Wednesday, October 11, 2023

MISS SHETTI AND MR. POLISHETTI (2023) - தெலுங்கு - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமண்டிக் காமெடி மெலோ டிராமா ) @ நெட் ஃபிளிக்ஸ்

   


வெறும் 12  கோடி  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்டு  50  கோடி  வசூல்  செய்த  படம் இது     .  பட  பூஜை  போட்ட  போது  30  வயசுப்பெண்ணுக்கும், 25 வயதுப்பையனுக்கும்  நடக்கும்  காதல்  என்ற  ஒன் லைன்ல  தான்  ஆரம்பித்தார்கள் ,ஆனால்  போகப்போக  திரைக்கதை  மொத்தமாக  மாறியது , கற்பனைக்கதை  தான் 

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி  சிறுமியாக  இருந்த  போதே  நாயகியின் அப்பா நாயகியின் அம்மாவை விட்டு  ஓடிட்டாரு. அதனால  நாயகிக்கு  ஆண்கள் , கல்யாணம் , காதல் , மேல்  நம்பிக்கை  இல்லை . யாரையும்  நம்பத்தயார்  இல்லை . ஆனா  அம்மா  உடல்  நிலை  சரி  இல்லாம  இறந்துடறாங்க . இனிமே  நமக்குனு  யார்  இருக்காங்க ? நமக்குன்னு  ஒரு  ஜீவன் வேணும், ஒரு  குழந்தை  பெத்துக்கலாம்னு  நினைக்கறாங்க , ஆனா  இயற்கை  முறைப்படி  வேண்டாம்,  டெஸ்ட்  ட்யூப்  பேபி  போல  உருவாக்கிக்கலாம்னு  முடிவு  பண்றாங்க . அதுக்காக  ஸ்பெர்ம்  டோனர்  தேடும்  பணில  இருக்காங்க 


ஈரோடு  மகேஷ் , மதுரை  முத்து  மாதிரி  பத்திரிக்கைகளில்  பிரசுரம்  ஆன  ஜோக்குகளை  மனப்பாடம்  பண்ணி  தானே  உருவாக்கியது  போல  பேசும்  வல்லமை  படைத்த  ஆள்  போல்  இல்லாமல் நாயகன்  சொந்தமாக  ஜோக்ஸ்  சொல்லி  மேடைகளில்  ஸ்டேண்ட்  அப்  காமெடி  செய்பவன். பார்ட்  டைம்  ஜாப்  ஆக  இதை  செய்கிறான். நாயகி  ஃபைவ்  ஸ்டார்  ஹோட்டலில்  சீஃப்  செஃப்  ஆக  பணி புரிகிறார்


நாயகிக்கு  உருவாக  இருக்கும்  கரு  ஆரோக்கியமான  நல்ல  குடும்பப்பின்னணி  உள்ள  ஆணிடம்  இருந்து   பெற வேண்டும் என  நினைக்கிறார். பலரை  இண்ட்டர்வ்யூ  செய்கிறார். யாரும்  செட்  ஆகவில்லை .நாயகி  கண்ணில்  நாயகன்  பட்டதும்  அவனது  புத்திசாலித்தனம் , குடும்பப்பின்னணி  நாயகிக்குப்பிடித்து  விடுகிறது


 ஆனால்  நாயகனுக்கு நாயகியின்  பின்னணி  தெரியாது . தன்னை  லவ்  பண்ணுகிறார்  என  நினைக்கிறார். இதற்குப்பின்  நிகழும்  காமெடி  கலாட்டாக்கள் , நெஞ்சைத்தொடும்  க்ளைமாக்ஸ்  தான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  நவீன்  ஆந்திர  கார்த்திக்  போல  சுறுசுறுப்பு  துறுதுறுப்பு  என  கலக்கலான  நடிப்பு. அப்பாவித்தனமான  முகம்  இவரது  பிளஸ்

நாயகி  ஆக  அனுஷ்கா  ரொம்பவே  அடக்கி  வாசித்து  இருக்கிறார். கேரக்டர்  டிசைன்  டல்  என்பதால்  டல்  மேக்கப்புடன்  வருகிறார். அட்லீஸ்  நெற்றியில்  குங்குமம்  ஆவது  இட்டிருக்கலாம்


நாயகியின்  அம்மாவாக  ஜெயசுதா  சில  காட்சிகளில்  வருகிறார். பாந்தமான  நடிப்பு .நாயகனின்  அப்பாவாக   முரளிசர்மா  கச்சிதமாக  நடித்திருக்கிறார்

 5  பாடல்களில்  மூன்று  சிறப்பு, பிஜிஎம் ஓக்கே  ரகம். கோட்டகிரி  வெங்கடேஸ்வரராவின்  எடிட்டிங்கில் 147  நிமிடங்கள்  ஓடுகிறது

திரைக்கதை எழுதி  இயக்கி  இருப்பவர்  மகேஷ்பாபு  

சபாஷ்  டைரக்டர் (மகேஷ்பாபு  )

1  ஸ்பெர்ம்  டோனர்  ஆக   ஹாஸ்பிடல்  வரும் நாயகன்  ரிசப்ஷனில்  பாட்டில்  குடுங்க  எனக்கேட்கும்போது    டேபிளில்  ஒரு  லிட்டர்  வாட்டர்  கேன்  இருப்பதைக்கவனிக்காமல்  அருகே  இருக்கும்  சின்ன   பாட்டிலை  மீன்  பண்ணி  சொல்லும்  ரிசப்ஷனிஸ்ட்  , அதை  தவறாகப்புரிந்து  கொண்ட  நாயகன் நான்  என்ன  குதிரையா?  இவ்ளோ  பெரிய  பாட்டில்  எதுக்கு ? என  அப்பாவியாய்  கேட்கும்போது  வெடிச்சிரிப்பு   அக்மார்க்  கே  பாக்யாராஜ்  டைப்  காமெடி . விஷூவலாக  பிர்மாதமாக  ஒர்க்  அவுட்  ஆன  காமெடி  சீன் 

2    சீரியஸ்  ஆன  திரைக்கதையை  காமெடியாக  எடுத்துச்சென்ற  விதம்  அருமை 

3  முதல்  பாதி  ஆண்களுக்குப்பிடித்த   மாதிரி  கலகலப்பாகவும், பின்  பாதி  பெண்களுக்கு  பிடித்த  மாதிரி  டி வி  சீரியல்  போலவும்  திரைக்கதை  அமைத்த  விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1  நாம  எல்லாருமே  எக்ஸ்பயரி  டேட்  உடன்  தான்  இங்கே  வர்றோம். அதனால  டைம்  வேஸ்ட்  பண்ணக்கூடாது 


2  நமக்குன்னு யாரும்  இல்லாம  போனா  வாழ்க்கை  பூரா  தனிமைதான்


3  போகப்போகும்  உயிரைக்கைல  பிடிச்சு  இழுத்து  நிறுத்த  நமக்கு ஒரு  கை  வேண்டும்

4  அடுத்தவங்களை  சிரிக்க  வைக்கறவங்களுக்கு  ஷார்ப்  மைண்டாம் 

5  ஸ்டேண்ட்  அப்  காமெடி  பற்றி உங்களுக்கு  சரியாத்தெரியல. அதுல  இல்லாதது  மூணு  1  சூடு  2  சொரணை  3  துட்டு 

6  கார்ப்பரேட்  கம்ப்பெனியா?  என்  கிட்டே  கரன்சி  தான்  இல்லை , ஆனா  க்ரிப்டோ  கரன்சி  ஜோக்ஸ்  நிறைய  இருக்கு 


7    நர்ஸ் =  அந்தப்பொண்ணு  உங்க  சிஸ்டரா?


  சிஸ்டர், நீங்க  சிஸ்டர் என்பதால்   பார்க்கற  எல்லாப்பொண்ணுமே  சிஸ்டர் ஆக  முடியுமா? சிஸ்டர் ? 


8 காதலனுக்கும்  , காதலிக்கும்  இடையே  உள்:ள  உறவு  எபப்டி  இருக்கனும்  தெரியுமா? ரத்த  தானம்  செய்பவர் ,  அதைப்பெறுபவர்  இருவருக்கிடையே  உள்ள  உறவு  போல  இருக்கனும்,  மேட்ச்  ஆனாலே  போதும்


9  என்னது ? மேரேஜ்  வேண்டாம், ஆனா  உன்  மூலம்  ஒரு  குழந்தை  வேணும்கறாளா? டைரக்டா  ஃபர்ஸ்ட்  நைட்டா? ஐ ஜாலி 


10  அவ  உனக்கு  ஓக்கே  சொன்னாளா? இல்லையா? 


 அது  வந்து ... மேடம்க்கு   பீட்சா  வேணுமாம், ஆனா  கலோரி  வேண்டாமாம், வீடு  வேணுமாம், ஆனா  இஎம் ஐ  கட்ட  மாட்டாங்களாம், ஃபிளைட்ல  ஏறனுமாம், ஆனா  டிக்கெட்  எடுக்க  மாட்டாளாம்


11  என்ன ? அவ  கூட லவ்  ஜோன்  க்கு  போயாச்சா?


 இல்லடா., இது  ப்ரோ  ஜோன்  இல்லை , ஃபிர்ண்ட்ஷிப்  ஜோன்  கூட  இல்லை , யூஸ்  அண்ட்  த்ரோ  ஜோன்  மாதிரி  இருக்கு 


12   எனக்கு காதல் , கல்யாணம்., ரிலேஷன்ஷிப்  இதுல  எல்லாம்  நம்பிக்கை  இல்லை , இட்  ஈஸ்  நாட்  எ  கப்  ஆஃப்  டீ


 ஆனா  எங்க:ளுக்கு  அது  ஃபுல்  மீல்ஸ்  பிளேட்


13   ஒரு  பொண்ணு  கல்யாணம்  பண்ணிக்காம  தாய்  ஆக  நினைப்பது  சீப்பா? தப்பா> ? 


14  நீ  நினைச்சுட்டு  இருக்கற  மாதிரி  நீ  காமெடியன்  எல்லாம்  இல்லை , ஜோக்கர் ,எனக்கு  ஜோக்கர்  கூட   வேலை  இல்லை 


15   தோசை  ஊத்தறேன், சப்ட்டுட்டு  போடா 


 நீ  தோசை  ஊத்து  அவன்  சாயங்காலம்  நம்மைக்கழுவிக்கழுவி  ஊத்தட்டும்


16  நேத்து  உன்  ஷோ  பார்த்தப்ப  வோர்ல்ட்  கப் கிரிக்கெட்  மேட்ச்  ஆட  தகுதி  உள்ளவன்  தெரு ஓரம்  மேட்ச்  ஆடற  மாதிரி  இருந்துச்சு 


17  ஒரு  பெண்ணின்  மனசை  நிரப்பனும்னா  முதல்ல  அவ  வயிற்றை  நிரப்பனும் 


18  IUIமுறைப்படி  ஒரு  டாக்டரோட  சூப்பர்விஷன்ல  தான்  இது  ந்டக்கும்


 புரியல , ஐ  யூ  ஐ, இடைல  டாக்டர்  எதுக்கு ? 


19   நீ  சொன்னதைக்கேட்டா   மேரேஜ்க்கு  முன்னமே  டைவ்ர்ஸ்  செஞ்ச  மாதிரி  இருக்கு 


20  என்ன? பப்ளிக்ல  இந்த  மாதிரி  புக்  படிச்சுட்டு  இருக்க?


  இங்கே  நடக்க  இருப்பது   ஹோமம்  இல்லை , காமம் 


21  ஷேம்  ஆன்  யூ  மேன் ,  சிகரெட்  பிடிச்சா  குழந்தை  பிறக்காது  தெரியுமா? 


  ஆல்ரெடி  எனக்கு  மூணு  குழந்தைங்க 


 அப்ப  இனிமே  பிறக்காது 


22   ஒரு  பிரேக்கப்பிற்குப்பின்  பசங்க  எல்லாம்  டிப்ரெஷன்  ஆகிடுவாங்க , ஆனா  பொண்ணுங்க  இன்னும்  ஸ்ட்ராங்  ஆகிடுவாங்க 


23  அம்மா  இல்லாத  குறையை  அம்மா  ஆகி  தீர்த்துக்கறதா  சொல்றே!


24  பிரேக்கப்  ஆனதுக்கப்புறம்  ஃபிரண்ட்ஸ்  உசுப்பேத்துவாங்க , கடல் ல  ஏகப்பட்ட  மீன்கள்  இருக்க   கவலை  எதுக்கு?ம்பாங்க, ஆனா  மீனுக்கு தூண்டில்  ஓடும்  மீனவர்களும்  இருக்காங்களே?>


25  வெளில  இருந்து  கிடைக்கும்  அன்பை  அவ  நம்பாததால்  தான்  தனக்கு  உள்ளே  ஒரு  உறவை  தேடிக்கிட்டா 


26  எனக்கு  நீ   வேணும்னு  நீ  கேட்டியே  தவிர   உனக்கு  நான்  இருக்கேன்னு  சொல்லலையே? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நாயகி  தனக்கு  உருவாக  இருக்கும்  குழந்தைக்கு  அப்பாவாக  வர  இருப்பவன்  திறமைசாலியாக  இருக்க  வேண்டும், நல்ல  குடும்பப்பின்னணி  இருக்க  வேண்டும்  என  எதிர்பார்த்து  பலரை  இண்ட்டர்வ்யூ  செய்கிறார், ஆனா  யாரும்  செட்  ஆகலை, ஆனால்  நாயகனை  ஒரு  ஷோவில்  பார்த்து  இம்ப்ரெஸ்  ஆகிறார். முதல்  டைம்  பார்க்கும்போதே  நாயகன்  சரக்கு  அடிச்சுட்டு  இருக்காரு. அது நாயகி  கண்ணை  உறுத்தலையா? போயும்  போயும்  ஒரு  குடிகாரனையா  தேர்ந்தெடுப்பார் ?

2  நாயகனின்  அப்பா  நாயகனின்  ரூமுக்கு  வந்து  அந்த  ஃபோட்டோவில்  இருப்பது  யார்? என விசாரிக்கிறார். அப்போ  இதுவரை  அவர்  தன்  மகன்  ரூம்க்கு  வந்ததே  இல்லையா? ஒரே  வீட்டில்  இருந்துமா? 

3   ரோட்டோரக்க்டையில்  பஜ்ஜி  சாப்பிடப்போகும்  நாயகன்  , நாயகி  இருவரும்  ரெகுலரா  இஞ்ஜின்  ஆயில்ல  போடும்   பஜ்ஜி  வேண்டாம், நல்ல  ஆயில்ல   பஜ்ஜி  போடு  என்றதும்  அடுத்த  செகண்டே  கடைக்காரன்  பஜ்ஜி  தர்றான். கடாயை  புதுசா  அடுப்புல  வெச்சு  எண்ணெய்  காயவே  10  நிமிசம்  ஆகுமே? எப்படி  நல்ல  பஜ்ஜி  வந்துச்சு?னு  நாயகன்  கேட்கவே  இல்லை. 


4   ஃபைவ்  ஸ்டார் ஹோட்டல்  செஃப்  ஆன  நாயகி  மிகவும்  ஹைஜீனிக்கான  உணவு  உண்பவர், அவர்  எப்படி  ரோட்டோரக்கடையில்  மட்டமான  ஆயிலில்  போடும்  பஜ்ஜியை  சாப்பிட  முன் வந்தார் ? 


5  நாயகியும்    தோழியும்  நாயகன்  டீ  டோட்டலரா? என்பதை  செக்  செய்ய  யார்  யாரிடமோ  விசாரிக்கிறார்கள் , நாயகன்  என்னடானா  நடு   ரோட்ல  தம்  அடிக்கிறான்,   சரக்கு  அடிக்கிறான்.  நாயகனை  ஒரு  ஃபுல்  டே  ஃபாலோ  பண்ணி  வாட்ச்  பண்ணாலே  போதுமே? அது  போக  கேன்சர்  பிறப்பிடமான  சிகரெட்  குடிப்பவர்கள்  கீழ்  உதடு  கருத்திருக்குமே? அவங்க  பேசும்போது  நாற்றம்  அடிக்குமே? அது  கூடவா  கண்டு  பிடிக்க  முடியல ? 

6  ஒரு  கட்டத்தில்  , ஒரு  விவாதத்தில்  குடிகாரன்  ஆன  நாயகன்  தன்  ஃபிரண்ட்ஸ்களிடம்  கோபமாக  “ குடிச்சு  சாவுங்கடா  எல்லாரும் “ என்கிறார், இவர்  என்னமோ   டி டோட்டலர்  மாதிரி 

7  நாயகன்  ஒரு  முறை  ஸ்டேண்ட்  அப் காமெடி  பண்றேன்  பேர்வழி  என  மேடையில்  தன்  பெற்றோர்  எப்படி  ரொமான்ஸ்  பண்ணுவாங்க  என்ப்தை  மோனோ ஆக்டிங்  ஆக  செய்து  காண்பிப்பது  அபத்தம், அந்த  சமயம் அவர்  அப்பா  அங்கே வருவது  அதைக்கேட்பது  எல்லாம்  இயக்குநரின்  மட்ட  ரகமான  கற்பனை 

8  நாயகி  பல  இடங்களில்  அண்டர்ப்ளே  ஆக்டிங்  பண்ணும்போது  நாயகியின்  தோழி  ஜோதிகாவுக்கு  அக்கா  மாதிரி  ஏன்  ஓவர்  ஆக்டிங் பண்ணிக்கொண்டிருக்கிறார்?


9   நாயகி  நாயகன்  வீட்டுக்கு  வரும்போது  அவன்  தூங்கிட்டு  இருக்கான் , மேலே  போய்ப்பாரு  என்று  அம்மா  சொன்னதும்  நாயகி  பெட்ரூம்  போகிறாள். நாயகன்  ஷூ  ஷாக்ஸ்  எல்லாம்  போட்டுட்டு  தூங்கிட்டு  இருக்கார் .  கனவுலயே  வாக்கிங்  போவாரோ? 


10  நாயகி  தன்  தரப்பு  நியாயத்தை  நாயகனிடம்  118  வது  நிமிடம் ,  விளக்குகிறார். அதை  முதல்லியே  சொல்லி  இருந்தா  இத்தனை  குழப்பங்கள்  வந்திருக்காது ,


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  காட்சி  ரீதியாக  18+  ஏதும்  இல்லை , ஆனால்  வசனத்தில்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பெண்களுக்கு  மிகவும்  பிடிக்கும், ஃபேமிலி  ஆடியன்சின்  ஆதரவில்தான்  ஹிட்  ஆச்சு . ரேட்டிங் 3/ 5 


Miss Shetty Mr Polishetty
Theatrical release poster
Directed byMahesh Babu Pachigolla
Written byMahesh Babu Pachigolla
Produced by
  • V. Vamsi Krishna Reddy
  • Pramod Uppalapati
Starring
CinematographyNirav Shah
Edited byKotagiri Venkateswara Rao
Music by
Production
company
UV Creations
Release date
  • 7 September 2023
Running time
147 minutes[1]
CountryIndia
LanguageTelugu
Budget₹12.5–50 crore[2][3]
Box office₹50 crore[4]

Tuesday, October 10, 2023

KUSHI (2023) -தெலுங்கு - குஷி - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா) @நெட் ஃபிளிக்ஸ்

   


சமீபத்தில்  தோல்வி  முகமாக  இருந்த  விஜய்தேவரகொண்டாவின் மார்க்கெட்டைத்தூக்கி  நிறுத்திய அவரது  11 வது  படம் இது ,முக்கியக்காரணம்  சமந்தா வுடன்  இவருக்கு  காதல்  என  கிசு கிசு  எழுந்த  சமயத்தில்  ரிலீஸ்  ஆனதால்..     விமர்சனங்கள்  கலவையாக  வந்தாலும்  பாக்ஸ்  ஆஃபீசில்  ஹிட். 50  கோடி  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்ட  இப்படம் 70 கோடி  வசூலித்தது 


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  பிஎஸ் என் எல்  ஆஃபீசில்  ஒரு  ஊழியர். காஷ்மீரில் இவருக்கு  பணி . அங்கே  நாயகியை  சந்திக்கிறார்.  உயிரே  படத்தில்  வருவது  போல்  நாயகி  ஒரு தீவிரவாதி  போல்  முதலில் காட்டுகிறார்கள்.  காதலி;ல்  தீவிரவாதி  ஆக  இருக்கும்  நாயகன்  அவரை  விரட்டி  விரட்டி  காதலித்து  காதலிக்க  வைக்கிறார். அவர்  எப்படி  காதலில்  விழுந்தார்  என்பதை  முதல்  ஒரு  மணி நேரம்  ரொமாண்டிக்காக  காட்டுகிறார்கள் 


 இடைவேளை  ட்விஸ்ட்  என்னான்னா  நாயகியின்  அப்பா  ஆன்மீகவாதி . நாயகனின்  அப்பா  நாத்திகவாதி. ஆனாலும்  திருமணம்  நடக்கிறது . இதற்குப்பின்  இருவர்  வாழ்க்கையில்  என்ன  பிரச்சனை  வந்தது ?> சேர்ந்தார்களா? இல்லையா? என்பது  மீதி திரைக்கதை 


 நாயகன்  ஆக  இளமைத்துள்ளலுடன் விஜய்தேவரகொண்டா. ரசிகைகளை  ஈர்க்கும்  புன்னகை . சிரித்த  முகம் . நல்ல  நடிப்பு 


  நீதானே  என்  ;பொன்  வசந்தம்  படம்  தான்  சமந்தா  அழகி  ஆக  இருந்த  படம் ., இதில்  டல்  தான், ஆனாலும்  சமாளிக்கிறார். இருவருக்குமான  கெமிஸ்ட்ரி  குட் 

சரண்யா  பொன்வண்னன்  நாயகனின்  அம்மாவாக  கலக்குகிறார்.  லட்சுமி  நாயகியின்  பாட்டியாக  வருகிறார்

ஜெயராம் - ரோகினி  இருவருக்கும்  கெஸ்ட்  ரோல். முரளி ச்ர்மா  , மற்றும்  சச்சின்  இருவரும்  சம்பந்திகளாக  சிறப்பான  நடிப்பை வெளிப்படுத்தி  இருக்கிறார்கள் 


165  நிமிடங்கள்  ஓடும்படி    கட்  செய்து  இருக்கிறார்  எடிட்டர் . இன்னும்  ஷார்ப்  ஆக  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம் .,  ஏசம்  அப்துல்  இசை  குட்  பிஜிஎம்  அருமை 

ஜி  முர்ளியின்  ஒளிப்பதிவில்    காஷ்மீரின்  அழகை  அள்ளிக்கொள்கிறார்

திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  சிவா  நிர்வானா 

சபாஷ்  டைரக்டர் (சிவா  நிர்வானா ) 

1  ஆத்திகரான  நாயகியின்  அப்பா  மணப்பெண்  வீட்டுக்குள்  வரும்போது  வலது  காலை  எடுத்து  வைத்து  வராம  இடது  காலை  எடுத்து  வைத்து  வந்தா  ஃபீல்  பண்ணுவார்.. நாத்திக்ரான  நாயகனின்  அப்பா நாயகி  வலது  காலை  எடுத்து  வைத்து உள்ளே  வந்தா  ஃபீல்  பண்ணுவார், இப்போ நான்  என்ன  செய்ய  என புதுமணப்பெண்ணான  நாயகி  கேட்கும்போது  நாயக்ன்  உன்னை  கால்  எடுத்து  வர  விட்டாத்தானே  என  அலேக்காக  அவரைத்தூக்கிக்கொண்டு  உள்ளே  வரும்  காட்சி  கவிதை 


2  பொண்ணுங்களை  எல்லாம்  வைக்க  வேண்டிய  இடத்தில்  வைக்கனும்  என  நாயகனும் , அவன்  நண்பனும் வெவ்வேறு  தருணங்களில்  ஆண்  ஆதிக்க  மனோபாவம்  காட்டும்போது  அவர்களுக்கு  கிடைக்கும் பதிலடி  சபாஷ் 

3  ஆத்திகமா? நாத்திகமா? எது  சரி ? என  க்ளைமாக்சில் நெத்தி  அடியாக  சொல்லாமல்  சமாளித்த  விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1  ஒவ்வொருவருக்கும்  ஒரு  திறமை  இருக்கும் 


2  நாங்க  யாரு? எங்கே  இருந்து  வந்திருக்கோம்னு  தெரியுமா?


 நீங்க  எப்டினு  தெரியல, அவங்க  வேணா  நேரா  சொர்க்கத்துல  இருந்து  வந்திருக்காங்கனு  தெரியும்


3  தோஷமுள்ள  ஜாதகம்  பரிகாரம்  பண்ணாம  சந்தோஷமா  வாழ்ந்ததா  சரித்திரம்  இல்லை 


4  சிருஷ்டில இருந்து தான்  சயின்ஸ்  வரும், சயின்ஸ்ல  இருந்து  சிருஷ்டி  வ்ராது 


5  லவ்  பண்ணும்போதே  நீ  என்  கிட்டே  பொய் தான்  சொன்னே


 நான்  உன்னை  லவ்  பண்ணலைங்கற  பொய்யை  சொல்லி  இருந்தா  இவ்ளோ  பிரச்சனை  வந்திருக்காது 


6 நீங்களே  பேபி  மாதிரி  இருக்கீங்க, உங்களுக்கு  பேபி  வேணுமா? 

7  லைஃப்ல  எது  நடந்தாலும்  நடக்கலைன்னாலும்  பார்ட்டி  கொண்டாடுவதை  மட்டும்  விட்டுடக்கூடாது


8  இந்தப்பொண்ட்டாட்டிங்க  வாய்ல  ஒரு  ரகசியம்  கூட  தங்காதா?


9 இனிமே  ச்ண்டை  வராம  பார்த்துக்கறேன்

 சண்டை  வரும்,  சண்டை  வரும்போதும் ஸ்ட்ராங்கா  இருந்தா  தான்  காதல்


10  பொண்ணுங்க  நாங்க  எல்லாம்  அப்பா  கிட்டேயும், கடவுள்  கிட்டேயும்  சொல்ல  முடியாத  விஷய்ங்க்ளை  புருசன்  கிட்டே  தான் சொல்வோம்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 திருமணம்  ஆகி  ஒரு  வருடத்தில்  முதல் முறையாக  கர்ப்பம்  தரித்த  நாயகிக்கு  அது  கலைந்து  விடுகிறது. இது  ஒன்றும்  கடைசி    வாய்ப்பு  இல்லையே? ரொம்ப  ஓவர்  டோஸ்  ஆக  கவலைப்படுவது  போல் காட்டி  இருக்க  வேண்டாம் 


2  கரு உருவாகாமல்  இருப்பவர்கள்  தான்  ஏதாவது  குறை  இருக்கிறதா ? என  தம்பதியினர்  இருவரும்  செக்  செய்வார்கள். ஒரு  முறை  உருவாகி  கலைந்தாலும் டெஸ்ட்  பண்ணுவார்களா?அப்படியே  செக்  செய்தாலும்  பெண்  மட்டும்  செய்தால்  போதுமே? எதுக்கு  ஆணும்? 


3 திருமணம்  ஆகி  ஒரு  வருடம்  தான்  ஆகி  இருக்கு. ஆனால்  அதற்குள்  குழந்தை  இல்லையே? என  நாயகனின்  ஸ்கூல்  மேட்  கிண்டல்  செய்வது  ஓவர், அட்லீஸ்ட்  அஞ்சு  வருசம்னாக்கூட  பரவாயில்லை 

4 தம்பதிக்குள்  கருத்து  வேற்றுமை  உருவாக  இயக்குநர்  ரொம்பவே  சிரம்பட்டிருக்கிறார். எதுவும்  ஒட்டவில்லை . படு  செயற்கை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   காதலர்கள்  மட்டும்  ;பார்க்கலாம்.  பழக்கப்பட்ட  திரைக்கதை .  சுமார்  ரகம்  ரேட்டிங்  2.25 / 5 


Kushi
Theatrical release poster
Directed byShiva Nirvana
Written byShiva Nirvana
Produced by
  • Naveen Yerneni
  • Y. Ravi Shankar
Starring
CinematographyMurali G.
Edited byPrawin Pudi
Music byHesham Abdul Wahab
Production
company
Release date
  • 1 September 2023
Running time
165 minutes[1]
CountryIndia
LanguageTelugu
Budget50–70 crore[2][3]
Box officeest. 71.95 crore[4]

Monday, October 09, 2023

KHUFIYA (2023) - ஹிந்தி - குஃபியா - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஸ்பை ஆக்சன் & ரிவஞ்ச் த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்


 அமர்  பூசன்  எழுதிய  எஸ்கேப் டூ  நோ  வேர் ( தப்பிக்க  இடம் இல்லை )  என்ற  நாவலைத்தழுவி  எடுக்கப்பட்ட படம் .   KHUFIYA  என்ற  சொல்லுக்கு  ரகசியம்  என்று  பொருள் 


       ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி   ஒரு  உளவுத்துறை  ஏஜெண்ட். பங்களா  தேஷில்  அவரது  தோழி  ஒரு  வேலையாக  சென்றபோது அந்த  நாட்டின்  பாதுகாப்பு  அமைச்சர்  தோழியைக்கொன்று  விடுகிறார். அவர்  ஒரு  ஸ்பை, தன்னைக்கொல்லத்தான்  செண்ட்  பாட்டிலில்  விஷத்துடன்  வருகிறார்  என்பதை  வில்லனுக்கு  நாயகியின்  ஆஃபீசில்  இருந்தே  யாரோ  போட்டுக்கொடுத்து  விடுகிறார்கள் . இதனால்  நாயகி  அந்த  துரோகி யார்  என்பதை  உளவு பார்த்துக்கண்டு  பிடிக்கிறார். அவர்  எப்படி  தன்  தோழியின்  மரணத்துக்குக்காரணமானவரைப்பழி  தீர்க்கிறாள்  என்பதே மீதி  திரைக்கதை 


நாயகி  ஆக  தபு , முகத்தில்  முதிர்ச்சி  தெரிந்தாலும்  தன்  நடிப்பால்  அதை  கவர்  செய்து  விடுகிறார். ஆஜானுபாவகமான  உயரம்  அவரது  பிளஸ் 


  துரோகி  ஏஜெண்ட்டின்  மனைவியாக  கிட்டத்தட்ட நாயகியை  விட  அதிக  காட்சிகள்  கிடைக்கப்பெற்ற  யாமிகா  அபாரமான  நடிப்பு .   தேவைக்கும்  மேல்  இவருக்கு  ஏன்  இத்தனை  காட்சிகள்  என்பது  இயக்குநருக்கே  வெளிச்சம்

 நாயகியின்  தோழி  ஆக  அஜ்மேரி  கொள்ளை  அழகு. நடிப்பும்  ஓக்கே 


 நாயகியின்  கணவராக  அதுல்  குல்கர்னி . ரன்  படத்தில்  கலக்கலான  வில்லனாக  வந்தவருக்கு  இதில்  கெஸ்ட்  ரோல்  தான் 


நாயகியின் ஹையர்  ஆஃபீசர்  ஆக  ஆசிஷ்  வித்யார்த்தி  கச்சிதம் 


அமெரிக்கா , பங்களா  தேஷ்  என  ஃபாரீன்  லொக்கேஷன்கள்  அருமை . ஒளிப்பதிவு  பிரமாதம். பின்னணி  இசை  பல  இடங்களில்  வேகத்தைக்கூட்டுகிறது . 157  நிமிடங்கள்  ஓடும்படி  படத்தை  கட்  செய்திருக்கிறார்  எடிட்ட்ர். இன்னும்  ஷார்ப்  ஆக  ட்ரிம்  செய்திருக்கலாம்.  பின்  பாதி  திரைக்கதை  இழுவை 


சபாஷ்  டைரக்டர்  (  விஷால்  பரத்வாஜ்) 


1  நாயகி  ஒரு  துரோகி  வீட்டில்  ரக்சிய  கேமரா  பொறுத்தும்  பணியில்  ஈடுபட்டிருக்கும்போது  துரோகியின்  மனைவி  வீட்டுக்கு  முன்  கூட்டியே  வந்து விட  பர பரப்பான பிஜிஎம்  தெறிக்கிறது 


2  நாயகி  ஆன  தபு  வை  விட  துரோகி  ஏஜெண்ட்டின்  மனைவியாக  வரும்  வாமிகா  மற்றும் நாயகியின் தோழியாக  வரும் அஜ்மேரி  இருவருமே  அழகு , வசீகரம், உடல்  மொழி, நடிப்பு  என  அனைத்திலும்  நாயகி  தபுவை  தூக்கி  சாப்பிட்டிருக்கிறார்கள் . அபாரமான  தேர்வு 


3  துரோகி  ஏஜெண்ட்  வாரத்துக்கு  6  நாட்கள்   காரை  விட்டு  இறங்கி  வீட்டுக்கு  வர  ஒரு  நிமிடமும்,ஒரே  ஒரு  நாள்  திங்க்ள்  மட்டும் 5  நிமிடம்  ஆவதை     நாயகி  தபுவின்  ஹையர்  ஆஃபீசர்  ஆஷிஷ்  வித்யார்த்தி  கண்டு  பிடிக்கும்  காட்சி  செம 


4  துரோகி  ஏஜெண்ட்    தன்  வீட்டில்  ரகசிய  கேமராக்கள்  ஃபிட்  செய்யப்பட்டிருப்பதை  உணரும்போது  வரும்  பிஜிஎம் , அவன்  ரீ ஆக்சன்    அமர்க்களம் 

5  க்ளைமாக்ஸில்  அந்த  டைனிங்  டேபிள்  சீன்  செம  விறுவிறுப்பு. தன்  சாப்பாட்டில்  விஷம்  கலக்கப்பட்டிருப்பதை  வில்லன்  உணர்வது  அபாரம் 


6  படத்தில்  வரும்  முக்கியக்கேரக்டர்கள்  ஐவருக்குமே  இன்னொரு  ரகசிய முகம்  இருப்பதாக  சித்தரிக்கப்பட்ட  விதம்  குட் 


  ரசித்த  வசனங்கள் 


1  இப்போ டைம்  என்ன  ஆச்சு?னு  தெரியுமா?


 ஏன்? உன்  வாட்ச்  வேலை  செய்யலையா?


 ஏன்  லேட்?னு  கேட்டேன்


2 காட்டில்  இருக்கும்  கொடுமையான  மிருகங்கள்  கூட  தன்  குட்டியைப்பிரிஞ்சா  பைத்தியம்  ஆகிடும்


3 உன்னால  முடியாதுனு  தெரிஞ்சும்  முடிக்க  நீ  ட்ரை  பண்றே, அதுதான்  உன்  தோல்விக்குக்காரணம் 

4  அயல்  நாட்டில்  கஷ்டப்பட்டாதான்  நம்ம  நாட்டோட  அருமை  தெரியுது

5  ஒவ்வொருவருக்கும்  வாழ்க்கைல  வலிகளும், கஷ்டங்களும்  இருக்கும் 


6   உங்க  மகன்  கிட்டே  சொல்லத்தயங்குன  ரகசியத்தை  என்  கிட்டே  மட்டும்  எப்படி  சொன்னீங்க ?


 நீ  எனக்கு  அறிமுகம்  இல்லாத ஆள். அதான்  தைரியமா  சொல்லிட்டேன்

 அதனால  தான்  உங்க  மகனுக்கு  நீங்க அன்னியம்  ஆகிட்டீங்க 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   துரோகி  ஏஜெண்ட்  ரகசிய  கவரை  பாகிஸ் தான்  ஏஜெண்ட்க்கு  தியேட்டரில்  ரகசியமா  தர்றான், அவன்  என்னடான்னா  அதை  ஓப்பனா  கைல  எடுத்துட்டுப்போறான். இதுதானவங்க  ஊர்ல  ரகசிய  ஆபரேசனா? 


2  நாயகி  ஆஃபிஸ்  வந்ததும்  எல்லாரும்  வந்தாச்சா? என  கேட்கும்போது  எஸ்  என  பதில்  வ்ருகிறது. நான்  கூட  ஆபரேசன்  ப்ரூட்டஸ் மீட்டிங்னா  ஒரு 30  பேராவது  இருப்பாங்கனு  பார்த்தா  நாயகி அவரோட  ஹையர்  ஆஃபீசர் , நாயகிக்கு கொலீக்  ஒருத்தர்  மொத்தமே  மூணு  பேர்  தான். ரொம்ப  லோ  பட்ஜெட்  படம்  போல (  ஆனா  ஆபரேஷன் டைம்ல  நிறைய  பேர்  இருக்காங்க) 


3  ஆபரேஷன்  ப்ரூட்டஸ்  டைம்ல  எல்லாரும்  பரபரப்பா  ஏஜெண்ட்  வீட்ல கேமரா  ஃபிக்ஸ்  பண்ணிட்டு  இருக்காங்க . ஒருத்தன்  மட்டும் சாவகாசமா  நொறுக்குத்தீனி சாப்ட்டுட்டு  இருக்கான். இந்த  லட்சணத்துல  என்ன  ஒர்க்  நடக்குதுனு  வீடியோ  வேற  எடுத்துட்டு  இருக்காங்க 


4  துரோகி  ஏஜெண்ட்டின்  மனைவி  கிச்சன்ல  சமையல்  பண்ணிக்கிட்டே  சாம்பார்  டேஸ்ட்  எப்படி?னு  இடது  கை  விரல்ல  செக்  பண்றாங்க. தமிழ்  நாட்ல  வலது  கை  விரலைத்தானே  யூஸ்  பண்ணுவாங்க ? மும்பைல  அட்வான்ஸ்  கல்ச்சரோ? 


5  ஏஜெண்ட்களின்  ரகசியக்கூட்டம்  மொட்டை  மாடிலயா  நடக்கும்? அதை  வேவு  பார்க்க  வரும்  நாயகி  அண்ட்  கோ  இன்னொரு  மொட்டை  மாடியில்  இருந்து  அவர்களை  ஃபோட்டோ  பிடிப்பது  அபத்தம், அவர்கள்  இருக்கும்  கோணத்தில்  வில்லன்  கண்ணில்  படாமலா  இருப்பார்கள் ? 


6  ஆக்சன்  த்ரில்லர்  படங்களில்  ரொமான்ஸ்  காட்சியே  தேவை  இல்லை , ஸ்பீடு  பிரேக்கர்  என்னும்போது துரோகி ஏஜெண்ட்டின் ரொமான்ஸ்  சீன்  பார்த்து  நாயகி  தன்  ஃபிளாஸ்பேக்  ரொமான்ஸ்  சீனை  நினைத்துப்பார்ப்பது  ஓவர் . மெயின்  கதைக்கும்  அதுக்கும்  என்ன சம்பந்தம் ? 

7  துரோகி  ஏஜெண்ட்  வீட்டில்  கேமரா  ஃபிக்ஸ்  பண்ணி  அவன்  நாட்டின்  ரக்சிய  ஃபைல்களை  ஜெராக்ஸ்  எடுப்பதை  தபு  அண்ட்  டீம் பார்க்கிறார்கள் . ஆனால்  எந்த  நடவடிக்கையும்  எடுக்கலை . ஒண்ணா  அவனை  லாக்பண்ணி  இருக்கனும், அல்லது  ஃபைல்  காப்பியை  கைப்பற்றி  இருக்கனும்  ரெண்டும்  செய்யாம  சில  நாட்கள்  கழித்து  அவன்  எப்படி  எல்லாவற்றையும்  டெலிவரி  செய்திருப்பான்?னு  ஆராயறாங்க   

8  நாயகியை  விட  துரோகி  ஏஜெண்ட் , அவன்  மனைவி  க்கு  அதிக  காட்சிகள்  இருப்பதும் திரைக்கதை  அவர்களைச்சுற்றியே  வருவதும்  ஒரு  ஆக்சன்  த்ரில்லர்  படத்தின்  வேகத்துக்குப்பின்னடைவு 

9  துரோகி  ஏஜெண்ட்டின்  மனைவி  தன்  கணவனிடம்  நான்  ஒரு  சோல்ஜரின்  மனைவி , நாட்டுக்கு  துரோகம்  பண்ண  மட்டேன்  என்கிறாள் . பின் தப்பி  ஓடிய  துரோகியைத்தேடிப்போகும்போது  துரோகி  எப்படி  அவளை  நம்புகிறான் ?  நீ  தான்  நாட்டுப்பற்றாளி  ஆச்சே? ஏன்  வந்தே?னு  ஏன்  கேட்கலை ? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  ஒரே  ஒரு  இடத்தில்  18+  காட்சி  இருக்கிறது 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஸ்பை  ஆக்சன்  த்ரில்லர்கள்  பார்க்கலாம், முதல்  பாதி  நல்ல  விறுவிறுப்பு.. ரேட்டிங்  2.5 / 5 


Khufiya
Official release poster
Directed byVishal Bhardwaj
Written byRohan Narula
Vishal Bhardwaj
Based onEscape to Nowhere
by Amar Bhushan
Produced byVishal Bhardwaj
Rekha Bhardwaj
Starring
CinematographyFarhad Ahmed Dehlvi
Edited byA. Sreekar Prasad
Music byVishal Bhardwaj
Production
company
VB Films Production
Distributed byNetflix
Release date
  • 5 October 2023
Running time
157 minutes
CountryIndia
LanguageHindi

Sunday, October 08, 2023

OMG -2 (2023)- ஹிந்தி - சினிமா விமர்சனம் (கோர்ட் ரூம் டிராமா ) @ நெட் ஃபிளிக்ஸ் 18+

 


 2012ல்  வெளியாகி  செம  ஹிட்  அடித்த  ஓஎம்ஜி ( ஓ மை  காட்) படத்தின் இரண்டாம்  பாகம்  தான் இது . இரண்டும்  தனித்தனி  கதை. முதல்  பாகம்  பார்க்கவில்லை  என்றாலும்  இது புரியும். முதல்  பாகம் பார்க்காமல்  இதைப்பார்ப்பவர்கள்  இதைப்பார்த்த  பின்  முதல்  பாகத்தைத்ததேடிப்போய்ப்பார்ப்பார்கள் 


50  கோடி  ரூபாய்  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்ட  இப்படம்  இந்தியாவில்  மட்டும் 178  கோடி  ரூபாயும் , வெளிநாடுகளில்  44  கோடி  ரூபாயும்  வசூல்  செய்தது. அக்டோபர் 3  முதல்  நெட்  ஃபிளிக்சில்  காணக்கிடைக்கிறது


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  கடவுள்  பக்தன். கோயிலில்  பூஜை  செய்து  அங்கேயே  ஒரு  கடை  நடத்துபவன். அவனது  மகன்  பள்ளியில்;  கல்ச்சுரல்  புரோகிராமில்  ஒரு  சக  மாணவியுடன்  டான்ஸ்  ஆடும்  பயிற்சியில்  இருக்கிறான், அந்த  மாணவியின்  காதலனுக்கு  அது  பிடிக்கவில்லை . அவளிடம்  இனிமேல்  அவனுடன்  டான்ஸ்  ஆடாதே  என  சொல்லி  விடுகிறான்


என்ன  காரணத்தால்  என்னுடன்  நீ  டான்ஸ்  ஆடவில்லை  என  கேட்டபோது  மாணவி  பதில்  சொல்லவில்லை , ஆனால்   சிலர்  அவனை  கிண்டல்  செய்கிறார்கள் .   சில  விஷயங்களை  சொல்கிறார்கள் . அதை  உண்மை  என்று  நம்பி  மாணவன்செய்த  ஒரு  செயலை  வீடியோ  எடுத்து  வாட்சப்பில்  பரப்புகிறார்கள் .


 பள்ளியை  விட்டு  மாணவனை  டிஸ்மிஸ்  செய்கிறார்கள் . என்   மகன்  மீது  தவறில்லை . கல்வி  நிறுவனம்  மீது  தான்  தவறு . போலி  மருத்துவர் . லேகியம்  விற்பவன்  மீது தான்  தவறு  என  நாயகன்  கேஸ்  போடுகிறான் 


 கோர்ட்டில்  கேஸ்  நடக்கிறது . நாயகன்  தானே  வாதாடி  அந்த  கேசில்  எப்படி  ஜெயிக்கிறான்  என்பதே  மீதிக்கதை


நாயகன் ஆக பங்கஜ்  த்ரிப்பாதி  பிரமாதமாக  நடித்திருக்கிறார். அவரது  கடவுள்  பக்தி , கோர்ட்டில்  வாதிடும்  லாவகம்  எல்லாமே  செம 

எதிர்க்கட்சி  வக்கீல்  ஆக  யாமி  கவுதம்  பல  இடங்களில்  பாராட்டுப்பெறுகிறார்.


 தமிழ்  சினிமாவில்  விதி  படத்தில்  தான்  கோர்ட்  சீன் காட்சிகள்  அதிகம்.அதற்கு  நிகராக  இது  இருக்கிறது 


 கடவுள்  ஆக  கெஸ்ட்  ரோலில் அக்சய்  குமார்  நடித்திருக்கிறார். அவரது  தெய்வீகப்புன்னகை  பிளஸ் 


படத்தில்  பங்கு  பெற்ற  அனைத்துப்பாத்திரங்களும்  அவரவர்  பங்கை  சிறப்பாக  செய்திருக்கிறார்கள் 


அமித்ராஜ்  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார். பின் பாதி  நீளம்  அதிகம் சுவிர்நாத்  எடிட்  செய்து  இருக்கிறார். 155  நிமிடங்கள்  படம்  ஓடுகிறது . இன்னும்  ஷார்ப்  ஆக  ட்ரிம்  செய்து  இருக்கலாம்


 இசை பின்னணி  இசை இவற்றை  ஐந்து  பேர்  செய்திருக்கிறார்கள் ., குட் அம்லேந்த்  சவுத்ரி  ஒளிப்பதிவில்  பல  காட்சிகளில்  கை  தட்டல்  வாங்குகிறார்.  



சபாஷ்  டைரக்டர்  (அமித்ராஜ்) 


1  வக்கீல்  ஆன  நாயகிக்கான  ஓப்பனிங்  இண்ட்ரோ  சீனில்  கையைத்தூக்க  முடியாது  , அசைக்க  முடியாது   என  பொய்  சொல்லும்  சிறுவனிடம்  சாக்லெட்டைத்தூக்கிப்போட்டு  கேட்ச்  என்றதும்  அவனையும்  அறியாமல்  கைகளை  உயரே  தூக்கி  கேட்ச்  பிடித்து  மாட்டிக்கொள்ளும்  சீன் 


2  எதிர்க்கட்சி  வக்கீல்  ஆன  நாயகி  அந்த  மாணவனை  நோக்கி  செல்லும்போது  வரும்  பின்னணி  இசை 


3  நாயகனின்  மனைவியை  மடக்குவதற்காக  எதிர்க்கட்சி  வக்கீல்  உங்க  முதல்  இரவு  அன்று  என்ன  நடந்தது  ?  எனக்கேட்ட போது  உங்களுக்குக்குழந்தை  இருக்கா?  இல்லையில்ல? ஜட்ஜூக்கு  குழந்தை  இருக்கா?  இருக்கில்ல? அப்போ  அவருக்குத்தெரியும், அதான்  நடந்தது  என  சாமார்த்தியமாக  பதில்  சொல்லும்  காட்சி 


4  ஆண்களூக்கு  பெண்ணின்  உடல்  , மனம்  பற்றி  எந்த  அறிவும்  இல்லை  என  கோர்ட்டில்  பெண்  சொன்னதும்  நாயகன்  அப்போ  பெண்ணைப்பற்றிய  புரிதலை , அவங்க  உடல்  அமைப்பு பற்றிய  கல்வி  அறிவைப்புகட்ட  வேண்டியது  அவசியம்னு  சொல்ல  வர்றீங்க?  ரைட்? என  மடக்குவது  அப்ளாஸ்  அள்ளும்  சீன் 


5  வெறும் 101  ரூபாய்  அபராதம்  கட்ட்சொல்லி  ஸ்கூல்  நிர்வாகத்தின்  மேல்  தொடுத்த  வழக்கில்  காம்பரமைஸ்  அமவுண்ட்  ஆக  ரூ  ஒரு கோடி  கொடுக்கத்தயார்  ஆகும்  நிறுவனத்துக்கு  நாயகன்  அளிக்கும்  ரீ  ஆக்சன் அமேசிங் 

6 க்ளைமாக்ஸில் ஒரு  மாணவன்   சுய இன்பம்  தவறல்ல, நானும்  செய்கிறேன்  என  சொல்லும்போது  வக்கீல் உன்  பெற்றோர்  யார்  எனப்பார்க்க  விரும்புகிறேன், மானங்கெட்ட  அப்பா  யாரு? என  கேட்க  கோர்ட்டில்  இருக்கும் ஜட்ஜ்  தான்  அது  என்பது  தெரிய  வரும்போது  வக்கீல் அடையும்  ஷாக் 


7  எதிர்க்கட்சி  வக்கீல்  க்ளைமாக்ஸில்  சொல்லும் டயலாக்  செம,  நீங்க  ஏன்  ஜெயிச்சீங்க  தெரியுமா?  நான் பணத்துக்காக, தொழிலுக்காக  வாதிட்டேன், நீங்க  உங்க  குடும்பத்துக்காக, உங்க  மகனுக்காக  வாதிட்டீங்க   என்பது


  ரசித்த  வசனங்கள் ,  ஜோக்ஸ், சம்பவங்கள்


1 டாக்டர்...  எனக்கு  குழந்தை  பெறும்  பாக்கியம்  இல்லை , ஆனா  என்  சம்சாரம்  கர்ப்பமா  இருக்கா, எப்படி ?


ஒரு  வேட்டைக்காரன்  காட்டில்  வேட்டைக்குப்போகும்போது  எதிரே  சிங்கத்தைப்பார்த்தான். துப்பாக்கி  எடுத்து  சுடறதுக்குப்பதிலா  அவசரத்துல  குடையை  எடுத்து  விரிச்சுட்டான், ஆனா  சிங்கம்  செத்துடுச்சு, எப்படி ?


 அவன்  சுட்லைன்னா  என்ன? வேற  யாராவது  சிங்கத்தை  சுட்டிருப்பாங்க 


 அதே  லாஜிக்  தான்  உங்க  சம்சாரம்  கர்ப்பம்  ஆன  சம்பவமும்


2  உங்க  பல்பு  சரியா  எரியலைன்னா பக்கத்து  வீட்டுக்காரன்  பல்பு  ஏத்திட்டுப்போயிடுவான்


3  பிரச்சனையை  ஃபேஸ்  பண்ண  முடியாம  ஓடிப்போகறதால  பிரச்சனை  சரி  ஆகாது 


4   நீ  செய்ய  இருப்பது  போர். பின் வாங்கினால்  அது  தப்பு ., போர்  செய் 

5  கோர்ட்டுக்குள்ளே  செப்பல்  போடாம  வந்திருக்கீங்களே? கோர்ட்  என்ன  கோயிலா?


 நீதி  கிடைக்கும்  கோயில்  இதுதானே? 


6  செக்ஸ்  எஜூக்கேஷன்  ஸ்கூலில்  சொல்லித்தரப்படவில்லை  எனில்  நீங்க  கேஸ்   போட  வேண்டியதுஎஜூக்கேஷன்  சிஸ்டம்  மேல, ஸ்கூல்  மேல  கேஸ்  போடக்கூடாது 


 யுவர்  ஆனர் , உங்களை  ஒரு  கார்  டிரைவர்  டாட்டா  ஏஸ்  வேன்ல  இடிச்சுட்டாரு , உங்க  கால்  போயிடுச்சு , இப்போ  நீங்க  டாட்டா  ஏஸ்  மேல  கேஸ்  போடுவீங்களா?> டிரைவர்  மேல கேஸ்  போடுவீங்களா?


7   நம்  நாட்டில்  உயர்  தரமான  கல்வி  கற்பிக்கப்படுகிறது , ஆனால்  குற்றங்கள்  குறைவதில்லை . எனவே  கல்வி  சிஸ்டத்தை  குறை  கூறக்கூடாது 


8  மாஸ்டர்பேஷன் , சுய  இன்பம்னு  முதல்ல  சொல்லிட்டு  இருந்ததை  இப்போ  டீசண்ட்டா  செல்ஃபி  எடுத்தல்  என  சொல்றாங்க . இது  எல்லோரும் செய்வதுதான். தன்னைத்தானே  இன்புறுத்திக்கொள்தல் 


9  கேள்வி  கேட்டாதான்  பதில்  கிடைக்கும், பதில்  கிடைத்ததும்  அதில்  இருந்து  சில  கேள்விகள்  பிறக்கும், மீண்டும்  பதில்கள் கிடைக்கும்.எல்லாவற்றுக்கும்  ஆதாரமா  மூல  காரணமா  இருப்பது  கேள்விகள் தான் 


10   டாக்டர் . இந்த  டுபாக்கூர் பார்ட்டி  விற்கும்  ஆயிலை  நீங்க  யூஸ்  பண்ணி  இருக்கீங்களா? சைஸ்  பெருசாகுதா?


  நான்  என்  மனைவி  கிட்டே  கொடுத்தேன், அவ  டெய்லர் . தையல்  மிஷினுக்கு  அந்த  ஆயிலை  அப்ளை  பண்ணா , ஆனா  நோ யூஸ் . ஊசி  அதே  சைஸ்ல  தான் இருக்கு , பெருசாகலை 


11  பள்ளிக்கல்விப்பாடத்திட்டத்தில்  மிருகங்கள் , பறவைகளின் இனப்பெருக்கம்  பற்றி   விபரமா  சொல்லித்தர்றாங்க, ஆனா  மனிதர்களின்  இனப்பெருக்கம் ப்ற்றி  அவங்க  உறுப்புகள்  பற்றி  ஏன்  முழுமையான  படிப்பு இல்லை? 


12  உண்மை  என்பது  நிர்வாணமாத்தான்  இருக்கும், அதைப்பேசக்கூச்சப்படக்கூடாது


13 உலக  அளவில்  போர்ன்  வெப்  சைட்  பார்ப்பதில் இந்தியா  முதல்  இட்த்தில்  இருக்கிறது . நாட்டில் 85%  பேர்  இண்ட்டர்நெட்  யூஸ்  பண்றாங்க .  அப்படி  இருக்கும்போது  ஸ்கூலிலேயே  ஏன்  செக்ஸ்  எஜூக்கேசன்  பிராப்பராக  சொல்லித்தரக்கூடாது ? 


14  இந்த  உலகத்தில் 95%  ஆண்கள் , 76%  பெண்கள்  சுய  இன்பத்தில்  ஈடுபடுகிறார்கள்  என    டாக்டர்  சர்வே  கூறுகிறது , அதனால்  அது  ஒன்றும்  குற்றம்  அல்ல 


15  பிரபலம்  ஆன  நாளிதழ்கள் ., வார  இதழ்களில்  கேள்வி  பதில்  பகுதிகளில்  அந்தரங்கம்  பற்றிய  ஐயங்களே  அதிகம், ஸ்கூலிலேயே  எல்லாம்  சொல்லித்தந்தால்  அவர்கள்  ஏன்  அறியாமையில்  இருக்கிறார்கள் ? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  மெயின்  க்தைக்கு  சம்பந்தம்  இல்லாமல்  பின்  பாதியில்  சனாதானம் , இந்து  மதத்தை  உயர்த்திப்பிடித்தல்  எல்லாம்  கொஞ்சம்  ஓவர்  ( நானும்  இந்து  தான் ) 


2  கடவுள்  ஆக  வரும்  அக்சய்  கன்னாவுக்கு  அந்த  சிவபெருமான்  தாண்டவம், பாட்டு  காட்சி  தேவை  இல்லை.  அவரது  காட்சிகள்  எக்ஸ்ட்ரா  ஃபிட்டிங்  தான். ஸ்டார் வேல்யூக்காக  சேர்த்திருக்கிறார்கள் 


3  அர்ஜூனுக்கு  தேர்  ஓட்டிய  கண்ணன்  போல  நாயகனுக்கு  கார்  ஓட்டும்  கடவுள்  கான்செப்ட்  எல்லாம் ஓவரோ  ஓவர் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - காட்சி  ரீதியாக  18+  எதுவும்  இல்லை , ஆனால்  வசனத்தில்  சில  18+  உண்டு , ஆனால்  வல்கராக  இல்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  அனைவரும்  காண  வேண்டிய  கோர்ட்  ரூம் டிராமா. செக்ஸ்  எஜூக்கேஷன்  ஏன்  அவசியம்  என்பதை  உறுதியாக  சொன்ன  விதம்  அருமை ., மாறுபட்ட  திரைக்கதை . ரேட்டிங்  3.25 / 5 


OMG 2
Theatrical release poster
Directed byAmit Rai
Written byAmit Rai
Produced by
StarringAkshay Kumar
Pankaj Tripathi
Yami Gautam Dhar
CinematographyAmalendu Chaudhary
Edited bySuvir Nath
Music byVikram Montrose
Hansraj Raghuwanshi
Djstrings
Pranaay
Sandesh Shandilya
Production
companies
Distributed byViacom18 Studios
Release date
  • 11 August 2023
Running time
155 minutes[1]
CountryIndia
LanguageHindi
Budgetest. ₹50 crore[2][3]
Box office₹221.08 crore[4]

Saturday, October 07, 2023

HARKARA (2023) -ஹர்காரா --தமிழ் - சினிமா விமர்சனம் ( உலக சினிமா) / ( ஹிஸ்டாரிக்கல் டிராமா) @ அமேசான் பிரைம் + ஆஹா தமிழ்

   


    ஹர்காரா  என்றால் போஸ்ட் ,மேன்   என்று  அர்த்தம். இந்தியாவின்  முதல்  தபால்  ஊழியர்  என்ன  என்ன  சிரமங்களை  சந்தித்தார்? ஆங்கிலேயர்களை  எப்படி  எதிர்த்தார்? அவரது  தியாகம்  எப்படிப்பட்டது? என்பதை  எடுத்துச்சொல்லும்  கதை 

படத்தின்  இயக்குநர் ராம்  அருண்  கேஸ்ட்ரோ  2019 ல்  ரிலீஸ்  ஆன  செம  ஹிட்  படமான  வி1 மர்டர்  கேஸ்  படத்தின்  இயக்குநர் 2014ல்  ஓட்டத்தூதுவன்  என்ற  டைட்டிலில்  இவர்  நாயகன்  ஆக  நடிக்க  ஒரு  படம்  எடுத்தார்.1850 ல்  நடந்த  உண்மை  சம்பவம்  இது . பல  ஃபிலிம்  ஃபெஸ்டிவல்களில்  படம்  திரை இடப்பட்டு  பாராட்டுக்களைப்பெற்றது . இயக்குநர்  நியூயார்க் கில்  நடிப்புக்கான  பயிற்சி  பெற்றவர் . 2014ல்  இவர்  நாயகன்  ஆக  நடித்த  ஓட்டத்தூதுவன் தான்  இப்போது  காளி  வெங்கட்டை  வைத்து ஒரு  எக்ஸ்ட்ரா  போர்சன்  உருவாக்கி  சேர்த்து  ஹர்காரா  என  ஆனது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ம்த்திய  அரசு  ஊழியர்  ஆக தபால்  நிலையத்தில்  போஸ்ட்மேன்  ஆக  பணிபுரிகிறார். ஆனால்  அவர்  பணி  புரியும்  இடம்  ஒரு  மலைப்பாங்கான  கிராமம். மிக  சிரமமான  பணி . 


கிராமத்து  மக்கள்  ரூல்ஸ்  அண்ட்  ரெகுலேஷன்ஸ்  எல்லாம்  தெரியாமல். அதை  ஃபாலோ  பண்ணாமல்  நாயகனை  அன்  டைமில் தொந்தரவு  செய்கிறார்கள் . இதனால்  கடுப்பான  நாயகன்  வேறு  இடத்துக்கு  பணி  மாற்ற,ம்  கேட்கிறார், ஆனால்  கிடைக்கவில்லை 


 அதனால்  நாயகன்  ஒரு சதி செய்கிறார்.கிராம்த்து  மக்களே  எழுதுவது  போல  ஒரு  பெட்டிஷன்  ரெடி  செய்து  அதை  கலெக்டர்  ஆஃபீஸ்க்கு  அனுப்புகிறார்.  இந்த  ஊருக்கு  தபால்  நிலையமே  வேண்டாம், மாறாக  ஒரு கூட்டுறவு  வங்கி  இருந்தால்  போதும் என்பதுதான்  பெட்டிஷனின்  மையப்பொருள் 


நாயகனிடம் எதேச்சையாக  அந்த  ஊரில்  முன்பு  150  வருடங்களுக்கு  முன்பு  பணி  ஆற்றிய  மாதேஸ்வரன்  என்பவர்  பற்றிய  கதையை  கேட்கிறார். அதற்குப்பின்  மனம்  மாறுகிறார்.


 அந்த  மாதேஸ்வரனின்  கதை என்ன? அவர்  மனம் ஏன்  மாறியது?  என்பது  தான்  பின்  பாதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  காளி  வெங்கட் யதார்த்தமான  நடிப்பு, கிராமத்து  மக்களிடம்  எரிச்சல் படும்போதும், தனக்கு  பெண்  கொடுக்க  யாரும்  இல்லை  என  வருத்தப்படும்போதும்  கவனிக்க  வைக்கும் நடிப்பு 


 மாதேஸ்வரன்  எனும்  போஸ்ட்மேன்  ஆக  இயக்குநர் ராம்  அருண் கேஸ்ட்ரோ . அபாரமான  நடிப்பு , இணைந்த  கைகள்  அருண்  பாண்டியன்  போல  ஜிம்  பாடி. வாய்ப்புக்கிடைத்தால் ஆக்சன்  ஹீரோ  ஆகலாம்


கிராமத்து  மக்களின்  யதார்த்த  நடிப்பும்  , சில  இடங்களில்  ஓவர்  ஆக்டிங்கும்    ரசிக்க  வைக்கின்றன


படத்தில்  பாராட்ட  வேண்டிய முதல்  அம்சம்  ஒளிப்பதிவு  தான். பிரமாதம்.,ஃபிலிப் ஆர்  சுந்தர் , லோகெஷ்  இளங்கோவன்  இருவரும்  கலக்கி  இருக்கிறார்கள் 

டேனி சார்ல்ஸ்  தான்  எடிட்டிங்க். ஃபிளாஸ்பேக்  காட்சிகளுக்கு  தனி  கலர்  கொடுத்து  ஒளிப்பதிவாளர்  படம்  பிடித்ததை  சாமார்த்தியமாக  நான்  லீனியர்  கட்டில்  தொகுத்திருக்கிறார்


ராம் சங்கர்  பின்னணி  இசை  ஜீவன்  உள்ள  உயிரோட்டமான  இசை 


ஒப்பனையே இல்லாத  ஒப்பனையே  தேவைப்படாத  இயற்கை  அழகு  நாயகி,  சில  காட்சிகள்  வந்தாலும்  அருமை 

சபாஷ்  டைரக்டர் (ராம்  அருண்  கேஸ்ட்ரோ)


1   தான்  நாயகன்  ஆக  நடித்த குறும்படத்தை  முழுப்படம்  ஆக்க  என்ன தேவையோ  அதை  உணர்ந்து  கச்சிதமாக  செய்தது 


2  கமர்ஷியல்;  மசாலா  அயிட்டங்கள்  மொக்கைக்காமெடி , டான்ஸ் ., டூயட்  என  எதுவும்  வைக்காமல்  தில்லாக  கதைக்குத்தேவை  எதுவோ  அதை  மட்டும்  காட்டியது 


3  கிட்டத்தட்ட  10 கிமீ  தூரம்  உள்ள  இடத்தை  நாயகன்  கடக்கும்போது  இன்னும்  எவ்ளோ  தூரம்  என  எப்போக்கேட்டாலும்  நடக்கற  தூரம்  தான்  என  திரும்ப  திரும்ப  சொல்லும்  கிராம வாசி  நடிப்பு 


4   நாயகனிடம் 250  ரூ கடன்  வாங்கும்  கிராமத்துப்பெண்  நாணயமாக  திருப்பிக்கொடுத்து  பேசும்  வசனம்  அருமை .. நடிப்பும்  கிளாசிக்  


5  ரூ 1000  பென்சன்  பணம் கிடைத்ததும் உணர்ச்சி வசப்பட்டுப்பேசும்  பாட்டியின்  நடிப்பு  அருமை 


6 கானகத்தின்  அருவி  அழகை  அட்டகாசமாகப்படம்  பிடித்தது . தேனி மாவட்டத்தின்  அழகைக்கண்  முன்  நிறுத்தியது 


ரசித்த  வசனங்கள் 


1  ஆபத்துக்கு  உதவாத  பிள்ளையும், ஆத்திரத்துக்கு  உதவாத  பணமும்  தண்டத்துக்கு  சமம்


2   இடமலைக்கு  எம்புட்டு  தூரம் ?

  எல்லாம்  நடக்கற  தூரம் தான் 

  அப்போ  பக்கம்னு  சொல்லுங்க , ஏன்  தூரம்னு  சொல்றீங்க


எகத்தாளம்தான்


3  என்னய்யா, இங்க்லீஷ்ல  சைன்  பண்ற  அளவு  படிச்சிருக்கே? ஆனா  நான்  கொடுத்த  பேப்பர்ல  என்ன  எழுதி  இருக்குனு  படிச்சுப்பார்க்காம  சைன்  பண்றே?


 படிச்சுப்பார்த்து  சைன்  பண்ணுனா  அப்றம்   நீங்க  போட்டிருக்கும்  யூனிஃபார்ம்க்கு  என்ன  மரியாதை ?


4  ஃபோர் ஜி  வ்ந்தா  என்ன? ஃபைவ்  ஜி  வந்தா  என்ன?  போஸ்டல்  டிபார்ட்மெண்ட்  போகும்  இடத்துக்கு  எந்த  டெக்னாலஜியும்  வந்துட  முடியாது 


5  உலகத்துலயே  பெரிய  போஸ்டல்  சர்வீஸ்  நம்ம  இந்தியாவுதுதான்


6  போற  பாதை  கடுமையா  இருந்தாத்தான்  பேரு  நிலைச்சு  நிற்கும்

7  மாட்டுக்கும்  அடிமைக்கும்  எந்த  உணர்ச்சியும்  இருக்கக்கூடாது , இருந்தா  திமிறிக்கிட்டே  இருக்கும்

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


இந்தமாதிரி  நல்ல  படங்களில்  கூட  லென்ஸ்  வைத்து  குறை  கண்டு பிடித்து   நொட்டை  சொல்லிக்கொண்டிருந்தால்  நாம்  மீண்டும்  மீண்டும்   விக்ரம், ஜெயிலர் , லியோ  மாதிரி  மாமூல்  மசாலாப்படங்கள் , வன்முறை  தூண்டும்  படங்களையே  பார்த்துக்கொண்டிருக்க  வேண்டியதுதான்  


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  படம்  ஸ்லோ  தான், ஆனால்  அவசியம்  பார்த்து  ரசிக்க  வேண்டிய  உலக  சினிமா .  மாமூல்  மசாலாப்பட  ரசிகர்கள் , தெலுங்கு  டப்பிங்  பட   பிரியர்கள்  தவிர்க்கவும் , நல்ல சினிமா  ரசனை உள்ளவர்கள்  மட்டும்  பார்க்க  வேண்டிய  படம். ரேட்டிங்    3/ 5 


Harkara
Directed byRam Arun Castro
Written byRam Arun Castro
Produced byKalorful Beta Movement
Starring
CinematographyPhilip R Sunder
Lokesh Elangovan
Edited byDani Charles
Music byRamshanker
Production
company
Kalorful Beta Movement
Release date
  • 26 August 2023
CountryIndia
LanguageTamil

Friday, October 06, 2023

லக்கிமேன் (2023) -தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) @ ( அமேசான் பிரைம் )

 


 2019 ல் ரிலீஸ்  ஆன   டிரைவிங் லைசென்ஸ் , 2020 ல் ரிலீஸ்   ஆன  அய்யப்பனும் கோஷியும் .   என்ற  இரு  மெகா ஹிட் ம்லையாளப்  படங்களின்  திரைக்கதை  ஆசிரியர்  ஒருவரே! சச்சி  என்பவர் தான். இருவருக்கிடையே ஏற்படும்  ஈகோ கிளாஸ்  தான்  இரு  படங்களின்  ஒன் லைன்,  அதே  மாதிரி  சாமான்யனுக்கும் , ஒரு போலீஸ்  ஆஃபீசருக்கும்  மோதல்  ஏற்பட்டு  ஈகோ  கிளாஸ்  நிகழ்ந்தால்  என்ன  ஆகும்  என்பது  தான்  இப்படத்தின்  ஒன்  லைன் 


பிரதாப்  போத்தன்  இயக்கத்தில்  கார்த்திக், கவுண்டமணி  நடித்து 1995 ல் ரிலீஸ் வெளியான  லக்கிமேன்  படக்கதைக்கும்  இதற்கும்  எந்த  சம்பந்தமும்  இல்லை. புனீத் ராஜ் குமார் , பிரபு தேவா  நடிப்பில்  2022  ஆம்  ஆண்டு  வெளியான  கன்னடப்படத்துக்கும் , இதற்கும்  எந்த  சம்பந்தமும்  இல்லை 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  மனைவி , ஒரு  மகன்  என  மிடில்  கிளாஸ்  வாழ்க்கை  நடத்தும்  சாமான்யன். சின்ன  வயதில்  இருந்தே  அதிர்ஷ்டம்  இல்லாதவன்  என  அழைக்கப்பட்டவன். ரியல்  எஸ்டேட்  கம்பெனியில் கமிஷன்  ஏஜெண்ட்  ஆக  வேலை  பார்த்து  வருகிறான்.


எதிர்பாராதவிதமாக லாட்டரி  பரிசு  போல  ஒரு  சீட்டுக்கம்பெனியில்  5  லட்சம்  ரூபாய்  மதிப்புள்ள  கார்  கிடைக்கிறது . அதற்குபின்  நாயகன்  வாழ்வில்  ஏகப்பட்ட  திருப்பங்கள் . கம்பெனியில்   கமிஷன்  ஏஜெண்ட்  ஆக  இருந்தவன்  ஆன்  ரோல்  ஸ்டாஃப்  ஆகிறான்.


மகிழ்ச்சியாகப்போய்க்கொண்டிருக்கும்  இவன்  வாழ்க்கையில்  ஒரு  போலிஸ்  ஆஃபீசர்  குறுக்கே  வருகிறார்.அடிக்கடி  மோதிக்கொள்கிறார்கள். இவர்கள் மோதல்  என்ன  ஆனது  என்பது  தான்  மீதிக்கதை 


நாயகன்  ஆக  யோகிபாபு. மொக்கைக்காமெடி  செய்வ்தை  விட   கேரக்டர்  ரோல்  செய்வது  நல்லது . நன்றாக  நடிப்பும்  வருகிறது. கவுண்டமணி  பாணியில்  அடுத்தவர்களை  உருவ  கேலி  செய்யாமல்  இது போல்  குணச்சித்திர  ரோல்கள்  செய்வது  நல்லது 


நாயகி  ஆக ரெய்ச்சல் ரொபாக்கா. கலக்கி  இருக்கிறார். சினிமாத்தனம்  இல்லாத  முகம்/.கடைசி  விவசாயி  படத்தில் ஜ்ட்ஜ்   ஆக  பின்னிப்பெடல்  எடுத்தவர் இதில்  மிடில்  கிளாஸ்  மனைவி  ஆக  அடக்கி  வாசித்திருக்கிறார்


வில்லன்  ஆக  நடுநிசி நாய்கள்  நாயகன்  வீரா. கம்பீரமான  தோற்றம். நாயகனுக்கு  நிகரான  ரோல்.  நாயகனின்  ந்ண்பனாக அப்துல் லீ  யதார்த்தமான  நடிப்பு 


ஷான்  இசை பின்னணி  இசை  இரண்டும்  அருமை . 2  பாடலக்ள்  குட் .சந்தீப்  விஜயின்  ஒளிப்பதிவு  பாராட்ட  வைக்கிறது 




சபாஷ்  டைரக்டர் (  பாலாஜி வேணுகோபால்) 


1   மலையாளப்படங்களின்  கதைக்கருவை  பட்டி  டிங்கரிங்க்  பண்ணி  இருக்கிறோம்  என்பது  தெரியாமல்  இருக்க  முதல்  பாதியை  அந்தக்காரை  வைத்தே  நகர்த்திய  சாமார்த்தியம் 


2 நாயகியின்  கேரக்டர்  டிசைனும் , அவரது  இயல்பான  நடிப்பும் 


3  கருத்தான  வசனங்கள்   பல  இடங்களில்  கவனத்தை ஈர்க்கிறது 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  எது தான்  சந்தோஷம் ? வண்ணமில்லா  வாழ்க்கையிலே வழி  கிடைச்சா  சந்தோஷம்


2  தொட்டுத்தழுவும் தென்றலே


  ரசித்த  வசனங்கள் 

1  அதிர்ஷ்டம்  இல்லாதவன்  லட்டு  கேட்டாக்கூட  பூந்தி  தான்  கிடைக்கும்


2  பூந்தி , லட்டு  ரெண்டும்  ஒண்ணுதான், ஆனால்  லட்டுக்குக்கிடைக்கும்  மரியாதை  பூந்திக்குக்கிடைக்காது


3  பெட்ரோல்  பங்க்ல  ஃபோன்  பேசக்கூடாது 

 பில்  பே  பண்றதுக்கு  ஃபோன்  வேண்டும், ஆனா  ஃபோன்  பேசக்கூடாது? என்னா  டெக்னாலஜிடா?


4 ஒரு  காட்டுக்கு  ஒரு  சிங்கம்  தான்  இருக்க  முடியும் 


 ஆனா  எந்தக்காட்டுக்கு  ராஜாவா  இருக்கனும்னு  அந்த  சிங்கம்தான்  முடிவு  பண்ணும், ராஜா  இல்லை 


5  மத்தவங்களை  கிண்டல்  பண்ணிட்டே  இருக்கறவங்களுக்கு  வாழ்க்கையைப்பற்றி  பயம்  இருக்கும்


6  என்  யூ ட்யூப்  சேனல்க்கு ஒரு  பேட்டி  கொடுத்தா  ஒரு  ஸ்டெப்னி  ஃப்ரீ


\ஸ்டெப்னின்னாலே  ஃப்ரீதானே?


7  சார், ஒரு  சின்ன  லீகல்  டவுட். தனியா  பைக்ல  வந்தா  பிடிக்கும்  போலீஸ்  ஃபேமிலியோட  வந்தா  பிடிக்கறதில்லையே, அது  ஏன் ?


 ஃபேமிலியோட  வர்றவன்  தப்பு  பண்ண  மாட்டான்னு  ஒரு  ஐதீகம்

கோலமாவு  கோகிலா ல  குடும்பத்தோட  சேர்ந்து தானே  கஞ்சா  கடத்துனாங்க? ஃபேமிலியோட  வர்றவன்  ஆல்ரெடி  பிரச்சனையோடதான்  இருப்பான், மேலும்  நாம  ஏன்  பிரச்சனை  கொடுக்கனும்னு தான்...  ?


8  பெட்ரோல்  போடும்  முன்  ஜீரோ  பார்த்துக்குங்க  சார் 


 என்  வாழ்க்கைல  இனி  ஜீரோவே  கிடையாது

8  ஒரு  போலீஸ்  காரனுக்கு  இவ்ளோ  திமிர்  இருக்கக்கூடாது 


 திமிர்  இல்லாம  போலீஸ்காரனே  இருக்கக்கூடாது


9  சாதாரண  மனிதன்  தான்  சூப்பர்  ஹீரோ 

 நேர்மையான  மனிதன்  தான்  சூப்பர்  ஹீரோ , ஏன்னா  அவன்  முன்னால  சாதாரண  மனிதன்  கை  கட்டித்தான்  நிக்கனும் 


10  காமன்  மேன்  யானை  மாதிரி  , பார்க்க  சாதாரணமா  தான்  இருப்பான் , மதம்  பிடிசிடுச்சு  பாகன்  எனக்கூடப்பார்க்கமாட்டான், தூக்கிப்போட்டு  மிதிச்சிடுவான் 


11  காட்டுக்கே  சிங்கமா  இருந்தாலும்  யானையைப்பற்றித்தெரிஞ்ச  சிங்கமா  இருக்கனும் 


12  கடவுளைக்கேட்டா  கொடுக்க  மாட்டார், நாமா  தந்தாலும்  எடுத்துக்க் மாட்டார் 

13  நல்லவனா  இருந்தா  கடைசி  வரை  நல்லவனாத்தான்  இருக்க  முடியும், சத்தியமா  நல்லா  இருக்க  முடியாது 


14 சாப்பிட்டுட்டு  இருக்கும்போது  சாமியே  வந்தாலும்  எந்திரிக்கக்கூடாது 


15  இந்த  உலகத்துல  முதுகுல  குத்துன  ப்ரூட்டசை  விட  முகத்துல  குத்துன  முகமது  அலிக்குதான்  மரியாதை  ஜாஸ்தி 


16  நான்  எல்லாம்  செஞ்ச  தப்புக்கே  சாரி  கேட்காதவன், என்னைப்போய்  என் கடமையை  செஞ்சதுக்கே  சாரி  கேட்க  வெச்சுட்டே  இல்ல?


17  இந்த  உலகத்துலயே  நமக்கு  எது  ரொம்பப்பிடிச்சிருக்கோ  அதைத்தான்  இந்த  இயற்கை முதல்ல  தூக்கும் ஏன்  தெரியுமா?  அதுவும்  இல்லாம  நம்மால்  வாழ  முடியும்னு  நமக்கே  கத்துக்கொடுக்கத்தான் 


18   வெளில  கண்டவன்  கிட்டே  காட்ட  முடியாத  கோபத்தை  வீட்ல  கட்னவ  கிட்டே  காட்டத்தானே  ஆம்பளைங்களுக்குக்கல்யாணம் ? 


19  வாழ்க்கைல ரெண்டே  பேரு தான் 1  வலி  கொடுக்கறவங்க 2  வழி  கொடுக்கறவங்க 


20  வலி  கொடுக்கறவங்களைப்பற்றியே  யோசிச்சுட்டு  இருந்தா வழி கொடுக்கறவங்களைப்பற்றி  எப்படித்தெரியும் ? 


21  ஃபர்ஸ்ட்  டைம்  பாடறதுக்கு  நிரோஷாவா  இருக்கு  சார் 


யோவ், அது  நெர்வஸ்


22  எமோஷனலா  இருந்தா  இண்ட்டெலிஜென்ஸ்  வேலை  செய்யாது


23  மன்னிப்பு என்பது  சின்ன  வார்த்தைதான், ஆனா  அதைக்கொடுக்கறவங்க  மனசைப்பொறுத்துத்தான்  அது  சின்னதா? பெருசா?னு  தெரிய  வரும் 


24  இந்த  உலகம்  அழகா  இருக்கறவங்களை  ரசிக்கும், அறிவா  இருக்கறவங்களை  மதிக்கும், பணத்தோட  இருக்கறவங்களைப்பார்த்துப்பொறாமைப்படும்.பவர் ல இருக்கறவங்களைப்பார்த்து பயப்படும் , ஆனா  என்னைக்குமே  உழைக்கறவங்களை  மட்டும் தான்  நம்பும் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நான்  போலீஸ்  டிப்பார்ட்மெண்ட்  என்பது  என்  பக்கத்து  வீட்டு  ஆட்களுக்குக்கூடத்தெரியாது , அவ்ளோ  சீக்ரெட்  என டயலாக்  பேசும்  ஆஃபீசர்  நடு ரோட்டில்  டிராஃபிக்  இன்ஸ்பெக்டர்  வேலை  எல்லாம்  பார்க்கிறாரே? ஊருக்கே  தெரியுமே?

2   ஏஜெண்ட் ஆக  இருந்த  நாயகன் அ தே  கம்பெனியில்  திடீர்  என  எம்ப்ளாயி  ஆகிறான். ஐ டி  கார்டு  தரும்போது  ஆனந்த  அதிர்ச்சி  அடைகிறான், எல்லாம்  ஓக்கே  ஐ டி கார்டில்  ஒட்ட  ஃபோட்டோ , பிளட்  க்ரூப்  டீட்டெய்ல்ஸ்  எல்லாம்  ஃபில்லப்  பண்ணி  ஃபார்ம்  தந்த  பின்  தானே  ஐ டி  கார்டு  வரும் ? அவருக்கு  முதலிலேயே  தெரியாமல்  இருக்க  வாய்ப்பில்லையே? 

3  நிச்சயம்  ஆன  பெண்ணை  ரிஜெக்ட்  பண்ண  இதுவரை  1000  பேர்  1000  காரணம்  சொல்லி  இருக்காங்க, ஆனா  போலீஸ்  ஆஃபீச்ரோட  நாய்  நான்கு  நாட்களாகக்காணாமல்  போனதால்  வருத்தத்தில்  இருக்கிறார் என  அவரோட  ஃபியான்சி  அவருக்கு  ஒரு  புது  நாய்  கிஃப்ட்டா  தர  என்  நாய்  காணாமதான்  போச்சு, சாகலை ,  இனிமே  நமக்கு  செட்  ஆகாது, பிரேக்கப்  என  சொல்வது  செம  காமெடி 


4  அன்னியோன்யமான  தம்பதியாய்  இருக்கும்  நாயகன்  - நாயகி  பிரிய  அழுத்தமான  காரணம்  சொல்லப்படவில்லை

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  வசனங்களுக்காகவே  பார்க்கலாம், கடுப்படிக்கும்  மொக்கைக்காமெடி  செய்யாமல்  டீசண்டாக  நடித்திருக்கும்  யோகிபாபுவுக்காகவும்  பார்க்கலாம், ரேட்டிங் 2.25 / 5 


Directed byBalaji Venugopal
Starring
CinematographySandeep K. Vijay
Edited byG. Madan
Music bySean Roldan
Production
company
Think Studios
Release date
  • 1 September 2023
CountryIndia
LanguageTamil