Friday, October 21, 2011

பிம்ப்பிளிக்கி ஜிம்பாலே ஃபிகர் பார்ப்போம் ங்கொய்யாலே ( பர்த்டே ஸ்பெஷல் ஜோக்ஸ்)

Anushka Sharma HQ Photos in saree
1. எனக்கு ஆண்களைப்பற்றி ஓரளவு தெரியும் என்றாள் காதலி,

எனக்கு பெண்களைப்பற்றி ஒரு இழவும் தெரியாது என்றேன்#காதல் கடலை

--------------------------------------

2. வெளியூருக்கு செல்லும்போது கும்மாளம் இடும் மனசு அங்கே போனதும் எப்படா சொந்த ஊருக்கு போவோம் என ஏங்க ஆரம்பிக்கிறது#இக்கரைக்கு அக்கரை பச்சை

------------------------

3. புடவையில்கூட ஒரு பெண் கிளாமராகதெரிவார். அது டீசன்டானகிளாமர்.#வேட்டியில் கூட ஒரு ஆண் அழகாக இருப்பான்,ஆனாஅவன்அப்படி சொல்லிட்டிருக்கமாட்டான்

-----------------------
4. சில்க் வேடத்தில் நடிப்பேன் ஆனா கிளாமரா நடிக்க மாட்டேன் - வித்யாபாலன்#அரசியல்வாதியா நடிப்பேன்,ஆனா ஊழல் பண்ற மாதிரி நடிக்கமாட்டேன்னா எபடி?

--------------------------

5. நல்ல கேள்விகளுக்கு பெண்கள் பதில் சொல்வதில்லை,வம்பிழுத்தால் வரிந்து கட்டிக்கொண்டு பதில் மழை வரும்#லேடீஸாலஜி

---------------------------

 


6. நித்யானந்தா வேடத்தில் நடிக்கிறார் வடிவேலு!#ரஞ்சிதாவாக கோவை சரளாவா? அல்லது ரஞ்சிதாவேவா?-ஆர்வக்கோளாறு ஆர்ய மாலா

-----------------------

7. 12 ஆண்டுகளுக்கு பின் தேசிய அரசியலில் அ.தி.மு.க.,வின் கை ஓங்குகிறது#குறிஞ்சி மலர் நெருஞ்சி முள்ளாகும் நாள் எப்போ?அய்யா வெயிட்டிங்க்

---------------------------

8. ஈழத் தமிழர் பிரச்னையில் கபட நாடகமா? கருணாநிதி ஆவேசம்#எல்லா பிரச்சனைக்கும் கபட நாடகம் ஆடறவரை ஒண்ணை மட்டும் குறிப்பா சொன்னா கோபம் வராதா?

-------------------------


Off you go...





9. B12 பஸ்ஸில் ஏறி C த்ரூசேலை அணிந்த பெண்களை ரசிப்பவன் ”ஏ” க்ளாஸ் ரசிகன்#பஸ்ஸாலஜி@பிம்ப்பிளிக்கி ஜிம்பாலே ஃபிகர் பார்ப்போம் ங்கொய்யாலே (டைட்டில் ட்வீட்)

-------------------------
10. எடுபிடியாய் வேலைசெய்வது அலுத்துப்போனபிறகு மாமனார் காசில் முதலீடுபோட்டு ஏதாவதுஒருதொழில்தொடங்க முனைபவர்கள் தொழில்முனைவோர் ஆகிவிடுகின்றனர்.

-----------------------
the hottest lickers02 The Hottest Lickers



11.  புத்தகத்திற்கு அட்டைப்படம்,சினிமாவிற்கு போஸ்டர் மாதிரி பெண்ணுக்கு புன்னகை,ஆணுக்கு அவன் உடன் இணையாக வரும் பெண் #கிளாமராலஜி

 -------------------------------------

12. ஒரு நேரத்தில் ஒரு கேள்விதான் கேட்க வேண்டும் -ஜெ#எங்கள் ஆட்சிக்காலத்தில் இப்படியா? பதில் சொல்றோமோ இல்லையோ கேள்விகள் கேட்டுட்டே இருப்பாங்க - கலைஞர்

-------------------------

13. இப்போ நாம எழுதுன எக்ஸாம் மேத்ஸ்னுஎப்படி சொல்றே?

எக்ஸாம்ஹால்ல நமக்குபக்கத்துல உட்கார்ந்து பரீட்சைஎழுதுன ஃபிகர் கால்குலேட்டர் வெச்சிருந்ததே?

-----------------------------------

14. பேக்கரியில் மைக் மோகன் - மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு ”கேக்” தா, “கேக்” தா JOK


-----------------------------------
15. உன்னைப்போல் என்னால் கவிதை எழுத முடிவதில்லையே என்றாள் காதலி,முடியாது,நீயே பாடுபொருளாய் ஆனதால் என்றேன்


---------------------


16. தமிழக அரசின் மேல்முறையீட்டுமனுவை உச்சநீதிமன்றம் இன்றுபிற்பகல்3மணிக்குவிசாரிக்கிறது.#ஜெக்கு ராசியானஎண் 9 என்பதால் நாளை காலை விசாரிக்கவும்

-----------------

17. லவ்பண்றவனுக்கு முகம் பிரகாசமா இருக்கும்,லவ் பண்ணாதவனுக்குவாழ்க்கையே பிரகாசமா இருக்கும்,இந்த ஜோக்பிடிக்கலைன்னா உங்கபேரே பிரகாசா இருக்கும்

------------------------
18. வானும்,மண்ணும் போல ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருப்போம் என்றாள் காதலி,இல்லை,மண்ணும் ,மரமும் போல் பிண்ணிப்பிணைந்திருப்போம் என்றேன்#லவ்வாலஜி

--------------------------

19.  ஆஃபீஸ் டைமில் என்னைப்பற்றி என்ன நினைப்பாய்?சொல் என்றாள் காதலி.பகலிலேலேயேடெமோவா?அவ்ளவ் தான் எனக்கு இன்சிடெண்ட் மெமோ தான் என்றேன்#ஆஃபீஸாலஜி

---------------------------------

20. காதல் நிறைவேற அவள் பத்தியம் இருந்தாள்,அவள் பக்தியை எண்ணி நான் பைத்தியமாய் இருந்தேன்#லவ்வாலஜி

------------------------------

Shazahn Padamsee Stills



டிஸ்கி- டைட்டில் பிடிக்கவில்லை,அல்லது புரியவில்லை என்று சொல்பவர்களுக்கு மட்டும்  

ஜிம்ப்பிளிக்கி பிம்பாலே ஃபிகர் பார்ப்போம் ங்கொய்யாலே என மாற்றிப்படிக்கவும், ஏன் எனில் எப்படிப்படிச்சாலும் அர்த்தம் எதுவும் கிடையாது,ஹி ஹி


FOUR FRIENDS - மீரா ஜாஸ்மின் -ன் கண்ணியமான மலையாளப்படம் - சினிமா விமர்சனம்

http://www.mmdbonline.com/photos/Four%20Friends.jpgசாஜி சுரேந்திரன் கேரளாவின் சூப்பர் ஹிட் ஹாட்ரிக் ஹிட் டைரக்டர்...அவரது முதல் படம் ”இவர் விவாஹித்தவரையில்" ,  அவரது 2வது படம் ” ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ் “  அவரது 3 வது படம் தான் இது.. கேரளாவுல போன வருஷமே ரிலீஸ் ஆகி  சுமாரா ஓடுச்சு.. இப்போ தமிழ்ல அன்புள்ள கமல் அப்டிங்கற டைட்டில்ல வந்திருக்கு. கமல் ஒரே ஒரு சீன்லதான்  வர்றாரு, ஆனா போஸ்டர்ல அவர் தான் ஹீரோ என்பது போல் பில்டப்பு...

விமர்சனத்துக்குள்ள போறதுக்கு முன்னே இந்தப்படத்தை ரீமேக் பண்ற ஐடியா யாருக்காவது இருந்தா அவங்களுக்கு ஒரு வார்னிங்க் குடுத்துக்கறேன்.. இது தமிழ்ல ரீமேக்குனா சத்தியமா ஓடாது..  ஏன்னா ஆல்ரெடி பல வருஷங்களுக்கு முன்னால விஜய் காந்த் நடிச்ச தழுவாத கைகள் உட்பட 27 படங்கள் இதே கான்செப்ட்ல வந்துடுச்சு...இங்கே எடுபடாது.. 

படத்தோட கதை என்ன? கோடீஸ்வரர் கம் தொழில் அதிபர் ஜெயராம்,லோக்கல் ரவுடி  ஜெயசூர்யா, போபன் ஒரு இசைக்கலைஞர், மீராஜாஸ்மின் தனது சித்தியால் கொடுமைப்படுத்தப்பட்டு மன நிலை பாதிக்கப்பட்ட (மெண்டல் அல்ல) மன அழுத்தம் கொண்ட பெண்.. வெவ்வேறு பேக் கிரவுண்ட் உள்ள 4 பேரும் ஒரு புள்ளியில் இணையறாங்க.. 4 பேருக்கும் கேன்சர்..( (blood, liver, bone, stomach cancer) ஒரே ஹாஸ்பிடலில் ட்ரீட்மெண்ட் நடக்குது..


4 பேருக்கும் என்ன என்ன ஆசை இருக்கோ அதை நிறைவேற்ற ஒண்ணா கிளம்பறாங்க ( அப்போத்தானே கதை நகரும்?) ஒருத்தர்க்கு தன் காதலிக்கு கிடார் பரிசாத் தர்னும்னு ஆசை , அதுக்காக மலேசியா போறாங்க,இன்னொருத்தர்க்கு கமல்ஹாசனை நேர்ல பார்க்க ஆசை ( படத்தோட ஸ்டார் வால்யூ ஏத்திக்க).. 4 பேரும் ஜாலியா கிளம்பி போறாங்க.. என்ன நடக்குது? என்பதே திரைக்கதை.. 


ஜெயராம் தான் ஹீரோன்னு சொல்லவும் வேணுமா? பொண்ணுங்க எப்பவும் புத்திசாலிங்க என்பதை மீரா ஜாஸ்மின் கேரக்டர் மூலமா சொல்றார் டைரக்டர்.. அதாவது பாப்பா கோடீஸ்வரரான ஜெயராமை லவ்வுது.. ஏன் அதே ஹாஸ்பிடல்ல இருக்கற ஒரு பரதேசியை லவ்வலை? அட்லீஸ்ட் கூட இருக்கற மற்ற 3 பேரை லவ்வலை?


இடைவேளை கார்டு போடறப்ப கமல் வர்றாரு. தன்னம்பிக்கை வரிகள், தத்துவம் சொல்லிட்டு கிளம்பிடறாரு.

http://searchandhra.com/english/wp-content/uploads/2010/10/Four-Friends-Malayalam-Movie-Photo-Gallery-6.jpg

படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

1. முடியைப்பிச்சுடுவேன்.. 

அது வளர்ந்திடும் பல்லைப்பிடுங்கிடுங்க, வளராது.. 

அடப்பாவி, போட்டுக்குடுக்கறியா?

2. என் கிட்டே 30 ஜோக்ஸ் கை வசம் இருக்கு.. எல்லாரையும் சிரிக்க வைக்கப்போறேன்.

எல்லாம் எனக்கு மனப்பாடம். நீ நெம்பரை மட்டும் சொல்லு, நான் நினைவு படுத்திக்கிட்டு சிரிச்சுடறேன்..


3. என் கடைசி நாட்களை நான் கொஞ்சம் எஞ்சாய் பண்ணிக்கறேன்..

அப்டி சொல்லாதே.. இயற்கையை ரசிக்க கிளம்பறேன்னு சொல்லு..


4. உன்னோட சாவு நெருங்கிட்டு இருக்கறதா நினைக்காதே, காப்பாத்த வழி இருக்கு..

என் கிட்டே டாக்டரா நடந்துக்காதே.. ஒரு நண்பனா நடந்துக்கோ..

5.  I AM NOT OBJECT TO ENTERTAIN......

பாப்பாவுக்கு தமிழ் தெரியாது போல... ( எல்லாம் தெரியும், பசங்களூக்கு முன்னால ஃபிலிம் காட்டும்ங்க..)

6.  நான் அவ திமிரை அடக்கறேன்...

லேடி - வாடா.. நான்.. ரெடி.. அடக்கு/... ( அடங்கோ)

7.  பதுங்கி தாக்குற புலி மாதிரி மரணம் நமக்காக காத்திருக்கு

8. நெகடிவ்வை பாசிட்டிவ்வா பார்க்கனும், இனிமே கேன்சர் வியாதி உள்ள எல்லாரையும் குழந்தையா பார்ப்போம் நாம்..

9. சிம்ப்பதி ( இரக்கம்) அவளுக்குப்பிடிக்காத ஒரே வார்த்தை ..


http://enchantingkerala.org/gallery/albums/four-friends/four-friends-malayalam-movie-stills%20(13).jpg

10.  மனசுல தைரியம் உள்ளவன் எந்த வியாதி வந்தாலும் ஃபேஸ் பண்ணுவான்..

11. இப்போ எல்லாம் இன்னும் வாழனும்கற ஆசை எனக்கு ரொம்ப வந்திருக்கு..

12. கிளம்பறப்ப தான் பிரிவோட வலி தெரியுது..

13. வெளிநாடு போய் சம்பாதிக்க வேணாம்டா மகனே.. 100 ரூபாய் சம்பாதிச்சாலும் எங்க கூடவே இருடா..

14.  டேய்.. அது ஏசியா இல்லடா.. மலேசியா..

ஓ.. ஏசியாவோட தலைநகரம் மலேசியாவா?

15.  அவங்க எப்படி ரீ ஆக்ட் பண்ணுவாங்கன்னு தெரியல..

அவங்க மட்டும்தான்  ரீ ஆக்ட் பண்ணுவாங்களா?நாங்களும் தான்  ரீ ஆக்ட் பண்ணுவோம்..

16. பாடம் சொல்லிக்குடுத்த ஐடியல் டீச்சர்ஸ், அம்மா, அப்பா இவங்க கால்ல மட்டும் தான் நான் விழுவேன், ஆசீர்வாதம் வாங்குவேன், வேற எவன் கால்லயும் எதுக்காகவும் விழமாட்டேன்.


17. மலையாள நடிகர் சத்யன் இருக்காரே, அவரைப்பற்றி ஒரு தகவல்.. அவர் அடிக்கடி செல்ஃப் டிரைவ் பண்ணி ஹாஸ்பிடல் போய் பிளட் ட்ரான்ஸ்ப்ளேண்ட்டேஷன் பண்ணிட்டு அவரே ரிட்டர்ன் வண்டி ஓட்டிட்டு ஷூட்டிங்க் ஸ்பாட் வருவாராம்.. எந்த அளவு மனோ தைரியம் வேணும் இதுக்கு..


18. இந்த உலகம் ஒன்லி ஃபார் மில்லியனர்ஸ்.....

19. நீங்க இருக்கற இடம் தேடி வர்றவங்க தான்  உண்மையான ஃபிரண்ட்ஸ்..

20. வினிதாவுக்கு காலேஜ் லீவ்.. இனி மண்டே (MONDAY) தான் அவளை பார்க்க முடியுமாம்..

வினிதா மண்டையை பார்த்து என்ன யூஸ்? எல்லாத்தையும் பார்ப்போம்.. ( அடப்பாவி!!)

21. அவனுக்கு வந்திருக்கற கேன்சர் நோய்க்கு மருந்து இருக்கு.. உனக்கு வந்திருக்கற இந்த சேஃப்டி லைஃப் போதும், லவ் வேணாம்கற சுய நல நோய்க்கு மருந்தே இல்லை..

22. கமல் - எனக்கு நெருக்கமான பல ஃபிரண்ட்ஸ் நோயால இறந்திருக்காங்க.. ஸ்ரீவித்யா கூட கடுமையா நோய் கூட போராடி இறந்தாங்க.. என் கவுதமிக்கு கூட புற்று நோய் இருக்கு.. ( இது புது தகவல்)


http://1movieoneday.com/wp-content/uploads/2009/06/ever-vivahitharayal-malayalam-movie-stills-gallery-_12_.jpg

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. கமர்ஷியல் சக்சஸ்க்கு சான்ஸ் இல்லை என தெரிந்தும் துணிச்சலாக இந்த கதை கருவை எடுத்துக்கொண்டது,,

2. கமலை கரெக்ட்டாக யூஸ் பண்ணிகொண்டது..

3. மீரா ஜாஸ்மின் - ஜெயராம் காதலை கண்ணியமாக காட்டியது..

4. இறக்கப்போகும் தருவாயில் உள்ளவர்களை ஆறுதல்படுத்தும் விதம் காட்சிகளை அமைத்து, தன்னம்பிக்கை டானிக் வசனங்கள் சேர்த்தது

http://mimg.sulekha.com/malayalam/four-friends/stills/four-friends-stills034.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள், சந்தேகங்கள், ஆலோசனைகள்

1.கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒரே ஹாஸ்பிடலில் என காட்டும்போதே அனைவருக்கும் இந்த ஹாஸ்பிடலில் இருப்பவர்கள் கேன்சர் பேஷண்ட்ஸ் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல ,நயன் தாராவின் தெளிவற்ற காதல் போல புரிந்து விடுகிறது.. பிறகு எதற்காக ஒவ்வொருவருக்கும் கேன்சர் என்று சொல்லும்போதும் ஒரு அதிர்ச்சி இசையை பின்னணியில் காட்டுவதும், அதை கேட்கும் கேரக்டர்கள் ஜெர்க் ஆவதும்?

2. மீரா ஜாஸ்மின் ஒரு பர்த்டே பார்ட்டியில் கலந்து கொள்கிறார்.. அந்த பர்த்டே பேபி மீரா ஜாஸ்மினுக்கு கேக் ஊட்ட ஓடி வருகிறார்.. அப்போ பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட ஆர்ச் 6 இடங்களை அவர் கடந்து ஸ்லோ மோஷனில் ஓடி வர்றார். பின் கேக் ஊட்டும்போது 2வது ஆர்ச்சில் 2 பேரும்.. எப்படி? கண்ட்டினியூட்டி மிஸ்ஸிங்க்?

3. ஜெயராம் ஒரு கோடீஸ்வரர்.. அவர் ஏன் குறிப்பிட்ட 4 பேரை மட்டும் செலக்ட் செய்து டூர் போகனும்? எல்லாரையும் கூட்டி செல்லலாமே?அல்லது அவர்களுக்கு ஏதாவது செய்திருக்கலாம் ( பட்ஜெட் எகிறிடுமே..)

4. போபனின் காதலி போபனுக்கு கேன்சர் என்பது தெரிந்ததும் அவனை அவாய்ட் பண்ண மலேசியா போயிடறதா சொல்றார். அப்படி அவாய்டு பண்ணனும்னு நினைக்கறவ எதுக்காக அவளோட பேரண்ட்ஸ்கிட்டே தன் அட்ரஸ் குடுத்து அவன் வந்தா குடுங்கன்னு சொல்லனும்? ரகசியமா எஸ் ஆக வேண்டியதுதானே?

5. போபன் மரணப்படுக்கைல இருக்கறப்ப அவனோட காதலியை கடைசியா ஒரு தடவை பார்க்க ஏன் ஆசைப்படலை?

6. மீரா ஜாஸ்மின் கேரக்டர் படம் பூரா ஒரு சீன்ல கூட பொட்டு வைக்கலை.. ஏன்? அதுக்கான எந்த விளக்கமும் படத்துல இல்லை.. அவர் ஒண்ணும் விதவை கிடையாது..

7. இடைவேளை வரை கேரக்டர் அறிமுகத்துலயே படம் நகருது... ஆனா அதுக்குப்பிறகு திரைக்கதை தடுமாறுது..

8. சாகறாங்கன்னு தெரிஞ்சதும் எல்லாரும் அவங்கவங்க பேரண்ட்ஸ்கூடத்தானே இருக்க ஆசப்படுவாங்க?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_o7hrSF42ZJpMlOKC9eMUnt43cnj1vBWsJVR8zz8XonMr9E_KjPD5vd_-WOraJ16t_OD8CpMN231ziX2Fnd7jWHFpeWXcGm2SqbtgDuT7q9yTLw-BuwrkuylxoCZNBS2zMoa3M7fEqYn_/s640/meera_jasmine_meera_jasmine006.jpg


சி.பி கமெண்ட் - இந்தப்படம் மரண பயம் சம்பந்தப்பட்ட படம் என்பதால் ஆண்கள் அதிகம் ரசிக்க மாட்டார்கள். பொறுமை ரொம்ப அவசியம்..  பெண்களுக்குப்பிடிக்கலாம்..

ஈரோடு ஸ்ரீ சண்டிகாவில் இந்தப்படம் பார்த்தேன்


http://www.topnews.in/files/Meera-Jasmine-74610.jpg

Thursday, October 20, 2011

விஜய் -ன் வேலாயுதம் விண்ணைத்தொடும் வெற்றியா? மண்ணைத்தொடும் தோல்வியா? காமெடி கும்மி கலாட்டா

http://www.boxoffice9.com/gallery/var/albums/Tamil-Movie-Gallery/Tamil-Movie-Stills/Velayudham-Stills,Photos,Pics/velayutham%20latest%20stills%20201100-9.jpg?m=1315983965

1. வேலாயுதத்துக்கு பெரிய தியேட்டர் வேணும் - கொடி பிடிக்கும் விஜய் ரசிகர்கள் # இனி விஜய்க்கு ஜோடியாக பெரிய நடிகைகள் தான் வேண்டும் லைக் நமீதா


----------------------------------

2. வேலாயுதம் படத்தில் விஜய் பால்காரராக வருகிறார் # அப்போ புரொடியூசருக்கும், டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்க்கும் பால் ஊத்திடுவாரு?

------------------------------

3. நான் எடுத்த படங்களிலேயே வேலாயுதம் தான் உச்சம் - இயக்குநர் எம் ராஜா # எடுத்த படங்களிலேயே கெடுத்த படம் இதுதான்னு சொல்லுங்க..

-----------------------------

4. வேலாயுதம் ஒரு தாவரவியல் சப்ஜெக்ட் படம்னு எப்படி சொல்றே? 

விவேகா எழுதுன முளைச்சு மூணு இலை விடலை பாட்டு செம ஹிட் ஆச்சே அதை வெச்சுத்தான்.

--------------------------------
5. உலகம் 2012இல் அழியப்போகிறதாம் 


,அப்போ வேலாயுதம் ஸ்லோ பாய்சனா?

-----------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgq6kWrRMgaMhwTB2Jdaiq9PZ85DK-VtZ7LB8X1Xt8ScOe9eb0YxFLOsXxc119uT9HLVk7Crr6YaqTtvIBoYHp8epxizTRNRyITtVdQuk3Y5cst6RnZMVaIqAyNkEFvUv-Nc8WPQ3NlAQ/s1600/Velayutham-Movie-latest-Stills.jpg

6. வேலாயுதம் இதுவரை தமிழில் வெளிவராத கதை - விஜய் 


# தெரியும், தெலுங்குக்கதையை அப்படியே தமிழ் ஜெராக்ஸ் பண்ணிட்டு.. ராஸ்கல்ஸ்

---------------------------------------

7.  வேலாயுதம்-ல் எந்த அளவு இறங்கி நடிக்க முடியுமோ அந்த அளவு  இறங்கி நடிச்சிருக்கேன் - விஜய் # அப்போ அண்டர்கிரவுண்ட்லதான் ஃபுல் படமுமா?

------------------------------

8.வேலாயுதம் படத்துக்கு சுமாரானா தியேட்டர்கள் தானா? ரசிகர்கள் கொதிப்பு # குமாரு, சுமாரான படத்துக்கு  சுமாரான தியேட்டர்தான் ஒதுக்கமுடியும்

------------------------

9. இளைய தளபதி 7 எழுத்து, வேலாயுதம் 5  எழுத்து,தீபாவளி 4 எழுத்து, விஜய் 3  எழுத்து # எல்லாம் நம்ம தலை  எழுத்து

---------------------------

10. உலகம் அழியப்போகுதாமே?

விஜய் - அய்யய்யோ,அதுக்குள்ள ஒரு தடவை ஆட்சியைப்பிடிச்சிடனும்

----------------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkBNrrS_Wdlop264f1LdOnu6QIbLOHdykUoFzeKLorPKhOUD16r_9H2XVnaOCbyaSy7nDWXa9AuRy-WO-MBzPOXt2uvHg-CSnixS8xaQJxagiuEy_HihzJtVM3q9LdvZnLbfkvfh0IljY/s1600/velayutham_movie_latest_stills_01.jpg
11. கொலைமாமணி பட்டம் உங்களுக்கு எப்படி கிடைச்சதுங்க்ணா?

விஜய் - தொடர்ந்து 6 டப்பா படம் குடுத்தேன்,ஆட்டோமேட்டிக்கா விருது வீடு தேடி ஆட்டோல

-------------------------

12. கில்லி எடுத்த தரணியின் அடுத்த சூப்பர் ஹிட் தான் ஒஸ்தி - சிம்பு  # குப்புறப்படுத்த குருவி கூட தரணி டைரக்‌ஷன் தான், லேட்டஸ்ட் அப்டேட்

--------------------------

13. டைரக்டர் - கதைப்படி ஹீரோவுக்கு மெம்மரி லாஸ் ஆகுது...

நிருபர் - ஜாதகப்படி புரொடியூசருக்கு அவரோட சொத்து லாஸ் ஆகுதா?

--------------------------

14.  நான் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன்,இதுல நீ வேற காட்டு காட்டுன்னு சொல்றே, காட்டாம இருந்தா நல்லாருக்குமா? - விஜய் பஞ்ச் டயலாக்

அடடா, ஹீரோயின் ஹன்சிகா மோத்வானி இதை பேசி இருந்தா இன்னும் கில்மாவா இருந்திருக்குமே?

--------------------------------

15. வேலாயுதம்ல ஒரு ஃபைட் சீனுக்காக வெற்றுடம்புடன் விஜய் # அய்யய்யோ, டாப்லெஸ் சீனா? எப்டி யூ சர்ட்டிஃபிகேட் கிடைச்சது? மாதர் சங்கங்களே!பாரீர்

-------------------------------

http://city-blogger.com/wp-content/uploads/2011/10/Velayutham-2011-Tamil-Movie-Stills.jpg

16. வேலாயுதம் படத்துல ஹீரோவுக்கு 2 ஹீரோயின்ஸ், ஜெனிலியா, ஹன்சிகா # ஆனா வில்லன் ஒருத்தர்தான், அது யார்னு நான் சொல்ல மாட்டேன், பஞ்ச் டயலாக்கர்

----------------------------------

17. நம்ம படத்தை பற்றி நாமளே பேசக்கூடாதுங்க்ணா.. விஜய் #


சரி, SMS ஆவது அனுப்புங்க, உங்க பட நியூஸ் எல்லாம் SMS ல தான் செம இண்ட்ரஸ்ட்டிங்க்.. 

-----------------------------------

பெங்களூர் கோர்ட்டில் ஜெ - காமெடி கும்மி கலாட்டா

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கில், பெங்களூரு சிறப்புக் கோர்ட்டில் நேரில் ஆஜராவதற்கு, விலக்கு அளிக்க வேண்டும் என, தமிழக முதல்வர் ஜெயலலிதா, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு, நிராகரிக்கப்பட்டது. "இன்று ஆஜராக வேண்டும்' எனவும், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதை கேள்விப்பட்டதும் ஜெ முகாமில் என்ன நடந்திருக்கும் என ஒரு ஜாலி கற்பனை.. இது சும்மா காமெடிக்கு மட்டும் தான் ரத்தத்தின் ரத்தங்கள் பொங்காமல் ஜாலியாக சிரித்துக்கொண்டே படிக்கவும்.. 

 http://www.dinamani.com/Images/article/2010/3/19/jaya.jpg
போயஸ் தோட்டத்தில் 

பெங்களூரு கோர்ட்டில் ஜெ., ஆஜராக வேண்டும்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு # நான் தமிழ் நாட்டின் முதல்வர்,தமிழ் நாட்டை விட்டு வர முடியாது- ஜெ


----------------------------


. போயஸ் தோட்டத்தை தாண்டக்கூடாது என MGR சத்தியம் வாங்கி இருக்கிறார்-ஜெ --------------------



-------------------------------------------------



நான் பெங்களூர் போகும் சைக்கிள் கேப்பில் தீயசக்தியான கருணாநிதி ஆட்சியைப்பிடிக்க முயலமாட்டார் என்பதற்கு உத்தரவாதம் இருக்கிறதா? - ஜெ ஆவேசம்
-------------------------------------

http://inthiya.in/ta/wp-content/uploads/2011/03/jayalalitha_vaiko_alliance-cartoon.jpg
பெங்களூர் கோர்ட்டில் ஜெ - காமெடி கும்மி கலாட்டா

டவாலி - ஜெயலலிதா ஜெயலலிதா ஜெயலலிதா

ஜெ- புரட்சித்தலைவி என அழைத்தால்தான் வருவேன், என்னை யாரும் இது வரை பெயர் சொல்லி அழைத்ததில்லை..

ஓ.பி. பன்னீர் செல்வம் -
அம்மா,இது தமிழ்நாடில்லை..கர்நாடகா... எல்லாரும் படிச்சவங்க,தமிழர்கள் போல் துதி பாடிகளை இங்கே பார்க்க முடியாது.. அதுவும் இல்லாம இது கோர்ட்.. கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்குங்கம்மா..

ஜெ- சரி சரி.. முதல்வருக்கான அரியாசனத்தை கோர்ட் கூண்டில் கொண்டு வந்து போடுங்க.. நான் நின்னுட்டெல்லாம் பேச மாட்டேன்.. எம் ஜி ஆர் முன்னாலயே நான் உட்கார்ந்துதான் பேசுவேன்..

ஓ.பி. பன்னீர் செல்வம்
- ஓக்கே அம்மா, அப்புறம் இன்னொரு விஷயம்.. (அப்படியே குனிந்து பம்முகிறார்)

ஜெ- ம் ம் சொல்லுங்க


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeI8ja3ptOV5Bo2F9g-XeQAA-qDQP_ZQGm-_mv5I6OWQKHaP4tzv5Tm9YN2M48TNrGMniAfwMAvddGFQwEKKmN-08OmbHORL-Hivhiec_NgNvxFgdDqdQDF6L9IVTC0-c1hIY05tnxqrE/s1600/jj-cartoon.jpg

ஓ.பி. பன்னீர் செல்வம் -
இப்போ ஜட்ஜ் வருவாரு, அவர் வர்றப்ப நீங்க எழுந்து நிக்கனும்.. வணக்கம் சொல்லனும்..

ஜெ- யாரைப்பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டீங்க?நான் ஒரு நாட்டின் முதல் அமைச்சர்.. நான் எதுக்காக ஒரு சாதாரண ஜட்ஜைபார்த்ததும் எழுந்து நிக்கனும்? வணக்கம் வைக்கனும்? அதெல்லாம் நடக்காது.. நான் கவர்னரையே மதிக்க மாட்டேன்.. பிரதமரே எதிரில் வந்தாலும் துதிக்க மாட்டேன்..

ஓ.பி. பன்னீர் செல்வம் -
( எப்படியோ இந்த கேஸ்ல அம்மா மாட்டி உள்ளே போய்ட்டாங்கன்னா நாம தான் சி எம்.. அதுவரை பம்மிக்கிட்டே நடிக்க வேண்டியதுதான்.. )

ஜட்ஜ் வருகிறார், எல்லோரும் எழுந்து நிற்க ஜெ மட்டும் அமர்ந்த நிலையில் அந்த பக்கமாக முகத்தை திருப்பிக்கொள்கிறார்.. ஜட்ஜ் தலையில் அடித்துக்கொண்டே எல்லாம் என் தலை எழுத்து என மனசில் நினைத்த படியே அமர்கிறார்..

ஜட்ஜ் - வாதி என்ன சொல்ல நினைக்கிறாரோ அதை இப்போ சொல்லலாம்...

ஜெ - சாதா வாதி இல்லை. தமிழ்நாட்டையே கதி கலங்க வைக்கும் அரசியல்வாதி..  (சாதா வாதி இல்லைன்னா சரியான சந்தர்ப்பவாதியா?)போயஸ் தோட்டத்தின் தாதாதி தாதி.. நீங்க உடனடியா நான் குற்றமற்றவள்னு தீர்ப்பு சொல்லிட்டு கிளம்புங்க, அண்ணா நாமம் வாழ்க, புரட்சித்தலைவர் நாமம் வாழ்க..

ஜட்ஜ் - :வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பா உங்க கிட்டே விசாரணை பண்னனும்.. உங்க மாத வருமானம் என்ன?

ஜெ- ஒரு ரூபாய்.. 

http://www.dinamani.com/Images/New_Gallery/2010/1/10/10adade1.jpg

ஜட்ஜ் - என்னது ஒரு ரூபாயா? ( ஹார்ட் அட்டாக் வந்து நெஞ்சை பிடித்துக்கொள்கிறார்.. )

ஜெ - ஆமா.. முதல்வர் சம்பளத்துல ஏழைகளுக்கே தானம் பண்ணிடுவேன்.. எனக்குன்னு எதையும் வெச்சுக்க மாட்டேன்.. ( மைண்ட் வாய்ஸ் - ஊழல்ல சம்பாதிச்சது மட்டும் எனக்கு )

ஜட்ஜ் - அப்புறம் இத்தனை சொத்துக்கள், நிலங்கள், பணங்கள், தங்கங்கள் எல்லாம் எப்படி வந்தது?

ஜெ- எல்லாம் என் பிறந்த நாளுக்கு அமைச்சர்கள் நன்கொடையாக கொடுத்தது..

ஜட்ஜ் - ஓஹோ, அந்த சொத்து மதிப்பு நிலவரத்தை தர முடியுமா?

ஜெ - வழக்கு நடக்குதுன்னு தெரிஞ்சதும் எல்லாத்தையும் ஏழைகளுக்கும், பினாமிகளுக்கும் தானம் பண்ணிட்டேன்.. இப்போ என்ன பண்ணுவீங்க?

ஜட்ஜ் - இது கோர்ட்டை அவமதிக்கும் செயல்... 

ஜெ - சாரி யுவர் ஆனர்.. எனக்கு யாரையும் மதிச்சி பழக்கம் இல்லை, ஆனானப்பட்ட எம்ஜியாரையே நான் மதிச்சதில்லை.. ஏதோ ஜட்ஜ் என்பதல் பதிலாவது சொல்றேன்.. 

ஜட்ஜ் - உங்க மேல சுமத்தப்பட்ட குறச்சாட்டை நீங்க ஒத்துக்கறீங்களா?

ஜெ - இதுக்கு முன்னால ஆண்ட கருணாநிதி ஆட்சில பண்ணுன ஊழலை விட நான் கம்மியாதான் பண்ணி இருக்கேன்..

ஜட்ஜ் - அது இந்த கேஸ்க்கு அப்பாற்பட்டது.. நீங்க ஊழல் பண்ணுனது உண்மையா? இல்லையா? அதை மட்டும் சொல்லுங்க.. 

ஜெ - வழக்கை திசை திருப்பாதீங்க? நீங்க பிராமணர்களுக்கு எதிரானவரா? சூத்திர வம்சத்தில் பிறந்தவரா?அதனால்தான் இப்படி கேள்வி எல்லாம் கேட்கறீங்க.. 

ஜட்ஜ் - நீங்க சொன்னதை என்னால ஜீரணிக்க முடியலை..

ஜெ - காரணம் நீங்க தமிழர் இல்லை.. இதை விட பல அந்தர் பல்டிகளை எல்லாம் இஞ்சி மொரப்பான் சாப்பிடாமலேயே தமிழன் சகிச்சுட்டு இருக்கான்.. இதெல்லாம் ஜுஜுபி.. 

ஜட்ஜ் - உங்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது, இதுக்கு என்ன சொல்றீங்க?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkjHUVRc5hMlb9uHOYBKsB2ecMoZpm2jQrY7NJl8llKoCCv-kbyHRlYzLATDd3zGppMarVIMmDwZ3EUwP-uQoaNQ7mI4bguIhLSIEchfLbd1FUsHHDXYCyQ3YjossaIMv_j7YzsNuNne6J/s1600/8-2.jpg

ஜெ- இருக்கலாம், அந்த சாட்சிகள் இப்போ இருக்காங்களா? கூப்பிடுங்க பார்ப்போம்.. ஒரு பய வர முடியாது.. அண்ணாவின் ஆவி அவரை சும்மா விட்டிருக்காது.. அதிமுக தொண்டர்கள் அல்ப சொல்பமானவர்கள் கிடையாது.. 

ஜட்ஜ் - என்னம்மா, மிரட்றீங்களா?

ஜெ - இப்போ உங்க செல் ஃபோனுக்கு ஒரு  வீடியோ க்ளிப்பிங்க் வந்திருக்கும் பாருங்க.. அதை பார்த்துட்டு தீர்ப்பு சொல்லுங்க.. 

ஜட்ஜ் ( நடுங்கும் கைகளுடன் செல் ஃபோனை எடுத்துப்பார்க்கிறார்.. அவரது முகம் மாறுகிறது.. )

ஜெ மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சாட்சிகளுடன் நிரூபிக்கப்படிருந்தாலும் அந்த சாட்சிகள் யாரும் இப்போது உயிருடன் இல்லை.. மேலும் குற்றம் சாட்டப்பட்ட நபரே தான் குற்றமற்றவர் என ஆணித்தரமாக கூறுவதால் அவரது நேர்மையை சந்தேகிக்க முடியாது.. அவர் அது போல் ஊழல் செய்திருந்தால் புரட்சித்தலைவி ஆகி இருக்க முடியாது.. எல்லாவற்றையும் சீர் தூக்கிப்பார்க்கையில் அவர் குற்றமற்றவர் என தீர்ப்பு சொல்லி அவரை விடுதலை செய்கிறேன்... 



ஜெ- வெற்றி வெற்றி , இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி.. தமிழ் நாட்டின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய வெற்றி..  பன்னீர் செல்வம்.. ஜட்ஜோட ஃபேமிலியை ரிலீஸ் பண்ணிடுங்க.. நமது எம் ஜி ஆர் பத்திருக்கைல ஸ்கூப் நியூஸா இந்த வெற்றி செய்தி வரனும்.. கேன்சல் ஆல் புரோகிராம்ஸ் ஆஃப் ஜெயா டி வி.. 

வெற்றி வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும், அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் மக்களீன் அறியாமையையே சாரும்.. 


Wednesday, October 19, 2011

The Three Musketeers - ஆக்‌ஷன் வித் கிளாமர் பேக்கேஜ் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://blog.80millionmoviesfree.com/wp-content/uploads/2011/09/the-three-musketeers-movie-poster.jpg

அட்டகாசமான லொக்கேஷன்ஸ், கண்களில் ஒத்திக்கொள்ளும் ஒளிப்பதிவு, சின்னப்பசங்க கூட ரசிக்கற அளவு அளவான ஆக்‌ஷன்ஸ், எல்லாத்துக்கும் ”மேலே” ,படத்தில் வரும் அனைத்து இளம் ஃபிகர்களுக்கும் கண்ணியமான லோ கட் ஜாக்கெட்  ஆடை வடிவமைப்புக்காக இந்தப்படம் பார்க்கலாம்னு முடிவெடுத்தேன்..( ஆஹா, என்ன ஒரு கொள்கைப்பூர்வமான முடிவு?!!)

நிகழ்ச்சிக்குள்ளே ( அதாவது விமர்சனத்துக்குள்ளே) போறதுக்கு முன்னே கண்ணியமான லோ கட் என்றால் என்ன? என்ற வரலாற்று உண்மையை பதிவு பண்ணிடறேன்.. அதாவது கவர்ச்சி நடிகைகளான பாபிலோனா, குயிலி,அபிலாஷா, டிஸ்கோ சாந்தி, அனுராதா, சில்க், ஜெய மாலினி இவங்க நடிச்ச படங்கள்ல வர்ற ஸ்டில்ஸ் எல்லாம் பார்த்தா  அவ்வளவு ரசிப்புத்தன்மையா இருக்காது ( 167 தடவை பார்த்தா பின்னே எப்படி ரசிக்க முடியும்?) ஆனா தமனா, அனுஷ்கா, அஞ்சலி,தப்ஸி போன்ற ஃபிகர்கள் லோ கட் ரசிக்கும்படி கோணத்தில் இருக்கும், இது ஒளிப்பதிவாளர்கள் கை வண்ணமா? அல்லது சைக்காலஜியாவே அப்படியா? என ஆராய்ச்சி பண்ணனும்... சரி.. அதை விடுங்க.. படத்தோட கதை என்ன?

3 ஹீரோஸ்  ( ஆனா  4  அல்லது 5 பேர் எப்பவும் ஒண்ணாவே இருக்காங்க ) ,அரசாங்கத்துக்கு சொந்தமான, அதாவது அரசிக்கு சொந்தமான  வைர நெக்லஸை கொள்ளை அடிச்சுட்டுப்போன ஆளை  பிடிச்சு அதை மீட்டுட்டு வர்றதுதான் கதை.. பஸ் டிக்கெட் பின்னால எழுதிட்டுப்போற சாதாரண கதை தான் என்றாலும் ஆர்ட் டைரக்‌ஷனுக்காகவே படம் பார்க்கலாம்.. அடடா.. என்ன உழைப்பு?

திரைக்கதைல ஃபிரான்ஸ்க்கும், இங்கிலாந்துக்கும் போர் ஏற்பட வில்லன்கள் செய்யும் ராஜ தந்திரங்கள், அதை ஹீரோக்கள் முறியடிப்பது என படம் ஸ்பீடா போக உதவி செய்யுது..

பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் தீவ்ஸ் படம் பார்த்தவங்களுக்கு மட்டும் ஒரு தகவல், அந்தப்படத்தோட முதல் பாதி போலவே பல காட்சிகள் இதுலயும் வருது.

இதுல நடிச்சவங்க Cast: Logan Lerman, Matthew Macfadyen, Ray Stevenson, Milla Jovovich;
Director: Paul. W.S. Anderson;


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3kcc8pRGD4PM68PxjQ1EmiWsQwMbexNaUQCJUCVKXoXnDavbskDBdJBaSYylNhcHAIMAe3i7qhOuSjo6YjbmIx4oKuQVqYWH51tk98KB0i-UPe2OYEtFNkNhExeX0WGY2lZpu6ltvh2uQ/s1600/milla-jovovich-as-milady-de-winter-the-three-musketeers-2011.jpg

படத்தில் ரசிக்க வைத்த வசனங்களில் என் நினைவில் நின்றவை

1. ஃபிகரு - என்னை எதுவும் செஞ்சுடாதீங்க..


தப்பா பேசாதீம்மா

( சி.பி - பசங்க கம்முனு இருந்தாலும் பொண்ணுங்க ஞாபகப்படுத்திடறாங்கப்பா)

2. அந்த விஷத்தால நீங்க செத்துட மாட்டீங்க, ஆனாலும் நீங்க செத்த மாதிரிதான் ( கோமா ஸ்டேஜ்னு மாமா பாமா கிட்டே சொல்றாரு)

3. என் குதிரைக்கு நான் கொள்ளு காட்டனும்..


பார்த்தா மாடு மாதிரி இருக்கு..?

4. முட்டாள்ட்ட நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்..

பரவால்ல, என் கிட்டே கேட்கலாம்..

5. பொம்பளைங்க கிட்டே கையேந்த சொல்றியா?அது நடக்காது.. முத்தத்துக்கு வேணா ட்ரை பண்றேன்

6. என் கேள்விக்கு நீ இன்னும் பதிலே சொல்லலை..

நீ எப்பவுமே இப்படித்தானா?

இல்ல, செவ்வாய்க்கிழமை மட்டும்..

7. இது சிட்டி , தம்பி, இங்கே வாழ கத்தி நோ யூஸ்.. மூளை வேணும்/

8. லைஃப்ல நான் நம்பாத விஷயங்கள் 3 இருக்கு  1. காசு. 2. சரக்கு 3. கத்தி
http://moviesmedia.ign.com/movies/image/article/114/1145064/the-three-musketeers-paul-ws-anderson-version-20110502004143472_640w.jpg

9. நான் குடிக்கறதே இல்லை.. அந்த பழக்கம் எனக்கு இல்லை ( 2 வாக்கியத்துக்கும் ஒரே அர்த்தம்தான், அண்ணன் மேஜர் சுந்தர்ராஜன் ரசிகர் போல.. )

10. இப்போ என்னை சுட்டா சத்தம் கேட்கும் நீ மாட்டிக்குவியே, இப்போ என்ன பண்ணுவே?

இப்போ 3 நிமிஷத்துல 12 மணி ஆகும், அப்போ 12 தடவை வால் கிளாக் பெல் அடிக்கும்.. அப்போ சுடுவேன்..  ( லயன் காமிக்ஸ்ல 1997லயே இந்த ஐடியா வந்துடுச்சுங்கோவ்!!)

11. முழுமையான காதல் அவன் கூட இருந்ததுன்னு என் மனைவி எழுதி வெச்சிருக்காளே, அதுக்கு “அது”தான் அர்த்தமா?

நீங்க தப்பா நினைக்கலைன்னா அதுதான் அர்த்தம்,.. ( ஹி ஹி ஹி அடங்கோ!!)

12. அவங்களை எதிர்க்க முடியாது, ஆனா ஏமாத்தலாம்..

13. நீயா அந்த வைர நெக்லஸை கழட்ட்டித்தர்றியா? அல்லது உன் பிணத்தில் இருந்து நான் கழட்டிக்கவா?


ஃபிகரு - வேற எதாவது கழட்டனுமா? ( எள் என்றால் எண்ணெய்!!! ஆக நிற்கும் அழகு வெண்ணெய்!!!)

14. தன் இஷ்டப்படி எல்லாம் வாழ்ந்தா, தன் இஷ்டப்படியே செத்துட்டா...

15. நாம அந்த சூறாவளியை தாண்டி போக முடியாது

டமார் ( கருத்து சொன்னவன் பரலோகம்)

வேற யாராவது கேள்வி கேட்கனுமா? ( இதுக்கு ஜெ சட்டசபையே தேவலை போல.. அவ்வ் )

16. டேய்.. உனக்கு மனசாட்சியே இல்லையா?அவனவன் உயிரை பணயம் வெச்சுக்கிட்டு சண்டை போடறான்.. சம்பளம் சேர்த்துக்கேட்கற நேரம் இதாடா?

17. உன் கிட்ட என்ன பிரச்சனை?

புத்தர் என் ஃபிரண்ட்னு நான் சொன்னா எல்லாரும் நம்பனும்.. 

 http://cdn.buzznet.com/media-cdn/jj1/headlines/2010/09/orlando-bloom-miranda-kerr-three-musketeers-set.jpg

இயக்குநர் சபாஷ் பெறும் காட்சிகள்

1. அரண்மனைக்காட்சிகளில் 10 ஷங்கர் படங்களை ஒன்றாகப்பார்த்தது போல் பிரம்மாண்டம் காட்டியது, எது கிராஃபிக்ஸ்?, எது நிஜம்? என்றே கண்டு பிடிக்க முடியாத அளவு.. செய் நேர்த்தி

2. வைர நெக்லஸை அபகரிக்கும் காட்சி மார்வலஸ், ஆனால் அந்த பவுடர் ஊதி கண்ணுக்குத்தெரியாத எக்ஸ் ரேக்களை காண வைத்து வில்லி  ஊடுருவது ஆல்ரெடி எலக்ட்ரா, என் சுவாசக்காற்றே என பல படங்கள்ல பார்த்ததா இருந்தாலும் ரசிக்க வைக்குது..

3. வாள் சண்டை வரும்போதெல்லாம் ஸ்டண்ட் மாஸ்டரின் உழைப்பு தெரிகிறது..வாட்போர் புரிபவர்களின் பாடிலேங்குவேஜ். ரீ ஆக்‌ஷன்  எல்லாம் அழகு.. 

4. போர்க்காட்சிகளில், அதிக கூட்டம் இருக்கும் காட்சிகளில் எல்லாம் ஹெலிகாப்டரில் எடுக்கப்பட்ட ஏரியல் வியூ காட்சிகள் படு பிரம்மாண்டம்..

5. ஹீரோ - ஹீரோயின் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் பட்டும் படாமல், தொட்டும் தொடாமல் ரசனையாக எடுக்கப்பட்டது  பாராட்டத்தக்கது..

6. ஒரு கப்பலையே விமானம் போல் பயன்படுத்தியது, அது அரண்மனை மேல் வந்து விழுவது எல்லாம் பிரம்மாண்டம்..  ஆச்சரியம்.. 

http://geektyrant.com/storage/post-images-2011/mae_whitman.jpg?__SQUARESPACE_CACHEVERSION=1302034001565

இயக்குநர்க்கு சில கேள்விகள், சில சந்தேகங்கள், சில ஆலோசனைகள்

இந்தப்படத்துக்கு மட்டும் எந்த கேள்வியும் கிடையாது.. காரணம் நான் படத்தை மட்டும் ரசித்தேன், நம்புங்கப்பா.. ஃபிகர்கள் வர்றப்ப எல்லாம் கண்களை மூடிக்கொண்டேன்.. #நீதி - படத்துல மைன்ஸ் பாயிண்ட் யாருக்கும் தெரியக்கூடாது, அல்லது யாரும் கண்டுக்கக்கூடாதுன்னா ஃபிகர்களை காட்டனும், அல்லது ஃபிகர்ங்க எதாவது காட்டனும்..

இந்தப்படத்தை ஈரோடு ஆங்கிலப்பட ஸ்பெஷல் தியேட்டர் வி எஸ் பி யில் கண்டேன்.. அதுல 3 டி எஃபக்ட் இல்லை.. 

சி.பி கமெண்ட் - ஆக்‌ஷன் பிரியர்களும், ஃபிகர்களை ரசிக்கும் நல் உள்ளங்களும் காணலாம்..  இது யு படம் தான்...

http://flickfeast.co.uk/wp-content/themes/yamidoo/scripts/timthumb.php?src=http://flickfeast.co.uk/wp-content/uploads/2011/04/TheHighnessNataliePortman.jpg&w=390&h=600&zc=1