Showing posts with label அஞ்சலி. Show all posts
Showing posts with label அஞ்சலி. Show all posts

Saturday, November 24, 2012

கலைஞர் உருக்கம் ,வீரபாண்டி ஆறுமுகம் மறைவு

'வீரபாண்டி ஆறுமுகம் என்ற தூணை இழந்துவிட்டோம்'': கண்ணீர் விட்டு அழுத கருணாநிதி



சென்னை: உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமான முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது கருணாநிதி கண்ணீர் விட்டு அழுதார்.


 former minister veerapandi arumugam dead
வீரபாண்டி ஆறுமுகம் மறைவுச் செய்தி கேட்டதும் கருணாநிதி உடனடியாக போரூர் மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த வீரபாண்டி ஆறுமுகம் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் வீரபாண்டி ஆறுமுகம் உடல் மீது மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், திமுக மிகப் பெரிய தூணை இழந்து விட்டது. ஒரு போர்ப் படை தளபதியை திமுக இழந்துள்ளது. அவருடன் பழகிய நாட்களை மறக்க முடியாது. என்னில் பாதி அவர். மாறன் மறைந்த அதே நாளில் தம்பி வீரபாண்டி ஆறுமுகம் மறைந்து எங்களை மீளாத் துயரில் ஆழ்த்தி விட்டார் என்றார்.


3 நாள் துக்கம்.. கொடிகள் அரை கம்பத்தில்:


அவரது மரணத்தையடுத்து 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க திமுக முடிவு செய்துள்ளது. இந்த 3 நாட்களும் கட்சிக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும், கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்யுமாறும் திமுக தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சேலம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கழக உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான வீரபாண்டி ஆறுமுகம் இன்று காலை மறைந்தார்.


அவரது மறைவினையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு கழக அமைப்புகள் அனைத்தும் கழகக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறும், கழகத்தின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.


ராமதாஸ் இரங்கல்:


வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி, திமுகவின் மூன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் உடல்நலக் குறைவால் சென்னை மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தியை கேட்டு வேதனை அடைந்தேன்.
வீரபாண்டியாரின் மறைவு திமுகவுக்கு பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் திமுகவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


தா.பாண்டியன் இரங்கல்:


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
திமுக சேலம் மாவட்டச் செயலாளராகவும், மாநிலத் தலைமைக்குழுவின் முக்கிய பொறுப்புக்களிலும், திமுக அமைச்சரவையிலும் தொடர்ந்து அமைச்சராகப் பொறுப்பேற்றுப் பணிபுரிந்து வந்த மூத்த அரசியல்வாதி வீரபாண்டி ஆறுமுகம் மறைவுச் செய்தி கேட்டு, ஆழ்ந்த கவலையைத் தெரிவிப்பதோடு, அவரை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தார்க்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.



திருமாவளவன்...


விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், திமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
வீரபாண்டியார் 6 முறை சட்டப் பேரவை உறுப்பினராகவும் சட்டமேலவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுத் திறம்பட மக்கள் பணியாற்றியவர். பல்வேறு துறைகளில் அமைச்சராக இருந்து சாதனைகள் பல புரிந்தவர். அவரை இழந்து வாடும் திராவிட இயக்கத்துக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

 
 

வீரபாண்டியார் மரணம்: சேலத்தில் அறிவிக்கப்படாத 'பந்த்'; வன்முறை-3 பஸ்கள் உடைப்பு: திமுக தொண்டர் சாவு

 
 
 
சேலம்: மூத்த திமுக தலைவர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவையடுத்து சேலத்தில் வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள், பெட்ரோல் பங்குகள், மருத்துவமனைகள் கூட மூடப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கும்ம் விடுமுறை விடப்பட்டது.




சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள் வன்முறையிலும் ஈடுபட்டனர். 3 அரசுப் பஸ்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கண்ணாடிகள் உடைந்தன. சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை, சூரமங்கலம் ஆகிய இடங்களில் 3 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.




சேலம் மாநகரத்தில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள், பெட்ரோல் பங்குகள், மருத்துவமனைகள் கூட மூடப்பட்டுவிட்டன. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. இதனால் சேலம் நகரமே வெறிச்சோடிப் போனது.




இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக திருப்பூர் எஸ்.பி, நாமக்கல் எஸ்.பி ஆகியோரும் சேலம் வந்துள்ளனர். இவர்களுடன் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான போலீஸார் சேலத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.


இன்று மாலை 6 மணி முதல் சேலம் மாவட்டத்தில் கிராமப் புறங்களுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்படுகின்றன. மேலும் சேலத்தில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்கள் அனைத்தும் இன்று மாலை 6 மணி முதல் நாலைந்து பேருந்துகளாக சேர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படவுள்ளன.




வீரபாண்டியார் மறைவை கேள்விப்பட்ட திமுக தொண்டர் மரணம்:




இதற்கிடையே வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவைக் கேள்விப்பட்ட சேலத்தைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் மாரடைப்பால் இறந்தார்.




எடப்பாடி அருகே உள்ள கவுண்டம்பட்டியைச் சேர்ந்த காமராஜ் (45) டீக்கடை வைத்து நடத்தி வந்தார். தீவிர திமுககாரரான இவர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தீவிர ஆதரவாளர்.


வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவைக் கேள்விப்பட்டதும் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மயங்கி விழுந்த அவர் அங்கேயே உயிரிழந்தார்.


  நன்றி - தட்ஸ் தமிழ்

Tuesday, June 05, 2012

காலச்சுவடு ஆசிரியரின் நண்பர் மரணம் - சில புரிதல்கள்



எல்லா மனிதரின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத  துக்க பக்கம் மரணம்.. அது நமக்கான விடுதலைப்பத்திரமும் கூட ..இயற்கையை பல வழிகளில் வஞ்சித்த, வென்ற மனிதன் மரணத்தை மட்டும் வெல்லவே முடியவில்லை.. ஒரு வேளை மரணத்தை மனிதன் வென்று விட்டால் அது இயற்கைக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கக்கூடும்.. வந்தவர்கள் எல்லாம் இங்கேயே தங்கி விட்டால், தேங்கி விட்டால் பூமியில் ஏது இடம்?

இருந்தாலும் நமக்கு நெருக்கமானவர்கள் மரணம் நம்மை அதிகம் பாதிக்கிறது.. தினசரி நாளிதழ்களில் யாரோ ஒருவரின் மரணச்செய்தியை நாம் படிக்க நேரிடும்போது, டி வியில் பார்க்க நேரும்போது நம்மை அது அதிகம் பாதிப்பதில்லை.. அடிக்கடி சந்தித்தோ, அல்லது நெருக்கமான பழக்கத்திலோ இருப்பவர்கள் இறக்கும்போதுதான் நம்மை மரணம் பாதிக்கிறது.. மரண பயமும் வருகிறது ..

சென்னிமலையில் தி முக  ஒன்றியச்செயலாளர் திரு மெய்யப்பன்.. அவரது தம்பிகள் அங்குராஜ், கே எஸ் சண்முக சுந்தரம் இருவரும் என் பால்ய கால நண்பர்கள்.. அவர்களது சித்தப்பா பையன் அய்யப்பன்.. இவரை பற்றி நான் எனது பத்திரிக்கை உலக அனுபவங்களில் சொல்லி இருக்கிறேன்.. ஆனந்த விகடனில் சொல்வனம் பகுதியில் இவரது 3 கவிதைகள் வந்துள்ளன.. அது போக பால்ய காலத்தில் தென்றல் எனும் கையெழுத்துப்பத்திரிக்கை நடத்தி வந்த போது எனக்கு உறுதுணையாக இருந்தார்..

இவரது அண்ணன் சென்னிமலை ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள அங்காள பரமேஸ்வரி டெக்ஸ்டைல்ஸ் இல் மேனேஜர்..இவரது அடுத்த அண்ணன் பெயர் சம்பத்.. இவர் தான் நாம் இப்போ பார்க்கப்போற சம்பவ நாயகன்..

ஆள் ஒல்லியா, உயரமா இருப்பார்.. சின்ன வயசுல இருந்தே வாழ்க்கையில் எந்தப்பிடிப்பும் இல்லாதவராக சித்தன் போக்கு சிவன் போக்கு என  ஏனோ தானோ வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்.. குடிப்பழக்கத்துக்கு அடிமை ஆனார்..

தினமும் சரக்கு இல்லாமல் தூங்கவே மாட்டார்.. அய்யப்பன் குடும்பத்தில் அனைவரும் எனக்கு அறிமுகம், பழக்கம்.. ஆனால் இவர் மட்டும் அதிக டச் இல்லாமல் இருந்தார்..காரணம் இவர் அதிகம் வீட்டில் இருக்க மாட்டார்..

தினமும் மாலை  வேளைகளில், குறிப்பாக சனி, ஞாயிறுகளில் இவர் சென்னிமலை காமாட்சி அம்மன் கோவில் திண்ணையில் அல்லது ஈஸ்வரன் கோவில் அருகே அமர்ந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருப்பார்..  காலச்சுவடு ஆசிரியர் கதிர்வேலு அவர்களின்  நெருங்கிய நண்பர்..

சமீபத்தில் தான் அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார்.. 2 மாசம் இருக்கும்..

சம்பவம் நடந்த அன்னைக்கு 4 நாட்கள் முன்.....

சம்பத் சாலையில் நடந்து போய்ட்டு இருந்திருக்கார்... திடீர்னு வலது கால் மரத்துப்போன மாதிரி ஒரு உணர்வு.. சாலை அருகே உள்ள விளக்கு கம்பத்தில் கை வைத்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திருக்கார்.. திடீர்னு அந்த மரத்துப்போன உணர்வு காலில் இருந்து இடுப்பு கை வரை பரவி வலது பாகம் முழுக்கவே மரத்து விட்டது..

அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அருகாமையில் உள்ள ஹாஸ்பிடல் சென்றிருக்கிறார்.செல் ஃபோன் கையில் இருந்தது ரொம்ப உபயோகமாக இருப்பது இது போன்ற ஆபத்துத்தருணங்களில் தான்.. வீட்டுக்கு ஃபோன் பண்ணி தகவல் சொல்லி விட்டார்..

டெஸ்ட் செய்த டாக்டர் மூளைக்கு செல்லும் சில நரம்புகள் ஜாம் ஆகி விட்டதாகவும்,இனி நாம் செய்ய ஏதும் இல்லையென்றும் கூறி விட்டார்.. எஸ்.. ஹி ஈஸ் ஹவுண்ட்டிங்க் ஹிஸ் டேஸ்..
இவருக்கு வயது 45.. ஆனால் ஆள் பார்க்க 32 வயசு போல் தான் இருப்பார்.. திருமணம் ஆகாதவர்.. பொறுப்பில்லாத மனிதராக இருந்தபோதும் தான் திருமணம் செய்தால் தன்னை நம்பி வந்த பெண்ணை கண் கலங்காமல் வைத்து காப்பாற்ற முடியாது என்ற உண்மை அவரது மனசில் இருந்திருக்க வேண்டும்.. எனவே தான் திருமணம் வேண்டாம் என்று சொல்லி விட்டார் போல.. காதல் தோல்வி ஏதும் இல்லை..

குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு என்ன ஒரு நிம்மதி என்றால் மேரேஜ் ஆகி ஒரு குழந்தை இருந்திருந்தா இன்னும் சிரமம்.. அந்த குடும்பமும் நிர்க்கதி ஆகி இருக்கும் என்ற எண்ணமே..

2 நாள் சுய நினைவில்..  அப்போதும் அவரால் பேச முடியவில்லை.. கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வந்திருக்கிறது.. அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி, தம்பி அனைவரையும் கடைசி பார்வை பார்த்திருக்கிறார்.. அவருக்கு தன் இறுதி நாட்களில் இருக்கிறோம் என்பது தெரிந்து விட்டது..

இந்த இறப்பில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

1. குடிப்பழக்கம், புகைப்பழக்கம் அதிகம் உள்ளவர்கள் மாதம் ஒரு முறை ஹாஸ்பிடல் சென்று கம்ப்ளீட் பாடி செக்கப் செய்து கொள்வது அவசியம்..

2.  மன நிலை பாதிக்கப்பட்டவர்கள்,சராசரி வாழ்க்கை வாழாமல் வித்தியாசமாக நடவடிக்கை தென் பட்டால் அவரை தனிமையில் விடாமல் இருத்தல்..

3. பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் 18 வயசோடு முடிந்து விடக்கூடாது.. காலம் உள்ள காலம் வரை வாரிசுகளுடனான  அருகாமை, அக்கறை இருக்க வேண்டும்..

4. தன்  மகன் இப்படி ஆகிட்டான், இவன் இப்படிதான்.. என தண்ணி தெளிச்சு விட்டுட்டு மத்த வேலையைப்பார்ப்போம் என்ற மனப்பான்மை வரக்கூடாது..

5.ஒரு கலயாணம் காட்சி என்றால் யார் யாரை கூப்பிடனும் என்று ஆற அமர்ந்து லிஸ்ட் போடற மாதிரி 40 வயது கடந்தவர்கள் தங்கள் பால்ய கால நண்பர்கள், பள்ளி, கல்லூரி ,அலுவலக நண்பர்கள் இவர்கள் முகவரி அல்லது அட்லீஸ்ட் தொலை பேசி எண்ணையாவது ஒரு டைரியில் அல்லது ஒரு நோட்டில் எழுதி வைக்க வேண்டும்.. மேலோட்டமான பார்வையில் இது குரூரமாக தோன்றினாலும் என் அனுபவத்தில் நான் கண்ட பல மரணங்களில் கடைசி சமயங்களில் பலருக்கு தகவல்கள் சொல்லப்படாமலேயே இருந்திருக்கின்றன.. சொல்லாத காதல் எவ்வளவு துயரமோ அதை விட இரு மடங்கு துயரமனானது சம்பந்தப்பட்டவர்களுக்கு சொல்லப்படாத மரண தகவல்.

6. இன்சூரன்ஸ் பாலிஸி.. பெரும்பாலோர் இது பற்றி அக்கறை கொள்வதே இல்லை.. நாமே போயிடறோம்.. இனி என்ன ஆகப்போகுது? நமக்குப்பின்னால வரப்போற தொகைக்காக நாம ஏன் கஷ்டப்பட்டு , மெனக்கெட்டு பிரீமியம் கட்டனும் என்ற எண்ணம் மறையனும்.. சம்பத் பாலிஸி ஏதும் கட்டவில்லை.. சப்போஸ் கட்டி இருந்தால் வயசான காலத்தில் அவர் பெற்றோருக்கு உதவியாக இருந்திருக்கும்..

7. திருமணங்களில் மொய் வைப்பது தமிழனின்  பாரம்பரிய பழக்கமாக இருந்து வந்தாலும் நான் வியப்பது மரணம் நடந்த வீடுகளில் ஏன் அந்தப்பழக்கம் வரவில்லை என்பதே.. வசதியான, நடுத்தரக்குடும்பங்களில் பிரச்சனை இல்லை, சம்பத் குடும்பத்திலும் பணப்பிரச்சனை இல்லை, ஆனால் பொதுவாக நான் யோசிப்பது ஒரு ஏழையின் வீட்டில் குடும்பத்தலைவர், அல்லது முக்கியமான நபர் இறந்து விட்டால் அந்தக்குடும்பத்துக்கு மாபெரும் இழப்புத்தானே.. நாம என்ன பண்றோம்.. துக்க வீட்டுக்குப்போறோம்.. கையை கொடுக்கிறோம், துக்கம் விசாரிக்கறோம்.. வந்துடறோம்.. அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யனும் என்று நினைப்பதே இல்லை.. ஏழை வீட்டில் மரணம் நிகழ்ந்தால் நம்மாலான பண உதவி செய்ய வேண்டும்..

8. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை டீன் ஏஜ் வரை கவனமாக கண்காணித்து வர வேண்டும்.. 18 வயசுக்குள் தான் பெரும்பாலான கெட்ட பழக்கங்களை மனிதன் கற்றுக்கொள்கிறான்.. 19 வயசில் அவனுக்கு ஒரு பக்குவம் வந்து விடும்..  பலரை விசாரித்ததில் தெரிய வரும் தகவல் அவர்கள் ஏதாவது ஒரு கெட்ட பழக்கத்தை கற்றுக்கொண்டது அவர்கள் 15 டூ 18 வயசில் தான்.. அது மாற்ற முடியாத பழக்கமாக மாறி அவனை சிதைக்கிறது..

9. இருக்கும் வரை ஜாலியாக இருப்போம், எல்லாத்தையும் அனுபவிப்போம் என்ற எண்ணம் தான் பெரும்பாலான தவறுகளுக்குக்காரணம்.. இருக்கும் வரை ஆரோக்யமாக இருப்போம் என எண்ணுவதில்லை... யோகா, மூச்சுப்பயிற்சி என தினமும் 30 நிமிடங்களாவது ஒதுக்க வேண்டும்..

10 , கடைசியாக நான் சொல்லப்போவது பைத்தியகாரத்தனமாகவோ , அல்லது தேவையற்றதாக தோணும்.. இருந்தாலும் சொல்லிடறேன்... நாம வாரம் ஒரு முறை ரிலாக்ஸ்ஸாக இருக்க, டைம் பாஸ் பண்ண  சினிமா, கோயில், பீச், பார்க் எங்காவது சென்று மனதை ரிலாக்ஸ் பண்ணிக்கறோம்.. பொழுது போக்கு - எண்ட்டர்டெயின்மென்ட்.. அந்த மாதிரி மாதம் ஒரு முறை அரசு மருத்தவமனைக்கு ஒரு விசிட் அடிக்கனும்.. எத்தனை பேர் .. எத்தனை நோய்கள், எத்தனை அஜாக்கரதைகள், எத்தனை விபத்துகள் என்பதை கண்கூடாக கண்டால் நமக்கு வாழ்வின் அர்த்தம், மதிப்பு புரியும்.. அதே போல் தெரிந்தவர், உறவினர் மரணங்களுக்கு  செல்கையில் சுடுகாடு வரை போய் வர வேண்டும்.. அந்த குடும்பத்துக்கும் ஒரு ஆறுதல், நமக்கும் வாழ்வின் நிலையாமை தத்துவத்தை நமக்கு நாமே உணர நல்ல வாய்ப்பு

சம்பத்தின் ஆத்மா சாந்தி அடையட்டும்.. நான் மரணத்தகவல் சொன்னதும் பொள்ளாச்சியில் தன் குடும்பத்துடன் சுற்றுலாவில் இருந்தபோதும் உடண்டியாக அதை  கேன்சல் செய்து சென்னிமலை வந்து துக்க நிகழ்வில் பங்கு கொண்ட  காலச்சுவடு ஆசிரியர்க்கு என் நன்றிகள்..

 சம்பத்தின் புகைப்படம்  போட வேண்டாம் என அவர் குடும்பத்தில் கூறி விட்டனர்.. அவர் இன்னும் அவர்களோடு வாழ்வதாக  நம்புவதால்...

Monday, June 04, 2012

எழுத்தாளர் சோலை - சில நினைவுகள்

ளிமையான எழுத்து, ஆழ்ந்த அனுபவம், கம்யூனிஸ சிந்தனை, தெளிவான பார்வை, வெகுஜன அக்கறை, நிகழ்காலப் பரபரப்பு  - இந்தக் கலவைதான் எழுத்தாளர் சோலை. பத்திரிகை​யாளராக, அரசியல் விமர்சகராக அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேல் பணியாற்றிய சோலை, கடந்த 29-ம் தேதி காற்றில் கரைந்து போனார். அவரைப் பற்றிய நினைவுகள்...

1. நல்லகண்ணு (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி): சோமசுந்தரம் என்ற சோலை அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே பூமி தான இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, நிலம் இல்லாதவர்களுக்காகப் போராடினார். பூமி தானப் பிரசாரத்துக்குப் போன தோழர் ஜீவானந்தம், சோலை அவர்களின் எழுத்து ஆற்றலைக் கண்டு 'ஜனசக்தி’யில் பணியாற்ற 1959-ல் அவரைச் சென்னைக்கு அழைத்து வந்தார். கட்சியில் பிளவு ஏற் பட்டபோது, மார்க்சிஸ்ட் கட்சிக்குச் சென்றார். பிறகு, எம்.ஜி.ஆரின் அரசியல் ஆலோசகராக செயல்பட்டார். சோவியத் யூனியன் சென்று வந்ததும் அவர் எழுதிய, 'சிவப்பு ரோஜா’ பலராலும் பாராட்டப்பட்டது.
முற்போக்கு எண்ணம் கொண்ட சிறந்த பத்திரிகை​யாளர். எளிய தமிழில், அழுத்தமான கிராமப்புற வார்த்தைகளுடன் அவர் வடிக்கும் கட்டுரைகள், அனைத்து மக்களையும் வெகுவாகக் கவர்ந்தவை. மக்களின் அடிப்படைப் பிரச்னைகளை, விருப்பு வெறுப்பு இல்லாமல் ஆழ்ந்து யோசித்து எழுதும் வல்லமை படைத்தவர். எனக்கும் அவருக்கும் மிக நெருங்கிய பழக்கம் உண்டு. சில விஷயங்களில் மாற்றுக் கருத்து இருந்தாலும், அதை நட்புடன் விமர்சித்துக் கொள்வோம். நீண்ட அரசியல் அனுபவம்​கொண்ட ஒரு பொக்கிஷத்தை இன்றைய தலைமுறை இழந்துவிட்டது. அவரது வாழ்க்கை அனைத்து பத்திரிகை​யாளர்களுக்கும் பாடம்.



2. ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி): மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான போது, கட்சித் தலைமையின் கட்டளையை ஏற்று 'தீக்கதிர்’ இதழைத் தொடங்கி நடத்திய நால்வரில் முக்கி யமானவர் சோலை. அடுத்தடுத்து அரசியல் ரீதியாக அவர் பல மாறுபட்ட தளங்களில் இயங்கினாலும், மிகச்சிறந்த பத்திரிகையாளர். தீக்கதிர் இதழின் பொன்விழா ஆண்டு, வரும் ஜூன் 29-ம் தேதி தொடங்குகிறது. அந்த விழாவுக்கு நீங்கள் நிச்சயம் வர வேண்டும் என்று நான் சொன்னபோது, அழைப்பை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார். அவர் தொடங்கிய பத்திரிகையின் பொன்விழாவைக் காண்பதற்கு முன்பே இயற்கை அவரை அழைத்துக்கொண்டு விட்டது. தீக்கதிர் இதழின் பொன் விழாவுக்கு அவர் ஒரு சிறப்புக் கட்டுரை தீட்டி வைத்திருப்பதாகச் சொன்னார். அதைத் தீக்கதிர் இதழில் பிரசுரிப்போம். இதுதான் அந்த எளியவருக்கு நாங்கள் செலுத்தும் நன்றி கலந்த அஞ்சலி.



3. துரை கருணா (பத்திரிகையாளர்): எம்.ஜி.ஆர் நடத்திய, 'அண்ணா’ பத்திரிகையின் ஆசிரிய​ராக சோலை அவர்கள் இருந்தபோது, நான்கு ஆண்டு காலம் அங்கு நான் நிருபராகப் பணியாற்றி​னேன். எம்.ஜி.ஆர். தனது அரசியல் வாரிசாக ஜெயலலிதாவை முன்னிறுத்​தியபோது, சோலை அவர்களைத்தான் ஜெயல​லிதாவுக்கும் அரசியல் ஆலோசகராக நியமித்தார். உட்கட்சிப் பிரச்னைகளைத் தீர்த்து​வைப்பதில் சோலை வல்லவர். ஒரு முறை திருநெல்வேலி தொகு​திக்கு இடைத்தேர்தல் வந்தபோது, கருப்பசாமி பாண்டியனை அழைத்த எம்.ஜி.ஆர், 'நீதான் வேட்பாளர்... போய் வேலையைத் தொடங்கு’ என்று சொல்லி விட்டார். தேர்தல் நேரத்தில் ஆர்.எம்.வீரப்பனின் எம்.எல்.சி. பதவி போய் விட்டது. 


எனவே, ஆர்.எம்.வீரப்பனை எம்.எல்.ஏ. ஆக்க வேண்டிய கட்டாயம். அதனால் வேறுவழி இல்லாமல் ஆர்.எம்.வீரப்பனை வேட் பாளராக எம்.ஜி.ஆர் அறிவிக்கவே, கருப்ப​சாமி பாண்டியன் கோ​பத்தில் தலைமறைவு ஆகிவிட்டார்.  சோலையை  அழைத்த எம்.ஜி.ஆர், 'கானாவை சமாதானப்படுத்துங்கள்’ என்றார். அடுத்த சில நாட்களில், 'கருப்பசாமி பாண்டியன்தான் எனது முழுத்தேர்தல் பயணத்தையும் பார்த்துக்​கொள்வார்’ என்று, நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்தார் எம்.ஜி.ஆர். இதைப்பார்த்து கலங்கிப் போனார் கருப்ப​சாமிப் பாண்டியன். 


இதுதான் சோலை அய்யாவின் திறமை. எம்.ஜி.ஆர். - இந்திரா காந்தி ஆகியோருக்கு இடையே அரசியல் ரீதியான நெருடல் வந்தபோது, டெல்லி சென்று இந்திராவின் பிரதமச் செயலாளரான பி.சி.அலெக்சாண்டரிடம் பேசி, இருவருக்குள் இருந்த இடைவெளியைக் குறைத்தவர் சோலைதான். எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின், அரசியல் தொடர்புகளைக் குறைத்துக்கொண்டு எழுத்துப் பணிகளை மட்டும்தான் கவனித்தார். அவரது மறைவு பத்திரிகையாளர்களுக்கு மாபெரும் இழப்பு.


4. இரா.ஜவஹர் (விமர்சகர்): அனைத்துத் தலைவர்களையும், 'அண்ணே... அண்ணே...’ என்று அழைத்து வந்த மூத்த பத்திரிகையாளர் சோலை, எனக்கு மட்டும் 'சோலை அண்ணன்’.  என் குருநாதர். 1977-ல், 'மக்கள் செய்தி’ நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பை, ஆசிரியர் சோலை எனக்கு அளித்தார். அதுதான் பத்திரிகைத் துறையில் எனது முதல் பணி. ஒரு நாளிதழ் ஆசிரியராக அவர் பணியாற்றும் பாங்கு, இப்போது நினைத்துப் பார்த்தாலும் வியக்கவைக்கும்.


செய்திகளைத் தேர்வு செய்வது, நிருபர்களுக்குப் பணி ஒதுக்குவது, தலையங்கம், கட்டுரைகள் எழுதுவது, தொலைபேசியில் வரும் செய்திகளை மின்னல் வேகத்தில் எழுதி அச்சுக் கோக்க உடனுக்குடன் கொடுப்பது, தேவையானால் மெய்ப்பு (புரூஃப்) பார்ப்பது, இதழ் விற்பனை நிலவரத்தைக் கண்காணிப்பது... எதைத்தான் செய்யவில்லை அந்த மனிதர்! ஆனால், அனைத்தையும் ஆர்ப்பாட்டமே இல்லாமல் செய்தார்.
 பள்ளி மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை மேம்படுத்தி, சத்துணவுத் திட்டமாகச் செயல்படுத்தினார் எம்.ஜி.ஆர். இது ஐ.நா. சபை வரை பேசப்பட்டது. இந்த யோசனையை எம்.ஜி.ஆருக்கு அளித்தவர் சோலைதான். இது அப்போதே பிரபல வார இதழில், 'மாங்குயில் கூவிடும் இடத்தைப் பெயராகக்கொண்டவர்தான் இந்த யோசனையை எம்.ஜி.ஆருக்கு அளித்தார்’ என்று எழுதப்பட்டு இருந்தது. இத்தகைய திடீர் யோசனைகள் அவருக்கு  பிரத்யேகமானவை. இறந்தாலும் எண்ணற்ற பத்திரிகையாளர்களுக்கு எப்போதும் வழிகாட்டியாகத் தொடர்வார் அண்ணன்!''     

நன்றி - ஜூ வி

Friday, May 11, 2012

கலகலப்பு - சினிமா விமர்சனம்

http://5eli.com/Song/wp-content/uploads/2012/04/Kalakalappu-@-Masala-Cafe.jpg
தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் படங்கள் என்னென்னெ? என ஒரு லிஸ்ட் எடுத்தால் உள்ளத்தை அள்ளித்தா-வுக்கு ஒரு இடம் உண்டு.. அந்தப்பட டைரக்டர் சுந்தர் சி  டைரக்ட் செஞ்ச 25 வது படம் என்ற மகுடத்தோட களம் இறங்கி இருக்கு இந்த கலகலப்பு.. இதுல ஒரு சந்தோஷமான விஷயம் படத்துக்கு வசன உதவி சக பதிவரும், சிறந்த சினிமா விமர்சகருமான கேபிள் சங்கர்..


கும்பகோணத்துல பாரம்பரியம் மிக்க ஹோட்டல் நடத்தி வரும் விமல் போட்டியின் காரணமா தொழில் நொடிச்சதால அடிக்கடி கடன் வாங்கி கடனுக்கு நடத்திட்டு இருக்கார்.. ஹெல்த் இன்ஸ்பெக்டர் அஞ்சலி 2 மாசம் டைம் கொடுத்து அதுக்குள்ள கடையை நீட் பண்ணலைன்னா  சீல் வெச்சுடுவேன்னு மிரட்றாங்க.. விமல் தன் தாத்தா உதவியோட இயற்கை உணவு வகைகள், பாரம்பரியம் மிக்க சமையல் வகைகள் செஞ்சு ஹோட்டலையும் பிக்கப் பண்ணி அஞ்சலியையும் கரெக்ட் பண்ணிடறார்.. 

 விமலோட சகோ சிவா ஜெயில்ல இருந்து வந்து  ஓவியாவை கரெக்ட் பண்றார்..ஓவியா அதே மசாலா கஃபேல ஒர்க்கிங்க்.. இடைவேளைக்கு அப்புரம் யாரடி நீ மோஹினி படத்துல வர்ற மாதிரி கதை டிராக் மாறுது.. அதாவது அஞ்சலியோட கிராமத்துக்கு கதை ஷிஃப்ட் ஆகுது.. அங்கே சந்தானம் முறை மாமன்... அவர் கூட அஞ்சலிக்கு மேரேஜ்..  அங்கே வந்து விமல் எப்படி காமெடி கலாட்டா பண்ணி கை பிடிக்கறார் என்பதே கதை.. 



http://img1.dinamalar.com/cini/ShootingImages/15170280652.jpg

ஊடால இன்னொரு கிளைக்கதை.. வில்லன் கேனத்தனமா அவன் கிட்டே இருக்கற  கோடிக்கணக்கான மதிப்புள்ள  வைரக்கற்களை அவன் அடியாள் கிட்டே கொடுத்து ஒரு இடத்துல தங்க வைக்கறான்.. அது  பல கை மாறி  விமல் கிட்டே வருது.. இப்போ விமலை துரத்தி அந்த வில்லன் கும்பல் கிளம்புது..  தொடர்ந்து நடக்கும் காமெடி கலாட்டாக்கள் தான் கதை.. 


 படத்துல விமல் தான் மெயின் ஹீரோ.. ஆள் பம்பறது... காமெடி பண்றது எல்லாமே செம இயல்பு.. தேவை இல்லாம பில்டப் பண்றது, ஓவர் ஆக்டிங்க் எல்லாம் கிடயாது, நீட்டான நடிப்பு.. 

தமிழ் படம் புகழ் சிவா  செகண்ட் ஹீரோன்னாலும் அவருக்குன்னு ஒரு ஃபேன்ஸ் கிளாப்ஸ் இருக்குப்பா... டைமிங்க் காமெடி, மொக்கை காமெடி, ஸ்பூஃப் காமெடின்னு கலந்து கட்டி அடிக்கிறார்... ஆனா அவர் வசனம் பேசறப்ப அவர் கிட்டே ஒரு ஓவர் கான்ஃபிடன்ஸும், எல்லாரையும் செகண்ட் பை செகண்ட் கலாய்க்கனும்கற வெறி தெரியறது.. கொஞ்சம் அடக்கி வாசிக்கனும்..

http://4.bp.blogspot.com/-POkZpnXcjHg/T5zfnDJ9gbI/AAAAAAAAdLg/NtmWiNEa1no/s1600/Actress-Ooviya-hot-Photos%2B%252823%2529-724383.jpg

சந்தானம் இடைவேளைக்குப்பிறகுதான். வர்றார்ங்கறது முதல் ஏமாற்றம்னா  ஓக்கே ஓக்கே அளவுக்கு  பிரமாதமான டைமிங்க் காமெடி இல்லைங்கறது  2 வது ஏமாற்றம்.. ( பொதுவா ஒரு படைப்பாளியும் சரி  கலைஞனும் சரி ஒரு மெகா ஹிட் கொடுத்துட்டா அது அவங்களூக்கு எதிராவே திரும்பிடும்.. அடுத்து வரும் ஒவ்வொரு படைப்பையும் அந்த மெகா ஹிட்டை  கம்பேர் பண்ணியே பேசுவாங்க.. )

ஹீரோயின் அஞ்சலி மயில் மாதிரி இருக்கார்.. ஸ்ருதி கூட தேவலை அவரை விட மிக மோசமான குரல்,,.  டப்பிங்கா? ஒரிஜினல் வாய்ஸா தெரியலை.. 99% அஞ்சலியோட ரியல் வாய்ஸ் ஸாகத்தான்  இருக்கும்.. படு மோசம்.. ஆனா ஆள் கும்முன்னு தான் இருக்கார்...  அவர் கிளாமர் காட்டறப்ப  தரை டிக்கெட் ரேஞ்ச்க்கு இறங்கி காட்டறார்.. லோ ஹிப் சீன்களில் எவ்ளவ் நாசூக்ககாக, கண்ணியமாக கேமரா ஆங்கிள்ல காட்டனும், எந்த மாதிரி இருந்தா டீசண்ட்டா ரசிப்பாங்க  என்பதெல்லாம் சிம்ரன், பூமிகா படங்களை பார்த்து கத்துக்கனும்..  ஆனாலும் அஞ்சலி வந்த வரை அலுக்கவே இல்லை.. 

 ஓவியா செகண்ட் ஹீரோயின்..  கேரளா ரிட்டர்ன் ஓமனாக்குட்டி மாதிரி ஃபிகர் பாவாடை சட்டையோட வலம் வருது.. எந்த ஊர்ல 27 வயசுப்பொண்ணு இப்படி காஸ்ட்யூம்ல வருதோ? எங்க ஏரியாப்பக்கம் எல்லாம் 15 வயசு ஆனாலே தாவணி போடச்சொல்லிடுவாங்க.. இவர் காதல் வயப்படுவது எல்லாம் ரொம்ப செயற்கை.. ஆனா இது லவ் ஸ்டோரி அல்ல,, காமெடி படம் என்பதால் அந்த மைனஸ் எல்லாம் பெரிதாக தெரியாது.. 


படத்தின் பெரிய பிளஸ் யோசிக்க வைக்காத காமெடி பேஸ்டு ஸ்க்ரீன்ப்ளே தான்.. பாடல்கள் 3 ஓக்கே ரகம்..  



http://www.koodal.com/cinema/gallery/movies/kalakalappu/kalakalappu_6_427201220428123.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. அஞ்சலி, ஓவியா இருவரையும் வைத்து கிளாமரான ஸ்டில் எடுத்து மீடியாவில் பரப்பி படத்துக்கு நல்ல ஓப்பனிங்க், எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது

2.  கதைக்கோ, திரைக்கதைக்கோ தேவைப்படலைன்னாலும் 2 ஹீரோயின்ஸையும் அடிக்கடி குளிக்க வைத்து, ஒரு பாட்டுக்கு குத்தாட்ட நடிகை ரேஞ்சுக்கு கவர்ச்சி காட்ட வைத்து  வேலை வாங்கியது

3. சுமாரான கதையில் சந்தானத்தை முறைப்பையனாக வலியனா புகுத்தியது.. அவர் வரும்  காட்சிகள் ஆரவாரம்.. 

4.  ஓப்பனிங்க் சாங்கில் மயில் தோகையை பிரமாணடமாக காட்டி பாடல் காட்சியில் அழகியல் ரசனையுடன் சூட் பண்ணியது.. ( அவள் திரும்பி பார்த்து மெல்ல சிரித்தாள்.. பாட்டு)


5.  மசாலா கஃபேக்கு தேவையான பொருட்களை லிஸ்ட் போட்டு சிவா அண்ட் கோ மிட் நைட்டில் திருடும் காட்சி கலக்கல் காமெடி.. 

6. உன்னைப்பற்றி உன்னிடமே எப்படிச்சொல்வேன் பெண்ணே அழகிய மெலோடி பாடல் படமாக்கப்பட்ட விதம்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEG408E1z-1kRuCNRJidyWw1J3byJ54St4QJgZfxa88F7EGLZYVI2xImxrtLE5pR9K7Bo4DxxwRIsuCxpGIn2XxZjJNMjlMDbfHbgftr0ll-vTkXesPjpUnJ1N4Z8qtVWzzDXmiPIYDbwL/s0/kalavani_tamil_actress_oviya_stills_02.jpg

7.  பர்தா போட்டு திருடும் பெண்ணிடம் விமல் எனக்காக ஒரு ஹேண்ட் பேக்  திருடித்தாங்க என கெஞ்சுவதும் , அந்தப்பெண்  மாறுவேடத்தில் வந்த சிவாவாக இருப்பதும்.. செம

8.. எது வீசினாலும் அதை லபக்கும் நாய்-ன் கேரக்டரை வெச்சு 3 இடங்களில் நச்சென அமைந்த காமெடி

9. சுந்தர் சி யின் ட்ரேட் மார்க்கான உருட்டுக்கட்டை காமெடியை  இந்தப்படத்தில் வைக்காதது.. 

10.  காமெடி கிளப்பும் வசனங்கள்.. படத்தில் மொத்தம்  68 ஜோக்ஸ்.. அதில் கேபிள் சங்கர் எழுதியது 70 % என கணிக்கிறேன்.. 

11. நாளைய இயக்குநர் ல ஜட்ஜா வந்தப்போ கொடுத்த வாக்கை மதிச்சு அதன் இயக்குநர்கள் 2 பேருக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்திருப்பதும் அவர்கள் நடிப்பும் நீட்.. 

12. இளவரசுவின் கமல் கெட்டப் காமெடிகள், மனோபலா காமெடி படத்துக்கு பிளஸ்.. 

13. செம கிளாமர் சீன்ஸ் இருந்தும் படத்துக்கு யூ சர்ட்டிஃபிகேட் வாங்கியது

14. எந்தப்படமும் போட்டிக்கு இல்லாம கோடை விடுமுறையில் ரிலீஸ் செஞ்சது




http://masscinema.in/wp-content/gallery/anjali-hot-red-saree/anjali-red-hot-saree-6.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. அஞ்சலிக்கு ஓப்பனிங்கில் ஸ்லொமோஷன் பில்டப் கொடுத்துட்டு ஓவியாவை சர்வ சாதாரணமா இண்ட்ரோ கொடுப்பது ஏன்?

2. எந்த கேனயனாவது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வைரங்களை செல் ஃபோனில் வைத்து அதை அடியாளிடம் கொடுத்து அனுப்புவானா?அதுவும் அதன் முக்கியத்துவம் பற்றி ஏதும் சொல்லாமல்?

3. செல்ஃபோனை லபக்கும் அந்த டிக்கெட்  உடனே செல் ஃபோனை ஆஃப் பண்னாமல், அல்லது சிம் கார்டை தூக்கி வீசாமல் வர்ற கால்க்கு அட்டெண்ட் பண்ணி பதில் சொல்லிட்டு இருக்கே? அது அவ்லவ் கேணையா? பொதுவா ஒரு செல் ஃபோனை திருடுனா முதல் விதி சிம் கார்டை நயன் தாரா லவ்வரை கடாசற , மாதிரி, ஜெ  ஆகாத அமைச்சரை தூக்கி வீசற மாதிரி வீச வேணாமா?




http://a8.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/s320x320/523169_430409203639634_1014517917_n.jpg

4. சிவா அவர் ஃபோன்ல இருந்து..வில்லன் போலீஸ்க்கு கமிஷ்னர் மாதிரி மிமிக்ரி பண்ணி பேசறார்..  அந்த வில்லன் போலீஸ் எந்த நெம்பர்னு பார்க்காமயே கேனம் மாதிரி  கமிஷ்னர்னு நம்பிடறார்.. ஏன் ஒரு போலீஸ் ஆஃபீசர்க்கு கமிஷ்னர் நெம்பர் தெரியாதா? இத்த்னைக்கும் சிவா அந்த போலீஸ் வில்லனுக்கு ஃபிரண்ட் வேற.. 

5.  ஹெல்த் இன்ஸ்பெக்டரா வர்ற அஞ்சலி 90 % டைம் மசாலா கஃபேதான் சுத்திட்டு  இருக்கார்..  அவர்க்கு விமல் மேல காதல் வர்ற சீன் நம்பற மாதிரியே இல்லை..  ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸ்ல அவர் தகுதிக்கு மீறி 1100 ரூபாய்க்கு ஹேண்ட் பேக் வாங்கிக்குடுத்ததும் அவர்க்கு லவ் வந்துடுது.. அடங்கோ.. 

6. இடைவேளை வரை சீராக போகும் திரைக்கதை இடைவேளைக்குப்பிறகு டிராக் மாறுது.. கதையோட மெயின் பாயிண்ட் மசாலா கஃபே தானே? எதுக்கு சம்பந்தமே இல்லாம அஞ்சலி கிராமத்துக்கு போறது? சந்தானம் காமெடியை உள்ளே கொண்டு வரவா?

7. க்ளைமாக்ஸ் ரொம்ப நீளம்.. நறுக் சுருக்னு முடிச்சிருக்கலாம்.. சந்தானம் இருக்கற தெம்புல  இழு இழுனு இழுத்துட்டாங்க போல..

8.. மசலா கஃபே க்கு ஓனர்ஸ் 2 பேரு.. அப்படி இருக்கும்போது எப்படி சிவா தன்னிச்சையா  அந்த ஹோட்டலை அடமானம் வெச்சு சீட்டாடி தோக்க முடியும்?

9. ரெஜிஸ்டர் ஆஃபீஸ்ல அந்த ஹோட்டலை பதிவு பண்ணி எழுதி வாங்கிக்கும் வில்லன்  சிவா கிட்டே மட்டும் சைன் வாங்கிக்கறார்.. அது எப்படி செல்லும்?

10. வில்லனுக்கு தெரியாம வைரத்தை ஒளிச்சு எடுத்துட்டு வந்து டீல் பேசறவங்க வில்லன் இன்ஸ்பெக்டரா இருக்கற போலீஸ் ஸ்டேஷன்லயே மேல் பாக்கெட்லயே வைரத்தை வெச்சுக்கிட்டு டீல் பேசுவாங்களா?

11. ஹெல்த் இன்ஸ்பெக்டரா வர்ற அஞ்சலி என்னமோ பஸ் ஸ்டேண்ட்ல நிக்கற  கனகாம்பரபூ  தலைல வெச்சிருக்கற  டிக்கெட் மாதிரி நடந்துக்குது..



http://www.bestactress.info/wp-content/uploads/2011/03/tamil-actress-anjali-hot-navel1-300x207.jpg


ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 41 ( ஏன்னா செம காமெடியான ஓக்கே ஓக்கேவுக்கே 43 தான்)

 குமுதம் எதிர்பாப்பு ரேங்க் - ஓக்கே 

 சி.பி கமெண்ட் - ஜாலியா போய் சிரிக்கனும்னு நினைக்கறவங்க, அஞ்சலி, ஓவியா கிளாமர் சீன் பார்க்க நினைக்கறவங்க, சந்தானம் ரசிகர்கள் பார்க்கலாம்.. படம் பிரமாதம் எல்லாம் இல்லை.. மொக்கையும் இல்லை.. டைம் பாஸ் காமெடி

 ஈரோடு ஆனூரில் பார்த்தேன் ( இது ஒரு கில்மா படம் அல்ல.. )



http://www.thamilan.lk/news_images/49202893masalacafe3.jpg

Thursday, April 05, 2012

குமுதம் - கிருஷ்ணா டாவின்ஸி மரணம் -பாலை இயக்குநர் பகிரும் சில நினைவுகள்

தமிழ் பத்திரிகை உலகில் நன்கு அறியப்பட்ட பிரபல தமிழ்ப் பத்திரிகையாளர் கிருஷ்ணா டாவின்ஸிகாலமாகிவிட்டதாகச் சென்னைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


லேப்டோ பைரோஸிஸ் எனப்படும் எலிக்காய்ச்சலால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கிருஷ்ணா நேற்று மாலை 5 மணி அளவில் மரணமடைந்ததாகத் தெரிய வருகிறது.


அவரது உடல் போரூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக  வைக்கப்பட்டுள்ளது. இன்று பகல் 12 மணி அளவில் அவரது இறுதி ஊர்வலம் நடைபெறவுள்ளதாக மேலும் அறியப்படுகிறது.


கிருஷ்ணா டாவின்ஸிக்கு அஞ்ச  ஆளுமையான தனிப்பட்ட சித்திரத்தை பிரத்தியேகமான நினைவுக் கட்டுரையாக நமக்குத் தருகிறார், அவருடன் குமுதம் வார இதழில் பணிபுரிந்த பாலை படத்தின் இயக்குனர் ம.செந்தமிழன்.


கிருஷ்ணா டாவின்சியை அறிவீர்களா?


கிருஷ்ணா டாவின்சி என்ற பெயரை உங்களில் பலர் அறிந்திருக்கலாம். குமுதம் எனும் வணிக இதழின் மிகச் சில அறிவுசார் பக்கங்களையும், பல்வேறு வணிக நோக்குப் பக்கங்களையும் நிரப்பிய பெயர் அது. கின்ஸி என்ற புனைப் பெயரில் வெளியான அரசியல் கேலிச் சித்திர வசனங்களின் சொந்தக்காரரும் கிருஷ்ணா டாவின்சியே.


2001 ஆம் ஆண்டு, ஈழத்தில் தலைவர் பிரபாகரன் சர்வதேசச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, குமுதம் சார்பில் சென்றவர். புலிகளுக்கு எதிரான மனநிலையில் இருந்த கிருஷ்ணா, ஆச்சர்யப்படத்தக்க விதத்தில், புலிகள் ஆதரவாளராக மாறினார். நான் குமுதம் இதழில் செய்தியாளராக இணைந்தபோது எனக்கான ஆலமரம் கிருஷ்ணா. சிநேகாவின் அழகு பற்றியும் க்யூபாவின் பொருளாதாரம் பற்றியும் ஒரே கோல்ட் பில்டர் கிங்சை இழுத்தவாறு அவரால் பேச முடியும்.


நான் பணியாற்றிய காலத்தில், குமுதம் இதழ் எடிட்டோரியலில் அவ்வப்போது ஏற்பட்ட குழுக்களில் சில நல்லவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். மீதமிருந்த நல்லவர்களில் கிருஷ்ணா ஒருவர். யாரும் எந்தக் குழுவினருடனும் அடையாளப்பட அஞ்சிய நாட்கள் அவை. தேநீர் குடிக்க யார் யாருடன் போகிறார்களோ, அவர்கள் ஒரு குழு என காங்கிரசுக்குச் சற்றும் சளைக்காமல் வம்பு பேசிய காலம்.


‘நான் கிருஷ்ணா சார் ஆள்’ என நான் மார்தட்டுவேன். இப்போதும் குமுதம் இதழில் பணியாற்றும் பலருக்கு இது தெரியும். அவருடைய ’ஆளாக’ இருப்பதில் எனக்கு மட்டில்லா மகிழ்ச்சி. தத்துவம், கோட்பாடு, இதழியல், நடைமுறை அரசியல், பெண்கள், பாலியல், பெண்ணியம், குடும்பம் இன்னும் எவ்வளவோ பேசும் வல்லமை அவருக்கு உண்டு. எனக்கு இதுவே போதும்

.
குமுதம்.காம் இணையத்தைக் கட்டி எழுப்பிய சிலரில் கிருஷ்ணா குழுவினராகிய நாங்களும் உண்டு. அதிகாலை 4 மணி வரை நானும் ஆனந்தும் கிருஷ்ணாவுடன் இணையதளத்துடன் முண்டிக் கிடப்போம். விஜயன் எனும் எளிய தட்டச்சுப் பணியாளனை, ‘விஜயன் நீங்க நல்ல டிசைனரா வருவீங்க’ என வளர்த்தெடுத்தார் அவர். சென்னையின் தலைசிறந்த வடிவமைப்பாளர்களில் இன்று விஜயன் ஒருவர்.


குமுதம்.காமில் ‘நிகழ்காலம்’ எனும் பத்திரிகையைத் தொடங்கியபோது, என்னுடைய அரசியல் ஆர்வத்தைக் கண்டு, என்னை அந்த இதழுக்குப் பொறுப்பாளராக்கினார் அவர். அவுட்லுக் எனும் துணிச்சல் மிகு ஆங்கில இதழை எனக்கு அவர்தான் அறிமுகப்படுத்தினார். அந்த இதழில் வெளியான நல்ல கட்டுரைகளை நான் மொழி பெயர்த்து எழுதிக் குவித்தேன்.


விரல்கள் வலிக்குமளவு எழுதுவேன். கிருஷ்ணா மெல்லிய புன்னகையுடன், ‘தம் போடப் போலாமா?’ எனக் கேட்டால் அந்த வலி மரத்துப் போகும். தேநீர்க் கடையில் என்னுடன் நின்றபடி சாலையில் கடக்கும் இளம் பெண்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு எனக்கும் அவர்களில் அழகிகளை கண்ஜாடையால் காட்டுபவர் குமுதம் இதழின் துணை ஆசிரியர் என்பதை என்னால் நம்ப முடிந்ததில்லை.


குமுதம் இதழின் தர்க்கங்களுக்கு உட்படாத செய்திகளையெல்லாம் நான் எழுதக் கேட்டபோது, பொறுப்பில் இருந்த பலர் கேலியாக என்னை ஓரங்கட்டுவதுண்டு. கிருஷ்ணா தலைமை நிர்வாகியிடமே என்னை அழைத்துச் செல்வார். ’சத்தியமங்கலம் காட்டுக்குள்ள மலைவாழ் மக்கள் காட்டை விட்டு வெளியேறிக்கிட்டு இருக்காங்களாம் சார்…சென்சேஷனல் ஸ்டோரி…செந்தமிழன் போறேங்கறார்’ என்பார். அனுமதி கிடைக்கும்.


’கல்பாக்கம் அணு உலையைப் பத்தி நம்ம பத்திரிகை உலகம் நெகடிவா எழுத மாட்டேங்குது செந்தமிழன்…நாம் எழுதணும்…’ என்றார்.


‘நான் எழுதறேன் சார்…


’ஓகே ஆனால்…உங்களுக்கு சில க்ரைசிஸ் வரும்…சமாளிக்கணும்’


‘பரவால்ல சார்…’


ஏறத்தாழ உயிரைப் பணயம் வைத்து அலைந்து நான் எழுதிய கட்டுரையை, ’எதுக்கும் அட்டாமிக் அதாரிடில வெர்சன் வாங்கிடுங்க’ என வழக்கம்போல் கூறி, சிலர் அந்தக் கட்டுரையைப் புதைக்க முற்பட்டபோது, மெல்லிய புன்னகை மாறாமல்,


’செந்தமிழன்…இன்னும் ரெண்டு வாரத்துக்கு இதைப் பத்திப் பேசாதீங்க…என்னோட இஷ்யூ வரட்டும்….நான் பார்த்துக்கறேன்’ என்றார்.


அவர் பொறுப்பில் வந்த அந்த இதழில் ’கொல்பாக்கம்’ என்ற தலைப்பில், என் கட்டுரை கவர் ஸ்டோரி. எட்டுப் பக்கங்கள், நான் எடுத்த புகைப்படங்களுடன் வந்தது.


‘சிக்கன் எமன்’ என்னும் கவர் ஸ்டோரி நான் எழுதியது. ப்ராய்லர் கோழிக் கறியை உண்ண வேண்டாம் என்பது கருத்து. கறி விலை கிலோ 18 ரூபாயாகச் சரிந்தது. எனக்குக் கொலை மிரட்டல். எனது வீட்டுத் தொலைபேசி எண்ணை குமுதம் அலுவலகத்திலேயே யாரோ கோழிப் பண்ணை உரிமையாளர்களிடம் கொடுத்து விட்டனர். நள்ளிரவு மணி அடிக்கும். சகல கெட்ட வார்த்தைகளையும் கேட்டுக் கொண்டு தூக்கமின்றிக் கிடப்பேன்.


கிருஷ்ணா அதே மெல்லிய புன்னகையுடன், ‘செந்தமிழன் பேசாம ஒரு வாரத்துக்கு என் வீட்ல தங்கிக்கங்க’ என்றார். அதன் பிறகு, என் அறைக்குப் போவதே அரிது என்றாகிவிட்டது.


மேற்கு தாம்பரம் அருகே, ஒரு தி.மு.க பிரமுகர் தன் ஊருக்குள் தாழ்த்தபட்ட மக்கள் வாழும் பகுதிக்கு ரேசன் கடை வர விடாமல் தடுத்தார். நான் புகைப்படத்துடன் எழுதிவிட்டேன். வாக்குமூலங்களை திருட்டுத்தனமாக பதிவும் செய்துவிட்டேன். கட்டுரை வந்ததும், அந்தத் தேர்தலில் மேற்படிப் பிரமுகருக்கு சட்டமன்ற உறுப்பினர் போட்டி வாய்ப்பு பறி போனது.


அடியாட்களுடன் அலுவலகம் வந்துவிட்டார். கீழே உட்கார்ந்து கொண்டு, ’எழுதினவனை வரச் சொல்லு’’ என்று கத்துகிறார். அப்போது பொறுப்பில் இருந்த ஒருவர் என்னிடம், ‘நீதானய்யா எழுதின…? நீயே போய் பேசி அனுப்பு’ என்றார். என் நிலையை நீங்கள் உணரலாம். முகத்தைப் பார்த்துவிட்டால், தனியே செல்லும்போது வண்டியை மோதினால் போதும்.


கிருஷ்ணாவிடம் ’சார் என்னைப் போகச் சொல்றார் சார்…கொஞ்சம் பேசிப் பாருங்க’ எனக் கெஞ்சினேன்.


கிருஷ்ணா என் தோளில் கைபோட்டபடி, ‘செந்தமிழன்…இவன் கிட்ட சொன்னா கேக்க மாட்டான்…நீங்க கீழே போங்க…செந்தமிழன் வேலையா இருக்காரு… என்ன விஷயம்னு கேளுங்க…’நீங்க யாருன்னு கேட்டா நான் தான் கிருஷ்ணா டாவின்சின்னு சொல்லுங்க’ என்றார் அதே புன்னகையுடன்.


நான் அவ்வாறு செய்துதான் தப்பினேன்.


அவர் ரயில்வே அதிகாரியாகப் பணியாற்றியவர். சினிமா இயக்குனர் ஆவதுதான் அவர் லட்சியம். அதற்காகத்தான் குமுதம் இதழில் சேர்ந்ததாகச் சொல்வார். ‘செந்தமிழன் சினிமாவுல சேர, பத்திரிகை ஒரு நல்ல எண்ட்ரி’ என்பார்.


என்னிடம் அடிக்கடி, ‘உங்க ஆம்பிஷன் என்ன?’ எனக் கேட்பார்

. ‘அப்படி எதுவும் இல்ல சார்…இப்ப இந்த வேலை பிடிக்குது…செய்றேன்…’ என்பேன்.


’தப்பு…நீங்க சினிமாவுக்குப் போனா நல்லா வருவீங்க..’என்பார். அவர்தான் முதன் முதலாக என்னைச் சினிமாவுக்குத் தகுதியானவனாகப் பார்த்தார். அவருடைய கதை ஒன்றை நானும் அவரும் சீன் சீனாகப் பேசி எழுதினோம்.


’செந்தமிழன் முதல்ல நான் படம் பண்றேன்…அடுத்து நீங்க’ என்பார்.


அவர் குடியிருந்த வீட்டுக்கு நள்ளிரவில் நான் போய் கதவைத் தட்டி, என்னை எதிர்த்துக் கேள்வி கேட்ட பெண் உரிமையாளரைக் கண்டபடித் திட்டிவிட்டேன். மறுநாள் காலை, அந்த வீட்டைக் காலி செய்யும்படி உத்தரவு வந்தது.


‘சாரி சார்…’ என்றேன். ‘அட நீங்க வேற செந்தமிழன்…இந்த ஹவுஸ் ஓனர் பெரிய இவளா…? நீங்க என்ன அவ கையப் பிடிச்சா இழுத்தீங்க…? வீ ஆர் ஜர்னலிஸ்ட்ஸ்… லேட் நைட் வருவோம்.. தே ஹவ் டூ அண்டர்ஸ்டேண்ட்’ என்றார் அதே புன்னகையுடன்.


இதுபோல் அவர் மூன்று வீடுகளை மாற்ற வேண்டி இருந்தது.


என்னை அவரே, சுபா வெங்கட்டிடம் அறிமுகம் செய்து வைத்தார். மின் பிம்பங்கள் நிறுவனத்தில் நான் நுழைவதற்கு முழுக் காரணமாகவும் கிருஷ்ணா இருந்தார்.


என் திருமணத்தை நடத்தியதில் கிருஷ்ணா – ரேவதி தம்பதியினரின் பங்குதான் மிக அதிகம்.


2001 ஜூன் மாத்தில் ஒரு நாள் தேநீர்க் கடையில் நின்று கொண்டிருந்தோம். என்னை கிருஷ்ணாவின் பொறுப்பில் இருந்து வேறு ஒரு நபரின் பொறுப்புக்கு மாற்றும்படி உத்தரவு வந்திருந்தது. மழை தூவிக் கொண்டிருந்தது. ’சார் அந்தாள்கிட்ட என்னால வேலை பாக்க முடியாது சார்…அவன் ஒரு இடியட்…’ என்றேன்.


’கொஞ்சம் பொறுத்துக்கங்க’ என்றார்.


‘வேணாம் சார்…நான் ரிசைன் பண்றேன்’ என்றேன்.


அதே புன்னகையுடன், ’இங்கேருந்து யாராவது ரிசைன் பண்ணினா எனக்கு சந்தோஷம்தான் செந்தமிழன்…’ என்றார். நான் அடுத்த பத்தாவது நிமிடம் விலகல் கடிதம் கொடுத்துவிட்டேன்.


’கிருஷ்ணா சார் இருக்கார்ல…பாத்துக்குவார்’ என்று, அடுத்த மாசம் வாடகைக்கு என்னப்பா பண்றது என ஊரிலிருந்து கேட்ட என் அம்மாவிடம் தொலைபேசியில் சொன்னேன்.


’கிருஷ்ணா சார்’ அதேபோல் பார்த்துக் கொண்டார். மின்பிம்பங்களில் சுபாவெங்கட் வழியே குமுதம் இதழில் வாங்கியது போல் மூன்று மடங்கு சம்பளம் பெற்றேன்.


சென்னையின் மத்தியதர வர்க்கத்து உறுப்பினராக நான் மாறியது அந்த தேநீர்க் கடையில் எடுத்த முடிவினால்தான். கிருஷ்ணா எனும் மனிதனின் நம்பிக்கையே செந்தமிழன் எனும் எளியவனின் வளர்ச்சி.


அந்த கிருஷ்ணா டாவின்சி இன்று இல்லை.


பத்திரிகையாளர், என் நண்பர் நா.கதிர்வேலன் ‘krishna davinci expired’ எனக் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். கதிர்வேலனும் குமுதம் இதழில் எங்களுடன் பணியாற்றியவர்.


எப்படி இறந்தார்? ஏன் இறந்தார்? என எதையும் விசாரிக்கவில்லை இன்னும்.

எனக்கும் கிருஷ்ணாவுக்கும் இடையில் இருந்த ஒருவரால், எங்கள் உறவில் விரிசல் விழுந்தது. அவர் என்னோடு பேசுவதைக் குறைத்துக் கொண்டார். எனக்குக் குழந்தை பிறந்தது, நான் கார் வாங்கியது, நான் ஊரோடு போய் விவசாயம் பார்க்கத் தொடங்கியது, திரைப்படம் தொடங்கியது, படம் முடித்தது என என் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் அவருக்குத் தொலைபேசியில் சொல்லிக் கொண்டுதான் இருந்தேன்.


ஆனாலும், எனக்கும் அவருக்குமான விரிசலில் நியாயமே இல்லை என்பதைத்தான் தாங்கிக் கொள்ள இயலவில்லை.


ஒரு வேண்டுகோள் நண்பர்களே, ஆழமான உறவுகளை ஒதுக்குவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஒதுக்கக் கூடாது என்பதற்கு ஒரே ஒரு காரணம் இருந்தாலும், ஆயிரத்தை விட ஒன்று பெரிது எனக் கருதுங்கள்.


நான் இப்போது அனுபவிக்கும் வலி உங்களுக்கு ஒருபோதும் ஏற்பட வேண்டாம்!


கிருஷ்ணாவுக்கு அஞ்சலி! அவரை இழந்து நிற்கும் குடும்பத்தினரினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ! THANX TO THAMIZMEDIA


Tuesday, January 03, 2012

பதினெட்டான்குடி - சிங்கம்புலியின் காமெடியை நம்பி - சினிமா விமர்சனம்

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2011/12/Pathinettan-kudi-wall-papers-5.jpgகன்னி ராசியை (பிரபு, ரேவதி ) மறந்தவங்க கூட ஆண் பாவத்தை மறக்க முடியாது,காதல் கசக்குதய்யா புகழ் ஆர் பாண்டியராஜன்க்கு பர்சனலா ஒரு அட்வைஸ் சொல்லி இந்த விமர்சனத்தை ஆரம்பிக்கறேன், எஸ் ஏ சி பாருங்க, விஜய்க்கு எவ்ளவ் சப்போர்ட் பண்றாரு.. அவர் கம்முனு இருந்தாலும் தேரை இழுத்து தெருவுல விடற மாதிரி அரசியலுக்கு அவரை இழுத்துட்டு வராம ஓய மாட்டார் போல.. ஆனா நீங்க உங்க பையனுக்கு என்ன செஞ்சீங்க? அவர் படம் ரிலீஸ் ஆகி இருக்கு, போஸ்டர்லயாவது அட்லீஸ்ட் ஆர் பாண்டியராஜன் -ன் மகன் பிருத்வி நடிக்கும்னு போட வேணாம்...?

படத்தோட கதை கிடக்குது கழுதை , கதை ஓட்டத்துக்கு என்ன பண்ணலாம்னு டைரக்டர் கண்ல சிக்குனது களவாணி கதையும், நாடோடிகள் செகண்ட் ஆஃபும்.. ஆனா இவர் என்ன பண்ணி இருக்கனும்னா படத்துல கதை கம்மி, சதையும் கம்மி (!!!) அதனால காமெடி போர்ஷன் கலக்கலா அமைச்சுட்டாலே படம் ஓக்கே ஆகிடும்னு 10 பேரை உக்கார வெச்சு ஸ்டோரி டிஸ்கஷன்ல ஆளுக்கு 2 ஐடியா குடுங்கன்னு 10 புரோட்டா வாங்கி கொடுத்தாலே போதும்.. ஆனா இப்போ வர்ற புது டைரக்டர்ங்க எல்லாம் கதை , திரைக்கதை , வசனம், பாடல்கள் இசை எல்லாம் நம்ம பேர் தான் வரனும்கற பேராசைல  யாரையும் மதிச்சு டிஸ்கஷன் உக்கார்றதே இல்லை
ஹீரோ பிருத்வியும் அவர் கூட்டாளி நண்பர்கள் 3 பேரும் சிங்கம்புலியின் சாமியானா பந்தல் போடும் காண்ட்ராக்டர் கடைல வேலை செய்யறவங்க ,அவங்க ஊர்ல சாவு விழுந்தாலும் சரி , சில்ஃபான்சிங்க சடங்குக்கு உக்காந்தாலும் சரி பந்தல் போட இவங்க தான் போவாங்க.. 

http://www.sivajitv.com/application/images/gallery/small/139/37.jpg

ஹீரோயின்க்கு 15 வயசு எட்டாங்கிளாஸ் படிக்குது.. யாரும் பயப்படாதீங்க, கதைப்படி தான் பாப்பாவுக்கு வயசு 15 , ஆனா உண்மைல 18 டூ 20 இருக்கும் ( பர்த் சர்ட்டிஃபிகேட் பார்த்தியா?ன்னு எடக்கு மடக்கா கேக்கக்கூடாது , எல்லாம் ஒரு உத்தேசமா, குத்து மதிப்பா சொல்றதுதான் )

ஹீரோயின் வீட்ல ஒரு பெருசு சொர்க்கத்துக்கு டிக்கெட் வாங்கிடுது.. பந்தல் போட வந்த ஹீரோ ஹீரோயினை பார்த்து லுக் விடறாரு.. அடுத்த நாளே பாப்பா வயசுக்கு வந்துடுது. மறுபடியும் ஹீரோ & கோ அங்கே ஆஜர்.. 2 பார்வைலயே செட் ஆகிடுச்சு.. அடங்கோ.. 

அப்புறம் காமெடி பாருங்க ஹீரோயினுக்கு ஒரு தங்கச்சி.. அதாவது ஹீரோவுக்கு மச்சினி.. அதுக்கு வயசு 12, அதுவும் வயசுக்கு வந்துடுது ( அட போங்கப்பா ) மறுபடியும் ஹீரோ ஹீரோயின் லுக் காதல் கண்றாவி எல்லாம் நடக்குது.. ( நீங்க நினைக்கற கண்றாவி இண்ட்டர்வெல்க்கு அப்புறமா)


என்னடாது படம் ஜாலியா போய்ட்டு இருக்கேன்னு யோசிக்கறப்ப ஹீரோயினோட முறை மாமன் வில்லனா வர்றான்.. அமைதிப்படைல சத்யராஜை பயமுறுத்துன ஜோசியர் மாதிரி வில்லனை இங்கேயும் ஒரு ஜோசியர் பயமுறுத்தறார் , அதாவது இன்னும் 10 நாள் தான் டைம், அதுக்குள்ள மேரேஜ் பண்ணிக்கலைன்னா ஜென்மத்துக்கும் மேரேஜே நடக்காதுன்னு , நானா இருந்தா ஐ ஜாலின்னு விட்டிருப்பேன்.. ஆனா வில்லன் உடனே பரிசம் போடறார்.. 

ஹீரோயின் ஹீரோ கிட்டே மேட்டரை சொல்றார், அவங்க 2 பேரும் எஸ் ஆகறாங்க  டட்டடய்ங்க் இடைவேளை.. இதுக்குப்பிறகுதான் கதை சூடு பிடிக்கறதா . டைரக்டர் நினைச்சுட்டாரு.. அதாவது இப்போ ஹீரோயினுக்கு 18 வயசு கம்ப்ளீட் ஆக 6 நாள் டைம் இருக்கு. 6 நாள் தலை, கால், உடல் எல்லாம் மறைவா இருக்கனும்.. 

http://img1.dinamalar.com/cini/ShootingImages/14235722467.jpg

வில்லன் கோஷ்டிங்க 25 ஜீப்ல ஆட்களோட துரத்தலாம்னு கிளம்பலை, ஏன்னா இது லோ பட்ஜெட் படம், அதனால் ஒரே ஒரு ஜீப்ல அவங்க , இன்னொரு டாட்டா ஏஸ் ஆட்டோல ( சின்ன யானை) ஹீரோ, ஹீரோயின், & கோ போறாங்க.. எப்படி மேரேஜ் நடக்குது, அதுக்கு முன்னாடியே எப்படி ஃபர்ஸ்ட் நைட் நடக்குதுங்கறதுதான் கதை..

படத்தோட மெயின் ஆள் டைரக்டர் கம் காமெடியன் சிங்கம்புலிதான்,, அவருக்கு வாய்ஸ் மாடுலேஷன், டயலாக் டெலிவரி எல்லாம்  செமயா வருது.. படத்தை கொஞ்சமாச்சும் போர் அடிக்காம கொண்டு போறது அவர் தான்.. ஆங்காங்கே சொந்த டயலாக்ஸ் பேசி அப்ளாஸ் வாங்கறார்/...
பிருத்விதான்  ஹீரோ.. என் உயிர்த்தோழன் பாபு மாதிரி கெட்டப்ல வர்றார்.. பாஸ் மார்க் தரலாம்.. அப்பாவோட சாயல் எதுவும் இல்லாம இருக்கறது பலமா ? பலவீனமா?ன்னு அடுத்த படத்துல தான் தெரியும்.. ( சப்போஸ் அடுத்த படத்துல சான்ஸ் வந்தா .. )

ஹீரோயின் ஸ்ரீநிஷா.. ரவுண்டு ஃபேஸ்.. 50 மார்க் தான் தேறும்.. படம் முழுக்க அப்பாவி மாதிரி முகத்தை வெச்சுட்டு, பாடல் காட்சிலயும், அந்த காட்டு வாசிக கில்மா காட்சில மட்டும் நல்லா விளைஞ்ச கட்டை போலவும் ஃபேஸ் எக்ஸ்பிரஷன் குடுக்குது..

வில்லனா வர்றவர்க்கு ஒரு வார்த்தை .. டேய் டேஏஏஎய்னு கத்தறது மட்டும் வில்லத்தனம் இல்ல.. 

ஹீரோயின் ஃபேமில வர்ற எல்லாருமே எதார்த்தமான நடிப்பு. முடிஞ்சவரை எல்லாம் புதுமுகங்களா போட்டிருக்காரு டைரக்டர்.. வெல் செட்.. 

http://gallery.southdreamz.com/cache/actress/srinisha/download-pathinettan-kudi-audio-launch-stills-26_720_southdreamz.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. சி செண்ட்டர் ரசிகர்களுக்குப்பிடிச்ச மாதிரி திரைக்கதை அமைச்சு முதல் பாதி காதல் கலாட்டா , பின் பாதி சேசிங்க்- காமெடி கலாட்டா என  கொண்டு போன விதம்.. 

2. சிங்கம்புலியை சுத்தியே கதை போற மாதிரி சாமார்த்தியமா காட்சிகளை அமைச்ச விதம்.. 

3. ஹீரோயினுக்கு தோழிகளா வர்ற 3 ஜிகிடிகள் ,ஹீரோயின் தங்கை என நல்ல லட்சணமான பொண்ணுங்களை அப்பாயிண்ட் பண்ணுனது..

4. கிராமங்களில் நடக்கும் விசேஷங்கள், காது குத்து வைபவங்கள் என மண் மணம் மணக்க சொன்னது , பாதிபடம் விசேஷங்களை காட்டியே படத்தை ஓட்டிட்டாரே?


http://www.mysixer.com/wp-content/gallery/pathinettan-kudi-ellai-aarambam/padhinettan-kudi-ellai-aarambam-21.jpg
இயக்குநர் கவனிக்கத்தவறிய லாஜிக் மிஸ்டேக்ஸ்

1. என்ன தான் கிராமம் ஆகட்டும், பந்தல், சேர்கள் 100, பெட்ஷீட், குடை என எல்லாம் வேன்ல கொண்டு போய் 4 ஆட்கள் வேலையும் செய்ய ரூ 600 தான் சார்ஜா? ரொம்ப கம்மியா இருக்கே? நகரங்களில் அதற்கு ரூ 6000 சார்ஜூம், கிராமங்களில் அதற்கு ரூ 3000 சார்ஜும் பண்றாங்க

2. பொதுவா பொண்ணுங்க வயசுக்கு வந்து குடிசைல உக்கார வெச்சா மினிமம் 9 நாட்கள் வெளீல வரக்கூடாது, மேக்சிமம் 11 நாட்கள், ஆனா ஹீரோயின் சடங்குல உக்காந்த அன்னைக்கே அதே விழாவுல வந்த ஜனங்களுக்கு பந்தி பரிமாறுது.. ஹீரோயின் ஹீரோ சந்திப்புக்காக போட்ட திட்டம் தான் ஆனாலும் இது தப்பு தான் ஹி ஹி ( கிராமங்களில் அப்படி பொண்ணை பந்தி பரிமாற விட மாட்டாங்க )

3.  ஹீரோயின் படத்துல ஸ்கூல்ல இருக்கற மாதிரி எல்லா காட்சிலயும் ஸ்கூல் யூனிஃபார்ம்லயே இருக்கு, ஆனா வில்லன் பொண்ணு பார்க்க வர்றப்ப : இருங்க பொண்ணு ஸ்கூல்ல இருந்து இன்னும் வர்லை, வந்துடுவா”ன்னு அப்பா சொல்றாரு, அப்போ ஹீரோயின் அன்யூனிஃபார்ம்ல வருது.. ( ஸ்கூலுக்குப்போறப்ப யூனிஃபார்ம், வர்றப்ப சிவில் டிரஸ்?)

4.  ஒரு சீன்ல ஹீரோவோட ஃபிரண்ட் சரியான பசின்னு வயக்காட்ல இருக்கற கரும்பை சாப்பிடறார்.. கிராமத்துல இருக்கறவங்களுக்கு கரும்பு ஜீரண சக்தியை அதிகரித்து பசியை மேன்மேலும் உண்டாக்கும்னு தெரியாதா? வயல்ல, தோட்டத்துல சாப்பிட வேற திங்க்ஸா இல்ல?

5.  கதைப்படி ஹீரோயின் வயசு சான்றிதழ்க்கு ரேஷன் கார்டு வேணும்.. வேலைக்காரி ரேஷன் கார்டுல அரிசி வாங்கறதா காட்றாங்க.. அரிசி வாங்கற ரேஷன் கார்டு மஞ்சள் அல்லது பச்சை கலர் தான்.. ஆனா லைட் ப்ளூ கலர்ல காட்டறாங்க

http://www.cenimaz.com/wp-content/uploads/2011/12/Pathinettan-kudi-stills.jpg

6. ஹீரோயின் பட்டு சேலை கட்டிட்டு வெறும் கையை வீசிட்டுதான் வருது, ஹீரோ & கோ கூட காட்டுல 4 நாட்கள் தங்குது, ஆனா கன கச்சிதமா மேட்ச் ஜாக்கெட்டோட இருக்கு..2 செட் தாவணி செட்  கடைல வாங்குனாலும் சுடி தானே வாங்க முடியும்? டெய்லர்ட்ட குடுத்து தைக்கவும் நேரம் இருக்காதே?

7. ஒரு ஸீன்ல ஸ்கூல் கேட் பூட்டி இருக்கு, வாட்ச்மேன் ஹீரோ & ஹீரோயினை துரத்தி விடறார்.. அப்போ உள்ளே இருந்து ஒரு டீச்சர் எட்டி பார்த்து அவங்களை உள்ளே அனுப்புங்கன்னு சொல்றாங்க.. யாருமே இல்லாத ஸ்கூல்ல அந்த டீச்சர் என்ன பண்றாங்க? அவங்க எப்படி ஹெச் எம் இல்லாம டி சி தர்றாங்க?

8. வில்லனோட ஆட்கள் 2 பேரு ஸ்கூல்  வாசல்ல நிக்கறாங்க, அவங்க பிளான் என்னன்னா ஹீரோ ஹீரோயினின் டி சி வாங்க வந்தா தடுக்கனும்.. ஹீரோ அவங்களை டபாய்ச்சுட்டு டி சி வாங்கிடறார்.. எனக்கு என்ன டவுட்னா ஹீரோ எப்போ வருவான்னு தேவுடு காத்துட்டு இருக்காம வில்லன் ஆட்கள் நேரா ஸ்கூல்க்குள்ளே போய் ஹீரோயின் டி சி குடுங்கன்னு இவங்க முன்னால முந்தி இருக்கலாமே?

9. ஹீரோயின், ஹீரோ தனிமைல கில்மா நடத்திடறாங்க, அந்த மேட்டர் எல்லார்க்கும் தெரிஞ்சுடுது.. கில்மா நடந்த அடுத்த நாளே ஹீரோயின் வாமிட் எடுக்கறா.. உடனே எல்லாருக்கும் டவுட், மருத்தவச்சியை கூட்டிட்டு வந்து செக்கப் பண்றாங்க , எப்படியும் 17 நாட்கள் ஆகும்ப்பா வாமிட்க்கு 

10.  க்ளைமாக்ஸ்ல செம காமெடி.. எல்லா எதிர்ப்புகளையும் சமாளிச்சுட்டு வில்லன் ஹீரோயின் கழுத்துல தாலி கட்டற கடைசி செகண்ட்ல ஹீரோ எண்ட்டர் ஆகி நிறுத்துன்னு சொன்னதும் வில்லன் டக்னு  ரிமோட்டால் ஃப்ரீஸ் செய்யப்பட்ட டி வி மாதிரி அப்படியே அசையாம ஆன்னு வேடிக்கை பார்க்கறான் , நானா இருந்தா சட் புட்னு தாலியை கட்டி இருப்பேன்

11. இதை சொல்ல  கொஞ்சம் சங்கடமா இருக்கு, இருந்தாலும் நிறைய பேரு இதே தப்பை பண்றாங்க.. அதாவது கதைப்படி காட்டு வாசிங்க டான்ஸ்.. அதுல பொண்ணுங்க எல்லாம் ஜாக்கெட் போடாம முதல் மரியாதை ராதா கணக்கா டேன்ஸ் ஆடுதுங்க, ஆனா எல்லார் முதுகுலயும் பிரா பட்டை இருந்த தடம்  அப்பட்டமா காட்டுது.. இதை அவாய்டு பண்ண அந்த க்ரூப் டேன்சர்ஸ் கிட்டே 4 நாள் ஒழுங்கா தேச்சு குளிங்கன்னு சொல்லனும் ஹி ஹி 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibZ_6TT1mfteI3uiLKOnhxk3HStPGD0BYRjW310j9DLOvO7s7Us7Op8qv-md2ujkS9PHfwJStU6ezZP5HcFqED-AlBxdq-QlKai3wNgKKdVWyttQ_9air8RFBVZq7sjxVsqaw6PRM0C08/s1600/pathinettan_kudi_ellai_aarambam_102.jpg

சி.பி கமெண்ட் - இந்தப்படம் டி வில போட்டா பார்த்துக்கலாம்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 39

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்

ஈரோடு ஸ்டார்-ல் படம் பார்த்தேன்

Monday, January 02, 2012

மகாராஜா -அஞ்சலியும், ஜொள் ஜக்கு ,லொள் மக்கு வும்- சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbChIoiQ3p4xTTVyR5x4mtRQHs4jg6tdK0sGwdrt0MVjagM6Mw1azYngV16vT5meqUg8QxCF5dPJmno8kVyLmezzWrWhtIvWsZcJH_onpz0MlWGsrFeuzDWzHwCbC_TjD4WUmZOUesaxhF/s1600/maharaja-movie-anjali-hot-stills-01.jpgமகளிர் மட்டும் காமெடி படத்துக்குப்பிறகு நாசருக்கு கிடைச்ச அல்வா மாதிரி ஒரு சப்ஜெக்ட்..ஆனா படத்துக்கான கதைல மெனக்கெட்ட அளவு விளம்பரம் , மார்க்கெட்டிங்க்ல சரியா கவனம் செலுத்தாததால பலருக்கும் இந்தப்படம் சென்று சேரலை..

 கதை என்ன? நாசர் ஒரு வயசான பெருசு.. வயசானாத்தானே அது பெருசுன்னோ, ஒரு வயசு ஆனது எப்படி பெருசுன்னோ கடி ஜோக் அடிக்காம கவனமா கதை கேளுங்க.அவருக்கு  நயன் தாராவோட லோஹிப் மாதிரி எப்பவும் ஒரு தாழ்வு மனப்பான்மை ( நயன் தாராவை நான் பார்க்கலை, பார்த்தவங்க சொன்னாங்க ), சாதாரண ஆஃபீஸ்ல சாதா கிளார்க்கா நாம ஒர்க் பண்றோம்..நமக்குப்பிறகு வந்த யூத்ங்க எல்லாம் கம்ப்யூட்டர் , ;லேப் டாப்னு கலக்கறாங்களேன்னு.. அவருக்கு ஒரு ஆதங்கம்
செகண்ட் ஹீரோ சத்யா , ஆனா டைரக்டர் கதை சொல்றப்ப இவர் தான் மெயின் ஹீரோன்னு சொல்லி டபாய்ச்சிருப்பாரு ஹி ஹி .. இவர் கணினித்துறைல ஒர்க் பண்றவரு, உம்மணாம்மூஞ்சி அஞ்சலியை டாவ் அடிக்கறாரு ஒரு தலையா.. எல்லாரும் கவனிக்கவேண்டிய முக்கியமான அம்சம், பாப்பா அஞ்சலிக்கு  முகம்தான் உம்முனு இருக்கு.. மற்றதெல்லாம் கும்முனு  ஹி ஹி ஐ மீன் அவங்க நடிப்பு, கலர், இதை எல்லாம் சொன்னேன்பா.. 

நாசரோட தாழ்வு மனப்பான்மையை அகற்றி  சத்யா அவரையும் தன்னோட கம்ப்யூட்டர் கம்பெனிலயே ஒர்க் பண்ண வெச்சு லட்சக்கணக்குல சம்பளம் வாங்க வைக்கறார்.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieIo9lUdz_VCRBjnI9AkADrwWJAn64Y4ygie33uKKvkNrxnahWRda8artfDjsWl7YvB0nuCpdLKjTlQnBdI3P8xjdjOy7olRI1l4OUaTdb1qs8sMYAWz6t5fJj2wn44Eo4t8otktDBJnSj/s1600/Maharaja+_Tamil+_Movie_+Photo+_Stills+%25283%2529.jpg

நார்மல் மேன் நல்லசாமியா இருந்த நாசர் இப்போ வாரம் ஒரு கெட்டப் சேஞ்ச் பண்ற மாடர்ன்மேன் மாடசாமியா மாறிட்டாரு.. இவரோட மருமகன் தான் ஹீரோ சத்யா.. 

இப்போ நாசருக்கு ஒரு ஜிகிடியோட அறிமுகம் கிடைக்குது.. ஜிகிடின்னா இன்னான்னு அர்த்தம் எல்லாம் கேக்காதீங்க .பொண்ணுங்களை ஏதாவது ஒரு வித்தியாசமான பேர் வெச்சு கூப்பிடனும்னு சென்னிமலை சித்தர் என் கனவுல வந்து சொல்லி இருக்கார்.. என்ன நம்ப மாட்டீங்களா? என்னய்யா இது ? கலைஞர் கனவுல அறிஞர் அண்ணா, பெரியார், எம் ஜி ஆர் எல்லாரும் டைம் டேபிள் போட்டு வந்து பேசிட்டு போறதா அவர் சொல்றதை நம்பறீங்க, நான் சொன்னா நம்ப மாட்டேங்கறீங்க.. ( கலைஞர் கனவுல நல்ல வேளை கரண்ட் சி எம் வர்லை ஹி ஹி )

 வருஷமெல்லாம் வசந்தம்னு ஒரு டப்பா படத்துல எங்கே அந்த வெண்ணிலா ,எங்கே அந்த வெண்ணிலா? அப்டினு ஒரு பாட்டுக்கு வாயை ( மட்டும்) அசைச்சுதே ஒரு ஜிகிடி பேரு அனிதா அந்த ஜிகிடிதான் நாசரோட  கில்மா லேடி.. ( ஆனா டைட்டில்ல புதுமுகம் -அனிதா அப்டினு போடறாங்க ஹே ஹே ஹேய், நாங்க எல்லாம் 89 குரூப்டேன்சர்ஸ்க்கு மத்திலயும் நல்ல ஜிகிடி எது , நொள்ள ஜிகிடி எதுன்னு கண்டு பிடிக்கற ஆளுங்க , ஹி ஹி )

மயக்கம் என்ன படத்துல வர்ற ரிச்சா மாதிரி அனிதாவுக்கு ஒரு லவ்வர் ஆல்ரெடி இருக்கான், ஆனா நாசரை பார்த்ததும் ஜிகிடி மனசு மாறிடுது. இந்தக்கதை ஒரு டிராக்ல ஓடுது 

செகண்ட் ஹீரோ சத்யா ஆடம்பரமான ஆளு.. லைஃப்ஃபை லைட்டா எடுத்துக்கறவர். அவர் அஞ்சலியை மடக்கலாம்னு ஆனானப்பட்ட பல வேலைகளையும் ட்ரை பண்றார் , முடியல.. அஞ்சலி ஒரு கட்டத்துல , சதுரத்துல, செவ்வகத்துல சத்யா கிட்டே  மற்றவர்களுக்காக வாழறதுதான் வாழ்க்கை, தியாகியா இருக்கனும், அன்னை தெரேசாவா மாறிடனும்னு என்ன என்னமோ சொல்லுது.. அண்ணன் மனசு மாறிடறார்.. ஆடம்பரத்தை தவிர்த்து சாதா ஆள் ஆகிடறார்.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUH2zhpzZijOIm9h-TKHxI3PfdjHr51dHttK7IJxeTwKzo_mVERpunXeoQZLJZYXt2PDot0TsdSTD9HOMh-vQSkZyN8TjGawb2zDDOgnuhgEwQVdI8ABGjJBvJnVoDJwdSQs3_ua1nKlAB/s1600/maharaja-movie-gallery-37.jpg

இங்கே தான் இயக்குநர் நிக்கறார். அது என்னான்னா 2 கதை குழப்பம் இல்லாம .ஒண்ணு அடக்கமா இருக்கறவன் ஆர்ப்பாட்டம் பண்ற தறுதல ஆகரான், ஆர்ப்பாட்டம் பண்றவன் அடக்கம் ஆகிடறான்.. இந்த நல்ல கதையை சுமாரான திரைக்கதைல சொல்லி இருக்கார்.. 

நாசர் கமல்ஹாசனே பாராட்ன அற்புத நடிகர், அவருக்கு சொல்லியா தரனும்.. செம ஆக்டிங்க் பர்ஃபார்மென்ஸ் ஸ்கோப் உள்ள கேரக்டர்..  இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வர்ற போது, அனிதாவை பார்த்து ஜொள் விடரது எல்லாம் ஓக்கே .. 

செகண்ட் ஹீரோ சத்யா சுமார், மோசம் இல்ல.. 

ஹீரோயின் அஞ்சலி படம் பூரா மாடர்ன் டிரஸ்ல தான் வர்றார், ஆனா நெற்றில பொட்டு இல்லை ( அப்பதான் மாடர்ன் பொண்ணுனு அர்த்தமாம் ) பாடல் காட்சிகள்ல கலக்கறார்.. மற்றபடி அவர் நடிக்க அதிக ஸ்கோப் இல்லை.. கதைக்கு தேவையே இல்லாம அவர் உர் என்ற முக பாவம் காட்டுவதும் திடு திப்பென்று ஜெ சசிகலாவை விரட்டுனது மாதிரி சத்யாவை அவர் லவ் பண்றதும் படு செயற்கை.. 

ஓ பேபி பாட்டு, வாராய் வாராய் வெண்ணீலா பாட்டு சுமார் ரகம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6qViOlTiKTZv9rE77g00lp0I4wVz0cJbTE4HgT8zn46feJV8uhWKpakJyEuhysOm68akB5bV_CYcMnzcB33PTuNTVd4oT1HXN8dVmX29ZVxx8C1n-A8f_E14UdxuVNXcK0HcKbh2oziX4/s1600/Anjali+_hot_+Photo+stills+_in+_Maharaja+-Movie+%25281%2529.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. படம் நெடுக காமெடி வசனங்கள், மொத்தம் 48 ஜோக்ஸ் தேறுச்சு.. அதுல 32 நினைவிருக்கு, தனி பதிவு போடறேன்

2. மெயின் ஹீரோ நாசர்னு முடிவு பண்ணீட்டதால தேவை இல்லாம சத்யாவுக்கு முக்கியத்துவம் எல்லாம் தராம கதையின் ஓட்டத்துல சீரான வேகம் காட்டுனது

3. அஞ்சலியை புக் பண்ணுனது ஹி ஹி 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMKaTzw8NhbCv9i81rx5yR7f1kfxWf84oHV2xz2POuV3qheRk2em2_dA-PC2a_6IpXVkKd6ilVM3sQQAtn2jJbjYc5GFc0dYl5mcw45D4LNa8JX1IfS6rV8IWU61KCBldiDkcTPKU24mg/s1600/Maharaja-Movie-Stills-Wallpapers-1.jpg

இயக்குநர் சறுக்கிய இடங்கள்

1.  ஓப்பனிங்க்ல நாசர் “உங்களுக்காகத்தானே பேசறேன்”னு ஒரு டயலாக் சொல்றப்ப அவர் லிப்ஸ் மூவ்மெண்ட்டே தர்லை, அதாவது டப்பிங்க் பேசறப்ப படத்துல இல்லாத ஒரு வசனத்தை சேர்த்து இருக்காங்க.. காட்சியின் தேவை கருதி

2. ஹீரோ சத்யா எப்போ பாரு ஒரு பனியன் போட்டுக்கிட்டுபட்டனே போடாத சட்டை போட்டுக்கிட்டே படம் பூரா சுத்தறாரே? ஐ டி கம்பெனில இப்படி கேனத்தனமா டிரஸ் பண்ணிட்டு பிச்சைக்காரன் கூட உள்ளே வர மாட்டானே?

3. குடிகாரங்களை காட்றப்ப நிறைய பேரு படத்துல வாமிட் பண்ற சீன் காட்றப்ப நேரடியா கேமராவைப்பார்த்தே வாமிட் பண்றாங்க, நமக்கு குமட்டுது.. இந்த மாதிரி சீன்ல ரியாலிட்டி எதுக்கு? நாசுக்கா ,வாமிட் பண்றார்னு பேக் ஷாட்ல  காட்னா போதாதா? இப்படி விலாவாரியா காட்டனுமா? 

4. ஹீரோயின் அஞ்சலிக்கு அவ்ளவ் செலவு பண்ணி டிரஸ் எல்லாம் வாங்கி கொடுத்தவங்க ஒரு நாலணாவுக்கு ரப்பர்பேண்டோ, 2 ரூபாய்க்கு ஹேர் பின்னோ வாங்கித்தந்திருக்கக்கூடாதா? பாப்பா பாவம் படம் பூரா தலையை விரிச்சுப்பொட்டுக்கிட்டு சுத்துது..

5. க்ளைமாக்ஸ்ல நாசர் அனிதாவை கொலை செய்யற மாதிரி காட்னதோட படத்தை முடிச்சிருக்கலாம், அனிதா திடீர்னு தப்பிக்கறது, அப்புறம் அவர் வில்லி ஆகறது , சேசிங்க், ஃபைட் எல்லாம் செம போர் .. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbmL4TVm9hH7gro5l1GocvbNR9mypZUx3jZr0lh3qA51Cs6Y7pv3KyRJRv4LBZP8B7Gg6z2Flf7JzDIxE-RONNkUkQGk3rDZ25nL1ur-ljW7SUjWYcSc-7xG4w3F-LcvDIpRMSOhqO8xbg/s1600/tollywood-actress-Anitha_Hasnandani_Natassha_123actressphotosgallery.com_17.jpg

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 38

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார் 

சி .பி கமெண்ட் - டி வி ல போட்டா பாருங்க ஹி ஹி 

ஈரோடு சண்டிகாவுல பார்த்தேன்

Friday, November 11, 2011

தம்பி வெட்டோத்தி சுந்தரம் - சினிமா விமர்சனம்

http://tamilpaa.files.wordpress.com/2011/08/bc94f_thambi-vettothi-sundaram-9.jpg?w=330&h=458 

கேரளா பார்டர்ல நடந்த உண்மைக்கதைன்னதும் நான் என்னமோ ஏதோன்னு நினைச்சேன்.. சாதாரண ரேஷன் அரிசி  & கள்ளச்சாராயம் கடத்தல் காரனின் காதல் கதைதான்...கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த  ஒரு ரவுடியின் உண்மைச் சம்பவம்தான் தம்பி வெட்டோத்தி சுந்தரம்

பி ஏ பி எட் படிச்சுட்டு டீச்சர் வேலை செய்ய ஆசைப்பட்டு அதுக்கு ஹீரோ கரண் ட்ரை பண்றாரு.. ஆனா கிடைக்கலை.. உடனே போலீஸ் வேலைக்கு ட்ரை பண்றாரு. அதுவும் கிடைக்கலை.. பணம் கொடுத்தாத்தான் கவர்மெண்ட் வேலைன்னு சொன்னாங்காட்டியும் ஹீரோ என்ன பண்றாரு.. ரேஷன் அரிசி கடத்தற சரவணன் கூட கூட்டு சேர்ந்து  கள்ள சாராயம் கடத்தறார்.. ( எல்லா அன் எம்ப்ளாயிமெண்ட் கேண்டிடேட்ஸூம் நோட் பண்ணிக்குங்கப்பா).

அவரு அஞ்சலி கூட லவ்ஸ்.. அஞ்சலி வில்லனோட மக.. அட இவ்வளவுதான் கதையா?ன்னு யாரும் சர்வசாதாரணமா நினைச்சுடாதீங்க, அஞ்சலியோட ஃபி:ளாஸ்பேக்ல அவங்கம்மாவைக்கொன்ன கதை, , அவங்கம்மாவைக்கொன்னவனோட வாரிசு அஞ்சலி ஃபேமிலியை துரத்தற எக்ஸ்ட்ரா கதை எல்லாம் இருக்கு.. திரைக்கதை எழுதவே 2 குயர் நோட் செலவு ஆகி இருக்கும்னு நினைக்கறேன்..

 கரண்- க்கு சந்தேகமே இல்லாம இது ஒரு முக்கியமான படம்தான்.. கோபம், காதல், கிண்டல், வீரம், பழி வாங்கும் உணர்ச்சி-ன்னு  கலந்து கட்டி அடிக்கற ரோல்.. மனுஷன் புகுந்து விளையாடி இருக்கார்..

அஞ்சலி சும்மா வந்துட்டுப்போனாலே தமிழன் கை தட்டுவான்.. நல்லா நடிச்சா? கேக்கவே வேணாம்.. சாதாரண கேரக்டரைக்கூட ஸ்பெஷல் நடிப்பால பிரகாசிக்க வைக்கிற டேலண்ட் பாப்பாட்டா இருக்கு ( சரி சரி, அடுத்த பேராவுக்கு வாப்பா)

சரவணன் பருத்தி வீரனுக்கு அப்புறம் கிடைச்ச செம கல கல கேரக்டர்.. ஆங்காங்கே குணச்சித்திரம்.. 

அது போக படத்துல நடிச்ச 168 கேரக்டர் பற்றியும் சொல்லிட்டு இருந்தா இடம் போதாது.... அதுவும் இல்லாம அந்த 168ல 146 பேர் கொல்லப்படறாங்க .. தடுக்கி விழுந்தா கொலை தான். 

ஹீரோயினுக்கு ஃபிரண்டா வர்ற  அழகு ஃபிகர்கள் அப்டினு ஒரு கட்டுரை யாராவது எழுதுனா இந்தப்படத்துல வர்ற தோழியை முதல்ல மென்சன் பண்ணிடுங்க.. பார்ட்டி செம கலர் & நல்ல முக வெட்டு 

கஞ்சா கறுப்புக்கு கத்தறதுதான் காமெடி இன்னும் ஒரு நினைப்பு இருக்கு பாவம்.. 

 http://www.hotmalayalamactress.in/wp-content/uploads/2010/10/Hot-Anjali.jpg

படத்தில் ரசிக்க வைக்கும் வசனங்கள் ( பா. ராகவன் )

1.  வாங்க வாங்க.. பந்தயம் ஜெயிச்சா 200 வெச்சா 400

400க்கு எவ்ளவ் சைபர்?

திங்கிங்க்.. 

பிறந்ததுல இருந்தே இவன் தோத்து நான் பார்த்ததே இல்ல.. 

2.  உனக்கு கரண்ட்னு எவண்டா பேர் வெச்சது?

ஊர்ல தான் கரண்ட் இல்ல,, பேருலாயாவது கரண்ட் இருக்கட்டுமே..

3. வெ ஆ மூர்த்தி - அட.. அடுத்தவன் சாமான்னா அலேக்கா தூக்கிட்டு வந்துடுவீங்களே?

4. அடி வாங்கிட்டு உன்னால எப்படி சிரிக்க முடியுது?

அது என் கேரக்டர் சார்.. 

5. சார். சார்.. உடனே திரும்பி பாருங்க சார்.. 

ம்க்கும்.. நீங்க ஜஸ்ட் மிஸ்,.. அவன் அப்பவே எஸ்..
6. கண்டக்டர் - முன்னுக்கு போ..  முன்னுக்கு போ.

க, கருப்பு - நாங்க எல்லாம் அப்பா அம்மா சொல்லியே கேட்கல.. நீ சொல்லியா கேட்கப்போறேன்.. 
அதானே , கேட்டிருந்தா உருப்பட்டு இருப்பியே ( ஜோக் - பை டாக்டர் சி ராஜேந்திரன்  இன் பாக்யா 2009  ஆகஸ்ட் 9)


7.  அடேய்.. என்னடா அவ மேல பார்வை?  கிழக்கே போகும் ரயில்?

கள்ளக்காதல்?

ம்

நொள்ளக்காதல்.. அடேய்.. நாடு பூரா இதாண்டா நாறிட்டு இருக்கு.. 

8.  ஒரு பொண்ணு ஒரு ஆம்பளை கிட்டே நட்பா இருக்க முடியதா?

9.  யார் இந்த 3 வது மனுஷன்?

போலீஸ்!


லத்தியை காணோம்?நாங்க லத்தி இருந்தாதான் போலீஸ்னு நம்புவோம்.. 

10.  என் செண்டிமெண்ட் காசு ஒரு ரூபாயை பிடுங்கிட்டு வேற ஏதோ 5 ரூபா காசு தர்றாடா.. 

அட விடு .. எப்படி பார்த்தாலும் உனக்கு 4 ரூபா மிச்சம் தானே?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifHJFkdNwOoRE-bnwyXn3hPHpE0aArJEJRcFVlV0bgxsnqH8VWpqep8TEJKiNyoMq7kfyEdyQ3Q-D-V4nDGdP2ibfOgtS0qtEYbmsXtUTlf7X4RRcNrDEqOvCf6nqNU-zMtWpdertxiWg/s1600/Tamil-Actress-Anjali-latest-stills-photos-06.jpg

11. ஏங்க.. எனக்கு?

சாரி. கண்ணாடி போட்டவனுக்கெல்லாம் கஞ்சி வராது..

12. யோவ்.. கல்லாங்காட்டுல சும்மாதானே இருக்கே? லவ் பண்ணா குறைஞ்சா போயிடுவே?

------

10 ரூபா கண்ணாடியை கழட்டிட்டு பாருடா எருமை  ( என்னைத்தான் சொல்றாங்களா?)


13.  பொண்ணு தானா வருது.. ஏண்டா அதை புரிஞ்சுக்க மாட்டேங்கறே.. 

அடேய்.. இந்த மாதிரி  எடக்கு மடக்கா சொல்லித்தந்ததாலதான் தமிழ்நாட்ல பாதிப்பேரு கிறுக்கு பிடிச்சு அலைஞ்சிட்டு இருக்கான்..

14. உன் ஆள் என்ன பண்றான்.. ? பார்க்க கேனம் போல் இருக்கான்...

அடியேய்.. அவர் துபாய் கிணத்துல வேலைடி.. மாசம் ரூ 50000 சம்பளமாம்.. 

பார்த்துடி, ஒட்டகம் மேச்சுட்டு இருக்கப்போறான்.. 

15. .. ம் ம் ... இதை பிச்சுக்கலாமா? 

அய்யோ வேணாம்.. எல்லாரும் பார்க்கறாங்க..
அடச்சே.. உன்னைப்போய் லவ் பண்ணேன் பாரு.. 

16. போலீஸ் - வண்டில என்ன லோடு?

ம்.. வாழைப்பழ தாரு சார்.. 

எதுக்கு தார்ப்பாய் போட்டு மூடி இருக்கு? 

வெய்யில்ல என்னை மாதிரி கருத்துடக்கூடாதுன்னுதான்.. 

17. இந்த நாட்ல படிச்சவனுக்கு வேலை கிடைக்கலைன்னா பாழாப்போறது அவன் இல்லை.. இந்த சமூகமும் நாடும் தான்..  ( செம கிளாப்ஸ்)

18. உடம்பு கெட்டா மனசு கெட்டுடும்.. மனசு கெட்டா உடம்பு கெட்டுடும், 2ம் கெட விடலாமா?

19.  இப்போ மணி மிட் நைட் 12.. இப்போ போய் பணம் கேட்டா அவர் கொடுப்பாரா?

இந்த நேரத்துலதான் மனுஷன் சந்தோஷமா இருக்கற நேரம்..  ட்விங்க்கிள்   ட்விங்க்கிள் லிட்டில் ஸ்டார்.. அண்ணன் ஒரு மேட்டர் ஸ்டார்..  ( செம கைதட்டல்)

20.  இத்தனை நகை வெச்சுக்கிட்டு அதை ஏன் கழட்டித்தராம இருக்கானேன்னு சந்தேகப்படாதே.. ஆல் கவரிங்க்.. எல்லாம் கவர் பண்ணத்தான் ஹி ஹி 


http://i.indiglamour.com/photogallery/tamil/freshface/2011/jan29/Anjali/normal/Anjali_30506rs.jpg

21.  டேய்.. எட்டாங்கிளாஸ்ல உனக்கு சொல்லித்தரலையா? ஸ்பிரிட் ஐஸ் ஆகனும்னா அது மைனஸ் 120 டிகிரில இருக்கனும் ( சத்தியமா எங்க சயின்ஸ் டீச்சர் செந்தாமரைச்செல்வி சொல்லித்தரவே இல்லை யுவர் ஆனர்...)

22. சுக்கிர திசை நடக்கறதா சொன்னாங்க/. சூறாவளி வந்திருக்கு?

23.  டேய்.. 12 சி பஸ் இங்கே நிக்குமா?

இங்கே நிக்காது.. கொஞ்சம் தள்ளி நிற்கும்.. 

24.  லவ் பண்ணுனா  மேரேஜ் மட்டும் பண்ணீ வைங்கடா.. எதுக்குடா மதம் மாத்தறீங்க? ( ராகவன் சாருக்கு நயன் தாரா மேல என்ன கோபமோ? ) தியேட்டரில் செம கிளாப்ஸ்

25.  இவரு அடிப்பாரு.. நாம பார்த்துட்டு இருக்கனுமா?

வயசான ஆளுங்களை நான் அடிக்கறதில்லை.. 

26. உடனே ரூமைப்போடறோம்.. ஒரு கட்டிங்கை அடிக்கறோம்.. யோசிக்கறோம் ( 3 முறை வரும் இந்த டயலாக் செம வரவேற்பு)

http://www.tamilactresspics.com/new-gallery/plog-content/images/tamil-actress/anjali/anjali-_17__002.jpg


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. இத்தனை நட்சத்திரப்பட்டாளத்தை வைத்துக்கொண்டு, குழப்பம் இல்லாமல் திரைக்கதை அமைத்த விதம்.. 

2. கொலை காரி  பாட்டு செம மெலோடி.. அந்த பாட்டின் பிக்சரைசேஷன் செம.. தென்னந்தோப்பு சூழந்த கடற்கரை பிரதேசம்.. ஒளிப்பதிவு கண்ணுக்கு குளுமை.. 

3.  கரண்க்கு கண் பார்வை போகும் இடம் , அந்த சீன் படமாக்கப்பட்ட விதம்..க்ளைமாக்ஸில் வாய்ப்பிருந்தும் ஹீரோயிசம் வெளிப்படுத்தாமல் இயல்பான ஆக்‌ஷன் காட்சிகள்... 

4. அஞ்சலியின் தந்தையாக வரும் வில்லனின் அமைதியான நடிப்பு, சரவணன் சர்ச்சில் வந்து தகராறு செய்யும் இடம், போலீஸ் இன்ஸ்பெக்டரின்  நடிப்பு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgihz_JnNYOjehSc4xvL5Thm16aUdXHSv4qPKgUrOFGXsiSXWbdNSwdup1_QS8cDYAakMg2aXhvfVtMQ3qxM8IK9y8NsaNQegGFKa42cEtfBnmvLLrByW3NhMtXlsrAtZqg71m_bz01vtk/s1600/Anjali+%2540+SRM+University+Stills_01.jpg

 இயக்குநரிடம் சில கேள்விகள், ஆலோசனைகள் , சந்தேகங்கள்

1.  படத்தோட ஓப்பனிங்க் சீன்ல பாம்பிளாஸ்ட்ல செத்துப்போன , கருகிப்போன  அந்தப்பெண்ணோட தங்க செயின் மட்டும் கொஞ்சம் கூட கருகாம இருக்கே? எப்டி? தெறிச்சு விழுந்திருக்குமோ?

2.  ஹீரோ பஸ்ல வர்றப்ப ஒரு ரூபா காசை ஹீரோயின் ஜாக்கெட்ல கை தவறிப்போடறது இன்னும் எத்தனை படத்துல பார்க்கறது? அது என்ன உண்டியலா?

3. போலீஸ் செலக்‌ஷன் காட்சிகள் எல்லாம் குள்ள நரிக்கூட்டம் படத்தில் வந்தாச்சே சார்... சீன் மாத்தி இருக்கலாம்.. அப்புறம் படத்துக்கே ஆணி வேரான அந்த கலாட்டா சீன் சிம்ப்பிளா முடிச்சுட்டீங்களே?

4.  கவர்மெண்ட்  வேலை கிடைக்கலைன்னா தற்கொலை பண்ணிக்கற அளவு  மெச்சூரிட்டி இல்லாமயா இப்போதைய இலைஞர்கள் இருக்காங்க..? ( ஒரு வேளை  கதை நடந்த கால கட்டம் பல வருஷங்களூக்கு முன்போ?)

5.  கரண் ஒரு குத்தாட்டப்பாட்டுல எம் ஜி ஆர் ஸ்டைல்ல நடிக்கரார், ஓக்கே.. ஆனா அது ஒரு குத்தாட்டப்பாட்டு , அரை குறை  டிரஸ்ல  வர்ற அந்த எக்ஸ்ட்ரா நடிகை வர்றப்பத்தான் அவர் அந்த ஸ்டைல் பண்ணி எம் ஜி ஆர் பேரை கெடுக்கனுமா?

6.  திரைக்கதைல இன்னும் ட்ரிம் பண்ணலாம்.. ஏகப்பட காட்சிகள், சம்பவங்கள்.. சாதாரண ரசிகனால எல்லாத்தையும் ஞாபகம் வெச்சுக்க முடியுமா?


ஏ செண்டர்ல 3 வாரம் ஓடும்.. பி , சி செண்டர்ல 10 நாட்கள் ஓடும்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - சுமார்

http://www.venkia.com/pdata/7738.jpg

சி,பி கமெண்ட் -  படத்தில் வன்முறைக்காட்சிகளும், தன்னம்பிகையை குலைக்கும் காட்சிகளும் அதிகம் என்பதால் கர்ப்பிணி பெண்கள், பள்ளிமாணவ மாணவிகள் தவிர்த்து மற்றவர்கள் பொழுது போகாம இருந்தா போலாம்.. 

ஈரோடு தேவி அபிராமி தியேட்டர்ல படம் பார்த்தேன்


டிஸ்கி -1

IMMORTAL - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 2 -

நான் சிவனாகிறேன் - சைக்கோ த்ரில்லர் - சினிமா விமர்சனம்

Saturday, September 17, 2011

எங்கேயும் எப்போதும் - அசத்தலான திரைக்கதை யுக்தி + அஞ்சலியின் அழகு நடிப்பு - சினிமா விமர்சனம்

http://i.indiglamour.com/photogallery/tamil/movies/2011/Aug03/Engeyum-Eppothum/normal/Engeyum-Eppothum_30405rs.jpg 

ஒரு படத்துக்கு திரைக்கதை எப்படி இருக்கனும்னு பார்க்க ஆசையா?ஒரு பஸ் பயணம் நம் மனசில் நீங்கா இடம் பெற நினைக்கறீங்களா.?ஒரே படத்தில் அழகிய 2 காதல் கதைகளை வேறு வேறு கோணத்தில் ரசிக்க எண்ணமா.? சாலை விதிகளை மதிக்காம வேகமா போகும் ஆட்களை திட்டும் நீங்கள் இனி என்றென்றும் அவர்கள் மேல் அனுதாபம் கொள்ள நினைப்பு இருக்கா? இறக்கப்போகும் மனிதர்களின் கடைசி கட்ட ஆசைகளை கண்ணீரோடு பார்க்க துடிப்பா? நீங்கள் அவசியம் காண வேண்டிய படம்தான் எங்கேயும் எப்போதும்.

ஏ ஆர் முருகதாஸ்ட்ட இயக்குநர் ஒன் லைன் கதை சொல்லும்பொதே இது செம ஹிட் ஆகற சப்ஜெக்ட்னு அவர் புரிஞ்சிருப்பார் போல.. அதான் துணிச்சலா தயாரிச்சுட்டார்...

படத்தோட ஓப்பனிங்க் ஷாட்லயே 2 பஸ் மோதறதை , அதன் பயணிகள் 80% பேர் இறப்பதை , பலர் படுகாயம் அடைவதை காட்டி விட்டு 4 மணீ நேரம் முன் என சப் டைட்டிலுடன் கதை சொல்லும் யுக்தியை தொடங்கும் போதே டெம்போ ஏறுது. இயக்குநர் சரக்குள்ள ஆள்னு தெரிஞ்சுடுது.

சென்னைக்கு முதல் முதலா இண்ட்டர்வியூவுக்கு வரும் அனன்யா - புது முகம் சர்வா ஒரு ஜோடி. அனன்யாவின் அநியாய அப்பாவித்தனமும்,ஓவர் முன் ஜாக்கிரதையும் ஹீரோவுக்கு எரிச்சலை கொடுத்தாலும் ஆடியன்ஸூக்கு
புன்னகையையே தருகின்றன...அனன்யா சென்னை வந்து ஒரு இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணி அக்கா வீட்டுக்கு போவதை மட்டும் போர் அடிக்காமல் 48 நிமிடம் சுவராஸ்யமான சம்பவங்களுடன் சொன்னதற்காகவே இயக்குநரை பாராட்டலாம்.. 


http://3.bp.blogspot.com/-HUp5FGk92uA/TZ72th5mdCI/AAAAAAAAREg/YXaWMCp2CmA/s1600/Jai_Anjali_In_Engeyum_Eppothum_Tamil_Movie_Gallery_3.jpg
அதிலும் இருவரும் நடந்து போகும்போது அனன்யா தன் ஒரு கையை மட்டும் முதுகுப்பக்கம் மடக்கி போவது செம .. ( கை அவர் மேல் பட்டுடக்கூடாதாம்.. )மெல்ல மெல்ல அவர் மேல் காதல் கொள்வது அழகு... இவர்களது காதல் கதை நாம் பக்கத்தில் இருந்து பார்ப்பது போலவே பிரமதமாய் செட் ஆகி விடுகிறது.. 



அடுத்து ஜெய் - அஞ்சலி.. காதல்.. அஞ்சலி தெனாவெட்டான பொண்ணு, ஜெய் கொஞ்சம் அப்பாவி, பயந்தாங்கொள்ளி...தன்னை விட 4 மாதம் மூத்த ஃபிகரான எதிர்  வீட்டு அஞ்சலியை அவர் வாங்க போங்க என்று  அழைக்கும் அழகும், அஞ்சலி அவரை வா போ என அசால்ட்டாக அழைப்பதும் அசத்தல். 

அஞ்சலி ஜெய்யை ஹாஸ்பிடல் அழைத்துப்போய் எய்ட்ஸ் டெஸ்ட் எடுப்பது, ஜெய்யின் சம்பளப்பணத்திலேயே ஜெய்க்கே டிரஸ் எடுத்துக்கொடுப்பது,காபி ஷாப் போவது, அவர் வேலை செய்யும் இடத்துக்கே  போய் அலப்பறை செய்வது என அஞ்சலியின் ராஜாங்கம் படம் நெடுக.. அங்காடித்தெருவில் ஃபோர் அடிச்சவர் இதில் சிக்சர்!!!!!!!!!!!!!

எல்லோரையும் விட படத்துல எல்லார் மனதையும் பாதிக்கும் இரு கேரக்டர்கள் பற்றி சொல்லியே ஆகனும்.. மனைவி கர்ப்பம் ஆனதும் ஃபாரீன் வேலைக்குப்போகும் கணவன் 5 வருஷம் கழிச்சு திரும்பி வர்றான்.. அவர் அதுவரை நேரில் பார்க்காத தன் மழலையை ஃபோன் மூலம் மட்டும் பேசி கொஞ்சி மகிழ்பவர்...அடிக்கடி எப்போப்பா வருவே? என தன் குழந்தை கேட்கும்போது சமாளிப்பவர்.. அவர் விபத்தில் இறந்த பின் அந்த குழந்தை ஃபோன் செய்கிறது.. கல் நெஞ்சையும் கரைக்கும் காட்சி... 

மணமான தம்பதி- தன்  மனைவியை பஸ் ஏற்ற வரும்  கணவன் அவளைப்பிரிய மனம் இன்றி கொஞ்ச தூரம் வந்துட்டு பின் இறங்கிக்கொள்வதாய் சொன்னவன் பின் இறப்பது பயங்கரம்.!


http://g.ahan.in/tamil/Engeyum%20Eppothum%20Movie%20Stills/Engeyum%20Eppothum%20(52).jpg

எங்கேயும் எப்போதும் நம் காதில் ஒலிக்கும் வசனங்கள்

1.  XQS  மீ, உங்க பொண்ணுக்கு சாக்லெட் தரலாமா?

அவ புது ஆளுங்க யார் குடுத்தாலும் வாங்க மாட்டா!!!!

இல்லம்மா, வாங்கிப்பேன்!!!!!!!!!

2. மேடம், உங்களை சீட் மாறி உட்கார வைக்கறேன்.. வெயிட் ப்ளீஸ்!!!!

யோவ் கண்டக்டர்! அவ உன்னை கேட்டாளா? சரியான பி ஜே பி ய்யா!!

3. நீங்க தம் அடிப்பீங்களா?             ம்

தண்ணி அடிப்பீங்களா?        ம்

அப்போ அந்த 3 வது தப்பு? 

கொள்ளையா? கொலையா?

4. இங்கே பாரம்மா, சென்னைல எல்லாரும் பார்க்க டீசண்டா தான் இருப்பாங்க.. பழைய படத்துல வர்ற மாதிரி கன்னத்துல மருவும்,கழுத்துல கர்ச்சீப்பும் கட்டி இருக்க மாட்டாங்க.. 

5. ஆமா, நீ ஏன் சிவப்பு கலர் டிரஸ்?

என் ஆள் சிவப்பு கலர் டிரஸ்... அதான்.. ஆமா நீ ஏன் மறுபடி ஒரு கலர்  மாத்தறே?

எனக்கு 2 லவ்வர்.. 

நீ ஏன் காக்கி யூனிஃபார்ம்லயே வேலைக்கு வந்துட்டே?

ம், என் ஆள் பாலிடெக்னிக்ல படிக்கரா, அவளுக்கு இதான் யூனிஃபார்ம்.. 

6. ஏண்டா? அம்மாவுக்கும் எனக்கும் வித்தியாசம் தெரியாம சிக்னல் காட்டுவியா? லூஸா? நீ?

7. இங்கே பாரு.. இது வரை எப்படியோ? லவ் பண்ண ஆரம்பிச்சுட்டே இல்ல? இனி பர்மிஷன் லீவ் எல்லாம் இருக்கனும். எடுக்கனும்.. புரியுதா?

8.  ஆஃபீஸ்ல இருந்து வர்றப்ப சம்பள கவரை கொண்டாந்துடு.. 

எதுக்குங்க?

அதான் என்னை லவ் பண்றதா சொல்லிட்டியே?எதுக்கு கேள்வி எல்லாம்/

9. ஆமா.. என்ன உன் உதடு சிவப்பா இருக்கு? லிப்ஸ்டிக்கா போடறே? ஆம்பள அதை போடலாமா?

இல்லீங்க. குச்சி ஐஸ் சாப்பிட்டேன்.. 

10. என்னங்க.. இந்த பேண்ட் கிழிஞ்சிருக்கு.. வேணாம்.. வேற எடுங்க.. 

டேய் லூசு.. அதுதான் ஃபேசனே!!!


http://www.koodal.com/cinema/gallery/events/2011/666/engeyum-eppothum-movie-press-meet-stills_10_152630123.jpg

11.  என்னங்க? காஃபி சூடா இல்லாம ஜில்னு இருக்கு?


டேய் கேனை.. கோல்ட் (COLD)  காபி அப்படித்தான் இருக்கும்.. 


12. என்னது? ஒரு காபி 80 ரூபாவா/ அய்யோ..!!!பீரே 80 ரூபாதான்..

அப்போ நீ பீர் அடிப்பியா?

சத்தியமா இல்லீங்க!!!!

நான் மட்டும் ஆம்பளையா இருந்தா உலகத்துல இருக்கற எல்லா சரக்கும் டேஸ்ட் பார்த்திருப்பேன்.. 

13.  இப்போ பார்த்துட்டு வந்தியே? அவர் யார்னு தெரியுமா? உனக்கு?

ஏட்டு?

அது உனக்கு.. எனக்கு?

ஏங்க.. எனக்கு ஏட்டுன்னா உங்களூக்கும் ஏட்டாத்தானே இருக்க முடியும்?உங்களூக்கு மட்டும் டி ஐ ஜியாவா இருக்கப்போறார்?

ஜோக்கு?

இல்ல, உங்களூக்குப்பிடிக்குமேன்னு......

அவர் தான் எங்கப்பா!!!!!!!!

14.  உங்க ஊர்ல எல்லாம் பொம்பளைங்க சமைக்க மாட்டாங்களா?

ஏன் கேட்கறே?

ஹோட்டல்ஸ்ல இத்தனை பொம்பளைங்க?

அவங்க எல்லாம் வேலைக்குப்பொறவங்க.. 

எங்க ஊர்லயும் வேலைக்குப்போற பொண்ணுங்க சமைச்சு , புருஷனுக்கு சாப்பாடும் குடுத்து விடுவாங்க.. 

15. முதல்ல உங்களை நம்பல்.. அதனால பயமா இருந்தது.. இப்போ உங்களை நம்பறேன் ஆனா என்னை நம்பலை.. எனக்கே என்னைக்கண்டு பயமா இருக்கு.. அதான் உங்களோட ஆட்டோல ஒண்ணா வர்லை.. 

16. இங்கே பாருங்க.. இப்போ நீங்க சிரிக்காதீங்க.. என் ஆஃபீஸ் கொலீக்ஸ் கேட்டா என்னை தப்பா நினைப்பாங்க.. 

டேய் நாயே.. அவங்க சிரிக்கலைன்னாலும் தப்பா தான் நினைப்போம்.. 

17. உங்க ஆள் ரொம்ப நல்லவன்.. எனக்குத்தெரிஞ்ச எல்லா மொழிலயும் அப்ரோச் பண்ணிட்டேன். ஆள் கண்டுக்கவே இல்லை.. அப்புறம் என்னைப்பற்றி நல்லாத்தெரிஞ்ச  ஒரு கேனையை கட்டிக்கிட்டேன்.. அது அதோ அவன் தான்.. 

18.  நான் செம அழகு இல்லைதான். தனியாப்பார்த்தா.. ஆனா அவன் கூட வெச்சு கம்ப்பேர் பண்ணிப்பாருங்க.. நான் ஓரளவு அழகுதான்,,

19. ம்.. சரி சரி.. என்னை கட்டிக்கோ!!!

இல்லைங்க , கல்யாணத்துக்கு அப்புறம் கட்டிக்கறேன்.

சரி.. நீ வேணா கல்யாணத்துக்கு அப்புறம் கட்டிக்கோ. நான் இப்பவே கட்டிக்கறேன்.. 

20. சரி என் மேல கோபப்படு பார்க்கலாம்?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglFHEmevCZszYozLMJYsh-kUmMX2pYQAOD8XplISaa6efKzCJAtjkI_Uqxb_LhMyDB9_KmAw5YYJO3p4hsMkf3CrffQGTUbtz376-qARmO_Q-WzOZ4XeWEAs9v-AltUQrbcyEpBSgf5Xk/s1600/ananya+tamil+movies00-9.jpg

சாரிங்க.. முடியாது.. 

1.உன் பேரே தெரியாது. 2.  சொட்ட சொட்ட நினைந்துவிட்டாய்3. கோவிந்தா என 3 பாடல்கள் ஆல்ரெடி ஹிட் லிஸ்ட்டில்.

ஒளிப்பதிவு கலக்கல்.. பெரும்பாலான காட்சிகள் பஸ்ஸுக்குள் தான் என்றாலும் நீட் ஃபோட்டோகிராஃபி..  2 பஸ்களும் மோதும் காட்சிகள், விபத்து நடக்கும் சந்தர்ப்பம் 2ம் அசத்தல்..

படத்துக்கு பின்னணி இசை பக்க பலம்..

கே பாலச்சந்தர் படம் போல் ஒவ்வொரு கேரக்டரையும் மனசில் தங்க வைக்கும் டெக்னிக் ஓக்கே!


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijr9d9Gt9sogoDsrGbixE10HxhjkIlguwTgaopTrVCC0GmkN6RcHxzKL9SMmrnkZApm_19oSQ0m2_SnnyPDJpdUM0RrNJlg-Eb5L4XV9VSocAQGiRPdqFA-69bwnv2X37XyJIBykoMfihv/s1600/1296908491-tamil-hot-actress-anjali-in-saree-photosactressinsareephotos.blogspot.com7.jpg

இயக்குநரிடம் சில சந்தேகங்கள்

1. ஓப்பனிங்க்லயே பஸ் ஆக்சிடெண்ட் ஆகப்போகுதுன்னு சொல்லிட்டதால நிதானமா வர்ற காதல் காட்சிகள் கொஞ்சம் பட படப்பை ஏற்படுத்துது.. அதாவது அழகான காதல் காட்சிகள் வந்தாலும் மனம் அதுல ஒன்றிட முடியல்.. அதுக்குப்பதிலா விபத்து நடக்கப்போவதை முன் கூட்டியே சொல்லாம விட்டிருந்தா சஸ்பென்ஸுக்கு சஸ்பென்ஸூம் ஆச்சு.. காதல் காட்சிகளில் ஆடியன்ஸ் இன்னும் நிதானமா மனம் லயிச்சு பார்த்திருக்கலாம்.. 

2. உடல் தானம் பற்றிய விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்ட காட்சி தான் என்ராலும் ஒரு பெண் அவள் என்னதான் நர்ஸா இருந்தாலும் லவ் புரொப்போஸ் பண்ண அடுத்த நிமிஷமே அவனை உடல் தானம் பண்ண ஹாஸ்பிடல் அழைத்துச்செல்வாளா?

3. ஜெய் அஞ்சலிக்கு சிக்னல் காட்டிட்டு பல் துலக்கும் காட்சியில் சுவர்க்கடிகாரம் 6.30 என காட்டுது.. அடுத்த ஷாட்ல 7.40 என காட்டுது.. அதுக்கு அடுத்த காட்சில மறுபடி 6.35 காட்டுது.. எடிட்டிங்க் ஃபா;ல்ட்டா?

4. க்ளைமாக்ஸில் ஜெய்க்கு தலையில் அடிப்பட்டு காதில் ரத்தம் வந்து சீரியஸ் என தெரிந்தும் அஞ்சலி அவருடன் செல்லாமல் இங்க்ர்ர்யே தங்கி மற்ரவர்களுக்கு உதவி செய்வது செயற்கையா இருக்கே? தனக்கு மிஞ்சித்தானே தான தர்மம்?

5. க்ளைமாக்ஸில 2 செட் லவ் ஜோடிகள்ல அந்த சைடுல ஒரு ஆண், இந்த சைடுல ஒரு பெண்ணை உயிர் இழக்க வைத்து விட்டு ஆல்ட்டர்நேடிவ் ஜோடியை ஜோடி சேர்க்கலாமா? என திரைக்கதையில் தடுமாறியிருக்கத்தேவை இல்லை.. 

6.அனன்யாவுக்கு அவர் லவ்வர் பற்றி எந்த விபரமும் தெரியாது.. ஊர்ப்பெயர் மட்டும் தான் தெரியும்.. ஆனா அவரைப்பார்க்க எப்படி கிளம்பறார்? ஆனா அவர் ஏன் அனன்யாவைப்பார்க்க அவரோட ஊர்க்கு வர்லை?


http://mimg.sulekha.com/anjali/images/wallpaper/1024-768/anjali-desktop-wallpapers028.jpg

சாலை வாகனங்களின் வேகத்தைப்பற்றிய நல்ல விழிப்புணர்வுப்படம் ,கமர்ஷியலாய்!!!!!!!

ஏ செண்ட்டர்களில் 60 நாட்கள் பி செண்ட்டர்களில் 50 நாட்கள். சி செண்ட்டர்களில் 20 நாட்கள் ஓடும்... 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 44

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - நன்று 

சி.பி கமெண்ட் - மென்மையான மனம் கொண்ட காதலர்கள் பார்க்க வேண்டிய அசத்தலான திரைக்கதை . மார்க் - 50

 ஈரோடு தேவி அபிராமியில் படம் பார்த்தேன்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9sd5dEWp0thF6R6MAY5HXILqlEh8ExwqLKk3e6LOnYX01gP0YGrvw8AoX0JxjI_ZyGi3qnEzeK6qXaDScFTH6QVs96en4igSfjmvUlAo85bqNFqKb-vVokI-b7pFdesuvcIdgg1JGxMo/s1600/Tamil-Actress-Anjali-latest-stills-photos-09.jpgA

டிஸ்கி - பட விமர்சனத்துக்கு சம்பந்தம் இல்லாத ஒரு மேட்டர்.. அனன்யா பார்க்க நெக்ஸ்ட் டோர் கேர்ள் போல இருந்தாலும் அவரை ரசிக்க  முடியவில்லை.,. ஏதோ சித்தி பொண்ணு, பெரியப்பா பொண்ணு போல இருக்கார்.. ஃபிகர்னா பார்த்ததும் மாமா பொண்ணு எஃப்க்ட் வேணும். பை சமந்தமில்லாம டிஸ்கி போடுவோர் சங்கம்

டிஸ்கி 2 -

வந்தான் வென்றான் - சந்தானம் பகடி + தப்ஸியின் ஜிகிடி - சினிமா விமர்சனம்