Showing posts with label ஆம் ஆத்மி வெற்றி. Show all posts
Showing posts with label ஆம் ஆத்மி வெற்றி. Show all posts

Wednesday, February 11, 2015

ஆம் ஆத்மி வெற்றி பெற்றதற்கான காரணங்கள்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த முறை ஆம் ஆத்மி 49 நாட்களில் தன் ஆட்சியை துறந்ததையடுத்து இந்த முறை அந்தக் கட்சி வெற்றி பெறுவது கடினம் என்றும், லோக்சபா தேர்தல்களில் பாஜக சந்தித்த மிகப்பெரிய வெற்றிகளை அடுத்து டெல்லியிலும் மக்கள் பாஜக-விற்கு வாக்களிப்பார்கள் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி மிகப்பெரிய வெற்றிபெற்றதற்கு தகுந்த காரணங்கள் இருக்கின்றன.
முதலில், ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்பது தெரிந்தாலும், வாக்குகள் வித்தியாசம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் எதிர்மறை வாக்குகள் ஆம் ஆத்மி சார்பாக விழுந்துள்ளதாகக் கூற வாய்ப்பில்லை. 

ஆம் ஆத்மியின் இத்தகைய வெற்றிக்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. குறிப்பாக டெல்லியில் உள்ள பெரும்பான்மை மக்கள், குறிப்பாக சமுதாயத்தில் அடித்தட்டில் உள்ளவர்கள் ஆம் ஆத்மியின் முந்தைய 49 நாட்கள் ஆட்சி தங்களுக்கு நல்லது செய்ததாக உணர்ந்தனர். குறிப்பாக போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகளின் சில்லறை லஞ்சம் ஒழிக்கப்பட்டது. மின்சாரக் கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம் மக்களுக்கான முறையில் அமல் செய்யப்பட்டது. இதனால் ஆம் ஆத்மி வெறும் எதிர்கட்சி மட்டுமல்ல நல்லதைச் செய்யும் கட்சி என்ற நம்பிக்கையை அடித்தட்டு மக்களிடையே ஏற்படுத்தியிருந்தது. 

இரண்டாவது மிக முக்கிய காரணம், லோக்சபா தேர்தல் முடிவுகளால் அந்தக் கட்சி ஒன்றும் ஆடிப்போய்விடவில்லை. அதன் பிறகு கட்சியை ஒருங்கிணைத்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் ஒதுக்கப்பட்ட தொகைகளில் திட்டங்களை நடைமுறைப் படுத்தினர். இதனால் தொண்டர்களின் செயல்பாடுகள் புது உத்வேகம் பெற்றன. இதனால் சமுதாயத்தில் பின் தங்கிய பிரிவினர்களுடன் கட்சிக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. மேலும் உள்ளூர் பகுதிகளுக்கான தேர்தல் அறிக்கைகளும் தனியே உருவாக்கப்பட்டது. 

இவையெல்லாம் நடைமுறைப்படுத்துதலில் ஆம் ஆத்மி காட்டிய முனைப்பை வெளிப்படுத்துவதாக அமைய, அரசு எந்திரத்தை மக்கள் சேவைக்கு பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடத்தில் ஏற்படுத்தியது. இது போன்ற நம்பிக்கைகள்தான் ஆம் ஆத்மி தொண்டர்களை உத்வேகப்படுத்தியது. 

பொதுவாகக் கூறவேண்டுமெனில், ஆம் ஆத்மியின் அரசியல் செயல்முறை முடிவுகளை அடிப்படையாகக் கொண்டது என்பதே. இதில் பயனடைந்தவர்கள் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களே. இந்தப் பயன்கள் மிகப்பெரிய அளவில் அல்ல, இன்னும் சொல்லப்போனால் தேர்தல் அறிக்கைகளில் கொடுத்த வாக்குறுதிகளை விடவும் குறைவானதுதான். ஆனால், வாக்களிப்பது என்பது தங்களது அன்றாட வாழ்வை மாற்றியமைக்கும் ஒரு விஷயம் என்பதை ஆம் ஆத்மியின் செயல்பாட்டு அரசியல் எடுத்துரைத்துள்ளது. சமூக படிமுறை அமைப்பில் கீழே உள்ளவர்களின் எண்ணங்கள் நடுத்தர மக்களையும் பீடித்தது இந்த தேர்தலில் காணமுடிந்தது. பொதுவாக ஏழைகளுக்கான எந்த ஒரு செயல்திட்டமும் வெகுஜன சாமர்த்திய பேச்சு என்றும் ஜோடனை என்றும் பேசப்பட்டு வந்த நிலையில் இத்தகைய அரசியல் அனைத்து தரப்பினரையும் ஈர்த்துள்ளது.

மேலும், ஆம் ஆத்மி பேசிய வர்க்க அரசியல் மொழி நடுத்தர வர்க்கத்தினரை அச்சுறுத்துவதாக இல்லை. தங்களது நிலைக்கு ஆபத்து வராத நிலையில் ஏழைகளுக்கான அரசியலை அவர்கள் ஆதரிக்கவே செய்தனர். வர்க்க அரசியலின் புதிய மொழியாகும் இது. அதாவது செய்து முடிப்பது என்ற இந்த நடைமுறை பல்வேறு வர்க்கத்தினரையும் ஒன்று திரட்டியுள்ளது. 

பாஜக தோல்வியடைந்ததும் ஆச்சரியமானதே. முதற்படி காரணம் சிறுபான்மையினருக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்.-இன் செயல்பாடுகள். இது சிறுபான்மையினரிடத்திலும் கடமை உணர்வு கொண்ட மதச்சார்பற்றவர்கள் மத்தியிலும் பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தியது. இந்துத்துவா அமைப்புகளின் கருத்துகள் மற்றும் செயல்பாடுகள் அன்றாட வாழ்க்கைக்கும், வாழ்க்கைச் சூழலை மேம்படுத்துவதற்கும் எந்த விதத்திலும் உதவப்போவதில்லை என்பதோடு அதனை திசைதிருப்புவதாக அமையும் என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொண்டுள்ளனர். மேலும் அரசின் முகமாகத் தன்னை வரிந்து கொண்ட நரேந்திர மோடி அரசின் செயல்திறமின்மையை இந்த முடிவுகள் பறைசாற்றுகின்றன. 

டெல்லி மக்களின் முடிவுகள் பாஜக அரசின் மீதான கோபம் அல்ல. மாறாக தனது ஆட்சிக்கு விளம்பரம் தேடும் செயல்பாடாக இருப்பதோடு, செயல்திறனுள்ள அரசாக இல்லை. மேலும், பாஜக தற்போது பணக்காரர்களுக்கான, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கட்சி என்பதும் உறுதியாக நம்பப்படுகிறது. மத்தியதர வணிகர் மற்றும் அரசு ஊழியருக்குமே இந்த அரசு ஒன்றும் செய்யப்போவதில்லை என்ற அச்சம் எழுந்துள்ளது. பெரும்பான்மை மக்களுக்கான தாராளமய பொருளாதார சீர்த்திருத்தங்கள் என்பது பல சந்தேகவாத இடதுசாரிகளுக்கு புரட்சி எப்படியோ அப்படியாகிவிட்டது. ஏழைகளை உள்ளடக்கிய பொருளாதார சீர்த்திருத்தங்கள் எப்போதும் வந்து கொண்டேயிருக்கிறது, வந்து ஒரு போதும் சேர்வதில்லை. இறுதியாக பாஜக செய்த பல தவறுகள் அதன் தொண்டர்களை உற்சாகமிழக்கச் செய்து விட்டது. இந்தத் தேர்தலில் பாஜக போஸ்டர்கள் அதன் தொண்டர்களை விட அதிகம் காட்சியளித்தது. அக உறுதிப்பாடு இல்லாத எந்தக் கட்சியும் இத்தகைய தோல்வியைத் தழுவுவது தவிர்க்க முடியாததே. 

இந்தத் தேர்தல் முடிவுகளின் தாக்கம் எப்படியிருக்கும் என்பதை முன்னமேயே தீர்மானிப்பது கடினம். ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. சிறுபான்மையினருக்கு எதிரான, மதச்சார்பின்மைக்கு எதிரான போக்குகளை பாஜக கடைபிடித்தால் 2 கட்சி தேர்தல் நடைமுறைகளில் பாஜக முடக்கப்படும் என்பதே. மேலும், காங்கிரஸ் தோல்விக்குக் காரணமான தாராளவாத பொருளாதாரக் கொள்கையை பாஜக மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதும் அவசியம். 

ஆகவே ஏழை மற்றும் சுற்றுச்சூழல் அக்கறைகள் சார்ந்த திட்டங்களுக்குத்தான் வரவேற்பு கிடைக்கும் என்பதை உணர்வது நலம். அனைத்துக் கட்சிகளும் படைப்பாற்றலுடன் சிந்திக்க வேண்டும் அதனை விடுத்து நவ-யுக பொருளாதார சீர்த்திருத்தங்களை அதன் வாஷிங்டன் போதகர்களிடமிருந்து பெறுவதைத் தவிர்ப்பது நலம். 

மேலும் ஆம் ஆத்மி கட்சி டெல்லி தேர்தல் முடிவுகளினால் வெறுப்படைந்த மத்திய அரசைக் கடந்து தனது மக்கள் அரசியலை சீரிய முறையில் எடுத்துச் செல்வது மற்ற மாநிலங்களின் நகர்சார் அரசியலையும் தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

(கட்டுரை ஆசிரியர் பி.கே.தத்தா டெல்லி பல்கலைக் கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறை பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.)


thanx - the hindu

  • JEY  
    இறைவன் நினைப்பவர் ஆட்சி கட்டிலில் அமர்கிறார். அவருக்கு பிரியமானதை செய்தால் மட்டுமே நீடித்து நிலைக்கும் (காங்கிரஸ் சிறப்பான ஆட்சி நடத்தி நாட்டை முன்னேற செய்தும், அவர்களின் கடைசி நேர கொள்கை முடிவுகளில் சில தவறாக எடுக்கப்பத்தின் விளைவு, இறைவனின் கோபம் அவர்களை கவிழ்த்து விட்டது).
    Points
    4440
    about 11 hours ago ·   (5) ·   (23) ·  reply (0) · 
       
    • stalin  
      எல்லோரும் வெற்றியை பற்றித்தான் பேசுகிறிர்கள், இனிமேல் ஆம் ஆத மீ மக்களுக்கு, என்ன என்ன பண்ண வேண்டும் என்பதைப்பற்றி பேசுவோம்! படுதோல்வி அடைந்த பாரதிய ஜனதா கட்சி எந்தவகைலும் ஆம் ஆத மீயை எந்தவகைலும் பழிவாங்க கூடாது என்பதைப்பற்றி பேசலாமே!!!
      about 11 hours ago ·   (18) ·   (2) ·  reply (0) · 
      • Kanan  
        நேற்றுவரை ஆம் ஆத்மியை கேவலமாக விமர்சித்த பச்சைகளும் சிவப்புக் கட்சியினரும் இப்போது பாராடுவதுபோல பச்சோந்தி வேலை வேறெதுவும் இல்லை
        Points
        985
        about 12 hours ago ·   (15) ·   (8) ·  reply (0) · 
        • kanidhavirumbi  
          காங்கிரசிற்கும் பாஜகவிற்கும் இந்த தோல்வி பாடம் என்றால் ,இந்த பாடத்தில் இருந்து ஆம் ஆத்மி நிறையகற்றுகொள்வ்தில் தான் அதன் வெற்றி அடங்கி உள்ளது .
          about 12 hours ago ·   (13) ·   (1) ·  reply (0) · 
          • samy  
            இந்த கட்டுரையை படிப்பதை விட ஒரே வார்த்தை ""மோடி எதிர்ப்பு அலை டெல்லியில் வீச ஆரம்பித்து விட்டது.... மிக விரைவில் நாடங்கும் வீசும்....""
            Points
            21310
            about 12 hours ago ·   (55) ·   (7) ·  reply (0) · 
            • R.BALAKRISHNAN  
              அர்விந்த் கேஜ்ரிவால் அவர்களின் இந்த மாபெரும் வெற்றி பாராட்டுக்குரியதுதான். ஆனால் இதனால் மோடியின் அலை ஓய்ந்துவிட்டது என்பது தவறான பிரச்சாரம். பா.ஜ.க வின் வாக்கு சதவிகிதம் முன்பை விட சற்று குறைந்துள்ளது உண்மை. நேற்று வந்த கிரண்பேடியை முதலமைச்சர் பதவிக்கு முன் நிறுத்தியது அவர்கள் செய்த தவறு. இதை பா.ஜ.க. வினரே விரும்பவில்லை என்பதும் நிஜம். மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்துள்ளார்கள். அவர்களை ஏமாற்றாமல் நல்ல ஆட்சி தருவார் என நம்பலாம். அரசியல் என்பது எப்படிப்பட்ட நல்லவனையும் கெட்டவனாக மாற்றிவிடும். நமது விஜயகாந்த் கூட அரசியலுக்கு வரும் முன் நல்லவராகத்தான் இருந்தார். அமெரிக்க பல்கலைகழகத்தால் 'சிறந்த குடிமகன்' என்ற பாராட்டும், பட்டமும் பெற்றார். ஆனால் இப்போது? அதேபோல அர்விந்த் கேஜ்ரிவாலும் இன்னொரு விஜயகாந்த் ஆக மாறாமல் இருந்தால் நல்லது. வாழ்த்துக்கள். காங்கிரஸ் கட்சிக்கு மாபெரும் தோல்வியை பரிசாக தந்த டெல்லி மக்களை பாராட்டுகிறேன்.
              Points
              21540
              about 12 hours ago ·   (16) ·   (37) ·  reply (0) · 
              • Gilbertraj  
                Still in Tamil Nadu we are expecting from cine filed only what a shame!
                about 12 hours ago ·   (16) ·   (3) ·  reply (0) · 
                • thiruaathiriyan  
                  தேசிய அரசியலில் சமநிலையை உருவாக்கும். மத்திய அரசு தன் நிகழ்வுகளில் கவனம் கொள்ளும். கெஜ்ரிவால் இன்றைய அரசியல்வாதி ஆகாத வரை மக்களுக்கு நன்மையே. காலம் கடக்கட்டும், இவரையும் அறிந்து கொள்வோம்.
                  Points
                  1965
                  about 12 hours ago ·   (11) ·   (0) ·  reply (1) · 
                  • tamil  
                    சுட்டாலும் சங்கு வெண்மை தரும்
                    about 12 hours ago ·   (6) ·   (2) ·  reply (0) · 
                  •  Ramesh Sargam at Deccan Chronicle Holdings Limited 
                    டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்த வெற்றிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படும் நிலையில், அக்கட்சியின் பிரசார யுக்தியில் புதுமையை புகுத்திய மும்பை ஐஐடி மாணவர்கள் குழுவும் ஒரு காரணம். டெல்லி மக்களின் தற்போதைய தேவை என்ன?, மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் பிரச்னைகள் என்ன?, ஆட்சியாளர்களிடம் அவர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள்? ஆம் ஆத்மி கட்சியில் உள்ள குறைகளாக எதை விமர்சகின்றனர், ஆம் ஆத்மியின் பலவீனம் என்ன போன்ற காரசார விவாதங்களை ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரில் இருந்து கண்டறிந்து செயல் பட்டனர். அதுவே ஆம் ஆத்மி கட்சியின் இந்த மாபெரும் வெற்றிக்கு மாபெரும் ஒரு காரணம் என பலர் நினைக்கிறார்கள்.
                    Points
                    16840
                    about 13 hours ago ·   (24) ·   (1) ·  reply (0) · 
                    •  Jayabalan Narayanasamy  
                      எல்லா புகழும் இந்துத்வாவுக்கே
                      Points
                      6470
                      about 13 hours ago ·   (29) ·   (4) ·  reply (0) · 
                      • Anbalagan  
                        பிஜேபி யின் spoke persons களின் திமிரான/அடாவடித்தனமான பேச்சுக்களும் தோல்விக்கு ஒரு முக்குய காரணம். கேஜ்ரியை "கள்ளன்" என்று சொன்ன அந்த தமிழகத்தை சார்ந்த நிர்மலா சீதாராமனை ஆளை காணலியே..
                        Points
                        1100
                        about 13 hours ago ·   (58) ·   (3) ·  reply (0) · 
                        • Manickam  
                          கிளீன் இந்திய என்று துடைப்பத்தை எடுத்தவர்களை ,அதே துடைப்பம் பிஜேபிய டெல்லில கிளீன் செய்திடுச்சு, இனி மேக் இந்தியா, டீம் இந்தியா, கோஷமெல்லாம் வரிசைகட்டி " யூ மே கோ ப்ரொம் இந்தியா என்று சொல்லபோகுது பாருங்க
                          Points
                          2670
                          about 13 hours ago ·   (40) ·   (4) ·  reply (0) · 
                          • Anbalagan  
                            ஒரு கேஜ்ரிவால், ஆம் ஆத்மி என்றொரு அமைப்பு, அதன் தெளிவான சிந்தை கொண்ட 4-5 PROs மற்றும் ஆதரவாளர்கள் அளிக்கும் நன்கொடைகள் - அதன் விபரங்கள் உலக பார்வைக்கு... இப்படி ஒரு கட்சி, AAP - இந்த பக்கம், சர்வ அதிகாரம் கொண்ட பாரத நாட்டு முடி சூடா மன்னன், போர்க்கள ராஜதந்திரி, படை எடுத்த நாடுகளையெல்லாம் வென்ற அகம். போர் இப்போது தலை நகரில்! முடிவு நீங்கள் அறிந்ததே. அலெக்சாண்டர்-போரஸ் நியாபகம் வருகிறது. தலை நகர மக்கள், தங்கள் பதிலை, தலை உச்சியில் ஆணி அடித்து காட்டி விட்டார்கள். இப்போ, செம்மொழி பேசும் மூத்த இனம் - தமிழினம். இங்கு வருவோம். "எங்க குடும்பம் அப்பதிலிருந்தே அ/ திமுகதான்" - பெருமை! எங்க சாதிக்கார தலைவன்.. 200 கோட்டர்.. வாக்கு விற்பனை.. .. நடிகனுக்கு பால் குடம்..இலங்கை தமிழரை வைத்தே அரசியல் நடத்தும் ஒரு கூட்டம்.. வாக்குகள் வீணடிப்பு.. இப்பவாவது AAP ஒரு நேர்மையான கட்சி - நேர்மையான ஒரு தலைவன் கேஜ்ரி - எப்பேர்பட்ட மோடி & கம்பெனியை மண்ணை கவ்வ வைத்தது.. ஒரு வித்யாசமான நிர்வாகம் கிடைக்கும். அது டெல்லி - இது சிங்கார சென்னை! வெற்றி கிடைத்த உடன் AAP க்கு ஒரு 'ஓ' போட்டு விட்டு போகாமல், சிந்திப்போம்!
                            Points
                            1100
                            about 13 hours ago ·   (31) ·   (0) ·  reply (0) · 
                            •  Seyed Muhammed Self-employed at Chennai 
                              பன்முக சமுகத்தில் இரண்டு பேரை/குழுக்களை சார்ந்து எல்லோரும் வாழ்வது இயலுமா?அடுக்கடுக்காய் பிரிந்துள்ள மக்களின் உணர்வுகளை ஒத்தக் கருத்துடைய இரு கூறுகளால்/கூட்டத்தால் நிவர்த்தி செய்ய முடியுமா?அது ஜனநாயகமா?இப்படி முடியாத ஒரு நடைமுறையை தங்களின் சுய லாபத்திற்காக இந்தியா எனும் கூட்டுக்கலவையின் மீது திணிக்க அரசு அதிகார துறை சார்ந்த ஒரு கபட நாடகம் பாராளுமன்ற தேர்தல்.டில்லி தேர்தல் மக்களின் உண்மை நிலையை அறிய நூல்விட்டுப்பார்க்கும் தந்திரம்.அடுத்து வரவுள்ள பிஹார், உ.பி.சட்டமன்ற தேர்தல்களில் பாராளுமன்ற பார்முலாவைக் கொண்டு வென்றாலும் அவப்பெயர் கிடைக்காது என்பதற்காக பெரிய மீன் பிடிக்க உதவிய தூண்டி மீன் டில்லி.உ.பயிலும்,பிஹாரிலும் வெற்றி பெற ப.ஜ.க.விற்கு சிரமமில்லை.பிற கட்சிகள் வெல்ல போராட வேண்டும்.லல்லுவை வீழ்த்த ப.ஜ.க.வுடன் சேர்ந்திருந்த நிதீஷ் தந்திரங்களை அறிவார்.அப்போதைய ஹிந்து தலையங்கம் லல்லு மூன்று எதிரிகளை சந்திக்க வேண்டியிருந்தது அதில் ஓன்று தேர்தல் கமிஷன் என எழுதியது.இப்போது எதிரி ஒட்டு எந்திரமும்,கமிஷனும் தான்.ஓட்டை காகிதமாக்கினால் எதிரியின் சூழ்ச்சியை தடுக்கலாம்.வெல்ல முடியாது.
                              Points
                              1805
                              about 13 hours ago ·   (7) ·   (0) ·  reply (0) · 
                              • Ram  
                                சுதேசிய அணுகுமுறையோடு இந்தியமக்கள்சார் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதை விடுத்து, நவ-யுக பொருளாதார சீர்த்திருத்தங்களை கொண்டுவருவது நலம் பயக்காது. நமது பார்வை இந்திய பார்வையாக இருக்க வேண்டும். மாறாக மேற்கத்திய பார்வை மக்கள் மன்றத்தில் என்றுமே ஆதரவு பெறாது.
                                Points
                                1125
                                about 13 hours ago ·   (7) ·   (1) ·  reply (0) · 
                                • Ram  
                                  சுதேசிய அணுகுமுறையோடு இந்தியமக்கள்சார் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதை விடுத்து, நவ-யுக பொருளாதார சீர்த்திருத்தங்களை கொண்டுவருவது நலம் பயக்காது. நமது பார்வை இந்திய பார்வையாக இருக்க வேண்டும். மாறாக மேற்கத்திய பார்வை மக்கள் மன்றத்தில் என்றுமே ஆதரவு பெறாது.
                                  Points
                                  1125
                                  about 13 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
                                  • Prathap  
                                    நமது நாட்டின் மதச்சார்பின்மைக்கு நான் வைக்கும் ஒரே கேள்வி, இதே இந்தியாவில் இந்துக்கள் அதிகம் இல்லாமல் வேறு ஒரு மதத்தினர் அதிகம் இருந்திருந்தால் இந்த நாடு "மதச்சார்பின்மை" கொள்கையை கொண்டிருக்குமா? யாராவது பதில் சொல்லுங்கள்.
                                    Points
                                    7050
                                    about 13 hours ago ·   (21) ·   (32) ·  reply (1) · 
                                    • Akash  
                                      மதவெறியற்ற சகிப்புத்தன்மைதான் (பெருவாரியான) இந்துக்களின் பெருமை. அவன் பண்றான் நானும் பண்ணுவேன்னு கிளம்புனா அப்றம் என்ன வித்தியாசம்
                                      about 12 hours ago ·   (36) ·   (3) ·  reply (0) · 
                                    •  SAROAVANAN VC  
                                      திருவாளர்கள் அனைவரும் மோடியை இப்போது விட்டால் எப்போதும் பேசமுடியாது என்கிற ரீதியில் வருதொடுக்கின்றார்கள். நல்லது திருவாளர்களே கடந்த பதினைந்து ஆண்டுகள் டில்லியை ஆண்டது மோடியா, இல்லை இந்தியாவை கடந்த ஐன்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டது மோடியா? இல்லைதானே மனசாட்சியே இல்லமால் பேசும் உங்களை நினைக்கும் போது ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகின்றது. "நொய் அரிசி கொதி தாங்காது" என்பது. மோடி ஆட்சிக்கு வந்து இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை கருப்பு பணம் இந்திய வந்துவிடவேண்டும், வறுமை தீர்ந்துவிட வேண்டும், வேலையில்லா பிரச்சனை தீர்ந்துவிட வேண்டும் . இப்போது கெஜ்ரிவால் செய்யும் ஜீஜும்ப வேலையை பார்க்கலாமா. இன்னும் ஒரு வருடத்தில் இதே வாய் கெஜ்ரிவாலை வறுத்தெடுக்கும். நல்லது திருவாளர்களே.
                                      about 13 hours ago ·   (49) ·   (43) ·  reply (3) · 
                                      • s.raja  
                                        மூன்று மாநிலங்களில். வெற்றி பெற்ற போது மோடியை ஆகா ஓகோ என்று . பாரட்டீனீர்கள் இப்போது ஒன்றும் சொல்ல கூடாதா?
                                        about 12 hours ago ·   (22) ·   (0) ·  reply (0) · 
                                        • Anbalagan  
                                          உங்க ஆட்கள் பேச்சை குறைப்பது நல்லது. அகங்காரமா பேசித்தான் 31 ஐ 3 ஆக குறைச்சிருக்காங்க. . நீங்க சொன்னது எல்லாம் டெல்லி மக்களுக்கும் தெரியும். இதுதான் பதில்!
                                          about 12 hours ago ·   (24) ·   (0) ·  reply (0) · 
                                          • samy  
                                            "வினை விதைத்தவன் வினை அறுப்பான்""..... அது தான் மோடிக்கு செய்தி... அவர் எப்படி எல்லாம் காங்கிரஸ் தலைவர்களை(அவர்கள் மிக மிதவாதிகள் என்பதால்) வருத்தி எடுத்தார்? எப்படி எல்லாம் கேவல படுத்தினார்? சரி... ஆனால் ஒன்று கேஜிர்வால் மற்றோரு மோடி தான்... இன்னும் கொஞ்சம் நாளில் கமெடி நிறைய இருக்கும்.... அவரை எல்லாம் டெல்லி மக்கள் நம்பியதை நினைத்து பார்க்கும் பொது... சிரிப்பாக தான் வருது... என்ன? மக்களை ஏமற்ற பொய் நிறைய சொல்ல வேண்டும் போல....
                                            about 12 hours ago ·   (4) ·   (66) ·  reply (0) · 
                                          • AMS  
                                            தமிழ்நாட்டில் admk ,DMK கட்சிகளுக்கு மாற்றாக ஒரு கட்சி உருவானால் நன்றாக இருக்கும்.
                                            Points
                                            985
                                            about 13 hours ago ·   (26) ·   (6) ·  reply (3) · 
                                            • sugumar  
                                              அப்படி உருவான கட்சி தான் தே மு தி கா ஆனால் போன தேர்தலில் அ தி மு கா வுடன் கூட்டு வைத்து அதன் மதிப்பை தானே கெடுத்து கொண்டு கொள்கை இல்லா கட்சி என்ற நடுநிலை வாக்காளர்களின் நன்மதிப்பை இழந்தது.
                                              about 12 hours ago ·   (18) ·   (0) ·  reply (0) · 
                                              • SAK  
                                                கேப்டன்?!?!?!?!?!
                                                about 13 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
                                                • Anbalagan  
                                                  சொல்லிகிட்டே இருந்தால் எப்படி? காலணா தேறாத கட்சிகளை களையனும்..
                                                  about 12 hours ago ·   (2) ·