Tuesday, March 31, 2015

ATM நம்பர திருப்பி போட்டா போலிஸ் வருமா?

1  இன்னைக்கு என்ன சமையல்?



பூரி



தொட்டுக்க?



இன்னொரு பூரி



புரியல.
குருமா எதும் செய்யல.

===================

2 டேய்.பரிமளா னு எழுதச்சொன்னா பரிமலா னு எழுதி இருக்கே?


டீச்சர்.பரிமலா லட்டு மாதிரி இருக்கும்.அதான் லட்டுக்கு வரும் ல போட்டுட்டேன்


===================

3 ஒரு வரன் occupation - not working. னு இருக்கே?


நல்லா பாருங்க மேடம்.சினிமா கதைக்கருவுக்கான knot making worker ஆக இருக்கப்போகுது


================

4 மிஸ்! இப்டி டால் அடிக்கற மாதிரி டிரஸ்,நகை போட்டிருக்கீங்களே ?உங்க பேரென்ன?


ஆண்"டாள்"


================

5 அந்த ரைட்டர் கதை எழுதுனா வாசிப்பபவரை அப்டியே உள்ளே இழுத்துக்குவாராம்



அய்யய்யோ.எப்போ திருப்பி அனுப்புவாரு?


===============

6 டியர்.நீங்க எனக்குத்தெரியாம ஒரு ஆண்ட்ராய்டு போன் வெச்சிருக்கறதை கண்டுபிடிச்ட்டேன்.



நல்ல வேளை.பயந்துட்டேன்


=================

7 டாக்டர்.பன்றிக்காய்ச்சல் எனக்கு குணம் ஆகிடுச்சு



அப்டியா?பன்றி க்கு நன்றி சொல்லுங்க.எனக்கு ஒரு ஹார்லிக்ஸ் சொல்லுங்க


===============

8 இன்ஸ்பெக்டர்.குறிஞ்சி மலரை 5 நாளா காணோம்



யோவ்.அந்த மலர் பிங்க்கி யா கன்வெர்ட் ஆகி 6,நாள் ஆகுது

================

9 குருவே!மனைவி நீண்ட ஆயுளோடு வாழ கணவர் விரதமிருக்கும் ஏதேனும் நோன்பு உண்டா?



ஈரேழு 14 லோகத்திலும் அப்டி ஒரு கணவரே இல்லை சிஷ்யா!

==============

10 சார்! நீங்க டெய்லி காலைல வாக்கிங் போவீங்களா? சூர்ய நமஸ்காரம் செய்வீங்களா?


2ம் இல்லை. பொண்ணுங்களுக்கு காலை வணக்கம் வைப்பேன் FB ல



============


11 ஏம்ப்பா? மேரேஜ்க்கு  முன்  அறிவோம் ஃபிகர்  போட்டுட்டு இருந்தியே, இப்போ  என்ன பண்றே?

அரிவோம்   வெஜ்டபிள்ஸ்னு  சம்சாரத்துக்கு  எடுபுடிவேலை


=============


12 லவ் ஃபெய்லியர்ஆண்கள்  தாடி  வளர்ப்பதுபோல் பெண்கள்  ஏன்  சோகப்படறதில்லை?



பொதுவா  பொண்ணுங்களுக்கு  ஆம்பளைங்களை  தாடிவிட வெச்சுதான்  பழக்கம்


======================


13   சார்! ஆம்பளை  தன் ரகசியத்தை உளறிடுவானாமே? நிஜமா?

 கண்ணா! உளர்ற  மாதிரி  நடிப்பான்,அதை  பொண்ணுங்க  நம்பி ஏமாந்துடுவாங்க



================


14  காதலியைவிட  அழகான பொண்ணு கிடைச்சா  இந்த காதலிய உட்டுட்டு அந்த அழகியை காதலிக்க மாட்டான் ஆண் என்பது  நிஜமா?

ஆமா.பழைய காதலியை  விட மாட்டான்



=================

15  டாக்டர்! ஆ”லிவ்” ஆயில் ல சமைச்சா  நீண்ட நாள்  உயிர்  வாழலாமா? அதிர்ச்சியான நியூசா இருக்கு?

 மேடம்! நீங்க  சமைப்பீங்க  என்பதே ஷாக் நியூஷ்


==================


16  மாப்ளை! பொண்ணை  நேர்ல பார்க்காமயே   அழகிய  தேவதைனு எப்டி சொல்றீங்க?


FB ல  அழகிய  தேவதைனு அக்கவுண்ட்  வெச்சிருக்கே?



===================

17  ATM நம்பர திருப்பி போட்டா போலிஸ் வருமா?


நெம்பரை  நேரா  போட்டா  பணம் வரும். திருப்பிப்போட்டா  பாஸ்வொர்டு  ராங்க்னு  வரும், அம்புட்டுதான்


=========================


18    டியர்!  நான்  சாகும்போது கடைசியா  உன்  முகத்தைப்பார்க்கனும்.

அதெப்பிடிடா  முடியும்?  புருசன்   ஒத்துக்க மாட்டானே?



=====================


19  மிஸ்!  ஸ்டைலுக்காகவா  சில  முடியை  மட்டும்  முன்னால  தள்ளி  விட்டிருக்கீங்க?


 யா. பின்னால  தள்ளி  விட்டா அது  ஜடை, முன்னாலன்னா ஜாடை


====================


20   டியர்! தோசை ஏன் ரெண்டா பிஞ்சு இருக்கு?



அத்தான்.தோசை "முருக"லா வேணும்னீங்களே? அதான் இது வள்ளி தோசை.இது தெய்வானை தோசை


===================

Monday, March 30, 2015

மணல் நகரம் - சினிமா விமர்சனம்

மணல் நகரம்

துபாயில் வேலை பார்க்கும் பிரஜின் தமிழ் நாட்டில் வேலை இல்லாமல் இருக்கும் தனது நண்பன் கௌதம் கிருஷ்ணாவை துபாய்க்கு வரவழைக்கிறார். டூரிஸ்ட் விசாவில் செல்லும் கெüதம், பிரஜின் தங்கியிருக்கும் அறையிலேயே தங்குகிறார்.
பிரஜினின் நண்பரான ஜெஸ்சி ஜோஸ் ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவர் வேலை செய்யும் ஓட்டலில் பார்வையற்றோர் இசைக்குழு நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறது. அக்குழுவில் உள்ள ஒருவரின் உடல்நிலை சரியில்லாமல் போக, வேறு வழியில்லாமல் இவருக்குப் பதிலாக கெüதம் அந்த நிகழ்ச்சியில் பாடுகிறார்.
இதேநேரம் அங்குள்ள ஓட்டல் ஒன்றில் வேலை செய்யும் நாயகி தேஜஸ்வினியும் பிரஜினும் காதலித்து வருகிறார்கள். ஆனால், தேஜஸ்வினி மீது அந்த ஓட்டலின் உரிமையாளர் மையல் கொள்கிறார். தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவருடன் தவறாக நடந்து கொள்ள முயல்கிறார்.
பணக்காரரின் மகளான வருணாவுக்கு கெüதமை பிடித்துப்போக அவருக்கு தன் ஓட்டலிலேயே வேலை வாங்கிக் கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலில் விழுகிறார்கள்.
இதனிடையே பிரஜினின் காதலியான தேஜஸ்வினியை ஒரு பழைய பிரச்னை துரத்துகிறது. நண்பர்களும் வெவ்வேறு பிரச்னைகளில் சிக்குகிறார்கள். கெüதம்-வருணாவின் காதல் விஷயம் பெரு முதலையான வருணாவின் அப்பாவிற்குத் தெரிந்து, இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு வருகிறது.
பிரஜின்-தேஜஸ்வினி, கெüதம்-வருணாவின் காதல்கள் ஜெயித்தனவா...? என்பதை சில திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார்கள்.
பிரஜின் மற்றும் கெüதம் கிருஷ்ணாவின் நடிப்பில் குறையேதும் இல்லை. நாயகிகள் தேஜஸ்வினி வருணா இருவருமே பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார்கள். நடிப்பைப் பற்றி பெரிதாகக் கூறுவதற்கு ஒன்றும் இல்லை. துபாயில் வேலை செய்யும் மனிதர்களின் கஷ்டங்களை ஓரளவுக்குப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் "ஒரு தலை ராகம்' சங்கர்.
ரெனில் கெüதம் இசையில் பாடல்கள் சுமார் ரகம். ஸ்ரீதரின் ஒளிப்பதிவு பரவாயில்லை.
"மணல் நகரம்'- மணலில் கட்டிய கோட்டை.


நன்றி- தினமணி

மாமீய்! நீங்க எங்கே இருக்கீங்க?

1   பொண்ணுங்களுக்கு  தற்செயலா ஏதாவது  நல்லது நடந்தா “உங்களுக்காக நான் தான் 7 மலையானை, 6 முகத்தானை  வேண்டிக்கிட்டேன்னு  அடிச்சு விடுவான் தமிழன்



================




ஒரு  பொண்ணு  எகனை மொகனையா  ஒரு கருத்து  சொல்லி  RT IF YOU  AGRI -னு  போட்டுச்சு.நான்  அக்ரி படிக்கலை, பிஎஸ்சி  மேத்ஸ்னுட்டேன்






=================





3  fbல  ஒரு  பொண்ணு “  எனக்குத்தூக்கம்  வருது” னு  போட்ட ஸ்டேட்டஸ்க்கு   7800  பேர் “  என்ன ஒத்துமை, எனக்கும் தூக்கம்  வருது”னு கமெண்ட்.டேய்




=====================




4  அழகெல்லாம்  கம்ப்பேர்  பண்ணா  சிவகார்த்திகேயன்  பக்கம்  கூட தனுஷ்  நிக்க முடியாதாமே?


எங்கே? 2  பேரும்  இப்போ  அனிரூத்  பக்கம் தானே?


===============


5  உடல்  நலனுக்கு  ஏற்ற  எளிமையான  உணவு  இட்லினு  தெரிஞ்சும்  ரோட்டோரக்கடைல   புரோட்டா  சாப்ட்டுட்டு  ஆ! காரம் இந்த ஆகாரம் என்பான் தமிழன்



===============


6  நெருங்கிய  நண்பர்கள் = திக்  ஃபிரண்ட்ஸ்

பயந்த  சுபாவம்  உள்ள  நண்பர்கள் = திக் திக்  ஃபிரண்ட்ஸ்


=================


7   இதோ நான்  பீச்சுக்குப்ப்போறேன்னு  ஸ்டேட்டஸ்  போடும்  பெண்களே!  குறிப்ப்பா எந்த ஏரியா?னு சொன்னா  தமிழன்  அலைய மாட்டானில்ல?


==================


8  தனிமையில்  இருக்கும்வரை  நீ புத்திசாலி !
காதலிக்கத்தொடங்கி விட்டால் புத்தி  காலி!

==================


உன்னுடன்  விரல்  கோர்த்த  பயணத்தை விட  கை  கோர்த்த  பயணம்தான்  அருமை.  விரல்  கோர்த்தப்ப  மோதிரம் உருவிட்டேன்,கை  கோர்த்தப்ப  வளையல்


==================


10  எனக்கு ஜோதிகாவைத்தெரியும்.அதனால் சூர்ய நமஸ்காரம் எப்போது வேணும்னாலும் செய்வேன்னு ஹூசைனி சொல்லலையா?


===============


11 தாலி கட்டிய சொந்த மனைவியை நிர்க்கதியாய் விட்டுவிட்டு ஊர் உலகம் சுற்றிபவர்க்கு தமிழ் இனம் நிர்க்கதியாய்க்கிடப்பதன் வலி எப்படி உணரமுடியும்?

==============

12 புரட்சித்தலைவியின் பொன்னான ஆட்சியில்தான் பெண்கள் சமூக வலைத்தளங்களில் மிட் நைட் 1 மணி வரை சுதந்திரமாக உலா வர முடிகிறது

===============

13 நிலா ரசிகன் ,நிலாப்ரியன்னு பொத்தாம்பொதுவா புனைப்பெயர் வெச்சுக்கிட்டா இங்கிருக்கும் 17 நிலாக்களும் தன்னைத்தான் ரசிப்பதா நினைச்சுக்குவாங்க

==================



14 மாமோய் நீங்க இருக்கீங்க்?னு ரிங்க் டோன் இருக்கு.ஆனா ஆண்ட்டி.நீங்க இருக்கீங்க?னு ரிங்க்டோன் இல்ல.#,நீதி = ஆண் ஊர் சுற்றி


=================


15 குழந்தை தூங்குனதும் நைசா தூக்கிட்டுப்போய் ஹால் ல சோபாவுல படுக்க வெச்ட்டு வந்தா நாம தூங்குனதும் நைசா அது கட்டிலுக்கு வந்துடுது


===========


16 காலைல 5 மணிக்கு எந்திரிக்காம 6 30 க்கு எழுந்தால் எழுத வேண்டிய கவிதை
ஆறரைக்கு எழுந்து விட்ட ஏழரையே!


================

17 ரெகுலர்் பஸ்ஸில் இனி தினமும் சிறந்த கூந்தல் அழகி ,சிறந்த கொண்டை அழகி ,சிறந்த புருவ அழகி விருது தர திருத்த முடியாத வாலிபர் சங்கம் முடிவு

==================


18 மெடிமிக்ஸ் சோப் போட்டுக்குளிக்கும்
ரெடிமிக்ஸ் அழகி நீ! - பாத்ரூம் கவிஞனின் டைரிக்குறிப்பு


===============

19 ஆற்றைக் கடக்க பறவைகளுக்கு நீச்சல் தெரிய வேண்டும் என்ற அவசியமில்ல
பாலைவனத்தைக்கடக்க ஒட்டகத்துக்கு பைக் ஓட்டத்தெரியத்தேவை இல்லை


=============

20 ஏழைக்கு ஏத்த ஜில் உருண்டை நீ!அடடே!



====================

இரவும் பகலும் வரும் - சினிமா விமர்சனம்

இரவும் பகலும் வரும்

காவல் துறையினரே திருடர்களாக இருந்தால், பொதுமக்களின் கதி என்னவாகும் என்பதுதான் "இரவும் பகலும் வரும்' படத்தின் கதை.
 நாயகன் மகேஷ், வீட்டுக்கு அடங்காத பிள்ளையாக சிறு சிறு தவறுகள் செய்துகொண்டு பொறியியல் படித்துவருகிறார். இதனிடையே ஏரியாவில் சுற்றும் அனன்யாவை ஒரு தலையாக காதலிக்கிறார். அம்மா இல்லாத பிள்ளையாக வளரும் அவரின் தவறுகள் எல்லை மீறும்போது வீட்டை விட்டே துரத்தப்படுகிறார்.
 வெளியில் வந்தவர் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் கூட்டத்தில் சேர்கிறார். ஏரியாவில் மேஜிக் செய்வதுபோல கூட்டத்தைக் கூட்டிவிட்டு கொள்ளையடிக்கும் கூட்டம் ஆளில்லாத வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கிறது. அப்படி ஒரு வீட்டில் கொள்ளையடிக்கும்போது மகேஷை திருடனாகப் பார்க்கிறார் அனன்யா. இந்தக் கொள்ளைக் கூட்டத்துக்குத் தலைவர் அந்த ஏரியா போலீஸ் அதிகாரி ஏ.வெங்கடேஷ்.
 திருடர்கள் எப்படியெல்லாம் திருட வருவார்கள் என்று தான் சார்ந்திருக்கும் சமூக அமைப்பின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் அனன்யா. இதனால் கொள்ளையடிக்கும் இடத்தில் பொதுமக்களாலேயே கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்படுகின்றனர். இந்தச் சம்பவம் போலீஸ் அதிகாரி ஏ.வெங்கடேஷுக்கும் கோபத்தை ஏற்படுத்துகிறது. அனன்யாவை பழி தீர்க்க நேரம் பார்த்துக்கொண்டிருக்கும்போது, அவரே போலீஸ் ஸ்டேஷன் சென்று முக்கியமான திருடனை எனக்குத் தெரியும் என்று மகேஷைப் பற்றிச் சொல்கிறார்.
 இந்தக் கொள்ளைக் கூட்டத்தில் மகேஷ் சேர்ந்தது ஏன்? போலீஸ் அதிகாரி ஏ.வெங்கடேஷ் அனன்யாவைப் பழிவாங்கினாரா? மகேஷின் காதல் என்னவானது என்பது மீதிக் கதை.
 கதைப்படி நாயகன் மகேஷ்தான் என்றாலும், கதையை விறுவிறுப்பாக நகர்த்துவது இயக்குநர் ஏ.வெங்கடேஷின் முரட்டுத்தனமான நடிப்புதான். அனன்யா வழக்கமான நாயகி. இரண்டு டூயட்டுக்கு மகேஷுடன் ஆடிவிட்டுப் போகிறார்.
 திரைக்கதையைச் சீராக அமைக்காமல், ஆங்காங்கே தாவித் தாவிச் செல்வது போன்ற உணர்வைத் தருவதால் படத்துடன் ஒன்றவைக்கத் தவறியிருக்கிறார் இயக்குநர் பாலாஸ்ரீராம்.
 "இரவும் பகலும் வரும்'தான் -
 ஆனால், இப்படி வருமா?  நன்றி - தினமணி



உறுமீன் - ஹீரோவும் வில்லனும் கடைசி வரை சந்திக்காத வித்தியாசமான திரைக்கதை - இயக்குநர் சக்திவேல் பெருமாள்சாமி. பேட்டி

எல்லோருமே உறுமீனுக்காக காத்திருப்பவர்கள்தான்!

வித்தியாசமான முயற்சிகளுக்குத் தமிழ் சினிமாவில் எப்போதுமே முதல் இடம் உண்டு. அப்படி எடுக்கப்படும் படங்களும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி தமிழ் சினிமாவுக்கு முன்னோடி முயற்சியாக அமையும். "சேது', "சுப்ரமணியபுரம்', "மூடர்கூடம்' என்று இங்கே ட்ரெண்ட் செட்டராக அமைந்த படங்கள் நிறைய இருக்கிறது. அப்படியொரு முயற்சியாக "உறுமீன்' படத்தை இயக்கி வருகிறார் சக்திவேல் பெருமாள்சாமி. அறிமுக இயக்குநர்தான். ஆனால், அனுபவ இயக்குநர் போல பேசுகிறார்.
 ""சினிமா பின்புலம் இல்லாத குடும்பம், ஆனால், எனக்கு சினிமா ஆசை நிறைய இருந்தது. வீட்டில் எடுத்தவுடன் "சினிமாவுக்குப் போறேன்னு' சொன்னால் ஏற்றுக்கொள்வார்களா? என்ற தயக்கம். அதனால், சினிமா பற்றிய தொழில்நுட்பம் சார்ந்து படிக்கலாம் என்று நினைத்தேன். பி.எஸ்சி., விஷூவல் கம்யூனிகேஷன் படித்தேன். குறிப்பாக, எடிட்டிங் துறையில் பயிற்சி பெற்றேன்.
 எனக்கு, உதவி இயக்குநராக ஒருத்தரிடம் இருந்து, வேலை பார்க்கவேண்டும் என்று தோன்றவில்லை. காரணம் கோயம்புத்தூரில் இருந்து வருகிறோம். இங்கே வந்தால், சாப்பாட்டுக்கும், வாழ்க்கையை நகர்த்துவதற்கு பெரிய போராட்டம் இருக்கும் என்று தெரியும். அதனால் தொழில்நுட்ப ரீதியாக சினிமாவில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.
 நான் சென்னைக்கு வந்த நேரத்தில் எடிட்டிங்கில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தது. அதாவது கணினி மயமான எடிட்டிங். அப்போது திரைப்படத்துறையில் இருந்த பழைய எடிட்டர்களுக்கு எங்களுடைய உதவிகள் தேவையாக இருந்தது. ஏனெனில், அவர்கள் கணினி எடிட்டிங் கற்றுக்கொண்டிருந்தார்கள். நாங்கள் கற்றுக்கொண்டு உள்ளே வந்தோம். இது சினிமாவில் இருப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும் எனக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது.
 தொடர்ந்து, தியேட்டரில் சினிமா ஆபரேட்டராக இருக்க வாய்ப்பு அமைந்தது. இதுவும் சினிமாவைக் கற்றுக்கொள்ள உதவியது. இந்தமாதிரியான காலகட்டத்தில் விளம்பரப் படங்கள் நிறைய பண்ணினேன். கணினிமயமான எடிட்டிங்கில் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அவுட்புட் தரமுடியும். மறைந்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஜீவாவின் படங்களில் இப்படியான பணி செய்யும் வாய்ப்புகள் எனக்கு அமைந்தது. அவர் படத்தில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அதை ஸ்பாட்டில்தான் எடிட் பண்ணுவோம். இந்த மாதிரியான வாய்ப்புகள் எனக்கு நல்ல அனுபவங்களைத் தந்தது.
 அப்போது கிடைந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு இயக்குநராக முயற்சி பண்ணினேன். இந்த சமயங்களில் "புகைப்படம்', "மாலை பொழுதின் மயக்கத்திலே', அப்புறம் ஒரு கன்னடப்படம் என மூன்று படங்களில் உதவி இயக்குநராகவும் இருந்தேன். இந்தப் படங்கள் பெயர் சொல்லும்படி இல்லாமல் இருக்கலாம். என்றாலும், அவை எனக்கு முக்கியமான படங்கள்தான்'' என்று நிறுத்தியவர், தான் தயாரிப்பாளர்களை அணுகிய விதத்தை விவரித்தார்.
 ""ஒரு தயாரிப்பாளரிடம் கதையைச் சொல்வதைக் காட்டிலும், அதை ஒரு குறும்படமாக, அல்லது டிரெயிலராகக் காட்டினால் நன்றாக இருக்கும். அந்த மாதிரிதான் நிறைய புது இயக்குநர்கள் முயற்சித்து வந்தார்கள். நான் என்னுடைய கதைகளை சின்னச் சின்ன டிரெயிலராக ரெடி பண்ணி தயாரிப்பாளர்களிடம் காட்டினேன்.
 இப்படி உருவானதுதான் "உறுமீன்' படத்தின் கதையும். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என் நண்பர்தான். இவர் மட்டுமல்ல... இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர்,படத்தொகுப்பாளர், கலை இயக்குநர் எல்லோரும் நண்பர்கள்தான். உதவியாளர்கள் நிலையில் இருந்து அப்படியே ஒரு படத்துக்குள் நுழைந்தோம். அதனால் எனக்கு எல்லாமே ஈஸியாக இருந்தது'' என்றவரிடம், "படத்தின் கதை என்ன?' என்று கேட்டோம்.
 ""இது கற்பனைக்கு எட்டாத உலகம் இல்லை. எல்லாமே நம்முடைய கற்பனைக்குள் இருப்பதுதான். உயிரற்ற ஒரு பொருள் ஃபேண்டஸியாக மாறும் போது, எப்படியிருக்கும்? இந்தமாதிரியான கதையை நிறைய பேர் ட்ரை பண்ணியிருக்கிறார்கள். நான் எதையும் புதுசாக சொல்லவில்லை. நான் இதுக்குள் சொல்லுகிற விஷயம், இரண்டு பெரிய விஷயங்கள். ஒன்று வனம். இன்னொன்று ஒரு பெரிய நகரம். இந்த இரண்டையும் ஒரு ஒப்பீடாக வைத்துக்கொண்டு படத்தின் கதையை உருவாக்கியுள்ளேன்.
 வனம் என்பது பச்சை. நகரம் என்பது என் பார்வையில் இருட்டு. இந்த இரண்டுக்கும் இருக்கிற ஒரு தொடர்பு. இது ரொம்ப பெரிய விஷயம்தான். ஆனால், அதை லேசாக தொட்டிருக்கிறேன்.
 இந்தியாவுக்குள் கார்ப்பரேட் வளர்ச்சி எப்படியெல்லாம் உள்ளே நுழைந்தது? இதனால் நாம் என்னென்ன பிரச்னைகளைச் சந்தித்திருக்கிறோம்? அடைந்திருக்கும் நன்மைகள் என்ன? இதையெல்லாம் மேலோட்டமாக படம் பேசும். விளைவுகளைப் பற்றி பேசவில்லை. ஆனால், சில உண்மைகள் இரக்கமற்றதாகச் சுடும்.
 நீங்கள் காலையில் ஒரு தேநீர் கடையில் தேநீர் பருகுகிறீர்கள். 19 ரூபாய் பில் வந்தது என்றால், ஒரு ரூபாய் சில்லரை இல்லை என்று சாக்லேட் தருகிறான் கடைக்காரன். நமக்கு அது வேண்டுமா.. வேண்டாமா.. என்றாலும் அது திணிக்கப்படுகிறது. சமீபத்தில் இந்தியாவில் மட்டும் 2014ஆம் ஆண்டில் சாக்லேட் விற்பனை ரூ. 10,000 கோடி என்று புள்ளி விவரம் சொல்கிறது. இதில் 10 சதவிகிதம் சாக்லேட் திணிக்கப்பட்டதுதான். இது ஒரு கார்ப்பரேட் கலாசாரம்.
 இந்த மாதிரி வலிய திணிக்கப்பட்ட பொருளாதார விஷயங்களை மேலோட்டமாகச் சொல்லாமல், பிரச்னையாக சொல்கிறோம். இது என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும்? இந்தப் புள்ளிதான் "உறுமீன்'. பாடம் நடத்துறது மாதிரி இருக்காது. பக்கா கமர்ஷியல் ஃபிலிம்''.
 "யார் யார் நடிக்கிறார்கள்?'
 ""இதில் நாயகன், நாயகி என்று யாரும் கிடையாது. படத்தின் போக்கில் கேரக்டர்கள் வந்துபோகும். முக்கியமான பாத்திரத்தில் பாபி சிம்ஹா. இவருக்கு ஜோடியாக ரேஷ்மி மேனன். இன்னொரு பாத்திரத்தில் "மெட்ராஸ்' கலையரசன். இவர்தான் படத்தின் மெயின் வில்லன். இவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு கதை இருக்கும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பாபி சிம்ஹாவும் கலையரசனும் இறுதி வரை சந்தித்துக்கொள்ளவே மாட்டார்கள்.
 நாம் ஒருத்தரை நெகட்டிவ், பாசிட்டிவ் என்று நினைக்கிறோம். ஆனால், அவர்களைப் பொறுத்தவரை அது பாசிட்டிவ்தான். அவர்கள் செய்யும் செயல்கள்தான் பிரச்னையாக மாறுகிறது. இந்தக் கண்ணோட்டம்தான் படம் முழுக்க இருக்கும்.




 உலகத்திலே அதிவேகமான வேட்டை, கொக்கு மீனை கொத்துவதுதான். 29 நொடிகளில் அது நிகழ்கிறது. அதிலும் முக்கியமான இன்னொரு விஷயம், மீன் சாகப்போறது மீனுக்கே தெரியாது. கொக்கோட வயிற்றுக்குள் சென்றுதான் சாகும். "ஓடு மீன் ஓட, உறுமீன் வரும் வரையில் காத்திருக்குமாம் கொக்கு' என்பார்கள். மற்ற எல்லா வேட்டையையும்விட இந்த வேட்டைதான் வேகமான வேட்டை. இது எப்படி கண நேரத்தில் நடக்கிறதோ, அதுபோலத்தான் வாழ்க்கையில் சில பொருளாதார விஷயங்கள். கால்சென்டர் பின்னணியில் படம் நடக்கிறது. அங்கு என்ன மாதிரியான வாழ்க்கைச் சூழல் இருக்கிறது என்பதையும் சொல்லியிருக்கிறோம். அவ்வளவுதான். இங்கே எல்லோருமே "உறுமீனுக்காக காத்திருப்பவர்கள்தான். கொக்கு வேட்டையின் 29 நொடிப் பயணம் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான விஷயமாக இருக்கிறது. அதனால்தான் படத்துக்கு "உறுமீன்' என்று தலைப்பு வைத்திருக்கிறோம்'' என்கிறார் படத்தின் இயக்குநர் சக்திவேல் பெருமாள்சாமி.
 - மன்முருகன்  


 நன்றி  - தினமணி




















சுனாமி அலை .குஷ்பூ

1  சொன்னதை செய்கிறார் ரஜினி : ஏ.ஆர்.முருகதாசுடன் இணையும் ரஜினி # பாட்ஷா ,படையப்பா ,மன்னன் போல் சீன் பை சீன் அப்ளாஸ் தான்



=============



2 மோடியை ஒவ்வொரு வீடாகக் கொண்டு போய் சேர்ப்பேன்#H.ராஜா# நாடு நாடா ரவுண்ட் அடிச்ட்டிருக்காரு.இனி வீடு வீடா வரனும்னா எலக்சன் தான் வரனும்



================



3 மிஷ்கின் இயக்கத்தில் சரத்குமார் # டைட்டில் ஒரு ஆம்பள ஆட்டுக்குட்டியும் நாட்டாமை குட்டியும் ?வில்லன் விஷால்.ஹீரோயின் வரலட்சுமி?




===============



4 தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது #.பன்னீர்செல்வம்# எல்லாப்பூங்காவிலும் பூங்காவனங்களோட முக்கல் முனகல் சத்தம்தான் கேட்குது




================



5 மோடியின் பயணத்தால் இலங்கைத்தமிழர்க்கு விடிவுகாலம் # விடிகாலைல இலங்கை போய்ச்சேர்றாரா?,சரி சரி"



=============



6 வயாகரா மாத்திரை ‘அதுக்கு’ மட்டுமில்லை... கேன்சரையும் குணமாக்குமாம்! # போச்சுடா.இனி மெடிக்கல்ஷாப்ல பரிதாபமா பார்ப்பாங்களே?




=============



7 திமுக தலைவர் எங்களை பார்த்து பயப்புடுகிறார் - தமிழிசை # கலா மாஸ்டரைப்பார்த்தே பயப்படாதவர்மா



==============



8 கோடீஸ்வரர்களிடம் இல்லை. உங்களிடம் நிதி கேட்டு நிற்கிறேன்:- கருணாநிதி கடிதம் #,கருணை இருக்கிறது ஆனா நிதி இல்லைனு சொல்லிடப்போறாங்க




=================




9 அமெரிக்காவில் படமாகும் விஜய் 60! # இதான் சாக்குனு விமர்சனத்தில் விஜய் நடிப்பு அமெரிக்கையா இருந்ததுனு அடிச்சு விட்ரப்போறாங்க




=============



10 மன்மோகன்சிங் நாணயமிக்கவர்-சோனியாகாந்தி# நாணயம் இல்லா நா நயம் இல்லா நாணயம்




===================




11 இங்கு ,விமர்சகர்கள் அதிகம்.எல்லாரும் எல்லாத்துக்கும் கருத்து சொல்லணும்னு நினைக்கிறாங்க-ராதாமோகன் # சார்.நான் என்ன நினைக்கறேன்னா...



=====================




12 மன்மோகன்சிங் நாணயமிக்கவர் -சோனியாகாந்தி# ரைட் பர்சன் இன் ராங் ப்ளேஸ்




=================




13 பிள்ளைகளுக்கு மோடி என்று பெயர் வையுங்கள். -- தமிழிசை # பொண்ணு பிறந்தா   லேடின்னு  வைக்கனுமா? என்னம்மா?இப்டி பண்றீங்களேமா?




====================





14  பிள்ளைகளுக்கு மோடி என்று பெயர் வையுங்கள். -- தமிழிசை # 2  பசங்க  பிறந்தா  சின்ன  மோடி , பெரிய  மோடின்னு  வைக்கனுமா?




====================




15  ராகுல் பின் இளைஞர்கள் எல்லோரும் செல்ல வேண்டும் - குஷ்பூ # கூகுள் ல மூழ்கி இருக்கறவங்களை ராகுல் பின் செல்லச்சொன்னா எப்டி?




==================




16 ஜெ  சொத்துகுவிப்பு வழக்கில் நீதி வெல்லும்.- கருணாநிதி.////#  தலைவா! 2ஜி  வழக்கில் , 200கோடி கலைஞர் டிவி  வழக்கில் கூட இது அப்ளிக்கபிளா?




======================




17  படத்தை கேவலம் என்றால் பணம் போட்ட தயாரிப்பாளர் என்ன ஆவார்- சிம்பு

# போண்டி ஆவார்.இது கூடத்தெரியாம


===============


18 அரசியல் விவகாரங்கள் குறித்து நானும் ஸ்டாலினும் ஆழமாக பேசிக்கொண்டிருந்தோம் -மனுஷ்யபுத்திரன்.# நீங்க சாதாரணமாப்பேசுனாலே புரியாது.இதுல ஆழமாவா


============

19 விஜய்யுடன் நடிக்கும் பாரதிராஜா-லேட்டஸ்ட் தகவல்!
# நல்ல வேளை.பாரதிராஜாவுடன் விஜய் நடிக்கும் னு நியூஸ் போடலை.ராங்க் ஆகி இருக்கும்


===============


20 எனக்கு கராத்தே தெரிந்ததால் சுனாமி அலையைத் திருப்பி விட்டேன்:ஹூசைனி # நல்ல வேளை குங்க்பூ தெரியல.குஷ்பூவை திருப்பி விட்ருப்பீங்க


==============