Showing posts with label seetharamula kalyanam lankalo (2010) -ரவுடி கோட்டை ( 2013)- சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label seetharamula kalyanam lankalo (2010) -ரவுடி கோட்டை ( 2013)- சினிமா விமர்சனம். Show all posts

Tuesday, October 29, 2013

seetharamula kalyanam lankalo (2010) -ரவுடி கோட்டை ( 2013) - சினிமா விமர்சனம்

 

இது ஒரு முக்கேனக்காதல் கதைங்க . அதாவது ஒரு கேனப்பொண்ணை ஹீரொ , வில்லன்னு 2 கேனங்கள் லவ் பண்ணுதுங்க . அதுல வில்லன் கேனம் ஒரு தாதா வேற . விளைவுகள் என்ன ஆச்சுன்னு காமெடியா சொல்றாங்களாம். ( காமெடினு இவ்ங்களா நினைச்சுக்கிட்டு மொக்கை போடறாங்க) தியேட்டருக்குப்போகும் ஆடியன்சுக்கு ஒரு கூடை பூ இலவசம் . வாங்கி காதுல வெச்சுக்கலாம் .


ஒரு தாதாவோட பொண்ணு தான் நாயகி . நாயகன் அவர் பாட்டுக்கு ரோட்டோரமா நின்னு தம் அடிச்சுட்டு இருக்கார் .  நாயகி வந்து வலியனா பேச்சுக்குடுக்குது . யாருக்குமே தெரியாத ஒரு ராணுவ ரகசியத்தை சொல்லுது. புகை பிடிச்சா கேன்சர் வந்துடும் , இனி பிடிக்காதேங்குது.


இந்த  பேக்கு ஹீரோ உடனே ஹீரோயினை லவ்வ ஆரம்பிச்சுடறாரு . நாயகிக்கு என் மேல அக்கறை இல்லைன்னா இப்டி வந்து நல்ல புத்திமதி சொல்லுமா?னு கேட்கறாரு . ரோட்ல பிச்சைக்காரன் கிட்டே கூடத்தான் பிசை எடுக்காதே , உழைச்சு சாப்பிடுன்னு  சொல்றோம். அதுக்காக லவ்னுஅர்த்தமா? 



நாயகி காதலை ஏத்துக்கலை . அப்போ தான் ஒரு பெரிய திருப்பம் நடக்குது. இதுவரை  எந்த உலகப்படத்துலயும் வராத சீன் .அதாவது நாயகியை நடு  ரோட்ல பட்டப்பகல்ல  4 ரவுடிங்க   கிண்டல் பண்றாங்க .( டெல்லியோ?)  நாயகன் அந்த ஏரியாவையே கலைச்சுப்போட்டு ஃபைட் பண்றாரு. உடனே டமார்னு நாயகிக்கு லவ் வந்துடுது . சண்டை போடும் ஆளைத்தான் பொண்ணுங்க லவ் பண்ணும்னா ஜப்பான் ல ஜாக்கிசான் , சொர்க்கத்துல ப்ரூஸ்லீ , சீனாவுல ஜெட்லீ இவங்க 3  பேருக்கு மட்டும் தான் காதலி  கிடைக்கும் . 


வில்லன் தாதா ஹீரோயினை பொண்ணு கேட்டு வர்றார். ஹீரோயின் அப்பா மறுக்கறார். உடனெ வில்லன்  ஹீரோயினைக்கடத்தி அவர் ஏரியாவுல வெச்சுடறார். ( அதுதான் ரவுடிக்கோட்டையாம் ) மனசுக்குள்ளே பெரிய ராவணன்னு நினைப்பு . ஒரு அடியாள் லாஜிக்கா ஒரு கேள்வி கேட்கறான் . பாஸ்! இந்தப்பொண்ணை மேரேஜ் பண்ணிக்க ஏன் கெஞ்சிக்கிட்டு இருக்கீங்க ? பேசாம ( அல்லது பேசிக்கிட்டே) ரேப் பண்ணிடுங்க . தானா வந்து மேரேஜ் பண்ணிக்கச்சொல்லும்னு ஐடியா தர்றான். 


 உடனே வில்லன் அங்கே இருக்கும் சுவத்துல  ஒரு காலண்டர் மாட்டவே துப்பில்லாத சின்ன ஆணில அவன் தலையை அடிச்சு கொலை பண்ணிடறான். அவருது தூய காதலாம் . அப்டி பண்ண மாட்டாராம் .



 ஹீரோ அப்பவே வந்து   ஃபைட் போட்டா படம் அப்பவே  முடிஞ்சிருக்கும். ஆனா 4 ரீல் தான்  தேறும் . அதனால திரைக்கதைல பெரிய  திருப்பம் . ஹீரோ வில்லன் தாதா கிட்டே வேலைக்காரனா சேருகிறார்.சேர்ந்து நாம சோர்ந்து போகும் வரை  மொக்கை போட்டு க்ளைமாக்ஸ்ல தான் யார்னு உண்மையை சொல்லி ஒண்டிக்கு ஒண்டி ஃபைட் போட்டு படத்தை முடிக்கறார் . உஷ் அப்பா , முடியல 


ஹீரோவா நிதின்.ஆள் நல்லா தான் இருக்காரு . அவர் பேசும் வசனங்கள் தான் படு  எரிச்சல் . டான்ஸ் ல சில்ம்பாட்டம்   சிம்பு மாதிரி , அழகிய தமிழ் மகன் விஜய் மாதிரி ஸ்டெப் எல்லாம் போட்டு கலக்கறாரு . ஒரு பாடு சீன்க்கு  ஹீரோயின் கூட ரொம்ப க்ளோசா நடிச்சு பாடி கெமிஸ்ட்ரி , பாடி பிசிக்ஸ் எல்லாம் ஒர்க் அவுட் ஆக்கி கலக்கி இருக்காரு . 


ஹீரோயின்  மன்மதன் சிம்புவின் 3 வது தெய்வீகக்காதலி ஹன்சிகா . குட்டி குஷ்பூனு படத்துல இவருக்குப்பட்டபேரு. குஷ்பூவை விட வெயிட் ஜாஸ்தி ( எப்டித்தெரியும்னு கேட்காதீங்க, ஒரு கண் பார்வை அனுமானத்துல சொல்றதுதான். 3  டூயட் , 4 காமெடி மொக்கை சீன் அவ்வளவுதான் அவருக்கு சீன்ஸ் . நஸ்ரியாவுக்கு சவால் விடும்படி  ஒரு கிளு கிளு பாடல் காட்சி இருக்கு . 


பிரம்மானந்தம் வழக்கம் போல்  கெஸ்ட் ரோல். வரும் வரை  சிரிக்க வைக்கத்தவறவில்லை . தெலுங்கு காமெடியர்களில் இவர் தமிழர்களைக்கவர்ந்த  சிறந்த காமெடி மேன் . கிட்டத்தட்ட வடிவேல் மாதிரி , பாடி லேங்குவேஜ் , ஃபேஸ் எக்ஸ்பிரசன் எல்லாம்  சூப்பர் . 


 ஆழி , ஜெயப்ரகாஷ ரெட்டினு  வில்லன்க  கூட்டம் . எல்லாம்  ஓவர் சவுண்ட் .தெலுங்குப்படத்துக்குன்னு எழுதி வெச்ச  ஃபார்முலா போல . 




இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 



1.  தெலுங்கில்  குடும்பப்பாங்கான பெண்களைக்கவரும் டைட்டில் இருந்தாலும் தமிழ் டப்பிங்க் க்கு ரவுடிக்கோட்டை என வாண்ட்டடா திகில்  கொடுத்து போஸ்டர்  டிசைன் பண்ணுனது 


2. இந்தப்படத்தை தமிழில் டப் பண்ணக்கூடாது , அப்படிப்பண்ணுனா  தமிழ் ல என் இமேஜ் போயிடும்னு ஹன்சிகா  சொன்னதா இவங்களா ஒரு புரளியைக்கிளப்பியது 


3. போஸ்டர்  டிசைன்களில் எல்லாம் ஹன்சிகாவுக்கே முக்கியத்துவம்  கொடுத்தது , கிளாமர் ஸ்டில்களைப்போட்டது 



4. ஹீரோ அடிக்கடி  ஹீரோயினிடம் மன்னிப்புக்கேட்கிறேன் பேர்வழின்னு ஹீரோயின் முன் மண்டியிட்டு இடையில்  முகம் புதைத்து சாரி சொல்வது ( முன் பின் அறிமுகம் இல்லாத பெண்ணிடம் இப்படி சாரி கேட்கும் ஆளை இப்போதான் முதன் முதலா பார்க்கிறென் ) 


5  கிஸ் மீ கிஸ் மீ  எனும் பாட்டு செம கிளுகிளுப்பான ஹஸ்கி வாய்சில் ( நாட் ஹன்சி(கா) வாய்ஸ் )  பாட வைத்து படமாக்கலிலும் டெம்ப்போ ஏத்தியது . மாம்பல லேடி  உன் மாம்பலத்தைத்தாடி என உலகத்தரமான பாடல் வரிகளைப்போட்டு அக்மார்க்  சி செண்ட்டர் கிளாப்ஸ்க்காகவே ஒரு பாட்டை படமாக்கியது 




இயக்குநரிடம்  சில  கேள்விகள் 



1. ஓப்பனிங்க்  சீன்ல  ஹீரோ கபடி மேட்ச்ல கபடி கபடி சொல்லி ரைடு வர்றார். ஓக்கே . அந்த மேட்ச் முடிஞ்ச பின் ஃபைட் வருது . வில்லன் ஆளுங்க கூட ஃபைட் போடறார். ஆனா பேக்கு மாதிரி கபடி கபடி சொல்லிட்டே அடிக்கறார். அவருக்கு கஜினி மாதிரி 10 நிமிஷத்துகு எல்லாத்தையும் மறக்கும் வியாதியா?  சும்மா  அடிச்சா அடி படாதா? 



2 தாதாவான ஆள் தன் பொண்ணுக்கு இன்னொரு தாதா மாப்ளை வேணாம்னு சொல்றது லாஜிக்கா படலையே ? பின்னே ரவுடியோட பொண்ணுக்கு ஐ ஏ எஸ் கலெக்டரா மாப்ளையா கிடைப்பார் ? 


3 . தாதா மாப்ள வேணாம்னு சொல்ற அதே ஆள் க்ளைமாக்ஸ்ல  ஹீரோ கிட்டே   என் பொண்ணை காப்பாத்த நல்லா ஃபைட் போடத்தெரிஞ்சிருக்கனும்னு சொல்றாரே, இது  முன்னுக்குப்பின்  முரண் இல்லையா? 



4. வில்லன் என்னதான்  கேனமா  இருந்தாலும்  தன்  இருப்பிடத்தில்   நாயகனும் , நாயகியும்  ரொமான்ஸ் பண்ணிட்டு நம்மையே ஏமாத்திட்டு இருக்காங்க என்பது  கூடவா தெரியாது ? 





மனம் கவர்ந்த வசனங்கள்



1,  அவன் ரோடு  ரோலர் மாதிரி  இருக்கான் . ரெனால்டு ரீபிள் மாதிரி நீ இருக்கே 



2 உனக்கு கலர் ஜாஸ்தி , அதே போல்  கொழுப்பும் ஜாஸ்திடி 




3 பயம் இருக்கறவனுக்கு காதல் வராது , காதல் இருக்கறவனுக்கு பயம் வராது 



4 காதலிக்கறவன்  கனவு காணமாட்டான் , நிறைவேத்துவான் 



5 . ஒருத்தனுக்கு படிப்பு  மிஸ் ஆகலாம், வேலை மிஸ் ஆகலாம்,. ஆனா மனசுக்குபிடிச்ச பொண்ணு மட்டும் மிஸ் ஆகவே  கூடாது 



6   திட்டம் தீட்டும்போது சகுனியா இருக்கனும் , போர்  புரியும் போது ஸ்ரீகிருஷ்ணரா இருக்கனும் 

 

ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  38


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் -சுமார்

ரேட்டிங் = 2  / 5



சி பி கமெண்ட்  - ஹன்சிகா  ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம் சிம்பு ரசிகர்கள் பார்த்தா கடுப்பாகிடுவாங்க . மத்தவங்க யாரும்  டி வி ல போட்டாக்கூடப்பார்த்துடாதீங்க . பட்டுகோட்டை அன்னபூரணா வில் படம் பார்த்தேன். ஏ சி டி டி எஸ் தியேட்டர் . 8 பேர் தான் டோட்டல் ஆடியன்சே , எப்படிதான் கட்டுபடி ஆகுதோ, அய்யோ பாவம்