Tuesday, April 05, 2011

ஜூ வி விசிட் VS கேப்டனின் ரிஷிவந்தியம் தொகுதி - காமெடி கும்மி

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தும், காங்கிரஸ் கட்சியின் சிவராஜும்
http://www.envazhi.com/wp-content/uploads/2009/04/news_88483393193.jpg
மோதும் ரிஷிவந்தியம் தொகுதியில் கிராமங்கள் அதிகம். விஜயகாந்த் மனைவி பிரேமலதாவின் அப்பா இந்தத் தொகுதியில் உள்ள மூங்கில்துரைப்பட்டில் உள்ள சர்க்கரை ஆலையில்  முன்பு பணிபுரிந்தவர். அந்தக் காலகட்டத்தில்தான், விஜயகாந்த் - பிரேமலதா திருமணம் நடந்தது. அதனால், 'எங்க ஊர் மாப்பிள்ளை விஜய​காந்த்' என்கிறார்கள் தொகுதியைச் சேர்ந்த தே.மு.தி.க-வினர்.  
 
மாப்பிள்ளையா? ”மப்”பிள்ளையா? 
 
 
கடந்த எம்.பி. தேர்தலில், விஜயகாந்த்தின் மைத்துனரும் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளருமான சுதீஷ் இந்தப் பகுதியில்தான் நின்றார். ரிஷிவந்தியத்தில் 24 ஆயிரம் ஓட்டுகள் வாங்கினார். கடந்த எம்.எல்.ஏ. தேர்தலில் தே.மு.தி.க வேட்பாளர் 20 ஆயிரம் வாக்குகள் பெற்றார். இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான் விஜயகாந்த் இந்தத் தொகுதியை அ.தி.மு.க. கூட்டணியில் கேட்டு வாங்கினார்.

கேட்டு வாங்கினாரா? கெஞ்சி வாங்கினாரா?


''காங்கிரஸ் கட்சியின் சிவராஜ், நாலு தடவை தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்தும், பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை. எந்தத் தொழிற்சாலையும் கொண்டுவரவில்லை. அரசுக் கல்லூரியோ, தனியார் கல்லூரியோ குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை.


அப்படி இருந்தும் 4 தடவை அந்தாளை எம் எல் ஏ ஆக்கி இருக்காங்கன்னா அந்த தொகுதி மக்களோட அறியாமையை என்ன சொல்றது?

30 வருடங்களாக இந்தப் பகுதியில் சிவராஜின் குடும்ப ஆதிக்கம்தான் நடக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் கேப்டன் இங்கே நேரடியாகக் களத்தில் இறங்கி இருக்கிறார்...'' என்றார், தே.மு.தி.க. தலை​வரான விஜயகாந்த்தின் சகலையும் பிரபல தொழிலதிபருமான ராமச்சந்திரன். 

ஓஹோ.. இனி கேப்டனோட குடும்ப ஆதிக்கம் தான் இருக்கனுமா?

இவர்​தான் இந்தத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர்.
விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் தனிப்பட்ட முறையில் செய்த நலத் திட்டங்களைப் பட்டியல் இட்ட இவர், ''அடிக்கடி விருத்தாசலம் தொகுதிக்கு விசிட் சென்றுள்ளார் கேப்டன். 

ஆனால், ஆளும் கட்சி எந்த நலத் திட்டங்களையும் செய்து கொடுக்கவில்லை. கேப்டன் சொன்ன மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய முயன்ற இரண்டு கலெக்டர்​களையும் உடனே மாற்றிவிட்டனர். அடுத்து வந்த கலெக்டர், எதையுமே செய்யவில்லை.

இவை அனைத்தும் விருத்தாசலம் வாக்காளர்களுக்கு நன்றாகத் தெரியும். வரும் தேர்தலில் அ.தி.மு.க-தான் நிச்சயம் ஆட்சி அமைக்கும். அவர்களுடன் கூட்டணியில் இருப்பதால், இந்தத் தொகுதியில் 30 வருடங்களாகத் தீர்க்கப்படாத பிரச்னைகளை எல்லாம் கேப்டன் தீர்த்துவைப்பார்!'' என்றார் நம்பிக்கையாக.

எனக்கென்னவோ அந்த தொகுதில இருக்கற டாஸ்மாக்ல உள்ள சரக்குகளை உடனடியா தீர்த்து வைப்பார்னு தோணுது.. 


பதிலுக்கு சிவராஜ் தரப்பிலோ, ''கடந்த தேர்தலில் விஜயகாந்த்தை எல்.எல்.ஏ. ஆக்கிய விருத்தாசலம் தொகுதிப் பக்கமே அவர் எட்டிப்பார்க்கவில்லை. சட்டசபையிலும் தொகுதிக்காகக் குரல் கொடுக்கவில்லை. அங்கு மக்கள் அதிருப்தியில் இருப்பதால்தான், இங்கே ஓடி வந்து இருக்கிறார்.

அய்யய்யோ.. அவர் நடந்தாலே மூச்சிரைக்கும்.. இந்த லட்சணத்துல ஓடி வந்தாரா?

விஜயகாந்த் பற்றி விருத்தாசலம் மக்களிடம் பேசி எடுக்கப்பட்ட வீடியோ - ஆடியோ சி.டி-களை க்ளைமாக்ஸ் நேரங்களில் கிராமம்தோறும் போட்டுக் காட்டுவோம். சிவராஜ்... இந்த மண்ணின் மைந்தர். விஜயகாந்த், சென்னைக்குப் போய்விடுவார். அவரை நம்பி ஓட்டு போட மாட்டார்கள் மக்கள்!'' என்றனர் தெம்பாக.

இதுக்கு பேசாம நீங்க எங்கள் ஆசான், நரசிம்மா,விருதகிரி மாதிரி டப்பா படங்களை போட்டு காட்டுங்க.. வேலை சுலபத்துல முடியும்.. 


காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜுக்கும் தி.மு.க. எம்.பி-யான ஆதிசங்கருக்கும் ஏழாம்பொருத்தம். வேட்பாளராக சிவராஜை அறிவித்துப் பல நாட்கள் ஆகியும், ஆதிசங்கர் ஒதுங்கியே இருந்தார். தி.மு.க. மேலிடப் பிரமுகர்கள் பேசிய பிறகுதான் சில நாட்களாக சிவராஜுடன் கைகோத்து, பிரசாரத்தில் இணைந்து உள்ளார்.

இது எல்லா தொகுதிலயும் நடக்கறதுதானே.. காங்கிரஸ் போட்டி இடும் 63 தொகுதிகள்லயும் தி மு க ஆளுங்க பெரிசா வேலை செய்ய வேண்டாம்னு கலைஞர் வாய் மொழி உத்தரவு போட்டிருக்காரே.. 


சிவராஜிடம் பேசியபோது, ''எனக்குத்தான் வெற்றி​வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தொகுதி மக்களுக்கு அறிமுகமான பாரம்பரியக் குடும்பத்துக்காரன். சோனியாவின் தலைமை, ராகுலின் எதிர்கால அரசியல் கனவு, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் ஆலோசனை, தி.மு.க. ஆட்சியின் திட்டங்கள் எல்லாவற்றையும் எடுத்துச்சொல்லும்போது, மக்கள் வரவேற்பு மிகுதியாக உள்ளது. வெற்றி உறுதி!'' என்றார்.

சீமான் இருப்பதை மறந்துட்டீங்க... காங்கிரஸ் கட்சியை கருவறுக்க பலர் கருவிட்டு இருக்காங்க... எதுக்கும் கம்மியாவே செலவு பண்ணிக்குங்க.. விழலுக்கு இறைத்த நீராய் ஆகிடக்கூடாதே.. ?


கடைசிக் கட்டமாக, இரண்டு நாட்கள் ரிஷிவந்தியத்திலேயே தங்கிப் பிரசாரம் செய்வாராம் விஜயகாந்த். இப்போதைக்கு கடுமையான போட்டி இருந்தாலும், விஜயகாந்த்தின் பிரசாரத்தை வைத்துத்தான் வாக்கு யாருக்கு என்பதை மக்கள் முடிவெடுப்பார்கள்!

அய்யய்யோ... அங்கே யாரை அடிப்பாரு? வழக்கமா தன் கட்சி வேட்பாளரை அடிப்பதுதான் கேப்டனோட பழக்கம். இங்கே போட்டி இடுவது இவர் தான். அப்போ ஒரு ஆஃப் அடிச்சுட்டு இவரை இவரே அடிச்சுக்குவாரோ? #டவுட்டு



சிவராஜ் மீது பாலியல் குற்றச்சாட்டு!

சிவராஜ் மீது குபீர் குற்றச்சாட்டு கிளப்பி இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஜெயந்தி என்ற பெண். ''சில வருடங்கள் முன்பு எங்கள் சொத்துப் பிரச்னை தொடர்பாக எம்.எல்.ஏ. சிவராஜை சந்தித்தேன். அதைத் தீர்க்காமல், என்னைக் கடத்திச் சென்று, பலாத்காரப்படுத்திவிட்டார்.

ஓஹோ.. அப்போ சொத்துப்பிரச்சனையை தீர்த்து வெச்சுட்டு அப்புறமா பலாத்காரம் பண்ணி இருந்தா பரவால்லியா?என்ன பேச்சு இது ? ராஸ்கல்.. 

நானும் எனது கணவரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், நடவடிக்கை இல்லை. பணம் கேட்டு மிரட்டுவதாக, என் மீதே பொய்ப் புகார் கொடுத்து ஜெயிலில் தள்ளினார்.

போலீஸ் ஸ்டேஷன்லயா புகார் குடுத்தீங்க.. நல்ல வேளை... அவங்க எதுவும் பண்ணாம விட்டதே அதிசயம் தான்


கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, சென்னை எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் வைத்து சிவராஜும், ஆதிசங்கர் எம்.பி-யும் எங்களை அழைத்து, சமாதானம் பேசினார்கள். ஆனால், சொன்னபடி எதுவும் செய்யவில்லை.

ஓஹோ.. என்ன சொன்னாரு? ரூ 2 கோடி செட்டில்மெண்ட் பேசி தராம விட்டுட்டரா?

இப்படிப்பட்ட மோசமானவரை அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும் என்றுதான் கடந்த 26-ம் தேதி சுயேச்சையாக ரிஷிவந்தியத்தில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்யச் சென்றேன். ஆனால், சிவராஜின் அடியாட்கள் சிலர், என்னைக் கத்தியால் குத்த வந்தார்கள். தடுத்த என் கணவருக்கு வயிற்றில் காயம். இதையும் மீறி மனுவைத் தாக்கல் செய்தும், அது தள்ளுபடியான மர்மம் புரியவில்லை!'' என்றார் கண்ணீர் மல்க.

இதுல என்ன மர்மம் வேண்டி கிடக்கு?ஆளுங்கட்சியை எதிர்த்தா இந்த கதிதான்.. நீங்க சினிமாப்படம் எதுவும் பார்ப்பது இல்லையா?


இது குறித்து சிவராஜிடம் கேட்டபோது, ''அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. நடக்காத ஒன்றைச் சொல்லி, தேர்தல் நேரத்தில் எனக்கு எதிராகக் கிளம்பியுள்ளார். 

 நடக்கலைன்னு அண்ணன் ரொம்ப வருத்தப்படறார் போல.. 


இந்தப் பொய்ப் புகாரை தொகுதிவாசிகள் நம்ப மாட்டார்கள். அவர் கணவரை ஆள்வைத்துக் குத்தியதாகச் சொல்வதும் சுத்தப் பொய். தேர்தல் சமயத்தில் ஏதாவது பிரச்னையைக் கிளப்பிப் பணம் பிடுங்க நினைக்கிறார்கள்!'' என்று குமுறுகிறார்!


தொகுதிவாசிகள் எதையும் நம்ப மாட்டாங்க.. யார் அதிகம் பணம் தர்றாங்களோ  அவங்களுக்கே வாக்கு .. வாழ்க பணநாயகம்.. அடச்சே.. ஜன நாயகம்,, 


அழகி மோனிகா பேட்டி VS சினிமா எக்ஸ்பிரஸ் - காமெடி கும்மி

http://mimg.sulekha.com/monika/stills/monika_11.jpg 

அத்‌தை‌ பொ‌ண்‌ணு மா‌தி‌ரி‌ இருக்‌கீ‌ங்‌கன்‌னு 
என்‌ ரசி‌கர்‌கள்‌ சொ‌ல்‌றா‌ங்‌க!
- மோ‌னி‌கா‌ ஜி‌லீ‌ர்‌ பே‌ட்‌டி‌

முத்‌துக்‌கு முத்‌தா‌க படத்‌தி‌ல்‌ அன்‌னமயி‌ல்‌ என்‌கி‌ற கி‌ரா‌மத்‌து நர்‌ஸ்‌ கதா‌பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ மோ‌னி‌கா‌வி‌ன்‌ நடி‌ப்‌பை‌ப்‌ பா‌ர்‌த்‌து, பத்‌தி‌ரி‌ககை‌‌களும்‌ நண்‌பர்‌களும்‌ உறவி‌னர்‌களும்‌ பா‌ரா‌ட்‌டி‌ய சந்‌தோ‌சம்‌. கூடவே‌ நஞ்‌சுபு‌ரம்‌ படம்‌ வெ‌ளி‌யா‌க அதி‌ல்‌ ஆட்‌டுக்‌கா‌ரப்‌ பெ‌ண்‌ணா‌க வரும்‌ மோ‌னி‌கா‌வி‌ன்‌‌ நடி‌ப்‌பு‌ம்‌ பே‌சப்‌படுவதி‌ல்‌ கூடுதல்‌ சந்‌தோ‌சத்‌தி‌ல்‌ இருக்‌கி‌றா‌ர்‌ மோ‌னி‌கா‌. இரண்‌டு வா‌ர இடை‌வெ‌ளி‌யி‌ல்‌ தா‌ன்‌ நடி‌த்‌த இரண்‌டு படங்‌கள்‌ வெ‌ளி‌யா‌கி‌ இருக்‌கும்‌ மகி‌ழ்‌ச்‌சி‌யி‌ல்‌ மோ‌னி‌கா‌வி‌ன்‌ உற்‌சா‌க பே‌ட்‌டி‌.

1. முத்‌துக்‌கு முத்‌தா‌க படத்‌தி‌ல்‌ உங்‌களுக்‌கு கி‌டை‌த்‌த பா‌ரா‌ட்‌டுகளை‌ எப்‌படி‌ உணர்‌கி‌றீ‌ர்‌கள்‌...

முத்‌துக்‌கு முத்‌தா‌க சூ‌ட்‌டி‌ங்‌ நடக்‌கும்‌போ‌தே‌, படக்‌குழுவி‌ல்‌ உள்‌ள அத்‌தனை‌ பே‌ரும்‌ என்‌னோ‌ட நடி‌ப்‌பை‌ பா‌ரா‌ட்‌டுனா‌ங்‌க. அதோ‌ட நா‌ன்‌, வி‌க்‌ரா‌ந்‌த்‌ சம்‌பந்‌தப்‌பட்‌ட கா‌ட்‌சி‌கள்‌ பெ‌ரி‌தும்‌ பே‌சப்‌படும்‌னு சொ‌ன்‌னா‌ங்‌க. படம்‌ வெ‌ளி‌யா‌ன பி‌ன்‌ நி‌றை‌ய தெ‌ரி‌ஞ்‌சவங்‌க, தெ‌ரி‌யா‌தவங்‌க, சி‌னி‌மா‌ இன்‌டஸ்‌ட்‌ரி‌ல இருக்‌கி‌றவங்‌கன்‌னு நி‌றை‌ய பே‌ர்‌ போ‌ன்‌ பண்‌ணி‌ பா‌ரா‌ட்‌டி‌னா‌ங்‌க. கா‌தல்‌ நி‌றை‌வே‌றா‌ம தவி‌க்‌கி‌றத ,வெ‌ளி‌க்‌கா‌ட்‌டுற உங்‌க நடி‌ப்‌பு‌ கண்‌ கலங்‌க வை‌க்‌குதுன்‌னு சொ‌ல்‌றா‌ங்‌க. ரொ‌ம்‌ப சந்‌தோ‌சமா‌ இருக்‌கு. எனக்‌கு இப்‌படி‌ ஒரு வா‌ய்‌ப்‌பு‌ கொ‌டுத்‌த இரா‌சு.மதுரவன்‌ சா‌ருக்‌கு இந்‌த நே‌ரத்‌துல நா‌ன்‌ நன்‌றி‌ சொ‌ல்‌ல கடமை‌ப்‌பட்‌டி‌ருக்‌கே‌ன்‌.

என்னங்க  நீங்க ? அவர் அந்தப்படத்துல  உங்களுக்கு ஓப்பனிங்க் பில்டப்பே குடுக்கல...ஓவியாவுக்கு மட்டும் ஸ்லோமோஷன்ல இன்ட்ரோ குடுத்தாரு.. அதை மறந்துட்டீங்களே..? # நாரதர் நாதமுனி

2. அடுத்‌தது நஞ்‌சுபு‌ரம்‌ வெ‌ளி‌யா‌கி‌ இருக்‌கு. அது பற்‌றி‌ சொ‌ல்‌லுங்‌க...

இவ்‌வளவு‌ சீ‌க்‌கி‌ரமா‌, அதா‌வது இரண்‌டு வா‌ர இடை‌வெ‌ளி‌யி‌ல்‌ நா‌ன்‌ நடி‌த்‌த இரண்‌டு படங்‌கள்‌ வெ‌ளி‌யா‌கி‌ இருப்‌பது ரொ‌ம்‌ப சந்‌தோ‌சமா‌ இருக்‌கு. இப்‌படி‌ என்‌ படங்‌கள்‌ வெ‌ளி‌யா‌கி‌ இருப்‌பது இதுதா‌ன்‌ முதல்‌ தடவை‌. 

நஞ்‌சுபு‌ரம்‌ படத்‌துல மலர்‌ங்‌கி‌ற ஆட்‌டுக்‌கா‌ர பொ‌ண்‌ணா‌ நடி‌ச்‌சி‌ருக்‌கே‌ன்‌. ரொ‌ம்‌ப யதா‌ர்‌த்‌தமா‌ன கே‌ரக்‌டர்‌. இப்‌ப படம்‌ வெ‌ளி‌யா‌கி‌ ஓடி‌ட்‌டி‌ருக்‌கு. நி‌றை‌ய பே‌ர்‌ என்‌ கே‌ரக்‌டரும்‌ நடி‌ப்‌பு‌ம்‌ நல்‌லா‌ இருக்‌குன்‌னு சொ‌ல்‌றா‌ங்‌க. 2011ம்‌ வருஷம்‌ எனக்‌கு சந்‌தோ‌சமா‌ போ‌யி‌ட்‌டி‌ருக்‌கு.

உங்க கேரக்டர், நடிப்பு மட்டுமா நல்லாருக்கு..?வாய்க்கால்ல நீங்க குளிக்கறது கூடத்தான் செம கில்மாவா இருந்தது..#ஜொள் பார்ட்டி ஜெகதீசன் 
http://chennai365.com/wp-content/uploads/actress/Monika/Monika-Stills-007.jpg
3. அழகி‌ மோ‌னி‌கா‌ மீ‌து தமி‌ழ்‌ சி‌னி‌மா‌ ரசி‌கர்‌களுக்‌கு இருந்‌த அபி‌ப்‌ரா‌யம்‌ இப்‌பவு‌ம்‌ அப்‌படி‌யே‌ இருக்‌கி‌றதா‌?

கண்‌டி‌ப்‌பா‌. முன்‌ன வி‌ட கூடுதலா‌வே‌ இருக்‌கு.  அது என்‌னோ‌ட ஈமெ‌யி‌ல்‌ பா‌த்‌தீ‌ங்‌கன்‌னா‌ தெ‌ரி‌யு‌ம்‌. அவ்‌வளவு‌ ரசி‌கர்‌கள்‌ இப்‌பவு‌ம்‌ என்‌னோ‌ட வெ‌ப்‌சை‌ட்‌ பா‌ர்‌த்‌து என்‌ மெ‌யி‌ல்‌ அட்‌ரஸ்‌ கண்‌டுபி‌டி‌ச்‌சு பா‌சமா‌ கடி‌தம்‌ அனுப்பு‌றா‌ங்‌க. என்‌னோ‌ட ஒவ்‌வொ‌ரு படம்‌ வெ‌ளி‌யா‌கும்‌போ‌தும்‌ அவங்‌க சந்‌தோ‌சத்‌தை‌யு‌ம்‌ பா‌ரா‌ட்‌டை‌யு‌ம்‌ சொ‌ல்‌வா‌ங்‌க. இப்‌போ‌ அடுத்‌தடுத்‌து முத்‌துக்‌கு முத்‌தா‌க, நஞ்‌சுபு‌ரம்‌ வெ‌ளி‌யா‌கி‌ அனுபவங்‌கள்‌ கூடி‌னா‌லும்‌ நா‌ன்‌ எப்‌பவு‌மே‌ அழகி‌ மோ‌னி‌கா‌ தா‌ன்‌.


ரைட்டு.. அதை நாங்க நம்பனும்னா உங்க ஈமெயில் அட்ரசை மட்டும் குடுத்தா பத்தாது,... பாஸ்வோர்டும் குடுங்க...இப்படிக்கு பக்கத்து வீட்டை எட்டி பார்க்கும் பன்னாடை பாஸ்கரன்

4. உங்‌களுக்‌கு தனி‌த்‌துவமா‌ன நா‌யகி‌ என்‌ற அடை‌யா‌ளம்‌ ஏன்‌ இன்‌னும்‌ கி‌டை‌க்‌கவி‌ல்‌லை‌?

அதுக்‌கா‌ன நே‌ரம்‌ இப்‌பதா‌ன்‌ வர ஆரம்‌பி‌ச்‌சி‌ருக்‌குன்‌னு நி‌னை‌க்‌கி‌றே‌ன்‌. ஏன்‌னா‌, எனக்‌குன்‌னு தனி‌ அடை‌யா‌ளம்‌ தர்‌ற மா‌தி‌ரி‌ படங்‌கள்‌ அழகி‌க்‌கு அப்‌பு‌றம்‌ எனக்‌கு அமை‌யலே‌ன்‌னு தா‌ன்‌ சொ‌ல்‌லணும்‌. இப்‌போ‌ முத்‌துக்‌கு முத்‌தா‌க, நஞ்‌சுபு‌ரம்‌ அதை‌க்‌ கொ‌ஞ்‌சம்‌ நி‌றை‌வே‌த்‌தி‌ இருக்‌கு. 

மற்‌றபடி‌ நா‌ன்‌ சி‌னி‌மா‌வு‌க்‌குள்‌ள வரும்‌போ‌து, ஒரு ஹீ‌ரோ‌யி‌னா‌ வரல. ஒரு ஹி‌ட்‌ படத்‌தோ‌ட ஹீ‌ரோ‌யி‌னா‌ நா‌ன்‌ அறி‌முகம்‌ ஆகி‌ இருந்‌தா‌ எனக்‌கு இன்‌னும்‌ அடை‌யா‌ளம்‌ கி‌டை‌க்‌கலே‌ங்‌கி‌றது பற்‌றி‌ நா‌ன்‌ கவலை‌ப்‌படலா‌ம்‌. ஆனா‌, நா‌ன்‌ குழந்‌தை‌ நட்‌சத்‌தி‌ரமா‌ அறி‌முகமா‌கி‌, அதுக்‌கப்பு‌றம்‌ சி‌ன்‌னச்‌ சி‌ன்‌ன சப்‌போ‌ர்‌ட்‌டி‌ங் கே‌ரக்‌டர்‌ஸ்‌ பண்‌ணி‌னே‌ன்‌. 
அதுக்‌கப்‌பு‌றம்‌தா‌ன்‌ இந்‌த இடத்‌துக்‌கு வந்‌தி‌ருக்‌கே‌ன்‌. என்‌னை‌ப்‌ பொ‌றுத்‌தவரை‌ நா‌ன்‌ இப்‌ப இருக்‌கி‌ற இடம்‌ உயரமா‌ன இடம்‌ தா‌ன்‌. இந்‌த உயரமே‌ எனக்‌கு சந்‌தோ‌சந்‌தா‌ன்‌. இதை‌வி‌ட உயரமா‌ன இடத்‌தி‌ற்‌கு அடுத்‌தடுத்‌து அமை‌கி‌ற படங்‌கள்‌ என்‌னை‌க்‌ கொ‌ண்‌டு போ‌கும்‌னு நம்‌பு‌றே‌ன்‌.

தமிழன் என்னைக்குங்க தமிழ்ப்பெண்ணை நெம்பர் ஒன் ஹீரோயின் ஆக்கி இருக்கான்? இப்பவெல்லாம் தமிழ் தெரியாத கேரளா,மும்பை ஹீரோயின்களுக்குத்தான் கனவுக்கன்னி கிரீடம் சூட்டறான்..  #உண்மை விளம்பி உலகநாதன்

http://spicy.southdreamz.com/cache/awesome-pictures-of-south-actress/monika-.jpg_650.jpg
5. கி‌ளா‌மரா‌ நடி‌ச்‌சீ‌ங்‌க, அப்‌பு‌றம்‌ நடி‌க்‌க மா‌ட்‌டே‌ன்‌னு சொ‌ன்‌னீ‌ங்‌க... ஏன்‌?

கி‌ளா‌மரா‌ நடி‌க்‌கணும்‌னு நா‌ன்‌ எப்‌பவு‌ம்‌ ஆசை‌ப்‌பட்‌டதி‌ல்‌ல. அந்‌தக்‌கதை‌ ரொ‌ம்‌ப பெ‌ரி‌ய அளவு‌ல பே‌சப்‌படும்‌னு நம்‌பி‌னே‌ன்‌. அதோ‌ட அது கதை‌க்‌கு தே‌வை‌ப்‌படுதுன்‌னு இயக்‌குனர்‌ வி‌ரும்‌பி‌ கே‌ட்‌டதா‌ல்‌ நடி‌ச்‌சே‌ன்‌. அதுக்‌கப்‌பு‌றம்‌ கமி‌ட்‌ பண்‌ண படங்‌கள்‌ எல்‌லா‌மே‌ கி‌ளா‌மரா‌ நடி‌க்‌க மா‌ட்‌டே‌ன்‌னு தா‌ன்‌ கமி‌ட்‌ பண்‌ணே‌ன்‌. அதை‌யு‌ம்‌ மீறி‌ ஒரு படத்‌துல ஒரு பா‌ட்‌டுக்‌கு மட்‌டும்‌ கி‌ளா‌மரா‌ நடி‌க்‌கச்‌ சொ‌ல்‌லி‌ என்‌கி‌ட்‌ட கெ‌ஞ்‌சி‌னா‌ங்‌க. நா‌ன்‌ எவ்‌வளவோ‌ பி‌டி‌வா‌தமா‌ மறுத்‌தே‌ன்‌. அப்‌பு‌றம்‌ வீ‌ணா‌ பி‌ரச்‌சி‌னை‌ எதுக்‌குன்‌னு அந்‌தப்‌ பா‌ட்‌டுல மட்‌டும்‌ கி‌ளா‌மரா‌ நடி‌ச்‌ச வே‌ண்‌டி‌யதா‌ப்‌ போ‌ச்‌சு. அதுக்‌கப்‌பு‌றம்‌ யா‌ர்‌ என்‌கி‌ட்‌ட கே‌ட்‌டா‌லும்‌ நா‌ன்‌ கி‌ளா‌மரா‌ நடி‌க்‌கி‌றதி‌ல்‌லே‌ன்‌னு சொ‌ல்‌லி‌ட்‌டே‌ன்.

அதோ‌ட என்‌ ரசி‌கர்‌கள்‌ மறக்‌கா‌ம என்‌கி‌ட்‌ட கே‌ட்‌டுக்‌கி‌ற ஒரு வி‌ஷயம்‌ நா‌ன்‌ கி‌ளா‌மரா‌ நடி‌க்‌கக்‌ கூடா‌துங்‌கி‌றதுதா‌ன்‌. நா‌ன்‌ அவங்‌க வீ‌ட்‌டுப்‌ பொ‌ண்‌ணு மா‌தி‌ரி‌ இருக்‌கே‌னா‌ம்‌. நி‌றை‌ய ரசி‌கர்‌கள்‌ என்‌ அத்‌தை‌ பொ‌ண்‌ணு மா‌தி‌ரி‌ இருக்‌கீ‌ங்‌க. அதனா‌ல கி‌ளா‌மரா‌ நடி‌க்‌கா‌தீ‌ங்‌கன்‌னு சொ‌ல்‌றா‌ங்‌க.

ஒரு பொ‌ண்‌ணை‌ அழகா‌ கா‌ட்‌டுனா‌, அதே‌ கி‌ளா‌மர்‌ தா‌ன்‌. அந்‌தக்‌ கி‌ளா‌மர்‌ தே‌வை‌ தா‌ன்‌. முகம்‌ சுளி‌க்‌க வை‌க்‌கி‌ற கி‌ளா‌மர்‌ல நா‌ன்‌ நடி‌க்‌க மா‌ட்‌டே‌ன்‌.

ஆமாங்க.. தமிழர்களுக்கு ஏகப்பட்ட அத்தை பொண்ணுங்க... நீங்க அவங்க பேச்சை எல்லாம் கேட்டுட்டு மூடி டைப்பா இருக்காதீங்க.. ஓப்பன் டைப்பா இருங்க.. ஹா ஹா # தூண்டில்காரன் 

6. பெ‌ரி‌ய இயக்‌குநர்‌கள்‌ படங்‌களி‌ல்‌ நடி‌ப்‌பதி‌ல்‌லை‌யா‌?

அப்‌படி‌ச்‌ சொ‌ல்‌ல முடி‌யா‌து. இப்‌ப இரா‌சு. மதுரவன்‌ சா‌ர்‌ பெ‌ரி‌ய டை‌ரக்‌டர்‌ தா‌ன்‌. என்‌னை‌ நம்‌பி‌ எனக்‌கு வா‌ய்‌ப்‌பு‌ தந்‌தா‌ர்‌. கண்‌டி‌ப்‌பா‌ அதை‌ நா‌ன்‌ கா‌ப்‌பா‌த்‌தி‌ருக்‌கே‌ன்‌னு நம்‌புறே‌ன்‌. அதே‌ மா‌தி‌ரி‌ என்‌னை‌ நம்‌பி‌ எனக்‌கு யா‌ர்‌ வா‌ய்‌ப்‌பு‌ தந்‌தா‌லும்‌ நா‌ன்‌ சி‌ன்‌சி‌யரா‌ உழை‌க்‌க தயா‌ரா‌ இருக்‌கே‌ன்‌. அப்‌படி‌ வா‌ய்‌ப்‌பு‌கள்‌ இனி‌ ஒவ்‌வொ‌ண்‌ணா‌ அமை‌யு‌ம்‌னு நம்‌பு‌றே‌ன்‌.

கே வி ஆனந்த்,ஸ்ரீராம்,சந்தோஷ் சிவன்  மாதிரி ஃபோட்டோகிராஃபர் கம் டைரக்டர்ஸ் படங்கள்ல நடிங்க.. உங்க அழகு இன்னும் மிளிரும் 
http://tamilnews.anytimechennai.com/wp-content/uploads/2009/01/monica281208.jpg
7. இப்‌போ‌து நடி‌த்‌துக்‌கொ‌ண்‌டி‌ருக்‌கும்‌ படங்‌கள்‌...

அகரா‌தி‌ படம்‌ வெ‌ளி‌யா‌கத்‌ தயா‌ரா‌ இருக்‌கு. அகரா‌தி‌ படத்‌தி‌ல்‌ கதை‌யோ‌ட முக்‌கி‌ய கதா‌பா‌த்‌தி‌ரம்‌ நா‌ன்‌ தா‌ன்‌. அதுக்‌கப்‌பு‌றம்‌ வர்‌ணம்‌ படமும்‌‌ வெ‌ளி‌யா‌கத்‌ தயா‌ரா‌ இருக்‌கு. அதுல நா‌ன்‌ ஒரு டீ‌ச்‌சர்‌ கே‌ரக்‌டர்‌ பண்‌ணி‌யி‌ருக்‌கே‌ன்‌. வர்‌ணம்‌ வரும்‌பபோ‌து என்‌னோ‌ட நடி‌ப்‌பு‌ பே‌சப்‌படும்‌னு நா‌ன்‌ நம்‌பு‌றே‌ன்‌. அதோ‌ட வர்‌ணம்‌ என்‌ சி‌னி‌மா‌ வா‌ழ்‌க்‌கை‌யி‌ன்‌ வண்‌ணத்‌தை‌யு‌ம்‌ மா‌ற்‌றும்‌ என நம்‌பு‌கி‌றே‌ன்‌.

இது தவி‌ர, தமி‌ழ்‌ல நரன்‌ என்‌ற படத்‌தி‌ல்‌ நடி‌க்‌கி‌றே‌ன்‌. கன்‌னடத்‌தி‌ல்‌ "ஹே‌ப்‌பி‌ ஹஸ்‌பெ‌ண்‌ட்‌ஸ்‌" படத்‌தி‌ல்‌ நடி‌க்‌கி‌றே‌ன்‌. "நோ‌ என்‌ட்‌ரி‌" இந்‌தி‌ப்‌ படத்‌தி‌ன்‌ ரி‌மே‌க்‌ அது. இந்‌தி‌யி‌ல்‌ இஷா‌ தி‌யோ‌ல்‌ நடி‌ச்‌ச கே‌ரக்‌டர்‌ல நா‌ன்‌ நடி‌க்‌கி‌றே‌ன்‌.  அப்‌பு‌றம்‌ இரண்‌டு தமி‌ழ்‌ படங்‌களி‌ல்‌ நடி‌ச்‌சி‌ட்‌டி‌ருக்‌கே‌ன்‌. அந்‌தப்‌ படங்‌கள்‌ பற்‌றி‌ய அறி‌வி‌ப்‌பு‌கள்‌ வி‌ரை‌வி‌ல்‌ வெ‌ளி‌யா‌கும்‌. முத்‌துக்‌கு முத்‌தா‌க படத்‌தி‌ற்‌கு அப்‌பு‌றம்‌ இரண்‌டு மூ‌ணு படங்‌களுக்‌கா‌க பே‌சி‌ட்‌டி‌ருக்‌கா‌ங்‌க. கதை‌ கே‌ட்‌டுட்‌டி‌ருக்‌கே‌ன்‌. இந்‌த வருஷம்‌ எனக்‌கு ஆரம்‌பமே‌ நல்‌லா‌ இருக்‌கு.

மோ‌னி‌கா‌ அடுக்‌குவதை‌ பா‌ர்‌த்‌தா‌ல்‌ 2011 மோ‌னி‌கா‌ வருடமா‌க இருக்‌கும்‌ போ‌லி‌ருக்‌கு.

"ஹே‌ப்‌பி‌ ஹஸ்‌பெ‌ண்‌ட்‌ஸ்‌" டைட்டிலைப்பார்த்தாலே விவகாரமான கதை மாதிரி தெரியுதே.. இன்னொரு அமலா பால் ஆக ஐடியா பண்றீங்களோ..?#டவுட்டு

Monday, April 04, 2011

கே பாக்யராஜ்- ன் அப்பாவி - ஆளுங்கட்சிக்கு ஆப்புடி - சினிமா விமர்சனம்

http://www.123musiq.com/Tamil-Images/Appavi.jpg


எலக்‌ஷன் டைமில் இந்த மாதிரி படங்கள் ஒரு பரபரப்புக்காக ரிலீஸ் ஆவது எப்பவும் நடப்பதுதான்.. ஆனால் ஆளுங்கட்சியின் அதிகார பலத்தையும் மீறி இந்த மாதிரி ஆட்சி பற்றிய நேரடி விமர்சன படங்கள் அதுவும் ஒரு லோ பட்ஜெட் படம் வந்தது துணிச்சல் தான்...

படத்தோட கதை என்ன?ரமணா, சிட்டிசன்,சாமுராய் 3 படங்களின் உல்டா தான்.. ஊழல் அரசியல்வாதிகளை வரிசையாக போட்டுத்தள்ளும் கல்லூரி மாணவர் அவர்களை சாகடிக்கும் முன் அவர்களது  ஒப்புதல் வாக்குமூலத்தை அவர்களது செல் ஃபோனிலேயே வீடியோ பதிவு செய்து அனைவருக்கும் அனுப்புகிறார்...இது தொடர் கதை ஆக அரசியல் வாதிகள் திருந்தினார்களா? என்பதே க்ளைமாக்ஸ்...

ஹீரோ புதுமுகம் ஆள் தோற்றம், நடிப்பு எல்லாம் ஓக்கே என்றாலும் இந்த படத்துக்கு உண்டான கெத்து பத்தாது.. ஒரு சரத் குமாரோ, விஜய்காந்தோ, இயக்குநர் சீமானோ ஏற்றிருக்க வேண்டிய கனமான ரோலை இந்த மாதிரி ரொமாண்டிக் லுக் உள்ள ஹீரோ ஏற்பது படத்தின் நம்பகத்தன்மையை பாதிக்கும்.

ஹீரோயின் சுநாஹி... ( பேரே சரி இல்லையே..?)ஆள் நல்லா கொழு கொழுன்னுதான் இருக்கார்... ஆனா .....

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyaddvsty7jSGC-1SvU8veA2QQWuIaFZTFaMUZIwsgk2YIG4ku5l7qUkbH32N-ey93w8aRSdvG6SAoNsDW9R44CzpRfBJvQoNto2nwLTLy7Qdbmxdk7ZEMi9kYKmQdsUNIGiYMNo1fXo6Q/s1600/Suhani-appavi-movie-stills-pics-photo-gallery-05.jpg

டூயட் சீன் -ல் தனது துப்பட்டாவை தொட்ட பெட்டா பள்ளத்தாக்கில் தூக்கி எறிந்து விட்டு ஸ்லோ மோஷனில் அவர் ஓடி வரும் போது... ஹி ஹி # வாழ்க ஸ்லோமோஷன் சீன்ஸ்..

பஞ்சாபி பர்பி பொம்மை மாதிரி இருக்கும் ஹீரோயின் ஆல்ரெடி கலராக இருந்தும் எதற்கு ஓவர் மேக்கப்? டால் அடிக்குதப்பா சாமி... 

படத்தில் பட்டாசைக்கிளப்பும் அரசியல் கார சார வசனங்கள்

1. தட்டுல இட்லியைப்போட்டுட்டு தலைல இடியைப்போட்டானாம் ஒருத்தன்...
எப்படி தலைவரே.. அது?

ரெண்டு பேருக்கு முன்னால வில்லனா இருந்தாலும் , 200 பேருக்கு முன்னால ராமனா இருக்கனும்,

2. போலீஸ்காரங்க எப்படி சார் நேர்மையா இருக்க முடியும்..?அப்படி இருந்தாதான் ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடறாங்களே..?

எல்லா ஆஃபீசர்களும் நேர்மையா இருந்துட்டா ட்ரான்ஸ்ஃபர் ஆகி வர்ற ஆஃபீசரும் நேர்மையா தான் இருப்பாங்க.. அப்போ அரசியல் வாதிங்க தோத்துப்போய்டுவாங்க....ட்ரான்ஸ்ஃபர்ங்கற பேச்சே இருக்காது...( #செம ஐடியா ஆனா எல்லாரும் அப்படி நல்லவங்க ஆவாங்களா?)

3.  அல்லக்கை - அய்யா.. நீங்க சொன்னது ரொம்ப சரி.. 

தலைவர் - நான் ஒண்ணுமே சொல்லலைடா.. கொட்டாவி தானே விட்டேன்..?

4.  தலைவரே.. எனக்கு ஆளுநர் போஸ்ட் வேணும்....

யோவ்.. உனக்கெதுக்கு கவர்னர் ஆகற ஆசை..?

ஓஹோ.. ஆளுநர்னா கவர்னர்னு அர்த்தமா?





http://www.southdreamz.com/wp-content/uploads/2010/06/appavi-aug8-2009.jpg

5.   ஏய்.. என்னை எதுக்கு கொல்றே..?

மக்களை ஏமாத்துனதுக்கு..

நான் இன்னும் எம் எல் ஏ வா ஆகவே இல்லையே..?

6.  நாயரே.. நிர்வாணமா ஒரு டீ போடுங்க... 

அப்படின்னா?

ஆடை இல்லாம ஒரு டீ போடுங்க    ( அம்பை தேவா எழுதுன 1998 சூப்பர் நாவல் ஜோக்)

7.  நான் அநாதை ஆனதுக்கு காரணமே முறுக்கு தான்..

அது எப்படி?

எங்கம்மா பலகாரம் சுட்டப்ப எங்கப்பா முறுக்கு பிரமாதம்னு பாராட்டுனார்.. உடனே எங்கம்மா பூரிக்கட்டையால ஒரே போடு.. ஆள் அவுட்....

ஏன்?

எங்கம்மா சுட்டது ஜிலேபி.. முறுக்குன்னா கோபம் வராதா? ( கிரேசி மோகன் நாடக காமெடி வசனம்)

8.  இந்த அரசியல்வாதிங்க குடுக்கறது வாக்குறுதி.. ஆனா போடறது வாய்க்கரிசி...

9.  டேய்.. நாட்ல 1000 பேரை அழிச்சுட்டு நீ மட்டும் நல்லா வாழனும்னு ஆசைப்படறே.. ஆனா உன் ஒரு ஆளை அழிச்சுட்டு அந்த 1000 பேரை வாழ வைக்கனும்னு நான் ஆசைப்பட்றேன்.. 


10.. அந்த காலத்துல வில்லன் தான் கொலை செய்வான்.. இப்பவெல்லாம் ஹீரோவே கொலை பண்றதுதான் ஃபேஷன்... 


http://assets.findchennai.com/images/entertainment/gallery/812/Appavi-Movie-Press-Meet-40.jpg
11.  நாங்க எல்லாம் ராஜா பரம்பரை,,... 

எது? புள்ளி ராஜா பரம்பரைதானே..?  (வி சாரதி டேச்சு ஜோக் -ஆனந்த விகடன்)

12. முஸ்லீம்கள் எல்லாரும் தீவிரவாதிங்க கிடையாது.. ஆனா பிடிபடற எல்லாரும் முஸ்லீம்களா இருக்காங்க.. அது ஏன்?

13.  தேர்தல்னா என்ன தெரியுமா? இத்தனை நாளா எந்த கெட்டவனுக்கு ஓட்டு போட்டமோ அவனுக்கு ஓட்டு போடாம வேற ஒரு கெட்டவனுக்கு ஓட்டு போடறதுதான்.

14.  நான் படிச்சுட்டு விவசாயம் பார்க்கபோறேன்... 

சும்மா கதை விடாதே..  

நிஜமாத்தான்.. யாரோ விவசாயம் பண்ணுவாங்க.. அதை வேடிக்கை பார்ப்பேன்.. 

15.  நான் தாய்மையை மதிக்கறேன்.. அதனால படிப்பை முடிச்சுட்டு கல்யாணம் பண்ணி சீக்கிரம் தாய் ஆகப்போறேன்...

சார்.. நான் ஸ்டெல்லா தாய் ஆக ஹெல்ப் பண்ணப்போறேன்.. ( எஸ் வி சேகரின் ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி நாடக டயலாக்)

16.  பெத்த அம்மாவுக்கு ஒரு கஷ்டம்னா செத்த பொணம் கூட துடிக்கும்.. 

17.  அடுத்த எலக்‌ஷன் பற்றித்தான் எல்லா அரசியல் வாதிகளும் யோசிக்கறாங்க.. அடுத்த தலைமுறை பற்றி யாரும் யோசிக்கறதில்லை..

18.  தண்ணி ஊற்றி கழுவறப்ப போகாத கறையை ஆசிட் ஊற்றி கழுவற மாதிரி நம்ம நாட்டையும் ஆசிட் வாஸ் பண்ணி க்ளீன் பண்ணனும்..
http://www.cinemaexpress.com/Images/article/2010/1/18/15appavi.jpg
பாடல்கள் படத்தின் வேகத்துக்கு தடை.. பாறையில் பூக்கின்ற பூக்கள் பாட்டு கவி நயம் மிக்கது என்றாலும் அந்நியன் பட குமாரி.. மனம்.. பாட்டின் அதே லொக்கேஷன், அதே மெட்டு என உல்டா அடித்திருப்பது மைனஸ்... 

ஒரு சீனில் ஹீரோ 2 அடி தூரத்தில் நின்று கொண்டிருக்கும் காரின் பெட்ரோல்டேங்க் மீது ரிவால்வரால் சுடுகிறான்.. அப்படி சுட்டால் 20 அடி தூரம் வரை யார் நின்றாலும் ஆளை காலி பண்ணி விடுமே.?

ஹீரோ வில்லனை தேசிய கீதம் தெரியுமா? எனகேட்க தெரியாது என சொன்னதும் அவனை போட்டுத்தள்ளூகிறான்... அதற்குப்பிறகு ஆளாளுக்கு தேசிய கீதத்தை மனப்பாடம் செய்வது நல்ல கற்பனை... 

கே பாக்யராஜ் புரட்சி விதை  விதைக்கும் பேராசிரியராக வருகிறார்.. ஆளுங்கட்சி ஆதரவாளரான அவர் இந்த மாதிரி கேரக்டரில் நடித்தது ஆச்சரியம் தான்.. யார் கண்டது,. இந்நேரம் அவருக்கு டோஸ் கூட விழுந்திருக்கலாம்... 

இசை ஜோஸ்வா ஸ்ரீதர்.. படம் பூரா இசை ஒரே இரைச்சல்.. அவ்வப்போது அமைதியும் வேணும்னு யாராவது சொன்னால் தேவலை.... 






http://www.kodambakkamtoday.com/wp-content/uploads/2010/06/Appavi_movie_still_kodambakkamtoday_com.jpg



இந்தப்படம் எல்லா சென்ட்டர்களிலும் 7 நாட்கள் ஓடலாம்..    

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 35

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - சுமார்

ஈரோடு அன்னபூரணி தியேட்டரில் படம் பார்த்தேன்..

தப்ஸி உங்கள் சாய்ஸ்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4O4v5C2UtveG4zh5XYaeojnmVY9Vb270LEPvGUZzHvciymuGLMqXA0trUfyrAay2Iss4XBoKePq4HlkCfm_-EMP4-2Yu_59U8yqjDGMfLg01gOKKH8e6kpCFX7JjQK8u7SzuEBxCVlnk/s1600/tapsi+%2528115%2529.jpg 

1. யார்  கூட  கூட்டணி?-னு  ஒரு  தீர்க்கமான  முடிவுக்கு  நான்  வந்துட்டேன்.

விளையாடாதீங்க  தலைவரே!  நீங்க  டூ  லேட்...  எலெக்‌ஷனே  முடிஞ்சிடுச்சு.

-----------------------------

2. தலைவரே!  உங்க  பள்ளிப்படிப்புல  சிங்கிள்  டிஜிட்  மார்க்தான்  எடுத்தீங்கன்னு  வெளில  சொல்லிடாதீங்க.

ஏன்?

அப்புறம்  கூட்டணி  கட்சில  சிங்கிள்  டிஜிட்லதான்  சீட்  குடுப்பாங்க...

--------------------------

3. ஒரு  கவர்மெண்ட்  ஆஃபீசரான  நீங்க  எப்ப  பாரு  லேடீஸ்  கூட  சுத்திட்டு  இருக்கீங்களாமே?

தப்புதான்...  அதுக்காக  அஃபீஸ்ல  அரசு  ஊழியர்ங்கற  நேம் போர்டை  சரச  ஊழியர்னு  மாத்திடறதா?

-----------------------------

4. என்ன  தலைவரே! 10,000  ஓட்டு  வித்தியாசத்துல  ஜெயிச்சுடுவீங்களா?

10,000  ஓட்டு  மொத்தமா  வர்றதே  சிரமம்தான்.

------------------------------

5. தேர்தல்  பிரச்சாரத்துல  மக்களை  பகிரங்கமா  மிரட்னாராமே தலைவர்?

ஆமா...  என்னை  ஜெயிக்க  வைக்கலைன்னா  மறுபடியும்  சினிமாவுக்கே  நடிக்க  வந்துடுவேன்னாரு.

---------------------------
http://searchandhra.com/english/wp-content/uploads/2010/05/Tapsi-Photo-Gallery-58.jpg
6. புள்ளி  விபரப்புலி-னு  பேரெடுக்க  ஆசைப்பட்டு  தலைவர்  தேர்தல்  கமிஷன்  கிட்டே  மாட்டிக்கிட்டாரா?  எப்படி?

இந்த  தொகுதில  மொத்தம்  75,000 கள்ள  ஒட்டுக்கள்  பதிவாகி  இருக்கு.  அதுல  68,000 என்  கட்சி  ஆளுங்க  போட்டது  7,000  கூட்டணி  கட்சி  ஆளுங்க  போட்டது-னு சொல்லி  மாட்டிக்கிட்டாரு.

-------------------------------

7. C.M.  ஆகியே  தீருவேன்னு  தலைவர்  234  தொகுதிக்கும்  நடந்தே  பிரச்சாரத்துக்கு  போறாரு.

அடடா...  நடக்காத  விஷயத்துக்கு  ஏன்  நடக்கறாரு?

----------------------------

8. பட்டி  மன்றத்தலைப்பால  கட்சிக்கு  பிரச்சனை  வந்துடுச்சாமே?

ஆமா...  மகளிர்  அணித்தலைவியின்  புகழுக்கு  காரணம் அவரது  சதைப்  பிடிப்பா?  உடல்  அழகின்  வடிவமைப்பா?-இதுதான்  டைட்டிலாம்.

---------------------------

9. தலைவர்  பழசை  என்னைக்கும்  மறக்கமாட்டார்-னு  எப்படி  சொல்றீங்க?

இன்னும்  அவரது  டைரிக்குள்ள  ஜெயமாலினி,  அனுராதா,  டிஸ்கோ சாந்தி  ஃபோட்டோஸ்  எல்லாம்  வெச்சிருக்காரே?

--------------------------------

10. தலைவர்  எதுக்காக  நடிகை  தப்ஸியை  பிரச்சாரம்  பண்ண  கூட்டிட்டு  வந்திருக்காரு?

இந்த  தேர்தல்ல  தப்ஸிதான்  கட்சியோட  கதாநாயகியாம்...

Saturday, April 02, 2011

கலைஞர் டி வி யின் முகத்திரையை கிழித்த ஜூ வி... கேப்டன் வேட்பாளரை அடித்த விவகாரம்- காமெடி கும்மி

டந்த 29-ம் தேதி தர்மபுரி மாவட்டத்தில், தே.மு.தி.க. மற்றும்
http://www.southdreamz.com/wp-content/uploads/2008/03/arasangam-new-stills-6.jpg
கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக விஜயகாந்த்தின் கிறுகிறு பிரசாரம்!  ( சரக்கு ஜாஸ்தியோ? )
மாலை 3 மணிக்கு தர்மபுரி ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகே, பேச்சைக் கேட்கக் கூட்டம் திரண்டிருக்க... வேனில் விஜயகாந்த்தோடு பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி​யின் அ.தி.மு.க வேட்பாளர் பழனியப்பன், பென்னாகரம் தொகுதியின் இ.கம்யூனிஸ்ட் வேட்பாளர் நஞ்சப்பன், தர்மபுரி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கர் ஆகியோர் இருந்தனர்! ( அதுல அடி வாங்கப்போறது யாரோ? என்ற சஸ்பென்ஸோடா? )


பேசத் தொடங்கிய விஜயகாந்த், ''ஊழலும், குடும்ப ஆதிக்கமும் நிறைந்த கருணாநிதியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கணும். அதுக்குத்தான் மக்களாகிய உங்கள் விருப்பப்படி அ.தி.மு.க-வுடன் கூட்டணி வெச்சுக்கிட்டேன். நமது கூட்டணி வேட்பாளர்களுக்கு நீங்கள் ஒவ்வொருவரும் போடும் ஓட்டு, தி.மு.க. ஆட்சிக்கு வைக்கப்போகும் வேட்டு. ( நாங்க எங்கேய்யா விரும்புனோம்? நீங்களா சொல்லிக்கறீங்க.. )

ஊழலில் கொட்டமடிக்கும் தி.மு.க-வோடு சில சாதித் தலைவர்களும் கைகோத்திருக்காங்க. 'தமிழ் வாழ்க’ன்னு வெளியில சொல்லிக்கிட்டுத் திரிஞ்சாலும், தமிழும், தமிழ் இனமும் அழியக் காரணமா இருப்பதே இந்தக் கருணாநிதிதான். ( ஓஹோ.. அது தெரிஞ்சும் ஏன் நீங்க நடிகர் சங்கத்தலைவரா இருந்தப்ப்ப அவருக்கு பாராட்டு விழா நடத்துனீங்க?)

ஆனா, அவர்கூட போய் திருமாவளவன் இருப்பதை நினைச்சாத்தான் எனக்கு வேடிக்கையா இருக்குது. அதே மாதிரி 'மரம் வெட்டி’ன்னு ஒரு சாதித் தலைவர் இருக்கார். என் பெயரைத் தன் வாயால் உச்சரிக்க மாட்டேன்னு அவர் சொல்லிட்டதால், நானும் அவர் பெயரை சொல்ல விரும்பலை.(ஓஹோ.. தானிக்கு தீனி சரியாப்போச்சாக்கும்.. படுவாக்களா? பிச்சுப்புடுவேன் பிச்சு.. பேரை சொல்ல என்ன வெட்கம்?)

அந்த மரம் வெட்டித் தலைவரும், ஊழல்வாதியான கருணாநிதியுடன் ஆதாயத்துக்காகக் கூட்டுப் போட்டிருக்கார். 'சாதியே வேண்டாம்’கிற வர்க்கத்தைச் சேர்ந்தவன் நான். ஆனா, இங்கே பல தலைவர்கள் சாதியைக் கையில் எடுத்துத்தான் பிழைப்பை ஓட்டிக்கிட்டு இருக்காங்க. தன் சொந்த சாதி சனங்களுக்கு அவங்களால் என்ன நன்மைன்னு யோசிங்க... மக்களின் நலனைப்பத்திக் கவலைப்படாம, சுயலாபத்துக்காகத்தானே கருணாநிதி​யைத் தூக்கிப் பிடிக்கிறாங்க...'' என்று விளாசினார். ( இந்த டகால்டி எல்லாம் இங்கே வேணாம்.. கல்யாண மண்டபத்தை இடிச்ச கோபத்துல தானே நீங்க தி மு க  எதிர்ப்பு நிலையை எடுத்தீங்க? அது சுய நலம் தானே..?)


பேச்சை முடிக்கும் தறுவாயில், வேனுக்குள் அமர்ந்திருந்த தர்மபுரி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கர் எழுந்து நின்று, விஜயகாந்த் அருகில் நின்று கூட்டத்தைப் பார்த்து கும்பிட்டார், உடனே விஜயகாந்த், ''அதனால் மக்களே, இதையெல்லாம் மனசுல வெச்சு, உங்க வேட்பாளர் பாண்டியனுக்கு மறக்காம ஓட்டுப் போடுங்க!'' என்று கேட்டுக்கொண்டார். பெயரை மாற்றிச் சொன்னதும் வேட்பாளர் பாஸ்கர், விஜயகாந்த் காதைக் கடிக்கவே, ''மன்னிக்கனும்... ஏதோ ஞாபகத்துல பாண்டியன்னு சொல்லிட்டேன். பாஸ்கருக்கு ஓட்டுப் போடுங்க!'' என்று திருத்திக் கூறி, பிரசாரத்தை நிறைவு செய்தார். ( மப்புல உளறிட்டு சமாளிப்பு வேற. சொன்னா கோபம் வந்துடுது...வேட்பாளர் பேரே ஞாபகம் இல்லைன்னா வாக்குறுதி எப்படி ஞாபகம் இருக்கும்?)


விஜயகாந்த் பேசியபோது, நடுநடுவே கையில் இருந்த இரண்டு மைக்குகளும் கோளாறாகி சவுண்ட் கட் ஆனது. மைக்கையும், கூடியிருந்த மக்களையும் மாறி மாறிப் பார்த்தபடியே ''இது வேற ஒண்ணு...'' என்றவர், மைக்குகளை அசைத்துச் சரிசெய்ய முயல... அப்போது மைக்குகளின் பாகங்கள் கழன்று, வேனுக்குள் விழுந்தன. அதைப் பார்த்து மைக்செட் அமைப்பின் லட்சணத்தை மேலும் கிண்டல் செய்யும் தோரணையில் மக்களைப் பார்த்தவர்... தன் ஸ்டைலில் நாக்கை மடித்துக் கடித்தபடியே வண்டிக்குள் இருந்த மைக்செட் அமைப்பாளரிடம் மைக்குகளைக் கொடுத்துவிட்டு, அவர் தலையில் தட்டினார். ( ஓஹோ அதுகு பேரு தட்றதா? மப்புல சப்பு சப்புன்னு அடிச்சுப்போட்டு.. )


ஆனால், சில மணி நேரத்தில் நடந்ததுதான் ஹைலைட்... ஒரு டி.வி-யில், ''தர்மபுரி பரப்புரையின்போது பொது இடத்தில் விஜயகாந்த், வேட்பாளரை அடித்து உதைத்தார்... மக்கள் கடும் அதிர்ச்சி... இன்றிரவு 10 மணி செய்தியில் காணத் தவறாதீர்கள்'' என்று ஃப்ளாஷ் நியூஸ்  ஓடியது. பின்னர் இரவு 10 மணிச் செய்தியில் ஒரு வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது.(பின்னே சும்மாவா? வெறும் கைலயே நாங்க முழம் போடறவங்க..அவல் கிடச்சா விட்ருவமா?)


உயரமான இடத்தில் இருந்து படமாக்கப்பட்ட அந்த வீடியோவில் விஜயகாந்த் கை, வேனுக்கு  உள்ளே இருந்த ஒருவரின் தலையில் படுவதை மட்டும் சவுண்ட் எஃபெக்ட் சேர்த்து, மீண்டும் மீண்டும் ஒளிபரப்பினார்கள். அதைத் தொடர்ந்து அந்தக் காட்சி, 'மக்கள் தொலைக்காட்சி’, 'கலைஞர் செய்தி’, 'சன் செய்தி’ சேனல்களிலும் ஒளிபரப்பாகவே... தமிழகம் முழுக்கப் பரபரப்பு! ( எடிட்டிங்க் வேலைல சன் டி வி , கலைஞர் டி வி களுக்கு மாஸ்டர் பட்டமே தரலாம்..)


நடந்த சம்பவம் பற்றி தர்மபுரி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கரிடம் நாம் கேட்டோம். ''மைக் தொல்லை செய்தபோது, சரிசெய்யும்படி மைக் அமைப்பாளரிடம் கேப்டன் கொடுத்தார். அப்போது கீழே இருந்த அவரது தலையில் இயல்பாக கேப்டன் கைபட்டது. அப்போது நானும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் அ.தி.மு.க வேட்பாள​ரான பழனியப்​பனும் வேனுக்குள்​தான் உட்கார்ந்து இருந்தோம். ஆனா, 'என்னைத்தான் கேப்டன் அடிச்​சார்’னு தப்பான ஒரு செய்தியை ஆளும் கட்சி தரப்பு சேனல்களும் திட்டமிட்டுப் பரப்புறாங்க. இதுக்கு சட்டரீதியாகப் பாடம் புகட்டுவோம்!'' என்றார் கொதிப்பாக. ( தக்காளி.. அடி வாங்கிட்டு சமாளிக்குது பாரு.. )


விஜயகாந்த் கை ஓங்கியதை ஒரு குறிப்பிட்ட டி.வி. இவ்வளவு பெரிதாக்க என்ன காரணம் என்று தே.மு.தி.க. புள்ளிகளிடம் விசாரித்தபோது, ''விஜயகாந்த், தன் பேச்சுக்கிடையில் ராமதாஸை மரம் வெட்டித் தலைவர் என்றுதான் குறிப்பிடுகிறார். மேலும் சாதி அரசியலை ஒரு பிடி பிடித்தார். அந்தக் கோபத்தின் உச்சகட்ட வெளிப்பாடுதான் இவ்வளவு பரபரப்புக்கும் காரணம். (இவரு மட்டன் சிக்கனைத்தான் ஒரு பிடி பிடிப்பாரு... ?)

இதுவரைக்கும் ராமதாஸைத் திட்டி எந்தத் தலைவரும் இவ்வளவு காரசாரமாகப் பேசியது இல்லை. முதல் தடவையாக அவரைப்பற்றி கடுமையாக கேப்டன் பேசுகிறார் என்றதும், அதைத் திசைதிருப்ப இப்படிச் செயல்படுகிறார்கள். எங்கள் கேப்டன் கேட்ட கேள்விகளுக்கு ராமதாஸை முதலில் பதில் தரச் சொல்லுங்கள்!'' என்றார்கள்.( தலைவரா? எங்கே எங்கே? )


தமிழக அரசியலில் டாக்டர் ராமதாஸ் பற்றி விஜயகாந்த் வைக்கும் விமர்சனங்களை இதுவரை எந்த அரசியல் தலைவரும் செய்தது இல்லை என்பதுதான் உண்மை! ( சொந்தப்பிரச்சனைக்கு ரெண்டு பேரும் அடிச்சுக்கறாங்க.. கஜேந்திரா பட பெட்டி தூக்கிட்டு போன விவகாரத்துல 2 பேருக்கும் பிரச்சனை.. என்னமோ மக்கள் பிரச்சனைல மக்களுக்காக போராடுனது மாதிரி ஒரு பில்டப் எதுக்கு?