Friday, October 28, 2011

காதல் திறப்பு விழாவுக்கும், கட்டழகி நமீதாவுக்கும் இன்னா சம்பந்தம்? ( ஜோக்ஸ்)

1. பையனுக்கு பெண் வேடம் இட்டும், பெண்ணுக்கு  ஆண் வேடம் இட்டும் தங்கள் குழந்தைகளை அழகுபடுத்திப்பார்ப்பதில் எல்லா பெற்றோருக்கும் தனி மகிழ்ச்சி

-------------------------------------

2. நம்ம லவ்வுக்கு பேரண்ட்ஸ் ஓக்கே சொல்வாங்களா?

ஓக்கே சொன்னா ரசம் வெச்சு கொடு, நாட் ஓக்கேன்னா விஷம் குடு # ரெண்டும் 1 தாண்டி

--------------------------------

3.  நமீதா மேடம், என் காதல் திறப்பு விழாவுக்கு நீங்க அவசியம் வரனும். 

புரியலையே? 

என் லவ்வை ஓப்பன் பண்ணறது எப்படி?ன்னு தெரியல,ஹெல்ப் ப்ளீஸ்

-------------------------

4. ஸாரி மிஸ்டர்! நான் உன்னை லவ் பண்ண முடியாது .

. திமுக காரர் - இது சரித்திரப்பிரசித்தி பெற்ற தோல்வி. இதுவரை இதே போல் 99 பேர் ரிஜக்ட்டட்

---------------------------------
5. தீயசக்திகளிடம் இருந்து தமிழகத்தை காக்க வேண்டும்: ஜெ., அழைப்பு # மேடம், மொத்தமே 2 பேர்தான் ,ஆள் மாத்தி ஆள் மாத்தி ஆள்றீங்களே!!கொல்றீங்களே!!

----------------------------------





6. திமுக., ஆட்சியில் நடந்தது நடக்கக் கூடாது: விஜய்காந்த் # மப்புல தள்ளாடனுமா?

-------------------------------

7.  தேர்தல்களில் பணப்புழக்கத்தை தடுக்க புதிய திட்டம்  # CHEQUE செக்கா கொடுப்பாங்களோ?

-------------------------------

8. கமலுக்கு வில்லனானார் ராகுல் போஸ்! # ராகுல்னாலே வில்லங்கம்தான் போல

---------------------------

9. அரசே செயல்படாதபோது வெப் கேமரா மட்டும் எப்படி செயல்படும்- கலைஞர் # செயல்படாமயா ஜெயில் எல்லாம் ஹவுஸ் ஃபுல் ஆகிட்டு இருக்கு?

----------------------------

10. ஜட்ஜ் - உன் கடைசி ஆசை என்ன? 

தூ. த .கைதி - நயன் தாரா யாரைத்தான் மேரேஜ் பண்ணிக்குவார்னு பார்க்கனும்

---------------------------------



11. கேப்டன் - எல்லோரும் தனித்துப்போட்டி இடுவதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமா இருக்கு..# தெளிவா தான் இருக்கீங்க..

-------------------------

12. என்னையும் லவ் பண்ணீட்டு, என் தங்கையையும் லவ் பண்றீங்களே?டபுள் கேம் ஆடறீங்களா? 

எனக்கு ஸ்போர்ட்ஸ்ல ஆர்வம் அதிகம்னு அப்பவே சொன்னேனே?

------------------------------

13. திருவாரூர் தேர் மாதிரி அழகுள்ள ஃபிகர்கள் தேவைன்னு ஏன் விளம்பரம் தந்திருக்கீங்க தலைவரே?

ஹி ஹி நாமும் ரத யாத்திரை போலாம்னு.

-----------------------------------

14. டியர்,100 வருஷத்துக்கு ஒரு முறைதான் இப்படி ஒரு டேட் ஃபார்மேட் வரும், அதனால 11.11.11 க்கு என் லவ்வை சொல்லப்போறேன்.

OK,12.12.12 ரிசல்ட்

------------------------------

15. நடிகை - சைஸ் ஜீரோ அழகி ஆகறதுதான் என் லட்சியம் .

தாங்க்ஸ் மேடம், அப்போ ஷூட்டிங்க் முடியற வரை எங்களுக்கு சாப்பாட்டு செலவு மிச்சம்

-----------------------------


16. உங்க B.P அளவு திடீர்னு எகிறுதே?  

டாக்டர் !நீங்க செக் பண்ணுனா நார்மல் அளவும், நர்ஸ் செக் பண்றப்ப அப்நார்மல் அளவும் காட்டுது

--------------------------

17. என் காதலி அடிக்கடி திருப்பதி போறா, எதுக்குன்னு தெரியல .. 

எப்படி உனக்கு மொட்டை அடிக்கறதுன்னு ட்ரெயினிங்கோ?

--------------------------------

18. ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆனதுல இருந்து தலைவர்ட்ட  ஒரு மாற்றம்

 எப்படி?

, டெயிலி சாப்பிடறதுக்கு முன்னால வாசல் போய் காலிங்க்பெல் அடிச்சுட்டு வந்து அப்புறமா சாப்பிடறாரு # மணி அடிச்சா சோறு

----------------------------------

19. உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவில் மந்தநிலை!-  நிற்பவை எல்லாம் மந்தியாக இருந்தால்!!!!!!!!

-------------------------------

20.  டியர், நான் PRESS-ல ஒர்க் பண்றேன்.. 

சாரி.. இப்படி எல்லாம் சொல்லி என்னை IMPRESS பண்ண முடியாது

Thursday, October 27, 2011

ADRASAKA -ஏழாம் அறிவு - சூர்யா-வின் அதிர்ச்சித்தோல்வி - சினிமா விமர்சனம்

a
http://www.jointscene.com/ahtees/admin/movies/content/22239_17_7AumArivu.jpg 

பூக்கடைக்கு விளம்பரம் எதுக்கு?ன்னு சத்தமே இல்லாம படத்தை ரிலீஸ் பண்றதும் தப்பு..ஓவர் பில்டப் கொடுத்து நொடிக்கு நூறு விளம்பரம் போட்டு மக்களை அதிகமா எதிர்பார்க்க வைப்பதும் தப்பு.. ஒரு நல்ல படம் கூட ஓவர் எக்ஸ்பெக்ட்டேஷனால் எதிர்பார்த்த வெற்றியைப்பெறாமல் போகும் என்பதற்கு இந்தப்படம் அழகிய உதாரணம்..

பொண்ணு பார்க்க போறப்ப பொண்ணு எப்படி இருக்கும்?னு மாப்ள கேக்கறப்ப நீங்க தான் வர்றீங்க இல்ல, பார்த்து தெரிஞ்சுக்கோங்கன்னு சொல்லிடனும் ,சும்மா ஐஸ்வர்யாராய்  மாதிரி இருப்பா, மஹா லட்சுமி தோத்தா போ அப்டினு சொல்லி கூட்டிட்டுப்போனா ஃபிகரு நல்லா இருந்தாக்கூட மாப்ளைக்கு பொக்குன்னு போயிடும்..

சரி , படத்தோட கதை என்ன?சீனா இந்தியாவுக்கு எதிரா ஒரு பயோ கெமிக்கல்வார் (BIO -CHEMICAL WAR) தொடங்குது.. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சீனாவில் பரவுன வைரஸ் அது.. இந்த வைரஸ்ஸை அழிக்கனும்னா 6ம் நூற்றாண்டில் வாழ்ந்த போதி தர்மர் மீண்டும் வரனும்.. அவருக்குத்தான் அந்த மெடிக்கல் மேட்டர் எல்லாம் தெரியும்... அவர் வர முடியாட்டி சப்ஸ்டிடியுட்டா ஒருத்தர் அவரோட பரம்பரைல இருந்தே வரனும்.. அதாவது நேரு குடும்பத்துல இருந்தே காலம் காலமா பிரதமர் இந்தியாவுக்கு வர்ற மாதிரி.. 


http://www.telugucinemasite.com/live/wp-content/uploads/2011/09/7th-Sense-Movie-Stills.jpg

போதிதர்மர் சூர்யா.. அவர் டி என் ஏ மேட்ச் ஆகறதும்  இன்னொரு சூர்யா.. அப்புறம் என்ன? 2* 2 = 4..இந்த ஆக்‌ஷன் கதையை தட தடனு ஓடற த்ரில்லர் கதையா எடுத்திருந்தா படம் செமயா வந்திருக்கும்.. நம்ம தமிழர்கள் ஹீரோவுக்கு ஜோடி கேப்பாங்க,, டூயட், வேணும், லவ் வேணும், லவ் ஃபெயிலியர் சாங்க் வேணும்னு ஸ்டோரி  டிஸ்கஷன்ல பலர் குழப்பிட்டாங்க போல.. படத்தோட மெயின் மேட்டர்க்கு வர்றதுக்குள் 5 ரீல் முடிஞ்சுடுது..

ஒரு படத்துக்கு வில்லனுக்கு ஓப்பனிங்க் சீன்ல இவ்வளவு கைதட்டல் தியேட்டர்ல கிடைக்கறதை கேப்டன் பிரபாகரனுக்குப்பிறகு இந்தபட சைனீஸ் வில்லனுக்கு கிடச்சதை பார்த்தேன்.. ஆஹா. என்ன பாடி லேங்குவேஜ்...? நடை.. எதுக்கும் பதட்டப்படாத, ஆர்ப்பாட்டம் ,ஆரவாரம் பண்ணாம நிதானமா செம ஆக்டிங்க்பா.. அவர் போடும் ஃபைட்ஸுக்கு விசில் பறக்குது.. மார்ஷியல் ஆர்ட்ஸ்ல மன்னர் போல.. 

ஸ்ருதி.. ஹிப், லிப் மட்டும் அழகு .. மற்றபடி ஃபேஸ்கட் தமிழனை தூங்க விடாமல் பண்ணும் சக்தி கொண்டதல்ல.. சிலர் சொல்வது போல் இவர் தமிழ் சினிமாவின் கனவுக்கன்னி ஆகவெல்லாம் வாய்ப்பே இல்லை.. கமல் -ன் மகள் என்பதால் அவரை ரசிக்க மனசே வர மாட்டேங்குது.. அவர் முகத்தில் ரொமான்ஸே வரவில்லை.. சூர்யா கூட டான்ஸ் ஆடும்போது மதுரை நடன நாட்டிய நிகழ்ச்சியில் வரும் ஜோடி போல் ஏனோதானோ என ஆடுகிறார்..

சூர்யாவுக்கு இந்தப்படத்தில் பெரிய அச்சீவ்மெண்ட் எல்லாம் எதுவும் கிடையாது.. க்ளைமாக்ஸ் ஃபைட் சீனில் சிக்ஸ் பேக் காட்றார்.. போதி தர்மராக வரும்போது கம்பீரம் காட்றார். அவ்ளவ் தான்..  ஒரு விக்ரமோ, கமலோ இதை விட நல்லா பண்ணி இருக்க முடியும்.. படத்தில் வில்லனும் , ஹீரோயினுமே அதிகம் ஆக்ரமிக்கிறார்கள்.. 



http://www.indiancinemagallery.com/Gallery2/d/676932-1/Shruthi+Hassan+in+7am+arivu+stills+_22_.jpg

படத்தில் ரசிக்க வைத்த வசனங்கள்

1. சார்.. உங்க சர்க்கஸ்ல இருந்து ஒரு குரங்கு வேணும்.. கூட வேணா இவர் வரட்டும்.. 


இவனை வேணா கூட்டிட்டு போங்க, சும்மாதான் இருக்கான், ஆனா  எனக்கு குரங்கு வேணும்..அது முக்கியம்.. 


2. ஹீரோ.. - டேய் டேய்.. அவங்க என்னையே பார்க்கறாங்க.. 


நோ, முறைக்கறாங்க.. 

3. டேய்.. சைட் அடிச்ச பொண்ணு கிட்டே ஃபோனை அடிச்ச முத ஆள் நீ தாண்டா.. 

4. முதல்ல இந்த ஃபோனை அவ கிட்டே குடு.. 

இப்போவே குடுத்தா ஜஸ்ட் தாங்க்ஸ் தான் சொல்வா (ம்க்கும், நாளைக்கு குடுத்தா மட்டும் ஐ லவ் யூ சொல்லிடப்போறாளா?)

5.  ஃபோன் ரிங்க் ஆகுது.. எடு எடு..

உடனே எடுத்தா நமக்கு வேலை இல்லைன்னு நினைச்சுவாங்க.. கொஞ்ச நேரம் போகட்டும்.. 

6.  யானைக்கு உடம்பு சரி இல்லை.. அதான் ..

அதுக்காக.. இப்படியா?

பின்னே? யானையை தூக்கிட்டா போக முடியும்?

7.  என்னை அவ உயிரோட போஸ்ட் மார்ட்டம் பண்ணிட்டா.. 

8, உனக்கு வேணும்னா நீ என்ன வேணாலும் செய்வே, எதை வேணும்னாலும் இழப்பே.. 

வேணாம். வேற அர்த்தம் வருது.. இது நல்லாலை.. 

9.  போதி தர்மர் ஒரு தமிழர்.. இன்னொரு புத்தர்னு ஓஷோ சொல்லி இருக்காரு.. 

10. ஒரு மனிதனோட டி என் ஏ தான் அவனோட நோய் , திறமை எல்லாத்தையும் தீர்மானிக்குது.. 




http://www.bollywoodchaska.com/images/topic_attachement/13738-7.jpg

11. இப்போ நாம நினைச்சா 1600 வருஷங்கள் முந்தைய போதி தர்மரோட திறமைகளை, அறிவை உனக்குள்ள கொண்டு வர முடியும்..

12. சயின்ஸ் உதவியால 6 வது நூற்றாண்டில் வாழ்ந்த போதி தர்மரை , அவரோட ஜீன்ஸை ஆக்டிவேட் பண்ண முடியும். 

13. ஏன் சார் தமிழை தப்பா பேசறீங்க? 800 வருஷங்கள் முன்னே வந்த ஆங்கிலம் பெரிசா? 200000 ஆண்டுகள்  முன் வந்த தமிழ் பெரிசா? ( தமிழ் தான் பெரிசு ஏன்னா ஆங்கிலம் 26 லெட்டர்ஸ் ஒன்லி, தமிழ் - 247)

14.  வெள்ளைக்காரன் இங்கே வந்து நம்மளை எல்லாம் அடிமை ஆக்கிட்டு போனான்.. இப்போ நாம படிச்சு முடிச்சுட்டு ஃபாரீன் போய் அவனுக்கு அடிமை ஆகிட்டு இருக்கோம்..

15.  அவங்க வர்றதுக்குள்ள தேடு..

எதை?

எதையாவது.. எது வித்தியாசமா படுதோ அதை.. 

16.. ஏய்.. எதுக்கு குப்பைத்தொட்டியை தேடறே?

ஒரு மனுஷனைப்பற்றி நல்ல விஷயம் தெரியனும்னா அவன் படிக்கற புக்கை பாரு,கெட்ட விஷயம் தெரியனும்னா அவன் வீட்டு குப்பைத்தொட்டியப்பாரு..

17.  எனக்கு அவன் மேல லவ் எல்லாம் இல்ல, ஆனா அவன் கூட இருந்தா ஒரு சந்தோஷம் , தைரியம் எல்லாம் கிடைக்குது ...


18. முன்னே எல்லாம்  சயிண்ட்டிஸ் மருந்தை கண்டு பிடிப்பாங்க.. இப்போ நோய்களை கண்டு பிடிக்கறாங்க.அந்த நோயை பரப்பி அப்புறம் மருந்தை கண்டு பிடிச்சு மார்க்கெட் பண்ணப்பார்க்கறாங்க.. .
19. அந்தக்காலத்துல சாதாரணமா மனுஷன் இறந்தாக்கூட அவன் மார்புல கீறி புதைப்பாங்க.. விழுப்புண் எஃபக்ட்க்காக.. அப்படிப்பட்ட வீரம் விளைஞ்ச மண் இது,.,. நாம ஓடி வந்து எஸ்கேப் ஆனதை நீ பெருமையா பேசிட்டு இருக்கே.. 

20. தமிழர்களை ஆஸ்திரேலியாவுல அடிச்சாங்க, இலங்கைல அடிச்சாங்க, இப்போ தமிழ் நாட்லயே அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க/.. நாம இனி திருப்பி அடிக்கனும் ..

21. வீரம் வீரம்னு சொல்லி நாம் இலங்கை சண்டைல தோத்துத்தானே போனோம்?

அது துரோகம்.. வீரத்துக்கும், துரோகத்துக்கும் வித்தியாசம் தெரியாம வாழ்ந்திட்டிருக்கே.. ஈழத்துல நாம தோத்ததுக்கு துரோகம் தான் காரணம்..



http://www.chitramala.in/photogallery/d/576219-1/shruthi-hassan-hot-stills+_3__001.jpg

இயக்குநர் & டீம் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. போதி தர்மர் பற்றிய குறிப்பு கிடைத்ததும் அதை கமர்ஷியல் படம் ஆக்க முடியும் என நினைத்ததற்கும், அதை 70 % சரியாக செயல் படுத்தியமைக்கும்..

2. வில்லனின் கேரக்டர்க்கு செம முக்கியத்துவம் கொடுத்ததும்..சூர்யாவை அண்டர் ப்ளே ஆக்டிங்க் பண்ண வைத்ததும்..

3. ஒளிப்பதிவு கண்களை அள்ளுகிறது.. ஃபாரீன் லொக்கேஷன்களில், இந்தியாவில்... 
4. பாடல்காட்சிகளை படம் ஆக்கிய விதம்.. ஓ ரிங்கா ரிங்கா  பாட்டுக்கான பிக்சரைசேஷன் பிரமாதம்.. பொன்னந்தி மாலையில், உன் அன்புச்சாரலில்.. செம மெலோடி.. இசை, படப்பிடிப்பு அனைத்தும் கிளாஸ்.. யம்மா யம்மா  காதல் பொய்யம்மா பாடல் ஓடும்போது பல வரிகளுக்கு செம கிளாப்ஸ்.. குறிப்பாக 

அ.  பொம்பளையை நம்பி செத்தவன் உண்டு.. 

ஆ. காதல் ஒரு போதை மாத்திரை..

இ. திட்டம் போட்டு  என்னை திருடாதே.. 

அப்பிறம் நடன் இயக்குநர் அப்ளாஸ் வாங்குவது சல்லேலமா?. உள்ளம் துள்ளுமா? இந்தப்பாட்டுக்கு ஸ்ருதியின் நடனம் கவனிக்க வைத்தது..

5. பஸ் ஸ்டாப்பில் ஹீரோயின் நிற்க ஹீரோ அந்த வழியே யானையில் வருவதும் அவருக்கு லிஃப்ட் கொடுப்பதும் செம ஜாலியான காட்சி..

6. க்ளைமாக்ஸ் ஃபைட் சீனிலும், போதி தர்மருக்கான பில்டப் சீனுக்கும் கொடுக்கப்படும் பின்னணி இசை , பில்டப் மியூசிக் டாப்.. 



http://ravinder541.files.wordpress.com/2011/02/hot-exposing-unseen-sexy-navel-photos-of-shruthi-hassan.jpg
இயக்குநருக்கு சில கேள்விகள், சந்தேகங்கள், ஆலோசனைகள்


1. போதி தர்மரைப்பற்றி ஓப்பனிங்க்லயே 2 ரீல் டாக்குமெண்ட்ரியாக காட்டியிருக்க தேவை இல்லை.. பாட்ஷா வில் பாட்ஷாவாக ரஜினி வரும் சீனை விட அவர் வருவதற்கான பில்டப் சீன்கள் தான் இடைவேளை வரை களை கட்டியது.. அது போல் போதி தர்மர்  பற்றி கொஞ்சம் பில்டப் கொடுத்து விட்டு இடைவேளை டைமில் அந்த ஃபிளாஸ்பேக் காட்டி இருக்கலாம்.. 

2. வெற்றி விழா ரேஞ்சில் படம் செம ஸ்பீடா ஓடிட்டே இருக்க வேண்டிய ஆக்‌ஷன் படம்  இது.. அதில் கமர்ஷியல்  கலக்கறேன், காம்ப்ரமைஸ் பண்ணீக்கறேன்கற பேர்ல எதுக்கு லவ், காதல் தோல்வி பாடல்..? இது தான் எல்லாப்படத்திலும் வருதே?

3. பஸ் ஸ்டாப்பில் நிற்கும் ஸ்ருதி காலில் ஹை ஹீல்ஸூடன் இருக்கிறார், யானை மேல்  ஏறும்போது வெறுங்காலுடன் இருக்காரே? எப்டி? பஸ் ஸ்டாப்லயே கழட்டி வெச்சுட்டரா?

4. சர்க்கஸ் கலைஞராக வரும் சூர்யா தன் சொந்தகாரங்க ஊர்ல இருந்து வந்திருக்காங்க , 20 டிக்கெட் குடுங்கறார், ஆனா 11 பேர் தான் வந்தாங்க ( இதை எல்லாம் எதுக்கு மெனக்கெட்டு எண்ணிட்டு இருந்தே?)

5. வில்லன் நாய்க்கு வைரஸ் ஊசி போடறப்ப அது எதிர்க்கவே இல்லையே? ஏன்? அட்லீஸ்ட் வலிக்கு ஒரு மூவ்மெண்ட் கூட தராதா?

6. ஸ்ருதிக்கு ஒரு சேசிங்க்ல முகம் பூரா அடிபடுது.. குறிப்பா நெற்றில கன்னத்துல நல்ல காயம் ( கெட்ட காயம்னா என்ன?), ஆனா 12 நாள் ட்ரீட்மெண்ட் சூர்யாவுக்கு தர போறப்ப எந்த தழும்புமே இல்ல.. எப்டி? பிளாஸ்டிக் சர்ஜரி?


7. சூர்யா ஆராய்ச்சிக்கூடத்துல ஒரு தண்ணீர் தொட்டில முழுக வைக்கப்படறார்.. நாள் கணக்குல அவர் தண்ணிக்குள்ள இருக்கார்.. எப்படி மூச்சு வாங்கறார்? நீரில் முழுகி ஆராய்ச்சி பண்றவங்க சுவாசிக்க ஒரு மாஸ்க் மாதிரி போடுவாங்களே.. அதை ஏன் போடலை?


8. வில்லன் ஹிப்னிடிசம் மூலமா பலரை தன் வசம் இழுத்து அவன் இஷ்டத்துக்கு ஆட்டுவிக்கிறான் , ஓக்கே, ஆனா அதுக்கு குறைஞ்ச பட்சம் 10 அடி பக்கத்துல ஆள் இருக்கனும்னு ஹிப்னாடிச ஸ்பெஷலிஸ்ட் சொல்றாங்க.. ஆனா வில்லன் 20  மீட்டர் தூரம், 1 கி மீ தூரத்துல இருக்கற ஆள்களை எல்லாம் அப்படி பண்றானே எப்டி?

9. அப்படியே ஹிப்னாடிசம் செஞ்சாலும் சாதாரண ஆள் குங்க் ஃபூ ஃபைட் எல்லாம் எப்படி போடறார்? 

10. தேமேன்னு அவங்க பாட்டுக்கு ரோட்டுல போய்ட்டிருக்கற ஆள்ங்க எல்லாம் மெனக்கெட்டு ஏன் வில்லனை , அவன் கண்களை உத்து பார்க்கறாங்க, திரும்பி பார்க்கறாங்க? அதென்ன தமனா இடுப்பா?




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvKREw5j3sBDs7dDSApTaroRo27BlTRO08aHywNxDS6pEplmsGAa_eKKJhtflgVENlWhEyWNDHbkPq0nL9v_giLEM5q0cfOv4QYSqAYggXyzm9jpi2SyCjYelXCDQvvqtC-01En1kZNG8/s1600/shruthi-hassan-hot-stills(9).jpg

ஏ செண்ட்டர்ல 50 நாட்கள், பி செண்டர்ல 30 நாட்கள், சி செண்டர்ல 20 நாட்கள் ஓடும்.. 


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 43

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே 

சி.பி கமெண்ட் - ஒரு கமர்ஷியல் மசாலா படம் என்ற அளவில் ரசிக்கறவங்க பார்க்கலாம், ஜாலி எண்ட்டர்டெயினிங்க் தான்..ஆனா கஜினிக்கு ஒரு மாற்று கம்மிதான்

ஈரோடு ஆனூர்-ல் படம் பார்த்தேன்..



http://www.southdreamz.com/wp-content/uploads/2011/04/shruti-hassan-hot-pic-23.jpga



டிஸ்கி 1 -

வேலாயுதம் - கமர்ஷியல் ஹிட்டா , விமர்சியல் ரிவீட்டா - சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 2 -

RA -ONE - ஷாருக்கான் -ன் ட்ரீம் சப்ஜெக்ட் - சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 3 -

பிரபல பதிவர்கள்-ன் தீபாவளி அட்டூழியங்கள்

என்னது? கிஸ் கூரியர் சர்வீஸா? கெட்டுது குடி!! ( ஜோக்ஸ்)

1.கருணாநிதியின் வாழ்த்து திசைகாட்டும் விளக்கு: பிரதமர் மன்மோகன் # ஆமா! சனி திசை காட்டும் ,போய்க்கோ! மாட்டிக்கோ!

----------------------------

2. உள்ளாட்சி தேர்தலில் ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்-விகாந்த்# ஓட்டுக்கு துட்டு, துட்டுக்கு ஓட்டு, லீகலுக்கு லீகல் இல்லீகலுக்குஇல்லீகல் ரெடியா?

-----------------------

3. தனித்து போட்டியிடுவதால் சொந்தக் காலில் நிற்கிறோம்: இளங்கோவன் # துரத்தி விட்டதால் நொந்து போய்க்கிடக்கிறோம்னு சொல்ல முடியுமா?

-------------------------------

4. பில்லா-2வில் அஜித்துக்கு ஜோடியாக பார்வதி ஓமண குட்டன்...! # ”தல” இதிலும் நெகடிவ் கேரக்டர் வேண்டும் என சொல்லி பாப்பாவை ரேப்பவும்

-----------------------------

5. உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? # கேப்டனிடம் உதை வாங்கத் தயார் ஆவாரா? ஜெ போடும் நில மோசடி வழக்கில் சாவாரா?

---------------------------------

6. I HAVE MADE MISTAKES BECAUSE LIFE DIDNOT COME WITH AN INSTRUCRION MANUAR #SMS

-----------------------------------

7. உன்னுடைய அக்கறையை வெளிப்படுத்த தொந்தரவு செய்தல் ஒரு சிறந்த வழி! உன் அன்புக்குரியவரை அடிக்கடி தொந்தரவு செய் - உன் மவுனத்தால்

---------------------------------


8. கிஸ் கூரியர் சர்வீஸ் ஒண்ணு நடத்தறேன்,வெளியூர் காதலிக்கு கிஸ் கொடுக்க நினைக்கறவங்க அட்ரஸ் தந்தா நேரடி டோர் டெலிவரி இலவசம்# ஓ சி ஓம்கார்

----------------------------------


Kajal Agarwal in Panasonic Ad Pics




9. உண்மையைச்சொல்லி என் மனம் வருத்தப்பட்டாலும் பரவாயில்லை, பொய்யைச்சொல்லி என்னுடன் சிநேகம் ஆக நினைக்காதே!

-------------------------------

10. உனக்கு மானம், ரோஷம், சூடு சொரணை எல்லாம் இருக்கா?ன்னு ஏன் கேட்கறீங்க தரகரே?

வீட்டோட மாப்ளையா வர ஜாதகம் இருக்கா?ன்னு பெண் வீட்ல கேட்டாங்க.

---------------------------------

11. உன் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் இண்ட்டர்வியூ போறாங்க, நீ போகலை?


ச்சே. ச்சே 4 பேர் கேள்வி கேட்கற மாதிரியாப்பா என்னை வளர்த்திருக்கீங்க?

-----------------------------
12. உண்மையான காதலை உணர வைப்பதும் பெண் தான், காதலே வேணாம்ப்பா என அதை வெறுக்க வைப்பதும் பெண் தான்!

----------------------------------

13. நீ நீயாக இருக்கும் வரை நீயே சிறந்தவன்

----------------------------

14. சொர்க்கத்துக்கான செல்லப்பெயர்கள் பள்ளிகள் ,கல்லூரிகள்

-----------------------------
15. மனம் பலவீனமாக இருக்கும்போது சூழ்நிலைகள், வாய்ப்புகள் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும்! தனிமை தவிர்!

---------------------------------

16. மாப்ளே.. என் பொண்ணை உலகம் தெரியாம வளர்த்துட்டேன்.....

அது கூட தேவலை... அத்தை, சமையல் கூட தெரியாமயும் வளர்த்துட்டீங்களே?

----------------------------------

17. சங்கீதம், சமையல் என்ன வித்தியாசம்?

சங்கீதத்துல பொதுவா லேடீஸ் டேலண்ட்டா இருப்பாங்க.. சமையல்ல ஆண்கள் டேலண்ட்டா இருப்பாங்க..

----------------------------------


18. பசி எடுக்கும்போதெல்லாம் சாப்பிட நினைப்பது போல , உன் நினைவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும்போதெல்லாம் கவிதைகளை பதிக்கிறேன்

--------------------------------

19. காலங்கள் சிலரை மறக்கடிக்கும். சிலரின் நினைவுகளோ காலங்களையே மறக்கடிக்கும்

-----------------------------

20. உன்னால் நேசிக்கப்படும் இதயம் யாரால் காயப்பட்டாலும் முதல் மயில் இறகு தடவல் உன் கரங்கள் மூலம் நிகழட்டும்

--------------------------------------------




Wednesday, October 26, 2011

RA -ONE - ஷாருக்கான் -ன் ட்ரீம் சப்ஜெக்ட் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhx6ArkgQufbvijVp3m1x7slyPRWCgG1OlHuL8-koKOJ9grhtH-dsjfNhleGTE6yHeNKCPmcA97jOIRgbZBmJC7-l0jxQBfhQL6M5pRbJnEJAxoneFSvCkfvn9j37hiGVz8-5lSlHH1vBZm/s1600/Ra+One.jpg 

இயக்குநர் ஷங்கர் ரோபோ படத்துக்கு முதலில் கமலை செலக்ட் செய்து பின் ஷாரூக்கான் ஐ செகன்ட் சாய்ஸ்-ல் ஒப்பந்தம் செய்தார்.. சில காரனங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனதும் அவர் விலகி விட்டார்.. ஆனால் அந்த சப்ஜெக்ட் பிடித்துப்போனதால் அதே சாயலில் ஆனால் உல்டா என்று சொல்ல முடியாத அளவு ஒரு படம் பண்ணத்தீர்மானித்தார். ஒரே ஒரு படத்தை உல்டா செஞ்சா கெட்ட பேர் என்பதால் அர்னால்டு ஸ்வார்செனேகர் நடித்த த டெர்மினேட்டர் 2 ( ஜட்ஜ்மெண்ட் டே) ,எந்திரன் , ஸ்பை கிட்ஸ் பாகம் 3 எல்லாம் கலந்து கட்டி ஒரு படம் கொடுத்திருக்கார்.... தமிழ் ரசிகர்கள் கிட்டே எடுபடாது என்றாலும் ஹிந்தில , மும்பைல இது ஹிட் ஆகிடும்..

ஷாருக்கான் - கரீனா கபூர் தம்பதி , அவங்களுக்கு ஒரு பையன்..அர்மான் வர்மா . ஷாருக் ஒரு வீடியோ கேம் எக்ஸ்பர்ட்...பையனுக்காக ஒரு சூப்பர் ஹீரோ  கேரக்டர் ரோபோ மாதிரி இருவாக்க நினைக்கறார்.. ஆனா பையனுக்கு வில்லன் தான் பிடிக்குது.. பையனின் ஆசைப்படி ஒரு வில்லன் கேரக்டர் உருவாக்கறார்...அந்த ரோபோ தான் ரா ஒன்... அதை உருவாக்கும்போதே எதுக்கும் இருக்கட்டும்னு ஜி ஒன் அப்டினு ஒரு நல்ல (!!) ரோபோவை உருவாக்கி வைக்கறார்.


ஒரு கட்டத்துல ரா ஒன் தன்னிச்சையா செயல் பட்டு ஷாருக்கின் உதவியாளரை போட்டுத்தள்ளிடுது... ரா ஒன் -னை கண்ட்ரோல் பண்ற முயற்சில ஷாரூக் கொல்லப்படறார்.. ஹீரோவே இண்டர்வெல் முன்னால இறந்துட்டா படத்தோட கதி? அதனால பையன் ஜி ஒன் -னை உயிர்ப்பிக்கறான்.. 


http://www.a2zpictures.com/wp-content/uploads/2011/04/ra-one-movie-shahrukh-khan-kareena-kapoor-hd-photos.jpg

இப்போ ஜி ஒன் ரோபோ ஷாரூக் மாதிரியே இருக்கு.. கரீனாவுக்கு தன் கணவன் நினைவு வந்துடுது.. 4 ரீல் கதை அப்படி ட்ராவல் பண்ண, திடீர்னு டைவர்ட் ஆகி ரா ஒன் - ஜி ஒன் மோதல் நேரடியா.... க்ளைமாக்ஸ் என்ன ஆகுது? என்பதை மக்கள் நாயகன் ராமராஜன் கூட கரெக்ட்டா சொல்லிடுவார்!!!

ஓப்பனிங்க்ல ரா ஒன் உருவாகறது, உதவியாளர் மோதல் எல்லாம் கொட்டாவி வர வைக்கும் விஷயங்கள்.. கிராஃபிக்ஸ் காட்சிகள் எல்லாம் ரொம்ப சுமார்.. ஷாரூக் இறந்த பின் தான் கதை ஸ்பீடு எடுக்குது.. 

ஷாருக் இன்னும் இளமைத்துள்ளலோட நடிச்சிருக்கார்.. அவரது சிக்ஸ் பேக் பாடி செம.. டான்ஸ் , ஃபைட்னு ஷாருக்கின் சுறு சுறுப்பு எல்லா ரசிகர்களையும் கவர வைக்கும்.. 

கரீனா கபூர் முற்றலான முகம், இளமையான தேகம், கிளாமரான மனம்(!!!) என வித்தியாசமான கலவையில் ஜொலிக்கிறார்.. வில்லன் ஜிம் பாடி காட்றார்.. கொஞ்சூண்டு நடிப்பையும்.. அந்த சின்னப்பையன் நடிப்பு செம.. 

எந்திரன் படத்துல வர்ற ரயில் ஃபைட்டை சுட்டு ஒரு சீன் வெச்சிருக்காங்க.. அட ஃபைட் சீன்ப்பா.. நம்ம சூப்பர் ஸ்டார் ஒரு சீன்ல வர்றார்.. கதைப்படி ஷாருக்கை காப்பற்றுவது போல் பிளான் பண்ணி இருக்காங்க.. ஆனா அவர் உடல் நிலை கருதி சும்மா ஜஸ்ட் ஒரு ஸ்டைல் மட்டும் காட்டிட்டு போயிடறார்.. அதுக்கே தியேட்டர்ல செம விசில்.. 

படத்தோட ஓப்பனிங்க் சீன்ல பையனின் கனவு சீனில் அப்பா ஷாருக் சூப்பர் ஹீரோவா காட்டறது அவனோட அடி மனசு ஆசையை பிரதிபலிச்ச மாதிரியும் ஆச்சு.. படத்துக்கு கிராண்ட் ஓப்பனிங்க் கொடுத்த மாதிரியும் ஆச்சு...


http://img.india-forums.com/wallpapers/800x600/158776-kareena-kapoor-in-ra-one-movie.jpg

படத்தில் ரசனையான வசனங்கள்

1.  அப்பா.. எதுக்காக அந்த பொண்ணுங்களை  கொன்னீங்க?

எனக்காக பொண்ணுங்க உயிரையே விடுவாங்கன்னு சொல்லலை? அது இதுதான்.. 

2.  அவ கூட ஊரை சுத்தி டேட்டிங்க் போக வந்தியா? என் கூட சண்டை போட ஃபைட்டிங்க்காக வந்தியா? ( ஃபைட் - சண்டை 2ம் 1 தானே? டவுட்டு )

3.  கரீனா - இந்தியாவுல இருக்கற ஒவ்வொரு பொண்ணும் இனி நெஞ்சை நிமித்திட்டு நடக்கலாம்..

ஹீரோ - ரொம்ப நிமித்தாதே.. ஓவரா இருக்கு.. ( இல்ல கரெக்ட்டா தான் இருக்கு  பை மெஷர்மெண்ட் மேக நாதன் )

4. டாடி.. ஐ லைக் வில்லன்ஸ் ஒன்லி.. ஹீரோக்கு ரூல்ஸ் இருக்கு... ஆனா வில்லன்ஸ்க்கு நோ ரூல்ஸ்.. 

5. கரீனா - என்னை அங்கே எல்லாம் தொடக்கூடாது..

ரோபோ - அப்போ எங்கே எல்லாம் தொடலாம்?

கரீனா - எங்கேயும் தொட வேணாம்.. 

6.  டேய்.. அங்கே பாரு, 2 பேரையும்.. மோதல்ல ஆரம்பிச்சு காதல்ல முடியப்போகுது.. 

ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்.. அவங்க எங்கம்மா.. 

7.  அவங்க ஏன் கீழே விழுந்தாங்கன்னா லா ஆஃப் கிராவிட்டேஷன்.. 

சரி.. நீ ஏன் அந்த ஃபிகரை பார்த்து சிரிக்கறே?

அது லவ் ஆஃப் அட்ரேக்‌ஷன்.. 

புரியலையே..

நீ இன்னும் வளரனும் தம்பி.. 

8.   HE IS HANDSOME....  ( அவர் செம பர்சனாலிட்டி.. )

YES, MY HUSBAND... ( ஆமா, என் கணவர் தான்)

ஆனா அவரோட ஹேர் ஸ்டைல் தான் சகிக்கலை.. 



http://bollywoodsmiles.com/wp-content/uploads/2010/05/KareenaKapoor-5-1.jpg

9. யூ நோ ஒன் திங்க்..? வருஷா வருஷம் 1000 பேர் சிகரெட் பிடிக்கறதை விட்டுடறாங்க..

அட!!!பாக்கெட்ல பிரிண்ட் ஆகி இருக்கற வார்னிங்கை படிக்கறதாலா?

ம்ஹூம்.. அத்தனை பேர் இறக்கறாங்க, அந்த பழக்கத்தால.. 

10.  அவர் ஏன் இப்படி பைத்தியகாரத்தனமா நடந்துக்கறாரு?

ம் ம் .. அது பாகள் யோகா ( ஹிந்தில பாகள் = பைத்தியம்)

11. அவர் ஏன் வேடிக்கை பார்க்கறார்?

இதென்ன கேள்வி? ஆம்பளைங்கன்னா பொண்ணுங்களை பார்க்கத்தான் செய்வாங்க.. 

12.  சாரி.. சக்சஸாஃப் சர்வைவல் 0.01 % மட்டும் தான் இருக்கு.. 

பரவால்ல.. நாம ட்ரை பண்ணிதான் ஆகனும்.

13. சந்தோஷத்துலயும், துக்கத்துலயும் மனுஷங்களுக்கு கண்ணீர் வருது.. ஆனா நான் ரோபோ.. எனக்கு உணர்ச்சிகளே இல்லை.. ஐ ஆம் ட்ரை (DRY)

14.  சுட்டிப்பையன் - ஆஹா, சூப்பர்..

. எது? நான் அடி வாங்குனதா?

15.  ஏய்.. என்ன பண்றே?

பார்த்தா தெரில? அவன் அடி குடுக்கறான், நான் வாங்கறேன்.. 

16. கேம்ஸ்லயும், லைஃப்லயும் நாம எதிர்பார்க்காததுதான் நடக்கும்.. 


http://img.xcitefun.net/users/2010/08/210455,xcitefun-shahrukh-ra-one-1.jpg

இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. ஷாருக்( ரோபோ) ஏர்போர்ட்டில் செக்கிங்கை ஏமாற்ற கையாளும் தந்திரம்.. பெண்களை நெளிய வைக்கும் சீன் என்றாலும் செம காமெடி.. .

2. ரோபோக்களின் அடிதடி தான் படம் என்ராலும் புத்திசாலித்தனமாக திரைக்கதையில் கணவன் - மனைவி, அப்பா பையன் செண்ட்டிமெண்ட்டை புகுத்தியது.. 
3. கரீனாகபூரை, ரஜினியை சரியாக யூஸ் பண்ணிகொண்டது.. 

4.  புதுசாக எழுதப்பட்ட கதையோ என சில சமயம் நம்ப வைத்தது.. 

5. ரயில்வே ஸ்டேஷனில் ரயில் சுவரை உடைத்து நிற்கும் பிரம்மாண்ட சீன் வெல்டன்..கிராஃபிக்ஸ்


http://www.washingtonbanglaradio.com/images04/kareena-kapoor_ra-one_audio-songs.jpg

இயக்குநர்க்கு சில கேள்விகள் ( ஐ ஜாலி அவருக்கு தமிழ் தெரியாது)

1.  ஷாருக் ரோபோவை உருவாக்கும்போதே எம்ர்ஜென்சி பீரியடில் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்து ஆல்டெர்நேடிவ் ரூட் ஏன் செலக்ட் பண்ணி வைக்கலை?

2. ரோபோ ஷாருக் மனிதரைப்போலவே கண்கள் இருக்கே எப்படி? எந்திரனில் இதை சமாளிக்க ஷங்கர் கூலிங்க் கிளாஸ் மாட்டிவைத்தார்.. 

3.  தானாக சிந்திக்காத ரோபோ ஒரு சீனில் மட்டும் பொடியன் சொல்வதை மீறி, அவன் கட்டளைக்கு எதிராக  வில்லனை தாக்குவது எப்படி?

4.  சாவே இல்லாத ரா ஒன் ஷாருக் - கரீனா மும்பை போய் 4 ரீல்கள் ரொமான்ஸ் பண்ணும் வரை சும்மா இருப்பது ஏன்?

5. வில்லன் ரோபோ ஃபாரீனில் இருந்து மும்பை வந்தது எப்படி? அதை காட்டவே இல்லையே? பஸ்போர்ட், விசா எப்படி எடுக்க முடிந்தது? ஷாருக் வர அவ்வளவு திணறி இருக்கும்போது வில்லன் மட்டும் எப்படி ஈஸியாக வர முடிந்தது?


http://www.moviesceleb.com/wp-content/uploads/2011/01/kareena-ra.1.jpg


சி.பி கமெண்ட் - ஷாருக் ரசிகர்களும் , சின்னப்பசங்களும் பார்க்கலாம்.. லைக் காமிக்ஸ் ஃபிலிம்..

ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணால படம் பார்த்தேன்.. ஒரே சேட்டாங்க கூட்டம்.. அதுல ஃபிகர்ங்க இருந்தாங்களான்னு நான் பார்க்கவே இல்லப்பா... 2 மணி நேரம் 40 நிமிஷம் படம் ஓடுது..

ஆக்டிங்க் - Shah Rukh Khan, Kareena Kapoor, Arjun Rampal, Shahana Goswami, Armaan Verma



http://2.bp.blogspot.com/_TiCO8op_NpI/S9QhMSEyqXI/AAAAAAAAGE4/Jw1N07SmdZ8/s1600/Shahrukh+Khan+and+Kareena+Kapoor+are+very+closed++on+Ra+One+sets.jpg A


வேலாயுதம் - விஜய் -ன் கமர்ஷியல் ஹிட்- சினிமா விமர்சனம்

http://kollywoodz.com/wp-content/uploads/2011/05/Vijay-Velayutham.jpg 

ட்விட்டர், ஃபேஸ்புக் ,போன்ற சமூக வலை தளங்களில் விஜய் போல் விமர்சிக்கப்பட்டவர் யாரும் இல்லை ,அந்த கேலி கிண்டலை எல்லாம் தாண்டி ஒரு முக்கியமான விஷயம், யாராலும் மறுக்க முடியாத ஒன்று இருக்கிறது.அது ரஜினிக்கு அடுத்து பலராலும் எதிர்பார்க்கப்படும், ரசிக்கப்படும் கமர்ஷியல் சக்சஸ் ஹீரோ விஜய் என்பதுதான்.. தொடர்ந்து 6 படங்கள் கைவிட்ட நிலையிலும் அவர் படத்துக்கு ஒரு மாஸ் ஓப்பனிங்க் இருப்பதை மறைத்து விட முடியாது.. ஆனால் விஜய் ரசிகர்களுக்கு இருக்கும் ஆர்வமும் ,அக்கறையும் விஜய்க்கோ, அவர் தந்தைக்கோ கதைத்தேர்வில் , கேரக்டர்க்கான மெனக்கெடலில் இருப்பதாகத்தெரிவதில்லை.. ...

சென்னையில் வெடி குண்டு வைக்கும் தீவிரவாத கும்பலை பத்திரிக்கையாளரான ஜெனிலியா  படம் பிடிக்கிறார்... அந்த முயற்சியில் அவர் ஈடுபடும்போது வில்லன் குரூப்பால் தாக்கப்பட்டு வீழ்த்தப்படுகிறார், வில்லன் குரூப் எஸ் ஆகும்போது தற்செயலாக ஏற்பட்ட விபத்தில் கார் வெடிக்கிறது.இறந்து போனவனின் உடலில் ஒரு நோட்ஸ் வைத்து விடு மயக்கம் ஆகிறார் ஜெனிலியா.. இந்த கும்பலை கொன்றது வேலாயுதம்.. அவர் அக்கிரமக்காரர்களை அழிப்பார்.... எக்சட்ரா..


கிராமத்தில் தங்கைக்காக உயிரையே விடும் பாசக்கார அண்ணாச்சி ஹீரோ.. அவர் விஷாலின் பட ஃபார்முலா படி சென்னை வருகிறார்.. அவர் தற்செயலாக செய்யும் சில வேலைகள் எதேச்சையாக தீவிரவாத கும்பலுக்கு எதிராக அமைகிறது.. அப்புறம் என்ன? நான் சிகப்பு மனிதன், அந்நியன், இந்தியன், ரமணா பட ஹீரோக்கள் எல்லாம் என்ன செய்தார்களோ அதை இவரும் செய்கிறார்...அவ்வப்போது அவருக்கோ, இயக்குநருக்கோ போர் அடிக்கும்போது ஜெனிலியாவுடன், ஹன்சிகா மோத்வானியுடன் டூயட் பாடுகிறார்.. 


http://www.telugucinemasite.com/live/wp-content/uploads/2011/09/Velayudham-movie-new-stills-2.jpg
அரசியல் பிரஷர் காரணமா? தொடர் தோல்வி காரணமா? தெரியவில்லை , விஜய் முகத்தில் ஒரு டல் அடித்துக்கொண்டே இருக்கிறது.. அதுவும் பன்னீர் தெளித்த ரோஜா போன்ற (ஆர் கே செல்வமணி மன்னிக்க ) ஃபிரஸ் ஃபேஸ் ஹன்சிகா அருகில் விஜய் தோன்றும் க்ளோசப் காட்சிகளில் அண்னனை பார்க்க முடியவில்லை.. 


பாடல் காட்சிகளில் மட்டும் விஜய் செம உற்சாகம் காட்டுகிறார்.. க்ளைமாக்ஸ் ஃபைட் சீனில் கொஞ்சம் நடிக்க முயன்றிருக்கிறார்.. அந்த ஃபைட்டில் சூர்யாவின் சிக்ஸ்பேக்கிற்கு பதிலடி என நினைத்து அவர் டாப்லெஸ்ஸில் வர்றார்..அவ்வ்வ்வ்.. ஆனால் அவர் ரசிகர்கள் முதல் பாவம் ஹீரோயினை (அபிலாஷா) டாப்லெஸ்ஸில் பார்த்த மாதிரி ஒரே ஆரவாரம்.. பாவம்.. 

யூத் குஷ்பூ போல் வரும் ஹன்சிகா கொடுத்த வேலையை சிறப்பாக நிறைவேற்றி பாடல் காட்சிகளில் திறமையை , இளமையை காட்டுகிறார்.. ஜெனிலியா பாவம்..ஹீரோ மேல் ஆசைப்பட்டு பின் விட்டுக்கொடுக்கும் தியாகி கேரக்டர்.. 

சந்தானம்தான் படத்தை ஓரளவாவது காப்பாற்றுகிறார்.. ஆனால் வெறும் 24 ஜோக்ஸ் 14 ரீல் படத்தை காப்பாற்ற போதுமா?

வசனத்தில் களை கட்டிய இடங்கள் ( எழுத்தாளர் சுபா)

1. வில்லன் - தமிழ்நாடு பூரா ஜல்லடை போட்டு தேடினாலும் என்னை மாதிரி ஒரு பொறம்போக்கை நீங்க பார்க்கவே முடியாது (ம்க்கும், மனசுக்குள்ள தங்கபாலுன்னு நினப்பு)

2. ஹீரோயின் - ஜர்னலிஸம்னா என்ன? படிக்கறவங்களுக்கு திருப்தியை தர்றது மட்டும் இல்லை... அவங்க பிரச்சனைகளூக்கு தீர்வு என்ன? என்பதை ஆராயனும்.. 

3.  டி டி ஆர் கிட்டேயே நக்கலா?

எனக்கு டி ஆர் மட்டும் தான் தெரியும், நீங்க யாருங்க்ணா? 

( சாவி 1996 பொங்கல் இதழில் உ ராஜாஜி எழுதிய ஜோக்)

4. இந்த ஊர் மக்களே இவ்வளவு ஆர்வமா நிதி திரட்டி அனுப்பறாங்களே, அவ்ளவ் செல்வாக்கா அவருக்கு?

அட நீங்க வேற , ஆள் ஊரை விட்டுப்போனாப்போதுமுனனு அனுப்பறாங்க...


5. யக்கோவ்.. யார் இந்த ஆள்? நடு ராத்திரில உங்க கூட...???

அது வந்து..

ஓ. விருந்தோம்பல்.. ம் ம் நடக்கட்டும்..

6. கிணத்துல இருக்கற தங்கத்தை நாங்க பார்த்துக்கறோம்.. முதல்ல உன் அங்கத்தை மூடுடி.. எல்லாரும் பார்க்கறாங்க.. 

7. டேய்.. என்ன தான் தங்கை பாசம் இருந்தாலும் பாசமலர் படத்துல வர்ற அந்த ஒரு சீனையே எத்தனை தடவைடா திருப்பி திருப்பி பார்ப்பே..?

அது சரி , கில்மா படத்துல வர்ற சீனுக்காக 4 டைம் பார்க்கறதில்லை? 

8. நான் நாட்டாமை.. என் கிட்டேயேவா?

அது தியேட்டர் எதிர் சீட் லேடி கிட்டே காலை நீட்டாம இருந்திருந்தா பேசலாம்..

9. ஹீரோ பில்டப் வசனம் - ஆடிக்காத்துல அம்மி பறக்கும்,எங்கண்னன் ஆடுனா விசில் பறக்கும்.. 

10. அவனை எதுக்கு இந்த கும்மு கும்மறே? உன் தங்கையை சைட் அடிச்சானா?

அடிக்கலை.. ஆனா எதிர் சீட்ல உக்காந்திருக்கான், சைட் அடிக்க வாய்ப்பு இருக்கு. 



http://www.myselfanand.com/wp-content/uploads/images/08sl3.jpg

11.  டேய்... டேய்.. ஓடற ரயில்ல் இருந்து குதிக்காத.. உன் கால் , கை போயிடும்..

உன் தங்கை சமையலை சாப்பிட்டா உயிரே போயிடுமே.. அடேய்.. மாசமா இருக்கற தாய் வாமிட் எடுத்து பார்த்திருக்கேன்.. உன் தங்கை சமையலை சாப்பிட்ட ஒரு நாய் வாமிட் எடுத்ததை இப்பதாண்டா பார்க்கறேன். 

12. உன் தங்கச்சி சமையலை சாப்பிட்டா சிவாஜியை விட அதிக பர்ஃபார்மென்ஸ் காட்ட வேண்டி இருக்கும்டா.. நல்லாருக்கற மாதிரி நடிக்கனும்.. அது எங்களால முடியாது.. .

13.  என்னடா அப்படி சொல்லீட்டீங்க? என் தங்கை சமையல்ல புலிடா.. 

அதுக்கு நாங்க பலிடா.. 

ஏன்.. இந்த புளி சாதம் நல்லாலை..?


அண்ணே.. அது உப்புமா.. 


14. பிச்சைக்காரன் - உயிர் உள்ளவரை உங்களை மறக்க மாட்டேன்...ரொம்ப நன்றிங்க சாப்பாடு போட்டதுக்கு..

சாப்பிடு.. உயிர் இருக்கா?னு பார்ப்போம்.. 

15.  என்னது? திருடன் ஓடிட்டானா?

சந்தானம்  - பின்னே..? திருடிட்டு ஓடாம பாதயாத்த்ரை போவான்னு நினைச்சியா?

16. சந்தானம் - பொறம்போக்குகள் எல்லாம் பொழுது போக்கு கேக்குது பாரு..

17. சந்தானம் - 62,000 ஒயிஃபை கரெக்ட் பண்ணுன தசரத சக்கரவர்த்தி சாப்பிட்ட லேகியம் இருக்கு.. அதை தர்றேன்.. அதை உன் மாமன் கிட்டே குடு..

அய்.. நல்ல ஐடியா..

டேய்.. மானம் உள்ள அப்பனா இருந்தா பால்ல பவுடர் போட்டுத்தர்றப்பவே, ஹால்ல இருந்த நீ அதை தடுத்திருக்கனும்.. மாமாப்பயலே.. 

18. தங்கைக்கு கட்டில் எடுக்கனும், பீரோ எடுக்கனும்.. 

சந்தானம் -  அதுக்கு  முன்னால நீ வெச்சிருக்கற பணம் எடுக்கனும்.. 

19.சந்தானம்  - . அய்யோ.. என் பின்னால ஆணி குத்திடுச்சே.. 

வெயிட்டர் - சார்.. அது எங்க ஹோட்டல்து.. தந்துடுங்க.. 

சந்தானம் - அடேய்.. பொறுப்பு பருப்பே... !!!! வெயிட்ட்

20.. சந்தானம் - நாம எல்லோரும் ஒரே கண்ட்ரி தான், எதுக்கு நமக்குள் நன்றி எல்லாம்.. ?




http://www.krunchmag.com/wp-content/uploads/2011/03/Hansika-Motwani-hot-Latest-Photo-Gallery-91.jpg

21. பொண்ணு  டிரஸ் மாத்தறப்ப திடீர்னு உள்ளே வர்றியே? உனக்கு இது அசிங்கமா இல்லை?

இல்லீங்க்,... அழகா இருந்துச்சுங்கோவ்,...

22. சந்தானம் - டேய்.. நீ அவளை டாப்லெஸ்ல பார்த்ததும், அவ உன்னை அப்படி பார்த்ததும் ஒண்ணாகிடுமா? இப்படி பழகி பழி வாங்கற ஹீரோவை நான் பார்த்ததே இல்லை.. 

23. சந்தானம் -  நீ கடையையே கண் காட்சி மாதிரி பார்ப்பியே.. காணாததை கண்டவனாட்டம்.. கண்காட்சியை எப்படி பார்ப்பியோ..?

24. சந்தானம் - பிரசவ கால நாய் மாதிரி உனக்கு ஏன் அடிக்கடி கோபம் வருது?

25. சந்தானம் - அப்பா.. நீ எப்படி இங்கே?

அதை நான் சொல்றேன்..

சந்தானம் - பெரிய அண்னா, நீ எப்படி இங்கே?


அதை நான் சொல்றேன்..


சந்தானம் - சின்ன அண்ணா.. , நீ எப்படி இங்கே?

அதை நான் சொல்றேன்..
சந்தானம்  - இப்படியே பண்ணிட்டு இருங்க.. நான் போலீஸ்ல சொல்றேன்..

26. அப்பனுக்காக என்ன வேனாலும் செய்வியா மகனே..?

சந்தானம் -இனி உனக்கு செய்வினை தான் செய்யனும்.. 
27. டேய்.. நீ என்னை கேட்ட ஒவ்வொரு கேள்வியும் என்னை செருப்பால அடிச்ச மாதிரி இருக்கு.. 
சந்தானம் - நல்லா கண்ணைத்திறந்து பாரு நைனா.. நிஜமாலுமே  செருப்பால அடிச்சுட்டுதான் இருக்கேன்.. 

28. உலகத்துலயே கலப்படம் இல்லாத விஷயம் நம்பிக்கைதான்.. அந்த நம்பிக்கையை குலைக்கற ,மாதிரி வேலையை என்னை செய்யச்சொல்றியே..?

29. என்னாதிது.. அஞ்சாங்கிளாஸ் படிக்கறப்ப போட்ட யூனிஃபார்ம் போல.. இன்னும் மாத்தலை? ஓ மாடர்ன் கேர்ள்!!!!

30. சந்தானம் - திருடன் மாட்னா போலீஸ்க்கு சொல்லனும்.. ஏண்டா சொந்தக்காரங்களுக்கெல்லாம் சொல்லி அனுப்பறீங்க? 



http://topbollywoodactress.com/wp-content/uploads/2011/08/velayudham-movie-stills-11.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஆசாத் படத்தை அப்படியே ஜெராக்ஸ் எடுக்காமல் முன் பாதியில் காமெடியை அள்ளித்தெளித்தது, வசனம் சுபாவை எழுத வைத்தது..

2. ஹன்சிகாவை புக் செய்தது ( ஹீரோயினா நடிக்க ), கொடுத்த சம்பளத்துக்கு ஈடாக நடிப்பை!!!! வெளீப்படுத்த வைத்தது.. 

3. சூப்பர்மேன் மாதிரி வேலாயுதம் கேரக்டரை பில்டப் செய்தது.. கமர்ஷியலாய் படம் போர் அடிக்காமல் எடுத்தது..

http://media.santabanta.com/gal/bollywood/hansikaphotoshoot/12.jpg
இயக்குநர்க்கு சில கேள்விகள், சில சந்தேகங்கள், சில ஆலோசனைகள்

1. ஓப்பனிங்க் சீனில் பிரஸ் ஆள் மேல் வில்லன் பெட்ரோலை ஊற்றுகிறான்.. உடனே டக் என்று ஓடாமல் வேணாம், என்னை விட்ரு என அவர் ஏன் கெஞ்சிட்டு இருக்கார்.? அவரை யார் கட்டி வெச்சு இருக்காங்க?

2. கொலை செய்யப்பட்ட சக ஊழியரை கண்டதும் ஜெனிலியா ஓட ஆரம்பிக்கிறார்.. ஆனால் வில்லன் அந்த ஊழியர் மேல் மீண்டும் சுடும்போது ஜெனிலியா முகத்தில் ரத்தம் தெறிக்குதே, எப்படி?

3. விஜய் ஒப்பனிங்க் சீனில் 120 கி மீ வேகத்தில் வரும் ரயிலில் டகார் என ஜம்ப்புவது எப்படி?

4. சீட்டுக்கம்பெனியில் மேனேஜர் செக் தர 2 நாள் ஆகும் என்கிறார்.. கேஷ் என்றால் 3 நாள் ஆகும் என்கிறார்... ஃபோர்ஜரி செக் தானே? அப்பவே போஸ்ட் டேட்டட் செக் தந்திருக்கலாமே? ஹீரோ சென்னையில் 3 நாட்கள் தங்க வைக்க ஐடியாவா?

5.இடைவேளை டைமில் வேலாயுதத்தை நேரில் பார்த்த வில்லனின் அடியாளை ஹாஸ்பிடலில் வைத்து விசாரிக்கும் வில்லன் வேலாயுதத்தை நேரில் பார்த்ததாக டி வி யில் அறிவித்த ஆர் பாண்டியராஜனை ஏன் கண்டு கொள்ளவே இல்லை?

6. ஆரம்பத்தில் வேலாயுதம் அவதாரம் எடுக்க மறுக்கும் ஹீரோ தனக்கு பர்சனலாக ஏற்பட்ட பிரச்சனைக்குப்பின் தானே அவதாரம் எடுக்கிறார்?அது ஏன்?

7.முன் பின் பார்த்திராத சிட்பண்ட் ஓனரை விஜய் எப்படி அடையாளம் அறிகிறார்?

8. கண் தெரியாத பெண்ணை விட்டு விட்டு அவரது சகோதரி ஏன் திடலை விட்டு வெளியே போறார்?

9. ரயில் ஃபைட்டில் சில ஷாட்களில் 23 பெட்டிகள் உள்ள ரயிலையும், ஹெலிகாப்டர்  வ்யூவில் எடுக்கப்பட்ட காட்சிகளீல் 9 பெட்டிகள் உள்ள ரயிலை காட்டுவதும் ஏன்?

10. லட்சக்கணக்கான மக்களின் ஆரவாரத்தில், வில்லனின் மைக் பேச்சையும் மீறி அந்த பார்வை அற்ற பெண்ணின் குரல் கேட்டு எல்லோரும் உண்மையை அறிவது நம்பும்படியே இல்லையே?


http://hotphotos.picswallpapers.com/var/albums/Hansika-Motwani/hot/Hansika-Motwani-hot-photo-009.jpg?m=1306002539


பாடல்கள் பொதுவா விஜய் படங்களில் கலக்கலா அமையும், இந்த டைம் அபவ் ஆவரேஜ்.. மற்றபடி சூப்பர் ஹிட் பாட்டு எதுவும் இல்லை.. நல்ல கவிதை வரிகளை கொண்ட சரணங்கள் உள்ள பாடல் முளைச்சு மூணு இலை விடலை பல்லவியால் மதிப்பு இழக்கிறது.. விஜய் பாடும் என் ரத்தத்தின்ரத்தமே பாட்டு ஏழை ஜாதி படத்தில் விஜய் காந்த் பாடும் கொள்கை பாட்டு போலவே இருப்பது மைனஸ்..

 
முதல் பாதி கலகல... பின் பாதி அதிரடி.. கமர்ஷியலாய் படம் தப்பித்து விடும் தான்.. ஆனால் விமர்சன ரீதியில் பல கணைகளை சந்திக்க நேரும்.. விஜய் ரசிகர்களுக்குப்பிடிக்கும்.. 


ஏ செண்ட்டர்களில் 60 நாட்கள், பி செண்ட்டர்களில் 30 நாட்கள், சி  செண்ட்டர்களில் 20 நாட்கள் ஓடலாம். 


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 41


எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே


சி.பி கமெண்ட் - பார்க்கலாம் மோசம் இல்லை.. சந்தானத்துக்காகவும் ஹன்சிகாவுக்காகவும்.. 
ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன்




http://hindi.way2movies.com/wp-content/uploads/2010/09/Hansika-Motwani-Hot-Photoshoot-Stills-In-Black-1-300x202.jpg