்பென்ஸ் காட்சி வெச்சது நல்லாருக்கு.கேமரா கோணங்கள் செம.. 


இயக்குநருக்கு சில கேள்விகள்

1. வாட்ச் மேன் டூப்ளிகேட் சாவி போடறப்ப சாவியை தன் ப்ளேஸ்க்கு எடுத்துட்டு  போய் அப்புறம் சோப்ல தடம் பதிச்சு மறுபடி சாவியை பழைய இடத்துல வெக்கற மாதிரி காட்டி இருக்கீங்க.ஆனா சோப்பை கையோட எடுத்துட்டு போய் அதுல தடம் படிச்சு சாவியை வைக்கறதுதான் ஈஸி & சேஃப்டி

2. நர்த்தகியா (திருநங்கை) வர்ற ஹீரோ ரூம்ல புடவை மாத்தறதை எப்படி ரூம் ஜன்னல் சாத்தாம இருப்பார். இந்த மாதிரி நேரத்துல ஜாக்கிரதை உணர்வு ஜாஸ்தியா வெலை செய்யுமே?

3.வாட்ச்மேன்  ஒரு ஹோமோ என்பதை இன்னும் தெளிவா காட்டி இருக்கலாம்.

ஹாய் மதன் ஐடியா ஓக்கே என பாராட்டிட்டு டைரக்டரோட ஐடியாவை சொன்னேன்,. வாட்ச் மேன் ஐடியாவை சொன்னேன்னு யாரும் தப்பா நினைக்காதீங்க அப்படின்னு டைமிங்க் ஜோக் அடித்தார். ஹாய் மதனிடம் எல்லோரும் இந்த மாதிரி விட்களை எதிர்பார்க்கறாங்க. ஆனா அவர் ஏன் அடக்கி வாசிக்கிறார்னு தெரில.. ( பிரதாப் போத்தன் கூட சேர்ந்து கெட்டுட்டார் போல).

 பிரதாப் போத்தன் டைரக்டர் ராஜ்குமாரைபாராட்றப்ப நல்லா மெயிண்டெயின் (maintain)பண்ணுனீங்க என பாராட்டுவதற்குப்பதிலாக நல்லா மெண்டென் பண்றீங்க என்றார். ஸ்டைல் உச்சரிப்புன்னு நினைச்சுட்டார் போல.. ஹா ஹா
show details 21:35 (1 hour ago)

http://movies.vinkas.in/files/2011/05/poonam-bajwa-cute-stills-1.jpg


3. மணிவண்னன் - நியதி

பேங்க்கை கொள்ளை அடிக்கும் ஒரு கூட்டம் எதேச்சையா அவங்க தங்கி இருக்கற ஹோட்டல் பாம் வெச்சிருக்கறது தெரியாம பலி ஆகிடறாங்க.. சாதாரண ஒன்லைன் ஸ்டோரி தான். ஆனா மேக்கிங்க் நீட். 

நல்ல வசனம்

1. பணத்துக்காக விஷமா மாறும் ஒரே இனம் மனுஷன் தான்.

நல்ல காட்சி

பேங்க்கில் கொள்ளை அடிக்கப்பட்ட பணம் பேங்க்கிலேயே மற்றவர் முன் தீயால் எரிப்பதைப்போல் காட்டி பணத்தை சாமார்த்தியமாக அபேஸ் பண்ணுவது

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. ரத்தம் வர்ற மாதிரி காட்சில ஒரிஜினல் ரத்தம் யூஸ் பண்ணாட்டியும் பரவால்லை. சிவப்பு கலர் திரவமாவது யூஸ் பண்ணி இருக்கலாம். ஆனா ஆரஞ்ச் கலர் திரவம் ஏன் யூஸ் பண்ணி காட்சியின் டெப்த்தை (depth)குறைக்கனும்.?

(டாக்டர் ராஜசேகர் மன்னிக்க வேண்டுகிறேன் படத்துல ஒரிஜினல் ரத்தத்தை யூஸ் பண்ணினார்)

2. பேங்க் கொள்ளை நடக்கறப்ப பொதுவா ஆண்கள், பெண்கள் தனித்தனியா தனிமைப்படுத்தி மிரட்டுவாங்க.. இப்படி க்ரூப்பா ஒரே செட்டா போட்டு வைக்க மாட்டாங்க..

கே பாலச்சந்தர் இந்தப்படம் செம ஸ்க்ரீன்ப்ளே க்ளாரிட்டி எக்ஸ்ஸிக்யூஷன்மட்டும் கன்ஃபியூஷன்னு சொன்னார்


http://movies.vinkas.in/files/2011/05/poonam-bajwa-cute-stills-3.jpg

Tuesday, April 26, 2011

நாளைய இயக்குநர் - ஆக்‌ஷன் த்ரில்லர் கதைகள் 3 - விமர்சனம்


இந்த வாரம் 24.4.2011 ஞாயிறு அன்று கலைஞர் டி வில நாளைய இயக்குநர் நிகழ்ச்சி எப்பவும் போல கொண்டாட்டத்தோட தொடங்குச்சு,,ஹாய் மதன், பிரதாப் போத்தன் 2 பேருமே இப்பவெல்லாம் நல்லா உற்சாகமா பேசறாங்க..  அப்பப்ப விட் அடிக்கறாங்க.. அது சூழ்நிலையின் இறுக்கத்தை தணித்து கலகலப்பாக்குது.. குட் சேஞ்ச்... 

1.அப்துல்லா,சிவா, டேனியல் - ரவிக்குமார்

ஓப்பனிங்க் ஷாட்லயே ஹீரோ கார்ல போறப்ப அவரை வில்லன் போட்டுத்தள்ள பிளான் பண்றான். 2 பேருக்கும் என்ன பிரச்சனை? எல்லாம் பொம்பள சமாச்சாரம் தான்.. ( அதானே பார்த்தேன்)ஹீரோயினை வில்லன் லவ்வறான்.. ஆனா அவ ஹீரோவைத்தான் லவ்வறா.. ( அப்பத்தானே ஃபார்முலா ஒர்க் அவுட் ஆகும்?)ஹீரோ. வில்லன் 2 பேரும் கடத்தல் பிஸ்னெஸ் தான் பண்றாங்க.. (பின்னே சமூக சேவையா பண்ணப்போறாங்க)

ஹீரோ பணத்தை எடுத்துட்டு எஸ்கேப் ஆக திட்டம் போடறப்ப வில்லன் அவரை போட்டுத்தள்ள வழில வெயிட்டிங்க்..

ஹீரோ கார்ல போறப்ப ஒரு ஆள் வேகமா பின்னால துரத்திட்டே வர்றான்.. என்னமோ சொல்ல வர்றான்.. ஆனா ஹீரோவுக்கு பயம், வில்லன் தான் ஆள் அனுப்பி இருக்கான்னு நினச்சு காரை வேகமா ஓட்டி கரெக்ட்டா வில்லன் வெயிட் பண்ணிட்டு இருக்கற இடத்துல கொண்டு போய் சாத்தி அவனும் அவுட், வில்லனும் அவுட்.. ( ஹீரோ,வில்லன் 2 பேருக்கும்  சம்பளம் தர வேண்டியதில்லை.. டைரக்டருக்கு சவுகர்யம்..) 

அப்புறம் பார்த்தா துரத்திட்டு வந்தவன் ஹீரோவோட கார் டிக்கி ஓப்பன் ஆனதை எச்சரிக்க வந்தானாம்... அவன் ஆக்சிடெண்ட் ஆன காரை செத்துப்போன 2 பேரை பார்த்துட்டே ஹீரோ வெச்சிருக்கற லட்சக்கணக்கான பணத்தை லபக்கிடறான்.. அவ்வளவு தான் கதை..

லாஜிக் சொதப்பல்கள்

1. இந்தக்காலத்துல கார் பேனட் திறந்திருக்குன்னு பைக்ல போறவன் சொல்றதே அதிகம்.. அதுல 160 கி மீ வேகத்துல போற காரை துரத்திட்டு வந்து சொல்ல அவன் என்ன கேனயா?அவன் பாட்டுக்கு போயிட்டே இருப்பான். நிஜ வாழ்வுல.. 

2.ஹீரோவோட கார் வர்றதைப்பார்த்த பின்பு வில்லன் கல்லை எடுத்து ரோட்ல குறுக்கே போடறான்.. 4 கல்லை எடுத்து போடவே 2 நிமிஷம் ஆகுமே.. 160 கிமீ  வேகத்துல வர்ற கார் அந்த 20 மீட்டர் தூரத்தை 3 செகண்ட்ஸ்ல கடந்துடுமே..?முதல்லயே எடுத்துப்போட்டா என்ன?

மேஜிக் கலக்கல்கள்

1. படத்துல கார் ஆக்சிடெண்ட் ஆகற சீன் நல்ல சவுண்ட் எஃபக்ட்டோட  கிராஃபிக்ஸ்னு தெரியாத அளவு நீட்டா பண்ணி இருந்தாங்க.. எடிட்டிங்க்கும் பக்கா.. 

2. படத்துல யாருக்கும் வசனமே இல்லை.. எல்லாம் பேக் டிராப்ல கதை சொல்லும் உத்தி தான்.. நல்லா திங்க் பண்ணி எடுத்திருக்காங்க..


ஹாய் மதன் கமெண்ட் - இந்த படத்துல வர்ற கார் நல்லா பிடிச்சிருந்ததுன்னு சொன்னீங்களே.. பிரதாப் ஜி அந்த பிராண்ட் பிடிச்சதா? சீன் பிடிச்சதா?

 2. ஆட்டம் - ராஜேஷ் குமார்

ஜீன் கிளாட் வேண்டம் நடிச்ச பிளட் ஸ்போர்ட்,விஜய்-ன் பத்ரி படம் பார்த்த எஃபக்ட்ல இந்த படம் எடுத்திருப்பாங்க போல.. குத்துச்சண்டை தான் கதைக்களன் கூடவே தொட்டுக்க ஊறுகாயாய் காதல்.. 

ஹீரோ ஹீரோயினை லவ்வறாரு ஜிம்ல பார்த்து வந்த பழக்கத்துல... ஹீரோயின் அப்பா காதல் கல்யாணத்துல முடிய ஒரு கண்டிஷன் போடறாரு.. பாக்சிங்க் டோர்னெமெண்ட்ல அவரோட சிஷ்யன் ஜெயிக்கனும்.. அதுக்கு ஹீரோ தோக்கனும்.. அவரு அதை விட்டுக்குடுத்தா இவரு இதை விட்டுக்குடுப்பாராம்.. ( வடிவேலு மாதிரி கேவலமான அப்பா போல)

ஆனா ஹீரோ என்ன முடிவெடுக்கறாரு?( என்னத்தை பெரிசா எடுப்பாரு?)பாக்சிங்க்ல ஜெயிச்சுட்டு அதே மேடைல பொண்ணை தூக்கிட்டு போறாரு.. போறப்ப ஒரு பஞ்ச டயலாக் வேற.. “ அந்த விளையாட்ல ஜெயிச்சாச்சு.. இனி வாழ்க்கை ஆட்டம்..இதுலயும் ஜெயிப்போம் இல்ல?

அப்பா கண் முன்னாலயே பொண்ணை தூக்கிட்டு (நிஜமாவே ) போறாரு.. அந்த இங்கிதம் தெரியாத ஹீரோயினும் சிரிச்சுக்கிட்டே அவன் கூட போயிடறா ( நல்ல குடும்பத்துப்பொண்ணு போல.. )

லாஜிக் சொதப்பல்கள் 

1. ஆர்ட்டிஸ்ட்ஸ் செலக்‌ஷன் சரி இல்லை.. ஹீரோ வில்லன் 2 பேரும் பாக்சிங்க் சேம்ப்பியன் என்றால் விக்ரம் ,சரத்குமார் ரேஞ்சுக்கு இல்லைனாலும்  ஓரளவாவது பாடி வேணாமா? ராமராஜன் மாதிரி, அப்பாஸ் மாதிரி சோப்ளாங்கிகளை போட்டது தப்பு.. 

2. சர்வ தேச டோர்னமெண்ட் நடக்கையில் ஒரே ஆரவாரம், மக்கள் கூட்டம் காட்டனும்.. அட்லீஸ்ட் கிராஃபிக்ஸ்லயாவது.. ஆனா நிஜத்துல சும்மா ஏதோ சாவடில செட் போட்டு எடுத்து நம்மை சாவடிக்கறாங்க.. 

மேஜிக் கலக்கல்கள் ( வசனங்களில்..... )

1. ஒவ்வொரு ஸ்போர்ட்ஸ்மேன் லைஃப்லயும் மறக்க முடியாத கேம் ஒண்ணு உண்டு

2.. டியர்... ஏதாவது பேசேன்... 

 எனக்கு ஸ்போர்ட்ஸ்னா உயிர்.. பாக்சிங்க்ல ஏதாவது சாதிக்கனும்.. ப்ளா..ப்ளா
.....

 நீ ரொம்ப மொக்கை போடறே,, நானே சொல்லிடறேன்.. ஐ லவ் யூ

3.  யூ நோ வாட்..? யூ லுக்கிங்க் சோ ஸ்மார்ட்.. 
 3. ----------------------------- -திருப்பூர் ராம்

 நிகழ்ச்சித்தொகுப்பாளினி படத்தோட டைட்டில் என்ன?னு கேட்டதுக்கு ராம் அதை சஸ்பென்சா படத்தோட கடைசில சொல்றேன்னார்.. நான் கூட எதுக்கு இந்த பில்டப்பு என நினைச்சேன்.. ஆனா க்ளைமாக்ஸ்ல அவர் சொன்னது கரெக்ட் தான்னு தோணுச்சு.. 

ஒரு கடத்தல் குரூப்.. பணம் வேணும்னு கேட்டு ஒரு ஆண், ஒரு பெண் (அவங்க 2 பேருக்கும் இதுக்கு முன்னே அறிமுகம் இல்லை) 2 பேரையும் கடத்திட்டு வந்து அடைச்சு வெச்சிருக்காங்க.. அவங்க தான் ஹீரோ, அண்ட் ஹீரோயின்னு கெஸ் பண்ணாம இருந்தா நாம படம் பார்க்கவே லாயக்கில்லை.. 

இதுல ஹீரோ ஹீரோயின் ஒரு கட்டத்துல லவ்வறாங்க.. ஹீரோவை விடுவிக்க பணயத்தொகை வந்துடுது.. ஆனா ஹீரோயினை விடுவிக்க பணம் வர்லை.. பணம் இல்லைன்னு ஹீரோயினோட அப்பா கையை விரிச்சுடறாரு.
 ( தத்தி வில்லனுங்க.. கடன் இல்லாத தொழில் அதிபர் மகளை கடத்த மாட்டாங்க.. ?) இப்போ ஹீரோ ரன்னிங்க்ல கார்ல ஃபைட் போட்டு 3 வில்லன்களையும் போட்டு ஹீரோயினை காப்பாத்தறாரு.. அவ்வளவுதான். கதை.

 லாஜிக் சொதப்பல்கள் 

1. ஒரு பணக்கார வீட்டுப்பையன் திடீர்னு 3 பேரை ரிவால்வரால சுடுவது எப்படி?அவன் என்ன ஜேம்ஸ்பாண்டா?

2.கடத்தப்பட்ட அந்த பொண்ணும், பையனும் அதிகபட்சமா 8 மணி நேரம் அடைக்கப்பட்டிருக்காங்க.. அதுக்குள்ள லவ் வருமா? ( அதுக்குள்ள வர்லைன்னா வேற எதுக்குள்ள வரனும்னு எதிர்பார்க்கறே..?) 

3. கடத்தப்பட்டவங்களை எந்த மாங்கா மடையனா இருந்தாலும் ( நிஜமான மாங்கா மடையர்கள் மன்னிக்க) தனித்தனி ரூம்ல தான் அடைச்சு வைப்பான்.. எதுக்கு 2 பேரையும் ஒரே ரூம்ல அடைச்சு வைக்கனும்? ( அடேய் சி பி நீ தாண்டா மாங்கா மடையன்.. ஒரே ரூம்ல அடைச்சு வெச்சாத்தானே 2 பேரும் லவ்வர்ஸ் ஆக முடியும்?)

மேஜிக் கலக்கல்கள் ( வசனங்களில்..... )


1. எந்தப்பிரச்சனை வந்தாலும் தைரியமா இருக்கறதுதான் முதல் தேவைன்னு எங்கப்பா அடிக்கடி சொல்வாரு.. ( உங்கப்பா மட்டும் இல்ல.. எல்லாரோட அப்பாவும் தான் சொல்வாங்க.. ஆனா அதை ஃபாலோ பண்ணனுமே..?)

2. மிஸ்.. உங்க பேரென்ன?

 உயிரோட இருந்து மறுபடி நாம சந்திக்கும் வாய்ப்பு வந்தா பேர் சொல்றேன்..




3. ம் ம் இப்போ உங்களை காப்பாத்திட்டேன்.. இப்பவாவது பேர் சொல்லுங்களேன்.. 

 தேன் மொழி..  ( இதுக்குத்தான் இந்த பில்டப்பா? நான் கூட சொப்பன சுந்தரின்னு நினைச்சேன்)


செமி ஃபைனலுக்கு 3 பேரும் செலக்ட் ஆகிட்டாங்க.. 3வதா வந்த ராம் படம் பிரைஸ் வாங்குச்சு.. ஹீரோ ,ஹீரோயின் சேர்வாங்களா? மாட்டாங்களா?ன்னு ஒரு பரிதவிப்பை ஏற்படுத்துனாங்காட்டி அது செலக்ட் ஆச்சாம்.. ஓக்கே.. 

 ஒரு முக்கியமான விஷயம்.. 3 குறும்படங்கள்லயும் ஹீரோயின்ஸ் அழகு ஃபிகர்கள் தான் .. லாங்க்‌ஷாட்ல பளிச்னு மின்ன்னல் மாதிரி காட்டிட்டதால ( அதாவது சரியா காட்டாததால) அவங்களை சரியா வர்ணிக்க முடில.. ( ஆமா.. இவரு பெரிய சாண்டில்யன். வர்ணிச்சுட்டுத்தான் மறு வேலை)

 அதனால நாளைய இயக்குநர்களுக்கு ஒரு வார்த்தை ஹீரோயின்ஸ்க்கு க்ளோசப் ஷாட் வைங்க.. நீங்க மட்டும் ரசிச்சா போதுமா? ஹி ஹி 

Wednesday, April 20, 2011

நாளைய இயக்குநர் -ஆக்‌ஷன் கதைகள் - விமர்சனம்

இந்த வாரம் ஆக்‌ஷன் ஸ்டோரிஸ்ன்னு சொன்னதும் கொஞ்சம் பயமாத்தான் இருந்தது.தெலுங்கு டப்பிங்க் படத்துல  வர்ற மாதிரி சொதப்பப்போறாங்கன்னு நினைச்சேன்.. ஆனா முத கதையே வெரைட்டியா இருந்தது..அதுவே முதல் பரிசையும் தட்டிட்டு போச்சு...( அப்போ இனி நாம எப்பவாவது படம் எடுத்தா முதல்ல போடச்சொல்லனும்)

ஹாய் மதன்,பிரதாப் போத்தன் 2 பேர்ட்டயும் ஒரு மாற்றம்.. ரெண்டு பேருமே புது முக இயக்குநர்கள் முகம் சுண்டற ,மாதிரி பேசலை.. பூஸ்ட் அப் பண்ற மாதிரி பேசறாங்க.. மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு,ஒரு படைப்பாளி கவுரப்படுத்தப்படும்போது ஆட்டோமேட்டிக்கா இன்னொரு படைப்பாளிக்கு சந்தோஷம் வந்துடும்..( ஏன் டாக்ஸி மேட்டிக்கா வராதா?)


1.  பார்த்திபன் - ரமேஷ்


அடியாளா வேலைக்கு வந்த இடத்துல சின்ன வயசுப்பசங்க அடி மாடுகளா விற்பதற்காக  கடத்தப்படறதை எதிர்க்கறான்.. தனி ஆளா சண்டைக்குப்போறான்.. அவனை அந்த கடத்தல் கோஷ்டி போட்டுத்தள்ளிடறாங்க...  சாகறப்பக்கூட அவன் அந்த சிறுவர்களை விடுதலை பண்ணிடறான்.

ஒரு ரவுடியா இருந்தாலும், அடியாளா இருந்தாலும் , கல்லுக்குள் ஈரம் இருக்கும்,முரடன் மனதுக்குள்ளும் அன்பு நேசம் போன்ற மென்மையான உணர்வுகள் இருக்கும்கற பாசிட்டிவ்வான கருத்தோட படம் முடியுது.

 படத்தோட மேக்கிங்க் ஸ்டைல் , பேக் கிரவுண்ட் மியூசிக் எல்லாம் நல்லாதான் இருந்தது.. ஆனா இயல்பா இல்லாம ஒரு சினிமாட்டிக் தன்மை தொக்கி நின்னுது.. ஆல்ரெடி கோலிவுட்ல கோலோச்சுன ஒரு டைரக்டர் எடுத்த குறும்படம் போல் இருந்தது.
இதுல வந்த ஒரு நல்ல வசனம்

அடியாள்ங்கறதுக்காக கசாப்புக்கடை வேலை பார்க்கனும்னு அவசியம் இல்லையே..?


 2. இன்னா செய்தாரை - அழகுராஜ்

இந்த தொகுப்பாளினி ஓரளவுக்கு கிரியேட்டிவ்வா சொந்த டயலாக் பேசுனாங்க.. வாங்க அழகா வந்திருக்கீங்க... அழகுராஜ்.. படத்தோட டைட்டில்
இன்னா செய்தாரை...படத்துல நீங்க என்னா செஞ்சிருக்கீங்க?ன்னு கேட்டு சூழலை இறுக்கமான சூழல்ல இருந்து கொஞ்சம் நார்மல்க்கு கொண்டு வந்தாங்க.. 

ஒரு கல்யாணம் ஆன தம்பதி ( கல்யாணம் ஆனாத்தானே அது தம்பதி ?#சொதப்பாம சொல்லு) ஒரு ஃபாரஸ்ட் ஏரியாவுக்கு ஜாலி டிரிப்பா வர்றாங்க..அவர் ஒரு கஸ்டம் ஆஃபீசர்.. ஏற்கனவே அவரால பாதிக்கப்பட்ட சட்ட விரோத கும்பல் அவரை அங்கே போட்டுத்தள்ளிடுது..அவரோட மனைவி அந்த கும்பலை அங்கேயே பழி வாங்கறா.

அவ பழி வாங்கற விதம் எல்லாம் பழைய எஸ் ஏ சந்திர சேகரன் படங்கள் மாதிரி வெரைட்டியான அப்ரோச்சா இருக்கு.ஒருத்தன் காதுல  வெடி குண்டு கட்டி, ஒருத்தனோட உடம்புல ஒரே சமயத்துல வெவ்வேற பிளட் குரூப் ஏத்தி,ஒருத்தன் மூக்குல  2 கஞ்சா சிகரெட் வெச்சு வாயை அடைச்சு,இன்னொருத்தனுக்கு காலால மர்ம ஸ்தானத்துல ஒரே அடி..
( பார்க்கறப்ப நமக்கு வலி.. ஹி ஹி )

இதுல எல்லாரும் சிலாகிச்ச படி லொக்கேஷன் செலக்‌ஷனும் கேமராவும் பக்கா.ஆந்திரா போய்  அங்கே ஏதோ ஒரு ஃபார்ஸ்ட்டை தேடிப்பிடிச்சு ஷூட் பண்ணி இருக்காங்க..

 ஆனா எல்லாருக்கும் தோணும் டவுட்ஸ்

1.  ஒரு ஃபாரஸ்ட் ஆஃபீசர் அப்படி தனிமைல எந்த செக்யூரிட்டியும் இல்லாம வந்து சிக்கிக்குவாரா?அதுவும் மனைவி கூட வந்து.. 

2, மோதல் நடக்கறப்ப  அவர் ஒரு ஆஃபீசர் என்பதற்கான கம்பீரமே இல்லை..

3. அவருக்கே இல்லாத அந்த  வீரம் அவரோட மனைவிக்கு எப்படி வந்தது?

4. ரொம்ப மென்மையான பெண்ணா காட்டப்படும் அந்த மனைவி வில்லனின் ரத்தத்தை தொட்டு நாக்கில் வைத்து சுவைப்பது நம்ப முடியாத கொடூரம்.
( அட்ராட்ரா நாக்கு முக்க நாக்கு முக்க)

( அவர் என்ன பூலான் தேவியா?)

5. கஜினி பட க்ளைமாக்ஸில் அசினுக்கு ஒரு மரண அடி விழுமே அப்படி நங்க் என அடி விழுந்தும் அவர் தப்பிப்பது எப்படி?


ஆனா அந்த ஆஃபீசர் மனைவியா வந்த ஃபிகரோட நடிப்பு ஓக்கே தான்.. இதுல  குளியல் சீன் வேற.. ( சின்னத்திரை செம டெவலப்பு ஹி ஹி )

3. ரணம் - தமிழ் செல்வன்

 ஹீரோ ரவுடி.. ஹீரோயின் கம் காதலிக்கு லவ்வரோட தொழில் என்னன்னு தெரிஞ்சதும் பிடிக்கலை.. ( எல்லா காதலிகளுக்கும் ரவுடிங்களைப்பிடிக்கறதில்லை. ஆனா பெரும்பாலான ஹீரோயின்கள் ரவுடிகளத்தான் லவ்வறாங்க.. # ஒழிக தமிழ் சினிமா லாஜிக் )

ஒரு கட்டத்துல ஹீரோயினை ஒரு ரவுடி குரூப் கடத்திட்டுப்போகுது.. தன்னோட உயிரைக்குடுத்து ஹீரோ அவரைக்காப்பாத்தறாரு.. இப்போ அந்த பொண்ணு அவரை லவ்வுது.. ( அட போங்கப்பா... இந்தப்பொண்ணுங்களே இப்படித்தான்.. பக்கத்துலயே இருக்கறப்ப கண்டுக்க மாட்டாங்க.. சொர்க்கத்துக்கு டிக்கட் வாங்கறப்ப பதறிட்டு வருவாங்க )

வில்லன் ப்ளேஸ் ல ஹீரோ வில்லன் கூட சண்டை போட்றது,அவங்களை வீழ்த்தறது எல்லாம் அக்மார்க் சிரஞ்சீவி படம் தோத்துது போங்க..

 ஒரே ஆறுதல் என்னான்னா  ஹீரோயின் ஃபிகர் நல்லாருந்தது. ( அதானே பார்த்தேன் )


முதல் பரிசை வழங்கறதுல, எந்தக்குழப்பமும் இல்ல. ஆனா இது குவாட்டர் ஃபைனல் என்பதால் (குவாட்டர் ஃபைனல்னா குவாட்டர் அடிச்சிட்டு ஃபைனல்ல கலந்துக்கறதா? #டவுட்டு)எலிமினேட் பண்ணனுமாம். 

( இல்லைன்னா உம்மாச்சி கண்ணைக்குத்திடுமா?)

 யாரை எலிமினேட் பண்ணலாம்னு மதன் சார் கேட்க பிரதாப் போத்தன் சிரிச்சுக்கிட்டே  மினி மினி மைனோ போட்டுப்பார்க்கலாமா? என காமெடி பண்ணுனது ஹா ஹா ( அது பிங்கி பிங்கி பாங்கி ஃபாதர் ஈஸ் ஏ டாங்க்கி மாதிரி ) 

 கடைசில எலிமினேஷன் இல்லைன்னு அறிவிச்சுட்டாங்க. 

 சந்தோஷம்.



Tuesday, March 15, 2011

நாளைய இயக்குநர் - மழலை +டிராஜடி கதைகள்

[0.jpg]
ஏற்கனவே பலமுறை சொன்ன மாதிரி கலைஞர் டி வி ல எனக்கு பிடிச்ச புரோகிராம் வாரா வாரம் ஞாயிறு காலை 10. 30 மணிக்கு வர்ற நாளைய இயக்குநர் நிக்ழச்சிதான் என்றாலும் இத்தனை நாளா மனசுக்குள்ள புதைச்சு வெச்ச ஒரு ரகசியத்தை இப்போ ஓப்பன் பண்றேன்..(மனசுக்குள்ள நீரா ராடியான்னு நினப்பு)

தொகுப்பாளினியா வர்ற ஃபிகர் எனக்கு பிடிக்கலை.. ( பொண்ணு பார்க்கப்போன மாப்பிள்ளை மாதிரியே பேசறானே)பொதுவா பொண்ணுங்கன்னா உண்மையான குங்குமம் வெச்சுட்டு வந்தாத்தான் நல்லாருக்கும்.( அப்போ பொய்யான குங்குமம்னா என்ன? # ஸ்டிக்கர் பொட்டு) பாப்பா பிரச்சனை எதுக்குன்னு பெரும்பாலும் பொட்டே வைக்கறதில்லை..அது பெரிய மைனஸ்..அப்புறம் பாப்பா போட்டுட்டு வர்ற டிரஸ் கரகாட்டக்காரி மாதிரி நல்லாவே இல்லை.. இதை எல்லாத்தையும் கூட பொறுத்துக்கலாம்.. ஆனா பாப்பா செயற்கையா சிரிக்குது பாருங்க.. அதை தாங்க முடியல...

இப்போ நீ விமர்சனம் பண்ண போறது பாப்பாவையா? குறும்படத்தையா?ன்னு சலிச்சுக்கறவங்களுக்கு...சென்னை  டி நகர் -ல் உள்ள டி சி மேனர் ஹோட்டலில் ரிசப்ஷனிஸ்ட்டாக பணியாற்றும் ஒரு ஃபிகரை பற்றி குறிபிட விரும்புகிறேன்.. (ஃபிகர் சுட்டி பொருள் விளக்கு..)அந்த ஃபிகர் +2 தான் படிச்சிருக்குன்னாலும் ஏர்ஹோஸ்டல்ல ஒர்க் பண்ற மாதிரி செம நீட்டா இருக்கும்..அந்த ஹோட்டலுக்கே ஒரு கவுரவம் அந்த ஃபிகர்தான்.ஃபிகருக்கு சம்பளம் மாதம் ரூ 27,000.வேலை சும்மா சிரிக்கனும்.. அவ்வளவுதான்...இது பற்றி மேலும் விபரங்களை என்னைக்கவர்ந்த கேரளா ஃபிகர்கள் என்ற புதிய பதிவில் விளக்கமா பார்ப்போம்.. இப்போ....
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2010/06/Priyamani-new-gallery-8.jpg

1. ஆசை - அருண்குமார்

டைட்டில்லயே சைக்கிளை டிசைன் பண்ணி கலக்கலா லே அவுட் குடுத்ததைப்பார்த்ததும் படம் பின்னி எடுக்கும்னு நினைச்சேன்.. ம்ஹூம்.. சுமார்தான்.சின்ன பொண்ணு ஒண்ணு சைக்கிள் வாங்க ஆசைப்படுது..கொஞ்சம் கொஞ்சமா காசு உண்டியல்ல சேர்த்து எப்படியோ ஒரு குட்டி சைக்கிள் வாங்கிடுது.. ஆனா ஒரு வேன் வந்து அதை இடிச்சு ரிப்பேர் பண்ணிடுது..

டிராஜடியா முடிக்கனும்கறதுக்காக வேணும்னே பண்ணுன மாதிரி இருக்கு.. இதன் மூலமா டைரக்டர் என்ன சொல்ல வர்றார்னே தெரியல..மனதை தொடலை..ஆனா ஒளிப்பதிவு, கேமரா கோணங்கள் எல்லாம் ரொம்ப பிரமாதம்..

இயக்குநர் கவனிக்கத்தவறிய அம்சங்கள்

1. படத்தில் காட்டப்பட்ட அந்த சின்ன உண்டியலில் 200 ரூபா அளவுக்குத்தான் காசு போட முடியும்...இதை எப்படி உறுதியா சொல்றேன்னா மண்பாண்டம் செய்யும் குயவனாக இருக்கும் எங்க ஊர் நண்பன் சரவணன் என் கூட அமர்ந்துதான் பார்த்துட்டு இருந்தார்.. அவர் சொன்ன தகவல் தான் அது..300 ரூபா அதுல சேர்க்க முடியாது.

2. அதே போல் ஒரு ரூபாக்காசு, மற்றும் 2 ரூபாக்காசு மட்டுமே அந்த சிறிய உண்டியல் துவாரத்தில் போட முடியும். 5 ரூபாக்காசு போட சான்ஸே இல்லையாம்..( 2 ரூபாக்காசே ரொம்ப சிரமப்பட்டே போடமுடியுமாம்..).ஆனால் ஒரு சீனில் உண்டியலை உடைத்த பிறகு அதில் இருந்த காசுகளை எடுக்கும்போது 5 ரூபாக்காசு நிறைய இருக்கு.

3. வேகமாக வரும் வேன் அந்த சைக்கிளை இடித்து தள்ளும்போது சப்பழிந்து போகும், அல்லது தூக்கி அடிக்கும்.. படத்தில் காட்டுவது போல் ஒரு சக்கரம் மட்டும் தனியே கழண்டு போக வாய்ப்பே இல்லை..

நான் சொல்ற பாயிண்ட்ஸ் ஏதோ குறை சொல்லனும் என்ற நோக்கில் சொல்லப்படுவதல்ல.. அடுத்த முறை அவர்கள் கவனமாக படம் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்வது..
http://tamildigitalcinema.com/wp-content/gallery/bhuvaneswari-hot/bhuvaneswari-hot-1.jpg
2. தருணம் - மணிவண்ணன்

எதிர்பாராதவிதமா ஒரு ஆக்‌ஷன் கம் டெரரிஸ்ட் ரிலேட்டட் மூவி...கேமரா ஆங்கிள் கலக்கலா இருந்துச்சு.கோயிலுக்கு ஒரு தம்பதி சாமி கும்பிட வர்றாங்க.. ஒரு தீவிரவாதி கும்பல் கணவனை பிடிச்சு அவன் உடம்புக்குள்ள ஒரு வெடியை வெச்சு ஆபரேஷன் பண்ணி பப்ளிக் பிளேஸ்ல அவனை அனுப்பறாங்க.. பிணையக்கைதியா மனைவி...என்ன நடக்குது?ங்கறதை  நல்ல சஸ்பென்ஸா சொல்லி இருக்காங்க..

இது எழுத்தாளர் சுபா அவர்கள் எழுதிய ஒரு நாவலின் வடிவாக்கம் (சூப்பர் நாவல் 1998 நவம்பர் உயிர்பலி) என்றாலும் இயக்குநர் விட்டு விளாசி இருந்தார்..7 நிமிடத்தில் இந்த மாதிரி ஒரு திரில்லர் எடுப்பது ரொம்ப கஷ்டம் தான்..ஹாய் மதன் கூட இதை பாராட்டி THE  Bourne  IDENTITY  படம் போல் திரில்லர் வகையறா படம் எடுக்க வாழ்த்துக்கள் என்றார்.

மனம் கவர்ந்த வசனம்

மனைவி - உங்க பெயரை இனிஷியல் ஆக்க ஒரு சொந்தம் வரப்போகுது..

கணவன் - என் வாழ்க்கைலயே ரொம்ப சந்தோஷமா இருக்கற 2வது தருணம் இதுதான்

மனைவி - அப்போ முத தருணம்..?

கணவன் - நம்ம முதல் கல்யாண நாள்

இந்த மாதிரி ஒரு ஆக்‌ஷன் பேக் டிராப்ல லவ் டயலாக் ஒரு ரிலாக்‌ஷேஷனா இருக்கும். வெல்டன் டைரக்டர்.அதே போல் க்ளைமாக்சில் வெடி குண்டை வெடிக்க வைக்கும் ரிமோட் பட்டனை புறா தட்டி விடுவது செமயான சீன்.(டைரக்டர் மணி அகதா கிறிஸ்டி,சுஜாதா ரசிகர் போல)
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYdmpT0_prjnmrdtEyBSPFra6ns0abOTpVcb4PzFtrgIGHTJ8NVQTMl-Qx8Z0WBjWvx1qws4EKb4Ol6dPeZJ6eeAxNIYm0T3W72RbSaPvi9Eg6tzrjXMrgn3_Th2zFpbEgUZuXL2mDdQxt/s1600/nishanti+in+transparent+saree+%25283%2529.jpg
3.  பசி - ஆர் .ரவிக்குமார்

ஒரு கிராமத்துக்கதை.. சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கற சூழல்ல ஸ்கூல்ல போடற சத்துணவையாவது சாப்பிடலாம்னு ஏங்கற பையன் கதை.. ஸ்கூல்ல பாடம் நடத்தறப்பக்கூட அவனுக்கு சாப்பாட்டு ஞாபகம் தான்.அந்த அளவு அவனை பசி துரத்துது.. கடைசில அவன் சாப்பிடும்போது அந்த சாப்பாட்ல பல்லி விழுந்துட்டதா சொல்லி அதையும் பிடுங்கிடறாங்க..

இந்த கதைல முக்கியமா  அந்த சின்னப்பையனோட நடிப்பு நல்லாருந்தது.. ஒரு பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்னன்னா ஹாய் மதன் அந்த பையனை மேடைக்கு கூப்பிட்டு அவனை வாங்க போங்க என மரியாதை கொடுத்துப்பேசி ஊக்குவிச்சதுதான். வெல்டன் மதன் சார்..

இயக்குநர் ஒரு விஷயத்துல பாராட்டப்படவேண்டிய ஆள் தான். என்னான்னா ஸ்கூல்ல பாடம் நடத்தறப்ப கனிகள் பற்றி பாடம் வருது.. அப்போ எல்லா வகை கனிகளும் அந்த பையனோட நினைவலைகளில் சுற்றுவது மாதிரி ஒரு கிராஃபிக்ஸ் ஷாட் வெச்சது அழகு...அவர் பண்ணுன சின்ன மிஸ்டேக் ஏழை சிறுவனா நடிக்க  உண்மையாகவே ஏழையை தேர்ந்தெடுத்து இருக்கலாம்.. அந்த பையனோட முகத்துல செல்வக்களை தாண்டவமாடுது.. (FACE SHINING)

இதுக்கு ஹாய் மதனோட கமெண்ட் ,  “அரெஸ்ட்டிங்க் ஷாட் வைக்க முடியல.. பசி என்பது நிறைய பேர் எடுத்துக்கிட்ட தீம் என்பதால் உங்களால ஒரு வட்டத்தை விட்டு வெளில வர முடியல...புதுசா சொல்ல முடியாம தவிச்ச மாதிரி இருக்கு. உங்க கைகள் கட்டப்பட்டிருக்கு....”   100% கரெக்ட்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisdFbugtozFImXP2_GstPWidbmCr9M9hvZDxXnA9BR-x1b3DQhx-8QB9EpH3qfasrRBEYXRESdJwhIw1P-OxBS1S6PElMWwqEXfm4wziXp_eZnck3Z9Rt3ndI5-MfSKgznw0yCq0FSH-Eq/s1600/neelam-actress-stills-010.jpg
4. அஞ்சு ரூபா - எஸ் . வி . அருண்குமார்

படத்தோட ஓப்பனிங்க் ஷாட்லயே அசத்த ஆரம்பிச்ச இந்தப்படம் முதல் பரிசு வாங்குனதுல எந்த ஆச்சரியமும் இல்ல. பலரின் ஏகோபித்த ஆதரவு இந்தப்படத்துக்கு கிடைச்சதுக்குக்காரணம் மென்மையான கதை சொல்லல் பாணியும், சிறுவனின் பண் பட்ட நடிப்பும்..

ஒரு சின்ன பையன் பலூன் வாங்க ஆசைப்படறான்.. அஞ்சு ரூபா.. அவனுக்கு கிடைக்கல.. அம்மா கிட்டே கேட்கறப்ப  செலவுக்கு டெயிலி தர்ற அம்பது பைசாவை சேர்த்து வெச்சு வாங்கிக்கோ அப்படிங்கறா...அவனும் சேர்த்து வைக்கிறான்..காசை எங்கேயோ தொலைச்சுடறான்.. அப்புறம் அம்மாவே வேற ஒரு அஞ்சு ரூபாவை குடுத்து இதுதான் தொலைஞ்சு போன காசுங்கறா..அந்த காசை ஒரு அவசரத்துக்கு அம்மா க்ரேட்டப்பக்கூட அவன் கொடுக்காம அழுது அடம் பிடிக்கறான்.. இவ்வளவு கஷ்டப்பட்டு சேர்த்து வெச்ச அஞ்சு ரூபாவை குடுத்து அவன் பலூன் வாங்கப்போனப்ப பலூன் விலை 6 ரூபா ஆகிடுது
கலைஞர் ஆட்சில விலைவாசி கடுமையா ஏறுதுன்னு சிம்பாலிக்கா சொன்ன காட்சி வெச்ச படத்துக்கு அனுமதி அளிச்சதும், அதுக்கு பரிசு குடுத்ததும் கலைஞர் டி வி நிர்வாக இயக்குநர் எந்த அளவு அசிரத்தையா இருக்கார் என்பதற்கான அத்தாட்சி..


சேர்த்து வெச்ச காசை வெச்சு பலூன் வாங்கி வர்றப்ப அது உடைஞ்சிடுது..அவன் அடுத்த அஞ்சு ரூபா சேமிப்புக்கு ரெடி ஆகிடறான்..கேட்பதற்கும், படிப்பதற்கும் வெகு சாதாரணமா தெரியற இந்த கதை படமா நம்ம கண் முன் விரியும்போது செமயா இருக்கு..

இயக்குநரை சபாஷ் போட வைத்த இடங்கள்

1. பள்ளிக்கூடத்துக்கு போகும் மகனை அம்மா, “ ஸ்கூலுக்கு சூதானமா (ஜாக்கிரதையா) போய்ட்டு வ ரனும் என்ன?’ என்ற டயலாக்கை 2 இடங்களில் வைத்து ஏதோ ஆக்சிடெண்ட் நடக்கப்போகிறதோ என டெம்போ ஏற்றி அப்படி எந்த சீனும் வைக்காதது..

2. ஏழை அம்மா விறகு அடுப்பில் ஊதுகுழலால் ஊதும் சத்தத்தை இயற்கையாக ஆன் த ஸ்பாட் ரெக்கார்டிங்க் செய்தது..

3. பலூன்காரனின் வசனங்கள் வெகு இயல்பாக அமைந்தது..

4. அம்மா, பையனின் அற்புதமான நடிப்பு

பெஸ்ட் ஆக்டிங்க் விருதை கடைசி 2 படத்தில் நடித்த 2 சிறுவர்களுக்கும் கொடுத்தது கை தட்டல் பெற வைத்த  முடிவு..

டிஸ்கி -1. குறும்பட ஸ்டில்கள் எதுவும் கிடைக்கலை.. என் மெயிலுக்கு அனுப்பி வைங்கன்னு சொன்னதை யாரும் மதிக்கலை..(வழக்கம் போலவே..)அதனால சில குறும்பு பட ஸ்டில்கள்.. ஹி ஹி

டிஸ்கி 2  - முதல் 2 ஸ்டில்களில் ஃபிகர்கள் 2ம் கலைஞருக்கு பிடித்த மஞ்சள் நிற டிரஸ் அணிந்து நிற்பதும், அடுத்த 2 ஸ்டில்களில் உள்ள ஃபிகர்கள் கலைஞர் டி வி யின் நிர்வாக இயக்குநர்க்கு பிடித்த நிறமான டார்க் ரோஸ், லைட் ரோஸ் நிறங்களில் டிரஸ் அணிந்து நிற்பதும் எதேச்சையானவை.. எந்த  உள்குத்தும் இல்லை.. ஹி ஹி

Tuesday, March 01, 2011

நாளைய இயக்குநர் - சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதைகள் -3ம் கலக்கல் ரகம்

http://tv.burrp.com/images/s/t/6/t66b2mgg_1093_1_150.jpg
கலைஞர் + கலைஞர் டி வி நிர்வாகம் தெரிஞ்சோ தெரியாமலோ செஞ்ச உருப்படியான ஒரே நல்ல காரியம் நாளைய இயக்குநர் நிகழ்ச்சிதான்.27.2. 2011 அன்னைக்கு வானம் மேகமூட்டமா இருந்தது.. என்னடான்னு பார்த்தா பிரதாப் போத்தன் எல்லாரையும் ஊக்குவிக்கும்படியா பேசுனாரு.வழக்கமா “பப்ளிக்கா மட்டம் தட்டும் இவர் பாராட்டுனது ஆச்சரியம். ஆனா பாராட்டறப்பக்கூட அவர் ஏன் சிடு சிடுன்னு இருந்தாரோ தெரியல.. பாவம் அவரோட குடும்பம்...

1. எதையும் தாண்டி புனிதமானது. - அருண்ராஜ்

ரன் லோலா ரன், தமிழில் 12 B  ஆகிய படங்களில் வந்த  KNOT  தான்.ஒரு செகண்ட் லேட்டா கிளம்பி இருந்தா மனிதனின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? என்பதை அலசும் படம்.

7 நிமிடங்களில் இந்த கதையை இவ்வளவு அழகான திரைக்கதை ஆக்க யாராலயாவது முடியுமா?ன்னு பிரமிப்பா இருக்கு.ஒரு லவ் ஜோடி.. ஆக்சிடண்ட்ல மாட்டி பொண்ணோட உயிர் போயிடுது... ஹாஸ்பிடல்ல அந்த பையனைப்பார்த்து இன்னொரு பொண்ணு லவ் பண்றா...

இன்னொரு டிராக்ல அந்த ஆக்சிடெண்ட் நடக்காம இருந்தா....அதே பொண்ணு அவனை சந்திக்கவே இல்லை...

ஆக்சிடெண்ட் நடந்திருந்தா அவனை லவ் பண்ற பொண்ணு நீ இல்லாம நான் இல்லைங்கறா.. அதே ஆக்சிடெண்ட் நடக்காம இருந்தா அந்த பொண்ணு அவனை சந்திக்கவே இல்லை...

காதல் என்பது சந்திப்புகளில் வருவது..., நிகழ்வுகள் என்பது தற்செயலானதா? விதிப்படியா? போன்ற பிரமாதமான அலசல்களோட காட்சிப்படுத்தும் திறமை இந்த குறும்பட இயக்குநருக்கு கிடைச்சிருக்கு.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCJVT62g6sO5-4ZpYF4aaC81A7zHq47G1DkFwlFeg5lnY7mKv-X0cl1tILaGWWtyQ8Tvc2DvaBcaKiNRE5qz7Kw9B0PWTU3-7maaVIPuPt9bnfmcDaAjOMUL4fnBTy0r0UIgUxKT8wQgA/s400/keerthi-sneha.jpg
இந்தப்படத்தில் கண்ட (கேட்ட) வசனங்கள்

1. THERE IS NO PAST IN LOVE  ( காதல்ல ,முடிஞ்சு போன காதல்னு எதுவுமே கிடையாது)

2. லவ்வுல ரெண்டே வகை தான்.1. நாம லவ் பண்றது நிஜம். 2. கடைசி வரை லவ்வே பண்ணாம இருக்கறது..

3.காதல்ங்கறது  நாம யார் கூட வாழ ஆசைப்படறோம்கறதுல இல்ல...நாம யார் இல்லாம வாழ முடியாதுன்னு நினைக்கறோமோ.. அது தான்.

இந்தப்படத்துக்கான ஒளிப்பதிவு, எடிட்டிங்க் எல்லாம் பக்கா.. இதுல 2 ஹீரோயின். நானும் பல படங்கள்லயும் ,குறும்படங்கள்லயும் பார்த்துட்டேன்.முதல் ஹீரோயினை விட 2வது ஹீரோயின் அழகா ,ஃபிகரா இருக்காங்க.. ஆனா அவங்களுக்கான காட்சிகள் கம்மி ..இது ஏன்? ( ஒரு ஆதங்கத்துல கேக்குறேன்.. ஹி ஹி )
http://vannitube.com/wp-content/uploads//2010/10/2029.jpg
கே பாலச்சந்தர் சொன்ன கமெண்ட் - காலம் தான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறது,, காதலையும் கூட .

ஹாய் மதன், பிரதாப் போத்தன் 2 பேரும் காமெடி பண்ணுனாங்க.. படம் பிரமாதமான KNOT. இன்னும் அழுத்தமா சொல்லி இருக்கலாம் அப்படின்னு ஒரு கருத்து சொன்னாங்க...ஒரு வேளை ஹீரோவை ஹீரோயின் டச் பண்ணாம விட்டதை சொல்றாங்களோ என்னவோ.. இந்தப்படத்துக்குத்தான் முதல் பரிசு குடுத்திருக்கனும்.ம்ஹூம்... தர்லை.சாகித்ய அகாடமி விருதுல இருந்து எம் பி பதவி வரை சர்ச்சையில் தான் ஓடும்போல.

2. உயிர்  - ராஜேஷ் 

டைட்டிலைப்பார்த்ததும் சாமி டைரக்ட் பண்ணி சங்கீதா அண்ணியா நடிச்ச உயிர் கதைதான் ஞாபகம் வந்தது. நல்ல வேளை. கதை வேற.

ஒரு ஆக்சிடெண்ட் நடக்குது. 4 பேர் மரணத்தின் வாசலில் இருக்காங்க.. அவங்க உடல் ரோட்ல இருக்கு.ஆனா அவங்களோட ஆத்மா வான் லோகத்தில் சென்று விவாதம் செய்யுது.. 4 பேர்ல ஒருத்தருக்கு மட்டும்தான் உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்கு.
ஒரு வயசான ஆள் நான் விலகிக்கறேன்னு அந்த கால சக்கரத்துல இருந்து குதிச்சிடறார்.அடுத்து ஒரு பணக்காரி மீதி இருக்கற 2 பேரையும் ஜெ கணக்கா விலை பேசறா.. கோபம் வந்த மெக்கானிக் கேரக்டர் அவளைப்பிடிச்சு தள்ளி விட்டுடறார்.மீதி இருக்கற 2 பேர்ல ஒரு கட்டத்துல மெக்கானிக் கீழே விழுந்துடறார். மிச்சம் இருக்கற ஒருத்தர் மட்டும் உயிர் பிழைக்கறார்.

இதை டைரக்ட் பண்ணுன ராஜேஷ்  அடிப்படைல சுஜாதா ரசிகர் போல.. அதே மாதிரி காட்சிப்படுத்துதல்ல பூர்ணம் விஸ்வநாதன் பாணியை கையாண்டிருக்கார்.மனிதனின் மரணத்துக்குப்பிறகு என்ன நடக்குது? விபத்தில் சிக்கும் மனிதர்களில் சிலர் இறந்துடறாங்க.. சிலர் பிழைச்சிக்கறாங்க.அது என்ன சூட்சுமம்?என்பது தான் கதையின் கரு.

வித்தியாசமான சிந்தனைதான்.ஆனா மியூசிக்கல் சேர் ஃபார்முலாவுல 4 உயிர்களும் விண்வெளில வாதாடுவதில் நம்பகத்தன்மை குறைவு.இந்தப்படத்துக்குத்தான் முதல் பரிசு கிடைச்சது.கே பி, ஹாய் மதன், பிரதாப் 3 பேரும் இந்த படத்தை ஆஹா ஓஹோன்னு புகழ்ந்தாங்க.
http://lh3.ggpht.com/_xDJKOay4yj4/SEIR-O0wAyI/AAAAAAAAACQ/tHcEJv83Ldg/madhan.jpg
ஆனா என்னைப்பொறுத்தவரைக்கும் ஒரு படம் பரிசு வாங்க 

1. வித்தியாசமான சிந்தனை 2. மனித மனங்களுக்கு ஒரு படிப்பினை 3. அனைவருக்கும் புரியும் வகையில் எளிமை 4.காட்சிப்படுத்துவதில் புத்திசாலித்தனம்

இந்த நான்கும் முக்கியம்னு நினைக்கறேன்.முதல் பாயிண்ட்டும், 4வது பாயிண்ட்டும் உயிர் படத்துல இருந்துது.ஆனா 4 பாயிண்ட்ஸூமே எதையும் தாண்டி புனிதமானது. படத்துல இருந்துது.

3.மறுபடியும் - கார்த்திக் பாலாஜி

சுபா எழுதுன மாலைமதி நாவலான பொன் ஜிதா வின் மையக்கருவை சுட்டு எடுத்த படம்.ஒரு சயிண்ட்டிஸ்ட் ஆராய்ச்சில செத்துப்போன மனிதனை உயிர்ப்பிக்கும் மருந்தை கண்டுபிடிக்கறாரு. ஆக்சிடெண்ட்டில் இறந்து போன ஒரு ஆளை உயிர் கொடுத்து எழுப்பி (!!??) விடறாரு.. செத்துப்போன ஆள் உயிரோட வர்றதைப்பார்த்த அவனது காதலி,குடும்பம் எல்லாருமே பயந்து ஓடறாங்க...அவன் மறுபடி ஒரு ஆக்சிடெண்ட்ல மாட்டி மறுபடியும் செத்துடறான். இப்படி செத்து செத்து விளையாடற காமெடி வேணாம்னு டாக்டர் அந்த ஆராய்ச்சியையே கை விட்டுடறாரு...

ஒரு நல்ல கதை மோசமான திரைக்கதையால் எப்படி நாசமாப்போகும்ங்கறதுக்கு நல்ல உதாரணம் இந்தப்படம்.

கே பி யின் கமெண்ட் - BIRTH IS BEAUTIFUL THING & ALSO DEATH IS BEAUTIFUL THING

இன்னோரு சந்தோஷமான மாற்றம்,இந்தப்படத்து டைரக்டரை மதன் தனியா கூப்பிட்டு சில பர்சனல் அட்வைஸ் பண்ணுனாரு...நிறைகளை உரத்து சொல், குறைகளை மெதுவாக ,தனியாக சொல் என்ற பாலிஸி போல.. குட்.
( நாம் பதிவுலகில் கமெண்ட் போடறப்ப பாசிட்டிவ் கமெண்ட்டை பப்ளிக்கா போட்டுட்டு குறை இருந்தா தனி மெயில்ல சொல்ற மாதிரி..) சிலர் இருக்கங்க மைனஸ் பாயிண்ட்டை கமெண்ட்டா போட்டுட்டு பாராட்டை மெயில் பண்ணுவாங்க..
கலைஞர் டி வில விமர்சனப்போட்டியும் இருக்கு.அடுத்த வாரத்து;ல இருந்து அனுப்பறவங்க அனுப்பலாம். ஞாயிறு காலை 10.30 ட்டூ 11.30.முகவரி

J V MEDIA
194,G3,GOLDEN NEST,3RD MAIN ROAD,SRI SAI NAGAR,VIRUKAMPAAKKAM,CHENNAI -92

டிஸ்கி -1 : இதே பதிவை காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணிடாதீங்க.. நான் ஏற்கனவே அனுப்பிட்டேன் நேத்தே..பரிசு ரூ 8000 மதிப்புள்ள எலக்ட்ரானிக் சாதனம்.

டிஸ்கி 2 : இந்த 3 படங்களை இயக்கிய இயக்குநர்கள் அல்லது அவர்கள் நண்பர்கள் படம் சம்பந்தப்பட்ட ஸ்டில்ஸ்,அல்லது டைரக்டர் ஸ்டில் அனுப்புனா இதே பதிவை எடிட் பண்ணி அட்டாச் பண்ணிடறேன்...