Friday, March 27, 2015

சத்யராஜ் ரஞ்சிதா வுக்கு எழுதிய லெட்டர்! நித்தியானந்தா அதிர்ச்சி

1  டெய்லி ஏதோ மென்சன் போட்டுட்டே இருக்கானே ஏதோசொல்லி சமாளிப்பம்னு பொண்ணு "உங்க அன்புக்கு நன்றி"னு சொல்லி கட் பண்ணா புளகாங்கிதப்படுவான் தமிழன்



===========




2 மாபெரும் சபை தனிலே மாநிலம் போற்றும் பிகராய் இருந்தாலும் உன் கெத்தை விட்டுக்கொடுத்து விடாதே!




============



3 ஆபீஸ் டைம்க்கு 10 நிமிசம் முன்னாடியே வந்து சக பணியாளியினி உடன் கடலை போட்டால் அது தான் அவுட் ஸ்டேண்டிங் பர்பார்மென்ஸ்




================




4 மைனா UKG ன்னா மெட்ரிகுலேஷன் ஸ்கூல் டீச்சராவும் இருக்கலாம்




=============




5 மாடு கிட்டே போய் “ மாடே, என்னை முட்ட வராதே”

கொசு கிட்டே போய் “கொசு, என் கிட்டே வராதே”-ன்னு ஆண் சொன்னா மொக்கை, பெண் சொன்னா கவித


=============


6 fbல ஒரு பொண்ணு டெய்லி 10 நிமிஷத்துக்கு ஒரு ஸ்டேட்டஸ் போட்டுட்டு இருக்கு.ஒரு தமிழன் “ ஹாய் மிஸ்! லாங்க் டைம் நோ ஸீ?”ங்கறான். டேய்


=============

7 25 வருசமாபேணிகாத்து வளர்த்த பெற்றோரை கிஞ்சித்தும் மதிக்காமல் 25 நிமிசம் பழகுன ஃபிகர் கிட்டே “.உங்க பேச்சை மீறமாட்டேன்”பான் தமிழன்


=============

8 அயர்லாந்தே! இன்னைக்கு உன்னை அயர்ன் பண்ணப்போறோம்


============

9 இப்போதான் தாமரையோட தியாகுவைபார்த்தேன். தமிழ்த்தாத்தா மாதிரி வயசான போல்ட்.இதுக்குத்தானா ஆசைப்பட்டாய் தாமரை குமரி?


=================

10 அழகிய செல்வச்சீமாட்டிகள் வாட்ச்மேன் மாதிரி வயசான ஆளுங்க கிட்டே தெரிஞ்சே போய் மாட்டிக்கறாங்க, அது எனோ?


=============

11 உன் காதலி யின் பெயர் புவனா எனில் நீ செல்லமா புவின்னு கூப்பிடலாம், ஆனால் பாவனா எனில்செல்லமா பாவி-ன்னு கூப்பிட முடியாது


=============


12 நரி இடம் போனா என்ன? வலம் போனா என்ன..??னு நாம சும்மா இருந்துடக்கூடாது.யாரா இருந்தாலும் கீப் லெப்ட் னு சொல்லிடனும்



==============


13 ஒரு ஜாண் விட்டம் உள்ள ஆனியன் போண்டாவைக்கூட அரை இஞ்ச் அளவு மட்டும் உதடு திறந்து சாப்பிட்டு விடும் பெண்ணின் நளினம் அபாரம்

==============

14 அயர்லேன்ட் டயர்ட்லேன்ட்
இந்தியா -பயர் லேன்ட்


===========

15 பன்றிக்கறி சாப்பிடுபவரை pigகாலிப்பயலே னு சொல்ல முடியாது.pig கை காலி பண்ணின பயலேன்னு வேணா சொல்லலாம்


===============



16 சூர்யாவும் ஸ்ருதிஹாசனும்  டி எல்லில் ” ரிசப்ஷன்  கடலை ” போட்டுட்டு  இருக்காங்க.அதை 900  பேர்  ஆர் டி. தமிழேண்டா




=========================




17  அபிராமி “உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்ல”னு பாடுனப்போ கமல் நேர்மையா”சத்யராஜ்,அமிதாப் பத்தி  சொல்லி  இருக்கனும்




===================




18  அமைதிப்படை  சத்யராஜ்  ரஞ்சிதா வுக்கு  இப்போ  லெட்டர்  எழுதுனா

நலம். நலம் அறிய  அ(ல்)வா!

============================


19  ஸ்கூல் ,காலேஜ் ,ஆபீஸ்ல லீவ் எடுக்கும்போதெல்லாம் பர்மிசன் இல்லாம சவுகர்யத்துக்கு லீவ் எடுத்துட்டு FBல ல

லீவ் மட்டும் பாலோயர்ஸ்ட்ட பர்மிசன் கேட்பான் தமிழன்

================


20 வெட்டியா கடலை போடறதுக்கு இதோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ வந்துட்ட்ட்டேஏஏஏன்ன்ன்"னு ஓப்பனிங் பில்டப் கொடுப்பார் சிட்னி தமிழர்


==============

Thursday, March 26, 2015

கள்ளப்படம் - சினிமா விமர்சனம் ( மா தோ ம)

திரைப்படம் எடுப்பதைப் பற்றிய இன்னொரு படம் ‘கள் ளப்படம்’. சினிமாவையே சுவாசிக்க விரும்பும் இளைஞர்க ளின் வேகத்தையும் வலியையும் சொல்லும் இந்தக் கதை, வாய்ப்புக் கிடைக்காத பட்சத்தில் சினி மாவுக்காகக் கள்ளத்தனம் உட்பட எதையும் செய்வார்கள் என்றும் சொல்கிறது.
கூத்துக் கலைஞரான தன் தந்தையின் கதையைப் படமாக எடுக்க வேண்டும் என்பது வடிவேலின் கனவு. கோடம்பாக்கத் தில் அவர் தட்டாத கதவு இல்லை. யாரும் இவரை மதிக்கத் தயாராக இல்லை. ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் சீறி எழும் வடிவேல், தனக்கு வாய்ப்புத் தர மறுக்கும் தயாரிப்பாளரின் வீட்டிலேயே கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறார்.
அந்தத் தயாரிப்பாளருக்கு ஒரு ரகசியக் காதலி. அவர் முன்னாள் ஹீரோயின். அவருக்கு ஒரு காதலன். தயாரிப்பாளரின் சொத் தைக் காதலன் உதவியுடன் கொள் ளையடிக்க வேண்டும் என்பது அவர் திட்டம். சினிமா குழுவும் முன்னாள் ஹீரோயின் குழுவும் ஒரே நேரத்தில் திட்டம் போடுகிறார்கள். இதனால் ஏற்படும் குழப்பம், காணாமல் போகும் பணம், போலீஸ் நடவடிக்கை என்று விறுவிறுப்பாக நகரும் படத்தில் வடிவேலின் கனவு பலித்ததா என்பதையும் சொல் கிறார் இயக்குநர்.
தயாரிப்பாளர் வீட்டில் கொள் ளையடிக்க நால்வர் போடும் திட்டம் திகில் படம்போல வேகமாகக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. கொள் ளையடிக்கும்போது தயாரிப்பாளர் வீட்டில் இருக்கக் கூடாதே என்று முதலில் அவரது காதலியைக் கடத்துகிறார்கள். அவரைப் பணய மாக வைத்துக்கொண்டு 20 லட்சம் கேட்க, “20 லட்சமா.. அதுக்கு எல்லாம் அவ வொர்த்தே இல்ல” என்று சொல்லி தயாரிப்பாளர் அதிர்ச்சி கொடுப்பது சுவாரஸ்யம் என்றால், அவரை மடக்க இவர்கள் சொல்லும் விஷயம் அட்டகாசமான சரவெடி.
நடிப்பில் முத்திரை பதிக்கும் கே, பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் இயல்பான ஓட்டத்தைச் சரி யாக படம்பிடித்திருக்கிறார் ஒளிப் பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ்.
ஆங்காங்கே சுவாரஸ்யமான அம்சங்களும் த்ரில்லும் இருந் தாலும் மெதுவாக நகரும் முதல் பாதி, படத்தின் பெரிய குறை. நடன மாடாமல் இருப்பதன் காரணத்தை நாயகன் தெரிவிக்கும் இடம் மனதைத் தொடுகிறது. பல இடங் களில் கதாபாத்திரங்களின் நடிப்பை விட அவர்கள் பேசும் வசனம் மட்டுமே மனதில் நிற்கிறது.
புதிய இயக்குநர் வடிவேல், மிஷ்கினிடம் உதவியாளராக இருந்தவர். பத்திரிகையாளராகவும் இருந்தவர்... நடிப்பிலும் நேர்த்தி காட்டியிருக்கிறார். அதற்காக மிஷ்கின் படத்தில் இடம்பெறும் குத்துப் பாடலைப் போலவே ஒரு பாடலை வைக்க வேண்டுமா என்ன? தனது உதவியாளருக்காக ‘வெள்ளக்கார ராணி’ பாடலை எழுதியதோடு, பாடியும் கொடுத் திருக்கிறார் மிஷ்கின்.
படத்தின் இயக்குநர், ஒளிப்பதி வாளர், எடிட்டர், இசையமைப்பாளர் ஆகியோரே பிரதான கதாபாத்தி ரங்களில் நடித்திருப்பது புதுசு. அதிலும் இசையமைப்பாளர் கேவின் நடிப்பு கச்சிதம்.
இரண்டு காட்சிகளே வந்தாலும், செந்தில் நம் மனதைக் கொள்ளை கொள்கிறார். மார்க்கெட் போன நாயகியாக லட்சுமி ப்ரியா தோற்றத்தாலும் நடிப் பாலும் கவர்கிறார். நரேன் வழக்கம் போலவே வலுவான நடிப்பைத் தந்திருக்கிறார். சிங்கம்புலி, படத்தில் சிங்கம்புலி என்ற கதா பாத்திரத்திலேயே நடித்திருக்கிறார்.
இயக்குநரின் தாகத்தையும் வேதனையையும் சொல்லும் படம், போட்ட பணத்தை எடுக்க முடியுமா என்று யோசிக்கும் தயாரிப்பாளரின் நியாயத்தையும் பதிவுசெய்கிறது. திரைப்படம் எடுப்பது என்னும் கனவுக்குப் பின்னால் உள்ள வலியையும் வாழ்க்கையையும் கிட்டத்தட்ட திகில் படம் போன்ற விறுவிறுப்புடன் படமாக்கியிருப்பது பாராட்டத்தக்கது. முதல் பாதியை யும் வேகமாக்கியிருந்தால் ‘கள்ளப்படம்’ மனதை முழுமை யாகக் கொள்ளை கொண்டிருக்கும்.



மனதைக் கவர்ந்த  வசனங்கள்



கூத்துகதையா?அதெல்லாம் மலையாளத்துக்காரன் தான் ரசிப்பான்.நம்மாளுங்க பார்க்கமாட்டாங்களே ?#,க ப


2 சினிமாக்்காரங்களுக்கு சாப்பிட காசு இருக்கோ இல்லியோ டீ க்கும் பன் க்கும் காசு இருக்கு # க ப




3 நாட்ல பிச்சைக்காரனுக்குக்கூட பொண்ணு தர்றானுங்க.சினிமாக்காரனுக்கு பொண்ணுத்தர மாட்டேங்கறாங்க # க ப




==4 வாழ்க்கைல ஜெயிக்கனும்னா ஜெயிச்சவங்களை மட்டும்தான் ரோல் மாடலா எடுத்துக்கனும்னு அவசியம் இல்லை.தோத்தவங்களையும் ரோல் மாடலா எடுத்துக்கலாம#க ப்



5 நீ எப்படி ஜெயிச்சே?னு உலகம் ஆராய்ச்சி செய்யாது.ஜெயிச்சியா?இல்லையா?னு தான் பார்க்கும் #,க ப








சி  பி  கமெண்ட்  =கள்ளப்படம் = முன் பாதி சராசரி ,பின் பாதி ராபரி த்ரில்லர்,ஏ சென்ட்டர் ரசிகர்களுக்கான படம்.விகடன் மார்க் =40 .ரேட்டிங் = 2.75 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 40



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) =ஓக்கே



 ரேட்டிங் = 2.75 / 5


நன்றி -த  இந்து 


மா தோ  ம  =  மாற்றான்  தோட்டத்து  மல்லிகை


அகல நமீதா

1  சேரனின் டிவிடி முதல் நாளில் மட்டும் 10 லட்சம் டிவிடி விற்று 5 கோடி வசூல்.இனி மவுத் டாக் மூலம் 20 லட்சம் டிவிடி விற்றால் போதும்



============



2  பட்டுப்புடவை , நகைகள் , ஒப்பனை  உதவியுடன் பெண்கள்  பெறும்  மதிப்பை  ஒரே ஒரு வெள்ளை  வேட்டி சட்டையால்   ஆண்கள்  திருமண மண்டபத்தில் பெறுவர்




===============




3  மார்க்  கம்மியா கொடுத்ததால  அழும்  பொண்ணுகிட்டே  “எதுக்கு அழறே?ன்னு  கேட்டு  எச்சா  அழ வைக்கறான், டேய்  விடுங்கடா # மானாட மயிலாட




======================




4  சாதாரணமா   ஒரு  கருத்தை சொன்னதும்  பிரமாதம்  மேடம்னு  கை கொடுக்கறார்  கோபிநாத். செம  டெக்னிக்# நீயா? நானா?




================




5  உடல் நலனுக்கு ஊறு விளைவிக்கும் ஊறுகாயை சாப்பிடாதீங்கன்னா தமிழன் அதிகாலை 4 மணிக்கே சமையல் டிப்ஸ் கொடுத்துட்டிருக்கான்(ர்)



==============


6 நேத்து விடுபட்டுப்போன ,சொல்ல மறந்த பொண்ணுங்களுக்கு எல்லாம் இன்னைக்கு வாழ்த்து சொல்வான் தமிழன்


=============

7 பொண்டாட்டிங்க புருசன் கூட சண்டை போடும்போது சப்போர்ட்டுக்கு மக வேணும்னு முன் கூட்டியே ஆதரவு வேணும்னு குழந்தைகிட்டே சொல்லி வெச்சுடுவாங்க



=============

8 விடிய விடிய பொண்ணுங்களை கழுவி கழுவி ஊத்திட்டு விடிஞ்சதும் ,மப்பு தெளிஞ்சதும் "எனக்கு பொண்ணுங்க மேல மரியாதை இருக்கு"ம்பான் நெட் தமிழன்


===============

9 தாமரைக்கு ஆறுதல் சொல்ல நம்மாள் கவுதம் மேனன் அவர் பட ஹீரோ போல் கிளம்பி இருக்கனுமே இந்ந்நேரம்

============

10 நேற்று வசீகரா என் நெஞ்சினிலே என உருகிய உன் காதலி இன்று ச்சீ போடா என உதறினால் வருத்தப்படாதே தோழா! இது உலக நியதி!


============

11 ஆச்சி மிளகாய்த்தூள் விளம்பரத்தில் தேவயானியின் அன்னியோன்ய நடிப்பு டாப்.ராஜகுமாரனே பாராட்டி இருப்பாரு

=============

12 நல்ல வேளை மகளிர் தினம் லீவ் நாள் ல வந்துச்சு.இல்லைன்னா ஆபீஸ் ல மொள்ளமாரிப்பசங்க பொண்ணுங்களுக்கு கை குலுக்கி வாழ்த்து சொல்லி இருப்பானுங்க


==============


13 8 வது மாடில இருந்து ஒரு பொண்ணு பால் பாக்கெட்க்கு கொக்கி மாட்ன கயிறை விட்டுது.ஒரு கவிதை எழுதி போட்டு விட்டேன்.பேவரைட் பண்ணுமா தெரில

===========

14 மீன ராசி அன்பர்களே! இன்னைக்கு உயரமான இடத்துக்குப்போவீங்க.அப்டிப்போகலைன்னா ராட்டன் தூரியில் ஒரு ரவுண்ட் போகவும்


==============

15 திருமணம் ஆகி ஒரு வருசம் ஆன பின் உன் இல்லத்து அரசி இம்சை அரசி ஆவதைக்காண்பாய்!


===========

16 குழந்தை,சம்சாரம் கூட விளையாடும்போது குழந்தை எப்படா அட்டாக் சொல்லும்னு காத்திருந்து பொண்டாட்டி மண்டைல நங்குனு கொட்டுன சமூகம்யா நாம


=============

17


டிஎம் ல புரப்போஸ் பண்ணி செம மாத்து வாங்கிட்டு டி எல் ல அதே பொண்ணைப்பத்தி தப்புத்தப்பா கருத்து சொல்வான் நெட் தமிழன்



==================

18 காதலன் ஆசையா ஸ்வீட் வாங்கிக்கொடுத்தாக்கூட இந்தப்பொண்ணுங்க FBல.அவனதி"காரம்"னு தான் அப்டேட்டறாங்க.பின் இணைப்பா நோ கமெண்ட்ஸ்


==============


19 எந்த டைம் ல எந்த பொண்ணு எந்த இடத்துக்கு வந்தாலும் சரிஉடனே " உன்னலாம் என் மனசுல எங்கே வச்சுருக்கேன் தெரியுமா?"னு அடிச்சு விடுவான்் தமிழன்

=============


20 10  வருசம் முன்  நாம  எப்படி  இருந்தோம், இப்போ எப்டி  மாறிட்டோம்னு  நினைச்சுப்பார்க்காம  நமீதா  அகலநமிதா ஆனதுக்கு ஆழமா வருந்துவான் தமிழன்


======================

கை முறுக்குத்திருடனும் , தமிழ் டீச்சரும் டி எம்மில் பேசியது என்ன? அட்ராசக்க அம்பலம்

1  உங்க காதலை ஏத்துக்கனும்னா எனக்காக ஏதாவது தியாகம் செய்யனும்.



தியாகம் செய்ய மாட்டேன்.அதே சமயம் தியாகு போல் விட்டுட்டு ஓடிட மாட்டேன்



===============

2 எனக்கு எதிரியை  அழிச்சோ, அடிச்சோ  பழக்கம்  இல்லை, அணைச்சுப்போய்த்தான்  பழக்கம்.

ஏன்?

 ஏன்னா  என்  எதிரியே  என்  சம்சாரம் தான்


===============


3  அத்தான்,அர்ஜெண்ட்டா  எனக்கு   குழந்தை  வேணும்


எதுக்கு?

குட்டீஸ் சுட்டீஸ்  நிகழ்ச்சில  கலந்துக்க 


=================


4  டொக்  டொக்

யார்யா  அது? நடு  ராத்திரில  அதுவும்  முத ராத்திரில?

நாங்க  “நடுவுல  கொஞ்சம்  டிஸ்டர்ப்  பண்ணுவோம்” டீம்ல  இருந்து வாரோம்


====================


5  அத்தான்! அவரை  பிடிக்கும்னேன், அப்பா அவரைக்காய் சாம்பார்  வெச்சுத்தந்தார்

ஓஹோ! உங்க  ஃபேமிலில  லேடீஸ்ங்க  யாரும்  சமைக்கவே  மாட்டாக?


==================



6  DR,திருப்பதி லட்டு ,பழநி பஞ்சாமிர்தம் அடிக்கடி சாப்ட்டா சுகர் வருமா?



ஆமான்னு சொன்னா சாமி குத்தம் ஆகிடும்.இல்லைன்னா தொழில் தர்மம் போய்டும்.


===========


7 மிஸ்! உங்க ஸ்கூட்டி நல்ல கண்டிஷன்லதானே இருந்துது.ஏன் வித்துட்டீங்க?


ஆபீஸ்ல "ஆக்டிவ்வா"இருந்தாதான் இன் க்ரீமென்ட்னாங்க


============


8 சார்.முதல்வன் ,தோரணை 2 பட டிவிடியும் எதுக்கு கைல வெச்சிருக்கீங்க?


முதல்வன் தோரணை யே என் கிட்டே இல்லைனு யாரும் சொல்லிடக்கூடாதுனுதான்

=============


9 சார்.உங்களுக்கு ராக்கிங் ஸ்டார் னு எப்டி பட்டப்பேர் கிடைச்சது?



வர்றவன் போறவன் எல்லாம் என்னை ராக்கிங் பண்ணிட்டுப்போவான்


===============

10 எந்தக்கேள்வி கேட்டாலும் தெரியாதுன்னு பதில் சொல்றியே?ஏன்?



டீச்சர்.பொண்ணுங்களுக்கு தெரியும்னு சொல்றவனைவிட தெரியாதுன்னாத்தான் பிடிக்குமாமே?


==============

11 டாக்டர்! ஹை ஹீல்ஸ் போடுற பெண்களுக்கு ஹைட்டோட சேர்ந்து தைரியமும் அதிகமாகிடுமா?

பேக் பெய்னும், குதிகால்  வலியும்  அதிகமாகும்



================

12  மேடம்.பாட்டுப்பாடும்போது ஏன் லட்டு சாப்பிடறீங்க?


அப்போ தான் ஸ்வீட் வாய்ஸ்னு சொல்வாங்க

=============


13 பூக்கடைல வந்து ட்ரையர் இருக்கா?னு கேட்கற?


ஏம்மா! உதிரிப்பூவை தண்ணில முக்கி வெச்சிருக்கே.எடை போடும்போது பாதி வெய்ட்டை அதே இழுத்துக்குமே?


==============


14 மல்லிகைப்பூ முழம் எவ்ளவ்?


50 ரூபாங்க.


அடேங்கப்பா.அந்த காசுக்கு மல்லிகைப்பூ மாதிரி 10 இட்லியே சாப்பிடலாமே?
இட்லியை தலைல வெச்சுக்க


=================


15 மேடம்,3 மாசத்துக்கு ஒரு வாட்டி உங்களுக்கு திருமண நாள் வாழ்த்து குவியுதே? எப்டி?



இதுவரை 4 கல்யாணம் பண்ணீட்டேன்,பாசக்காரப்பசங்க


=================

16 பிணங்களின் படங்களை தயவு செய்து பகிர வேண்டாம்



மேடம், நான் நடைப்பிணமா வாழ்ந்துட்டு இருக்கேன், என் ஃபோட்டோவை ஷேர் பண்ணலாமா?


===============


17 டீச்சர். முருக்கு , முறுக்கு எது சரி?


அரிசி முறுக்குன்னா சின்ன ரு , வறுத்த அரிசி முறுக்குன்னா பெரிய று


================

18 டீச்ச்சர். முறுக்கு க்கு சின்ன ரு வருமா? பெரிய று வருமா?


சிம்ப்பிள் . சின்ன முறுக்குன்னா சின்ன ரு, பெரிய முறுக்குன்னா பெரிய று


================

19 இந்தப்படத்துல தற்காப்புக்கலை வீரரா வர்றேன்


உங்களைக்காப்பாத்திக்குவீங்க சரி.படத்தை யார் காப்பாத்துவா?

=================


20 டியர்.நீ போடும் தாவணி தான் என் கட்சிக்கொடி!


நான் தான் தாவணி,துப்பட்டா எதுவும் போடறதே இல்லையே?


==================

Wednesday, March 25, 2015

ட்விட்டரில் கொண்டாட்டம் - 66 ஏ - 144

ட்விட்டர் பகிர்வுப் படங்கள்
ட்விட்டர் பகிர்வுப் படங்கள்
'சமூக ஊடக வெளியில் இந்த அளவுக்கு உற்சாகம் பொங்கியதில்லை' என்று சொல்லக்கூடிய வகையில், இணையவாசிகள் கருத்து சுதந்திரத்தை காக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் சர்ச்சைக்குரிய சட்டப் பிரிவு 66ஏ-வை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை வரவேற்கும் ஹாஷ்டேகுகளுடம் ட்விட்டரில் முன்னிலை பெற்றுள்ளன.
சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துகளை வெளியிட்டால் கைது செய்யப்பட வழிவகுத்த தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் சர்ச்சைக்குறிய 66 ஏ பிரிவை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்து தீர்ப்பளித்தது.
கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவான இந்தத் தீர்ப்பை பல தரப்பினரும் வரவேற்று வரும் நிலையில், இணையவாசிகள் ட்விட்டரிலும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
கருத்து சுதந்திரம் காக்கப்பட்டது எனும் கொண்டாடும் வகையிலும், இனி சமூக ஊடக் கருத்துக்களுக்காக கைது அபாயம் இருக்காது எனும் நிம்மதி உணர்வை வெளீப்படுத்தும் வகையிகும் கருத்துக்கள் அமைந்துள்ளன.
இந்தத் தீர்ப்பு தொடர்பாக ஆயிரக்கணக்கான குறும்பதிவுகள் வெளியாகி வருகின்றன. இந்த கருத்துக்களை தாங்கி வரும் #FreedomOfSpeech, #Sec66A, #SupremeCourt ஆகிய ஹாஷ்டேகுகளும் முன்னிலை பெற்று வருகின்றன.
இவை தவிர இந்த வழக்கை தொடுத்த ஷ்ரேயா சிங்கால் தொடர்பான ஹாஷ்டேகும் பிரபலமாகி இருப்பதுடன் #onlineazadi எனும் ஹாஷ்டேகும் முன்னிலை பெற்றுள்ளது.
பெரும்பாலான குறும்பதிவுகளில் உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இணைய சுதந்திரம் காக்கப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியும் வெளிப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில் துவேஷ கருத்துக்களை வெளியிடாமல் இருக்க வேண்டும் மற்றும் இந்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்னும் கருத்தையும் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
பிரபல எழுத்தாளரான சேத்தன் பகத தனது ட்விட்டர் பக்கத்தில் (@chetan_bhagat) நான் சுந்திரமான நாட்டில் வசிப்பதை நினைத்து மகிழ்கிறேன். #Sec66A இனி இல்லை... என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவாதம் தொடர்பான சில குறும்பதிவுகள் வருமாறு:
* மகத்தான அதிகாரத்துடன், மகதான பொறுப்பும் வருகிறது - @ychunks
* உச்ச நீதிமன்றம் 66ஏ-வை ரத்து செய்துள்ளது. இன்டர்நெட் இன்குலாப் ஜிந்தாபாத். #FreedomOfSpeech ஜெய்ஹோ. உற்சாகம் பொங்குகிறது. - @AKSHAY_PN
* உச்ச நீதிமன்றத்தின் நல்ல தீர்ப்பு. ஆனால் துவேஷ பேச்சை கண்டிக்க வேண்டும் - @kondorpa
* லகான் கிராம மக்கள் போல உணர்கிறேன். ஜீத் காயீ... - @Rahul4Music
* உச்ச நீதிமன்றம் நமது உரிமையை காப்பாற்றியுள்ளது. நாம் பொறுப்புடன் செயல்பட்டு, இதை தவறாக பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் - @Girijabki
* ஷ்ரேயா சிங்காலுக்கு நன்றி. உங்கள் மனு தான் எல்லாவற்றையும் துவக்கியது - @Alexxious
* உச்ச நீதிமன்றம் கருத்து சுதந்திரத்தை காப்பாற்றி உள்ளது- @sushinps
* 66ஏ-வை ரத்து செய்து அனைவரின் கருத்துரிமையை நிலைநிறுத்திய உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி. -@veejaysai
* இன்று #FreedomOfSpeech தினமாக கொண்டாடப்பட வேண்டும் - @gotokrish
* இன்னொரு சுதந்திரம் வாங்கியதற்காக அனைவருக்கும் வாழ்த்துக்கள். உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி - @ani_rocking
சைபர்சிம்மனின் அதிகாரபூர்வ வலைதளம் http://cybersimman.com/


நன்றி - த இந்து