Sunday, April 05, 2015

சிம்பொனி -இளையராஜா - ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் | கோப்புப் படம்
ஏ.ஆர்.ரஹ்மான் | கோப்புப் படம்
உலகத்தரம் வாய்ந்த சிம்பொனி இசைக் குழுவை தமிழகத்தில் தொடங்க திட்டமிட்டிருப்பதாக இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார்.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழந்தைகளுக்காக சென்னையில் கே.எம்.இசை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திவருகிறார். இப்பள்ளியின் சன்ஷைன் இசைக்குழு திட்டம் மூலம் மாணவர்களுக்கு இசைப்பயிற்சி அளிக்க ஹர்மேன் இந்தியா நிறுவனம் இணைந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகளில் 200 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இதுகுறித்து அறிவிப்பதற்காக சென்னை கே.எம்.இசைக் கல்லூரியில் செய்தியாளர்களை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சன்ஷைன் இசைக்குழுவில் பயிலும் மாணவர்கள் பெர்க்லீ பல்கலைக்கழகத்தில் இசைப் படிப்பு படிக்க அனுப்ப உள்ளோம். இசை குறித்த படிப்பை வழங்குவதில் முன்னணியில் உள்ள பெர்க்லீ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பயிற்சி பெற வேண்டும் என்று விரும்பினேன்.
அந்த பல்கலைக்கழகத்தில் நான் சேர விரும்பி விண்ணப்பிக்க தயாரானபோதுதான் ‘ரோஜா’ பட வாய்ப்பை மணிரத்னம் வழங்கினார். இதுவா, அதுவா? என்றபோது ‘ரோஜா’ படத்துக்கு இசையமைக்கும் வேலையில் இறங்கினேன். பின்னாளில் அதே பல்கலைக்கழகம் எனக்கு டாக்டர் பட்டம் அளித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. இசைக்கு சிறப்பு சேர்க்கும் அந்த பல்கலைக்கழகத்தில் இசைத் திறமை கொண்ட நமது மாணவர்கள் பயிற்சி பெறப்போவது கூடுதல் மகிழ்ச்சி.
இளையராஜா போன்ற முக்கிய இசையமைப்பாளர்கள் சிம்பொனி இசைக்கோர்ப்பு பணிக்காக லண்டன், புடாபெஸ்ட் செல்கின்றனர். இங்கு நம் ஊரிலேயே உலகத் தரத்திலான சிம்பொனி இசைக்குழுவை உருவாக்கவே சன்ஷைன் குழுவை தயார்படுத்தி வருகிறேன். அடுத்த 5 ஆண்டுகளில் இங்கு இசை பயில்பவர்கள் சர்வதேச அளவில் திறன்பெற்றவர்களாக இருப்பார்கள். சிம்பொனி இசை என்றாலே வெளிநாட்டுக்குதான் செல்லவேண்டும் என்ற நிலை இனி இருக்காது. தமிழ்நாட்டிலேயே அதை பெறமுடியும்.
இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார்.


thanx - the  hindu

  • இசைத்தமிழன்.. யார் என்ன சொன்னாலும் தன் பாதையில் தொடர்ந்து பயணிக்கும் தமிழன்.
    Points
    1485
    about 23 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
       
    Fazil-Fazil · Rahman  Up Voted
    • Kanan  
      சிபோனி> இங்கு கேட்கத்தான் ஆளில்லை. அது சரி உங்கள் கே எம் (காளியாத்தா மாரியாத்தா) இசைப்பள்ளியில் நமது கர்நாடக சங்கீதம் புறக்கணிக் கப்படுகிரதாமே ?
      Points
      4160
      a day ago ·   (1) ·   (1) ·  reply (0) · 
      Fazil-Fazil  Up Voted
      Rahman  Down Voted
      • DEVKUMAR ARUMUGAM  
        வாழ்த்துக்கள் ரெஹ்மான்
        Points
        470
        a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
        • Sadeesh  
          நீங்க சொந்த ராகத்ல பாடல் கொடுங்க போதும்
          Points
          380
          a day ago ·   (0) ·   (2) ·  reply (0) · 
          Fazil-Fazil · Rahman  Down Voted
          • வாதிராஜன்  
            தமிழக மக்கள் தரும் ஆதரவை தமிழக மக்களுக்கே-அதுவும் வசதியில்லா மக்களுக்கு-வழங்கும் ரெஹ்மானின் இசைசேவை பாராட்டுக்குரியது!!
            a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
            • வாதிராஜன்  
              தமிழக மக்கள் அளிக்கும் ஆதரவை தமிழக மக்களுக்கே, அதுவும் வசதி இல்லா குடும்ப பிள்ளைகளுக்கு, திருப்பி வழங்கும் ரெஹ்மானின் இசைச் சேவை மகத்தானது-பாரட்டுக்குரியது!!
              a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
              • Nagarajan  
                சார் நீங்க இசையின் முன்னோடி

              நெக்ல்ஸ் மங்கையர்க்கரசியின் எளிமையைக்கண்டு கிருபானந்தவாரியார் அதிர்ச்சி

              1  வெள்ளிக்கிழமை பேங்க்ல டெபாசிட் கட்டறாங்க.ஆனா லோன் ட்யூ கட்டமாட்டேங்கறாங்க #,தமிழன் சென்ட்டிமெண்ட்ஸ்



              ==============



              2 அவதானிப்பு - விளக்கு.




              எத்தனை ஸ்வீட்ஸ் நம் முன்னால் இருந்தாலும் எங்கோ இருக்கும் நம் காதலி அவதான் இனிப்பு என்பதே அவதானிப்பு



              ==============


              3 வீரம்னா என்ன தெரியுமா? ஆஸ்திரேலியா தான் அடுத்த எதிரின்னு தெரிஞ்சும் அசால்ட்டா இருப்பதுபோல் காட்டிக்குவது


              =============

              4 பொதுவாவே மஞ்சள் கலருக்கு இப்போ ராசி இல்ல .உதா - கலைஞர் ,ஆஸ்திரேலியா - பை சம்பந்தா சம்பந்தம் இல்லாம சென்ட்டிமென்ட்ஸ் பார்ப்போர் சங்கம்

              ===============

              5 காதலியின் பெயர் சரண்யா எனில் ஒவ்வொரு முறை நேரில் பார்க்கும்போதும் "உன்னை சரண் அடைந்தேன் அன்பே" னு அடிச்சு விடலாம்


              ===============

              6 கோடிக்கணக்கில் ஊழல் பண்ணி சொத்து சேர்த்திருந்தாலும் கை வசம் பணமே இல்லைனு நடிக்கறார் பார்த்தீங்களா?,அங்கே தான் கமலை ஓவர்டேக்கறார் கலைஞர்

              ==============

              7 இருக்கும் வரை அள்ளி அள்ளிக்கொடுத்தால் அது MGR
              முடிஞ்சவரை தொண்டர்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச பணத்தையும் பிடுங்கிக்கிட்டா அது கலைஞர்


              =============

              8 உயிரினும் மேலான உடன் பிறப்பே! உனக்கு கஞ்சிக்கே வழி இல்லைன்னாலும் அது பற்றி கிஞ்சித்தும் கவலை இல்லை எனக்கு.என் பணி வசூல் செய்து கிடப்பதே!


              ==============


              9 புத்திசாலித்தனமா ஒரு கவுன்ட்டர் குடுத்தா டக்னு ஒரு பொண்ணுக்கு CC போட்டுடறான்.நெட் தமிழன்


              ==================


              10 சன் டிவியில் ஆன்மீக உரை ஆற்றும் நெக்ல்ஸ் மங்கையர்க்கரசியின் இன்றைய் எளிமைத்தோற்றம் அருமை.60 பவுன் தேறும்

              =================


              11 அன்புத்தமிழச்சிகளே!,நைட் 12 டூ 1 வரை FB /ட்விட்டர்/வாட்சப் ல சுத்திட்டிருந்தா காலைல 6 க்கு எப்டி வாசல் தெளிச்சு கோலம் போடமுடியும்?

              =================


              12 கோலம் போடும்போது அங்கிட்டு இங்கிட்டு பராக்குப்பார்க்காம ரொம்ப சின்சியரா மும்முரமா கோலம் போடும் பிகர்களை மென்மையாக கண்டிக்கிறேன்


              =================

              13 என்னமோ இதுக்கு முன்னால கலெக்டரா இருந்த மாதிரியும் இப்போ சும்மா இருப்பதாவும் பொண்ணுங்க கிட்டே பேசும்போது பில்டப் கொடுப்பான் நெட் தமிழன்


              ===================

              14 இந்த வருஷத்தோட பெயர் 'மன்மத' வருஷமாம்..இந்த வருசமாவது சிம்பு படம் ரிலீஸ் ஆக வாழ்த்து


              =================





              15 பசங்க தேமேன்னோ சிவனேன்னோ சும்மா இருந்தாக்கூட இந்தப்பொண்ணுங்க உன் கிட்டே அந்த கெத்து..திமிரு காணும்...மிஸ் தேட்"னு உசுப்பேத்திவிட்றாங்க


              ===============


              16 ஆபீஸிலோ ,பக் வீட்டிலோ ஆந்திரா பிகர் இருந்தால் பாய்ந்து போய் உள்ளங்கையைப்பிடிச்சு ஒரு குலுக்கு குலுக்கி யுகாதி தின வாழ்த்துச்சொல்லலாம்

              ====================


              17 ஓஹோ.பல்கார்பெட்கோ ன்னா பலகாரபாக்கெட்டா?இத்தனை நாளா தமிழ் டீச்சர்ட்ட டவுட் கேட்டுட்டு இருந்தேன்


              =================


              18 இப்போ நடப்பது மன்மத வருசம்னா இந்த வருசத்தில் வரும் மார்கழி மாசம் தான் ரதி வருசமா?


              ================

              19 இந்தப்பொண்ணுங்க நம்மை கழுவி ஊத்திட்டுப்போய்ட்டே இருக்காங்க.பசங்கதான் "அய்யய்யோ இப்டி ஆகிடுச்சே"னு ஜெர்க் ஆகியே நம்மைதுவைக்கறாங்க

              =======================


              20 தேன்மொழி ,கனிமொழி,தமிழ்மொழி ,விழிமொழி இந்தப்பேர்ல காதலி இருந்தா ஆபத்து.உன் பாடி லேங்க்வேஜ் சரி இல்லைனு சொன்னா கோவிச்க்குவாங்க


              ==================

              Saturday, April 04, 2015

              சப்போஸ் தேன்மொழிகிட்டே காதல் ப்ரபோஸ் பண்ணனும்னா என்ன செய்யனும்?

              என்னது?ரம்யாவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?இது தெரியாம அரைக்குயர் நோட்ல 67 பக்கம் கவிதை எல்லாம் எழுதிட்டனே?


              ================


              2 டாக்டரா இருந்தா என்ன ஒரு சவுகர்யம்னா பொண்ணுங்க Gm drனு சாதாவா சொன்னாக்கூட gm dearனு சொன்னதா கற்பனை பண்ணி கிளுகிளுப்பா இருக்கலாம்


              =============

              3 பூங்கோதை,பூங்கொடி,பூந்தளிர் ,பூவிழியாள் இவங்க கூந்தல்ல எப்பவும் பூ இருக்கும்னு சொல்லிட முடியாது


              ===============

              4 போன வாரம் வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு ஜெயகாந்தன் என் எழுத்தை பாராட்டினார்.கனவில் தான்


              ===========


              5 கோஸாப்பழம் ,அன்னாசி.மாம்பழம் ,இலந்தை,முந்திரிப்பழம்னு எத்தனை இனிப்புபழம் இருந்தாலும் அதுல உப்புமிளகாய்ப்பொடி தூவி சாப்டுபவன் தமிழன்


              =============


              6 சபாஷ் மீனா படத்தை இப்போ ரீமேக்கினா
              சபாஷ் மீனம்மா னு வைப்பாங்களோ?


              ==============

              7 அதி தூரம் ,பிரயாண நேரம் காரணமாக பல விசேஷ நிகழ்வுகளுக்குப்போக முடியாத சூழல் எல்லா நடுத்தரக்குடும்பத்தார் மனதிலும் ஆறாத வடுவாய்



              ============


              8 எனக்கு ட்விட்டரல நிறைய விஷயத்த கத்து தந்தது
              பரிமளாதான்.நான் என்ன ட்வீட் போட்டாலும் மொக்கைனு தான் சொல்லும்


              ============


              9 நான் என் அத்தை பெண்ணுடன் சைக்கிளில் சென்றபோது அட்ராசக்க பற்றி சொல்லிட்டிருந்தேன்.சைக்கிள் டிரைவர் ஆர்வமே இல்லாமல்் லிங்க் வாங்கிக்கொண்டார்


              ==================


              10 உன் ஆள் பரிமளாவை நீ வட்டம் போட்டுக்கிட்டே இருந்தா அதுதான் பரிவட்டம்


              ==============

              11 நம்ம எட்டு இன்னைக்கு 8 மணி நேரத்துல் 88 பேர்ட்ட கடலை போட்டுட்டாரு.இது ட்விட்டர் ரெக்கார்டு.வாழ்த்து


              ==============


              12 சப்போஸ் தேன்மொழிகிட்டே காதல் ப்ரபோஸ் பண்ணனும்னா
              காதலில் விழுந் தேன் னு சொன்னாப்போதும்


              =============


              13 காரணமின்றி இன்று அவ்ளோ கடுப்பா இருக்கேன்!!
              முடிந்தால் உங்களுக்கும் ஒரு பளார் தந்திருப்பேன்...அவ்ளோ இருக்கு கடுப்பு


              ============


              14

              என் கோபம் அனைவருக்கும் கிடைக்கும் ஆனால் அன்பு என் அத்தைபொண்ணு, மாமா பொண்ணு மற்றும் அழகான பெண்களுக்கு மட்மே கிடைக்கும்


              ===============

              15 காலங்காத்தால சோறு ஆக்காம ஒரு பிடி சோறு கதையைப் படிச்சிட்டு! ஒரே அழுகாச்சினு சொல்லி சமையல் வேலைல இருந்து எஸ் ஆவார் ஃபாரீன் தமிழச்சி


              ===============

              16 உத்தம வில்லன் மார்க்கெட்டிங் டீம் யாரு?வ ர இருக்கும் ஓப்பனிங் மாஸ் கூட்டத்தை அவங்களே குறைச்சிடுவாங்க போலயே


              ==============

              17 உன்னுடன் உள்ளங்கை கோர்த்து நடக்கையில் நான் வாக்"கிங்"காய் உணர்கிறேன்


              ===============


              18 தினம் தினம் உன் மேல் நான் அன்புமாரி பொழிந்தாலும் நீ எப்போதும் நம்பாமாரியாய் இருக்கிறாயே?சந்தேகப்பி"ராணி"யே!


              ===============


              19 டார்கெட் போட்டு ஒவ்வொரு பிகரா கரெக்ட் பண்ணிட்டு பின் ஹேன்டிலை மாத்திட்டு பழைய சன்யாசி செத்துட்டான்னு அடிச்சு விடுவான் நெட் தமிழன்


              =============


              20 அவனவனுக்கு 1008 பிரச்னை.1 பொண்ணு இன்னும் ு100 வருஷம் கழிச்சி எனக்கு வயசாகிருக்கும்ல ;///
              அத இப்ப நினைச்சாலும் கஷ்டமா இருக்குங்குது


              =============

              மோடி ஆட்சியில் முதல் உருப்படியான முடிவு எது?

              1  ஏப்.1முதல் பிளாட்பார்ம் டிக்கெட் இனி 10 ரூபாய்.#,ஏதோ பாதிப்பேராவது எடுத்தாங்க.இனி ஒரு பய எடுக்க மாட்டான்


              ===========




              2 ஆபீஸ் கம்ப்யூட்டரில் ஆபாசப் படம்: 3 மூத்த நீதிபதிகள் டிஸ்மிஸ் - ஒருவர் ராஜினாமா # ஓஹோ.இதான் வழக்கு தீர்ப்பு லேட் ஆக காரணமா?




              =============



              3 மோடியை வீடு வீடாக கொண்டு சேர்ப்பேன் - H.ராஜா # முதல்ல உங்களை உள்ளே விடுவாங்க்ளா?பாருங்க




              =============



              4 மன்மோகன், சோனியா, அத்வானி. மின், குடிநீர் கட்டணம் கட்டாத 300 'பெருந்தலைகள்'!

              # 300 படுத்தி எடுக்கும் வீரர்கள் னு ஒரு படம் எடுக்கனும் போல


              ===============

              5 கணவருடன் தினமும் 15 முறை உடலுறவு: கிம் கர்தாஷியன் வெளியிட்ட ரகசியம் #,பார்ட் டைம் ஜாப்?பார்ட் பார்ட்டா கழண்டிருக்குமே?

              ===============


              6 எங்களுக்கும், இந்தியாவுக்குமான உறவு மாமியார், மருமகள் உறவு போன்றது: பாக். தூதரக அதிகாரி# ஜென்மத்துக்கும் சேரமாட்டீங்க?


              ===============

              7 யுவன்தான் எங்க மாஸ் இசையமைப்பாளர்! - வெங்கட் பிரபு ! மிஸ்டர் யுவன்! விஷ் டூ யூ"WON"

              ==============

              8 தாய்லாந்தில் பெண்களின் ஆபாச செல்பிக்கு தடை # நல்ல வேளை.தமிழ்நாட்ல தடை இல்லை

              ===============

              9 வெள்ளை சேலையில் மழையில் நனைந்து நடிக்க டாப்சி மறுப்பு # மஞ்சள் கலரோ பிங்க் கலரோ கொடுத்து ஏமாத்திடுங்க.சேம் எபக்ட் தெரியும் டாப் ஸி

              ==============

              10 தெலுங்குதேசம் கட்சியினருக்கு என்னை பலாத்காரம் செய்ய துணிச்சல் இல்லை - ரோஜா # ஏம்மா.அவங்க பாட்டுக்கு தேமேன்னு கிடக்காங்க.உசுப்பேத்திவிட்டு


              ==============


              11 எனது காதலை நான் கோலியிடம் தெரிவிக்கிறேன் - நடிகை ராக்கி சவாந்த் # மாசமானா ராக்கி ச"வாந்தி " ?


              ================

              12 ஜெ முதல்வராக வேண்டி அதிமுக உறுப்பினர் தீக்குளிப்பு
              # தீக்குளிக்கும்போது நெடுஞ்சாண் கிடையா விழுந்தபடி குளிச்சிருப்பானோ?


              ==================

              13 காலையில் தேவாரம் பாடினேன் -தமிழிசை #மத்தியானம் இளைய்ராஜாரம்மா?


              ==============

              14 கால்நடைகளுக்கு ஓட்டு இருந்தால் அவை அனைத்தும் அம்மாவிற்கே வாக்களிக்கும் - அமைச்சர் வீரமணி.# ஆறு அறிவு இருக்கறவங்க ஓட்டுப்போடமாட்டாங்க?


              ==============

              15 ஈழப் படுகொலைக்கு காங்கிரஸ் மட்டுமே பொறுப்பு இல்லை - திருமாவளவன்# அதை வெச்சு அரசியல் பண்ணின கட்சிகளுக்கும் பொறுப்பு இருக்குன்றாரா?"


              =============

              16 நில மசோதாவை முன்பு எதிர்த்த ஜெ இப்போது ஆதரிப்பது சுயநலம்: கருணாநிதி # தலைவா !,நாம எத்தனை டைம் எத்தனை விஷயத்துல மாத்தி மாத்தி பேசினோம்?


              =================

              17 அனுஷ்கா போன்று என் உதட்டையும் வீங்க வைங்க கோஹ்லி: ராக்கி சாவந்த் # அவர் இவரை ஓட்டிட்டா ஜாக்கி ஆப் ராக்கி ஆகிடுவார்



              ==============

              18 வாட்ஸ் ஆப்பில் +2கணித வினாத்தாளை ஷேர் செய்த வாத்தியார்... 4 பேர் கைது #பேக் ஐடி ல போடாம பேக்கு மாதிரி சொந்த ஐடி ல போட்டுட்டாரா?


              =================

              19 என்னை சந்திக்க வரும்போது மாலை, சால்வைக்குப் பதிலா நூறோ இருநூறோ தேர்தல் நிதி கொண்டுவாருங்கள்-கலைஞர்#பதவியில் இல்லாத போதும் வசூல் வேட்டை

              =============


              20 தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டம் ரத்து - மத்திய அரசு # மோடி ஆட்சியில் முதல் உருப்படியான முடிவு


              ================

              நண்பேன் டா வை கழுவி ஊற்றிய ட்விட்டர் சமூகம்

              ஓகே ஓகே இயக்குநர் ராஜேஷ் உதவியாளர் ஜெகதீஷ் இயக்கியிருக்கும் நண்பேன்டா, மீண்டும் உதயநிதி - சந்தானம் கூட்டணியில் வெளியாகியிருக்கிறது. நயன்தாரா கூடுதல் பலமாம். கலாய்ப்புகளை நம்பி களத்தில் இறங்கிய இந்தக் கூட்டணி படைப்பை எப்படியெல்லாம் கலாய்த்திருக்கிறார்கள் என்பதை ட்வீட்டாம்லேட்டில்...
              தினேஷ் ‏@DineshUpdates - #Nanbenda செத்துட்டேன். நேரத்த வீணாக்கிட்டேன். உதயநிதி எப்பதான் நடிக்க கத்துப்பாரு?
              ராகிஷோர் ‏@raKishore - 30 நாள்ல 30 கோடி செலவு செய்யனும்னு நம்ப தலைவர் ஒரு படம் எடுப்பாரே, அதவிட மோசமா இருந்துச்சு இந்த படம்.
              வினோத் ‏@puthagappuzhu - #நண்பேன்டா - அடுக்கடுக்கான கிளைக்கதைகள் ஒரு மைனஸ். மற்றபடி OKOK, கதிர்வேலன் காதலை விட இது எளிதில் சகிக்கக்கூடியதே!
              ரெட்டைசுழி ‏@SENTHIL_WIN - உதயநிதி நல்லா பழகிட்டாருபோல.. நண்பேன்டா சாங்ல எக்சர்ஸைஸ் வேகமா பண்றாரு:)))
              வினோத் ‏@puthagappuzhu - #நண்பேன்டா முன்னே பின்னே இருக்கலாம்.ஆனால் இப்படத்தின் Asset லேடிசூப்பர்ஸ்டார் நயந்தாரா என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இருக்கமுடியாது
              சூனா பானா @SoonaaPaanaa - நண்பேன்டா நான் பார்த்த கடைசி உதயநிதி படம் இதுவாகத்தான் இருக்கும்.
              நோபிட்டா ‏@iRaVuSu - செம படம் சார், வர வர டான்ஸ் நல்லா ஆடுறீங்க... நடிப்புல நல்ல முன்னேற்றம் தெரியிது @Udhaystalin #நண்பேன்டா
              முகில் ‏@Vaanmugil - @Udhaystalin நியாயமாரே இது நியாயமா........? #நண்பேன்டா #மொக்கை
              குமரன் ‏@kumaran52v - நண்பேன்டா ரிலீஸ் ஆகியிருக்கு, போகலாமா என்று கேட்டான், நீ என் நண்பனாக இருப்பின் இந்த கேள்வியை கேட்கும் எண்ணம் வந்திருக்காது என்றேன்.
              சிந்து Talks © ‏@sindhutalks - சகாப்தம் நல்லாயிருக்கு போல !!! அவசரப்பட்டு் நண்பேன்டா புக்டு.
              Jai ‏@ItisJai - இப்படி போயிட்டு இப்படி வந்தானாம்.. நண்பேன்டா பார்த்துட்டு எப்படியோ போனானாம் :P ஐ அம் பாவம்
              Ajith Rinesh ‏@Rineshraja - நண்பேன்டா இந்த டைட்டில் அப்புறம் நயன்தாரா இந்த இரண்டையும் தவிர வேறு எதும் நல்லாவே இல்ல!!
              வினோத் மலைக்கனி ‏@vinothjonty - செப்பா! ஒரு வலி'யா "நண்பேன்டா" பார்த்தாச்சு! சுருக்கமா படம் எப்படினு சந்தானம் ஸ்டைல்'ல சொல்லனும்னா. அவளோ பெரிய காமெடீ இல்லையே இது!!
              மானஸ்தன் ‏@RascalRaGu - #Nanbenda Highly dissapointing ஆம்…அதுக்கு பலர் 2 பக்க Review…அடேய்…அவனுங்க கிட்ட இருந்து என்ன காவியமா எதிர்பாத்தீங்க? #OKOK ஓடுனதே பெருசு.
              சிந்து Talks © @sindhutalks - நல்லபாம்பு கூட இதவிட நல்லா படமெடுக்கும்... டைரடக்டரே.... #நண்பேன்டா



              நன்றி  -  த இந்து

              The Way Home - சினிமா விமர்சனம் ( உலக சினிமா - கொரியன் மேக்)

              தி வே ஹோம் | The Way Home - மலைக்கிராமக் காட்சிகளாய் நம் கண்முன் விரிகிற இக்கொரிய மொழித் திரைப்படம் குழந்தைகள் திரைப்படத்திற்கான சிறந்த வகை மாதிரியாய் திகழ்கிறது.
              கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. பள்ளிக்கூட நாட்களின் பரபரப்புகள் முடிந்துவிட்டன. கொஞ்சம் இளைப்பாற கோடையும் வந்துவிட்டது. இப்போதிருக்கும் ஊரைவிட இன்னொரு ஊருக்கு செல்வதுதான் நல்லது. அங்குதான் நமக்கு அழகான அனுபவங்கள் காத்துக்கிடக்கின்றன. தி வே ஹோம் எனும் கொரிய திரைப்படத்தில் வரும் சிறுவன் சாங் வூ தனது பாட்டியின் கிராமத்திற்கு செல்லும்போது பெற்ற அனுபவங்களும் இத்தகையதுதான்.
              கணவனைப் பிரிந்திருக்கும் ஒரு இளம்பெண் தற்போது சியோலில் பார்த்துவரும் வேலையையும் ஏதோ ஒரு காரணத்தினால் விட்டுவிட்டுகிறாள். வேறு புதிய வேலை ஒன்றை தேடவேண்டும். தனியாளாக இருந்து சிரமங்களை எதிர்கொள்ளவேண்டும். தனது 7 வயது மகனை வைத்துக்கொண்டு சிரமப்பட முடியாது. அதனால் தொலைதூர கிராமத்தில் இருக்கும் தன் அம்மாவிடம் கொஞ்ச நாளைக்கு விட்டுவிட்டு வரலாம் என முடிவு செய்கிறாள். அதன்படி அந்த இளம்தாயும் மகனும் ஒரு கோடைக்காலத்தின் இளங்காலையில் மலைக்கிராமம் ஒன்றிற்கு வந்துசேர்கின்றனர். மகனை அவன் பாட்டியிடம் விட்டுவிட்டு தாய் போய்விடுகிறாள்.
              உயர்ந்த மரங்கள் சூழ்ந்த அந்த மலையின் ஒரு பள்ளத்தாக்கில் தன்னந்தனியே இருக்கும் மிகவும் பழமையான குடில் அது. வீட்டில் எங்குமே குழாய்த் தண்ணீர் இல்லை. நகரத்துப் பையனுக்கு தான் தங்கப்போகும் வீட்டைப் பார்த்ததுமே பிடிக்கவில்லை. மிக வயதான அந்தப் பாட்டிக்கு காது கேட்குமே தவிர, வாய் பேச இயலாது. என்ன செய்வது. பொறுத்துக்கொள்ளவேண்டியதுதான். வீட்டின் வசதிகள் ஏதுமற்ற சூழலால் அவனுக்கு அடிக்கடி கோபம் வருகிறது. சுருக்கமாக சொன்னால், முகம் முழுவதும் சுருக்கம் விழுந்த பாட்டியை அவனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.
              அந்தக் கிராமத்துப் பாட்டி செய்கிற எந்த உணவையும் அவன் தொட்டுப் பார்க்கக் கூட விரும்பவில்லை. தான் கொண்டுவந்த பொம்மைகளோடு விளையாடுவது. தவிர, தான் கொண்டுவந்த பாக்கெட் உணவுகளை பிரித்துப் பிரித்து சாப்பிடுவது... மற்ற நேரங்களில் உம்மென்றிருப்பது... இது வழக்கமாகிப் போகிறது. இங்கிருந்து ஓடிவிடலாம் என நினைப்பான். ஆனால் அருகிலுள்ள மலைச்சாலையில் பேருந்து எப்போதாவதுதான் வரும் என்று அவன் அம்மா சொன்னது நினைவுக்கு வர அப்படியே சோர்ந்துவிடுவான்.
              பொதுவாக நகரத்துக் குழந்தைகள் கிராமங்களுக்கு வரும்போது எதிர்கொள்கிற பிரச்சினைகள்தான் இவை. அவர்கள் எதிர்பார்ப்பதுபோல் பல விஷயங்கள் இருக்காது. ஆனால், கிராமத்தில் உள்ள வேறு சிறப்பு அம்சங்களால் ஈர்க்கப்பட்டு போகப் போக வெறுப்புணர்வு விலகிவிடும்.
              ஆரம்பக் காட்சிகளில் பாட்டியிடம் கெண்டகி ப்ஃரைட் சிக்கன் (Kentucky fried Chicken) செய்துதரக் கேட்க, கோழியை சாதாரணமாக சமைத்துக் கொடுத்துவிட இவன் கத்தி ஆர்ப்பாட்டம் செய்வான். பசியோடு இரவைக் கழிக்க முடியாமல் பாட்டி தூங்கிவிட்டபிறகு அவள் சமைத்ததை எடுத்து சாப்பிட்டுப் பார்ப்பான். சுவையாக இருக்கவே அனைத்தையும் காலிசெய்துவிடுகிற காட்சியிலிருந்து படத்தின் வேகத்தில் சுவாரஸ்யம் கூடுகிறது.
              பட்டிக்காட்டுச் சிறுவர்களைப் பார்த்ததும் இவன் அவர்களை கடுமையாக கேலிசெய்கிறான். ஒருமுறை மலைப்பாதையில் போகும்போது அங்கு இவனைத் துரத்தும் காட்டெருமையிடமிருந்து அவர்கள் இவனைக் காப்பாற்றிவிடுகிறார்கள். அதன்பிறகு அவர்களுடன் நட்பு பாராட்டுகிறான். மேலும் அந்த கிராமத்து சிறுமியுடன் ஈர்ப்புநேசமும் மலர்கிறது.
              பாட்டி தன் வயதான காலத்திலும் ஆற்றுக்குச் சென்று துணிகளையெல்லாம் துவைத்துவந்து காயப்போடுவாள். இவனது கேம் பாய் பொம்மைக்கு பேட்டரி போய்விட, புது பேட்டரி கேட்டு பாட்டியிடம் கெஞ்சுவான். அவளிடம் ஏதுபணம்? தோட்டத்தில் விளைந்த முலாம்பழங்களை கூடையில் எடுத்துக்கொண்டு அருகிலுள்ள கிராமச் சந்தைக்கு அவனை அழைத்துச் செல்வாள். அங்கு அப்பழங்களை விற்று அந்தக் காசில் கேம்பாய் பொம்மைக்கு பேட்டரி வாங்கிக் கொடுப்பாள்.
              அந்த கிராமத்தில் உள்ள இந்தப் பாட்டியின் தோழிகள் மிகவும் எளிமையானவர்கள். பாட்டி ஒரு கடையில் பண்டம் வாங்கும்போது கூட, வியாபாரத்தைத் தாண்டி, நலம் விசாரித்து, கூடுதலாக பொருளையும் தந்து உதவுவார்கள். அவர்களை இவன் வினோதமாகப் பார்க்கிறான். இவனை அறியாமல் பாசாங்கற்ற அந்த மனிதர்களின்மீது ஒரு பாசம் கவியத் தொடங்குகிறது.
              பாட்டி கிழிந்த துணியைத் தைக்க ஊசியில் நூல்கோர்க்கத் தவிக்கும்போது அதை வாங்கி இவன் நூல்கோர்த்துக் கொடுப்பது உள்பட பாட்டியின் அனைத்துச் செயல்களையும் நுட்பமாகக் கண்டு வியப்பவனாக மாறுகிறான்.
              தனக்காக எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கிறாள், எதையும் தியாகம் செய்ய தயாராக இருப்பதை அறிந்த பிறகு என்றென்றும் மாறாத நேசம் செலுத்துபவனாக அவன் மாறிவிடுவதுதான் உச்சபட்ச சிறப்பு.
              அம்மாவுக்கு வேலை கிடைத்துவிட, தன் மகனை அழைத்துச்செல்ல வருகிறாள். ஆனால் அவனுக்கு இப்போது தன் பாட்டியைப் பிரிந்து செல்ல மனமில்லை. வேறு வழியின்றி பாட்டியிடமிருந்து வருத்தத்தோடு விடைபெற்று அம்மாவுடன் செல்கிறான்.
              இப்படம் 2002ல் வெளியானது. லீ ஜியாஸ் ஹியாஸ் என்ற பெண் இயக்குநர் இயக்கியுள்ளார். அதனாலோ என்னவோ இயற்கையோடு இயைந்த வாழ்வின் உயிர்த்துவமிக்க பார்வைகள் படமெங்கும் விரிந்துகிடக்கின்றன. யூன் ஹாஸ் ஷிக்கின் ஒளிப்பதிவும் கிம் டே - ஹாஸ் மற்றும் கிம் ஹாம்- ஹீ ஆகியோரின் இசையும் நம்மை படத்தோடு மிகவும் ஒன்றிப் போகச் செய்கின்றன. வயதுமுதிர்ந்த கிடுகிடு பாட்டியாக நடித்த கிம் யோல் பூன் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுசொல்வதுகூட ஒருவேளை வெறும் சொற்களாகிவிடக்கூடும். தனது துடிப்புமிக்க நடிப்பால் நம் உள்ளத்தைக் கொள்ள கொண்ட சிறுவனாக தோன்றிய யூ சியோஸ் ஹோ இப்படத்தின் ஜீவநாடி.
              பெரிய அறிவுரைகள், வளவள வசனங்கள், திடீர் திருப்பங்கள் என்று எதுவுமில்லாமலேயே காட்சிரீதியாகவே இழுத்துநிறுத்துகிறது திரைக்கதை. சாதாரண கோடைவிடுமுறைக் கதைகளைப் போல அல்லாமல் படத்தை உயர்ந்த தளத்திற்கு நம்மைக் கொண்டு சென்றுவிடுவது இப்படத்தின் கதையும் அதை உணர்வுபூர்வமாய் சொன்னவிதமும்தான்.



              நன்றி - த இந்து