Showing posts with label WALTAIR VEERAYYA (2023) தெலுங்கு - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label WALTAIR VEERAYYA (2023) தெலுங்கு - சினிமா விமர்சனம். Show all posts

Thursday, March 09, 2023

WALTAIR VEERAYYA (2023) தெலுங்கு - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா) @ நெட் ஃபிளிக்ஸ்


ஆந்திர  சூப்பர்  ஸ்டார்  சிரஞ்சீவி , மாஸ்  மகாராஜா ரவிதேஜா  இருவரும் 23  ஆண்டுகளுக்குப்பின் இணைந்து  நடித்திருக்கும்  படம்  இது. 2000 ஆம் ஆண்டில் அன்னய்யா  எனும்  படத்தில்  நடித்தனர். வால்ட்டர் வீரய்யா எனும்  டைட்டில்  ரோலில்  சிரஞ்சீவி  நடிக்க 140 கோடி  ரூபாய்  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்ட  படம்  முதல் நாள்  வசூலில்  உலகம்  முழுவதும் 49 கோடி  வசூலித்தது.  2023  ஜனவரி 13ல் தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆன  இந்தப்படம்  இன்று  வரை 233  கோடி  வசூல்  செய்து  மெகா  ஹிட்  லிஸ்ட்டில்  சேர்ந்திருக்கிறது. நெட்  ஃபிளிக்சில் 27/2/2023 ல்  ரிலீஸ்  ஆகி  இருக்கிறது, அது  போக  ஜெமினி  டிவியில்   ரிலீஸ்  ஆகி  உள்ளது . நான்  சொன்ன  வசூல்  நிலவரம்  தியேட்டரிக்கல்  கலெக்சன்   ஒன்லி .  ஒடி டி   . டி வி  விற்பனை  லாபம்  தனி 


  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின்  அப்பாவுக்கு  இரு  தாரங்கள் . முதல்  தாரத்தின்  மகன்  நாயகன். இரண்டாவது  தாரத்தின்  மகன்  இப்போ  போலீஸ்  ஆஃபீசர் . நாயகன்  மீன்  பிடித்து பதப்படுத்தி  விற்பனை  செய்பவர் . நாயகனுடன் கூட்டாளியாக  , நண்பனாக  ஒரு  கறுப்பு  ஆடு  இருக்கு. நாயகனுக்கு  அவன்  வில்லன்  என  தெரியாது. போதைப்பொருட்கள்  தயாரித்து  அதை  ஐஸ்  கட்டிக்குள்  மறைத்து  வைத்துக்கடத்த  இந்த  மீன்  பிடித்து  பதப்படுத்தும்  தொழிற்சாலையை  பயன்படுத்தி  வருகிறான்  வில்லன்.


 ஒரு நாள்  ஐஸ் கட்டிகள்  தவறுதலாக  ஸ்கூல்  விழாவுக்கு  செல்ல  அந்த  ஐஸ்  போட்டு  ஜூஸ்  குடித்த  மாணவர்கள்  25  பேர்  ஸ்பாட்  அவுட். இந்தக்கொலைக்கேஸ்  நாயகன்  மீது  தவறுதலாக  விழுகிறது . நாயகனை  அவரது  அண்ணனே  கைது  செய்து  சிறையில்  அடைக்கிறார். கைப்பற்றப்பட்ட  சரக்கு  போலீஸ்  ஸ்டேஷனில்  இருக்கு 


  வில்லன்  அடியாட்களுடன்  அந்த  சரகைக்கைப்பற்ற  முயல  நாயகனின்  தம்பியான  போலீஸ்  ஆஃபீசர்  முந்திக்கொண்டு  அந்த  சரக்கை  இடம்  மாற்றுகிறார்.இதனால்  கடுப்பான  வில்லன்  நாயகனின்  தம்பியை  கொலை செய்து  விட்டு  மலேசியா  தப்பிச்செல்கிறான்

நாயகன்  வில்லனை  எப்படி  துரத்திப்பிடிக்கிறார்  என்பதே  மீதிக்கதை 


 இப்போ நான்   சொன்ன  சம்பவங்கள்  எல்லாம்  படத்தின்  பின்  பாதியில்  வருபவை . முன்  பாதியில்  காதல், காமெடி , டூயட்  என  மாமூல்  மசாலா  படங்கள்  ஃபார்முலாவில்   ஜனரஞ்சகமாக  போகிறது


நாயகனாக  சிரஞ்சீவி. காமெடி , ஆக்சன் , செண்ட்டிமெண்ட்  என  எல்லா  ஏரியாக்களிலும்  புகுந்து  விளையாடுகிறார். கமலை  விட  வயது  மூத்த  சிரஞ்சீவி  கமலின்  மகளுடன்  ஜோடியாக  நடிப்பதெல்லாம்  கொடுமை 


 நாயகனின்  தம்பியாக  ரவிதேஜா , என்னதான்  சிரஞ்சீவி  ஹீரோ  , டைட்டில்  ரோல்  என்றாலும்  இடைவேளைக்குப்பின்  வரும்  ரவிதேஜா  காம்போ  காட்சிகளில்  சிரஞ்சீவியை  அசால்டாக  ஓவர்  டேக்  செய்து  விடுகிறார்  ரவிதேஜா 


வில்லனாக  பிரகாஷ்  ராஜ். முன்பாதியில்   கோட்  சூட்டில்  கம்பீரம் , பின்  பாதியில்  ஃபிளாஸ்பேக்  காட்சிகளில்  சாதா  லுங்கி  கெட்டப்பில்  துரோகி  வேடம்  கச்சிதமான  நடிப்பு 


பாபி  சிம்ஹா  உடல்  மொழியில்   கலக்குகிறார்.


 நாயகனுக்கு ஜோடியாக  ஸ்ருதி  கமல்  டூயட்  காட்சிகள் மட்டுமல்லாமல்  ஆக்சன்  காட்சிகளிலும்  அசத்துகிறார்


 ரவிதேஜாவுக்கு  ஜோடியாக  கேத்ரீன்  தெரசா. அதிக  வாய்ப்பில்லை , வந்தவ்ரை  அழகு


ஆர்தர்  ஏ  வில்சனின்  ஒளிப்பதிவில்  காட்சிகள்  அனைத்தும்  கண்ணுக்குக்குளுமை .. விசாகப்ட்டினம் , மலேசியா ,   என  பலவித லொக்கேஷன்களில்  காட்சிகள்  அசத்துகிறது 


தேவி  ஸ்ரீ  பிரசாத்தின்  இசையில்  5  பாடல்கள். அதில்  3  செம  ஹிட் .,  பிஜிஎம்  கச்சிதம் 


நிரஞ்சன்  தேவரமனா வின்  எடிட்டிங்கில்  படம்  ரெண்டே  முக்கால்  மணி  நேரம்  இழுத்தாலும்  காட்சிகள்  எங்கேயும்  போர்  அடிக்கவில்லை . பாபியின் இயக்கத்தில்  ஒரு  மாஸ்  மசாலா  கமர்ஷியல்  மூவி 


சபாஷ்  டைரக்டர்


1  ஸ்ருதி  கமலின் ஆக்சன்  சீக்வன்ஸ்  அடிபொலி..,ரஜினி  ஸ்டைலின்  சாயல்  இருந்தாலும்  பாபி சிம்ஹாவின்  உடல்  மொழி   செம


2   பாத்ரூமில் ரா  டிபார்ட்மெண்ட்  ஆட்கள்  இருக்கும்போது  பாபி  சிம்ஹா அங்கே  போக  முயல்வதும் அப்போது  ஸ்ருதி  கமல்  எண்ட்ரியும் செம  சீன்


3  சிரஞ்சீவி - பாபி  சிம்ஹா  காம்போ  சீன்களில்  தெறிக்கும்  பிஜிஎம் 


4  டோண்ட்  ஸ்டாப்  டான்சிங்  , ஹிஸ்டீரியா  லோடிங்  பாட்டுக்கு  கொரியோகிராஃப்  அருமை 


5   ஹீரோ  தன்  தம்பி  தன்னை  வீட்டில்  டிராப்  ப்ண்ணியதை  எண்ணி  சிலாகிக்கும்  காட்சி , காமெடியும், செண்ட்டிமெண்ட்டும்  ஒர்க்  அவுட்  ஆன  இடம் 


  ரசித்த  வசனங்கள் 


1   ஆர்மி  ஃபோர்ஸ் , நேவி  ஃபோர்ஸ் , போலீஸ்  ஃபோர்ஸ்  எது  இப்போ  வருது ?


 மெகா  ஃபோர்ஸ்

2   இவன்  தான்  என்  ஜெயில்  மேட்


க்ளாஸ் மேட்  மாதிரி  சொல்றானே?


3   இந்த ஆளுக்கு பவர் ஃபுல்  கண்கள் ., இரண்டு  கண்களும்  ஒரே  டைம்ல    வெவ்வேற  திசையைப்பார்க்கும்


 புரியுது  , டோரி  கண்ணன்?


4  சாலமன்  சார், நீங்க யார்னே  எங்களுக்குத்தெரியாது 


 ஓஹோ, அப்போ  என்  பேர்  மட்டும்  எப்படி  தெரிஞ்சுது ?


5   உங்களுக்கு  ரெண்டு  ஆப்சன்  தர்றேன். 1 நீங்க  யார்னு  கண்டு பிடிச்சா  போட்டுத்தள்ளிடுவேன்  2  நீங்க  யார்?னு  நீங்களா  சொல்லிட்டா  கொன்னுடுவேன்


 சார், உங்க  ரெண்டு  ஆப்சனும் எங்களை  முடிக்கறதுலதான்  குறியா  இருக்கு 


 என்  ஆப்சன்ஸ்  எப்பவுமே  அப்படித்தான்  இருக்கும்


6  கிரிமினல்  ரெக்கார்ட்ஸ்ல  உன்  பேரு  இருக்கு ?


 ரெக்கார்ட்ஸ்ல  என்  பேரு  இருக்கோ  இல்லையோ, என்  பேரே  ஒரு  ரெக்கார்டுதான்

7  ஏன்? இந்தியா   வர  பயமா?


 எனக்கு  இந்தியாவைக்கண்டு  பயம் இல்லை , இந்தியாவுக்குதான்  என்னைக்கண்டு  பயம்


8  ஹே  பார்ட்னர் , டோண்ட்  ஃபியர்  ஐ  இண்ட்டர்ஃபியர்


9  ஐ  ஆம்  ரா  ஃபிபார்ட்மெண்ட்

 நானும்  ரா  தான் . ஐ மீன்  ராவா


10  ஓட்டல் ரிலேஷன்ஷிப்  மேனேஜர்  உன்  கூட  ரிலேஷன்ல  இருந்தவ?

11  நான்  வலை  வீசுவது  மீன்  பிடிக்க  அல்ல,திமிங்கிலம்  தான்  என்  டார்கெட்


12  அண்ணன்  , தம்பிக்குள்ளே  சண்டை  போட  காரணம்  ஏதும்  வேணுமா?


13   என்னடா, நீங்க  எல்லோரும்  மங்கலா  தெரியறீங்க ?


 அண்ணே, நீங்க அ ழறீங்க, அதான்  கண்ணீர்  வழியா  அப்டி  தெரியுது 


14    எனக்கு  எக்ஸ்பயரி   டேட்  நெருங்கிடுச்சு

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  போலீஸ்  ஸ்டேஷனில்  இருந்த  அனைத்து  போலீசையும்  போட்டுத்தள்ளிய  வில்லன்  கேங்கை  ஒரு  போலீஸ்  துப்பாக்கி  முனையில்  மிரட்டிட்டு  இருக்கு  லூஸ்  மாதிரி , வில்லனை  காயப்படுத்தவாவது  முழங்காலில்  சுடலாமே?


2  எல்லா  போலீசையும்  சுட்ட  வில்லன் கேங்க்  ஒரு  ஆளை  மட்டும்  தூக்குக்கயிற்றில்  தொங்க  விடுவது  எதுக்கு ? இது  தற்கொலை என  திசை திருப்பவா? ஒருவேளை  ஸ்டேஷனில்  இருந்த  எல்லா  போலீசையும்  இந்த  போலீஸ்  ஷூட்  பண்ணீவிட்டு  தான்  தற்கொலை  பண்ணிக்கிட்டதா  கேசை  திசை திருப்பவா?மடத்தனமான  காட்சி 


3  ஒரு  கேங்க்ஸ்டரை , மான்ஸ்டரை  லாக்கப்பில்  போடும்போது  அவன்  தப்பிப்பான்  என்ற  பயமோ , சந்தேகமோ  வந்தால்  அவனுக்கு  தூக்க  மருந்தோ , மயக்க  மருந்தோ  உடலில்  செலுத்தி  விட்டால்  ஈசியா  பாதுகாக்கலாமே?


3   ஹீரோ  ஓப்பனிங்  சீன்  பில்டப்  அப்போ ஹீரோ   ஃபோன்  காலை  அட்ட்ட்ண்ட்  பண்ணும்  அந்த  ரவுடி  கால்  பட்டனை  மட்டுமே  ஸ்வீப்  செய்கிறார். ஸ்பீக்கர்   ஆன்  பண்ணவே  இல்லை , ஆனா  வாய்ஸ்  ஸ்பீக்கர்ல  கேட்குது 


4  கடல்ல  புயல்  காத்து  அடிக்குது , பயங்கரமா  மழை  பெய்யுது . ஆனா  அந்த  லூஸ்  ஹீரோ  பீடி  பத்த  வைக்கறார். கேவலமா  இருக்கு 


5 ஹீரோ  ஒரு  துக்ளியூண்டு  போட்ல  வந்து  அவ்ளோ  பெரிய  கப்பல்ல  ஜம்ப்  பண்ணி 45  பேர்  கூட  ஃபைட்  பண்ணி  அரை  மணி நேரமா  அடிச்சுக்கிட்டு  இருக்காரு . இந்த  கிறுக்கு  வில்லன்  கைல  துப்பாக்கி  வெச்சுக்கிட்டு  சுடாம  வேடிக்கை  பார்த்துட்டு  இருக்கான். ஹீரோ  கைல  துப்பாக்கி  இல்லை 

 

6   பொண்ணுங்க  போடும்  ரயான்  உள்  பாவாடையை  லுங்கி  மாதிரி  கட்டிக்கிட்டு  கேவலமா  ஹீரோ  ஓப்பனிங்  ஷாங்  குத்தாட்டம்  ஆடறாரு. கூச்சமா  இருக்காதா? அவருக்கு ?

7   கோர்ட்ல    ஜட்ஜ்  முன்  கால் மேல்  கால்  போட்டு ஸ்டைல்  காட்டிட்டு  இருக்கரு  ஹீரோ. கோர்  அவமதிப்பு  கேஸ்  இல்லையா? 


8  கஜினி  டூயல்  ரோலில்  கலக்கிய  வில்லன்  இதுல  ஹீரோவுக்கு  எடுபுடியா  வர்றாரு. கஷ்டம்


9   ஹீரோ  ஸ்ருதி கமலைப்பார்த்து  என்  கோல்டு  ஃபிஷ்  என  சிலாகிக்கும்  காட்சி  ஆல்ரெடி  வேலைக்காரன்  ரஜினி - அமலா  டயலாக்  ஆச்சே? ஆந்திராவிலுமா  அட்லி அலப்பறை ?

10  நான்  ராமன்  எனில்  நீ  சீதை  எனும்  பாடல்  வரி  வரும்போது  ஸ்ருதி  கமல்  லோகட்   லோ ஹிப்  டிரசில்  இருப்பது  கொடுமை , சென்சார்  எப்ப்டி  விட்டாங்க ? இந்துக்களின்  மனம்  புண்படாதா?

11   வில்லன்  ஒரு  உருப்படாதவன்  என  சிம்பாலிக்கா  சொன்னாப்போதாதா? ஒவ்வொரு  ஷாட்லயும்  அந்த  ஆள்  போதை  மருந்தை  எடுத்துக்குவதை  டீட்டெய்லா  காட்டனுமா?


12  வில்லன்  கேங்க்ல  8  பேரு  கன்  எடுத்து  குறி  வைக்கறாங்க  ஹீரோவை  ஹீரோ  அந்த  எட்டுபேரையும்  ஒன்  பை  ஒன்  சுட்டுட்டே  வர்றாரு.அதுவரை   எட்டு  பேரும்  வேடிக்கை  பார்த்துட்டே  இருக்கானுங்க 


13 ஒரு  அசிஸ்டெண்ட்  கமிஷனர்  கள்ளச்சாராய  பாட்டில்களைக்கைப்பற்றின  கான்ஸ்டபிளை  விட்டு  அதை அழிச்சாப்போதாதா? எதுக்கு  லூஸ்  மாதிரி அவரே  ரோடு  ரோலர்  ஏற்றி  எல்லா  பாட்டில்களையும்  உடைக்கறாரு? உடைஞ்ச  கண்ணாடி  சில்லுகளை  தண்டமா  க்ளீன்  பண்ற  வேலை வேற . தண்டம்  வேற  முட்டுக்கோல்  வேற 



14  ஃபிளாஸ்பேக்ல  அண்ணண்      தம்பி  பாசம்  காட்ட  ஒரு  சீன்.. தம்பி  மரம்  மேல  ஏறி  பட்டம்  விடுவிக்க  போறப்ப மரக்கிளைல  மாட்டி  புன்னகை  மன்னன்  கமல்  போல  தொங்கிட்டு  இருக்காப்டி. அப்போ அண்ணன்  மரம் மேல  ஏறி  அவன்  கிட்டே  பொகும்போது  தம்பி  கீழ   விழறாப்டி. கூட்  இருக்கற  அத்தனை  பசங்களை  யூஸ்  பண்ணி  அவனுக்கு  நேர்  கீழே  ஒரு  நெட்  விரிச்சு  வைக்கலாம். அது  கூட  யோசிக்க  மாட்டானா?


15   சித்தி  கோவிச்சுக்கிட்டு  வீட்டை  விட்டுப்போகும்போது  சித்தி , மகன்  இருவர்  டிரசும்  ஒரு  துக்ளியூண்டு  பொட்டில  எடுத்துட்டுப்போறாங்க. அதுல  அதிக  பட்சம் 2  செட்  சேலை தான்  வைக்க  முடியும்


16  ஹீரோ  ஒரு  சீன்ல  தனக்கு  வெர்ட்டிகோ  பிராப்ளம்  இருக்கு , உய்ரமான  இடம்  பார்த்தா  மயக்கம்  வரும் , ஏரோப்ளைன்ல  போக  ,முடியாது ,  ஃபைவ்  ஸ்டார்  ஹோட்டல்ல  10 வது  மாடில  தங்க  முடியாது . உய்ரம்  அலர்ஜினு  சொல்றார், ஆனா  ஓப்பனிங்  ஷாட்ல  படகு ல  இருந்து  கப்பல்  ஜம்ப்  பண்ணி  உயரமான  இடத்துல  ஃபைட்  எல்லாம்  போடறாரு

17  ஹீரோவோட  தம்பி  பயங்கரமா  கத்திக்குத்து  பட்டு  சாகக்கிடக்கறாரு, மூச்சே  விட  முடியலை. லூஸ்  மாதிரி  ஒரு  தம்  அடிக்கனும்  பீடி  குடுனு  கேட்கறாரு. சுவாசிக்கவே  மூச்சு  விட  முடியாதப்ப  தம்   எப்படி    இழுக்க  முடியும்?  

சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஏகப்ட்ட  லாஜிக்  மிஸ்டேக்ஸ்  இருந்தாலும் ஒரு  சீன்  கூட  போர்  அடிக்காத   டெம்ப்ளேட்  தெலுங்கு  மசாலா  மூவி . கமர்ஷியல்  படத்தை  விரும்பும் ஆடியன்ஸ்  பார்க்கலாம்  ரேட்டிங் 2.75 / 5 


Waltair Veerayya
Waltair Veerayya poster.jpg
Theatrical release poster
Directed byBobby Kolli
Written byBobby Kolli
Kona Venkat
K. Chakravarthy Reddy
Produced byNaveen Yerneni
Y. Ravi Shankar
Starring
CinematographyArthur A. Wilson
Edited byNiranjan Devaramane
Music byDevi Sri Prasad
Production
company
Release date
  • 13 January 2023
Running time
160 minutes
CountryIndia
LanguageTelugu
Budget₹140 crore[1][2]
Box officeest. ₹233.05 crore[3]