Friday, May 06, 2022

சாணிக்காயிதம் (2022) - சினிமா விமர்சனம் ( ரிவஞ்ச் த்ரில்லர்)- அமேசான் பிரைம்

 


ஹீரோயின் ஒரு  போலீஸ்  கான்ஸ்டபிள். புருசன்  ஒரு தண்டக்கடன் , குடிகாரன்.அவன்  வேலைக்குப்போன  இடத்துல  வாயை  வெச்சுட்டு  சும்மா  இருக்காம  ஓனரை  எதிர்த்துப்பேசிடறான். செம  கடுப்பாகி  வேலையை  விட்டுத்தூக்கிடறாங்க . மனைவி , நண்பன்  சொல் கேட்டு  மன்னிப்புக்கேட்டு  மீண்டும்  வேலைல  ஜாய்ன்  பண்ணப்பார்க்கறான், ஆனா  ஓனர்ங்க 4  பேரு அவனை  வம்புக்கிழுத்து  அவன்  மனைவியை  தப்பாப்பேசறாங்க. மறுபடி  பிரச்சனை  பண்ணிட்டு  வர்றான்


 வில்லன்க  நாலும்  பேரும்  ஹீரோயினை பாலியல்  பலாத்காரம்  பண்ணி புருசன், குழந்தை யை  கொலை  பண்ணீடறாங்க

 ஹீரோயின் அவங்களை  எப்படிப்பழி  வாங்குனா?  என்பதுதான்  கதை 


நாயகியா  கீர்த்தி  சுரேஷ். அவரை  சிரிப்புப்பொம்மையா  பார்த்துட்டு    ஆக்சன்  ஹீரோயினா  பார்க்க  சங்கடமா தான்  இருக்கு , ஆனா  வெரைட்டி  காட்டறார். நல்ல  வாய்ப்பை  நன்கு  பயன்படுத்தி  இருக்கார் . நாயகி அடிபட்ட முகம்  குருதிப்புனல்  கமல்  கெட்டப்பை  நினைவு படுத்துது


 நாயகிக்கு  துணையா டைரக்டர்  செல்வராகவன்  ஒரு  கேரக்டர்ல  நடிச்சிருக்கார் .  ஓக்கே  நல்ல  நடிப்பு 


வில்லன்க  4  பேரும்  கிழ  போல்ட்டுங்க , டம்மி  பீசுங்க , பெருசா எதுவும்  செய்யல , அதனால  பதை பதைப்பு  எதுவும்  வர்ல 


சபாஷ்  டைரக்டர்


1  பூலான்  தேவி  பழி  வாங்கும்  கதை  எப்பவுமே  எவர்  க்ரீன்  சப்ஜெக்ட், அதை  ராவா  எடுத்து  ராக்கி  மாதிரி  இன்னொரு  படம்  கொடுக்க  ட்ரை  பண்ணிய  எண்ணம்  குட் 


2  நாயகியின்  குழந்தை , செல்வராகவன்  இருவருக்குமான  உரையாடல்கள் , பந்தம்  அனல்  காற்று  வீசும்  பாலைவனத்தில்  மழைச்சாரல்


3  காமெடி  டிராக் , டூயட் , டான்ஸ்  என  எங்கும்  தடம்  மாறாமல்  எடுத்த  கதையை  நேராக  சொன்ன  விதம் 


   ரசித்த  வசனங்கள் 


1   சுய  மரியாதை  இருக்கறவங்களுக்கு  இங்கே  இடம்  இல்லை ,  வேலை  இல்லை , போய்  சொந்தத்தொழில்  செஞ்சு  பொழைச்சுக்கோ 


2  ஒருத்தனை  பழி  வாங்கறதுன்னா  என்ன  தெரியுமா?  அவன்  நமக்கு  என்ன  கெடுதல்  செஞ்சானோ  அதை  அப்படியே  அவனுக்கு  திருப்பி  செய்யறது .அவன்  அடிச்சா  நாமும்  அடிக்கனும், நமக்கு  என்ன  வலி  கிடைச்சுதோ  அதே  அவனுக்கும்  கிடைக்கனும் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் ,  திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1 பொதுவாவே  கிராம மா  இருந்தாலும்  நகரமா  இருந்தாலும்  போலீஸ்னா  ஒரு  பயம்  இருக்கும், ஆனா  கொஞ்சம்  கூட  பயமே  இல்லாம  லேடி  போலீசையே  ரேப்  பண்ண  துணிந்த  வில்லன்கள்  என்ன  நம்பிக்கைல  அவரை  உயிரோட  விடறாங்க ?  சாதா  ரேப்  கேஸ்லயே  சாட்சி  உயிரோட  இருக்கக்கூடாதுனு  போட்டுத்தள்ளிடறாங்க , ஒரு  போலீசை    கேங்  ரேப்  பண்ணிட்டு  உயிரோட  விட்டுட்டு  வருவாங்களா? 


2  லேடி  வக்கீல்  நாயகி  கிட்டே  மாட்டிக்கிட்டு  வில்லன்கள்  மறைவிடத்தை  சொல்றா.  சும்மா  அலைய  விட்டிருக்கலாம்,  சான்சை  மிஸ்  பண்ணீடுச்சு 


3  பொதுவா  வில்லன்களை  பவர்ஃபுல்லா  காட்டுனாதான்  எப்படி  நாயகி  ஜெயிப்பா?னு  ஒரு  பதை பதைப்பு  இருக்கும்  , இதுல  வில்லன்க  டம்மி  பீஸ்  என்பதால்  தேமேன்னு  திரைக்கதை  நகருது 


4   நாயகியின்  கணவனை  போதைல  இருக்கறதால  கமுக்கமா  ஈசியா  கொலை  பண்ணி  இருக்கலாம், அதை  விட்டுட்டு  லூசுங்க  மாதிரி  குடிசையை  எரிச்சு  ஊரெல்லாம்  கூடி  போலீஸ்  கிட்டே  சரண்டர்  ஆவது  மடத்தனம் 


5  கடைசி  வரை  ஊருக்குள்  போலீஸ்  வரவே  இல்லை  அவனவன்  அவனவன்  வேலையைப்பார்த்துட்டே  இருக்கான்


6  கதையில்  ட்விஸ்ட் , சஸ்பென்ஸ்   எதுவும்  இல்லை , விழி  ஒளி  இழந்த  அந்த  விடலை  பையன்  நாயகியை  ரேப்  பண்ணி  இருப்பானோ  என்ற  சந்தேகத்தை  கடைசியில்  ஓப்பன்  பண்ணுவது  எரிச்சல்


 சி பி  எஸ்  ஃபைனல் கமெண்ட்சாணிக்காயிதம் − I SPIT ON YOUR GRAVE படத்தின் பட்டி டிங்கரிங்க் அட்லீ"ஒர்க்தான்"படம்.ரண"கொடூரம்,ரத்தம்,வன்முறை தெறிக்குது.செல்வராகவன்,கீர்த்தி நடிப்பு,ஓகே விகடன் எதிர்பார்ப்பு மார்க் 39 ரேட்டிங் 2 / 5 பெண்கள்,குழந்தைகள் நிச்சயம் தவிர்க்கவும்.தேவை இல்லாத"ஆணி
0 comments: