Friday, May 13, 2022

DON - டான் - 2022 - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி டிராமா)

 


ஹீரோ அப்பாவுக்கு  பயந்தவர். ரொம்ப  கண்டிஷனான  அப்பாவோட  ஆதிக்கம்  அவருக்கு  பாகற்காய்.  ஸ்கூ;ல்  படிக்கும்போதே  ஒரு  லவ். ந்த  லவ்  ஒர்க்  அவுட்  ஆகற  டைம்ல  அப்பா  மேல  பயத்துல  பேக்  அடிக்கறாரு.  அதனால  நாயகிக்கு  அவர்  மேல  செம  காண்டு 


  காலேஜ் ல  சேரும்  ஹிரோ  அங்கே பிரின்சிபல்  வடிவில்  கண்டிஷனான  வில்லனை  சந்திக்கிறார். அவரோட  மோதி  ஜெயித்தாரா?  இல்லையா? அப்பாவோட  கனவு  நிறைவேறுச்சா? ஹீரோவோட  லட்சியம்  என்ன  ஆச்சு? இதுதான்  பின்  பாதி  திரைக்கதை 


  ஹீரோவா அடுத்த  ரஜினி ,  அடுத்த  விஜய்  ஆகத்துடிக்கும்  சிவகார்த்திகேயன்.முதல்  பாதி  பூரா  ஜாலி  வாலா  காமெடி  காதல்  கலாட்டாக்கள் தான்.நீண்ட  இடைவெளிக்குப்பின்  கலகலப்பான  சிவகார்த்திகேயனை  ரசிக்க  முடியுது .வில்லனுடனான  மோதலில்  அசத்தும் ஆக்சன்  நடிப்பு, பின்  பாதியில்  அப்பா  செண்ட்டிமெண்ட்  காட்சிகளில்    உருக  வைக்கிறார்


ஹீரோவோட  அப்பாவா  சமுத்திரக்கனி. வழக்கமாகப்பேசும்  அட்வைஸ்கள்  இல்லை  ஆனா    நல்ல  நடிப்பு  இருக்கு , இவரோட  கேரக்டர்  ஸ்கெட்ச்  சந்தோஷ்  சுப்ரமணியம்  பிரகாஷ்ராஜ்    கேரக்டரை  நினைவுபடுத்துது 


வில்லனா  , பிரின்சிபாலா    எஸ்  ஜே  சூர்யா. இவரது  கேரக்டர்  நண்பன்  பட  சத்யராஜ்  கேரக்டரை  நினைவுபடுத்துது.  மாநாடு  கேரக்டர்  பாதிப்பிலிருந்து  அவர்  இன்னும்  வெளி  வரவில்லை  போல . இருந்தாலும்  அவரது  நடிப்பு  தியேட்டரில் அப்ளாஸ்  மழை 


 நாயகியா  பிரியங்கா  அருள்  மோகன்.  ஸ்கூல்  கேர்ளாக  ஓக்கே , ஆனா  காலேஜ்  கேர்ளாக  வரும்போது   சுமார்தான் . கமல்  படங்களில்  அவர்  நடிக்கும்  சீன்களில், இந்தா  பாரு  என்  நடிப்பை  என  நல்லாவே  நடிப்பது  தெர்யும், அதே  மாதிரி    இவ்ரது  நடிப்பும்  அப்பட்டமா  நடிப்புனு  தெரியுது. இன்னொரு  பெரிய  குறை  ஹீரோ  கூட  கெமிஸ்ட்ரி  ஒர்க்  அவுட்  ஆகல. ரஜினி  முருகன்,  வருத்தப்படாத  வாலிபர்  சங்கம், ரெமோ  இவற்றிலெல்லாம்  ஹீரோ  ஹீரோயின்  கெமிஸ்ட்ரி  செமயா  இருக்கு,ம்

ஹீரோவ்ன்  அம்மாவாக  ஆதிரா  பாண்டிய  லட்சுமி  க்ளைமாக்சில்  அசத்தல்  நடிப்பு .இன்னொரு  சரண்யா  ஆக  எல்லா  வாய்ப்பும்  இருக்கு


ஹீரோயின்  தோழியாக  வரும்  கேரளா  சேச்சி  ஓக்கே  ரகம் 

இவர்கள்  போக  முனீஸ்காந்த் , பால  சரவணன் ,  ஆர் ஜே  விஜய் , சிவாங்கி   போன்றவர்கள்  காமெடிக்கு  கை  கொடுக்கிறார்கள் 


 முக்கியமான  ஹீரோ  அனிரூத். அவரது  இசையில்  3  பாட்டு  செம  ஹிட்டு , பிஜி எம்  பக்கா 


இயக்கி  இருப்பவர்  புதுமுகம், இவரது  குரு அட்லீ.,  குரு  எவ்வழி  சிஷ்யன்  அவ்வழி , அதாவது  எங்கெ   எங்கே  இருந்து  சுடறோம்கறது  முக்கியம்  இல்லை  ,நல்ல  கதம்ப  மாலையா  தர்றமா? என்பது  முக்கியம், அந்த  வகையில்  முதல்  படத்தை  வெற்றிப்படமாகவே   கொடுத்திருக்கிறார்


சபாஷ்  டைரக்டர் 


1   ஹீரோ  ஹிரோயின்  சம்பந்தப்பட்ட  அந்த  ஸ்கூல்  லவ்  போர்சன்  அபாரம்.  தனுஷ்  நடித்த  3  பட,ம்  நினைவு  வந்தாலும்  செம  ஜாலியா  கொண்டு  போன  விதம் 


2 க்ளைமாக்சில்  அப்பாவின்  தியாகத்தை  உணரும்  ஹீரோ  வருந்தும்  காட்சி அம்மா  பேசும்  டயலாக்ஸ்  எல்லாமே  பெண்கள் மனதைக்கவரும்  அபாரமான  செண்ட்டிமெண்ட்  காட்சிகள்


3   வசனகர்த்தா  பல  இடங்களில்  உள்ளேன்  அய்யா  சொல்கிறார்.  பாலீசான  டயலாக்ஸ் 


4   எஸ்  ஜே  சூர்யா  நடிப்பு  ஆங்காங்கே   ஓவர்  ஆக்டிங்  என்றாலும்  ரசிக்க  முடிகிற  மாதிரி  காட்சி  அமைப்புகள் 


5  ஜலபுலஜங்  பாடல்  காட்சி  படமாக்கப்பட்ட  விதம்  அதற்கு  ஹீரோவின்  கலக்கலான  டான்ஸ்  மூவ்மெண்ட்ஸ் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ்  , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1  ஹீரோ  படிப்பில் ஆர்வம்  இல்லாதவர் , லாஸ்ட்  பென்ச்  ஸ்டூடண்ட்  ஆனா   சிஸ்டத்தை  ஹேக்  செய்வது ,  வேற  ஒரு  அக்கவுண்ட்  பாஸ்வார்டு  கண்டுபிடித்து  லாக்  இன்  செய்வது  போன்ற  தகிடுதித்த  டெக்னிக்கல்  திறமைகள்  இவ்ளோ  வெச்சிருப்பது  எப்படி ?  இது  போக  என்  கிட்டே  என்ன  திறமை  இருக்குனு  கண்டுபிடிக்கறேன்னு  படம்  பூரா  சொல்லிட்டே  இருக்காரு 


2  கல்லூரி  பேராசிரியர்களுக்கே  எக்சாம்  வைப்பது  கொஞ்சம்  கூட  நடைமுறை சாத்தியமே  இல்லை 


3  க்ளைமாக்சில்  வில்லன்  திடீர்  என  நல்லவனாக  மாறுவது நம்பவே  முடியலை.  படத்தில்  சில  கேரக்டர்களே  அவரா  இப்படி  மாறிட்டார்  நம்பவே  முடியலையே  என  சாமார்த்தியமாக  டய்லாக்  வேற  வெச்சிருக்காங்க 


4    இயக்குந்ர்  சிபி  சக்கிரவர்த்தியின் உண்மைக்கதைனு  பேசிக்கறாங்க. ஹீரோ  டைரக்ட்  பண்ற  பட  விஷயத்துல  விண்ணைத்தாண்டி  வருவாயா  க்ளைமாக்ஸ்  போர்சன்  ஞாபகம்  வருது 


5  ஹீரோ  தனக்கான  துறை  சினி  ஃபீல்டுதான்  என  தேர்ந்தெடுப்பது  ஆழமா  பதியலை ந். அது ந் போக  ஆல்ரெடி  இதே  போல  ஹீரோ  சினி ஃபீல்டில்  ஜெயிக்கும்  தாவணிக்கனவுகள் ,  உட்பட  பல  படங்களில்  பார்த்தாச்சு, புதுசா  யோசிச்சு  இருக்கலாம் 

நச்  டயலாக்ஸ்


1   தன் பிள்ளை ஹீரோ ஆகனும்கறதுக்காக கடைசி வரை தன்னை வில்லனாவே காமிச்சுக்கறவர்தான் அப்பா #DonFDFS


2   வாழ்க்கைல தான் என்னவா ஆகப்போறோம்னு எவன் கண்டுபிடிக்கறானோ அதை சரியா செயல்படுத்தி ஜெயிக்கிறானோ அவன் தான் டான் #DonFDFS


3 எனக்காக அவர் என்ன பண்ணாரு?னு கேட்டுட்டேன், ஆனா அவருக்காக அவரு எதுவுமே பண்ணிக்கலை #DonFDFS


4 இன்னொரு குழந்தை பெத்துக்கிட்டா உன் மேல வெச்சிருக்கற பாசம் குறைஞ்சிடுமேனு வேற குழந்தையே வேணாம்னு சொன்னவர்தான் உன் அப்பா #DonFDFS


5 எனக்கு வர வேண்டிய எல்லா சந்தோஷங்களையும் என் மகனுக்கு கொடுத்துடு சாமி , என் மகனுக்கு வர வேண்டிய எல்லா கஷ்டங்களையும் எனக்கு கொடுத்துடு #DonFDFS6 யாருக்கு பெஸ்ட் ஃபேமிலி அமைஞ்சிருக்கோ யாருக்கு நல்ல ஃபிரண்ட்ஸ் இருக்கோ அவன் தான் டான்


7 சைக்கில் ஓட்ட கத்துக்கும்போது கீழே விழுந்து எழுந்து கத்துக்கற மாதிரி பெற்றோர்களும் குழந்தைகளை வளர்க்கறப்ப சில தப்புக்கள் பண்ணி தான் குழந்தை வளர்ப்பு பற்றிக்கத்துக்கறாங்க


8 தான் ஆசைப்பட்ட ஒண்ணுக்காக கஷ்டப்படத்தயாரா இருக்கறவன் கண்டிப்பா ஒரு நாள் ஜெயிப்பான்


9 பசங்க பண்ற தப்பை விட அவங்க வாழ்க்கை தான் முக்கியம்னு அவங்க பண்ற தப்பை மன்னிச்சு விடும் வாத்தியார்கள் இன்னும் இருக்காங்க


10 குளத்துல கல் எறியற அந்தப்பையனைப்பாரு , முதல்ல எறியும் கல்லை விட ரெண்டாவது எறியும் கல்லுக்குதான் சக்தி அதிகம் , ஏன்னா முதல்ல எறிஞ்ச கல்லுக்கு இலக்கு இல்லை ரெண்டாவது எறிஞ்ச கல்லுக்கு முதல் கல் போன தூரத்தை விட அதிக தூரம் போகனும்கற இலக்கு இருக்கு , நீ செய்யும் முயற்சிகளும் அப்படித்தான் , முதல் முயற்சி தோற்றுப்போனா என்ன? ரெண்டாவது முய்ற்சி செய் , ஜெயிப்பே


11 லைஃப்ல ஜெயிச்சவங்களை லவ் பண்றதை விட தான் லவ் பண்றவன் லைஃப்ல ஜெயிக்கறதைத்தான் பொண்ணுங்க விரும்புவாங்க


12 வாத்தியார் ஆகனும்கறதுக்காக எம் ஏ படிச்சவனை விட எம் ஏ படிச்சுட்டு வேற வேலை கிடைக்காம வாத்த்யார் ஆனவங்க தான் அதிகம்


13 ஓட்டப்பந்தயத்துல முயல் , ஆமை ரெண்டுமே ஜெயிக்கும், ஆனா முயலாமை மட்டும் என்னைக்கும் ஜெயிக்காது


14 பொண்ணுங்க சொல்லிட்டுப்போனா அது பிரேக்கப் இல்லை, சொல்லிக்காம போனா அதான் பிரேக்கப்


15 எக்ஸ் லவ்வருக்கு எதுக்குடா எக்ஸ்ட்ரா ஃபீலிங்க்?


16 நான் நிச்சயம் ஜெயிப்பேன்னு நம்பறேன் ஆனா எப்போ எப்படினு தான் தெர்யல17 பிரப்போஸ் பண்ற பசங்க மனசைப்பார்க்காம அவங்க முகத்தைப்பார்த்து பொண்ணுங்க நோ சொன்னா லாஸ் பசங்களுக்கு இல்லை , பொண்ணுங்களுக்குதான்


18 ஆக்சிஜன் இருந்தாதான் உயிர் வாழலாம்னு சொன்னாங்க, இப்போ குறிக்கோள் இருந்தாதான் வாழ முடியும்னு சொல்றாங்க19 இவ்ளவ் கம்மியா மார்க் வாங்கி இருக்கியே? வீட்ல எதும் சொல்ல்லை?


வாத்தியார் சரி இல்லைனு சொல்லி வெச்சிருக்கேன்


20 டேய் , ஆன்னா ஊன்னா உன் ஃபேமிலில எல்லாரும் என்னை பெருசு பெருசுன்னு கூப்பிடறாங்கடா’’


அதை விடு பெருசு


21 நான் போய் 10 பேரோட வர்றேன்’

எதுக்கு?  கண்பது  ஹோமம்  பண்ணவா? 


22  திருவள்ளுவர்  கூட  40  வது  அதிகாரமா  கல்வி  பற்றி  சொன்னவர்  14  வது  அதிகாரமா  ஒழுக்கமுடைமை  பற்றி  சொல்றார். அப்போ  கல்வியை  விட  ஒழுக்கம்  ரொம்ப  முக்கியம் 

சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - டாண் (2022) − முதல் பாதி நண்பன் டைப் காலேஜ் கலாட்டா ,3 டைப் ஸ்கூல் கலாட்டா, பின் பாதி அப்பா செண்ட்டிமெண்ட்ஸ். சி.கா,எஸ்ஜே சூர்யா,சமுத்திரக்கனி நடிப்பு டாப்,

நாயகி நடிப்பு எடுபடல.பெண்களுக்கு பிடிக்கும் மெலோ டிராமா.விகடன் மார்க் 41 , ரேட்டிங் 2.5 / 5
0 comments: