Wednesday, June 14, 2023

UGRAM(2023) -தெலுங்கு - சினிமா விமர்சனம் (ஆக்சன் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்

 


    அமெரிக்கன்  சைக்கலாஜிக்கல்  த்ரில்லர்  படமான ஃப்ராக்சர்டு  2019ஆம் ஆண்டு  ரிலீஸ்  ஆனது. அந்தக்கதைக்கருவை  அப்படியே  அட்லி  காப்பி  அதாவது  அட்டக்காப்பி  அடிக்காமல்  பின்  பாதி  திரைக்கதையை  பட்டி  டிங்கரிங்  பண்ணி  எடுத்த  தெலுங்குப்படம்தான்  இது. ஒரிஜினல்  செம  ஹிட் , இது  மீடியம்  ஹிட் . 2021ல்  ரிலீஸ்  ஆன  நாந்தி  தெலுங்குப்படத்துக்குப்பின்  இந்த  இயக்குநர் + நாயகன்  காம்ப்போ வின்  இரண்டாவது  படம்  இது   


 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  நேர்மையான  போலீஸ்  ஆஃபீசர். இவரு ஒரு  பெண்ணை  காதலித்துத்திருமணம்  செய்து  கொண்டவர். மனைவி , ஒரு  மகள் என  வாழ்க்கை  நன்றாகத்தான்  போய்க்கொண்டிருந்தது .


ஹாஸ்டலில்  தங்கிப்படிக்கும்  மாணவிகளிடம்  நான்கு  வில்லன்கள்  வாட்ச்மேன்  உதவியுடன்  தகாத  முறையில்  நடக்கிறார்கள் .  நாயகன்  அவர்களைக்கைது  செய்ய  வில்லன்கள் நான்கு  பேரும்  நீதிமன்றக்காவலில்  14  நாட்கள்  வைக்கப்படுகின்றனர்.


 பெரிய  இடத்துப்பசங்களான  வில்லன்கள்  14  நாட்கள்  கழித்து  வ்ந்து  நாயகனின்  மனைவியை  வீடு  தேடி  மிரட்டிச்செல்கின்ற்னர். நாயகன்   வில்லன்களான  நால்வரில்  மூவரை  என்கவுண்ட்டரில்  போட்டுத்தள்ளுகிறார். மீதி  ஒரு  ஆள்  தப்பி  விடுகிறான்


நாயகன்  தன்  குடும்பத்துடன்  காரில்  போகும்போது  சாலை  விபத்தில் படுகாயம்  அடைந்து ஹாஸ்பிடலில்  அட்மிட்  ஆகிறான். சுய  நினைவு  வந்த  பின்  தன்  குடும்பம்  எங்கே  என  கேட்கும்போது  நீங்க  மட்டும்தான்  தனியே  வந்தீங்க  என    சிசிடிவி  ஃபுட்டேஜ்  காட்டப்படுகிறது


இதற்குப்பின்  என்ன  நடந்தது ? நான்காவத்  வில்லன் தான்  இதற்குக்காரணமா? வேறு  புது  வில்லனா? இதை  நாயகன்  கண்டுபிடிப்பதே  பின்  பாதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  அல்லாரி  நரேஷ், ரஃப் அண்ட்  டஃப்  போலீஸ்  கேரக்டர்  கச்சிதம்  உடல்  மொழி , நடிப்பு   அனைத்தும்  ஓக்கே  ரகம் 

நாயகியாக  மிர்ணாமேனன், அழகு  , இளமை , நடிப்பு  மூன்றும்  கைவரப்பெற்ற  காரிகை 


பின்  பாதியில்  வ்ரும்  போலி  திருநங்கை  வில்லன்கள்  எடுபடவில்லை 

சித்தார்த்தின்  ஒளிப்பதிவு  இரவு  நேர  நகர  சாலைகளைப்படம்  பிடித்த  விதம்  அருமை , ஸ்ரீசரண்  பகலா  வின் இசையில்  இரண்டு  பாடல்கள்  ஹிட்  ரகம், பிஜிஎம்  ஆல்சோ  குட் . 


இரண்டரை  மணி  நேரம்  ஓடும் விதமாக   சோட்டா  கே  பிரசாத்  எடிட்டிங்  செய்திருக்கிறார்.


விஜய்கனாக்கமேதலா  திரைக்கதை இயக்கம்  செய்திருக்கிறார். சராசரி  ஆக்சன்  போலீஸ்  ஸ்டோரிதான்  , புதுமையாக  பெரிதாக  ஏதும்  இல்லை . டைம்  பாஸ்  கேட்டகிரியில்  சேர்க்கலாம் , 


சபாஷ்  டைரக்டர்


1   ஹாலிவுட்  படத்தில்  இருந்து  முதல்  பாதி , ஆல்ரெடி  துவைச்சுக்காயப்போட்ட  தென்னிந்தியப்படங்களில்  இருந்து  பின்  பாதி  என  கமர்ஷியல்  கலவை  ரெடி  செய்தது 


2  ஒரிஜினல்  வெர்சன்  சைக்கலாஜிக்கல்  த்ரில்லர்  என்றாலும்  பட்டி  டிங்கரிங்  வெர்சன்  ஆக்சன்  த்ரில்லர்  என  மடை  மாற்றிய  லாவகம் 


  ரசித்த  வசனங்கள் 


தேடித்தேடிப்பார்த்தும்  ஒன்று  கூட  உருப்படியாக  சிக்க வில்லை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   மாணவிகளிடம்  சில்மிஷம்  செய்த  ரவுடிகள்  எப்படி  என்கவுண்ட்டர்  ரவுடிகள்  லிஸ்ட்டில்  வந்தார்கள் ?


2  நாயகனால்  ஜெயில்  தண்டனை  பெற்ற  வில்லன்  நாயகனின்  ம்னைவி  வீட்டுக்கு  வந்து  பெருசா  எதோ  வில்லத்தனம்  புரிவனோ ? என  நிமிர்ந்து உட்கார்ந்தால்  அவன்  பேக்கு  மாதிரி  தன்னை  நிர்வாணப்படுத்திக்கொண்டு அதுதான்  நாயகனுக்கான  தண்டனை  என்கிறான் . கஷ்ட  காலம் . உங்க  கற்பனைத்திறனில்  இடி  விழ 


3   சாலை  விபத்தில்  நெற்றியில்  காயம்  அடைந்த  நாயகன்  அடுத்த  நாளே  க்ளீன்  முகத்துடன்  வருவது  எப்படி ? 


4   ஒரு  காட்சியில்  நாயகன்  என்கவுண்ட்டரில்  மூன்று  பேரை  கொன்றதாகச்சொல்கிறார்கள் , இன்னொரு  காட்சியில்  நாயகன்  மீது  ஆல்ரெடி  3  கொலைக்கேஸ்  இருக்கு  என்கிறார்கள் , ஏன்  இந்த  குழப்பம் ? 


5    பின்  பாதி  திருநங்கை  வில்லன்கள்    சிசிடிவி  கேமரா  இல்லாத  இடமாகப்பார்த்து  குற்றம்  புரிகிறார்கள்  என  கணிக்கும்  நாயகனுக்கு  அவ்ர்கள்  உடை  மாற்றும்  சிசிடிவி  காட்சி  எப்படிக்கிடைத்தது?


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ / ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சுமார்  ரகப்படம்தான், டி வி ல  போட்டாப்பார்க்கலாம், ரேட்டிங்  2 / 5 

Tuesday, June 13, 2023

VIRUPAKSHA (2023) - தெலுங்கு - சினிமா விமர்சனம் ( சூப்பர் நேச்சுரல் மிஸ்ட்ரி ட்ராமா த்ரில்லர்) # நெட் ஃபிளிக்ஸ்

   


 17 மில்லியன்  டாலர்  செலவில்  எடுக்கப்பட்டு  217  மில்லியன்  டாலர்  வசூலை  அள்ளிக்குவித்த  ஸ்மைல்  என்னும்   அமெரிக்கன்  சைக்கலாஜிக்கல்  சூப்பர்  நேச்சுரல்  ஹாரர்  ஃபிலிமை  பட்டி  டிங்கரிங்  பண்ணி  இந்த  மண்ணுக்கு  ஏற்றவாறு  திரைக்கதை  எழுதி  40  கோடி  ரூபாய்  பட்ஜெட்டில்  உருவான  விரூபாக்சா  என்னும்  தெலுங்குப்படம் 100  கோடிக்கும்  அதிகமான  வசூலைக்குவித்தது  

ஸ்பாய்லர்  அலெர்ட்


நகரத்தில்  படித்து  வளர்ந்த  நாயகன்  தன்  அம்மாவுடன்  சொந்த  கிராமத்துக்கு  வருகிறான். அங்கே  நாயகியை  சந்திக்கிறான். நாயகி  அந்த  ஊரில்  ஒரு பெண்ணின்  காதலுக்கு  தூது  போய்  உதவி  செய்யும்  பெண்ணாக  இருக்கிறார்..நாயகனும்  அதே  காதல்  ஜோடிக்கு  உதவி  செய்வது  போல  காட்டிக்கொண்டு  தன்  காதலை  நாயகியிடம்  பிரப்போஸ்  செய்கிறார். உள்ளூரக்காதல்  இருந்தாலும்  நாயகி  அதை  வெளிக்காட்டிக்கொள்ளவில்லை 


 காதல்  ஜோடி  ஊரை  விட்டு  ஓடிப்போக  முயற்சிக்கும்போது  மர்மமான  முறையில்  இறக்கிறார்கள் .அந்த  இறப்பைப்பார்த்த  பால்காரன்  இறக்கிறார். அந்த  இறப்பைப்பார்த்த  பெண்ணும்  இறக்கிறார், இப்படி  சங்கிலித்தொடர்  போல  அந்த  கிராமத்தில்  இறப்புகள்  தொடர்ந்து  நிகழ்கின்றன. நாயகன்  அந்த  மர்மத்தைக்கண்டு  பிடிக்க களம்  இறங்குகிறார்


 பேய்க்கதை , பில்லி  சூன்யம் போல  கதை  ஆரம்பித்து  எங்கெங்கோ  சுற்றி  க்ளைமாக்சில்  கச்சிதமாக  எல்லா  மர்ம  முஜ்டிசுகளையும்  அவிழ்க்கிறார்கள் 


நாயகன்  ஆக  சாய்  தரம்  தேஜ்  காதல்  காட்சிகளில் , ஆக்சன்  காட்சிகளில்  முத்திரை  பதிக்கிறார். 


நாயகன்  எட்டு  அடி  பாய்ந்தால்  நாயகி  16  அடி  பாய்கிறார். இந்தக்கதைப்படி  நாயகிக்குத்தான்  கேரக்டர்  டிசைன்  வலுவாக  அமைந்துள்ளது.  கலக்கலான  நடிப்பு  சம்யுக்தாவினுடையது . அவரது  கண்கள் ,   ஹேர் ஸ்டைல் , கண்ணிய  உடை , மந்தகாச  சிரிப்பு  அனைத்தும்  பிளஸ் 


146  நிமிடங்கள்  ஓடும்  இந்தப்படத்தில்  எடிட்டிங்  பக்காவாக  இருக்கிறது , ஒளிப்பதிவு கச்சிதம் ,இசை  பின்னணி  இசை  மிரட்டல்  ரகம் 


சுகுமாரின்  திரைக்கதைக்கு   கார்த்திக்  வர்மா  டைரக்டர்  ஆக  பணியாற்றி இருக்கிறார்


  ஏப்ரல்  21    2023  அன்று  திரை  அரங்குகளில்  ரிலீஸ்  ஆன  இப்படம்  இப்போது  நெட்  ஃபிளிக்சில்  காணக்கிடைக்கிறது 


சபாஷ்  டைரக்டர்


1   1979ல்  நடப்பதாகக்காட்டப்படும்   கொடூரமான  சம்பவம்  விறுவிறுப்பாகப்படம்  ஆக்கப்பட்டுள்ளது . கிராமத்து  மக்களின்  அறியாமை , முட்டாள்த்தனம் ,  நன்கு  விவரிக்கப்பட்டுள்ளது 


2   எரிக்கப்பட்ட  அந்த  குடும்பத்தின்  அவிழ்க்கப்படாத  மர்ம  முடிச்சை  க்ளைமாக்ஸில்  உணர்த்தும்  இடம்  அருமை


3  பைரவா  என்னும்  கேரக்டரை  வைத்து  சம்பவம்  பண்ணும்  காட்சிகள்  பயங்கரம் 


  ரசித்த  வசனங்கள் 


1 சாஸ்திரங்களும், சம்பிராதயங்களும், சடங்குகளும் மக்கள்  வாழ  வழி  காட்டனுமே  தவிர  மக்களை  அழிக்க  வழி  காட்டக்கூடாது 


2  பேச்சு  எல்லையைத்தாண்டிப்போகலாம், ஆனா  மனுசன்  எல்லை  தாண்டிப்போகக்கூடாது 


3  பிரச்சனைக்குத்தீர்வா  இருந்தாலும் , பரிகாரமா  இருந்தாலும்  சாசனத்தைத்தான்  பார்க்கனும் (  ஏன்  சொந்தமா  யோசிச்சு  யாரும்  முடிவு  எடுக்க  மாட்டாங்களா? )


4  நம்மால  முடியாதபோது  நமக்கு  ஞாபகம்  வருவது  கடவுள்  தான் 


5  பிரச்சனை  ஆரம்பிச்ச  இடத்தில்தான்  அதுக்கான  தீர்வும் கிடைக்கும்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  என்னதான்  கிராமத்து  ரயில்வே  ஸ்டேஷன்  என்றாலும்  நம்பற  மாதிரி  ஆர்ட்  டைரக்சன்  டிபார்ட்மெண்ட்  எதுனா  பண்ணி  இருக்கலாம். ரயில்வே  டிராக்  பக்கத்துல  ஒரு  பெஞ்ச்  மட்டும்  போட்டு  அதைத்தான்  ஸ்டேஷன்னு  காட்றாங்க 


2  ஊர்க்கட்டுப்பாடு  எட்டு  நாட்களுக்குனு  அறிவித்த  பின்  ஊரை  விட்டுப்போக  அந்த  காதல்  ஜோடிக்கு  டிக்கெட்  எப்படிக்கிடைத்தது ? ஊர்  மக்களுக்கு  ஸ்டேஷன்ல  இருந்து  தகவல்  போகாதா? 


3  ரயில்  வர்ற  நேரம்னு  தெரிஞ்சும்  அந்த  காதலன்  ஏன்  ரயில்வே  ட்ராக்ல  நின்னு  டயலாக்  பேசறான் ? 


4  தேன்  கூடு  எ[ப்பவும்  மரத்துல  உயரமான  இடத்துல  தான்  இருக்கும் . ஆனா  அந்தப்பொண்ணு  முகத்தில்  படும்படி   அவளவ்  கீழே  எப்படி  தேன்  கூடு  கட்டியது ?


5  ஊரை  விட்டு  யாரும்  போகக்கூடாதுனு  ஊர்க்கட்டுப்பாடு  போட்ட  பின்  காரில்  தன்  மகள்  திருமணத்துக்குப்போகும்  ஆளை  ஊர்  மக்கள்  தடுக்கறாங்க . ரைட்டு, இந்த  சம்பவம்  நடந்து  ரெண்டு  மணி நேரம்  கழிச்சு  நாயகிக்கு  காக்கா  வலிப்பு  வந்த  போது  ஊர்க்கட்டுப்பாடு  ஆரம்பிக்க  இன்னும்  அரை  மணி  நேரம்தான்  இருக்கு. அதுக்குள்ளே  மருந்தைக்கொண்டாந்துடனும்னு  சொல்றாங்களே? அப்போ  அந்த  டைம்க்குள்  அந்த  மேரேஜ்க்குப்போக  வேண்டிய  ஆளையும்  அனுப்பி  இருக்கலாமே?  , 


6   ஒரு  காட்சியில்  நாயகனின்  அக்கா  தன்  குழந்தைக்கு  பாடம்  சொல்லிக்கொடுத்துட்டு  இருக்கும்போது  வாசலில்  லைட்ஸ்  எல்லாம்  ஆஃப்  ஆகி  இருட்டா  இருக்கு , உள்ளே  வீட்டில்  பிரகாசமா  ட்யூப்  லைட்  எரியுது. ஒண்ணா  உள்ளே  போய்  வெளிச்சத்துல  ட்யூஷன்  எடுக்கனும், இல்லைன்னா  வாசல்  விளக்கைப்போடனும் 


7  நாயகியின்  அக்கா  வீட்டுக்கு  வெளில  ஏதோ  சத்தம்  கேட்குதுனு  காட்டுக்குள்ளே  2  கிமீ  தூரம்  இருட்டுக்குள்ளே  போகுது , ஏம்மா  ஏம்மா? பேசாம  வீட்லயே  இருக்கலாமில்ல? 


8  நாயகனின்  அக்கா  ஒரு  சாவை  நேரில்  பார்த்து  ஆ  அப்படினு  கத்தறாங்க, அடுத்த  நொடியே  ஒரு  ஆள்  ஓடி  வர்றான், பின்னாலயே  ஊர்  ஜனங்களும்  ஓடி  வர்றாங்க . அந்த  நேரத்துல  அவ்ளோ  சீக்கிரம்  அந்த  இடத்துக்கு  எப்படி  வர  முடியும் ?  அந்த  அக்காவே  2 கிமீ  தூரம்  கொஞ்சம்  கொஞ்சமா  நடந்துதான்  அந்த  இடத்துக்கு  வர்றாங்க 


9  ஒரு  ஆள்  தற்கொலை செய்து  கொள்வதை  நேரில்  பார்த்த  ஒரே  ஆள்  நாயகனின்  அக்கா, அவங்க  அதிர்ச்சில  எதுவும்  பேசல, ஆனா  அப்போ  அங்கே  வந்த  ஊர்  மக்கள்     அது  தற்கொலைதான்னு  எப்படி  கண்டுபிடிக்கறாங்க ?பேயாக்கூட  இருக்கலாம், கொலையாவும்  இருக்கலாம், அந்த  அக்காவாக்கூட  இருக்கலாம்


10  நாயகியின்  அக்கா  தையல்  மிஷின்  தைப்பதை  அடிக்கடி  க்ளோசப்ல  காட்றாங்க , ஆனா  அப்போ  ஒலிக்கும்  பிஜிஎம்  மாவு  மிஷின்  ஓடற  சத்தம்  மாதிரி  இருக்கு ,சாதா  மெரிட்  அல்லது  உஷா  மிஷின்  அவ்ளோ  சவுண்டா  குடுக்கும் ? 


11  நாயகனின்  அக்கா  ஏதோ  சாக்குப்பை  மாதிரி  ஒண்ணை  தைச்சுட்டு  இருக்கு , ஆனா  மிஷின்ல  இருக்கற  நூல்  கண்டு  ஜாக்கெட்  தைக்கற  சாதா  நூல். 


12   சுதா  என்ற   பெண்  ஊரை  விட்டு  ஓடிப்போக நைட்  ரயில்வே  ஸ்டேஷனுக்கு  வருது . பொதுவா  எந்த  ஊர்லயும்  பாசஞ்சர்  ட்ரயின் நைட் 11  மணிக்கு  எல்லாம்  இயங்காது . அதே  மாதிரி  மிட்  நைட்ல  இறந்த  அந்தப்பெண்  சுதாவை பால்  ஊற்றப்போகும்  பால்காரன்  பார்த்ததா  ஃபிளாஸ்பேக்ல  சொல்றாங்க / அதிகாலை  5  டூ  6  தான்  பால்  ஊற்றப்போவாங்க . நைட்  இறந்த  சுதாவை  அதிகாலையில்  காப்பாற்ற  பால்காரன்  எப்படி  முயற்சிக்க  முடியும் ? 


13   நாயகி  கிணற்றில்  விழுந்து  கிடக்கும்போது  நாயகன்  அங்கே  வந்து  காப்பாற்றுகிறார். அது 20  அடிக்கிணறு, கயிறே  இல்லை , உதவிக்கு  ஆட்கள்  இல்லை , நாயகி  விழுந்த  அடுத்த  கணமே  நாயகன்  குதிச்சு   காப்பாற்றுவது  எப்படி ? எப்படி  மேலே  வந்தார் ?


14  கிணற்றில்  விழுந்து  பின்  காப்பாற்றப்பட்ட  நாயகிக்கு  குங்குமம் ,  பவுடர்  , மேக்கப்  எதுவுமே  கலையாமல்  இருப்பது  எப்படி ? 


15  ஓப்பனிங்  ஷாட்ல  இருந்து  நாயகி  எப்போதும் இடுப்பில்  ஒரு  சாவிக்கொத்துடன்  இருப்பது  போல்  காட்றாங்க , கிணற்றில்  விழுந்து  காப்பாற்றப்பட்டு  படுக்க  வைக்கப்பட்டிருக்கும்  நாயகிக்கு  வழக்கமாக  வரும்  காக்கா  வலிப்பு  வந்ததும்  அவர்  இடுப்பில்  சாவிக்கொத்தை  எடுத்து  கைல  கொடுக்கறாங்க , 10  அடி  ஆழ  தண்ணீர்  உள்ள  கிணற்றில்  விழுந்த  நாயகியின்  இடுப்பில்  சாவிக்கொத்து  அப்படியே  இருந்தது  எப்படி ? 


16  பைரவா  எனும்  பையனை  நடு  ராத்திரில  பார்த்து  கண்டிச்ச  ஆளை  ஏதோ  மந்திரம்  போட்டு  அவன்  என்னமோ  பண்ணிடறான், பக்கவாதம்  வந்து  அவரு  படுத்த  படுக்கை  ஆகிடறாரு. இந்த  விஷயம்  எப்படி  வெளீல  தெரிஞ்சுது ? பாதிக்கப்பட்ட  ஆளால  பேச  முடியாது . பாதிப்பு  ஏற்படுத்துன  ஆளை  தேடிட்டு  இருக்காங்க . அந்த  காலகட்டத்துல  சிசிடிவி  கேமராவும்  இல்லை 


17  கிறித்துவர்களைத்தான்  சவப்பெட்டில  வெச்சு  அடக்கம்  பண்ணுவாங்க , நாயகியை  மயக்க  நிலைல  பெட்டில  வெச்சு  எரிக்கனும்னு  ஏன்  சொல்றாங்க ? எரிக்கறதுனு  ஆகிப்போச்சு, அப்படியே  ஆளை  மட்டும்  எரிக்கறதுதானே? 


18  கிராமத்து  மக்கள்  எல்லாரும்  ரத்த  தர்ப்பனம்  பண்ணுங்கனு  சாமியார்  சொன்னதும்  எல்லாரும்  வரிசையா  வந்து  கோடாலியால  கையைக்கிழிச்சு  ரத்தம்  ஊத்தறாங்க . சும்மா  குண்டூசில  குத்தி  ரத்தம்  எடுத்து  ரெண்டு  சொட்டு  விட்டாப்போதாதா?  கோடாலியால  அத்தனை  பேரும்  கிழிச்சுக்கிட்டா  எல்லார்  உடம்பும்  செப்டிக்  ஆகிடுமே?  அங்கே  ஹாஸ்பிடலும்  இல்லை . ஊர்க்கட்டுப்பாடு  வெளீல  எங்கேயும்  போக  முடியாது 


19   க்ளைமாக்ஸ்ல  நாயகன் தன்னைத்தானே  கத்தியால  வயிற்றில்  குத்திக்கறாரு, ஆனா  அவர்  சாகலை , ஆனால்  நாயகி  முதுகில்  சோல்டர்  பக்கமா  குத்தறாரு , ஆனா  நாயகி  செத்துடுது . வயிறுதானே   அபாயமான  இடம் ?


20  க்ளைமாக்ஸ்ல  நாயகி  நாயகன்  கிட்டே  நான்  சொல்றதைக்கேட்கறீங்களா?ங்குது , அவரும் ம் -ங்கறாரு , லிப்  கிஸ்  கொடுத்துட்டு  நாயகி  செத்துடுது. எதுவுமே  சொல்லலையே? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  இரண்டு  காட்சிகளில்  லிப் லாக்  சீன்கள்  மட்டும்  இருக்கின்றன



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   மந்திரவாதி , பேய் , பில்லி  சூன்யம்  வகைப்படங்கள்  ரசிப்பவர்கள்  பார்க்கலாம்  ரேட்டிங் 2.75 / 5 



Virupaksha
Virupaksha Poster.jpg
Theatrical release poster
Directed byKarthik Varma Dandu
Screenplay bySukumar
Dialogues by
  • V. Prabhakar
  • Nagu
Story byKarthik Varma Dandu
Produced by
Starring
CinematographyShamdat Sainudeen
Edited byNavin Nooli
Music byB. Ajaneesh Loknath
Production
companies
Release date
  • 21 April 2023
Running time
146 minutes[1]
CountryIndia
LanguageTelugu
Box office₹103 crore[2]

Monday, June 12, 2023

GOOD LUCK TO YOU LEO GRANDE (2022) - ஆங்கிலம் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி மெலோ டிராமா ) @ அமேசான் பிரைம்

 


    ஏ  கப்பட்ட  திரைப்பட  விழாக்களில்  கலந்து  கொண்டு சிறந்த  நடிகைக்கான  விருதை  நாயகி  எம்மா  தாம்சனுக்குப்பெற்றுத்தந்த  படம்  இது. ஒன்றரை  மணி நேரப்படத்தில் இரண்டே  இரண்டு  முக்கியக்கேரக்டர்கள்  நான்கு  முறை  சந்திக்கிறார்கள் . முதல்  சந்திப்பு  30  நிமிடங்கள் , அடுத்த  இரண்டாவது  சந்திப்பு 30  நிமிடங்கள் , மூன்றாவது  சந்திப்பு 15  நிமிடங்கள் , நான்காவது  சந்திப்பு 15  நிமிடங்கள் , ஆக  மொத்தம் 90   நிமிடங்கள்  படம்  முழுக்க  பேசிக்கொண்டே  இருப்பதுதான்  சிறப்பு . பொறுமைசாலிகள்  பார்க்கலாம்  

 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  41  வயதான  விதவை , இவருக்கு ஒரு  மகன் , ஒரு  மகள் . வாரிசுகள்  இருவரும்  வெவ்வேறு  இடங்களில்  இருக்கிறார்கள்  கணவன்  இறந்து  இரு  வருடங்கள்  ஆகின்றன. நாயகி  ஒரு  டீச்ச்சர். தன்  வாழ்நாளில்  தன்  கணவனைத்தவிர  யாருடனும் நெருக்கமாக  இருந்ததில்லை 


நாயகி  டீச்சராக  இருந்த தருணங்களில்  மாணவிகளிடம்  ரொம்ப  ஸ்ட்ரிக்டாக  நடந்து  கொள்பவர் , அவர்கள்  உடுத்தும்  உடை  கண்ணியமாக  இருக்க  வேண்டும்  என்பதில்  கவனமாக  இருப்பவர். யாராவது  கிளாமராக  உடை  உடுத்தி  வகுப்புக்கு  வந்தால் அவர்களை  கடுமையாக  திட்டுபவர் .


நாயகி  தன்  உடல்  தேவைக்காக  ஒரு  ஆண்  பாலியல்  தொழிலாளீயை  ஆன்  லைன்  மூலம்  புக்  செய்கிறார். அவன் தான்  நாயகன் .   நாயகன்  நாயகி  இருக்கும்  இடத்துக்கு  முதல்  முறை  வரும்போது  அவனுக்கு  நாயகியின்  மகன்  வயதுதான்  என்பதை  உணர்கிறார். இருவரும்  அவரவர்  வாழ்க்கை  பற்றிப்பேசிக்கொண்டே 30  நிமிடங்கள்  கழித்து  விடுகிறார்கள் 


இரண்டாவது  சந்திப்பில்  அவர்களுக்குள்  ஒரு  புரிதல்  ஏற்படுகிறது . இப்போதும்  30  நிமிடங்கள்  பேசிக்கொண்டு  இருக்கிறார்கள் 


 மூன்றாவது  சந்திப்பில்  இருவருக்கும்  சண்டை  வந்து  விடுகிறது . காரணம்  நாயகன்  தன்  தொழில்  நிமித்தம்  தன் பெயர்  மற்றும்  விபரங்களைப்போலியாக  சொல்லி  இருந்தான், அதை  கண்டுபிடித்து  அவன்  உண்மையான  பெயரை  நாயகி  அறிந்து  வைத்திருந்தாள் . இது  பற்றிய  உரையாடலின்  முடிவில்  நாயகன்  கோபித்துக்கொண்டு  சென்று  விடுகிறான்


  நான்காவது  சந்திப்பு  தான்  க்ளைமாக்ஸ் . ஒரு  ஹோட்டலில்  சந்திக்க  முடிவு  எடுக்கிறார்கள் . அங்கே  வெய்ட்டராக  நாயகியின்  முன்னாள்  மாணவி  இருக்கிறார். முதலில்  நாயகி  நாயகனை  தன்  காரை  வாங்க  வந்தவர்  என  பொய்  சொல்லி  அறிமுகம்  செய்கிறார். பிறகு  மனம்  மாறி  நாயகன்  யார்  என்பதையும் , அவர்கள்  இருவருக்கும்  என்ன  உறவு  என்பதையும்  கூறி  அந்த  மாணவியை  ஒரு  காலத்தில்  திட்டியதற்கு  மன்னிப்பும்  கேட்கிறார். போதாததற்கு  நாயகன்  நல்லவன் , வல்லவன் ., கெட்டிக்காரன்  பெண்டு  ஏடுககறதுல  என  சர்ட்டிஃபிகேட்  வேற  கொடுத்து  நீ வேணும்னாக்கூட  அவனை  புக்  பண்ணிக்கலாம்  என்கிறார்


அவ்வளவுதான் , படம்  முடிஞ்சுது , எல்லாரும்  எழுந்து  செல்லலாம்


சபாஷ்  டைரக்டர்


1  இரண்டே  இரண்டு  கேரக்டர்களை  வைத்து  படம்  எடுக்க  துணிந்தது 


2  போர்  அடிக்காமல் 90  நிமிடங்கள்  வசனம்  பேச  வைத்தது 


  ரசித்த  வசனங்கள் 


1  இதுவரைக்கும்  நீங்க  எத்தனை  பேரை  காதலிச்சிருக்கீங்க >


பொதுவா  ஜெண்ட்டில்மென்  அந்த  கணக்கை  சொல்ல  மாட்டாங்க 


2   எனக்கு  41  வயசாகுது , இதுவரை  நீங்க  சந்தித்ததில்  மிக  அதிக  வயதான  பெண்ணின்  வயது  என்ன?


 இந்தக்கேள்வி  எதற்கு ?


 சும்மா  தெரிஞ்சுக்கத்தான் 


82


3   நான்  ஒரு  டீச்சரா  இருக்கறதால  ஒருவர்  பேசும்  வார்த்தைகளை  வைத்தே  அவங்க  என்னவா  எதிர்காலத்துல  ஆவாங்கனு  கணிக்க  முடியும், ஒருவர்  அடிக்கடி  யூஸ்  பண்ற  வார்த்தைகளை  வைத்து  சொல்ல  முடியும்


4    உங்க  குழந்தைகள்  எப்பவாவது  உங்களை  தர்மசங்கடமான  நிலைமைக்கு  உங்களை  தள்ளி  விட்டிருக்காங்களா?


இல்லை, அது  அவங்களால  முடியாது . உங்க  அம்மா சங்கடமான  சூழலில்  இருப்பதை  உன்னால  எப்பவாவது  உணர  முடிஞ்சிக்ருக்கா? அப்போ  நீ என்ன  செஞ்சே? 


5   என்  வாழ்க்கை  முழுவதும்  நான்  சந்தித்த  ஒரே  அட்வென்ச்சர்  நீ தான் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


படத்தில்  லாஜிக்  மிஸ்டேக்ஸ்  எதுவும்  இல்லை . ஆனால்  இந்தப்படத்தை  எல்லாம்  வெட்டியா  உக்காந்து  பார்த்தேனே  அதுதான்  நான்  செய்த  மிஸ்டேக், இந்த  லட்சணத்துல  சிறந்த  நடிகைக்கான  அவார்டு  வேற 




அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - கடைசி  5  நிமிடங்களில்  ஒரு  நிமிடம்  மட்டும்  அடல்ட்  கண்ட்டெண்ட்  இருக்கிறது, வசனங்களில்  லைட்டா  பச்சை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இந்த  டப்பாப்படத்தை  சிபாரிசு  செய்த  அந்த  நபரைத்தான்  வலை  வீசித்தேடிட்டு  இருக்கேன். ரேட்டிங் 1 / 5 


Good Luck to You, Leo Grande
Good Luck to You, Leo Grande poster.jpeg
Release poster
Directed bySophie Hyde
Written byKaty Brand
Produced by
Starring
CinematographyBryan Mason
Edited byBryan Mason
Music byStephen Rennicks
Production
companies
  • Align
  • Genesius Pictures
Distributed by
Release dates
  • 22 January 2022 (Sundance)
  • 17 June 2022
Running time
97 minutes
Countries
  • United Kingdom
  • United States
LanguageEnglish
Box office$9.7 million[1]

Sunday, June 11, 2023

MEENAKSHI SUNDARESHWAR (2021)-ஹிந்தி - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி ) @ நெட்ஃபிளிக்ஸ்

 


இந்தப்படம்  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆகும்போது  மிக்ஸ்டு  ரிவ்யூஸ்  வந்தாலும்  நெட் ஃபிளிக்சில்  ரிலீஸ்  ஆனபோது  அபாரமான  வரவேற்புப்பெற்றது . 5  மில்லியன்  பார்வையாளர்களைப்பெற்ற  மூன்றாவது  ஹிந்திப்படம்  என்ற  பெருமையையும்  பெற்றது .நாயகன் - நாயகி  இருவரின்  கெமிஸ்ட்ரியும்  காஸ்ட்யூம்  டிசைனும்  பரவலாகப்பாராட்டுப்பெற்றது 

     

 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  டிகிரி  முடித்தவர், இன்னும்  சரியான  பணி  வாய்க்கப்பெறாதவர். பெண்  பார்க்கிறார்கள் . நிச்சயிக்கப்பட்ட  திருமணம்  நடக்கிறது . திருமணம்  ஆன  அந்த  முதல்  நாள்  இரவிலேயே  அவருக்கு  ஒரு  இண்ட்டர்வ்யூக்கு  அழைப்பு  வருகிறது 



அதில்  தேர்வாகி  பெங்களூரில்  ஒரு  வருடம்  பணி  ஆற்றும்  வாய்ப்புக்கிடைக்கிறது . திருமணம்  ஆன  தம்பதிகள் சேராமல்  பிரிந்து  வாழ்வதால்  அவர்கள்  சந்திக்கும்  பிரச்சனைகளைப்பற்றி  திரைக்கதை  பேசுகிறது 


நாயகன்  ஆக  அபிமன்யூ  தாசனி  மாதவனுக்கு  சித்தப்பா  பையன்  மாதிரி முகச்சாயலில்  இருக்கிறார்.காதல்  குறும்பு , சோகம்  எல்லாம்  நன்றாக  வருகிறது, இவரது  டிரசிங்க்  சென்ஸ், பாடி  ஃபிட்னஸ்  அபாரம் 


 நாயகி  ஆக   சானியா  மல்ஹோத்ரா  பிரமாதமான  நடிப்பு , நாயகன்  உட்பட  அனைவரையும்  தூக்கி  சாப்பிட்டு  விடும்  உற்சாக  நடிப்பு .  இவரது  ஹேர்ஸ்டைலும், ஆடை  வடைவமைப்பு  அலங்காரங்களும் , நடிப்பும்  அட்டகாசம் 


பிரசாந்த  ராமச்சந்திரன்  எடிட்டிங்கில் படம்  ரெண்டே  கால்  மணி  நேரம்  ஓடுகிறது , இன்னும்  அரை  மணி  நேரம்  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம் ‘டெபோஜித் ரேவின்  ஒளிப்பதிவு  கலர் ஃபுல். ஜஸ்டின்  பிரபாகர்  இசையில்  இரு பாடல்கள்  ஹிட்  ஆகி  உள்ளது , பிஜிஎம்  ஓக்கே  ரகம் 


விவேக்  சோனியின்  திரைக்கதை  இயக்கத்தில்  ஒரு  இளம்  தம்பதியின்  மனப்போராட்டங்களை  இளமை  கொப்புளிக்க  தந்திருக்கிறார்

சபாஷ்  டைரக்டர்


1   ஓப்பனிங்  ஷாட்டில் நாயகன்  பெண்  பார்க்கும்  இடம்  மாறிப்போனதும்   ரியலாக  நாயகியைப்பெண்  பார்க்க  வந்த  மாப்பிள்ளையிடம்  இவர்கள்  போக  வேண்டிய  அட்ரசை  சொல்லி  அங்கே  ஒரு  பெண்  இருக்கு , அதை  வேணா  ட்ரை  பண்ணுங்க  என   ஆள்  மாற்றி  விடும்  காட்சி 


2    நாயகன்  நாயகி  இருவரும்  லேப்டாப்பில்  கடலை  போட்டுக்கொண்ட்ருக்கும்போது  அங்கே  வரும்  குடும்ப  ஆட்களிடம்  திருடன்  போலீஸ்  விளையாட்டு  விளையாடுவதாக  சமாளிக்கும்  காட்சி 

3  லிஃப்டில்  கம்பெனி  சீஇஓ  தன்  மகனைப்பாராட்டுவதை  அவர்கள்  அறியாமல்  அப்பா  ரசிக்கும்  காட்சி  கிளாசிக் 


4  உப்புச்சப்பே  இல்லாமல்  க்ளீன்  ஸ்லேட்டாகப்போகும்  திரைக்கதையில்  நாயகியின்  முன்னாள்  தோழன்  நாயகிக்கு  நயன்  தாரா   சேலை  பரிசு  தந்து  டீ எஸ்டெட்டை  கவனிக்கச்சொல்லும்  காட்சியும், அதைத்தொடர்ந்து நடக்கும் களேபரங்களும்  சுவராஸ்யமான  முடிச்சு 


5  அவரவர்  ஆப்  பற்றி  அனைவரும்  இண்ட்ரோ  கொடுக்கும்  காட்சியில்  நாயகனின்  புதுமையான  ஆப்  பற்றிய  விளக்க  உரை  அருமை 


ரசித்த  வசனங்கள் 


1  இஞ்சினியரிங்  முடிச்சு  ஒரு  வருசம்  ஆகியும்  வேலை  இன்னும்  கிடைக்கலைனு  அவங்க  கிட்டே  சொன்னா  அவங்க  உன்னை  முட்டாள்னு  நினைப்பாங்க , நீ முட்டாள்தான், ஆனா அதை  அவங்க  தெரிஞ்சுக்கனும்னு  அவசியம்  இல்லை 


2   ப்ளூ  உங்களுக்குப்பிடிச்ச  கலரா?


 இல்லை , சேஃப்டி கலர். அழகை  அதிகமாவும்  காட்டாது , கம்மியாவும்  காட்டாது 


3   முதல்  ராத்திரில   ஏன்  பாலில்  மஞ்சள்  தூள்  போட்டுக்குடிக்கறாங்க ?


 ஏன்னா  நாம்  பண்ண  வேண்டிய  விஷயத்தை  சரியாப்பண்றதில்லை . அதைக்கச்சிதமா  செய்யத்தான்  அப்படிக்குடிக்கச்சொல்றாங்க 


 அப்போ  நானும்தானே  குடிக்கனும் ?  ஸ்கூட்டி  ஓட்டும்போது  ரெண்டு  டயர்லயும்  காத்து  சமமா  இருந்தாத்தானே  நல்லது ?


4  ஜாயிண்ட்  ஃபேமிலில  இருக்கும்  நல்ல  விஷயம்  என்னான்னா  தனிமையா  ஃபீல்  பண்ண  வேண்டிய  அவசியமே  இருக்காது


5  பணியாட்கள்  சிங்கிளா  இருக்கும் வரை  டேலண்ட்டா  இருப்பாங்க  என்பது  என்  நம்பிக்கை 


6  உங்களுக்கு  சரியா  பொய்  சொல்லத்தெரியலை , அல்;லது  உங்களுக்கு  நல்ல  சென்ஸ்  ஆஃப்  ஹ்யூமர். ஐ  லைக் த  போத் 


7  ஹோட்டலில்  எங்க  யூசுவல்  ஆர்டர்ஸ்  எல்லாம்  அன் யூசுவல்  ஆக  இருக்கும்


8  என்  ஃபோன்  கால்ஸ்  எதையும்  நீ  அட்டெண்ட்  பண்ணி  பதில்  சொல்லலை , அதுவே  ஒரு  விதமான  பதில்தான் 


9  நாம  ரெண்டு  பேரும்  சினிமாக்குப்போலாமா?

  எனக்கு  இப்போதான்  மேரேஜ்  ஆச்சு , அதுக்குள்ளே  டைவர்ஸ்  ஆகனுமா?


10  நீங்க  எல்லாம்  சரக்கு  அடிங்க , எனக்கு  சொல்யூஷன்  போதும் 


 நான்  சொன்னது  பிராப்ளத்துக்கான  சொல்யூசன்


11   நீ  எடுக்கற  முடிவுகள்  உனக்கு பெட்டரா  இருந்தா  அது  நமக்கும்  பெட்டராதான்  இருக்கும்


12  தொலைதூரமா  இருக்கும்  காதலியிடம்  நீங்க  எந்த  அளவு  சோகமா  இருக்கறதா  காட்டிக்கறீங்களோ  அந்த  அளவு  அவங்க  சந்தோஷமா  இருப்பாங்க 


13  ஜோடிகள்  எல்லாம்  அடிக்கடி  ரொம்ப  நேரம்  பேசிக்கிட்டே  இருக்காங்களே? அப்படி  என்னதான்  பேசிக்குவாங்கனு  எனக்கு  ரொம்ப  நாட்களா  சந்தேகம்


 அது  பேசிக்கறது  இல்லை , ஒண்ணா  இருப்பது 


14  மாற்றத்தைக்கொண்டு  வர  முடியாத  இடத்துல  என்னால  வேலை  பார்க்க  முடியாது 


15    அவரு  எந்த  கிஃப்ட்டும்  சர்ப்பரைசும்  வேண்டாம்னுட்டாரு


 எல்லாருக்குமே  கிஃப்ட்டும்  சர்ப்பரைசும்   ரொம்பப்பிடிக்கும், பொண்ணுங்க  நாம  சொல்லிடுவோம், அவங்க  சொல்ல  மாட்டாங்க 


16  நான்  உன்  கிட்டே  உண்மையைச்சொல்லாதது  என்  தப்புத்தான் , ஆனா  நான்  உன்  கிட்டே  உண்மையாத்தான்  இருக்கேன் 


17   சோகப்பாட்டுக்கேட்கனும்  போல  இருக்கு, ஆனா  நெட்  ஒர்க்  இல்லை 


18  இப்படி  எல்லாத்தையும்  குறை  சொல்றீங்களே? இப்போ  நான் வடையை  மாத்தனுமா? தோசையை மாத்தனுமா?


நாங்க  கடையை  மாத்திடறோம்


19  பேசனும்கறதுக்காக  பேசறேன், ஆனா  பேசறதுக்கு  எதுவும்  இல்லை 


20  அரேஞ்ச்டு  மேரேஜ்ல  ஒருத்தரை  ஒருத்தர்  புரிஞ்சுக்க  லேட்  ஆகும், உங்க  விஷயத்துல  லாங்  டிஸ்ட்டென்ஸ்  வேற  சேர்ந்துடுச்சு 


21   எதுக்கு  அவசரமா  வரச்சொன்னே ?


ஒரு  சோகமான  செய்தி 


 வெல்கம்  டூ த  க்ளப் 


22  ஒரு  பிரச்சனை  ஏற்பட்டா  எல்லாரும்  உட்கார்ந்து  பேசுங்க , தீர்வு  கிடைக்கும்னு  எல்லாரும்  சொல்வாங்க , ஆனா  சில  பிரச்சனைகளுக்குத்தீர்வே  கிடையாதுனு  யாரும் சொல்ல  மாட்டாங்க 


23   எல்லாப்பிரச்சனைகளையும்  தீர்க்கனும்னு  அது  பின்னாடியே  ஓடக்கூடாது ‘


24   தொலைதூர  உறவுகள்  சிரமமானவை  ஆனால்  ரொம்ப  ஸ்பெஷல்  ஆனவையும்  கூட . சண்டை  போட  நிறைய  காரணங்கள்  இருக்கும், அதைத்தீர்ப்பதற்கும்  நிறைய  வழிகள்  இருக்கும் 


25  கம்யூனிக்கேஷன் தான்  ஒரு  உறவுக்கு  ஆக்சிஜன்  மாதிரி 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஓப்பனிங்  சீனில்  பெண்  பார்க்க  வரும்  மாப்பிள்ளை  வீட்டார்  வீடு  அட்ரஸ்  தெரியாமல்  தடுமாறுகிறார்கள் . எல்லோர்  கைலயும்  ஆண்ட்ராய்டு  ஃபோன்  இருக்கு,  கூகுள்  லொக்கேஷன்  ஷேர்  பண்ணுங்க   என  புரோக்கரிடமோ , பெண்  வீட்டாரிடமோ  கேட்க  மாட்டார்களா? 


2   முதல்  இரவு  அன்று  இண்ட்டர்வ்யூக்கான  அழைப்பு  மெசேஜாக  வருவதும்  அதற்கு  அடுத்த  நாளே  இண்ட்டர்வ்யூ  அட்டெண்ட்  பண்ண  வேண்டி  இருப்பதால்  நாயகன்  அதற்கு  பிரிப்பேர்  பண்ண பிரிப்பேர்  ஆவதும்  சினிமாத்தனம் , பொதுவாக  இண்ட்டர்வ்யூக்கான  அழைப்பு  காலை 11  மணிக்குதான்  வரும்.


3   திருமணம்  ஆன  நாயகன்  தன் மனவியிடம்  ஃபோனில் இன்னும்  ஒரு  வருசம்  நானும்  உன்னை  மீட்  பண்ண  வர  முடியாது , நீயும்  வர  வேண்டாம்   என  சொல்வது  கதையின்  சுவ்ராஸ்யத்துக்கு  சரி ஆனா  ரியல்  லைஃபில்  இது  சாத்தியம் இல்லை , ஈசியா  மீட்  பண்ணலாம் 


4   ஆஃபீசுக்குள்  வெளி  ஆட்கள்  அனுமதி  கிடையாது  என்று  சொன்ன பின்  கொஞ்சம்  தண்ணி கிடைக்குமா? எனக்கேட்டு  ரிசப்ஷனிஸ்ட்டை கவனத்தைக்கலைத்து  இவர்கள்  உள்ளே  போவதெல்லாம்  பாசிபிளிட்டியே இல்லாத  ஹைதர்  அலி  காலத்து  டெக்னிக் 


5   சிசிடிவி  கேமரா  எல்லா  இடத்தில்  இருக்கும்போது  ஆஃபீசில்  நுழைந்த  அப்பாவை  நாயகனும், நாயகியும்  வெட்டியாகத்தேடும்  காட்சி   விழலுக்கு  இரைத்த  நீர்

6  ஊடலில்  கோபித்துக்கொள்ளும்  நாயகி  நாயகன்  சமாதானப்படுத்தாமலேயே  அவரை  சந்திக்க  மீண்டும்  பெங்களூர்  வருவது  எப்படி ? எந்த  ஊர்ல  எந்த  சம்சாரம் தன்  புருசனை சமாதானம்  செய்யாமல்  மன்னிச்சாங்க ?


7   நாயகனின்  நண்பன்  நாயகன்  தன்  மனைவிக்கு  அனுப்புவது  போல்  ஒரு  வெல்கம்  மெசேஜ்  அனுப்பினால்  அது  பற்றி  இருவரும்  ஃபோனில்  டிஸ்கஸ்  பண்ணிக்கொள்ள  மாட்டார்களா? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்=  க்ளைமாக்சில்  லிப்  லாப்  சீன்  லங்க்  ஷாட் டில்  இருக்கிறது , மற்றபடி  படம்  படு  டீசண்ட் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இளம்  தம்பதிகளுக்கும், காதலர்களுக்கும்  பிடிக்கும் .  ரேட்டிங் 2.75 / 5 



Meenakshi Sundareshwar
Meenakshi Sundareshwar poster.jpg
Official release poster
Directed byVivek Soni
Written byVivek Soni
Aarsh Vora
Produced byKaran Johar
Apoorva Mehta
Somen Mishra
StarringSanya Malhotra
Abhimanyu Dassani
CinematographyDebojeet Ray
Edited byPrashanth Ramachandran
Music byJustin Prabhakaran
Production
company
Distributed byNetflix
Release date
  • 5 November 2021
Running time
141 minutes[1]
CountryIndia
LanguageHindi

Saturday, June 10, 2023

POOKKAALAM (2023) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா )@ டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார்

 


  ஆனந்தம்  என்னும்  மெகா ஹிட்  படத்துக்குப்பின்  இயக்குநர்  கணேஷ் ராஜ்  நான்கு  ஆண்டுகள்  கால  அவகாசம்  எடுத்து  பட்டை  தீட்டிய  திரைக்கதைதான்  இந்த  பூக்காலம், 100  வயது  ஆன  ஒரு  தாத்தா  வின்  வாழ்க்கையில்  எழும்  சந்தேகம்  தான்    கதைக்கரு . முதல் படத்தில்  காலேஜ்  இளைஞர்கள்  வாழ்வை    படம்  எடுத்த  இயக்குநர்  இரண்டாவது  படத்தில்  100  வயதான  தம்பதியர்  வாழ்வை படம்  எடுக்கத்துணிந்திருப்பது  சிறப்பு . இது  ஒரு  ஃபீல்  குட்  ஃபேமிலி  மெலோ டிராமா

 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் 100  வயதான  ஒரு  தாத்தா . அவர்  தன்  மனைவியை  மணந்து  80  வருட  மண  வாழ்க்கையை  வெற்றிகரமாக  இனிமையாக  முடித்தவர் . மகன்கள் , மகள்கள் , பேரன்கள் , பேத்திகள்  கொண்ட  கூட்டுக்குடும்பம்  அவர்களுடையது. பேத்தியின்  திருமண  வைபவம்  நடக்கும்  சமயத்தில்   வீட்டின்  பரணில்  இருந்த  பழைய  காதல்  கடிதம்  ஒன்று  நாயகன்  ஆன  தாத்தா  கையில்  கிடைக்கிறது 


 அது  50  வருடங்களுக்கு  முன்   அவரது  மனைவிக்கு   காதலன்  எழுதிய  கடிதம் . அக்காதல்  கடிதத்தைப்படித்துப்பார்த்து  அதிர்ச்சி  அடைகிறார்  நாயகன். காதலனைத்தேடிப்போகிறார். காதலன்  இன்னும்  உயிருடன் தான்  இருக்கிறான்.  பழைய  கதைகளை  எல்லாம்  எடுத்து  விட்டால்  உனக்குத்தான்  அவமானம்  என  காதலன்  சொல்ல  கோபமாகத்திரும்பி  வருகிறார்  நாயகன், 


 தனது  மனைவியை  விவாக ரத்து  செய்ய  முடிவெடுக்கிறார். இதற்குப்பின்  திரைக்கதையில்  நிகழும்  சுவராஸ்யமான  சம்பவங்கள் , உணர்ச்சி மயமான  காட்சிகள் , நெஞ்சை  வருடும்  க்ளைமாக்ஸ்  இவை  எல்லாமே  பார்ப்பவர்  மனதைக்கட்டிப்போடுகிறது 


 நாயகன்  தாத்தாவாக   விஜயராகவன்  என்பவர்  நடித்துள்ளார், அற்புதமான  நடிப்பு . அவரது  மனைவியாக  கேபிஏசி  லலிதா  பிரமாதமாக  நடித்திருக்கிறார், க்ளைமாக்ஸ்  காட்சியில்  இருவரும்  போட்டி  போட்டு  நடித்திருக்கிறார்கள் 


வக்கீல்  ஆக  வரும்  பஷீல்  ஜோசஃப்  ( ஜெய ஜெயஜெயஹே  நாயகன்) காமெடி  நடிப்பில்  பின்னி  எடுக்கிறார். ஜட்ஜ்  ஆக  வரும்  வினீத்  சீனிவாசன்  கேரக்டர்  டிசைன்  அருமை . இருவருக்குமான  காம்பினேஷன்  காட்சிகள்  இதுவரை  தென்னிந்திய  சினிமாவில்  காணாதவாஇ , ஜட்ஜ் - வக்கீல்  இருவரும் க்ளாஸ்மேட்ஸ்  என்ற  கான்செப்ட்டே  புதுசு 


ரோஷன்  மேத்யூ , சுஹாசினி  மணிரத்னம்  ஆகியோரும்  கச்சிதமான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்கள் . 


ஆனந்த் சி சந்திரன்  ஒளிப்பதிவு  கொள்ளை  அழகு மிதுன்  முரளியின் எடிட்டிங்கில்  படம்  137  நிமிடங்கள்  ஓடுகிறது 


சச்சின்  வாரியர்  பின்னணி  இசை  கூடுதல்  பிளஸ்


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கும்  கணேஷ் ராம்   வியக்க  வைக்கிறார்,  அவர்  நினைத்தால்  சீரியசாக  கதையை  நகர்த்துகிறார். திடீர்  என  கதையுடன்  ஒட்டிய  காமெடி  டிராக்  வருகிறது ,   புதுமையான  முயற்சி


சபாஷ்  டைரக்டர்


1  நூறு  வயதான  ஒரு  தாத்தா டைவர்ஸ்க்கு  அப்ளை  பண்ணும்  திரைக்கதை  ரொம்பப்புதுசு, இதைக்காமெடியாகவும் ஆங்காங்கே  சீரியசாகவும்  காட்சிகளை  அடுக்கியது  அருமை 


2 கோர்ட்  ரூம்  டிராமா  வகைப்படத்தில்  ஜட்ஜூம்  , வக்கீலும்  க்ளாஸ்மேட்ஸ்  என்பதும்  புதுசு , அது  சம்பந்தமான  காட்சிகள்  கலக்கல்  காமெடி 


3  ஜட்ஜ்  ஆக  வருபவர்  கோர்ட்டுக்கு  வெளியே  வக்கீலுக்கு  நண்பனாகவும்,  கோர்ட்டில்  ஜட்ஜ்  சீட்டில்  அமரும்போது  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  ஆவதும்  ரசிக்க  வைக்கும்  காமெடி  சீக்வன்ஸ்


4 கலக்கல்  ஆன  க்ளைமாக்ஸ்  காட்சி  அதில்  இருவரின்  போட்டி  போட்டும்  நடிப்பு 


  ரசித்த  வசனங்கள் 


1  நமக்குள்  இருக்கும்  உறவு  ஒரு  ரப்பர்  பேண்ட்  போல, ஒரு  பக்கம்  நான்  இழுக்கறேன் , இன்னொரு  பக்கம்  நீங்க  இழுக்கனும்


‘நடுவுல  கட்  ஆகிடும் 


2   ஏண்டி , உனக்கு  மேரேஜ் ஆகி   மூணு  வருசம்  ஆச்சில்ல?  தினமும் ?


ம் ம்  தினமும் !


3   நான்  நல்லாப்படிக்கலைன்னா  உடனே  கல்யாணம்  பண்ணி  வெச்சுடுவேன்னு  சொன்னீங்க ஆனா  இத்தனை  சப்ஜெக்ட்ல  அரியர்  வெச்சும்  மேரேஜே  இன்னும்  பண்ணி  வைக்கலை , இது  என்ன  நியாயம் ? 


4  நம்  குடும்பத்தில்  எல்லோரும்  ஒண்ணா  பிரார்த்தனை  பண்ண    வேண்டிய  நேரம்  நெருங்கிடுச்சு 


5   அவனை  என்  வலையில்  சிக்க  வைக்க  எவ்ளோ  எல்லாம்  கஷ்டப்பட்டேன்  தெரியுமா? சமையல்  எல்லாம்  கத்துக்கிட்டேன் 


6   கரண்ட்  போறதுக்கு  ஏதாவது  கின்னஸ்  ரெக்கார்டுனு  ஒண்ணு

இருந்தா  அது  நம்ம  நாட்டுக்குத்தான்  கிடைச்சிருக்கும் 


7    இருட்டுதான்  இந்த  உலகத்துல  பலருக்கும்  பலதைக்கத்துக்கொடுத்திருக்கு 


8  மிஸ்!  நீ  இதுவரை  எத்தனை  பேரை  லவ்  பண்ணி  இருப்பே? 


 எட்டு  பேரு  இருக்கும்னு  நினைக்கறேன், அதுக்கு மேல  கணக்கு  வெச்சுக்க  முடியல 


9   உங்க  வாழ்க்கை  வாழ்ந்து  முடிஞ்சு  பாதி  காலம்  ஆனபின்  வாழ்ந்ததெல்லாம்  பொய்யான  வாழ்க்கைதான்  என  தெரிய  வந்தா  என்ன  செய்வீங்க ? 


10  இத்தனை  காலம்  நீங்க  கூப்பிட்ட  இடத்துக்கு  எல்லாம்  நான்  வந்திருக்கேன் , இப்போ  நீங்க  கோர்ட்டுக்குக்கூப்பிட்டாலும்  அங்கேயும்  நான்  வருவேன் 

11  இந்தக்காதல்  கடிதத்தைத்தவிர  வேற  சாலிட்  எவிடென்ஸ்  இருக்கா?


 யுவர்  ஆனர்  அந்தக்காதல்  கடிதமே  ஒரு  சாலிட்  எவிடென்ஸ்தான் 


12   எங்கப்பா  கோயில்  பூசாரி , கோயிலுக்குள்  போகும்  முன்  அவர்  சரக்கு  அடிச்ட்டு  குடிகாரனா   இருப்பாரு, கோயிலுக்குள்ள  போய்ட்டா  அவர்தான்  தெய்வம், அது  மாதிரிதான்  கோர்ட்க்கு  வெளில  நாம  ரெண்டு  பேரும்  ஃபிரண்ட்ஸ், கோர்ட்டுக்கு  உள்ளே  வந்துட்டா  நான்  ஜட்ஜ்  , நீ  வக்கீல் 

13    நான்  சும்மா  காமெடிக்காகத்தான்  அப்படிச்சொன்னேன்


 வெளில  இருந்து  பார்க்கறவங்களுக்குத்தான்  அது  காமெடி , ஆனா  அவங்களுக்குள்ள  ரொம்பக்கஷ்டமான  தருணம்  தான்  இது 


14   யோவ்  வீட்டு  வாடகை  எங்கேய்யா?  வக்கீல்னு  எல்லாம்  பார்க்க  மாட்டேன்..


 உங்க  வீட்ல  மாடு  இருந்தா  சொல்லுங்க , வந்து  பால்  வேணா  கறக்கறேன், இப்போதைக்கு  என்னால  அதுதான்  செய்ய  முடியும் 


15   பால்  கறந்து  கறந்து  என்  கை  எல்லாம்  பால்  வாசம்  அடிக்குது


 ஆவின்  பாலா?


  14   தனி  மரமா  நிற்கறதோட  கஷ்டம்  என்ன?னு  உங்களுக்குத்தெரியுமா?  எனக்குத்தெரியும் 


15   நாம்  எடுக்கும்  முடிவுகள்  எல்லாமே  ஒண்ணுக்குப்பின்  ஒண்ணு  கிடையாது , எல்லாம்  முன்னுக்குப்பின்  முரணாக  நடப்பவை 


16    சில  நேரங்களில்  நாம்  தப்பு  என  நினைக்கும்  முடிவுகள்  சரி  ஆகிடும், சரி  என  நினைத்து  எடுக்கும்  முடிவுகள்  தப்பு  ஆகிடும் 


15   சரி  எது ? தப்பு  எது?னு  தெரியாம  ஒரு  கூண்டுக்குள்  வாழ்ந்துக்கிட்டு  இருக்கோம், இதுதான்  பெரிய தப்ப



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   மலையாளப்படங்களின்  தனித்துவமான  ஸ்லோனெஸ்  இதிலும்  உண்டு , ஆனால்  ஒரு  ஃபீல்  குட்  ஃபேமிலி  மெலோ டிராமா  அவசியம்  பார்க்கலாம்  ரேட்டிங் 3 / 5 





Pookkaalam
Pookkaalamfilm.jpeg
Poster
Directed byGanesh Raj
Screenplay byGanesh Raj
Produced by
  • Thomas Thiruvalla
  • Vinod Shornur
Starring
CinematographyAnend C Chandran
Edited byMidhun Murali
Music bySachin Warrier[2]
Production
companies
  • CNC Cinemas
  • Thomas Thiruvalla Films
Release date
  • 8 April 2023[1]
CountryIndia
LanguageMalayalam

Friday, June 09, 2023

KADINA KADORAMEE ANDAKADAHAM (2023) -மலையாளம் - சினிமா விமர்சனம் ( ஃபீல் குட் மூவி ) @சோனி லைவ்

 


 இயக்குநர்  முஹாசின்  இதற்கு  முன் 2018ல் காயங்குளம் கொச்சுண்ணி , 2021ல் முடி  என  இரு  படங்களை  இயக்கி  உள்ளார் நாயகன்  ஆன பஷீல் ஜோசஃப் பால்தூ  ஜான்வர் , ஜெய ஜெய ஜெயஹே என்ற  படங்களில்  நடித்தவர். இவர்  ஒரு  இயக்குநரும்  கூட . மூன்று படங்களை  இயக்கி  உள்ளார். இவரது  லேட்டஸ்ட்  படம்  மின்னல்  முரளி . இவர்கள்  இருவரும்  இணைந்து  ஒரு  ஃபீல் குட்  மூவியை  தந்திருக்கிறார்கள் , இது விமர்சன  ரீதியாக  ஏகோபித்த  பாராட்டுக்களைப்பெற்று  வருகிறது . மம்முட்டி  நடித்த  புழு , உண்டா  ஆகிய  படங்களுக்கு  திரைக்கதை  எழுதிய ஹர்சத் தான்  இதற்கும்  திரைக்கதை  எழுதி  இருக்கிறார்


    ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின்  அப்பா  கல்ஃப்  கண்ட்ரியில்  பணி புரிந்து  வருகிறார். வருடம்  ஒரு  முறை  அல்லது  இரு வருடங்களுக்கு  ஒரு  முறை  ஊருக்கு  வந்தால்  இரண்டு  மாதங்கள்  தங்கிச்செல்வார். நாயகனுக்கு   தங்கை , அம்மா  என  நல்லதொரு  குடும்பம்,திருமணம்  ஆகி கணவனைப்பிரிந்து  வாழும்  தங்கையை  அவரது  கணவருடன்  சேர்த்து  வைக்க  வேண்டும் 


தொட்டது  துலங்காது  என்பதுதான்  நாயகன்  கை ராசி . கல்ஃபுக்கே  வா. ஒரு  கம்பெனியில்  வேலை  இருக்கிறது  என  அப்பா  அழைத்தும்  நாயகனுக்கு  அதில்  ஆர்வம்  இல்லை . சொந்த  ஊரிலேயே  ஏதாவது  பிஸ்னெஸ்  செய்து  முன்னேற  வேண்டும்  என்பதுதான்  அவரது  ஆசை. கல்யாணம், கருமாதி  என்றால்  பந்தல்  போடுவது  சேர்  வாடகைக்கு  விடுவது  இதுதான்  இவரது  பிஸ்னெஸ்


 கதை  நடக்கும்  கால கட்டம்  2020 கொரோனா  ஊரடங்கு  காலம். லாக்டவுன்  அமலில்  இருப்பதால்  பெரிய  அளவில்  விசேஷங்கள்  நடைபெறுவதில்லை. அதனால்  நாயகனின்  பிஸ்னெஸ்  சரியாக  நடக்கவில்லை .


 சரி  சீசனல்  பிஸ்னெஸ்  செய்யலாம்  என்றால்  மாஸ்க்  தான்  சேல்ஸ்  பண்ணனும், ஹோல்சேலாக  ஒரு  இடத்தில்  மாஸ்க்  வாங்கி  விற்க  நினைக்கிறார். அதிலும்  சில  சிக்கல்கள்  வருகின்றன


இப்படி  நாயகனின்  பிஸ்னெஸ்  வாழ்க்கை  சரியாகப்போகாத  சமயம்  நாயகனின்  அப்பா  இறந்து  விடுகிறார். ஹார்ட்  அட்டாக்கில்  தான்  இறக்கிறார்  என்றாலும்  கொரானா  காலகட்டம்  என்பதால்  அவரது  டெட் பாடியை  ஊருக்குக்கொண்டுவருவதில்  சிக்கல் . அம்மா  கடைசியாக  ஒரு  முறை  அப்பா  உடலைப்பார்த்தே  ஆக  வேண்டும்  என  அடம்  பிடிக்கிறார்


 இதற்குப்பின்  கதையில்  நிகழும்  சம்பவங்களே  திரைக்கதை 


நாயகன்  ஆக  பஷீல்  ஜோசஃப்  அண்டர்ப்ளே  ஆக்டிங்கில்   கச்சிதமாக  பாத்திரத்தின்  தன்மையை  உள்வாங்கி  அற்புதமாக  நடித்திருக்கிறார். கண்  முன்னே  சம்பவங்களைப்பார்ப்பது  போல  அவ்வளவு  தத்ரூபமான  நடிப்பு  எல்லோரிடமும்


இந்திரன்ஸ் , ஜாஃபர்  இடுக்கி  ஆகிய  முக்கிய  நடிகர்கள்  தங்களுக்குக்கொடுக்கப்பட்ட  பாத்திரத்தை  மிகச்சிறப்பாக  கையாண்டிருக்கிறார்கள் 


முதல்  பாதி  திரைக்கதை  நாயகனின்  போராட்டங்களை  நாயகியின்  தங்கை  கணவரைப்பிரிந்து  வாழ்வதில், மீண்டும் சேர்வதில்  எடுக்கப்படும்  முயற்சிகள்  பற்றி  சொல்கிறது . பின்  பாதி  திரைக்கதை  அயோத்தி  படக்கதை  போல் யூ  டர்ன்  அடித்து  டெட்பாடியைக்கொண்டு  வருவதில்  ஏற்படும்  பிரச்சனைகளை  சொல்கிறது 


போலீசின்  சட்டதிட்டங்கள் , புரோட்டோகால் . சாமான்யனின்  கஷ்டங்கள்  என  பல  விஷயங்களை  அலசி  இருக்கிறார்கள் 


கோவிந்த்  வசந்தாவின்  பின்னணி  இசை  உயிர்ப்புடன்  இருக்கிறது , சோபின்  சோமன்  எடிட்டிங்கில்  2  மணி  நேரம்  படம்  ஓடுகிறது . அர்ஜூன்  சேது  ஒளிப்பதிவில் கனகச்சிதமாக  காட்சிகளைப்படம்  பிடித்துள்ளார் 


சபாஷ்  டைரக்டர்


1 அப்பா  கேரக்டரை  ஒரு  காட்சியில்  கூட  விஷூவலாகக்காட்டாமல்  குரலை  மட்டும்  வைத்தே  அவர்  உயிருடன்  வாழ்வதைக்காட்டிய விதம் 


2  நிழலின்  அருமை  வெய்யிலில்தான்  தெரியும்  என்பது  போல  அப்பா  மேல்  அதீத  பாசமோ  அன்போ  இல்லாத  நாயகன்  அப்பாவின்  மறைவுக்குப்பின்  அப்பா  நினைவில்  வாடும்  காட்சிகள்  சராசரி  ஆண்களின்  மன  ஓட்டங்களின்  பிரதிபலிப்பு 


3   நாயகனின்  தங்கை , தங்கையின்  கணவர்  இருவருக்குமான  காம்போ  காட்சிகள்  கணவன் - மனைவி  பிரிவுத்துயர்  உணர்த்தும்  காட்சிகள் 


4  இந்திரன்ஸ் , ஜாபர்  இடுக்கி  இருவரின்  அபாரமான  யதார்த்த  நடிப்பு 



  ரசித்த  வசனங்கள் 


1  இந்த  கல்யாணம், கருமாதிக்கெல்லாம்  முடிவே  கிடையாது , ஆனா கொரானாவுக்கு  முடிவு  உண்டு 


2  இந்த  உலகமே  அழிஞ்சாலும்  இவன்  வட்டி  வாங்க  கரெக்ட்  டைம்க்கு  வந்துடுவான்  போல 


3   கடைசி  காலத்துல  என்  அப்பா  என்னைத்திட்டிட்டே  இருந்தாரா?

எந்த  அப்பாவும்  தான்  சாகும்போது  பெத்த  பையன்  மேல  கோபத்தோட  இருக்க  மாட்டாங்க 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகன்  மாஸ்க்  ஹோல்சேல் வியாபாரம்  பண்றவர்  காரில்  போகும்போது கைவசம்  ஒரு  மாஸ்க்  வைத்திருக்க  மாட்டாரா? போலீஸ்  செக்கிங்  வரும்போதாவது  மாஸ்க்  அணிந்து  ஹையர்  ஆஃபீசரை  பார்க்கனும்  என  தெரியாதா?


2  கொரோனா  காலத்தில்  மாஸ்க்  அணிய  பிரியப்படாதவர்கள்  கூட  பாக்கெட்டில்  கைவசம்  மாஸ்க்  வைத்திருப்பார்கள் , போலீஸ்  நடமாட்டம்  தட்டுப்பட்டால்  மாஸ்க்  அணிவார்கள் , ஆனால்  நாயகன்  அசால்ட்டாக  இருந்து  பல  முறை  மாட்டிக்கொள்கிறார்


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  க்ளீன்  யூ




சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   அயோத்தி  படம்  பார்க்காதவர்களுக்கு  மிகவும்  பிடிக்கும், பார்த்தவர்களுக்கு  முதல்  பாதி  பிடிக்கும் . ரேட்டிங் 2.75 / 5 


Kadina Kadoramee Andakadaham
Kadina Kadoramee Andakadaham.jpg
Official poster
Directed byMuhashin
Written byHarshad
Produced byNaisam Salam
Starring
CinematographyArjun Sethu
S. Mundol[1]
Edited bySobin Soman[1]
Music byGovind Vasantha
Production
company
Naisam Salam Productions
Distributed byRejaputhra
Release date
  • 21 April 2023
CountryIndia
LanguageMalayalam