Tuesday, November 22, 2022

கவுரவம் (1973) - சினிமா விமர்சனம் ( கோர்ட் ரூம் டிராமா)

 


சூப்பர் ஸ்டார்   ரஜினி  சிவாஜியா  நடிச்ச  ஷங்கர்  படத்தை  ரிலீஸ்  அன்னைக்கே  பார்த்தாச்சு, ஆனா  சிவாஜி கணேசன்  ரஜினிகாந்த்தா  நடிச்ச  கவுரவம்  படத்தை  இத்தனை  நாட்களா  ஏன்  பார்க்கலைனு  தெரியல . இது லீகல்  டிராமா  அல்லது  கோர்ட்  ரூம்  டிராமா  கதைனு   முதல்ல  தெரியாது .  தெரிஞ்சிருந்தா  அப்பவே  பார்த்திருப்பேன், மிஸ்  ஆகிடுச்சு 

ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லனோட  மனைவி  ஒரு  மன நோயாளி .ஹிஸ்டீரியா  பேஷண்ட் அவளைக்கொலை  செஞ்ச  வழக்கில்  மாட்டின  வில்லன்  வக்கீல்  கிட்டே  சொன்ன  சம்பவம்... ஒரு  மழை  நாளில்  வில்லன்  தன்  மனைவி  கிட்டே  உனக்கும்  எனக்கும்  இனி  ஒத்து  வராது . இந்த  விடுதலைப்பத்திரத்தில்  கையெழுத்துப்போட்டுடு. நாம்  இருவரும்  பிரிந்து  விடலாம்  என  சொல்லும்போது  மனைவி  அதற்கு  ஒத்துக்கலை. இருவருக்குமான  வாக்குவாதம் , தள்ளுமுல்லுல  மனைவி  மாடில  இருந்து  கீழே  விழுந்து  இறந்துடறா,இந்த  சம்பவத்தை  நேரில்  பார்த்த  சாட்சி  இருந்தும்  வக்கீல்  தன்  வாதத்திறமையால்  வில்லனை  ரிலீஸ்  ஆக  வெச்சுடறார்



வில்லனுக்கு  இன்னொரு  மேரேஜ்  நடக்க  இருக்கு , ஒரு  பெண்ணை  மேரேஜ்ஜூக்கு ரெடி  பண்றார். . ஒரு  இன்சூரன்ஸ்  ஏஜெண்ட்  வீட்டுக்கு  வந்து  வில்லனின்  வருங்கால  மனைவிக்கு  இன்சூரன்ஸ்  பாலிசி  பத்திரத்தில்  சைன்  வாங்கிக்கறான்.  சில நாட்கள்  கழித்து வில்லன் உடைய  வருங்கால   மனைவி   பாத் டப் ல  குளிக்கும்போது   மர்மமான  முறையில்  இறந்துடறா. இந்த  கேஸ்ல  மீண்டும்  வில்லன்  மாட்டிக்கறான்.  முதல்  கேஸ்ல  காப்பாற்றுன  அதே  வக்கீல்  இந்த  கேஸ்க்கும்  ஆஜர்  ஆக  இருக்கிறார்


 இப்போ  நாயகன்  அறிமுகம்.   வில்லனைக்காப்பாற்றும்  வக்கீல்  உடைய  தம்பி  மகன்  தான்   நாயகன். . மகன்னா  நேரடி  வாரிசு  இல்லை ., பெரியப்பானுதான்  கூப்பிடறான். ஆனாலும்  இருவருக்கும்  அப்படி  ஒரு  பாண்டிங் .  பெரியப்பா  சொல்  தட்டாத  மகன் 


நாயகனோட பெரியப்பா  ஈகோ  பிடிச்சவர் , தோல்வியைத்தாங்க  முஜ்டியாதவர். நாயகனும், பெரியப்பாவும்  செஸ்  விளையாடும்போது  தோல்வி  ஏற்படும்  நிலை  வந்தாக்கூட  அதைத்தாங்கிக்க  முடியாதவர் 


 ஒரு  கட்டத்தில்  அப்பா , மகனுக்கு  வாக்குவாதம்  வந்து  வீட்டை  விட்டு  வெளீல  போனு  சொல்லிட்றார் . காரணம்  ஒரே  கேசில்  எதிர்  எதிர்  துருவங்களாக  இருவரும்  வாதாட  முடிவு  எடுத்ததே 


இதற்குப்பின்  அந்த  கேசில்  யார்  ஜெயித்தார்கள்  என்பதே  க்ளைமாக்ஸ்


வில்லனாக  மேஜர்  சுந்தர்ராஜன். பசுத்தோல்  போர்த்திய  புலியாக  பிரமாதமான  நடிப்பு , ஆனா  அவர்  பிராண்ட் டயலாக்  ஆன  இங்க்லீஷ்ல   ஒரு  முறை  தமிழில்  ஒரு  முறை  ஒரே  டயலாக்கை  ரிப்பீட்  பண்ற  சீன்  இல்லாதது  ஒரு  ஏமாற்றமே


நாயகனாக , நாயகனின்  பெரியப்பாவாக  இரு  வேடங்களில்  சிவாஜி  கணேசன். பாரிஸ்டர்  ரஜினிகாந்த்தாக  இவர்  பண்ணும்  அலப்பறைகள்  பிரமாதம் . ஆனா  பிளட்  பிரஷர்  வந்த  மாதிரி  அவர்  ஓவர்  ஆக்ட்  பண்றாரோனு  தோணுது .  நாயகனாக  வரும்   சிவாஜி  அமைதியே  உருவாக  வருகிறார்


நாயகியாக  உஷா  நந்தினி  , அதிக  வாய்ப்பில்லை , ஒரே  ஒரு  டூயட்தான்  மிச்சம் 


 பெரியம்மாவாக  பண்டாரி  பாய் . அந்தக்காலத்துல  அம்மா  ரோலுக்கு   இவர்தான்  நேர்ந்து  விடப்பட்ட நைவேத்தியம் 


இந்தப்படம்  மெகா  ஹிட்டாம்.   மெயின்  கதையான  அந்த  கொலை  வழக்கு பற்றிய  பேச்சு  மக்கள்  மத்தியில்  இல்லை ,  சைடு  கதையான  பாரிஸ்டர்  ரஜினிகாந்த்தின்  வறட்டு  கவுரவம் , அப்பா  மகன்  ஈகோ  மோதல்  சம்பவம்தான்  டாக்  ஆஃப்  த  டவுனா  இருந்ததாம்  


 நாகேஷ்  , வி கே  ராமசாமி  , செந்தாமரை   எல்லாரும்  உண்டு .  சும்மா  சில  காடசிகள்  தான் 


எம் எஸ்  விஸ்வநாதன்  இசையில்   5  பாடல்கள்  அவற்றில்  2  பாடல்கள்  மெகா  ஹிட் 


1    யமுனா  நதி  இங்கே 

2  அதிசய  உலகம் 


3   பாலூட்டி  வளர்த்த  கிளி  பழம்  கொடுத்துப்பார்த்த  கிளி 


4  மெழுகுவர்த்தி  எரிகின்றது 


5   நீயும்  நானுமா?கண்ணா  நீயும்  நானுமா


சபாஷ்  டைரக்டர்



1   பாரிஸ்டர்  ரஜினிகாந்த்  கேரக்டர்  டிசைன்  எழுதப்பட்ட  விதமும்  அதற்கு  உயிர்  ஊட்டிய  சிவாஜியின்  நடிப்பும் 


2   கோர்ட்  ரூம்  காட்சிகளில்  வசனம் 


  ரசித்த  வசனங்கள் 


1    நாய்  கடிச்சு  சாவதை  விட  யானை  மிதிச்சு  சாவது  உயர்ந்தது 


2   வாழ்க்கைங்கறது  பால்  மாதிரின்னா  காதல்  என்பது  சர்க்கரை  போல 


3   டாக்டர்  கிட்டேயும்  வக்கீல்  கிட்டேயும்  பொய்  சொல்லக்கூடாது 


 அதாவது  நாம  அவங்க  கிட்டே  பொஉ  சொல்லக்கூடாது , ஆனா  அவங்க  பொய்  சொல்லலாம் 


4   விளையாட்டிக்குக்கூட  ஒரு  விளையாட்டில்  கூட  என்னால  தோல்வியைத்தாங்கிக்க  முடியாது , அதே  சமயம்  விட்டுக்கொடுக்கப்பட்ட  வெற்றியையும்  ஏற்றுக்கொள்ள  முடியாது 


5  அடுத்தவங்க  வாழ்க்கைல  அக்கறை  எடுத்துக்கொள்ளும்  ஒரே  ஜீவன்  இன்சூரன்ஸ்  ஏஜெண்ட்  தான் 


6  ஒருவரின் பலத்தோட  போட்டி  போட்டு  ஜெயிக்க  முடியலைன்னா  அவரின்   பலவீனத்தோட  போட்டி  போட்டு  ஜெயிக்க  வேண்டியதுதான் 


7  அப்பா  , உங்களை  எதிர்த்து   வாதாடி  நான்  ஜெயிச்சாலும்  அது  உங்களுக்குப்பெரும்னைதானே?


 என்னை  எதிர்த்து  நீ  ஜெயிச்சாலும், தோற்றாலும்  அது  எனக்கு  அவமானம்  தான் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஃபிளாஸ்பேக்  சீனில்  இன்சூரன்ஸ்  ஏஜெண்ட்தான்  பாலிசி  போடச்சொல்லி  வற்புறுத்தறான்  , ஆனா  க்ளைமாக்ஸ்ல  கோர்ட்ல  ஜட்ஜ்  கிட்டே  அந்த  ஏஜண்ட்  வில்லன்  தான்  வற்புறுத்தி  பாலிசி  போட  வெச்சார்னு  பொய்  சொல்றான் 


2  ஓப்பனிங்  சீன்  கேஸ்ல  ஜட்ஜோட  நடிப்பு  ரொம்ப  ஓவர்  ஆக்டிங்கா  இருந்தது, சிவாஜி  ரசிகரா  இருக்கும்  போல 


3    ஓப்பனிங்  சீன்ல   கேஸ்ல  குற்றவாளிக்கூண்டில்  நிற்கும்போது  வில்லன்  சர்ட்  பட்டன்கள்  முதல்  இரண்டைக்  கழட்டிட்டு  அசால்ட்டா  நிற்கறார் கேஸ்  முடிந்து  கோர்ட்  வளாகம்  தாண்டி   கூட்டிச்செல்லப்படும்போது  பட்டன்கள்  போடப்பட்டு   இருக்கு 


4  பாரிஸ்டர்  சிவாஜி  நைட்  தூங்கி  எழும்  ஒரு  காட்சியில்  ஃபுல்  ஸ்லீவ்  சர்ட்  போட்டு  அயர்ன்  பண்ணின  மடிப்புக்கலையாம  இருக்கார் ,  தூங்கும்போது நைட்  டிரஸ் ல  ஃப்ரீயா  அல்லது  பனியனோட  இருப்பாங்களா?   இப்படி  ஆஃபீஸ்  போற  மாதிரி  பக்காவா  டிரஸ்  பண்ணிட்டு  இருப்பாங்களா?


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் .  ரெண்டரை  மணி  நேரப்படத்துல  போர்  அடிக்காம  போகுது ,  பாடல்கள்  ஹிட்  என்பதாலும்  கோர்ட்  ரூம்  வாதத்துக்காகவும்  பார்க்கலாம்  ., ரேட்டிங் 2.75 / 5 


Gauravam
Gauravam 1973 poster.jpg
Theatrical release poster
Directed byVietnam Veedu Sundaram
Written byVietnam Veedu Sundaram
Based onKannan Vanthaan
by Vietnam Veedu Sundaram
Produced byS. Rangarajan
StarringSivaji Ganesan
Ushanandini
Pandari Bai
CinematographyA. Vincent
Edited byR. Devarajan
Music byM. S. Viswanathan
Production
company
Vietnam Movies
Release date
  • 25 October 1973
Running time
136 minutes
CountryIndia
LanguageTamil

Sunday, November 20, 2022

Ajeeb Daastaans (2021) (ஹிந்தி ) - வேடிக்கைக்கதைகள் - சினிமா விமர்சனம் ( ஆந்தாலஜி த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்


  இதுல  நான்கு   சிறுகதைகள்  குறும்படங்களா  சித்தரிக்கப்பட்டிருக்கு. நான்கு  படங்களையும்  இணைக்கும் புள்ளி  எதுவும்  இல்லை, அதனால  உங்களுக்குப்பிடிச்ச  கதையை  நீங்க  பார்த்துக்கலாம், வழக்கமா  படத்தில்  வரும்  வரிசைப்படிதான்  விமர்சிப்பேன், இதுல  தர  வரிசைப்படி விமர்சிக்கிறேன்.சிறந்த  நடிகைக்கான  ஆசியன்  அகாடமி  விருதை     வென்ற  மூன்றாவது  கதை , டெல்லி  க்ரைம்  புகழ்  ஷெஃபாலி  ஷா  நடிச்ச  நான்காவது கதை ,  க்ரைம்  த்ரில்லர் கதையான   இரண்டாவது  கதை ,  இ எம்  ஏ  ஸ்பெஷல்  ( கள்ளக்காதல் த்ரில்லர்)  ஆகிய  முதல்  கதை   என 3.4.2.1  என  வரிசைப்படுத்தி  சொல்றேன்

ஸ்பாய்லர்  அலெர்ட்


3  GEELI  PUCCHI  ( வெட்டுக்கிளி) - நாயகி    டிகிரி  முடிச்சவ, கம்ப்யூட்டர்  நாலெட்ஜூம்  இருக்கு , அவளுக்கு  டேட்டா  எண்ட்ரி  ஆபரேட்டர்  ஆகனும்னு  ஆசை , ஆனா  சூப்பர்வைசரா  ஒரு  கம்பெனில  ஒர்க் பண்ண்ணிட்டு  இருக்கா.    பாஸ்  கிட்டே  முறையிட்டும்  பயன்  இல்லை


 அப்போ  அந்த  கம்பெனிக்கு  டேட்டா  எண்ட்ரி  ஆபரேட்டரா  ஒரு  புது  பொண்ணு  வர்றா.  அந்த  கம்ப்பெனில  எல்லாருமே  ஆண்கள் , இவங்க  ரெண்டு  பேரு  மட்டும்  தான்  பெண்கள் , வேற  வழியே  இல்லாம  இருவரும்  தோழிகள்  ஆகிடறாங்க 


நாயகி  ஒரு  தலித். புதுசா  வந்த  பொண்ணு  உயர்  குலத்தைச்சார்ந்தவள். நாயகியின்  சக  பணியாள்  ஒருவர்  ஜாதியின் காரணமாத்தான்  உனக்கு  அந்த  வேலை  கிடைக்கலை , புதுசா  வந்த  பெண்ணுக்கு  உன்  அளவுக்கு  திறமை  இல்லை, ஆனாலும்  பதவி  கிடைச்சிருக்கு  என்கிறார்


 நாயகி  இப்போ  எப்படி  திட்டம்  போட்டு  புதுப்பொண்ணைக்காலி  பண்றா  (  கொலை  அல்ல )  என்பதுதான்  கதை 


 நாயகியா  நடிச்ச  கொன்கொனா சென்  சர்மா  கிட்டத்தட்ட  வில்லி  ரோல்  தான். பிரமாதமான  நடிப்பு . விருது  பெற்றிருக்கார்  இதற்காக புதுப்பெண்ணாக  அதிதி   ராவ்.  அப்பாவித்தனமான  முகம், சில  இடங்களில்  ஓவர்  அப்பாவித்தனம்  செயற்கை  தட்டுகிறது 



லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1  எங்க  வீட்ல  11  பேர்  இருக்கோம். தம்பதி  சந்தோஷமா  இருக்கக்கூட  ஒரு  தனி  ரூம்  இல்லை  என  சொல்வதெல்லாம்  பயங்கர  டுபாக்கூரா  இருக்கு . வசனமா  இப்படி  வெச்சுட்டு  காட்சியா  வரும்போது பங்களா  டைப்  வீட்டைக்காட்றாங்க


2   அவ்ளோ  பெரிய  கம்பெனில  லேடீஸ்க்கு  தனி  டாய்லட்  இல்லைனு  சொல்றாங்க . லேபர்ஸ்  லா  பற்றி  தெரியல  போல ., லைசென்சே  கிடைக்காது 


3  ஒரு  டிகிரி  படிச்ச  பொண்ணுக்கு  கூடல்  எந்த  சமயம்  நிகழ்ந்தா  பேபி  ஃபார்ம்  ஆகும் வாய்ப்பு  அதிகம்  இருக்கு  என்ற  விபரம்  கூடத்தெரியாதா? நாயகி  சொல்லித்தர்ற  மாதிரி  கட்றாங்க 



4  AN KAHI ( சொல்லாதவை) - நாயகிக்கு காது  கேட்காத  ஒரு   பெண்  குழந்தை. கணவன்  சரியா  அன்பு  செலுத்துவதில்லை . குழந்தை  கூடவும்  பாசமா  இல்லை. அம்மா  , நல்லா  இருக்கும்  உங்களையே  ஒருவரால்  லவ்  பண்ண  முடியலையே ?    குறை  இருக்கும்  என்னை  யார்  லவ்  பண்ணுவா? என  அந்த  சிறுமி  கேட்குது


அந்தக்கேள்வி  நாயகியின்  மனசில்  நல்லா பதிஞ்சிடுது. கணவனிடம்  தனிமையில்  இருக்கும்போது  சொல்றா. அட்லீஸ்ட்  குழ்ந்தை  கிட்டேயாவது  அன்பா  இருங்க  , அவ  கிட்டே  ஏதாவது  டெய்லி  பேசுங்க  அப்டிங்கறா. அவன்  அப்போதைக்கு  தலையை  மட்டும்  ஆட்றான்


வாய்  பேச  முடியாத  ஒரு  ஓவியன்  கூட  நாயகிக்கு  பழக்கம்  ஆகுது  மகள்  கூட  சைகை  பாஷையில்  பேசி  பழக்கம்  உள்ளதால்  நாயகியால்  சுலபமாக  அவனுடன்  பேச  முடியுது. அவனுக்கு  ஆச்சரியம், இருவர்  மனதும்  முதலில்  இணைகிறது. ஒரு  சுபயோக  சுப  தினத்தில்  உடலும்  இணைகிறது


 நாயகி வீட்டுக்கே  ஒரு நாள்  ஃபாலோ  பண்ணிட்டு  காதலன்  வந்துடறான். இதற்குப்பின்  என்ன  ஆச்சு  ? என்பதே  க்ளைமாக்ஸ்


நாயகியாக  டெல்லி  க்ரைம்  வெப் சீரிஸ்  புகழ்   ஷ்ஃபாலி  ஷா  பின்னிப்பெடல்  எடுத்திருக்கிறார் . க்ண்களாலேயே  பேசுகிறார் , சைகை  பாஷையில்  அவர்  பேசுவதைப்பார்த்து  நானும்  கண்னாடில  அப்டி  ட்ரை  பண்ணிப்பார்த்தேன்  . அவ்ளோ  தாக்கத்தை ஏற்படுத்தி  விட்டது  அவர்  நடிப்பு 


2  KHILOUNA (பொம்மை)  - நாயகிக்கு  ஸ்கூலில்  படிக்கும்  வயதில்  ஒரு  தங்கை. வீட்டு  வேலை  செய்துதான்  ஜீவனம்  நடக்குது . நாயகன்   துணி  அயர்ன்  பண்றவர் 


ஒரு  பணக்கார  வீட்டில்  நாயகி  வேலை  செய்கிறார்/. அந்த  ஓனரம்மா  கர்ப்பமா  இருக்காங்க ,  கூட  மாட  ஒத்தாசையா  இருக்கா. குழந்தை  பிறக்குது. அதே  ஏரியாவில்  குழந்தை  பாக்கியம்  இல்லாத  ஒரு  லேடி  இருக்காங்க . 


 அவங்க  நாயகி  கிட்டே  என்  வீட்ல  தானே  வேலை செஞ்சுட்டு  இருந்தே?  இப்போ  வீடு  மாறிட்டியா?  என  கேட்கும்போது  உங்களுக்கும்  ஒரு  குழந்தை  உண்டாகட்டும், நான்  அங்கே  வந்து  வேலை  செய்யறேன்னு  சுருக்குனு  தைக்கிற  மாதிரி  சொல்லிடறா


  நாயகி  வீட்டு  வேலை செய்யும்  ஓனர்  அவளை  தவறான  பார்வையில்  பார்க்கிறான். அப்போதைக்கு  தப்பிடறா


அவங்க  வீட்டில்  நடந்த  பார்ட்டில  கரண்ட்  போகுது . அந்த  டைம்ல  குழந்தையைக்காணோம்


குற்றவாளி  யார்? நாயகியா? அவள்  கணவனா?  குழந்தை பாக்யம்  இல்லாத  அந்தப்பெண்ணா?  அதான்  க்ளைமாக்ஸ் 


நுஷ்ரத்  தான்  நாயகி . ஒரு  வேலைக்காரி  அல்லது  பணிப்பெண்  போலவே  இல்லை. மகாராணி  மாதிரி  இருக்கிறார்.  ஒப்பனையை  அடக்கி  வாசிச்சு  இருக்கலாம்


அபிஷேக்  பானர்ஜி  தான்  கணவன்  ரோல், நல்லா  பண்ணி  இருக்கார் . போலீசிடமும்  அடி  வாங்குகிறார்.அ ந்த  ஓனரிடமும்  அடி  வாங்குகிறார்


  தங்கையாக  வரும்  சிறுமி  பேபி  ஷாலினி  போல்  ஓவர்  ஸ்மார்ட்டா  நடந்துக்குது  ஆனா  ரசிக்க  வைக்கும்  நடிப்பு  


1   மஜ்னு  -   நாயகிக்கு  மேரேஜ்  ஆன  அன்னைக்கே  புருசன்  சொல்லிடறான்  உன்  மேல  எனக்கு  எந்த  ஆசையும்  இல்ல  வீட்ல  கட்டாயப்படுத்துனாங்காட்டிதான்  கல்யாணம்  பண்ணிக்கிட்டேன்


அதுக்குப்பின்  நாயகி  கோடீஸ்வரனான  கணவனைக்கண்டுக்கறதில்லை . அவ  அழகில்  மயங்கி  யாராவது  வாலாட்டினா   கணவன்  சும்மா  விடறதில்லை. அவனை  உண்டு  இல்லைனு  ஆக்கிடறான்


 இப்பொ  தான்  நாயகன்  எண்ட்ரி.  நாயகனின்  அப்பா   நாயகியின்  கணவரிடம்  வேலை  பார்த்தவர். ஒரு  சின்ன  தப்பு  செஞ்சதுக்கு  காலை  உடைச்சவர்  ஓனர். அதனால  தன்  மகன்  தன்னைப்போல்  கஷ்டப்படக்கூடாதுனு  அவனை  நல்லா  படிக்க  வைக்கிறார்


 ஃபாரீன்ல  வேலை  கிடைக்குது  நாயகனுக்கு . மாசம்  15  லட்சம்  சம்பளம். இதை  கேள்விப்பட்ட  ஓனர்  உன்  பையன்  என் கிட்டேயே  வேலை  செய்யட்டும்  மாசம்  30  லட்சம்  தர்றேனு  வரசொல்றான்


 நாயகனுக்கும்  நாயகிக்கும்  கனெக்சன்  ஆகிடுது. இதுக்குப்பின் இந்தக்கதையில்   நிகழும்  திருப்பங்கள்  தான்  திரைக்கதை 


ஃபாத்திமா  ஷனா  சாய்  தான்  நாயகி . அழகுதான்  ஆனா  அநியாயத்துக்கு  கணவன் கண்  முன்னாலேயே  வேலைக்காரனிடம்  அப்படி  வழிவது  ஓவரோ  ஓவர் .  தன்  மனைவியைப்பற்றித்தெரிந்தும்  புருசன்  அவ்ளோ  இளமையான  ஜிம்  பாடி  பில்டரை  தன்  வீட்டில்  வேலை  செய்ய  வரசொலவ்து  மாங்கா  மடையன்  கூட  செய்ய மாட்டான் 


 அதுக்கு  கதைல  அவங்க  ஒரு  சால்ஜாப்  சொல்வாங்க  பாருங்க  ஹய்யோ  அய்யோ  செம  சிரிப்பு 


  ரசித்த  வசனங்கள் 


1 ஆண்கள்  ஏன் இவ்வளவு  நயவஞ்சகமா  இருக்காங்க ? நீங்க  ஒருத்தரை  ஏமாற்றும்போது  நீங்க  ஏமாறவும்  தயாரா  இருக்கனும் 


2 இப்பவெல்லாம்  ஜனங்களுக்கு எப்படி  நாம  சந்தோஷமா  இருக்கனும்கறதே  மறந்துடுச்சு 


3  காது  கேட்க  முடியாத  நீங்க  ஏன் ஹியரிங்  எய்டு  வெச்சுக்கலை ?


  உதடுகள்  பொய்  பேசும்  , ஆனா  கண்கள்  உண்மையை  மட்டும் தான்  பேசும், அதனால  எனக்கு  அது  தேவைப்படலை ., எதிராளியின்  கண்  பேசும்  பாஷைகளே  போதும் 


4 கடைசில  நீங்களும்  கண்களால்  பொய்  பேசும்  வித்தையைக்கத்துக்கிட்டீங்க  போல 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  நான்கு  கதைகளையும்  பார்க்க  விருப்பம்  இல்லதவர்கள்  அவசியம்    3  & 4  மட்டுமாவது  பார்க்கவும் . ஒரு  கதை  40  நிமிடங்கள்  தான். ரேட்டிங்  2. 75 / 5 


Ajeeb Daastaans
Poster of the film Ajeeb Dastaans, showing four windows, one from each of the stories in the film.
Official release poster
Directed by
Written by
Produced by
Cinematography
  • Pushkar Singh
  • Jishnu Bhattacharjee
  • Siddharth Diwan
  • Siddharth Vasani
Edited byNitin Baid
Music by
  • John Stewart Eduri
  • Alokananda Dasgupta
  • Tanuj Tiku
Production
company
Distributed byNetflix
Release date
  • 16 April 2021
Running time
142 minutes[1]
CountryIndia
LanguageHindi

Saturday, November 19, 2022

KOTHTHU (2022) ( மலையாளம்) - சினிமா விமர்சனம் ( பொலிடிக்கல் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்


  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு  சைக்காலஜி  ஸ்டூடண்ட். அவரோட  அரேஞ்ஜ்டு மேரேஜ்  ரிசப்ஷன்  அன்னைக்கு  மணப்பெண்ணா  அவர்   இருக்க  உணவு  சப்ளை செய்யும்  கேட்டரிங்  இன்சார்ஜ்  யதார்த்தமா  வந்து  பேசறார். அப்போ  மாப்ளை  அங்கே  வந்து  சமையல்காரனுக்கு   இங்கே  என்ன  வேலை?னு  சொல்லி  விரட்டிடறார். 


  மாப்ளையும்  பொண்ணும்  சாப்பிடும்போது    சாப்பாட்ல  கெரசின் ( மண்ணெண்ணெய்)  வாசம்  வருதுனு  மாப்ளை  தகறாரு  ப்ண்றார்.ஆனா  மணப்பெண்ணுக்கோ , மற்றவர்களுக்கோ  அப்படி  வாசம்  வர்லை.  மாப்ளை  வேணும்னே  வம்பிழுக்கத்தான்  அப்ப்டி  நட்ந்துக்க்றார்னு  நாயகி  புரிஞ்சுக்கறா 


இப்படிப்பட்ட  சைக்கோ  கூட  நான்  வாழ  மாட்டேன்னு  நாயகி  பிரேக்கப்  பண்ணிடறா. மாப்ளை  தகறாரு  செஞ்சாலும்  வேற  வழி  இல்லாம  கம்முனு  போய்டறார். இதற்குப்பின்  அந்த  கேட்டரிங்  சர்வீஸ்  ஆளோடு  பழக்கம்  ஆகி  பின்  காதல்  ஆகி  கல்யாணம்  வரை  போகுது 


மேரேஜ்க்குப்பிறகு  நாயகன்  தன்  ஃபிளாஷ்பேக் கதையை  சொல்றார். அவருக்கு  அம்மா, அப்பா  , 3  சகோதரிகள் எல்லாரும்      நாயகன்  சிறுவனா  இருக்கும்போதே  ஒரு  அரசியல்  பழி வாங்கல்  நிகழ்ச்சில  கொலை  செய்யப்படறாங்க .    பார்ட்டி  லீடர்தான்  நாயகனை  வளர்க்கிறார்


பார்ட்டி  லீடர்  தளபதி  பட  மம்முட்டி  மாதிரின்னா  நம்ம  நாயகன்    ரஜினி  மாதிரி  அவர்  என்ன  சொன்னாலும்  கேட்பார் . ஒரு  அரசியல்  பழி வாங்கல்  நிகழ்ச்சியா  ஒரு  ஆளை  போட்டுத்தள்ளனும்னு  பார்ட்டி  லீடர்  சொல்லும்போது   சகாக்கள்  எதுக்கு  உயிர்ப்பலி ? கை  கால்  மட்டும்  எடுத்துட்டு  விட்டா  போதாதா?னு  கேட்கறாங்க . அவங்க  முன்  அதுக்கு  ஓக்கே  சொன்ன  லீடர்  நாயகனை  தனியா  கூப்பிட்டு  அவனைப்போட்டுடுனு  சொல்லிடறார்


 நாயகன்  மற்றும்  அவரது  கட்சிக்கூட்டாளிகள்  நான்கு  பேர்  போய்  தகறாரு  பண்ணி  அந்த  ஆளை  அடிக்கும்போது  நாயகன்  அந்தாளைக்கொலை  பண்ணிடறார்


கொலையை  நான்  தான்  செஞ்சேன்னு  போலீஸ்ல  ஒரு  ஆள்  மட்டும்  ஒத்துக்கிட்டு  அப்ரூவரா  ஆகிட்டா  பிரச்சனை  பெருசா  ஆகாதுனு  லீடர்  சொல்ல  நாயகனின்  நண்பன்  அந்தப்பழியை  ஏத்துக்கிட்டு  போலீஸ்ல  சரண்டர்  ஆகிறான்


 நாயகனின்  நண்பனின் அம்மா  தனியா  இருக்காங்க . அவங்க  வீட்டுக்கு  பாம்  வெச்சு  வீட்டை  தரை  மட்டம்  ஆக்கிடரறாங்க  எதிர்க்கட்சியினர் .


  பார்ட்டி  லீடர்  ஆலோசனைப்படி  நாயகனின்  வீட்டிலேயே  தங்க  சொல்றார். அந்த  அம்மாவும்  தங்கறாங்க 


  அப்ரூவர்  ஆன  நண்பன்  ஜாமீன் ல  ரிலீஸ்  ஆகி  வர்றான், அப்போ  பார்ட்டி  லீடர்  நீ நான்  சொல்லும்  இடத்துக்குப்போய்  தலைமறைவா  இரு  , நான்  சொல்லும்வரை  இந்தப்பக்கமே  வராத  என்கிறார்


 அதன்படி  நண்பனும்    தலைமறைவு  ஆகிறான் 


 நாயகி  கர்ப்பமா  இருக்கா , அவளுக்கு  ஒரு  பயம், நாயகனின்  தப்புக்காக  பழி  ஏத்துக்கிட்டு   ஜெயிலுக்குப்போய்  பின்  ரிலீஸ்  ஆகி  தலைமறைவா  இருக்கும்  நண்பனின்  அவல  நிலைக்கு  நாயகன்  தான்  காரணம்  என்பது  தெரிந்து   நண்பனின்  அம்மா   பழி  வாங்கிடுவாரோ  என  பயப்படுகிறார்


 இதுக்குப்பின்  திரைக்கதையில்  நிகழும்  சுவராஸ்யங்களே  கதை 


நாயகனாக  அஷீஃப்  அலி. உயரே  படத்தில்  இவரை  ஆண்ட்டி  ஹீரோவாப்பார்த்து  இதில்  நாயகனாப்பார்க்க  சந்தோசமா  இருக்கு , நம்ம  ஊர்  நடிகர்  பிரசன்னா  சாயலில்  இருக்கிறார். நல்ல  நடிப்பு  வெளியே  வீராப்பாகப்பேசினாலும்  உள்ளுக்குள்  தன்  மனைவிக்கு  ஏதாவது  ஆகிடுமோ  என  பயப்படுவதை  உடல்  மொழியில்  காட்டும்  விதம் அருமை 


நாயகனின்  நண்பனாக ரோஷன்  மேத்யூ. அனுதாபத்தை அள்ளிக்கொள்ளும்  பாத்திரம். கப்பீலா  படத்தில்  மாறுபட்ட  ரோலில்  வந்தவர் , விக்ரம்  நடித்த  கோப்ரா  படத்தில்  வில்லனாக  வந்தவர்  இதில்  குணச்சித்திர  ரோல். 90களில்  நடிகர்  வாகை  சந்திர  சேகர்  இது  மாதிரி  பல  ரோல்களில்  நடித்து  ,முத்திரை பதித்தார் . அதே  போல்  இவருக்கும்  ஒரு  வாய்ப்பு 


நாயகியாக  நிகிலா விமல்  இந்த  மாப்ளை  வேண்டாம்  என  தீர்க்கமாக  சொல்வது , நாயகனுடன்  பழகும்போது  வெட்கப்புன்னகை , அவரது  பின்  புலம் , கொலை  விஷயம்  தெரிந்து  பயப்படுவது  , கோபப்ப்டுவது , வாக்குவாதம்  செய்வது  என  பல  இடங்களில்  ஸ்கோர்  பண்றார்\


பார்ட்டி  லீடராக  ரஞ்சித்  கனகச்சிதமான  ஒப்பனை  , நல்ல  நடிப்பு.. நாயகனின்  நண்பனின்  அம்மாவாக   ஸ்ரீ  ல்ட்சுமி  கண் கலங்க  வைக்கும் நடிப்பு . நாயகனுக்கு  டீ  தரும்போது  இது  வெறும்  டீ  தான் பா , விஷம்  இல்லை  என  பூடகமாக  சொல்லும்போது  அசத்தும்  நடிப்பு  


பிரசாந்த்  ரவீந்தரனின்  ஒளிப்பதிவு  கன  கச்சிதம்  ரதின்  ராத  கிருஷ்ணனின்  எடிட்டிங்  குழப்பம்  இல்லாமல்  நேர்த்தியாக  இருக்கிறது , பாடல்களுக்கான  இசையை  கைலாஷ்  மேனன் கச்சிதமாக  கவனிக்க  பின்னணி  இசையை ஜாக்ஸ்  பெஜோய்  செய்திருக்கிறார். 

சபாஷ்  டைரக்டர் ( சிபி மலையில்) 


1  வழக்கமாக  மலையாளப்படங்கள்  மிக  மெதுவாக  செல்லும்,  முதல்  அரைமணிநேரம்   கேரக்டர்கள்  அறிமுகமாக  இருக்கும், இதில்  முதல்  சீனிலேயே  கதைக்கு  வந்து  விடுகிறார்


2   வன்முறை  என்பது  கூரான  கத்தி அதை  யார்  கையில்  எடுத்தாலும் பாதிப்பு  அவருக்கும்தான்  என்ற  கதைக்கருவை  கச்சிதமாக  கையாண்ட  விதம் 


  ரசித்த  வசனங்கள் 

1  இங்கே  இருக்கற  குழந்தைகள்  மற்ற  குழந்தைகளைப்போல்  சினிமாப்பாட்டு  கேட்டு  வளர்ந்தவை  அல்ல , இன் குலா  ஜிந்தாபாத்  முழக்கம்  கேட்டு  வளர்ந்தவை 


2  நீ  உள்ளே  போ ,  சிகரெட்  புகை  வயித்துல  வளர்ற  குழந்தைக்கு  நல்லதல்ல 

 ஓஹோ, அப்போ  உனக்கு  மட்டும்  அது  நல்லதாக்கும் ?


3  ஒரு  நியூஸ்  பேப்ப்ர்  படிச்சுக்கூட இதுவரை  உன்னை  நான்  பார்க்கலை,  ,  நீ  அரசியல்வாதியா? அரசியல்  பற்றி  உனக்கு  என்ன  தெரியும் ? 


4  பழி  வாங்கும்  உணர்வு , மாறாத  கோபம்  இதை  எல்லாம்  எவன்  ஒருவன் ஜெயிக்கிறானோ  அவன் வாழ்வில்  ஜெயிக்கிறான்



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  சைக்காலஜி  ஸ்டூடண்ட்டான  நாயகி  ஒரே  ஒரு  பார்வையில்  ஒரே  ஒரு  நிகழ்வில்  தனக்கு  அமைந்த  மாப்பிள்ளை  சைக்கோ  பார்ட்டி  என்பதை   அறிகிறாள் . பார்ட்டி  செகரெட்டரி  ஆளைப்பார்த்தாலே  டவுட்டா  இருக்கு  என  யூகிக்கிறாள், ஆனா  நாயகனை  கல்யாணம்  கட்டிக்க  முடிவு  எடுக்கறா, ஆனா  அவன் எப்பேர்ப்பட்ட ஆள்  என்பதை  கண்டுபிடிக்க  முடியலையே?


2  நம்ம  எதிரியின்  கட்சி  ஆஃபீஸ்   ரூட்  இது  , இந்த  சமயம்  பார்த்து  நான்  ஹெல்மெட்  போட்டுட்டு  வர்லையே?  முகம்  மறைச்சிருக்கலாம்னு  நாயகன்  நாயகியிடம்  வருத்தமா  சொல்கிறான், ஆனா  படம்  பூரா  பைக்  ஓட்டிட்டு  வர்ற  எந்த  சீனிலும்  ஹெல்மெட்டே  போடலை  

3  நாயகன்  அரசியல்  பழி  தீர்க்க  செய்த  கொலை,  கொலை  செய்யப்பட்ட  ஆளின்  மனைவி , மகன் , மகளைக்கண்டு  வருத்தப்படுவது  எல்லாம்  தளபதி  ரஜினி - பானுபிரியா  காம்போ  காட்சியை  நினைவுபடுத்துகிறது 


4   பார்ட்டி  லீடரின்  பேச்சுக்கு  மறு  பேச்சு  பேசாத  நாயகன்  அவரது  சொல்லை  மீறி  லீடருக்குத்தெரியாமல்  நண்பனை  தலைமறைவு  ஊரிலிருந்து  கிளம்பி  வீட்டுக்கு  வருமாறு  கூறுவது  நம்ப  முடியவில்லை . ஆபத்து  இருக்கிறது என  தெரிந்தும்  ஏன்  அந்த  ரிஸ்க்?


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் =  ரொமாண்டிக்காக  ஆரம்பித்து  ஃபேமிலி  மெலோ டிராமா  மாதிரி  கொண்டு போய்  பொலிடிக்கல்  த்ரில்லராக  முடித்திருக்கிறார்கள் , கேரளாவில்  இது  ஹிட்  படம். தமிழ்  ரசிகர்களுக்கு  பழக்கமான  ஒரு  மசாலா  படம்   ரேட்டிங்  2.5 / 5 


otthu
Kothth.jpg
First look poster
Directed bySibi Malayil
Written byHemanth Kumar
Produced by
Starring
CinematographyPrasanth Raveendran
Edited byRathin Radhakrishnan
Music by
Production
company
Gold Coin Motion Picture Company
Release date
16 September 2022
Running time
155 minutes
CountryIndia
LanguageMalayalam
Box office₹ 4.5 crore

Friday, November 18, 2022

FALLING FOR CHRISTMAS ( 2022) சினிமா விமர்சனம் ( ரொமான்ஸ்) @ நெட் ஃபிளிக்ஸ்)


  ஸ்பாய்லர்  அலெர்ட்

சின்னத்தம்பி  குஷ்பூ  மாதிரி  நாயகி  ஒரு  பெரும்  செல்வந்தரின்  மகள் , அவளுக்கு  மை டியர்  மார்த்தாண்டன்  ஹீரோ  பிரபு  மாதிரி  ஒரு  பணக்கார  பாய்  ஃபிரண்ட். ஒரு  நாள்  அவன்  நாயகிக்கு  மோதிரம்  கொடுத்து  ப்ரப்போஸ்  ப்ண்றான்,அப்போ  நடக்கும்  பனிச்சறுக்கு  விளையாட்டில்  நாயகி  தலைல  அடிபட்டு  அம்னீஷியா  பேஷண்ட்  மாதிரி  பழசெல்லாம்  மறந்துடறா. இப்போ  காதலன்  ஒரு  பக்கம்  மாட்டிக்கறான், நாயகி  ஒரு பக்கம்  பிரிஞ்சு  போய்டறா 


நாயகன்  உன்னை  நினைத்து  ஹீரோ  சூர்யா  மாதிரி  ஒரு  லாட்ஜ்  வெச்சு  நடத்திட்டு  இருக்கான், அவனுக்கு  ஒரு  மகள் , ஒரு  அம்மா  இருக்காங்க , மனைவி  இல்லை , இறந்துட்டாங்க .  அவன்  தான்  நாயகியைக்காப்பாற்றி  தன்  கஸ்டடில  வெச்சு  காப்பாத்தறான்


 நாயகிக்கு  பழசெல்லாம்  மறந்ததாலும்,  ஆல்ரெடி  அவ  செல்வச்சீமாட்டி  என்பதாலும்  எந்த  வேலையும் செய்யத்தெரியல.  நாயகன்  தான்  எல்லாம்  சொல்லிக்கொடுக்கறான். நாயகனின்  மகளுக்கும்  நாயகிக்கும் ஒரு  அட்டாச்மெண்ட்  ஏற்ப்டுது


 நாயகன் , நாயகி  இருவரும்  நெருக்கமாகப்போகும்  தருணத்தில்  நாயகன்  விலகிடறான்., உன்  பழைய  வாழ்க்கைல  உனக்கு  ஆல்ரெடி  ஒரு  ஆள்  இருந்தா  என்ன  பண்ண? அதனால்  வெயிட்  பண்ணுவோம், யாராவது  தேடிக்கொண்டு  வருகிறார்களா?னு  பார்ப்போம்  அப்டீங்கறான்


நான்கு  நாட்கள்  நாயகி  நாயகனின்  குடும்பத்துடன்  இருக்கிறாள்.   ஐந்தாவது  நாள்  நாயகியின்  முன்னாள்  காதலன், அப்பா  இருவரும்  அவளைக்கண்டு  பிடித்து  வீட்டுக்கு  அழைத்து  செல்கின்றனர்


 இதுக்குப்பின்  நாயகி  மூன்றாம்  பிறை  ஸ்ரீதேவி  போல  நட்ந்து  கொண்டாளா?  அல்லது  தீபாவளி  நாயகி  போல  நடந்து  கொண்டாளா?  என்பதே  க்ளைமாக்ஸ் 


நாயகி  ஷியாராவாக  லிண்ட்ஷா   லோஹன்  நம்ம  ஊரு  ஹன்சிகா  சாயலில்  இருக்கிறார்,  செலவச்சீமாட்டி  ரோல்  என்பதால்  அவர்  உடலில்  பணக்காரக்களை  இயல்பாகவே  தெரிகிறது . எந்த  வேலையும்  தெரியாம  இருக்கோமே  என  வருத்தப்படுவது , நாயகனின் மேல்  காதல்  கொள்ளவா? தள்ளவா? என  டைலம்மாவில்  இருப்பது  போன்ற  கட்டங்களில்  நல்ல  முக  பாவனையை  வெளிப்படுத்தி  இருக்கிறார்


நாயகன்  ஜேக்காக  கோர்டு  ஓவர்ஸ்ட்ரிட்  டைட்டனிக்  நாயகன்  டி காப்ரியாவை  நினைவு  படுத்தும்  தோற்றம் . கச்சிதமான  நடிப்பு 


நாயகனின் குழந்தையாக  நடித்த  சிறுமி  செம  அழகு . மழலை  கொஞ்சும்  டயலாக்  டெலிவரி 


காதலனாக   ஜார்ஜ்  யங்  அதிக  காட்சிகளில்  வரவில்லை  என்றாலும்  வந்தவரை  ஒப்பேற்றுகிறார்


ஒளிப்பதிவு  படத்தின்  உயிர்  நாடி   பனிச்சறுக்கு  காட்சிகளில்  குளுமையான  காட்சிகளை  கண்  முன்  நிறுத்துபவர்  கிறிஸ்மஸ்  கொண்டாட்டக்காட்சிகளில்  கலக்கி  இருக்கிறார்


 பின்னணி  இசை  கச்சிதமாக  தன்  பணியைச்செய்து  கதைக்கு  உயிர்  கொடுக்கிறது 


 


  ரசித்த  வசனங்கள் 


1 அப்பா , உங்களுக்கு  கஷ்டத்தைக்கொடுக்கக்கூடாதுனு  இருக்கேன்


 ஒரு  மகளால  அப்பாவுக்கு  எப்பவும்  எந்தக்கஷ்டத்தையும்  கொடுத்துட  முடியாது 


2  உங்க  வ்ழக்கமான  விசயங்களை  நீங்க  தொடர்ந்து  செய்தால்  உங்க  ஞாபகங்கள்  திரும்பி  வர  வாய்ப்பிருக்குனு டாக்டர்  சொன்னார், ஆனா  அந்த வ்ழக்கமான  விசயங்களை தான்  எனக்கு  எதுனு  தெரியலை 


3  மோசமான  சிக்கல்கள்  தானாவே  கலைஞ்சு  போய்டும்  , நாம  நிதானமா  காத்திருக்கனும்


4  நமக்கு  வயசு  ஆக  ஆகத்தான்  பழைய  நினைவுகளை  எல்லாம்  நினைச்சுப்பார்க்கனும்னு  தோணும் 

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  மகா ராணி  மாதிரி  செல்வச்சீமாட்டியா  வாழ்ந்து  வந்த  நாயகி  தலைல  அடிபட்டு  பழசை  எல்லாம்  மறந்துடறாங்க , அடுத்த  நாள்  காலைல  எழுந்த்தும்  எங்கே  வேலையாட்கள்  யாரையுமே காணோம்?னு  எப்படிக்கேட்கறார் ? அது  மட்டும்  பார்ட்  டைமா  நினைவில்  வருமா? 


2  நாயகிக்கு  ஃபோன்  பண்ணும்  அப்பா  கால்  பிக்கப்  பண்ணாததால  அப்படியே  விட்டுடுவாரா? அவரது  பி ஏ  அல்லது  நாயகியின்  செக்யூரிட்டிக்கு  ஃபோன்  போட்டு  விசாரிக்க  மாட்டாரா? 4  நாட்கள் கண்டுக்கவே   இல்லை 


3  நாயகியின்  காதலன்   லவ்  பிரேக்கப்  ஆனதுக்கு  ஒரு  %  கூட  வருத்தமே  படலை , அடுத்த  நிமிடமே  இன்னொரு  ஜோடியைத்தேடிக்கிட்டான். அது  ஒரு  அதிர்ச்ச்சி , ஹோமோ  மாதிரி  இன்னொரு  ஆண்  துணையை  தேடிக்கிட்டது  அடுத்த  அதிர்ச்சி 


4  உன்  சந்தோஷம்  தான்  என்  சந்தோஷம்  என  சொல்லும்  நாயகியின்  அப்பா  எதைப்பற்றியும்  கண்டுக்கவே இல்லை . நாயகியின் முதல்  காதலன்  பற்றியும்  அக்கறை  இல்லை , நினைவு  தப்பிய  நாயகியின்  நண்பன் கம்  காதலன்  ஆல்ரெடி  ,மேரேஜ்  ஆனவன் , ஒரு  பொண்ணு  இருக்கு  என்பதையும்  கண்டுக்கலை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஊட்டி  வரை  உறவு , எங்கிருந்தோ  வந்தாள் மூன்றாம்  பிறை , ஒரு  கல்லூரியின்  கதை , தீபாவளி,   போன்ற  பல  படங்களில்  இது  போன்ற  அம்னீஷியா  டைப்  கதைகளை  நாம்  பார்த்திருந்தாலும்  இதுவும்  ரசிக்க  வைக்கிறது ம் நாயகியின்  நடிப்புக்காகவே  பார்க்கலாம்  ரேட்டிங் 2.75 / 5  ஃபேமிலியோடு  பார்க்கத்தகுந்த  கண்ணியமான  படமாக்கம்  தான். ஒரே  ஒரு  லிப் லாக்  சீன்  க்ளைமாக்ஸில்  வருது டோட்ட்ல்  டைம்  ட்யூரேஷன் 90 நிமிடங்கள்



Falling for Christmas
Falling for Christmas poster.png
Official release poster
Directed byJaneen Damian
Screenplay by
Story byJeff Bonnett
Produced by
Starring
CinematographyGraham Robbins
Edited byKristi Shimek
Music byNathan Lanier
Production
companies
Distributed byNetflix
Release date
  • November 10, 2022
Running time
93 minutes
CountryUnited States
LanguageEnglish

Thursday, November 17, 2022

MONICA , O MY DARLING - மோனிகா, ஓ மை டார்லிங் (2022) ( ஹிந்தி) -சினிமா விமர்சனம் ( பிளாக் ஹ்யூமர் காமெடி க்ரைம் டிராமா) @ நெட்ஃபிளிக்ஸ்

 


ஸ்பாய்லர்  அலெர்ட் ( கதையை    சொல்லப்போறேன், உஷார்  ஆகிக்க   குமாரு )

சம்பவம் 1 -  ரோபோக்களை   உருவாக்கும்  கம்பெனில  நாயகன்  முக்கியப்பொறுப்பில்  இருப்பவன். நாயகனின்  தங்கையை ஒருவன்  லவ்  ப்ரப்போஸ்  பண்றான், இன்னொருத்தன் ப்ரப்போஸ்  பண்ணலாம்னு  வெயிட்டிங்ல  இருக்கான், முந்தினவனுக்குத்தான் பந்தி  என்ற  ஃபார்முலாவில்  முதல்ல  காதலைச்சொன்னவனுக்கு  அந்தப்பொண்ணு  ஓக்கே  சொல்லிடுது . இதனால  காண்டு  ஆன  இன்னொருத்தன்  கம்பெனில  ரோபோ  மூலமா அவனை  போட்டுத்தள்ளிடறான்.  செக்யூரிட்டி  ஆஃபீசரை  சஸ்பெண்ட்  பண்ணுனதோட  இந்த  கேஸ்  க்ளோஸ்  ஆகுது ., கொலைகாரனுக்கு  தண்டனை  கிடைக்கலை . அது  ஏதோ  ஆக்சிடெண்ட்னு  போலீஸ்  நினைக்குது 


சம்பவம் 2 - யுனிகார்ன்  கம்பெனியோட   50 வது  ஆண்டு  விழா  கொண்டாடப்படுது, அந்த  விழாவில்  பதவி  உயர்வுக்காக  நாயகன் , வில்லன், காமெடியன்  மூணு  பேரும்  வெயிட்டிங். அந்த  விழாவில்  கம்பெனியின்  சீஇ ஓ  நாயகனை  பதவி  உயர்வுக்கு  தகுதியானவன்னு  அறிவிக்கிறார். இதனால  வில்லன், காமெடியன்  இருவருக்கும்  செம  கடுப்பு.  அது  போக  சி ஈ ஓ  தன்  மகள்  நிச்சயதார்த்தம், திருமணம் இரண்டையும்  அறிவிக்கிறார். நாயகன்  தான்  மாப்பிள்ளை. கம்பெனில  பலரும்  நாயகனை  பொறாமையா  பார்க்கிறாங்க 


  சம்பவம் 3 -  கம்பெனி   செக்ரெட்டரி  கூட  நாயகனுக்கு  ஒரு  கனெக்சன்  இருக்கு . கிட்டத்தட்ட  லிவ்விங்  டுகெதர்  லைஃப்  வாழ்றாங்க . இந்த  கல்யாண  அறிவிப்பு  வந்ததும்  நாயகனுக்கு  மோனிகா  மூலமா   பிளாக்மெயில்  வருது. ஃபிளாட்  வேணும், ப்ணம்  வேணும்  இப்படி.. .  நாயகனுக்கு  என்ன  பண்றதுன்னே  தெரியலை ,  மோனிகா  சொன்னபடி  செய்யலைன்னா  பதவி  உய்ர்வு  , பெரிய  இடத்து சம்பந்தம் எல்லாம்  போய்டும்


 சம்பவம்  4 -  நாயகனைப்பார்த்து  பொறாமைப்பட்ட  வில்லன் , காமெடியன்  இருவரும்  நாயகன்  கூட  ஒரு  மீட்டிங்  போடறாங்க . அப்போதான்  ஒரு  அதிர்சி  தகவல்  தெரியுது . அவங்க  ரெண்டு  பேரையும்  இதே  மாதிரி  மிரட்டி  பணம்  கேட்டிருக்கா . வடிவேலு  பட  காமெடி  மாதிரி  இந்த  மோனிகா  எத்தனை  பேரைத்தான்  வளைச்சு  போட்டிருப்பா?னு  ஆச்சரியம்  வருது  அவங்களுக்கு . வில்லன்  மோனிகாவை  கொலை  பண்ணலாம்னு  திட்டம்  போடறான். அந்த  திட்டப்படி  அக்ரிமெண்ட்  சைன்  ஆகுது . மோனிகாவைக்கொலை  செய்வது  வில்லன், பாடியை  வேற  ஏரியாவுக்கு  ட்ரான்ஸ்ஃபர்  ப்ண்றது  நாயகன் , அதை  டிஸ்போஸ்  பண்றது  காமெடியன். இதன்படி   செய்ய  தீர்மானம்  போடறாங்க 


 சம்பவம் 5 - அடுத்த  நாள்  கம்பெனில நாயகனுக்கு  அதிர்ச்சி  காத்திருக்கு , மோனிகா  உயிரோட  இருக்கா , ஆனா  வில்லன்  ஆள்  அவுட் , காமெடியனும்  சில  தினங்களுக்குப்பின்  ஆள்  அவுட்


சம்பவம் 6  - இந்தக்கொலைகளை  நாயகன்  தான்  செய்திருப்பான்னு  போலீஸ்  சந்தேகபப்டுது. விசாரணை  நடக்குது விசாரணை  நடக்கும்போது ஒரு பெரிய  திருப்பம்  நடக்குது 


 மேலே  சொன்ன  6  சம்பவங்களும்  படம்  போட்டு  முதல்  அரை  மணி நேரத்தில்  முடிஞ்சிடுது . இதுக்குப்பின்  திரைக்கதையில்  நிகழும்  திருப்பங்கள்  தான்  படம் 


நமக்குத்தெரிந்த  பெண்   முகம்னா  ராதிகா  ஆப்தே  தான் ,   போலீஸ்   ஆஃபீசர் ஏசிபி  ஆக  வருகிறார் ., இவரது  கேரக்டர்  டிசைன்  காமெடியா  கொண்டு  போலாமா?  சிரியசா  காட்டலாமா? என்பதில்  இயக்குநருக்கு  ஒரு  குழப்பம்  இருந்திருக்கு 



மோனிகாவாக  ஹூமோ  க்ரோஷி   படம்  முழுக்க  வரும்  வாய்ப்பு .  கிட்டத்தட்ட  வில்லி  ரோல் . ஒரு  வேளை  இவர்தான்  கொலையாளியோ  என  எதிர்பார்க்கும்போது  அவரும்  கொலை  ஆவது  திடுக்  திருப்பம் 


  நாயகனாக ராஜ்  குமார்  ராவ்  கச்சிதமான  நடிப்பு . விஜய்  ஆண்ட்டனி  மாதிரி  முகத்தில்  அதிகம்  உணர்ச்சி  காட்டாமல்  உடல்  மொழியில்  பதட்டம்  காட்டும்  பாணியில்  நடித்திருக்கிறார்


 காமெடியனாக  பகவதிப்பெருமாள் கலக்கி  இருக்கார்  , நடுவுல  கொஞ்சம்  பக்கத்தைக்காணோம்ல  அசத்தி  இருந்தாரே  அந்த  அசத்தல்  இதிலும்  தொடர்கிறது 


முதல்  பாதி  திரைக்கதை  விறு விறுப்பாகப்போனாலும் பின்  பாதியில்  தடுமாறுகிரது . போலீஸ்   டீம்  நாயகனை  சந்தேகப்படுவதோடு  சரி ., மற்றபடி பெரிதாக  அலட்டிக்கொள்ளவில்லை 


சபாஷ்  டைரக்டர் ( வாசன்  பாலா)


1  கொலை  செய்வதற்கு  பார்ட்னர்ஷிப்  போட்டு  அக்ரிமெண்ட்  ஃபார்ம்ல  சைன்  பண்ற  மாதிரி  சீன்  வெச்சது  இந்திய  சினிமாவுக்கே  புதுசு


2  கொலை  நடக்கும்போது  அதற்கான  முஸ்தீபுகள்  போகும்போது  ப்ழைய  ஒயிட்  அண்ட்  பிளாக்  பட  கால  பிஜிஎம்  ஓட  விட்டது  நல்லாருந்தது


3   அச்சின்  தாக்கரின்  இசை  படம்  முழுக்க  ப்ரபரப்பா  இருக்கு அதனு  முகர்ஜியின் எடிட்டிங்  நறுக்  சுருக் ஒளிபதிவும்  கனகச்சிதம்  யோகேஷ்  சந்தேகரின்  திரைக்கதை  முதல்  பாதியில்  நல்லாருக்கு , பின் பாதியில்  ஸ்லோ 


  ரசித்த  வசனங்கள் 


1  பணக்காரங்க  தப்பா  யோசிச்சா/  தப்பான  முடிவெடுத்தா  ஏழைகளால  வாழ முடியாது 


2  ஃபோன்  அடிக்குது  பாரு   எடு


ம் ம் 


  ரெஸ்பான்ஸிபிலிட்டிதான்  எடுத்துக்க  மாட்டேங்கறே , ஃபோனையாவது  எடுக்கலாமில்ல? 


3 நீங்க  எப்போ  வேணா  எனக்கு  கால்  பண்ணலாம், ஆனா  நைட்  10  மணிக்கு  மேல  ஃபோன்  பண்ண  வேணாம்  நான்  ஃபேமிலி  மேன்


4  மனுசங்க  பண்ற  சின்ன  சின்ன  தப்புகள்  தான்  அவங்களை  அழகாக்குது , அடையாளபடுத்துது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  கொலை  பண்ணுன  டெட்  பாடியை  175  கிமீ  ட்ரக்ல  கொண்டு  போறது  எவ்ளோ  அபாயகரமானது . கொலை  பண்றதை  விட  அபாயம்


2  பொதுவா  ட்ரக்ல  டெட்  பாடியக்கொண்டுபோகும்போது  வழில  போலீஸ்  செக்கிங்  நடந்தா  சும்மா  சமாளிக்கவாவது    டெட்படியை  கவர்  பண்ற  மாதிரி  வைக்கோல்  புல்லோ ,  ஆஃபோ, குவாட்டரோ  மேல  போட்டு  கவர்  பண்ணனும், ஆனா  பெப்பரப்பேனு  ஓப்பனா  டெட்  பாடியை  மட்டும்  கொண்டு  போவது  என்ன  தைரியத்துல ? 


3  மோனிகா   3  பேரையும்  ஒரே  காரணத்துக்காக மிரட்றா  என்பதற்கு  ஆதாரம்  இருக்கு , செல்  ஃபோன்ல  மெசேஜ்  இருக்கு , அதை  வெச்சே  மோனிகாவை  லாக்  பண்ணி  கார்னர்  பண்ணி  இருக்கலாமே?


4  மோனிகாவால்  பாதிக்கப்பட்ட  3  பேரும்  சேர்ந்து  அவரைக்கொலை  செய்ய  திட்டம் தீட்டுவதற்குப்பதிலா  மூணு  பேருமே  சேர்ந்து  ஏம்மா  மின்னல் , உன்  வண்டவாளம்  எல்லாம்  தண்டவாளம்  ஏறிடுச்சு,  எங்களையா  பிளாக்  மெயில்  பண்ணப்பார்க்கறே? என  மிரட்டி  இருக்கலாமே?  போலீசில்  ப்கார்  கொடுத்திருக்கலாமே? கொலை  செய்வதால்  வரும்  ரிஸ்க்கை  விட  இதில்  ரிஸ்க்  கம்மி 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -த்ரில்லர்  ரசிகர்களுக்கு  பிடிக்கும் .  லைட்டா  காமெடியும்  அங்கங்கே  இருக்கு .   ரேட்டிங்  2.75 / 5 



Monica, O My Darling
Monica, O My Darling poster.jpg
Official release poster
Directed byVasan Bala
Written byYogesh Chandekar
Produced bySarita Patil
Sanjay Routray
Dikssha Jyote Routray
Vishal Bajaj
Starring
CinematographySwapnil S. Sonawane
Sukesh Viswanath
Edited byAtanu Mukherjee
Music byAchint Thakkar
Production
company
Matchbox Shots
Distributed byNetflix
Release date
  • 11 November 2022
Running time
130 minutes
CountryIndia
LanguageHindi

Wednesday, November 16, 2022

பூச்சாண்டி (2022) - சினிமா விமர்சனம் ( திகில் ) @ நெட் ஃபிளிக்ஸ்


 வாரான் வாரான்  பூச்சாண்டி  ரயிலு  வண்டியிலே  பாட்டு  அடிக்கடி  விஜய்  டிவி  ல  சிரிப்பே  வராத  மொக்கை  காமெடி  டாக்  ஷோக்களில்  ஓப்பனிங்  பிரமோல  போடுவாங்க. அடிக்கடி  கேட்டு  மைண்ட்ல  ரெஜிஸ்டர்  ஆகிடுச்சு.. நாம  சின்னக்குழந்தையா  இருந்தப்போ  அம்மா  , அப்பா  எல்லாம்  சோறு  ஊட்டும்போது  சாப்பிடலைன்னா  பூச்சாண்டி  கிட்டே  பிடிச்சுக்குடுத்துடுவேன்னு  பயமுறுத்துவாங்க . அப்போ  பூச்சாண்டின்னா  பிள்ளை  பிடிப்பவன்னு  அர்த்தம்  ஆகுது  , ஆனா  உண்மையில்  அதுக்கு  அர்த்தம்  வேற, சோழர்கள்  காலத்தில்  நடந்த  ஒரு சம்பவம்  மூலம்  அதை  வரலாற்று  ஆவணம்  ஆக்கி  இருக்காங்க ,   உண்மையில்  நடந்த  சம்பவங்களின்  தொகுப்பு  இது 


 ஸ்பாய்லர்  அலெர்ட்


சம்பவம் 1 - களப்பிரர்  ஆட்சிக்காலத்தில்  சைவம் , வைணவம்  இரு  சமயத்தவரிடையே  போட்டி  இருந்தது .  சிவனை  வணங்குபவர்  பெரியவரா?  விஷ்ணுவை  வணங்குபவர்  பெரியவரா? என்ற  சண்டை  நடந்துகொண்டே  இருந்தது  , பொன்னியின்  செல்வன்  ல  கூட  அப்படி  ஒரு  காட்சி  இருக்கும் . நெற்றியில்  திருநீறு பூசக்கூடாது  என  சட்டம்  இயற்றப்பட்டது  , அப்போது  சிவனடியார்கள்   நெற்றியில்  மட்டுமல்ல  உடம்பு  பூரா  நீறு  பூசுவோம்  என  சொல்லி  மன்னருக்கு  எதிர்ப்பைக்காட்டும்  நோக்கில்  உடம்பு  பூரா  திருநீறு  பூசி  வந்தனர் .  அப்படி  பூசியவ்ர்கள்  பூச்சாண்டி  என  அழைக்கப்பட்டனர்.  அப்படி  ஒரு  ஆளை  சங்கிலியால்  கட்டி  கடலில்  வீசி  விடுகின்றனர்.  மன்னரின்  உத்தரவை  மீறிய  குற்றத்துக்காக . 1000  ஆண்டுகளுக்குப்பின்  அந்த  ஆத்மாவுக்கு  உயிர்  வருகிறது 


 சம்பவம்  2  - ஒரு  அறையில்  மூன்று  நண்பர்கள்  தங்கி  இருக்காங்க. அதில்  ஒருவர்   மாற்றுத்திறனாளி , இவர்  பழங்கால  நாணயங்கள்  சேகரிப்பவர். இவர்  கைக்கு  சோழர் கால  நாணயம்  கிடைக்குது . அது  வந்த  பின் அந்த  நாணயத்தை  வைத்து  ஆவியுடன்  பேச முய்ற்சி பண்றாங்க . மல்லிகா  என்ற  ஆவியுடன்  பேசுகிறார்கள் .  மல்லிகா  23  வயசு  ஆன  பெண் .  ஒரு  நதியில்  தன்  மர்ணம்  நிகழ்ந்ததாக  கூறுகிறது .  தன்  மரணத்துக்கு  காரணமானவர்களைப்பழி  வாங்க  வேண்டும்  என்கிறது 


  சம்பவம்  3 -  மல்லிகா  இப்போது  தன்  கணவருடன்  வீட்டில்  வசித்து  வருகிறார். அவர்  காலேஜ்  படிக்கும்போது   ஒரு  இடத்தில்  ஒரு  சோழர்  கால  நாணயம்  கண்டெடுக்கிறார். அதற்குப்பின்  அமானுஷ்யமான  சம்பவங்கள்  நடக்கின்றன.  ஏதோ  ஒரு  உருவம்  அவரைத்தொடர்ந்து  கொண்டே  இருக்கிரது. எதற்கு  வம்பு  என  அவர்  அந்த  நாணயத்தை  எடுத்த  இடத்துலயேவெச்சுடலாம்னு  தன்   நண்பரிடம்  தந்து  வைக்கச்சொல்கிறார்


மேலே  சொன்ன  3  சம்பவங்களையும்   இணைக்கும்  புள்ளி தான்  திரைக்கதை .  சம்பவம்  2ல்  முன்று  நண்பர்கள்  இருந்தாங்களே  அதில்  ஒருவர்  மர்ம  மரணம்  அடைகிறார். அந்த  மரணத்துக்குக்காரணம்  யார்? என்பது  க்ளைமாக்ஸில்  தெரிகிறது 


இது  ,பெரும்பாலும்  மலேசியாவில்  படமாக்கபட்ட  படம் . எல்லாருமே  புதுமுகங்கள் 


 நாயகி  மல்லிகாவாக  வரும்   ஹம்சினி  பெருமாள்  குடும்பப்பாங்கான  முகம்  கொஞ்சம்  சமந்தா , கொஞ்சம்  பிந்து  மாதவி   என  முக  சாயலில்  நினைவுபடுத்துகிறார். இயல்பான  நடிப்பு . இவரது  போர்சன்  தான்  திகில்  ஊட்டும்  காட்சிகள்  .  நளீனி , ஜீவிதா  இருவரும்தான்  தமிழ்  சினிமாவில்  அதிகமான  பயப்படும் காட்சியில்    சிறப்பாக  நடித்தவர்கள்  , அந்த  பட்டியலில்  இவரும்  சேர்கிறார் 


மாற்றுத்திறனாளியாக  வரும்  லோகநாதன்  அபாரமான  நடிப்பு . ஒரு  நாள்  என்னை  மாதிரி  இருந்து  பாரு  . ஒன்  பாத்ரூம்  போகக்கூட  இன்னொருவர்  உதவி  தேவைப்படும்  கொடூரம்  என   புலம்பும்  இடத்தில்  பரிதாபத்தை  அள்ளுகிறார்


குண்டான  தோற்றத்தில்  நடித்த  தினேஷ்  தான்  அதிக  காட்சிகளில்  வருகிறார்.  கிட்டத்தட்ட  நாயகன்  போல 


 முருகனாக  வரும்  மிர்ச்சி  ரமணா  மட்டும்  தான்  தமிழ்  நடிகர் , மற்ற  அனைவரும்  மலேசியர்கள் 


புதுமுகங்கள்  என  தெரியாத  வண்ணம்  அனைவரும்  இயல்பான  நடிப்பு 


சபாஷ்  டைரக்டர் ( ஜே கே  விக்கி ) 


1  மொத்தமே  ஒரு  மணி  நேரம்  50  நிமிடங்கள்  தான்  படம்  என்பதால்  எடிட்டிங்  கனகச்சிதம் , ஆனாலும்  முதல்  40  நிமிடங்கள்  இழுவைதான் , ஆனாலும்  சாமார்த்தியமாக  கதையைன்நகர்த்துகிறார்


2    பேய்க்கதையாக  ஆரம்பித்து  திகில்  காட்சிகள்  காட்டி  , கொலை  கதை போல்  கொண்டு  போய்  வரலாற்று  சம்பவங்களை  இணைத்த  விதம்  அருமை 


3  பாடல்  காட்சிகளோ , மொக்கை  காமெடி  டிராக்கோ  இல்லாத  விதம்


4  பிஜிஎம்  பல  இடங்களில்  பயமுறுத்துகிறது   ஜஸ்டின்  ரிடுன் ஷா   தான்  இசை . மிரட்டி  இருக்கிறார். அசாலிசம் பின் மொகமத்  ஒளிப்பதிவு  இருட்டான  காட்சிகளில்  வீச்சு  காட்டுகிறது . டைரக்டரே  எடிட்டர்  என்பதால்  கச்சிதமாக  கதை  சொல்லி  இருக்கிறார் 


ரசித்த  வசனங்கள் 


1  எல்லாருமே          கடையைத்திறந்து  பொருட்களை  வித்துட்டு  இருக்காங்க , நீ  வாங்கிட்டு  இருக்கே


 இதோட  ,மதிப்பு  உனக்கு  இப்போத்தெரியாது . புராதன  பொருட்கள  விலை  மதிப்பில்லாதவை


2  வாடி   வாசல் திறக்காம  வீடு  வாசல்  போக மாட்டோம்னு  சொன்ன  அலங்காநல்லூர்  இந்த  ஊருதான்


3  ஒவ்வொரு  தடவை  பதில்  கிடைக்கும்போதெல்லாம்  ஒரு  புதுக்கேள்வி  முளைக்குது 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  பேய்  நம்ம  கிட்டே  பேச  வரனும்னா  ரத்தம்  காட்டனும்னு  சொன்னதும்  ஒரு  ஆளு  தன்  கை  விரலை  ஊசில  குத்தி  ரத்தம் 2  சொட்டு  போடறாரு.பின்  மீண்டும்  ரத்தம்  வேண்டும்  என்றதும்  அதே  இட்த்தை  அழுத்துனா  போதாதா?  ரத்தம்  வராதா? மீண்டும்  ஊசியால  எதுக்கு  குத்தனும்?  ஃப்ரெஷ்  ரத்தம்  வேண்டுமோ? 


2  பேய்  நேரடியா  பேசாது  . மணலைக்கூட்டி  வெச்சு  நம்ம  கையை  அங்கே  வெச்சா  கை  ஆட்டோமேடிக்கா  மூவ்  ஆகி  சில  எழுத்துக்களை  எழுதும். அது  என்ன  வார்த்தைனு  பேப்பர்ல  நாம  எழுதிப்பார்த்து  புரிஞ்சுக்கலாம், கொஞ்சம்  கூட  அப்டேட்  ஆகாத  பேயா   இருக்கே?  லேப்  டாப்  முன்னால  உக்காந்தா  கீ  போர்ட்ல  டைப்  அடிக்காதா? வேலை  ஈசியா  முடியுமல்ல?


4  மல்லிகா  வாழும்பொது  நகம்  எல்லாம்  கச்சிதமா  கட்  பண்ணி  நீட்டா  விரல்களை  மெயிண்ட்டெயின்  பண்ணுது , ஆனா  பேய்  ஆன  பிறகு நகம்  வெட்டாம  சுத்திக்கிட்டு  இருக்கு , ஒரு  நெயில்  கட்டர்  கூடவா  அவ்ளோ  சக்தி  வாய்ந்த  பேய்  கிட்டே  இருக்காது ?


5   நாயகியிடம்  மார்க்கெட்ல  ஒரு  பெரியவர்  முதல்  முறையா  சந்திச்சு  நாளை  என்னைக்கோவிலில்  வந்து  பார்  அப்டீங்கறார். நாயகி  சரினு  சொல்லுது. ஊர்ல  1008  கோயில்  இருக்கு. அம்மன்  கோவிலா? சிவன்  கோவிலா? பெருமாள்  கோவிலா? எதுவுமே  சொல்லாம  எப்படி  கரெக்டா  பாப்பா  அங்கே  போகுது ?


6  நாயகி  ஒரு  புராதான  நாணயத்தை  ஒரு  இடத்துல  இருந்து  எடுத்துட்டு  வந்ததுதான்  பிரச்சனை., அதை  எடுத்த  இடத்துலயே  கொண்டு  போய்  வெச்சிடுனு  சாமியார்  சொல்றாரு, எப்வ்ளோ  முக்கியமான  விஷயம்,  நாயகி  தான்  அதை  செய்யாம  தன் பாய்  ஃபிஎரண்ட்  கிட்டே  சொல்லி  செய்யச்சொல்றா. அவனுக்கு  நாயகி  எங்கே  இருந்து  அதை  எடுத்தா?னு  எப்படித்தெரியும் ? அவன்  ஒழுங்கா  அந்த  வேலையைச்செய்வான்  என்பதற்கு  என்ன  உத்தரவாதம் ? 

7    மந்திரிச்சு  திருநீறை  நாயகி  கைல  இருந்து  கீழே  கொட்டிடுது . பேய்  அதை  எடுத்து  நெத்தில  பூசிக்குது ., பேய்  பட்டை  சாராயம்  அடிக்கும் .,  திருநீறு  பட்டையும்  அடிக்குமா?  ரொம்ப  பக்தியான  பேயா  இருக்குமோ? 


8  முருகர்  வேலை  நாயகி  கைல  இருந்து  வாங்கி  வளைக்குது .பேய்.  நல்ல வேளை , வேலை    இல்லாதவதான் வேலை  வளைச்சவதான்  வீரமான  வேலைக்காரினு  பாட்டு  பாட்லை 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  டைட்டிலைப்பார்த்து  இது  ஏதோ  டம்மி  படம்  என  நினைக்காமல்  மாறுபட்ட  கதை  அம்சம்  உள்ள  படம்  எனப்தை  உணர்ந்து  பார்க்கவும்  ரேட்டிங்  3 / 5 


Poochandi
Poosandi Varan
Poo Sandi Varan
Poochandi Malaysian film poster.jpg
Original poster
Poosandi Varaan, Poochandi Varan, Poochandi Varaan
Directed byJK Wicky
Written byThanabalan Kuppusamy
Produced byAndy.S
Starring
  • RJ Ramana
  • Ganesan Manohgaran
  • Tinesh Sarathi Krishnan
  • Logan
  • Hamsni Perumal
Production
company
Trium Studio
Release dates
27 January 2022 (Malaysia, Singapore)
1 April 2022 (Tamil Nadu, India)
Running time
1 hour 55 minutes
CountryMalaysia
LanguageTamil