Wednesday, September 20, 2023

OH BABY ( 2019)- தெலுங்கு - ஓ பேபி - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஃபேண்ட்டசி காமெடி டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்

 


2014 ஆம்  ஆண்டு  வெளியாகி  செம  ஹிட்  ஆன  சவுத் கொரியன்  படமான  மிஸ் கிரானி  படத்தின்  அஃபிசியல்  அட்லீ  ஒர்க்  இது . தெலுங்கில்  வெளியாகி  சமந்தாவுக்கு  நல்ல  பெய்ர்  வாங்கிக்கொடுத்த  காமெடி  படம் . வணிக ரீதியாகவும்  வெற்றி  பெற்று பல  மொழிகளில்  ரீ மேக்  ஆனது 


      ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி 70 வயது  பாட்டி. திருமணம்  ஆன கொஞ்ச  காலத்துலயே  கணவனை  இழந்தவர். ஒரே  ஒரு  மகன், அவனை  வளர்க்க  மிகவும்  பாடுபட்டவர். மகன்  பெரியவன்  ஆகி  அவனுக்குத்திருமணம்  ஆகி  அவனுக்கும்  திருமண  வயதில்  ஒரு  மகன், மகள்  உண்டு . எல்லா  வீட்டிலும்  இருப்பது  போல  இங்கேயும்  மாமியார் - மருமகள்  பிரச்சனை  உண்டு 


 ஒரு  கட்டத்தில் மாமியார்  நம்முடன்  இருக்க  வேண்டாம்  என மருமகள்  அடம்  பிடிக்க  மிகுந்த  மன  வருத்தத்தில்  மாமியாரான  பாட்டி  வீட்டை  விட்டு  சொல்லாமல்  கொள்ளாமல்  வெளியேறுகிறார். ஒரு  ஃபோட்டோ  ஸ்டுடியோவில்  ஃபோட்டொ  எடுக்கும்போது  அபூர்வமாக  ,அதிசயம்  ஆக  24  வயது இளம்பெண்ணாக  அதாவது  பாட்டி  24  வயதில்  எப்படி  இருந்தாரோ  அதே  போல்  ஆகி  விடுகிறார்


நாயகிக்கு  சின்ன  வயதில்  பாடகி  ஆக  வேண்டும்  என்ற  கனவு  உண்டு .விஜய்  டி வி  சூப்பர்  சிங்கர்  போல  ஒரு  டி வி  புரோகிராமில்  பாடகி  ஆக  இப்போது  உருமாறுகிறார். அங்கே  இருக்கும்  ஒருவர்  நாயகியை  இப்போது  காதலிக்கிறார். நாயகியும்  அவ்ருடன்  பழகுகிறார்.


 நாயகி  சின்ன  வயதில்  கிளாஸ்மேட்  ஆக  இருந்த ஒரு ஆள்  இப்போதும்  நாயகியை மனதார  காதலிக்கிறார். அந்த  விஷயம்  அப்போது  நாயகிக்குத்தெரிய வில்லை. இப்போது 24  வயதுப்பெண்ணாக  உரு மாறிய  பின்  தான்  தெரிய  வருகிறது 


பேரன்  ஒரு  இசைக்குழு  நடத்தி  வருகிறான். அதில்  நாயகி  இப்போது  பாடகி . பேரனுக்கு  நாயகி  தான்  தன்  பாட்டி  என  தெரியாது .  இளம்பெண்  என  நினைத்துப்பழகுகிறான். எங்கே  அவன்  தன்னைக்காதலித்து  விடுவானோ  என  நாயகி  பயந்து  கொண்டே  இருக்கிறாள்


இந்த  காமெடி  களேபரங்கள்  எல்லாம்  எப்போது  முடிவுக்கு  வ்ந்தது ? என்பது  தான்  மீதி  திரைக்கதை 


நாயகி  பாட்டி  ஆக  லட்சுமி  அற்புதமான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்.  24  வயதுப்பெண்ணாக  உரு  மாறும்போது  சமந்தா  ஆகிறார். உடல்  வயது  24  மனசுக்கு  வயது  70   என  உடல்  மொழ்யில்  கலக்கி  இருக்கிறார். பாய்  ஃபிரண்ட் ,  காதலன் , கிளாஸ்மேட்  என  யாருட்ன் பழகினாலும்  தாய்மை  உணர்வுடன்  இருப்பது  சிறப்பு 


ஊர்வசி ஒரு  சின்ன  ரோலில்  சிறப்பாக  நடித்திருக்கிறார்

161  நிமிடங்கள்  ஓடும்படி  எடிட்  செய்து  இருக்கிறார்கள் மிக்கி  ஜே  மேய்ர்  இசையில்  ஆறு  பாடல்கள்  , அவற்றில்  மூன்று  நன்று 


கொரியன்  கதையை  நம்ம  ஊருக்கு  ஏற்ற  திரைக்கதை  ஆக்கி  வழங்கி  இருப்பவர்  பி வி  நந்தினி  ரெட்டி . பெண்களை  மிகவும்  கவரும்  விதத்தில்  ஃபேமிலி  காமெடி  மெலோ  டிராமாவாக  உருவாக்கி  இருப்பது  சிறப்பு 


சபாஷ்  டைரக்டர் (பி வி  நந்தினி  ரெட்டி)


1  தன்னை  விட  தன்  மாமியார்  தன்  கணவனை , குழந்தைகளை  நன்கு  கவனித்துக்கொள்வது  கண்டு  மருமகள்  பொறாமைப்படும்  காட்சி  சிறப்பு 


2   நாயகியின் ஸ்கூல்  மேட்  ஆக  வருபவர்  இத்தனை  வருடங்கள்  ஆகியும்  திருமணம்  செய்து  கொள்ளாமல்  நாயகி  மீது  அன்பு  வைத்திருப்பது நெகிழ  வைக்கும்  கதை  அமைப்பு 

3  நாயகி  24  வயதுப்பெண்ணாக  மாறியதும்  மூன்று  பேர் அவரை  சுற்றி  வந்தாலும்  கண்ணியமான  காட்சி  அமைப்புகள்  சாமார்த்தியமான  சமாளிப்புகள்  என  திரைக்கதையை  நகர்த்திய  விதம் 

4  க்ளைமாக்சை  எப்படி  முடிப்பார்களோ  என  நினைக்கும்போது  நாயகிக்கு  ரத்த இழப்பு  ஏற்பட்டால்  பழைய  தோற்றம்  வரும்  என  கொண்டு  வந்து பேரனுக்கு  விபத்து , ரத்த  தானம் - ப்ழைய  தோற்றம்  என  சமாளித்த  விதம்  குட் 


  ரசித்த  வசனங்கள் 


1  குரல்  குயில்  மாதிரி  இருந்தாலும்  தலை  எழுத்து  கழுதை  மாதிரி  இருந்தா?

2  இப்போதான்  அம்மா  திட்டுனாங்க ,  இப்போ  சாப்பிடுங்கறாங்க 


 அம்மான்னா  அப்படித்தாண்டா, நமக்கு  சாப்பாடும்  போட்டு  நம்ம  கிட்டே  திட்டும்  வாங்கிக்குவாங்க 


3  வீட்ல  அம்மா, அப்பா , தாத்தா , பாட்டி  யாருமே  இல்லைன்னா  சாப்பிட்டியா?னு  யார்  நம்மைக்கேட்பாங்க ?


4  அப்பாவியா  இருக்கும்  பொண்ணுங்க தான்  ஆபத்தானவங்க 


5  அவ  ரொம்ப அழகி, அதனால  தான்  கர்ச்சீஃப்  போட்டு  இடம்  பிடிக்க  வந்திருக்கேன் 


 ஆல்ரெடி  போர்வையைப்போட்டு  இடம்  பிடிச்சவனே  கம்முனு  இருக்கான் 


6  சொத்தை  எழுதி  வைக்கற வரை தான் பிள்ளைகளுக்கு  பெத்தவங்க  வேணும்  கோடில  ஒருத்தன்  தான்  உண்மையான  பாசத்தோட  இருப்பான்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  சமந்தா  உருவத்தில்  இருக்கும் லட்சுமி  தன்  டி சர்ட்டால்  தன்  மகன்  பூட்சை  துடைக்கிறார். அவ்ளோ  தூசும்  க்ளீன்  ஆகிடுது . ஷூவும்  சுத்தமா  இருக்கு , டி சர்ட்டும்  சுத்தமா  இருக்கு , அது  எப்படி ?


2  போலீஸ்க்கு  ஃபோன்  பண்ணும் லட்சுமியின்  ஃபிரண்ட்  அந்த  திருடன்  கிடைச்சுட்டான்  என  ஃபோன்  பண்றார். திருடனைப்பிடிக்க     வரும்  போலீஸ்  யூனிஃபார்ம்ல  வராம  மஃப்டில  வர்றாங்க . திருடன்  எங்கே?னு  கேட்காம தண்டமா  விசாரிச்சுட்டு  இருக்காங்க   


3  சமந்தா  உருவத்தில்  இருக்கும்  லட்சுமி  என்  பையன்  என்னை  அடையாளம்  கண்டு  பிடிக்க  முடியாது , ஏன்னா  நான்  25  வயசா  இருக்கும்போது  அவன்  குழந்தை  என்கிறார். ஏன்   ஞாபகம்  இருக்காது ? கல்யாண  ஆல்பம்  அம்மா, அப்பாவுடையது  பார்த்திருக்க  மாட்டாரா?


4 லாஜிக்படி  ஒரு  அம்மாவுக்கு  வேண்டுமானால்  தன்  குழந்தை  வளர்ந்த  பின்  பார்த்தால்  அடையாளம்  தெரியாமல்  போகலாம், ஆனால்  ஒரு  குழந்தை  சின்ன  வயதில்  பார்த்த  அம்மா  முகத்தை  வளர்ந்த  பின்  மறக்குமா? என்ன?


5 க்ளைமாக்சில்  பேரம்  ஆக்சிடெண்ட்  ஆகி  ஹாஸ்பிடலில்  இருக்க  பாட்டி பாட்டு  பாடும்போது  சந்தோஷ  மெட்டில்  சிரித்தபடி  பாடுவது  செயற்கை. அதே  போல்  பாடகன்  ஆக வேண்டும்  என்பது  பேரனின்  கனவு  அதனால்  பாடுவோம்  என  பாட்டி  அடம் பிடிப்பது  முட்டாள்  தனம் , புன்னகை  மன்னன்  படத்தில் வெடிகுண்டு  புரளி  வந்ததும்  ஆடியன்ஸ்  எல்லாரும்  ஓடி  விட  யாருமே  இல்லைன்னாலும்  கச்சேரி  நடக்கும்  என  கமல்  சொல்லி  கால  காலமாக  வாழும்  காதலுக்கு  நாங்க்ள்  அர்ப்பணம்  என  பாடி  ஆடுவது  எந்த  அளவுக்கு  மடத்தனமானதோ  அதே  அளவு  மடத்தனம்



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பெண்களுக்கு  மிகவும்  பிடிக்கும்  கதை  அம்சம், குடும்பத்துடன்  பார்க்கலாம்  ரேட்டிங்  3 / 5 


Oh! Baby
Theatrical release poster
Directed byB. V. Nandini Reddy
Screenplay byB. V. Nandini Reddy
Based on
Miss Granny
by 
  • Shin Dong-ik
  • Hong Yun-jeong
  • Dong Hee-seon
Produced byD. Suresh Babu
Sunitha Tati
T. G. Vishwa Prasad
Starring
CinematographyRichard Prasad
Edited byJunaid Siddiqui
Music byMickey J. Meyer
Production
companies
Release date
  • 5 July 2019
Running time
161 minutes
CountryIndia
LanguageTelugu
Budget₹16–20 crore[1][2]
Box officeest. ₹33.9–40 crore[1][3]

Tuesday, September 19, 2023

குத்துக்கு பத்து (2022) - தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் ( காமெடி டிராமா) @ ஆஹா தமிழ்

 


 டெம்ப்பிள்  மங்க்கீஸ்  என்னும்  யூ  ட்யூப்  நிகழ்ச்சியில்  பிரபலம்  ஆன  விஜய் வரதராஜ்  இயக்கிய  வெப்  சீரிஸ்  இது . இதற்குப்பின்  2023ம்  ஆண்டு  பல்லு  படாம  பார்த்துக்க  என்னும்  டப்பாப்படத்தை  இயக்கினார். இந்தத்தொடர்  டார்க்  ஹ்யூமர்  வகையறா  என்றாலும்  குடும்பத்துடன்  பார்க்க  முடியாத  அளவு  ஏராளமான  கெட்ட  வார்த்தைகள்  கொண்டவை 


 இதில் ஏழு  எபிசோடுகள்  . ஒவ்வொன்றும்  சராசரியாக  30  நிமிடங்கள் , ஆக  மொத்தம்  210  நிமிடங்கள்   மூன்றரை  மணி  நேரம்  ஆகும் 


நாயகன், நாயகி , வில்லன் , வில்லி  என  யாரும்  இல்லாமல்  கும்பல்  கும்பல்  ஆக  கேரக்டர்கள்  வந்து  போகும்  கதை  என்பதால்  அனைத்துத்தரப்புகளுக்குமான  படம் / வெப்  சீரிஸ்  இல்லை  இது 


   ஸ்பாய்லர்  அலெர்ட்


சேட்டு  வீட்டுப்பெண்ணை  ஒருத்தன்  காதலிக்கிறான். அவளுக்கு  லவ்  லெட்டர்  கொடுக்க  முயலும்போது  அவள்  அண்ணன்  அவனையும், அவன்  நண்பனையும்  அடித்து  விடுகிறான். உடனே  அவன்  நண்பன்  அவன்  தரப்பு  ஆட்களை  அழைக்கிறான், அவர்கள்  இங்கே  வந்து   அண்ணனை  அடிக்க   அண்ணன்  அவன்  ஆட்களை  அழைக்க.... 


 இப்படியே  முதல்  இரண்டு  எபிசோடுகள்  முழுக்க  யாரோ  யாரையோ அடிச்சுக்கிட்டெ  இருக்காங்க 


கிட்டத்தட்ட சிலபல  அடிதடிகளுக்குப்பின்  ஒரு  அரசியல்வாதி  கொலை  செய்யப்படுகிறார்.  ஒரு  போலீஸ்  அதிகாரி  போலீசாலயே  சுட்டுக்கொல்லப்படுகிறார். இதற்குபின்  நிக்ழும்  குழப்பங்கள்  என்ன? என்பதை  தில்  இருந்தால்  பார்த்து  தெரிந்து  கொள்க 


கதைக்குத்தேவையோ  இல்லையோ  எல்லா  கேரக்டர்களும்  கெட்ட  வார்த்தை  பேசிக்கொண்டே  இருக்கிறார்கள் . புரோட்டோ  சூரி , யோகி  பாபு  மாதிரி  மொக்கைக்காமெடி  பண்ணி  எரிச்சல்  மூட்டினாலும்  சில  இடங்களில்  சிரிப்பு  வருகிறது 


நமக்குத்தெரிந்த  முகம்  எனில்  ஆடுகளம்  நரேன்  தான் .  மகனிடம்  குழையும்  காட்சிக்ள்  அருமை . அவரது  இரண்டாவது  சம்சாரம்  ஆக  வரும்  பெண்  நீலாம்பரி  மாதிரி  கலக்கப்போகிறார்  என  எதிர்பார்த்தால்  புஸ்.. 


 இழவு  விழுந்த  வீட்டில்  கூட  அந்த  முதல்  மனைவி  வீடு  சொத்து  உனக்கு , கட்சி  எனக்கு  என  பேசுவது  கொடுமை. 


சபாஷ்  டைரக்டர்


1  விஷூவலாக   நான்கு  மணி  நேரம்  பார்த்தும்  நமக்குப்புரியாத  கதையை  சொல்லி  தயாரிப்பாளருக்குப்புரிய  வைத்து  முதலீடு  போட  ஒத்துக்கொள்ள  வைத்த  சாமார்த்தியம்

2   2022ல்  ஆகஸ்ட்  மாதம்  ரிலீஸ்  ஆன  தள்ளுமாளா  எனும்  மலையாளப்படத்தை  எந்த  கேசட்  பார்த்து  உருவினார்களோ  அதே  கேசட்டைப்பார்த்து  2022  மே  மாசமே  ரிலீஸ்  செய்த  லாவகம் 

3   கூச்சமே  படமால்  எல்லோரையு,ம்  கெட்ட  வார்த்தை  பேச  வைத்த  சாமார்த்தியம் 

ரசித்த  வசனங்கள் 

1  வழுவாள்  நெடியோன் பண்றதெல்லாம் ஃபிராடுத்தனம், ஆனா  முழம்  நீளத்துக்கு  செந்தமிழில்  பேரு  வெச்சுக்கறது 


2  சாமிநாதன்  தான்  என் பேரு, வேணும்னா  சுருக்கமா, செல்லமா  சாம்  அப்டினு  கூப்ட்டுக்குங்க , ஆனா  ஏண்டா  சாமான்  சாமான்னு  கூப்ட்டு  உயிரை  வாங்கறீங்க?


3  சேட்டு  புள்ளைக்கு  ப்ரப்போஸ்  பண்ண  மோதிரம்  கொடுத்தா  தங்கமா?னு  உரசிப்பார்க்கறா  பாரு, அப்பன்  புத்தி  போகுதா? பாரு 


4  அவன்  தான்  அப்ரூவர்  ஆகிட்டானே?   ஏன்  அவனை  சுடப்போறீங்க?

 இவன்  என்னவா  ஆகனும்னு  நான்  தான்  முடிவு  பண்ணுவேன்


5   பாஸ்வோர்டு  சொன்னாதான்  உள்ளே  விடுவோம்

பாஸ்வோர்டு?


 சூப்பர், கரெக்ட், நீங்க  உள்ளே  போலாம்,


 அடப்பாவிகளா? பாஸ்வோர்டு தான்  பாஸ்வோர்டு?  இதுக்கு  பேசாம  1234னு  வெச்சிருக்கலாம்


6  யாருடா  இவன்  புதுசா?


 அவளோட  எக்ஸ்  பாய்  ஃபிரண்டா  இருக்கும்

 எக்ஸ்னா?

 செக்ஸ்னு  நினைக்கறேன்


7  மல்லு  ஆண்ட்டி  வீட்லதான்  அவன்  இருப்பான்


 மல்லு  ஆண்ட்டியா?


 சாரி  மழுவாண்டி  வீட்ல 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  பைக்கை  எரிச்சுட்டு  ஒரு  லூஸ்  பக்கத்துலயே  நின்னு  வீரப்பா  மாதிரி  சிரிச்சுட்டு  இருக்கான், அடேய். பெட்ரோல்  டேங்க்ல  பெட்ரோல்  தீப்பிடிச்சு  வெடிக்காதுனு  டைரக்டர்க்குத்தான்  தெரியல, உனக்குமா  தெரியலை ?

2  நல்லா  கண்  தெரியும்  போலீஸ்  கான்ஸ்டபிள்  எதுக்கு  க்ளைமாக்ஸ்ல  கூலிங்  க்ளாஸ்  போட்டுட்டு   மிட்  நைட்ல  வ்ர்றாரு? ஸ்டைலா?

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - காட்சி  ரீதியாக  எதுவும்  இல்லை , ஆனால்  வசனத்தில்  பச்சை  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இது  காமெடியா  இருக்கு, பாருங்கனு  யாரோ சொன்னாங்கன்னு  நம்பி  பார்த்துத்தொலைச்சுட்டேன். இந்த  டப்பாவை  வேற  யாரும்  பார்த்துடாதீங்க , செம  குப்பை . 

ரேட்டிங்  மைனஸ்  1 / 5

Monday, September 18, 2023

அநீதி (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்) @ ஆஹா தமிழ்

 


 2003 ஆம்  ஆண்டு  இயக்குநர் வசந்தபாலன்  இயக்கிய  முதல்  படம்  ஆன  ஆல்பம்  விமர்சன  ரீதியாகப்பாராட்டைப்பெற்றாலும்  கமர்ஷியலாக  ஓடவில்லை. 2006ஆம்  ஆண்டு  வெளியான  வெயில்  அந்த  ஆண்டின்  சிறந்த  தமிழ்ப்படத்துக்கான  தேசிய  விருதைப்பெற்றது.2010ல் வந்த  அங்காடித்தெரு  கமர்ஷியலாகவும், விமர்சன  ரீதியாகவும்  வெற்றி, அஞ்சலி அறிமுகம்.,2011ல் வந்த  அரவாண்  பிரமிப்பைத்தந்த  படம், ஆனால்  பிரமாதமான  வெற்றி பெறவில்லை . 2014ல் வந்த  காவியத்தலைவன்  தோல்வி ( ஏற்கனவே  விஜயகாந்த்-பானுப்பிரியா  ந்டிப்பில்  வந்த காவியத்தலைவன்  அட்டர்  ஃபிளாப் ஆகியும்  மீண்டும்  ஏன்  அதே  டைட்டில்?).2021ல்  வந்த  ஜெயில்  ஓக்கே  ரகம் 


கிட்டத்தட்ட  20 ஆண்டு  கால  திரை  வாழ்கையில்  இவர்  இயக்கியது  ஏழு  படங்கள்  மட்டுமே. கமர்ஷியலாக  சில  வெற்றி  பெறாமல்  போனாலும்  அடித்தட்டு  மக்களின்  வேதனையை  ஒவ்வொரு  கதையிலும்  பிரமாதமாகப்பதிவு  செய்வதில்  வல்லவர்/ ஜெயித்தவனின்  கதையைப்பற்றியே  பேசுபவர்   மத்தியில்  தோற்றவனின் கதையைப்பதிவு  செய்வதில்  ஆர்வம்  உள்ளவர் 



   ஸ்பாய்லர்  அலெர்ட்


சம்பவம் 1 – நாயகன்  சின்ன வயசுல ஸ்கூல் போகும்போது  அப்பாவிடம்  டெய்ரி மில்க்  சாக்லெட்  கேட்கிறான், அதன்  விலை ரூ 50. அப்பா  மளிகைக்கடையில் சேல்ஸ்மேன். சம்பளமே 500 ரூபாய்தான். அதனால் அப்போது  வாங்கித்தர  முடியவில்லை. மகனின்  பிறந்த நாள் அன்று கடை  ஓனரிடம்  உரிமையாக ஒரு  சாக்லெட்  எடுத்துக்கறேன், சம்பளத்துல  கழிச்சுக்குங்க  என்க  முதலாளி  செம  கடுப்பாகி  வாக்குவாதம்  செய்ய, அப்பாவும், ஓனரும்  தள்ளுமுள்ளுவில்  ஈடுபட்டபோது  ஓனருக்கு  தலையில்  கண்ணாடி  இடித்துக்காயம். ஓனர்  செம  காண்டாகி போலீசில் புகார்  கொடுக்க  போலீஸ் அப்பாவை  லாக்கப்பில்  தள்ளி  செம  அடி  போட்டு  வீட்டுக்கு  அனுப்புகிறார்கள். அன்று  இரவே  அப்பா  மரணம். இதனால்  நாயகன்  ஆன  மகன்  மனநிலை  பாதிக்கப்படுகிறான். சாக்லெட்  என்றாலே  கசப்புதான். யாரைப்பார்த்தாலும்  கொல்ல  வேண்டும் என்ற  மனநோய் வந்து  சிகிச்சையில்  இருக்கிறான்

 

சம்பவம் 2 -  நாயகன்  இப்போது  வளர்ந்து  விட்டான். ஜொமோட்டோ, ஸ்விக்கி  மாதிரி  கம்பெனியில்  ஃபுட்  டெலிவரி  பாய்  ஆக  பணி  செய்கிறான். லிஃப்ட்  வேலை  செய்யாத 13  மாடி  கட்டிடத்தில்  13வது  மாடியில்  ஒரு  ஆர்டர், மூச்சு  வாங்க  நடந்து  மெலே  போனால்  பார்ட்டி  2000  ரூபாய்  நோட்டுக்கொடுத்து  சில்லறை  இல்லை  என  கடுப்பேற்றுகிறார். இன்னொரு  கஸ்டமர்  சரக்கு  மப்பில் எக்ஸ்ட்ராவாக  ஏதோ பொருள்  வாங்கி  வந்தால் தான்  இதற்கான  பணமும்  தர  முடியும்  என  தகறாரு  செய்கிறான். இதனால்  செம  காண்ட்  ஆன  நாயகன்  அவர்கள்  இருவரையும்  போட்டுத்தள்ளுப்வதாக  மனதுக்குள்  நினைக்கிறான், ஆனால்  கொல்லவில்லை

 

சம்பவம் 3 – நாயகன்  ஒரு  வீட்டில்  நண்பர்கள்  இருவருடன்  தங்கி  இருக்கிறான். நாயகனின்  மனநல  பாதிப்பு  அறிந்து  அவர்கள்  அவனுடன்  இரவில்  தங்க  பயப்பட்டு  வாசலில்  படுத்துக்கொள்கிறார்கள் . ஒருவன்  நாயகனை  நீ  காலி  செய்து  வேறு  இடம்  பார்த்துக்கொள்  என்க  நாயகன்  தனிமையில்  இருந்தால்  நான்  தற்கொலை  செய்து  கொள்வேன் அதனால்  அட்ஜஸ்  பண்ணிக்குக்குங்க  என்கிறான்

 

சம்பவம் 4  -இப்படி  வறட்சியாகப்போகும்  நாயகன்  வாழ்வில்   ஒளி  வீசும்  விதமாய்  தென்றலாய்  நாயகி  வருகிறார். ஃபுட்  டெலிவரி  செய்யும் ஒரு  பங்களாவில்  நாயகியை  சந்திக்கிறார். அங்கே  நாயகி ஒரு  பணிப்பெண். சில  பல  தொடர்  சந்திப்புகளுக்குப்பின்  இருவருக்கும்  காதல்  மலர்கிறது

 

சம்பவம் 5 – நாயகி  வீட்டில்  அம்மா, அப்பா, தங்கை, தம்பி  நால்வரும்  தண்டச்சோறுகள் தான், நாயகி  மட்டும்  தான் உழைக்கும்  ஒரே ஆள். ப்ணக்கார  வீட்டில்  ஒரு  பாட்டி  இருக்கிறார். அவரை  பார்த்துக்கொள்ளும்  பணி  நாயகிக்கு. பாட்டியின்  மகனும், மகளும்  ஃபாரீனில்  இருக்கிறார்கள் . இங்கே  அதிகம்  வருவதில்லை . ஃபோனில்  மட்டுமே  பேச்சுக்கள்  எல்லாம். அவர்களிடம்  அன்பு , பாசம்  கிடைக்காத  விரக்தியில்  பாட்டி  பணிப்பெண்ணான  நாயகியை  கொத்தடிமை  போல்  நடத்துகிறார். இதை  நேரில்  ஒரு  முறை  கண்ட  நாயகன்  செம  காண்ட்  ஆகி  பாட்டியை  போட்டுத்தள்ளிடனும்  போல  இருக்கு  என  நாயகியிடம்  சொல்கிறான்

 

சம்பவம் 6 – ஒரு  நாள்  பாட்டி  திடீர்  என  இறக்கிறார். பாட்டியின்  டெபிட்  கார்டை நாயகியின்  தம்பி  களவாடி  அதன்  மூலம்  2  லட்சம்  பணம்  ஆட்டையைப்போட்டு  விடுகிறான். பாட்டியின்  டெட் பாடியை  தனியார்  மார்ச்வரியில்  நாயகி  வைத்து  விடுகிறார்

 

சம்பவம் 7 -  ஃபாரீனில்  இருந்து  பாட்டியின்  மகன், மகள்  வருகிறார்கள் . போலீஸ் கேஸ்  ஃபைல்  ஆகிறது. நாயகியும், நாயகனும்  சேர்ந்துதான்  பாட்டியைக்கொலை  செய்திருக்க  வேண்டும்  என  போலீஸ்  சந்தேகிக்கிறது. விசாரணை  நடக்கிறத் . ஒரு  கட்டத்தில்  நாயகியே  நாயகனைப்பார்த்து  ஏன்  பாட்டியைக்கொலை  செய்தே? என  போலீஸ்  முன்னிலையில்  கேட்டு  விடுகிறாள்

 

இதற்குப்பின்  நிகழும்  பரபரப்பான  சம்பவங்களே  திரைக்கதை


நாயகன்  ஆக  அர்ஜூன்  தாஸ்   கச்சிதமாக  நடித்திருக்கிறார். சைக்கோவா? நல்லவனா? என அவருக்கே  புரிபடாமல்  நடக்கும்  கேரக்டர். பக்குவமான  நடிப்பு .


நாயகி  ஆக துஷாரா  விஜயன். காதல்  காட்சிகளில்  கெமிஸ்ட்ரி  ஒர்க்  அவுட்  ஆகிறது . நடிப்பிலும்  குட் . கண்ணியமான  உடை  அணியும்  நடிகைகளே  குறைவு  என இருக்கும்போது  இவர்  ஒரு  கண்ணியக்கன்னி  ஆக  மனம்  கவர்கிறார்


ஃபிளாஸ்பேக்  காட்சியில்  அப்பாவாக  வரும்  காளி  வெங்கட்  அற்புதமான  குணச்சித்திர  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்


திமிர்  பிடித்த  ஃபாரீன்  ரிட்டர்ன்  டாட்டர்  ஆக  வனிதா  விஜய்குமார்  வாழ்ந்திருக்கிறார். இவரைப்பார்த்தாலே  காண்ட்  ஆகும்  அளவில்  தான்  கேரக்டர்  டிசைன்  வடிவமைக்கப்பட்டிருக்கிறது


ஜி வி  பிரகாஷ்  இசையில்  நான்கு  பாடல்கள்  ஓக்கே  ரகம் , பிஜிஎம்   குட் . எட்வின்  ஒளிப்பதிவில்  நாயகியின்  தேவதைத்தன  வெளிப்பாடு  காட்சிகள்  அருமை 


எம்  ரவிக்குமாரின்  எடிட்டிங்கில்  பட,ம்  ரெண்டே  கால  மணி  நேரம்  ஓடுகிறது 

 சபாஷ்  டைரக்டர் ( வசந்தபாலன்  )

1  நாயகி  ஓப்பனிங்  ஷாட்டில்  ஒரு  தேவதை  மாதிரி  காட்டியதும் , ம்ருதாணி  வைத்த  உள்ளங்கைகளை  மட்டுமே  பல  முறை  பார்த்த  நாயகன்  முதல்  முறையாக  நாயகி  முகத்தைப்பார்க்கும்  காட்சியும்  கவிதை


2   ஃபிளாஸ்பேக்  சீனில்  காளி  வெங்கட்  நடிப்பு  பிரமாதம்


3 பொது  மக்கள்  மத்தியில்  ஏற்கனவே  வெறுப்பை  சம்பாதித்த  வனிதா  விஜயகுமாரை  வில்லித்தனமாகக்காட்டிய  புத்திசாலித்தனம்


  ரசித்த  வசனங்கள் ( எஸ்.கே.ஜீவா)

1  முதல்  மழைல  நனையக்கூடாதுனு சொல்வாங்க 

 எனக்கு  மழையில்  நனையப்பிடிக்கும்.. ஹச்  ஹச் 


 ஓ, பிடிச்சிடுச்சு  போல 


2  சங்கம்  முக்கியமா? சாப்பாடு  முக்கியமா?

 சங்கத்துல  சாப்பாடு  போட்டா  சங்கம்  தான்  முக்கியம்


4  நான்  முதலாளி  இல்லை , வேலைக்காரிதான்னு  எப்படி  முன்னமே  தெரியும்?


‘மழைக்கு ஒதுங்கி நில்லுங்கன்னு சொல்ற குரலும் தலை துவட்ட துண்டு கொடுக்கற கையும் நிச்சயம் பணக்காரங்களோடதா இருக்காது’, 


இங்க எல்லாமே பிரைவேட் ஆயிடுச்சு, போற போக்க பாத்தா இந்தியான்னு எழுதி கீழ பிரைவேட் லிமிடெட்னு போட்ருவாங்க போல’


6  ஒண்ணுமே  இல்லாத  ஏழை  வீட்டில்  தேவதை  பிறந்தா  வாழ்க்கைல  ரொம்ப  கஷ்டப்படுவாங்க


7 பணக்காரர்கள்  அகராதில  வேலைக்காரர்கள்  என்றாலே  திருடர்கள்  என்றுதான்  அர்த்தம் 

8  அன்பையும், பாசத்தையும்  கேட்டு  வாங்கும்  நிலைமை  எந்தத்தாய்க்கும்  வரக்கூடாது

9 உழைக்கறவங்களை  நம்பாத  எந்த  நிறுவனமும்  உருப்பட்டதா  சரித்திரமே  இல்லை 

10  கை  கூப்பி  மன்னிப்பு  கேட்கும்  கரங்களை  மன்னிக்காதவன்  மனுசனே  இல்லை , மிருகம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஒரு  எமர்ஜென்சி, பாட்டியின்  ஃபோனில்  காண்டாக்ட் நெம்பர்ஸ்  பார்க்கனும், ஆனா  லாக்  பண்ணி  இருக்கு . இந்த  சிச்சுவேஷனை  ஈசியா  ஹேண்டில்  பண்ணலாம். சிஸ்டம் ஸ்பெஷலிஸ்ட்  கிட்டே  அல்லது  ஃபோன்  சர்வீஸ்  செண்ட்டர்ல  கொடுத்தா  அவங்க  லாக்  ரிலீஸ்  பண்ணித்தருவாங்க 


2 பாட்டியோட  டெபிட்  கார்டை  நாயகி  ஏன்  தன்  வீட்டுக்குக்கொண்டு வர  வேண்டும் ?  தன்  தம்பி  அதை  எடுத்து  2  லட்சம்  பணம்  எடுத்துட்டான்  என  சொல்ல  வேண்டும் ? பாட்டி  வீட்டிலேயே  அதை  வைத்திருக்கலாமே?


3  தற்கொலைக்கடிதம்  எழுதுபவர்கள்  அந்த  பேப்பர்  மேல்  வெயிட்  வைப்பார்கள் ., அல்லது  டைரியில்  எழுதிய  பக்கத்தை  திறந்து  வைத்து  அதில்  வெயிட்  வைப்பார்கள் . இப்படி  ஃபேன்  காற்றில்  பறக்கற  மாதிரியா  அசால்ட்டாக  வைப்பார்கள் ?

4  ஒரு  கம்பெனியின்  ஓனர்  அவருக்கு  என  தனி  பாத்ரூம் / டாய்லட்  வைத்திருக்க  மாட்டாரா? தொழிலாளர்கள்  உபயோகிக்கும்  டாய்லட்டுக்கா  வருவார்?

5  நாயகியைக்கொத்தடிமை  போல்  நடத்தும்  பாட்டி  தன்  சொத்துக்களை  அவர்  பெயரில்  எழுதி  வைப்பது  நம்பும்படி  இல்லை . பாட்டிக்கு  தன்  மகன்  , மகள்  மேல்  கோபம்  எனில்  அனாதை  இல்லத்துக்கு  எழுதி  வைக்கலாமே?


6  கையில்  ஆயுதத்துட ந்  கொலை  வெறி  உடன்  இருக்கும்  ஆளைப்பார்த்து  பயந்து  ஓடுவார்களா? என்னை  என்னடா  பண்ணிடுவே? என  எதிர்த்துப்பேசுவார்களா? அதுவும்  ஒரு  பெண்?


7  வெத்து  பாண்டு  பேப்பரில்  கையெழுத்து  வாங்காமல்  நாயகியிடம்  உன்  பேரில்  இருக்கும்  வீட்டை  என்  பேருக்கு  மாற்றனும்  என  மடத்தனமாக  மாட்டி  உளறிக்கொட்டுவாங்களா?


8   திரைக்கதையை  நேரடியாக  சொல்லி  இருந்தால்  ஆரம்பத்தில்  இருந்தே  நாயகன்  மீது  பரிதாபம்  வந்திருக்கும், சஸ்பென்ஸ்  வைக்கிறேன்  என  நான்  லீனியர்  கட்டில்  சொன்ன  விதம்  குழப்பம் 


9  வசந்த  பாலன்  வழக்கமான  பாணியான  மென்  காதல்  மாறி  வன்முறையைக்கையில்  எடுத்திருப்பது  பின்னடைவு 


10   ஏற்கனவே  காவல்துறையில்  கொடுமைகள் , லாக்கப்  வன்முறைகளை  விசாரணை , ஜெய் பீம்  உட்பட  பல  படங்களில்  பார்த்து  விட்டதால்  போலீஸ்  செய்யும்  ஃப்ரேமிங்  காட்சிகள்  சலிப்பு 

  

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  அடல்ட்  கண்ட்டெண்ட்  இல்லை , ஆனால்  வன்முறைக்காட்சிகள்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - இயக்குநர்  வசந்த பாலன்  ரசிகர்கள்  அங்காடித்தெரு , வெயில்  படங்களை  சிலாகிப்பவர்கள்  பார்க்கலாம். ரேட்டிங்  2.75 / 5 


Aneethi
Theatrical release poster
Directed byVasanthabalan
Written byVasanthabalan
Produced by
  • M. Krishna Kumar
  • Murugan Gnanavel
  • Varadharajan Manickam
  • Vasanthabalan
Starring
CinematographyA. M. Edwin Sakay
Edited byRavikumar. M
Music byG. V. Prakash Kumar
Production
company
Urban Boyz Studios
Distributed byS Pictures
Release date
  • 21 July 2023
CountryIndia
LanguageTamil

Friday, September 15, 2023

EMOJI (2022) - எமோஜி - தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் -ரொமாண்டிக் டிராமா @ ஆஹா தமிழ்

    இது  குடும்பத்துடன்  பார்க்கத்தகுந்த  படம்  அல்ல. ஒருவனுக்கு  ஒருத்தி  என்ற  கான்செப்டில்  நம்பிக்கை  உள்ள 1980s  கிட்ஸ்  தவிர்க்கவும்


   ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனுக்கு  அம்மா, அப்பா  என  குடும்பம்  இருந்தாலும்  நண்பர்களுடன் ஒரு  வீட்டில்  வசிப்பவர் , ஐ டி  யில்  வேலை,  கை  நிறைய  சம்பளம். ஒரு  ஸ்போர்ட்ஸ்  கடையில்  சேல்ஸ்  கேர்ள்  ஆக  நாயகியை  சந்திக்கிறார்.  சிகப்பு  ரோஜாக்கள்  படத்தில்  ஜவுளிக்கடை  சேல்ஸ்  கேர்ள்  ஆக இருக்கும்  ஸ்ரீ தேவியைப்பார்க்கவே  கமல்  அடிக்கடி  டிரஸ்  வாங்கப்போவது  போல  நாயகன்  அடிக்கடி  ஏதாவது  ஸ்போர்ட்ஸ்  கிட்  வாங்க  அங்கே  போகிறார் . நாயகியுடன்  பழக்கம்  ஆகிறது


நாயகி சின்ன  வயதிலேயே  அனாதையாக  இருந்து  அனாதை  இல்லத்தில் இருந்து  தத்து  கொடுக்கப்பட்டு  வளர்க்கப்படுபவர் . அதனால்  அம்மா , அப்பா  பார்த்த  மாப்பிள்ளையைத்தான்  கட்டுவேன் , ஆனால்  என்  விருப்பத்துக்கு  உன்னுடன்  காதல் , கூடல்  மட்டும்  என  ஆரம்பத்திலேயே  நாயகி  கண்டிஷன்  போட்டு  விடுகிறார்


நாயகன்  வீட்டுக்கு  எதிர்  வீட்டில்  இன்னொரு  காதல்  தம்பதி  இதே போல  லிவ்விங்  ரிலேஷன்  ஷிப்பில்  வாழ்கிறார்கள் . அந்த  ஜோடி  பிரிகிறது . அதே  போல்  நாயகிக்கு  பெற்றோரால்  நிச்சயிக்கப்பட்ட  திருமணம்  நடந்ததும்  நாயகனைப்பிரிகிறார்.


 இப்போது  நாயக்ன்  எதிர்  வீட்டில்  குடி  இருக்கும்  பெண்ணைக்காதலிக்கிறார்.  இருவருக்கும்  திருமணம்  ஆகிறது . இதற்குப்பின்  நிகழும்  திருப்பங்கள்  தான்  மீதிக்கதை


மொத்தம்  7  எபிசோடுகள் . ஒவ்வொன்றும்  30  டூ 35  நிமிடங்கள் . ஆக  மொத்தம்  220  நிமிடங்கள் . முதல்  மூன்று  எபிசோடுகள்  காமெடி , கலகலப்பு,  கிளாமர்  காட்சிகள்  என  நகர்கிறது .  பிறகு  எமோஷனல்  சீன்கள்   பின்  பாதியை  ஆக்ரமிக்கிறது 


நாயகன்  ஆக  மஹத். இவர்  நிஜ்  வாழ்வில்  சிம்புவின்  நண்பராம்.நடிப்பு  ஓக்கே  ரகம்,  அவரது  கேரக்டர்  டிசைன்  இவரு  இவ்ளோ  அப்பாவியா  என விய்க்க  வைக்கும்  அள்வு  இருக்கிற்து . சிம்பு  ந்டிப்பு  சாயல்  ஆங்காங்கே  தெரிகிறது 


நாயகிகள்  ஆக்   மானசா , தேவிகா  இருவ்ரும்  ந்டித்திருக்கிறார்கள் . கிளாமர்  ஆக  உடை அணிவதில் , நெருக்கமான்  காட்சிகளில் நடிப்பதில்  தாராளம்  காட்டி  இருக்கிறார்க்ள் 


மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லை  என்றாலும்  இளைஞர்களைக்கவர  அடல்ட் கண்டெண்ட்  காட்சிகள்  திணிக்கப்பட்டிருக்கின்றன 


பின்னணி  இசை  குட் . தீம்  மியூசிக்  நன்றாக  இருக்கிறது 



சபாஷ்  டைரக்டர்

1  தென்னிந்திய  இளைஞர்களைக்கவர  ஒரு  நாயகியை  கொழுக்  மொழுக்  ஆகவும், வட  இந்திய  இளைஞர்களைக்கவர  ஸ்லிம்  ஃபிட்  ஆக  ஒரு  நாயகியையும்  தேர்ந்தெடுத்த  புத்திசாலித்தனம் 


2    ஆடியன்ஸ்  அபளாஸ்  கொடுக்க  வேண்டும்  என்பதற்காக  இப்போதெல்லாம்  சில  படங்களில் மெடிக்கல்  ஷாப்பில்  நாயகி  காண்டம்  வாங்குவது  போல்  காட்சிகளை  வைக்கிறார்கள் . இதிலும்  டிட்டோ 


3  நாயகனின்  எதிர்  வீட்டுப்பெண்ணின்  பெற்றோர்  திடீர்  என  வந்து  விட  அதைத்தொடர்ந்து  நடக்கும்  காமெடி  களேபரங்கள்  ரசிக்க  வைக்கும்  அளவு  இருக்கிறது 


4  நேரடியாக  கதை  சொன்னால்  ஒரு  மணி  நேரத்தில்  முடிக்க  வேண்டிய  படத்தை  நான்  லீனியர்  கட்  மூலம்  இழுத்த  விதம் 


 ஹிட்  சாங்க்ஸ்


1  என்னமோ  எனக்கொண்ணும்  புரியலையே? 


  ரசித்த  வசனங்கள் 


1    வீட்டுக்குத்தெரியாம  கல்யாணம்தான்  செய்வாங்க , இப்போ  டைவர்சும்  பண்ண  ஆரம்பிச்சுட்டாங்க 


2  சம்சாரம்  ஊர்ல  இல்லைன்னா  எப்பவும்  அவ  நினைப்பாவே  இருக்கும்


3  இந்த  மாதிரி  சர்வீஸ்  செக்டார்ஸ் ல  அழகான  பொண்ணுங்களை  எதுக்கு  வேலைக்கு  வைக்கறாங்க ? சேல்ஸ்  இன்க்ரீஸ்  ஆகத்தான். வர்றவங்க  சும்மா  பார்த்துட்டு  மட்டும்  போக  முடியாதில்ல? ஏதாவது  வாங்கி  ஆகனும்


4   உண்மையைச்சொல்லனும்னா  மனுசனுக்கு  செக்சுவல்  அட்ராக்சன் தான்  ஃபர்ஸ்ட், லவ்  அட்ராக்சன்  எல்லாம்  அதுக்குப்பின்  தான் 


5   வீடு  வரைக்கும்  வந்துட்டோம்,ஆனா  வீட்டுக்குக்கூப்பிடலைனுதானே  யோசிக்கறே? சாரி , ஹவுஸ்  ஓனர்  ரொம்ப  ஸ்ட்ரிக்ட் , நோ  பாய்  ஃபிரண்ட்ஸ்


 ஓ, ஆனா  எங்க  ஹவுஸ்  ஓனர்  ஜாலி  டைப், சும்மா  தகவலுக்காகச்சொன்னேன்


6  கழட்டி  விடறதுல தான்  பெரிய  ஆளுனு  பார்த்தா  கட்டி  விடறதுலயுமா?

7  நாங்க  லிவ்விங் ரிலேஷன்ஷிப் ல  இருக்கறது  எங்க  அம்மா, அப்பா  க்குத்தெரியாது


 என்னது ? நீங்க லிவ்விங்  ரிலேஷன்ஷிப்ல  இருக்கீங்களா? பக்கத்து  வீடு  எங்களுக்கே  இது  தெரியாது


8 பல்லால  கடிச்சே  பீர்  பாட்டில்  ஓப்பன்  பண்ணிட்டாரே? வாய்லயே  ஓப்பனர்  வெச்சிருக்காரு


9 பிரேக்கப்  பண்ணுனது  கூட  பெருசா  வலிக்கலை, ஆனா  அதை அவன்  ஜஸ்ட்  லைக் தட்னு  எடுத்துக்கிட்டதுதான்....


10  எனக்கு  ரெண்டு  நாள்  எமர்ஜென்சி  லீவ்  வேனும்


 என்ன  விஷயம் ?


 ரிட்டர்ன் ஆஃப்  லேடி டிராகன்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஒரே  அறையில் பல  நாட்களாக  லிவ்விங்  ரிலேஷன்ஷிப்பில் வாழும்  தம்பதியில் ஆண்  தன்  மாமனார்- மாமியார்  அறிமுகமே இல்லாமல்  இருப்பது  எப்படி?

2   தன்  ஜோடி  ஒரு  சுயநலம்  மிக்கவன், தன்  பணம்  மீது  தான்  குறி  என்பது  நாயகிக்கு  ரொம்ப  லேட்டாகத்தான்  தெரிவது  ஏன்? 

3  செயற்கையான  க்ளைமாக்ஸ்  காட்சி . ஃபாரீனில்  வேலை  வாய்ப்பு  என்பதால்  ஐந்து  வருடங்கள்  பிரிந்து  இருக்க  வேண்


டும்  என்பதற்காக  யாராவது  இப்படி  ஒரு  முடிவு  எடுப்பார்களா? 

4  ஸ்போர்ட்ஸ்  கடையில்  சேல்ஸ்  கேர்ள்  ஆக  இருக்கும்  நாயகி  பார்ட்  டைம்  ஜாப்  ஆக ஸ்விம்மிங்  கோச்  ஆக  பணி  புரிவதாகக்காட்டுவது  ஓவர். நாயகியைக்கிளாமராக  காட்ட  இது  ஒரு  சாக்கு 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - காட்சி  ரீதியாக , வசனங்கள்  மூலமாக  18+  அடல்ட்  கண்டெண்ட்  முதல்  3  பிசோடுகளில்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  காதலர்கள் ,   ஜாலியாகப்பார்க்கலாம். அந்தக்காலத்து  ஆட்கள்  ஒன்  ஸ்டெப்  பெக், செம  காண்டாகி  விடுவார்கள் . ரேட்டிங் 2/ 5 

Thursday, September 14, 2023

ஜெயிலர் 2023) - தமிழ் - சினிமா விமர்சனம் - ஆக்சன் மசாலா @ அமேசான் பிரைம்


2018ல்  நயன்  தாரா  நாயகியாக  நடிக்க நெல்சன் திலீப் குமார் இயக்கிய கோல  மாவு  கோகிலா  சூப்பர் ஹிட். 2021ல் சிவகார்த்திகேயன்  நடித்து  வெளி  வந்த  டாக்டர்  படமும்  ஹிட். ஆனால்  ஹாட்ரிக்  ஹிட்டை  எதிர்  நோக்கி  விஜய் நடிப்பில்  2022 ல் வெளி  வ்ந்த  பீஸ்ட்  அட்டர்  ஃபிளாப். அதனால்  ஒரு  வெற்றியைத்தர  வேண்டிய  கட்டாயத்தில்  இயக்குநர்  நெல்சன்  இருந்தார். 2010ல்  சிம்பு வின்  நடிப்பில் வேட்டை  மன்னன்  இவர்  இயக்கத்தில்  வெளியாக  இருந்து  பிராஜக்ட்  தள்ளிப்போனது 


காலா, தர்பார், அண்ணாத்த  என்று  தொடர்  தோல்விகளால்  ரஜினி  ஒரு  மெகா ஹிட்  கொடுக்க  வேண்டிய  நெருக்கடியில்  இருந்தார்.. அது  போக  கமல்  நடிப்பில்  வெளியாகி  இண்டஸ்ட்ரி  ஹிட்  அடித்த  விக்ரம்  படத்தின்  வசூலை  பிரேக்  பண்ண  வேண்டிய  டார்கெட்டும்  சூப்பர்  ஸ்டாருக்கு  மறைமுகமாக  இருந்தது

      ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  ரிட்டயர் ஆன  ஜெயிலர். அவரது  மகன்  அசிஸ்டெண்ட்  கமிஷனர்  ஆக  பணி  புரிகிறார். அவர்  இப்போது  சிலை  கடத்தல்  வழக்குகளில்  சிக்கி  இருக்கும்  வில்லனைப்பிடிக்க  தீவிர  முயற்சியில்  இருக்கிறார். இந்த  மாதிரி  சூழ்நிலையில்  நாயகனின்  மகன்  கடத்தப்படுகிறார், அல்லது  காணாமல்   போகிறார். ஆளே  அவுட்  என  பலரும்  பேசிக்கொள்கிறார்கள் . இதனால்  நாயகன்  களத்தில்  இறங்குகிறார்


அவர்  வரிசையாக  வில்லனின்  ஆட்களைப்போட்டுத்தள்ளிக்கொண்டிருக்கும்போது  வில்லனிடம்  இருந்து  ஒரு  ஆஃபர்  வருகிற்து. நாயகனின்  மகன்  உயிருடன் தான்  இருக்கிறான். அவனை  பத்திரமாக  ஒப்படைக்க  வில்லன்  கேட்கும்  அபூர்வமான  பொருள்  ஒன்றை  வில்லனிடம்  ஒப்படைக்க  வேண்டும். அதன்படி  நாயகன்  அந்த  அபூர்வப்பொருளை  ஒப்படைத்து  மகனை  மீட்டாரா? வில்லனை  வீழ்த்தினாரா? என்பது  மீதி  திரைக்கதை 


கதைக்கரு  ஒரு  சாதாரண  , வழக்கமான  மாஸ்  மசாலாப்படங்களில்  வருவது  தான். ஒவ்வொரு  மாநிலத்துக்கும்  ஒரு  ஹீரோவை  தேர்ந்தெடுத்து  இதை  பேன்  இந்தியா  படமாக்கி  ப்ரமோஷனில்  கலக்கி   எப்படியோ  ஜெயித்து  விட்டார்கள்  என்று  தான்  சொல்ல  வேண்டும் 

நாயகன்  ஆக  ரஜினி ஸ்டைலாக  நடித்திருக்கிறார். வயோதிகம்  காரணமாக  லாங்  ஷாட்  நடையில்  அவரிடம்  ஒரு  தளர்ச்சி  தெரிகிறது . ஃபிளாஸ்பேக்  காட்சியில்  ஜெயிலர்  ஆக  கலக்கி  இருந்தாலும்  அது  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லை . ரஜினி  ரசிகர்களுக்காக  உருவாக்கப்பட்ட  காட்சி  அது .க்ளைமாக்ஸ்  காட்சியில்  சுருட்டு  பிடிப்ப்து  போல்  நடித்தது  ஏனோ?  பாபா  பட பிரச்சனை  வந்த போது  இனி  புகை  பிடிக்கும்  காட்சிகளில்  நடிக்க  மாட்டேன்  என்றார்.


நாயகனுக்கு  ஜோடியாக  ரம்யா  கிருஷ்ணன். பயந்து  பயந்து  பதுங்கும்  கேரக்டர். படையப்பா  லெவலில்  ஏதாவது  சீன்  இருக்கும்  என்று  எதிர்பார்த்தவர்களுக்கு  ஏமாற்றம் 


யோகி  பாபு முதல்  பாதியில்  லைட்டாக  காமெடி  செய்ய  முயற்சி  செய்து  இருக்கிறார்.  விடிவி  கணேஷ்  யோகிபாபுவை  விட  நன்கு  ஸ்கோர்  செய்கிறார்,


தமனா  ஒரே  ஒரு  பாடல்  காட்சியில்  மட்டும். 


வில்லன்  ஆக  வினாயகன்  கலக்கி  இருக்கிறார், அவரது  தெனாவெட்டான  உடல்  மொழி  அபாரம்.  சிவராஜ் குமார் , மோகன்  லால் , ஜாக்கி  ஷெராப்  எல்லாம்  சும்மா ஓரிரு  காட்சிகளில்  வ்ருகிறார்கள், அவ்வளவ்  தான்


ரஜினியின்  மகன்  ஆக  வசந்த்  ரவி  ஓக்கே  ரகம்  தான், ஆனால்  பிரபலமான  இளம்  ஹீரோ  யாரையாவது  நடிக்க  வைத்திருக்கலாம்


இசை  அனிரூத். பிஜிஎம்  தெறிக்கிறது . 2  பாடல்கள்  ஹிட்  ஆகி  இருக்கின்றன .


தேவையற்ற  வன்முறைக்காட்சிகள்  அதிகம் . விஜய்  கார்த்திக்  கண்ணனின்  ஒளிப்பதிவில்  பாஸ்  மார்க்  வாங்கி  இருக்கிறார், ஆர்  நிர்மலின்   எடிட்டிங்கில்  படம்  இரண்டே  முக்கால்  மணி  நேரம்  ஓடுகிறது


சபாஷ்  டைரக்டர்  ( நெல்சன்)

1   படத்தின்  பிரமோஷனுக்கு  பெரிதும்  உதவும்  விதத்தில்  பிரமாதமாகக்கட்  செய்யப்பட்டு  வெளியான ட்ரெய்லர்  உருவக்கிய  விதம் 

2 பின்  பாதியில்  தமனாவைக்காதலிக்கும்  தெலுங்கு  ஹீரோ , டைரக்டர்   காமெடி  டிராக்  எதிர்பாராத  இன்ப  அதிர்ச்சி 

3  பாட்ஷா  பட  பாணியில்  முதல்  பாதி  திரைக்கதை  ரஜினி  ரசிகர்களை  விசில்  போட  வைக்கும்  காட்சிகள்  அமைத்த  விதம் 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  தலைவரு  நிர்ந்தரம்

2    காவாலா 


  ரசித்த  வசனங்கள் 

1  இப்படியே  உன்  கூட  இருக்கறவங்களைப்போட்டுத்தள்ளிட்டே  இருந்தா  கடைசில  உன்னைக்காப்பாற்ற  யாருமே  இருக்க  மாட்டாங்க 


 என்னைக்காப்பாத்திக்க  நான்  ஒருத்தனே  போதும் 


2   பூனைனு  நினைச்சு  புலி  வாலைப்பிடிப்பாங்க, நீங்க  என்னடா  டைனோசர்  வாலைப்பிடிச்சு  இருக்கீங்க ?


3  பையன்  நேர்மையா  இல்லைன்னு  புகார்  பண்ணா  பரவால்லை , பையன்  நேர்மையா  இருக்கான்  என்பதையே  ஒரு  புகாரா  சொன்னா  எப்படி ?


4  வேலைக்குப்போகும்  வரை  தான்  நமக்கு  மரியாதை , படிக்கும்போதும்  அது  இல்லை , ரிட்டைய்ர்  ஆன  பின்பும்  அது  இல்லை 


5   பாய் ஃபிரண்ட்  மாறிட்டே  இருப்பான், ஆனா  பெஸ்டி  மாறமாட்டான்  இல்லை?


6 நான்  வைக்கறேன்  வெடி , என்னையே  பிடிச்சுக்கடி -ங்கற  கதையா...


7  இன்னாபா, மல்லிகாவைத்தூக்கிட்டு  வருவேனு  பார்த்தா  மளிகைச்சாமான்  தூக்கிட்டு  வந்திருக்கே? 


8 நான்  கோபப்பட்டா  எப்படி  இருப்பேன்னு  பார்க்க  ஆசைப்பட்டான், இப்போ  நான்  கோபமா  இருக்கேன், ஆனா  அதைப்பார்க்க  அவன்  இல்லை , பாவம்


9  இந்த  முகத்தைப்பார்த்தா  பயந்த  முகம்  மாதிரி  தெரியலையெ? எதை  வெச்சு  இவரு  பயந்தார்னு  சொல்றீங்க?


 அவர்தான்  சொன்னாரு

10   பொண்டாட்டி  கிட்டே  பொய்  சொல்லி  சொல்லி  நரகத்துக்குப்போவோம்  போல் 


 அப்போ  மேரேஜே  பண்ணி  இருந்துருக்கக்கூடாது


11  சொன்னதுக்கு  மேலயும்  செய்யக்கூடாது , சொன்னதுக்குக்கீழேயும் செய்யக்கூடாது . எப்படி  வ்ந்தயோ  அப்படியே  போ 


12  இனிமே  நாம  உயிரோட  இருக்கனும்னா  உயிரை  எடுக்கும்  இடத்தில்  நாமதான்  இருக்கனும்


13 நேத்து  நான்  அனுப்பின் ஆட்கள்  யாருமே  உயிரோட இல்லை 


 ஓ, அப்போ  நீ  அனுப்பின ஆட்கள்  எல்லாம்  அவ்ளோ பலவீனமான  ஆட்களா?


 இல்லை , நீ  கொல்லச்சொன்ன  ஆள்  அவ்ளோ  ஸ்ட்ராங்கான  ஆள் 


14   வீ  ஆர்  ஃப்ரம்  சிபிஐ

டொனேஷன்  ஏதாவது  வேணுமா?


15  பிள்ளைங்க  கெட்டவங்க  ஆகிட்டா   பெத்தவங்க  வாழ்க்கை  நரகம்  ஆகிடும்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஒரு  போலீஸ்  ஆஃபீசருக்கு கிரீடத்தில்  கேமரா  மறைத்து  வைக்கப்பட்டிருக்கும்  என்பதை யூகிக்க  முடியாதா? அப்படியா  ஒப்புதல்  வாக்கு  மூலம்  கொடுத்து  மாட்டிக்கொள்வார்

2  நாயகனின்  மருமகளாக  வருபவர்  கணவர்  இறந்ததாக  சொல்லப்பட்ட  பின்  அல்லது  அவர்  காணாமல்  போன பின்  சில  காட்சிகள்  நெற்றியில்  குங்குமம்  இல்லாமல்  வருகிறார். சில  காட்சிகள்  குங்குமத்துடன்  வருகிறார். ஏன் இந்தகுழப்பம் ?

3  நாயகனின்  மருமகள்  சோகக்காட்சியில்  கூட  ஃபுல்  மேக்கப்பில்  இருக்கிறார்

4   அசிஸ்டெண்ட்  கமிஷன்ர்  காணாமல்  போன  பதட்டம்  அவரது  குடும்பத்தில்  அவரது  அப்பாவைத்தவிர  யாருக்கும்  பெரிதாக  இல்லை . போலீஸ்  ஸ்டேஷன் , மீடியா  என  எந்த இடத்திலும்  கவலை  இல்லை 

5  க்ளைமாக்ஸ்  காட்சி  தங்கப்பதக்கம், வால்டர் வெற்றிவேல்  படங்களை  நினைவு படுத்துகிறது.அந்த  ட்விஸ்ட்  பெரிதாக  ஈர்க்கவில்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+  காட்சிகள்  இல்லை , ஆனால்  வன்முறைக்காட்சிகள்  ஓவரோ ஓவர்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ரஜினி  ரசிகர்கள்  கொண்டாடுவார்கள். பொது  ரசிகர்களுக்கு இது  வழக்கமான  ஒரு  மசாலாப்படமே . அமேசான்  பிரைம்ல  காணக்கிடைக்கிறது . ரேட்டிங் 2.75 / 5 



Jailer
Theatrical release poster
Directed byNelson Dilipkumar
Written byNelson Dilipkumar
Produced byKalanithi Maran
StarringRajinikanth
Vinayakan
Ramya Krishnan
Vasanth Ravi
CinematographyVijay Kartik Kannan
Edited byR. Nirmal
Music byAnirudh Ravichander
Production
company
Release date
  • 10 August 2023
Running time
168 minutes[1]
CountryIndia
LanguageTamil
Budgetest.200–240 crores[2][3]
Box officeest.600–635 crore[a]