Tuesday, December 12, 2023

PENDULUM (2023) -பெண்டுலம் - மலையாளம் - சினிமா விமர்சனம் ( ஃபேண்ட்டசி த்ரில்லர்) @SAINA PLAY


   இயக்குநர்  ரேஜின்  எஸ்  பாபு  கேரள  மாநிலம், திருச்சூர்  மாவட்டம்  கூர்க்கெஞ்சேரியைச்சார்ந்தவர், இப்படத்தின்  கதையை  பல  நாயகர்களிடம்  சொன்ன போது  ஆர்வமாகக்கேட்டாலும் யாரும் நடிக்க  ஒப்புக்கொள்ளவில்லை.கமர்ஷியல்  சக்சஸ்  ஆவதில்  உள்ள  ரிஸ்க்  தான்  காரணம். பின்  எப்படியோ  ஒரு  டீம்  செட்  பண்ணி  படம்  எடுத்து  விட்டார். 2023  ஜூன்  மாதம்  திரைக்கு  வந்த  இப்படம்  இப்போதுதான்  ஓடிடி  யில்  ரிலிஸ்  ஆகி  இருக்கிறது . 

ஸ்பாய்லர்  அலெர்ட்


சம்பவம் 1 - நடக்கும்  காலகட்டம் 1989  அமீர் - ஏஞ்சல்  இருவரும்  பள்ளியில்  படிக்கும்  மாணவர்கள் .,வயது  தலா  14  இருக்கும்  இதில்  அமீர்   மேஜிக்  தெரிந்தவன். ஊரில்  பலரும்  அவனை  பில்லி  சூனியக்காரன், மனதை  வசியம்  செய்பவன் அவன்  கூட  யாரும்  சேரக்கூடாது  என்கின்றனர் .   ஏஞ்சலின்  அப்பாவுக்கும்  தன்  மகள்  அமீர்  உடன் பழகுவது  பிடிக்கவில்லை ..ஸ்கூலில்  நடந்த  எக்சர்சனில்  வெளி   இடம்  வந்த  மாணவர்கள்  ஜாலியாக  இருக்கின்றனர். ஒரு  விபத்து  நிகழ்கிறது .  ஒரு  இடத்தில்  கீழே விழுந்த  ஏஞ்சல்  எந்த  பாதிப்பும்  இன்றி  மீண்டு  விடுகிறாள், ஆனால்  அமீர்  கல்லில்  தலை  பட்டு  மனநிலை பாதிக்கப்படுகிறான்


 சம்பவம்  2   நடக்கும்  காலகட்டம்  2004 . ஒரு  லாரி  டிரைவரும்  , க்ளீனரும்  லாரியில்  பயணிக்கின்றனர் . லோடு  ஏற்றும்  இடத்தில்  ஒரு  மனநிலை  பாதிக்கப்பட்ட  ஆள்  அவர்கள்  லாரியில்  ஏறிக்கொண்டு  இறங்க  மறுக்கிறான். லோடு  ஏற்றிய  ஆள் அவனை  செல்லும்  வழியில்  எங்காவது இறக்கி  விட்டு விடுங்கள்  என்று  கூறியதால்  அதே  போல்  அவனை  அழைத்துக்கொண்டு  லாரியில்  பயணிக்கிறார்கள் . வழியில்  ஒரு  நாயை  லாரி அடித்து  சாகடிக்கப்போகிறது  என  அந்த   மனநிலை  பாதிக்கப்பட்ட  ஆள்  சொல்கிறான், அதே  போல்  நடக்கிறது.பின்  கொஞ்ச  நேரம்  கழித்து  அடுத்து  ஒரு  மனிதன்  லாரியில்  அடிபடப்போகிறான்  என்கிறான். இருவருக்கும்  பயம்  வந்து  விடுகிறது


 சம்பவம்  3 -  நடக்கும்  காலகட்டம்  2022 -  நாயகன்  டாக்டர்  மகேஷ்  திருமணம்  ஆனவர் . மனைவி , மகள்  உடன் வாழ்கிறார். ஒரு  நாள்  ஒரு  ஜாலி  ட்ரிப்  போகலாம்  என  காரில்  பயணிக்கின்றனர் . வழியில்  அறிமுகம்  இல்லாத  ஒரு  இடத்தில்  தங்க  நேர்கிறது . அப்போது  நாயகன்  டாக்டர்  மகேஷ்க்கு  லாரியில்  அடிபட்டு  ஒரு  விபத்து  நேர்கிறது 


நாயகனின்  மனதில்  ஏற்பட்ட  கனவுகள்  தான்  மேலே  சொன்ன  சம்பவம்  1  & சம்பவம்  2  , ஆனால்  அவை  உண்மையில்  நிகழ்ந்தவை. உண்மையான  கனெக்சன்  என்ன? என்பதை  அறிய  நாயகன்  ஏஞ்சல்  எங்கே  என  விசாரித்து  அவளைக்கண்டு  பிடிக்கிறான். அமீர் - ஏஞ்சல்  இருவரும்  சந்தித்த  இடங்களுக்கு  அழைத்துச்செல்கிறான் . இதற்குப்பின்  நிகழ்ந்த  திருப்பங்கள்  தான்  மீதிக்கதை  .


நாயகன்  ஆக விஜய்  பாபு  நன்றாக  நடித்திருக்கிறார். தாடி  கெட்டப்பில்  உள்ள  சவுகர்யம்  என்ன  எனில்  முகத்தில்  எக்ஸ்பிரசன்  வருகிறதா? இல்லையா? என்பதை  சரியாக  கண்டு  பிடிக்க  முடியாது  ( டி  ஆர் ,பிரபுதேவா  ரசிகர்கள்  மன்னிக்கவும் ) 


நாயகி  ஏஞ்சல்  ஆக அனு மோல்  கச்சிதமான  நடிப்பு .கண்கள், கன்னம் இவரது  பிளஸ்  பாயிண்ட்ஸ் 


நாயகனின்  மனைவியாக  தேவகி ராஜெந்திரன்  கண்ணியமான  தோற்றம், தேவையான  நடிப்பு   என  கொடுத்த  பாத்திரத்தை  சிறப்பாக  ஏற்று  நடித்திருக்கிறார்


அமீர்  ஆக  பினோஜ்  வில்யா  நடித்திருக்கிறார். இவர்  படத்தின்  தயாரிப்பாளர்களில்  ஒருவர் . நாயகி  கூட  டூயட்  பாடி  ஒரு  சீனில்  நடிக்கிறேன்  என  அடம்  பிடிக்கவில்லை 


ஜீன்  பி  ஜான்சன்  தான்  இசை . பிஜிஎம் இன்னும்  பிரமாதப்படுத்தி  இருக்கலாம். சுமார்  ரகம்  தான் ஈ எஸ்  சூரஜ் தான்  எடிட்டிங்க். 100  நிமிடங்கள்  ஓடும்படி  ஷார்ப்  ஆக  ட்ரிம்  செய்து  இருக்கிறார். அருண்  தாமோதரனின்  ஒளிப்பதிவில்  கேரளாவின்  இயற்கை  அழகுகள்  அற்புதமாகப்படம்  ஆக்கப்பட்டுள்ளது 


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்     இயக்குநர்  ரேஜின்  எஸ்  பாபு


சபாஷ்  டைரக்டர்


1  கார்த்திக்  நடித்த  என்  ஜீவன்  பாடுது ( 1988) , லியனார்டோ  டிகாப்ரியோ  ந்டித்த  த  இன்செப்சன்  ( 2010) ,  சிம்பு  நடித்த  மாநாடு ( 2021)   இந்த  மூன்று  படங்களையும்  கலந்து  கட்டி  காக்டெயில்  பண்ணி  விட்டாரா? அல்லது  ஏற்கனவே  அப்படி  காக்டெயில்  செய்யப்பட்ட  கொரியன்  படத்தை  அட்லீ  ஒர்க்  பண்ணி  விட்டாரா? அல்லது  சொந்த  சரக்கா? என்பது  அறியாத  வண்ணம்  அவரும்  குழம்பி  நம்மையும்  குழப்பிய  விதம் 


2  நாயகனின்  மனைவியாக  வரும்  தேவகியின்  கண்ணியமான  ஆடை  வடிவமைப்பு . ஒரு  இயக்குநரின்  ரசனையை நாயகியின்  உடையை  வைத்தே  கண்டு  பிடித்து  விடலாம் 


3   நாயகனின்  ஹாஸ்பிடலில்  சக  டாக்டராக  வரும்  லேடி  டாக்டர்  நம்ம  ஊர்  ஊர்வசி  போல  லொட  லொட  என  பேசுவது  ரசிக்க  வைத்தது 


  ரசித்த  வசனங்கள் 


1  மனிதர்களின்  மனதில்  இருப்பதை  படிக்கும்  மேஜிக்  ஒன்று  உண்டு , ஆழ்ந்த  நட்பு  தான்  அது 

2  இந்தக்காலத்தில்  ஹாஸ்பிடல்க்கு  வர்ற  பேஷண்ட்ஸ்  எல்லாரும்  கூகுள்  செக்  பண்ணி  இன்ன  வியாதிக்கு  இன்ன  மருந்துனு  தெரிஞ்சுகிட்டு  டாக்டர்ஸ்  கொடுக்கும் மருந்து  கரெக்ட் தானா?னு அனலைஸ்  பண்ணிடறாங்க 


3 லூசிட்  ட்ரீம் (LUCID  DREAM)  என்பது  அரிதான  ஒரு  கலை .கனவு  காண்பவர்  கனவில்  வரும்  கேரக்டர்களை  சூப்பர்  வைஸ்  செய்ய  முடியும்.கனவை  தன்  கட்டுப்பாட்டில்  கொண்டு  வர  முடியும். இது  எல்லோராலும்  முடியாது , சிலரால்  மட்டுமே  சாத்தியம் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  மகள்  அப்போதான்  சோபாவில்  படுத்து  தூங்க  ஆரம்பித்திருக்கு, அம்மா, அப்பா  இருவரும்  லொட  லொடனு  பேசிட்டு  இருக்காங்க . வழக்கமா  தூக்கம்  கலையக்கூடாதுனு  வெளில  போய்த்தானே  தம்பதிகள்  பேசிக்குவாங்க ? 


2  நாம்  காண்பது  கனவா? நனவா? என்பதை  அறிய  நம்மை  நாமே  கிள்ளிப்பார்ப்போம், வலித்தால்  அது  நனவு ,  வலிக்க  வில்லை  எனில்  கனவு . இதுதான்  நமக்குத்தெரிந்தது , ஆனால்  நாயகன்  அடிக்கடி  இது  கனவா? நனவா? என்பதை  அறிய  டாஸ்  போட்டுப்பார்க்கிறான். அது  புரியவில்லை 


3  அவ்வளவு  தூரம்  அமீரைத்தேடி  அலைந்த  நாயகன்  க்ளைமாக்சில்  அமீரின்  டெட் பாடியை  புதைக்க  பலர்  சென்று  கொண்டிருக்கும்  ஊர்வலத்தைக்கண்டவர்  அமீரின்  முகத்தைக்கூட  பார்க்க  முயலவில்லை , அது  ஏன்? 


4  படத்தின்  முக்கியமான  கேரக்டர்கள்  கையில்  மணிக்கட்டுப்பகுதியில்  அடிக்கடி  ஒரு  நத்தை  ஊர்கிறது . நாயகனின்   மகள்  ஒரு  சமயம் நத்தை  ஓவியம்  வரைகிறாள். படம்  நத்தை  மாதிரி  மெதுவாகத்தான்  போகும்  என்பதன்  குறியீடா? வேறு  ஏதாவது  அமானுஷ்ய  சம்பவமா? புரியவில்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மாறுபட்ட  படங்களை  ரசிப்பவர்கள்  பார்க்கலாம், சின்னப்படம்  என்பதால்  ஒரு  குயிக்  வாட்ச்  ஆகவே  பார்த்து  விடலாம் , ரேட்டிங்  2.75 / 5 


Pendulum
Theatrical release poster
Directed byRejin S. Babu
Written byRejin S. Babu
Produced by
  • Danish K. Asokan
  • Lisha Joseph
  • Binoj Villya
  • Mithun Girishan
Starring
CinematographyArun Damodaran
Edited bySooraj E. S.
Music byJean P. Johnson
Production
companies
  • Lights On Cinemas
  • Bat Bros International
Release date
  • 16 June 2023[1]
Running time
106 minutes[2]
CountryIndia
LanguageMalayalam

Monday, December 11, 2023

DHOOTHA(2023) -THE MESSENGER -தூதுவன் -தெலுங்கு /தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் ( க்ரைம் மிஸ்ட்ரி த்ரில்லர்) @ அமேசான் பிரைம்

 


யாவரும்  நலம்  என்னும்  பிரமாதமான  மிஸ்ட்ரி  த்ரில்லர்  தந்த  இயக்குநர்  விக்ரம்  குமார்  இந்திய  அளவில்  அப்போது  கொண்டாடப்பட்டார். பல  மொழிகளில்  ரீமேக்  ஆனது .2009ல்  ரிலீஸ்  ஆன  அப்படம்  ஹிந்தியில்  13 பி  என  டைட்டிலில்  வெளியாகி  அங்கும்  வெற்றி  பெற்றது.அது  போக  ஆறு  தெலுங்குப்படங்களை  இயக்கினாலும் 2016ல்  சூர்யா  நடிப்பில்  வெளியான  24  ஒரு  சயின்ஸ்  ஃபிக்சன்  டைம்  ட்ராவல்  ஃபிலிமாக  அமைந்தது. அவரது  இயக்கத்தில்  வெளியான  வெப்  சீரிஸ்  தான்  இது 


பத்திரிக்கைத்துறையை  மையமாகக்கொண்டு  எழுதபட்ட  தமிழ்  சினிமா திரைக்கதைகள்  பெரும்பாலும்    மெகா  ஹிட்  தான் . 1986ல்  ரிலீஸ்  ஆன  ஊமை  விழிகள்  மெகாஹிட்.1987ல்  ரிலீஸ்  ஆன  சொல்வதெல்லாம்  உண்மை மீடியம்  ஹிட்  என்றாலும்  கதைக்கரு  பிரமாதம். 1986ல்  கலைஞரின்  வசனத்தில்  உருவான  பாலைவன  ரோஜாக்கள் படமும்  மெகா  ஹிட் ,  ஆடியோ  கேசட்  வசன  விற்பனையில் சாதனை  படைத்த  பட,ம். 2011ல்  வெளியான  கோ  பிரமாதமான  பொலிடிக்கல்  த்ரில்லர் . ரைட்டர்  சுபாவின்  திரைக்கதை பின்னிப்பெடல்  எடுத்திருக்கு ம்


மேலே  சொன்ன  படங்களில்  எல்லாம் பத்திரிக்கைத்துறை  என்பது 50%  தான்  இருக்கும், மீதி  மற்ற  ஆக்சன்  கலந்திருக்கும், ஆனால்  முழுக்க  முழுக்க  பத்திரிக்கைத்துறை  பற்றியே திரைக்கதை  எழுதி  ரிலிஸ்  ஆகி  இருக்கும்  முதல்  வெப்  சீரிஸ்  இது . மொத்தம்  எட்டு  எபிசோடுகள் . சராசரியாக  முக்கால்  மணி  நேரம்  ஒரு  எபிசோடுக்கு, ஆக  மொத்தம்   ஆறு  மணி  நேரம்  இருந்தால்  ஒரே  சிட்டிங்கில்  பார்த்து  விடலாம்,  நல்ல  விறுவிறுப்பான  க்ரைம்  த்ரில்லர்  இது 


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  ஒரு  பத்திரிக்கையாளர்.,  பல  பத்திரிக்கைகளில்  பணி  புரிந்து  இப்போது  ஒரு  மிகப்பெரிய  பத்திரிக்கையில்  சீஃப்  எடிட்டர்  ஆக  பதவி  ஏற்க  இருக்கிறார்.அந்த  விழாவில்  கலந்து கொள்ள  தன்  மனைவி , குழந்தை , நாய்  உடன்  காரில்  கிளம்புகிறார். வழியில்  டீக்கடையில்  டீ  சாப்பிடும்போது  ஒரு  பழைய  பேப்பர்  கட்டிங்  கிடைக்கிறது. அதில்  நாயகனின்  கார்  விபத்துக்கு  ஆளாவதாக  பிரிண்ட்  செய்யபட்டிருக்கிறது . அதே  போல்  நடக்கிறது 


 இது  மாதிரி  தொடர்ச்சியாக  பல  சம்பவங்கள் .ஒவ்வொரு  துர்  மரணம், அல்லது மோசமான  நிகழ்வு  நடக்கும்போது  நடப்பதற்கு  முன்  ஒரு  பேப்பர்  துண்டு  கிடைக்கும், அதில்  நடக்க  இருக்கும்  சம்பவம்  குறிப்பிடப்பட்டிருக்கும்


இந்த  மர்மங்களை  எல்லாம்  நாயகன்  எப்படிக்கண்டு  பிடிக்கிறான்  என்பது  மீதிக்கதை 


நாயகன்  ஆக நாக  சைதன்யா  நன்றாக  நடித்திருக்கிறார். நாகார்ஜூன்  க்கு  உதடுகள்  ஒரு  மைனஸ், சிரிக்கவே  மாட்டார். அவரது  மகனான   நாக  சைதன்யாவுக்கு  கண்கள்  சரி  இல்லை . மற்றபடி  உடல்  மொழி , நடிப்பு குட் 


நாயகனின்  மனைவியாக  ப்ரியா பவானி  சங்கர்  அழகாக  வந்து  போகிறார். சில  இடங்களில்  நடிக்கவும்  வாய்ப்பு . நாயகனின்  பி  ஏ  ஆக பிரச்சி  தேசாய்  சுமார்  ஆகத்தான்  இருக்கிறார்.நடிப்பும்  சொல்லிக்கொள்ளும்படி  இல்லை 


  போலீஸ்  ஆஃபீசர்  ஆக பார்வதி  திருவோத்து  கலக்கி  இருக்கிறார்


 நேர்மையான  பத்திரிக்கையாளர்  ஆக  ஃபிளாஸ்பேக்கில்  வரும்  பசுபதி குணச்சித்திர  நடிப்பில்  மிளிர்கிறார். ஜெயப்பிரகாஷ்  நடிப்பும்  குட் 


நாயகனின்  அம்மாவாக  ரோகினி  ரகுவரன்  பாந்தமான  நடிப்பு ., போலீஸ்  ஆஃபிசரின்  அம்மாவாக  ஈஸ்வரி  ராவ் குட் 


ஃபிளாஸ்பேக்கில்  பணிப்பெண்ணாக  வரும் ஸ்ருதி  ஜெயன்  கண்களாலேயே  கவிதை  சொல்கிறார். டிரைவரின்  மனைவி  ஆக  வரும்  காமாட்சி  பாஸ்கரன்  கவனிக்க   வைக்கும்  நடிப்பு 


இசாண்   இசை , குட்   திரைக்கதையை  ஆறு  பேர்  எழுத  இயக்கி  இருப்பவர்   விக்ரம்  குமார் 


சபாஷ்  டைரக்டர்


1    லாரி  டிரைவர்கள்  பணத்துக்கு  ஆசைப்பட்டு  துப்பாக்கிகளை  கடத்த உதவுவார்கள்  என்ற   கான்செப்ட்   புதிதாகவும் , நம்பும்படியும்  சொல்லப்பட்ட விதம்


2   போலீஸ்  ஆஃபீசர்  லாரியின்  டீசல்  டேங்க்கில்  செண்ட்டர்  ப்ளேசில்  டீசல்  என  ஏழுதி  இருக்குமே? இதில்  மட்டும்  ஏன்  கேப்  இருக்கு  என சந்தேகப்பட்டு  வெல்ட்  பண்ணி  மாத்தி  அமைத்திருக்கலாம்  என  கண்டுபிடிக்கும்  காட்சி


3   நாயகனின் குழந்தைக்கு  ஆபத்து  என  குறிப்பு  சொன்னதும்  பதறிய நாயகன்  மனைவி  சேஃப்டி என்று  உணர்ந்து  ரிலாக்ஸ்  ஆவதும்  ஆனால்  ஆபத்து  இன்னொரு  வடிவில்  துரத்துவதும்  விறுவிறுப்பான  திருப்பம்  


4  எழுபது  கிலோ  எடை  உள்ள  ஆள்  காலின்  பூட்ஸ்  இவ்ளோ  ஆழம்  மண்ணில்  பதியுதுன்னா  அதை  விட டபுள்  மடங்கு  ஆழம்  பதிந்துள்ள இந்தத்தடம் உருவாக 70  கிலோ  எடை  உள்ள  நபர்  இன்னொரு  டெட்  பாடியை  தூக்கிட்டு  நடந்திருக்கனும்  என  கண்டுபிடிக்கும்  லாஜிக்  அபாரம் 


5  குழந்தை  அஞ்சலி   லிஃப்டில்  மாட்டும்போது  லிஃப்ட்டை  ஆஃப்  பணணச்சொல்லி  நாயகன்  செக்யூரிட்டிக்கு  ஃபோன்  பண்ணும்  பரப்ரப்பான  காட்சி 

6   டிரைவரின்  டெட்  பாடியை  நாயகனின்  ஃபார்ம்  ஹவுசில்  புதைக்கப்பட்ட  இடத்தைக்கண்டு பிடித்ததாய்  நினைக்கும்  நாயகி  ஆன  போலீஸ்  ஆஃபீசர்  பின்  அது  நாய் புதைக்கப்பட்டதை  அறிந்து  ஏமாறுவது  


7  நாய்  தானே  புதைக்கப்பட்டிருக்கு  என  அசால்ட்டாக  கிளம்பிய  பின்  அதே குழியில்  அடி  ஆழத்தில்  இன்னொரு  பிணம்  இருப்பது  செம  ட்விஸ்ட் 


8  தூக்கு;ப்ப்போட்டு  தற்கொலை  செய்த  கேசில்  சுருக்கு  போடுவது  லெஃப்ட்  ஹேண்ட் பழக்கம்  உள்ளவர் , ரைட்  ஹேண்ட்  பழக்கம்  உள்ளவர்  என  இரு  வேறு  வித  முடிச்சு  உருவாவதைக்கண்டு  பிடித்து  போலீஸ்  ட்விஸ்ட்டை உடைப்பது


  ரசித்த  வசனங்கள் 


1  ஒரு  தண்ணிப்பாம்பை  பிடிக்க ஊர்  மொத்தமும்  கிளம்புன கதையா  இருக்கு 


2  ஒரு  க்ரைம்  சீன்ல ரத்தம்  தான் ஒரு  மொழியாக  மாறும், அது  நமக்கு  பல  விஷயங்களை  சொல்லித்தரும் 


3  அவன்  வித்தியாசமானவன் , பர்த்  டே  விஷ் பண்றப்பக்கூட  நீ  கல்லறையை  நோக்கி  ஒரு  ஸ்டெப்  எக்ஸ்ட்ரா  எடுத்து  வைத்த நாள்  இதுனு  வாழ்த்துவான் 


4    வயிற்றில்  இருக்கும்  குழந்தை  பலமா  எட்டி  உதைக்குது , அப்போ  நிச்சயமா  பையன்  தான்


 அந்தக்காலம்  எல்லாம்  மலை  ஏறிப்போச்சு ,  இப்பவெல்லாம் பெண்  குழந்தைகள் தான்  அதிகம்  எட்டி  உதைக்கறாங்க 


5 அரசியல்வாதிங்களான  நாங்களே  அஞ்சு  வருசத்துக்கு  ஒரு  தடவைதான்  கட்சி  மாறுகிறோம், நீ  என்னடான்னா  ரெண்டு  வருசத்துக்கு  ஒரு  தடவை  கம்ப்பெனி  மாறிட்டே  இருக்கே?


6 பத்திரிக்கையும் , அரசியலும் புருசன்  பொண்டாட்டி  மாதிரி , அப்பப்ப  அடிச்சுக்கிட்டாலும்  எப்போதும்  சேர்ந்திருப்பதே  நல்லது 

7  யாரைப்பற்றியாவது  நாம  தெரிஞ்சுக்கனும்னா  கடைசி  ஒரு வாரத்துல  எதை    எல்லாம்  அவங்க  டிஸ்போஸ்  பண்ணாங்கனு  குப்பையைகிளறிப்பார்த்தா  போதும் 


8  ஒவ்வொரு  தற்கொலைக்குப்பின்னும்  ஏதோ  பேராநார்மல்  ஆக்ட்டிவிட்டி , ஆத்மா,  பேய்   ஏதோ  ஒண்ணு  இருக்கும்


9  உண்மையைப்பொய்யாகவும், பொய்யை  உண்மையாகவும்  திரித்து  எழுதும் மோசமான  பத்திரிக்கைக்காரங்களை  மட்டும்  தான்  இந்த  பேய்  தாக்குது .


10  பத்திரிக்கை  தர்மம்  என்பது  என்ன? வெளிவரப்போகும்  நியூஸ்  உண்மையா? இல்லையா? என்பதை  ஒரு  தடவைக்கு  10  தடவை  செக்  பண்ணி  உறுதிப்படுத்திய  பின்  வெளியிடுவது 


11  ஒரு  தனி மனிதனின்  மாற்றம்  பிரபஞ்சத்தின்  முன்னேற்ர்றம்


12   இடது  கைப்பழக்கம்  உள்ளவன சாத்தானுக்கு  ரொம்பப்பிடித்தமானவனா  இருப்பான்



13  நான்கு  பேரையாவது  கொன்னவன்  தான்  ராஜ்ஜியத்தை  ஆள  முடியும் 


14  ஒரு  பாதையைத்தேர்ந்தெடுத்துப்போக  முடிவு  பண்ணிட்டா  திரும்பி  வருவது மிகக்கடினம், அதனால  பாதை  தெர்வில்  கவனமா  இருக்கனும் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  அவ்ளோ  பெரிய  பங்களாவில்  குடி  இருக்கும்  நாயகன்  ஒரு  லேப்டாப்போ  அல்லது  இன்வெர்ட்டரோ  வைத்திருக்க மாட்டாரா? கரண்ட்  இல்லை  , அதனால  சிஸ்டம் ல  டைப்  பண்ண முடியலை , பழைய  டைப்ரைட்டர்ல  டைப்  பண்ணினேன்  என  டயலாக் வருதே? 


2  காரில்  பயணம்  செய்யும்போது  நாயகன்  செல் ஃபோன் பேட்டரி   தீர்ந்து  விடுகிறது . பவர்  பேங்க்  வைத்திருக்க மாட்டாரா?  


3    காரில்  பயணிக்கும்போது  வாட்டர்  பாட்டில்  இல்லை  என கொட்டும்  மழையில்  இறங்குகிறார். காரில்  பயணிக்கும்போது  எக்ஸ்ட்ரா  வாட்டர்  பாட்டில்  கூடவா  வைத்திருக்க மாட்டார்கள் ? 


4  நாயகன்  காரில்  பயணிக்கும்போது  கை வசம்  ஒரு  குடை  வெச்சுக்க மாட்டாரா?  நனைந்து  கொண்டே  வெளில போய்ட்டு  மீண்டும்  காருக்கு  அடிக்கடி  வர்றார்


5  நாயகன்  போலீஸ்க்கு  லஞ்சம்  ஆக  ரூ  1  லட்சம்  கூகுள்  பே  மூலம் ட்ரான்ஸ்ஃபர்  பண்றார். ஒரு  போலீஸ்  லஞ்சமாக  ஆன் லைன்  ட்ரான்ஸ்சக்சன்  வைத்துக்கொண்டால்  மாட்டிக்கொள்ள  மாட்டாரா? கேஷாக  வாங்கிக்கொள்வதுதானே  சேஃப்ட்டி ? 


6  நாயகன்  சார்லசின்  மனைவிக்கு  ஃபோன்  பண்ணி  சார்லெஸ்  எங்கே  இருக்கிறான்  இப்போ  என  கேட்டு  அந்த  இடத்துக்குப்போகிறான், சார்லஸ்  நாயகனின்  கண்  முன்  தற்கொலை  செய்து  இறக்கிறான்., நாயகன்  சத்தம்  இல்லாமல்  ஸ்பாட்டை  விட்டு  கிளம்புகிறான். சார்லசின்  மனைவிக்கு டவுட்  வராதா? 


7  மழையில்  வெளியில்  சென்று  வந்த  நாயகன்  அதே  ஷூ  காலோடு  வீட்டின்  பெட்ரூம்  வருகிறான். மிடில்  கிளாஸ்ல  எல்லாம்  செப்பல், ஷூ  எல்லாம்  வாசலிலேயே  கழட்டி  வருவோம். பணக்காரங்க  ஷூ வோடே  பெட்ரூம்  வருவாங்களோ?


8  போலீஸ்  ஆஃபீசர்  சார்லசின்  மனைவியிடம்  விசாரனை செய்யும்போது  சார்லசின்  அம்மா, அப்பா, சகோதரன்  இறந்தது  பற்றி  சொல்லும்  மனைவி  தங்கள்  மகன்  இறந்தது  பற்றி  சொல்லவே  இல்லை , ஏன் ? 


9  நாயகனுக்கு  தான்  போலீசின்  சந்தேகப்பார்வையில்  விழுந்திருக்கோம், நம்  ஃபோன்  கண்காணிக்கப்படும்  என தெரியும், அப்படித்தெரிந்திருந்தும்  பி ஏ  அம்ருதாவுக்கு  ஃபோன்  பண்ணி  இப்போ  போலீஸ்  ஆஃபீசர்  ஃபோன்  பண்ணி  ஒரு  விபரம்  கேட்பாங்க . நான்  சொல்வது  போல்  சொல்  என  பேசுகிறாரே? அதே  போல்  லாக்கப்  டெத்  நடத்திய  போலீஸ்காரருக்கும்    ஃபோன்  பண்ணிப்பேசறாரே? அட்லீஸ்ட்  வேறு  ஒருவர்  ஃபோனில்  இருந்தாவது  பேசி  இருக்கலாம் 


10  போலீஸ்  விசாரணையில்  அந்த  டிரைவரை  விசாரிக்கும்போது  அவன்  இறந்த  விஷயம்  எப்படியும்  வெளியில்  வரும்  என்பது  அவனைக்கொன்ற  போலீஸ்  ஆஃபீசருக்குத்தெரியாதா? ஏன் நாயகியிடம்  மறைக்கிறார்?


11  ஒரு  பிரபலமான  பத்திரிக்கையின்  சீஃப்  எடிட்டர் மனைவி  அல்லாத  பெண்ணுடன்  பப்ளிக்  ஆக ஹோட்டலில்  டான்ஸ்  ஆடுதல் , பார்ட்டி  கொண்டாடுதல்  போன்றவை  நடந்தால்  வெளியே  தெரியாதா? அந்த  பயம்  அவருக்கு இருக்காதா?


12  நாயகனின்  மனைவி , சின்ன வீடு  இரண்டு  பேரும் ஒரே  ஹாஸ்பிடலில்  அட்மிட்  ஆவது  இரட்டை வால்  குருவி  முதல்  பல படங்களில்  பார்த்தாகி  விட்டது 


13  குடிசை  வீட்டில் , ஓட்டு  வீட்டில்  ம்ழை  நீர்  ஒழுகுவது  ஓக்கே  ஆனா  பங்களாவில்  அதே போல்  நடப்பது  அதனால்  நாயகனின்  மனைவி  வ்ழுக்கி  விழுவது  எல்லாம்  ஓவர்


14  நாயகிக்கு  கூரியர்  பார்சல்  வந்திருக்கு . பணிப்பெண்  அதை  ரிசீவ்  செய்கிறார். சைன்  பண்றதும்  அவரே. நாயகி  வீட்டில்  தான்  இருக்கிறார். ஏன்  அவர்  சைன்  வாங்காமல்  போறார்  கூரியர்  மேன் ?


15  நாயகன்  கெட்டவன் , சுயநலக்காரன். வில்லன். அதிக பழக்கம்  இல்லாத  யூ  ட்யூபர் இறக்க இருக்கிறார்  என்றதும்  அவர்  ஏன்  அவ்ளோ  பதட்டமாக காரில்  வேகமாக  பயணிக்கனும் ? 


16   எம் எல்  ஏ  வீட்டில்  வேலை  செய்யும்  பணிப்பெண்ணை  வில்லன்  2  வருடங்கள்  முயற்சி  செய்து  காதல்  வலையில்  விழ  வைக்கிறான். ஆனால் வீட்டுக்கதவு  தாழ்ப்பாளைக்கழட்டி  இங்கே  கொண்டு  வா  என்றதும்  ஏன்  எதற்கு  என  கேட்காமல்  கொண்டு  வருவதும் , வில்லன்  தந்த  ஆல்ட்டர்நேட்டிவ்  தாழ்ப்பாளைக்கொண்டு  போய்  ஃபிட்  பண்ணுவதும்  நம்ப  முடியவில்லை 


17  அதே  பணிப்பெண்ணை  வில்லன்  ஒரு  சேத்துக்குளத்தில்  இருந்துகொண்டு  அழைக்கிறான், என்னமோ  குற்றால  அருவில  குளிக்கப்போற  மாதிரி  அந்தப்பொண்ணு  அசால்ட்டா  போகுது , பார்க்கற  நமக்கே  குமட்டுது . அந்தப்பொண்ணுக்கு   எதுவும்  ஆகலையா? 

18 இரண்டு  வருடங்கள்  சிரமப்பட்டு காதலித்த  வில்லன் அப்பெண்ணை வாய்ப்பிருந்தும்  அனுபவிக்காமல்  கொலை  செய்வது  ஏன் ? 

20  பசுபதி  அநியாயத்துக்கு  நல்லவராகவே  இருக்கட்டும், அதுக்காக  10  கொலை  செய்தவன்  வில்லன்  என்று  தெரிந்ததும்  உடனே  போலீஸ்  உயர்  அதிகாரிகளிடம் போகாமல்  தனியாக  அப்படி  மாட்டிக்கொள்வது  ஏன் ? 

21  லாரி  டிரைவரின்  மனைவி போலீஸ்  இன்ஸ்பெக்டரைப்பார்க்க  தனியாக  நைட்  டைமில் ஏன்   போகிறார்? ஆண்  துணை  இல்லாமல்  போகிறது  ஆபத்துனு  தெரியாதா? 


22    நாயகியின்  வீட்டுக்கு  நாயகனும் , போலீஸ்  ஆஃபீசரும்  வந்து  ஒரு  ஆள்  ஃபோட்டொவைகாட்டி  இவனால்  உன்  உயிருக்கு  ஆபத்து , கொலை  செய்யப்போகிறான்  என  எச்சரித்துச்சென்ற  பின்பும்  நாயகியின்  அப்பா  ஏன்  பேக்கு  மாதிரி  மிட்  நைட்டில்  காலிங்க்  பெல்  அடிக்க  கதவைத்திறக்கிறார்? ( கனவிலும்  பின்  நனவிலும்  டிட்டோ) 


23  க்ளைமாக்ஸ்ல  நாயகன்  தன்  அம்மாவிடம்  தன்  தாத்தாவின்  பெயர்  என்ன? எனக்கேட்கிறார். தாத்தா  பேர்  கூடவா  அத்தனை  நாட்களாக  தெரியாமல்  இருப்பார்?என்ன  ஜர்னலிஸ்ட்டோ? 


24   நிறை  மாத  கர்ப்பிணியான  நாயகி  தன்னைக்கொல்ல  வருபவனைத்தாக்கி  தப்புவது  நம்பும்படி  இல்லை 

25   தன்  சொந்த  மகனான  சத்யாவின்    விழாவுக்கு  அவர்  அப்பா  ஏன்  வரவில்லை ? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ / ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  தரமான  க்ரைம் த்ரில்லர்  தான் , விறுவிறுப்பாகப்போகிறது , டைம் ஒதுக்கி  பார்க்க  வேண்டிய  வெப்  சீரிஸ், ரேட்டிங்  3.25 / 5


Dhootha
GenreNeo noir
Crime thriller
Created byVikram Kumar
Written byVikram Kumar
Venkat D. Pati
Poorna Pragna
Sripal Reddy
N. G. Thomas
Venkatesh Dondapati
Directed byVikram K. Kumar
StarringNaga Chaitanya
Srikanth Murali
Parvathy Thiruvothu
Prachi Desai
Anish Kuruvilla
Tharun Bhascker
Rohini
Tanikella Bharani
Priya Bhavani Shankar
Pasupathy
ComposerIshaan Chhabra
Country of originIndia
Original languageTelugu
No. of seasons1
No. of episodes8
Production
ProducersSharrath Marar
Vikram Kumar
Production locationIndia
CinematographyMikolaj Sygula
EditorNaveen Nooli
Running time43–53 Minutes
Production companyNorthstar Entertainment
Original release
NetworkAmazon Video
Release1 December 2023

Friday, December 08, 2023

GARUDAN (2023) -கருடன் - மலையாளம் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்


தமிழ்  நாட்ல  மட்டும்  தான்  அட்லீ  வகையறாக்கள்  ஜெயிக்கனுமா? நாங்க  மட்டும்  என்ன  தக்காளி  தொக்கா? என கேரளா  பட உலகைச்சேர்ந்த  ஒரு  இயக்குநர்  2017 ஆம்  ஆண்டு  வெளி  வந்த  த  கேர்ள்  இன்  த  ஃபாக் ( THE GIRL  IN THE  FOG)என்னும்  ஹாலிவுட்  படத்தை  பட்டி  டிங்கரிங்  பண்ணி  சுவராஸ்யமான  திரைக்கதையை  எழுதி  ஒரு  வெற்றிப்படத்தை  தந்திருக்கிறார் . வெறும்  7  கோடி  ரூபாய்  பட்ஜெட்டில்  உருவான  இப்படம்  பல  மடங்கு  லாபத்தை  தந்திருக்கிறது  


வில்லன்  கேரக்டர்  ஸ்ட்ராங்க்  ஆக  அமைந்தால்  அப்படம்  எப்போதும்  வெற்றி  தான்  என்ற  அளவில்  நாயகன்  ஆன சுரேஷ்  கோபியை  விட நடிக்க  அதிக வாய்ப்பு  வில்லன்  ஆன பிஜூமேனன்க்கு , தியேட்டரில்  அப்ளாசை  அள்ளுவதும்  வில்லனே


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  நேர்மையான  டெபுடிகமிஷனர்  ஆஃப்  போலீஸ்.அவருக்கு  ஒரு  மகன்  உண்டு . ரிட்டையர்  ஆகப்போகிறார்.வில்லன்  ஒரு  காலேஜ்ல  புரொஃபசரா  இருக்கார். வில்லன்  ஒர்க்  பண்ற  காலேஜ்ல  படிக்கும்  மாணவி ஒரு  நாள்  இரவு பாலியல்  பலாத்காரம்  செய்யப்பட்டு  ஒரு  பில்டிங்கில்  ஆபத்தான  நிலையில்  இருக்கிறார்


அந்த மாணவி  கோமா  ஸ்டேஜ்க்குப்போய் விட்டதால்  அவரால்  சாட்சி  சொல்ல முடியாது . ஆனால்  வில்லனை  நேரில்  பார்த்த  சாட்சி  உண்டு . டி என் ஏ  டெஸ்ட் , செமன்  டெஸ்ட்  என எல்லாவற்றிலும்  ஆதாரங்கள்  வில்லனுக்கு  எதிராகவே  இருக்கிறது . கோர்ட்டில்  கேஸ்  நடக்கிறது . வில்லனுக்கு  7  வருட  தண்டனை  கிடைக்கிற்து 


வில்லனுக்கும்  ஒரு  மனைவி ,  ஒரு  குழந்தை  உண்டு . இந்த கேஸ்  விவகாரத்தால்  வில்லனுக்கு  வேலை , பெயர் , மதிப்பு  எல்லாம்  போய்  விடுகிறது . மனைவியு,ம்   வெறுத்து  ஒதுக்கி  விடுகிறாள் 


 வில்லன்  7  வருடங்கள்  ஜெயில்  தண்டனை  அனுபவித்து  விட்டு  வந்து  கோர்ட்டில்  கேஸ்  போடுகிறார். ஜெயிலில்  இருந்த  நாட்களில்  படித்து  வக்கீல்  ஆகி  விடுகிறார். அதனால்  அவர்  கேசை  அவரே  வாதாடுகிறார்


குற்றவாளி  தண்டனை  அனுபவித்து  விட்டு  வந்து  தான்  நிரபராதி  என வாதாடும்  வினோதமான  கேஸ்  நடக்கிறது . அதில்  வில்லன்  வெற்றி  பெறுகிறான். நட்ட  ஈடாக  இந்த கேசை  டீல்  செய்த  நாயகன்  ஆன போலீஸ்  ஆஃபீசர்  48  லட்ச  ரூபாய்   வில்லனுக்குத்தர  வேண்டும்  என  தீர்ப்பு


 நாயகன்  மிரண்டு  போகிறார் .  வில்லன் ஏதோ  டகால்டி  வேலை  செய்தார்  என  தெரிகிறது , ஆனால்  என்ன  என கண்டு பிடிக்க முடியவில்லை . நாயகன்  அதற்குப்பின்  என்ன  செய்தார்?  அந்த  கேஸ்  என்ன ஆனது  என்பது  மீதிக்கதை 


நாயகன்  ஆக  சுரேஷ்  கோபி வயதான  சிங்கம்  போல வருகிறார். , கன்ன  சதை  தொங்கி  விட்டது . தொப்பை  கூடி  விட்டது . ஓவரா பீர்  அடிச்சா  இப்டிதான்  ஆகும். ஆனால்  நடிப்பைப்பொறுத்தவரை  ஓக்கே  ரகம் 


 வில்லன்  ஆக கலக்கல்  நடிப்பை  வழங்கி  இருப்பவர்  பிஜூ மேனன். ஜெயிலில்  அடி வாங்கும்போதும்  அமைதியாக இருக்கும்  நடிப்பிலும்  சரி ,  சைக்கோத்தனமாக  சிரிக்கும் போதும்  சரி   வக்கீல்  ஆக  கோர்ட்டில்  கலக்கும்போதும்  சரி  ஆரவாரமான  நடிப்பு . இவர்  நல்லவரா? கெட்டவரா? என்பது  மாறி  மாறி  கேள்விகளாக  நமக்குள்  எழுவது  சிறப்பு 


 வக்கீல்  ஆக  சித்திக்  கம்பீரமாக  நடித்திருக்கிறார்.    வில்லனை  நேரில்  பார்த்த  சாட்சி  ஆக பில்டிங்க்  காண்ட்ராக்டர்  ஆக  ஜெகதீஷ்  சிறப்பான  நடிப்பு 


நாயகனுக்கு  மனைவியாக  அபிராமி  கச்சிதம் வில்லனுக்கு  மனைவியாக  திவ்யா  பிள்ளை   சிறப்பு 

ரேப்  செய்யபட்ட  பெண்ணின்  அப்பாவாக  தலை வாசல்  விஜய்  சில  இடங்களில்  நல்ல குணச்சித்திர  நடிப்பு, சில இடங்களில்  ஓவர்  ஆக்டிங் 


138  நிமிடங்கள்  டைம்  ட்யூரேஷன்  வரும்படி  கட்  செய்திருக்கிறார்  எடிட்டர் 


ஜெக்ஸ்  பெஜோய் தான்  இசை ., மூன்று  பாடல்கள்  ஓக்கே  ரகம், பின்னணி  இசை  நல்ல விறுவிறுப்பு 


அஜய்  டேவிட்டின்  ஒளிப்பதிவு  சிறப்பு . கதை  எம் ஜினோஸ்  என  டைட்டிலில்  போடுகிறார்கள் . இவர்  தான்  ஃபாரீன்  பட  டிவிடியை  தந்தவர்  ஆக  இருக்கும்.திரைக்கதை  மிதுன்  மேனுவல் , தாமஸ். இயக்கம்   அருண்  வர்மா


சபாஷ்  டைரக்டர்


1   முதல்  பாதியில்  வில்லனை  அப்பாவி  போல  சித்தரித்ததும், நம்மை  நம்ப  வைத்ததும்  அருமையான  ஸ்க்ரிப்ட்  ஒர்க்


2  வில்லன்  பிஜூமேனனின்  அட்டகாசமான  பர்ஃபார்மென்ஸ்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஜட்ஜ்  தன்  தீர்ப்பில்  வில்லனுக்கு  ஆயுள்  தண்டனை  என்கிறார், ஆனால்  7  வருடங்களில்  ரிலீஸ்  ஆவது  எப்படி ? ரேப்  கேஸ்க்கு  7  ஆண்டுகள்  தான்  தண்டனையா? 


2  நாயகன்  ஆன  சுரேஷ்  கோபிக்கு  வலிய  திணிக்கப்பட்ட  ஒரு  ஃபைட்  சீன்  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லாதது 


3   வில்லன்  ஆன  பிஜூ மேனன்  க்ளைமாக்சில்  முகத்தில்  கறுப்புத்துணியால்  மூடிய  பெண்ணின்  முகத்திரையை  விலக்கும்போது  அது  அவரது  மனைவி  என  அறிந்து  அதிர்ச்சி  அடைகிறார். 10  வருடங்கள்  குடித்தனம்  நடத்திய புருசனுக்கு  தாலி  கட்டிய  சொந்த  சம்சாரத்தின்  உடல்  அமைப்பு , சேலை , ஜாக்கெட் ,   செயின் , தாலி  செயின், நெக்லஸ் , வளையல்  இதெல்லாம்  அடையாளம்  தெரியாதா? முகம்  பார்த்தால்  தான்  தெரியுமா? 


4  நாயகன்  ரிட்டயர்  ஆகி  ஒரு  நாள்  தான்  ஆகிறது . பிஎஃப்  பணம்  செட்டில்  ஆக  பல  நாட்கள்  ஆகும், ஆனால்  கோர்ட்  தனது  தீர்ப்பில்  நாயகனை  பணம்  செட்டில்  செய்யச்சொல்கிறது , டைரக்டாக  அரசே  பிஎஃப்  பணத்தை  டேக்  ஓவர்  பண்ணி  ஃபைன்  ஆக  கட்டலாமே?  ஆனால்  பிஎஃப்  பணம்  ஆல்ரெடி  செட்டில்  செய்ததாக  சொல்கிறார்கள் 


5  மெயின்  கதையிலேயே  எகப்பட்ட சம்பவங்கள்  , குழப்பங்கள்  இருக்கும்போது  சம்பந்தம்  இல்லாத  அரசியல்வாதி  வில்லன்  ரோல்  எதற்கு ?


6   பல வருடங்கள்  போலீஸ்  ஆஃபீசர்  ஆக  பணி  ஆற்றிய  ஐபிஎஸ்  ஆஃபீசருக்கு  சேவிங்க்ஸ்  பணமே  இருக்காதா?  மகனின்  படிப்புக்கு  செலவு  செய்ய  பணம்  இல்லாமல்  தடுமாறுகிறார்


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -யூ / ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   நல்ல  க்ரைம்  த்ரில்லர் , விறுவிறுப்பான  படம் , பார்க்கலாம்  ரேட்டிங்  3 / 5 


Garudan
Theatrical release poster
Directed byArun Varma
Screenplay byMidhun Manuel Thomas
Story byJinesh M
Produced byListin Stephen
Starring
CinematographyAjay David Kachappilly
Edited bySreejith Sarang
Music byJakes Bejoy
Production
company
Magic Frames
Distributed byMagic Frames
Release date
  • 3 November 2023[1]
Running time
138 minutes[2]
CountryIndia
LanguageMalayalam
Budgetest. 7 crore[3]

Thursday, December 07, 2023

ஜோ (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமான்ஸ்)

 


காதல்  கை  கூடவில்லை  என்பதால்  தற்கொலை  என்ற  கான்செப்டில்  மரோசரித்ரா, புன்னகை  மன்னன் ,  போன்ற  படங்கள்  வந்தன.  காதலை  மனசுக்குள்ளேயே  வைத்து  வெளியே  சொல்லத்தயங்கும்  கேரக்டரை  வைத்து  இதயம் , காலமெல்ல்லாம்  காதல்  வாழ்க  போன்ற  படங்கள்  வந்தன. இந்த இரண்டு  கான்செப்ட்டையும்  மிக்ஸ்  பண்ணி  ஒரு  நல்ல  படம்  தந்திருகிறார்  அறிமுக  இயக்குநர் ஹரிஹரன்  ராம்


 பொதுவாக  ஒரு  காதல்  சப்ஜெக்ட்  படம்  ஹிட்  ஆக  வேண்டும்  என்றால்  மூன்று  முக்கிய  அமசங்கள்  இருக்க வேண்டும்  1   அழகிய  நாயகி 2  செம ஹிட்  பாடல்கள் , இசை  3  ஒளிப்பதிவு.  வெறும்  பாடல்கள்  ஹிட்  ஆனதாலேயே  படம்  ஹிட்  ஆன  வரலாறும்  நம்  வசம்  உண்டு . தென்றலே  என்னைத்தொடு , பருவராகம்


ஸ்பாய்லர்  அலெர்ட்


கோவையில்  ஒரு  இஞ்சினியரிங்க்  காலேஜில்  படிக்கும்  நாயகன்  அதே  காலேஜில்  அவன்  படிக்கும்  வகுப்பில்  புதிதாக  சேரும்  மலையாளப்பெண்ணான  நாயகியை   லவ்  அட்  ஃபர்ஸ்ட்  சைட்  விதிப்படி  காதலிக்கிறான்/. ஆனால்  நாயகி  ஒரு    தொட்டாசிணுங்கி. நாயகியை  யாராவது  ல்வ்  ப்ரப்போஸ்  செய்தாலே  அழுது  விடுகிறார். ரொம்ப  சென்சிட்டிவ். பொத்திப்பொத்தி  வளர்த்த பொண்ணு  மணிமேகலை , அதனால  அவளை  விட்டு  வெட்கம்  இன்னும்   போகல  கணக்காய்  நாயகி  இப்படி  இருப்பதால்  நாயகன்  காதலை  வெளிப்படுத்த  தயங்குகிறார்


இவரது  தயக்கமே  இவருக்கு  பிளஸ்  ஆகிறது. நாயகி  எப்படியோ  காதலுக்கு  ஓக்கே  சொல்லி  விடுகிறார். காலேஜ் லைஃப்  முடியும்  வரை  இருவரும்  ஜாலியாகக்காதலிக்கிறார்கள் , அதுவரை  பட,மும்  ஜாலியாக  நகர்கிறது .ஒரு  கட்டத்தில்  இருவருக்கும் ஈகோ  கிளாஸ்  நடக்கிறது . ஊடல் , பிரிவு மீண்டும்  சேர்தல்  என  நடக்கிறது. ஒரு  கட்டத்தில்  வீட்டுக்கு  வந்து  பெண்  கேள்  என  நாயகி  அழைப்பு  விடுக்கிறாள் . நாயகன்  நாயகி  வீட்டுக்குப்போகிறான். அங்கே  சூழ்நிலை சரி  இல்லை . ஒரு  கட்டத்தில்  நாயகன்  நாயகியின்  அப்பாவை அடித்து  விட்டதாக  நாயகி  தவறாகப்புரிந்து  கொள்கிறாள் . காதல்  பிரெக்கப் ஆகிறது. நாயகி க்கு  வேறு  ஒரு  மாப்பிள்ளையுடன்  திரும்ணம்  நடக்க  ஏற்பாடுகள்  செய்யப்படுகிரது


நாயகி  நெம்பர்  2  ஸ்கூல்  படிக்கும்போது  ஒரு  பையனை  காதலிக்கிறாள். அவன்  நாயகியை  மனத்காரக்காதலிக்கவில்லை. ஆனால்  அவளை  அடைய  நினைக்கிறான். பலவந்தம்  நிகழும்போது  நாயகி  நெம்பர்  2  வை  ஒருவன்  காப்பாற்றி  விடுகிறான். நாயகி  நெம்பர்  டூ  விற்கு  அந்த  பையனை  முகம்  பார்க்காமலேயே  காதல்  வருகிறது . ஆனால்  சந்தர்ப்ப சூழ்நிலை  காரணமாக  அந்தப்பையனைக்கண்டு  பிடிக்கவே  முடியவில்லை 


 இப்போது நாயகன்  வாழ்வில்  நாயகி  நெ1  நாயகி    நெ2  என்னென்ன  பாதிப்புகளை  ஏற்படுத்தினார்கள் ?  யாருடன்  இணைந்தார்  என்பது  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  ரியோ ராஜ்  இயல்பாக  நடித்துள்ளார். நாயகி  நெம்பர்  ஒன்  ஆக  மலையாளப்பெண்ணாக  மாளவிகா  மனோஜ்  அம்சமான  அழகுடன் , குடும்பப்பாங்கான  தோற்றத்துடன், கண்ணியமான  கிளாமரில்  மனம்  கவர்கிறார்.  நாயகனுடனான கெமிஸ்ட்ரி  நன்கு  ஒர்க்  ஆவுட்  ஆனது  பெரிய  பிளஸ்


 நாயகி  நெம்பர்  2  ஆக பவ்யா  த்ரிகா  நடித்திருக்கிறார்.. ஓக்கே  ரகம்.இவர்  ஸ்கூல்  மாணவியாக  வரும்  காட்சிகளில் இளமை  கொப்புளிக்கிற்து 


நாயகனின்  நண்பர்களாக  வருபவர்கள் , நாயகி  நெ1 -ன்  தோழியாக  வருபவர்  என  அனைத்துக்கேரக்டர்களும்  தங்களுக்குக்கொடுகப்பட்ட  வேலையைச்செவ்வனே  செய்திருக்கிறார்கள் 


சித்து  குமாரின்  இசையில்  ஒரு  பாடல்  சூப்பர்  ஹிட் . மூன்று  பாடல்கள்  ஓக்கே  ரகம் . ராகுல்கேஜி  விக்னேஷின்  ஒளிப்பதிவில்  நாயகிகள்  இருவரையும்  க்ளோசப்  , லாங்க்  ஷாட்  காட்சிகளில்  அழகாகக்காட்டி  இருக்கிறார்


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  ஹரிஹரன்  ராம்



சபாஷ்  டைரக்டர்


1  நாயகியின்  தோழி மூலம்  நாயகி  தினசரி  என்ன  டிரசில்  வருகிறார்  என்பதை  அறிந்து  நாயகன்  அதே  கலர்  டிரசில்  வந்து  இம்ப்ரெஸ்  செய்வது


2 நாயகன் , நாயகி  இருவர்க்கும்  இடையேயான  சின்னச்சின்ன  சண்டைகள் , பிரிவுகள்  அனைத்தும்  மிக  யதார்த்தம்


3  இரு  நாயகிகளையும்  கண்ணியமான  உடையில்  கச்சிதமாக  கையாண்ட விதம் 




செம  ஹிட்  சாங்க்ஸ்


1  உருகி உருகி 

2  ஒரே  கனா 


  ரசித்த  வசனங்கள் 


1    என்  ஸ்கூலுக்கு  வந்து    என்னையே  அடிச்சுட்டீங்களா? இருங்கடா. பசங்களைக்கூட்டிட்டு  வர்றேன்


 கோ எட் தானே? அப்டியே  பொண்ணுங்களையும்  கூட்டிட்டு  வா 


2   வாழ்க்கைங்கறது....


  யப்பா  டேய்... குடிக்க  விடுங்கடா


3  டேய், அவ  கிட்டே  என்னடா  பேசுனே


 அதெல்லாம்  லவ்வர்ஸ்க்குள்ளே  1000  இருக்கும்

 அதனால  தான்  கேட்டேன் , நீ  என்ன  பேசுனே? 


4  லவ்வை  சொல்றது  ரொம்ப  கஷ்டம்டா


 அப்டியா? இப்போப்பாரு , ஏய்  பித்துக்குளி , ஐ லவ் யூ, அவ்ளோ  தான்  போ 


5  உன்  மேல்  ஒரே  லவ்வா  இருக்கு . கவிதை  சொல்லவா? 

ம்


 வீட்டுக்கு  வெளில  இருக்கு  திண்னை , உன்  மேல  லவ்வா  இருக்கு , என்ன  பண்ண?


 போடா  வெண்ண


6  தூரமா  இருவரும்  இருக்கும்போது  லவ்வில்  ஏற்படும்  சண்டைக்குக்காரணம்  அந்த தூரம்  தான் 


7  லவ்  இருக்கும்  இடத்தில்  ஈகோ  இருக்கக்கூடாது,  ஈகோ  இருந்தால்  அது  லவ்வாவே  இருக்காது 


8  நாம  ரெண்டு  பேரும்  ஒரே  மாதிரி , லவ்  பண்றதுலயும், ஹர்ட்  பண்றதுலயும்


9  அடிக்கடி  சண்டை போடற  நாம் கொஞ்ச  நாள்  பேசிக்காம  இருந்தா  எல்லாம்  சரி  ஆகிடும், ப்ரீத்திங்  ஸ்பேஸ்  வேணும்


10  நாங்க  ரெண்டு  பேரும்  ஒரே  மாதிரி , லவ் காட்றதுலயும், ஈகோ  காட்றதுலயும்


11  பசங்களுக்கு  கல்யாணம் என்பது  ஒரு  கமிட்மெண்ட், உடனே  அதை  ஏத்துக்க  முடியும், ஆனா  பெண்களுக்குக்கல்யாணம்  என்பது  ஒரு  லைஃப், அக்செப்ட்  பண்ணிக்க  டைம்  எடுக்கும்


12 ஐ  ஆம்  கோச்சார்யா 


 அப்டின்னா


 கோச். ஆர்யா  = கோச்சார்யா


13   மேடம்  கரெஸ்பாண்டெண்ட்டா  இருக்கும்  காலேஜ்லயே  பசங்க, பொண்ணுங்க  தனித்தனியா  தான்  லஞ்ச்  சாபிடனுமாம்,  மேடம்  வீட்ல  எப்படி? அதே  போல  தானா? தனித்தனி  தானா?


14  ஒரு  பொண்ணு  உன்னை  லவ் பண்றா-னா  உன்  மேல  நம்பிக்கை  வெச்சிருக்கானு  அர்த்தம்,  அதை  அட்வாண்ட்டேஜா  எடுத்துக்கக்கூடாது

15  தப்பே  பண்ணாத  நீ  பயப்படறாதாலதான்  தப்பு  பண்ணின  இவன்  தெனாவெட்டா  இருக்கான்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகன்  கரஸ்பாண்ட்டென்ட்  ஆக  தன்  மனைவி  இருக்கும்  காலேஜூக்கு  வருகிறார். செக்யூரிட்டி , உட்பட  காலேஜில்  பணி  புரியும்  ஸ்டாஃப்ஸ்  யாருக்குமே  அவரை  அடையாளம்  தெரியவில்லை . ஏன்? மேரேஜூக்கு  அவங்க  யாரையும்  இன்வைட்  பண்ணவே  இல்லையா? அரேஞ்சுடு  மேரேஜ்  தானே?


2  நாயகி   நெ 2  வின்  ஃபிளாஸ்பேக்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  ஆக வைத்திருப்பது  பெரிய  ஆச்சரியத்தை  தர  வில்லை , மாறாக  வலிய  திணித்தது  போல  தோன்றுகிறது , பின்  பாதியை  நாயகி  நெ 2  வின்  ஃபிளாஸ்பேக்  போர்சன்  ஓப்பன்  பண்ணி  பின்  தொடர்ந்திருந்தால்  இன்னும்  நன்றாக  இருந்திருக்கும்


3  நாயகி  நெம்பர்2    கல்யாணத்தை  நிறுத்தும்படி  நாயகனுக்கு  ஃபோன்  செய்கிறாள், ஆனால்  ஃபோனை  மப்பில்  இருக்கும்  நண்பன்  வாங்கி  தன்  பாக்கெட்டில்  வைக்கிறான். யாருமே  பதிலே  சொல்லாமல்  தன்  செய்தி  போய்ச்சேர்ந்திருக்கும்  என  நாயகி  நெம்பர் 2  எப்படி  நினைத்தார்?


4  காதல்  தோல்வி  என்றது,ம்  நாயக்ன்  தண்ணி  அடிப்பது ,  தாடி யுடன்  அலைவது  இதெல்லாம்  டெம்ப்ளேட்  காட்சிகள் . தவிர்த்திருக்கலாம்


5  பின்  பாதி  திரைக்கதை  மவுன ராகம், ராஜா  ராணி  படங்களின்  சில காட்சிகளை  நினைவு  படுத்துகிறது. முதல்  பாதியில்  இருந்த  ஃபிரெஷ்னெஸ்  பின்  பாதியில்  இல்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  நாயகிகளின்  அழகுக்காகவும், சூப்பர்  ஹிட்  பாடல்களுக்காகவும், முதல்  பாதி  திரைக்கதைக்காகவும்  படம்  பார்க்கலாம் ., ரேட்டிங்  3 / 5 


Joe
Theatrical release poster
Directed byHariharan Ram S.
Written byHariharan Ram S.
Produced byDr. D. Arulanandhu
Mathewo Arulanandhu
Starring
CinematographyRahul KG Vignesh
Edited byVarun KG
Music bySiddhu Kumar
Production
company
Vision Cinema House
Distributed bySakthi Film Factory
Release date
  • 24 November 2023
CountryIndia
LanguageTamil