Thursday, June 22, 2023

வசந்த ராகம் (1986) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா) @ யூ ட்யூப்


இயக்குநர்  எஸ்  ஏ சந்திர  சேகர் + கேப்டன் விஜயகாந்த்  காம்போ படங்கள்  பெரும்பாலும்  சட்டம்,  பழி வாங்கல் , ஆக்சன்  படங்களாகவே  இருக்கும். ஒரு  மாறுபட்ட  ஃபேமிலி  மெலோடிராமாவாக  இப்படம்  ரிலீஸ்  ஆன  டைமில்  நல்ல  வரவேற்பு  விமர்சன  ரீதியாகவும் , வசூல்  ரீதியாகவும். மயூரி  மெகா  ஹிட்டுக்குப்பின்  சுதா  சந்திரனுக்கும்  நல்ல  மார்க்கெட்  இருந்த  நேரம்   .இளைய  தளபதி  விஜய்  இந்தக்கால  கட்டத்தில்  நாயகன்  ஃபிளாஸ்பேக் காட்சிகளில்  சிறுவனாக  நடித்து  வருவது  வழக்கம் . எஸ்  ஏ  சி  படங்களில்  பெரும்பாலும் நாயகன்  பெயர்  விஜய்  என்றே  இருக்கும்   . 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  பிரபல  பாடகி . அவரது  கச்சேரி  எங்கே  நடந்தாலும்  பிளாக்கிலாவது  டிக்கெட்  வாங்கி  கச்சேரியில்  முதல்  வரிசையில்  அமர்ந்து  அவரையும், பாடலையும்  ரசிப்பவர்  நாயகன். தனது  கையில்,  நெஞ்சில்  எல்லாம்  நாயகியின்  பெயரை  பச்சை  குத்தி  இருப்பார்  நாயகன்.


 அடிக்கடி  ஆட்டோகிராஃப்  வாங்கி  பழக்கம்  ஆகும்  நாயகன்  ஒரு  கட்டத்தில்  தன்  காதலை  வெளிப்படுத்தும்போது  நாயகி  ஒரு  அதிர்ச்சியான  தகவலை  சொல்கிறார். நாயகிக்கு  ஏற்கனவே  திருமணம்  ஆகி விட்டது . கணவனை  இழந்தவர். 


ஆனாலும்  நாயகன்  தன்  முடிவில்  விடாப்பிடியாக  இருக்க  நாயகி  திருமணத்துக்கு  சம்மதம்  தெரிவிக்கிறார். நாயகன், நாயகி  இருவருக்கும்  திருமணம்  நடக்கிறது 


 இப்போதுதான்  கதையில்  ஒரு  திருப்பம். இறந்ததாகக்கருதப்பட்ட  கணவன்  உயிருடன்  வருகிறான். இப்போது  நாயகிக்கு  பெரிய  குழப்பம். தாலி  கட்டிய  முதல்  கணவனோடு  வாழ்வதா? . தன்  மீது  உயிரையே  வைத்திருக்கும்  ரசிகன்  கம்  காதலன்  கம் லேட்டஸ்ட்   க்ணவனுடன்  வாழ்வதா? இந்த  சிக்கலுக்கு  நாயகி  எப்படி  விடை  காண்கிறார்  என்பதே  க்ளைமாக்ஸ் 


 நாயகன்  ஆக  ரகு  என்கிற  ரகுமான். க்ளீன்  ஷேவ்  முகத்துடன்  மீசை  இல்லாத  அமுல்  பேபி  கேரக்டரில்  பெண்களை  எளிதில்  கவரும்  தோற்றத்தில்  வருகிறார். ரொமாண்டிக்  ஹீரோ  ஆக  முதல்  பாதியில்  நாயகியின்  பின்னாலேயே  சுற்றும்போதும்  சரி , பின்  பாதியில் முன்னாள்  கணவனை  டீல்  செய்யும்  இடத்திலும்  சரி  கண்ணியமான நடிப்பு 


 நாயகி  ஆக  சுதா  சந்திரன் . குடும்பப்பாங்கான  முகம் , தமிழ்  சினிமா  உலகில் 80s    நாயகிகளில்  ரேவதி , சுஹாசினி ,  நதியா  வரிசையில்  சுதா  சந்திரனுக்கும்  ஒரு  இடம்  உண்டு கண்ணியம் ஆன  நடிப்பு . பின்  பாதியில்  ஏற்படும்  மனப்போராட்டாங்களை  அழகாக  முகத்தில்  காட்டி  இருக்கிறார்


 கணவனாக புரட்சிக்கலைஞர்  விஜய்காந்த் .ஓப்பனிங்  சீன்களில்  பெரும்பாலும்  ஃபைட்  சீனில்  அறிமுகம்  ஆகும்  இவர்  இதில்  மைக்  மோகன்  போல  பாடல்  காட்சியில்  அறிமுகம்  ஆவது  மாறுபட்ட சூழல் . குடிப்பழக்கத்தில்  சோக  ராகம்  பாடும்போது  அனுதாபத்தை  அள்ளுகிறார்


மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லாமல்   செந்தில் - கோவை  சரளா  காமெடி  டிராக்.ஒய்  ஜி  மகேந்திரன்  வழக்கம்  போல  அவரே  ஜோக்  சொல்லி  அவரே  சிரித்துக்கொள்கிறார். டம்மி  வில்லனாக  ராதாரவி .  புரட்சி  பத்திரிக்கையாளராக  எஸ்  ஏ  சந்திர  சேகர் . அந்தக்காலத்தில்  எஸ்  ஏ  சி  க்கு  பி  சி  செண்ட்டர்களில்  ஏகப்பட்ட  ரசிகர்கள்  உண்டு , அவர்  வசனம்  பேசும்  காட்சிகளில் நாயக்னுக்கு  இனையாக  கை  தட்டல்  வாங்குவார் 


இசை  எம் எஸ்  விஸ்வநாதன். ஐந்து  பாடல்களில்  3  பாடல்கள்  ஹிட் .


சபாஷ்  டைரக்டர்


1  படத்தில்  நாயகன்  ரகுமான்  என்றாலும்  போஸ்டர்  டிசைன்களில் , விளம்பரங்களில்  விஜய்காந்த்  தான்  மெயின்  ஹீரோ  மாதிரி  ப்ரமோ  பண்ணிய  புத்திசாலித்தனம் 


2  கேப்டனின்  ஃபிளாஸ்பேக்  காட்சிகளில்  தாய்  மாமனாக  அவரும், நாயகியும்  வருவதை புத்திசாலித்தனமாக  தன்  மகன்  விஜயை  வைத்து  எடுத்துக்கொண்டது 


3  ரொமாண்டிக்  ஸ்டோரியில்  கூட  சைடு  டிராக்கில்  ஒரு  மினிஸ்டர்  கேரக்டரை  புகுத்தி  அதில்  தனக்கும்  ஒரு  முக்கிய  கேரக்டர்  ஏற்படுத்திக்கொண்டது 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1கண்ணன்  மனம்  என்னவோ கண்டு  வா  தென்றலே  (  நாயகி  ஓப்பனிங்  சாங் ) 


2  ஒரு  தெய்வம்  நேரில்  வந்தது ,அது  என்னைப்பாட  வைத்தது  (  நாயகன்  கொண்டாட்டப்பாடல் )

3  சோகம்  தானோ  (  சோகப்பாடல் )


4  ஒரு  தெய்வம்  நேரில்  வந்தது  (  ரிப்பீட் மோட்)


5 இதுவரை  பாட்டைப்பிரிந்த  பாடகன்  எனக்கு  பல்லவி  கிடைத்தது (கேப்டன்  இண்ட்ரோ  சாங் ) 


6  நான் உண்மையை  சொல்லட்டுமா?  ஊரறிய  பாடட்டுமா?  ( சோக  சாங்) 


 ரசித்த  வசனங்கள் 


1  ஊழலை  ஒழிக்கறேன்  , ஊழலை  ஒழிக்கறேன்-னு  காலம்  காலமா   சொல்லிட்டிருக்காங்க , ஆனா   யாரும்  ஊழலை  ஒழிக்கலை  அவங்கதான்  ஒழிஞ்சாங்க 


2   ஆண்டவனுக்கு  முன்   ஆடுவதை  விட  ஆண்டு  முடிந்தவன்  முன்  ஆடு 


3 காதல்  என்பது  எதிரொலி  மாதிரி  , நீ மட்டும்  சத்தம்  போட்டா  போதாது  எதிர்  தரப்பும்  பதில்  தரனும்’


4  ராஜா  காலத்துல  இருந்து  ரஜினி காந்த்  காலம்  வரை  பெண்களுக்கு  வீரமான  ஆண்களைத்தான்  பிடிக்கும், ஆக்சன்  ஹீரோக்களுக்குத்தான்  இங்கே  மதிப்பு 


5 சுடுகாட்டுக்குப்போன  பிணம்  உயிரோட  திரும்பி  வந்தா  எந்த  வீட்லயும்  ஒத்துக்க  மாட்டாங்க 


6 ஒரு  சரித்திரத்தை  எழுத  ஆரம்பிச்சவனுக்கு  அதை  திருத்தவும்  உரிமை  இருக்கு 


7  ஒருவன்  வசந்த  ராகம்  பாட  வேண்டும்  என்றால்  இன்னொருவன்  சோக  ராகம்  பாட  வேண்டும் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  மடத்தனமான  க்ளைமாக்ஸ்  அந்தக்காலத்தில்  கே  பாலச்சந்தர்  உட்பட  பல  இயக்குநர்கள்  இப்படி  முட்டாள்  தனமா  க்ளைமாக்ஸ்  வைத்தார்கள் . இரண்டு  ஜோடி  நெருக்கடியைத்தீர்க்க  ஏதோ  ஒரு  ஆளை  விபத்து , அல்லது  தற்கொலை  மூலம்  ஆளைக்காலி  பண்ணுவது . இது  ஒரு  எஸ்கேபிசம் 


2  ஓப்பனிங்  காட்சிகளில்  நாயக்ன்  நாயகி பெயரை  பச்சை  குத்தி  இருப்பதாஅ  க்ளோசப்  காட்சிகளில்  காட்டுவார்கள் , திருமணம்  முடிந்த  பின்  சில  காட்சிகளில்நாயகன்  கையிலோ  நெஞ்சிலோ  அந்த  பச்சை  இருக்காது 


3  பல  வருடங்கள்  கழித்து  மனைவியைக்காணும்  சோகக்கணவன்  ஓடிப்போய்  மனைவியை  நலம்  விசாரிப்பாரா/  பாடிக்கொண்டு  இருப்பாரா??


4   ஒரு  சீனில்  கரண்ட்  கட்  ஆனதும்  இருட்டில்  நாயகி  தன்  முன்  நிற்பதாக  நினைத்து  நாயகன்  ரகுமான்  முன்  கேப்டன்  ஒரு  டயலாக்  பேசுவார். அருகில்  நிற்பது  பெண்  என்பது  பூ  வாசத்தில்  தெரியுமே?  என்னதான்  இருட்டு  என்ராலும்  அவுட்  லைன்  ல  அது  ஆணா? பெண்ணா?  என்று  கூடவா  தெரியாமல்  போகும் ?


5  இயற்கை , சொர்ணமுகி   உட்பட  பல  படங்களில்   நாயகன்  இறந்ததாக  நினைத்து  பின்  உயிரோடு  வருவதாகக்காட்டுகிறார்கள் . டெட்  பாடியை  நேரில்  பார்க்காமல்  யாரோ  சொன்னதை  வைத்து  இறந்ததாக  எப்படி  தீர்மானிக்க  முடியும் ? 


6  ரகுமான்  ஒரு  காட்சியில்  பாடல்  வரி  மூலம்  இந்த  வீணையை  இதுவரை  தொடவும்  இல்லை , மீட்டவும்  இல்லை  என்று  பாடுகிறார். பாடல்  அழகுக்காக  அப்படி  வர் அமைத்தார்கள்  என்றாலும்  நிஜத்தில்  அப்படி  இல்லை . அதற்கான  தேவையும்  இல்லை 


7  வில்லனான  அரசியல்வாதி  ஒருபபார்ட்டியில்  ஆடிப்பாட  நாயகியை  வலுக்கட்டாயமாக  அழைத்து  வருவது  அபத்தம்.  இந்த  மாதிரி  ஆட்கள்  எல்லாம்  கேபரே  டான்ஸ்  , கிளப்  டான்ஸ்  பார்ப்பார்களா?  பரத  நாட்டியம்  பார்ப்பார்களா? 


8  எஸ்  ஏ  சி  உயிர்  விடும்  காட்சி  படு  செயற்கை . தன்னை  ஒரு  தியாகி  ஆகக்காட்டிக்கொள்ள  எல்லாப்படங்களிலு,ம்  இப்படி  செயற்கையான  காட்சியைப்புகுத்துவார் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ  ப்டம்  தான் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   விஜய்காந்த்  ரசிகர்கள்  பார்த்தால்  கடுப்பாவார்கள் . மற்றவர்கள்  பார்க்கலாம்  . ரேட்டிங் 2/5 / 5 


வசந்த ராகம்
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புஷோபா சந்திரசேகர்
இசைஎம்.எஸ்.விஸ்வநாதன்
நடிப்பு
ஒளிப்பதிவுஎம்.கேசவன்
படத்தொகுப்புஷியாம் முகர்ஜி
கலையகம்வி.வி.க்ரியேஷ்ன்ஸ்
வெளியீடு1 ஆகஸ்டு 1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Wednesday, June 21, 2023

கண் சிமிட்டும் நேரம் (1988) - தமிழ் - சினிமா விமர்சனம் ( த்ரில்லர் )

 


    இயக்குநர்  கலைவாணன்  கண்ணதாசன் அறிமுக  இயக்குநராக  இது  முதல்  படம், அதே  போல்  சரத்  குமாருக்கும்  இது  முதல்  படம் , தமிழில்  சூப்பர்  ஹிட்  ஆன  இப்படம்  பிறகு  ஹிந்தியில் ரீமேக்  செய்யப்பட்டு  1990  ஆம்  ஆண்டு  சைலாப்  என்ற  பெயரில்  ரிலீஸ்  ஆனது . இது சரத் குமாரின்  சொந்தப்படமும்  கூட  , தனது  மகள்  பெயரில்  வரலட்சுமி  மூவிஸ்  தயாரிப்பு 

 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  நாயகி  இருவருக்கும்  முன்  பின்  அறிமுகமே  இல்லை , பார்த்துக்கொண்டதும்  இல்லை .  இருவருக்கும்  எந்தத்தொடர்பும்  இல்லை . ஆனால்  நாயகன்  நாயகியைகொலை  செய்ய  துரத்துகிறான், அது  ஏன்  என்பதுதான் கதையின்   ஒன் லைன் 


நாயகனுக்கு  அம்மா, திரும்ண  வயதில்  ஒரு  தங்கை ,  இருவரும்  இருக்கிறார்கள் . மிடில்  கிளாஸ். தங்கைக்கு  மாப்ளை  பார்த்து  திருமணம்  நிச்சயிக்கும்போது  மாப்பிள்ளை  வீட்டார்  பெண்ணுக்கு  குறிப்பிட்ட  சீர்  செய்ய  வேண்டும்  என  எதிர்பார்க்கிறார்கள் , ஆனால்  நாயகனிடம்  அவ்வளவு  பணம்  இல்லை . ஆனால்  மாமா  ஒரு  ஐடியா  சொல்கிறார். நாயகனுக்கு  ஒரு  இடத்தில்  பெண்  பார்த்து  அவங்க  கிட்டே  வரதட்சணை  வாங்கி  இங்கே  கை  மாத்தி  விட்டு  டேலி  பண்ணிடலாம்  என்பதே  அந்த  ஐடியா


 நாயகன்  அதற்கு  ஒத்துக்கொள்கிறான். நாயகனுக்கு  ஒரு  இடத்தில்  பெண்  பார்க்கிறார்கள் . திருமண்ம்  நிச்சயிக்கப்படுகிறது. நாயகனுக்கு  நிச்சயம்  ஆன  பெண்ணுக்கு  ஆல்ரெடி  ஒரு  காதலன்  உண்டு . அவன்  மடத்தனமாக  ஒரு  திட்டம்  போடுகிறான். அவனுக்கு  வரனாக  வந்த  பல  பெண்  ஃபோட்டோக்களில்  ரேண்டம்  ஆக  ஒரு  ஃபோட்டோவைத்தேர்ந்தெடுகிறான். அது  தான்  நாயகியின்  ஃபோட்டோ. அந்த  ஃபோட்டோவை  நாயகன்  ஃபோட்டோவுடன்  வைத்து  மார்ஃபிங்  பண்ணி  ஜோடி  ஃபோட்டோ  போல்  ரெடி  பண்ணுகிறான். அதை   தனது  காதலியின்  அப்பாவுக்கு  ஒரு  கடிதத்துடன்  இணைத்து  அனுப்புகிறான்


 அக்கடிதத்தில்  நாயகன் நாயகி  இருவருக்கும்  ஆல்ரெடி  திருமணம்  ஆகி  விட்டது  என  இருக்கிறது. இதனால்  திருமணம்  நிற்கிறது .நாயகனுக்குப்பெண்  பார்த்த  பெண்ணுக்கு  அவள்  காதலனுடன்  திருமணம்  நடக்கிறது .அந்தப்பெண்ணின்  அப்பா  நாயகனின்  தங்கை  திரும்ணத்தை  நிறுத்தி  விடுகிறார். இதனால்  மனம்  உடைந்த  நாயகனின்  அம்மா,  தங்கை  இருவரும்  தற்கொலை  செய்து  கொள்கின்றனர் 


இதுவரை  சொன்னது  ஃபிளாஸ்பேக்


 தன்  குடும்பத்தாரின்  சாவுக்கு நாயகி  தான்  காரணம்  என  தவறாக  நினைத்து  நாயகியைக்கொலை  செய்ய  நாயகன்  கிளம்புகிறான், இது  தான்  ஓப்பனிங்  ஷாட்.நாயகனுக்கு  தலையில்  அடிபட்டு  டாக்டர்  ஆன  நாயகியிடமே  பேஷண்ட்டாக  அட்மிட்  ஆகிறான்.  தலையில்  அடிபட்டதால்  நாயகனுக்கு  பழைய  நினைவு  எதுவும் இல்லாமல்  மூன்றாம்  பிறை  ஸ்ரீதேவியின்  மேல்  வெர்சன்  போல்  நடந்து  கொள்கிறான் 


 டாக்டர்  ஆன  நாயகி   ஒரு  தலையாய்  நாயகன்  மீது  மையல்  கொள்கிறாள்  நாயகனுக்கு  ஒரு  கட்டத்தில்  மீண்டும்  தலையில்  அடிபட  பழைய  நினைவு  வருகிறது . இதற்குப்பின்  நடக்கும்  திருப்பங்கள்  தான்  க்ளைமாக்ஸ் 


 நாயக்ன்  ஆக  நவரச  நாயகன்  கார்த்திக். கண்களில்  கொலை  வெறி ததும்ப  இவர்  நாயகியைத்துரத்தும்  காட்சிகள்  கலக்கல் ரகம், தியேட்டரில்  ஒரே  கைதட்டல்  மழை  ரிலீஸ்  டைமில் 


நாயகி  ஆக  அம்பிகா. ஒரு  நளினியோ , ஜீவிதாவோ  செய்திருக்க  வேண்டிய  கேரக்டர்.  ஏன்  எனில்  இது  பொன்ற  பயமுகம்  காட்டும்  ரோல்களில்  அவர்கள்  இருவரும்  விற்பன்னர்கள் . அவர்கள்  அளவுக்கு  இவர்  முகத்தில்  பயம்  இல்லாவிட்டாலும்  காதலும் , வெட்கமும்  நன்றாக  வருகிறது 


 இந்த  கேசை  துப்பு  துலக்கும்  போலீஸ்  ஆஃபீசராக  ச்ரத்  குமார் . இவரே  தயாரிப்பாளர்  என்பதால்  படம்  முழுக்க  வரும்படி  ரோல். கச்சிதமாக  செய்து  இருக்கிறார்.க்ளைமாக்சில்  இவருக்கும்  நாயகனுக்கும்  சோலோ  ஃபைட்  புலன்  விசாரனை  ஃபைட்  போல்  மிரட்டலாக  வைத்திருக்கலாம், ஆனால்  ஏனோ   மிஸ்  ஆகி  விட்டது 


மெயின்  கதைக்கு  ச்ம்பந்தம்  இல்லாமல்   எஸ்  எஸ்  சந்திரன்  - செந்தில்  காமெடி  டிராக் வருகிறது. ரொம்ப  மொக்கை  எல்லாம்  இல்லை . பரவாயில்லை  ரகம் 


இவ்ர்கள்  போக  பூர்ணம்  விஸ்வநாதன் , குட்டி பத்மினி  போன்றோரின்  பங்களிப்பும்  உண்டு 


வி எஸ்  நரசிம்மன்  இசையில்  நான்கு  பாடல்கள் , அதில்  ஒரு  பாட்டு  சூப்பர்  டூப்பர்  ஹிட்டு . பின்னணி  இசை  குட் . குறிப்பாக  சரத்  குமார்    ஜீப்பில்  வரும்  காட்சிகளில்  எல்லாம்  ஒரு  பிஜிஎம்  பின்னி  எடுக்கிறது . களைமாக்ஸ்  நாயகன் - நாயகி  சேசிங்  சீன்களில்  பிஜிஎம்  பரபரப்பு 


எடிட்டிங்கில்  ரெண்டே  கால்  மணி  நேரம்  படம்  ஓடுகிறது 


இயக்குநர்  ஆகவும் , பாடல்  ஆசிரியர்  ஆகவும்  கலைவானன்  கண்ணதாசன்  ஜெயித்திருக்கிறார். அந்தக்காலத்தில்  ரிலீஸ்  டைமில்  சந்தம்  இல்லாமல்  வந்து  எதிர்பாராத  ஹிட்  கொடுத்த  படம்  இது 


சபாஷ்  டைரக்டர்


1  ஃபிளாஸ்பேக்  போர்சனை  கச்சிதமாக  படத்தின்  பின்பாதியில்  வைத்தது 


2  க்ளைமாக்ஸ்  சேசிங்  சீனை  மிரட்டலாக  எடுத்தது 


3 நாயகன் , நாயகி  இருவருக்கும்  எந்தத்தொடர்பும்  இல்லை  என்றாலும்  அவர்களை  லிங்க்  பண்ணிய  ஐடியா  குட் 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  விழிகளில்  கோடி  அபிநயம் ,


2  மமனுக்குத்தான்  வலை  விரிச்சேன் 


3   ராகம்  புது  ராகம் 


4  தேனே  பாடுதே 


  ரசித்த  வசனங்கள் 


1  இங்கே  இருக்கும்  எல்லா  நாய்களும்  விற்கத்தான். ரூ 1500 ஒரு  நாயின்  விலை 


அப்படியா? அப்போ  இது ?


 யோவ், அந்தப்ப்பொண்ணு  லேடி  ஸ்டாஃப் 


( மெயின்  கதையில்  வசனம்  எதுவும்  சொல்லும்படி  இல்லை , காமெடி  டிரக்கில்  தான்  க்ளிக்  ஆகி  இருக்கிறது )

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  ஓப்பனிங்  ஷாட்ல  ஆட்டோவில்  நட்ட  நடு  ராத்திரியில்  கூலிங்க்  கிளாஸ்  போட்டுட்டு  போறார். அவருக்கு  கண்  நல்லாதானே  இருக்கு ? எதுக்கு  நைட்  டைம்ல  கூலர்ஸ்? 


2  நாயகி  ஓப்பனிங்  ஷாட்ல  கொட்டும்  மழைல  நனைஞ்சுக்கிட்டே  கேட்  டை  திறந்து  விட்டு  காரில்  வீட்டுக்குள்  வருகிறார்/  லாங்  ஷாட்டில்  மழையில்  நன்கு   நனைபவர்  க்ளோசப்   ஷாட்டில்   நன்றாக  இருக்கிறார் , நனையவில்லை 


3  நாயகன்  சூட்கேசில்  ஒரு  லுங்கி, ஒரு  பாட்டில் சரக்கு , ஒரு  கத்தி  இவ்ளொ  தான்  வெச்சிருக்கார் . அந்த  சூட்கேசில்  ஏதோ  பெரிய  புதையல்  இருக்கறதா  நினைச்சுட்டு  நாலு  லூஸ்  ரவுடிகள்  ஃபைட்  எல்லாம்  போடறாங்க . நாயகன்  அந்த  டப்பா  சூட்கேஸ்சை  தானமாவே  கொடுத்திருக்கலாம் 


4 நாயகன்  நாயகி  வீட்டில்  பேஷண்ட்  ஆக  இருக்கிறான். போலீஸ்  ஸ்டேஷன்  வந்துட்டுப்போகும்படி  ஆஃபீசர்  சொன்னதால்  நாயகி  அங்கே  போகிறார் , சரி  கூட  எதுக்கு  நாயகனை  கூட்டிட்டுப்போறார் ? அவரே  பேஷண்ட். வீட்டில்  பணியாட்கள்  இருக்கிறார்களே? பார்த்துக்க  மாட்டாங்களா? 


5   க்ளைமாக்சில்  நாயகனுக்குப்பழைய  நினைவுகள்  வந்து  விடுகிறது . நாயகியைக்கொலை  செய்ய  துரத்துகிறார். நாயகியுடன்  பழகிய  தருணங்கள்  மறந்து  விடுகிறது . ; பிறகு  எப்படி நாயகியின்  பங்களா மட்டும்  நினைவு  வருகிறது ?


6  க்ளைமாக்ஸில்  சரத்  குமார் கார்த்திக்கின்  முழங்காலில்  சுடுகிறார். புல்லட்  பட்டு  ரத்தம்  வருகிறது . ஆனால்  பல  லாங்  ஷாட்களில்  பேண்ட்டில்  ரத்தமே  இல்லை . குண்டடி  பட்டும்  அவர்  ஓடிக்கொண்டே  , துரத்திக்கொண்டே  தான்  இருக்கிறார் 


7 வரதட்சணை  வாங்குவதும்  தவறு, கொடுப்பதும்  தவறு , இருந்தும்  நாயகன்  எபப்டி  அந்த  எக்சேஞ்ச்  ஆஃபருக்கு ஒத்துக்கொண்டார்? 


8 ஹீரோ  ஃபிளாஸ்பேக்கில் ,  ரன்னிங்  டைமில்  ஆகிய  இரு கால  கட்டங்களிலும்  ஒரே  ஹேர்  ஸ்டைல்  தான், ஆனால்  ஓப்பனிங்  ஷாட்  சேசிங்கில்  மட்டும்  விக்.. ஏன் ? 


9  அம்பிகா  எழுதிய  லெட்டர்  போல  ஒரு  போலியான  கடிதம்  தயாரிக்கபப்டுகிறது , ஆனால்  அம்பிகாவின்  வாய்ஸ்  ஓவரில்  அந்தக்கடிதம்  படிக்கப்படுவது  எப்ப்டி? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பரபரப்பான  , விறுவிறுப்பான  படம் . பார்க்கலாம் ., ரேட்டிங்  2.75 /  5



கண் சிமிட்டும் நேரம்
இயக்கம்கலைவாணன் கண்ணதாசன்
தயாரிப்புஆர். சரத்குமார்
இசைவி. எஸ். நரசிம்மன்
நடிப்புகார்த்திக்
அம்பிகா
பூர்ணம் விஸ்வநாதன்
சரத்குமார்
எஸ். எஸ். சந்திரன்
செந்தில்
கிருஷ்ணாராவ்
டிஸ்கோ சாந்தி
குட்டி பத்மினி
வரலட்சுமி
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Tuesday, June 20, 2023

ஆராதனை (1981) - தமிழ் - சினிமா விமர்சனம் ( பிளாக் மேஜிக் ரொமாண்டிக் த்ரில்லர்) ) @யூ ட்யூப்

 


ஹீரோ  யாரு ? வில்லன்  யாரு? என்ற  குழப்பம்  க்ளைமாக்ஸ்  வரை  நீடித்து  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டில்  உண்மை  முடிச்சு  அவிழும்  ஒரு  சில  படங்களில்  இதுவும்  ஒன்று .  இளையராஜாவின்  சூப்பர்  ஹிட்  பாடல்கள்  ஏற்கனவே  கேட்டிருந்தாலும்  அது  இந்தப்படம்தான்  என  தெரியாமலே  இருந்திருப்போம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன்  பெரிய  எஸ்டேட்  ஓனர் ,, ஆனால்  அனாதை . காலேஜில்  படிக்கிறார். நாயகி  அதே காலேஜில்  படிக்கிறார். ஒரு  நாள்  நாயகி  விளையாடும்போது  கீழே  விழுந்து  கால்  கெண்டைக்கால்  சுளுக்கிக்கொள்ள  நாயகன்  அங்கே  வந்து    கோவை  சிங்கிரிபாளையம்  டாக்டர்  போல  நாயகி  காலைப்பிடித்து  நீவி  விட்டு  சுளுக்கு  எடுக்கிறார். (கெண்டைக்காலில்  சுளுக்கு  வருமா? என  கூகுள்  சர்ச்  பண்ணிப்பார்த்தேன், விடை  கிடைக்கவில்லை ) 


நாயகிக்கு  நாயகன்  மீது  காதல் . ஒருதலையாய்க்காதலித்தாலும்  ஒரு  நாள்  தன்  மனதில்  உள்ள  காதலை  வெளீப்படுத்துகிறாள்:  நாயகன்  ஏற்றுக்கொண்டு நாயகியைத்தன்  பங்களாவிற்கு  அழைத்துச்செல்கிறான். அங்கே  எஸ்டேட்  பங்களாவில்  நாயகனிடம்  பணி புரியும்  ஒரு  ஆள்  நாயகியிடம்  நாயகனைப்பற்றி  இல்லாததும்,  , பொல்லாததுமாகச்சொல்கிறான் 


 இந்த  பங்களாவிற்கு  இது  போல  பல  பெண்கள்  வந்து  போய்  இருக்கிறார்கள் , நீ நினைப்பது போல  நாயகன்  நல்லவன்  இல்லை வில்லன் எப்படியாவது  தப்பிப்போ  என  எச்சரிக்கிறான். இதனால்  குழப்பம்  அடைந்த  நாயகி  நாயகனைப்பிரிந்து  செல்கிறாள் 


நாயகியைப்பிரிந்த  சோகத்தில்  குடித்துக்குடித்து    நாயகன்  தன்னை  அழித்துக்கொள்கிறான். நாயகியின்  வீட்டில்  வேறொரு  மாப்பிள்ளை பார்த்துத்திருமணம்  செய்து  வைத்து  விடுகிறார்கள் , ஆனால்  கல்யண  முகூர்த்தம்தான்  நடந்ததே  தவிர  சாந்தி  முகூர்த்தம்  நடக்கவில்லை . ஏன் ? அதைத்தடுக்கும்  சக்தி  எது ?


 உண்மையில்  நாயகன்   நல்லவனா?  வில்லனா?  நாயகியைத்திருமணம்  செய்த  மாப்பிள்ளை  தான்  வில்லனா? எஸ்டேட்டில்  பணி  புரிந்த  ஆள்  எதற்காக  நாயகனைப்பற்றி  அபாண்டமாகப்பொய்  சொன்னான் ? எல்லாக்கேள்விகளுக்கும்  க்ளைமாக்சில்  பதில்  உண்டு 


 நாயகன்  ஆக  சுமன். அந்தக்காலத்தில்  கமல், மோகன் , சுரேஷ்  போல  இவரும்  செம  ஹிட்  ஆகி  இருக்க  வேண்டியவர். நீலப்பட  விவகாரத்தில்  மாட்டிக்கொண்டு  ஜெயிலுக்குப்போனதால்  அவரது  வாழ்க்கையே  மாறியது . இதில்  நடிப்பில்  குறை  வைக்கவில்லை \\


நாயகி  ஆக  சுமலதா . அழகான  முகம்  . நிறைவான  நடிப்பு வில்லன்  ஆக  நிழல்கள்  ரவி , சாமார்த்தியமான  வில்லத்தனம் 


இளையராஜாவின்  இசை  பின்னணி  இசை  இரண்டும்  அருமை . 2  பாட்டு  செம  ஹிட்டு 



சபாஷ்  டைரக்டர்


1  ரொமாண்டிக் ஸ்டோரியில்  சாமார்த்தியமாக  பில்லி  சூன்யம்  என  புகுத்தி  திகில்  படம்  ஆக  எடுத்த  விதம் \\

2  நாயகன்  - நாயகி   கெமிஸ்ட்ரி  ஒர்க்  அவுட்  ஆன   விதம் 


3  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட் 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  ஜெயிச்ச  கட்சி  நம்ம  கட்சிண்ணே, தோத்த  கட்சி  எதிர்க்கட்சிண்ணே   ( காலேஜ்  எலக்சன் வின்னிங்  கொண்டாட்டப்பாடல் ) 


2   இளம்பனித்துளி விழும்  நேரம் \ 

இலைகளில்  மகரந்தக்கோலம்   ( நாயகன் - நாயகி  டூயட் ) 


3  ஒரு  குங்குமச்செங்கமலம் 

இள  மங்கையின்  தங்க  முகம்    ( வில்லன் - நாயகி  டூயட்) 


  ரசித்த  வசனங்கள் 


1  பதவிக்கு  வந்து  ரெண்டு  மாசம்  ஆச்சு, என்ன  செஞ்சிருக்கீங்க ? 


வெற்றிகரமான  60 வது  நாள்  போஸ்டர்  வேணா  ஒட்டவா? 


2  மாந்தரீகம், தாந்தரீகம்  எல்லாம்  அணு  சக்தி  மாதிரி , அதை  வெச்சு  ஆக்கவும்  செய்யலாம், அழிக்கவும்  செய்யலாம் 


3   என் மனசு  எழுதப்படாத  ஒரு  வெள்ளைக்காகிதம் \\ 


அதுல  என்னைக்குமே  அழியாத  ஓவியமா  நான்  இருக்க  ஆசைப்படறேன்


4  ஊர்ல  நிலம்  இருக்கா? \\


  ஊருன்னு  இருந்தா  நில  புலன்  இல்லாம  இருக்குமா? 


 ஊருல  இருக்கு , உனக்கு  இருக்கா? 



5  ஒரு  சாதாரண  பெண்ணை  அடைவதற்காக  இந்தக்கேவலமான  பில்லி  சூன்யம், வசியம்  இதை  எல்லாம்  யூஸ்  பண்ணனுமா? 


6   விஞ்ஞானத்துக்கும்  பகுத்தறிவுக்கும்  புலப்படாத  புரிபடாத  தெய்வ  சக்தி  இருக்கு 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகியின்  அம்மாவும்  அப்பாவும்   திருமணம்  பற்றி  அவர்களுக்குள்  பேசிக்கொண்டு இருக்கிறார்கள் . பின்  ஒரே  ஷாட்டில்  கேமரா  நாயகியின்  பெட் ரூமுக்கு  வருகிறது . அப்போது  பெற்றோரிடம்  நாயகி  நீங்க  பேசறதை  எல்லாம்  கேட்டுட்டுதான்  இருந்தேன்  என்கிறார் , அது  எப்படி ? அப்படிக்கேட்டுக்கொண்டிருந்தால்  அங்கேயே  அப்போதே  பதில்  சொல்லி  இருக்கலாமே? 


2     வில்லனும் , நாயகியும்    முதல்  இரவு  அறையில்      சேரும்  முன்  அதைத்தடுக்க  தீய  சக்தி  முனைவது  ஓக்கே . ஆனால்  இரண்டாவது  முகூர்த்தத்தில்  இரண்டு   பேரும்  அசதியாகத்தூங்கும்போது  தீயசக்தி டமார்  டமார்  என   ஜன்னல்  கதவுகளை  ஆட்டுவது  ஏன் ? விழித்தால்  சேர்ந்து  விடுவார்கள் , எழுப்பி  விடாமல்  இருந்திருக்கலாமே?  


3   வில்லனின்  கழுத்தில்  வேம்ப்பயர்  அட்டாக்  பண்ணி  இருக்கும்  காயத்தடத்தை  வில்லன்  அந்த  மாந்திரிகவாதியிடம்  காட்டுவது  ஓக்கே ஆனால்   காயத்துக்கான  சிகிச்சையை  எடுத்துக்கொள்ளவே  இல்லையே? 


4    நாயகியிடம்  தனியாக  சில  கேள்விகள்  கேட்க  வேண்டும்  என  மந்திரவாதி  சொன்னதும்  வில்லன்  ஒத்துக்கொண்டு  ஒரு  அறையில்  இருவரையும்  அனுப்புகிறான், ஆனால்  கதவில்  கரெக்டா  ரவுண்ட்  ஷேப்ல  அவ்ளோ  பெரிய  ஓட்டை  வழியா  பார்க்கிறான், எந்த  வீட்டில்  கதவில் அரை  மீட்டர்  ஆரத்தில்  சரியான  வட்ட  வடிவில்  ஓட்டை  இருக்கிறது ? 


5  நாயகன்  நாயகி  இருவரும்  தெய்வீகக்காதலர்கள்  போல்  இருந்து  விட்டு  திடீர்  என  கெட்ட  வார்த்தையில்  இருவருமே  பரஸ்பரம்  திட்டிக்கொள்வது  ரொம்ப  செயற்கை 


5   நாயகன்  தன்னிடம்  விசுவாசமாகப்பணியாற்றிய  எஸ்டேட்  மேனேஜர்  கம்  கணக்குப்பிள்ளையை  தன்  எல்லா  சொத்துக்களுக்கும்  வாரிசாக  நியமிக்கும்  காட்சி  நம்ப  முடியவில்லை , நாயகனே  குடிப்பழக்கத்துக்கு  அடிமை  ஆகி ஒரே  அறையில்  அடைந்து  கிடக்க  எப்படி  பாண்டு  பேப்பரில்  உயில்  எல்லாம்  தனியாக  ரெடி செய்தார்? 

6  மேனேஜர்  அன  சாருஹாசன்  அதிகாலை  5  மணிக்கு  வீட்டுக்கு  வந்ததாகவும்  எல்லாக்கதவுகளும்  திறந்தே  இருந்தது  ஏன்? என்றும்  வேலைக்காரன்  கவுண்டமணியை  சத்தம்  போடுகிறார். ஆனால்  அதிகாலை  5  மணிக்கு  அவருக்கு  அங்கே  என்ன  வேலை ? எதுக்கு  வந்தார்? அவர்  ட்யூட்டி  டைம் காலை 8  மணி  தானே? 


7  வில்லன் - நாயகி  இருவரும்  இருக்கும்  அறையில்  வாசலில்  கதவைத்திற  என  சத்தம்  கேட்டு  நாயகி  அறைக்கதவின்  தாழ்ப்பாளைத்திறந்து  கதவை  வெளிப்பக்கமாகத்திறப்பது  எப்படி ? எல்லா  அரைகளீலும்  தாழ்ப்பாள்    மேல்பக்கம்  இருந்தால்  அந்தக்கதவை  உள்  பக்கமாகத்தானே  திறக்க  முடியும்? ? 


8    க்ளைமாக்சில்  மந்திரவாதி    பூஜை  செய்யும்போது  அம்பிகையே  முனீஸ்வரனே சரணம்  சரணம்  என்கிறார், ஆனால்  அங்கே  சாமியே  சரணம்  ஐயப்பா  என  எழுதி  இருக்கிறது . முனீஸ்வரனுக்கும்  அம்பிகைக்கும்  என்ன  சம்பந்தம் ? ஐயப்பன் இங்கே  எப்படி  வந்தார் ? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   வித்தியாசமான  படம்  தான்  பார்க்கலாம் . சுமலதா  அழகு , இளையராஜாவின்   இசைக்காகப்பார்க்கலாம்  ரேட்டிங் 2.75 / 5 


ஆராதனை
இயக்கம்பிரசாத்
தயாரிப்புராதா பாலகிருஷ்ணன்
டிம்பிள் கிரியேஷன்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புசுமன்
சுமலதா
வெளியீடுசெப்டம்பர் 111981
நீளம்3899 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Monday, June 19, 2023

வசந்த முல்லை ( 2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( சைக்காலஜிக்கல் ஆக்சன் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்


   2023  ஃபிப்ரவரி 10 ம் தேதி  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆன  இந்தப்படம்  இப்போது  அமேசான்  பிரைம்  ஓடிடி  தளத்தில்  காணக்கிடைக்கிறது . மாநாடு  செம  ஹிட்  ஆனதால்  டைம்  லூப்  கான்செப்ட்டில்  ஒரு  படம்  பண்ணலாம்  என  இயக்குநர்  நினைத்திருக்கக்கூடும் . அது  எடுபட்டதா? இல்லையா? என்பதைப்பார்ப்போம்


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஐ டி  துறையில்  பணீயாற்றும்  திறமையான  ஊழியன் /. டீம் லீடர் . . மல்ட்டி  டாஸ்க்கிங்க்  பர்சனாலிட்டி . இவருடைய  திறமைக்கு இவர்  இங்கே  இருக்க  வேண்டிய  ஆளே  இல்லை .  ஆனால்  ஐ டி  டிபார்ட்மெண்ட்டில்   இவருக்கு  ஏகப்பட்ட  மெண்ட்டல்  பிரஷர்  , டிப்ரஷன். தூக்கம்  கூட  இல்லாமல்  , குடும்பத்தைக்கூட  கவனிக்க  நேரம்  ஒதுக்காமல்  எப்போதும்  பிராஜக்ட்  பற்றியே  சிந்தித்து  மன  உளைச்சலுக்கு  ஆளாகிறார்


 இவர்  லீவ்  போட்டு  விட்டு  கொஞ்சம்  ரெஸ்ட்  எடுத்தால்  நல்லது  என  டாக்டர்  பரிந்துரைக்கிறார். இதனால்  நாயகன்  தன்  மனைவியை  அழைத்துக்கொண்டு  காரில்   டூர்  போகிறார். ஒரு  டூயட்  பாடி  விட்டு  டூர்  முடித்து  விட்டு  திரும்பி  வரும்  வழியில்  வசந்த முல்லை  என்னும்   ஒரு பழங்கால  லாட்ஜில்  தங்குகிறார். அங்கே  அவருக்கு  மர்மமான  சம்பவங்கள்  நிகழ்கின்றன . ஒரே  சம்பவம்  டைம்  லூப்பில்  சிக்கியது  போல மீண்டும்  மீண்டும்  நிகழ்கிறது . இதை  நாயகன்  எப்படி  சமாளித்து  வந்தார்  என்பதே  மீதிக்கதை  


நாயகன்  ஆக  பாபிசிம்ஹா . கச்சிதமான  நடிப்பு , ஆனாலும்  வில்லனாக , கேரகடர்  ஆர்ட்டிஸ்ட்  ஆக  பரிமளித்த  அளவு  நாயகனாகப்பிரகாசிக்க  முடியவில்லை


நாயகி  ஆக காஷ்மிரா  அழகிய  முகம்.கண்ணியம்  காக்கும்  கிளாமர். தமிழ்  சினிமாவுக்கு  எற்ற  நாயகி 


ஒன்றே  முக்கால்  மணி நேரப்படத்தில்  பாத்திரங்கள்  அறிமுகம்  ஆகி  கதைக்குள்  போகவே  அரை  மணி  நெரம்  எடுத்துக்கொள்கிறார்கள். ஒரு  மணி  நேரம்  கழித்து  இடைவேளை  வருகிறது . இடைவேளைக்குப்பின்  12  நிமிடக்காட்சிகள்  மூன்று  முறை  ரிபீட்  ஆகிறது . க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட் 10  நிமிசம். அவ்ளோ  தான்  படமே  முடிஞ்சுது 


 ஃபுல்  மீல்ஸ்  சாப்பிட்ட  திருப்தி  இல்லாமல்  ஏதோ  தக்காளி சாதம்  மட்டும்  சாப்பிட்ட  உணர்வுதான்  வருகிறது 



சபாஷ்  டைரக்டர்


1   ஏதோ  மிகப்பெரிய  த்ரில்லர்  படம்  பண்ணப்போறோம்  என்ற  நம்பிக்கையை  ஊட்டி  பாபிசிம்ஹாவிடம்  கால்ஷீட்  வாங்கியது 


2   ஒரே  ஒரு  லாட்ஜ்  செட்டிங் . நாயகன் , நாயகி  இருவரை  மட்டுமே  வைத்து  ஒரு  முழுப்படத்தை  முடித்த  விதம் 


3  ஸ்டார்  அட்ராக்சன்  வேண்டுமே  என்பதற்காக  ஆர்யாவை  புக்  செய்தது 


  ரசித்த  வசனங்கள் 


1  டெய்லி  காலைல  எழுந்திருக்க  அலாரம்  வைக்கிறோம், ஆனா  தூங்கப்போகும்  நேரத்துக்கு  யாராவது  அலாரம்  வைக்கிறோமா? 


2   பணம்  இருந்தா  போதும்  அதுலயே  நான்  திருப்தி  அடைஞ்சிடுவென்னு  நீ  எப்படி  நினைச்சே?  உன்  சமீபம்  எனக்கு  வேணும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  மாநாடு  படத்தில்  டைம்  லூப்  ஒவ்வொரு  முறையும்  சுவராஸ்யமாக  இருந்தது. இதில்  ஒரே  காட்சிகள்  ரிப்பீட்  ஆவதால்  கடுப்படிக்கிறது 


2  டைம்  லூப்  கான்செப்ட்  தவிர்த்து  சுவராஸ்யமான  சம்வங்களை அந்த  லாட்ஜில்  நிகழ்த்தி  இருக்கலாம்   


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - கண்ட்டெண்ட்டும்  இல்லை , அடல்ட்  கண்ட்டெண்ட்டும்  இல்லை , காலி  டப்பா 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பாபி சிம்ஹாவின்  அம்மா, அப்பா , காதலி , மனைவி  ஆகிய  நால்வர்  மட்டுமே  பார்க்கத்தகுந்த  படம், டைம்  வேஸ்ட் , ரேட்டிங்  1.5 / 5 


Vasantha Mullai
Vasantha Mullai.jpg
Theatrical release poster
Directed byRamanan Purushothama
Written byRamanan Purushothama
Screenplay by
  • Ramanan Purushothama
  • Ponnivalavan
Produced by
Starring
CinematographyGopi Amarnath
Edited byVivek Harshan
Music byRajesh Murugesan
Release date
  • 10 February 2023
CountryIndia
LanguageTamil

Saturday, June 17, 2023

மாலை நேர மல்லிப்பூ(2023) -தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிரமா ) @ ஆஹா தமிழ்

 


  சஞ்சய் நாராயணன்  இயக்கத்தில்  உருவான  இப்படம்   திரை  அரங்குகளில்  வெளியாகும்  முன்  நேரடியாக  ஆஹா    தமிழ் ஓ டி டி யில்  ஜூன் 9  முதல்  வெளியாகி  இருக்கிறது . இது  ஓடிடி யில்  ரிலீஸ்  ஆவதற்கு  முன்பே  பல  திரைப்பட  விழாக்களில்  கலந்து  கொண்டு  பல  விருதுகளை  வென்றதாகத்தெரிகிறது 


 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி ஒரு  பாலியல்  தொழிலாளி. அவருக்கு  ஒரு  மகன். பள்ளியில்  படிக்கிறான். அவனுக்கு  அம்மா  பற்றிய  உண்மை  விபரங்கள்  தெரியாது. அடிக்கடி  என்  அப்பா  யாரு? எங்கே  இருக்காரு ? எப்போ  வருவாரு ? எனக்கேட்டுக்கொண்டு  இருக்கிறான், அவனிடம்  உண்மையை  சொல்லாமல்  ஒரு  மாதிரி  சமாளித்துக்கொண்டு  இருக்கிறார்  நாயகி   


வீட்டு  வாடகை  கேட்டு  ஹவுஸ்  ஓனர்  தொந்தரவு  செய்து  கொண்டு  இருக்கிறார். நாயகிக்கு  பணக்கஷ்டம். தவணை , வாய்தா  கேட்டு  சமாளிக்கிறார். பட்ட  காலிலே  படும் , கெட்ட  குடியே  கெடும்  என்னும்  பழமொழிக்கு  ஏற்ப  அந்த  நேரத்தில்  தான்  கொரானா  லாக்  டவுன்  வருகிறது. 


கடுமையான  ஊரடங்கு  அமலில்  இருப்பதால்  நாயகி  தன்  தொழிலைத்தொடர  முடியாத  சூழ்நிலையில்  இருக்கிறார். இதற்குப்பின்  நாயகி  என்ன  செய்தார் ? எப்படி  தன்  பணத்தேவையை  பூர்த்தி  செய்தார் ? மகனுக்கு  உண்மை  தெரியாமல்  பார்த்துக்கொண்டாரா? என்பது  மீதி  திரைக்கதை  


நாயகி  ஆக  வினித்ரா  மேனன். கச்சிதமாக  நடித்துள்ளார். மகனிடம்  உரையாடும்  காட்சிகளில் பாசம்  மிகு  தாய்  ஆகவும்,  ஹவுஸ்  ஓனரிடம்  ஃபோனில்  கெஞ்சும்போது ஒரு  அபலையின்  முகம்  ஆகவும்  மாறுபட்ட  முக  பாவனைகளை  வெளிக்காட்டி  நடித்திருக்கிறார்


மகனாக  வரும்  அஸ்வின்  வயதுக்கு  மீறிய  நடிப்பெல்லாம்  தராமல்  இயல்பாக  கொடுத்த  கேரக்டருக்கு  உண்மையாக  நடித்துள்ளார். 


பெரும்பாலான  காட்சிகள்  வீட்டுக்குள்ளேயே  நடப்பதாக  இருப்பதால்  ஒளிப்பதிவு கச்சிதமாக  தன்  பணியை  நிறைவேற்றி  இருக்கிறது .  பின்னணி  இசை கதை  கூடவே  பயணிக்கிறது 


  2  மணி  நேரம்  ஓடும் அளவு  எடிட்டிங்  செய்திருக்கிறார்கள் . இன்னும்  ட்ரிம்  செய்து  இருக்கலாம

18+  படம்  என்றாலும் முத்தக்காட்சியோ, அரை  நிர்வாணக்காட்சிகளோ  இல்லை . கண்ட்டெண்ட்டுக்காகத்தான்  ஏ  சர்ட்டிஃபிகேட் 


சபாஷ்  டைரக்டர்

1  நாயகி  சிவப்பு  விளக்குப்பெண்  என்பதை  உணர்த்த  பல  காட்சிகளில்  அவர்  சிவப்பு  உடை  அணிந்திருப்பதாகக்காட்டியது 


2  நாயகிக்கு  க்ளோசப்  ஷாட்ஸ்  அதிகம்  வைத்தால்  நடிப்பு  பற்றிய  விமர்சனம்  எழலாம்  என  யூகித்து  லாங்க்  ஷாட்களாக  வைத்தது 


3  மகன்  தன்  அப்பா  யார்  எனக்கேட்கும்போது  தன்  மனம் கவர்ந்த  கஸ்டமர் ஒரு  சினிமா  புரொடியூசர்  என்பதால்  அப்பா  ஒரு  தயாரிப்பாளர்  என  சொல்வது   


  ரசித்த  வசனங்கள் 


1  இப்ப  இருக்கற பசங்களுக்கு  எல்லா  விபரமும்  தெரியுது , குறிப்பா  கெட்ட  வார்த்தைகள் 


2  நாளை  எல்லாமே சரி  ஆகிடும்


 எப்படிம்மா?

 அது  தெரியாது , ஆனா  சரி  ஆகிடும் 


3  நாளை  முதல்  லாக்டவுன், கை  கூட  குலுக்கக்கூடாதாம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 எனக்கு  இதை  விட்டா  வேற  தொழில்  தெரியாது  என  நாயகி  சொல்வதை  ஏற்றுக்கொள்ள  முடியவில்லை , ஜவுளிக்கடைகளில்  சேல்ஸ்  கேர்ள் ஆக , கார்மெண்ட்ஸ்  நிறுவனங்களில்  செக்கர்  ஆக  போகலாமே? அனுபவம்  தேவை  இல்லை 


2  நாயகி  ஆடம்பரப்பிரியை  மாதிரி  கேரக்டர்  டிசைன்  செய்யப்படவில்லை. பின் எதற்கு  அந்தத்தொழில்  என்ற  விளக்கம்  இல்லை 


3  ஒரு  கஸ்டமருக்கு  ரூ 2000  என  சார்ஜ்  செய்வதாக  ஒரு  காட்சி  வருகிறது . 30 நாட்களில்  அட்லீஸ்ட்  10  நாட்கள்  என்றாலே  ரூ  20000   ஆகி  விடுது . ஆனால்  ரூ 6000  கூட   வாடகை  கட்ட  முடியாதது  ஏன்? 


4 நாயகி  ஆண்ட்ராய்டு  கேமரா  ஃபோன்  தான்  வைத்திருக்கிறார், ஆனால்  கூகுள்  பே  அக்கவுண்ட்  இல்லை  என்கிறார்


5  வீட்டு  வாடகை  2  மாதம்  பாக்கி  இருக்கும்போது  யாரோ  கேட்டார்கள்  என  ரூ 10,000  கடனாகத்தருகிறார். பின்  ஏமாறுகிறார். 


6 மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லாமல் கஞ்சா  கடத்தல்  காட்சிகள்  இடம்  பெறுகின்றன 

7  ஒரு  காட்சியில்  மகனிடம்  அம்மாவுக்கு  வேலை  இருக்கு , என  அறைக்குள்  போய்  கதவைத்தாழ்  இடுகிறார். பின்  ஒரு ஆளிடம்  சேட்  செய்கிறார்/ அப்போது மகன்  திறந்த  கதவு  வழியாகப்பார்க்கிறான். கதவை  யார்  திறந்தார்கள் ? 


8  மகனுக்கு  ஆன்  லைன்  கிளாஸ்  நடக்கிறது , அப்போது  நாயகி  தன்  ஃபோனைக்கொடுக்கிறாள் . அப்போது  அவரது சமூக  வலைத்தளப்பக்கங்களை  லாக்  செய்ய  மாட்டாரா? அதே  போல்  கஸ்டம்ர்ஸ்  யாராவது ஃபோன்  செய்தால்  ஆபத்து , மகனுக்கு  தெரிந்து  விடும்  என  இன்கம்மிங்  கால்ஸ்  லாக்  பண்ண  மாட்டாரா?   


9  ஒரு  கஸ்டமர்  கூகுள்  பே  ஆக  ரூ  2000  தருவதை  நாயகியிடம்  ஜி பே  அக்கவுண்ட்  இல்லாததால் வேறு ஒரு  அக்காவின் அக்கவுண்ட்டில்  பணம்  கட்டி  விடச்சொல்கிறார். அந்தப்பணத்தை  அவர்  வாங்கிக்கொண்டதாக  காட்சி  வரவில்லை, ஆனால்  பக்கத்து  வீட்டில்  300  ரூபாய்  கடன்  வாங்குகிறார்


10  அப்பாஎங்கே  என  அடிக்கடி  கேட்கும்  மகன்  அப்பா  ஃபோட்டோ காட்டுங்க என்றோ , அப்பாவுடன்  ஃபோனில்  பேசவேண்டும்  என்றோ  அடம்  பிடிக்காதது  எப்படி ? ன் , ஆனால்  கிளாமர்   காட்சிகள் எதுவும்  இல்லை . வறுமை  நிலையை  சித்தரிக்கும்  காட்சிகள்  தான்  இருக்கின்றன்




அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+  படம்தா


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஒரு  குறும்படமாக  40  நிமிடத்தில்  முடிக்க  வேண்டிய  கதையை  ஜவ்வாக  இழுத்து விட்டார்கள் . ஒரு வேளை  அவார்டுப்படம்னா  அப்படித்தான்  இழுக்கனும்  ; போல ,  ரேட்டிங்  2 /5 

Friday, June 16, 2023

CUSTODY(2023) -தெலுங்கு - கஸ்டடி -தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்

 


   2007 ஆம்  ஆண்டு  சென்னை 28  என்ற  பிரம்மாண்டமான  வெற்றிப்படம்  கொடுத்து  சினி  ஃபீல்டுக்கு  வந்த  இயக்குநர்  வெங்கட் பிரபு   இதுவரை  12  படங்களை  இயக்கி  இருந்தாலும் செம  ஹிட்  ;படங்கள்  லிஸ்ட்  எடுத்தால்  சரோஜா (2008)  , கோவா  ( 2010)   மங்காத்தா  (2011)    மாநாடு (2021)   என  நான்கு  பட்ங்கள்  தேறுகிறது . இது  13  வது  படம் ., தமிழ் , தெலுங்கு  ஆகிய  இரு  மொழிகளில்  எடுக்கப்பட்ட  படம் என  வெளியில்  சொல்லிக்கொண்டாலும்  இது  தெலுங்குப்படமாக  எடுத்து  தமிழில்  டப்  செய்யப்பட்டது  போலத்தான்  தோன்றுகிறது. இது  வசூல்  ரீதியாக  தோல்விப்படம்  என்றாலும்  பார்க்கத்தகுந்த  படமே 


  ஸ்பாய்லர்  அலெர்ட்


மாநிலத்தின்  முதல்வர்  செய்த  ஊழல்  ரகசியத்தை  வைத்து  அவரை  மிரட்டும்  ஐ ஏ எஸ்  ஆஃபீசரை  சி எம்  அடியாட்கள்  மூல்ம்  போட்டுத்தள்ளுகிறார்/. அது  கொலை  என  தெரியாமல்  மறைக்க  போலியான  கலவர  சம்பவம் , வெடிகுண்டு  சம்பவம்  நிகழ்த்துகிறார். . அந்த  வெடிகுண்டு  சம்பவத்தில்  உயிர்  இழந்தவனின்  தம்பி  தான்  நாயகன் 


 நாயகன்  ஒரு  சாதாரண  போலீஸ்  கான்ஸ்டபிள் .  ஒரு  நாள்  இவர்  நைட்  டியூட்டியில்  இருக்கும்போது  ஒரு  அடிதடி  கேஸ்  விஷயத்தில்  மாட்டிய  இருவரை  லாக்கப்பில்  தள்ளுகிறார்.  அந்த   இருவரில்  ஒருவர்  சிபிஐ  ஆஃபீசர். அவர்  கைவசம்  இருக்கும்  ஆள்  பல  கொலை  வழக்குகளில்  தேடப்படும்  ஆசாமி . அடுத்த  நாள்  காலை  பெங்களூர்  கோர்ட்டில்  அவனை  ஆஜர்படுத்த  வேண்டும். செய்தால்  மாநில  முதல்வர்  பதவி  காலி.  முதல்வரின்  ரகசியங்கள்  அனைத்தும்  தெரிந்தவன்  அவன் 


 விடுவாரா  முதல்வர்? போலீஸ்  படையை  அனுப்பி  அவனைப்போட்டுத்தள்ள  முயல்கிறார். போலீஸ்  கான்ஸ்டபிள்  ஆன  நாயகன்  அவனை  கோர்டில்  ஆஜர்ப்ப்படுத்த   சிபிஐ  ஆஃபீசருக்கு  உதவ  முயற்சிக்கிறார். இதற்குப்பின்  நிகழும்  ஆக்சன்  சீக்வன்ஸ்  தான்  திரைக்கதை 


படத்தின்  முதல்  36  நிமிடங்கள்  நாயகன்  நாயகி  அறிமுகம், காதல் , கல்யாண  முயற்சி என  ஸ்லோவாகச்செல்கிறது. லாக்கப்பில்  இருவர்  அடைபட்ட  பின்  திரைக்கதை  சூடு  பிடிக்கிறது 


நாயகன்  ஆக  நாகார்ஜூன்  மகன்  நாக  சைதன்ய. அப்பாவைப்போலவே   உணர்ச்சிகளை  வெளிக்காட்டாத  முகம், குரல் .. தமிழ்  ரசிகர்களைப்பெரிய  அளவில்  கவர  வாய்ப்பில்லாத  முகம் 


 நாயகியாக  கீர்த்தி  ஷெட்டி. அழகிய  முகம், நடிப்பும்  , முக  பாவனைகளும்  கச்சிதம் 


 முதல்வராக   பிரியாமணி அசத்தல்  நடிப்பு , காமெடிய்னாக  வரும்  பிரேம்ஜி நம்மை  சிரிக்க  வைத்ததை  விட  வில்லன்  அர்விந்த்சாமி  சிரிக்க  வைத்தது  அதிகம் , நல்ல  டைமிங்  சென்ஸ்  டயலாக்  டெலிவரி 


முதல்வரின்  சொல்பேச்சு  கேட்கும்  ஆஃபீசராக  சரத்குமார்  கச்சிதமான  கம்பீரமான  நடிப்பு ., சிபிஐ  ஆஃபீசராக  சம்பத்  கச்சிதம் 


இசை  இளையராஜா  + யுவன்  சங்கர்  ராஜா . பெரிய  அளவில்  ஒன்றையும்  காணோம் 

வெங்கட்  ராஜன்  எடிட்டிங்கில்  இரண்டரை  மணி  நேரம்  படம்  ஓடுகிறது. முதலில்  வரும்  35  நிமிட  ஜவ்வு  இழுப்பை  இன்னும்  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம் 

சபாஷ்  டைரக்டர்


1  போலீஸ்  ஸ்டேஷனில்  குண்டு  திசை  மாறி  வில்லனின்  வயிற்றில்  இறங்க , என்னை  ஏண்டா  சுட்டே? என  வில்லன்  காமெடி  பண்ணும்  காட்சி ? 


2  நாயகி  காமெடியனை  ஏமாற்றி  லிஃப்ட்  கேட்டு  நாயகனிடம்  வர  காமெடியனுக்கு  நாயகியின்  அப்பா  ஃபோன்  பண்ணி  மாப்ளை , பொண்ணு மிஸ்சிங்  என  தகவ்ல்  சொல்வதும்  அப்போது  காமெடியன்  சமாளிக்கும்  காட்சியும் 

3  காமெடியன்  செய்யும்  காமெடியை  விட  வில்லன்  செய்யும்  யதார்த்தக்காமெடி  ஒர்க்  அவுட்  ஆகி  இருப்பது 


  ரசித்த  வசனங்கள் 


1   அப்பா , ஒரு  முக்கியமான  விஷய்ம்  பேசனும்

‘’ 

சரி பேசு 


 சின்ன  வயசுல இருந்து ஒரு  பெண்ணை  லவ்  பண்ணிட்டு  இருக்கேன்


 ஏதோ  முக்கியமான  விஷய்ம்   பேசனும்னியே , அதைச்சொல்லு 


2   வில்லன் = என்னய்யா  நடக்குது  இங்கே ? பொலீஸ்காரன்  நேர்மையா  இருக்கான் , சிபிஐ  நேர்மையா  இருக்கு , மார்ச்சுவரி  டிரைவர்  கூட நேர்மையா  இருக்கான் , மோசமான  ஆளுங்களா  சுத்தியும்  இருக்காங்களே? பேடு  வைப்ரேசனா  இருக்கே? 


3    நீ  அவங்களுக்குக்கல்யாணம்  பண்ணி  வைக்கப்போறியா? உனக்கு  முதல்ல  கல்யாணம்  ஆகிடுச்சா?


4  கார்  ஏன்  ஸ்டார்ட்  ஆகலை ?


 ரேடியேட்டரில்  தண்ணீர்  ஊற்றாம  பெட்ரோல்  டேங்க்ல  ஊத்திட்டானா?


5   உன்னைப்போட்டுத்தள்ளிட்டா  அவந்தான்  அடுத்த  ராஜூன்னாங்க . வேற  யாரோ  ராஜூ  ஆகறதுக்கு  நானே  ஆகிட்டுப்போறேனே?

அதுக்கு  ஏண்டா  இங்கே  குத்துனே? லிவர்  இங்கே  இருக்கு . எங்கே  குத்தனும்னு  கூட  தெரியல, நீ  ராஜூ  ஆகப்போறியா? 

6  உண்மைதான்  ஜெயிக்கும், கொஞ்சம்  லேட்  ஆகும், ஆனா  ஜெயிக்கும். ஒருவாட்டி  உண்மையின்  பக்கம்  நின்னு  பாரு , உன்  வாழ்க்கையே  மாறும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகன்  ஒரு  போலீஸ்.  அவனை  அலைக்கழிக்க  இன்ஸ்பெக்டர்  பகல்  முழுக்க  ஜீப்  டிரைவராக  பணி  செய்யச்சொல்லி  விட்டு நைட்  டியூட்டி  ஸ்டேஷனில்  பார்  என்கிறார்.  நாயகன்  ஸ்டெஷனுக்கு  வந்து  டிரஸ்  மாற்றிக்கொள்கிறார். நைட்  ட்யூட்டி  ஸ்டெஷனில்  பார்க்கும்போது  யூனிஃபார்ம்  போடக்கூடாதா? 


2   செயின்  ஸ்மோக்கரான  வில்லன்  எல்லோரிடமும்  வத்திப்பெட்டி  இருக்கா? எனக்கேட்டு  ரக்ளை  செய்வதும்  வத்திப்பெட்டி  கூட  இல்லாம  எதுக்குடா  பார்ட்டிக்கு  வர்றீங்க? எனக்கேட்பதும்  காமெடி .. அவங்கவங்க  தம்  அடிக்க  அவங்கவங்கதான்  லைட்டரோ , மேட்ச்  பாக்சோ  வெச்சுக்கனும் 


3   சிபிஐ  ஆஃபீசர்  தன்  வசம்  ஐடி  கார்டு  வெச்சுக்க  மாட்டாரா? போலீஸ்  லாக்கப்ல  கெஞ்சிட்டு  இருக்காரு?


4    சரத்  குமார்  வில்லனை  சுடும்போது  துப்பாக்கியில்  புல்லட்  இல்லை  என்பதை  உணர்கிறார். அனுபவம்  மிக்க  ஆஃபீசருக்கு  தன்  கன்  வெயிட்டை  வைத்து  புல்லட்  இல்லை  என்பதை  உணர  முடியாதா? 


5  வயிறில்  துப்பாக்கிக்குண்டு பாய்ந்தும்  பிறகு  தண்ணீரில்  நனைந்தும்  செஃப்டிக்  ஆகிட்யும்  வில்லனுக்கு  ஒன்றுமே  ஆகவில்லை , எப்படி ?


6  க்ளைமாக்ஸில்  ரயில்  எந்த  ஸ்டேஷனிலும்  நிற்காமல்  வேகமாகப்போகிறது . கன் பாயிண்ட்டில்  நாயகி  ரயில்  டிரைவரை  மிரட்டி  வேகமாக  ஓட்ட  வைக்கிறார். சிக்னல்  கிடைத்தால்தானே  ரயில்   போக  முடியும் ? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ  படம்  தான் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   முதல்  36  நிமிடங்கள்  ஸ்லோ என்றாலும்  அதற்குப்பின்  வேகம்  தான்  , ஒன்  டைம்  வாட்ச்சபிள்  ரேட்டிங்  2.5 / 5 


Custody
Custody 2023 film poster.jpg
Theatrical release poster
Directed byVenkat Prabhu
Written byVenkat Prabhu
Abburi Ravi (Telugu dialogues)
Produced bySrinivasaa Chituri
StarringNaga Chaitanya
Krithi Shetty
Arvind Swamy
Priyamani
R. Sarathkumar
Sampath Raj
CinematographyS. R. Kathir
Edited byVenkat Raajen
Music bySongs:
Yuvan Shankar Raja
Ilaiyaraaja
Score:
Yuvan Shankar Raja
Production
companies
Srinivasaa Silver Screen
Anji Industeries
Release date
12 May 2023[1]
Running time
148 minutes[2]
CountryIndia
LanguagesTelugu
Tamil
Box office26.8 crore[3]

Thursday, June 15, 2023

மேற்குத்தொடர்ச்சி மலை (2018)- தமிழ் - சினிமா விமர்சனம் ( யதார்த்த சினிமா ) @ நெட் ஃபிளிக்ஸ்

   


 விஜய் சேதுபதி  தயாரிப்பில்  ஒரு  உலக  சினிமா. அறிமுக  இயக்குநர்  லெனின்  பாரதியின்  முதல்  படமான  இது  பஞ்சாப்பில்  நிகழ்ந்த  பயாஸ்கோப்  உலக  திரைப்பட  விழாவில்  சிறந்த  ஒளிப்பதிவுக்கான  விருது  பெற்றது . கேரளா  மாநிலம், திருச்சூரில்  நடைபெற்ற  சர்வதேச  திரைப்பட  விழாவில் சிறந்த  அறிமுக  இயக்குநர்  விருதைப்பெற்றது . நியூயார்க்  இந்திய  திரைப்பட  விழாவில்  சிறந்த  திரைக்கதைக்கான  விருது  போட்டியில்  பங்கேற்றது. இது போக  இன்னும்  ஏராளமான  திரைப்பட  விழாக்களில்  பங்கு  பெற்ற  இந்தியத்திரைப்படம்

மலையாளப்படங்கள் , ஈரானியப்படங்கள்  பார்த்துப்பழக்கப்பட்டவர்கள்  மட்டுமே  இந்தத்தரமான  படத்தை  ரசிக்க  முடியும்,  மாமூல்  ஆக்சன்  மசாலாப்படங்கள்  பார்ப்பவர்கள் , விறுவிறுப்பாக , பரபரப்பான  திரைக்கதைகளை   மட்டுமே    ரசிப்பேன்  என்பவர்கள் , இயக்குநர்  ஹரி  படங்கள்  மாதிரி  வேகமான  படங்களை  ரசிப்பவர்கள்  இப்படத்தைத்தவிர்க்கவும் .. பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன்  சினிமாக்களை  விரும்புவர்கள்  அவசியம்  காணவேண்டிய  படம் 


  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  சுமை  தூக்கும்  தொழிலாளி. ஏலக்காய்  மலையில்  முதலாளியின்  வயலில்   விளையும்  ஏலக்காய்களை  மூட்டையாகக்கட்டி  மலையில்  இருந்து  கீழே  ஊருக்குக்கொண்டு  வரும்  சுமை  தூக்கும்  தொழிலாளி 


 கால்  காசு உத்தியோகம்னாலும்  கவர்மெண்ட்  உத்தோயோகம்தான்  வேண்டும்  என இருக்கும்  பழமொழி  போல  எந்த  ஊர்  என்றாலும்  சொந்த  நிலம்  கொஞ்சமாவது  வேண்டும்  என்ற  சொலவடையும்  உண்டு . அதன்படி  நாயகன்  எப்படியாவது  ஒரு  நிலம்  சொந்தமாக  வாங்கி  அதில்  விவசாயம்  செய்து  பிழைக்க  வேண்டும்  என  நினைக்கிறான்


அவன்  வாழ்க்கையில்  நிகழும்  மாற்றங்கள் , படிப்பினைகள்  எல்லாமும்  அந்த  ஊர்  மக்களின்  வாழ்வியலோடு  கவிதையாக சொல்லும்  ;படம்  தான்  இது 


  நாயகனாக ஆண்ட்டனி. இவர்  சின்ன  சின்ன  வேடங்களில்  சில  படங்களில்  நடித்திருந்தாலும்   முழுக்கதையின்  நாயகனாக  இதுவே  முதல்  படம் ., அந்த கேரக்டராகவே  வாழ்ந்திருக்கிறார். அவரது  சிகை  அலங்காரம் , உடல்  மொழி , ஆடை வடிவமைப்பு அனைத்தும்  யதார்த்தத்தின்  உச்சம் 


 நாயகியாக  புதுமுகம்  காயத்ரி  கிருஷ்ணா. ஒப்பனை  இல்லாத  கிராமத்துக்கவிதை . முறைப்பையனான  நாயகன்  தன்  வீட்டுக்கு  வந்த  போது  அப்பா முன்னிலையிலேயே  லந்து  செய்வதும், பின்  திருமணத்துக்குப்பின்  அடக்க  ஒடுக்கமான  கிராமத்துப்பெண்ணாக  வளைய  வருவதும்  அருமை (இவர்  தான்  ஜோக்கர்  படத்தின்  நாயகி ) 


இது  போக  மனதில்  தங்கி  விடும்  ஏராளமான  பாத்திரங்கள்  உண்டு , குறிப்பாக  மனநலன்  பாதித்த  பாட்டி ,  ரத்த  வாந்தி  வந்தாலும்  உயிர்  உள்ளவரை  மூட்டை  சுமப்பேன்  என  வைராக்கியமாக  வாழும்  பெரியவ்ர் , கம்யூனிசம்  பேசும்  தோழர்  சாக்கோ , கங்காணி  கணக்குப்பிள்ளை ,நாயகனுக்கு  நிலம்  தானம்  அளிப்பவர் , வஞ்சகமாகப்பண  உதவி  செய்து  பின்  வட்டியும்  முதலையும்  அடை  இல்லை  நிலத்தை  என்  பேரில்  எழுதி  வை  என  வஞ்சகம்  பேசும்  வில்லன்   என  பட்டியல்  நீள்கிறது


 இளையாராஜாவின்  இசை  மிகப்பெரிய  பலம்  . ஒரே  ஒரு  பாட்டு , தேன்  சொட்டு , அது  போகப்பின்னணி  இசையிலும்  முத்திரை 

 தேனி  ஈஸ்வரின்  ஒளிப்பதிவு  காணக்கண்  கோடி  வேண்டும் காசி  விஸ்வநாதனின்  எடிட்டிங்  கச்சிதமாக  இரண்டு  மணி  நேரப்படமாகத்தந்திருக்கிறார் 


சபாஷ்  டைரக்டர்


1  படம்  முழுக்க  அனைவரும்  புது  முகங்களே!  அவர்களை  வேலை  வாங்கிய  விதம்   அருமை 


2  நெஞ்சிலேயே  தங்கி  விடும் கிளைமாக்ஸ்  காட்சி 


3  கிராமத்து  மக்களின்  வெள்ளந்தியான  உரையாடல்கள் , நக்கல்  , நையாண்டி  , உதவும்  குணம் அனைத்தையும்  கச்சிதமாக  வெளிப்படுத்திய  பாங்கு 

செம  ஹிட்  சாங்க்ஸ்


1 கேக்காத  வாத்தியம்  கேக்குது  ஊரான  ஊருக்குள்ளே


  ரசித்த  வசனங்கள் 


1 மனுசன் வேணா  பாதை  மாறலாம், யானைகள்  எப்பவும்  பாதை  மாறாது 


2  நாங்க  இதுவரை  சுமந்து  வந்த  சுமைகளை  கொட்டுனா  ஏலமலை  அளவு  உயரம்  இருக்கும்


3 இவ  ஒருத்தி  வடை  திங்கறதுக்குன்னே  வேலைக்கு  வாரா


 ஆமா, இவரு  என்னவோ  வடையே  திங்காத  மாதிரி


4  காசு  மட்டும்  இருந்தா  இந்த  உலகத்துல  எதை  வேணா , யாரை  வேணா விலைக்கு  வாங்கிடலாம். 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  புது  ஆள் , அனுபவம்  இல்லாத  ஆள்  அப்படி  செஞ்சா  ஓக்கே, ஆனா  அந்த  மலைல  அத்தனை  வருட  சுமை  தூக்கிய  அனுபவம்  உள்ள  நாயகன் கீழே  விழக்கூடிய  அபாயகரமான  உச்சியில்  ஏலக்காய்  மூட்டையை  அசால்ட்டாக  வைத்து  அதை  இழப்பதை  நம்ப  முடியவில்லை 


2 வானிலை  அறிக்கையில்  மழை  வரப்போவதை  முன்  கூட்டியே  சொல்வார்கள், அது  போக  ஒரு  விவசாயிக்கு  அல்லது  காட்டிலெயே  பல  வருடங்கள்  வாழ்ந்த  நாயகனுக்கு  மழை  வரப்போவது  முன்  கூட்டியே  தெரியும் , இரவில் கடும்  மழை  பெய்யும்போது  தக்காளி  நாளை  அறுவடை , வீணாகி  விடும், இப்பவே  போய்  அறுவடை  செய்கிறேன்  என  சொல்பவர்  பகலிலேயே  முன்  கூட்டியே  அதை  செய்திருக்கலாமே? 


3   கிராமத்து  ஆட்களைப்பகைத்த  அந்த  வில்லன்கள்  இருவரும் எந்த  பாதுகாப்பும்  இல்லாமல் தனியாகவா  இருப்பார்கள் ? வேலையாட்கள் , அடியாட்கள்  யாரும்  இருக்க  மாட்டார்களா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  ஓ டி  டி  என்பதால்  சென்சார்  செய்யப்படாத  கெட்ட  வார்த்தைகள்  ஆங்காங்கே  வருகின்றன . காட்சி  ரீதியாக  கண்ணியம் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   உலக  சினிமா  பார்த்துப்பழக்கப்பட்டவர்கள்  உள்ளூர்  சினிமாவிலேயே  உலக  சினிமாவைப்பார்க்க  ஆசைப்பட்டால்  பார்க்கலாம்,  ரேட்டிங்  3.5 / 5 


மேற்குத் தொடர்ச்சி மலை (Western Ghats)
இசைஇளையராஜா
நடிப்புஆண்டனி
காயத்ரி கிருஷ்ணா
அபு வளையங்குளம்
ஒளிப்பதிவுதேனி ஈஸ்வர்
படத்தொகுப்புமு. காசி விஸ்வநாதன்
வெளியீடு2018 (US)
24 ஆகத்து 2018 (இந்தியா)
நாடுஇந்தியா
மொழிதமிழ்