1.ஐ லவ் யூ சொல்ல வந்த உன் ஆளை எதுக்குடி சட்டையை கழட்ட சொன்னே?
காதலிச்சா போதாது, அதை மூடி வைக்கக்கூடாதுன்னு டி ஆர் சொன்னாரே?
-----------------------
2. தங்கத்தின் மதிப்பு தாறுமாறாக உயர்கிறது, கலைஞரின் செல்வாக்கு சரிகிறது # மஞ்சள் நிறத்தின் முரண்கள்
------------------------------
3. சீதை இந்த அளவு ஃபேமஸ் ஆகி இருக்க மாட்டாள், ராமன் மட்டும்தீக்குளிக்க சொல்லாமல் இருந்திருந்தால்# நீதி - ஆண் தான்பெண்ணின் புகழுக்கு காரணம்
--------------------------------
4. உன் ஆடம்பரமான அழகை என் எளிமையான அன்பு வசீகரித்த போது காத்திரமான நம் காதல் பூ பூத்தது மென்மையாக!
---------------------------------
5. நீ நடந்து வரும் வழி எங்கும் அழகை இறைத்து விட்டு வருகிறாய், எல்லாவற்றையும் சேகரித்து வர எனக்கு தாமதம் ஆகிறது
-------------------------------
6. உன் நினைவுகளை சேமிக்க மட்டும் ஒரு வங்கி இருந்தால் என் சேமிப்பு சக்தி கண்டு அது பிரமித்திருக்கக்கூடும்!
--------------------------------
7. நமது பெரும்பாலான பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு மனம் உருகி செய்யும் பிரார்த்தனைகளே!
----------------------------
8.அமைதிக்கான நோபல் பரிசு எனக்குத்தான் - கேப்டன் ஆவேசம்,எதிர்க்கட்சியா இருந்தும் இந்த அளவு அமைதியா எவன் இருந்திருக்கான்?
----------------------------
9. அட்டு ஃபிகர் யார்?
நேருக்கு நேர் பார்வையைசந்தித்த பின்னும் உடல்அளவிலோ,மனதளவிலோ எந்த வித ரசாயன மாற்றத்தையும் ஏற்படுத்தாத ஃபிகர் @டு ஃபிகர்
-----------------------------------
10. சூப்பர் ஃபிகர் யார்?
பசித்திருக்கும் பொழுதுகளில் சூப் குடித்தவுடன் பசியைஅதிகமாக கிளறிவிடுவதுபோல பார்த்தவுடனேயேகவிதைகளை உளறவைக்கும்ஃபிகர்
------------------------------

11. என்னை எத்தனை பேர் வெறுக்கிறார்கள் என்று தெரியவில்லை, ஆனாலும் நான் எல்லோரையும் நேசித்துக்கொண்டுதான் இருக்கிறேன்
----------------------------------
12. மஞ்சள் பூசும் சில பெண்கள், மஞ்சள் துண்டு போர்த்தி இருக்கும் கலைஞர் தங்களை நம்பியவர்கள் முகத்தில் கரி பூசுவதில் கை தேர்ந்தவர்கள்
----------------------------
13. உன்னை எதிரில் பார்க்கும்போது ஏற்படும் சந்தோஷத்தை விட எதிர்பார்க்கும்போது ஏற்படும் துடிப்பே என்னை அதிகம் இயங்க வைக்கிறது
-----------------------------------
14. காதலிப்பதில் யாரும் களைப்படைவதே இல்லை, ஆனால் காத்திருப்பதில், பொய்களை சொல்வதில், மன்னிப்புக்கேட்பதில், காயம் அடைவதில் களைப்படைகிறார்கள்
---------------------------------------------
15. வெற்றி தாமதம் ஆவதால் சலிக்காதே! ஒரு அரண்மனையை நிர்மாணிப்பது என்பது சாதாரண வீட்டை நிர்மாணிப்பதை விட கடினமானது
--------------------------------------
16. சாம்பல் பூஜை அறைக்கு வந்ததும் திருநீறு ஆவது போல உன் நெற்றியில் இட்டுக்கொண்டதும் அது மாசிலா நீறு ஆகிறது
---------------------------------
17. உன் அழகால் எல்லோரையும் பலவீனம் ஆக்குகிறாய்! என் அன்பால் உன்னை மட்டும் நான் பலம் ஆக்கி என்னை சுகவீனம் ஆக்கிக்கொண்டேன்
------------------------------------
18. நீ இமைகளை வேகமாக அசைக்கையில் பட்டாம்பூச்சிகளுக்கு சவால் விடுகிறாய், உன் உதடுகளை ஈரப்படுத்துகையில் தேனிக்களுக்கு அழைப்பு விடுகிறாய்
------------------------------------
19. பஸ்ஸில் அமர்ந்திருக்கும்போது பள்ளிப்பிராயத்து ஆசிரியர்க்கு நாம் எழுந்து இடம் கொடுக்கையில் அவர் முகத்தில் ஏற்படும் பெருமிதம்.. அடடா!!
--------------------------------
20. ஒரு டீச்சரால எல்லா சப்ஜெக்ட்டும் நடத்த முடியறதில்லை, ஆனா ஸ்டூடண்ட்டால எல்லா சப்ஜெக்ட்டையும் படிச்சிட முடியுது # நீதி - ஸ்டூடண்ட் டாப்
--------------------------------------