Wednesday, October 19, 2011

தில்லு துர ஜோக்ஸ்



1.டியர், நான் பக்கத்துலதானே இருக்கேன், எதுக்கு ஃபிளையிங்க் கிஸ் தர்றீங்க? 

நீ ஏர்ஹோஸ்டல் ஆச்சே?அதானே பிடிக்கும்?

------------------------

2.இதயம் என்பது துக்கங்களையும், சோகங்களையும் வைத்திருக்கும் குப்பைக்கூடை அல்ல, அது ரோஜாக்களை, மகிழ்ச்சிகளை வைத்திருக்கும் தங்கப்பெட்டி

-----------------------------

3. குளிப்பதற்கு டெமோ காட்டுகிறார் பூனம் பாண்டே! # அடச்சே, வெறும் டெமோ தானா?

-------------------------

4. டியர், நாம டெய்லி கோயிலுக்குபோனா நம்ம காதல் தெய்வீகக்காதல் ஆகிடுமா? 

தேவை இல்லை, டிவைன் லவ்வர்ஸ்னு ஒரு கில்மா படம்,அதுக்குப்போனாலே போதும்

----------------------------
5. வாழ்க்கையில் கசப்பான உண்மைகளை விட இனிப்பான பொய்களே அவசியமாய் இருக்கின்றன மனதிற்கு

--------------------------

6. சாதாரண மனிதன் புத்தகத்துடன் இருப்பான், சாதனை மனிதன் புத்தகத்தில் இருப்பான்

--------------------------



7. வேலாயுதம் படத்துக்கு அனைவரும் பார்க்கலாம் என யு சான்றிதழ் வழங்கியது சென்சார் # அனைவரும் பார்க்கலாமா?அப்போ அதுல விஜய் இல்லையா?

-------------------------------

8. நீர் நிலைகளின் மேற்பரப்பில் தோன்றும் வாத்துகள் அமைதியாய் இருப்பதாய் தோன்றினாலும் உள்ளே அது கால்களால் நீந்திக்கொண்டே இருக்கும்

----------------------------

9. எல்லோராலும் விரும்பப்படும் நபர் என யாரும் இல்லை.. அனைவராலும் வெறுக்கப்படும் நபர் எனவும் யாரும் இல்லை

-------------------------------

10.இன்றைய லட்சியம் நாளைய மாற்றம், இன்றைய அலட்சியம் நாளைய ஏமாற்றம்

-------------------------

three musketeers by Marcin Nawrocki

11. வார்த்தைப்பரிமாறல்கள்தான் காதல் என்றால் இதழ்கள் போதுமே, இதயம் எதற்கு?

------------------------

12. சிநேகங்களின் சோகங்கள் சுலபமாக இறக்கி வைக்கப்படுகின்றன, கேட்கும் நமக்குத்தான் மனதில் பாரம் ஏறுகிறது, கண்ணில் ஈரம் ஊறுகிறது

-------------------------

13. பெண்ணை கோபப்படுத்தாமல் பேசுவது எப்படி? என்ற கலையை இன்னும் எந்த ஆணும் கற்றுக்கொள்ளவில்லை

----------------------------

14. கண்ணீரும், புன்னகையும் ஒரே நேர்கோட்டில் சந்திப்பது அபூர்வம்,வாழ்வின் மறக்க முடியாத அந்த சந்திப்பு உன்னுடனான ஒரு சந்திப்பில் நிகழும் 

--------------------------------

15. பெற்றோரை எதிர்த்து செய்த காதல் திருமணங்கள் 10% என்றால், பெற்றோர் மனம் நோகக்கூடாது என்பதற்காக பிரிந்த காதல் 50 % 

----------------------------


Piddling

16. வாய்ப்புகள் நம்மைத்தேடி வரும்போது அதன் முக்கியத்துவம் நாம் உணர்வதில்லை, நம் கை விட்டு நழுவிய பின் தான் உணர்கிறோம்

----------------------------

17. க்ரைம்கதை எழுதுபவர்களை யாரும் கொலை செய்த அனுபவம் உண்டா? என கேட்பதில்லை, ஆனால் கவிதை எழுதுபவர்களை காதல் அனுபவம் உண்டா? என கேட்கிறார்கள்

-------------------------
18. காதலிப்பது யாராக இருந்தாலும் கஷ்டப்படுவது நான் தான் - மொபைல் ஃபோன் # SMS

--------------------------------

19. உண்மை, தூய்மை, சுய நலமின்மை இந்த 3ம் அமையப்பெற்ற ஒருவனை இந்த உலகமே எதிர்த்தாலும் எதுவும் செய்ய முடியாது # காலண்டரில் கண்டது

-------------------------


20.பொறுப்பை ஏற்றுக்கொள்வதுதான் ஒருவரின் இதயத்தை ஆக்ரமிக்க உதவும் சிறந்த ஆயுதம்

-------------------------------


Art by Erik Johansson


Tuesday, October 18, 2011

AJAAN - பாலிவுட் அர்ஜூன் டைப் ஆக்‌ஷன் படம் - சினிமா விமர்சனம்

http://musicjalsha.info/wp-content/uploads/Azaan-2011.jpg 

படத்தோட போஸ்டர்ல இதுவரை காணாத பிரம்மாண்டம்னு போட்டிருந்தாங்க.. இது பொதுவா எல்லா ஆக்‌ஷன் படங்களுக்கும் யூஸ் பண்ற ஒரு ஸ்லாகன் தான்.. ஆனா சப் டைட்டிலா ஒரு நாடு ஒரு தனி மனிதன் ஒரே ஒரு வழி அப்டினு போட்டிருந்தது நல்லாருந்தது.. அதனாலயும் ஹீரோயின் நல்ல ஃபிகரா என் கண்ணுக்கு தட்டுப்பட்டதாலும் போனேன்..


ஹீரோ புது முகம்.. Sachiin J Joshi, Candice Boucher, Aarya Babbar, Amber Rose Revah, Dalip Tahil, Sachin Khedekar, Alyy Khan, Ravi Kissen, Sajid Hassan இவங்க எல்லாம் இதுல நடிச்சிருக்காங்க..


படத்தோட கதை என்ன? ஹீரோ  ரா எனும் உளவுத்துறைல பணி புரியும் சீக்ரெட் ஏஜென்ட்.. அவரோட தம்பி தீவிரவாதி... பயலாஜிக்கல் வார் எனப்படும் ஒரு வைரஸ் கிருமியை பரப்பி இந்தியாவை அழிக்க தீவிரவாதிங்க முயற்சி பண்றாங்க.. அந்த வைரஸ் கிருமியை அழிக்க ஒரே வழி.. விஞ்ஞானிகள் அதற்கான எதிர்ப்பு சக்தியை ஒரு சிறுமியிடம் புகுத்தி ஆராய்ந்து வெற்றி கண்டிருக்காங்க. அந்த பொண்ணோட பிளட் சாம்ப்பிள் வேணும்.. அந்த சிறுமி ஹீரோயின் கூட இருக்கு.. ( அப்போ தானே ஹீரோ ஹீரோயின் லவ் வரும்?)
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi19sWOkG1Go9gfcXIIrBvMAa-QcIs0jj06OpDQHoWdhULMUERePZHdy5q-9VWrvhw24J5VMG5ULGBHlGvNB3PanteGpW4JxyqbB_iJz4o1_bT5ztkvhVvv1WkovNmoioTXTuiBmbTm2NZA/s1600/azaan.jpg

ஹீரோவுக்கு 3 வேலை 1. தீவிரவாதிகளை கண்டு பிடிச்சு ஒழிக்கனும் ( ஆக்‌ஷன் பார்ட் ஓவர்) 2. ஹீரோயினை கண்டு பிடிச்சு லவ்வனும் ( கிளாமர் )  3. தன் தம்பி தீவிரவாதியா? இல்லையா?ன்னு கண்டு பிடிக்கனும்

( ரொம்ப ஈஸி. தாடி வெச்சிருந்தா தீவிர வாதி.. இல்லைன்னா மித வாதி )



ஹீரோ பார்க்க நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் சன் டி வி ல வந்த ரிஷி மாதிரி இருக்கார்.. அண்ணன் எப்பவும் ஒரே மாதிரி முக பாவம் தான்.. வில்லனை பார்க்கும்போதும் சரி.. ஹீரோயினைப்பார்க்கும்போதும் சரி.. ( 2 மே ஆபத்தான ஆள்ங்க என்பதால் இருக்கலாம்.. )


ஹீரோயின் எபவ் ஆவரேஜ்.. ரசிக்கற அளவு இருக்கு.. ஆனா தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்காது.. ( அப்போ நீ  தெலுங்கு ரசிகனா?)

http://static.ibnlive.in.com/ibnlive/pix/slideshow/10-2011/stargaze-stargaze-playboy/candice_630.jpg
படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1. டெரரிஸ்ட்டோட தம்பி ரெரரிஸ்ட்டாத்தான் இருக்கனும்?



உன் ஃபேஸ்ல ஒரு ரீ ஆக்‌ஷனையும் நீ காட்டலை.. ஆஸ்கார் தரலாம்..


2. நன்றியைப்பற்றி எனக்கு சொல்லித்தரத்தேவை இல்லை, ஏன்னா நான் வளர்ந்த மண் அப்படி.. இந்தியா..



3. ஒரு டெரரிஸ்ட்ட்க்கு காதலியா இருக்க நான் விரும்பலை... நான் லவ் பண்றவர் நல்லவரா இருக்கனும்..


4. கண்டிப்பா என் பிரதர் செத்திருக்க மாட்டான்..


எப்படி சொல்றீங்க?

....

அவன் செத்திருந்தா  என் மனசுக்கு முதல்ல தெரிஞ்சிருக்கும்..


5. ஐ ஆம் மாலன்..


தோத்துட்டு என்ன இண்ட்ரடக்‌ஷன் வேண்டிக்கிடக்கு?

http://img1.gomolo.in/images/gallery/L/GL110830006.jpg

6. ஒரு உயிரைக்காப்பாத்தறது ஒரு நாட்டையே காப்பாத்தறதுக்கு சமம்.


7. உன் வாழ்க்கையை என் வாழ்க்கை கூட இணைச்சுக்கிட்டா நீ எங்கேயோ போயிடுவே.. ( ஹீரோ ஹீரோயின் கிட்ட பேச வேண்டிய டயலாக் இது , ஆனா வில்லன் ஹீரோ கிட்டே பேசறார்.. )


8. புரொஃபசர்.. நான் மனுஷங்களை கொல்றதில்லை.. அது ஓல்டு ஃபேஷன்..


9. யுத்தம் மாறிட்டே இருக்கு, யுத்தம் செய்யற விதமும் மாறிட்டு இருக்கு..பயலாஜிக்கல் வெப்பன்.. இந்த வைரஸ் பரப்பிட்டா இந்தியாவுல இருக்கற எல்லாருமே  தற்கொலை செஞ்சுக்குவாங்க அவங்களாவே,.. ( அடேங்கப்பா, எல்லாருமே கல்யாணம் பண்ணிக்குவாங்களா? )


10. ஒரு பெண்ணை பெட்ரூம்ல திருப்திப்படுத்த  ஆக்ரோஷம் தான் தேவை, மென்மையான ஆண் அல்ல.. ( பட சப்ஜெக்ட்க்கு சம்பந்தமே இல்லாத ஆனா ரசிக்க வைத்த வசனம் )


11. நான் உன்னைப்பார்த்ததுமே நான் தேடிட்டு இருந்த ஆள் நீ தான்னு புரிஞ்சுக்கிட்டேன்.. ( ஃபிகர்ங்க எப்படித்தான் இளிச்சவாயன்களை ஈசியா கண்டுபிடிக்கறாங்களோ? )
http://www.mastione.com/wp-content/gallery/shaan-and-ravi-kissan-at-chitkabre/shaan-and-ravi-kissan-at-chitkabre-5-mastione.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. காசைப் பற்றி கவலைப்படாத தயாரிப்பாளர் கிடைத்ததும்  சகட்டுமேனிக்கு திரைக்கதையை பல வெளிநாடுகளில் பயணிக்கும்படி அமைத்தது ( பாரீஸ்,சூடான், பாங்காங்க் )


2. ஹீரோ, ஹீரோயின் செலக் ஷன்... ஒளிப்பதிவு


3. தம்பி தீவிரவாதி என்று தெரிந்ததும் அண்ணனே சுட்டுக்கொள்ளும் அரதப்பழசான சீனைக்கூட ரசிக்கும்படி எடுத்தது..


4. ஹீரோ - ஹீரோயின் கண்ணிய காதல்..

http://enjoypaki.com/blog/wp-content/uploads/2011/06/azaan-movie-hot.jpg

இயக்குநர்க்கு சில கேள்விகள் , சந்தேகங்கள்,ஆலோசனைகள் ( எப்படியும் அண்ணனுக்கு தமிழ் தெரியாது.. புகுந்து விளையாடலம்.. )



1. ஹீரோ இடுப்பில் கயிறு கட்டி மொட்டை மாடில இருந்து குதிக்கறார் , ஓக்கே.. எதுக்கு ஓடி வந்து ஜம்ப் பண்ணி குதிக்கனும்? அவர் என்ன லாங்க் ஜம்ப்பா பண்றார்?


2.  ஹீரோ கயிற்றில் கட்டப்பட்டு ஒரு ரூமில் ஜம்ப் பண்றார்.. அப்போ வில்லன் ஆளூங்க 5 பேர் ரிவால்வரோட ரெடியா இருக்காங்க.. ஆனா அவங்க சுடலை... ஹீரோவை வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்க. ஹீரோ ஜன்னல் வழியா ஜம்ப் பண்ணி ரூமில் லேண்ட் ஆகி, அப்புறமா சூட் பண்ணி அந்த 5 பேரையும் கொன்னுடறார்.. என்ன கொடுமை சார் இது?


3. ஹீரோவும் , ஹீரோயினும் துரத்தப்படறாங்க வில்லனின் ஆட்களால்.. அவங்களை திசை திருப்ப 2 பேரும் பிரிஞ்சு வெவ்வேற திசைல ஓடறாங்க.. ஆனா வில்லன்க 2 பேரும் அதே போல் பிரிஞ்சு 2 பேரையும் துரத்தாம ஹீரோவை மட்டும் துறத்ஹறாங்களே.. அவ்ளவ் மஞ்ச மாக்கான்களா?


4.  க்ளைமாக்ஸ்ல எல்லா படங்களீலும் இப்படி ஒரு சீன் வந்துடுது.. அதாவது வில்லனோட ஆளுங்க எல்லாம் கோட்டைல, மாளிகைல உயரமான இடங்கள்ல காவலுக்கு நிப்பாங்க.. அப்போ ஹீரோ சூட் பண்ணுவாரு.. அவங்க எல்லாம் நெல்லிக்காய் மூட்டை மாதிரி சரிஞ்சு கீழே தொப்ப்னு விழறாங்க.. ஏன் அங்கேயே தரைல விழ மாட்டாங்களா?


5.  முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற சித்தரிப்பு எதற்கு? தீவிரவாதக்கூட்டம் என 50 பேரை காட்டும்போது 5 இந்து, 5 கிறிஸ்டியன் காட்டக்கூடாதா?
http://www.a2zpictures.com/wp-content/uploads/2011/06/azaan-hindi-movie-2011-hot-wallpapers.jpg

இந்தப்படம் ஸ்ரீ கிருஷ்ணாவுல பார்த்தேன்

சி.பி கமெண்ட் - ஆக்‌ஷன் பிரியர்கள் பார்க்கலாம்.. நாட் சூப்பர், நாட் பேடு


காதல் கடலைகள் போட்டிடும் நேரம்.......இதழோரம்......(ஜோக்ஸ்)


1.வேட்பாளர் ஆயுள் கைதியா ஜெயில்ல இருக்கார்.எப்படி ஜெயிச்சார்.? 

வெளில வந்து யாருக்கும் எந்த கெடுதலும் செய்ய மாட்டார்னு ஒரு நம்பிக்கைதான்

------------------------------

2. டீச்சர், என் பையனுக்கு மெம்மரி பவர் கம்மி, என்ன மேல் படிப்பு படிக்க வைக்கலாம்?..

எதுவும் வேணாம், அவன் நிதி அமைச்சர் ஆனாலும் ஆகிடுவான்

--------------------------------

3. தலைவரே! மணல் கொள்ளைல உங்க பேரும் அடிபடுதே? 

கொள்ளை அடிச்சது உண்மை தான், போயும் போயும் மணலையா? நெவர்

------------------------------

4.  ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் பாடி கெமிஸ்ட்ரி பிரமாதமா இருக்கே?எப்டி?

சும்மாவா? 2 பேருக்கும் ஜாதகப்பொருத்தம் 10 பொருந்தி இருக்கே?

------------------------------

5. தலைவரே! செயின் திருடர்கள் ஆந்திராவுக்கு போய்ட்டாங்கன்னீங்களே? 
 மறுபடி நகைத்திருட்டு நடந்திருக்கே?

ஆந்திரா போரடிச்சிருக்கும்,6 மாசம் இங்கே

--------------------------------




6. ஸாரி மிஸ்டர், எனக்கு காதல், கத்திரிக்காய் எல்லாம் பிடிக்காது. 

வாவ்! எனக்கும்தான் மிஸ்.நம்ம 2 பேருக்கும் எவ்ளவ் ஒத்துமை பார்த்தீங்களா?

-----------------------------------

7.  எங்களுக்குத்தான் ஓட்டு போடனும்னு மக்கள்ட்ட வீடு வீடா போய் சத்தியம் வாங்குனீங்களா? 

நோ நோ பொய். வாட் எ சத்திய சோதனை?

--------------------------------------

8. சிம்பு ரசிகரை லவ் பண்ணுனது தப்பா போச்சா ஏண்டி? 

லவ் பண்ணும்போது நான் தான் ”ஒஸ்தி”ன்னார், மேரேஜ்க்குப்பிறகு லைஃபே நாஸ்திங்கறார்

-----------------------------------

9.கோடம்பாக்கத்தின் கொலம்பஸ் பட்டம் விஜய்க்கு எப்படி கிடைச்சுது?

வேல் ஒரு ஆயுதம்னு கண்டு பிடிச்சாரே? # வேலாயுதம் ராக்ஸ்

-------------------------------

10. போதிதர்மன் யார்னே தெரியாதுன்னு தலைவர் சொன்னாராமே?

ம்க்கும், அவருக்கு மகாபாரதத்துல வர்ற தருமனையே தெரியாது

--------------------------------

 



11. சிம்புவும், பிரபுதேவாவும் இணைந்து ஒரு படம் பண்றாங்களாமே?

ஆமா, டைட்டில் -  சட்டி சுட்டதடா, கை விட்டதடா..

---------------------------------

12. உள்ளாட்சித்தேர்தல்ல யாராவது பணம் கொடுத்தா உடனே போலீஸ்க்கு தகவல் கொடுங்க..

ஏன்? அவங்களுக்கு அங்கே வந்து தர மாட்டாங்களா?

-------------------------

13. திமுகவுக்கும் அதிமுகவுக்கும் வித்தியாசமில்லை - விஜயகாந்த் # சிம்புவுக்கும், பிரபு தேவாவுக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை - 9 தாரா

----------------------------------

14. ஆளுங்கட்சியின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்.. இதற்குப்பிறகும் எங்களை ஜெயிலில் அடைத்தால் நாங்கள் ஆளுங்கட்சிக்குத்தாவுவதை தவிர வேறு வழி இல்லை என எச்சரிக்கிறோம்

--------------------------------

15. இந்த ஃபிகருதான் என்னோட நாளைய இயக்குநர்...

புரியலையே?

என் வருங்கால மனைவிடா.

--------------------------------


nice shift photography


16. தலைவரே! நீங்க எத்தனையோ பெண்களை ஏமாத்தி இருக்கீங்க.. இப்போ உங்க மேல போட்டிருக்கற நம்பிக்கைதுரோக வழக்கு எந்த பெண் தொடுத்த வழக்கு?

------------------------------

17. தான் உண்டு தன் வேலை உண்டுன்னு அவர் இருப்பாரு..

சும்மா கதை விடாதே.. அவருக்குத்தான் வேலையே கிடையாதே?

------------------------------

18. தலைவர் ஏன் கடுப்பா இருக்காரு?

நிரந்தர வருங்கால முதல்வரே!ன்னு கட் அவுட் வெச்சாங்களாம்

-------------------------------

19. என் காதலர்ட்ட வாயைக்குடுத்து மாட்டிக்கிட்டேன்..

அடடா.. என்னாச்சு? வேறென்ன? லிப் கிஸ் தான்

----------------------------

20. உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவில் மந்தநிலை!-  நிற்பவை எல்லாம் மந்தியாக இருந்தால்!!!!!!!!

-----------------------------

Monday, October 17, 2011

கலக்கலாய், கலாய்த்தலாய் சில ஜோக்ஸ்

Umang Sabarwal is organizing India's first Slut Walk in New Delhi, inspired by Toronto's event. Um

1.பல நாடகங்கள் நடத்தினார் கருணாநிதி- ஜெயலலிதா குற்றச்சாட்டு#பல சினிமாக்களில் நடித்தார் ஜெ -கலைஞர் குற்றச்சாட்டு@இமேஜினேஷன்

--------------------------------

2. ராம்தேவை காங்கிரஸ்காரர்கள் மட்டும் சந்திக்கலாம்,பிஜேபி தலைவர்கள் சந்திக்கக்கூடாதா?#சுஷ்மா ஸ்வராஜ் #பயங்கர ஜொள்ளு பார்ட்டிங்க சந்திக்கலாம்

------------------------

3. ஜெயலலிதா அறிவிப்பு நம்பிக்கையூட்டுகிறது - வைகோ// #வைகோவிற்கு தனிமை வாட்டுகிறது,அண்ணன் நைஸா பிட்டை போட்டுப்பார்க்கறாரு போல

--------------------------------

4. கனிமொழியின் ஜாமின் மனுவை நிராகரித்தது டில்லி ஐகோர்ட்: சாட்சிகளை கலைப்பார்'#ஏன்?ஆளுங்களை ஏவி விட்டு கலைக்க மாட்டாங்களா?சினிமால காட்றமாதிரி

--------------------------

the hottest lickers07 The Hottest Lickers

5.ஆயுதங்களுடன் வருமாறு சீடர்களுக்கு ராம்தேவ் அழைப்பு!# விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்,வேலாயுதம் பட பேனர்களுடன் கிளம்பினர்#இமேஜினேஷன்

-----------------------
6. லஞ்ச ஊழலை தடுக்க 1970ம் ஆண்டே தி.மு.க., சட்டம் இயற்றியது: கருணாநிதி#தலைவரே.. சிம் கார்டு வாங்குனா போதுமா? ஆக்டிவேட் பண்ணாம விட்டா எப்படி?

-------------------------

7. ராமதாஸ்- சமச்சீர் கல்வி தொடர்பாக, பா.ம.க.,வின் நிலைப்பாடு, எப்போதுமே தெளிவாகத் தான் உள்ளது#நீங்க எப்பவும் தெளிவுதான்,நாங்க தான்  மப்புல

-----------------------

8. பெண் தர மறுத்ததால் வாலிபர் தற்கொலை #தப்பிச்சோம்னு சந்தோஷப்படறதை விட்டுட்டு தனக்குத்தானே சங்கு ஊதிக்கிட்டீங்களே தம்பி

---------------------

9. உடலாலும்,உள்ளத்தாலும் ஒரே ஒரு பெண்ணுடன் மட்டும் இணைந்த ஆண்கள்  இருப்பது உலகில் எங்கு தேடினாலும் அரிதிலும் அரிதே

------------------------

10. தினமும் 12 மணி நேரம் குடும்பத்துக்காக உழைக்கும் ஆண்கள் குடும்பத்தோடு குதூகலமாக செலவிடும் நேரம் 30 நிமிடம் கூட இல்லை

---------------------------

Finally a book for all MEN to understand WOMEN

http://thunder2012.files.wordpress.com/2010/02/indian-girls-peperonity-com042.jpg?w=60411.எனக்காக எது வேணும்னாலும் செய்வாயா? என்றாள் காதலி.ஆம்,உன் காதலை தியாகம் செய்வதை தவிர என்றேன் #முன் ஜாக்கிரதை முனுசாமி

----------------------------

12. த்ரிஷா நீச்சல் உடையில் நடிக்க ரூ.25 லட்சம் எக்ஸ்ட்ரா சம்பளம்.#ஸ்விம் டிரஸ்ல சும்மா வந்தாலே போதுமே? எதுக்கு கஷ்டப்பட்டு நடிக்கனும்?டவுட்டு

------------------------

13. சமச்சீர் கல்வியை பற்றி சட்ட மன்றத்தில் காடுவெட்டி குரு பேச்சு#அடுத்து செமச்சீர் கலவி பற்றி நித்யானந்தா பேட்டி ,ஆசிரமம் அதிரடி அறிவிப்பு

-------------------------
14.சி.பி.ஐ. விசாரணையை தயாநிதி மாறனே சந்திப்பார்: கருணாநிதி பேட்டி # சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை நொந்துவிட்டேன் தலைவா

-------------------------

15.ராம்தேவை சந்திக்கிறார் சுஷ்மா #அண்ணன் சுடிதாரிலும்,மேடம் ஜீன்ஸ் டிசர்ட்டிலும் கலக்குவார்கள் என மீடியாக்கள் வெயிட்டிங்க்

-------------------------

http://www.trhits.com/wp-content/uploads/2011/06/Smoking_Hot_Indian_Girls_3_thumb.jpg

16.என் பிறந்தநாளை கொண்டாடவேண்டாம்.சமூக நலப்பணிகளை செய்யுங்கள்- விஜய் # அப்படி செய்யும்போதே நாளைய முதல்வர்வாழ்கன்னு ஒரு கோஷம் போட்டுக்கனுமா?

----------------------

17. சோனியாவோ,பிரதமரோ ஹாஸ்பிடல் சென்று உயிருக்கு போராடும் மக்களை பார்க்கவில்லை-சுஷ்மா ஸ்வராஜ்#உங்க டான்ஸை நேர்ல பார்க்கலைனும் வருத்தமோ?

----------------------------

18. நீச்சல்உடையில் நடிக்க மறுத்த த்ரிஷா ரூ 25 லட்சம் அதிகம் கொடுப்பதாக சொன்னதும் ஓக்கே சொன்னார்#அம்மா ஆட்சியில் சாதனை நெம்பர் ஒன்

----------------------
19. இலவச அரிசி வழங்கும் திட்டம்: விரும்பும் அரிசியைப் பெறலாம்- ஜெ#எனக்கு பொன்னி அரிசிதான் விருப்பம்,கிடைக்குமா?மேடம்

---------------------------

20.இலங்கை மீதான ஜெவின் தீர்மானத்திற்கு திமுக ஆதரவு #போயஸ் தோட்டத்தில் ஜெ திடீர் மயக்கம்,கலைஞர் நேரில் சந்தித்து ஆறுதல்#நடந்தாலும் நடக்கும்


http://www.indianchessfed.org/News/2009/July2009/Indian%20Girls%20team%20%28from%20left%29%20%20Padmini%20Rout,Soumya%20Swaminathan,Meenu%20Rajendran,Kiran%20Manisha%20Mohanty,S%5B1%5D.Harini%20and%20P.Uthra.JPG

நாளைய இயக்குநர் - காமெடி ,த்ரில்லர் கதைகள் - விமர்சனம்

இன்னைக்கு ( 16.10.2011) கீர்த்தி செம காமெடி பண்ணுனாங்க.. நானும் கே பாக்யராஜ் சாரும் ஒரே கலர் டிரஸ்..2 பேருமே ப்ளாக்னாங்க.. நல்லவேளை சேம் பிஞ்ச்னு சொல்லி கிள்ளிக்கலை.. ஜஸ்ட் மிஸ்டு..

1. ராஜ்குமார் - எதுவும் எனதில்லை ( காமெடி)

ஓப்பனிங்க் ஷாட்லயே இது பக்கா காமெடி ஸ்கிரிப்ட்னு புரிஞ்சிடுச்சு... ஒரு சாக்லெட் விளம்பரத்தை நக்கல் அடிச்சு முத சீன்.. பஸ் ஸ்டாப்ல ஒரு 70 மார்க் ஃபிகர் நிக்குது.. பாப்பா கிட்டே ஹீரோ சாக்லெட் தர்றார்..

ஏய்.. மிஸ்டர்.. என்னை முன்னே பின்னே பார்த்திருக்கியா? (எங்கே கொஞ்சம் திரும்புங்க பார்த்துக்கறேன்- சி.பி  )

இல்லை...

அப்புறம் எதுக்கு எனக்கு சாக்லெட் தர்றே?

எங்காயா சொன்னாங்க.. நல்ல காரியம் பண்றப்போ ஸ்வீட் சாப்பிடனும்னு..

அப்படி என்ன நல்ல காரியம் பண்ணப்போறே?

உன்னை பிக்கப் பண்ணி உங்க வீட்ல டிராப் பண்ணலாம்னு இருக்கேன்..

தேவை இல்லை.. வேற ஆள் எனக்கு இருக்கான்.. நீ உன் வேலையை பாரு..

ஹீரோவுக்கு நோஸ்கட் குடுத்துட்டு அந்த ஃபிகர் லவ்வரோட கிளம்பிடுது..

ஹீரோ அடுத்து வேற ஒரு ஃபிகர் கரெக்ட் பண்றார்.. அதுக்கு தன் ரூம் மேட்ஸ்கிட்டே ஒருத்தன் கிட்டே இருந்து பைக் ஓசி வாங்கறார்..(2 மணி நேரத்துல திருப்பி தந்துடறேன்கற கண்டிஷன்ல.. )இன்னொருத்தன் கிட்டே டி சர்ட் ஓசி வாங்கறார்..ஃபிகர் கூட ரவுண்ட் அடிக்கறார்.. ஒரே இளநில 2 ஸ்ட்ரா போட்டு குடிக்கறார்.. திடீர்னு 3 பேர் அவரை வழி மறிக்கறாங்க.. ரூம் மேட்ஸ்தான்..

பைக் குடுத்தவன் பைக்கை பிடுங்கிக்கறான்,  டி சர்ட் குடுத்தவன் டி சர்ட்டை பிடுங்கிக்கறான் (அட பறக்கா வெட்டி).. 3 வது ஆள்..? அதுதான் சஸ்பென்ஸ் காமெடி..

“ஏண்டா.. என் ஃபிகரையே தள்ளிட்டு வந்துட்டியா.?ன்னு சொல்லி அவன் ஃபிகரை ஓட்டிட்டு சார்.. கூட்டிட்டு போயிடறான்.. விஷுவலா பார்க்க செம காமெடியாத்தான் இருந்தது..

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. கதைல வர்ற 2 ஃபிகர்ங்களுமே அழகு ஃபிகர்தான்.. நடிப்பும் ஓக்கே..

2. ஆடியன்ஸை யோசிக்கவே விடாம திரைக்கதை செம ஸ்பீடு.. 

2. பின்னணி இசை கதையின் மூடை அப்படியே காமெடியாக்குது..


இயக்குநரிடம் சில கேள்விகள்

1. என்னதான் காமெடின்னாலும் ஃபிகரையே தள்ளிட்டு போறது ஓவர்.. காதலையே கேலி பண்ற மாதிரி இருக்கு.. 

2. ஹீரோ ஃபிகரோட பைக்ல போற ரூட் அவங்க 3 பேருக்கும் எப்படி தெரியும்? கரெக்ட்டா எதிர்ல வர்றாங்களே எப்படி?

3. பைக்கை திருப்பி வாங்கறது ஓக்கே, யாராவது டி சர்ட்டைக்கூட அப்படி நடு ரோட்ல பிடுங்குவாங்களா?

4. ஓப்பனிங்க் ஷாட்ல பஸ் ஸ்டாப் ஃபிகர் ஹீரோவைப்பார்த்து கோபமா பேச வேண்டிய டயலாக்கை காமெடியால லைட்டா சிரிக்குது.. அதை அவாய்டு பண்ணி இருந்திருக்கலாம்


படம் முடிஞ்சதும் படத்தோட இயக்குநர் கே பாக்யராஜ் கிட்டே

என் முயற்சி எப்படி சார்?

என் வேலையையே மாத்திடுவீங்க போல.. நாங்க ஜட்ஜா? மாமாவா?

சுந்தர் சி - படம் ஓக்கே.. ஒரு குறும்படத்துக்குக்கூட சாங்க் கம்போஸ் பண்ணி நல்லா பண்ணி இருக்கீங்க ஹார்டு ஒர்க்.. 


2.  பாக்யராஜ் - ஆந்தை (த்ரில்லர் ஆக்‌ஷன்)

சட்டமும், சமூகமும் இல்லை என்றால் மனிதன் மிருகத்தை விட கேவலமாக நடந்து கொள்வான் அப்டினு ஒரு சப் டைட்டிலோட படம் ஓப்பன் ஆகுது..

போலீஸ் வேலைக்கு எல்லா டெஸ்ட்லயும் பாஸ் ஆகற ஒருத்தன் ரிட்டர்ன் டெஸ்ட்ல ஃபெயில் ஆகிடறான்.. தன் ஃபிரண்ட் கிட்டே புலம்பறான்.. போலீஸ் வேலைல செலக்ட் ஆகனும்னா தனக்கு 4 லட்சம் பணம் வேணும்கறான்.. அவனோட ஃபிரண்ட் இல்லீகல் வேலை செய்பவன்.. அவன் இவனுக்கு அட்வைஸ் பண்றான்.. நேர்மையான வழில போனா பணம் கிடைக்காது.. குறுக்கு வழிலதான் சம்பாதிக்கனும்.. 

ஒரு ஆட்டோவை வழி மறிச்சு ஒரு கொள்ளை அடிக்கறான்.. அந்த பணத்தை அவன் கிட்டே கொடுக்கறான்..

அப்போ 2 பேருக்கும் வாக்குவாதம் வருது.. 

இல்லீகலா சம்பாதிச்சது எனக்கு வேணாம்கறான், இல்ல பரவால்ல எடுத்துக்கோ..சான்ஸ் கிடைக்கறப்ப யூஸ் பண்ணிக்கனும், தான் முன்னேறனும்னா  ஒருத்தனை கவுக்கறதுல தப்பில்லைங்கறான்.

இப்போதான் ஒரு ட்விஸ்ட்.. இது வரை நேர்மைன்னு பேசிட்டு இருந்தவன் இல்லீகலா நடக்க அட்வைஸ் பண்ண ஃபிரண்டையே போட்டுத்தள்ளிடறான்..

இந்தப்படம் ராம்கோபால் வர்மா படம் பொல் எஃப்ஃபக்ட்டா இருக்குன்னு சுந்தர் சி பாராட்னாரு..

ஆனா எனக்கு படத்தோட கான்செப்ட்டும் சரி,, அதை கொண்டு போன விதமும் சரி.. க்ளைமாக்ஸூம் சரி பிடிக்கலை.. 

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. தானே வலியனா ஓசில 4 லட்சம் தர்ற ஃபிரண்டை எதுக்கு மெனக்கெட்டு கொலை செய்யனும்? அவன் ஒண்ணும் பணத்தை திருப்பி கேட்கலையே?

2. 4 லட்சத்துக்காக கொள்ளை அடிச்சது ஓக்கே.. தேவை இல்லாம கொலை எதுக்கு?

3. இந்தக்கதை மூலம் சமூகத்துக்கு நீங்க என்ன சொல்ல வர்றீங்க/?
Pancake Floor Pillows


3. அஸ்வத் - கார்த்திக்  ஒரிஜினாலிட்டி ( காமெடி)

என்ன கான்செப்ட்னா சினிமால கார்த்திக் அப்டிங்கற பேர்ல வர்றவங்க எல்லாம் ஈசியா ஒரு ஃபிகரை பிக்கப் பண்ணிடறாங்க.. அதனால ஹீரோ நாராயனன் தன் பேரை கார்த்திக்னு மாத்திக்கலாமா?ன்னு ஃபிரண்ட்ஸ் கிட்டே ஐடியா கேக்கறான்.. அவங்க வேணாம், உன் ஒரிஜினாலிட்டி போயிடும்கறாங்க

காலேஜ்ல ஜூனியர் ஃபிகரை ஹீரோ ராகிங்க் பண்றார்.. பேரு ,ஊரு எல்லாம் விசாரிக்கறார். அதே சமயம் இன்னொரு பையனை கூப்பிட்டு அந்த ஃபிகர் பக்கத்துல நிக்க வெச்சு அவனுக்கு ஐ லவ் யூ சொல்லுன்னு ராக் பண்றார்..

அந்த ஃபிகர் அந்தப்பையனை பார்த்து ஐ லவ் அப்டின்னு சொல்லி ஹீரோ நாராயணைப்பார்த்து யூ அப்டின்னு முடிக்கறா..

உடனே ஹீரோ டூயட் பாடறாரு.. ஃபிகர் பிக்கப் ஆகிடுச்சுன்னு..

அடுத்த ஷாட்ல அவ ஃபோன் பண்ணி நாராயணனை வரச்சொல்றா..

சார்.. உங்க கிட்டே ஒரு மேட்டர் சொல்லனும் எப்படி சொல்றதுன்னுதான் தெரியலை..

ஆஹா.. சொல்லுங்க சொல்லுங்க

அன்னைக்கு ஒரு பையனை ராக் பண்ணி என்னை அவன் கிட்ட ஐ லவ் யூ சொல்ல வெச்சீங்களே அவனை நான் லவ் பண்றேன்.. முதல்ல உங்க கிட்டே தான் இந்த மேட்டரை சொல்லலாம்னு.. 

அடங்கோ..

அடேய்.. உன் பேரு கார்த்திக்கா?

எப்படி சார் கரெக்ட்டா கண்டு பிடிச்சீங்க?

எத்தனை படம் பார்க்கறோம்?

நல்ல காமெடி பேக்கேஜ். காலேஜ்ல நடக்கறதை நேர்ல பார்க்கற மாதிரி இருந்துச்சு...இயக்குநரே ஹீரோவாநடிச்சிருந்தார்..

இதுக்கு ஜட்ஜூங்க கமெண்ட் பண்றப்ப ஹீரோயின் வெவ்வேற கால கட்டத்துல வர்ற 3 சீன்லயும் ஒரே காஸ்ட்யூம் தான் போட்டிருக்காரு.. அதை கவனிக்கலையா?ன்னாங்க.. 

பட் சின்ன சின்ன மைனஸ் தாண்டி இது நல்ல காமெடி.. இதுக்குத்தான் பெஸ்ட் ஃபிலிம் அவார்டு வரும்னு நான் நினைச்சேன்.. ஆனா .....


4. கிஷோர் - ஃபோன் கால் (PHONE CALL)

ஒரு வீட்ல 4 ஃபிரண்ட்ஸ்.. ஏதோ பார்ட்டி கொண்டாட்டம்.. மாடிப்படி ஏறி வரும் ஒரு நண்பனுக்கு ஒரு ஃபோன் வருது.. அவனோட பழைய ஃபிரண்ட் பிரவீன்..

மேலே வந்ததும் டேய் பிரவீன் ஃபோன் பண்ணுனான்ன்னு சொன்னதும் எல்லாரும் அதிர்ச்சி ஆகறாங்க// டேய்.. உனக்கு விஷயமே தெரியாதா?அவன் இறந்துட்டான்.. எப்படி ஃபோன் வரும்?


இவன் உடனே ஷாக் ஆகிடறான்..

இப்போ மறுபடி பிரவீன்கிட்டே இருந்து கால்...

அவன் திகில் ஆகி பார்க்கறப்ப ரூம்ப இருந்து இன்னொரு ஃபிரண்ட்  பிரவீன் ஃபோனோட வர்றான்.. சும்மா கலாட்டா பண்ண..
இப்போதான் சஸ்பென்ஸ் உடையுது.. கேமரா அப்படியே  டேபிள்ல இருக்கற நியூஸ் பேப்பர்ட்ட போகுது.. இப்போ நாம பார்த்த எல்லாருமே ஆல்ரெடி இறந்துட்டாங்க என காட்டுது..

யூகிக்க முடியாத திருப்பம்...

ஓப்பனிங்க் ஷாட்ல கதைக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி ஒரு பேப்பர் போடற ஆளை காட்னது எதுக்குன்னு இப்போ புரியுது.. வெல் மேக்கிங்க்..
இதுக்கு கமெண்ட் பண்ணுன ஜட்ஜூங்க ஒரே ஒரு குறை சொன்னாங்க.. நைட் எஃபக்ட படம் பண்ணி இருந்தா இன்னும் டெரரா இருந்திருக்கும்னு..
சின்ன குறைகள் இருந்தாலும் இது ஒரு பாராட்டத்தக்க  படமே..

இந்த வாரம் வந்த 4 படங்கள்ல 3 படம் குட்..