Tuesday, October 25, 2011

பிரபல பதிவர்கள்-ன் தீபாவளி அட்டூழியங்கள்

 தீபாவளி அன்னைக்கு நம்ம பதிவுலக புலிகள் எல்லாம் என்ன செய்வாங்க? எந்த மாதிரி பதிவு போடுவாங்க?ன்னு ஒரு ஜாலி கற்பனை.. 
இது சும்மா காமெடிக்காக போடப்பட்டதுதான்.. யாரும் அரிவாள், கம்பு , கப்டா தூக்கிட்டு வரவேணாம்னு அன்போட கேட்டுக்கறேன்.. 




1. பன்னிக்குட்டி ராம்சாமி


சி.பி - அண்ணே, வணக்கம்னே..

பன்னிக்குட்டி ராம்சாமி  -  வாடா, தகர டப்பா தலையா.. நீ ஏன் இங்கே சுத்திட்டு இருக்கே.. தீபாவளியும் அதுவுமா ஏதாவது சினிமா தியேட்டர்ல தானே பொறுக்கிட்டு இருப்பே?

சி.பி -அது வேற ஒண்ணும் இல்லைண்ணே, தீபாவளிக்கு ஒரு பதிவு போடப்போறேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி  -ஆ, பொல்லாத பதிவு.. நீ என்ன பதிவு போடுவேன்னு எங்களுக்குத்தெரியாதா?சினிமா விமர்சனம் கற பேர்ல ஒரு டப்பா படத்துக்கு ஏதாவது கதை  , வசனம் எழுதுவே.. அதுல 5 ஸ்டில்ஸ் போட்டு பக்கத்தை நிரப்புவே.. இல்லைன்னா 10 மொக்கை ஜோக்ஸ் போடுவே.. சுத்தமா சிரிப்பே வராது..
சி.பி - அண்ணே பப்ளிக் பப்ளிக்…. நீங்க என்ன பதிவு போடப்போறீங்க?


பன்னிக்குட்டி ராம்சாமி  -அதை நீ கேட்டு என்ன பண்ணப்போறே?
சி.பி - அண்ணே, கைவசம் சரக்கு இல்லை… அதனால எல்லாரும் என்ன பதிவு போடுவாங்கன்னு ஒரு பதிவு போட;லாம்னு..


பன்னிக்குட்டி ராம்சாமி  -அடங்கோ..சரி.. விடு சொல்லித்தொலையறேன்.. நாயா பேயா பழகிட்டே..நரகாசுரன் – ஒரு பய(ங்கர) டேட்டா இதுதான் தலைப்பு

சி.பி - அய்யோ, அண்ணே, ஏற்கனவே நீங்க போட்ட ஒரு பதிவால பதிவுலகமே ரெண்டா பிரிஞ்சு இருக்கு , மறுபடி ஒரு பய டேட்டா பதிவா?


பன்னிக்குட்டி ராம்சாமி  -அட ஆமண்டா.. நரகாசுரன் நமீதாவோட கொள்ளுப்பாட்டியை வெச்சிருந்தான்.. அதுக்கான ஆதாரம் கிடைச்சிருக்கு..
சி.பி - சும்மா கதை விடாதீங்கண்ணே.. சொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை இப்போ யாரு வெச்சிருக்காங்கண்ணே இன்னும் யாரும் கண்டு பிடிக்கலை.. அதுக்குள்ள நமீதா கொள்ளுப் பாட்டியை யார் வெச்சிருந்தாங்கன்னு எப்படி கண்டு பிடிக்க முடியும்?


பன்னிக்குட்டி ராம்சாமி  - அதெல்லாம் உனக்கெதுக்கு?
சி.பி - சரி… மக்கள் அதை விரும்பி படிப்பாங்களா? அட்லீஸ்ட் நமீதாவை யார் வெச்சிருக்காங்கன்னாவாவது ஆர்வமா படிப்பாங்க,, பாட்டி பற்றி யார்ணே படிக்கப்போறாங்க?


பன்னிக்குட்டி ராம்சாமி  - அட உலகம் தெரியாதவனே.. த்ரிஷா தெரு நாயை வளர்த்ததை 2 பக்கத்துக்கு நியூஸ் போட்டாங்க , படிச்சீங்க, ஏஞ்சலினா ஜூலி  தடுக்கி விழுந்தப்ப நைட்டில ஒரு கிழிசல்னு நியூஸ் வந்தது படிச்சீங்க. இதை படிக்க மாட்டாங்களா? தமிழனுக்கு சினிமா நியூஸ்னு ஒண்ணு இருந்தா போதும் விழுந்து விழுந்து படிப்பாஙக..
 Dean McDowell
Dean McDowell

2.  சிரிப்புப்போலீஸ் ரமேஷ் -

சி.பி - ஹாய் ரமேஷ், ஹேப்பி தீபாவளி….

சிரிப்புப்போலீஸ் ரமேஷ் - என்னது ரமேஷா? டேய் தம்பி.. நீ என்ன வேலை செய்யறே?

சி.பி - ஒரு ஃபைனான்ஸ் கம்பெனில எடுபுடி வேலைண்ணே….

சிரிப்புப்ப்போலீஸ் ரமேஷ் - நான்?

சி.பி - ஒரு கம்ப்யூட்டர் கம்ப்பெனில டேமேஜர்  சாரி மேனேஜர் வேலைண்ணே..

சிரிப்புப்ப்போலீஸ் ரமேஷ்  - நீ என்ன கூலி வாங்கறே?

சி.பி - டெயிலி 30 ரூபா தர்றாங்க..

சிரிப்புப்ப்போலீஸ் ரமேஷ் - நான் எவ்வளவு சம்பளம் வாங்கறேன்?

சி.பி - மாசம் ரூ 42,000 ணே

சிரிப்புப்ப்போலீஸ் ரமேஷ் - அப்புறம் என்ன இதுக்கோசரம் என்னை பேர் சொல்லிக்கூப்பிட்டே?

சி.பி - சரி, இனி கூப்பிடலை.. மேட்டருக்கு வர்றேன்..

சிரிப்புப்ப்போலீஸ் ரமேஷ் - என்னது மேட்டரா? எங்கெ? எங்கே? ( வாசலை தேடறார்.. )

சி.பி - அதில்லண்ணே, தீபாவளி அன்னைக்கு என்ன பதிவு போடுவாங்கன்னு ஒரு பதிவு  போடறேன்.. நீங்க என்ன பதிவு போடறீங்க?

சிரிப்புப்ப்போலீஸ் ரமேஷ் - சாரி அது கம்பெனி சீக்ரெட்,, வெளீல சொல்லக்கூடாது

சி.பி - ப்ளீஸ்ணே

சிரிப்புப்ப்போலீஸ் ரமேஷ் - கம்ப்பெனி செக்ரட்ரியை வெளில வாக்கிங்க் கூட்டிட்டுப்போனவனும், கம்பெனி சீக்ரெட்டை வெளில வாமிட் பண்ணுனவனும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் தரித்திரம் எதுவும் கிடையாது..

சி.பி - சரி யார்ட்டயும் சொல்ல மாட்டேன் , சொல்லுங்க..

சிரிப்புப்ப்போலீஸ் ரமேஷ் - யார்ட்டயும் சொல்ல மாட்டியா?நம்பலாமா?

சி.பி - தாரளாமா நம்புங்க..
சிரிப்புப்ப்போலீஸ் ரமேஷ் - தீபாவளி அன்று ஓ சி சோறு சாப்பிடுவது எப்படி? அப்டினு ஒரு பதிவு போடறேன்..

சி.பி - அண்ணே, நீங்க வழக்கமா எல்லா பக்கமும் ஓ சி சாப்பாடு சாப்பிடறது வழக்கம் தானே.. இதுல என்ன ஸ்பெஷல்?

சிரிப்புப்ப்போலீஸ் ரமேஷ் - தம்பி/.. ஓ சி சாப்பாடு சாப்பிடறது ஈசி.. ஆனா பண்டிகை நாள்ல ஓசி சாப்பாடு சாப்பிடறது ரொம்ப  சிரமம் ,எப்படி ஆளை பிடிக்கறது? எப்படி மடக்கி ஹோட்டல்க்கு கூட்டிட்டு போறது? இதெல்லாம் தனி டெக்னிக்.. அது பற்றி ஒரு பதிவு போடறேன்..

 Leonid Afremov

3.  விக்கி உலகம்  தக்காளி

சி.பி - எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்.. ஐ வாண்ட் டூ சி மிஸ்டர் வெங்கட்….

ரிசப்ஷனிஸ்ட் -   ப்ளிஸ் வெயிட் சார்.. அவர்  உள்லே பிஸியா இருக்கார்..

சி.பி -யார் கூட?

ரிசப்ஷனிஸ்ட் - வாட்?

சி.பி - அது வந்து… டோண்ட் மிஸ்டேக்கன் மீ.. அவர் பெரிய கம்பெனி எம் டி.. எதாவது வி ஐ பிங்க வந்திருப்பார்.. அதான் யார் கூட பிஸியா இருக்கார்னு…

ரிசப்ஷனிஸ்ட் - அவர் உள்ளே அவர் பி ஏ கூட பிஸியா இருக்கார்..

சி.பி - நினைச்சேன்/  ஆஃபீஸ் வேலை 18 மணீ நேரம்னா அவன் 17 மணீ நேரம் பி ஏ கூட தான் இருக்கான்.. ராஸ்கல்ஸ்!! நான் வந்திருக்கேன்னு போய் சொல்லுங்க..

அந்தப்பெண் உள்ளே போகிறார்
ரிசப்ஷனிஸ்ட் - சார்.. உங்களைப்பார்க்க ஒரு ஆள் வந்திருக்கார்..

வீடியோ விக்கி - நான் பிசியா இருக்கேனு சொல்லி அனுப்பிடம்மா, ஆம்பளைங்க யார் வந்தாலும் நான் அவுட் ஆஃப் ஸ்டேஷன்னு சொல்லி அனுப்பு, பொண்ணுங்க வந்தா மட்டும் என்னை பார்க்க உள்ளே அனுப்பு.. அதுக்காக என் சம்சாரம் வந்தா அனுப்பிடாத, நான் என்ன கோலத்துல யார் கூட இருக்கேனோ.. எனக்கு ஒரு வார்னிங்க் பெல் அடிச்சுட்டு அப்புறம் அனுப்பு..

ரிசப்ஷனிஸ்ட் - ஓக்கே சார்…அய்ய்ய்யய்யோ சார்.. அந்தாள் உள்ளே வந்துட்டாரு..

வீடியோ விக்கி - அண்ணே , வணக்கம்ணே.. இப்போத்தான் உன்னை உள்ளே அனுப்ப சொல்லி பாப்பா கிட்டே சொல்லிட்டு இருந்தேன்..

சி.பி - யாரு? நீ? நம்பிட்டேன்.. தம்பி.. தீபாவளி அன்னைக்கு ஆஃபீஸ்ல என்ன பண்ணிட்டு இருக்கே?

வீடியோ விக்கி - சரி சரி விட்றா விட்றா.. தொழிலாளர்களூக்கு போனஸ் பிரச்சனை பற்றி பேசிட்டு இருந்தேன்..

சி.பி - அப்படியா? உன் சட்டை பாக்கேட்ல ரோஜாப்பூ சிதறி இருக்கு? காலர்ல குங்குமம் இருக்கு/..?

வீடியோ விக்கி - அது வந்து… அது எதுக்கு இப்போ?உனக்கு என்ன வேணும்?

சி.பி - தீபாவளிக்கு என்ன பதிவு போடறே?

வீடியோ விக்கி - வியட்நாம் ஃபிகர்கள் VS  இந்தியா கிச்சிலிக்காஸ்.

சி.பி - ரொம்ப நாளா உன்னை கேக்கனும்னு நினைக்கறேன் , வாரா வாரம் கிச்சிலிக்காஸ். அப்டின்னு ஒரு பதிவு போடறியே? கிச்சிலிக்காஸ். அப்டின்னா என்ன?

வீடியோ விக்கி - யாருக்குத்தெரியும்?சும்மா வாய்க்கு வந்ததை வைக்க வேண்டியதுதான்.. என்னமோ என் பதிவு நல்லா புரிஞ்ச மாதிரியும் டைட்டில் மட்டும் தான் புரியாத மாதிரியும் ஃபிலிம் காட்டறியே?

சி.பி - தம்பி.. மத்தவங்களுக்கு வேணா உன் பதிவு புரியாம போகலாம், ஆனா எனக்கு அப்படி இல்லை..

வீடியோ விக்கி - நிஜமாவா? எழுதற எனக்கே புரியாதது, படிக்கற உனக்கு புரிஞ்சுடுதா?

சி.பி - அவசரப்படாத.. நான் உன் பதிவை படிக்கறதே இல்லை… நீ எப்படி எல்லார் பதிவுக்கும் போய் படிக்காமயே அண்ணே வணக்கம்ணே,  பகிர்வுக்கு நன்றி மாப்ளே.. அப்டின்னு டெம்ப்ளேட் கமெண்ட் போடறியோ அதே மாதிரி நானும் ஹி ஹி

வீடியோ விக்கி - அடப்பாவி….

Simple Life of Simple Things 3 by Larina Natalia (LarinaNatalia)) on 500px.com

4. லேப் டாப் மனோ எனும் நாஞ்சில் மனோ

சி.பி - தம்பி லேப்டாப் மனோ என்ன பண்ணிட்டிருக்கே?

லேப்டாப் மனோ  - பார்த்தா தெரில? போராடிட்டிருக்கேன்..

சி.பி - என்னமோ கூடங்குளம் அணு உலைக்கு எதிரா போராடர மாதிரியே பில்டப் தர்றியே..

லேப்டாப் மனோ - அதில்லடா..என் பிளாக் ஓப்பன் ஆக மாட்டேங்குது

சி.பி - ஐ ஜாலி, உன்னால பதிவு போட முடியாது.. சரி ஏன் ஓப்பன் ஆகலை?

லேப்டாப் மனோ - அதான் தெரில.. நீ வேணா ட்ரை பண்ணேன்..

சி.பி - ம்க்கும். ஃபிகர்க்கு மட்டும் தனியா கன்யா குமரி வரை போய் ட்ரை பண்ணிட்டு வந்துடு…. இதுக்கு மட்டும் என்னை கூப்பிடு,… சரி பழகுன பாவத்துக்கு பண்ணி தொலைக்கிறேன்.. யூசர் நேம் சொல்லு

லேப்டாப் மனோ - லேப்டாப்

சி.பி - அடங்கோ.. சரி.. பாஸ்வோர்டு சொல்லு..

லேப்டாப் மனோ - அருவா, கத்தி, கப்டா, சுத்தி, கடபாறை, கத்திரி, வேல், வில் அம்பு..

சி.பி - டேய்.. தம்பி.. இது நீ வழக்கமா போடற ஓப்பனிங்க் கமெண்ட் டூ அதர்ஸ் பிளாக்.. அதை கேட்கல.. பாஸ்வோர்டு கேட்டேன்..

லேப்டாப் மனோ - அதுவும் இதுவும் ஒண்ணுதான், இதை அறியாதவங்க வாய்ல மண்ணு தான்

சி.பி - விளங்கிடும்.. எப்படியோ போ.. தீபாவளிக்கு என்ன போஸ்ட்?

லேப்டாப் மனோ - வீடியோ விக்கியின் ஆடியோ அம்பலம்….

சி.பி - அடப்பாவி.. என்ன அது?

லேப்டாப் மனோ - அதாவது விக்கி தக்காளி கூட சேட் பண்றப்ப அவன் மைக் ஆன் பண்ணிட்டான். பேசி முடிஞ்ச பிறகு ஆஃப் பண்ண மறந்துட்டான்.. மைக்  பாட்டுக்கு ஆன்லயே இருக்கு.. அவன் பி ஏ கூட பேசறது எல்லாம் ரெக்கார்டு ஆகிடுச்சு..

சி.பி - சும்மா கதை விடாத.. அவன் நல்லவன் ஆச்சே..

லேப்டாப் மனோ - ஆமா மாலை 7 டூ விடிகாலை 6 மணி வரை நல்லவன் தான் வீட்ல இருக்கும்போது.. ஆஃபீஸ் வந்துட்டா லீலை ஆரம்பிச்சுடுவான்

சி.பி - சரி.. இப்படி பதிவு போட்டா அவன் கோபிச்சுக்க மாட்டானா/?

லேப்டாப் மனோ - ம்ஹூம்… என் மேல கோபப்பட மாட்டான்..

சி.பி - என்ன தைரியத்துல அப்படி சொல்றே?

லேப்டாப் மனோ - எனக்கு இந்த ஆடியோ க்ளிப்பிங்கை தந்ததே சி.பி தான்னு சொல்லி உன்னை மாட்ட வெச்சிடுவேனே..




5. இலங்கை  இருபத்திநாலு மணிநேர பதிவர் நிரூபன்

 

 

சி.பி - நிரூபன்.. வணக்கம் , நல்லாருக்கீங்களா?

நிரூபன் - வணக்கம் சகோதரம், இனிய காலை ,கையை ,உடம்பை வணக்கம்.. கொஞ்சம் இருங்க பதிவை படிச்சுட்டு வந்துடறேன்..

சி.பி - ஹலோ , நான் இன்னும் பதிவே போடலை,.. அப்புறம் எதை படிப்பீங்க?

நிரூபன் -  ஓ மன்னிக்க

சி.பி - என்ன யோசனைல இருக்கற மாதிரி இருக்கு?

நிரூபன் - ஒரு காத்திரமான பதிவு போடனும் தீபாவளிக்கு அது பற்றி யோசனை..

சி.பி - அண்ணே, நீங்க போடற எல்லாப்பதிவும் காத்திரமான பதிவுதான், இலங்கை அரசு மேல ஆத்திரமான  பதிவுதான்..

நிரூபன் - திடகாத்திரமா ஒரு பதிவு போடப்போறேன்..

சி.பி - போடுங்க போடுங்க.. எனக்கு ஒரு டவுட்டு,

நிரூபன் - கேளுங்க…

சி.பி - நீங்க ஒரு நாளுக்கு எத்தனை பிளாக் போறீங்க?

நிரூபன் - 189 பேர் பிளாக் போறேன்

சி.பி - ஓக்கே , எத்தனை பின்னூட்டம்  போடறீங்க?

நிரூபன் - புது ஆளுங்கன்ன்னா 10 கமெண்ட் மட்டும் போடுவேன்..கொஞ்சம் பழகுன ஆளுங்கன்னா 29 கமெண்ட் போடுவேன்.. செங்கோவி, காட்டான், துஷ்யந்தன் இவங்க பதிவுன்னா மட்டும் 80 கமெண்ட் போடுவேன்

சி.பி - ஆ கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நிரூபன் -  சி பி ஏன் மயங்கி விழுந்துட்டீங்க?

 The One 100-Th Seconds
The One 100-Th Seconds

டிஸ்கி 1   - மூன்றாம் கோணம் இணைய தளத்தில் ஒரு காமெடி ஆர்ட்டிகிள் கேட்டாங்க, கொடுத்தேன்..நேற்றே அது பப்ளிஸ் ஆகி விட்டது.. நாளை வேலாயுதம், 7ஆம் அறிவு,  ரா ஒன் , முமைத்கான் இன் அவளுக்கு அது புதுசு (கில்மா) போன்ற படங்களை பார்க்க வேண்டி இருப்பதால் பதிவு டைப் பண்ண சரக்கு கை வசம் இல்லை/.. சோ , நாகேஷ், அந்த பதிவை இங்கே போட்டிங்க்..



டிஸ்கி 2 - எந்த பிளாக் போனாலும் தீபாவளி வாழ்த்துக்களா இருக்கு.. சோ ப்ளீஸ் அவாய்டு டெம்ப்ளேட் கமெண்ட்


டிஸ்கி 3 - மூன்றாம் கோணம்-ல் வந்த ஆர்ட்டிகிள் லிங்க் - http://moonramkonam.com/deepavali/?p=9#comment-40
 

நாளைய இயக்குநர் - ஃபேண்ட்டசி, ஸ்டைலிஸ் ,த்ரில்லர் கதைகள் - விமர்சனம்

இந்தியாவிலேயே மிக மோசமான ஹேர் ஸ்டைலுடன் பாப்பா கீர்த்தி இன்னைக்கு ஆஜர் @ கலைஞர் டிவி.. அவர் போட்டிருந்த நைட்டி ஹா ஹா பூப்போட்ட டிசைன்ல கோமாளி போல் இருந்துச்சு.. மானாட மயிலாட நிகழ்ச்சில ஓரளவு கேவலமான டிரஸ்ல வர்ற மிஸ் கீர்த்தி இந்த நாளைய இயக்குநர் நிகழ்ச்சில மட்டும் ஏன் படு கேவலமா வர்றாங்களோ?ஹூம்..

கீர்த்தி - நீங்க ஒர்க் பண்ணுன அளவுல உங்களுக்கு எந்த ஆர்ட்டிஸ்ட் ரொம்ப கம்ஃபர்ட்டபிளா இருந்தாங்க?  ( ஹி ஹி நோ டபுள் மீனிங்க்)
கே பாக்யராஜ் - அமிதாப் பச்சன். எனக்கு ஹிந்தி தெரியாது, அவருக்கு தமிழ் தெரியாது.. ஆனாலும் ரொம்ப கோ ஆப்ரேட் பண்ணுனார் ஆக்ரி ராஸ்தா ஷூட்டிங்க் ல ( நான் சிகப்பு மனிதன் ஹிந்தி ரீ மேக் ).. லேடி ஆர்ட்டிஸ்ட் யார்னு சொல்ல முடியாது , வம்பு வந்துடும் ஹா ஹா ( நான் சொல்றேன்.. ஷோபனா .. அவர் தானே இது நம்ம ஆளுல...  ஹி ஹி )

சுந்தர் சி - எனக்கு கமல் & கார்த்திக்  .கார்த்திக்குக்கும், எனக்கும் நல்ல அண்டர் ஸ்டேண்டிங்க்.. நான் எது செஞ்சாலும் அவரோட நல்லதுக்குனு தான் நினைப்பார் ( குஷ்பூவை கல்யாணம் பண்ணுனது? ஹி ஹி )

கமல் வீட்ல இருந்து வர்றப்பவே ஹோம் ஒர்க் பண்ணிடுவார், நம்ம வேலையை மிச்சம் பண்ணிடுவார்..  ( அன்பே சிவம் யார் டைரக்‌ஷன்? உண்மையை சொல்லுங்க இப்பவாவது.. நீங்களா? கமலா?)

லேடி ஆர்ட்டிஸ்ட்ல சவுந்தர்யா.. 



1. ராஜேஷ்குமார் -  BET ( ஆக்‌ஷன்)


ஓப்பனிங்க் ஷாட் செம ஸ்டைலிஸா இருந்தது.. ஒரு ஆக்‌ஷன் படத்துக்கே உண்டான ஸ்பீடு கட்டிங்க், ஷார்ப் எடிட்டிங்க் என கலக்கறாரே மனுஷன்..

கார்ல ஹீரோ டிரைவிங்க்.. அவனுக்கு ஒரு ஃபோன் வருது.. உன் தங்கையை கடத்தி வெச்சிருக்கோம், நாங்க சொல்ற இடத்துக்கு வா அப்டினு கூப்பிடறாங்க.. போறான்.. அங்கே தங்கையை கண்ணை கட்டி வெச்சிருக்காங்க, வில்லன் எனக்கே உன் தங்கையை கட்டி வைக்கறேன்னு சொல்லு, அப்போத்தான் விடுவோம்கறான்..
அப்போ தங்கை சொல்லிடறா எனக்கு வேற ஒரு ஆள் கூட லவ் இருக்கு... உடனே வில்லன் அவளை ரிலீஸ் பண்ணிடறான்..கார்ல போறப்ப ஹீரோ தங்கைட்ட யார் அவன்?னு கேட்டப்ப அவ சொல்லலை. வெயிட் அண்ணா, நானே அவன் கிட்டே மேட்டர் ஓப்பன் பண்ணலை.. சொல்றேன்கறா.. 

அடுத்த ஷாட்ல ஹீரோ, வில்லன் 2 பேரும் ஒண்ணா தண்ணி அடிக்கறாங்க.எல்லாம் ஆல்ரெடி பிளான்.. அப்போ வில்லனுக்கு ஃபோன் வருது. ஸ்பீக்கர் ஃபோன் போடரான்.. ஹீரோவோட தங்கை ஐ லவ் யூ சொல்றா.
அவ்ளவ் தான் கதை.. கதைல நம்பகத்தன்மை கம்மி, ஆனா கொண்டு போன விதம் ஓக்கே...

தங்கையை கடத்திட்டு போறப்ப அந்த லொக்கேஷன் டாப் கிளாஸ்.. ஒளிப்பதிவும் பக்கா.. பேசிக்கலி படத்தோட டைரக்டர் ஒரு சவுண்ட் எஞ்சினியர் என்பதால்  ரீ ரெக்கார்டிங்க்லயும் நல்லா பண்ணி இருந்தார்.. 



2. மாதவா - யு டர்ன் ( ஃபேண்ட்டஸி)

ஹீரோவுக்கு அகஸ்மாத்தமா ஒரு பூமாரங்க் மாதிரி ஆயுதம் கிடைக்குது ரோட்ல.. அதால சுவர்ல எரிஞ்சா அப்படியே விரிசல் விடுது.. அந்த ஆயுதம் மறுபடி அவர் கைக்கே வந்துடுது.. 


அவர்க்கு பணப்பிரச்சனை.. சேட் கடைல செயினை அடமானம் வெச்சிருக்கார். அதை திருப்ப முடியல.. ஊர்ல இருந்து அப்பா வர்றார்.. வந்தா செயின் எங்கே?ன்னு கேப்பார்.. அதனால சேட் கிட்டே ஒரு நாள் மட்டும் செயினை குடுன்னு கேட்டா தர்லை , கோபத்துல அந்த பூமரங்கால ஒரே போடு,ரிட்டர்ன் வர்றப்ப அவர்ட்ட நக்கல் அடிச்ச டிராஃபிக் போலீஸ் கிட்டே தகராறு, கைல மந்திர ஆயுதம் இருக்க கவலை ஏன்? அவரையும் அட்டாக்..


வீட்டுக்கு வந்து பார்த்தா அந்த பூமாரங்க் ஆயுதத்தால சேதம் அடைஞ்ச வீட்டு சுவர் சரி ஆகி இருக்கு.. அதாவது கொஞ்ச நேரம் மட்டும் தான் அந்த பாதிப்பு போல.. வீட்டு காலிங்க் பெல் அடிக்குது.. திறந்து பார்த்தா அந்த சேட்டு, டிராஃபிக் போலீஸ்.. அவ்வ்வ்வ்வ்

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. சேட்டிடம் மீட்ட செயினை  அங்கேயே கழுத்தில் போடாமல் யாராவது 1 கி மீ நடந்து அப்புறம் நடு ரோட்டில்  நடந்து செல்லும்போது போடுவாங்களா?

2. அதே மாதிரி ஒரு கவரிங்க் செயின் வாங்கி போட்டா வேலை முடிஞ்சது.. அப்பாவை சமாளிக்கத்தானே? அதுக்காக யாராவது  கொலை செய்யத்துணிவார்களா?

3. டிராஃபிக் போலீஸை கடந்து சென்ற பின் ஹீரோ அந்த பூமாரங்கை வீசுகிறார். அது போலீஸின் பின் மண்டை, அல்லது முதுகில் தானே தாக்கும், எப்படி நடு நெற்றியில் தாக்கும்? நேருக்கு நேரா நின்றார்?



3. வெங்கடேஷ் - நிழலுக்குப்பின்

வயதான தம்பதி - லேடி - என் மேல சந்தேகப்பட்டுத்தானே அன்னைக்கு வீட்டுக்கு பின்பக்கமா வந்து வேவு பார்த்தீங்க?னு கேக்கறாங்க..உடனே ஃபிளாஷ்பேக்.. ஹீரோ வீட்டுக்கு வர்றப்ப வீட்டின் பின் பக்கமா ஒரு ஆள் ஓடி போறான், அவனை துரத்திட்டுப்போனா அவன் எஸ் ஆகிடறான்.. ஹீரோ யோசனை பண்ணிட்டே வீட்டுக்குள்ள போறாரு.. எஸ் ஆன ஆள் திரும்ப வீட்டுக்குள்ளயே வந்து படுத்துக்கறாரு.. வாட்ச்மேன்.. நம்பிக்கைத்துரோகம் பண்ணிட்டான். பீரோல இருந்த நகையை எல்லாம் கொள்ளை அடிச்சுட்டான்.. 

ஒண்ணும் தெரியாதவன் போல் வீட்டுக்குள்ல வந்து படுத்துக்கிட்டான்.. இவர் பெட்ரூம்ல போய் செக் பண்றப்ப மனைவி ரத்த வெள்ளத்துல இறந்து கிடக்கறாங்க.. என்ன பண்ணலாம்னு யோசிக்கறப்பவே மடார்னு பின்னால இருந்து வாட்ச் மேன் தாக்கி அவரையும் கொலை பண்ணிடறான்,

இப்போதான் நமக்கு தெரியுது.. வயசான தம்பதிகள் ஆவின்னு.... அவங்க பையனை தனியா விட்டுட்டு வந்துட்டமேன்னு கலங்கறாங்க.. அவன் பின்னாலயே போறாங்க.. அவங்க பையனுக்கு ஏதோ ஒரு உள்ளுணர்வு தோண திரும்பி பார்க்கறான்.. அதோட ஷாட்  முடியுது..

யூகிக்க முடியாத திருப்பங்களுடன் கதை சொல்லும் திறமை இருக்கறதால இவருக்கு எதிர்காலத்துல நூறாவது நாள் மணி வண்னன் மாதிரி அமைய சான்ஸ் இருக்கு.. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. அவ்ளவ் தூரம் ஓடிட்டு மறுபடி ரிட்டர்ன் வந்து ஒண்ணும் தெரியாத மாதிரி வாட்ச்மேன் அல்லது வேலைக்காரன் படுத்துக்கறான்.. ஹீரோ பெட்சீட்டை எடுத்து அவனை பார்க்கறார்.. அப்போ அவன் உடம்புல வியர்வை, அல்லது ஓடி வந்த இளைப்பு வாங்கி இருக்குமே?

2.  பீஸ் கட்டை பிடுங்கப்பட்டதை பார்த்து கரண்ட் இதனால தான் போயிருக்குன்னு ஹீரோ கண்டு பிடிச்சடறார்.. யாரோ ஆள் வீட்ல நடமாடறாங்கனு டவுட் வந்துடுது,. உடனே அக்கம் பக்கம் உதவிக்கு யாரையும் கூப்பிடலை.. ஏன்?



4. அஸ்வின் - குரு


ரிட்டயர்டு ஆன ஒரு ஆசிரியரின் மன அலைகளை பதிவு செஞ்ச அழகான படம்.. பொதுவா ரிட்டயர்ட் ஆகிட்டா மனிதனுக்கு 2 விதமான பயம் வந்துடும்.. 1. தான் சமூகத்தை விட்டு ஒதுக்கப்பட்டுட்டமோ..   2. நம்மோட திறமைகள் இனி செல்லுபடி ஆகாதோ..


அந்த விஷயங்கள் படத்துல நல்லா சொல்லப்பட்டிருக்கு.. 


ரிட்டயர்டு ஆன பேராசிரியர் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள மெமண்ட்டோவை ஆசையா பார்த்துட்டு இருக்கறப்ப வீட்டுக்குள்ள கிரிக்கெட் பால் வந்து அதை உடைச்சிடுது.. கிரிக்கெட் ஆடுன பையன் பாலை வாங்க வர்றான்.. அவனை கண்டபடி திட்டி காதை கிள்ளறப்ப பையனோட அம்மா வந்து மன்னிப்பு கேட்டு அந்தப்பையனுக்கு டியூஷன் சொல்லித்தரச்சொல்லி கேட்கறா..ஓக்கே சொல்றாரு..



ஆரம்பத்துல சரியா கவனிக்காம விளையாட்டுப்பையனா இருக்கான்.. அப்புறம் ஒழுங்கா கவனிக்கறான்.. சார்.. நான் பாஸ் ஆகிடுவேனா?னு கேட்கறான்.. 2 பேருக்கும் குரு மாணவன்  என்ற ஃபீலிங்க் தாண்டி ஒரு ஒட்டுதல் ஏற்படுது..

டியூஷன் முடிச்சுட்டு கிளம்பறப்ப பையன் வாத்தியாரை கிண்டல் பண்றான்.. உங்களால பேட்டிங்க் பண்ண முடியுமா?ன்னு கேட்கறான்.. அவரும்  கோதால இறங்கறாரு.. அவ்ளவ் தான் கதை..

ஒவ்வொரு மனுஷனும் தான் கவனிக்கப்படனும் , தன்னை எல்லாரும் மதிக்கனும், தன்னால யாருக்காவது ஏதாவது பிரயோஜனம் இருக்கனும்னு நினைக்கறான் என்ற கான்செப்டோட படம் முடியுது.. 

டெக்னிக்கலா அசத்துற படங்களை விட மனித மனங்களை படித்து எடுக்கப்படும் சாதாரன எளிய படங்களே மக்களை கவரும் என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் இந்தபப்டம் தான் சிறந்த படமா தேர்ந்தெடுக்கப்பட்டது சந்தோசமா இருந்துச்சு

இயக்குநரிடம் சில சுட்டிக்காட்டல்கள்

1.  வாத்தியார் மெமண்ட்டோவை பார்த்திட்டிருக்கறப்ப ஜன்னல்க்கு எதிரேதான் நிக்கறார்.. ஆனா பந்து அதுக்கு ஆப்போசிட் சைடுல இருந்து வருது.. அப்படி வந்தா அதை உடைக்க வாய்ப்பே இல்லை, கேமரா ஆங்கிளை மாத்தி இருக்கனும்..

2. வாத்தியார் மனைவி கேரக்டர் சமையல் அறைல இருந்து பேசற வசனங்கள், தேவை அற்றது.. அவ்ளவ் ஏன்? மனைவி கேரக்டரை காட்டாமயே இன்னும் அழகா இந்த கதையை சொல்ல முடியும்.. பொதுவா குறும்படம் எடுக்கறப்ப எந்த அளவு கேரக்டரை குறைக்கறமோ அந்த அளவு நல்லது.. ஆடியன்சுக்கு ஈசியா புரியும்.. நமக்கும் வேலை கம்மி.. 


இந்த வாரம் போட்ட 4 படங்கள்ல 3 படங்கள் ஓக்கே ரகம்..

Monday, October 24, 2011

கோவை ப்ரீத்தியின் கொலை வழக்கு - KOVAI PREETHI MURDER CASE (சவால் சிறுகதைப்போட்டி )

6 மாதங்களுக்கு முன் கோவையில் எந்த பத்திரிக்கையிலும் வராத , எந்த போலீஸ் ஸ்டேஷனிலும் பதிவு செய்யப்படாத ஒரு தற்கொலை கேஸ் ..அவர் ஒரு பெண் பதிவர். .......................என்ற பெயரில் பிளாக் ஓப்பன் செய்து கொஞ்ச நாட்களிலேயே அந்த துர் சம்பவம் நடந்தது.. தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்து நான் திரட்டிய தகவல்கள்... இவை.. முழுக்க முழுக்க பெயர் உட்பட எல்லாம் உண்மை.. விஷ்ணு , கோகுல் கேரக்டர் மட்டும் இடைச்செருகல்.. அது போட்டியின் விதி கருதி....




ப்ரீத்தியின் டைரியிலிருந்து

என் சொந்த ஊரு திருத்தணி.. +2 வரை அங்கே தான் படிச்சேன்..ரொம்ப லோ   இன்கம் ஃபேமிலி..எனக்கு ஒரு தங்கை.. அவ பேரு தேவி. அவ இப்போ பெங்களூர்ல ஒரு சாஃப்ட்வேர் கம்பெனில ஒர்க் பண்றா.. நான் கோவைல ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ல சேல்ஸ் கேர்ள்.எனக்கு சின்ன வயசுல இருந்தே மத்தவங்க மாதிரி ஆடம்பரமா வாழ ஆசை,ஆனா வறுமை என்னை கட்டிப்போட்டுச்சு. ஆனா நானும் என் மனசுக்குப்பிடிச்ச மாதிரி நடக்க ஒரு வாய்ப்பு வந்துச்சு. கோவை வந்த முதல் 6 மாசம் எந்த வித பிரச்சனைகளும், முக்கிய நிகழ்வுகளும் இல்லாம தான் போச்சு..

ஒரு நாள் ஹை க்ளாஸ் லுக்கோட ஒரு ஆள் வந்தார்..என்னை ரொம்ப நுணுக்கமா பார்த்தார்.. எனக்கு மனசுக்குள்ள எந்த மணியும் அடிக்கல.. ஆனாலும் ஒரு குறு குறுப்பு ஏற்பட்டுச்சு.. அடுத்த நாள்ல இருந்து அது தொடர் கதை ஆச்சு.. எனக்கு தெரிஞ்சுடுச்சு. என்னை பார்க்கத்தான் வர்றார்னு..

என் கிட்டே பேச்சு குடுக்க ஆரம்பிச்சார்.. அவர் பேர் ரகு.. ஷாப்பிங்க் மால் வெச்சிருக்கார்..என்னை ஒரு நாள் காஃபி ஷாப் கூப்பிட்டார்.. போனேன்.. ரொம்ப டீசண்ட்டா பேசினார்.. என்னை மேரேஜ் பண்ணிக்க விரும்பறதா சொன்னார்.. சினிமால வர்ற மாதிரி கட்டிப்பிடிக்கறது, கிஸ், ஊர் சுற்றல் அப்டினு எந்த வித சில்மிஷங்களும் இல்லாம கண்ணியமா அவரது அணுகு முறை இருந்தது அப்போ எனக்கு எந்த சந்தேகத்தையும் ஏற்படுத்தலை..

எனக்குள்ள எந்த பட்டாம்பூச்சியும் பறக்கலை, ஏழைக்குடும்பம்,எப்படியோ வசதியான ஆள் கணவனா வந்தா நல்லதுதான்னு தோணுச்சு.. அம்மா, அப்பா கிட்டே விஷயம் சொன்னேன், அவங்களும் ஓக்கே சொல்லிட்டாங்க..

மருத மலை கோயில்ல எங்க மேரேஜ் ரொம்ப சிம்ப்பிளா நடந்தது. இவ்வளவு பணக்கார ஃபேமிலி மண்டபத்துல மேரேஜ் பண்ணாம கோயில்ல வைக்கறாங்களேன்னு எனக்கு கொஞ்சம் டவுட்டா இருந்தது.. ஆனா அதை பெரிசா எடுத்துக்கலை..

மேரேஜ் முடிஞ்சு முக்கிய உறவினர்கள், பேரண்ட்ஸ் எல்லாரும் கிளம்பிட்டாங்க..முதல் இரவு ரகுவின்  வீட்டில்.. அதை வீடுன்னு சொல்லிட முடியாது, பெரிய பங்களா.. வந்தாரு.. பக்கத்துல உட்கார்ந்தாரு..கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தாரு,, தூங்கிட்டாரு..எதுவும் நடக்கலை..

சரி.. மேரேஜ் அலைச்சல், டென்ஷன் இப்படி இருக்கும்னு நான் அதை பெரிசா எடுதுக்கல.. 10 நாட்கள் இப்படியே போச்சு.. 11 வது நாள் எனக்கு டவுட் வந்து அவர்ட்ட பேசுனப்ப அந்த ஷாக் என் உடம்பு, மனசு எல்லாத்துலயும் ஒரு சேர இறங்குச்சு..அவர் ஆண்மை இல்லாதவர்.. IMPOTENT. அது போக டெயிலி அவர் டிரக் சாப்பிடறவர் , டிரக் அடிக்ட்..

அப்புறம் எதுக்காக என் லைஃப்ல விளையாடுனீங்க?ன்னு கேட்டேன்.. பிரஸ்டீஜ்க்காக. சொசைட்டி முன்னால எல்லோரையும் போல வாழ அப்டின்னார்..என் தலை எழுத்து அவ்ளவ் தான்னு என்னை தேத்திக்கிட்டேன். 2 மாசம் அப்டியே போச்சு..


ஒரு நாள் ரகு என் கிட்டே பம்பிக்கிட்டே வந்தாரு..நமக்கு ஒரு வாரிசு வேணும்.. அப்பதான் நான் தைரியமா ஆம்பளைன்னு வெளில சொல்லிக்க முடியும்னு  சொன்னாரு.. டெஸ்ட் டியூப் பேபி மேட்டர் எடுக்கப்போறார்னு நினைச்சேன்.. ஆனா அவர் தன் அப்பா கூட என்னை “அட்ஜஸ்” பண்ண சொன்னார்..


நான் ஒத்துக்கலை.. அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுனேன்.. எனக்கு போதை ஊசி போட்டு சாதிச்சுட்டாங்க.. 4 வருஷங்கள்.. 2 குழந்தைகள் பிறந்தாச்சு.. மாமனார் மூலமா..

வீட்டுக்கு வெளில ரகு கூட தம்பதி சகிதமா போவேன், வீட்டுக்கு உள்ளே மாமனார் கூட..

அவங்களுக்கு இணையான வசதியான இடத்துல பெண் எடுத்தா பிரச்சனை வரும்னு தான் என்னை மாதிரி ஒரு ஏழையை ,எதிர்க்க திராணி இல்லாத ஆளை, கல்யாணம் பண்ணிட்டார்னு புரிஞ்சுது.. தலை விதியேன்னு இருந்தேன்.

ஒரு நாள் ரகு திடீர்னு என் கால்ல விழுந்தார்...அவங்க ஷாப்பிங்க் மால் தீ விபத்துல எரிஞ்சிடுச்சாம், இன்ஷூரன்ஸ் ஆஃபீஸ்ஸர் சைன் பண்ணுனாத்தான் சாங்க்‌ஷன் ஆகுமாம்..அதனால அவர் கூடவும் ஒரு டைம் மட்டும் ....அட்ஜஸ் பண்ணச்சொன்னார்.. முடியவே முடியாதுன்னு சாதிச்சேன்.. அழுதேன்.. அம்மா அப்பாவுக்கு தகவல் சொல்லலாம்னு ட்ரை பண்ணேன், என்னை ஹவுஸ் அரெஸ்ட் மாதிரி வெச்சுட்டாரு. மாமனார், மாமியார் 2 பேரும் அவருக்கு உடந்தை, யாரோ ஒருத்தர் என்னை கண்காணிக்க என் கூடவே இருக்க ஆரம்பிச்சாங்க..


கரப்பான் பூச்சி மேல விழுந்தா, பல்லி மேல பட்டா எப்படி அருவெறுப்பா இருக்க்குமோ அது மாதிரி எனக்கு இருந்துச்சு , இன்சூரன்ஸ் ஆஃபீசர் கூட இருக்கறப்ப.. அப்புறம் பழகிடுச்சு.. என்னை கால் கேர்ளா யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.. நல்லா சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டாங்க..பணம் இல்லாதவந்தான் பணத்து மேல ஆசைப்படனும்.. இருக்கறவங்க மேலும் மேலும் சேர்க்க வெறி எடுத்துப்போய் அலையறாங்க..

ஆரம்பத்துல நான் பணத்தை பற்றி கவலைப்படல.. அப்புறம் என் குடும்பத்துக்காக தங்கை, பெற்றோருக்காக பணம் சேர்த்த ஆரம்பிச்சேன்.. முதல்ல அவங்க ஒத்துக்கலை, நான் ஒத்துழையாமை, உடன்படாத தன்மை எல்லாம் யூஸ் பண்ணி சம்மதிக்க வெச்சேன்.. 8 வருஷம் இப்படியே போச்சு..


அப்போதான் விஷ்ணுவை சந்திச்சேன்.. மத்தவங்க எல்லாம் வந்த வேலை முடிஞ்சதும் கிளம்பிடுவாங்க.. இவர் மட்டும் தான் என்ன் மேல கேர் எடுத்து என்னை பற்றி  பேசுவார்.. விசாரிப்பார்.. அவர் கிட்டே எல்லா மேட்டரையும் சொன்னேன்.. சட்டப்படி இவங்களை சிக்க வைக்க என்ன வழி?ன்னு கேட்டேன்.. அவர் ஒரு வீடியோ கேமரா கொடுத்தாரு.. (அதுக்கு பணம் வாங்கிக்கிட்டாரு)அது மூலமா கணவர், மாமனார் நடவடிக்கைகள், சித்ரவதைகளை படம் பிடிச்சு ஆதரமா சிடி ல காப்பி பண்ணி வைக்க சொன்னார்..

நான் என் வீட்டு பெட்ரூம்ல அதை ஃபிக்ஸ் பண்ணி அவர் ஐடியா படியே செஞ்சேன்.. ரகு என்னை அடிக்கறது,கட்டாயப்படுத்தறது, மாமனார் என்னை நாசம் பண்றது எல்லாம்.அந்த வீடியோவை என் பீரோ லாக்கர்ல  ஒரு பாக்ஸ்ல  போட்டு வெச்சிருக்கேன்.. என்னையும் அறியாம நான் இந்த ஆடம்பர வாழ்க்கைக்கும், கால்கேர்ள் லைஃப்க்கும் அடிமை ஆகிட்டேன்..எனக்கு இவங்களால ஆபத்து ஏற்படும்வரை லைஃபை அனுபவிப்பது,ஏதாவது பிரச்சனை வர்றப்ப போலீஸ்க்கு போலாம்னு முடிவு செஞ்சேன்..சரியான சமயம் பார்த்து 2 பேரையும் சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கனும்..னு பிளான் பண்ணி வெச்சிருக்கேன்

ரகுவின் டைரியிலிருந்து

ப்ரீத்தி முன்னே மாதிரி இல்லை. ஏதோ தப்பு பண்றா.. கண்காணிக்கனும்.. ரெகுலரா வர்ற கஸ்டமர் சொன்னதுல இருந்து ஒரு டவுட்.. அவளை பெருந்துறை சேனிட்டோரியம் கூட்டிட்டுப்போய் மெடிக்கல் செக்கப் பண்ணுனதுல கன்ஃபர்ம் ஆகிடுச்சு.. அவளுக்கு எய்ட்ஸ்.. 6 மாசமா இருக்காம்.. பாவம், எத்தனை பேருக்கு பரப்புனாளோ, நல்ல வேளை.. அப்பா 10 மாசமா அவளை தொடறதில்லை.. இனி ஜாக்கிரதையா இருக்கனும்.. அவ தங்கை பெங்களூர்ல தான் இருக்கா.. அவளை 2 வருஷமாவே அப்பப்ப போய் ப்ரீத்திக்குத்தெரியாம பார்த்து கரெக்ட் பண்ணி வெச்சிருக்கேன்..அவளை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துடனும்.. ப்ரீத்தி பண்ணிட்டிருந்த ரோலை  இனி அவ செய்வா..

தேவியின் டைரியிலிருந்து

அக்கா வீட்டுக்காரர் அக்காவைப்பற்றி சொன்னப்ப என்னால நம்ப முடியல.. ஆனா அவர் காட்டின ஃபோட்டோ ஆதாரங்கள் நம்ப வைக்குது.. ஆனா மாமா ரொம்ப அமைதி டைப்.. இவ்வளவு பொறுமையா இருக்கார்.. தான் ஆண்மை இல்லாதவர்ங்கறதை எந்த ஆணும் வெளில சொல்ல மாட்டான்.. இவர் சொல்லிட்டார்.. லைஃப்ல அந்த ஒண்ணுதானா?அந்த ஒரு சுகத்துக்காக அக்கா தடம் மாறுனது தப்பு.. பாவம் மாமா, அன்புக்கு ஏங்கறார்


முதல்ல என் கிட்டே அவர் அப்ரோச் பண்னப்ப எனக்கு தயக்கமாதான் இருந்துச்சு.. சொத்து, வசதி எல்லாம் பார்த்து ஓக்கே சொல்லிட்டேன்.. அம்மா, அப்பா, அக்காவுக்கு மேட்டர் தெரியாது.. அவர் பெங்களூர்லயே ஒரு கோயில்ல  தாலி கட்டி கோவை கூட்டிட்டுப்போயிட்டார்.. என்னை பார்த்ததும் அக்காவுக்கு அதிர்ச்சி.. அடிப்பாவி, மோசம் பண்ணிட்டியேன்னு கதறுனா.. பொறாமை போல.. அவ மேட்டர் எனக்கு தெரிஞ்சதா காட்டிக்கலை.. அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுனா.. உனக்காகத்தாண்டி இவ்வளவு கஷ்டப்பட்டேன், இப்படி பண்ணீட்டியே பாவி அப்டினு அழுதா.. எனக்கு அவ மேல பரிதாபமாவும் இருந்துச்சு,, கஷ்டமாவும் இருந்துச்சு..

நான் போன அன்னைக்கு அடுத்த நாள் காலைல அவ தூக்குபோட்டு இறந்துட்டதா ரகு சொன்னாரு.. நான் அந்த கோலத்தை பார்க்கலை.. ஆனா ரூம்ல  அக்காவை படுக்க வெச்சிருந்தாங்க,பக்கத்துல அவ தூக்கு போட்டதா சொல்லப்பட்ட சேலை இருந்துச்சு. ஏதோ மர்மம் என்னை சுத்தி நடக்குதுன்னு தெரிஞ்சிடுச்சு, அம்மா, அப்பாவுக்கு தகவல் சொல்லிட்டு அவங்க வராததுக்கு முன்னேயே அவசர அவசரமா கொண்டு போய் எரிச்சுட்டாங்க..




விஷ்ணுவின் டைரியிலிருந்து


ப்ரீத்தி நான் சொல்லிக்குடுத்த படியே எல்லாம் செஞ்சா.. எல்லா ஆதாரங்களையும் சி டி ல காப்பி பண்ணி எனக்கு அனுப்பச்சொன்னேன். அவ அது போல் செய்யலை.. அவ ஒரு சி டி ல எல்லாத்தையும் ஸ்டோர் பண்ணி  லாக்கர்ல போட்டு வெச்சிருக்களாம்..அந்த லாக்கர் திறக்க என்ன குறியீடுன்னு என் கிட்ட சொல்லிட்டா... ..அவளுக்கு எதாவது ஆபத்துன்னா மட்டும் அதை எடுக்கறதாம்..



திடீர்னு அவ சூசயிட் செஞ்ச மேட்டர் எனக்கு தெரிஞ்சுது.. எந்த பேப்பர்லயும் வர்ல.. தினமும் என்னை அவ காண்டாக்ட் பண்ணுவா.. 9 நாளா நோ காண்டாக்ட்.. டவுட் ஆகி ஒரு கஸ்டமரா அவ வேணும்னு கேட்டப்ப அவ இறந்துட்டதா ரகு சொன்னான்..



என் குறுக்கு புத்தி வேலை செஞ்சது.. வீட்டுக்கு வந்து யோசனை செஞ்சேன்.. கைல கிடைச்சிருக்கற மேட்டர் ரொம்ப பவர் ஃபுல்.. அதை வெச்சு சம்பாதிக்கனும்னு முடிவு செஞ்சேன்..  ரகுவுக்கு ஃபோன் போட்டேன்.. மேட்டரை சொன்னேன்.. அவர் மனசுக்குள்ள பதட்டம் அடைஞ்சு இருப்பார் , ஆனா வெளில காட்டிக்கலை.. 10 லட்சம் டிமாண்ட் பண்ணுனேன்.. ரொம்ப ஓவர் ரேட்னார்.. நீங்க செஞ்சது கொலை, பாலியல் அத்து மீறல், வலுக்கட்டாயமா விபச்சாரத்துக்கு தூண்டுனது, ஆண்மை இல்லைங்கறதை மறைச்சு மேரேஜ் செஞ்சது, எல்லாத்துக்கும் தனி தனி கேஸ் போட்டா நீ ங்க ஜென்மத்துக்கும் உள்ளே களி தான் சாப்பிடனும்னேன்.. S.P  கோகுல்ட்ட எல்லாத்தையும் சொல்லிடவா?ன்னு மிரட்னேன்..நான் ஒரு போலீஸ் இன்ஃபார்மர்னு சொன்னேன், ஃபோனை கட் பண்ணிட்டார்..


அவரை  மிரட்ட, பணிய வைக்க S P  கோகுல்ட்ட புகார் கொடுத்த மாதிரி டம்மியா புகார் கொடுப்போம், அதை வெச்சு விசாரனை , கேஸ்னு அலைஞ்சாத்தான் அவருக்கு பயம் வரும்னு முடிவு செஞ்சேன்.. கோகுல்க்கு ஃபோன் போட்டேன், எல்லா மேட்டரும் சொன்னேன்.. . அந்த லாக்கரை திறப்பதற்கான குறியீடு   சொன்னால் மிஸ் ஆக வாய்ப்பு உள்ளது என்பதால் sms  அனுப்பச்சொன்னார்.. அனுப்பினேன்





Mr.கோகுல் ,

S W 62 HF - இதுதான் குறியீடு. கவனமாக.. .
- விஷ்ணு



நேர்ல வரச்சொன்னார், போனேன்.. எழுத்துப்பூர்வமா புகார் எழுதி த்தரச்சொன்னார், எழுதி கொடுத்தேன்..


ரகுவுக்கு போலீஸ் என்கொயரி நடந்தது.. கைது ஆனார்.. கேசில் அடிப்படை முகாந்திரம் இருந்ப்தால் 15 நாட்கள் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க கோர்ட் ஆணை இட்டது..


ஜாமீனில் வெளியே வந்தார் ரகு.. என்னை ஃபோனில் தொடர்பு கொண்டார்.. கட் செய்தேன்.. நாளை என்கொயரியில்  யார் யாரிடம் பேசினேன் என்பது தெரிஞ்சிடுமே.. அதனால் SMS அனுப்பினேன்.


Sir,

எஸ்.பி ,கோகுலிடம் நான் தவறான குறியீடைதான் கொடுத்திருக்கிறேன் .
கவலை வேண்டாம்."
-விஷ்ணு



S.P கோகுலின் டைரியிலிருந்து


விஷ்ணு வழக்கம் போல் இல்லை.. படபடப்பாக இருந்தான்.. பிரீத்தி கொலை கேஸில் ஏதோ டபுள் கேம் ஆடப்போறான்னு எனக்கு மனசுக்குள்ள ஒரு பட்சி சொல்லுச்சு.. அவனை கண்காணிக்க ஆள் போட்டேன்.அவன் சமீப காலமா யார் யாரிடம் எல்லாம் ஃபோன்ல பேசுனான்னு செல் ஃபோன் கம்ப்பெனிக்கு என்கொயரி பண்ணி பார்த்தேன் , சில துப்பு கிடைச்சுது.அவன் SMS, MMS  எல்லாத்தையும் பார்த்தேன் ,அதுல டவுட்டா தெரிஞ்ச சில  மெசேஜ் மட்டும் பிரிண்ட் அவுட் எடுக்கச்சொன்னேன்..



Mr.கோகுல் ,

S W 62 HF - இதுதான் குறியீடு. கவனமாக.. .
- விஷ்ணு



Sir,

எஸ்.பி ,கோகுலிடம் நான் தவறான குறியீடைதான் கொடுத்திருக்கிறேன் .
கவலை வேண்டாம்."
-விஷ்ணு



மாட்னான்.. நம்ம கிட்டேயே டபுள் கேம் ஆடறானா? என யோசிக்கும்போதே அவன் கிட்டே இருந்து கால் வந்தது..



சார். நான் டேஞ்சர்ல இருக்கேன்...எல்லா விபரமும் அப்புறம் சொல்றேன்.. உடனே  மருத மலை  உச்சிக்கு வாங்க..நான் உயிருக்கு ஆபத்தான நிலைல இருக்கேன்


உடனே ஜீப்பில் மருதமலை போனேன்.. அவனை ஷூட் பண்ணிட்டு ரகு எஸ் ஆகிட்டான்.. அவனை ஹாஸ்பிடல்ல சேர்த்தேன்.. ஒரிஜினல் குறியீட்டை விஷ்ணு கிட்டே வாங்கி பிரீத்தி வீட்ல போய் அவங்க பீரோ லாக்கர் ஓப்பன் பண்ணி ஆதார சி டி  எடுத்துக்கிட்டேன்..



ரகு, தன் அப்பா, அம்மா, குழந்தைகள் உடன் ஃபிரான்ஸ் போய்ட்டான்..இண்ட்டர்போல்க்கு தகவல் சொன்னேன்...


ஃபிரான்ஸ்  கிருபாவதியின் டைரியிலிருந்து

பழகுன அடுத்த நாளே கிஸ் கேட்கற பல பாய் ஃபிரண்ட்ஸ்களுக்கு  நடுவே ரகு எனக்கு வித்தியாசமா தெரிஞ்சார்.. ரொம்ப டீசண்ட்... என்னை மேரேஜ் பண்ணிக்க ஆசைப்படறதா சொன்னதும் யோசிக்காம அதுக்குன்னே காத்துக்கிடந்தது போல் ஓக்கே சொல்லிட்டேன்...



Saturday, October 22, 2011

காதலிப்பவர்கள் அனைவரும் பைத்தியக்காரர்களா? (காதல் தத்து பித்துவங்கள்)

1.தனது இறுதி ஊர்வலத்தில் கூட வாழ்க! கோஷம் போடப்படுவதை விரும்புவனே அக்மார்க் அரசியல்வாதி

-------------------------------------

2. வாழ்க்கையில் ரிஸ்க் எடு, ஜெயித்தால் தலைவன் ஆவாய், தோற்றால் வழி நடத்தப்படுவாய்!

---------------------------

3. எப்பவும் என்னைத்தான் நினைச்சுட்டு இருக்கீங்க என்பதற்கு ஆதாரம் இருக்கா?

நினைக்கலைங்கறதுக்கு உன் கிட்டே ஆதாரம் இருக்கா?  # காதல் கடலை

--------------------------------

4. காதலிப்பவர்கள் அனைவரும் பைத்தியக்காரர்களா?

ச்சே! ச்சே! காதலியால் கைவிடப்படும் அபலை ஆண்கள் மட்டும் பைத்தியக்காரர்கள்!

------------------------------

5. சொல்லாத காதல் சொர்க்கத்தில் சேராதாமே? நிஜமா?

சொல்லாமலேயே புரிந்து கொள்ளப்படுவதும், உணரப்படுவதும்தான் காதல்.


-----------------------------


Fun & Info @ Keralites.net

6. தன்னிடம் கெஞ்சும் ஆண்களை சில பெண்களுக்கு பிடிக்கும் ,தன்னிடம் கொஞ்சும் பெண்களை எல்லா ஆண்களுக்கும் பிடிக்கும்

-------------------------------

7. மழலைகளை கொஞ்சி மகிழாத உள்ளங்களைக்கூட மன்னித்து விடலாம்,அவர்களை கடுமையாக கண்டிக்கும், தண்டிக்கும் ஆட்களை மன்னிக்கவே முடிவதில்லை

------------------------------------

8. தினமும் மனைவிக்கு பூ வாங்கிச்செல்பவன் அன்புக்கணவன், கூந்தலில் சூடி விடுபவன் அன்புள்ளம் கொண்ட கணவன்.

---------------------------

9. என் இதயம் ஒரு வழிப்பாதை போல! உள்ளே நுழைய மட்டுமே உனக்கு அனுமதி! நீ என் வாழ்வில் எதிர்பாராமல் கிடைத்த வெகுமதி..

----------------------------------

10. அவள் ஒரு அமைதி விரும்பி. சத்தம் வராத முத்தம் மட்டுமே அவளுக்குப்பிடிக்கும், ஆனால் நான் ஒரு ஆர்ப்பாட்டவாதி # SOUND OF LOVE

---------------------------
Cutest Girl
Fun & Info @ Keralites.net
11. குழந்தைகளை எந்த வயதில் இருந்து அடிக்கலாம்? என விவாதிப்பது எப்போதிலிருந்து  குழந்தைகளை எதிர்மறை எண்ணம்கொண்டவர்கள் ஆக்கலாம்? எனகேட்பது போல

------------------------------------

12. பெண் குழந்தை பிறந்த வீட்டில் மஹா லட்சுமி குடி இருப்பாள்,எந்தக்குழந்தை பிறந்தாலும் சந்தோஷ லட்சுமி  விருந்துக்கு வருவாள்

-------------------------------

13. மழை வரும்போது மண்ணின் வாசம் கிளம்புவது மாதிரி மழலை அருகே வரும்போது பால் வாசம் தளும்புகிறது

-------------------------------

14. மனைவியுடனான சந்தோஷ தருணங்களில் விதவைத்தாயின் துக்கங்கள் நெஞ்சை நெருடும்.

-----------------------------

15. குக்கர் - நீ ஏன் இவ்ளவ் கறுப்பு? வட சட்டி - இப்பவே நீ விசில் அடிச்சு கூப்பிடறே! சிவ்வப்பா இருந்துட்டா.? # சமையல் அறை சரசங்கள்

-------------------

Fun & Info @ Keralites.net

16. நல்லவர்களோ, கெட்டவர்களோ பெரும்பாலானவர்கள் தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்ளவே விரும்புகிறார்கள்

------------------

17.என் ஆயுள் உள்ளவரை உன் காதல், அல்லது உன் காதல் உள்ளவரை என் ஆயுள்  இரண்டில் ஒன்று போதுமடி எனக்கு!!

---------------------------------------

18. தொட முடியாத தூரத்தில் வானம், பிடிக்க முடியாத தரத்தில் காற்று, மறக்க முடியாத ஈரத்தில் உன் கண்கள்

---------------------------------------

19. உலகின் மென்மையான வன்முறை உன் செல்ல அடியாக இருக்கும்,உலகின் சிறந்த பாதுகாப்பான இடம் எனக்கு உன் மடியாக இருக்கும்

--------------------------------

20. நான் விரும்பாததை யார் சொன்னாலும் செய்வதில்லை, நான் விரும்புவதை உலகமே எதிர்த்தாலும் செய்யாமல் விடுவதில்லை # தாந்தோனி தர்மா

----------------------------------

Fun & Info @ Keralites.net
21.மணமான ஆண்களின் மூளை கணினி போல.. சுயமாக சிந்திப்பதில்லை

-------------------------------

22. நான் ஆர்த்தோடக்ஸ் ஃபேமிலி - நடிகை சோனா # மேடம், அட்லீஸ்ட் பேட்டி முடியும் வரையாவது இந்த பெட்ஷீட்டை போர்த்திக்கொள்ளவும்,நாங்க வீக்ஃபேமிலி

-----------------------------------

23. அன்பு காட்டுறவங்களிடம் ஜாலியா இருந்தேன்! - ஸ்ரேயா # வேலியா உங்கம்மா பக்கத்துல இல்லையா? மேடம்?

--------------------------------

24. கணவனும், மனைவியும் சினிமாவில் இருந்தால் பிரச்னைதான்! - நந்தா #ஒண்ணா சினிமாவுக்கு போனாலே பிரச்சனைகள் ஓராயிரம் வருது, நடிச்சா வராதா?

-------------------------------

25. நானும், மகத்தும் நல்ல நண்பர்கள், மகத் என் காதலர் அல்ல, சிம்புவுக்கு சிறு வயதில் இருந்தே அவர் நண்பர் - டாப்ஸி # குழப்பாதீங்க!

--------------------------

Río Negro

உயிரின் எடை 21 அயிரி - ஹேர் இழையில் மிஸ் ஆன வெற்றி - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-yQO5nP2YkQ-vC2zkiSGEaqfnDf44pu-cJW5xm3fOOtIb1CxJsLUFMbBibxfFEMQx8Hl-Q8p1mSTmnAuxXAL39xdgqsXjz_EyA0LQl7TfH65chAY2dyQ8rO8uBnhVh5v2Gvfdu46zdbEa/s1600/Uyirin+Yedai+21+Gram+Movie+Stills+%25289%2529.jpg

கதை எழுத அமரும்போது இயக்குநர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் தன் திறமையை மக்கள் உணர வேண்டும் ,தன் எழுத்து கவனிக்கப்பட வேண்டும்,வித்தியாசமான கோணத்தில் சொல்லி இருக்கோமே என அனைவரும் பாராட்ட வேண்டும் என்பதை விட மக்களுக்கு எளிதில் புரிய வேண்டும், அனைவரையும் கதை சென்று அடைய வேண்டும் என்பதே..

பெரும்பாலான இயக்குநர்கள் தங்கள் மேதா விலாசம் வெளிப்பட்டால் போதும் என்றே நினைக்கிறார்கள். அதிலும் கதையின் அதாவது படத்தின் நாயகனாக இயக்குநரே அமைந்து விட்டால் கேட்கவே வேண்டாம்.. மொத்தக்கதையும் அந்த ஒத்தை ஆளை சுற்றியே நகரும்./.

திலகன் பற்றி முதல்ல சொல்லிடறேன்.. சத்ரியன் படத்துல கேப்டன் கிட்டே நீ மறுபடியும் ஏ சி பன்னீர் செல்வமா வரனும்.. அப்டினு கலக்கலா வசனம் பேசினாரே அந்த கேரளா வில்லன் தான் இதுல தாதாவா வர்றார்..ஊரே அஞ்சி நடுங்கும் தாதா.. அவரது ரைட் ஹேண்ட் கம் வளர்ப்பு மகன் தான் ஹீரோ.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRpi6e6nlHiAqsiZ1Ig4YVjw5UC0IGgBTChpbgb8nOPQsy8AqDSzCjbUPi56Jx4UfOw7ahGRBNg09uPUcYClkLZbySiL-1kJItsi9cBcP2WiQb7B_WJHSGW5ZyXpOGyuCzFIHxd6shIgU/s400/Uyirin-Yedai-21-Gram-Stills-042.jpg
. இப்படத்தின் கதை, திரைக்கதை, ஒலி வடிவமைப்பு, இசை, இயக்கம் ஆகிய பொறுப்புகளை ஏற்று நாயகனாகவும் நடித்து வருகிறார் இந்திரஜித். இவர், தண்டாயுதபாணி, கி.மு., சாமிடா உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் என்பதும், திரைப்படக் கல்லூரி மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பட இயக்குநர்தான் இந்தப்பட ஹீரோ.. படத்தோட கதை என்ன?

தாதா திலகன் மனதில் நினைப்பதை ஹீரோ உடனே செய்கிறார்.. தாதாவின் நிஜ மகன்க்கு தன் அப்பாவுக்குப்பின் தானே வாரிசு ஆக ஆசை... அதற்கு ஒரே குறுக்கீடாக இருக்கும் ஹீரோவை போட்டுத்தள்ள நினைக்கிறான்.. மயிரிழையில் உயிர் தப்பும் ஹீரோ  ஒரு கிராமத்தில் குற்றுயிரும், குலை உயிருமாக  இருக்க, ஒரு மருத்துவர் அவரை காப்பாற்றுகிறார்.. அவரது விதவை பேத்தி ஹீரோவை .. ஹி ஹி அதே லவ் .. ஹீரோ மனம் மாறுகிறான், திருந்துகிறான்..

ஆனால் ஹீரோ உயிரோடு இருப்பது தெரிந்த வில்லன்  மீண்டும் அவனை போட்டுத்தள்ளுகிறான்.அம்புட்டுதான் கதை..
இடைவேளை வரை ஒரே அடிதடி , வெட்டு குத்து, துரத்தல், வன்முறை, ரத்தம்....
அதற்குப்பிறகு ஹீரோ திருந்தும் படலம், ஹீரோயின் ரூட் விடும் படலம்..
http://www.kollywoodtoday.in/wp-content/uploads/2010/02/uyirnedai21gram-fe7-10.jpg

படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1. இதிகாச காலத்தில் இருந்து இன்னைக்கு வரை உப்பைத்தின்னு விசுவசமா வாழ்ந்த எவனும் உருப்பட்டதா சரித்திரம் இல்லை, அநியாயமாத்தான் இறந்திருக்காங்க..

2. பேட்ஸ்மேன் அவுட் ஆகலைன்னாலும் அம்ப்பயர் கை தூக்கிட்டா வெளீல போய்த்தான் ஆகனும்.. அது மாத்கிரி தான் எங்கண்ணன்..அச்சன்

3. என் உயிர் இருக்கற அவரை உங்களூக்கு துரோகம் செய்ய மாட்டேன் அச்சன்..

செஞ்சா உயிர் இருக்காது..

4. என்னய்யா? கை வைக்க வேண்டிய இடத்துல கத்தி வைக்கறீங்க?

5. தடயமே இல்லாம காத்துல கரையனுமா? நீ?

6. ஒரு பொறம்போக்கு நிலத்துல ஆக்ரமிப்பு பண்ணிட்டு அழிச்சியாட்டியம் பண்ற அரசாங்க டாக்டர் இம்புட்டு யோசிச்சா உயிரை எடுக்கற நாங்க எம்புட்டு யோசிப்போம்?

7.  பொண்ணு  -லவ் வேற , லைஃப் வேற..

பையன் - அப்போ நமக்குள்ள நடந்தது?

பொண்ணு -நாம 2 பேரும் விருப்பபட்டு இணைஞ்சோம்.. ஓப்பனா சொன்னா எனக்கு உன் கிட்டே நோ சாட்டிஸ்ஃபேக்‌ஷன்.. பை  ( காலம் கலிகாலம்)

8. காசில்லாம வந்தா காலை உடௌச்சிடுவேன்..

இருக்கறதே ஒரு காலு..

9. டேய்.. நான் தெரியாம தான் கேக்கறேன் ஒரே ஆட்டை எத்தனை தடவைடா நீ வாங்குவே?ஒவ்வொரு தடவையும் நீ வாங்கறே.. ஆடு நைஸா எங்க வீட்டுக்கு வந்துடுது.. மறுபடி சந்தைக்கு கொண்டு வர்றேன்.. மறுபடி நீ வாங்கறே..

10.  அவன் மூளைக்காரன்..

எனக்கு மூளைக்காரன் தேவை இல்லை ,நான் சொல்றதைக்கேட்டு நடக்கற வேலைக்காரன்தான் தேவை..

11.  திலகன்  - இத்தனை பேர் முன்னால என்னை அழ வைக்காத, வா வீட்டுக்கு போலாம், எதா இருந்தாலும் அங்கே வெச்சு பேசிக்கலாம்..

http://www.koodal.com/cinema/koodal_reel/2011/Uyirin%20Yedai%2021%20Ayiri-reel-12.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. டைட்டில் போடும்போது ஒரு மேட்டர் ( ச்சே, ச்சே அந்த மேட்டர் இல்ல)

1907 ஆம் ஆண்டுஒரு ஆராய்ச்சி குறிப்பு என்ன சொல்லுதுன்னா ஒரு உயிரின் எடை 21 கிராம் தான்.சாகும் தருவாயில் உள்ள மனிதனின் எடை, இறந்த பின் அவன் எடை கண்டு பிடிக்கப்பட்டு இந்த கணக்கு எடுக்கப்பட்டது அப்டினு சொல்றாங்களே.. அந்த தகவல்..

2.  மனிதன் தன் மரண வாசலை தொட்டு விட்டு மீண்டும் உயிர் பிழைத்தால் அவன் போக்கு சிந்தனை எல்லாம் மாறி விடும் என்பதை பதிவு செய்த விதம்

3. ஹீரோயின் , அந்த பேபி இருவரின்  ஆர்டிஸ்ட் செலக்‌ஷன் ( அந்த பேபி எங்க ஊர்க்காரர் இதயம் ராஜ் மோகன் மகள்)

4. திலகன் -ன் அசத்தலான நடிப்பும் அந்த பாத்திரத்தின் கம்பீரமும்..

http://www.cinemaexpress.com/Images/article/2011/1/14/uyirin.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள், சந்தேகங்கள் , சில ஆலோசனைகள்

1.  ஹீரோ முகம் பூரா டேமேஜ் ஆகி படு பயங்கரமா இருக்கார், அவரைப்பார்த்த அடுத்த செகண்டே  ஹீரோயினுக்கு லவ் வருதே எப்டி? அதுவும் அவர் அவரோட தோளை தொட்டதும்?அது கூட பரவால்ல.. ஒரு குழந்தை எந்த வித அசூசையும் இல்லாம ஹீரோவை ஏத்துக்குது, அப்பான்னு கூப்பிடுது எப்படி?

2.  ஆடு , சந்தை சேல்ஸ் சீன் நல்ல காமெடி சீன் தான் அதுக்காக எதுக்கு அத்தனை தடவை ரிப்பீட்டிங்க்?

3. திலகனோட மகன் தான் ஹீரோவை கொலை செய்ய முயற்சி பண்றார்..மறுபடி அவர் வீட்டுக்கு வர ஹீரோ எப்டி ஒத்துக்கறார்?

4. திலக்னோட மகனா வர்றவர் தனுஷ்க்கு தம்பி மாதிரி இருக்காரே... வேற ஆள் சிக்கலையா?திலகனின் மகன் என நம்பற மாதிரி ஆள் போட்டிருக்கனும்

5. ஹீரோ க்ளைமாக்ஸ்ல சாகற சீன் இப்போ நிறைய வருது.. ஆனா அது நெகடிவாதான் போகுது பட ரிசல்ட்ல..


http://www.koodal.com/cinema/gallery/movies/uyirin_yedai_21_ayiri/uyirin_yedai_21_ayiri_19_113201192526123.jpg

ஈரோடு சங்கீதா வில் படம் பார்த்தேன், போன வாரம் வெள்ளிக்கிழமை பார்த்தேன், 8 நாள் ஆச்சு, அதுக்குள்ள படம் எடுத்தாச்சு.. அதனால இந்தப்படம் எத்தனை நாள் ஓடும்னு நான் சொல்ற வேலை மிச்சம்..

சி.பி கமெண்ட் -
பெண்கள் இந்தப்படம் பார்க்கவே முடியாது, ஓவர் வயலன்ஸ்... ஆண்கள் இந்தப்படம் பார்க்க முடியாது, ஏன்னா படம் தான் தியேட்டரை விட்டு எடுத்தாச்சே?

டிஸ்கி - அப்புறம் எதுக்காக இந்த விமர்சனம்? ஒரு பதிவு தேத்தத்தான் ஹி ஹி