Monday, November 06, 2023

A HISTORY OF VIOLENCE (2005) - எ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் -சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்

 


லியோ  படம்  பார்க்கும்  முன்  அதன்  ஒரிஜினல்  வெர்ஷன்  பார்த்தால்  தான்  ஒரு  ஐடியா  கிடைக்கும்  என்பதால்  இதைப்பார்த்தேன்.32  மில்லியன்  டாலர்  செலவில்  எடுக்கப்பட்டு 61  மில்லியன்  டாலர்  வசூலித்த  படம். ஏகப்பட்ட  அவார்டுகளை  வென்ற  படம். சிறந்த  திரைக்கதை , இயக்கம், துணை  நடிகர் , நாயகன்  என  விருதுகளின்  பட்டியலே  விக்கி பீடியாவில்  ஒன்றரை  பக்கங்கள்  வருகின்றன. ஆனால்  1995 ல்வெளியான  பாட்ஷா  படம்  தான்  இதற்கெல்லாம்  முன்னோடி  என்று  நினைத்தால்  தமிழ்  சினிமா  வை  நினைத்துப்பெருமையாக  இருக்கிறது 


         ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  மிடில்  கிளாஸ்  ஃபேமிலி  ரன்  பண்ணிட்டு  இருக்கான்,  ஒரு  மனைவி  , ஒரு  மகன் , ஒரு  மகள்   இவர்களுடன்  காஃபி  ஷாப்  கம்  ரெஸ்டாரண்ட்  நட்த்தி  வருகிறான்.ஒரு  நாள்  போலீசாரால்  தேடப்படும்  இரண்டு  குற்றவாளிகள்  நாயகனின்  காஃபி ஷாப்க்கு  வருகிறார்கள் . 


 கடை  க்ளோஸ்  பண்ணியாச்சு  என்று  நாயகன்  சொன்ன  பின்னும்  வம்படியாக  அங்கேயே  இருக்கிறார்கள் .  கடையில்  இருக்கும்  சேல்ஸ்  கேர்ள்  உடனும்  வம்பு  செய்கிறார்கள் . அவர்களிடம்  முடிந்தவரை  பணிவாகப்பேசும்  நாயகன் ஒரு  கட்டத்தில்  பொங்கி  எழுந்து  அவர்கள்  இருவரையும்  ஷூட்  செய்து  கொலை  செய்து  விடுகிறான் 


இந்த  விஷயம்  பேப்பர் , மீடியா  என  எல்லாவற்றிலும்  வந்து  நாயகன் அந்த  ஏரியாவின்  செலிபிரிட்டி  ஆகிறான். ஒரு  சாதாரண  சாமான்யன்  எப்படி  இரு  பயங்கர  கிரிமினல்களை  வீழ்த்த   முடிந்தது  என  ஆச்சரியமாகப்பேசிக்கொள்கிறார்கள் 


 நாயகனின்  ஃபோட்டோ  பேப்பரில்  வருகிறது . அப்போது  ஒரு  கேங்க்ஸ்டர்  நாயகனைதேடி  வருகிறான். நீ  முன்னாள்  கேங்க்ஸ்டர்  ஜோ  தானே?? எனக்கேட்கிறான் . நாயகன்  இல்லை  நீங்க  வேற  யாரையோ  தவறாக  நினைத்துக்கொண்டு  என்னிடம்  பேசிக்கொண்டிருக்கிறீர்கள் ., என்  பெயர்  டாம்  என்கிறான்


 ஆனாலும்  அந்த  கேங்க்ஸ்டர்  நாயகனை   விட்ட  பாடில்லை . தொடர்ந்து  நாயகனை  ஃபாலோ  செய்வதும்  டார்ச்சர்  கொடுப்பதுமாக  இருக்கிறான், இதற்குப்பின்  நாயகன்  என்ன  முடிவு  எடுத்தான் ? நாயகன்  நிஜமாலுமே  முன்னாள் கேங்க்ஸ்ட்ரா? என்பது  பின்  பாதி  திரைக்கதை 


நாயகன் ஆக  விகோ  மார்ட்டென்சென்  இரு  மாறுபட்ட  கேரக்டரில்  நடித்திருக்கிறார். நம்ம  ஊர்  பாஷைல  சொல்லனும்னா  மாணிக்கம், மாணிக்  பாட்ஷா  என  இரு  ரோல்களில்  கச்சிதமாக  நடித்திருக்கிறார்.  சாமான்யன்  ரோலிலும் ,  ட்ரான்ஃப்ர்மேசன்  ஆன  கேங்கஸ்டர்  ரோலிலும்  ஒருவர்  பொருந்திப்போவது தோற்றத்திலும், திரைக்கதை  அமைப்பு  நேர்த்தியிலும்  உள்ளது . இரண்டுமே  பொருந்திப்போய்  இருக்கிறது


வில்லியம்  ஹர்ட்  வில்லன்  ரோலில்  வருகிறார். பெஸ்ட்  சபோர்ர்ட்டிங்  ஆக்டர்  விருதை  வென்றவர். இவாது  தோற்றமும்  நடிப்பும்  அடிபொலி 


96 நிமிடங்கள் மட்டுமே  ஓடக்கூடிய  சின்னப்படமாக  ஷார்ப்  ஆக  கட்  பண்ணி  இருக்கிறார்  எடிட்டர் . .ஒளிப்பதிவு , இசை , பின்னணி  இசை போன்ற  டெக்னிக்கள்  அம்சங்கள்  தரம் 


வ்ன்முறை  மட்டும்  தூக்கல்  ஆக  இருந்தாலும்  டைட்டிலிலேயே வன்முறை  இருக்கிறதே என்று  சமாளிக்க  வேண்டியதுதான்  


சபாஷ்  டைரக்டர்


1   காஃபி ஷாப்பில்  வில்லன்கள்  ரகளை  செய்யும்போது  நாயகன்  முதலில்  அடக்கி  வாசிப்பதும்  பின்  அவர்களை போட்டுத்தள்ளுவதும்  சரியான  ஆக்சன்  சீக்வன்ஸ் 


2 மெயின்  கதைக்கு  சம்பந்தமே  இல்லாமல்  இரண்டு  அடல்ட்  கண்ட்டெண்ட்  காட்சிகளை  வலுக்கட்டாயமாக  காட்சிப்படுத்தி  கிளாமர்  புகுத்திய  விதம் 


3   டைட்டிலில்  வன்முறை  இருந்தாலும்  ஃபிளாஸ்பேக்  காட்சிகளில்  ஓவரான  வன்முறைக்காட்சிகளைப்புகுத்தாமல்  அளவாக  பயன்படுத்திய  விதம் 


  ரசித்த  வசனங்கள் 


 படத்தில்  பேச்சுக்கு  வேலையே  இல்லை , வீச்சுதான் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகன்  ஒரு  முன்னாள்  கேங்க்ஸ்டர்  என்பதை  அறிந்தவர்கள்  மீண்டும்  அவன்  தங்கள்  இடத்துக்கு  வரும்போது  வன்முறை  வெடிக்கலாம், அவனால்  நமக்கு  ஆபத்துதான்  என்பதை  யூகிக்க  மாட்டார்களா? 

2  நாயகன்  தன்  சொந்த  மனைவியை  தன்  சொந்த  வீட்டில்  நிறுத்தி  நிதானமாக     பெட்ரூம்க்கு  அழைத்துச்சென்று  ரொமான்ஸ்  பண்ணாமல்  ஏன்  பறக்காவெட்டி  மாதிரி  மாடிப்படிக்கட்டுகளில்  அவ்ளோ  சிரமப்பட்டு  ரொமாண்ஸ்  செய்ய  வேண்டும் ? பொதுவாக  கள்ளக்காதலர்கள்  தான்  கிடைச்ச  இடம்  நினைச்ச  நேரம்  என  இப்படி  செய்வார்கள் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18 +  காட்சிகள் , வன்முறைக்காட்சிகள்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   விஜய்  ரசிகர்கள் , அஜித்  ரசிகர்கள்  இரு  தரப்பினரும்  லியோவை  ஒப்பீடு  செய்ய  இதைப்பார்க்கலாம் . ரேட்டிங்  2.5 / 5 


A History of Violence
Theatrical release poster
Directed byDavid Cronenberg
Screenplay byJosh Olson
Based onA History of Violence
by
Produced byChris Bender
J. C. Spink
Starring
CinematographyPeter Suschitzky
Edited byRonald Sanders
Music byHoward Shore
Production
companies
Distributed by
Release dates
  • May 16, 2005 (Cannes)
  • September 23, 2005 (United States)
Running time
96 minutes
Countries
  • United States
  • Canada[3]
  • Germany[4]
LanguageEnglish
Budget$32 million[5]
Box office$61.4 million[5]

Sunday, November 05, 2023

ஒரிஜினல் சத்து மாவு நாமே தயாரிப்பது எப்படி? அதன் பயன்கள் என்ன?

 


பட்டை  தீட்டப்பட்ட  வெள்ளை  அரிசி  உணவுதான்  தமிழர்கள்  அதிகம்  விரும்பிசாப்பிடும்  உணவு. ஆனால்  இதில்  கார்போ ஹைட்ரேட்ஸ்  அதிகம்  இருப்பதால்  சிறு தானியங்கள்  உணவில்  அதிகம்  சேர்த்துக்கொள்ள  வேண்டும்  என்பது மருத்துவர்கள்  பரிந்துரை .சிறு தானியங்களை  வாங்கி  அதை  அரிசி  வேக  வைப்பது  போலவே  சோறு  அல்லது  பொங்கல் வடிவில்  சாப்பிடலாம். சிலருக்கு  அதன்  ருசி  செட்  ஆகவில்லை  எனில்  மாவாக  அரைத்து  இட்லி  , தோசை  ஆக  சாப்பிடலாம்

ராகி  ( கேழ்வரகு ) , கம்பு முதல்  ரகம், கம்பு  இரண்டாம்  ரகம் , சோளம்  முதல்  ரகம், சோளம்  இரண்டாம்  ரகம், சாமை  அரிசி , திணை  அரிசி , குதிரை வாலி  அரிசி , வரகு  அரிசி   ஆகியவை  சிறு  தானியுங்கள்  எனப்படும்  மில்லட்ஸ். இவை  கடைகளில்  கிடைக்கின்றன. விலை   கிலோ  ரூ 40  முதல்  ரூ 80  வரை  ஆகும்


 மேலே  கூறிய  சிறு தானியங்கள்  அனைத்தையும்  தலா  ஒரு  கிலோ  வாங்கி  மிஷினில்  கொடுத்து  ஒட்டு  மொத்தமாக  அரைத்து  மாவாக்கி  பொடியாக  சேமித்து  வைத்துக்கொள்ளவும். இப்போது  சுவையான  சத்து  மாவு  ரெடி .  கடைகளில்  சத்து  மாவு  வாங்கினால்  அதில்  கலப்படம்  இருந்தால்  தெரியாது . எனவே  நாம்  நேரடியாக  கடைகளில்  சிறு  தானியங்களை  வாங்கி  நம்  கண்  முன்  அரைத்து  பெறப்படும்  மாவுதான்  நம்பகத்தன்மை  மிக்கது 


 சிறு  தானியங்கள்  சாப்பிடுவதால்  ஏராளமான  நன்மைகள்  உண்டு ,  சர்கக்ரை  வியாதி உள்ளவர்கள் , ஹைப்பர்  டென்சன்  எனப்படும்  பிளட்  பிரஷர்  உள்ளவர்கள் , அதிக  உடல்  எடை  கொண்டவர்கள் , வெயிட்  லாஸ்  புரோகிராமில்  ஈடுபடுபவர்கள்  ரெகுலராக  தினசரி  ஒரு  வேளையாவது  சத்து  மாவில்  செய்த  இட்லி  தோசைகளை  சாப்பிட்டு  வந்தால்  பத்து  நாட்களில்  மாற்றங்கள்  தெரியும்.

ரத்தம்(2023) - தமிழ் - சினிமா விமர்சனம் (க்ரைம் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்

 


இயக்குநர்  சி எஸ்  அமுதன்  இயக்கத்தில்   மிர்ச்சி  சிவா  நடிப்பில்  2010 ஆம்  ஆண்டு  வெளியான  “தமிழ்ப்படம்  “ என்னும் தமிழ்ப்படம்  தான்  தமிழ்  சினிமாவின்  முழு  நீள  ஸ்பூஃப்  வகையறா  திரைப்படம் 1986 ல் எஸ்  வி சேகர்  நடிப்பில்  வெளி  வந்த  சினிமா  சினிமா  என்ற  படமும்  அதே  ஜர்னர்  தான்  என்றாலும்   மற்ற  படங்களின்  க்ளிப்பிங்க்ஸ்  இடம்  பெற்றதால்  அது  ஒரு  ஸ்பூஃப்  வகைப்படமாக  கணக்கில்  எடுத்துக்கொள்ள  முடியாது . 2018 ஆம்  ஆண்டில்  தமிழ்  படம்  பாகம் 2  வெளியாகி  அதுவும்  வெற்றி  பெற்றது . இவரது  இரண்டு  படங்களூமே  வசூல்  ரீதியாக  வெற்றி  பெற்று  விமர்சன  ரீதியாகவும்  பாசிட்டிவ்  வைப்ரேஷனில்  பரவியது 



2010  ஆம்  ஆண்டில்  விஜய்  ஆண்ட்டனியின்  நடிப்பில்  நாக்கு  முக்க  என்ற  டைட்டிலில்  இவர்  ஒரு  படம்   இயக்குவதாக  இருந்தது . பின்  ஏனோ  பேக்  அடித்து  விட்டார் . 2011  ல்  தலைவலி  என்ற  டைட்டிலில்  அஜித் + விஜய்  காம்போவில்  படம்  பண்ணுவதாக   ஒரு  வதந்தி  உலா  வந்தது . அது  புரளி  என  அவர்  மறுத்து  விட்டார்


முதல் இரண்டு  படங்களையும்  காமெடி  ஜர்னரில்  கொடுத்து  விட்டு  மூன்றாவது  படத்தை  க்ரைம்  த்ரில்லர்  ஜர்னரில்  தந்தது  ஆச்சரியம்  தான்


        ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு  பத்திரிக்கை  ஓனரின்  வளர்ப்பு  மகன் . அவரது  அப்பாவின்  சொந்த  மகன்  பத்திரிக்கை  ஆஃபீசிலேயே  பப்ளிக்காக  ஒருவனால்  கொலை செய்யப்படுகிறான் .கைதாகி விட்டாலும்  அந்தக்கேசில்  ஏதோ  மர்மம்  இருக்கிறது 


 நாயகன்  துப்பு  துலக்க  களம்  இறங்குகிறார்  அப்போதுதான்  ஒரு  டெக்னிக்கல்  டீமை  வைத்துக்கொண்டு  ஒரு  அமைப்பு  இது  போல  பல  கொலைகளை  செய்து  வருவது  தெரிய  வருகிறது . அவர்  எப்படி  அந்த  கேசை  டீல்  செய்தார்  என்பதே  மீதி  திரைக்கதை 


 நாயகன் ஆக  விஜய்  ஆண்ட்டனி . முக்கால்  வாசிப்படத்தில்  ஒற்றைக்கையில்  கட்டுப்போட்டு  வருகிறார்.( ஒத்தைக்கை  ஸ்ட்ரேட்டஜி ? )  வழக்கம் போல்  முகத்தில் உணர்ச்சிகள்   ஏதும் இல்லை , ஆனால்  ரஜினி , விஜய்  ரேஞ்சுக்கு      ஆக்சன்  சீக்வ்சன்சில்  பில்டப்  ஓவராக  இருக்கிறது 


எடிட்டர  ஆக  நந்திதா  ஸ்வேதா    கச்சிதம் . பேண்ட்  , டி சர்ட்டில்  கெத்தாக  நட்ந்து  வரும்  காட்சிகளில்  ஸ்கோர்  செய்கிறார் 


 ஒரு  மாறுபட்ட  ரோலில்  மஹிமா  நம்பியார்  வருகிறார் . கமல் நடித்த  சத்யா  படத்தில்  வில்லன்  ஆக  வரும்  கிட்டி என்ற  ரோல்  போல  சிரித்துக்கொண்டே  இருக்கும்  கேர்க்டர் . நன்றாக  செய்திருக்கிறார் 


கண்ணன்  நாராயணன்  இசையில்  பாடல்கள்  சுமார்  ரகம், பிஜிஎம்  ஓக்கே  ரகம் . கோபி  அமர்நாத்தின்  ஒளிப்பதிவு  பாராட்டத்தக்க  விதத்தில் . டி எஸ்  சுரேஷ்  எடிட்டிங்கில்  144  நிமிடங்கள்  படம்  ஓடுகிறது 

சபாஷ்  டைரக்டர் (சி எஸ்  அமுதன்) 


1  சிட்டில  நடந்த  கொலைகள்  போல  கிராமத்தில்  எங்காவது  கொலை  நடந்தா  அதை  விசாரிப்போம், ஏன்னா  ஒரு  புது  ஆள்  கிராமத்துக்கு  வந்தா  அங்கே  இருக்கும்  ஆட்களுக்கு  தெரியாமல்  இருக்காது . பிடிச்சுடலாம்  என  நாயகன்  பேசும்  வசனம், அந்த  ஐடியா  குட் 


2  கொலைகளை  செய்யும்  ஆர்கனைசேஷன்  லீடர் யாராக  இருக்கும்  என்ற  லீட்  வெளியில்  வ்ரும்    அந்த  இண்ட்டர்வெல்  பிளாக்  சீனும் , அப்போது  ஒரு கேரக்டரின்  ட்ரான்ஃபர்மேஷன்  சீனும்


  ரசித்த  வசனங்கள் 


1   ஒரு  போலீஸ்  ஆஃபீசருக்கு  அவரோட  ஸ்டேஷன்  எரியாவில்  நடக்கும்  க்ரைம்  பற்றி  மட்டும் தான்  தெரியும்,, ஒரு  டாக்டருக்கு  அவரோட  க்ளினிக்  வர்ற பேஷண்ட்ஸ்  மட்டும்  தான்  தெரியும், ஆனா  ஒரு  மீடியா  பர்சன்க்கு  ஒரு  ஊர்ல, ஒரு  மாநிலத்துல  ஏன்? உலகத்துல  எந்த  மூலைல  என்ன  நடந்தாலும்  அப்சர்வ்  பண்ணிக்கற  ஆற்றல்  இருக்கும் , இருக்கனும் 

2  நமக்குப்பிடிக்கலைங்கறதுக்காக , நம்ம  நம்பிக்கைக்கு  எதிரா  இருக்காங்க  என்பதற்காக  ஒருவரை  வெறுத்து  கொலை  செய்வது  தான்  ஹேட்  க்ரைம் 

3   ஒரு  கஷ்டமான  விஷயத்தை , நிறைய பேரால  பண்ண  முடியாத  விஷயத்தை  நாம்  பண்ண  முடிஞ்சா  ஒரு  ஹைப்  கிடைக்குமே? அதான்  எனக்கு  முக்கியம் 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  அந்தக்காலத்தில்  எல்லாம்  ஓப்பனிங்  சீன்ல  சாமி  கும்பிடற  மாதிரி  காட்சி  அல்லது   நல்லாருக்கனும்  என  ஆசீர்வதிப்பது  போல  மங்களகரமான  காட்சி  வைப்பாங்க. இதுல  என்னாடான்னா  ஒரு  குடிகாரன்  சரக்கு  அடிக்கற  மாதிரி  ஓப்பனிங்  சீன்  வெச்சிருக்காரு. விளங்குமா? 

2   ஒரு  கைல  அடிபட்டு  புத்தூர்  மாவுக்கட்டு  போடப்பட்ட  நிலையில்  நாயகன்  ஆஃபீசுக்கு  வந்த  ரவுடிகள்  35  பேரை  அடிச்சு  வீழ்த்தறாரு, ஆஃபிஸ்ல  இருக்கற  மிச்ச  சொச்ச  ஆம்பளைங்க  32  பேரும்  வேடிக்கை  தான்  பார்க்கறாங்க . ஓவர்  ஹீரோயிசம்

3  நாயகன்  பெரிய  பதவியில்  இருப்பவர் , பணக்காரர், ஆனால்  மனைவி  7  மாத  கர்ப்பமா  இருக்கும்போது  அவர்  கூட  அவரைப்பார்த்துக்க  ஒரு  நர்சையோ , ஒரு  பணிப்பெண்ணையோ  நியமிக்காம  இருப்பது  ஏன் ? 

4  நாயகன்  ஒரு  குடிகாரன், தாடியோட  கேவலமான  கெட்டப்ல  இருப்பது  ஓக்கே , அவரது  அப்பா  ஒரு  பத்திரிக்கையின்  ஓனர் , அவரும்  ஏன்  பிச்சைக்காரன்  மாதிரி  தாடியோட  இருக்காரு ? பாவமா  இருக்கு  அவர்  கெட்டப்   

5   கொலையாளி  யார்   என்பதை  நாயகன்  கண்டுபிடிக்கக்கூடாது  என்பதற்காக  நிஷா  தற்கொலை  செய்வது  ஓக்கே , ஆனால்  அதற்கு  முன்  உண்மையான  கொலையாளிக்கு  ஃபோன்  பண்ணி  இப்போ  நான்  உன்னைக்காப்பாற்ற  சாகப்போறேன்  என  சொல்வது  ஏன்? லாஸ்ட்  கால் ட்ராக்  பண்ணினா  கொலையாளி  மாட்டிக்க  மாட்டாரா? 

6  கமிஷனர்  ஆஃபிஸ்ல  செக்யூரிட்டி  சிஸ்டம்  எல்லாம்  ரொம்ப  வீக், ஈசியா  ஹேக்  பண்ணலாம்னு  ஒரு  டயலாக்  வருது, இதை  சென்சார்ல  எப்படி  விட்டாங்க ?

7  க்ளைமாக்ஸ் ல  ஹீரோ  எஸ்கேப்  ஆவது  காதில்  பூ  வகை . அத்தனை  போலீசும்  வேடிக்கை  பார்க்கறாங்க ., ஒரு  ஆள்  கூட  சுட  முயற்சி  பண்ணலை

8  ஹையர்  ஆஃபீசர்  ஃபோன்ல  ஷூட்  ஹிம்னு  சொல்றாரு , ஆனா  ஒரு  போலீஸ்  கூட  சுடலை 


9  படத்தின்  மெயின்  வில்லன்  சர்வர்களை  எல்லாம்  சிரமப்பட்டு கமிஷனர்  ஆஃபீசில்  மறைத்து  வைப்பதற்குப்பதில்  ஹார்டு  டிஸ்கை  மட்டும்  மறைத்திருக்கலாம்


10 க்ளைமாக்சில்  நாயகன்  ஒரு  சின்ன  பேக்கில்   ஹார்டு  டிஸ்க்குகளை  எடுத்துச்செல்கிறார். இதே  வேலையை  போலீஸ்  ஜீப்பில்  செல்லும்போது  ஒரு  வில்லன்  ஈசியாக  கொண்டு  சென்றிருக்கலாமே? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஸ்லோவக  செல்லும்  திரைக்கதை  என்றாலும்  க்ரைம்  த்ரில்லர்  ரசிகர்களுக்குப்பிடிக்கும் . ரேட்டிங்  2. 5 / 5 


Raththam
Theatrical release poster
Directed byC. S. Amudhan
Written byC. S. Amudhan
Produced by
  • Kamal Bohra
  • G. Dhananjayan
  • Pradeep B
  • Pankaj Bohra
Starring
CinematographyGopi Amarnath
Edited byT. S. Suresh
Music byKannan Narayanan
Production
company
Infiniti Film Ventures
Release date
  • 6 October 2023
Running time
144 minutes
CountryIndia
LanguageTamil

Saturday, November 04, 2023

சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எப்படி ?

  காலை  வெறும்  வயிற்றில்  எந்த  உணவோ, பானமோ  அருந்தாமல்  ரத்த  பரிசோதனை  செய்தால்  80  முதல் 100  வரை  இருந்தால்  அவர்களுக்கு  சுகர்  இல்லை  என  அர்த்தம், ஆனால் 111  முதல் 125  வரை  இருந்தால்  அவர்களுக்கு  விரைவில்  சுகர்  வரப்போகிறது  என  அர்த்தம். ஹெச் பி  ஏ1 சி  டெஸ்ட்  எடுத்தால்  கடந்த  மூன்று  மாதத்தில்  சர்க்கரை  அளவு  எவ்வளவு  என்பதை  கண்டறியலாம்

 அப்படிப்பட்ட  ப்ரி- டயபீட்ஸ்  ஆட்கள்  தாங்கள் வருங்காலத்தில்  சர்க்கரை  நோயாளிகள் ஆக  மாறாமல்  தடுத்துக்கொள்ளும்  வழி  முறைகளைப்பார்ப்போம்


 அதற்கு  முன்  ப்ரி டயபீட்ஸ்  ஸ்டேஜ்க்கு  நீங்கள்  வந்து  விட்டீர்கள்  என்பதற்கான  அறிகுறிகள் 


1   அடிக்கடி  தண்ணீர்  தாகம்  எடுக்கும்

2  வழக்கத்தை  விட  அதிகமாகப்பசி  எடுக்கும்

3  அடிக்கடி  சிறு நீர்  கழிப்பீர்கள் 

4  கண்  கொஞ்சம்  மங்கலாக  இருக்கும்

5  உடல்  எடை  குறையும்

6  உடல்  அதிக  சோர்வாக  இருக்கும் 

7  புண்கள்  ஏற்பட்டால்  ஆற  தாமதம்  ஆகும் 

8  கழுத்துப்பின்  பகுதி  கறுப்பாக  மாறும் 

9 தொப்புள்  பகுதி , கை கிச்சு ( அக்குள் )  பகுதி  கறுப்பாக  மாறும் 



இவர்கள்  செய்ய  வேண்டியது


1   உடல்  பயிற்சி  செய்தல்

2  நடைப்பயிற்சி  செய்தல் 

3  உணவு  முறையில்  கட்டுப்பாடாக  இருத்தல் 

SCAM 2003-A TELGI STORY (2023)ஹிந்தி /தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் ( பயோ கிராஃபிக்கல் , ஃபைனான்சியல் க்ரைம் ட்ராமா) @ சோனி லைவ்

 


   பொதுவாக  வெப் சீரிஸ்  என்பது  நேரத்தை  விழுங்கி  விடும்  என  அதை  தவிர்ப்பவன்  நான். ஆனால்  கலக்கலான  மேக்கிங் , அட்டகாசமான  நடிப்பு , நாம்  கேள்விப்படாத  பல  டீட்டெய்லிங்  என  பின்னிப்பெடல்  எடுத்திருக்கிறார்கள் .  சஞ்சய்  சிங்க்  எழுதிய  டெல்கி  ஸ்கேம்  ரிப்போர்ட்டர்ஸ் கி  டைரி  என்ற  புத்தகத்தைத்தழுவி  எடுக்கப்பட்ட  வெப் சீரிஸ்  இது ,  ஸ்கேம் 1992  வெப்  சீரிசைத்தொடர்ந்து     இரண்டாம்  சீரிசாக  இது  வெளி  வந்துள்ளது 


இந்தியாவையே  கலக்கிய  முத்திரைத்தாள்  மோசடியில்  ஒரு  தனி  நபர்  30,000  கோடி  ஊழல்  பணம்  சம்பாதித்த  கதை  இது . முதல்  பாகத்தில்  மொத்தம்  ஐந்து  எபிசோடுகள் . ஒவ்வொன்றும்   45  நிமிடங்கள் , ஆக மொத்தம்   225  நிமிடங்கள் /   4  ம்ணி  நேரம்  இருந்தால்  ஒரே  சிட்டிங்கில்  பார்த்து  விடலாம் , ஒரு  சீன்  கூட  போர்  அடிக்காத  விறுவிறுப்பான  க்ரைம்  த்ரில்லர்  இது  

   ஸ்பாய்லர்  அலெர்ட்

  நாயகன்  ரயிலில்  பழ  வியாபாரியாக  தன்  வாழ்க்கையை  நடத்தி  வருகிறான் அவனது  பேச்சுத்திறமையைப்பார்த்து ஒருவர்  நீ  மும்பை  வா.,, உனக்கு  நல்ல  வேலை  காத்திருக்கு  என்கிறார். அவர்  தந்த  அட்ரஸ்க்கு  நாயகனும்  போகிறான்


 அது  ஒரு  லாட்ஜ் . அதற்கு  நாயகன்  தான்  இனி  மேனேஜர் .  அருகில்  இருக்கும்  ஆட்டோ  ஸ்டேண்ட் ,  டாக்சி  ஸ்டேண்ட்  ஆகியவற்றில்  டிரைவர்களிடம்  விசிட்டிங்  கார்ட் கொடுத்து  கஸ்டமர்களை  அழைத்து  வந்தால்  கமிசன்  உண்டு  என  சொல்லி  வியாபாரத்தை  சூடு  படுத்துகிறான் .


 ஈ  ஓட்டிக்கொண்டிருந்த  லாட்ஜ்  இப்போ  ஹவுஸ்ஃபுல் . நாயகனுக்கு  டபுள்  சம்ப்ளம். ஓனர்  வீட்டுக்கு  அடிக்கடி  போன  நாயகன்  அங்கே  ஓனரின்  மகளால்  காதலிக்கப்படுகிறான். ஓனரும்   திருமணத்துக்கு  சம்மதம்  தெரிவிக்கிறார் 

  திருமணம்  முடிந்த  பின்   கல்ஃப்  கண்ட்ரிக்கு  வேலைக்குப்போய்  7  வருடங்கள்  நாயகன்  உழைத்து  பணம்  சம்பாதிக்கிறான், பின்  இந்தியா  ரிட்டர்ன்  வந்த  பின்  தான்  கதை  சூடு  பிடிக்கிறது 


  ஷேர்  மார்க்கெட்டில் பாண்ட் பேப்பர்சில்  ஸ்டாம் பில்  சீல்  வைத்த  பின்  தூக்கி  எறிந்து  விடுவார்கள் , அந்த  ஸ்டாம்ப்பில்  கெமிக்கல்  ஊற்றி  ஷீலை  அகற்றி  புது  ஸ்டாம்ப்  போல்  மாற்றி  விற்று  வருபவனுடன்  நாயகனுக்கு  ப்ழக்கம்  உண்டாகிறது  அந்த  பிஸ்னெஸ்  நாயகனுக்குப்பிடித்துப்போகவே  அதை  செய்ய  ஆரம்பிக்கிறான் 


 லோக்கல்  பிஸ்னெஸ்  காம்ப்பெட்டிஷனால்  நாயகன்  தாக்கப்படுகிறான். அதற்குப்பின்  நாயகன்  புது  ரூட்டைப்பிடிக்கிறான். டைரக்டாக  ஸ்டாம்ப்  பேப்பர்  மோசடி  செய்ய  ஆரம்பிக்கிறான்

  முத்திரைத்தாள்  பிரிண்ட்  ஆகும் நாசிக்கில்  மிஷினை   வாங்கி  அதே  போல்  போலியாக  பிரிண்ட்  செய்கிறான். அரசியல்வாதிகள் ,   அதிகாரிகள்  அனைவரையும்  விலைக்கு  வாங்கி  விடுகிறான். இதற்குப்பின்  இவன்  வாழ்க்கையில்  ஏற்படும்  மாற்றங்களே  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  அப்துல்  கரீம்  டெல்கி  ரோலில்  கனதேவ் அட்டகாசமாக  நடித்திருக்கிறார். அவரது  உடல்  மொழி ,டயலாக்  டெலிவரி  அனைத்தும்  அற்புதம்


டைட்டில்  போடும்போது  வரும்  பிஜிஎம்  தெறிக்கிறது , ஆனால்  இது  ஸ்கேம் 1992  பிஜிஎம்  தான். மாற்றாமல்  அபப்டியே  யூஸ்  பண்ணி  இருக்காங்க 


ஒளிப்பதிவு,  லொக்கேஷன்  செலக்சன் , ஆர்ட்  டைரக்சன்  போன்ற  டெக்னிக்கல்  அம்சங்கள்  ஓக்கே  ரகம் 


சபாஷ்  டைரக்டர்


1   நாயகன்  தன்  கேசுக்கு  வாதாட  வரும்  வக்கீல்  போலீஸ்  ஆஃபீசருக்கு 15,000  தர  வேண்டி  இருக்கும்  என  சொன்னதும்  அதை  நீங்களே  கட்டிடுங்க . உங்களுக்குத்தர  வேண்டிய  வக்கீல்  ஃபீஸ்ல  50%  தள்ளுபடி  பண்ணிக்குங்க , உங்களுக்கு  கஸ்டமர்ஸ்  பிடிச்சுத்தர்றேன்  என்று  டீல்  பேசும்  இடம் 


2  டெட்  ஷேர்  சர்ட்டிஃபிகேட்களில்  இருக்கும்  ஸ்டாம்ப்களில் வைக்கப்பட்ட  ஷீல்களை  கெமிக்கல் ஸ் மூலம்  அகற்றி   பாதி  விலைக்கு  விற்கும்  ஐடியாவை  விவரிக்கும் காட்சி 


3  ஆஃபீஸ்  ஸ்டாஃப்களின்  டிஃபன்  பாக்ஸ்களில்  பணம்  வைத்து  பின்  காலி  டிஃபன்  பாக்ஸ்களில்  ரெவின்யூ ஸ்டாம்ப்சை  கலெக்ட்   பண்ணும்  ஐடியா


4 ஸ்டாம்ப்களில்  மோசடி  செய்யும்  வேலையில்  இருந்து  ஸ்டாம்ப் பேப்பர்சில்  மோசடி  செய்ய  துவங்கும்  காட்சியும், 33,000  கோடி ஸ்டாம்ப்பேப்பர்  விற்பனையில் 80  கோடி  ஆட்டையைப்போடும்  திட்டமும் 


5 நாசிக்கில்  டெபுடி  மேனேஜர்  ஆக  பணியாற்றும்  மதுசூதனன்  மிஸ்ராவுக்கு  நாயகன்  வாட்ச்  லஞ்சமாக  தந்தும்  அவர்  அதை  ஏற்காமல்  நாயகனை  பலர்  முன்னிலையில்  அவமானப்படுத்துகிறார். மற்ற  ரெகுலர்  நாயகன்கள்  எனில்  அவரைப்பழி  வாங்கி  இருப்பார்கள், ஆனால்  இந்த  நாயகன் 25  லட்ச  ரூபாய்  செலவு  செய்து  மேனேஜர்  ஆக  பிரமோஷன்  வாங்கித்தரும்  சூட்சும  புத்தி  அபாரம் 


ரசித்த  வசனங்கள் 


1    கனவுகளின்  விலை  என்ன? நமக்கு  அளிக்கப்பட்டிருக்கும்  வாழ்க்கையை  விட  அது  பெருசு 


2  அரசியல்வதிகள்  தான்  பிஸ்னெசின்  முதுகெலும்புகள் 


3  ஒருத்தன்  பெரிய  ஆள்  ஆகனும்னா  அவனுக்கு  சாலிட்  ஆன  லக்  வேண்டும்


4  டான்ஸ்  பாருக்கும், ஜெயிலுக்கும்  என்ன  ஒற்றுமைன்னா  இங்கே  வர்றவங்களை  அது  ரெண்டாவது  டைமும்  இழுத்துக்கும் 


5  வாழ்க்கைல நாம  ஜெயிக்கனும்னா  கண்ணை  மூடிக்கிட்டு  ஏதாவது நல்ல  முடிவை  எடுத்துத்தான்  ஆகனும்


6   எப்பவாவது  கிடைக்கும்  பொருளை  வெச்சுக்கிட்டு  ரெகுலரா  தொழில்  பண்ண  முடியாது 


7 எனக்கு  பணம்  சம்பாதிப்பதில்  ஆசை  இல்லை , பணத்தை உருவாக்கனும்


8  அடுத்தவங்க  சொல்றதை  எல்லாம்  கேட்டா  நம்மால  முழு நிம்மதியோட  வாழ  முடியாது 


9 ஒழுங்கா  வேலை  செய்யத்தெரிஞ்சவங்களுக்கு குறுக்கு  வழியும்  தெரிஞ்சிருக்கும்


10 நான் சும்மா  ஓடனும்னு ஆசைப்படலை , சிறுத்தை  மாதிரி  பாயனும்னு  ஆசைப்படறேன்


11 அவன்  ரொம்ப  நேர்மையானவன், பணத்தை  மட்டும் தான்  சாப்பிடுவான்


12 ஒரு  தொழில்  செய்ய  தேவைகளை  கத்துக்கறது  ரொம்ப  முக்கியம். யார்  யாருக்கு  என்ன  தேவை  என்பதை... 


13  நீ  உன்  தகுதியை  வெச்சுக்கிட்டு  அறிவை  வாங்க  முடியாது , ஆனா  நான்  என்  அறிவை வெச்சு  தகுதியை  வாங்கிக்காட்றேன்


14  சில  நேரங்களில்  நாங்க  அரசாங்கத்தைப்பார்த்துக்குவோம்,    சில  நேரங்களில்  அரசாங்கம்  எங்களைப்பார்த்துக்கும்,


15 கூட  இருக்கறவங்க  தப்பு பண்ணும்போது  யார்  அவங்களை  மன்னிக்கறாங்களோ  அவங்க  மகான்  ஆகிடுவாங்களாம், நானும்  மகான்  ஆக  ஆசைப்படறேன்


16 ஆளும்  கட்சி , எதிர்கட்சி  ரெண்டு  தரப்புக்கும்  பணம்  கொடுக்க  வேண்டியதா  இருக்கு 


17  உங்களுக்கு  லோ சுகரா? திடீர்னு  அஸ்காவை  எடுத்து  சாப்பிடறீங்க?


   வாழ்க்கை  உப்பு  , சப்பு  இல்லாம  போகுதில்ல? அதான் , கொஞ்சம்  சர்க்கரையை  எடுத்துக்கிட்டேன்


18  நாம  இந்த  உலகத்துக்கு  ஏன்  எதுக்காக   வந்திருக்கோம்?


 அடி  வாங்கி சாகத்தான் 

 இல்லை , இந்த  உலகத்துக்கு  சம்பாதிக்க  வந்திருக்கோம், சிலருக்கு  பணம், சிலருக்கு  மரியாதை , சிலருக்கு  பதவி 


 அரசியல்வாதிகள் கிட்டே  சாவகாசம்  வெச்சுக்கிட்டா  இதான்  கதி , கறந்துக்கிட்டே  இருப்பாங்க 


17  நாம  ரெண்டு  பேரும்  சேர்ந்தா  சிஸ்டத்துல  உக்கார்ந்து  சிஸ்டத்தையே  உருவாக்கலாம்


18  போக  வேண்டிய  இடம்  பக்கத்துல  வந்துட்டா  மனசோட  வேகம்  அதிகம்  ஆகிடும் . வேகமா  நடக்க  ஆரம்பிப்போம்


19  பயப்படறவன்  தலைல  என்னைக்கும்  கிரீடம்  ஏறாது 


20   இந்த  உலகத்துலேயே  இருக்கும்  மிகப்பெரிய  உண்மை  இறக்கப்போகும்  மனிதனின்  கண்களில்  தெரியும்


21 ஒருத்தன்  துணிச்சலா  தண்ணீரில்  இறங்கும்  வரை  அது  சூடா  இருக்கா? குளிர்ச்சியா  இருக்கா?னு  அவனுக்கே  தெரியாது . அதனாலதான்  நாமளே  இறங்கிப்பார்த்துடனும்


22   நம்ம  பக்கம்  காத்து  வீசும்போதே  பல  பேர்  காத்தை  பிடுங்கி  விட  வேண்டி  இருக்கு 


23  நம்மை  எவனும்  நெருங்கவே  கூடாது , தொடவும்  கூடாது , அதுதான்  நம்ம  லட்சியம் 


24  நேரத்தோட  வேல்யூவை  நாம  புரிஞ்சுக்கிட்டா  அது  நம்ம  வேல்யூவை  உயர்த்தும் 


25   எவ்வளவு  வேணா  திருடி  சம்பாதிக்கலாம், ஆனா  நம்பிக்கை  துரோகம்  செய்யக்கூடாது ,  காவல்  காக்கும்  வீட்லயே கை  வைக்கக்கூடாது சாப்பிட்ட  தட்டுலயே  எச்சில்  துப்பக்கூடாது . திருட்டு  வேலைல  முக்கியமே  விசுவாசம் தான் 


26  சிறந்த  பொருட்கள்  விலை  அதிகமாத்தான்  இருக்கும்

27  அவன்  என்னை  எலியாவு, தன்னை  சிங்கமாவும்  நினைச்சுக்கிட்டு  இருக்கான் , உண்மை  என்னான்னா  எல்லாரும் சிங்கத்தைத்தான்  வேட்டையாட  நினைப்பாங்க ., எலியை  அல்ல 


28  சிங்க்த்தின்  முன்  எப்பவும்  நான்  எலியாத்தான்  நடந்துக்குவேன், அப்படித்தான்  நடந்துக்கனும்


29  சிங்கம்  எப்பவும்  எலியை  ஒண்ணும்  பண்ணாது , அதே  சமயம்  எலி  சிங்கத்துடன்  பார்ட்னர்ஷிப்  வெச்சிருக்குன்னு  தெரிஞ்சா  யாரும்  நம்மைத்தொந்தரவு  செய்ய  மாட்டாங்க 

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகனுக்கு  பார்ட்னருடன்  கருத்து  மோதல்  ஏற்பட்டு  பிரிகிறார்கள் . பார்ட்னர்  நாயகனை  மாட்டி  விட  முய்ற்சி  செய்யவே  இல்லை , மாட்டி  விடுவானோ  என  தற்காப்பு நடவடிக்கையையும்  நாயகன்  எடுக்க  வில்லை , 


2  எல்லா  இடங்களிலும்  டைட்  செக்யூரிட்டி  இருக்கு  என  ஓடும்  ரயிலில்  குறிப்பிட்ட  இடத்தில்  6  நிமிடங்களில்  திருட  வேண்டும்  என  வசனம்  வருகிறது , ஆனால்  காட்சியாகப்பார்த்தால்  அதுக்கு  பாசிபிலிட்டியே  இல்லை  என்றே  தோன்றுகிறது . கவர்மெண்ட்  அரக்கு  சீலை  நீக்கி  மீண்டும்  சீல்  வைக்கவே  அவ்வளவு  நேரம்  ஆகுமே?

3  தன்னிடம்  வேலை  செய்பவன்  பைக்  வாங்கி  படோடபம்  காட்டும்போது  இப்படி  பட்டவர்த்தமாய் செலவு  செய்தால்  மாட்டிக்கொள்வோம்  என்று  அறீவுறூத்தும்  நாயகன்  ஈகோ  கிளாசில்  ஒரு  நைட்  கிளப்பில்  ஒரு  பெண்ணுக்கு   90  லட்சம்  ரூபாய்  அபிஷேகம்  பண்ணி  மாட்டுவது  எப்படி ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ / ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பார்த்தே  தீர  வேண்டிய  பட்டியலில்  இதை  சேர்த்து  விடுங்கள் , ஆண்களுக்கு  மிகவும்  பிடிக்கும் , பெண்களும்  பார்க்கலாம்  ரேட்டிங் 4 / 5 


Scam 2003
Genre
Based onSanjay Singh's Telgi Scam: Reporter's ki Diary
Developed byHansal Mehta
Written byKaran Vyas
Kiran Yadnyopavit
Kedar Patankar
Story bySanjay Singh
Directed byTushar Hiranandani
Creative directorTanvi Chheda
Starring
Music byIshaan Chhabra
Country of originIndia
Original languageHindi
No. of seasons1
No. of episodes5
Production
Executive producersKartik R. Iyer
Tanvi Chheda
Deepak Segal
ProducerSameer Nair
Production locationIndia
CinematographyStanley Mudda
EditorKunal Walve
Production companiesStudio NEXT
Applause Entertainment
Original release
NetworkSonyLIV
Release1 September 2023

Friday, November 03, 2023

எடை குறைப்புக்கு ( வெயிட் லாஸ்) எளிய வழிகள் + உலக ஆரோக்கிய தின குறிப்புக்கள்

 உலகமெங்கும்  பெரும்பாலானோர்  சந்திக்கும்  முக்கியப்பிரச்சனை  அதிக எடை  இருத்தல் . அதீத  எடை  தான்  பல  ஆரோக்கியப்பிரச்சனைகளுக்கும்  மூல  காரணமாக  இருக்கிறது . நாம்  தினசரி  மூன்று  வேளைகள்  உணவு  உண்ணுதல் , நொறுக்குத்தீனி , டீ , காஃபி , பால் , கூல்டிரிங்க்ஸ்  குடித்தல்  ஆகியவற்றால்  சுமாராக 2000  கலொரிகள்  பெறுகிறோம். உட்ல்  எடை  குறைப்புக்கு  100  கலோரிகள்  எரிக்க  அல்லது  குறைக்க  என்னென்ன  செய்ய  வேண்டும் ?


1   ஒன்றரை   கி,மீ  ரன்னிங்  போதல்  அதாவது  10  நிமிட  நேரம்  ஓட்டம் 


2  இரண்டு  கிமீ  தூரம்  வாக்கிங்  போதல்  அதாவது  22  நிமிட நேரம்  நடைப்பயிற்சி 


3  மாடிப்படிக்கட்டுகள்  அல்லது  மலை  படிக்கட்டுகளில்  10  நிமிடம்  ஏறுதல் 


4 எழு  நிமிட  நேரம்  ஸ்கிப்பிங்  ஆடுதல் 

5  பதிமூன்று  நிமிட நேரம்  சைக்கிளில்  பெடல்  அழுத்தி  சைக்கிளிங்க்  போதல் 


6   அரை  மணி  நேரம்  யோகா  செய்தல் 


 ஒரு  மாதிரிக்குத்தான்  மேலே  கொடுக்கப்பட்டிருக்கும் ஆறு  பயிர்சிகள் . நீங்கள்  எத்தனை  கலோரி  எரிக்க  வேண்டுமோ  அதை  உங்கள்  சவுகர்யத்துக்கு  கணக்கிட்டு  நீங்களே  தேர்ந்தெடுத்து  அந்த  வழிகளில்    கலோரி  எரிக்கலாம் 

=========================

*மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்!*

1. பிபி: 120/80

2. துடிப்பு: 70 - 100

3. வெப்பநிலை: 36.8 - 37

4. மூச்சு: 12-16

5. ஹீமோகுளோபின்: ஆண் -13.50-18
பெண் - 11.50 - 16

6. கொலஸ்ட்ரால்: 130 - 200

7. பொட்டாசியம்: 3.50 - 5

8. சோடியம்: 135 - 145

9. ட்ரைகிளிசரைடுகள்: 220

10. உடலில் உள்ள இரத்தத்தின் அளவு: PCV 30-40%

11. சர்க்கரை அளவு: குழந்தைகளுக்கு (70-130) பெரியவர்கள்: 70 - 115

12. இரும்பு: 8-15 மி.கி

13. வெள்ளை இரத்த அணுக்கள் WBC: 4000 - 11000

14. பிளேட்லெட்டுகள்: 1,50,000 - 4,00,000

15. சிவப்பு இரத்த அணுக்கள் RBC: 4.50 - 6 மில்லியன்.

16. கால்சியம்: 8.6 -10.3 mg/dL

17. வைட்டமின் D3: 20 - 50 ng/ml.

18. வைட்டமின் பி12: 200 - 900 பக்/மிலி.

🦅 *முதியவர்களுக்கான சிறப்பு குறிப்புகள் 40/50/60 வயது!*

*1- முதல் ஆலோசனை!* 

உங்களுக்கு தாகம் இல்லாவிட்டாலும் அல்லது தேவைப்படாவிட்டாலும் எப்போதும் தண்ணீர் குடியுங்கள், மிகப்பெரிய உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் அவற்றில் பெரும்பாலானவை உடலில் நீர் பற்றாக்குறையால் ஏற்படுகின்றன.  ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர்.

*2- இரண்டாவது அறிவுறுத்தல்!* 

உடலில் இருந்து முடிந்த அளவு வேலை செய்ய வேண்டும், நடைபயிற்சி, நீச்சல் அல்லது எந்த வகையான விளையாட்டு போன்ற உடலின் இயக்கம் இருக்க வேண்டும்.

*3-3வது உதவிக்குறிப்பு!* 

குறைவாக சாப்பிடுங்கள்... அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற ஆசையை விடுங்கள்... ஏனென்றால் அது ஒருபோதும் நன்மை தராது.  உங்களை இழக்காதீர்கள், ஆனால் அளவைக் குறைக்கவும்.  புரதம், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை அதிகம் பயன்படுத்துங்கள்.

*4- நான்காவது அறிவுறுத்தல்!* 

முற்றிலும் அவசியமானால் தவிர வாகனத்தைப் பயன்படுத்த வேண்டாம்.  மளிகைப் பொருட்களை எடுக்க, யாரையாவது சந்திக்க அல்லது ஏதாவது வேலை செய்ய நீங்கள் எங்கு சென்றாலும், உங்கள் காலடியில் நடக்க முயற்சி செய்யுங்கள்.  லிஃப்ட், எஸ்கலேட்டர்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக படிக்கட்டுகளில் ஏறுங்கள்.
 
*5- 5வது வழிமுறை!* 

கோபத்தை விடுங்கள், கவலைப்படுவதை நிறுத்துங்கள், விஷயங்களைப் புறக்கணிக்க முயற்சி செய்யுங்கள்.  தொந்தரவான சூழ்நிலைகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளாதீர்கள், அவை எல்லா ஆரோக்கியத்தையும் கெடுத்து ஆன்மாவின் மகிமையைப் பறிக்கின்றன.  நேர்மறை நபர்களுடன் பேசுங்கள், அவர்களைக் கேளுங்கள்.

*6- ஆறாவது அறிவுரை!* 

முதலில், பணத்தின் மீதான பற்றுதலைக் கைவிடுங்கள்
 உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் இணைந்திருங்கள், சிரிக்கவும் பேசவும்!  பணம் பிழைப்பிற்காக உருவாக்கப்படுகிறது, பணத்திற்காக வாழ்க்கை அல்ல.

*7-7வது குறிப்பு!* உங்களுக்காகவோ, உங்களால் சாதிக்க முடியாத எதையும் பற்றியோ அல்லது நீங்கள் நாட முடியாத ஒன்றைப் பற்றியோ வருத்தப்பட வேண்டாம்.
 அதை புறக்கணித்து மறந்து விடுங்கள்.
 
*8- எட்டாவது அறிவிப்பு!* 

பணம், பதவி, கௌரவம், அதிகாரம், அழகு, சாதி மற்றும் செல்வாக்கு;
 இவை அனைத்தும் ஈகோவை அதிகரிக்கின்றன.  பணிவு மக்களை அன்புடன் நெருக்கமாக்குகிறது.

*9- ஒன்பதாவது குறிப்பு!* 

உங்கள் முடி வெள்ளையாக இருந்தால், அது வாழ்க்கையின் முடிவைக் குறிக்காது.  இது ஒரு நல்ல வாழ்க்கையின் ஆரம்பம்.  நம்பிக்கையுடன் இருங்கள், நினைவாற்றலுடன் வாழுங்கள், பயணம் செய்யுங்கள், மகிழுங்கள்.  நினைவுகளை உருவாக்கு!

*10- 10வது வழிமுறைகள்!* 

உங்கள் குழந்தைகளை அன்பு, பச்சாதாபம் மற்றும் பாசத்துடன் சந்திக்கவும்!  கிண்டலாக எதுவும் சொல்லாதே!  உங்கள் முகத்தில் ஒரு புன்னகை!
கடந்த காலத்தில் நீங்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், நிகழ்காலத்தில் அதை மறந்துவிட்டு, எல்லாவற்றிலும் கலக்குங்கள்!