Saturday, June 29, 2019

சிந்துபாத் - சினிமா விமர்சனம் #Sindhubaadh

sindhubath માટે છબી પરિણામ

ஆபத்தில் சிக்கிக்கொண்ட சொந்த சம்சாரத்தை மீட்கறதுக்காக ஹீரோ கடல் தாண்டி பயணித்து நிகழ்த்தும் நம்ப முடியாத சாகசக்கதையே சிந்து பாத், இந்த ஒன் லைன் ஸ்டோரியை இதுதான் கதைனு கண்டு பிடிக்கவே 1 மணி நேரம் ஆகிடுது



ஹீரோவா நம்ம விஜய் சேது பதி . இவர் கூட இயக்குநர் அருண்குமார் இதுக்கு முன்னாடி செஞ்ச 2 படங்களும் அவ்ளோ யதார்த்தம், பண்ணையாரும் பத்மினியும் ஆர்ட் ஃபிலிம் ( இது குறும்படமாக வந்து பின் டெவலப் பண்ணி பெரிய படம் ஆக வந்தது ) சேதுபதி கமர்ஷியல் மசாலா . இந்த 2 படங்களிலும் இவர்கள் இருவருக்கும் கிடைச்ச நல்லபேரை இந்த ஒரு படம் போக்கடிச்சிடுச்சு


'
படம் போட்டு முதல் 50 நிமிஷங்கள் செம ஜாலி கலாட்டா காதல் காமெடி ரகளை என படம் பறக்குது, அதுக்கப்புறம்தான் மெயின் கதைக்கு வர்றாங்க அப்றம் படம் படுத்துக்குது ( இனிமே மெயின் கதைக்கே வராதீங்கப்பா)

 விஜய் சேதுபதியின் மகன் இதுல அவரோட வளர்ப்பு மகனா வர்றார் , நல்ல யதார்த்த நடிப்பு. இதுவே நம்ம இளைய தளபதி மகனா இருந்தா அவர் வர்ற இண்ட்ரோ சீன்ல இந்த சீனில் உங்கள் முன் தோன்றுவது உங்கள் அபிமான ஹீரோவின் மகன் அப்டினு டைட்டில் கார்டுல போட்டிருப்பாங்க )


நானும் ரவுடிதான்ல நயன் தாரா எடுத்துக்கொண்ட காது சரியாக்கேட்காத கதாபாத்திரம் இதுல ஹீரோவுக்கு , ;பர்ஃபெர்க்ட் ஆக்டிங் . நண்பரிடம் ஒவ்வொரு டைமும் ஒரு சோக டஹால்டிக்கதையை எடுத்து விடுவது அழகு, ஹீரோயின் உடனான ரொமான்ஸ் காணக்கண் கோடி வேண்டும் ( வழக்கமா இந்த உவமையை தெய்வத்துக்கு தீபாராதனை காட்டும்போதுதான் சொல்வாங்க )


அஞ்சலிதான் அந்த ஆராதனை செய்யக்கூடிய அழகிய அம்சம் கொண்ட நாயகி, அடி பொலி ஆக்டிங் . ஆர,ம்பத்தில் ஹீரோவை ஒதுக்குவது , பின் பம்முவது , வலிய போய் கமல் கிஸ் அதாங்க லிப் கிஸ் தருவது எல்லாம் அமர்க்களம் , மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்காதுனு கொங்கு மண்டல கிராமங்களில் ஒரு சொலவடை உண்டு , அந்தப் பழமொழியைப்பொய்ப்பித்து இருக்கிறார் அஞ்சலி , புரிஞ்சவன் பிஸ்தா


ஹீரோயின் மலேசியா போனதுக்கப்புறம் நம்ம காதுல சரம் சரமா பூச்சரம் , சும்மா சுத்தி விடறாங்க , லாஜிக் லாஜிக் அப்டினு ஒண்ணு இருக்கா? மலேசிஅயால போலீஸ்னு 1 இருக்கா ? இல்லையா? எது பற்றியும் கவலை இல்லை

ஒளிப்பதிவு , இசை, பின்னணி இசை அனைத்தும் ஓக்கே ரகம்

ஸ்டண்ட் சீன்கள், ஆக்சன் காட்சிகள் பயங்கர சொதப்பல்கள்


anjali hot માટે છબી પરિણામ

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்



1 நட்புக்காக நடிக்கறது
கெஸ்ட் ரோல்
மொக்கை காமெடி
ஆர்ட் பிலிம் காதல்
இப்டி வெரைட்டியா நடிச்ட்டு லாங் கேப்க்குப்பின் கமர்ஷியல் ஆக்சன் படம் ,விஜய்சேதுபதி க்கு லக்தான்



============
2 அங்காடித்தெரு அஞ்சலி

கலகலப்பு அஞ்சலி ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி,அஞ்சலி இதுல அஞ் தான்,துரும்பா இளைச்சிடுச்


========
3 நான் சின்னப்பையனா இருக்கும்போது தமிழ் சினிமா ஹீரோ தான் (குறிப்பா கமல் )ஹீரோயினுக்கு கிஸ் தருவாரு,இப்ப எல்லாமே தலைகீழ்,ஹீரோயின் வான்ட்டடா லிப்கிஸ் அடிக்குது


=============

4 முதல் 45 நிமிஷம் கலகலப்பான லவ் போர்ஷன்,அதுக்கப்புறம் கதை ஆரம்பிச்சதும்தான்.......


============


5 பின் பாதி திரைக்கதை ல ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்ஸ்,இயக்குநர் நம்ம காதுல சுத்தற பூச்சரத்தை சேகரிச்சா ஒரு பர்ஸ்ட்நைட் ரூமையே அலங்கரிச்சடலாம்


==========

6  

ஒருத்தரைத்தேடிட்டு ஒவ்வொரு நாடா ,ஒவ்வொரு ஊரா ஹீரோ போறது ரொம்ப ரிஸ்க்கான சப்ஜெக்ட் ,இயக்குநர் துணிச்சலா அதை கைல எடுத்திருக்கிறார்,ஆனா சுவராஸ்யமா எடுத்திருக்கிறாரா?



=========
anjali hot માટે છબી પરિણામ

நச்   டயலாக்ஸ்

1  மாமா ,நீ பேசாம மாடு மேய்க்கப்போய்டு

இவ்ள்வ் வயசுக்குப்பின் எப்டி மாடு மேய்க்க?
அப்போ யானைமேய்க்கப்போ!



========
2 இந்த உலகத்துலயே நமக்கு நெருக்கமானது நம்ம சாவு தான் !


============

சபாஷ் இயக்குநர்


1  கதையைப்பற்றிக்கவலைப்படாம முதல் 50 நிமிடங்களை ஜாலியாகக்கொண்டு போன லாவகம்


2  விஜய் சேதுபதி யின் மகனின் யதார்த்த நடிப்பு


3  ஹீரோ - ஹீரோயின்  பாடி  கெமிஸ்ட்ரி , பிசிக்கல் டச் , பயலாஜிக்கல் மூவ்மெண்ட்ஸ் 

=============




anjali hot માટે છબી પરિણામ
 லாஜிக் மிஸ்டேக்ஸ் - + இயக்குநரிடம் சில கேள்விகள்


1   ஒரு சீன்ல வில்லனின் அடியாள் ஹீரோயின் கிட்டே உன்னை நாடு நாடா அனுப்பி  தினமும் ஃபர்ஸ்ட் நைட் கொண்டாட வைக்கறேன்னு கோபமா சொல்றாரு , அடுத்த சீன்ல மேப்ல ஒவ்வொரு நாடா மார்க் பண்ணி காட்டறாங்க, அதுக்கடுத்த சீன்ல ஹீரோயின்   அப்போதான் பறிச்ச மல்லிகைப்பூ கணக்கா இருக்காரு .ரேப் நடந்ததா? இல்லையா? முகத்துல , உடம்புல ஒரு கீறல் கூட விழாதா? 


2  மாடி  டூ மாடி ஹீரோவும்  மகனும் தாண்டும் ஜம்ப் சீன், இது சுறா இஒண்ட்ரோ சீனையே தூக்கி சாப்ட்டுடுச்சு


3  ஹீரோயின் எதிரிகளிடமிருந்து எஸ் ஆகும் ,காட்சி அபத்தம்


4   எம் ஜி ஆர் நடிச்ச ராமன் தேடிய சீதை + ஷாம் நடிச்ச 6 மெழுகு வர்த்திகள் இந்த 2 படத்தையும் அட்லீ வேலை பார்த்த மாதிரி கிருக்கு 



சிந்துபாத் − முதல் பாதி காதல்,காமெடி ,பின் பாதி ஹீரோ ஹீரோயினைத்தேட ஓடறார்,வில்லன் ஹீரோவைத்தேடறார் ,ஹீரோயின் ஹீரோவைத்தேடறார்,நாம கதை எங்கே?னு தேடறோம் ,பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் மொமெண்ட் ,விகடன்,40 ,ரேட்டிங் 2.25 / 5


===============



anjali hot માટે છબી પરિણામ