Showing posts with label எம்.எஸ்.வி. Show all posts
Showing posts with label எம்.எஸ்.வி. Show all posts

Monday, July 20, 2015

எம் எஸ் வி - நெகிழ வைக்கும் நினைவுகூறல்

ஓவியம் பாரதிராஜா
ஓவியம் பாரதிராஜா
இலங்கை வானொலியில் மயில்வாகனன் சர்வானந்தாவோ, ராஜேஸ்வரி சண்முகமோ ‘பொங்கும் பூம்புனல்’ என்று சொல்லும்போது கடிகாரம் எட்டு மணியைக் காட்டும். அப்படியொரு சர்க்கரைப் பொழுதில்தான் எம்.எஸ். விஸ்வநாதன் என் செவியில் நுழைந்து மனசுக்குள் ரங்கராட்டினம் சுழற்றினார்.
‘பூ மாலையில் ஓர் மல்லிகை/ இங்கு நான்தான் தேன் என்றது’ என்கிற பாடல் காதுகளுக்கு தந்த தித்திப்பைப் போன்று எந்தப் பழங்களும் என் வாய்க்குத் தரவே இல்லை.
நின்று நிதானித்துப் பார்க்கும்போது - இன்று நாற்பதைத் தாண்டியிருக்கும் தமிழர்களின் வாழ்க்கைப் பொழுதுகளில் ஒரு சென்டி மீட்டர் இசை மழையையாவது பொழிந்திருப்பார் எம்.எஸ்.வி.
இரவு ஏழரை மணிக்கு திருச்சி வானொலியில் ஒலிப்பரப்பாகும் ‘வயலும் வாழ்வும்’ நிகழ்ச்சியில்
‘தாய் வரம் தந்த வரம்… தாவரம்’ என்கிற பாடல் கசியும். விவசாயப் பின்னணியைச் சேர்ந்த எங்களுக்கெல்லாம் விஸ்வநாதன் இவ்வாறாகத்தான் அறிமுகமாகியிருந்தார்.
காதல், ஊடல், திருமணம், தாம்பத்யம், பிறப்பு, வறுமை, உயர்வு, நட்பு... என வாழ்வின் எல்லா சந்து பொந்துகளிலும் புகுந்து புறப்பட்டிருக்கிறது அவருடைய இசை. தொலைக்காட்சி, கணினி போன்ற நவீன அறிவியல் சாதனங்களின் புழக்கமற்ற அப்போது ரேடியோதான் சந்தோஷ வாசல். அந்த வாசல் வழி வழிந்தோடிய விஸ்வநாதனின் விரல் வித்தை தமிழர்களின் 50 ஆண்டு கால மகிழ்ச்சியின் நீளம்.
எம்.எஸ்.வியின் சாதனை என்பது தமிழ்த் திரையிசையின் பாதி வரலாறு. படத்தின் பெயர் தெரியாது; அந்தப் படத்தைப் பார்த்திருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. ஆனால், இது ‘எம்ஜிஆர் பாட்டு; இது சிவாஜி பாட்டு’ என்று சொல்லிவிட முடிகிற அளவுக்கு டி.எம்.எஸ்.ஸின் பக்கபலத்தோடு வித்தியாசம் காட்டியது எம்.எஸ்.வியின் இசை நுணுக்கம்.
ஒரு காலத்தில் மேட்டூர் அணையில் திறக்கப்படும் காவிரி நீர் கடைமடை வரை பாய்ந்தோடியதைப் போல எல்லோருக்குமான இசையைத் தந்ததுதான் எம்.எஸ்.வி.யின் முதல் சாதனை.
அடுத்தது - அவர் போட்ட மெட்டுக்கள். சுயம்புவாக அவர் கொடுத்த பாடல்கள் அனைத்தும் வரலாற்றில் ‘கிளாஸிகல்’ ரகத்தில் சேர்ந்துவிடும். மாடர்ன் தியேட்டர்ஸ் ‘சுகம் எங்கே’ என்று ஒரு படம் தயாரித்தது. இசையமைப்பாளர்களாக ஒப்பந்தமான விஸ்வநாதன் - ராமமூர்த்தியிடம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரம் “இந்தி டியூன் கொடுத்தா பாட்டு போடுவீங்களா?” என்று கேட்டுள்ளார்.
“நாங்க சொந்தமாதான் டியூன் போடுவோம். விருப்பமிருந்தா எங்களை புக் பண்ணுங்க. இல்லேன்னா எங்களை விட்டுடுங்க” என்று கம்பீரமாகச் சொன்னவர் எம்எஸ்வி.
எங்கள் கிராமத்தில் தங்கராசு என்கிற ஒரு சிகைதிருத்துநர் இருந்தார். அவருடைய ‘சார்மினார்’ சலூன்தான் எங்களின் விடுமுறை விருப்பம். எம்.எஸ்.வி.யின் தீவிர ரசிகர். ஒரு பாடலில் அதன் வரிகளை மட்டும் பாட மாட்டார். பாடலின் ஆரம்பத்திலோ இடையிலோ கடைசியிலோ வரும் இசைக் கருவிகளின் ஜாலங்களையெல்லாம் அவர் உருட்டிவிடும்போது, நாங்கள் திக்குமுக்காடிப்போவோம்.
‘ஊட்டி வரை உறவு' படத்தில் பி.சுசீலா பாடியது 'தேடினேன் வந்தது' என்கிற பாடல். அதனை தங்கராசு,
'தேடினேன் வந்தது...
டின்டக்கு டின்டக்கு...
நாடினேன் தந்தது
டின்டக்கு டின்டக்கு'
என்று பாடியதை நினைத்துப்பார்க்கும்போது எம்.எஸ்.வியின் இசை சாம்ராஜ்யம் தங்கராசு வரை விரிந்திருந்தது தெரிகிறது.
‘அவளுக்கென்ன அழகிய முகம்' என்ற ‘சர்வர் சுந்தரம்' படப் பாடலை பாடும்போது பாடல் வரிகளுக்கு இடையே டிரிபிள் பாங்கோஸும், கிளாரிநெட்டும் சேர்ந்திசைக்கும்
‘பாபப்பப்பம் பாபபப பாபப்பப்பம்...
ன்ட்டாகு... ன்ட்டாகு... ன்ட்டாகு’ என்று தங்கராசுக்குள் எம்.எஸ்.வி. புகுந்து புறப்படுவார்.
‘பாகப் பிரிவினை' படத்தில் ‘தாழையாம் பூ முடிச்சு' பாடலின் இடையே ஒலிக்கும்
‘தந்தானே தானனன்னே... தானன்னே தானனன்னே... தானன்ன தானானே...'
என்கிற ஹம்மிங்கை தங்கராசு மூலம் எங்கள் கிராமத்துக் கீர்த்தனையாக்கியவர் எம்எஸ்வி.
‘சிவந்த மண்' படத்தில் ‘ஒரு ராஜா ராணியிடம்' என்கிற பாடலை தங்கராசு பாடிக்கொண்டே வருவார். இடையில்
‘டண்டரரானே டண்டரரானே... டண்டர டண்டர டண்டர டண்டரரா...' என்று முழங்கிவிட்டு
‘வெள்ளிய மேகம் துள்ளி எழுந்து அள்ளி வழங்கும் வெள்ளைப் பூவில்
புதுவிதமான சடுகுடு விளையாட்டு
விட்டுவிடாமல் கட்டியணைத்து
தொட்டது பாதி பட்டது பாதி
விதவிதமான ஜோடிகள் விளையாட்டு
இது காதலில் ஒரு ரகமோ இங்கு காதலர் அறிமுகமோ’ என்று சரணத்துக்குள் பாய்ந்துவிடுவார்.
ராகம், ஆலாபனை, அவரோகணம், தாளக்கட்டு, நோட்ஸ் எதுவுமே தெரியாது தங்கராசு என்கிற எங்கள் ஊர் எம்.எஸ்.வி.க்கு. தமிழகத்தில் எத்தனையோ தங்கராசுக்கள் இன்னமும் வாழ்கிறார்கள். இந்தச் சாதனையை எந்தத் திரையிசைக் கலைஞனும் இதுவரை நிகழ்த்தவே இல்லை.
சாஸ்திரிய இசை அரங்குகளில் பாடிக்கொண்டிருந்த பாலமுரளி கிருஷ்ணாவை ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த ‘கலைக்கோயில்’ படத்தில் ‘தங்க ரதம் வந்தது வீதியிலே…’ பாடலைப் பாட வைத்து, இன்னொரு உலகில் புகழ்பெற்ற மேதமையைத் தமிழ் திரையிசைக்குள் கொண்டுவந்தார் எம்.எஸ்.வி.
‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ஒரு பாடலில் உண்மையிலேயே ஓர் அபூர்வ ராகத்தைப் பயன்படுத்த நினைத்தார் எம்.எஸ்.வி. அந்த நேரத்தில் பாலமுரளி கிருஷ்ணா ‘மஹதி’ என்கிற பெயரில் ஒரு ராகத்தை உருவாக்கியிருந்தார். அந்த ராகத்தையும் வேறு சில ராகங்களையும் குழைத்து ஒரு ராகமாலிகையாக எம்.எஸ்.வி. கம்போஸ் செய்ததுதான் ‘அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம்’ பாடல்.
பந்துலு, பீம்சிங், ஸ்ரீதர், பாலசந்தர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் என்று பல இயக்குநர்கள் தங்களின் பல்லக்கை வெற்றிகரமாக நகர்த்த சக்கரமாக இருந்தவர் எம்.எஸ்.வி. திரைப்படப் பாடல்களை இசையை உரித்துவிட்டுப் பார்த்தால் அதில் உள்ள தமிழ் சட்டென்று நம்மைக் கவர்ந்திருக்காது. கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம் போன்ற கவிஞர்களை நாம் கொண்டாட விஸ்வநாதன் ஒரு மூல காரணம்.
தமிழ்த் திரையிசையில் பல வடிவங்களில் இசையை வாரி வழங்கியவர் எம்.எஸ்.வி.
‘அன்புள்ள மான்விழியே/ஆசையில் ஓர் கடிதம்/ நான் எழுதுவதென்னவென்றால்/ உயிர்க்காதலில் ஓர் கவிதை’ என்று அஞ்சல் அட்டைக்கு இசைச் சிறகு முளைக்க வைப்பார்.
‘பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி/ புது சீர் பெறுவாள் வண்ணத் தேனருவி’ என்று கல்யாணப் பத்திரிகை வடிவில் அட்சதை தூவும் ஒரு பாடல். இந்தப் பாடலில் வரும் ‘தங்கள் நல்வரவை விரும்பும்/ ரகுராமன் ரகுராமன் ரகுரா…மன்’ என்கிற வரிகளின்போது யாருக்கும் தெரியாமல் கண்களைத் துடைத்துக்கொண்ட பல அண்ணன்களை நான் பார்த்திருக்கிறேன்.
‘வாராயோ தோழி வாராயோ’ என்று பல தமிழ் வீடுகளின் வாசலுக்கு மருமகள்களை வலது காலை எடுத்து வைத்து அழைத்து வந்திருக்கிறது எம்.எஸ்.வி-யின் இசை.
‘மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
மலரும் விழிவண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விடிந்த கலையன்னமே
நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே’ என்று ‘பாசமலர்’ படத்தில் கண்ணதாசனுடன் இணைந்து எம்.எஸ்.வி தந்த இசை தாலாட்டும் தாலாட்டு பாடியவர்களும் காணாமல் போன இந்நாட்களில் தமிழர்களின் கிலுகிலுப்பையாகும்.
தொடர்புக்கு: [email protected]

நன்றி -த இந்து

  • Subramanyam  
    அதாவது, இந்தப் பாடல்கள்தான் என்றில்லை. பல ஆயிரக்கணக்கான பாடல்கள் சாம்ராஜ்ஜியத்துன் அதிபதி அவரும் திரு ராமமூர்த்தி அவர்களும். எதை எடுப்பது, எதை விடுப்பது? வரம் பெற்று பூமிக்கு வந்தவர்.
    Points
    32390
    3 days ago
     (1) ·  (0)
     
    V Up Voted
    • WWatcher  
      கண்கள் பனிக்க வாய்த்த கட்டுரை.அருமையான சொல்லாடல்.அற்புதமான நினைவஞ்சலி .நன்றி.

    Sunday, June 09, 2013

    வாரா என் தோழி வாராயோ! சூப்பர் ஹிட் பாடல் ஆனது எப்படி?

    காதோடு நான் பேசுவேன்...

    வாழ்க்கைத் தொடர் - 4 \
    எல் ஆர் ஈஸ்வரி

    1961- இது தமிழ் சினிமா சரித்திரத்துல குறிப்பிடப்பட வேண்டிய ஒரு வருஷம். அந்த ஆண்டுதான்பாசமலர்படம் ரிலீஸ் ஆனது. அந்த 1961ஆம் வருஷத்தையும், பாசமலர் படத்தையும் என்னால ஆயுசுக்கும் மறக்கமுடியாது. ஒருநாள் எம்.எஸ்.வி. என்கிட்ட உனக்கு மங்களகரமான ஒரு பாட்டைக் கொடுத்திருக்கேன். இந்தப் பாட்டைப் பாடறத்துக்கு உன்னை செலக்ட் பண்ணினது என்னோட சாய்ஸ். உன்னோட முழு திறமையையும் காட்டி, அந்தப் பாட்டை நீ அற்புதமாய் பாடிட்டேன்னா, நீ எங்கேயோ போயிடுவே!"ன்னு சொன்னார் 




    . நான் என் ரெண்டு கைகளையும் குவிச்சு அவரை வணங்கி, ‘உங்களோட ஆசிர்வாதம் இருந்தா நீங்க எதிர்பார்க்கிற படியே பாடுவேன். நல்ல பேர் வாங்குவேன்என்று உணர்ச்சி பொங்கச் சொன்னேன். அந்தப் பாட்டு எது தெரியுமா? ‘வாரா என் தோழி வாராயோ!’


    வாரா என் தோழிபாட்டை ரெக்கார்டிங் செய்வதற்கு முந்தைய நாள் நான் எம்.எஸ்.வி. இசையில் வேறு ஒரு கோரஸ் பாட்டில் ஹம்மிங் பாட வேண்டியிருந்தது. அன்றைய ரிக்கார்டிங் காலையில் ஆரம்பிச்சு, ராத்திரி வரை நீண்டுக் கொண்டே போனது. திரும்பத் திரும்ப பாடியதில் எனக்குத் தொண்டை கட்டிக் கொண்டது. ராத்திரி ஒன்பது மணிக்கு மேல் வீட்டுக்கு வந்து மறுநாளுக்காக கொஞ்சம் பாட ஆரம்பித்தால் வாயிலிருந்து காற்றுதான் வந்ததே ஒழிய குரல் வரவில்லை. நாளைக்கு முக்கியமான பாட்டு ஆச்சே! எப்படிப் பாடப் போறோம்கிற பயத்துல தூக்கமே வரலை. ஒரு வேளை நல்லா பாடாமல் போனா இனிமே சான்ஸ் கிடைக்காம போயிடுமோன்னு கலக்கமாய் இருந்தது.


    காலையில எழுந்து பார்த்தபோது தொண்டைக் கட்டு சரியாகி இருந்தது. நான், என் அம்மா, என் தங்கை மூணு பேருமே சாரதா ஸ்டுடியோவுக்குப் போனோம். அப்போ சாரதா ஸ்டுடியோவுக்கு மெஜஸ்டிக் ஸ்டூடியோன்னு பேரு. என் கூட எதுக்கு என் அம்மாவும், தங்கையும்? ‘வாரா என் தோழிபாட்டை நான் பாடணும்; என் கூட அம்மாவும், தங்கையும் கோரஸ். அதுக்காகத்தான். போனதும் ரிகர்சல் ஆரம்பமானது. நான் ஆண்டவரை வேண்டிக் கொண்டு பாடினேன். பாடி முடித்தவுடன், ரிக்கார்டிங் அறைக்குள்ளே இருந்து, வெளியில் வந்த எம்.எஸ்.வி.


    பிரமாதமா இருக்கு; அப்படியே பாடு!’ என்றார். அந்த வார்த்தைகளைக் கேட்டதும் எனக்கு உற்சாகம் அலைமோதியது. பயம் சுத்தமாக அகன்றது; அடுத்த ரிகர்சலில் ரொம்பத் தெம்பாகப் பாடினேன். அடுத்து டேக். பிரதான பாடகி, கோரஸ், மந்திரங்கள். ஆர்கெஸ்டிரா என்று எல்லாவற்றுக்குமான ஒருங்கிணைப்பு சரியாக வரவில்லை. ஒண்ணு, இரண்டு, மூணு என்று அடுத்தடுத்து டேக் போய்க் கொண்டே இருந்தது. எங்கேயாவது ஒரு சின்ன பிசகு என்றாலும், மறுபடி முதலில் இருந்து ஆரம்பிக்கச் சொல்லி விடுவார் எம்.எஸ்.வி.


    ஐந்தாவது டேக் முடிஞ்சதும், இது .கே. ஆனாலும் எனக்கு முழு திருப்தி இல்லை; இன்னொரு டேக் போயிடலாம்" என்றார். அடுத்தடுத்து இன்னும் பல டேக் வாங்கி, ஒரு வழியாக பதினோறாவது டேக்கில் .கே. ஆனது. அப்போது கூட அவர் என்ன சொன்னார் தெரியுமா? அஞ்சாவது டேக்கையும், பதினோறாவது டேக்கையும் மிக்ஸ் பண்ணிக்கறேன்" அப்படி உருவான பாட்டுதான் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி, சினிமா உலகத்தின் ஒட்டு மொத்த கவனமும் என் மேல் விழச் செய்தது.


    அந்தப் பாட்டு பதிவான சில நாள் கழித்து கே.வி. மகாதேவன் மியூசிக்ல ஒரு பாட்டு பாடுவதற்காக நான் போயிருந்தேன். அப்போ அவர் என்னைப் பார்த்ததும்,

    ராஜா! (என்னை அவர் அப்படித்தான் அன்போடு கூப்பிடுவார்) விசு மியூசிக்ல நீ பாடின ஒரு பாட்டு கேட்டேன். மந்திரம், நாதஸ்வரத்துக்கு நடுவுல கணீர்னு உன் குரல்! பிரமாதம்! இனிமே அந்தப் பாட்டு ஒலிக்காத கல்யாண வீடே இருக்காது. அந்தப் பாட்டால உனக்கு இதுவரைக்கும் இல்லாத பேரும் புகழும் வரப்போகுது பாரு" என்று சொல்லி, மனசார வாழ்த்தினார்.


    இந்தப் பாட்டுக்கு அப்புறம், எம்.எஸ்.வி. ‘ உனக்கு குரல் நல்லா செட் ஆயிடிச்சு! இனிமே நீ கோரஸ் பாட வேணாம்"னு சொல்லிட்டாரு. அதுமட்டுமில்லை. புதுப்புது வெரைட்டியான பாட்டுக்களை எனக்குக் கொடுத்து, உற்சாகப்படுத்தினார். நானும் அதையெல்லாம் நல்ல வாய்ப்பாகவும், சவாலாவும் எடுத்துக்கிட்டுப் பாடினேன்.

    1964-ல் டைரக்டர் ஸ்ரீதர் எடுத்த படம்வெண்ணிற ஆடை’. அந்தக் காலத்துக்கு அது ரொம்பவும் புதுமையான கதை. அதுல நம்முடைய மரியாதைக்குரிய சி.எம். அம்மாவை அவர் நடிக்கவெச்சாரு. அதிலே அம்மாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் கேரக்டர். ‘நீ என்பதென்ன? நான் என்பதென்ன? ஒரு நினைவு என்பதென்ன



     நிலையில்லாத ஒரு உலக மேடையில் நாமும் வந்ததென்ன?’ என்று அவர் பாடுவதாக ஒரு பாட்டு. அதை எனக்குப் பாடக் கொடுத்தார் எம்.எஸ்.வி. அதிலே பாட்டு வரிகளுக்கு இடையில் பேச்சு, விதம், விதமான சிரிப்பு, கூக்குரல்கள் என எல்லாம் வரும். ரொம்ப சவாலாக இருந்த அந்தப் பாட்டை, நான் பாடி முடிச்சதும், எம்.எஸ்.வி. ‘நினைச்ச மாதிரியே பாடிட்டஎன்று சொன்னபோது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.



     அதுமட்டுமில்லை. அந்தப் பாட்டை ஒலிப்பதிவு செய்த இன்ஜினியர் டி.எஸ். ரங்கசாமி என்னிடம் வந்து, உங்க குரல் பிரமாதம்; இனிமே எல்.ஆர். ஈஸ்வரி என்னோட ஃபேவரிட் ஆர்டிஸ்ட்" என்றார். நான் என் பக்கத்தில் நின்று கொண்டிருந்த என் அம்மாவைப் பார்த்தேன். இரண்டு பேர் கண்களிலுமே ஆனந்தக் கண்ணீர்.


    அந்தப் பாட்டும் எனக்கு ரொம்ப நல்ல பேரை வாங்கிக் கொடுத்தது. இன்னைக்கும், நாடே போற்றுகிற ஓர் அரசியல் தலைவிக்கு, நான் சினிமாவுல பின்னணி பாடியிருக்கேன் என்பதுல எனக்கு ரொம்பப் பெருமையா இருக்குது.
    ஆரம்ப நாட்கள்ல எனக்கு பாட்டு கொடுப்பாங்க. நான் அதை வாங்கிப் படிச்சுப் பார்த்து, ரிகர்சல் பண்ணி, பாடுவேன்.



     கொடுக்கிற பாட்டை நல்லாப் பாடி, நல்ல பேர் வாங்கணும் என்கிற நினைப்பு மட்டும்தான் எனக்கு இருக்கும். சொல்லிக் கொடுக்கிறதை, கூர்ந்து கவனிச்சு, அப்படியே பிடிச்சுக்குவேன். அந்தக் காலத்துல ஏவி.எம். ஸ்டூடியோவுல சுதர்சன் மாஸ்டர் என்று ஒரு மியூசிக் கண்டக்டர் இருப்பார்.  



    மியூசிக் டைரக்டர் கம்போஸ் பண்ணற இசைக்கு ஏத்தபடி பாடறவங்களையும், பலவிதமான இசைக்கருவிகள் வாசிப்பவர்களையும் ஒருங்கிணைச்சு, நல்ல முறையில் ஒலிப்பதிவை நடத்துவதுதான் அவருடைய பாணி. கோவர்த்தன் மாஸ்டரிடம், மாஸ்டர்! இந்தப் பாட்டை எப்படிப் பாடப்போறோம்னு கொஞ்சம் பயமா இருக்குன்னு சொன்னா, உடனே, ‘ஈஸ்வரி! நீ எதைப்பத்தியும் கவலைப்படாதே! எல்லாம் என் கையில் இருக்கு. பாடுகிறபோது என் கையையே பாரு. அது எப்படி எல்லாம் அசையுதோ, அதுக்கேத்தா மாதிரி உன் குரலில் நெளிவு, சுளிவுகளைக் கொண்டு வந்துவிடு. பாட்டு நல்லா வந்திடும்"னு சொல்லுவாரு.



    இன்னொரு விஷயம். நான் பாடுற பாடல் வரிகளுக்கு என்ன அர்த்தம்னு எனக்கு சொல்லித் தந்தாரு. அந்த பாட்டுக்களை எல்லாம் இப்போ கேட்கிறபோது, வாழ்க்கை நடைமுறையோடு சம்மந்தப்பட்ட அற்புதமான பல வரிகளுக்கு அர்த்தம் எனக்கு நல்லாப் புரியுது.


    தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் என் குரல் ஒலிக்கத் தொடங்கிய வேளையில், சுந்தரத் தெலுங்கில் பாட எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் எனக்கோ தெலுங்கு தெரியாது. பாடலாமா? என்னால் முடியுமா? எனக்குள்ளே சின்னதாக ஒரு குழப்பம்.


    இந்தப் படத்தில் அணிந்திருக்கும் தங்கத்தோடு, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் என் அம்மா எனக்கு முதன் முதலாக வாங்கிக் கொடுத்தது. நான் ஒரு நகை ப்ரியை. டாலர் வைத்த லாங்செயின், குடை ஜிமிக்கி என்னோட ஃபேவரிட். உள்நாட்டில் பட்டுப்புடைவை விரும்பி அணியும் நான், வெளி நாடுகளுக்குப் போகும்போது மட்டும் ஜீன்ஸ் - டாப்ஸ் அணிவேன்.


    (கலகலப்போம்...)


    நன்றி - கல்கி