Sunday, September 10, 2023

சில நேரங்களில் சில மனிதர்கள் (2022) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஹைப்பர் லிங்க் டிராமா) @ ஆஹா தமிழ்

 


 1980 களில்  நான்  படித்த  ராஜேஷ்  குமார்  நாவல்கள்தான்  அந்தக்காலத்து  ஹைப்பர்  லிங்க்  ஸ்டோரிஸ்.  மூன்று  அல்லது  நான்கு  வெவ்வேறு  ட்ராக்குகளில்  கதை  நகரும், ஒவ்வொரு  அத்தியாயமும்  சஸ்பென்சுடன்  முடிக்கப்படும்  , அடுத்த  அத்தியாயம்  வேறு  கதையாக  இருக்கும். பிறகு  நான்கு  வெவ்வேறு  ட்ராக்  கதைகள்  ஒரு  மையப்புள்ளியில்  இணையும். ஒரே  நேர்  கோட்டில்  பயணிக்கும்  க்தையை  விட  இந்த  மாதிரி  ஹைப்பர்  லிங்க்  ஸ்டோரி  எழுதுவதும்  சிரமம், அதை  நாம்  புரிந்து  கொள்வதும்  சிரமம்

ஜெயகாந்தன்  எழுதிய  நாவல்  ஆன சில நேரங்களில்  சில  மனிதர்கள்  கதைக்கும்  இந்தக்கதைக்கும்  சம்பந்தம்  இல்லை . 1977ல்  அதே  பெயரில்  படமாகவும்  அது  வெளி  வந்து  வெற்றி  பெற்றது. இந்தக்கதையின்  டைட்டில்  ஆக  குற்ற  உணர்ச்சி  என்பதே  மிகப்பொருத்தமாக  இருக்கும்

   ஸ்பாய்லர்  அலெர்ட்


ஒரு  சாலை  விபத்து  நான்கு  வெவ்வேறு  இளைஞர்கள்  வாழ்க்கையில்  என்ன  என்ன  மாற்றங்களை  ஏற்படுத்துகிறது  என்பதுதான்  கதையின்  ஒன்லைன் 


 நாயகன் ஒரு  மொபைல்  கம்பெனியில்  சேல்ஸ் மேனாக  இருக்கிறான். அங்கே  பணி புரியும்  ஒரு  பெண்ணுடன்  காதல். பெற்றோர்  சம்மதத்துடன்  திருமணம்  நிச்சயிக்கப்பட்டு  இருக்கிறது . திருமணப்பத்திரிக்கை  வைக்க  அப்பா  அழைக்கும்போது  நாயகன்  மறுக்கிறான். அடுத்த  வாரம்  அந்த  வேலையைப்பார்த்துக்கொள்ளலாம்  என்கிறான்


 நாயகன்  பேச்சை  மீறி  அப்பா  தனியாக  பத்திரிக்கை  வைக்க  நண்பர்  வீட்டுக்கு  செல்கிறார். நண்பர்  தன் உறவின்ர்  மகனை   பைக்கில்  மெயின்  ரோட்டில்  டிராப்  செய்யுமாறு  சொல்கிறார். அவன்  அவரை  டிராப்  செய்யாமல்  பாதி  வழியில்  இறக்கி விட்டு  நடந்து  போகும்படி  சொல்லி  விடுகிறான்

 இன்னும்  சில  நாட்களில்  ஃபாரீன்  போய்  செட்டில்  ஆக  இருக்கும்  ஒரு  இளம்  தம்பதி  காரில்  அந்த  ரோடு  வழியாக  வரும்போது  பேசிக்கொண்டே  கவனக்குறைவாக  நாயகனின்  அப்பா  மேல்  மோதி  விடுகிறார்கள் .அவர்கள்  நினைத்திருந்தால்  ஹாஸ்பிடல்  கொண்டு  போய்  இருக்க  முடியும் , ஆனால்  போலீஸ்  பயம்  காரணமாக  நிற்காமல்  போய்  விடுகிறார்கள் 


 அந்த  வழியே  காரில்  ஒரு  சினிமா  டைரக்டரின்  மகன்  வருகிறான். ஆள்  அடிபட்டுக்கிடப்பதைப்பார்த்துக்காரை  நிறுத்துகிறான். ஆனால்  சிலர்  அவன்  தான்  விபத்துக்காரணம்  என  நினைத்து  அவனை  அடித்து  விடுகிறார்கள் 


 இதற்குப்பின்  என்ன  நிகழ்ந்தது ? ச்ந்தர்ப்ப  சூழல்  காரணமாக , குற்றம்  செய்த  நான்கு  பேரும்  தங்கள்  குற்ற  உணர்ச்சியில்  இருந்து  எப்படி  விடுபட்டார்கள்  என்பது  மீதிக்கதை 


நாயகன்  ஆக  அசோக்  செல்வன். மனதில்  இருக்கும்  அன்பைக்கூட  கோபமான  வார்த்தைகளால் , சிடுமூஞ்சியாக  இருந்து  வெளிப்படுத்தும்  வித்தியாசமான  கேரக்டர். நன்றாக  நடித்திருக்கிறார். ஆனால்  சில  இடங்களில்  அது  ஓவர்  டோஸ்  ஆகி  ஏன்  இவர்  எப்போப்பாரு  எல்லோரிடமும்  எரிந்து  விழுகிறார்  என  எண்ண  வைக்கிறது 


 அப்பாவாக  நாசர் . தரமான  நடிப்பு . கமல்  தன்  பெரும்பாலான  படங்களில்  இவருக்கு  ஏன்  வாய்ப்பளித்தார்  என்பது  நன்றாகத்தெரிகிறது . அனுபவம்  மிக்க  அற்புத  நடிப்பு 


விபத்தை  ஏற்படுத்தும்  எஞ்சினியர்  ஆக  ப்ரவிண்  ராஜா  ஒரு  ஹீரோவுக்கு  ஏற்ற  முக  பாவம் . ஆரம்பத்தில்  வில்லன்  போல்  நடந்து  கொண்டாலும்  போகப்போக  கச்சிதமாக  நடித்திருக்கிறார்

பைக்கில்  டிராப்  செய்யாமல்  பாதி  வழியில்  இறக்கி  விடும்  இளைஞனாக  மணிகண்டன் , படம்  முழுக்க  குற்ற  உணர்ச்சியால் அவர்  அவதிப்படுவது  நல்ல  நடிப்பு 

அழுகை , செண்ட்டிமெண்ட்  இவைகளில்  நம்பிக்கை  இல்லாத  இளைஞர்  ஆக  அபிஹாசன்  நுனி  நாக்கு  ஆங்கிலத்தில்  பேசி  நன்றாக  நடித்திருக்கிறார். பின்  பாதியில்  இவர்  சம்பந்தப்பட்ட  காட்சிகள்  கொஞ்சம்  இழுவை 


 நாயகனின்  காதலி  ஆக  ரேயா  நல்ல  நடிப்பு , ஆனால்  நாயகனுக்கு  அக்கா  போல்  முக  முதிர்ச்சி  தெரிவ்து  மைனஸ் 


கே  எஸ்  ரவிக்குமார்  ஒரு  டைரக்டர்  ஆகவே  வருகிறார். யதார்த்தமான  நடிப்பு 


விஷால்  வெங்கட்டின்  திரைக்கதை , இயக்கம்  அருமை 

ரதன்  இசையில்  மெலோடி  இசை  கவனம்  கவர்கிறது . பல  இடங்களில்  சோக  ராகம்  தான், பிஜிஎம்  குட் . ஒளிப்பதிவு  மெய்யேந்திரன் . காட்சிகளை  கண்  முன்  நடப்பது  போல  படம்  பிடித்து  இருக்கிறார் 


 ஆர்ட்  டைரக்சன்  பெலிக்ஸ்  ராஜா மனோஜ்  குமார்  யதார்த்தமாக   அரங்கமைத்திருக்கிறார். ஜி  கே  பிரசன்னாவின்  எடிட்டிங்கில் இன்னும்  ட்ரிம்  செய்திருக்கலாம்  என  எண்ண  வைக்கிறது 


சபாஷ்  டைரக்டர் (விஷால்  வெங்கட்)

1  இயக்குநர் விக்ரமன்  பாணியில்  வில்லன்  கேரக்டர்  இல்லாமல்  எல்லோரும்  நல்லோரே  என  திரைக்கதை  அமைத்த  விதம் 


2   பெரும்பாலான   காட்சிகள்  இழவு  வீட்டில்  நடப்பது  போல்  பிரமை  ஏற்பட்டாலும்  சலிப்பு  தட்டாத  காட்சி அமைப்புகள் 


3   சோகமான  காட்சிகள்  அதிகம்  என்றாலும்  அது  செயற்கையாக  இல்லாமல்  அந்த  நிகழ்வில்  நாமும்  பங்கெடுத்து  இருப்பது  போன்ற  உணர்வை  ஏற்படுத்திய  விதம் 


  ரசித்த  வசனங்கள் 

1  நாம  தப்பே  பண்ணாதப்ப , நாம  சொல்றதை  யாரும்  நம்பாதப்ப  நமக்கு  எப்படி  இருக்கும் ?

2  நீ  தப்பு  பண்ணலைனு  உனக்குத்தெரிஞ்சா  போதும், யாருக்கும்  அதை  நிரூபிக்க  வேண்டும்னு  அவசியம்  இல்லை 

3  எல்லாருக்கும்  நல்லவனா  இருக்கறவன்  இந்த  உலகத்தில்  யாரும்  இல்லை  

4  மத்தவங்க  வயிற்றெரிச்சல்பட்டு  நாம  வாழும்  வாழ்க்கை  ஒரு  வாழ்க்கையா?

5  எல்லாத்துக்கும்  தீர்வு  இருக்கு , பதறக்கூடாது , அவ்வளவுதான்

6 ஒரு  தப்பு  பண்ணீட்டு  ரொம்ப  நாள்  மாட்டிக்காம  இருக்க  முடியாது 

7  அநியாயமான  இந்த  உலகத்துல  நியாயமா  நடந்துக்கறதே  அநியாயம்தான்

8  ஒரு  குடும்பத்தில் அப்பா  இல்லைன்னா  என்ன  ஆகும்னு உனக்குத்தெரியாது , எனக்குத்தெரியும்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  அசோக்  செல்வன் - ரேயா  ஜோடி  அடிக்கடி  சண்டை  போட்டு  வாக்குவாதம்  செய்வது , காரில்  வரும்  தம்பதி  சண்டை  போட்டுக்கொள்வது . , ம்ணிகண்டன்    வேன்  டிரைவ்ரிடம்  சண்டை  போடுவது , சினிமா  டைரக்டர்  கேரக்டர்  அடிக்கடி  இங்க்லீஷில்  பேசுவது  இவை  எல்லாம்  ஒரு  கட்டத்தில்  நம்மைக்கடுப்பேற்றுகிறது. ஓவர்  டோஸ்  மாதிரி  தோன்றுகிறது 


2  நாயகன்  நாயகி  கெமிஸ்ட்ரி  ஒர்க்  அவுட்  ஆகவில்லை , அக்கா  தம்பி  போல  இருக்கிறார்கள் 

3  மெயின்  கதைக்கும்  சினிமா  டைரக்டர்  கேரக்டருக்கும்  அதிக  தொடர்பு  இல்லை  என்பதால்  அவர்  காட்சிகள்  அதிக  நீளம்  என்பதை  சுட்டிக்காட்ட  வேண்டி  இருக்கிறது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  வீக்  எண்ட்  ஹாலிடே  வில்  படம்  பார்க்கலாம், ஒர்க்கிங்  டேவில்  ப்டம்  பார்த்தால்  அடுத்த  நாள்    ஹேப்பி  மூடில்  வேலைக்கு  செல்ல  முடியாது .  மனதை  பாதிக்கும்  நல்ல  படம்  ரேட்டிங் 3 / 5 


Sila Nerangalil Sila Manidhargal
Theatrical release poster
Directed byVishal Venkat
Written byVishal Venkat
Produced byAjmal Khan
Reyaa
StarringAshok Selvan
Nassar
K. Manikandan
CinematographyMeyyendiran
Edited byPrasanna GK
Music byRadhan
Production
companies
AR Entertainment
Trident Arts
Release date
  • 28 January 2022
CountryIndia
LanguageTamil

Saturday, September 09, 2023

ரைட்டர் (2021) - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் ட்ராமா ) @ ஆஹா தமிழ் ஓடிடி


  இயக்குநர்  பா  ரஞ்சித்  தயாரிக்கும்  படம்  இது   அதனால்  வழக்கமாக  அவர்  ப்டங்களில்  காணப்படும்  நாயகன்  பிற்படுத்தப்பட்ட  வகுப்பு , வில்லன்  உயர்ந்த  ஜாதி  போன்ற   டெம்ப்ளேட்  காட்சிகள்  உண்டு


ஸ்பாய்லர்  அலெர்ட்.  

சம்பவம் 1 -  சரண்யா  என்னும்   லேடி  போலீஸ்  பிற்படுத்தப்பட்ட  சமூகத்தை  சேர்ந்தவர். அவரது  அப்பா  குதிரை  வண்டி  ஓட்டுநர்  என்பதால்  அவருக்கு  குதிரைப்படையில்  பணியாற்ற  விருப்பம்,  ஹார்ஸ்  ரைடிங்கில்  சிறப்புத்தகுதி  பெற்ற  அவரை  உரிய  பணியில்  அமர்த்தாமல்  உயர்  அதிகாரி  அவர்  சார்ந்த  ஜாதிப்பற்றின்  காரணமாக  சரண்யாவுக்கு கொடுமைகள்  செய்கிறார். இருவருக்கும்  நடந்த  ஒரு  மோதலில்  சரண்யாவைக்கொலை  செய்து  விட்டு  அதை  ஒரு  தற்கொலை  என  கேஸை  க்ளோஸ்  பண்ணி  விடுகிறார்கள் 


 சம்பவம்  2 -   தேவகுமாரன்  என்னும்  இளைஞர்  ஏழ்மையான  குடும்பத்தை  சேர்ந்தவர். காவல்  துறையில்  அடிக்கடி  நிகழும்  தற்கொலைகள் , மரணங்கள்  குறித்து  பிஹெச்டி  படிப்பு  படித்து  வருகிறார். அவர்  படிப்பு  சம்பந்தமான  நிகழ்வில்  சம்பவம்1ல்  குறிபிடப்பட்ட  சரன்யா வின்  மரணமும்  ஒன்று . அந்தக்கேசைத்தோண்டினால்  தான்  மாட்டிக்கொள்வோம்  என  பயந்த  அந்த  உயர்  அதிகாரி   தேவகுமாரனை  பொய்க்கேசில்  பிடித்து  என்கவுண்ட்டரில்  போட்டுத்தள்ள  திட்டம்  இடுகிறார்  


சம்பவம் 3    நாயகன்  போலீஸ்  துறையில்  ஒரு  ரைட்டர்.35  வருடங்கள்  அனுபவம்  மிக்கவர் . போலீஸ்  துறை பணியாளர்களுக்கு  ஒரு  சங்கம்  அமைக்க  வேண்டும் , அவர்களது  உரிமைகளைப்பெற  வேண்டும்  என  [போராடி  வருபவர். இது அவரது  உயர்  அதிகாரிகளுக்குப்பிடிக்கவில்லை . அவரை  வேறு  ஒரு  போலீஸ்  ஸ்டேஷனுக்கு  ட்ரான்ஸ்ஃபர்  செய்கிறார்கள் 


அந்த  ஸ்டேஷனில்  சம்பவம்  1ல்  இடம்  பெற்ற  உயர்  அதிகாரிக்கும் இவருக்கும்  க்ளாஸ்  ஆகிறது. இதற்குப்பின்  ஏற்படும்  பரபரப்பான  சம்பவங்கள்தான்  திரைக்கதை 


 நாயகன்  ஆக  ரைட்டர்  ஆக  சமுத்திரக்கனி. வழக்கமாக  இவரை  அட்வைஸ்  அம்புஜம்  ஆகவே  பார்த்துப்பார்த்து  இது  போன்ற  சினிமாத்தனம்  இல்லாத  இயல்பான  கேரக்டர்  டிசைனில்  பார்க்க  அருமையாக  இருக்கிறது  பிரமாதமான  நடிப்பு .குற்ற  உணர்வில்  அவர்  வருந்தும்  காட்சிகள்  பிரமாதம்


பாதிக்கப்பட்ட  இளைஞ்ர்  ஆக  ஹரி  கிருஷ்ணன் ப்ரிதாபம்  அள்ளிக்கொள்ளும்  கேரக்டர். நல்ல  நடிப்பு 


சம்பவம்1 ல்  வரும்  லேடி  போலீஸ்  ஆக  இனியா. குறைவான நேரமே  வந்தாலும்  நிறைவான  நடிப்பு 

உயர்  அதிகாரியாக  வில்லன்  நடிப்பை  அட்டகாசமாக  வழங்கி  இருக்கிறார் கவின்  ஜெ  பாபு .

பாதிக்கப்பட்ட  இளைஞரின்  அண்ணனாக  சுப்ரமணியம்  சிவா  மண்  மணம்  கமழும்  உருக்கமான  நடிப்பு .  கவிதா  பாரதி  இன்ஸ்பெக்டர்  வேடத்தில்  பொருத்தமாக  தொப்பையுடன்  வருகிறார்

கோவிந்த்  வச்ந்தாவின்  இசையில்  இரண்டு  பாடல்கள்  கேட்கும்படி  உள்ளது . பரபரப்பான  காட்சிகளில்  பிஜிஎம்  அருமை 

மணிகண்டன்  சிவக்குமாரின்  எடிட்டிங்கில்  இரண்டரை  மணி  நேரம்  ஓடும்படி  ட்ரிம்  செய்திருக்கிறார்கள் . இன்னும்  ஷார்ப்  ஆக  கட்  செய்து  இருக்கலாம் 

ப்ரதீப்  காளிராஜாவின்  ஒளிப்பதிவில்  காட்சிகள்  கண்  முன்  நடப்பதைப்போல்  தத்ரூபமாக  இருக்கிறது 


திரைக்கதை  எழுதி இயக்கி  இருப்பவர்  ஃபிராங்க்ளின்  ஜேக்கப் . வித்தியாசமான  பாணியில்  கதை  சொல்லி  இருக்கிறார்  


சபாஷ்  டைரக்டர்  (ஃபிராங்க்ளின்  ஜேக்கப்)

1  போலீஸ்  ஸ்டேஷன்களில்  க்ரைம்  ரேட்  எப்படிகுறைக்கறாங்க? எனும்  ஆரம்பக்கட்டக்காட்சிகள்  அசத்தல்.  6 பவுன்  காணாம  போன  கேஸ்க்கு  3  பவுன்  செயினைக்கொடுத்து  செட்டில்  பண்ணி  புகாரை  வாபஸ்  வாங்க  வைக்கும்  காட்சி  செம 

2   வில்லன்  நாயகன்  கை  மூலமாகவே   அவர்  காப்பாற்ற  நினைக்கும்  அப்பாவியைப்போட்டுத்தள்ள  போடும்  திட்டம்  அருமை 


3   நாயகனின்  உதவியாளராக  கூடவே  வரும்  நபரின்   ஒன்  லைனர்கள்  கலக்கல்  ரகம் ., அசால்ட்  ஆன  டயலாக்  டெலிவரி 


சாங்க்ஸ்


1  கானல்  நீராய் 

2  அடி  அடி  உடம்பு  எட்ட்டி


  ரசித்த  வசனங்கள் 


1  உங்களுக்கு  சர்வீஸ்  எப்போ  சார்  முடியுது ?


 ஏன்? திண்ணை எப்போ  காலியாகும்னு  பார்க்கறியாக்கும் ? 


2  போராடுவதற்கான  யோசனையே  வராம  பண்ணீட்டாங்களே?


3  அதிகாரத்தில்  இருக்கறவங்களுக்கு  வேலை  செய்யத்தான்  போலிஸ்  இருக்கு 


4  படிச்சா  மேலத்தெருவுக்கு  போக  முடியுதோ  இல்லையோ  மேல  வந்துடலாம்


5  திருந்தனும்னு  நினைச்சப்பவே  திருந்த  விட்டிருந்தா  பாதித்திருடனுங்க  மெடல்  வாங்கி  இருப்பாங்க 


6  பெரும்பாலான  திருடர்கள்  போலீசாலதான்  உருவாகறாங்க 

7  போலீஸ்லயும்  நல்லவங்க  இருக்காங்க 

இப்போ  உயிரோட  இருக்காங்களா?


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  கிட்டத்தட்ட  35  வருடங்கள்  போலீஸ்  ரைட்டர்  ஆக  இருந்த  நாயகன்  க்ரைம்  சீன்  எழுத  பழைய  ஃபைல்களைப்படித்துப்பார்த்து  ரெடி  பண்ணுவது  ஏன் ? ஆன்  த  ஸ்பாட்  ரெடி  பண்ண  வேண்டாமா? 

2   நாயகனுக்கு  இரண்டு  சம்சாரங்கள்  என்பதும்  அது தொடர்பான  சக்களத்தி  மோதலும்  மெயின்  கதைக்கு  சம்பந்தம் இல்லாதவை 

3  சம்பவம் 12,3   என  நான்  வரிசைப்படுத்தியபடி  திரைக்கதை  அமைத்திருந்தால்  தெளிவாக  எல்லோருக்கும்  புரிந்திருக்கும், ஃபிளாஸ்பேக், நான்  லீனியர்  கட்  என  எதுக்கு  சுற்றி  வளைக்க  வேண்டும் ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ / ஏ . விசாரணை  படத்தில்  வருவது  போல  கைதியை  துன்புறுத்தும்  காட்சிகள்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மலையாளப்படங்கள்  பார்த்துப்பழக்கம்  உள்ளவர்கள்  பார்க்கலாம், பொறுமை  வேண்டும், ஆனால்  நல்ல  படம் . ரேட்டிங்  3 / 5 


Writer
Theatrical release poster
Directed byFranklin Jacob
Written byFranklin Jacob
Produced byPa. Ranjith
Abhayanand Singh
Piiyush Singh
Aditi Anand
StarringSamuthirakani
Hari Krishnan
CinematographyPratheep Kaliraja
Edited byManigandan Sivakumar
Music byGovind Vasantha
Production
companies
Neelam Productions
Golden Ratio Films
Little Red Car Films
Jetty Productions
Release date
  • 24 December 2021
Running time
147 minutes
CountryIndia
LanguageTamil

Friday, September 08, 2023

BHAMA KALABAM(2022) விதியின் ஆட்டம் - -தெலுங்கு - சினிமா விமர்சனம் ( க்ரைம் ட்ராமா காமெடி த்ரில்லர்) @ ஆஹா தமிழ் ஓடிடி


 பாமா  கலாபம்  என்பது  ஆந்திரப்பிரதேசத்தில்  உள்ள  பிரபல  நடன முறை. ப்ரியாமணி  ந்டித்த  முதல்  வெப்  ஃபிலிம்  இது . கோவிட்  கால  கட்டத்தில்  இண்டோர்  ஷூட்டிங்  நடத்தி  குறைந்த  பட்ஜெட்டில்  தயார்  ஆன  படம்  


  ஸ்பாய்லர்  அலெர்ட்

200 கோடி  ரூபா  மதிப்புள்ள ஒரு அபூர்வ முட்டை   கொல்கத்தா  மியூசியத்தில்  இருந்து  திருடு  போகிறது . வில்லனின்  அடியாள்  அதைக்கடத்தி  வரும்போது  தவறுதலாக  ஒரு  முட்டை  வேனில்  விழுந்து  விடுகிறது . முட்டைக்கடை  ஓனர் அதை  தன்  வீட்டு  பீரோவில்  மறைத்து  வைக்கிறார். 


நாயகி  ஒரு  யூ  ட்யூப் ரிவ்யூவர். உணவு , சமையல்  குறிப்புகள்  சொல்பவர். இவ்ர்  அக்கம்  பக்கம்  வீடுகளில்  வம்பு தும்புக்ள்  ஏதாவது  நடக்கிறதா? என  நோட்டம்  இட்டு  அதைப்பற்றி  அனைவரிடமும்  வம்பு  பேசும்  கேரக்டர் . எதிர்பாராத  விதமாக  வில்லனின்  அடியாளை  நாயகி  தாக்க  நேரிடுகிறது . அந்தப்பிணத்தை  மறைத்து  வைக்க  அவர்  எடுக்கும்  முயற்சிகளும் ,  அபூர்வ  முட்டையைக்கைப்பற்ற  வில்லன்  எடுக்கும்  நடவடிக்கைகளும்  தான்  மீதி  திரைக்கதை 


 கோல  மாவு  கோகிலா  டைப்  திரைக்கதை  யில்  பிளாக்  ஹ்யூமர்  புகுத்தி  ஒப்பேற்றி  இருக்கிறார்கள் 


 நாயகி  ஆக  ப்ரியா  மணி . பருத்தி  வீரன், சாரு லதா  மாதிரி  படங்களில்  கொழுக்  மொழுக்  ப்ரியாவைப்பார்த்து  விட்டு  டயட் இருந்து  இளைத்த  ப்ரியா  வைப்பார்க்க  கஷ்டமாக  இருக்கிறது . நடிப்பு  தரம் 


 வில்லன்  ஆக  ஜான்  விஜய். கண்ணுக்கு  மை  இட்டு  ராமராஜன்  மாதிரி  ரோஸ்  பவுடர்  எல்லாம்  அடித்து  காமெடி  வில்லன்  ஆக  வருகிறார்.  

இன்வெஸ்டிகேஷன்  ஆஃபீசர்  ஆக  சாந்தி  ராவ்  கச்சிதமாக  நடித்திருக்கிறார்.


நாயகியின்  தோழியாக சரன்யா பிரதீப்  காமெடி  கலந்த  நடிப்பை  வெளிப்படுத்தி  இருக்கிறார். என்  புருசன்  வேற  ஊர்ல இல்லை  என்ற  ஒரே  வரி  டயலாக்கை  படம்  முழுக்க  அடிக்கடி  சொல்வது  வெடிச்சிரிப்பு 


மார்க்  கே ராபின் இசை   கச்சிதம் . பிஜிஎம்மில்  இன்னும்  முனைப்பு  காட்டி  இருக்கலாம் ,  ஒளிப்பதிவு  தீபக்  ஓக்கே  ரகம்  விப்லவ்  எடிட்டிங்கில்  படம்  2  மணி  நேரம்  ஓடும்படி  ஷார்ப்  ஆக  கட்  செய்து  இருக்கிறார்கள் . திரைக்கதை  எழுதி  இயக்கி இருபவர்  அபிமன்யூ. காமெடி  சில  இடங்களில்  நன்கு  ஒர்க்  அவுட்  ஆகி  இருக்கிறது 

சபாஷ்  டைரக்டர் (அபிமன்யூ)


1  நாயகியின்  தோழியாக  வருபவரின்  கேரக்டர்  டிசைனும்  அவர்  நடிப்பும்  கலகலப்பு 


2   ஜவ்விழுப்பாக  படத்தை  இழுக்காமல்  ஷார்ப்  ஆக  2  மணி  நேரத்தில்  ட்ரிம்  செய்த  விதம்


  ரசித்த  வசனங்கள் 


1   நம்மளைப்பற்றி  நாம  எப்ப  வேணா  யோசிச்சுக்கலாம், ஆனா  அக்கம்  பக்கம்  இருக்கறவங்களைப்பற்றித்தெரிஞ்சுக்கறது  ஒரு  தனி  சுகம் 


2 பிளான்  பண்ணுனதை  பிளான்  பண்ணுனபடி  சரியாச்செய்யறதுக்குப்பேர்தான்  உஷாரா  இருப்பது , அதாவது  ஷார்ப்பா  இருப்பது 


3  வெளி வீட்டு  விஷயங்களில்  காட்டும்  அக்கறையை  வீட்டில்  இருக்கும்  புருசனிடம்  பெண்கள்  காட்டினால்  நல்லா  இருக்கும் 

4  குழம்பில்  வர்ற  வாசனையை வெச்சே  உப்பு  கம்மியா? அதிகமா?னு  கண்டுபிடிச்சிடுவேன், இது கடவுள்  கொடுத்த  வரம் 


5  அக்கா , நீ  அவனைக்கொலை பண்ணி  இருக்கே

  இல்லை , சும்மா  ஃபோர்க்கால  லைட்டா  குத்தினேன், அதுக்கப்புறம், அவனா  செத்துட்டான், நான்  அவனைக்கொலை  பண்ணலை 


6   கொன்னவனை  அங்கேயே  போட்டுட்டு  வராம  ஹோட்டல்ல  பார்சல்  வாங்கிட்டு  வர்ற  மாதிரி  எதுக்கு   இங்கே  கொண்டு  வந்திருக்கே?


7   அவன்  ஏன்  சூட்கேஸ்ல  படுத்துத்தூங்கிட்டு  இருக்கான் 


 அய்யோ  பாஸ் , அவனைக்கொலை  பண்ணி  சூட்கேஸ்ல  வெச்சிருக்காங்க 


8  முட்டை  எங்கே  இருக்குனு  அவன்  சொன்னானா?

  சாரி  சார் , அவன்  மறுபடியும்  செத்துட்டான்


9  அந்த  முட்டையோட  மதிப்புத்தெரியுமா? 200  கோடி  ரூபா , நூறு  ரூபாய்க்கே  நான்  மர்டர்  பண்றவன்


10  ஃபைவ் ஸ்டார்  ஹோட்டல்னு  போர்டு  இருக்கு , ஆனா  போர்டுல  ஒரு  ஸ்டார் தான் வரைஞ்சிருக்கு ?


11  டெட் பாடியை   எங்காவது  மறைச்சு  வைக்கனும்

 ஏற்கனவே  மறைச்சு  வெச்ச  பாடியை  மீண்டும்  ஏன்  மறைக்கனும் ? 


12  நீ  டெட்  பாட்யோட  காலை  கட்  பண்ணு , நான்  பேசிட்டு  இருக்கும்  இந்த ஃபோன்  காலை  கட்  பண்றேன்


13  நல்லது  கெட்டது  தெரியாதவன்  கடவுள்  இல்லை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  200  கோடி ரூபாய் மதிப்புள்ள  பொருளை  அவ்வளவு அசால்ட்டாகவா  டீல்  செய்வார்கள் , ஓப்பனிங்  ஷாட்டில்  வரும்  அந்த  மிஸ்சிங்  சீன்  நம்பகத்தன்மை  இல்லை   


2  நாயகி  தற்காப்புக்காக  செய்த கொலைக்கு  தண்ட்னை  கிடைக்காது, அப்படி  இருந்தும்  டெட் பாடியை  ஏன்  மறைக்க  வேண்டும் ?


3  ஒரு  சாதாரண  ஃபோர்க்கை  வைத்து  கழுத்தில் குத்தியதும்  ஒரு  ஆள்  ஸ்பாட்  அவுட்  ஆவானா?  என  நாயகிக்கு  டவுட்  வராதா? 


4  இப்போ  எங்கே  இருக்கே? என  ஜான்  விஜய்  ஃபோனில்  கேட்கும்போது  முட்டைக்கடை  ஓனர்  வீட்டில்  என  சொல்லாமல்  அந்த  ஆள்  வீட்டு  அட்ரஸ் , கூகுள்  லொக்கேஷன்  எல்லாம்  சொல்வது  ஏன் ?


5  அத்தனை  பேர்  குடி  இருக்கும்  அப்பார்ட்மெண்ட்டில்  நாயகி  சூட்கேசில்  டெட்பாடியை  டீலிங்  செய்வது  எல்லாம்  ஓவர் 


6  இர்ண்டு  நாட்களாக  டெட் பாடி  வீட்லயே இருக்கு , ஸ்மெல்  வராதா? நாயகி  செண்ட்  கூட  அடிக்கலை 

7  டெட் பாடி  பாக்கெட்ல  அவன்  செல் ஃபோன்  இருக்கு . அதை  ஆஃப்  பண்ணி  வைக்கலைன்னா   அபார்ட்மெண்ட்ல  தான்  டெட்  பாடி   இருக்குனு  க்ண்டு பிடிச்சிட  மாட்டாங்களா? 


8  சூட்கேசை   செக்  செய்யும்  போலீஸ்க்கு  டெட்  பாடி  ஸ்மெல்  வராதா?

9  ஏழு  மாத  கர்ப்பிணி  ஆன  லேடி  போலீஸ்  ஆஃபீசர்  கொலைகாரன்  வீட்டுக்கு  வந்து  உங்க  வீட்டை  செக்  பண்றேன்னு  சொல்றாங்களே? கூட  வேற  போலீஸ்  யாரும்  இல்லாம  தனியாவா  வருவாங்க ?


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ / ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பிளாக்  ஹ்யூமர்  காமெடி  ரசிகர்கள்  பார்க்கலாம். லாஜிக்  பார்க்கக்கூடாது   ரேட்டிங்   2.5 /5 



Bhamakalapam
Poster
Directed byAbhimanyu
Written byAbhimanyu
Produced byBhogavalli Bapineedu
Sudheer Edara
Starring
CinematographyDeepak Yeragera
Edited byViplav Nyshadam
Music byMark K. Robin
Production
company
Distributed byAha
Release date
  • 11 February 2022
Running time
133 minutes
CountryIndia
LanguageTelugu

Thursday, September 07, 2023

AMALA (2023) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( சைக்கோ க்ரைம் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்

 


 இந்தப்படம் 2021  ல்  ரிலீஸ்  ஆனதாக  சில  வெப்சைட்களில்  காண  முடிகிறது . ட்டைம்ஸ் ஆஃப்  இண்டியா  விமர்சனத்தில்  2023  ஜூன்  ரிலீஸ்  என  சொல்கிறார்கள்

ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன்  பத்தாம்  வகுப்ப்  படிக்கும்போது  அமலானு  ஒரு  பொண்ணு  மேல  காதல் வயப்படறான். சக  மாணவன்  ஒருத்தன்  அதே  அமலா  மீது  காதல்  வைத்தபோது  இவனால்  தாங்கிக்க  முடியல. அமலா  கண்  எதிர்லயே  அவனை படு பயங்க்ரமா  தாக்கறான். இதனால  பயந்த  அமலா  ஓடும்போது  ஸ்லிப்  ஆகி  ஒரு  கிணற்றில்  விழுந்து  மூழ்கி  இறக்கிறாள் . இதனால்  சைக்கோ  ஆன  வில்லன்  அமலா  சாயலில்  அல்லது  அமலா  மாதிரி  அவன்  நினைக்கும்  பெண்களை  கொலை  செய்கிறான். அவனை  போலீஸ்  எப்படிப்பிடிச்சாங்க  என்பதுதான்  கதை 


வில்லன்  ஆக  அப்பானி  சரத்  சாதரண  தோற்றம் , ஆனால்  வலிமையான  கேரக்டர்  டிசைன். நன்றாக  நடித்திருக்கிறார்.  டாக்சி  டிரைவராக , வாட்டர்  கேன்  போடுபவராக  சாமான்யனாக  அவர்  வரும்  காட்சிகள்  எளிமை . இன்னும்  கொடூரமாகவே  இவரைக்காட்டி  இருக்கலாம் 


நாயகி  ஆக  அனார்கலி  மரிக்கர். அழகிய  முகம், இளமை  பொங்கும்  உடல்  அமைப்பு . கச்சிதமான  நடிப்பு .


அமலா  ஆக  ஒரு  சிறுமி  சுந்தர  காண்டம்  நாயகி  சிந்துஜா  சாயலில்  இருக்கிறார். நடிக்க  அதிக  வாய்ப்பில்லை , சிரிப்பதோடு  சரி 


 நாயகன்  என  ஸ்ரீ  காந்த்தை  நம்ப  வைத்து  போலீஸ்  ஆஃபீசர்  ரோல்  கொடுத்திருக்கிறார்கள் , அதிக  வாய்ப்பில்லை 


ஒளிப்பதிவு  ., லொக்கேஷன்  இரண்டும்  தான்  ப்டத்தின்  பலம் 




சபாஷ்  டைரக்டர்(நிசாத்  இப்ராஹிம்) 


1  ஒளிப்பதிவு , லொக்கேஷன்  செலக்சன்

2  70%  காட்சிகள்  வில்லனுக்குத்தான்  என்றாலும்  நாயகன்  நீங்க தான்  என  ஸ்ரீகாந்த்தை  நம்ப  வைத்து  கால்ஷீட்  வாங்கியது 

3  படத்தில்  வரும்  முக்கிய  பெண்  கேரக்டர்கள்  அனைவரையும் அழகாக  , கண்ணியமான  உடையில்  காட்டியது


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நான்  சிகப்பு மனிதன்  படத்தில்  கே  பாக்யராஜ்  அடிக்கடி  வேர்க்கடலைசாப்பிடுவது  போல்  சீன்  இருக்கும், அவர்  காமெடியன், அதனால  ஏத்துக்க  முடிஞ்சுது , சீரியஸ்   கேரக்டரான ,  போலீஸ்  ஆஃபீசர்  ஆன  நாயகன்  டெட்  பாடிக்கு  பக்கத்துல  ஏதாவது  தடயம்  கிடைக்குமா?னு  தேடும்போது  பாப்கார்ன்  சாப்ட்டுட்டே  தேடறார். குமட்டாதா? உவ்வே


2  இந்தக்காலப்பெண்கள்  செல்  ஃபோனில் பேசும்போது  குசுகுசு  என  ரகசியமாப்பேசறாங்க . இதுல வாடகை  டாக்சி  கார்ல  போகும்  பெண்  கார்  டிரைவருக்குக்கேட்பது  போல “  டேய்  வீட்ல  யாரும்  இல்லை , வா  என  இன்விட்டேஷன்  வைக்குது 


3  பப்ளிக்  பார்க்ல  ஒரு  லேடி  கழுத்து  நெரிக்கப்பட்டு  கொலை  செய்யப்பட்டிருக்கு . அது  தற்கொலையா  இருக்கலாம்னு  போலீஸ்  ரிப்போர்ட்  வைக்குது . ஹையர்  ஆஃபீசரும்  பேக்கு  மாதிரி  அது  உண்மையா?னு  கேட்கறார்


4 ஃபிளாஸ்பேக்  சீனில்  வில்லன்  பத்தாவது  படிக்கறப்ப  அப்டினு  ஒரு  பையனைக்காட்றாங்க. அஞ்சங்கிளாஸ்  பையன்  மாதிரி  இருக்கான்

5   அமலா  கிணற்றில்  விழுந்ததும்  அவளைக்காப்பாற்ற   வில்லன் ஆன  சின்னப்பையன்  எந்த  நடவடிக்கையும்  எடுக்கலையே?

6  வில்லன்  கோடாலி  எடுத்து  கதவை  உடைக்க  ட்ரை பண்றான். கண்ணாடிக்கதவு  அது. கல்  எடுத்து  உடைச்சு  தாழ்  நீக்கி  இருக்கலாமே?

7 வில்லன்  நாயகியைத்துரத்தும்போது  நமக்கு  ஒரு  பரிதவிப்பு , பதட்டம்  வரனும், வில்லனால  நாயகிக்கு  எதுனா  ஆபத்து  வந்துடுமோ?னு , ஆனா  உல்டாவா இருக்கு. நாயகியால  வில்லனுக்கு  ஆபத்து  வந்துடுமோ?னு.. குணா  மாதிரி வில்லன்  கேரக்டர்  டிசைன்  இருக்கு , ஆள்  சோப்ளாங்கி  மாதிரி  இருக்கார், நாயகி  ஜைஜாண்டிக்கா  இருக்கு 

8  ஏற்கனவே  ஸ்லோவா  போகும்  படத்தில்  க்ளைமாக்ஸ்  சேசிங்  சீனில்  எக்ஸ்ட்ரா  ஸ்லோமோஷன்  சீன்  எதுக்கு ? கண் சிமிட்டும்  நேரம்  மாதிரி பிஜிஎம்  அடி  பொளந்திருக்க  வேண்டாமா?

9  கடைசி  16  நிமிடங்களில்  ஒரு  பாட்டு  வேற  ஸ்பீடு  பிரேக்கர்



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ /ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ராட்சசன், போர்  தொழில்  பார்க்காதவர்கள்  பார்க்கலாம்,  அதே பாணியில்  அதை  விட  சுமார்  தரத்தில்  ஒரு  சைக்கோ  கில்லர்  ஃபிலிம்., ரேட்டிங்  2 / 5 

Wednesday, September 06, 2023

WORLD FAMOUS LOVER (2020) -தெலுங்கு - சினிமா விமர்சனம் ( ரொமண்டிக் டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்


 ஒரு  மெகா  ஹிட்  படம்  கொடுத்த  இயக்குநரோ, நடிகரோ  அந்தப்பட  பாதிப்பில் இருந்து  வெளி  வருவது  சிரமம். அதன்  சாயல்  அவரைத்துரத்திக்கொண்டே  இருக்கும், சின்னத்தம்பி  பிளாக்  பஸ்டர் ஹிட்டுக்குப்ப்பின்  பிரபு  நடித்த  பல  பட்ங்களில்  அந்த  அப்பாவித்தன  சாயல்  இருந்தது , உள்ளத்தை  அள்ளித்தா  வெற்றிக்குப்பின்  சுந்தர்  சி  படங்களில்  உருட்டுக்கட்டை காமெடி  நிச்சயமாக  இடம்  பெற்றது . அது  மாதிரி  அர்ஜூன்  ரெட்டி  படத்தின்  பாதிப்பில்  இருந்து  விஜய்  தேவரகொண்டா  இன்னும்  வெளி  வரவில்லை  என்பதை  உணர்த்தும்  படம்  தான்  இது 


      ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு  பெரிய  கோடீஸ்வர  தொழில்  அதிபரின் மகள் , நாயகன் பின் புலம்  இல்லாத  சாமான்யன், இருவரின்  காதலுக்கும்  நாயகியின்  அப்பா  எதிர்ப்பு. வீட்டை  விட்டு  ஓடி  கல்யாணம்  பண்ணிக்கொண்டால்  மீடியாக்கள்  அப்பாவை  கிண்டல்  செய்யும்  என்பதால்  அவர்  பெயரைக்கெடுக்க  விரும்பாமல்  நாயகனுடன்  லிவ்விங்  டுகெதர்  வாழ்க்கை  வாழ்கிறார்


 நாயகன்  ஒரு  ரைட்டர்  ஆக  ஆசைப்படுகிறான்.  அதனால்  தான்  பார்த்து  வரும்  வேலையை  ரிசைன்  பண்ணி  விட்டு  வீட்டில்  இருக்கிறான், நாயகி  தினமும் சமையல்  பண்ணி  விட்டு  வேலைக்குப்போகிறாள் . நாயக்ன்  தண்டச்சோறு  சாப்பிட்டு  விட்டு  வீட்டில்  டி வி  பார்த்துக்கொண்டிருக்கிறான். கிட்டத்தட்ட  2  வருடங்கள்  இதே  நிலை ,  இதனால்  வெறுத்துப்போன  நாயகி  பிரேக்கப்  செய்து  விட்டு  அப்பா  வீட்டுக்குப்போய்  விடுகிறாள் 


 நாயகன்  தன் தவறை  உணர்ந்து  திருந்தி  இரு  நாவல்கள்  எழுதுகிறார். புக்ழ்  பெற்ற  ரைட்டர்  ஆகிறார். ஆனால்  நாயகிக்கு  வேறு  ஒருவருடன்  திருமணம்  நடக்க  இருக்கிற்து.  க்ளைமாக்ஸில்  காதலர்கள்  ஒன்று  சேர்ந்தார்களா? இல்லையா?  என்பது  சொல்லப்படுகிறது   


நாயகன் ஆக    விஜய்  தேவரகொண்டா  டெம்ப்ளேட் ஆன  அர்ஜூன்  ரெட்டி  நடிப்பை  வழங்கி  இருக்கிறார். அவரது  தாடியையும் , ஹேர்  ஸ்டைலையும்  பார்த்தால்  எரிச்சல் ஆக  இருக்கிறது 


 நாயகி  ஆக  ராஷி  கண்ணா  பிரமாதமான  முக  பாவனை ,  நல்ல  நடிப்பு  என  கலக்குகிறார்


 நாவலில்  வரும்  நாயகி  ஆக  ஐஸ்வர்யா  ராஜேஷ்   அற்புதமான  நடிப்பு , படத்தில்  மனதில்  பதிவது  இவரது  கேரக்டர்  டிசைன்  தான் . அதே  நாவலில்  வரும்  வெல்ஃபேர்  ஆஃபீசர்  ஆக  கேத்ரீன்  தெரேசா  கொஞ்ச  நேரம்  வந்தாலும்  நல்ல  நடிப்பு 


 இன்னொரு  நாவலில்  நாயகி  ஆக  , பைலட்  ஆக வரும்  இசபெல்ல்லா  இளமையான  முகம், ரசிக்க  வைக்கிறார்


 நாயகனின்  மாமனார்  ஆக  ஜெயப்பிரகாஷ்  கச்சிதமான  நடிப்பு 


ஒளிப்பதிவாளர்  ஜெயகிருஷ்ணா  படம்  முழுக்க  ஒளிப்பதிவில்  குளுமை  காட்டி  இருக்கிறார்.  நான்கு  நாயகிகளையும்  கண்ணியமான  உடையில்  படம்  பிடித்ததற்கு  ஒரு  சபாஷ்


கோத்தகிரி  வெங்கடேஸ்வர  ராவ்  எடிட்டிங்கில்  இரண்டரை  மணி  நேரம்  ஓடுமாறு  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார். இன்னும்  ஷார்ப்  ஆக  கட்  பண்ணி  இருக்கலாம்


கோபி  சுந்தர்  இசையில்  ஐந்து  பாடல்கள்  சுமார்  ரகம்  தான் , பின்னணி  இசையும்  பிரமாத,ம்   என  சிலாகிக்க  முடியவில்லை 


 கிராந்தி  மகாதேவ்  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார் . மெயின்  கதை  ஒரு  மணி  நேரம்தான்  என்பதால்  நாயகன்  நாவல்  கதை  என  சமார்த்தியமாக  இரு  வெவ்வேறு  கதைகளை  இணைத்த  ஐடியா  குட் 




சபாஷ்  டைரக்டர்  ( கிராந்தி  மகாதேவ்)


1   மெயின்  க்தை , நாயகனின்  ஃபிளாஸ்பேக்  லவ்  ஸ்டோரி , நாவல்  கதைகள்  இரண்டு  என  நான்கு  வெவ்வெறு  கதைகள்  என  எடுத்துக்கொண்ட  ஐடியா  குய்ட் 

2  நான்கு  நாயகிகளை  படத்தில்  பயன்படுத்தி  இருந்தாலும்  கிளாமர்  என்ற  பெயரில்  காட்சிகளை  எடுக்காமல்  கண்ணியமாகக்கையாண்ட  விதம் 

  ரசித்த  வசனங்கள் 


1  அண்ணே, நீ  யூனியன்  லீடரா  இருந்தப்போ  ஒரு  கிழ  போல்ட்டு  தான்  வெல்ஃபேர்  ஆஃபீசரா  இருந்தாரு , ஆனா  இவன்  யூனியன்  லீடரா  ஆனதும்  ஒரு  செம  ஃபிகர் வெல்ஃபேர்  ஆஃபீசரா வந்திருக்கு , இதுல  இருந்து  என்ன  தெரியுது ? இவரு  பெரிய  பெரிய  மாற்றங்களைக்கொண்டு  வரப்போறாரு


2   நீ  ஒரு  பார்ன்  பியுட்டி 


3  காதலில்  இருக்கும்போது  முட்டாள்தனமான  எமோஷனல்  ஆன  முடிவுகளை  எடுக்காதீங்க 


4  தியாகத்தின்  மதிப்பு  என்ன?னு  எனக்குத்தெரியாதுனு  நீ  எப்படி  நினைச்சே?


5  கடவுளுக்குப்பிடித்த்  எண்  24  என  நினைக்கிறேன்,அதனால்தான் ஒரு  நாளுக்கு24  மணி  நேரம் 


6  கதைலயும், சினிமாலயும்  நாயகி  நாயகனுக்காக  எத்தனை  வருடங்கள்  ஆனாலும் காத்திருக்கலாம், ஆனா  நிஜ  வாழ்வில்  யாரும்  யாருக்காகவும்  காத்திருக்க  மாட்டார்கள் 


7  நாம்  கடைசி  வரை  நாம்  செஞ்ச  தப்புக்களுடன் தான்  வாழ்வோம். 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  துள்ளாத  மனமும்  துள்ளும் , நிலவே  முகம்  காட்டு, நீ  வருவாய்  என  என  எல்லா  ஹிட்  படங்களிலும்  செய்யப்பட்ட  ஒரு  லாஜிக்  மீறல்  இதிலும்  உண்டு . கண்  தானம்  என்பது  ஒருவரின்  இரு விழிகளை  எடுத்து  இன்னொருவருக்கு  பொருத்த  முடியாது . இரு  வேறு  நபர்களின்   ஒவ்வொரு  விழி தான்  பொருத்தப்படு ம். நாயகன்  தன்  இரு  கண்களையும்  நாயகிக்கு  தானம்  செய்தான்  என்பது  இம்ப்பாசிபிள் 


2   ஒரு  பெண்  தன்  காதலனை   தன்  அப்பாவிடம்  அறிமுகப்படுத்தும்  முன்  தனிமையில்  இன்ன  மாதிரி  ஒருவ்ரைக்காதலிக்கிறேன், நாளை  அவரை  இண்ட்ரோ  பண்றேன்  என  சொல்லி விட்டுத்தான்  செய்வார். ஆனால்  நாயகி  எந்த  வித  முன்னறிவிப்பும்  இன்றி  அப்பாவிடம்  தன்  லவ்வரை இண்ட்ரோ  பண்ணி  நோஸ்கட்  வாங்குகிறார்


3  நாயகன்  ஜெயமாலினி ,அனுராதா , சில்க் ஸ்மிதா  போல  லோ  ஹிப்பில்  அடிக்கடி  வருகிறார். கமல்  ரசிகரா?

4  க்ளைமாக்சில்  நாயகன்  தன்னைத்தானே  ப்டு  காயப்படுத்திக்கொள்வது  மடத்தனம். இந்த  மாதிரி  முட்டாள் தனமான  காட்சிகளை  எதுக்கு  வைக்கனும் ?


5  இரண்டு  வருடங்கள்  ஜெயிலில்  இருந்து  ரிலீஸ்  ஆகும்  ஒரு  கைதி  ஃபங்க்  தலை  உடன்  இருக்க  முடியுமா?  சிறை  விதி  தெரியாதா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  காதலர்களுக்கு  மட்டும்  தான்  பிடிக்கும், மற்றவர்கள்  கடுப்பாகி  விட  வாய்ப்பு  உண்டு ., ரேட்டிங்  2.25 /5 


World Famous Lover
Theatrical release poster
Directed byKranthi Madhav
Written byKranthi Madhav
Produced byK. A. Vallabha
K. S. Rama Rao
StarringVijay Deverakonda
Raashii Khanna
Aishwarya Rajesh
Catherine Tresa
Izabelle Leite
CinematographyJaya Krishna Gummadi
Edited byKotagiri Venkateswara Rao
Music byGopi Sundar
Production
company
Release date
  • 14 February 2020[2]
Running time
148 minutes
CountryIndia
LanguageTelugu
Budget35 crore[3]

Tuesday, September 05, 2023

THE HUNT FOR VEERAPPAN (2023) - தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் ( க்ரைம் டாக்குமெண்ட்ரி டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்

 


   ஸ்பாய்லர்  அலெர்ட்


சந்தனக்கடத்தல்  மன்னன்  வீரப்பன்  பற்றிய  ஒரு  டாகுமெண்ட்ரி  படம்  இது . மொத்தம்  நான்கு  எபிசோடுகள் . ஒவ்வொன்றும்  40 லிருந்து 45  நிமிடங்கள் . முதல்  இரண்டு  எபிசோடுகள்  நாம்  அறியாத  பல  தகவல்கள்  சுவராஸ்யமாக  சொல்லப்பட்டிருக்கின்றன. காரணம்  அவை  எல்லாம்  கர்நாடகா  மாநிலத்தில்  நிகழ்ந்தவை . மூன்றாம்  எபிசோடு  ராஜ்குமார்  கடத்தல்  சம்பவம், அதைப்பற்றி  நக்கீரன்  வார  இதழில்  ஜூ வி  யில்  மற்றும்  மீடியாக்களில்  நாம்  ஏற்கனவே  பார்த்திருக்கிறொம். நான்காம்  எபிசோடு  ஆம்புலன்சில்  வீரப்பன்  கொல்லப்பட்ட  சம்பவம்,  இதுவும்  நாம்  பேப்பர்களில் , டி வி க்களில்  கண்டிருக்கிறோம்


இந்த  டாகுமெண்ட்ரி  டிராமாவில்  கற்பனைக்கதாபாத்திரங்கள்  எதுவும்  இல்லை . எல்லாமே  வாழ்ந்த  மனிதர்கள் தான் . வீரப்பன்  தரப்பு  ஆட்கள் , போலீஸ் , ஆட்கள் , ஃபாரஸ்ட்  ஆஃபீசர்ஸ்  இவர்களைக்கொண்டே  பேட்டி  வடிவில்  எடுக்கப்பட்டு  இருக்கிறது . வீரப்பனின்  மனைவி  முத்து  லட்சுமியின்  பேட்டிகளும்  இருக்கிறது 


சபாஷ்  டைரக்டர்


1 பிரமாதமான  ஒளிப்பதிவு . ஏரியல்  வ்யூவில்  ஃபாரஸ்ட்  ஏரியாக்களைக்காட்டும்போதெல்லாம்  பிரமிப்பு  கூடுகிறது 


2   வீரப்பன்  பக்கமோ , போலீஸ்  பக்கமோ  சாய்ந்து  விடாமல்  நடு  நிலையாக  இரு தரப்பு  நியாயங்கள் ,  அநியாயங்கள்  இவற்றை  பட்டியல்  இடுகிறது 

 ரசித்த  வசனங்கள் 

1  வீரப்பனிடம் ஒரு  மனைவியா  உங்களுக்குப்பிடிச்ச  விஷயம்  என்ன?

நம்பிக்கையான  ஆள்னா உயிரைக்கொடுத்தாவது  அவரைக்காப்பாற்றும்  குணம் , அதே  சமயம்  அவருக்கு  துரோகம்  இழைத்தால்  உயிரையே  எடுக்கனும்னு  நினைப்பாரு 


2  ஒரு  திருடனைப்பிடிக்க  ரெண்டு  வழிகள்  இருக்கு 1  அவன்  இருக்கற  இடத்தை  தேடிக்கண்டுபிடிப்பது  2  அவனை  சரண்டர்  பண்ண  வைப்பது 


3  சில  மனிதர்களைத்திருத்தவே  முடியாது . நாம்  என்ன  சொன்னாலும்  கேட்க  மாட்டார்கள் 

4  எந்த  ஒரு  க்ரைம்  நடந்தாலும்  அது  எப்படி  உருவாச்சு  என்பதைக்காட்ட  அதை  மீண்டும்  நாங்கள் ( போலீஸ்) உருவாக்குவோம்

5  ஒரு  ஆஃபீசரா  நான்  கத்துக்கிட்ட விஷயம்  ஒருத்தரைக்கோபப்படுத்தக்கூடாது , கட்டுப்படுத்தக்கூடாது 


6  என்னைக்கு  இருந்தாலும்  நானும்  ஒரு  நாள்  செத்துதான்  ஆகனும், ஆனா  என்  சாவு  ஒரு  போதும்  போலீஸ்  கையால்  நிகழக்கூடாது  என  நினைக்கிறேன்

7  ரகசியம்  என்பது  இரு  நபருக்கு  இடையே  இருப்பது . மூன்றாவது  நபருக்குத்தெரிய  வந்தால்  அது  செய்தி 

சில தகவல்கள் 


1  தமிழக - கர்நாடக எல்லையில்  இருக்கும்  கோபிநத்தம்  தான் வீரப்பனின்  சொந்த  ஊர்

2  வீரப்பனின்  மனைவி  முத்து  லட்சுமிக்கு 14  வயது  ஆன  போது  வீரப்பனுக்கு 39  வயது . அப்போதான்  லவ்  ப்ரொப்போஸ்  பண்ணாரு

3   கிட்டத்தட்ட  1000  யானைகளைக்கொன்று  தந்தங்களை  எடுத்திருப்பான்


4  எம்  எம்  ஹில்ஸ்  மலைப்பகுதியில்  ஏராளமான  சந்தன  மரங்கள்  இருந்தன. உலக அளவில்  சந்தனத்துக்கும், அதன்  வாசனை  எண்ணெய்க்கும்  நல்ல  மார்க்கெட்  இருந்ததால்  வீரப்பன்  யானை  தந்தத்திலிருந்து  சந்தன  மரக்கடத்தலில்  ஈடுபட்டான்

5  பெரிய  மீசை  என்பது  ஆதிக்கம், பலம்  இவற்றின்  அடையாளம். அந்தக்காலங்களில்  ஜமீன்  தாரர்,   நில  சுவான் தாரர்கள்  தான்  பெரிய  மீசை  வைத்திருந்தார்கள் 

6  உலக  அளவில்  அதிக  ச்ந்தனக்கட்டைகளைப்பறிமுதல்  செய்தது  தமிழகம்  தான் . முதல்  ஆபரேஷனில் 65  மெட்ரிக்  டன்  சந்தன  மரங்கள்  கைப்பற்றப்பட்டன

7  கர்நாடகாவில் 1989-1990  கால  கட்டத்தில்  வீரப்பனைப்பிடிக்க  ஸ்பெசல்  ஃபோர்ஸ்  உருவாக்கப்பட்டது  ( எஸ் டி எஃப்)


8  கர்நாடக  அதிகாரி சீனிவாஸ்  காந்திய  வழியில்  செயல்பட்டு பலரை  சரணடைய  வைத்தார், ஆனால்  பல அதிகாரிகளுக்கு  சீனிவாசைப்பிடிக்கவில்லை 

9  சீனிவாஸ்  வீரப்பனின்  தங்கை  மாரியம்மாவுக்கு  நர்ஸ்  வேலை  வாங்கிக்கொடுத்தார்.  மாரியம்மா உடன்  சீனிவாஸ்  ஜீப்பில்  சுற்றுவதைப்பார்த்து  காவலர்களே  இருவரையும்  இணைத்து  கிசுகிசு  எழுப்பினர்

10  வீரப்பன்  தன்  தங்கை  மாரியம்மாவுக்கு  கடிதம்  எழுதினான். நான்  இங்கே  காட்டுக்கே  ராஜாவா  இருக்கேன், நீ  அங்கே  என்ன  பண்ணிட்டு  இருக்கே? சீனிவாசன்  கூட  தொடர்பில்  இருக்கியா? நீ  நிஜமாவே  என்  தங்கையா  இருந்தா  கொதிக்க  வைத்த  எண்ணையை  ஊற்றி  சீனிவாசை  கொல். இல்லைன்னா  என்  முகத்தில்  விழிக்காதே


11  வீரப்பனின்  கடிதம்  கண்டு  பயந்து  மாரியம்மா  விஷம்  குடித்து  தற்கொலை  செய்து  கொண்டார்

12  வீரப்பனின்  சகோதரன்  அர்ஜூனை  வைத்து  வீரப்பனை  சரண்டர்  செய்ய  வைக்க  சீனிவாஸ்  திட்டம்  இட்டார். வீரப்பனும்  சரண்டர்  ஆவதாக ஒத்துக்கொண்டு  குறிப்பிட்ட  இடத்துக்கு  சீனிவாசை  வரச்சொன்னான்


13  காட்டில்  6  கிமீ  நடந்தே  வந்த  சீனிவாசனை  வீரப்பன்  துப்பாக்கியால்  சுட்டுக்கொன்றான். தன்  தங்கையின்  மரணத்துக்கு  சீனிவாசன்  தான்  காரணம்  என  நினைத்தான், பழி  வாங்கினான்


14  வீரப்பனின்  தலைக்கு  ரூ 20  லட்சம்  பரிசு  என  கர்நாடக  அரசு  அறிவித்தது. 1991 ல்  அந்தத்தொகை  மிகப்பெரியது


15வீரப்பன்  எப்போதும்  தன்  தாக்குதலை  ஹேர்பின்  பெண்டில் தான்  செய்வான், காரணம்  அங்கேதான்  வண்டி  ஸ்லோ  ஆகும் 


16  வீரப்பன்  செய்த  பெரிய  தப்பே  தானும்  தன்  கூட்டாளிகளும்  மக்களுக்குப்போய்ச்சேர வேண்டும்  என  தங்கள்  ஃபோட்டோக்களை  பிரஸ்  மூலம்  ஓப்பன்  செய்ததுதான் . மனைவி  முத்து  லட்சுமியின்  எதிர்ப்பையும்  மீறி  வீரப்பன்  தன்  ஆட்களின்  ஃபோட்டோக்களை  வெளியிட்டான் 


17  காட்டுக்குள்  மனித  மலம்  மஞ்சளாக  இருந்தால்  அது  கிராம  மக்கள்  கூடிய  இடம் , ஏனெனில் அரிசி  சாதம்  சாப்பிடுபவர்கள்  மலம்  மஞ்சளாக  இருக்கும், கறுப்பாக  இருந்தால்  வீரப்பன்  ஆட்கள், ஏன்  எனில்  ராகி  சாப்பிடுபவர்கள்  மலம்  கறுப்பாக  இருக்கும் 


18  முத்து  லட்சுமி  வீரப்பன்  பிடிப்பட்ட போது  அவள்  கழுத்தில்  முக்கா  கிலோ  எடை  உள்ள  தங்க  செயின்  இருந்தது


19  வீரப்பனின்  மனைவி முத்து  லட்சுமி அளித்த  பேட்டியில்  அவரது  மார்பு , பெண்  உறுப்பு  ஆகியவற்றில்  கரண்ட்  ஷாக்  கொடுத்த  போலீசின்  கொடுமை  பற்றிக்கூறுகிறார்

20  1998-1999  ஆகிய  இரு  வருடங்கள்  அமைதியாக  இருந்த  வீரப்பன்  2000 ஆண்டில்  ராஜ்குமாரை  கடத்தினான் 


21  வீரப்பனுக்கு  விடுதலைப்புலி  இயக்கம், மற்றும்  தமிழ்  தீவிரவாத  இயக்கத்துடன்  தொடர்பு  ஏற்பட்டது . அதனால்  பணயக்கைதியாக  ராஜ்குமாரை  வைத்து அவன் விடுத்த  கோரிக்கைகளில்  பத்து கோரிக்கைகளில் பெரும்பாலும்  கன்னட - தமிழர்  மோதலை  ஏற்படுத்துவதாக  இருந்தது 


22 வீரப்பன் விதித்த  நிபந்தனைகளில்  ஏற்றுக்கொள்ளக்கூடிய , செயலாக்கக்கூடிய  நிபந்தனைகளில்  ஒன்றே  ஒன்று  வீரப்பனின்  சொந்தக்காரர்கள் , அப்பாவி கிராமத்து  மக்கள்  ஜெயிலில்  இருந்தவர்களை  விடுவிக்க  வேண்டும்  என்பதே


23   மீடியாக்களில்  வராத  செய்தி  11வது  கோரிக்கையாக 1000  கோடி  ரூபாய்  பணம்  கேட்டானாம், 900  கோடி  தங்கமாகவும்  100  கோடி  ஹாட்  கேஷ் ஆகவும்.. 

24  வீரப்பன்  வைத்த  கோரிக்கைகளில்  மனைவி  முத்து  லட்சுமியை  மகளை  பார்க்க  வேண்டும்  என  வைக்காதது  மனைவிக்கு  ஏமாற்றம். முத்து  லட்சுமி 10  வருடங்களாக  போலீசின்  கஸ்டடியில்  இருந்ததால்  போலீசின்  ஆளாக  மாறி  விட்டாரோ  என  ச்ந்தேகப்பட்டிருக்கலாம் 

25நான்  செத்தாலும்  போலீசுக்கு  என்  டெட்  பாடி  கிடைக்கக்கூடாது , என்னைத்தேடி  தேடி  அவங்க  முட்டி  தேயனும்  என  வீரப்பன்  சொல்வதுண்டாம்

26   கோவையில்  ஒரு  பங்களாவுக்கு  முத்து  லட்சுமியை  போலீஸ்  அனுப்பியது . அந்த  வீட்டில்  ஒரு  லேடி  இருந்தார். அவர்  போலீஸ்  இன்ஃபார்மர். அவர்  முத்து  லட்சுமியை  பிரெய்ன்வாஷ்  செய்து  தான்  வீரப்பனை நேரில்  சந்திக்க  விரும்புவதாக  அந்தப்பெண்  தூண்டில்  போடுகிறாள். அவள்  போலீஸ்  ஆள்  என்பது  முத்துலட்சுமி க்கு  அப்போது  தெரியாது 


27  வீரப்பன்  ஒரு  தூதுவன்  மூலமாக  விடுதலைப்புலி  பிரபாகரனை  அணுகி  இலங்கையில்  செட்டில்  ஆக  தான்  விரும்புவதாக  சொன்னபோது  பிரபாகரன்  இப்போது  போர்  சூழல்  நிலவுகிறது. உங்களை  அதில்  ஈடுபடுத்த  எனக்கு விருப்பம் இல்லை , ஏதாவது  வெளிநாட்டுக்கு  உங்களை  அனுப்பி  வைக்கிறேன்  என  பிரபாகரன்  வீரப்பனிடம்  சொன்னதாக  வீரப்பன்  முத்து  லட்சுமியிடம்  சொன்னானாம் 


28  2004 ஆம்  ஆண்டு  போலீசாரால் வீரப்பன்  கொல்லப்பட்டான். கண்  ஆபரேஷனுக்காக  ஆம்புலன்சில்  வந்த  போது போலீசின்  திட்டத்தால்  அந்த  மரணம்  நிகழ்ந்தது. ஆனாலும்  இந்த  சாவில்  மர்மம்  இருப்பதாக  சொல்லப்படுகிறது


29  வீரப்பன் 2004 ஆம்  ஆண்டு  கொல்லப்பட்ட  போது  அவன்  வயது 52. அவனைப்பிடிக்க  தமிழக - கர்நாடகா  போலீஸ்   ஃபாரஸ்ட்  ஆஃபீசர்ஸ்  மொத்தம் 5000  பேர்  பணியில்  ஈடுபட்டார்கள் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  யூ  தான்  , காட்சி  ரீதியாக  எதுவும்  இல்லை , வீரப்பன்  கேசட்டில்  அனுப்பிய  செய்தியில்  மட்டும்  போலீசை  திட்டும்  கெட்ட  வார்த்தைகள்  3  இடங்களில்  உண்டு 


தனிப்பட்ட  முறையில்  என்  சந்தேகங்கள் 

1   வீரப்பனின்  மனைவி 8  மாத  கர்ப்பமாக  இருந்தபோது  சரண்டர்  ஆகி  இருக்கிறார். ஆனால்  அவரை  பொறியாக  வைத்து  வீரப்பனைப்பிடிக்க  எந்த  முயற்சியும்  போலீஸ்  எடுக்க  வில்லையா?


2   ஒரு  குழந்தை  பிறந்த  பின்  குழந்தையை  பெற்றோரிடம்  கொடுத்து விட்டு  நீ காட்டுக்கு  வா  என  வீரப்பன்  சொன்னதும்  முத்து  லட்சுமி  போய் இருக்கிறார். அவரை  கண்காணிக்க  போலீஸ்  ஆள்  போடவே  இல்லையா?  என்னை  போலீஸ்  ஃபாலோ  பண்ணவும்  இல்லை , கண்டுக்கவும்  இல்லை  என  முத்து லட்சுமியே  பேட்டியில்  கூறி  இருக்கிறார்.


3  ராஜ்குமார்    கடத்தலில்  வீரப்பனுக்கு  அஃபிஷியலாக  100  கோடி  ரூபாய்  தரப்பட்டதாகக்கூறப்படுகிறது . அது  தமிழக  , கர்நாடக  அரசின்  50%  50%  பங்கா?  ராஜ்குமார்  ஃபேமிலி  கொடுத்த  பணமா?  என்பது  குறித்து  தெளிவான  தகவல்கள்  இல்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  போர்  அடிக்காமல்  போகும்  க்ரைம்  டாக்குமெண்ட்ரி  டிராமா .  ஆண்களுக்குப்பிடிக்கும்  . ரேட்டிங் 2. 5 / 5 


The Hunt for Veerappan
Release poster
GenreTrue crime docuseries
Based onVeerappan
Directed bySelvamani Selvaraj
ComposerJhanu
Country of originIndia
Original languagesEnglish
Tamil
Kannada
No. of episodes4
Production
ProducerApoorva Bakshi
CinematographyMonisha Thyagarajan
Udit Khurana
David Bolen
Gururaj Dixit
Production companyAwedacious Originals
Release
Original networkNetflix
Original release4 August 2023