Friday, May 03, 2013

ராமதாஸ் கைது: ஃபிளாஷ் பேக் (17 ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகள் )


திருச்சி சிறையில் காந்திய சிந்தனை வாசித்துக் கொண்டிருந்த டாக்டர் ராமதாஸ் மீது மேலும் இரண்டு வழக்குகளை தேடிப் பிடித்து பாய்ச்சி இருக்கிறது போலீஸ். இதில் ஒரு வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக இன்று ராமதாஸை திருக்கழுங்குன்றம் அழைத்துச் செல்வதாக இருந்தது போலீஸ். விஷயத்தை கேள்விப்பட்ட பா.ம.க. வினர் கொதித்து எழுந்து விட்டார்கள். திருச்சி சிறைக்குள் ராமதாஸுடன் இருக்கும் வன்னியச் சொந்தங்கள், இன்று காலையிலிருந்து சிறை வளாகத்தில் உள்ள மரங்களில் ஏறி நின்று அறப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஐயா மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெறக் கோரி அவர்களில் சிலர் உண்ணாவிரதமும் இருக்கிறார்களாம். 



சிறைக்கு வெளியே ராமதாஸ் கைதை கண்டித்து மாம்பழ கட்சியினர் ஆங்காங்கே பொதுச் சொத்துக்களை சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள். பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினால்  பத்தாண்டுகள் சிறை தண்டனை என பயமுறுத்தி இறுக்கிறார் கடலூர் கலெக்டர். இதற்கெல்லாம் யார் பயந்தது? இதனால் வடமாவட்டங்கள் அமைதியை தொலைத்துவிட்டு நிற்கின்றன. வன்னியர்கள் மத்தியில் மீண்டும் சாதிய உணர்வை தட்டி எழுப்பு வதற்காக பா.ம.க வினர் நடத்தும் இந்த வன்முறை போராட்டங்களை பொதுவான மற்ற சமூகத்தினர் ஆத்திரத்துடனும் ஆதங்கத்துடனும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 



விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு போட்டிருக்கிறது போலீஸ். காலையில் கைது செய்து மாலையில் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என்று தான் ராமதாஸ் உள்ளிட்டவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், எதையும் அதிரடியாய் செய்து பழகிப் போன ஜெயலலிதா, ராமதாஸை சிறைக்கு அனுப்ப சிக்னல் கொடுத்து விட்டார். இந்த நிலையில், இன்று காலையில் அன்பு மணி ராமதாஸையும் கொத்தாக அள்ளிக் கொண்டு போய்விட்டது போலீஸ். இதை ராமதாஸும் மற்றவர்களும் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதனால் தான் இந்தச் செய்தியைக் கேட்டதுமே ரத்த அழுத்தம் அதிகமாகிப் போய் மயங்கி சரிந்திருக்கிறார் ராமதாஸ். இதை யெல்லாம் பார்க்கும் போது 17 வருடங்களுக்கு முந்தைய சரித்திரம் மீண்டும் திரும்புவது போலத்தான் தெரிகிறது.



இதற்கு முன்பு 1995 ல் பொடா சட்டத்தை வாபஸ் பெறக் கோரி போராட்டம் நடத்தியதற்காக கைதானார் ராமதாஸ். அப்போதும் ஜெயலலிதா தான் முதலமைச்சர். அந்த நேரத்தில் ராமதாஸின் உடல்நிலை ரொம்பவே பாதிக்கப்பட்டது. கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் சிறைக்கே சென்று ராமதாஸின் உடல் நலம் விசாரித்தார்கள். கணவரின் உடல்நிலையை பார்த்து கண்ணீர் விட்ட ராமதாஸின் மனைவி சரஸ்வதி ராமதாஸ், 'என் வயிற்றெரிச்சல் முதலமைச்சரை சும்மா விடாது" என்று சாபமெல்லாம் விட்டார். 



இந்நிலையில், 17 வருடங்கள் கழித்து மீண்டும் ஜெயலலிதா புண்ணியத்தில் சிறைக்கு போயிருக்கிறார் ராமதாஸ். கடந்த முறையை போல உள்ளேயே வைத்து விளையாட்டுக் காட்டிவிடுவார்கள் என்ற பயமோ என்னவோ, ஐயாவுக்கு ஜாமீன் கேட்டு பா.ம.க. காரர்கள் விழுப்புரம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். ஒரு வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தாலும் இன்னொரு வழக்கில் அவரை உள்ளே வைக்க தீர்மானித்துவிட்ட தமிழக அரசு, பவர் ஸ்டாருக்கு நிகராக வழக்குகளை தேடிப் பிடித்துப் புகுத்திக் கொண்டிருக்கிறது. இதைக் கண்டித்து, சரஸ்வதி ராமதாஸிடம் இருந்து சாப அறிக்கை எதூம் வெளியானதாக இதுவரை தகவல் இல்லை. 'தம்பி விஜயகாந்த் கட்சியை அழிக்கப் பார்க்கிறார் ஜெயலலிதா" என்று வலியப் போய் குரல் கொடுத்த கருணாநிதியும் இந்த விஷயத்தில் இதுவரை வாய் திறக்காமல் மௌன விரதம் இருக்கிறார்



இந்த வேளையில், 17 ஆண்டுகளுக்கு முந்தைய ராமதாஸ் கைது நிகழ்வுகள் குறித்து ஜூனியர் விகடன் மற்றும் ஆனந்த விகடனில் வந்த செய்திகளின் சுவையான ஃபிளாஷ் பேக்கை இங்கே தருகிறோம்..

26.3.95


29.3.95


20.12.98

a

thanx - vikatan

latest flash news


 மதுரை : தமிழகம் முழுவதுமுள்ள  காவல் நிலையங்களில் பெண்டிங்கில் இருக்கும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மீதான பழைய  வழக்குகளை தோண்டி எடுக்க சொல்லி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் காவல்துறையினர் சுறுசுறுப்பாகியுள்ளனர்.

 இந்த அடிப்படையில், சில வருடங்களுக்கு முன்பு,  பாபா படத்தை ரஜினிகாந்த் வெளியிட இருந்தபோது, அவருக்கும் பா.ம.க.வினருக்கும் பிரச்சனை ஏற்ப்பட்டு, படத்தை ரீலிஸ் செய்வதில் தடங்கல் ஏற்ப்பட்டது. ஆங்காங்கு திரையரங்குகளை பா.ம.க.வினர் மிரட்ட ஆரம்பித்தனர். 

அந்த நேரத்தில் ஒரு விழாவில் கலந்து கொள்ள டாக்டர் ராமதாஸ் மதுரை வந்திருந்தபோது, ரஜினி ரசிகர்கள் அவருக்கு கறுப்புக்கொடி காட்ட சென்றனர். பதிலுக்கு ராமதாஸுடன் வந்திருந்த பாமகவினர் ரஜினி ரசிகர்களையும் பத்திரிக்கையாளர்களையும் கடுமையாக தாக்கினார்கள். இது சம்பந்தமாக அப்போது வழக்கு போடப்பட்டது. 





காலமாற்றம், அரசியல் மாற்றத்திற்கு பிறகு அந்த வழக்கு கண்டுகொள்ளப்படவில்லை. தற்போது தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைக்கு ஆளாகி திருச்சி சிறையில் அடைபட்டிருக்கும் ராமதாஸ், ஜாமீனில் வெளியில் வந்து விடாதபடி, தொடர்ச்சியான வழக்குகளை அவர் மீது போடுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. 

 அந்த வகையில் மதுரையில் போடப்பட்ட பாபா படம் சம்பந்தப்பட்ட பழைய வழக்கில், டாக்டர் ராமதாஸை கைது செய்ய, காவல்துறையினர் ரெடியாகி வருவதாக காக்கி வட்டாரம் கூறுகிறது.

அன்புமணி ராமதாஸ் திடீர் கைது: ஜெயலலிதா மீது சாடல் (படங்கள்)


சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ம.க. இளைஞர் அணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இன்று காலை திடீரென கைது செய்யப்பட்டார்.
கடந்த 2012ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி, குரு ஆகியோர் ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இன்று காலை 6 மணிக்கு உதவி ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் அன்புமணி வீட்டுக்குச் சென்று கைது செய்தனர். மேலும், கட்சி நிர்வாகிகள் ஜெயசீலன், பிரகாஷ், இளங்கோவன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர், திருக்கழுக்குன்றம் முன்சீப் நீதிமன்ற நீதிபதி சிவா முன்னிலையில் இன்று காலை 9.50 மணிக்கு அன்புமணி உள்பட 4 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து, அவர்களை வரும் 16ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி சிவா உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அன்புமணி உள்பட 4 பேரும் சென்னை புழல் மத்திய சிறையில்அடைக்கப்பட்டனர்.

அன்புமணி மீது தடை மீறி கூடுதல் (143), வன்முறை தூண்டும் வகையில் பேசுதல் (188)1ஏ மற்றும் 147 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கைதுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, தன் மீதான கைது நடவடிக்கை ஜெயலலிதா அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றார்.

தமிழ்நாட்டில் நடந்த கலவரத்துக்கு பா.ம.க. தொண்டர்கள் காரணம் இல்லை என்று கூறிய அன்புமணி, தொண்டர்கள் அறவழியில் போராட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்றும் அன்புமணி கூறினார்.

படங்கள்: ஜெயவேல்

thanx - vikatan

ஒருவர் மீது இருவர் சாய்ந்து -சினிமா விமர்சனம் (தினமலர்)


தினமலர் விமர்சனம்


திருமணத்திற்கு பின்னும், இணை பிரியாமல் இருக்க ஒரே கணவனைத் தேர்ந்தெடுக்கும் தோழிகளும், இடையில் மாட்டிக்கொண்டு முழிக்கும் காதலனும்...! கிட்டப்பா காலத்து காமெடி முடிச்சை, பழைய பாத்திரங்களில், புதிய முகங்களை கொண்டு ஈயம் பூச முயன்று, சொட்டையை ஓட்டையாக்கியிருக்கும் பாலசேகரன் படம்.



பழை நெடியை இன்னமும் அதிகமாக்க பாக்யராஜூம், விசுவும்! ஹாரிஸ் ஜெயராஜின் பழைய மெட்டுகள் போன்று இசை அமைத்திருக்கும் ஹரிஹரன்! லோ பட்ஜெட் என்பதால் எல்லாவற்றையும் "லோ ஆங்கிளில் எடுத்திருக்கும் விஜய் மகபால்! சரியும் கோபுரத்தைத் தள்ளிவிட இத்தனை பேரா? 



கணேஷ் (லகுபரன்) எப்பொழுதும் நண்பர்களுடனும், காசுடனும் அலையும் இளைஞன். தொலைக்காட்சியில் வானிலை அறிக்கை வாசிக்கும் சவிதாவிடம் (சுவாதி), கணேஷ் காதல் மழை பொழிய, அவன் காதலை ஏற்றுக் கொள்ள சவிதா போடும் ஒரே முக்கிய நிபந்தனை... தன்னோடு, தன் உயிர்த்தோழி கவிதாவையும் (சானியா தாரா) கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பது தான்!




 இலவச இணைப்பாக வரும், முகமறியாத கவிதாவை ஏற்றுக் கொள்ள மறுத்து, சவிதாவையும் துறந்து, ஐதராபாத் போகும் கணேஷை சந்திக்கிறாள் ஒரு பெண். அவளேடு கணேஷூக்கு காதல் என லாஜிக்கில்லாமல் பம்முகிறது படம். கடைசியில் தன் இரண்டாவது காதலிதான் கவிதா என்பதும், சவிதா-கவிதா நாடகமே இது என்று அறியும் கணேஷ் என்ன செய்தான்? என்பது கொழ கொழ க்ளைமாக்ஸ்.



போக்குவரத்து போலீஸ் போல், முகத்தில் மாஸ்க் போட்டுக் கொள்ளும் அளவுக்கு தூசி பறக்கிறது படத்தில்! "லவ் டுடே" ‌பாலசேகரன் இன்னமும் டுடேக்கு வரவில்லை என்பது தெளிவாகிறது. எந்த விஞ்ஞானியாவது கால இயந்திரத்தில் அவரை ஒரு இருபது வருடங்கள் முன்னே அழைத்து வந்தால் தமிழ் திரையுலகம் நன்றி கூறும்!



மொத்தத்தில், "ஒருவர் மீது இருவர் சாய்ந்து" - "சலிப்பு"



காதலை வெளிப்படுத்துவதில் கலக்குவது எப்படி?


Print 
all
In new 
window

ரீடர்ஸ் பேட்டை - காதலை வெளிப்படுத்துவது எப்படி?

செந்தில் சி.பி
01:01 (1 hour ago)
to kmj
நம்ம ஆளுங்களுக்கு எல்லா மேட்டரும் தெரியும், எல்லாத்துலயும் கில்லாடிங்க, ஆனா காதலை எப்படி சொல்றது? அப்டிங்கற மேட்டர்ல மட்டும் பூஜ்யம் . அவங்களுக்கு  சில அடியாக்கள் .  ஃபேஸ் புக் , ட்விட்டர் நண்பர்களிடம் உங்க ல்வ்வை எப்படி ஜவ் ஆக்காம் ஓபன் பண்ணுவீங்க என கேட்ட பொது



 1. எனக்குப் பிடிச்சிருக்கு உங்களுக்கு பிடிச்சிருக்கா?



2. எப்பவும் உன் கூடவே இருக்கனும்



3. ஐ லவ் யு ங்க , யு லவ் மீ யா நாட் ஆ




4. உனக்கு மாதிரியே உன் பொண்ணுக்கு கோபக்கார அப்பா வேணும்னு எதிர்பாக்கறையா?? இல்லாட்டி என்ன சூஸ் பண்ணு




5. உன் கூட‌வே எல்லா நாளும் இருக்க‌ ஆசைப்ப‌டுறேன்!


6. நீ எப்பவும் என் கூடவே இருந்தா என் லைஃப், உன் லைஃப், நம்ம லைஃப் நல்லா இருக்கும்னு தோனுது. Will u marry me?




7. உங்கம்மா எனக்கு மாமியாரா வந்தா நான் சாமியாராப் போக மாட்டேன்



8. எங்க பரம்பரையில அழகானவங்கன்னு யாருமே இல்லை. உன்னாலயாச்சும் அது மாறட்டும்




9. உங்க கிட்ட புருஷன் வேலை காலி இருக்குன்னு சொன்னங்க. இந்தாங்க அப்ளிகேஷன் இவண் உனது ஆஃபர் லெட்டர் எதிர்நோக்கி நான்




10. கடைசி எதுவரை என்று தெரியவில்லை ! எனக்கு உன்னை பிரியும்வரை !



11. டக்குனு ஒரு கிஸ்ச போட்டு ஓடிரனும்., ரெண்டாங் கிளாச படிக்கிறச்சே அதான் பண்ணேன்


12. உலகிலே அழகான பொண்ணுகிட்ட 1 நிமிஷமாச்சும் பேசிடுவேன்னு பந்தயம் கட்டியிருக்கேன் ,ஏதாவது பேசு இன்னும் 45 செகண்ட் இருக்கு !



13. கல்யாணம் பண்ணினா உங்களை மாதிரி ஒருத்தரைத் தான் பண்ணிக்கனும்.


14. கவிதையாய் வாழ விரும்புகிறாய். கவிதையுடன் வாழ விரும்புகிறேன்



15. நம் பேரக் குழந்தைகளுக்கு சொல்வதற்கு அழகான கதைகள் வேண்டாமா ?? வா காதலிக்கலாம் !

16. என் கல்யாண ஆல்பத்தில் நீ ஒரு போட்டோவில் இருப்பது என் ஆசையல்ல,ஆல்பத்தின் எல்லா போட்டோவிலும் அருகே இருப்பாயா ?



17. வாங்களேன் பீர் சாப்ட்டுனே பேசலாம்.


18. எங்கப்பா ஜவுளிக்கடை வச்சிருக்காரு



19. முடிந்தவரை "தோழியாய் நன்கு அறிந்து பழகிய பெண்ணிடம் காதலை எப்படி சொல்வீர்கள்??" என்று சொல்லுங்கள்



20. என் அக்கா பொண்ணு உன்ன அத்தைனு கூப்பிடுறா?



21. எனக்கு உங்கள பிடிச்சிருக்கு ஐ லவ் யூ ஒத்துகிட்டா சரி, இல்லனா இப்டி சொன்னா 1000ரூ பந்தயம்னு எஸ்கேப்.



22. என்னுடைய கரை காணா சொத்திற்கு பாதுகாப்பா நீ தான் வரணும் என்பது என் ஆசை


23. உங்க அம்மாவுக்கு நான் மருமகனா வரணும்? பொண்ணு நீயோ உன் தங்கட்சியோ அது தெரியாது DOT



24. உன் பெயரின் பின் என் பெயரை சேர்ப்பாயா



25. அன்பே!! நீ என்ன மானிட்டரா..பாத்ததும் பருகனும் போல் தோன்றுகிறது


26. உன் கையால அடிவாங்கனும்... வாழ்க்கை பூரா உன்கிட்ட அடிவாங்கனும்... அடிப்பியா



27. நேத்து என் கனவுல உனக்கு கல்யாணம்." "யார் கூட??" "யாஆஆர் கூட??"



28. என் வருமானத்திற்கேற்ற தரமான ஃபிகர் நீ!! வில் யூ மேர்ரி மீ?!!



29. நீ அடுத்தமுறை என் வீட்டு விஷேஷத்துக்கு வரும்போது அது நம்ம வீட்டு விஷேஷமா இருக்கனும்!. இருக்குமா?



30. எனக்கு சமையல் நல்லாத் தெரியும்!சீரியல்னா ரொம்பப் பிடிக்கும்


31. நான் யாரயாவது love பண்ணா என்ன பண்ணுவ??


32. இதுவரை எனக்கு இப்படி உன் மேல் Cruz இல்லை என்னை விட்டு விலகி செல்கின்றன உன் நினைவுகள் பிரிய மணம் இல்லை எனக்கு




33  என்ன லவ் பண்ணலன நான் காங்கிரஸ்க்கு ஓட்டு போட்டுடுவேன் பாத்துக்கோ?


34 நீயே என் சுந்தரி.. உனக்கு விருப்பமில்லையெனில் இடத்தை விட்டு எந்திரி ...!!!



35. உங்க வீட்டுக்காரர் வெளியூர் உங்களுக்கு போனா போரடிக்காது?


36. உன் வீட்டு வாரிச நான் சுமக்கனும்னு ஆசைப்படுறேன் என்னை கட்டிப்பியா?


37. உலகின் மிக அழகான பெண் என்னை அப்பாவென்று அழைக்க வேண்டும். மணந்துகொள் என்னை!



38. போன ஜென்மத்தில் உன் மனைவியாய் இருந்து நிறைய கொடுமை படுத்தி இருக்கேனாம்,இந்த ஜென்மத்தில் அந்த பாவத்தை போக்குவாயா?



39. நாம ரெண்டுபேரும் கல்யாணம் செய்து நம்ம குழந்தையோட விஜய் படம் பார்க்கிற மாதிரி கனவு கண்டேன், பலிக்குமா?



40. நீ ரொம்ப அழகா இருக்க. த்தூ முதல்ல வாய கழுவனும்



41. என் ஹார்மோன்ஸ் எல்லாம் ஏதோ கலாட்ட செய்யுது


42  உன் teddy bearக்கு திரும்ப முத்தம்தர தெரிலனு கஷ்ட்டபட்டியாமே?நான் வேணா...



43. என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் எப்போ கல்யாண சாப்பாடு போடப்போறனு கேக்குறாங்க சொல்லிடட்டுமா?


44. உங்கள எப்படீங்க கரக்ட் பண்ணுறது !!!


45. உன்ன லவ் பண்றேன்.நீ என்ன லவ் பண்ணல உன்ன லவ்வர் சங்க அறுத்துருவேன்.என்ன லவ் பண்ணுனநாளும் என் சங்கயே அறுதுக்குவேன்



46. பல் டாக்டர் நான்,எல்லோரும் என்னிடம் வாய் பிளப்பார்கள்; என்னையே வாய் பிளக்க வச்சுட்டியே!கல்யாணம் பண்ணிக்கலாமா ?



47. ஒரு முறையேனும் திரும்பி பார் உனக்காக காத்திருக்கும் என்னை அல்ல என்னோடு பழகிய இனிமையான நினைவுகளை



48. காலங்காத்தால உம்மூஞ்சில தான் முழிக்கனும்னு என் தலையில எழுதிருக்கு போல . ஓகே தான. .??


49. எங்க வீட்டு பாத்திரங்களை சுத்தம் செய்ய ஆள் தேடிட்டு இருக்கோம்



50. எனக்கு சமைக்க தெரியும். பெத்தவிங்க - கூடப்பிறந்தவிங்க கனெக்சன கட் பண்ணிர்றேன். உங்கம்மா நம்ம வீட்லயே இருக்கலாம்


--
C.P.Senthilkumar,
Chennimalai, Erode Dt.
9842713441
04242213095


www.adrasaka.blogspot.com
Reply
Forward
Click here to Reply or Forward
6% full
Using 0.6 GB of your 10.1 GB
©2013 Google - Terms & Privacy
Last account activity: 5 minutes ago
Details

Thursday, May 02, 2013

எதிர் நீச்சல் - சினிமா விமர்சனம்

 

அம்மா அப்பா வெச்ச பேரு மாடர்னா இல்லைன்னு நேமாலஜி  நிபுணர்கள்ட்ட சொல்லி பேரை மாத்தி வெச்சுக்கறதுல எந்த பிரயோஜனும் இல்லை , நாம ஏதாவது சாதிக்கனும், அதில் தான் நம்ம வெற்றி இருக்கு. பேரில் ஏதும் இல்லை .இது ஒரு மெசேஜ் . 

சிறு துரும்பும் பல் குத்த உதவும் . பத்திரிக்கையில் வந்த சிறு செய்தியும் திரைக்கதைக்கு உதவும் , அது போல் சமீபத்தில் ஸ்போர்ட்ஸ்ல ஜெயிச்ச ஒரு பொண்ணு அவர் பொண்ணே இல்லை , ஆண் என்ற சர்ச்சையில் சிக்கினாரே , அதில் இப்படியும் ஒரு கோணம் இருக்கலாம்னு  ஒரு கதை .

மேலே சொன்ன 2 மேட்டரையும் அழகா கோர்த்து ரசிக்க வைக்கும் வகையில் திரைக்கதை அமைத்த இயக்குநருக்கு ஒரு சபாஷ் . 


ஹீரோ சிவ கார்த்திகேயனுக்கு இது முக்கியமான படம். ஏன்னா அவர்   தனி ஹீரோவா நடிச்சு ஹிட் ஆகும் முழு முதல் படம் இதுதான். டி வி ல காமெடி ப்ரோகிராம் நடத்திட்டு இருந்தவர் வெற்றிகரமான ஹீரோவா பரிமளிக்க முடியும் என்பதை  முதன் முதலில் நிரூபித்தவர் என்ற அளவிலும் சிறப்புக்கவனம் பெறுகிறார் . ( சந்தானம் காமெடி  யில் )



தனது பெயர் குஞ்சித பாதம் என்பதால் எல்லாரும் சுருக்கமாகக்கூப்பிடும்போது அவர் படும் அவமானங்கள் சிரிப்பாவும் , சீரியசாகவும் மாறி மாறி காட்டும்போது கலக்கறார். காதல்; , காமெடி கலாட்டா காட்சிகளில் நல்ல முன்னேற்றம். இதே நிலையை மெயிண்ட்டெயின் பண்ணினா முன்னுக்கு வரலாம் . ( சுள்ளான் தனுஷ் மாதிரி ஏய் டேய்  சுளுக்கு எடுப்பேன் போன்ற பஞ்ச் டயலாக்ஸ் சொல்லாமல் இருக்கனும் ) , முன்னிரு படங்களை விட இதில் இவர் பாடி லேங்குவேஜ் ம் ஸ்க்ரீன் பிரசன்ஸ் எல்லாவற்றிலும் நல்ல முன்னேற்றம் .


ஹீரோயின் நெம்பர் 1 ப்ரியா ஆனந்த் . ஹீரோவை விட இவர் வயசு அதிகம் என்ப்து  முகத்தை பார்த்தால் மட்டுமே தெரியுது . படம் முழுக்க கண்ணியமாக  வருபவர் பாடல் காட்சிகளில் மட்டும் புற முதுகு காட்டும் பூமிகாவாக வருவது சிறப்பு . லோ கட் , லோ ஹிப் என கிடைச்ச பால் ல எல்லாம் சிக்சர் அடிக்கிறார் , ஐ லைக் இட் .  இவருக்கு மேக்கப்பில் ஒரே ஒரு அட்வைஸ் , கண் இமைக்கு கறுப்பு கலர் ஷேடோ மட்டும் வேணாம் . பயமா இருக்கு . கேமராமேன் இன்னும் கவனம் செலுத்தி கேமரா ஆங்கிள் வெச்சிருந்தால் இவரது திறமை அமோகமாய் வெளிப்பட்ட்டிருக்கும்.. அடடா வட போச்சே




ஹீரோயின் நெம்பர் 2 நந்திதா .காய்ச்சல் வந்த காஞ்சனா மாதிரி இளைச்சிருக்கார் பாவம் . அத்லெட்டிக் வீராங்கனை கேரக்டர்க்கு ஆள் சும்மா வில்லு மாதிரி இருக்க வேணாமா? ஒரு லட்சுமிராய்  அல்லது  பார்வதி ஓமனக்குட்டன் மாதிரி உயரமான திமிலோக குதிரை  ( இப்படி ஒரு வார்த்தை தமிழ்ல் இருக்கா? )  யை புக் பண்ணி இருந்தால் இன்னும் சூப்பரா இருந்திருக்கும் . இவர் ரன்னிங்க் வரும் காட்சிகள் , ஸ்லோ மோஷனில் ஓடி வரும் காட்சிகளில் கேமரா மேன் கொஞ்சம் கூட  ஜெனரல் நாலெட்ஜோ செண்ட்ரல் நாலெட்ஜோ இல்லாமல் ஏனோதானோ என கேமரா ஆங்கிள் வைத்திருப்பது மன்னிக்க முடியாத  வரலாற்றுப்பிழை , ஹி ஹி 


நந்திதாவின் அப்பாவாக வருபவர் நடிப்பு கன கச்சிதம் , ஆனா அவர் மேனரிசம் , டயலாக் டெலிவரி ஸ்டைல் எல்லாம் கரகாட்டக்க்காரன்  கனகா அப்பா மாதிரி இருக்கே? 



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. தனுஷ் - நயன் ஆடும் டப்பாங்குத்துப்பாட்டை படமாக்கிய விதம் , டான்ஸ் மாஸ்டரின் உழைப்பு . பாடல் வரிகளில் நயன் தாராவின் பர்சனல் மேட்ட்ரை டச் பண்ணிய நக்கல் 


2. முதல் பாதி முழுக்க  காமெடிக்காட்சிகளில் களை கட்டிய விதம் . டைம் போனதே  தெரியாமல் ஜாலி கலாட்டா காட்சிகள் 


3. ஹீரோயின் ஸ்கூல் மிஸ் என்பது, அவர் ஒரு எல் ஐ சி ஏஜெண்ட் என்ற சின்ன சின்ன விஷயங்களை வைத்து செம காமெடி சிச்சுவேஷன் டயலாக்ஸ் எழுதிய விதம் 


4. சிவா - ப்ரியா பாடும் முதல் டூயட் காட்சியில் ஒளிப்பதிவு பட்டாசு , இந்தப்பாட்டுக்கு இருவர் உடைகளும் மிக அழகு 


5. படத்தின் பின் பாதியில்  நந்திதா - சிவா லவ் உருவாகி விடுமோ என ஆடியன்ஸ் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை எகிற வைத்தது , கிட்டத்தட்ட டாக்குமெண்ட்ரி டைப்பில் வந்திருக்க வேண்டிய அபாயகரமான எப்பிசோடை  சுவாராஸ்யமாக மாற்றிய விதம் 
6. கொஞ்சம் நேரமே வந்தாலும் மனோபாலாவின் கலக்கல் காமெடி  பின்னிட்டார் 
7. காடு வெட்டி குரு , ராம்தாஸ் மாதிரி ஒரு அரசியல் தலைவரால் ஊரே பதட்டம் , கலவரம் என போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் ஹீரோயின் எக்சாம் எழுதப்போகனும் அதுக்கு ஹீரோ பண்ணும் ஐடியா சபாஷ் ரகம்.
8 . அருகே வா பாடல் காட்சியில் ஒளிப்பதிவு கண்ணுக்குள் நிற்குது ( கொஞ்சம் உக்கார வை ) பிக்சரைசேஷனும் அழகு  

இயக்குநரிடம் சில கேள்விகள்



1. நந்திதாவின் அப்பா ஏன் மேலிடத்தில் புகாரே தர்லை ?  ஏழை சொல் அம்பலம் ஏறுதோ இல்லையோ அது 2 வது விஷயம் , முதல்ல பதிவு பண்ணனும் இல்லை? 


2.  போட்டில கலந்துக்காம இருக்க  அவ்வளவு பணம் தரத்தயாராக இருக்கும் வில்லன் சாதா ஏழைப்பெண்ணை எதுவும் செய்யாமல் விடுவது ஏன்? 


3. க்ளைமாக்ஸ் காட்சியில் மராத்தான் ஓடும் ஹீரோ முகம் வியர்வையில் நனைந்து அருவி மாதிரி ஊத்தி எடுக்க வேணாமா? க்ளீனா மேக்கப்போட இருக்கே? 


4. அதே போல் ஹீரோ க்ளைமாக்சில் ஓடி வரும்போது நந்திதா , ப்ரியா ஆனந்த் இருவர் முகங்களீலும் ரீ ஆக்‌ஷன் பத்தலை . இன்னும் எமோஷன் தேவை


5. திரைக்கதை சுவராஸ்யத்துக்காக  நந்திதா - சிவா இருவருக்கும் இடையே ஏதாவது காதல் நடக்குமோ என எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிய விதம் சப் . 


6. மேரேஜ் ஆகாத ஒரு லேடி கோச்  மேரேஜ் ஆகாத ஒரு பையன் வீட்டில் எந்த தயக்கமும் இன்றி தனிமையில் தங்குவது எல்லாம் சான்ஸ் கம்மி . அதே போல் அதுக்கு காதலி பெரிய  எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காமல் இருப்பதும் நம்பும்படி இல்லை 


7. பின் பாதி திரைக்கதையில் கதையின் போக்கே மாறி விடுவதால் ஹீரோ ஹீரோயின் காதல் பின்னுக்குத்த்ள்ளப்பட்டு அவங்க க்ளைமாக்ஸில் சேரும்போது ஒரு உற்சாகம் வர்லை . சிம்பு லவ்வினாலும் பிரபுதேவா லவ்வினாலும்  எனக்கொரு கவலை இல்லை என்ற நயன் தாராவின் அசால்ட்டுத்தனம் தான் தெரியுது


8. படத்தின் உயிர் நாடியாக படமாக்கப்பட்ட க்ளைமாக்ஸ் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில்  கேமரா மேன் இன்னும் நல்லா உழைச்சிருக்கலாம் . கடைசி 5 நிமிட ஓட்டம் டெம்போ ஏத்தும் விதத்தில் படமாக்கப்படலை 
9. பின் பாதியில்  வரும் அந்த அத்லெட்டிக் மேட்டர் அப்படியே 3 பேர் 3 காதல் படத்தின் பின் பாதியிலும் வருதே , ஸ்டோரி டிஸ்கஷனை ஒரே ஹோட்டல் ல பக்கத்து பக்கத்து ரூமில் வெச்சுட்டீங்க்ளா? 


10 , ஹீரோ ஒரு ப்ளே பாய் என்பது மாதிரியும், எந்த ஃபிகர் கிடைச்சாலும் ஓக்கே என்பது மாதிரியான ஓப்பனிங்க் காட்சிகள் இந்தக்கதைக்குத்தேவை இல்லை . அது ஹீரோ ஹீரோயின் காதலில் நம்பகத்தன்மையை குறைக்குது


 மனம் கவர்ந்த வசனங்கள்



1. மிஸ்.வண்டியைப்பார்த்து ஓட்டிட்டுப்போங்க. 
ம் உங்க பின்னால பிகரு.நீங்களும் பார்த்து ஓட்டிட்டுப்போங்க
2. தனுஷ் பஞ்ச் - நான் யார் பிரச்சனைலயும் தலையிட மாட்டேன்.ஆனா லவ் பெயிலியர் பசங்களுக்கு ஏதாவதுன்னா உடனே குரல் குடுப்பேன் 
3. லவ்ங்கறது சிக்ஸ்பேக் மாதிரி.டெய்லி கவனமா மெயின்ட்டெயின் பண்ணனும்.நட்பு தொப்பை மாதிரி.எப்பவும் கூடவே இருக்கும்
4. ஹார்டு ஒர்க்கை விட ஸ்மார்ட் ஒர்க் தான் எப்பவும் முக்கியம்
5. நீங்க சாப்பிடும் அதே சாப்பாட்டைத்தான் நாங்களும் சாப்பிடறோம்.ஏழைங்கன்னா கோபம் வராதுன்னு நினைக்காதீங்க 
6. வள்ளிக்கு நீ மராத்தான்ல நல்லா ஓடனும்னு கவலை.கீதாவுக்கு நீ வள்ளி கூடவே ஓடிடக்கூடாதுன்னு கவலை
7. 2 பீர் வாங்கிக்குடுத்துட்டு 2000 தடவை சொல்லிக்காட்றவன் தாண்டா நண்பன்
6. என்னடா இப்டி சொல்லிட்டே? நட்புன்னா என்னனு தெரியுமா ? ம் ஓசி ல பீர் வாங்கிக்குடிப்பது 
7. பாவாடை சாமின்னு பேர் வெச்சுக்கிட்டு நான் படற அவஸ்தை இருக்கே.பாவாடை இங்கே வா.பாவாடை கொஞ்சம் தூக்கு னு சொல்றாங்க 
8. உன் ல்வ் எனக்கு ஓக்கே.ஆனா பேருதான் இடிக்குது.குஞ்சிதபாதம்.என் பேருக்குப்பின்னால உன் பேரை சேர்த்தா கூச்சமா இருக்கு
9. அம்மா நம்ம கூட இருக்கும் வரை எந்த கஷ்டமும் தெரியாமதான் வளர்வோம் 
10. ஒரு நாள் டைம் குடுங்க பதில் சொல்றேன்னா.ஊரை விட்டே போய்ட்டா.வீட்டைக்காலி பண்ண டைம் கேட்டிருப்பாளோ ?
11. ஸ்பெச்ல் க்ளாஸ் மாதிரி பிகரை கரெக்ட் பண்றது.ரெகுலரா அட்டென்ட் பண்ணனும்.ஒரு நாள் மிஸ் ஆனாலும் வம்பு.வேற எவனாவது பிக்கப் பண்ணிடுவான்
12. அம்மா அப்பா நமக்கு வைக்கும் பேரு நம்மைக்கூப்பிட மட்டும் இல்லை.அது ஒரு தலைமுறையின் அடையாளம்






13. டேய்.அவ செம பிகர்டா.
 எந்தப்பொண்ணைப்பார்த்தாலும் இதாண்டா சொல்றே ? 
14. ஏதாவது பிரச்சனைன்னா போன் பண்ணுனு நெம்பர் தந்தேன் ஏன் பண்ணலை.
எந்தப்பிரச்சனையும் வர்லையே.
அட்லீஸ்ட் அதையாவது சொல்லி இருக்கலாம்.ஹி ஹி
15. டேய்.வர்றது என் ஆளோட தோழி டா .
அட.நாம எதிர்பார்த்த பெட்ரோமாக்ஸ் லைட் இதுதாண்டா 
16.  நைட் அன் டைம் ல எதுக்கு கூப்பிட்டீங்க ?
 சாரிங்க.கை தவறி CALL போகிடுச்சு
17. நாங்க எல்லாம் மிடில் கிளாஸ்.எந்த ஒரு சின்ன ஆப்புர்ச்சுனிட்டியையும் மிஸ் பண்ணிட மாட்டோம் 
18. அந்தப்பக்கமா ஏதாவது வேலையா வந்தா வீட்டுக்கு வாங்க னு அட்ரஸ் தந்தா.அவ வீட்டுக்கு போறதுக்காகவே அந்த பக்கமா போனேன்
19. காதல்ங்கறது கால் டாக்சி மாதிரி.நாம கூப்ட்டாத்தான் வரும்
20/ என்னது? உங்க பேரு கூகுளா ? 
ஆமா.எல்லாரும் ஈசியா கண்டு பிடிக்கற மாதிரி ஒரு பேர் கேட்டேன்.கூகுள்னு வெச்சுட்டாங்க.ஹி ஹி 
21. நாங்க எல்லாம் பிரச்சனையை பில் போட்டு வாங்கறவங்க 
22. ஸ்கூல் பசங்க அவளை கீதா மிஸ் கீதா மிஸ் னு கூப்பிடுவாங்க. 
என்னடா சொல்றே? பசங்க அவளை "கூப்பிடுவாங்களா?" 
23. இந்த உலகத்துல லக் ,அதிர்ஷ்டம் எல்லாமே பொய் - நமக்கு நட்க்கும் வரை
24. எந்த் ஒரு பெரிய விஷயம் நடக்கறதுக்கும் ஒரு சின்ன விஷயம் தான் தூண்டுகோளா இருக்கும்.இதை கோ இன்சிடென்ட்னும் சொல்லலாம்
25. கே 7 கற பேரு நல்லாலை கே 9 ன்னு மாத்திடுங்க.கேசவன் இனி கே நயன் அதாவது கேனயன் 
26. சார்.நல்லா இருக்கீங்ளா? உங்க ஒயிப் நல்லா இருக்காங்க்ளா?
 யா.இதுதான் என் ஒயிப்.





ஓ.நல்லாவே இல்லை.நல்லா இருக்காங்கன்னீங்ளே





 சி பி கமெண்ட் -  எதிர் நீச்சல் - ஜாலி என்டர்டெயினர் வித் லவ் - சிவகார்த்திகேயனுக்கு முதல் முழு வெற்றி -  ஏ பி சி என எல்லா செண்ட்டர்களிலும் ஹிட் அடிக்கும் , லேடீஸ் ஆடியன்சை கவரும்


எதிர்பார்க்கப்படும் விகடன் மார்க் -43


 குமுதம் ரேங்க் - நன்று

 ரேட்டிங் - 3.25  / 5





டிஸ்கி -

சூது கவ்வும் - சினிமா விமர்சனம்

 

http://www.adrasaka.com/2013/05/blog-post_9552.html

 

 

Wednesday, May 01, 2013

சூது கவ்வும் - சினிமா விமர்சனம்



நாட்டைக்காப்பாத்த வேண்டிய பெரிய பெரிய தலைவர்களுக்கே இப்பவெல்லாம் கொள்கை இருக்கறதில்லை. ஆனா கிட்நாப் பண்றதை மெயின் ஜாப்பா வெச்சிருக்கற ஆள்க்குக்கூட 5 கொள்கை இருக்கு .அப்பேர்ப்பட்ட கொள்கை வீரரான ஹீரோ  2 கோடிக்கு ஆசைப்பட்டு ஒரு அரசியல் கட்சித்தலைவர் பையனை கடத்தும் பிராஜக்ட்க்கு ஓக்கே சொல்றான். 

அந்தத்தலைவர் காமராஜர் மாதிரி நல்லவர் . அவருக்குப்பொறந்த பையன் அண்ணன் அழகிரி மாதிரி ஹி ஹி . நெம்பர் ஒன் ஃபிராடு .சொந்த அம்மா , அப்பாவையே ஏமாத்தும் ஆள் . அவனே டபுள் கேமும் ஆடறான். இவங்களைப்பிடிக்க  ஒரு என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் . இந்த ஒரு தீம் போதாதா? நாளைய இயக்குநர் நிகழ்ச்சில 8 நிமிஷத்துல கலக்கினவருக்கு ரெண்டே கால் மணி நேரம் கலக்க சான்ஸ் , அடிச்சார்யா ஜாக்பாட் ப்ரைஸ் , வெல்டன் சார். ( புதுக்கோட்டை தான் அண்ணன் சொந்த ஊரு ) 


விஜய் சேதுபதி இந்தக்கதைக்கு நாயகன் . அவ்ளவ் தான்  மத்தபடி திரைக்கதையும் சம்பவங்களும் தான் ஹீரோ . ஹீரோ அண்ட் கோ பண்ற லூட்டிகள் முன் பாதி வரை கலகலக்க வைக்குது . பின் பாதியில் போலீஸ் ஆஃபீசரின் ஆக்‌ஷன் மேளா.. லோ பட்ஜெட்டில் 2013 ஆம் ஆண்டின் முக்கிய வெற்றிப்படம் 


எம் எஸ் பாஸ்கர் தான் அந்த நேர்மையான அரசியல்வாதி , கம்பீரமான தோற்றம். நடிப்பு கனக்ச்சிதம். இவரை எந்த அளவுக்கு இயக்குநர் யூஸ் பண்ணி இருக்கார்னு பார்த்து இதுவரை அவரை மிஸ் யூஸ் செய்த இயக்குநர்கள் வெட்கப்படும் அளவு பிரமாதமாக கையாண்டிருக்கிறார்கள் .


கலைஞர் டி வி யின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் குறும்படங்களில் நடித்த 6 பேருக்கு இதில் வாய்ப்பு . அனைவரும் பிரமாதப்படுத்தி விட்டார்கள்.


குறிப்பாக இந்த போலீஸ் ஆஃபீசர் கேரகட்ர் படம் பூரா ஒரு வசனம் கூட பேசாமல் அனைவரையும் பேச வைத்த கேரக்டர் அவரது இறுக்கமான முக அமைப்பு , நடிப்பு கலக்கல்

 


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள் 


1.  ஓப்பனிங்க் ஷாட்டில் நேரத்திலேயே எழுந்து குளிச்சு ரெடி ஆகும் ஆள் பின் சாவதானமாக அமர்ந்து சரக்கடிப்பதும் அதைத்தொடர்ந்து வரும் காமெடி கலக்கல் வசனங்களூம்



2. டாஸ்மாக்கில் கலாட்டா சண்டை போடும் இடமும் அதை யூஸ் பண்ணி ஒரு பாட்டு சீனும் களை கட்டுது தியேட்டர் 


3. கிட்நாப் செய்யப்பட்ட பொண்ணு  ஃபோனில் அவர் அப்பாவுக்கு அழுதுட்டே தைரியம் சொல்லும் காட்சியும் , அவளுக்கே அவ அப்பா பணத்தில் டிப்ஸ் தரும் காட்சியும் 


4. ஹீரோ மாட்டிக்கொள்ளாமல் கிட்நாப் செய்வது எப்படி என க்ளாஸ் எடுக்கும் காட்சியும் , கலக்கலான வசனங்களூம் 


5. பேங்க் மேனேஜரை மிரட்டி ஹீரோ பேங்க்கில் அசால்ட்டாக போய் பணம் வாங்கும் காட்சி 


6. ஹீரோவின் ஃபிரண்டாக வருபவர்  எல்லா தகிடு தித்த வேலையும் செஞ்சுட்டு ஒரு டீ சொல்லுப்பா என சர்வ சாதாரணமாக சொல்லும் தெனாவெட்டுக்காட்சி 


7. போலீஸ் ஆஃபீசர் பிரம்மாவாக வருபவர் கேரக்டர், நடிப்பு கன கச்சிதம் 


8. படத்துக்கு பாடல்களே தேவை இல்லை என்றாலும் 2 பாட்டு கேட்கும் விதமாக இருக்கு 



9 , கனகச்சிதமான எடிட்டிங்க் , நேர்த்தியான நெறியாள்கை

இயக்குநரிடம் சில கேள்விகள் 




1.  எம் எஸ் பாஸ்கர் அந்த பேக்கில் இருக்கும் பணத்தை எப்படி செக் பண்ணாமல் எடுத்து வர்றார்? 2 கோடி ரூபாய்ப்பணம் வெயிட்டும் , 4 தினத்தந்தி நியூஸ் பேப்பர் எடையும் ஒண்ணா? டவுட் வராதா? 


2. ஹீரோ அண்ட் கோ போகும் காரில் , பண பேக்கில் ஜி பி எஸ் வசதி உள்ள அதாவது அவங்க எங்கே போனாலும் கண்டு பிடிக்கும் தொழில் நுட்பம் செட் பண்ணி இருக்கு போலீஸ் , அப்புறம் ஏன் பறக்கா வெட்டி மாதிரி பின்னாலயே ஃபாலோ பண்ணனும்?  கேப் விட்டே பொறுமையா போலாமே? டவுட் வராது 


3. தியேட்டரில் ஆரவாரமான கைத்தட்டல்களை அள்ளிய  அந்த ரோபோ ஹெலிகாப்டர் சீன் இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம் . அவ்ளவ் சிறிய பொம்மை அவ்ளவ் வெயிட்டை தாங்குமா?  இன்னும் பெரிய ஹெலியாக காட்டி இருக்கலாம் 


4. போலீஸ் ஆஃபீசர் அந்த ஆபத்தான கன்னை ஏன் பின்னால சொருகி மாட்டிக்கனும்?  என்னதான் காமெடிக்குன்னாலும் அப்டியா ஒரு போலீஸ் ஆஃபீசர் கேனத்தனமா நடந்துக்குவார்?


5. அந்த போலீஸ் ஆஃபீசர் நரசிம்மராவ் மாதிரி ஒரு உம்மனாமுஞ்சி ஓக்கே , அவர் பேசவே இல்லை  ஒரு சீன் கூட . ஆனா அவரை சுத்தி இருக்கும் ஆட்கள் எப்படி அவர் சொல்ல வருவதை அல்லது மனசில் நினைப்பதை புரிஞ்சிக்கறாங்க? இத்தனைக்கும் அவர் இப்போதான் ட்ரான்ஸ்ஃபர் ஆகி வந்திருக்கார்.




6. ஹீரோ கூட முன் பாதியில் ஒரு லேடி கேரக்டர் எதுக்கு சம்பந்தம் இல்லாம ? குடைக்குள் மழை  சஸ்பென்ஸ் கேரக்டர் மாதிரி . அதை ரியல் கேரகடராகவே காமிச்சிருக்கலாமெ?   இந்தத்திரைக்கதைக்கு என்ன வகையில் அது யூஸ்?


7.ஹீரோ சேதுபதிக்கு ஏன் ஓல்டு கெட்டப்? இன்னும் டீசண்ட்டாவே காட்டி இருக்கலாமே?


8. மினிஸ்டர் நேர்மையானவர்னு தெரிஞ்சும் , அவர் கிட்டே பைசா கிடையாதுன்னு அறிஞ்சும் அவர் பையன் என்ன பிளான்ல 2 கோடி கேட்கறார்?


9. சொந்தக்கட்சி நிதில இருந்து 2 கோடி தர்ற அளவு ராதாரவிக்கு என்ன நிர்ப்பந்தம்? எம் எஸ் பாஸ்கர்  மனைவி தனிக்கட்சி ஆரம்பிப்பாரா என சப்பைக்கட்டுக்கட்டும் வச்னம் தேவை இல்லாதது


10 என்ன தான்  பாஸ்கரின் மகன் ஏமாற்றுப்பேர்வழியாக இருந்தாலும் சொந்த அம்மா சாப்பிடும்போது “ என்னம்மா? நான் கிட்நாப் செய்யப்பட்டப்போ கவலை இல்லாம சாப்ட்டுட்டு இருக்கே? “ என கேட்கும் அளவு கொடூரமான கேரக்டரா?  உறுத்தலான காட்சி அமைப்பு


11. இடைவேளை வரை கல கலப்பாக போகும் திரைக்கதை பின் பாதியில் ஆக்‌ஷனுக்குத்தாவிய  பின் கொஞ்சம் வேகம் குறைவு தான். எடிட்டிங்கில் இன்னும் ட்ரிம் பண்ணி இருக்கலாம் . க்ளைமாக்ஸ் இழுவை ஆனாலும் ரசிக்க வைப்பது பிளஸ்


12. ஒவ்வொரு கடத்தலிலும் சர்வசாதாரணமாக 10 லட்சம் , 20 லட்சம் அடிப்பவர்கள் 2 கோடி பிராஜக்ட்க்கு சீன் படமே பார்க்காதவன் முதல் பாவம் படத்தில் அபிலாஷாவைப்பார்த்தது போல் வாயைப்பிளப்பது எப்படி?


13. போலீஸ் ஆஃபீசர் சிகரெட் நெருப்புக்காக அப்டி இறங்கிப்போவாரா? ( ஆனா அந்த சீன் கலக்கல் காமெடி ) 





 மனம் கவர்ந்த வசனங்கள் 


1. மூணே நாள் ஷூட்டிங்.முழுப்படமும் முடிக்கறோம்.டைட்டில் ஹனிமூன்.எப்பூடி?



2.  என்ன தலைவா? பிச்சை எடுக்கப்போகலை ? வாட் ? பிரச்சாரத்துக்குப்போகலையா?னு கேட்டேன்


3. நான் உயிரோட இருக்கும்போதே என் பையனுக்கு பதவியா ? இதை நான் வன்மையா கண்டிக்கிறேன். கண்டிச்சுக்கோ.எனக்கென்ன போச்சு


4. இத்தனை நாளா உங்கப்பாவை எப்டி ஏமாத்திட்டிருந்தியோ அதே மாதிரி இனி மக்களை ஏமாத்தறே.அதுதான் அரசியல்


5. அடடே.என்னமாத்தலையாட்றான்? அமைச்சர் ஆக இதை விட என்ன தகுதி வேணும்?


6. போலீஸ் - கிட்நாப் பணத்தை எங்கே எப்போ கொண்டு வரனும்? நாளை சன்டே.நாங்க லீவ்.மன்டே ஓக்கே



7. அரசியல்ல நேர்மையா இருக்கனும்னா புள்ளை குட்டிங்க எல்லாம் இருக்கக்கூடாது போல



8. டெய்லி 18 டீ குடிக்கிறான் .இவனைக்கடத்த பிளான் எதுவும் போடத்தேவை இல்லை.ஒரு டீக்கடை போட்டா போதும



9. பிராடுத்தனம் பன்றது ஈஸி இல்ல.அதுக்கு குருட்டுத்தனமான முட்டாள்த்தனமும் ,புத்திசாலித்தனமான முரட்டுத்தனமும் வேணும


10. நீங்க நியூஸ் பேப்பரே படிக்க மாட்டீங்ளா? ஏன்? டெய்லி டேட்டை மட்டும் மாத்தி வித்துட்டு இருக்காங்க.நான் ஏன் அதைப்படிக்கனும் ?

 

11. சார்.நீங்க எங்கே என்ன ஜாப் ? காலை ல 8 மணிக்கு அலாரம் வெச்சு சரக்கு அடிக்கிற என்னைப்பார்த்து இப்டி 1 ?


12. என்ன பண்ணப்போறோம்னு எந்தத்திட்டமும் இல்லாம சென்னை வந்தவன்தான் ஜெயிச்சிருக்கான்


13. நயன் தாராவுக்கு சிலை வெச்சியாமே? எவ்ளவ் செலவு ஆச்சு?


 ஹி ஹி  1 1/2 லட்சம்


 அடப்பாவி , இதுக்கு நீ ஏதாவது தொழில் பண்ணி இருக்கலாம்



14. எதுக்காக சென்னை வந்தே? எனி ப்ளேன்?

 இல்லை , தெரில



15. சார் , டைம் ப்ளீஸ்

 சில்லறை இல்லப்பா



 என்னைப்பார்த்தா பிச்சைக்காரன் மாதிரியா தெரியுது?

எனக்கு எப்டித்தெரியும் ?



16.  உங்க தீம் எனக்குப்பிடிச்சிருக்கு


நயன் தாரவுக்கு கோயில் கட்ற மூஞ்சிக்கு எல்லாம் என் தீம் பிடிக்கும்



17. இவ்ளவ் போலீஸ்.. சைரன் அடிச்சுட்டு வர மாட்டீங்க்ளா? இப்டி திடு திப்னு வந்தா எப்டி?



18.  டேய் மணி 9 50 ஆகிடுச்சு


 எதுக்கு பதற்றம்?

 நைட் 10 ஆனா டாஸ்மாக் சாத்திடுவான்


19. நான் பண்றதெல்லாம் பேப்பர்ல வராது .மொக்கையாப்பண்ணினாத்தான் பேப்பர்ல வரும் , எப்படி எல்லாம் தப்பு பண்ணி மாட்டிக்க கூடாதுன்னு  ஸ்டடி பண்ணிட்டு இருக்கேன்


20.  என் காசுல தானே குடிச்சே? என் காசுல தான் சாப்பிடனும்

 



21.  நான் கத்தலை , தயவு செஞ்சு அந்த கர்ச்சீப்பை வாய்ல இருந்து எடுங்க நாறுது



22.  ஸாரி , வெளியாளுங்களுக்கு நாங்க ஒர்க் பண்றதில்லை , எங்களுக்கு மட்டும் தான் ஃபிராடு வேலை



23.  நீங்க பண்றது தப்புத்தான் ஆனா அதுல ஒரு நேர்மை இருக்கு . அவங்க பண்றது சரிதான் ஆனா  அதுல ஒரு தப்பு இருக்கு


24.  என்ன? அந்தக்கார் நம்ம பின்னாலயே வந்துட்டு இருக்கு?


 நாம தான் அது பின்னால போய்ட்டு இருக்கோம்



25.  கேப்டன் படத்துல வர்ற விசாரணை மாதிரி இருக்கு?
 






சி பி கமெண்ட் - சூது கவ்வும் - முன் பாதி கலாட்டா காமெடி.பின்பாதி ஆக்ஷன் - விறுவிறுப்பான திரைக்கதை - கமல் ன் மும்பை X பிரஸ் கதையைத்தான் தூசு தட்டி புதுத்திரைக்கதை.காமெடி ,விறுவிறுப்புடன் எடுத்திருக்காங்க . காமெடி ,  கம் ஆக்‌ஷன் பட விரும்பிகள் பார்க்கலாம் . ஏ சென்ண்டரில் நிச்சய வெற்றி


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் -44


 குமுதம் ரேங்க் - நன்று


 ரேட்டிங்க் - 3.5 / 5


டிஸ்கி - ஹீரோயின் சஞ்சிதா ஷெட்டியை வர்ணிக்கவில்லையே என யாரும் தீக்குளிக்க வேண்டாம், அந்த அளவு பாப்பா ஒர்த் இல்லை . விட்ட குறை தொட்ட குறை எல்லாம் 3 பேர் 3 காதல் -ல்  ஹி ஹி

 மேலே உள்ள கிளாமர் ஸ்டில்கள் சும்மானாச்சுக்கி, படம் பார்த்துட்டு வந்து எங்கே அந்த சீன் அப்டினு சண்டை எல்லாம் போடக்கூடாது 


diski -

எதிர் நீச்சல் - சினிமா விமர்சனம்


Sanchita Shetty