Wednesday, August 12, 2026

I,Nobody(2026)- மலையாளம்/தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் சஸ்பென்ஸ் ஆக்சன் திரில்லர்)

 


பிரிதிவ்ராஜ் சுகுமாரனின் சொந்தப்படம் இது.அசீப் அலி-வீணா நந்தகுமார் நடித்த .Kettiyollaanu Ente Maalakha(2019),ரொமாண்டிக் காமெடி மூவி,மம்முட்டி-கிரேஸ் ஆண்ட்டனி நடித்த Rorschach(2022) ரிவஞ்ச் திரில்லர் மூவி ஆகிய படங்களை இயக்கிய நிசாம் பஷீர் இயக்கி இருக்கும் படம் இது.ஹெய்ஸ்ட் திரில்லர் என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும் இது சஸ்பென்ஸ் திரில்லர் கேட்டகிரியில் தான் வரும்.


2021 ல் ரிலீஸ் ஆன ஹாலிவுட் படமான நோ படி படத்துக்கும்,இந்தப்படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

9/7/2026 முதல் கேரளாவில் ரிலீஸ் ஆன இந்தப்படம் 10/7/2026  முதல்தமிழகத்தில்  தமிழ் டப்பிங் கில் கிடைக்கிறது

நான் உங்களைப்போல் சாராரணமானவன்,வேறு யாரும் இல்லை என்பதுதான் படத்தின் டைட்டிலுக்கான அர்த்தம்.


ஸ்பாய்லர் அலெர்ட்


நாயகன் தன்னுடைய மனைவி,இரு மகள்களுடன் வாழ்ந்து வருபவன்.நடுத்தரக்குடும்பம்.கணவன் ,மனைவி இருவரும் பணிக்கு  செல்பவர்கள்.

ஒரு நாள் நாயகன் ஒரு வேலையாக வங்கிக்கு செல்கிறான்.ஒரு மூன்று பேர் கொண்ட கொள்ளைக்கும்பல் அந்த வங்கியில் 17 கோடி ரூபாய் பணத்தைக்கொள்ளையடிக்கிறது.பணயக்கைதியாக வங்கியில் இருந்த நாயகனை அழைத்துச்செல்கிறது.

கொள்ளையடிக்க வந்த வண்டியிலிருந்து இன்னொரு வண்டிக்கு மாறியதும் நாயகனை விட்டு விடுகிறார்கள்.ஆனால் அவர்கள் பயணித்த வண்டி விபத்துக்குள்ளாகி கொள்ளையர்கள் மூவரும் ஸ்பாட் அவுட்.

ஆனால் கொள்ளையடித்த பணத்தைக்காணவில்லை.போலீஸ் விசாரணை நடக்கிறது.
நாயகனுக்கும் ,இந்தக்கொள்ளை கும்பலுக்கும் எதோ தொடர்பு இருக்கிறது என போலீஸ் சந்தேகிக்கிறது.இந்த சமூகமும் நாயகன் மேல்  வெறுப்பை உமிழ்கிறது.

நாயகன் இந்தப்பிரச்சனைகளிலிருந்து வெளியே வந்தாரா?அதற்காக என்னென்ன செய்தார்?என்பது மீதித்திரைக்கதை.

நாயகனாக பிரித்விராஜ் பிரமாதமாக நடித்திருக்கிறார்.ஒரு அமைதியான நடுத்தரக்குடும்பஸ்தனைக்கண் முன் நிறுத்துகிறார்.ஒரு கண்ணில் அடிபட்ட பின்  ஒரு மாதிரியாக ஒரு கண்ணால் பார்ப்பதை சிரமப்பட்டு உழைத்திருக்கிறார் காசி படத்தில் விக்ரம் இதே போல் உழைத்திருந்தார்.

நாயகனின் மனைவியாக பூ படப்புகழ் பார்வதி பாந்தமான ரோல்.ஆனால் அதிக வாய்பில்லை.வந்த வரை ஓக்கே.

நாயகனின் பெண் குழந்தைகளாக வரும் நட்சத்திரா ,ஐரா இருவரும்  அழகு செல்லங்கள்.

இவர்கள் போக ஹக்கீம் ஷாஜகான்,அசோகன்,மதுபால்,சந்திரன்,விஜயராகவன்,ரோனி வர்கீஸ் உட்பட அனைவரும் அவரவருக்குக்கொடுக்கப்பட்ட கேரக்டரை சரியாக செய்திருக்கிறார்கள்.

ஜேக்ஸ்  பிஜோயின் இசையில் ஆங்கிலப்பாடல்கள்,ஹிந்திப்பாடல்கள் அதிகம்.இது எதற்காக என்று தெரியவில்லை.பின்னணி இசை கச்சிதம்.

தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு கலக்கல் ரகம். எம்.பி ரமீசின் எடிட்டிங் கில் படம் 168. நிமிடங்கள் ஓடுகிறது.பின் பாதியில் இழுவை.இன்னமும் ட்ரிம் பண்ணி இருக்கலாம்.

சமீர் அப்துல் திரைக்கதை அமைத்திருக்கிறார்.முதல் பாதி திரைக்கதையை க்ரிஸ்ப் ஆக எழுதியவர் பின் பாதித்திரைக்கதையை நம்ப முடியாத தெலுங்கு ஆக்சன் மசாலா ரேஞ்சுக்கு எழுதி விட்டார்.


நிக்சன் ஜார்ஜின் சவுண்ட் டிசைனிங் ஒர்க் பிரமாதம்.ஆக்சன் கொரியோகிராபியை மூவர்  கொண்ட குழு வடிவமைத்திருக்கிறது.அதகளமான ஆக்சன் சீக்வன்ஸ் .லிப்ட் பைட்,ஸ்ட்ரீட் பைட்,ஓப்பனிங்க் பைட் அனைத்தும் அருமை.


சபாஷ் டைரக்டர்

1 பரபரப்பான ,விறுவிறுப்பான ,கலக்கலான திரைக்கதையுடன் முதல் பாதி அருமை.ஒரு  சீன் கூட போர் அடிக்கவில்லை.

2 இடைவேளை பிளாக் சீனுக்கு முன் வரும் அமளிதுமளியான மூன்று சம்பவங்கள் செம.கவன் என்ற தமிழ்ப்படத்தில் இதே போல் இண்ட்டர்வெல் பிளாக் சீனுக்கு முன் 2 செமயான சம்பவங்கள் வரும்.

3  லிப்டில் நடக்கும் ஆக்சன் பிளாக் செம. கேமரா கோணம் செம.

4 காருக்குள் நடக்கும் ஆக்சன் சீன  கேமராவில் சுழற்றி சுழற்றிக்காட்டுவது இப்போது பேஷனாகி விட்டது.இதிலும் அப்படி ஒரு சம்பவம் எடிட்டர்,ஒளிப்பதிவாளர் இருவரும் இணைந்து கலக்கி இருக்கிறார்கள்.

5 கணவன் ,மனைவிக்குள் நிகழும் கருத்து மோதலை படமாக்கிய விதம்.

6 பேங்க் ஹெய்ஸ்ட் திரில்லரில் ஒரு காதல் விஷயத்தைப்புகுத்திய விதம்.
7 நாயகனுக்கு இளைய மகளுடனான பாண்டிங் அருமை.

8 யூ ட்யூபில் வரும் விஷயத்தை நம்பி மக்கள் எப்படி திசை திரும்புகிறார்கள் என்பதைக்காட்டிய விதம் குட்.

9 ஓப்பனிங்க் சீனில் நாயகன் வங்கிக்கு செல்லும்போது துப்பாக்கியை ஏன் எடுத்துச்செல்கிறார்?என்ற சஸ்பென்சை ஓப்பன் செய்த விதம் குட்.


லாஜிக் மிஸ்டேக்ஸ்

1 பின் பாதி திரைக்கதை யில் சுவராஸ்யமான சம்பவங்கள் எதுவுமே இல்லை.
2 கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கே இருக்கிறது என்பது ஆடியன்சான நமக்குத்தெரிந்து விடுகிறது.ஆனால் படத்தில் யாருக்கும் தெரியவில்லை.இது எடுபடவில்லை.

3 முதல் பாதியில் பிரில்லியண்ட்டாகத்திரைக்கதை அமைத்தவர்கள் பின் பாதியில் தெலுங்கு ஆக்சன் மசாலா போல் தேவை இல்லாத ஹீரோ பில்டப் பைட்ஸ்  இணைத்துத்திணித்து சொதப்பி விட்டார்கள்.
4 நாயகி தன் மகளைக்காணோம்,,பார்த்தீங்களா?எனக்கேட்பது அபத்தமான காட்சி.

5 கடை வீதியில் எல்லோரும் பார்க்கும்படி அவ்ளோ பெரிய பேக்கை நாயகன் தூக்கிக்கொண்டு வருவது ஏற்புடையதே அல்ல.

6 மினிஸ்டரைக்கிண்டல் செய்யும் காட்சி,வசனம் தேவை இல்லாத காட்சி

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 16+


 CPS கமெண்ட் - பிரமாதமான முதல் பாதி ,சொதப்பலான பின் பாதி ,சராசரியான சஸ்பென்ஸ் திரில்லர்.பார்க்கலாம்.ரேட்டிங் 2.5/5

Tuesday, August 11, 2026

Pritam and Pedro (2026)-ஹிந்தி/தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் (சைபர் க்ரைம் காமெடி திரில்லர்)@ஜியோ ஹாட் ஸ்டார்

 

PK (2014),Sanju(2018) ,Dunki(2023) ஆகிய படங்களை இயக்கிய  ராஜ் குமார் ஹிரானி இயக்கிய வெப் சீரிஸ் இது.ஜியோ ஹாட் ஸ்டாரில் தமிழ் டப்பிங் கில் இருக்கிறது.மொத்தம் 6 எபிசோடுகள்,ஒவ்வொரு எபிசோடும் 32 டூ 37 நிமிடங்கள், ஆக மொத்தம்  மூன்றரை மணி நேரம் ஒரே அமர்வில் பார்த்து விடலாம்.இயக்குநர் ராஜ்குமார்  ஹிரானியின் மகன் வீர் ஹிரானி தான் இந்த வெப் சீரிசின் நாயகன்.




ஸ்பாய்லர் அலெர்ட்


வில்லனின் அப்பா ஒரு காலேஜில் புரொபசராகப்பணியாற்றும்போது நாயகன் அவரிடம் மாணவனாகப்படிக்கிறான்.நாயகன் ஹேக்கிங் செய்வதில் ,சிஸ்டம் உபயோகிப்பதில் வல்லுனன்.ஆனாலும் படிப்பில் சுமார் தான்.எல்லோருக்கும் முன் நாயகனை வில்லனின் அப்பா மட்டம் தட்டி அவமானப்படுத்தி விட நாயகனுக்கு செம கோபம்.

எல்லா மனிதர்களுக்கும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் உண்டு என்று குருதிப்புனலில் புகழ் பெற்ற வசனம் வருமே?அது போல் நாயகன் வில்லனின் அப்பா எதிலாவது  சிக்குவாரா?எனப்பார்த்து காத்திருக்கிறான்.அவனது ஹேக்கிங் டேலண்ட்டைப்பயன்படுத்தி அவருக்கு ஒரு இல்லீகல் அபேர் இருப்பதைக்கண்டுபிடிக்கிறான்.


வில்லனின் அப்பா ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை காலேஜில் பரப்புகிறான்.இதனால் எல்லோரும் அவரைப்பார்த்து சிரிக்கிறார்கள்.அவமானம் தாங்க முடியாமல் வீட்டுக்கு வந்தால் வில்லனின் அம்மா போனுக்கும் அந்த ஸ்டில் வந்து விட அவரும் கேவலமாகப்பார்க்கிறார்.இதனால் மனமுடைந்து வில்லனின் அப்பா தற்கொலை செய்து கொள்கிறார்.

நாயகனுக்குப்பெரிய அதிர்ச்சி.இப்படி ஆகும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.வில்லன் தன் அப்பாவின் மரணத்துக்குக்காரணமான நாயகனை வித்தியாசமான முறையில் பழி வாங்க நினைக்கிறான்.அவனது திட்டம் என்ன?  எண்ணம் நிறைவேறியதா?என்பது மீதித்திரைக்கதை.

நாயகனாக வீர் ஹிரானி அசால்ட் ஆக நடித்திருக்கிறார்.இயக்குநரின் மகன் என்பதால்  அவரது கேரக்டர் டிசைன் வலுவாக எழுதப்பட்டுள்ளது.நடிப்பும் ஓக்கே.

இன்னொரு நாயகனாக போலீஸ் ஆபீசராக காமெடி கலந்த ரோலில்  அர்ஷத் வர்சி நடித்திருக்கிறார்.சினிமாத்தனம் இல்லாத ,ஓவர் பில்டப் இல்லாத இயல்பான கதாப்பாத்திர வடிவமைப்பு இவருடையது.

வில்லனாக விக்ராந்த் மஸ்ஸி நடித்திருக்கிறார்.அதிக வாய்ப்பில்லை.க்ளைமாக்சில் ஓரளவு நடிக்க வாய்ப்பு.

இன்னொரு நாயகனாக வரும் போலீஸ் ஆபிசரின் மனைவியாக மோனா சிங் கச்சிதம்

ஸ்போர்ட்ஸ் மினிஸ்டராக  சத்யதீப் மிஸ்ரா கெத்து காட்டி இருக்கிறார்.மினிஸ்டரின் மனைவியாக  ஸ்ருதி மராத்தே கிளாமராக நடித்திருக்கிறார்.

இவர்கள் போக மற்ற அனைவரும் அவரவர் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

எடிட்டிங், இயக்கம்,தயாரிப்பு என ஆல் இன் ஆல் அறிவு ராஜாவாக ராஜ்குமார்  ஹிரானி  அசத்தி இருக்கிறார்.


பாடல்களுக்கான இசையை சாந்தனு மோய்ட்ரா வும் ,பின்னணி இசையை சஞ்சய் வந்த் ரேக்கரும், தீம் இசையை விஷால் கரானாவும் அமைத்திருக்கிறார்கள்.

சபாஷ் டைரக்டர்

1 ஓப்பனிங்க் சீனில் வரும் ஏ டி எம் கொள்ளைக்காட்சி பரபரப்பு என்றால் ஜஸ்ட் 10 நிமிடங்களில் கொள்ளையர்களைக்கண்டுபிடிப்பேன் எனப்போலீசுக்கு சவால் விடும் நாயகன் அதே போல் செய்வது பிரமிப்பு.

2  போலீஸ் ஆபீசருக்கும்,அவரது மனைவிக்கும் நடக்கும் தகறாரும் ,அதைத்தொடர்ந்து வரும் காட்சிகளும் பரபரப்பு.

3.  மினிஸ்டரின் மனைவி போன் மிஸ் ஆகுவதும் ,போலீஸ் ஆபீசர் அசால்ட் ஆக அதை டீல் செய்வதும்,சைபர் க்ரைம் செக்சனுக்கு பனிஷ்மெண்ட். போஸ்ட் பெறுவதும் காமெடி கல கல.

4.  மினிஸ்டரின் மகனை வில்லன் கடத்துவது ,நாயகன் தற்கொலை செய்து கொண்டால் தான் விடுவிப்பேன் என்று மிரட்டுவது பரபரப்பான காட்சிகள்.

5.  வில்லன் கேட்ட பணத்தை ஒரு பேக்கில் வைத்து  அவனை ட்ராக் செய்ய நாயகன் செய்யும் ஐடியா அபாரம்.

6 நாயகனும் ,போலீஸ் ஆபீசரும் அடிக்கடி பெட் கட்டிக்கொள்வது அதில் எப்போதும் நாயகனே ஜெயிப்பது சுவராஸ்யம்

7 நாயகன் ஒவ்வொரு கேசிலும்  ஹேக்கிங் மூலம் அசால்ட் ஆக வில்லனை முந்துவதைப்பார்க்கும்போது நமக்கும் ஹேக்கிங் கற்றுக்கொள்ள ஆர்வம் பீறிடுகிறது.


8 மினிஸ்டரின் மனைவியின். முன்னாள் காதலன் பழைய போட்டோக்களை வைத்து மிரட்டும்போது நாயகன் அந்தக்கேசை டீல் பண்ணும் ஐடியா அபாரம்.



ரசித்த வசனம்


காலம் மாறுது,திருடர்களும் மாறுகிறார்கள்,நாமும் மாறனும்.


லாஜிக் மிஸ்டேக்ஸ்


1  மினிஸ்டரின் மனைவியின் போன் மிஸ் ஆகி விட்டதும் அதைக்கண்டு பிடிக்க முடியாமல் போலீஸ் ஆபீசர் அதே மாடல் ,அதே கலர் போன் புதிதாக வாங்கித்தரும் ஐடியா எப்படி ஒர்க் அவுட் ஆகும்?அந்த போனில் கால் லாக்ஸ்,கேலரி செக் பண்ண மாட்டாங்களா?புது போன் பிளாங்க்காக இருக்குமே?

2 க்ளைமாக்சில் வில்லன் வருகிறானா?என்பதை போலீஸ் பைனாகுலர் மூலம் செக் செய்வது போல வில்லனும் செய்ய மாட்டானா?

3. க்ளைமாக்சில் மினிஸ்டரின் மகன். இருக்குமிடத்தைக்கண்டு பிடித்த போலீஸ் ஆபீசர் உடனே அந்த விஷயத்தை மினிஸ்டரிடமோ ,ஹையர் ஆபீசருக்கோ போன் பண்ணி சொல்லாமல் சாதா கான்ஸ்டபிளிடம் சொல்வது,அவர் தானே கண்டுபிடித்தது போல் மினிஸ்டரிடம் நல்ல பெயர் வாங்குவது சினிமாத்தனம்.நம்ப முடியவில்லை


அடல்ட் கண்ட்டண்ட் வார்னிங்.க்ளின் யூ


CPS பைனல் கமெண்ட் - விறுவிறுப்பான ,பர பரப்பான,காமெடியான சைபர் க்ரைம் திரில்லர்  வெப் சீரிஸ். பார்க்க விரும்புகிறவர்கள் பார்க்கலாம்.ரேட்டிங் 3/5

Pritam and Pedro
Created byRajkumar Hirani
Written by
Dialogues byPranjal Saxena
Shashank Kunwar
Rajkumar Hirani
Directed byAvinash Arun
Starring
Theme music composer
Vishal Khurana K
Composers
Country of origin
India
Original language
Hindi
No. of seasons1
No. of episodes6
Production
Executive producer
Sanjiv Kishinchandani
ProducerRajkumar Hirani
CinematographyAvinash Arun
EditorRajkumar Hirani
Running time32–37 minutes
Production companyRajkumar Hirani Films
Original release
NetworkJioHotstar
Release3 July 2026

Monday, August 10, 2026

Uyir(2026)-உயிர்- மலையாளம்- சினிமா விமர்சனம் ( போலீஸ் புரொசீஜர் க்ரைம் மிஸ்ட்ரி திரில்லர்)


 26/6/2026 முதல் கேரளாவில் வெளியான இந்தப்படம் இப்போது ஆங்கில சப் டைட்டிலுடன் தமிழகத்தில் 3/7/2026 முதல்  ஓடிக்கொண்டிருக்கிறது.


கோப்ரா என்ற தமிழ்ப்படத்தில் நடித்த மலையாள நடிகரான ரோஷன் மேத்யூ Adi Kapyare koottanani (2015)படத்தில் அறிமுகமாகி Koode(2018),Kappela(2019),Night Drive(2021)oru thekkan  thallu case(2022),Ronth(2025) உட்பட 33 படங்களில் நடித்திருக்கிறார்.இது அவரது 34வது படம்.

                             


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் 5 வயது சிறுவனாக இருக்கும்போது தன்னுடைய் அம்மா,அப்பா,தங்கையுடன் ரயில் பிரயாணம் மேற்கொள்கிறான்.அப்போது அவன் அமர்ந்திருந்த ஜன்னலோர சீட்டைக்கேட்கும் தங்கையிடம் வாக்குவாதம் செய்து இடம் தர மறுத்து வேறு ஜன்னல் சீட்டுக்கு அனுப்புகிறான்.சில நிமிடங்களில் அவள் காணாமல் போகிறாள்.கண்டுபிடிக்கவே முடியவில்லை.தன்னால்தான் தங்கை காணாமல் போனாள் என்ற குற்ற உணர்வு பல வருடங்களாக நாயகனின் மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது.


இப்போது நாயகன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராகப்பொறுப்பேற்கிறான்.அவனது முதல் கேசே கிணற்றில் விழுந்து இறந்து கிடக்கும் ஒரு பெண்ணின் கேஸ் தான்.

போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில்  தலையின் பின் பக்கம் அடித்துப்பின் கிணற்றில் தள்ளிக்கொலை செய்யப்பட்டிருக்கிறாள் எனத்தெரிய வருகிறது.

அந்தப்பெண்ணின் தோளில் ராஜூ என்று கன்னடத்தில் பச்சை குத்தப்பட்டு இருக்கிறது.

அந்தப்பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் என்பதும் ஒரு ஆளுடன் நிற்கும் போட்டோவும் கிடைக்கிறது.

நாயகன் இந்தக்கேசை விசாரிக்கும் போது அந்தப்பெண்ணுக்கு கணவன்,கள்ளக்காதலன் என இருவருடன் தொடர்பு இருப்பதை  அறிகிறான்.

இருவரில் ஒருவர்தான் கொலையாளி என்பதை யூகிக்கிறான்.


இதற்குப்பின் நிகழும் வித்தியாசமான திருப்பங்களும் ,இறந்த பெண் நாயகனின் தொலைந்து போன தங்கையா?வேறு நபரா? என்பதும் தான் மீதித்திரைக்கதை.

நாயகனாக ரோஷன் மேத்யூ பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.20 வருடங்கள் ஆகியும் தன் தங்கையை நினைத்துக்குற்ற உணர்வில் மருகுவது அருமை.போலீஸ் விசாரணையில் தேவையற்ற ஹீரோ பில்டப் எல்லாம் காட்டாமல் அடக்கி வாசித்திருக்கிறார்.


நாயகனின் மனைவியாக  அதுல்யா சந்திரா கெஸ்ட் ரோலில் வருகிறார்.ஜிம்னாஸ்டிக் ஸ்லிம் பாடியும் ,கர்லிங ஹேர் ஸ்டைலும் அவரது பிளஸ்.


மர்மமான முறையில் இறந்த பெண்ணாக ஸ்ருதிமேணன் நடித்திருக்கிறார்.இந்தக்கதையைப்பொறுத்தவரை இவர் தான் நாயகி.


ஓப்பனிங்க் சீனிலேயே பிணமாக வந்தாலும் பிளாஸ்பேக் காட்சிகள் உயிர்ப்போடு விளங்க இவரது நடிப்பும் முக்கிய அங்கம் வகிக்கிறது.இவரைச்சுற்றித்தான் மொத்தக்கதையும் பயணிக்கிறது.இவரது விழிகள் உயிர்ப்புடன் நடித்திருக்கின்றன.


நாயகியின் கணவனாக நடித்திருப்பவர் அச்சு அசல் ஒரு குடிகாரனின் உடல் மொழியை நகல் எடுத்திருக்கிறார்.


நாயகியின் காதலனாக வருபவர் நடந்த சம்பவத்தை மாற்றி மாற்றித்திரித்துக்கூறி போலீசைக்குழப்புவதில் பிரமாதப்படுத்துகிறார்.

நாயகனுடன் பணிபுரியும் சக போலீஸ் ஆபீசராக பைஜூ சந்தோஷ் குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.


சைஜூ மாரத் ,நிகில் கே மேணன் இருவரும் இணைந்து திரைக்கதை எழுத  இயக்கி இருப்பவர் பத்மகுமார்.

பின்னணி இசை மர்மம் நிறைந்த பகுதிகளுக்கு உயிர்ப்பு ஊட்டுகிறது.ஒளிப்பதிவு ,எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் தரம்.




சபாஷ்  டைரக்டர்


1 கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில்  தர்மாடம் போலீஸ் ஸ்டேஷன் ஏரியாவில் நடந்த உண்மை சம்பவம் இது என்பதால் உயிர்ப்புடன் இருக்கிறது.

2 கிணற்றில் விழுந்திருக்கும் நாயகியைப்போலீஸ் வலையில் மீட்கும் காட்சி தத்ரூபம்

3 நாயகியின் கணவன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவன் போலீசை திசை திருப்ப சொல்லும் கதை செம.

4 நாயகியின் கணவன் ராஜூ,காதலன் புவனேஷ், குழந்தைகள் இருவர் ,அரிக்கேன் விளக்கு  என நான்கு அத்தியாயங்களாகப்பிரித்து குழப்பமில்லாமல் கதை சொன்ன பாங்கு அருமை.


5 இடைவேளை ட்விஸ்ட் ,ப்ரீ க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் இரண்டும் அருமை.

6 குமுதத்தில் ஒரு பக்கத்தில் முடிந்துவிடக்கூடிய சின்னக்கதை தான்,ஆனால் அதைத்திரைக்கதையாக்கிய விதம் அருமை



  ரசித்த  வசனங்கள் 

1 நீ நடிச்ச முதல் படமே இன்னமும் ரிலீஸ் ஆகலை,அதுக்குள்ளே நீ ஒரு நடிகன்கறே?

2 சாரி சார்.அவனுக்கு எதிரான ஆதாரங்கள் கிடைக்கலை 


வீட்டில் வெயிட் பண்ணுஙக,அவனே கொண்டு வந்து அவனுக்கு எதிரன எவிடென்சைத்தருவான்.


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 ரெகுலராகக்கணவன் வீட்டுக்கு வரும் சமயம் இதுதான் என்பது நாயகிக்குத்தெரியாதா? அந்த நேரத்தில் காதலனுடன் நெருக்கமாக இருப்பது என்ன தைரியத்தில்?


2. கூலி வேலை செய்யும் ராஜூவின் வீடு அவ்ளோ விசாலமாக இருப்பது எப்படி?

3 ராஜூவைப்பிடிக்கும் சமயம்  போலீஸ் தேவை இல்லாமல் ராஜூவின் நண்பர்களுடன் சண்டை செய்வது எதற்கு?

4 நாயகியின் கணவன் என்று சொல்லிக்கொள்பவனின் ஸ்டேட்மெண்ட்டை நம்பி போலீஸ் அவனை விட்டு விடுவது எப்படி? ( நிஜ சம்பவத்தில் அப்படித்தான் விட்டார்களாம்)

5 மெயின் கதை முடிந்த பின் குழந்தைகளைத்தேடும் படலம் இழுவை. ஷாம் நடித்த 6 மெழுகுவர்த்திகள் உட்பட பல படங்களில் பார்த்தவை தான்.

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங். 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பொறுமையாக செல்லும் திரைக்கதை என்பதால் பொறுமைசாலிகள் பார்க்க வேண்டிய நல்ல க்ரைம் திரில்லர் இது.ரேட்டிங் 3/5


Friday, August 07, 2026

டி சி (2026)-தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் திரில்லர்)


 இயக்குநர் அருண் மாதேஸ்வரன் + இயக்குநர் லோகேஷ் கனகராஜ் காம்போவில் வெளிவந்த டிசி படம்  சிடி யில்  பார்ப்பது போல் இருக்கா?டி வி யில் போடும்போது பார்த்துக்கலாம் என்பது போல் இருக்கா?இப்போதே தியேட்டரில் போய்ப்பார்க்க வேண்டுமா?என்பதைப்பற்றிப்பார்ப்போம்.




ஸ்பாய்லர். அலெர்ட்

நாயகன் ஒரு கேங்க்ஸ்டர் க்ரூப்பில் அடியாள்.ரவுடி என்றால் சோசியல் சர்வீசா செய்ய முடியும்?அடிதடி ,வெட்டு ,குத்து என்று சட்டத்துக்கு எதிரான வேலைகளைத்தான் செய்கிறான்.

ஒருமுறை போலீசைத்தாக்கி அவர்களிடம் இருந்து ஆயுதங்களைக்கைப்பற்றுகிறான்.

நாயகனிடன் ஒரு பையன் வந்து உதவி கேட்கிறான்.அவனது அப்பா நிலத்தை விற்று வந்த பணமாகிய ரூ 7 லட்சம்  ரூபாயை ஒரு போலீஸ் ஆபீசர் ஆட்டையைப்போட்டதோடு மட்டுமில்லாமல் அப்பாவையும் போட்டுத்தள்ளி விட்டார்.

நாயகன் வெகுண்டெழுந்து அந்த போலீஸ் ஆபீசரைக்கொலை செய்து விடுகிறான்.

நாயகி ஒரு விலைமாது.அவருக்குப்பிடிக்காத அந்த வாழ்க்கையிலிருந்து தப்பித்துப்புது வாழ்க்கைக்குள் வர நாயகனின் உதவியை வேண்டுகிறார்.இருவரும் இணைந்து பயணிக்கிறார்கள்.ஆனால் போலீஸ் ஆபீசரைக்கொலை செய்த குற்றத்துக்காக போலீஸ் அவரைத்துரத்துகிறது.

இதற்குப்பின் நாயகன் ,போலீஸ்  இருவருக்கும் நடக்கும் சேசிங் தான் மீதித்திரைக்கதை


நாயகனாக லோகேஷ் கனகராஜ்.தாடி வைத்துப்பரட்டைத்தலையோடு பிச்சைக்காரன் மாதிரி கெட்டப்பில் வருகிறார்.கோப உணர்வு ,பழி வாங்கும் உணர்வு நன்கு வருகிறது.மற்றபடி பண்பட்ட நடிப்பெல்லாம் இல்லை.

நாயகியாக வாமிகா கப்பி நல்ல நடிப்பு .பின் பாதியில் அவரது ட்ரான்ஸ்பர்மேஷன் சீன் அருமை.

நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கெஸ்ட் ரோலில் வருகிறார்.அதிக வாய்ப்பில்லை. வந்த வரை ஓக்கே.

நாயகனுக்கு வேலை தரும் கேங்க்ஸ்டராக தலை வாசல் விஜய் வருகிறார்.அதிக ஸ்கோப் இல்லை.

கெட்ட போலீஸ் ஆபீசராக வரும் கிறிஸ்தயாள் நெகடிவ் ஷேடு நடிப்பு அருமை.

ஒளிப்பதிவு  முகேஷ்.டார்க் டோனில் படம் பிடித்து இருக்கிறார்.கொண்டாட்டமான பாடல்களைத்தந்து பின்னணி இசையை பிரம்மாண்டமாகத்தந்திருக்கிறார் அனிரூத்.


ஜி கே பிரசன்னாவின் எடிட்டிங்கில். படம் 142 நிமிடங்கள் ஓடுகிறது.

பிராங்க்ளின் ஜேக்கப்புடன் இணைந்து வசனம் எழுதி இருக்கிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.மொத்தம் 63 கெட்ட வார்த்தைகள் இருக்கின்றன.

அருண் ரஞ்சன் என்பவருடன் இணைந்து திரைக்கதை எழுதி தனியே இயக்கி  இருக்கிறார் அருண் மாதேஸ்வரன்





சபாஷ் டைரக்டர்

 1 அனிரூத்தின் பிஜி எம் தான் படத்தின் முக்கிய பலம்.சின்ன சின்ன சீனுக்கெல்லாம் அதிரடி பி ஜி எம்.

2 கதையே இல்லாத படத்துக்கு திரைக்கதை அமைக்க சிலரை டைட்டிலில் காட்டிய இயக்குநரின் தன்னம்பிக்கை.

3  இண்ட்டர்வெல் பிளாக் சீன் ,மேரேஜ் ஹால் பைட் சீக்வன்ஸ் ,க்ளைமாக்ஸ் ஆக்சன் சீன்ஸ். குட்

4 நாயகி. 16 வருடங்களுக்குப்பின் வெளி உலகைப்பார்ப்பது ,உற்சாகமாவது அருமை.அந்த சீனில் நாயகியின் நடிப்பு டாப்.

5 நாயகனுக்கு இணையான ஒரு மாஸ் சீனில் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நாயகி துப்பாக்கியுடன் எண்ட்ரி ஆகும் சீன்

6 பிளாஸ்டிக் ரோஜா சீன் ,ரெட் அண்ட் ப்ளூ கலர் காம்போவில் வரும் சீன் கவிதை.



லாஜிக் மிஸ்டேக்ஸ்



1 ஆணோ,பெண்ணோ அணிந்து வரும் எந்த டிரஸ்சாக இருந்தாலும் டார்க் கலராக ,அழுக்காக இருப்பது ஏன்?கடந்த 3 படங்களில் வந்தது போலவே காயலான் கடை , ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் இண்டஸ்ட்ரியல் ஏரியா,பெயிண்ட்  போன பழைய தகரக்கதவு,பஞ்சர் கடை,லேத் பட்டறை  என டெம்ப்ளேட்டாக இருப்பது ஏன் ?

2 படத்தின் இடைவேளை வரை படத்தின் கதை என்ன?என்பதை. யூகிக்கவே முடியவில்லை

3 எந்த கேரக்டருக்கும் அழுத்தமான ரைட்டிங் இல்லை.எமோஷனல் கனெக்டைத்தரவில்லை.

4 படத்தில் வரும் சீனியர் நடிகர்கள் தவிர யாருடைய நடிப்பும் துடிப்பாக இல்லை.

5 படத்தின் டைட்டிலுக்கான அர்த்தம் நாயகன் கேரக்டரின் முதல் எழுத்து (தேவதாஸ்) ,நாயகியின் கேரக்டரின் முதல் எழுத்து ( சந்திரா) டி சி என்று சமாளிப்பது இயக்குநரின் கற்பனை வறட்சி

6 வெந்து தணிந்தது காடு படத்தின்  சாயல் ஆங்காங்கே தெரிகிறது.

7 விலைமாதுவாக வரும் நாயகி திடீரென கமிஷனர் ரேஞ்சுக்கு துப்பாக்கியை  ஹேண்டில் செய்வது எப்படி?


ரசித்த வசனங்கள்

1 உன்னைத்தவிர இந்த உலகத்தில் எல்லோருமே என்னை தப்பா தான் பார்த்தாங்க 


2 தெரிஞ்சவங்க கிட்டே எதுவும் சொல்ல முடியாது,தெரியாதவங்க கிட்டே எது வேணாலும் சொல்லலாம்.

எப்படி?

இனிமேல் தெரிஞ்சுக்கப்போறதில்லை என்ற தைரியம் தான்.

3   தப்பு செஞ்சா தட்டிக்கேட்க போலீஸ் வரனும்,ஆனா அந்த போலீசே தப்பு செஞ்சா யார் வர்றது!?

4   போலீசையே போட்டுத்தள்ளும் அளவு அவன் பெரிய ஆளா?

5  நீ இங்கே வர்றதுக்கு முன்னாடி என் உயிர் போகாது

6. மானத்துக்கும் விலை உண்டு.

7 உன் பேர் மட்டும் அரசு.பண்றதெல்லாம் அரசாங்கத்துக்கு எதிரான வேலை


அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்க். 18+. வன்முறை ,ரத்தம்,கெட்ட வார்த்தைகள்



சி பி எஸ் பைனல் கமெண்ட் - லோகேஷ் கனகராஜின் குடும்பத்தார்,ரத்த வெறி பிடித்தவர்கள் ,ரவுடி,பொறுக்கி ரசிகர்கள் பார்க்கலாம். விகடன் மார்க் யூகம் 41 ரேட்டிங்க். 2/5



டிஸ்கி - இந்தப்படத்துக்கு தேசிய விருது கிடைத்தாலும் கிடைக்கலாம்.ஜெர்க் ஆகாமல் மனதைத்தயார் படுத்தி வைத்துக்கொள்ளவும்.பொதுவாக 2026ம் வருடம் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் (ராயன்,கேப்டன் மில்லர்)  கேவலமான செலக்சன் தானே?

DC
Left is Devadas, right is Chandra, and in the middle is Parvathi, less clearly visible
Theatrical release poster
Directed byArun Matheswaran
Screenplay by
  • Arun Matheswaran
  • Arun Ranjan
Dialogues by
  • Arun Matheswaran
  • Franklin Jacob
Story byArun Matheswaran
Produced byKalanithi Maran
Starring
CinematographyMukesh G
Edited byPrasanna GK
Music byAnirudh Ravichander
Production
company
Release date
  • 7 August 2026
Running time
142 minutes[1]
CountryIndia
LanguageTamil