Friday, July 21, 2023

தீர்க்கதரிசி (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( சஸ்பென்ஸ் த்ரில்லர் )@ அமேசான் பிரைம்


 பிஜி  மோகன் , எல் ஆர்  சுந்தர  பாண்டி  ஆகிய  இரண்டு இயக்குநர்க்ளும்  இணைந்து  சத்யராஜை நம்பி  களத்தில்  இறங்கி  இருக்கிறார்கள் . பர பரப்பாக  ஓடும்  திரைக்கதை , பிரமாதமான  எடிட்டிங் , க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  இவை  மூன்றும் மட்டுமே  ஒரு  படத்தைக்காப்பாற்றுமா? என்பதைபார்ப்போம்  


ஸ்பாய்லர்  அலெர்ட்


காவல்  துறை  கட்டுப்பாட்டு  அறைக்கு  ஒரு  மர்ம்  டெலி ஃபோன்  கால்  வருகிறது . நக்ரின்  முக்கியமான  பகுதியைக்குறிப்பிட்டு  அங்கே  ஒரு கொலை , தற்கொலை , விபத்து  நடக்க  இருப்பதாக  அடுத்தடுத்து  தகவல்  வருகிறது . ஆரம்பத்தில்  அது  ஏதோ  அனாமதேயக்கால்  என  அலட்சியப்படுத்தும்  போலீஸ்  அந்தக்குரல்  சொன்னபடி ஒவ்வொரு  நிகழ்ச்சியும்  உண்மையில்  நடப்பதைப்பார்த்து  அதிர்ச்சி   அடைகிறது


இந்த  மர்மக்குரல்   நடக்க  இருப்பதை  முன்  கூட்டியே  அறிவிக்கும்  தீர்க்க  தரிசி  என  மக்களிடையே  பாராட்டு பெறுகிறார்., ஏனெனின்  போலீசுக்கு  தகவல்  தெரிவிக்கும் முன்பே  அந்த  நபர்  மீடியாக்களுக்கும்  தெரிவித்து  விடுகிறார்


 இந்த  மர்மக்குரலோன்  யார்?  நடக்கும்  க்ரைம்களுக்கும் இவனுக்கும்  என்ன  சம்பந்தம் ? இவன்  நிஜமாகவே  தீர்க்க  தரிசியா? அல்லது இவன்  தான்  மெயின்  வில்லனா? இவனே  ஃபோன்  பண்ணி  தகவல்  சொல்லி  விட்டு  கொலை , விபத்தை  நிகழ்த்துகிறானா? என்பதை  எல்லாம்  கண்டு  பிடிக்க  ஒரு ஸ்பெஷல்  போலீஸ்  டீம்  அமைக்கப்படுகிறது.  அவர்கள்  கண்டு பிடித்தார்களா? இல்லையா?  என்பது  மீதி  திரைக்கத

காவல் துறை  கட்டுப்பாட்டு  கணிணி  அறையில்  அதிகாரியாகப்பணியாற்றுபவராக  ஸ்ரீமன்  ஆரம்பக்கட்ட  பரபரப்புக்காட்சிகளில்  பாராட்டுப்பெறுகிறார். அவரது  மனைவியாக  தேவதர்சினி  கச்சித,மான  நடிப்பு


இந்தக்கேசை  விசாரிக்கும்  போலீஸ்  ஆஃபீசர்களாக துஷ்யந்த்  ராம்குமார்  மற்றும்   ஜெய்வந்த் இருவருக்கும்  குறை  சொல்ல  முடியாத  நடிப்பு .  டெபுடி  கமிஷனர்  ஆக  அஜ்மல்  கேரக்டருக்கு  ஏற்ற  கம்பீரத்துடன் , வேகத்துடன் , துடிப்புடன்  படம்  முழுக்க  வந்தாலும்  அவருக்கு  வாய்ப்புகள்  குறைவே 


 இது  சைக்காலஜிக்கல்  த்ரில்லரா? க்ரைம்  த்ரில்லரா? என  ஆடியன்சை  குழப்பும்  வகையில்  மன  நல  மருத்துவராக  ஒய்  ஜி மகேந்திரன்  கேர்க்டர்  டிசைன்  அமைந்துள்ளது . ஆரம்ப  கட்டப்படங்களீல்  மொக்கையான  காமெடி  கேரக்டர்கள்  செய்து  சிரிப்பே  வராமல்  ஒப்பேத்தும்  ஒய் ஜி  மகேந்திரன்  இது  போன்ற  கேரக்டர்களில்  நடிப்பது  ஆறுதல் 


 குரல்  மூலம்  கம்பீரமாக  அறிமுகம்  ஆகி க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டை  ஏற்படுத்தும்  சத்யராஜ்  முக்கியமான  பங்களிப்பை  செய்து  இருக்கிறார். அவருக்கு  ஜோடியாக  பூர்ணிமா பாக்யராஜ் 


மெயின்  க்தைக்கு  சம்ப்ந்தமே  இல்லாமல்  சைடு  காமெடி  டிராக்  செய்யும்  இமான்  அண்ணாச்சி  எடுபடவில்லை 


பி  சதீஷ்  குமாரின்  திரைக்கதையில்  நல்ல  வேகம், சரக்கு  இருக்கிறதோ  இல்லையோ  படம்  செம  ஸ்பீடாக  நகர்கிறது ஜெ  ல்ட்சுமணனின்  ஒளிப்பதிவும்  ஜி  பாலசுப்ரமணியின்  இசையும் படத்துக்கு  பக்க  பலமாக  இருக்கின்றன


சபாஷ்  டைரக்டர்


1 ஒரு  குறும்படமாக  எடுக்க  வேண்டிய  ஒன்  லைன் ஸ்டோரியை  2  மணி  நேரப்படமாக  சுவராஸ்யமாக  இழுத்த விதம்

2   க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  ரோலுக்கு  சத்யராஜை  தேர்ந்தெடுத்த  முடிவு 


3  கே  ரஞ்சித்தின்  அட்டகாசமான  எடிட்டிங் 


  ரசித்த  வசனங்கள் 

1போலீஸ்காரன்னா  தப்பு  நடந்த  பின் தான்  கண்டு பிடிக்க  முடியும் , தப்பு  நடக்காம  பார்த்துக்கறது  பொதுஜனங்க  கைல  தான்  இருக்கு 

2  அவர்  சொல்றதெல்லாம்  நடக்குதா? ந்டக்கறதை  சொல்றாரா? சொல்லிட்டு  அவரே  அதை  எல்லாம்  நடத்தறாரா?

3 நாம்  சிலரிடம்  பேசும்போது நம்மையும்  அறியாம  அவங்க  மேல  அபரிதமான  நம்பிக்கை  வெச்சுடறோம்


4  தூக்கம்  பல  வியாதிகளை குணப்படுத்தும்

5   பிறக்கும்போதே  அந்தஸ்தோட பிறப்பவங்களை  விடு. அந்த  அந்தஸ்துக்காக போராடி  ஜெயிச்சவங்க  சிலர்தா


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -     டி வி  யில்  போட்டால்  பார்க்கலாம்  என்ற  அளவு  சராசரியான  படம்  தான் ., ரேட்டிங் 2.25 / 5 


Theerkadarishi
Theerkadarishi.jpg
Theatrical release poster
Directed by
  • P.G. Mohan
  • L.R. Sundarapandian
Written byB Sathishkumar
Produced byB Sathishkumar
Starring
CinematographyJ. Lakshmanan
Edited byRanjeet.C.K
Music byG. Balasubramanian
Release date
  • 5 May 2023
CountryIndia
LanguageTamil

Thursday, July 20, 2023

மோகம் முப்பது வருசம் (1976) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா )

 


எழுத்தாளர்    இதயம்  பேசுகிறது  மணியன்  ஆனந்த  விகடன்  வார  இதழில்  தொடர்கதையாக்     எழுதி  பின் நாவல்  வ்டிவில்  வந்த  கதையை  அதே  டைட்டிலில்  படம்  ஆக்கினர் ., நாவலுக்குக்கிடைத்த  அதே  வரவேற்பு  படத்திற்கும்  கிடைத்தது iஇயக்குநர்  மகேந்திரன்  இதற்குத்திரைக்கதை  எழுத  எஸ்  பி  முத்துராமன்  இயக்கினார் . எந்த  வித  கட்சும்  இல்லாமல் சென்சார்  ஏ  சர்ட்டிஃபிகேட்  கொடுத்தார்கள்

 கமல்  அறிமுகம்  ஆன  களத்தூர்  கண்ணம்மா  வில்  அசிஸ்டெண்ட்  டைரக்டராகப்பணி  ஆற்றிய  எஸ்  பி  முத்துராமன் 1972;ல்  தனது  முதல்  படமான  கனிமுத்துப்பாப்பா  வை  இயக்கினார் . 1976ல்  ஒரு  ஊதாப்பூ  கண்  சிமிட்டுகிறது  என்ற  வெற்றிப்ப்டத்தை  இயக்கினார், அதே  ஆண்டில்  அடுத்த  படம்  இந்த  மோகம்  முப்பது  வருசம் ., அடுத்த  பட்மாக  ஆடுபுலி  ஆட்டம்  கமர்ஷியலாக  இதை  விட  நல்லாப்போனது  காரணம்  அதில்  ரஜினியும்  இருந்தார்


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகியின்  அம்மா, அப்பா  இருவரும்  திருமணம்  ஆகி  முப்பது  வருடங்கள்  ஆகியும்  இன்னமும்  அன்பும் , நெருக்கம்  மாறாமல்  மனம்  ஒத்த  தம்பதிகளாக  வாழ்கின்றனர் . ஓப்பனிங்  சீன்லயே  அவர்க்ளது  வெற்றிகரமான  திருமண   வாழ்க்கை  கொண்டாடப்படுகிறது


 அவர்களுக்கு  திருமண  வயதில்  ஒரு  மகள் , மகளை  வளர்த்தவர்  அப்பாவின்  சகோதரி. இவர்  சிறு  வயதிலேயே  விதவை  ஆனவர். கண்டிப்பாக  நாயகியை  வளர்க்கிறார்


இப்போது  நாயகன், நாயகி  திருமணம்  நடைபெறுகிறது. கல்யாண  முகூர்த்தம்தான்  நடக்கிறது , சாந்தி  முகூர்த்தம்  நடக்கவிலலை. பொதுவாக  பெண்ணின்  அம்மா  பெண்ணுக்கு  சமையல் , மையல்  இரண்டையும்  சொல்லிக்கொடுத்து   வளர்த்திருக்க  வேண்டும். ஆனால்  வளர்த்தது  அத்தை  என்பதால்  பெண்  அப்பாவியாக  வளர்ந்து  விட்டார்

இத்னால் உலக  நடப்புக:ளை  அறிய  தன்  மனைவி  வேலைக்குப்போனால்  நல்லது  என  நாயகன்  நினைக்கிறார்

நாயகனின் ந்ண்பர்  ஒரு  ஓவியர். மணம்  ஆனவர் . அவரது  மனைவி  நாயகனின்  கம்பெனியில்  ஆஃபீஸ்  கேர்ள்  ஆக  பணி  புரிகிறார்.  ஓவியர்  ஆன  நண்பன்  ஆஃபீசில்  நாயகனின்  மனைவி  பணி   புரிகிறார்

ஓவியர்  ஆன  நண்பர் தன்  ,மனைவியை  சரியாக  கவனிப்பதில்லை.மனைவிக்கு  பெரிய  குறை. நாயகன்  தன்  மனைவி  தன்னை  கவனிப்பதில்லை  என்பதை  ஆஃபீசில்  நாயகனின்  நண்பனின்  மனைவியிடம்  பகிர்கிறார்


நண்பனின்  மனைவி யும், நாயகனும்  தப்பு  செய்யும்  சூழல்  ஒரு  நாள்  வருகிறது . அப்போது  என்ன  நடந்தது ? நாயகனின் குரு  சீரியஸ்  ஆக  இருப்பதாக  தந்தி  வர  அங்கே  போன  நாயகன்  குரு  இறந்ததும்  அவர்  வேண்டுகோளுக்கிணங்க  அவரது  ஒரே  மகளை  தன்  வீட்டுக்கு  அழைத்து  வருகிறார். அந்தப்பெண்ணுக்கு  நாயகனைக்கல்யாணம்  செய்ய  ஆரம்பத்தில்  இருந்தே  ஆசை . அவரது  ஆசை  நிறைவேறியதா?  என்பது  பின்  பாதி  திரைக்கதை 

அப்பாவிப்பெண்  கஸ்தூரி  ஆக  சுமித்ரா. இழுத்திப்ப்போர்த்திக்கொண்டு  படம்  முழுக்க  குணச்சித்திரக்குன்றாக  வருகிறார் ,நல்ல  நடிப்பு 


நாயகன்  ரமேஷ்  ஆக  காதல்  இளவரசன்  கமல் .இவர் ஒரு  படத்தில்  ஒரு நாயகி  என்றால் ஒத்துக்கொள்ள  மாட்டார்  என  நினைக்கிறேன், எனக்குத்தெரிந்து  இவரது  படங்களில்  எப்போதும்  பன்மையில்  தான்  பெண்மை . இதில்  மூன்று  ஜோடிகள் 


நாயகனின்  நண்ப்ன்  கம்  ஓவியன்  ஆக விஜயகுமார், அவரது  மனைவி  மேனகாவாக  ஃபடாஃபட்  லட்சுமி .  இருவரது  நடிப்பும்  கச்சிதம் 

நாயகன்  மீது  ஆசைப்படும்  பாமவாக  ஸ்ரீப்ரியா . மாறுபட்ட  நடிப்பு 


நாயகனின்  மாமனார் - மாமியார்  ஆக  மேஜர்  சுந்தர்  ராஜன் -  சுகுமாரி  ஜோடி . நெருக்கமான  காட்சிகள்  கொஞ்சம்  ஓவர்  தான் 

விஜயபாஸ்கர்  இசையில்  நான்கு  பாடல்கள், அவற்றில்  இரண்டு  பாடல்கள்  ஹிட்

இரண்டு  மணி  நேரத்தில்  ஷார்ப்  ஆக  கட்  செய்து  இருக்கிறார்கள்  ஆர்  விட்டல்  மற்றும்  தாமோதரன் 

மகேந்திரனின்  தெளிவான  திரைக்கதையை  எஸ்  பி  முத்துராமன்  லாவகமாக  இயக்கி  இருக்கிறார்  


சபாஷ்  டைரக்டர்

1  சுவராஸ்யமான  முடிச்சு  போட விருப்பம்  இல்லாத  கணவன், ஏங்கும்  மனைவி  என  ஒரு ஜோடி ,   விருப்பம்  உள்ள  கணவன், ஆர்வம்  இல்லா  மனைவி  என  இரு  வேறு  ஜோடிகளை  களம்  இறக்கியது  சுவராஸ்யம்


2  கூடுத்ல்  அட்ரக்சனுக்கு  ஸ்ரீப்ரியா  கேரக்டர் 

3   தான்  மனம்  தடுமாற  இருந்ததாக  மனைவியே  கணவனிடம்  தைரியமாகப்பேசுவது  கே  பாலச்சந்தர்  டச். எஸ்  பி  முத்துராமன்  வெல்டன் 

4  கத்தி  மேல்  நடப்பது  போன்ற  திரைக்கதை 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1   எனது  வாழ்க்கைப்பாதையில்  எரியும்  இரண்டு  தீபங்கள் 

எண்ணெய்  இல்லை  ஒன்றிலே , என்ன  இல்லை  ஒன்றிலே


2 சங்கீதம்  ராகங்கள்  இல்லாமலா? சந்தோஷம்  சம்சாரம்  இல்லாமலா?

3 இருபது  வயதென்னும்  இளமையில்  வாழ்வின்  சுகங்களை  அறிவதே  இன்பம்

4 மோகம்  முப்பது  வருசம்  


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  பாமா  கேரக்டர்   தற்கொலை  செய்து  கொள்வது  அபத்தம். அவருக்கு  நல்ல  முடிவு  தந்திருக்கலாம்


2  மகளை  மனமாற்றத்துக்கு  உட்படுத்த  மகளின்  பெற்றோரே  நெருக்க,மாக  இருப்பதாக  காட்டிக்கொள்வது  ஓவர்  

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+  படம் தான் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  டைம்  பாஸ்  கேட்டகிரியில்  சேர்க்கலாம் . 2  பாட்டு  ஹிட் . பார்க்கலாம்  ரேட்டிங் 2. 5/ 5 


Mogam Muppadhu Varusham
Poster
Directed byS. P. Muthuraman
Screenplay byMahendran[1]
Based onMogam Muppadhu Varusham
by Maniyan
Produced byM. Shanthi Narayanan
Starring
CinematographyBabu
Edited byR. Vittal
N. Damodaran
Music byVijaya Bhaskar
Production
company
Sornambika Productions
Release date
  • 27 November 1976
Running time
118 minutes
CountryIndia
LanguageTamil

Wednesday, July 19, 2023

AFWAAH(2023) - ஹிந்தி - சினிமா விமர்சனம் ( பொலிட்டிக்கல் மிஸ்ட்ரி த்ரில்லர் ) @ நெட் ஃபிளிக்ஸ்


AFWAAH  என்ற  சொல்லுக்கு  ரூமர் ( புரளி) என்று  அர்த்தம் , சமூக  வலைத்தளங்களான  ஃபேஸ் புக் , ட்விட்டர், யூ  ட்யூப் , இன்ஸ்டாகிராம்  ஆகிய  தளங்களில்  வைரல்  ஆகும்  விஷயங்களை  நம்பாதீர்கள் , கண்ணால்  காண்பது பொய் , தீர  விசாரிப்பதே  மெய்  என்ற  வரி தான்  கதைக்கரு . இது  2023  மே 5  அன்று  திரை  அரங்குகளில்  வெளியாகி  வெற்றி  பெற்ற படம், நெட்  ஃபிளிக்ஸ்  ஓடிடி  தளத்தில்  ஜூன் 30  2023  முதல்  காணக்கிடைக்கிறது


  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகியின்  அப்பா  பெரிய  அரசியல்  தலைவர் . நாயகிக்கு திருமணம்  நிச்சயம்  ஆகிவிட்டது . இவரும்  அரசியல்வாதிதான்.இன்னும்  15  நாட்களில்  திருமணம்  நிகழ  இருக்கிறது என்னும்  சூழலில் நாயகியின்  வருங்கால  மாப்பிள்ளை  கலந்து கொள்ளும்  அரசியல் மீட்டிங்  நடக்கும்  இடத்தில் சிறிய  கலவரம்  நடக்கிறது . வருங்கால  மாப்பிள்ளைக்கு  தலையில் சின்னக்காயம்  ஏற்படுகிறது . சுமூகமாகப்பேசித்தீர்க்க   வேண்டிய  பிரச்சனை  அது . ஆனால்  வருங்கால  மாப்பிள்ளை தான் வில்லன்


அவன்  சூழ்நிலையை  தனக்கு  சாதகமாகப்பயன்படுத்த பெரிய  கலவரத்தை  தன்  அடியாட்கள்  மூலம்  அரங்கேற்றுகிறான். வில்லனின்  அடியாட்கள்  பலரைக்கொன்று  குவிக்கும்  காட்சி  சோசியல்  மீடியாக்களில்  வைரல்  ஆகி  எல்லொருக்கும்  தெரிந்து  விடுகிறது . நாயகி  வில்லனிடம்  வாக்குவாதம்   செய்கிறாள், பயன்  இல்லை ., அரசியல்  ஆதாயத்திற்காக  எது  வேண்டுமானாலும்  செய்வேன்  என்கிறான்  வில்லன்.


 இதனால்  ,மனம்   உடைந்த  நாயகி  தன்  அப்பாவிடம்  ஃபோனில்  தகவல் சொல்லி  விட்டு  வீட்டை  விட்டு  ஊரை  விட்டு  வெளியேறுகிறாள். திருமணத்தில் நாயகிக்கு  இஷ்டம்  இல்லை 


 நாயகன்  ஒரு  சாமான்யன் . நாயகி  வீட்டை  விட்டு  ஓடியதற்கும்  நாயகனுக்கும்  சம்பந்தம்  இல்லை . நாயகியை  வில்லனின்  ஆட்கள்  துரத்தும்போது  நாயகன்  எதேச்சையாக  நாயகிக்கு  உதவுகிறான். நாயகன் , நாயகி  இருவரும் இணைந்து  நிற்கும்  காட்சியை  வீடியோ  எடுத்து சோசியல்  மீடியாக்களில்  வைரல்  ஆக்கி  பொய்யான  தோற்றத்தை  வில்லன்  உருவாக்குகிறான்


 நாயகி  இந்து . நாயகன்  முஸ்லீம் , மணம்  ஆகி  மனைவி  உண்டு , ஆனால்  ஒரு  முஸ்லீம்  பையன்   தலைவரின்  இந்துப்பெண்ணை கடத்திக்கொண்டு  செல்கிறான் . இது  லவ்  ஜிகாத் . இதை  தடுக்க  வேண்டும்  என  வில்லன் தூண்டி  விடுகிறான்


போலீஸ்  ஆட்கள் , வில்லனின்  அடியாட்கள்    அனைவரும்  நாயகன் , நாயகி  இருவ்ரையும்  துரத்துகிறார்கள் . இந்த  சேசிங்கில்  அவர்கள்  தப்பித்தார்களா? மாட்டிக்கொண்டார்களா ? என்பதுதான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  நவாசுதீன்  சித்திக்  சாதாரண  நபராக  வருகிறார். ஓப்பனிங்  சீனில்  அவர்  எப்படி  ஃபாரீனில்  புகழ்  பெற்றார்  என்ற  அறிமுகக்காட்சி  அமர்க்களம் . அதற்குப்பின்  அவர்  பெரிய  அளவில்  சாக்சம்  ஏதும்  செய்யாமல்  இயல்பான  நபராக  கதையின்  நாயகனாக  மட்டும்  உலா  வருகிறார் 


 நாயகி  ஆக  பூமி பட்னேகர் .. வில்லனின்  மேல்  அவர்  காட்டும்  ஆவேசம்  அருமை . முழுக்கதையும் இவரைச்சுற்றியே  பயணிப்பதால்  நாயகனை  விட  நாயகிக்கே  அதிக  காட்சிகள் 


 மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லாத  ஆனால்  சுவராஸ்யமான  போலீஸ்  ஆஃபீசர் - லேடி  போலீஸ்  கான்ஸ்டபிள்  கிளைக்கதை  அருமை .  ஆரம்பத்தில்  ஹையர்  ஆஃபீசர்  காண்ஸ்டபிளை  மிரட்டிக்கொண்டே  இருப்பதும், க்ளைமாக்ஸ்  டைமில்  அவருக்கு  எதிரான  ஒரு  சாட்சி  கிடைத்ததும் லேடி  கான்ஸ்டபிள்  ஹையர்  ஆஃபீசரை  மிரட்டுவதும்  கைதட்டல்  பெறும்  காட்சி 


மாரிக்கோ  விடால்  தான்  ஒளிப்பதிவு .  ஏரியல்  வியூ  ஷாட்களில்  முத்திரை  பதிக்கிறார்அட்டானு  முகர்ஜி  தான் எடிட்டிங்  . 2  மணி  நேர,மே  ஓடும் அளவு  கச்சிதமான  ட்ரிம்மிங்  கரேல்  ஆண்ட்டனின்  இசையில்  பாடல்  ஓக்கே  ரகம், பின்னணி  இசை  விறுவிறுப்பு  திரைக்கதை இயக்கம்  சுதீர்  மிஸ்ரா


  ரசித்த  வசனங்கள் 


1  மக்களோட  ரத்தத்தில்  வன்முறை  ஊறி  இருக்கு , அவங்களும்  இதை  விரும்பறாங்க 


2 எந்த சூழ்நிலை  வந்தாலும்  அதை  தனக்கு  சாதகமா  ஆக்கிக்கறவன் தான்  அரசியல்வாதி 


3   உனது கவனமெல்லாம்   பயணத்தில்தான்  இருக்கனும், டெஸ்டினேஷனில்  அல்ல 


4  ஏற்கனவே  ஒரு  கிட்னியை  வித்தவன்  நான்,  எனக்கு  என்ன்  பயம் ? சரியான  விலை  கிடைச்சா என்  ரெண்டாவது  கிட்னியையே  விப்பேன் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  கொலை  பண்ண  பிளானோட  கிளம்பறவன்செல்  ஃபோனை  சைலன்ட்  மோடில்  வைக்க  மாட்டானா? கால்  வரும்போது  ரிங்க்  டோன்  காட்டிக்கொடுக்கும்னு  தெரியாதா? 


2  நாயகன்  வேறு  ஒரு  நண்பரின்  ஃபோனிலிருந்து  தன்  மனைவிக்கு  கால்  பண்றார், புது  நெம்பர்  என்பதால்  மனைவி  அதை  கட்  பண்றார். நான்  தான்  பேசறேன் , ஃபோன்  அட்டெண்ட்  பண்ணு  என  மெசேஜ்  அனுப்பி  இருக்கலாமே? 


3   ஒருபோலீஸ்  ஆஃபிசர் ஒரு ஆளைக்கொலை  பண்ணப்போறார். ஆள்  முகத்தைப்பார்த்து  இவன் தானா?னு  கன்ஃபர்ம்  பண்ணிட்டு  கொல்ல  மாட்டாரா?  ஆளே  இல்லாத  பண்ணைல  ஒரே  ஒரு  ஆள்  இருக்கான்,  அவனை  முகத்தைக்கூட பார்க்காம  கொன்னுடறாரு , ஆள்  மாறாட்டம் 


4  க்ளைமாக்ஸ் ல  பல  வாகனங்கள்  நாயகன்  , நாயகி  பயணிக்கும்  லாரியை  சேஸ்  பண்ணிட்டு  வர்றாங்க . அவங்க  என்னடான்னா  லாரியை   ஒரு  இடத்துலநிறுத்தி  தன்னிலை  விளக்க  வீடியோ  எடுத்து  ட்விட்டர்ல  அப்டேட்  பண்ணிட்டு  இருக்காங்க . லாரி ல  ட்ராவல்  பண்ணிட்டே  அதை  செய்யலாமே? அவார்டு  ஃபிலிமா  எடுக்கறாங்க? ஷேக்  ஆகாம  இருக்கனும், தெளிவா  இருக்கனும்னு  அவசியம்  இல்லையே?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன் யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -    நவாசுதீன்  சித்திக்  ரசிகர்களுக்கு  ஏமாற்றமாக  இருக்கும். திரைக்கதை, இயக்குநருக்குத்தான்  வாய்ப்பு . ஒர்த்  டூ வாட்ச்  . ரேட்டிங்  2.5 / 5 




Afwaah
Afwaah film poster.jpg
Theatrical release poster
Directed bySudhir Mishra
Written bySudhir Mishra
Nisarg Mehta
Shiva Bajpai
Produced byAnubhav Sinha
Starring
CinematographyMauricio Vidal
Edited byAtanu Mukherjee
Music byKarel Antonin
Distributed byAA Films (India)
Reliance Entertainment (International)[1]

Tuesday, July 18, 2023

ஊருக்கு உழைப்பவன் (1976) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி மெலோ டிராமா )

 


சித்த  லிங்கய்யா  எழுதி  இயக்கிய   பாலு பெலகிது(1970)  என்னும்  கன்னடப்படம்  மெகா  ஹிட்  ஆனது . அதன்  தெலுங்கு  ரீமேக் ஆன  மஞ்சிவாடு (1974)ஹிட் ஆனது , ஹிந்தி  ரீ மேக்  ஆன  ஹம் சக்கல்  (1974)  சூப்பர்  டூப்பர்  ஹிட் , ஆனால்  தமிழ்  ரீ மேக்  கன்னடம், தெலுங்கு , ஹிந்தி  ஆகிய  மொழிகளில்  பெற்ற  பிரம்மாண்டமான  வெற்றியைப்பெறவில்லை . இருந்தாலும்  எம் ஜி ஆர்  படங்கள்  வசூலில்  மோசம்  போனதில்லை  என்ற அளவில்  முதலுக்கு  மோசம்  இல்லாமல்  ஓடிய  படம் 


 எம்  ஜி  ஆர் படப்பாடல்களில்  வழக்கமாக  இருக்கும்  ஓப்பனிங்  தத்துவ  சாங்  இதில்  இல்லை .டி எம்  எஸ் வாய்ஸ்  இல்லை ,எமர்ஜென்சி  டைமில்  வந்ததால்  சென்சாரின்  கத்திரி  விளையாடி  இருக்கும் . நாளை  நமதே  படத்தில் தான்  நாளை  நமதே  இந்த  நாளும்  நமதே  என்ற  பாடல்  ரிப்பீட்டாக  மூன்று  முறை  வரும் , இப்படத்தில் அந்த  சாதனை  முறியடிக்கப்பட்டு  இரவுப்பாடகன்  ஒருவன்   என்ற  பாட்டு  5  இடங்களில்  வரும் 


இந்தப்படத்தை  பட்டி  டிங்கரிங் பண்ணி தான்  விஜய்காந்த்  நல்லவன்  என்ற  படத்திலும் ரஜினி  வீரா  என்ற  படத்திலும்  நடித்தார்கள் 


 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனுக்குத்திருமணம்  ஆகி  மனைவி ,குழந்தை  என  மகிழ்ச்சியாக  வாழ்ந்த  கட்டத்தில்  குழந்தை  ஒரு  விபத்தில் சிக்க   அதைப்பர்த்து  அதிர்ச்சியில்  மனைவி  மனநலன்  பாதிக்கப்படுகிறார். குழந்தை  உயிர்  பிழைக்கிறது . ஆனால்  மனைவிக்கு  எந்த  அதிர்ச்சியான  செய்தியும் சொல்லக்கூடாது  என  டாக்டர்   சொல்லி  விடுகிறார் 


நாயகனைப்போலவே  உருவ  ஒற்றுமை  உடைய  நபர்  ஒருவர்  இருக்கிறார்.அவர்தான்  நாயகனின்  குழந்தையை  விபத்தில்  இருந்து  காப்பாற்றியவர் , நாயகன்  பெயர் செல்வம், அவரைப்போலவே  இருப்பவர்  ராஜா 


காஞ்சனா என்னும்  ஏழைப்பெண்  தனிமையில்  குடிசையில்  வசிப்பதால்  அவளை  ஒருவன்  தொந்தரவு  செய்கிறான். அப்போது  அந்த  வழியாக  வந்த ராஜா  ( நாயகனைப்போலவே  உருவ  அமைப்பில்  இருப்பவன் ) காப்பாற்றுகிறார். ஆனால்  சமூகம்  இவர்கள்  இருவரையும்  இணைத்துத்தப்பாகப்பேசுகிறது . அதனால்  சமூகத்தின்  வாயை  அடைக்க  ராஜா  காஞ்சனாவைத்திருமணம்  செய்து  கொள்கிறர். இருவருக்கும்  ஒரு  குழந்தை  பிறக்கிறது 


அப்போதுதான்  காஞ்சனா  ராஜாவிடம்  நீங்கள்  எங்கே   வேலை  செய்கிறீர்கள்  என  கேட்க எஸ்டேட்டில்  பணி  புரிவதாக  ராஜா  சொல்கிறான். 


செல்வம்  ஒரு  போலீஸ்  ஆஃபீசர் . ஒரு  கேஸ்  விஷய்மாக  அவர்  ஜெயிலில்  கைதியாக  நடிக்க  வேண்டி  இருப்பதால்  அவரைப்போலவே  இருக்கும்  ராஜா  இரு  இடத்திலும்  நாடகம்  போட்டு  சமாளிக்க  வேண்டிய  சூழல் 


இதனால்  ஏற்படும்  குடும்பக்குழப்பங்கள்  தான் மீதிக்கதை 


நாயகன்  ஆக  எம்  ஜி ஆர்  இரு  வேடங்களில்   நடித்து  இருக்கிறார். வழக்கமான  அவர்  துள்ளல்  பாடல்கள்  இல்லாதது  பெரிய  மைனஸ் , எம்  ஜி ஆர்  படங்களில்  பிளசே  உற்சாகமான  அவரது  தத்துவப்பாடல்கள்  தான் , அது  மிஸ்சிங்


நாயகிகள்  ஆக  வாணி  ஸ்ரீ , வெண்ணிற  ஆடை  நிர்மலா  இருவரும்  ந்டித்திருந்தாலும்  வாணி  ஸ்ரீயின்  நடிப்பு  இதில்  பெரிதும்  பேசப்பட்டது 


காமெடிக்கு  தேங்காய்  சீனிவாசன்


படத்தில்  நான்கே  பாடல்கள் , அதில்  ஒரு  பாட்டு  மட்டும்  ரிப்பீட்டாய்  ஐந்து  முறை  வரும் 


இசை  எம் எஸ்  விஸ்வநாதன் . மெலோடி  இசையை  அதிகம்  நம்பி  இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர்  ( எம்  கிருஷ்ணன்  நாயர் ) 

1  வழக்கமான  எம்  ஜி  ஆர்  பட  ஃபார்முலாவில்  இருந்து  விலகி  மாறுபட்டு  திரைக்கதை  அமைத்த  விதம்  குட்  , ஆனால்  ஒர்க்  அவுட்  ஆகவில்லை 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  அழகென்னும்  ஓவியம்  இங்கே , உன்னை  எழுதிய  ரவிவர்மன்  எங்கே? 

2  இது தான் முதல் ராத்திரி அன்பு காதலி என்னை ஆதரி தலைவா கொஞ்சம் காத்திரு

வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு

3 பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்

4 இரவுப்பாடகன் ஒருவன்

ரசித்த  வசனங்கள் 


1   சாயங்காலம்  சீக்கிரமா  வீட்டுக்கு  வரனும் 

 ஏன்? மத்தியானமே  வந்தா  ஒத்துக்க  மாட்டியா? 


(  இந்த  வசனத்தை  நான்  பேசினால்  ரசிகர்கள்  ஏற்றுக்கொள்வார்களா? என  எம் ஜி ஆர்  தயங்கினாராம் , வசனகர்த்தா   ஆர்  கே  சண்மும்  எம் ஜி ஆரை  வற்புறுத்தி  நடிக்க  வைத்தாராம் , ஆனால்  தியேட்டரில்  இந்தக்காட்சிக்கு  செம  வரவேற்பாம். சென்னை  மவுண்ட் ரோடு   ப்ளாசா வில்  ஒன்ஸ்மோர்  கேட்டார்களாம்) 

2  இவர் தான்  என்  கணவர் 


 நான்  அவர்  தாலி  கட்டிய  மனைவி 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  தன்  கணவனுக்கு  இன்னொரு  பெண்ணுடன்  தொடர்பு  உண்டு  போல  என  மனைவி  எண்ணும்போது  அப்போது  நான்  உன்  கணவனே  இல்லை  என்ற  உண்மையை  சொன்னால்  அவள்  உடல்  நலம்  பாதிக்கும்  என்ற  லாஜிக்  ஏற்றுக்கொள்ளக்கூடியதாக  இல்லை . அதுவே  பெரிய  அதிர்ச்சி  தான். அதை  ம்றைப்பதற்கு  ஓப்பன்  பண்ணி  இருக்கலாம் 


2  ஒரே  கோயிலுக்கு  ஒரே  சமயத்தில்  இரு மனைவிகளும்  போகலாம்  என  சொல்லும்போது  ஈசியாக  அதை  சமாளித்து  வேறு  கோயிலுக்கு  ஒருவரை  அழைத்துச்சென்றிருக்கலாம்  ( இதே  காட்சி  காமெடி  டிராக்  ஆக  இரட்டை  வால்  குருவி  , வீரா  ஆகிய  படங்களில்  சிறப்பாகக்கையாளப்பட்டது ) 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - இது  ரிலீஸ்  ஆன  டைமிலேயே  தோல்விப்படம், அதனால்  எம்ஜி ஆர்  ரசிகர்கள்  தவிர  பொது  ஆடியன்ஸ்  பார்ப்பதைத்தவிர்த்தல்  நலம் ., ரேட்டிங் 2 / 5 


Oorukku Uzhaippavan
Theatrical release poster
Directed byM. Krishnan Nair
Screenplay byPoovai Krishan
Produced byS. Krishnamoorthy
T. Govindarajan
Starring
CinematographyN. Balakrishnan
Edited byKrishnan-Sundharam
Music byM. S. Viswanathan
Production
company
Venus Pictures
Release date
  • 12 November 1976
Running time
146 minutes
CountryIndia
LanguageTamil

Monday, July 17, 2023

THAARAM THEERTHA KOODARAM (2023) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) @ அ,மேசான் பிரைம்


 தாரம் தீர்த்த  கூடாரம்  என்ற  டைட்டிலுக்கு   நட்சத்திரம்  கட்டப்பட்ட  விதானம் *(  THE STAR  BUILT  CANOPY )  என்று  பொருள் .இப்படம்  திரை  அரங்குகளில்  விஷூ  ரிலீஸ்  ஆக  தமிழ்ப்புத்தாண்டான  14/4/2023  அன்று  ரிலீஸ்  ஆனது , விமசகர்களின்  பாராட்டையும்  ஆடியன்சின்  வரவேற்பையும்  பெற்றது . இப்போது அமேசான்  பிரைம்  ஓடிடி  யில்  காணக்கிடைக்கிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


18  வயது  ஆன  நாயகி தன்  ஐந்து  வயதே  ஆன  தங்கையுடன்  லாட்ஜில்  தங்கி  இருக்கிறார். அப்பா  குடும்பத்தை  விட்டு  விட்டு  போய்  விட்டார் , அம்மா  வேறு  ஒரு  வாழ்க்கையை  தேடிக்கொண்டார். அம்மாவின்  கணவன் இரு  வாரிசுகளையும்  ஏற்க முன்  வராததால் நாயகி  தன்  தங்கையுடன்  தனியே  வாழ்கிறார். நாயகியின் அப்பாவால்  ஏற்பட்ட  கடன்  நிறைய  இருக்கிறது , அதற்கு  நாயகி  தான்  பொறுப்பு , விரைவில்   கடனை  அடைத்து  விடுவதாக  நாயகி  டைம்  கேட்டு  இருக்கிறார்


நாயகன்  ஃபுட்  டெலிவரி  பாய்  ஆக  வேலை  செய்கிறார். இவருக்கு  பை போலார்  டிஸ்  ஆர்டர்  நோய்  தாக்கி  இருப்பதால் குடும்பத்தாரால்  கை  விடப்பட்டவர் . இவரும்  லாட்ஜில்  ரூம்  எடுத்து  வாழ்கிறார்


ஒரே  லாட்ஜில்  தங்கி  இருப்பதால்;  நாயகன் , நாயகி  இருவருக்கும் பரிச்சயம்  உண்டாகிறது . நாயகி  போலீஸ்  கான்ஸ்டபிள்  பணிக்கு  முயற்சி  செய்கிறார். நாயகன் , நாயகி, அவள்  தங்கை  மூவரும்  ஒரே  லாட்ஜ்  ரூமில் ஒன்றாக  வசிக்கிறார்கள் 


இதற்கிடையே  நாயகியின்  கடன்  தந்த  பார்ட்டி  விரட்டிகொண்டே  இருக்கிறார்., அவர்களிடம் இருந்து  நாயகி  தப்பித்தாரா? நாயகன் - நாயகி  காதல்  கை  கூடியதா? நாயகிக்கு  போலீஸ்  வேலை  கிடைத்ததா? இவை  எல்லாம் பின் பாதி  திரைக்கதை  சொல்லும்  சேதிகள் 


நாயகன்  ஆக  கார்த்திக்  ராமகிருஷ்ணன்  மிகை  நடிப்பு  இல்லாமல்  யதார்த்தமான  நடிப்பைத்தந்திருக்கிறார். நாயகியிடம், நாயகியின்  தங்கையிடம்  அவர்  கட்டும் பரிவு  அருமை .  வில்லனிடம்  அடிபடும்போது பரிதாப்பட வைக்கிறார்


நாயகி  ஆக   நைனிதா  மரியா  குடும்பப்பாங்கான  முகம். ஒப்பனை  இல்லாத  அழகிய  முகம், கண்களாலேயே  கதை  சொல்லும்  லாவகம் , சிறப்பாக  நடித்திருக்கிறார். போலீஸ்  யூனிஃபார்மில்  கெத்தாக  இல்லை  என்பது  மைனஸ் 


நாயகின்  ஐந்து  வயது  தங்கையாக  அயன் சஜித் அஞ்சலி  பட  பேபி  ஷாம்லி போல  அசத்துகிறார். சிரிக்கும்போது  கொள்ளை  அழகு 


கோகுல்  ராமகிருஷ்ணன்  திரைக்கதை  அமைத்து  இயக்கி  இருக்கிறார். நம்ம  ஊர்  செல்வராகவன் - தனுஷ்  போல  இப்படத்தின் இயக்குநர்  , நாயகன்  இருவரு ம்  சகோதரர்கள்  போல 

இரண்டு  மணி  நேரம் ஓடும்  அளவு  க்ரிஸ்ப்  ஆக  கட்  பண்ணி  இருக்கிறார்  எடிட்டர் .,  2  மெலோடி  பாடல்கள்  போட்டிருக்கிறார்  இசை  அமைப்பாளர்  மெஜோ  ஜோசப் , நிகில்  சுரேந்திரன்  ஒளிப்பதிவு  கண்களுக்கு  இதம் 


 மிக  மெதுவாக  நகரும்  திரைக்கதை   என்றாலும்  குடும்பத்துடன்  பார்க்கத்தக்க யதார்த்தமான   லவ்  ஸ்டோரி 



சபாஷ்  டைரக்டர்

1  முன்றே  மூன்று  முக்கிய  கேரக்டர்கள் . ஒரே  ஒரு  லாட்ஜ்  இவற்றை  வைத்து 75%  படத்தை  முடித்த  லாவகம்


2  நாயகன், நாயகி  இருவரும்  திருமணமும்  ஆகாமல் ., காதலர்க்ளாகவும்  இல்லாமல்  லாட்ஜில்  ஒரே  ரூமில்  தங்கியும்  கண்ணியம்  காத்த  விதம் 


3  நாயகி ,  குழந்தை  இருவரின் அற்புதமான  இயல்பான  நடிப்பு 


  ரசித்த  வசனங்கள் 


1   ஆர் யூ  ஓக்கே?  ( நீ  நலமா? )  என  என்னைக்கேட்ட  முதல்  ஆத்மா  அவள்  தான் 


2   என்னை  மாதிரி ஆதரவில்லாத  ஆட்களுக்கு ஒரு  வாழ்க்கை  தரனும்


 சரி  நீ  அவங்களைக்காப்பாத்து , உன்னை  நான்  காப்பாத்தறேன்


3   நான்  ஒரு  யூஸ்லெஸ்  ஃபெலோனு  டாக்டர்  சொல்லிட்டார், என்னை  யூஸ்ஃபுல்  பர்சனா  மாத்த  ஒரு  வாய்ப்பு  கொடு 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 பொதுவாக  லாட்ஜ்கள் , ஹோட்டல்களில் ரூம்  சாவி  2  செட்  இருக்கும்,  ஒரு  செட்  கஸ்டமரிடம், இன்னொரு  செட்  லாட்ஜ் மேனேஜர் வசம் , ரூம்  க்ளீனிங்க்கு  துப்புரவுப்பணியாளர்  மேனேஜரிடம்  உள்ள  சாவியை  வாங்கி  ரூம் திறந்து  க்ளீன்  பண்ணுவாங்க . அதை  எப்படி  நாயகன்  சமாளிப்பார் ? 


2  ஒவ்வொரு  முறை  காலை , மாலை  குழந்தையை  ஸ்கூலுக்கு  அனுப்பும்போதும், திரும்பக்கூட்டி  வரும்போதும்  லாட்ஜ் மெயின் ஸ்விட்ச்  பாக்சை  மெயின்  ஆஃப்  பண்ணி  மேனேஜரை  அங்கே  வர  வைத்து  அந்த  கேப்பில்  வெளியே  கூட்டிப்போவது  ஒரு  நாள் , இரு  நாட்கள்  எனில்  ஓக்கே , தினசரி  இதே  சம்பவம் தொடர்ந்தால்   டவுட்  வராதா? 


3   நாலைந்து  பேர்  ஆட்கள்  கொண்ட  கந்து  வட்டி  ஃபைனான்ஸ்  கும்பலிடம்தனி  ஆளாக  நாயகன்  போய்  அடி  வாங்கி  வருவது  மடத்தனம், சும்மா  இரக்கம்  ஏற்பட  செயற்கையாய்  அமைத்த  காட்சி  மாதிரி  இருக்கிறது 


4  கொடுத்த  கடனை  திருப்பிக்கேட்கும்  ஆள்  காரில்  நாயகியிடம்  தவறாக  நடக்க  முயல்வதும்  அதற்கு  நாயகி இணங்காமல்  எதிர்த்ததும்  நாயகியைத்தாக்கியதை  நாயகி  போலீசில்  ஏன்  புகார்  தரவில்லை ? 


5 வில்லன்  நாயகியை  பைக்கில்  துரத்தி  வரும்போது  நாயகி  தன்  பைக்கால்  வில்லனின்  பைக்கை  மோதி  வில்லனை  கீழே  விழச்செய்கிறாள் , வில்லன் ஸ்டாப்ட்  அவுட்  இது  கொலை  தான், ஆனால்  இது  எதிர் பாராத  விபத்து  என  நாயகன்  சமாதானப்படுத்துகிறான். 


6  பத்திரப்பதிவு  நேரத்தில்  தான்  வேண்டும்  என்றே  ஆதார்  கார்டை  கிழித்துப்போட்டு  விட்டேன்  என  நாயகன்  சொல்லநண்பன்  அடிக்கிறான். நெட்  செண்ட்டரில்  போய்  ஆதார்  நெம்பர்  தந்தால்  புது  கார்டு  அப்பவே  டவுன் லோடு  பண்ணி  வாங்கிக்கலாமே? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பொறுமை  குணம்  கொண்டவர்கள் காண  வேண்டிய  கண்ணியமான  ஃபேமிலி  மெலோ  டிராமா , ரேட்டிங் 2.75 / 5