Thursday, January 05, 2023

GOLD (2022) மலையாளம் திரை விமர்சனம் ( மெலோ டிராமா ) @ அமேசான் பிரைம்

 


இயக்குநர் அல்போன்ஸ்புத்திரன்  தனது  முதல்  படமாக  தமிழ், மலையாளம்  ஆகிய  இருமொழிகளில்  ஒரே  சமயத்தில்  ரிலீஸ்  செய்த  “நேரம்”2013ம்  ஆண்டின்  மாறுபட்ட  படமாக  அமைந்தது ,  2015ல்  வெளிவந்த  மலையாளப்படமான  பிரேமம்  ஆட்டோகிராஃப்  பட  சாயல்  என்றாலும்  கேரளாவில்  அதிரி  புதிரி  வெற்றி . கிட்டத்தட்ட  ஏழு  வருட  இடைவெளிக்குப்பின்  இப்போது  வெளியாகி  இருக்கும்  கோல்டு  படம் அவருக்கு  ஏழரையாக  அமைந்ததா? ஏழாவது  அதிசயமாக  அமைந்ததா? என்பதைப்பார்ப்போம்

ஸ்பாய்லர்  அலர்ட்

நாயகன்  ஒரு  செல் ஃபோன்  கடை  ஓனர். அவருக்கு  மேரேஜ்  ஃபிக்ஸ்  ஆகி  இருக்கிறது . புது  மணப்பெண்ணுக்காக  அவர்  வாங்கிய  புதிய  கார்  டெலிவரி  ஆகி  வீட்டின்  முன்  நிறக  இருக்கும்  தருணத்தில்  ஒரு  சிக்கல். யாரோ  ஒருவர்  நாயகன்  வீட்டு  வாசல்  முன் ஒரு  டெம்போ  வேனை   நிறுத்திவிட்டுப்போய்  விட்டார்கள். வேனில்  ஸ்பீக்கர்கள்  200  இருக்கின்றன


 நாயகன்  போலீஸ்  ஸ்டேஷன்  போய்  புகார்  கொடுக்கப்போனால்  2  நாட்கள்  அந்த  வேன்  அங்கேயே  இருக்கட்டும்  என  சொல்லி  விடுகிறார்கள் . திரும்பி  வந்த  நாயகன்  அந்த  ஸ்பீக்கர்களில்  ஒன்றை  எடுத்து  வீட்டுக்குள்  சென்று  உபயோகப்படுத்த  முயலும்போது  ஆனந்த  அதிர்ச்சி . கொடுக்கற  தெய்வம்  கூரையைப்பிய்த்துக்கொண்டு  கொடுக்கும்  என்பார்கள், ஆனால்  அதிர்ஷ்ட  லட்சுமி    காலிங்  பெல்லை  அழுத்தாமலேயே  உள்ளே  வந்தால்  எப்படி  இருக்கும்?  அந்த  உணர்வுதான்  நாயகனுக்கு . 200  ஸ்பீக்கர்களிலும்  தங்கக்கட்டிகள்  மறைக்கப்பட்டு  வைக்கப்பட்டுள்ளன்


இதற்குப்பின்  நாயகன்  அந்த  200  கிலோ  தங்கத்தை  ஆட்டையைப்போட  எடுக்கும்  நடவடிக்கைகளும் .  தங்கத்துக்கு  சொந்தக்காரர் , போலீஸ்  இரு  தரப்புகளும்  நாயகனுக்கு இழைக்கும்  இடைஞ்சல்களும்  தான்  காமெடியான  திரைக்கதை 


நாயகனாக  பிருத்விராஜ். மாறுபட்ட  படங்களைத்தேடி  தேடி  நடிக்கும்  இவருக்கு  இது  ஒரு  சறுக்கல்  படம்  என்றே  சொல்ல  வேண்டும். ஆனால்  அவர்  மீது எந்தக்குறையும்  சொல்ல  முடியாத  அளவு  கச்சிதமாக நடித்திருக்கிறார்


நாயகியாக  நயன்தாரா. அவரது  ரசிகர்களுக்கு  அதிர்ச்சியான  செய்தி . இவர்  நாயகனுக்கு  ஜோடி  இல்லை . இவர்  வரும் காட்சிகள்  மொத்த  3  மணி  நேரப்படத்தில்  10  நிமிடங்கள் மட்டுமே.  கேமியோ  ரோல் தான். ஐயா  படத்தில் அழகாகப்பார்த்த  இவரை  இளைத்த  வடிவில்  இப்படிப்பார்க்க  சங்கடமாக  இருக்கிறது 


ரோஷன்  மேத்யூ  வில்லனாக  கலக்குவார்  என  எதிர்பார்த்தால்  அவர்  கூட  கெஸ்ட்  ரோல்  தான், அதிக  வாய்ப்பில்லை . அஜ்மல்  அமீர்  காமெடி  வில்லன்  ரோல். எடுபடவில்லை 


கதைக்கு  சம்பந்தம் இல்லை  என்றாலும்  தீப்தி யின்  நடனக்காட்சிகள் அபாரம். அந்த  நடனக்குழு  முழுவதற்கும்  அந்த  க்ரெடிட்  போய்ச்சேர  வேண்டும், அசத்தி  இருக்கிறார்கள் 


காமெடியாக  படத்தை  நகர்த்த  முயன்று  அதில்  பாதி  அளவு  கூட  வெற்றி  பெற வில்லை  இயக்குநர், நம்பகத்தன்மை  இல்லாத  திரைக்கதை, வலுவற்ற  காட்சி  அமைப்புகள், நாயகனைத்தவிர  யாருக்குமே ஸ்க்ரீன்  ஸ்பேஸ்  தராதது  என  மைனஸ்  களை  அடுக்கிக்கொண்டே  செல்லலாம்


ராஜேஷ்  முருகேஷன்  இசை  கச்சிதம் விஷ்வஜித் , சந்திரன் இருவரது  ஒளிப்பதிவும்  ஓக்கே  ரகம் .எடிட்டிங்கும்  அல்போன்ஸ்  புத்திரன் தான் , நீள  நீளமான  காட்சி  அமைப்புகளில்  கத்திரி  வைத்திருக்கலாம்,  கதாபாத்திரங்கள் நடந்து  வருவதை  அதிக  நேரம்  ஸ்லோ  மோஷனில்  காட்டி  இருப்பதைக்குறைத்து  இருந்தாலே   ரெண்டரை  மணி  நேரத்தில்  படத்தை  ட்ரிம் பண்ணி  இருக்கலாம் 


சபாஷ்  டைரக்டர் 


1  போலீஸ்  ஸ்டேஷனுக்கு  அப்போவே  ஏன்  வண்டியைக்கொண்டு  போகல? என  யாரும் கேள்வி  கேட்க  முடியாத  வண்னம்  அங்கே  ஒரு  பிரச்சனையை  உருவாக்கி  அதைக்காமெடியாக  பிரசண்ட்   செய்த  சாமார்த்தியம்

2   நயன்  தாராவை  கெஸ்ட்  ரோலில்  புக்  பண்ணி  நாயகி  மாதிரி  பிரமோக்களில்  , போஸ்டரில்  டிசைனில்  போட்டு   ஒப்பேற்றிய  வித்தை 


3  இந்தக்கதை காமெடிக்கலக்கலாக  அமையும்  என  நாயகனை  நம்ப  வைத்து  கால்ஷீட்  வாங்கிய  சாமார்த்தியம்


ரசித்த  வசனங்கள்


1  பெரிய  பெரிய  இடங்களில்  சின்னச்சின்ன  விஷயங்களை  நாம  கண்டுக்கக்கூடாது


2  இந்த  சரக்கு  என்ன?னு  தெரியுமா?  99.99%  கோல்டு\


அப்போ  100%  கிடையாதுனு  சொல்லுங்க 


  கோல்டுல  100%  எதுவுமே  கிடையாது


3  புதையல்  டெய்லி  எப்பவும்   எங்கேயும்  கிடைக்காது ,  அதிர்ஷ்டம்  இருந்தா  வாழ்நாளில்  எப்போதாவது  யாருக்காவது  கிடைக்கும்


4  என்னது? சாகலாம்னு  தூக்குல  தொங்க  ரெடி  ஆகும்போது  ஃபோன் அடிக்குது ? சரி  சாகப்பொறோம், செல் ஃபோனை  ஸ்விட்ச்  ஆஃப்  பண்ணிட்டுப்போவோம் 


5  சாரே, எனக்கு  கோல்டு  டெலிவரி  பண்ற  டைம்ல  ஒரு  பிரச்சனை  உண்டாச்சு


 எல்லாம்  க்ளியர்  ஆகிடுச்சா?


 ஆமா,  டோலா  650  போட்டுக்கிட்டேன், இப்போ  தேவலை


 யோவ், உன்னைப்பற்றிக்கேட்கலை , கோல்டு  டெலிவரில  பிரச்சனை  இல்லையே? 


6    நான்  பிரமாதமான  ஐடியாக்கள்  சொல்வதைப்பார்த்துத்தான்  நான்  ஒர்க்  பண்ற  கம்பெனில  ஐடியா  சாஜினு  பட்டம்  கொடுத்தாங்க

  நீ  ஐடியா  சாஜியோ  பிஎஸ் என்  எல்  சாஜியோ, எனக்குத்தேவை  இல்லை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1   செல் ஃபோன்  கடை  ஓனரான  நாயகன் தங்கத்தை  உருக்கும்  பணி  பற்றி  அறியாதவர். ஒரு  பொற்கொல்லரிடம்  தங்கம்  உருக்கும்  கருவி  வாங்கி  வீட்டுக்கு  வந்து  அவரே  உருக்கிக்கொள்வது  எப்படி ? அனுபவமே  இல்லாமல்  அவரே  செய்கிறாரே?


2  ஸ்பீக்கர்கள்  200  வேண்டும்  என  நாயகன்  கடை  ஓனரிடம்  கேட்கும்போது  அவர்  அட்ரஸ்  கேட்க நாயகன்  சொல்கிறார். நாளை  பிரச்சனை  வரும்போது  மாட்டிக்கொள்ள  வாய்ப்பிருக்கிறதே?  தன்  அட்ரசை  ஏன்  தருகிறார்? இவரே  ஆள்  வைத்து  போய்  டெலிவ்ரி  எடுத்துக்கொண்டால்  ஆள்  அடையாளமும்  தெரியாது , முகவரியும்  கண்டு  பிடிக்க  முடியாது 


3   வரதட்சனையாஅ  200  கிலோ தங்கம்  தருபவர்  அப்படியே  தராமல்  அதை  ஸ்பீக்கரில்  மறைத்து  கள்ளக்கடத்தல்காரன்  போல்  தருவது  ஏன்? அந்த வேலை  செய்யும் நேரத்தில்  வேற  ஐடியா பண்ணி  இருக்கலாம். அல்லது  வாங்குபவர்  வேலை  என  அவங்க  கிட்டே  கை  காட்டி  விட்டிருக்கலாம்


4   ஒரு  வேன்  டிரைவர்  200  கிலோ  தங்கம்  இருப்பது  தெரிந்தும்  அம்போனு  ஒரு  இடத்தில்  விட்டுட்டு  வருவது  எப்படி ?


5   வேனில்  தங்கம்  இருப்பது  தெரிந்தும்  ஹீரோ  அதை  சேஃப்டியாக  உள்ளே  வைக்காமல்  அப்படியே  கேட்டுக்கு  வெளியே    வைப்பது  ரிஸ்க் . நைட்  யாராவது  ஸ்பீக்கரை  ஆட்டையைப்போட  நினைத்தால்  லாஸ்  ஆச்சே?


6  பொதுவா  போலீஸ்  ஒரு   வண்டியை  பார்த்தால்  என்ன  லோடு  என  முதல்  வேலையாப்பார்ப்பாங்க, ஆனால்  இந்த  வேனில்  என்ன  லோடுன்னே  முதல்  2  ம்ணி  நேரம்  பார்க்கவே  இல்லை 


7 நாயகன்  தன்  அம்மாவுடன்  ஒரே  வீட்டில்  வசிக்கிறார், ஆனால்  அம்மாவிடம்  தங்கம்  பற்றிய  மேட்டரை  சொல்லாமலேயே  200  கிலோ  தங்கத்தை  மாறாட்டம்  செய்வ்து  எப்படி ? அம்மா  என்ன  பண்றே?னு  கேட்க  மாட்டாரா?


8  200   ஸ்பீக்கர்களில்  170  மாற்றிய  பின்  டைம்  இல்லை , அப்போ  மீதி  30  மட்டும்  ஸ்டிக்கர்  மாற்றாமல்  பாக்சாகவே  அப்ப்டியே  மாற்றி  இருக்கலாமே? 


சி பி எஸ்  ஃபைனல்கமெண்ட்  -  லாஜிக்  இல்லா  மேஜிக்  என  சொல்ல  முடியாது , ஆனா நம்பமுடியாத  டஹால்டிப்படம்  என  வேணா  சொல்லலாம்,


 கோல்டு  அல்ல, கோல்டு  கவரிங். இது அமேசான்  பிரைமில்  காணக்கிடைக்கிறது 


Gold
Gold.Malayalam.Film.jpg
First look poster
Directed byAlphonse Puthren
Written byAlphonse Puthren
Produced bySupriya Menon
Listin Stephen
StarringPrithviraj Sukumaran
Nayanthara
CinematographyAnend C. Chandran
Viswajith Odukkathil
Edited byAlphonse Puthren
Music byRajesh Murugesan
Production
companies
Distributed by
Release date
  • 1 December 2022
Running time
165 minutes
CountryIndia
LanguageMalayalam

Wednesday, January 04, 2023

GLASS ONION; A KNIVES OUT MYSTRY (2022) ஆங்கிலம் - திரை விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்

 


 

GLASS ONION; A KNIVES OUT MYSTRY (2022)  ஆங்கிலம் - திரை  விமர்சனம் ( க்ரைம்  இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்


 அகதா  கிறிஸ்டியின்  நாவலைத்தழுவி  எடுக்கப்பட்டு 2019ல்  வெளி வந்து  மெகா  ஹிட்  ஆன  நைவ்ஸ்  அவுட்  படத்தின்   அடுத்த  பாகம்  இது . அந்தப்படம்  பார்க்காதவர்களுக்கும்  இது  புரியும் 


சாருலதா  படத்தில்  பிரியாமணி  ட்வின்ஸ் சிஸ்டர் ஆக  இரு  வேடங்களில்  வருவாரே  அது  போல  படத்தின்  நாயகிக்கும்  ஒரு  ட்வின்ஸ்  சிஸ்டர்  உண்டு அவர்  திடீர்  என  மர்மமான  முறையில்  இறந்து  கிடக்கிறார்/ நாயகிக்கு  மட்டும்  அது  கொலை தான்  என்  நன்றாகத்தெரியும்.தன்  சகோதரியின்  உடைமைகளை  செக்  செய்து  பார்த்த  போது  ஒரு  பார்ட்டிக்கான  அழைப்பிதழ்  கிடைக்கிறது 


  டெக்னாலஜி  மன்னரும்  ,  மிகப்பெரும்  கோடீஸ்வரருமான  ஒரு  நபர்  அவரது  ஐந்து  நண்பர்களை  ஒரு  பார்ட்டிக்கு  அவரது  தனித்தீவுக்கு  அழைக்கும்  அழைப்பிதழ்    அது 


நாயகி  படத்தின் நாயகனான  டிடெக்டிவ் வை  அணுகி  விபரம்  தெரிவித்து  அந்த  அழைப்பிதழைக்கொடுத்து  அந்த  தீவுக்கு  போகச்சொல்கிறார். அங்கே  போனால்  கொலை  பற்றி  ஏதாவது  துப்பு  கிடைக்கலாம்  என்கிறார்


அப்போது  டிடெக்டிவ் ஆன  நாயகன்  ஒரு  ஐடியா  சொல்கிறார்.  இறந்து  விட்ட  அல்லது  கொலை  செய்யப்பட்ட   சகோதரியின்  உருவ  அமைப்பில்  நாயகி  இருப்பதால்  உடை  அலங்காரம்,  சிகை  அலங்காரம்  இரண்டையும்  சகோதரி  போல  மாற்றி  நாயகியும்  அந்த  தீவுக்கு  வர  வேண்டும். அப்போது  பல  உண்மைகள்  வெளி  வரும் 


இப்போது  நாயகன் , நாயகி  இருவரும்  தனித்தனியே  அந்த  தீவுக்கு  செல்கின்றனர் ,இதற்குப்பின்  இந்தக்கதையில்  நிகழும்  சுவராஸ்யமான  சம்பவங்கள்  தான்  திரைக்கதை 


டிடெக்டிவ்    ஆக , நாயகன்  ஆக முன்னாள்  ஜேம்ஸ்பாண்ட் நாயகன் டேனியல்  கிரெய்க்  பிரமாதப்படுத்தி  இருக்கிறார். அவரது  உடை  அலங்காரம், உடல்  மொழி  எல்லாமே  அசத்தல் தீவில்  நடக்கும்  இரண்டு  கொலைகளை  துப்பறியும்  விதமும்  அருமை 


பார்ட்டிக்கு  அழைக்கும்  கோடீஸ்வரர்  ஆக  எட்வர்டு அட்டகாசம்  பண்ணி  இருக்கிறார். அவருக்கு  வைக்கப்பட்ட  மதுக்கோப்பையை  வேறு  ஒருவர்  எடுத்துக்குடித்து  மரணம்  அடைந்ததும்  பதறி  இது  எனக்கு  வைக்கப்பட்ட  குறி, கொலையாளியைக்கண்டு  பிடிங்க  என  பதறும்போது  அவர்  உடல்  மொழி  அபாரம் 


இரட்டை  சகோதரிகளாக  மாறுபட்ட  இரு  வேடங்களில்  நாயகியாக ஜெனெல்லா  மோனே  அதகளமான  நடிப்பு . கொலை  செய்யப்பட்ட  என்  சகோதரி  உருவத்தில்  நான்  அந்த  தீவுக்கு  வந்தால்  என்  உயிருக்கு  ஆபத்து  ஏற்படாதா? என  நாயகனை  மடக்கும்  காட்சியும்  சரி , க்ளைமாக்சில்  வில்லனை  எதிர்க்கொள்ளும்  தில்லான  காட்சியிலும்  சரி ,  விலை  உயர்ந்த  பொருட்களைப்போட்டு  துவம்சம்  செய்யும்  கோபத்திலும்  சரி   அந்த  பாத்திரமாகவே  வாழ்ந்திருக்கிறார்


ஜிம்  பாடியில்  ஜைஜாண்டிக்காக வரும்  நபர்  கொலை  செய்யப்படும்போது  காட்டும்  துடிப்பு  பதை பதைக்க  வைக்கிறது


  ஒரு  தீவில்  கதை  நடப்பதால்    லொக்கேஷன்  , ஒளிப்பதிவு  இரண்டுமே  கண்களுக்கு  விருந்து ஸ்டீவ்  ராட்லின்  தன்  கேமரா  மூலம்  அடியன்ஸை  கட்டிப்போடுகிறார், குறிப்பாக  மோனலிசா  ஓவியத்துக்கு  அடிக்கும்  லைட்டிங்  கலக்கல்  ரகம் 


பாப்  டூக்காசியின்  எடிட்டிங்கில்  ரெண்டே  கால்  மணி  நேரம்  தமிழ்ப்படம்  போல  ஓடினாலும்  சலிப்பு  தட்டவில்லை , முதல்  20  நிமிடங்கள்  பாத்திரங்கள்  அறிமுகப்படலம்.  பிறகு  40  நிமிடங்கள்  சில  சம்பவங்கள். படம்  போட்டு  ஒரு  மணி  நேரத்தில்  ஒரு  கொலை  நடக்கும், அதற்குப்பின்  பர பரப்பான  திரைக்கதை 


எழுதி  இயக்கி  இருப்பவர்  ரியான்  ஜான்சன் . எந்த நேரத்தில்  எந்த  சஸ்பென்ஸை  ஓப்பன்  செய்ய  வேண்டும்  என்பதை  நன்கு  அறிந்திருக்கிறார் 


இந்த  க்ரைம்  த்ரில்லருக்கு  நாதன்    ஜான்சன்  பின்னணி  இசை  கூடுதல்  பலம் 


ரசித்த  வசனங்கள் 


  1  நான் எப்பவும்  உண்மையை  மட்டும்தான்  பேசுவேன், என்னை  மாதிரி  கட்ஸ் உள்ளவங்க  யாராவது  இங்கே  உண்டா?

  எல்லா  இடங்களிலும், எல்லாரிடமும்  உண்மையைப்பேசுவது  நல்லதல்ல 


அப்போ  நான  அபாயகரமானவள்னு  நினைக்கறீங்களா?


2 உங்களுக்கு  என்ன  ட்ரிங்க்ஸ் பிடிக்கும்னு  எனக்குத்தெரியாது, ஆனா  உங்களுக்கு  என்ன  பிடிக்கும்னு  உங்களுக்குத்தெரியும்தானே? நீங்க  செலக்ட்  பண்ணிக்கலாம் 


3   மோனோலிசா  ஓவியத்தை  ஒவ்வொரு  முறை  பார்க்கும்போதும்  ஒவ்வொரு  மாதிரி  இருக்கும், முகத்தில்  இருப்பது  கோபமா? வருத்தமா? சந்தோஷமா? கணிக்க  முடியாது 


4  ஒரு  பொய்யை   நிரூபிக்க  இன்னொரு  பொய்  பேசலாம், ஆனா  ஒரு  உண்மையை  நிரூபிக்க  உன்னால்  பொய்  பேச  முடியாது  , தேவையும்  இல்லை 

5   என்  மனசு  பூரா  ரேஸ்  கார்  ஓடிட்டு  இருக்கு, ஆனா  நான்  அதுல  ஏறி  எங்கேயும்  போக  முடியாது 


6  பெரும்பாலும்  மக்கள்  அவங்களையும்  அறியாம  சில  இடங்களில்  உண்மையைப்பேசிடுவாங்க 


சபாஷ்  டைரக்டர் 


1    ஆர்ட்  டைரக்சன்  அபாரம்  . க்ளைமாக்ஸ்  காட்சியில்  நாயகி  கண்னாடிப்பொருட்களை  உடைக்கும்  காட்சியில்  ஒளிப்பதிவாளர்  ,  ஆர்ட்  டைரக்டர்  இருவரின்  உழைப்பு,ம்   தெரிகிறது 


2  நாயகனை  விட  வில்லனின்  கேரக்டர்  டிசைன்  அபாரம், குறிப்பாக  க்ளைமாக்சில்  நாயகியை  அசால்ட்டாக  டீல்  செய்யும்  இடம் 


3  தீவில்  நடக்கும்  முதல்  கொலையில்  வில்லன்  எப்படி  சாமார்த்தியமாக  நம்மை  எல்லாம்  ஐ  வாஷ்  செய்தான்  என்பதை  ஹீரோ  விவரிக்கும்  இடம் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1    கொலை  செய்யப்பட்ட  தன்  சகோதரி  உருவில்  நாயகி  அந்த  பார்ட்டிக்கு  செல்வது  ஓக்கே ,ஆனால் அந்தக்கொலையை  செய்த  நபரும்  பார்ட்டியில்  பங்கேற்கிறார்  எனும்போது  அந்த  விபரம்  வில்லனுக்குத்தெரியாமல்  இருக்குமா? 


2  எம்  ஜி யார்  காலத்து  டெக்னிக்கான  ஆள்  மாறாட்டம்  சுமார்  தான்  என்பதும்   நாயகி  புல்லட்  பாய்ந்தும்   இறக்கவில்லை  என்பதும்   பின்னடைவு 


3  நாம்  அழைப்பிதழே  அனுப்பலை, ஆனா   அழைப்பிதழ்  வந்ததாக  பொய்  சொல்லும்  நாயகன்  ஒரு  டிடெக்டிவ்  எனத்தெரிந்தும்  ஏன்  அந்த  கோடீஸ்வரர்  அனுமதிக்கிறார்?  அதில்  அவருக்கு  லாபம்  என்ன?


சி பிஎஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  முதல்  பாகம்  அளவுக்கு  பிரமாதம்  இல்லை  என்றாலும்  இது  பார்க்கத்தகுந்த  ஒரு  த்ரில்லர்  மூவி  தான்  ரேட்டிங்  2.75 /.5 

Glass Onion: A Knives Out Mystery
Directed byRian Johnson
Written byRian Johnson
Produced by
StarringDaniel Craig
CinematographySteve Yedlin
Edited byBob Ducsay
Music byNathan Johnson
Production
company
Distributed byNetflix
Release dates
  • September 10, 2022 (Toronto)
  • November 23, 2022 (United States)
  • December 23, 2022 (Netflix)
CountryUnited States
LanguageEnglish
Budget$30–50 million

Tuesday, January 03, 2023

JAGAME MAYA-INSTANT KARMA (2022) - ஜெகமே மாயா-இன்ஸ்டண்ட் கர்மா-தெலுங்கு - திரை விமர்சனம் ( த்ரில்லர்) @ டிஸ்னி ஹாட் ஸ்டார் பிளஸ்


 நாயகன்  தன்  நண்பர்களுடன்  சேர்ந்து  பிஎல் மேட்ச்       பெட்  கட்டி   பலருக்கு  பணம்  தர வேண்டிய  சூழலில்   வீட்டை  விட்டு  வெளியேறி  வெளியூர்  போகிறான். ஏகப்பட்ட  பணத்தேவைகள்  இருப்பதால்  அவன்  மனிதர்களின்  பலவீனத்தைப்பயன்படுத்தி  அவர்களை பிளாக்மெயில்  பண்ணி  பணம்  பறிக்கிறான், பெண்கள்  விஷயத்திலும்  வீக  ஆக  இருக்கிறான்

 

இப்படிப்பட்ட  சூழ்நிலையில்தான்   நாயகியை  சந்திக்கிறான். நாயகி  சமீபத்தில்தான்  திருமணம்  ஆகி   ஒரு  கார்  விபத்தில்  தன்  கணவனைப்பறி  கொடுத்தவள் . கணவன்  இறந்ததற்கு  இன்சூரன்ஸ்  பணமாக  ரூகோடி  வர  இருக்கிறது . நாயகியின்  கணவன்  செல்வந்த  குடும்பம். இதனால்  நாயகன்  நாயகியைக்கவர்ந்து  திருமணம்  செய்து  கொண்டால்  வாழ்க்கையில்   செட்டில்  ஆகி  விடலாம்இன்சூரன்ஸ்    பணம்  தன்  கைக்கு  வரும்  என  திட்டம்  போடுகிறான்

 

நாயகன்  த்ன் திட்டப்படி  நாயகி , நாயகியின்  மாமனார் , மாமியார்  மூவரையும்  கவர்ந்து  நாயகியைத்திருமணம்  செய்து  கொள்கிறான். திருமணம்  ஆன  கொஞ்ச  நாளில்  நாயகனை  ஒரு  இன்சூரன்ஸ்  பாலிசியில்  கையெழுத்துப்போடச்சொல்லி  நாயகி  கேட்கிறாள்:. 

 

இப்போது  நாயகனுக்கு  சந்தேகம்  வருகிறது. நாமதான்  நாடகம்  போட்டு  நாயகியை  ஏமாற்றி  இருக்கிறோமா? அல்லது   நாயகி  வலையில்  மாட்டிக்கொண்டோமா?  என  சந்தேகிக்கிறான்

 

இதற்குப்பின்  கதையில்  நடந்த  திருப்பங்கள்  தான்   பின்  பாதி திரைக்கதை

முதல்  பாதி  திருட்டுப்பயலே  படத்தில்  நாம்  பார்த்த  அதே  மாதிரி  காட்சி  அமைப்புகள்  தான் , ஆனால்    இடைவேளைக்குப்பின்  அந்த  ட்விஸ்ட்  வந்த  பின்  கதையின்  போக்கே  மாறி  விடுகிறது , அடுத்து  என்ன  நடக்கும்  என  எதிர்பார்க்க  வைப்பதோடு  க்ளைமாக்ஸ் ல    2  மாறுபட்ட  ட்விஸ்ட்களும்  அடுத்த  பாகத்துக்கான  லீடும்  வருகிறது

 

நாயகியாக  தன்யா  பாலகிருஷ்ணன்  முதல்  பாதி  வரை  குடும்பப்பாங்கான  அப்பாவிப்பெண்ணாக  வருபவர்   இடைவேளைக்குப்பின்  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  ரோலில்  வில்லியாக  மாறி  கலக்குகிறார்.அவரது  உய்ரம்  அவரது  வில்லித்தனத்துக்கு  பிளஸ்

 

தேஜா  ஐனாம்புடி தான்  நாயகன்.  பிளே பாய்  ரோல். நான்  அவன் இல்லை  படத்தில்  ஜீவன்  ஏற்று  நடித்த  ரோலை  நினைவுபடுத்தினாலும்  தனிப்பட்ட  திறமையான  தன்  நடிப்பால்;  உயிர்  ஊட்டுகிறார்

 

 நாயகியின்  கணவனாக  சைதன்யா  ராவ்  அதிக  வேலை  இல்லை  என்றாலும்  வந்தவரை  ஓக்கே

 

நாயகி  பணி  புரியும்    கம்பெனியில்  பிராஜெக்ட்  மேனேஜராக  வில்லனாக  வரும்  பப்லு  எனும்  பிரித்விராஜ் ரோல்  ஏன்  திக்குவாயாக  காட்டப்படுகிற்து  என்பது  தெரியவில்லை. அவர்  திக்கித்திக்கிப்பேசுவது    எரிச்சல்  ஆக  இருக்கிறது

 

கார்த்திக்  அர்ஜூனின்  வசனங்கள்  நச்  ரகம்,  சுனில்  பப்பாலா  தான்  இயக்குனர் , பின்  பாதியில்  காட்டிய  விறு விறுப்பில்  பாதியாவது  முதல்  பாதியில்  காட்டி  இருக்கலாம், அட்டாலா  அஜய் சரனன்  திரைக்கதை

எழுதி  இருக்கிறார். இசை  அஜய்  பிஜிஎம்  மில்  தெறிக்க  விடுகிறார்


இரண்டு  மணி  நேரத்துக்கு  10  நிமிடம்  குறைவு, இந்தப்படம்  பார்க்கத்தகுந்த  சராசரி  த்ரில்லர்  மூவி  டிஸ்னி  ஹாட்  ஸ்டார்  பிளஸ்  சில்  காணக்கிடைக்கிறது 



ரசித்த  வசனங்கள்


1  என்ன  சார் ? பிரமோஷன்  வந்துச்சா?


 பிரமோஷன்  என்ன  கேர்ள்  ஃபிரண்டா?  நினைச்சதும்  கிடைக்க ? 


2  ஒரு  பிரச்சனைல  சிக்கின  பிறகு  அதுல  இருந்து  பாதிலயே   நழுவிடலாம்னு  நினைக்கக்கூடாது 


 சபாஷ்  டைரக்டர்


1   ஓப்பனிங்கில்  வரும்  ஐபிஎல்  மேட்ச்   ஃபிக்சிங் , நாயகனின்  பிளாக்  மெயில்  பின்  பாதியில்  வரும்  பிராஜெக்ட்    காப்பி  சீட்டிங்  என  எல்லா  தில்லு  முல்லு  வேலைகளிலும்  இயக்குநர்  சாமார்த்தியம்  தெரிகிறது


2   ஐ டி  கம்பெனியில்  நடக்கும்  மோசடிகள்  பற்றிய  பின்  பாதி  திரைக்கதையில்  செம  விறுவிறுப்பு 


3  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  அண்ட்  செகண்ட்  பார்ட்டுக்கான  லீட்  குட் 



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1   விபத்தில் இறந்த  நபருக்கு  இன்சூரன்ஸ்  பணம்  கிடைக்க  வேண்டும்  என்றால்  முதல்ல  டெட்  பாடியை  அவங்க  பார்த்திருக்கனும். விபத்து  என  உறுதி  செய்யனும் 


2   வில்லன்  நாயகியை  ஃபோனில்  மிரட்டுகிறான்  சரி .அந்த  மிரட்டல்  வாய்சை  மெமரி  கார்டில்  நாயகி  எதற்கு  பத்திரமாக  வைத்திருக்கிறாள் ?


3  நாயகனைக்கண்காணிக்க  பணிப்பெண்னை  நாயகி  நியமிப்பதற்குப்பதில்  சிசிடிவி  கே,மரா  பொருத்தினால்  போதுமே?


4  ஒரு  கட்டத்தில்  நாயகி  ஒரு  திட்டத்தின்  மூலம்  20  கோடி  ரூபாய்  வர  இருக்கிறது . அதில்  பாதியை  நாயகனுக்குத்தர  ரெடியாக  இருக்கிறாள் , ஆனால் நாயகன்  எனக்கு  50  லட்சம்  ரூபாய்  போதும்  என  இறங்கி  வருவது  எதற்கு ? அதிகமா  பங்கு  கேட்டா  நீ  என்னைப்போட்டுத்தள்ளீடுவே  என  சொல்வது  நம்பும்படி  இல்லை . ஒரு  பெண்ணின்    கணவன்கள் அடுததடுத்து  இறந்தால்  போலீசுக்கு  டவுட்  வராதா?


5  வில்லனான  பப்லு   கொலைகாரன்  - வில்லி  இருவரும்  ஃபோனில்  பேசியதை  ரெக்கார்டு  பண்ணி  அதை  வைத்து  வில்லியை  மிரட்டுகிறான், ஆனால்  அதே  தப்பை  அதாவது  வில்லியுடன்  ஒரு  கொலை  டீலிங்கை  ஃபோனில்  பேசி  வில்லனும்  எப்படி  மாட்டுகிறான் ?


 6 வில்லி  கொலையாளியுடன்  ஃபோனில்  பேசுவது  ஏன் ? போலீஸ்  வில்லியின்  ஃபோனை  ட்ராக்  பண்ணினால்  மாட்டிக்கொள்வாரே? 


7  இன்சூரன்ஸ்  ஆஃபீஸ்ல  நாயகிக்கு ஃபோன் பண்ணி  ஒரு  தகவல்  சொல்றாங்க. நைட்  டைம் ல /  பொதுவா  அவங்க  காலை  நேரத்தில்தான்  பேசுவாங்க . மாலை  6  மணியோட  ஆஃபிஸ்  க்ளோஸ்  ஆகிடும் 


8  வில்லனிடம்  20  கோடியைஒரு  பேக்கில்  போட்டு  அதை  குறிப்பிட்ட  இடத்தில்  ஒப்ப்டைக்க  பேச்சு  வார்த்தை  நடக்கிறது, இதற்கு  முன்  நடந்த  டீலிங்  எல்லாம்  நெஃப்ட்  தானே  பண்ணப்பட்டது? இது  மட்டும்  ஏன்  கேஷாக?


9  வில்லன் தான்  மேனேஜர், அவனுக்குக்கீழேதான்  வில்லி  வேலை  செய்வது, ஆனால்  ஃபாரீன்  கொரியன்  கம்பெனியிடம்  டீலிங்  பேசுவது  வில்லிதான், ஏன் டைரக்டாக  வில்லனே  அந்த  வேலையை  செய்யவில்லை? 20 கோடி  மிச்சம்தானே? 


10  ஐ டி  கம்பெனியில்  எம் டி  என  யாரும்  இருக்க  மாட்டார்களா? சி சி டி வி  கேமரா  இருக்காதா?  வில்லியும்  வில்லனும்  தொடர்ந்து  காப்பி  பண்ணி  விற்கும்போது  கண்டு  பிடிக்க  மாட்டார்களா? மீட்டிங்  மட்டும்  போட்டாப்போதுமா? போலீசில்  புகார்  கொடுக்க மாட்டார்களா? 



 சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  - லாஜிக்  மிஸ்டெக்ஸ்  நிறைய  இருந்தாலும், நம்ப  முடியாத  காட்சிகள்  சில  இருந்தாலும்  இது  பார்க்கத்தகுந்த  ஒரு  த்ரில்லர்  மூவிதான் 

Monday, January 02, 2023

கட்டா குஸ்தி (2022) தமிழ் - சினிமா விமர்சனம் ( காமெடி மெலோ டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்


தனக்கு  வரப்போற  மணப்பெண்  எப்படி  இருக்கனும்? என  எட்டு  கண்டிஷன்கள்   போட்ட 1982ல் ரிலீஸ்  ஆன  எஸ்  வி  சேகரின்  மணல்  கயிறு   படத்தையும் , அடங்காப்பிடாரி  மணைவியை  அடக்கும்  கணவனின்  கதையாக  வந்த  1997 ல்  ரிலீஸ்  ஆன  கார்த்திக்- நக்மா  நடித்த  பிஸ்தா  படத்தையும்  இணைத்து  1995ல்   ரிலீஸ்  ஆன  பாட்ஷா  படத்தின்  இடைவேளை  ட்விஸ்ட்டையும் பட்டி  டிங்கரிங்  பண்ணி  எடுக்கப்பட்ட  பிரமாதமான  காமெடி  மெலோ  டிராமா  தான்  இந்த  கட்டா  குஸ்தி 

ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகி  சின்ன  வயசுல  இருந்தே  குஸ்தியில்  ஆர்வம்  உள்ளவர் , அதனால்  அதில்  பயிற்சி எடுத்து  அதில்  வீராங்கனை  ஆகிறார். இதனால்  அவருக்குப்பேரும்  புகழும்  கிடைத்தாலும்  மாப்பிள்ளை  கிடைக்கவில்லை . எல்லாரும்  பயந்து  ஓடறாங்க 


நாயகன் ஊரில் வெட்டாஃபீஸ். சர்க்கு  அடிச்சுட்டு  வெட்டியா  ஊர்  சுற்றுபவர். அவர்  ஆணாதிக்க  சிந்தனை  மிகுந்தவர் , தனக்கு  வரப்போகும்  பெண்  நீண்ட  கூந்தலை  உடையவ்ராகவும்,  தன்னை  விட  குறைவான  படிப்பை  மட்டும் படித்திருக்கும்  அடக்க  ஒடுக்கமான  பெண்  வேண்டும்  என  தேடுபவர்


நாயகனின்  கண்டிஷன்களை  உணர்ந்து  நாயகியின்  சித்தப்பா   ஒரு  டிராமா  செட்டப்  செய்து  திருமணம்  நடத்தி  விடுகிறார்


கொஞ்ச  நாட்கள்  குடும்ப  வாழ்க்கை  நல்லாதான்  போய்க்கிட்டு  இருக்கு . ஆனா  அந்த  ஊர்ல  ஒரு   ஃபேக்டரி   ஓனருக்கும்  , நாயகனுக்கும்  ஒரு  தகறாரு  இருக்கு. நாயகனை  மிரட்ட  அடியாட்களோடு  வில்லன்  வர  நாயகி  பாட்ஷா  இடைவேளை  ட்ரான்ஸ்ஃபர்மேசன்  மாதிரி  ஆக்சன்  அவதாரம்  எடுத்து  அனைவரையும்  பிளந்து  கட்டுகிறாள் . நாயகியின்  சுயரூபம் தெரிந்த  பின்  ந்டக்கும்  காமெடி  கலாட்டாக்கள்  தான்  மீதி  திரைக்கதை


நாயகனாக  விஷ்ணு  விஷால்   அடக்கி  வாசித்து  இருக்கிறார். இது போன்ற  ரோலில்  ந்டிக்க  துணிச்சல்  வேண்டும் இப்படத்தின்  தயாரிப்பாளர் இவர்தான். இருந்தும்  நாயகிக்கு  முக்கியத்துவம்  தந்தது  சிறப்பு 


ஐஸ்வர்யா  லட்சுமிக்கு  இது  ஏறுமுகம் . பொன்னியின்  செல்வன்  பூங்குழலி ,அம்மு    தெலுங்கு ,   குமாரி  மலையாளம் என  அடுத்தடுத்து  சிக்சர்களாக  விளாசித்தள்ளியவர்  இதிலும்  கலக்கி  இருக்கிறார்


 சவுரி  அணிந்து  கணவனை  ஏமாற்றும் காமெடி  காட்சிகளில்  சிரிக்க  வைப்பவர்   இடைவேளை  ஃபைட்  காட்சியில்  அதகளம்  பண்ணி  இருக்கிறார் 


தமிழ்  சினிமா  வில்  நாயகிக்கான  மாஸ்  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  வைத்த  முதல்  படம்  என  இதை  பதிவு  செய்யலாம் 


கருணாஸ்  காமெடியிலும்  குணச்சித்திரத்திலும்  முத்திரை  பதிக்கிறார்


நண்பனாக  காளி  வெங்கட், சித்தப்பாவாக முனீஷ்  காந்த்  தங்கள்  பங்களிப்பை  கச்சிதமாக  வழங்கி  உள்ளனர் .


ரெடின்  கிங்க்ஸ்லீயின்  ஒன்  லைன்  காமெடிகள்  கலக்கல்  ரகம் 


ரிச்சர்ட்   எம் நாதனின்  ஒளிப்பதிவு  திரைக்கதைக்கு என்ன  தேவையோ  அதை  செய்துள்ளது , ஜஸ்டின்  பிரபாகரன்  இசையில்  2  பாடல்கள்  நன்கு  ஹிட்  ஆகி  உள்ளது ., பிஜிஎம்  கச்சிதம் 

ஜி  கே  பிரசன்னா  வின் எடிட்டிங்கில்  ரெண்டரை மணி  நேரத்துக்கு  படத்தை  கச்சிதமாக  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்கள் 


 திரைக்கதை  எழுதி இயக்கி இருப்பவர்  செல்லா  அய்யாவு . கலகலப்பான  பெண்கள்  ரசிக்கும்  விதத்தில்  குடும்பப்பாங்கான  படம் தருவதில்  வெற்றி  பெற்றிருக்கிறார் 


ரசித்த  வசனங்கள்


1   குஸ்தி  கட்ற பொண்ணு  குடும்பத்துக்கு  ஆகாது , அவ  உன்னைத்தூக்கிப்போட்டு  மிதிச்சா  உன்  உயிரே போய்டும்,  உன்னை  அடிக்கறது  ;போக  என்  மேலயும்  கை  வைப்பா 


2   உலகமே  உன்னை  தோத்துட்டே தோத்துட்டே   அப்டினு  சொன்னாலும் நீயா  ஒத்துக்கற  வரை  நீ  தோற்க  மாட்டேனு  சொல்வாங்க,  ஆனா நான்  கடைசி  வரை  தோத்துட்டுதான்  இருந்தேன்


3   தன்னை  விட  பொண்ணு  கம்மியா  படிச்சிருக்கனும்னு  மாப்ளை  ஆசைப்படறாரு, அதுல  என்ன  தப்பு ?

 இவனே  எட்டாவது  ஃபெயில், இதுல இவனை  விடக்கம்மியான்னா  எப்படி ?இது  போக  கொரானா  டைம்ல +2  வரை ஆல்  பாஸ்  போட்டுட்டாங்களே?

4  படிச்சவ  நம்மை  1008  கேள்வி  கேட்பா , படிக்காதவ  நாம  கேட்கும்  கேள்விக்கு  மட்டும்  பதில்  சொல்வா, நம்மைக்கேள்வி கேட்க  மாட்டா


5  பொண்ணுக்கு  முடிதான்  முக்கிய,ம், கூந்தலே  இல்லைன்னா  அவ  பையன் 


6    டூ  கே  கிட்ஸ்  பொண்ணு  கிடைச்சாப்போதும்  கட்டிக்கறாங்க, ஆனா நைண்ட்டீஸ்  கிட்ஸ்  1008 கண்டிஷன்  போட்டு  பொண்ணே  கிடைக்காம  சுத்திட்டு  இருக்காங்க 


7   ஏழாம்  கிளாஸ்  வரை  இவன்  என்  கூட  ஒண்னா  படிச்சான் 


  நீ  படிச்சதே  ஏழாம்  கிளாஸ்  வரை  தானே?


8  இந்தியாவிலேயே  கேரளப்பெண்களுக்குதான்  கூந்தல்  நீளம்  அதிகம். அடிக்கடி  முடி  வெட்டனும், இல்லைன்னா  கூந்தல் காலை  தடுக்கி  விடும்  அளவுக்கு  வளர்ந்துடும்


9 தமிழ்நாட்டுப்பசங்க  மாதிரி  அப்பாவிப்பசங்க  எங்கேயும்  கிடைக்க  மாட்டாங்க 


10  புருசன்  சாப்ட்ட  பின் தான்  பொண்டாட்டி  சாப்பிடனும்னா காலம் பூரா  நாம  பட்டினியா  இருக்கனும். அவனுங்க  எங்காவது  மேய்ஞ்சுட்டு  வருவானுங்க 


11  உங்களுக்கு  ஏண்ணே  பொண்டாட்டின்னா  பிடிக்க  மாட்டேங்குது ?


 யார்டா  சொன்னது? பிடிக்காதுன்னு? எல்லா  ஆம்பளைங்களுக்கும் பொண்டாட்டின்னா  பிடிக்கும், ஆனா  அது  அடுத்தவன்  பொண்டாட்டியா  இருக்கனும் 


12  நிறையப்பேரு  காரணமே  இல்லாம  பொண்டாட்டியை  அடிப்பாங்க,   ஆனா  நான்  அப்படி  இல்லை .  தகுந்த  காரணம்  இருந்தாதான்  அடிப்பேன்  


13  என்னய்யா  ;பொண்டாட்டியை  விட்டு  அடிக்க  வைக்கறே?


 நான்  எங்கேய்யா  அடிக்க  வைக்கறேன், அவளாத்தான்  அடிக்கறா


14  ஊருக்குள்ளே  பல  பேரு  அவங்க  அடியாளுங்க்ளோட  பொண்டாட்டியைத்தான்  வெச்சிருப்பாங்க, நீ பொண்டாட்டியையே  அடியாளா  வெச்சிருக்கே?


15  டேய்  அன்னைக்கு என்னைப்பார்த்து  என்னடா  கமெண்ட்  அடிச்சே?


 நாட்டுக்கட்டையாட்டம்  இருக்கேன்னேன்


 இப்போ  இந்த அடி  எப்படி  இருக்கு ?


 உருட்டுக்கட்டையாட்டம்  இருக்கு 


16  எல்லாபொண்டாட்டிகளும்  அடிக்கத்தான்  செய்வாங்க ,அது  வீட்டு  அடி  ஆனா  உன்  பொண்டாட்டி யோட அடி  காட்டு அடி


17  மாஸ்டர், எப்படியாவது  நான்  15  நாட்களில்  குஸ்தி  கத்துக்கனும்


 பதினைஞ்சு  நாட்களில்  கத்துக்க  கட்டா  குஸ்தி  என்ன  பருப்பு  சாம்பாரா? 


18  ஆனா  ஒண்ணுடா , பொண்டாட்டியை  அடிக்க  இவ்வளவு  வெறித்தனமா  பிராக்டீஸ்  பண்றது  உலகத்துலயே நீ  ஒருத்தன்  தான்


17  மாப்ளை  போட்டில  நீதான்  ஜெயிப்பே


 எப்படி சொல்றே?  


 சார்பேட்டா  பரம்பரை ,பார்த்தியா? அதுல  ரங்கன்  வாத்தியார்ட்ட  ட்ரெய்னிங்  எடுத்த  எவனும்  ஜெயிக்கலை, கடைசில  வேடிக்கை  பார்த்த  கபிலன்  தான்  ஜெயிச்சான் , இறுதிச்சுற்று  படத்துல  சின்ன  வயசுல  இருந்தே  ட்ரெய்னிங்  எடுத்த  அக்காவை  விட  டி வி  ல  மேட்சை  வேடிக்கை  பார்த்த  தங்கச்சிதான்  மேட்சை  ஜெயிச்சா  அவ்வளவு ஏன்? பத்ரி  படத்துல   பாக்சிங்  கத்துக்கிட்ட  அண்ணனை  விட   வேடிக்கை  பார்த்துட்டு  இருந்த  விஜய் தான்  கப்  அடிச்சாரு 


அதுக்கு ?


 இதுல  இருந்து  என்ன  தெரியுது ? மேட்ச்  ல  ஜெயிக்க  நல்லா  வேடிக்கை  பார்த்தா  போதும், நீதான்  நல்லா  வேடிக்கை  பார்க்கறியே?


18   நீ  மேட்ச்  ல  ஜெயிச்சா  அந்த   வெற்றியை  யாருக்கு  டெடிகேட்  பண்ணுவே?


 உங்களுக்குத்தான்  மாஸ்டர்


 நோ நோ  உன்  ஒயிஃப்க்குதான்  டெடிகேட்  பண்ணனும்



ஏண்டா , ஜெயிக்கறவங்க  தானே  டெடிகேட்  பண்ணனும் ? நீ  எதுக்கு ? 


19   மாஸ்டர், உங்களுக்கும்  உங்க  மனைவிக்கும்  சண்டையே  வந்ததில்லையா?


 நீ  எனக்குத்தேவை  இல்லை, நான்  உனக்குத்தேவையில்லை   அப்டினு  இருக்கும்போது  சண்டையே  வராது  நான்  உனக்கு  எவ்ளோ  முக்கியம்? நீ  எனக்கு  எவ்ளோ  முக்கியம்? கற  உறவுல மட்டும்தான்  சண்டையே  வரும் 


20  எப்போ  நீ  பொண்டாட்டி கழுத்துல  தாலி  கட்டிட்டியோ அப்பவே  அவ  குடும்பம்கற  சமஸ்தானத்துக்கு  முடி  சூட்டப்பட்ட  ராணி ,  அவ  எடுக்கறதுதான்  முடிவு, அதை  செயல்படுத்துவது  மட்டும்தான்  புருசனோட  வேலை 


21   எப்போ  நீ  உன்  பொண்டாட்டியோட மோதனும்னு  முடிவு  பண்ணுனியோ அப்பவே  தோத்துட்டே


22  வாழ்க்கை  முழுவதும்  ஒரு  ஆணுக்கு  பெண்ணின்  தேவை  இருக்கு , மேரேஜ்  ஆகும்  வரை  அம்மா , ஆன  பின் மனைவி


23  எத்தனையோ  பொண்ணுங்க  தனியா  இருந்து  குழந்தைகளை  வளர்த்து ஆளாக்கி  இருக்காங்க, ஆனால்  ஆணால்  அது  முடியாது 


24  எந்த  ஒரு செயலையும்  48  நாட்கள்  தொடர்ந்து  செய்தா  அது  நமக்கு  பழகிப்போய்டும்னு  சொல்வாங்க ,15  வருசமா  நான்  குஸ்தியைப்பத்தியே  நினைச்சுட்டு  இருக்கேன், எப்படி  மறக்க  முடியும் ?  


25  வாழ்க்கைல  சாதிக்கனும்னு  நினைக்கறவங்க  குடும்பத்தைப்பத்தி  யோசிக்கக்கூடாது 


26  மற்ற  நாடுகளில் எல்லாம்  எதிராளி  கூட  மோதி  ஜெயிக்கனும், ஆனா  இந்தியாவில்  மட்டும்  பெண்கள்  தங்கள்  குடும்பத்தோட  மோதி  முதல்ல  ஜெயிக்கனும்


27  "சித்தப்பா, நான் டிகிரி, ஏழாவது படிச்சிருக்கேன்னு சொல்றீங்களே?"

"நான் பொய் சொல்லல்ல, நீ ஏழாவதும் படிச்சிருக்கே"


சபாஷ்  டைரக்டர்


1   சாம்பிராணி  காட்டலைன்னா  கூந்தல்  முடி  உதிரும்னு  நாயகன்  நாயகியின்  சவுரி  முடிக்கு  புகை  போடும்  காட்சி  செம  காமெடி 


2  தலைக்குக்குளிக்கலையா? என கணவன்  கேட்க  நாயகி  பாத்ரூம்  போய்  சவுரியை  அடிச்சுத்துவைசு  அலசி  எடுத்து  பின்  தன்  சவுரியை  மாட்டிக்கொள்வது  வெடிச்சிரிப்பு 


3  இடைவேளை  டைமில்  வரும்  மாஸ்  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  சீன் 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1  நாயகி  ஈவ்  டிசிங்  ஆட்களை  அடித்து  நொறுக்கும்  வீடியோ  கேரளா  முழுவதும்  வைரல்  ஆனதால்  இனி  இந்த  ஸ்டேட்ல  மாப்ளை  கிடைக்காது , தமிழகத்தில்தான்  கிடைக்கும்னு  ஒரு  டயலாக்  வருது /. வாட்சப் ல  வைரல்  ஆவது  என்பது  கேரளாவுக்கு  தனி  தமிழக்த்துக்கு  தனியா? உலகம்  பூரா  பரவுதே? பல கேரள  வீடியோக்கள்  தமிழகத்தில்  பரவவில்லையா?


2   நாயகி  ஒரு  குஸ்தி  வீராங்கனை  என்பதை  மறைத்து  திருமணம்  செய்பவர்  புகுந்த  வீட்டுக்கு  குஸ்தியில்  ஜெயித்த  கப் , மெடல்கள்  எல்லாம்  எதற்கு  கொண்டு  போகிறார்? பார்த்தா  கேட்க  மாட்டாங்களா?


3  தான்  கர்ப்பமாக  இருப்பது  நாயகிக்கே  தெரியாது  என்பது  எப்படி ?  எந்த  டாக்டருக்கும்  தெரியாத  உடல்  ரகசியம்  அந்த  உடல்  ஓனருக்குத்தான்  முதலில்  தெரியும்


4   க்ளைமாக்ஸ்  ல  நாயகன்  குழந்தை  மேல  சத்தியம்  என  இடது  கைல சத்தியம்  பண்றாரு. வலது  கைல  தானே  பண்ணனும்?


5  வெறும்  15  நாட்கள் பயிற்சி  பெற்ற  நாயகன்  15  வருடங்கள்  பயிற்சி  பெற்று  ஃபார்மில்  இருக்கும்  நாயகியுடன்  மோதத்துணிவதும்  , 20  வருட்ங்கள்  கோச்  ஆக  இருக்கும்  வில்லனுடன்  மோதுவ்தும்  சினிமாத்தனம் 



சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கலகலப்பான  குடும்பப்பாங்கான  பொழுதுப்போக்குச்சித்திரம். நீண்ட  இடைவெளிக்குப்பின்.. 2022ம்  ஆண்டின் மாபெரும்  கமெர்ஷியல் சக்சஸ்  ஃபிலிம் . ரேட்டிங்  3.25 / 5 

Gatta Kusthi
Gatta Kusthi poster.jpg
Theatrical release poster
Directed byChella Ayyavu
Written byChella Ayyavu
Produced byRavi Teja
Vishnu Vishal
Shubhra
Aryan Ramesh
StarringVishnu Vishal
Aishwarya Lekshmi
CinematographyRichard M. Nathan
Edited byPrasanna GK
Music byJustin Prabhakaran
Production
companies
Distributed byRed Giant Movies
Release date
2 December 2022
CountryIndia
LanguageTamil
Box office30 crore[1][2]