Wednesday, July 05, 2023

குடிமகான் (2023) -தமிழ் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா) @ அமேசான் பிரைம்

 


 டைட்டிலைப்பார்த்ததும்  இது  மதுபானக்கடை  படம்  போல  குடிகாரர்கள்  சம்பந்தப்பட்ட  படம்  என  அசால்ட்டாக  பார்க்காமல்  விட்டு  விட்டேன். இப்போது ஓடி டி  ரிலீசுக்குப்பின்  தான்  இது  கலக்கலான  காமெடிப்படம்  என்பதை  அறிந்து  பார்த்தேன். மலையாளப்படங்களில்  மட்டுமே  பார்க்க  முடிகிற  வித்தியாசமான சப்ஜெக்ட்டில்  ஒரு  காமெடிப்படம்  தந்திருக்கிறார்  இயக்குநர் பிரகாஷ் ., அதிகம்  அறிமுகம் இல்லாத  நடிகர் நடிகைகளை  வைத்தே  நல்ல  படம்  தந்திருக்கிறார் 


     ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  எந்த  கெட்ட  பழக்கமும்  இல்லாத  டீ டோட்டலர் . அவன்  தனியார்  வங்கி  ஏ  டி எம்  களில்  பணம்  நிரப்பும்  பணியில்  இருக்கிறார். ஆட்டோ  பிரேவரி  சிண்ட்ரோம்  என்னும்  வித்தியாசமான  நோய்  இவ்ருக்கு  இருக்கிறது . சாதா  ஜூஸ்  குடித்தாலோ , ஸ்வீட்  சாப்பிட்டாலோ   சரக்கு  அடித்தது  போல  போதையில்  மிதப்பார் 


 இது  இவரது  குடும்பத்துக்குத்தெரியாது , ஏன் ? நாயகனுக்கே  இந்த  விஷயம்  முதலில்  தெரியாது , சில  சம்பவங்கள்  நடந்த  பின்  தான்  தெரிய  வருகிறது . ஒரு  நாள்  ஏடிஎம்  மில்  பணம்  நிரப்பும்போது  100  ரூபாய்  ட்ரேயில்  500  ரூபாய் அடுக்கி  விடுகிறார். இதனால்  கஸ்டமர்கள்  1000  ரூபாய்   எடுக்க  வந்தால் ( 10*100)  அது  5000  ரூபாய்  தருகிறது ( 10*500) . இதனால்  வங்கிக்கு  8  லட்சம்  ருபாய்  நட்டம் . நாயகனுக்கு  வேலை போய்  விடுகிறது 


 திரும்ப  வேலை  கிடைக்க  வேண்டும்  எனில்   இழந்த  பணத்தை  எடுத்த  கஸ்டமர்களிடம்  பெற்று  வங்கியில்  அடைக்க  வேண்டும்


 நாயகனின் அப்பா  ஒரு  குடிகாரர் ., அவரிடம்  குடிப்பழக்கத்தைக்கற்றுக்கொண்ட  ஒரு  டம்மி  பீஸ்  காமெடியன்  கம்  அரசியல்வாதி  நன்றிக்கடனாக  நாயகனுக்கு  உதவ  முன் வருகிறார்


  அந்த  டம்மி  பீஸ்  அரசியல்வாதியிடம் ரெண்டு  காமெடி  எடுபுடிகள்  இருக்கிறார்கள் , இவர்கள் நால்வரும்  சேர்ந்து  எப்படி  பணத்தை  மீட்டார்கள் என்பதுதான்  இக்காமெடிப்படத்தின்  மீதி  திரைகக்தை 


நாயகன்  ஆக விஜய்  சிவன் . ஆரம்பத்தில்  தாடியோடு  தடியான  உடம்போடு  அவரைப்பார்க்கும்போது இவரா  நாயகன்  என்ற  கேள்வி  வருகிறது . போகப்போக  திரைக்கதையின்  காமெடி  சம்பவஙகளால் நமக்குப்பழகி  விடுகிறது .


நாயகியாக  சாந்தினி  தமிழரசன்  மிடில்  கிளாஸ்  மனைவியைக்கண்  முன் நிறுத்துகிறார். கணவன்  குடிகாரனோ  என  சந்தேகப்பட்டு   விளாசும் இடங்கள்  கச்சிதம் , பின் பாதியில்  ஆளைக்காணோம். இவர்  ஆல்ரெடி கே பாக்யராஜின்  சித்து  +2 , நான்  ராஜாவாகப்போகிறேன், காளிச்சரண்  படங்களில்  நடித்தவர் 


நாடோடிகள்  படத்தில் கட்  அவுட்  காமெடி  மூலம்  நமக்கு  அறிமுகம்  ஆன  நமோ  நாராயணன் இதில்  கலக்கலான  காமெடி  மொமெண்ட்களில்  நடித்திருக்கிறார். அவரது  எடுபிடிகளாக  வருபவர்கள்  செம  டைமிங் நாயகனின்  அப்பாவாக  வரும்  சுரேஷ்  சக்கரவர்த்தி  காமெடி  டயலாக்  டெலிவரியில்  அசத்தி  இருக்கிறார்


தனுஜ்  மேனன் இசையில்  பாடல்கள்  செம  ஹிட் 


சபாஷ்  டைரக்டர்


1  நாயகனின்  நண்பன்  தன்  வீட்டில்  சாப்பிடும்போது  தன்  அம்மாவிடம், தண்ணி  கொடு , சோறு  போடு  என  கேட்கும்போதெல்லாம்  அம்மாவிடம் கிடைக்கும்  மரியாதை  வித்தியாசமான  காமெடி  மொமெண்ட் 


2  லெஹரு  ஊத்து  மைல்டா  மைல்டா 

மைல்டா  ஏறும்  மால்டா  மால்டா   பாடல்  வ்ரிகள் , கொரியோகிராஃபி , அந்த  பையன்  நடன்ம்  ஆடிய  விதம்  எல்லாமே  கலக்கல்  ரகம் 


3   பணம்  தர  வேண்டிய  ஆள்  டாஸ்க்1 - ஒரு  மேரேஜ்  கோ  ஆர்டினெட்டர். பணம் தர  மறுக்க  நாயகன் அண்ட்  கோ போட்ட  ;பிளான்  படி  திருமண  மணடபத்தில்  அனைவருக்கும் குளிர்  பானத்தில்  பேதி  மருந்து  கலந்து  கொடுக்க  மண்டபமே  பாத்ரூமில்  குடி  இருக்க  கேன்சல்  ஆகும்  மேரேஜ் .  காமெடி  கலாட்டா 


4  நாள்  முழுக்க  காரில்  சுற்றி  விட்டு  நல்ல  ஐடியா  எல்லாம் ஒரு  நாளில்  வருமா? ரெண்டு  நாளில்  வருமா? என  உதார்  விடும்  காமெடி 


5  டாஸ்க்  2 -  பனை  மரம்  மாதிரி  வளர்ந்திருக்கும்  க்ந்து  வட்டிக்காரனிடம்  2  லட்சம்  வசூல்  செய்யும்  காட்சி  


6  நமோ நாராயணா , கதிரவன்  , ஹானஸ்ட்  ராஜ்  மூவரின்  காமெடி  கூட்டணி  அருமை 


7   அடியாட்களில்  ஒருவன்  என்ன  சம்பவம் நடந்தாலும்  உடனுக்குடன் நோட்ஸ்  எடுப்பது பாக்கெட்  டைரியில்  குறிப்பது  அதகளம்


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  லெஹரு  ஊத்து  மைல்டா  மைல்டா 

மைல்டா  ஏறும்  மால்டா  மால்டா 


2  பைசா  வசூலு பைசா  வசூலு   சைசா  சிரிப்போம், கொஞ்சம் நைசா 



  ரசித்த  வசனங்கள் 


1   என்னால  ஒரு  பொண்டாட்டியைக்கட்டிட்டே  சமாளிக்க  முடியலை , உன்னால  எப்படிடா  ரெண்டு  மூணு  கட்ட  முடியுது ?


 சில  பேரு  ஒரே  ஃபோன்ல  ரெண்டு  சிம் கார்டு  போட்டுக்கறாங்க , சிலர்  செல்  ஃபோனே  ரெண்டு  வெச்சுக்கறாங்க , அது  மாதிரி தான் 


2  குடிகாரர்கள்  சங்கம்  சார்பாக....


குடிக்கறதே  தப்பு , இது;ல  சங்கம்  வேற 


3  சாராயம்  குடிச்ச  வாய்  நாராசா  போகும்னு  சொல்வாங்க 


4  குடிக்காம  இருக்க  கவுன்சிலிங்க்  போகலாம் , வர்றீங்களா?


கவுன்  சிலிங் , பாவடை லிங்  எதுவும்  வர  முடியாது 


5 அண்ணே  , எனக்கு  50,000  ரூபாய்  கடன்  இருக்கு , வழிவிட்டீங்கன்னா  ஏ டிஎம் ல  இருந்து  எடுத்துட்டுப்போயிடுவேன் 


 எனக்கு  அஞ்சு  லட்சம்  ரூபாய்  கடன்  இருக்கு , பின்னால  வரிசைல  வா 


6  இந்த  வியாதியை  குணமாக்க  மருந்தே  இல்லை , உங்க  லைஃப்  ஸ்டைலை  மாத்திக்கனும்


 டாக்டர் , எனக்கு  லைஃப்  தான்  இருக்கு , ஸ்டைல் எல்லாம்  இல்லை 


7  உடம்பு  நல்லாருக்கும்  வரை  நாம  சொல்றதை  உடம்பு  கேட்கும்,  கோளாறு  ஆகிட்டா  உடம்பு  சொல்றதை  நாம  கேட்கனும் 


8  டாக்டர் , மொடாக்குடிகாரன்  எல்லாம்  70  வயசு  80  வயசு  வரை  உயிரோட  இருக்காங்க . எனக்கு  எந்த  கெட்ட  பழக்கமும்  இல்லை . இப்டி  ஒரு  வியாதி . நினைச்சதை  சாப்பிடறது  ஒண்ணுதான்  எனக்கு  கிடைச்ச  வரம், இப்போது  அதுக்கும்  ஆப்பா? 


9  இது  பேங்க், பணம் மட்டும்தான்  நாங்க  பேசும்  மொழி 


10  அப்பா    அப்பா  அப்டினு  என்னைக்கூப்பிட்டா  மண்டையை  உடைச்சிடுவேன் , எனக்கே  இப்போதான்  55  வய்சுல  ஒரு கல்யாணம்  ஆகி  இருக்கு , என்  புது  சம்சாரம்   இதைக்கேட்டா  என்னை  தப்பா  நினைக்க  மாட்டாளா? 


11  வாழ்க்கை  என்பது  ஐஸ்க்ரீம்  மாதிரி , டேஸ்ட்  பண்ணாலும்  கரைஞ்சிடும் ,  டைம்  வேஸ்ட்  பண்ணாலும்  கரைஞ்சிடும் 


12  பகவானை நம்பினோர்  கை  விடப்படார் , மனசை தளர  விடாதீங்க , இந்தாங்க  என்  விசிட்டிங்  கார்டு, பிரச்சனைன்னா  கூப்பிடுங்க 


 ஓஹோ , டாக்டர் , உங்க  பேருதான்  பகவானா? நான்  கூட  கடவுளைச்சொல்றீங்கனு  நினைச்சேன்


13  யோவ் , உனக்கு  எவ்ளோ  தடவை  சொல்றது ? உனக்கு  வேற  வேலை  இல்லையா?


 ஆமா  சார், இப்போதான்  எனக்கு  வேலை போச்சு , டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க 


14  சார்  , குடிக்கறதுக்குக்கூட  நாங்க  லோன்  தர்றோம்


 அய்யோ , டாஸ்மாக்ல  இருக்கற  எல்லாக்குடிகாரன்களும்  லைன்  கட்டி நிக்கப்போறானுங்க 


15  சார்  என்  பிரச்சனையே  இதுதான் , கூல்டிரிங்க்ஸ்  குடிச்சாக்கூட  சரக்கு  அடிச்ச  மாதிரி  போதை  ஏறிடுது 


 இது பிரச்சனை  இல்லை , வரம் . அவனவன்  போதை  ஏற  எவ்ளோ  செலவு  பண்றான் ? 


16   பாட்டில்  குனியலாம், ஆனா  குடிக்கறவன்  குனியக்கூடாது 


 பேனா  கீழே  விழுந்துடுச்சு  தலைவரே!


17  என்னைப்பற்றி  நானே  சொன்னா  நல்லாருக்காது. அகில  உலக  நிரந்த  குடிகாரர்கள்  சங்கத்தலைவன் 


18  கட்சிக்கொடி  இல்லாத  கிராமங்கள்  கூட   உண்டு , ஆனா  கட்டிங்  போடாத  கிராமமே  இல்லை 


19  பணத்தை  எடுத்த  எல்லாரையும்  அவங்க தான்  பணத்தை  எடுத்ததா  ஒத்துக்க  வைக்கனும்


 எல்லாருக்கும்  சரக்கு ஊத்திகொடுத்தா  ஒத்துக்கறாங்க , அவ்ளோ  தான்  முடிஞ்சு  போச்சு , மேட்டர்  ரொம்ப  சிம்ப்பிள் 


20  இந்த  வேலையைச்செய்ய  நீங்க சரிப்பட்டு  வருவீங்களா?னு  தெரில, ஏன்னா  காரியம்  முடியும் வரை  எல்லாரும்   தெளிவா  இருக்கனும்’’


அதுக்கென்ன? சரக்கு  போட்டா  தெளிவா  இருந்துட்டுப்போறோம் 


21  பேருக்குத்தான்  இது  காரு , உள்ளே  வந்து  பார்த்தா  சரக்கு  அடிக்கற  பாரு (BAR)


22  செ,மயா  வண்டி  ஓட்டறானே? ரேசரா  இருப்பானோ?


 போதைல  ஓட்றான். வண்டி தான்  அவனை  ஓட்டிட்டு இருக்கு   


23  குடிகாரனுக  நாமளே  60 வயசு 80 வயசு    வரை  இருக்கோம், ஆனா  எந்தப்பழக்கமுமே  இல்லாதவங்க  நாற்பதுலயே  நாக்கு அவுட் ( நாக்  அவுட்)  ஆகிடறாங்களே? ஏன் ?


 24 நான்  அந்த  விதவைப்பெண்ணுக்கு  வாழ்க்கை  கொடுக்கலாம்னு  இருக்கேன் 


 இந்த  விஷயம்  உனக்குள்ளேயே  இருக்கட்டும், அந்தப்புள்ள  கிட்டே  சொல்லிடாதே , தற்கொலை  பண்ணிக்கப்போகுது 


25 நான்  பணத்தைத்திருப்பித்தரனும்னா  ஒரு  டாஸ்க் , என்  டிரஸ்  எல்லாத்தையும்  துவைச்சு  கஞ்சி  போட்டு  அயர்ன்  பண்ணித்தானும், சும்மா  புதுசு  மாதிரி இருக்கனும்


 அதுக்குப்பேசாம  புதுசாவே  வாங்கிக்கலாமில்ல?

26  இவன்  ஒரு  ஆம்பளை , ஏன்  பொம்ப்ளை  மாதிரி  பாவாடை  கட்டிக்கரான்? இவன்  சாதா  ராஜா  இல்லை , பாவாடை  ராஜா 


27   லாஸ்ட்  டிரைவ்  போக  வேண்டிய  வயசுல  பெருசுக்கு  லொள்ளு  பார்த்தியா ? லாங்க்  டிரைவ்  போகுது  பொண்ணோட 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  பணம்  எடுத்து  ஏமாற்றிய  ஒரு  கடைக்காரர்  கடையில் ஸ்கேனிங் ஜி பே  கார்டை  மாற்றி  வைத்து  சில  கஸ்டமர்கள்  காசை  நாயகன்  வாங்கிக்கொள்கிறான்.  ஜி பே  க்ளிக்  ஆனதும்  வாய்ஸ்  மெசேஜ்  வந்த  பின்  தானே  க்ளியர்  பண்ண முடியும் ? அப்படியா  ஏமாறுவாங்க ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   புதுமுகங்கள்  படம்  என்றாலும் பரவாயில்லை , திரைக்கதை  நன்றாக  இருந்தால்  போதும்  என  நினைப்பவர்கள்  தாராளமாகப்பார்க்கலாம் , தரமான  காமெடிப்படம்   ரேட்டிங்  3 / 5 


குடிமஹான்
குடிமஹான் படத்தின் போஸ்டர்.jpg
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்பிரகாஷ் என்
எழுதியவர்ஸ்ரீ குமார்
உற்பத்திஎஸ்.சிவகுமார்
எஸ்.சுகந்தி
எஸ்.பிரபஞ்ச்
நடித்துள்ளார்
ஒளிப்பதிவுமெய்யேந்திரன்
திருத்தியவர்ஷிபு நீல் சகோ
இசைதனுஜ் மேனன்
தயாரிப்பு
நிறுவனம்
காட்சி ஊடக பணிகள்
வெளிவரும் தேதி
  • 17 மார்ச் 2023
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Tuesday, July 04, 2023

பட்டிக்காட்டுப்பொன்னையா (1973) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி மெலோ டிராமா) @ யூ ட்யூப்

 


எம் ஜி  ஆர்  + ஜெ  காம்போ  வில்  வந்த  கடைசிப்படம் இது . இந்தப்படம்  கம்ர்ஷியலாக  சரியாகப்போகவில்லை  என்றதும்  பலர்  எம் ஜி ஆரிடம்  ஜெ  இனி மேல்  ஜோடியாக  வேண்டாம்.  மக்களுக்கு  அது  சலித்து  விட்டது  என்று  கூறியதாகவும்  அதற்குப்பின்  அவர்  எடுத்த  சொந்தப்படமான  உலகம் சுற்றும் வாலிபன்  படத்தில்  நான்கு  ஜோடிகள்  இருந்தும்  ஜெ  இல்லாததற்கு  அதுதான்  காரணம்  எனவும் சொல்வார்கள் . ஸ்டண்ட்  கலைஞர்   மற்றும்  டூப்  கலைஞரும் ஆன  சாகுல்  பாய்  எம் ஜி ஆருக்கு  டூப்  ஆக நடிக்க  ஆரம்பித்த  முதல்  படம்  இது . மதுரையை  மீட்ட  சுந்தர  பாண்டியன்  வரை  எம் ஜி ஆர்  படங்களுக்கு  ஸ்டண்ட்  மாஸ்டரும்  இவரே , டூப் பும்  இவரே! 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  பொன்னையா ஒரு  கிராமத்தில்  ஏழை  விவசாயிக்குடும்பத்தில்  பிறந்தவர் .அவருக்கு  அம்மா, அப்பா , தங்கை , அவரது  முகச்சாயலில்  ஒரு  தம்பி  ஆகியோர் உண்டு. வில்லன்  ஊர்  பண்ணையார். அவரிடம்  நிலம் , மற்றும்  வீட்டு  பத்திரத்தை  அடமானமாக  வைத்து  கொஞ்சம்  பணம் கடன்  வாங்கி  இருக்கிறார்கள் 


காலேஜூக்குப்போய்  படிக்க  தம்பி  முத்தையா  பட்டணம்  போய்  இருக்கிறார். அங்கே  நாயகியை  சந்திக்கிறார்  தம்பி .  . நாயகி பெரிய  செல்வந்தரின்  மகள் , ஆனால்  அவள்  விருப்பத்துக்கு  மாறாக  ஒரு  லூஸ்  முறைமாமனுடன்  கட்டாயத்திருமணம்  நடக்க  இருப்பதால்  நாயகி தற்கொலை  முயற்சியில்  ஈடுபடும்போது  நாயகனின்  தம்பி  முத்தையா  காப்பாற்றுகிறார்.


 இது தான்  சாக்கு  என  நாயகி  அவரை  வீட்டுக்கு  அழைத்துப்போய்  இவர் தான்  என்  காதலன் , இவரைத்தான்  திருமணம்  செய்வேன்   என  அடம்  பிடிக்கிறார். காதலன்  ஏழை  என்பதை  மறைத்து  பெரிய  மிட்டா  மிராசுதாரர்  என  அளந்து  விடுகிறார்


வேறு  வழி  இல்லாமல் முத்தையா  திரும்ணம்  பெற்றோர்  , குடும்பம்  வராமலேயே நடக்கிறது. வீட்டோடு  மாப்பிள்ளை  ஆன  பின்  சில  சுயமரியாதை தாக்குதல் காரணமாக  இனி இந்த  வீட்டுக்கு  பணம்  சம்பாதித்த பின் தான் வருவேன்  என  நாயகன்  வீட்டை  விட்டு  வெளியேறுகிறான்


அங்கே  நாயகன் பொன்னையா வை  ஒரு  பெண்  காதலிக்கிறாள் , அதே  பெண்ணை  வில்லன்  ஆன  பண்ணையாரும்  விரும்புகிறான். நாயகனை  ஊரை  விட்டு  விரட்ட  பணத்தை  , வாங்கிய  கடனை  வட்டியுடன்  திருப்பித்தர  வேண்டும்  என  நெருக்குகிறான்


பணம்  சம்பாதிக்க  நாயகன்  பட்டணம்  வருகிறான் . இப்போது அண்ணன் , தம்பி  இருவருக்கும்  பணத்தேவை  இருக்கிறது . இருவரும்  தனித்தனியாக  வெவ்வேறு குஸ்தி  வீரரிடம்  சேர்ந்து  பயிற்சி  பெற்று  மல்யுத்த  வீரர்கள்  ஆகிறார்கள் 


க்ளைமாக்சில்  ஒரு  மல்யுத்தப்போட்டி  நடக்கிறது , அதில்  வென்றால்  ரூ  ஒரு  லட்சம்  பரிசு . போட்டியாளர்கள்  அண்ணன், தம்பி  இருவரும்தான் , ஆனால்  முகமூடி  போட்டு  ச்ண்டை  இடுவதால்  இன்னார்தான்  இவர்    என  இருவருக்கும்  தெரியாது . இறுதியில்  என்ன  நிகழ்ந்தது ? என்பதே  க்ளைமாக்ஸ்   


பொன்னையா , முத்தையா  என  அண்ணன், தம்பி   டூயல் ரோலில்  எம் ஜி ஆர்.வழக்கமான  எம் ஜி ஆர்  படங்களில்  வரும்  ஓப்பனிங்  சாங்  அட்வைஸ்  சாங்  ஆக அல்லது  தத்துவப்பாடல்  ஆக  இருக்கும், ஒடு  ஹீரோ  துதி  பாடல்  இருக்கும், இந்த  இரண்டும்  மிஸ்சிங். அதே  போல  எம் ஜி ஆர்  படங்களில்  எல்லாப்பாடல்களும்  செம  ஹிட்  ஆகும், இதில்  ஐந்து  பாடல்களில்  இரண்டு  மட்டும் தான்  மெகா  ஹிட் .அதே  போல  டபுள்  ரோலில்  எம் ஜி ஆர்  நடித்தால் இருவருக்கும்  சமமான  பாடல்கள் இருக்கும், ஆனால்  இதில் அண்ணனுக்கு 3 , தம்பிக்கு  ஒன்று  தான் 


மற்றபடி எம் ஜி ஆர்  உற்சாகமாகவே  நடித்திருக்கிறார். ரசிகர்களால் பெரிதும்  எதிர்பார்க்கப்பட்ட  க்ளைமாக்ஸ்  ஃபைட்  சீனில்  இரு  எம் ஜி ஆர்க்கும்  முகமூடி  போட்ட கெட்டப்  என்பதால்  பெருத்த  ஏமாற்றம். இருவருமே   டூப்  நடிகர்கள் .( ஸ்டண்ட்  மாஸ்டர்  சாகுல்  பாய்    யூ  ட்யூப்  பேட்டியில்  இது  பற்றிக்குறிப்பிட்டுள்லார்) 


நாயகியாக  ஜெ . இதில்  கொஞ்சம் உடல்  வாகு  குண்டாக  இருப்பதால் தான் ஜோடிப்பொருத்தம்  இல்லை  என  பேச்சு . நடிப்பில்  வழக்கம் போல  துள்ளல் , அடிக்கடி  அவர்  ஆஹாங்  ஹாங்  என  இழுப்பது  அபாரம்  ( இந்த  பாணியைத்தான்  சின்னி ஜெயந்த்  கொஞ்சம்  மாற்றி  ராஜா  சின்ன  ரோஜா  வில்  ஹாங்  என்பர்) 

இன்னொரு  நாயகி ஆக ராஜ ஸ்ரீ . ஜோடிப்பொருத்தம்  இல்லை . நடிப்பு  ஓக்கே  ரகம்

  பண்ணையாராக  வில்லனாக  எம் என்  நம்பியார் ,  பார்த்து  சலித்த  கேரக்டர்  டிசைன், புதுமையாக  எதுவும்  இல்லை 


 குஸ்தி  பயில்வானாக  அசோகன்  ஓவர்  ஆக்டிங். நான்  படத்தில்  கலக்கி  இருப்பார் . இதில்  கேரக்டர்  டிசைன்  அப்படி .


நம்பியாரின்  தம்பியாக  நாகேஷ் , காமெடி  அதிகம்  ஒர்க்  அவுட்  ஆகவில்லை 


வி கே  ராமசாமி , தேங்காய்  சீனிவாசன்  என  வீணடிக்கப்ப்ட்ட  கலைஞர்கள்  லிஸ்ட்  நீள்கிறது 


 கே  வி மகாதேவன்  இசையில்  இரண்டு  பாட்டு  பட்டி  தொட்டி எல்லாம்  செம  ஹிட்டு . மற்ற  மூன்று  பாடல்களு,ம்  ஏமாற்றம், எம்  ஜி ஆர்  படப்பாட்டுகள்  போலவே  இல்லை , எப்படி  இதை  எல்லாம்  அவர்  ஓக்கே  செய்தார்  என  தெரியவில்லை 


138  நிமிடங்கள்  படம்  ஓடுகிற்து, முதல்  பாதி  அளவு  பின்  பாதி  விறுவிறுப்பாக  இல்லை ,  திரைக்கதை  போகப்போக தடுமாறுகிறது. அண்ணன் , தம்பி  இருவருமே  ஃபைட்  மாஸ்டர்  போல  ஆவது  நம்பும்படி  இல்லை 


சபாஷ்  டைரக்டர் ( பி எஸ்  ரங்கா) 


1  அரதப்பழசான  ரோல்களில்  நம்பியார் , அசோகன்  இருவரையும்  புக்  செய்த  சாமார்த்தியம் 


2  வீட்டோடு  மாப்பிள்ளையாய்  இதுவரை  நடிக்காத  எம் ஜி ஆரை  ஏதோ  சால்ஜாப் சொல்லி  சம்மதிக்க  வைத்தது


3   காமெடி  டிராக்கே  ரெடி  பண்ணாமல்  நாகேஷை  காமெடி  ரோலில்  புக்  செய்தது


4   ஐந்தே  பாடல்கள்  அதில்  மூன்றே  பாட்ல்களை  எம் ஜி ஆருக்கு தந்து   இரண்டு  பாடல்களை  லேடி  சோலோ  சாங்க் ஆக்கிய  சாமார்த்தியம் 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1    ஏ  மச்சான்  அட  என்  பொன்னு   மச்சான்  என்னைத்தொடாதே


2  ஒரு  வருசம்  காத்திருந்தா  கையில்  ஒரு  பாப்பா 


3  டிடி டி  சாத்துக்குடி 


4 பட்டுப்போல  பெண்ணை 


5  இரவுகளைப்பார்த்த 



  ரசித்த  வசனங்கள் 


1   ஆண்டவன்  நமக்கு  இரண்டு கைகளை  எதற்குத்தந்திருக்கிறான்  தெரியுமா?  ஒரு  கை  நாம் வாழ  உழைக்க , இன்னொரு  கை  மற்றவர்களுக்காக  உழைக்க 


2  நல்லவர்களுக்கு  சோதனை  வருவது  தற்காலிகம்தான் , இறுதியில்  எப்போதும்  நல்லவர்கள்  தான்  ஜெயிப்பார்கள் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


 1  மாப்பிள்ளை  பெரிய  பணக்காரன்  என சொல்லும்  பொய்யை  பெண்ணின் பெற்றோர்  அப்படியே  நம்பி  திருமணம்  செய்து  வைத்து  விடுவார்களா? விசாரிக்க  மாட்டார்களா?? 


2  திருமணத்துக்கு  மாப்பிள்ளை  தரப்பில்  நண்பர்கள்  கூட  யாரும்  வரவில்லை  என  சந்தேகம்  வராதா?


3   இரு  நாயகர்களும்  ஒரே  முகச்சாயலில்  இருக்க  தம்பியின் திருமணத்துக்கு  வரும்  அண்ணன்  எக்ஸ்ட்ரா   ஃபிட்டிங்க்  ஆக  தாடி  கெட்டப்பில்  வர  தம் பி  காரணம்  கேட்கும்போது  அண்ணன்  சொல்லும்  காரணம்  - கல்யாண  வீட்டில்  குழப்பம்  வராதா? ஒரே  சாயலில்  இருவர்  இருந்தா;ல்?என்கிறார் . லைட்டா ஒரு  தாடி  வைத்தால் அடையாளம்  மாறிடுமா? 


4 பொதுவாக  பண்ணையார்கள்  பெண்களை  வீழ்த்தத்தான்  பார்ப்பார்கள் ,  ஒரு  சாதா  பெண்ணைக்கல்யாணம்  பண்ணிக்க  கெஞ்ச மாட்டார்கள்  


5   வி  கே  ராமசாமி  ஷேர்  மார்க்கெட்டில்  ரூ  5  லட்சம்  இழந்ததும் எல்லாம்  போச்சே  என  புலம்புகிறார். அவர்  மனைவி  மாப்பிள்ளை  வந்த  ராசி  என்கிறார். மாப்பிள்ளையை  அனுப்பினால்  பெண்ணும்  போவார்  என  தெரியாதா?   


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   எம் ஜி ஆர்  ரசிகர்களை  செம  கடுப்பாக்கும்  [[படம்,  மற்றவர்கள்  ஜாலியாக  ரசிக்கலாம் ., ரேட்டிங்  2.25 / 5 


Pattikaattu Ponnaiya
Pattikaattu Ponnaiya.jpg
Theatrical release poster
Directed byB. S. Ranga
Story byShyamala (Devi)
Produced byB. S. Ranga
StarringM. G. Ramachandran
Jayalalithaa
Rajasree
CinematographyB. N. Haridas
Edited byV. Chakrapani
M. Devandranath
Music byK. V. Mahadevan
Production
company
Vasanth Pictures
Release date
  • 10 August 1973
Running time
138 minutes
CountryIndia
LanguageTamil

Monday, July 03, 2023

THRISHANGU (2023) -திரிசங்கு - மலையாளம் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி மெலோ டிராமா ) @ நெட் ஃபிளிக்ஸ்

 


 டைட்டிலைப்பார்த்ததும்  இது  த்ரிஷா  நடிச்ச  படம்னு  நினைச்சேன், ஆனா  அன்னாபென்  நடிக்க  அறிமுக  இயக்குநர்   அச்சியுத் வினாயக்  இயக்கிய  ஜாலியான  ரொமாண்டிக்  காமெடி  மெலோ  டிராமா  இது . மே  மாதம் 23  அன்று  திரை  அரங்குகளில்  வெளியாகி  ஏ  செண்ட்டர்களில் வரவேற்பைப்பெற்ற இப்படம்  இப்போது  ஜூன் 23  முதல்   நெட்  ஃபிளிக்சில்  ரிலீஸ்  ஆகி  உள்ள்து

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் , நாயகி  இருவரும்  காதலர்கள் . நாயகியின் அப்பா  முன்னாள்  போலீஸ்  ஆஃபீசர் . ஒரு  கட்டத்தில்  வீட்டை விட்டு  ஊரை விட்டு  ஓடிப்போகலாம்  என  இருவரும்  முடிவெடுக்கிறார்கள் . இவர்கள்  ஓடிப்போக  முடிவெடுத்த  அதே  நாளில் நாயகனின்  தங்கை  அவள்  காதலனுடன்  ஓடிப்போக  நாயகன்  வீட்டில்  பிரச்சனை


 பஸ்  ஸ்டேண்டில் நாயகி  நாயகனின்  வருகைக்காக  காத்திருக்கும்போது  தங்கை மங்களாபுரம்  சென்ற  தகவல்  தெரிந்ததால்  நாயகன்  தன்  மாமாக்கள்  இருவருடன்  மங்களூர்  செல்லும்  பஸ்சில்  ஏறுகிறான். இன்னொரு  நாள்  நாம்  ஓடிப்போகலாம், நீ வீட்டுக்குபோ  என  நாயகியிடம்  சொல்லி  விடுகிறான் , ஆனால்  நாயகிக்கு  வீட்டுக்குப்போக  முடியாத  சூழல் . நாயகன் ஏறும்  அதே  பஸ்சில்  அவளும்  ஏறி  விடுகிறாள் . 


நாயகியின்  அப்பா  முன்னாள்  போலீஸ்  என்பதால்  அவர்  ஒரு  டீம்  உடன்  மங்களா  புரம்  வருகிறார். இதற்குப்பின்  நாயகன்  தன்  தங்கையைக்கண்டு  பிடித்தாரா? நாயகியுடன்  ஆன  காதல்  என்ன  ஆனது  என்பதை  காமெடி  மெலோ   டிராமாவாக  சொல்லி  இருக்கிறார்கள்  


நாயகனாக    அர்ஜூன்  அசோக் அக்மார்க்  அப்பாவி  இளைஞனாக  வருகிறார். நாயகியிடம்  மாமாக்களிடம்  மாட்டிக்கொண்டு  தவிக்கும்  இடங்கள்  நல்ல  காமெடி . இயல்பான , யதார்த்தமான  நடிப்பு 


ஹெலன்  என்ற  படத்தின்  மூலம்  புகழ்  பெற்ற  அன்னாபென் இதிலும்  நம்  கருத்தை , கவனத்தைக்கவர்கிறார். இவரது  கர்லிங்   ஹேர்  ஸ்டைலும் , கச்சிதமான  கண்ணியமான  ஆடை  அலங்காரமும்  அசத்தல் . கண்களாலேயே  பேசி  விடுகிறார். ஜொள்ளு  விடும் ஆளிடம்  அவர்  நைசாக   எஸ்கேப்  ஆவது  சூப்பர்  காமெடி 


நாயகனின்  மாமாக்களாக  வரும்  இருவரும்  பின்  பாதி படத்தை  காமெடியாககொண்டு  செல்வதில்  பெரும்  பங்கு  ஆற்றி  இருக்கிறார்கள் நாயகியின்  அப்பாவாக  வருபவர்  கண்டிப்பு  மிக்க  ஆள்: ஆக  கச்சிதமாக  நடித்திருக்கிறார். சொந்த  மகளையே  நகை  திருடிய  கேசில்  அரெஸ்ட்  செய்வது  அச்த்தல்


பாடல்கள்  படம்  ரிலீஸ்  ஆகும் முன்பே  செம  ஹிட் , இரண்டு  பாடல்கள்  படி தொட்டி  எல்லாம்  ஒலித்த  சூப்பர்  ஹிட்  பாடல்கள் 


2  மணி நேரத்துக்கு  10  நிமிடங்கள்  குறைவாக  கச்சிதமாக  படத்தை  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்  எடிட்டர் , ஒளிப்பதிவு  , பின்னணி  இசை இரண்டும்  அருமை . குடும்பத்துடன்  பார்க்கத்தகுந்த  ஃபீல்  குட்  காமெடி   மெலொ டிராமா 


சபாஷ்  டைரக்டர்


1  கிளப்புக்குள்  ஜோடிக்கு  மட்டுமே  அனுமதி  என்றதும்  நாயகனின்  மாமா  உள்ளே  போக  செய்யும்  ஐடியா  கலக்கல் 

2  இன்ஸ்பெக்டரை அறைந்த கேசில்  மாட்டிய  மூவரும்   ரூ 5  லட்சம்  வரை  தர  தயார்  ஆகும்போது   போலீஸ்  அவர்களிடம்   வெறும்  600  ரூபாய்  மட்டும்  லஞ்சமாகக்கேட்பது  நம்ப  முடியாத  காட்சி  என்றாலும்  அந்த  சீன்  எக்ஸ்க்யூட்  ஆன  விதம்  காமெடி 

செம  ஹிட்  சாங்க்ஸ்


1 கொஞ்சாதே  கொஞ்சாதே  

பொன்  மானே  பொன் மானே 


2  வா  வா  ராப்பர்  மாமா


 ரசித்த  வசனங்கள் 


1   நியூம்ராலஜி  படி  இந்த  பஸ்  நெம்பஎர்  கூட்டுத்தொகை  17  வருது , அப்போ எட்டு . அஷ்டமத்துல  சனி , நாம  வேற  பஸ்ல  போலாம்


 பஸ்  கிடைக்கறதே  பெருசு , இதுல ராசி  நெம்பர்  வேணுமா? 


2  என்  த்ஙகச்சிக்கு  20  வயசு  கூட  இன்னும்  முடியல , அதுக்குள்ள  லவ்வரோட  ஓடிட்டா 


 ஓஹோ, இப்போ  நீ  கூட்டிட்டு  ஓடப்போற்யே  ந்தப்பொண்ணுக்கு  என்ன  வயசு ?


 19 


3  பிஸ்கெட்டும்  வாட்டர்  பாட்டிலும்  வாங்கிட்டு  வ்ர்றேன்னு  போனியெ? எங்கே? 


 அது  வந்து  , க்டைல  பிஸ்கெட்  ஸ்டாக்  இல்லைண்ட்டாங்க 


4  இந்த  லாட்ஜ் ஃபேமிலிமேன்  தங்கற லாட்ஜ் ,மாதிரி  தெரியலையே?


 டேய், உன்னை  ரேப்  பண்ணாம  நாங்க  பார்த்துக்கறோம்\


5  அப்பாவித்தனமான  முகம்  உள்ள  ஆணை  பெண்ணுக்குப்பிடிக்கும்

6 ஏம்மா , உலகத்துல  எத்தனை  ஆம்ப்ளைங்க  இருக்காங்க ,அ தென்ன பொண்ணுங்க  லவ்  பண்றது  பூரா  மொள்ளமாரி  முடிச்சவுக்கி  கஞ்சா  கேஸ் , குடிகாரன்  இப்டிதான்  சிக்கறாங்க ? நல்லவன்களை  லவ்  பண்ண  மாட்டீங்களா? 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  நாயகியை  சந்திக்க  ப்ஸ்  ஸ்டேண்ட்  செல்ல  முடியாத  சூழல் , இருவர்  கைகளீலும்  செல்  ஃபோன்  இல்லை , நாயகனின்  நண்பனை  பஸ்  ஸ்டேண்ட்  அனுப்பி  நிலைமையை  நாயகிக்கு எடுத்துச்சொல்லி  இருக்கலாமே?


2  நாயகன்  கையில்  இப்போ  செல் ஃபோன்  இருக்கு . நாயகியின்  அப்பா  போலீஸ்  டிபார்ட்மெண்ட். செல்லை  ஆன்  பண்ணினா  லொக்கேஷன்  கண்டுபிடிச்சுடுவாங்க  என்பது  நாயகனுக்குத்தெரியாதா? இருவரும்  செல் ஃபோனை  ஆஃப்ல  வெச்சிருக்கனும்னு  தானே  பேச்சு? இவர்  ஏன்  ஆன்  பண்ணி  பின்  ஆஃப்  பண்றார்? 


3  நாயகனின்  தங்கையின்  காதலன்  சரக்கு  பார்ட்டி , கஞ்சா  கேஸ்  என்பது  காதலிக்கும்போது  தெரியாதா? வீட்டை  விட்டு  ஓடி  வந்த  அடுத்த  நாளே  அந்த  விஷயம்  தெரிந்து  வெறுப்பது  டிராமாத்தனம் 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மலையாளப்படங்கள்  பார்த்து  ரசித்து  பழக்கம்  உள்ளவர்கள்  தாராளமாகப்பார்க்கலாம், ஸ்லோ  மெலொ  டிராமா  . ரேட்டிங்  2.75 / 5 

Sunday, July 02, 2023

திரும்பிப்பார் ( 1953) - தமிழ் - சினிமா விமர்சனம் (சோசியல் டிராமா) @ யூ ட்யூப்

 


சிவாஜி கணேசன்  வில்லனாக  நடித்த  முக்கியமான  இரு  படங்களில்  இதுவும்  ஒன்று . ஒரு  பேட்டியில்  நான்  நடித்த  படங்களில்  என்னால்  மறக்க  முடியாத படம் திரும்பிப்பார்   என்றாராம், கலைஞரின்  கதை , வசனத்தில் உருவான  இப்பட்ம்  கமர்ஷியலாகவும்  சக்சஸ்  ஆனது 


 ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லனின்  பெற்றோர் இறந்து  விட்டனர் . வில்லனுக்கு  ஒரு  அக்கா , இன்னொரு  அக்காவின்  மகள்  மூவர்  மட்டுமே. அக்கா  மகள்  கல்லூரியில்  படிக்கிறார். அக்கா  தான்  அந்த  குடும்பத்துக்கு  இன்சார்ஜ். பெற்றோர்  இல்லாத  குறை தெரியாமல்  நல்லபடி  வளர்த்து  ஆளாக்க  வேண்டும்  என்று  பெற்றோர்  இறக்கும்  முன்  அக்காவிடம்  சத்தியம்  வாங்கி  இறந்ததால்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்  கண்ணும் கருத்துமாக  தன்  தம்பியையும், அக்கா  மகளையும்  பார்த்துக்கொள்கிறார்

 

 வில்லன்  ஒரு  பெண்  பித்தன் , கெட்டவன் .வில்லனுக்கு  ஒரு  இடத்தில்  பெண்  பார்க்கிறார்கள் . திருமணம்  நிச்சயிக்கப்படுகிறது. திருமணம்  ஆகும் முன்பே  அந்தப்பெண்  பாமாவுடன்  வில்லன்  நெருங்கிப்பழகுகிறான். ஆனால் திருமண  நாள்  அன்று  எஸ்கேப்  ஆகி  விடுகிறான், இதனால் திருமணம்  நிற்கிறது 

நாயகன்  ஒரு  ரைட்டர் . புர்ட்சிகரமான  எழுத்துக்கு  சொந்தக்காரர்.வில்லனுக்கு  நிச்சயிக்கப்பட்டு  பின்  திருமணம்  நின்றதே  அதே  பெண்  பாமாவுடன்  ரைட்டர்  பாண்டியனுக்கு  திருமணம்  நிச்சயம்  ஆகிறது 


 வில்லனுக்கு  இது பொறுக்கவில்லை . பாமாவுடன்  தனிமையில்  சந்தித்து  அன்று  ஏன்  திருமண  தினத்தில் காணாமல்  போக  நேரிட்டது என  பொய்யாக  ஒரு  கதை  சொல்லி  பாமாவை  கன்வின்ஸ்  செய்து  பாமாவுக்கும், நாயகனான  ரைட்டர்  பாண்டியனுக்கும்  நடக்க  இருக்கும்  திருமணத்தை  நிறுத்துகிறான்


வில்லன்  பாமாவுடன்  பட்டணம்  போய்  ஊரெல்லாம்  சுத்திப்பார்த்து  விட்டு  பின்  பாமாவை  நைசாக  கழட்டி  விட்டு  ஓடி வந்து  விடுகிறான்


 இங்கே  நாயகன்  ஆன  ரைட்டர்  பாண்டியன்  மனம் உடைந்து  போகிறான். ஒரு  பயணத்தில்  வில்லனின்  அக்கா  நாயகனான  ரைட்டர்  பாண்டியனை  ச்ந்தித்து  ஆறுதல்  வார்த்தை  கூறுகிறாள் . இருவருக்கும்  பழக்கம்  ஏற்படுகிறது / வில்லனின்  அக்கா  தன்  அக்கா  மகள்  ஆன  காலேஜ்  மாணவியிடம்  ரைட்டர்  பாண்டியனை  அறிமுகப்படுத்துகிறாள் 


காலேஜ்  மாணவி ரைட்டர்  பாண்டியனை  விரும்புகிறாள் ., இதை  அறிந்து  அதிர்ச்சி  ஆன  வில்லனின்  அக்கா பின்  மனதை  தேற்றிக்கொண்டு  இருவருக்கும்  திருமணம்  நடத்தி  வைக்கிறாள் 


 வில்லனுக்கு  இது  பிடிக்கவில்லை. தன்  அக்காள்  மகளை  திரும்ணம் செய்து  கொள்ள  நினைத்த  போது  எங்கிருந்தோ  வந்தவன்  அந்த   வாய்ப்பைத்தட்டிப்பறித்து  விட்டானே  என  கோபம்  கொண்டு  ரைட்டர்  பாண்டியனை  கொல்ல முயற்சி  செய்து  தோற்கிறான்


 இனி     ரைட்டர்  இங்கே  இருந்தால்  ஆபத்து  என  வில்லனின் அக்கா  தம்பதியை  சென்னையி  குடி  வைக்கிறாள் . வில்லன்  ரைட்டர்  பண்டியனை  ஒரு திருட்டுக்கேசில்  மாட்ட  வைத்து  3  ஆண்டுகள்  ஜெயில்  தண்டனை வாங்கித்தருகிறான்

ரைட்டர்  பாண்டியனின்  அப்பா  இரண்டாவது  திருமணம்  செய்து  கொள்கிறார். அவர்  மனைவியை  வில்லன்  அடைய  நினைக்கிறான்


இறுதியில்  வில்லன்  திருந்தினானா? இல்லையா?  என்பதுதான்  க்ளைமாக்ஸ் 


 வில்லனாக  சிவாஜி கணேச்ன். வளர்ந்து  வரும்  காலத்தில் இந்த  மாதிரி  ஒரு  நெகடிவ்  ஷேடு  உள்ள  கேரக்டரில்  நடிக்க  தில்  வேண்டும். பிரமாதமான  நடிப்பு 


கலைஞரின்  வசனத்தில்  சமூக  அவலங்கள்  எதுகை  மோனை  வார்த்தை  ஜாலங்களில்  வெளிப்படுய்  தருணங்கள்  அருமை


ஜி  ராமநாதன்  இசையில்  12  பாடலக்ள் , அவற்றில்  6  பாடல்கள்  ஹிட் . எல்லாம்  2  நிமிடங்கள்  ஓடும்  சின்ன  சின்ன  பாடல்களே. பாடல்கள்  பாரதிதாசன்  + கண்னதாசன் 

டி ஆர்  சுந்தரம்  தான்  இயக்கம்  இரண்டரை  மணி  நேரம்  பட்ம்  ஓடுகிறது . ஸ்லோ  மெலோ டிராமா 




சபாஷ்  டைரக்டர்


1  வில்லனான  சிவாஜிக்கு  கதை  வசனகர்த்தாவான  கலைஞரின்  ஹேர்  ஸ்டைல் , மீசை  என  கெட்டப்  ரெடி பண்ணிய  துணிச்சல்  அருமை 


2 பிற்காலத்தில்  நடக்கப்போவதை  முன்  கூட்டியே  அறிந்தோ  என்னவோ  கலைஞரின்  வசனங்கள்  தெரிந்தோ தெரியாமலோ  அவரது  குடும்ப  அரசியலையே  தாக்கிய  விதம் 


  ரசித்த  வசனங்கள் 

1   ஒரு  பொண்ணு  சிவப்பா? கறுப்பா? என  கேட்க  வேண்டாம் , இனிமேல்  எலுமிச்சை  நிறமா? நாவல்பழநிறமா? இரண்டும்  கலந்த  நிறமா? என  கேட்கலாம்

2   பணம்  இருக்கு  ஜாலியா  வாழாம  ஏன்  இப்படிப்பண்றே? [பணம் , சுகம், வாழ்வு  இவை  எல்லாம்  மூன்று எழுத்துதானே?, 

 அன்பு , பண்பு ,தொண்டு  இவை  கூட மூன்று எழுத்துதானே?, 


3  விடக்கூடாது 


 ஆமா, அவனை  வெளியே  விடக்கூடாது 

 அதில்லை , நான்  அவனிடம்  அடி  வாங்கிய  விஷயத்தை  வெளியே  விடக்கூடாது 


4  பெண்ணைப்பிடிசிருக்கா?னு  மாப்ளை  கிட்டே  கேளுங்க 

 வாழைப்பழத்தை  பிடிக்குமா?னு  குரங்கு  கிட்டே  கேட்போமா? 


5  இந்த  புத்தகத்துலயே  ரொம்பப்பிடிச்சது அட்டைப்படம்தான் 


6  என்  எக்சாம்  நெம்பர்  1624

அட, என்  வயசும் 24


 என்  வயசு  16 


7  புத்தகம்  பப்ளிஷ்  பண்றோம், வர்ற  வருமானத்துல  ரைட்டரான  உனக்கு  கால் , பப்ளிஷரான  எனக்கு  முக்கால்   பங்கு 


 அய்யா  , அப்போ  எனக்கு ?


 உனக்கு  அறை  தான் . பளார் . 


8  மான்  தோலில்  வேங்கை  அதிக  நாள்  வாழ  முடியாது , அதையும்  வேட்டை  ஆட   ஒரு  வேடன்  வருவான் 


9  பேசத்தெரிந்த  பெண்களையே  பேசா  மடந்தை  ஆக்கிய  இந்த  சமூகம்  ஒரு  ஊமையை  சும்மா  விட்டு விடவா  போகிறது ? 


10  குடும்பத்துக்குள்ளேயே  தலைவர்  பதவி  ரொட்டேஷன்ல  போகுதா?/   உள்  குத்து  வசனம் கலைஞர்  அட்டாக்கிங்  கலைஞர்  ஃபேமிலி  இட் செல்ஃப் ) 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  கல்யாணத்தன்னைக்கு  வீட்டை விட்டு ஓடி விடலாம்  என  வில்லன்  கூறுவதை  நாயகி  ஏற்றுக்கொள்வது  எப்ப்டி ? அதே  மேடையில்  நீங்கள் தாலி  கட்டுங்கள்  என  சொல்லி இருக்கலாமே? 


2  வில்லனின்  அக்கா தன்  அக்கா  மகளிடம்  தன்  காதலனை  அறிமுகப்படுத்தும்போதே இவர்  என் காதலர்  அல்லது  வருங்காலக்கணவர்  என  அறிமுகப்படுத்தி  இருந்தால்  சிக்கலேவந்திருக்காதே? 


3  வில்லன்  தன்  சொந்த  வீட்டிலேயே  அக்கா  மகளின்  கணவரைக்கொலை  செய்ய  முயற்சிக்கிறார். ஆனால்  மடத்தனமான  முயற்சி. துப்பாக்கியால்  சுடுகிறார். குறி  தவறுகிறது . ஓடுகிறார். அக்காவிடம்  மாட்டிக்கொள்கிறார். இதற்குப்பதில்  வேறு 


4  வில்லன்  தன்  அடியாட்கள்  கொள்ளை  அடித்துத்தந்த  வைர  நெக்லசை  சென்னை  போக  இருக்கும்  தன்  அக்கா  சூட்கேசில்  மறைத்து  வைக்கிறான்/.  நாயகன் வீட்டுக்கு  அக்கா போனதும்  போலீசுக்கு  தகவல்  சொல்லி  மாட்டி  வைக்க பிளான். ஆனால்  அக்கா  சென்னை  சென்ற  பின் தானே  அதை  செய்ய  வேண்டும் ? இப்போதே  சென்னை  போலீசுக்கு  ஃபோன்  பண்ணி  பாண்டியன்  வீட்டை  செக்  செய்ய  சொல்லுங்கள்  என  முந்திக்கொள்கிறாரே? 


5  வில்லனின்  அக்கா  மகள்  கர்ப்பமாக  இருக்கிறாள் . கணவன்  ஜெயிலில் இருக்கிறான்., அதனால்  படித்த  பெண்ணான  அவள்  ஒரு  ஆஃபீசில்  வேலை  செய்கிறாள். அங்கே  வேலை  போகிறது , அடுத்ததா  அதே  போல  வேறு  ஆஃபீசில்  அதே  போல்  டைப்பிஸ்ட் ஆக  சேராமல்  வீட்டு  வேலை  செய்யும்  பணிப்பெண்ணாக  சேர்வது  ஏன் ?  சும்மா  இரக்கத்தைப்பெறவா? 


6  வில்லன்  தனியே போய்  உஷாவை  பெண்  கேட்கிறான். தன் அக்காவை  அனுப்பி  பெண் கேட்கச்சொல்வதுதானே  முறை? இவ்ரே ஒரு மொள்ள மாரி , இவரு போய்க்கேட்டா  யார்  பொண்ணு  கொடுப்பா? அவருக்குத்தெரியாதா? 


7  அதிகாலை  4  மணிக்கு  அலாரம்  வைத்து  எழுப்பி  விடு  என   ராதாவிடம்  சொல்லும்  பாண்டியனின்  அப்பா  வில்லனின்    சதியால்  கடிகாரத்திருப்பலால்  மிட்  நைட்  12  மணிக்கே  எழுந்து  கிளம்புகிறார். நைட்  9  மணிக்குப்படுத்த  ஒருவர்  12  மணிக்கு  எழுந்தால்  அவருக்கு  குத்து  மதிப்பாக  கணக்குத்தெரியாதா இப்போதுதான்  படுத்தோம் என  டவுட்  வராதா?


8  வில்லனைப்பழிக்குப்பழி  வாங்கத்துடிக்கும்  பாமா  வில்லனிடம்  2  பக்கம் டயலாக்  பேசிட்டு  கத்தியால்  குத்த  வருகிறாள், வில்லன்  எஸ்கேப்  அகி  வ்டுகிறான்., ஒரு  குத்து  குத்திட்டு  பின்  டயலாக்  பேசி  இருக்கலாம் 


9  ஜெயில்  கைதியாக  இருக்கும்  ரைட்டர்  பாண்டியன்  ஜெயிலில்  தாடியுடன்  இருக்கிறார். ரிலீஸ்  செய்தி  கேட்டதும்  வீட்டுக்கு  கிளம்பும்போது  ட்ரிம்  செய்த  கம்மி  தாடி 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ  படம் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இந்தக்காலத்து  ரசிகர்களும்  பார்க்கத்தக்க  கம்ர்ஷியல்  படம் தான்  பார்க்கலாம், ரேட்டிங்  2.75 /5 


Thirumbi Paar
Thirumbi Paar 1953 poster.jpg
Theatrical release poster
Directed byT. R. Sundaram
Written byM. Karunanidhi
Produced byT. R. Sundaram
StarringSivaji Ganesan
Pandari Bai
CinematographyW. R. Subba Rao
Edited byL. Balu
Music byG. Ramanathan
Production
company
Release date
10 July 1953
Running time
15616 ft
LanguageTamil


SongSingersLyricsLength
"Aavanna Doonaa Aadu"JikkiKannadasan02:13
"Kanniyargal Vellai Manam Pol"A. M. Rajah & Swarnalatha03:17
"Kalappadam Kalappadam"S. C. Krishnan01:28
"Kaadhalar Vaazhndha Ullaasa Vaazhvil"Jikki02:48
"Kannaale Panpaadum"Thiruchi Loganathan & P. Leela02:55
"Nallavaraam Oru Aanodu Pennum"T. S. Bagavathi02:50
"Kannalla Thoongamma"P. Leela02:57
"Vaazhkai Vaazhvadharkke"S. C. Krishnan02:18
"Pozhudhu Vidindhaal Thirumamam"T. S. Bagavathi01:02
"Kaanagatthil Kaadhaliyai"D. B. Ramachandra00:43
"Paandiyan En Sollai"P. LeelaBharathidasan02:19
"Ponndutthu Padaitthaano"A. M. Rajah, K. Rani & T. S. Bagavathi02:58

Saturday, July 01, 2023

தீராக்காதல் ( 2023) -தமிழ் - சினிமா விமர்சனம் ( பொயட்டிக் ரொமாண்டிக் மெலோடிராமா ) @ நெட் ஃபிளிக்ஸ்


 நான்  சின்னப்பையனா  இருக்கும்போது  ஜனரஞ்சகப்பத்திரிக்கை  உலகின்  ரஜினி   ஆன  குமுதம் , கமல் ஆன  ஆனந்த  விகடன்  ஆகிய  இரு  பத்திரிக்கைகளிலும்  தொடர்ந்து  சிறுகதைகள்  எழுதி  வந்த   ஜி ஆர்  சுரேந்திரநாத் ,வரலொட்டி  ரங்கசாமி , இந்திய ராஜா  மூவரும்  கவன்ம்  ஈர்த்தனர். பிரபல  எழுத்தாளர்களுக்கு  இணையான  எழுத்து  நடை. மூவரும்  சினி ஃபில்டுக்கு  வருவார்கள்  என  கணித்தேன் . காரணம்  இவர்கள் கதை  சொன்ன  விதம். பால்ய  காலத்தில்   நம் வாழ்வில்  நிகழ்ந்த  சம்பவங்களை  நேரில்  பார்ப்பது  போல இவரகள்  கதை இருக்கும். அம்மும்மூர்த்திகளில்  ஒருவரான ஜி ஆர்  சுரேந்திரநாத் வசனம் , உதவி  திரைக்கதை  எழுத  வந்துள்ள  இப்படம்  2023  மே  26  அன்று  திரைக்கு  வந்து விமர்சன  ரீதியாக  பாராட்டுக்களை  அள்ளிக்குவித்தாலும்  வசூல்  ரீதியாக  சுமார்  ரகம்  என  பெயர் பெற்றது , இப்போது  23/6/23  முதல்  நெட்  ஃபிளிக்ஸ்  ஒடிடி  தளத்தில்  வெளியாகி  உள்ளது 

2017 ல்  வெளியான  அதே  கண்கள்  எனும் ரொமாண்டிக்  ஹாரர் மூவி , 2019 ல் வெளியான  பெட்ரோமாக்ஸ்  எனும்  காமெடி  ஹாரர்  மூவி  இயக்கிய  ரோகின் வெங்கடேசன்   மூன்றாவதாக  இப்படத்தை  இயக்கி  இருக்கிறார்


       ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்   தன்  மனைவி , குழந்தையுடன்  சென்னையில்  ஒரு அபார்ட்மெண்ட்டில்  குடி  இருக்கிறார். ஆஃபீஸ்  விஷயமாக  மங்களூர்  ரயிலில்  செல்லும்போது  ரயிலில்  தன்  முன்னாள்  காதலியை  சந்திக்கிறார். இருவரும்  அவரவர்  குடும்ப  வாழ்க்கை  பற்றி  பகிர்ந்து  கொள்கின்றனர் .


 நாயகனின்  மனைவி  எப்போதும்  அவரது  ஆஃபீஸ்  வேலையில்  பிசியாக  இருப்பதால் நாயகனுடன்  முகம்  கொடுத்துக்கூட  பேச  நேரம்  இல்லை . நாயகியின்  கணவன்  ஒரு  சைக்கோ . அடிக்கடி  நாயகியை  அடித்துக்கொடுமைப்படுத்துபவர் . நாயகிக்கு  குழந்தை  இல்லை 


மங்களூர்  சென்றதும்  அடிக்கடி  இருவரும் சந்தித்து  அவர்களது  முன்னாள்  காதல்  வாழ்க்கை  பற்றி  பேசிக்கொண்டு  டைம் பாஸ்  பண்ணுகிறார்கள் .எந்த  விதமான  வரம்பு  மீறலும்  இல்லாமல் 


 வேலை  முடிந்து  சென்னை  திரும்பும்போது இனிமேல்  இருவரும்  சென்னையில்  ச்ந்தித்துக்கொள்ள  வேண்டாம், அதுதான்  அவரவர்  குடும்ப  வாழ்க்கைக்கு  நல்லது  என  முடிவெடுக்கிறார்கள் 


ஆனால்  நாயகியின்  கணவன் கொடுமை  செய்வது  ஒரு  கட்டத்தில் ஓவர்  டோஸ்  ஆகி  விட  நாயகி  தனியாக  அவரை  விட்டுப்பிரிந்து  ஹோட்டலில்  தங்குகிறார்நாயகனைத்தொடர்பு  கொண்டு  தகவல்  தெரிவிக்கிறார். ஆனால்  நாயகனுக்கு  நாயகியுடன்  ஆன  காதலைத்தொடர்வதில்  விருப்பம்  இல்லை 


இதனால்  கடுப்பான  நாயகி  நாயகன்  குடி  இருக்கும்  அபார்ட்மெண்ட்க்கு  எதிரில்  குடி  வருகிறார். இதற்குப்பின் இவர்கள்  வாழ்க்கை  என்ன  ஆனது  என்பது  திரைக்கதையின்   பின்  பாதி 


நாயகன்  ஆக  ஜெய் . பாந்தமான  நடிப்பு . ஒரு சராசரி  மிடில்  கிளாஸ்  இளைஞனாக  கச்சிதமாக  நடித்துள்ளார்.  காதலியைப்பார்த்தபோது  சந்தோஷம் , திரும்ப  வீட்டுக்கு  வந்து  மனைவியைப்பார்க்கும்போது  சங்கடம், குற்ற  உணர்வில்  அவர்  தவிப்பது  அருமை . ஒரு  கட்டத்தில் நாயகி  வில்லி  ஆக  முயலும்போது  நாயகன்  சீறுவது   பாராட்ட  வைக்கும்  நடிப்பு 


நாயகி  ஆக  ஐஸ்வர்யா  ராஜேஷ் , முழுப்படத்தையும்  தாங்கிப்பிடிக்கிறார். கணவனிடம்  அடி  வாங்கும்போது  அனுதாபத்தைப்பெறுபவர் , திருப்பி  அடிக்கும்போது  கைதட்டல்  பெறுகிறார்


நாயகனின்  மனைவியாக  ஷிவதா அழகான  முகம், பொறுமையான  குணம்  என  குடும்பப்பாங்காக  நடித்திருக்கிறார். கணவன்  மேல்  சந்தேகம்  கொள்ளும்  காட்சிகளில்  ஓவராக  நடிக்காமல்  இயல்பாக  நடித்துள்ளார் 


இவர்களது  மகளாக வரித்தி சுட்டித்தனமான  நடிப்பு . நாயகியின் கணவனாக  அம்ஜத்  சைக்கோ  கேரக்டருக்குப்பொருத்தம் . நாயகனின்  நண்பனாக  வரும் அப்துல்  லீ  காமெடிக்கு 


திரைக்கதையைப்பொறுத்தவரை  சில்லுனு  ஒரு  காதல்  படத்தின்  சாயல்  தெரிவது  பலவீனம் . நாயகி  திடீர்  என  வில்லி  ஆக  மாறும்  இடம்  நம்ப  முடியவில்லை . முந்தைய  இரு  படங்களோடு ஒப்பிடும்போது  இயக்குநரின்  தரம்  கூடி  இருக்கிறது 


சித்துக்குமாரின்  இசையில்  பாடல்கள்  சுமார்  ரகம்  தான்  என்றாலும்  பின்னணி  இசை  நன்று . ரவிவர்மன்  நீலமேகம்  தான்  ஒளிப்பதிவு , கண்ணுக்குக்குளுமை . நாயகன், நாயகி , மனைவி  மூவரையும் அழகாகக்காட்டியுள்ளது  காமரா

சபாஷ்  டைரக்டர்  ( ரோஹின்  வெங்கடேசன்) 


1  நீண்ட  இடைவெளிக்குப்பின்  சந்திக்கும்  முன்னாள்  காதலர்கள்  ஹோட்டலில்  டின்னர்  சாப்பிடப்போகையில்  அவருக்குப்பிடித்ததை  இவரும், இவருக்குப்பிடித்ததை  அவரும்  பரஸ்பரம்  ஞாபகம்  வைத்திருந்து ஆர்டர்  பண்ணுவதும், அதை  நினைத்து  புன்னகைப்பதும்


2   நாயகன் , நாயகி  இருவரும்  முத்தமிட  நெருங்கும்போது  ஒரே  சமயத்தில்  நாயகனின்  மனைவி , நாயகியின்  கணவ்ன்  அலைபேசியில்  அழைப்பது   தேர்  இழுக்கும்போது  வேகத்தைத்தணிக்க  சக்கரத்துக்கு  அடியில்  கட்டையைப்போடுவது  போல  கச்சிதம் 


3  மாஸ்டர், இன்னைக்கு  டீ  என்ன  நல்லாருக்கு ? என  டீ  மாஸ்டரிடம்  கேட்டதும்  அவர்  உடனே  கொஞ்சம்  தண்ணீரை  ஊற்றி  டீயை கண்டம்  பண்ணும்  காட்சி  கலக்கல்  காமெடி 


4  இரு  நாயகிகள்  படத்தில்  இருந்தாலும்  கிளாமர்  துளியும்  இல்லாமல்  கண்ணியமாகக்காட்சிகளை  அமைத்த  விதம், ஆடை  வடிவமைப்பு  பக்கா  டீசண்ட் . இரு  நாயகிகளுமே  மற்ற  படங்களில்  கிளாம்ராக  நடித்தவர்கள்தான். இதில்  கண்ணியம்  காட்டியிருப்பது இயக்குநரின்  கை வண்ணம் 



  ரசித்த  வசனங்கள்   ( ஜி ஆர்  சுரேந்திரநாத் )


1  எரியற   பல்பை முழுசா முழுங்குன  மாதிரி  முகம்  எல்லாம்  பிரகாசமா  இருக்கே? என்ன  விஷயம் ?


2  நமக்குப்பிடிசசவங்களோட  ஒரு  இடத்துல  நாம  இருக்கும்போது  அந்த  இடம்  இன்னும்  அழகாய்டுது  இல்ல?


3  ஒரு  வேளை  என்  மேரேஜ்  லைஃப்  நல்லாருந்திருந்தா  உன்னைப்பற்றிய  நினைப்பு  எனக்கு  குறைஞ்சிருக்கும்


4  இது  மோசமான  உலகம், சேர்ந்து  வாழ  வேண்டியவங்களை  எல்லாம்  பிரிச்சு  வைக்கறாங்க , பிரிந்து  வாழ  வேண்டியவங்களை  எல்லாம்  சேர்த்து  வைக்கறாங்க 


5   மும்பை  போகும்போது  ஃபிளைட் , ரிட்டர்ன்  வரும்போது ட்ரெயினா? ஏன் ?


 எல்லாக்கம்ப்பெனியும்  ஒரே  மாதிரிதான், வேலையை  முடிக்கனும்னா  ஃபிளைட்டு , , வேலை  முடிஞ்சிட்டா  ட்ரெய்னு


6  எதுக்கு  இங்கே   வந்தே ? ஒன்றரை  மணி  நேரத்துல நானே  வந்திருப்பேனே?


 தெரியும்,  இப்பவே  வந்தா  ஒன்றரை  மணி  நேரம்  முன்  கூட்டியே  உன்னைப்பார்க்கலாமே? 

7 கடைசியா என்  எந்த  பர்த்டே  அன்னைக்கு  சந்தோஷமா  இருந்தேன்னு  நினைவில்லை , ஆனா  இப்போ  ஹேப்பியா  இருக்கேன் 


8  எங்கே  நீ  வராம  இருந்துடுவிடோனு பயந்துட்டே  இருந்தேன் 


 வர  வேண்டாம்னுதான்  நினைச்சேன், ஆனா  வராம  இருக்க  முடியலை 


9  ஒரு  பயணம்  எவ்வளவு  நல்லா  இருந்தாலும்  கடைசில  அது  முடிஞ்சுதான்  ஆகனும், இல்லையா? 


10  நாங்க  முன்னாள்  காதலர்கள் , ஆனா  இப்போ நல்ல  நண்பர்களா  இருக்கோம்  என்பது  எல்லாம்  போங்காட்டம், ஒரு  காதலி  எப்போதும்  காதலியாதான்  இருக்க  முடியும் 


11   ரெண்டு  பேரும்  சந்தோஷமா  இருக்கறதுக்காக  சம்பாதிக்கறோம், கடைசில  சம்பாதிக்கறதுக்காக  சந்தோஷத்தை  இழந்துடறோம்


12  நான் யாராவது  ஒருவரை  மட்டும்  கொன்னுடலாம், அதுக்கு  தண்டனையே  இல்லைனு  சொன்னா  உன்னை  அடுத்த  செகண்டே  கொன்னுடுவேன்


13   ஹாய், எதுக்கு  ஃபோன்  பண்ணி  இருக்கே? ஏதாவது  பிரச்சனையா?


 ஏதாவது  பிரச்சனைன்னாதான்  உனக்கு  ஃபோன்  பண்ணனுமா?


14   நான்  இல்லாம  உன்னால  சந்தோஷமா  இருக்க  முடியுது , ஆனா  நீ  இல்லாம  என்னால  சந்தோஷமா  இருக்க  முடியலை 


15  வேண்டாம்னு  முடிவு  பண்ணிட்டா  வேரோடு  தூக்கி  எறிஞ்சுடனும், இலை  வேணும், கிளை  வேணும்னு  கேட்கக்கூடாது 



16 நீ  ஒரு  விஷயத்தை  சொல்லாம  மறைக்கறே - அப்டின்னாலே  அதுல  ஏதோ  தப்பு  இருக்குனுதான்  அர்த்தம் 


17  பொதுவா  லவ்  பிரேக்கப்  ஆகும்போது  லவ்வர்ஸ்  தான்  பிரிவாங்க , ஆனா  அந்த  லவ்  அப்படியேதான்  இருக்கும் 


18  எங்கே  போனாலும்  தலைக்கு  மேல  வானம்  இருப்பது  மாதிரி  என்  மனசுல  நீ  இருந்துட்டே  இருப்பே 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நீண்ட  இடைவெளிக்குப்பின்  சந்திக்கும்  காதலர்கள்  ஒரே  ரயிலில் பயணிக்கும்போது  அப்போது  சேட்  செய்ய  ஃபோன்  நெம்பர்  ஷேர்  பண்ணிக்கவே  இல்லையே? ( ரயில்  பயணம்  முடிந்த  பின்  ஷெர்  பண்ணிக்கறாங்க)


2  பெட்ரூம்ல  பிரகாசமா  எல்லா  லைட்டும்  எரிய  விட்டுட்டு  குழந்தையை  தூங்க  வைக்க  முயற்சி  பண்றாரு நாயகன். இருட்டில் தானே  தூக்கம்  வரும்?


3  நாயகன்  எம் டி  உடன்  மீட்டிங்கில்  இருக்கும்போது  காதலி  ஃபோன்  செய்வாள்  என்பது  தெரிந்தும்  ஃபோனை  ஸ்விட்ச்  ஆஃப்  பண்ணாமல்  அல்லது  சைலண்ட்  மோடில்  வைக்காமல்  வைப்ரேசன்  மோடில்  வைத்து  எம் டி யிடம்  மாட்டுவது  ஏன் ? 


4  நாயகன்  நாயகி  பெயரை  செல்ஃபோனில்  அதே  பெயரிலேயே  ஸேவ்  பண்ணி  வெச்சிருக்காரே? பொதுவா  பையன்  பேரில்  ஸ்டோர்  பண்ணி  வைப்பதுதானே  உலக  வழக்கம் ? 


5  ஆஃபீஸ்  டைம்ல  ஃபோன்  பண்ணினே  ஓக்கே,  இப்போ  வீட்டுக்குப்போறேன். காலை  வரை  எக்காரணம்  கொண்டும்  ஃபோன்  பண்ணாதே  என  நாயகன்  நாயகியிடம்  எச்சரிக்கவே  இல்லையே? 


6  நாயகன்  தன்  மனைவியுடன்  ரெஸ்ட்டாரண்ட்  வந்தபோது  மெசேஜ்  டோனை  சைலண்ட்  மோடில்  வைக்காமல்  ஏன்  மாட்டிக்கொள்கிறார் ?  


7  நாயகி  தன் கணவனைப்பிரிந்து  வாழ  முடிவெடுத்தும்  தன்னை  பல  முறை  அடித்த  கணவனை  டொமெஸ்டிக்  வயலன்ஸ்  கேஸ்  போலீஸ்  ஸ்டேஷன்ல  பதிவு  பண்ணவே  இல்லையே?  டைவர்ஸ்  அப்ளை  பண்றாரு , அதுக்கு  இந்த  கேஸ்  யூஸ்  ஆகுமே? 


8 நாயகி  வில்லி  ஆக  மாறி  வேறு  வேறு  புது  எண்ணிலிருந்து   மிட்  நைட்  டைம்ல  கால் பண்ணூம்போது  நாயகன்  ஏன்  செல்லை  ஸ்விட்ச்  ஆஃப்  பண்ணலை ? 


9  அப்பாவைப்பார்க்க  மகள்  அவ்லவ்  சின்ன  வயசு மகள்  ஆஃபீஸ்  அட்ர்சைக்கண்டு பிடிச்சுப்போக  ட்ரை  பண்ணும்போது  நாயகன்  மகளைப்பார்க்க  அவள்  படிக்கும்  ஸ்கூலுக்குப்போக  ஏன்  ட்ரை  பண்ணலை ? 


10 குழந்தை  கிடைத்ததும்  நாயகி  ஏன்  நாயகிக்கு  தகவ்லை  மெசேஜாக  அனுப்பவில்லை ? அவங்க  ஒரு  பக்கம்  தேடிட்டு  இருக்காங்களே?


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  க்ளீன்  யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  குடும்பத்துடன்  காணத்தக்க  டீசண்ட்  ஆன  லவ்  ஸ்டோரி . ரேட்டிங்  2.75 / 5 


நன்றி - அனிச்சம்  மின்னிதழ்  ஜூலை


Theera Kaadhal
Theera Kaadhal.jpg
Theatrical release poster
Directed byRohin Venkatesan
Written by
  • Rohin Venkatesan
  • G. R. Surendarnath
Dialogue byG. R. Surendarnath
Produced bySubaskaran
Starring
CinematographyRavivarman Neelamegam
Edited byPrasanna GK
Music bySiddhu Kumar
Production
company
Release date
  • 26 May 2023
Running time
128 minutes
CountryIndia
LanguageTamil